முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: "மக்களைச் சிரிக்க வைப்பதற்காக ஒரு செய்தியைச் சொல்லி, அதில் பொய் சொல்பவனுக்குக் கேடு உண்டாவதாக! அவனுக்குக் கேடு உண்டாவதாக! அவனுக்குக் கேடு உண்டாவதாக!"
وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ, عَنْ أَبِيهِ, عَنْ جَدِّهِ: قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ, فَيَكْذِبُ ; لِيَضْحَكَ بِهِ اَلْقَوْمُ, وَيْلٌ لَهُ, ثُمَّ وَيْلٌ لَهُ } أَخْرَجَهُ اَلثَّلَاثَةُ, وَإِسْنَادُهُ قَوِيٌّ. [1] .
பஹ்ஸ் இப்னு ஹகீம் அவர்கள், தனது தந்தை வழியாக, அவரது பாட்டனார் (முஆவியா இப்னு ஹைதா அல்-குஷைரி ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிப்பதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பேசும்போது பொய் சொல்பவனுக்குக் கேடு (அல்லது நரகத்திலுள்ள ஒரு பள்ளத்தாக்கு) உண்டாகட்டும், அவனுக்குக் கேடு உண்டாகட்டும்! அவனுக்குக் கேடு உண்டாகட்டும்!” இதனை மூன்று இமாம்கள் பலமான அறிவிப்பாளர் தொடருடன் அறிவித்துள்ளார்கள்.