இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1318 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لَهُ - قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபிய்யா ஆண்டில் (ஹிஜ்ரி 6, உம்ராவை நிறைவேற்ற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டபோது) ஒரு ஒட்டகத்தை ஏழு பேருக்காகவும், ஒரு மாட்டையும் ஏழு பேருக்காகவும் (ஹத்யாக) குர்பானி கொடுத்தோம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1318 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ حَجَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنَحَرْنَا الْبَعِيرَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். அப்போது, ஒரு ஒட்டகத்தை ஏழு பேருக்காகவும், ஒரு மாட்டையும் ஏழு பேருக்காகவும் (பங்குதாரர்களாக) குர்பானி கொடுத்தோம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح