இப்னு உமர் (ரழி) அவர்கள், ஒருவர் "கஃபாவின் மீது சத்தியமாக இல்லை" என்று கூறுவதைக் கேட்டார்கள். எனவே இப்னு உமர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு எதன் மீதும் சத்தியம் செய்யப்படலாகாது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'எவர் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோ, அவர் இறைமறுப்பை அல்லது ஷிர்க்கைச் செய்துவிட்டார்' என்று கூற நான் கேட்டிருக்கிறேன்" என்றார்கள்.