அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “அறியாமைக் காலத்தில் பங்கிடப்பட்ட ஒவ்வொரு பங்கீடும், அது பங்கிடப்பட்டவாறே நிலைபெறும்; இஸ்லாம் வந்தடைந்த (பின் செய்யப்படும் அல்லது இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட) ஒவ்வொரு பங்கீடும், இஸ்லாத்தின் பங்கீட்டு முறைப்படியே அமையும்.”