நபி (ஸல்) அவர்கள் (உறுப்புகளை) ஒரு முறை (மட்டும்) கழுவி உளூச் செய்தார்கள். பின்னர், "எந்த உளூ இன்றி ஒருவரின் தொழுகை அங்கீகரிக்கப்படமாட்டாதோ (தொழுகை செல்லுபடியாகத் தேவையான குறைந்தபட்ச) உளூ இதுவாகும்" என்று கூறினார்கள்.
பின்னர் (உறுப்புகளை) இரு முறை (கழுவி) உளூச் செய்தார்கள். பின்னர், "எவருக்கு இரு மடங்கு நற்கூலி வழங்கப்படுமோ (அவருக்கான) உளூ இதுவாகும்" என்று கூறினார்கள்.
பின்னர் (உறுப்புகளை) மூன்று முறை (கழுவி) உளூச் செய்தார்கள். பின்னர், "இது எனது உளூவாகும்; எனக்கு முன்னிருந்த (இறைத்)தூதர்களின் உளூவுமாகும்" என்று கூறினார்கள்.
இது அபூ அரூபா அவர்களின் ஹதீஸின் வாசகமாகும். அப்துல்லாஹ் பின் சுலைமான் அவர்களின் ஹதீஸில், "இந்த உளூ இன்றி அல்லாஹ் ஒருவரின் தொழுகையை அங்கீகரிக்க மாட்டான்" என்றும், "அல்லாஹ் அவருக்கு (நற்கூலியைப்) பன்மடங்காக்குவான்" என்றும் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸை, இந்த அறிவிப்பாளர் வழியில் முஸய்யப் பின் வாளிஹ் அவர்கள் தனித்து அறிவிக்கிறார்; (அவர் பலமானவர் அல்ல என்பதால்) இது பலமானதல்ல. மேலும், இது இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் வழியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.