حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ ـ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَعْطَى الَّذِي حَجَمَهُ، وَلَوْ كَانَ حَرَامًا لَمْ يُعْطِهِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (தங்களுக்கு மருத்துவ நோக்கில்) இரத்தம் குத்தி எடுக்கச் செய்தார்கள். மேலும், அவர்களுக்கு இரத்தம் குத்தி எடுத்தவருக்கு (அதற்கான) கூலியையும் கொடுத்தார்கள்.
அது ஹராமாக (சட்டவிரோதமானதாக) இருந்திருந்தால், நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அதற்கான கூலியைக் கொடுத்திருக்க மாட்டார்கள்.
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ، وَلَوْ عَلِمَ كَرَاهِيَةً لَمْ يُعْطِهِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஹிஜாமா செய்துகொண்டார்கள். மேலும் ஹிஜாமா செய்தவருக்கு அவரது கூலியை வழங்கினார்கள். அது வெறுக்கத்தக்கதாக இருந்திருப்பின், அவர்கள் அவருக்கு வழங்கியிருக்க மாட்டார்கள்.