ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் ஸிவாக்கால் பல் துலக்குவார்கள். பின்னர், அதைக் கழுவுவதற்காக அந்த ஸிவாக்கை என்னிடம் கொடுப்பார்கள். நான் (அவர்கள் பயன்படுத்திய) அந்த ஸிவாக்கைக் கொண்டே முதலில் பல் துலக்குவேன்; பின்னர் அதைக் கழுவி அவர்களிடம் திருப்பிக் கொடுப்பேன்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் (பல் துலக்கி) செய்துவிட்டு, அதனைக் கழுவுவதற்காக என்னிடம் கொடுப்பார்கள். அப்போது நான் முதலில் அதனைக் கொண்டு (அண்ணலாரின் உமிழ்நீர் மூலம் பரக்கத் பெறுவதற்காக) மிஸ்வாக் செய்வேன். பின்னர் அதனைக் கழுவி, அவர்களிடம் திருப்பிக் கொடுப்பேன்.