حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ وَذَكَرَ الْحَدِيثَ ـ قَالَ وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا، وَضَحَّى بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ. مُخْتَصَرًا.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நபி (ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நின்ற நிலையில் தமது கரங்களாலேயே அறுத்துப் பலியிட்டார்கள். மேலும், மதீனாவில் கொம்புகளுடைய, கறுப்பு வெள்ளை நிறத்திலான இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களை அறுத்துப் பலியிட்டார்கள்.' (இந்த அறிவிப்பு சுருக்கமானது.)