இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2493 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا بِهِ، سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ
كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُ وَيَقُولُ اسْمَعِي يَا رَبَّةَ الْحُجْرَةِ اسْمَعِي يَا رَبَّةَ الْحُجْرَةِ ‏.‏ وَعَائِشَةُ
تُصَلِّي فَلَمَّا قَضَتْ صَلاَتَهَا قَالَتْ لِعُرْوَةَ أَلاَ تَسْمَعُ إِلَى هَذَا وَمَقَالَتِهِ آنِفًا إِنَّمَا كَانَ النَّبِيُّ
صلى الله عليه وسلم يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ الْعَادُّ لأَحْصَاهُ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் ஹதீஸ் அறிவிக்கும்போது, "அறையின் தலைவியே! (நான் கூறுவதைக்) கேளுங்கள்! அறையின் தலைவியே! (நான் கூறுவதைக்) கேளுங்கள்!" என்று (ஆயிஷா (ரழி) அவர்களை நோக்கிக்) கூறுபவர்களாக இருந்தார்கள். அப்போது ஆயிஷா (ரழி) தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்ததும் உர்வாவிடம், "இவர் சற்றுமுன் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ் அறிவிக்கும்போது, (அவருடைய வார்த்தைகளை) ஒருவர் எண்ணிப் பார்க்க நினைத்தால் அவற்றை எண்ணிவிட முடியும் (அந்த அளவிற்குத் தெளிவாகவும் நிதானமாகவும் பேசுவார்கள்)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح