அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! பணியாளரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பிறகு அவர், 'அல்லாஹ்வின் தூதரே! பணியாளரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'ஒவ்வொரு நாளும் எழுபது முறை.'"