கந்தக் - அகழ்ப்போர்
சமாதான சூழ்நிலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. குரைசிகளும் மேலும் ஆறு
கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் பத்தாயிரம் படையினரும் இரண்டாயிரத்துக்கு
மேற்ப்பட்ட ஒட்டகங்களும் ஏராளமான ஆயுதங்களும் குதிரைபடையினரும் ஆரவாரத்துடன் கூட்டுப்படையாக மதினாவை தாக்க
புறப்பட்டு சென்றனர். இந்த செய்தியை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்
அவர்கள் தமது தோழர்களுடன் போர் தந்திரங்களை பற்றி ஆலோசனை செய்தனர். மதினாவை சுற்றிலும்
ஓர் அகழியை தோண்டி எதிரிகளின் முன்னேற்றத்தை தடை செய்வது என்ற பாரசீக போர் தந்திரத்தை
ஸல்மான் பாரிஸ் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன் வைத்தார்கள். பெருமானார் அதை வரவேற்று
ஒரு வாரம் கடினமாக உழைத்து ஒன்பதாயிரம் அடி நீளமும் குதிரைப் படையினரால் எளிதில் தாண்டமுடியாத
அளவுக்கு அகலமும் ஆழமும் கொண்ட ஓரு அகழியை தோண்டினார்கள். பட்டினியால் நிமிர்ந்து நிற்க
முடியாமல் தமது வயிற்றில் கற்களை கட்டிவைத்துக் கொண்டு பெருமானாரும் தோழர்களும் அந்த
அகழியை தோண்டினார்கள். இந்த சாலை இருக்குமிடம் அந்த அகழியை சேர்ந்தது தான்.
அகழிக்கு மறுபுறம் வந்த கூட்டுப் படையினர் அந்த அகழியைப் பார்த்து வியந்து
நின்றனர். அகழிக்கு மறுபுறம் ஸல்வு மலை உச்சியிலும் உள்ள முஸ்லிகளிடம் மட்டும் போர்
சில நாட்கள் நடந்தது. முஸ்லீம்களிடம் ஏற்படுத்திக் கொண்ட சமாதான ஒப்பந்ததையும் மீறி
யூதர்கள் எதிரிகளிடம் சேர்ந்து கொண்டனர். மஸ்ஜித் பத்ஹ் என்ற இந்த இடத்தில்தான் பெருமானாரின்
முகாம் இருந்தது.
இந்த நிலைமை ஒரு சில நாட்கள் நீடித்தது. ஒரு இரவில் பெரும் இரைச்சலுடன் காற்று வீசியது.
பலத்த மழை பொழிந்தது. இடியும் மின்னலும் தொடர்ந்தது. அந்த சூறாவளி காற்றில் முகாம்கள்
பறந்து சென்றன. முஸ்லீம்கள் அகழியை தாண்டி தாக்க வருவதாக தவறாக எண்ணிய கூட்டுப் படையினர்
பொழுதும் விடியும் முன்னரே கந்தக்கை விட்டுச் சென்றனர். அல்லாஹ்வின் இந்த தந்திரம்
முஸ்லீம்களை காப்பாற்றியது. தங்களை காப்பாற்றிய அல்லாஹ்விற்க்கு முஸ்லீம்கள் அல்லாஹ்வை
போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தினார்கள்.