தமீம் அத்தாரி (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"முஸ்லிம்களில் ஒரு மனிதரின் கரத்தால், இணைவைப்பாளர்களில் ஒரு மனிதர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவரைப் பற்றிய சுன்னா என்ன?" என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருடைய (இஸ்லாத்தை ஏற்றவரின்) வாழ்விலும், அவருடைய மரணத்திலும் மக்களில் அவரே (இஸ்லாத்தை ஏற்கச் செய்த முஸ்லிமே) அவருக்கு மிகவும் நெருக்கமானவர் (அதாவது, அவரது 'வலா' (பாதுகாவல்) உரிமைக்குரியவர்)" என்று கூறினார்கள்.