நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவும் தமது படுக்கைக்குச் செல்லும் போது, தம் இரு உள்ளங்கைகளையும் இணைத்து அவற்றில் ஊதுவார்கள். பிறகு அவற்றில் **'குல் ஹுவல்லாஹு அஹத்'**, **'குல் அஊது பிரப்பில் ஃபலக்'** மற்றும் **'குல் அஊது பிரப்பின் னாஸ்'** ஆகியவற்றை ஓதுவார்கள். பிறகு அவ்விரண்டாலும் தம் உடலிலிருந்து இயன்ற வரை தடவுவார்கள். தம் தலை, முகம் மற்றும் தம் உடலின் முன்பகுதியிலிருந்து ஆரம்பிப்பார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.