சஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் அல்-ஜுஹனீ (ரழி) அவர்கள் தனது தந்தை (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் உணவு உண்டுவிட்டு, அல்ஹம்து லில்லாஹி ல்லதீ அத்அமனி ஹாதா வ ரஸகனிஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வத்தின் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது, அவன் தான் என்னுடைய எந்தவொரு சக்தியோ அல்லது வலிமையோ இல்லாமல் எனக்கு இந்த உணவை அளித்து, அதை எனக்கு வாழ்வாதாரமாகவும் ஆக்கினான்) என்று கூறுகிறாரோ, அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.”