ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மவ்கிஃப் (ஹஜ் காலம்) சமயத்தில், நபி (ஸல்) அவர்கள் தம்மை முன்நிறுத்திக் கொண்டு கூறுவார்கள்: 'எந்த மனிதர் என்னை அவருடைய மக்களிடம் அழைத்துச் செல்வார்? ஏனெனில் குறைஷிகள் நிச்சயமாக என் இறைவனுடைய வார்த்தையை நான் எடுத்துரைப்பதை விட்டும் தடுத்துவிட்டனர்.'
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் காலத்தில் மக்களுக்கு முன்னர் தோன்றி, 'என்னைத் தம் சமூகத்தாரிடம் அழைத்துச் செல்லும் மனிதர் எவரேனும் இருக்கிறாரா? ஏனெனில், குறைஷிகள் என் இறைவனின் பேச்சை (அதாவது அச்செய்தியை) நான் எடுத்துரைப்பதைத் தடுத்துவிட்டனர்' என்று கூறுவது வழக்கம்.