அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும்போது விடியற்காலை (ஸஹர்) நேரம் வந்துவிட்டால் பின்வருமாறு கூறுவார்கள்:
"அல்லாஹ்வின் புகழையும், அவன் எங்களுக்கு அளித்த நன்மையான அருட்கொடைகளையும் (அல்லது சோதனைகளையும்) செவியேற்பவர் ஒருவர் செவியேற்கட்டும் (அல்லது அதற்கு சாட்சியாக இருக்கட்டும்). எங்கள் இறைவா! எங்களுடன் துணையிருப்பாயாக! மேலும் உனது அருளை எங்களுக்குப் பொழிவாயாக! நரக நெருப்பிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடியவனாக (இதை நான் கூறுகிறேன்)."