நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற செவியுற்றேன்: எதிர்காலத்தில் பல்வேறு தீமைகள் தோன்றும். இந்த உம்மத் ஒன்றுபட்டிருக்கும் வேளையில், அதன் காரியங்களைச் சீர்குலைக்க யார் முயன்றாலும், அவன் யாராக இருந்தாலும் அவனை வாளால் வெட்டுங்கள். (அவனிடம் கண்டித்து அறிவுரை செய்தும் அவன் திருந்தவில்லையெனில், மேலும் அவன் தனது சீர்குலைக்கும் செயல்களிலிருந்து விலகவில்லையெனில், அவன் கொல்லப்பட வேண்டும்.)