அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ அல்அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் இவ்வாறு கூறுவார்கள்:
“யா அல்லாஹ்! உனது அன்பையும், எவருடைய அன்பு உன்னிடத்தில் எனக்குப் பயனளிக்குமோ அத்தகையோரின் அன்பையும் எனக்கு வழங்குவாயாக. யா அல்லாஹ்! நான் விரும்பக்கூடியவற்றில் இருந்து நீ எனக்கு வழங்கியதை, நீ விரும்பக்கூடியவற்றில் (ஈடுபடுவதற்கு) எனக்கு ஒரு சக்தியாக ஆக்குவாயாக. யா அல்லாஹ்! மேலும், நான் விரும்பக்கூடியவற்றில் இருந்து நீ என்னிடமிருந்து தடுத்துக்கொண்டதை, நீ விரும்பக்கூடியவற்றில் (ஈடுபடுவதற்கு) எனக்கு ஒரு ஓய்வாக ஆக்குவாயாக.”