ஒரு மனிதர் தம் மனைவியை விவாகரத்து செய்தார். பிறகு அவள் வேறொரு கணவரை மணமுடித்தார். பிறகு அவன் அவளை விவாகரத்து செய்தான். அவரிடம் (அவரது உறுப்பு) ஆடையின் ஓரத்தைப் போன்று (பலவீனமாக) இருப்பதைத் தவிர வேறேதுவும் இருக்கவில்லை. அவள் விரும்பிய எதனையும் அவரிடமிருந்து அடைய முடியவில்லை. ஆகவே, அவர் அவளை விவாகரத்து செய்ய அதிக நாட்கள் ஆகவில்லை. பிறகு அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் (முதல்) கணவர் என்னை விவாகரத்து செய்தார். நான் வேறொருவரை மணம் முடித்தேன். அவர் என்னுடன் (தனிமையில்) கூடினார். ஆனால் அவரிடம் ஆடையின் ஓரத்தைப் போன்று இருப்பதைத் தவிர வேறேதுவும் இல்லை. அவர் என்னை ஒரு முறை தவிர நெருங்கவில்லை (முறையான உடலுறவு கொள்ளவில்லை). அவர் என்னிடமிருந்து எதையும் அடையவில்லை (முறையான உடலுறவில் திருப்தி அடையவில்லை). இந்நிலையில், நான் என் முதல் கணவருக்கு (மீண்டும் மணம் செய்ய) ஆகுமாவேனா?" என்று கேட்டாள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(கூடாது;) அந்த (இரண்டாவது) கணவர் உனது தேனைச் சுவைக்கும் வரையிலும், நீ அவருடைய தேனைச் சுவைக்கும் வரையிலும் (முதல் கணவருக்கு நீ ஆகுமாக மாட்டாய்)" என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் கூறி விவாகரத்து செய்தார்; பின்னர் வேறொருவர் அவளை மணந்துகொண்டார், அவரும் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமலேயே அவளை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பிறகு அவளுடைய முதல் கணவர் அவளை மீண்டும் திருமணம் செய்ய விரும்பினார். இத்தகைய ஒரு நிகழ்வைப் பற்றித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர்கள் கூறினார்கள்: இல்லை, முதலாவவர் அவளின் (தாம்பத்திய உறவின்) இனிமையைச் சுவைத்தது போல், இரண்டாமவரும் அவளின் (தாம்பத்திய உறவின்) இனிமையைச் சுவைக்கும் வரை (அது கூடாது).