"ஸைத் பின் ஸாபித் (ரழி) அவர்கள் நடுப்பகல் நேரத்தில் மர்வான் (இப்னுல் ஹகம்) அவர்களிடமிருந்து வெளியே வந்தார்கள். நாங்கள் (எங்களுக்குள்), 'அவர் (மர்வான்) இவர்களை (ஸைத் அவர்களை) இந்த நேரத்தில் ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேட்பதற்காகவே தவிர (வேறு எதற்கும்) ஆள் அனுப்பி அழைத்திருக்கமாட்டார்' என்று பேசிக்கொண்டோம். எனவே, நாங்கள் எழுந்துச் சென்று அவரிடம் (அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பது குறித்துக்) கேட்டோம்.
அதற்கு அவர் (ஸைத்), 'ஆம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நாங்கள் செவியுற்ற சில விஷயங்களைப் பற்றி அவர் எங்களிடம் கேட்டார். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்றேன்' என்று கூறினார்கள்:
'நம்மிடமிருந்து ஒரு ஹதீஸைச் செவியுற்று, அதை மனனம் செய்து, (பிறகு) பிறருக்கு அதை எடுத்துரைக்கும் ஒரு மனிதரை அல்லாஹ் ஒளிமயமாக்குவானாக! (அவருக்கு அருள்புரிவானாக!) (ஏனெனில்) ஃபிக்ஹை (மார்க்க ஞானத்தைச்) சுமப்பவர், தம்மை விட நன்கு புரிந்துகொள்ளும் ஒருவரிடம் அதைக் கொண்டு சேர்க்கலாம்; மேலும், ஒருவேளை ஃபிக்ஹை சுமப்பவர் ஒரு ஃபகீஹாக (மார்க்க மேதையாக) இருக்கமாட்டார்'."