இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2715ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ
ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ ‏ ‏ الْحَمْدُ
لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا فَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُئْوِيَ ‏ ‏ ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் சென்றால் பின்வருமாறு கூறுவார்கள்:

"அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா, வஸகானா, வகஃபானா, வஆவானா, ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு வலா முஃவிய."

(பொருள்: "எங்களுக்கு உணவளித்து, எங்களுக்குப் பானம் வழங்கி, எங்களுக்குப் போதுமானவனாகி, எங்களுக்கு அடைக்கலம் அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். ஏனெனில், (தேவைகளைப் பூர்த்தி செய்யப்) போதுமானவனும் அடைக்கலம் அளிப்பவனும் இல்லாத எத்தனையோ பேர் உள்ளனர்.")

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح