حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بَعْدَ مَا مَسَّهُمْ مِنْهَا سَفْعٌ، فَيَدْخُلُونَ الْجَنَّةَ، فَيُسَمِّيهِمْ أَهْلُ الْجَنَّةِ الْجَهَنَّمِيِّينَ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "சிலர் நரக நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களுடைய நிறம் மாறிய நிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள். சுவர்க்கவாசிகள் அவர்களை ‘அல்-ஜஹன்னமிய்யீன்’ (நரக) நெருப்பு மக்கள் என்று அழைப்பார்கள்."
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ الْحَسَنِ بْنِ ذَكْوَانَ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُصَيْن ٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَيَدْخُلُونَ الْجَنَّةَ، يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ .
`இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "முஹம்மது (ஸல்) அவர்களின் பரிந்துரையால் சிலர் நரக நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்; அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள், மேலும் அல்-ஜஹன்னமிய்யீன் (நரக நெருப்பு மக்கள்) என்று அழைக்கப்படுவார்கள்."