அனஸ் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (ரழி) ஒரு குழுவினர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர், "நான் பெண்களை மணமுடிக்க மாட்டேன்" என்று கூறினார்கள். இன்னொருவர், "நான் இறைச்சி சாப்பிட மாட்டேன்" என்று கூறினார்கள். மற்றொருவர், "நான் படுக்கையில் உறங்க மாட்டேன்" என்று கூறினார்கள். வேறொருவர், "நான் நோன்பு நோற்று, அதை விட மாட்டேன்" என்று கூறினார்கள். இந்தச் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது, அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, பின்னர் கூறினார்கள்: "இப்படி இப்படியெல்லாம் கூறுகின்ற மக்களுக்கு என்ன நேர்ந்தது? ஆனால் நானோ, தொழுகின்றேன், உறங்குகின்றேன்; நோன்பு நோற்கின்றேன், நோன்பை விடுகின்றேன்; மேலும் பெண்களை மணமுடிக்கின்றேன். யார் என்னுடைய சுன்னாவைப் புறக்கணிக்கிறாரோ, அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்."