இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1977 gஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو اللَّيْثِيُّ،
عَنْ عُمَرَ بْنِ مُسْلِمِ بْنِ عَمَّارِ بْنِ أُكَيْمَةَ اللَّيْثِيِّ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ سَمِعْتُ
أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏
مَنْ كَانَ لَهُ ذِبْحٌ يَذْبَحُهُ فَإِذَا أُهِلَّ هِلاَلُ ذِي الْحِجَّةِ فَلاَ يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ وَلاَ مِنْ أَظْفَارِهِ
شَيْئًا حَتَّى يُضَحِّيَ ‏ ‏ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியான உம்மு ஸலமா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: “யாரிடமேனும் அறுக்க நாடும் (குர்பானிப்) பிராணி இருந்து, துல்ஹஜ் மாதத்தின் பிறை தென்பட்டுவிட்டால், அவர் குர்பானி கொடுக்கும் வரை தமது முடியிலிருந்தும் நகங்களிலிருந்தும் எதையும் (வெட்டவோ, நீக்கவோ) எடுக்கக் கூடாது.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح