22. ஸூரத்துல் ஹஜ்
மதனீ, வசனங்கள்: 78

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
22:1
22:1 يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ‌ۚ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظِيْمٌ‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மக்களே! اتَّقُوْا அஞ்சுங்கள் رَبَّكُمْ‌ۚ உங்கள் இறைவனை اِنَّ நிச்சயமாக زَلْزَلَةَ அதிர்வு السَّاعَةِ மறுமையின் شَىْءٌ ஒன்றாகும் عَظِيْمٌ‏ மிகப்பெரிய
22:1. யா அய்யுஹன் னாஸுத்தகூ ரBப்Bபகும்; இன்ன Zஜல்Zஜலதஸ் ஸா'அதி ஷய்'உன் 'அளீம்
22:1. மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்.
22:2
22:2 يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمْ بِسُكٰرٰى وَلٰـكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيْدٌ‏
يَوْمَ நாளில் تَرَوْنَهَا நீங்கள் அதை பார்க்கின்ற تَذْهَلُ மறந்து விடுவார்(கள்) كُلُّ எல்லோரும் مُرْضِعَةٍ பால் கொடுப்பவள் عَمَّاۤ اَرْضَعَتْ தான் பால் கொடுத்ததை وَتَضَعُ இன்னும் ஈன்று விடுவார்(கள்) كُلُّ எல்லோரும் ذَاتِ حَمْلٍ கர்ப்பம் தரித்த பெண்(கள்) حَمْلَهَا தனது கர்ப்பத்தை وَتَرَى இன்னும் நீர் பார்ப்பீர் النَّاسَ மக்களை سُكٰرٰى மயக்கமுற்றவர்களாக وَمَا هُمْ அவர்கள் அல்லர் بِسُكٰرٰى மயக்கமுற்றவர்கள் وَلٰـكِنَّ என்றாலும் عَذَابَ தண்டனை اللّٰهِ அல்லாஹ்வுடைய شَدِيْدٌ‏ மிகக் கடினமானது
22:2. யவ்ம தரவ்னஹா தத்ஹலு குல்லு முர்ளி'அதின் 'அம்மா அர்ள'அத் வ தள'உ குல்லு தாதி ஹம்லின் ஹம்லஹா வ தரன்னாஸ ஸுகாரா வ மா ஹும் Bபிஸுகாரா வ லகின்ன 'அதாBபல் லாஹி ஷதீத்
22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல; ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
22:3
22:3 وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّيَـتَّبِعُ كُلَّ شَيْطٰنٍ مَّرِيْدٍ ۙ‏
وَمِنَ النَّاسِ மக்களில் مَنْ எவன் يُّجَادِلُ தர்க்கிக்கின்றான் فِى اللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்தில் بِغَيْرِ இன்றி عِلْمٍ கல்வி அறிவு وَّيَـتَّبِعُ இன்னும் பின்பற்றுகிறான் كُلَّ எல்லா شَيْطٰنٍ ஷைத்தான்(களை) مَّرِيْدٍ ۙ‏ திமிரு பிடித்த கிளர்ச்சிக்காரனாகிய
22:3. வ மினன் னாஸி மய் யுஜாதிலு Fபில் லாஹி Bபிகய்ரி 'இல்மி(ன்)வ் வ யத்தBபி'உ குல்லா ஷய்தானிம் மரீத்
22:3. இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.
22:4
22:4 كُتِبَ عَلَيْهِ اَنَّهٗ مَنْ تَوَلَّاهُ فَاَنَّهٗ يُضِلُّهٗ وَيَهْدِيْهِ اِلٰى عَذَابِ السَّعِيْرِ‏
كُتِبَ விதிக்கப்பட்டுவிட்டது عَلَيْهِ அவன் மீது اَنَّهٗ நிச்சயமாக அவன் مَنْ யார் تَوَلَّاهُ பின்பற்றுகின்றார்/அவனை فَاَنَّهٗ நிச்சயமாக அவன் يُضِلُّهٗ வழிகெடுப்பான்/அவரை وَيَهْدِيْهِ இன்னும் வழிகாட்டுவான்/அவருக்கு اِلٰى பக்கம் عَذَابِ வேதனையின் السَّعِيْرِ‏ கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
22:4. குதிBப 'அலய்ஹி அன்னஹூ மன் தவல்லாஹு Fப அன்னஹூ யுளில்லுஹூ வ யஹ்தீஹி இலா 'அதாBபிஸ் ஸ'ஈர்
22:4. அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது; எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்.
22:5
22:5 يٰۤـاَيُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ‌ ؕ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ‌ۚ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْۢ بَعْدِ عِلْمٍ شَيْــٴًـــا‌ ؕ وَتَرَى الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَـتَتْ مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍ‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மக்களே اِنْ كُنْـتُمْ நீங்கள் இருந்தால் فِىْ رَيْبٍ சந்தேகத்தில் مِّنَ الْبَـعْثِ எழுப்பப்படுவதில் فَاِنَّـا நிச்சயமாக நாம்தான் خَلَقْنٰكُمْ உங்களைப் படைத்தோம் مِّنْ تُرَابٍ மண்ணிலிருந்து ثُمَّ பின்னர் مِنْ نُّـطْفَةٍ இந்திரியத்திலிருந்தும் ثُمَّ பின்னர் مِنْ عَلَقَةٍ இரத்தக் கட்டியிலிருந்தும் ثُمَّ பின்னர் مِنْ مُّضْغَةٍ சதைத்துண்டிலிருந்து مُّخَلَّقَةٍ முழுமையான உருவம் கொடுக்கப்பட்ட وَّغَيْرِ مُخَلَّقَةٍ முழுமையான உருவம் கொடுக்கப்படாத لِّـنُبَيِّنَ ஏனெனில் விவரிப்பதற்காக لَـكُمْ‌ ؕ உங்களுக்கு وَنُقِرُّ தங்க வைக்கிறோம் فِى الْاَرْحَامِ கர்ப்பப் பைகளில் مَا نَشَآءُ நாம் நாடியதை اِلٰٓى வரை اَجَلٍ தவணை مُّسَمًّى குறிப்பிட்ட ثُمَّ பிறகு نُخْرِجُكُمْ உங்களை வெளியாக்குகிறோம் طِفْلًا குழந்தைகளாக ثُمَّ பிறகு لِتَبْلُغُوْۤا நீங்கள் அடைவதற்காக اَشُدَّ வலிமையையும் كُمْ ۚ உங்களது وَمِنْكُمْ உங்களில் مَّنْ يُّتَوَفّٰى உயிர் கைப்பற்றப்படுகின்றவரும் وَمِنْكُمْ இன்னும் உங்களில் مَّنْ எவர் يُّرَدُّ திருப்பப்படுகின்றார் اِلٰٓى வரை اَرْذَلِ الْعُمُرِ தள்ளாத வயது لِكَيْلَا يَعْلَمَ முடிவில் அறியாமல் ஆகிவிடுகிறார் مِنْۢ بَعْدِ பின்னர் عِلْمٍ அறிந்து இருப்பது شَيْــٴًـــا‌ ؕ எதையும் وَتَرَى பார்க்கிறீர் الْاَرْضَ பூமியை هَامِدَةً அழிந்து போனதாக فَاِذَاۤ اَنْزَلْنَا நாம் இறக்கினால் عَلَيْهَا அதன் மீது الْمَآءَ மழைநீரை اهْتَزَّتْ அது அசைகிறது وَرَبَتْ இன்னும் அதிகப்படுத்துகிறது وَاَنْۢبَـتَتْ இன்னும் முளைக்க வைக்கிறது مِنْ كُلِّ எல்லா விதமான زَوْجٍۢ بَهِيْجٍ‏ அழகிய தாவரங்களை
22:5. யா அய்யுஹன் னாஸு இன் குன்தும் Fபீ ரய்Bபின் மினல் Bபஃதி Fப இன்னா கலக்னாகும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம மின் 'அலகதின் தும்ம மின் முள்கதின் முகல்லகதி(ன்)வ் வ கய்ரி முகல்லகதின் லினுBபய்யின லகும்; வ னுகிர்ரு Fபில் அர்ஹாமி மா னஷா'உ இலா அஜலின் முஸம்மன் தும்ம னுக்ரிஜுகும் திFப்லன் தும்ம லிதBப்லுகூ அஷுத்தகும் வ மின்கும் மய் யுதவFப்Fப வ மின்கும் மய் யுரத்து இலா அர்தலில் 'உமுரி லிகய்லா யஃலம மின் Bபஃதி 'இல்மின் ஷய்'ஆ; வ தரல் அர்ள ஹாமிததன் Fப இதா அன்Zஜல்னா 'அலய்ஹல் மா'அஹ் தZஜ்Zஜத் வ ரBபத் வ அம்Bபதத் மின் குல்லி Zஜவ்ஜின் Bபஹீஜ்
22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
22:6
22:6 ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ وَاَنَّهٗ يُحْىِ الْمَوْتٰى وَاَنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ‏
ذٰ لِكَ இது بِاَنَّ ஏனெனில் நிச்சயமாக اللّٰهَ هُوَ அல்லாஹ்தான் الْحَـقُّ உண்மையானவன் وَاَنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன்தான் يُحْىِ உயிர்ப்பிக்கிறான் الْمَوْتٰى இறந்தவர்களை وَاَنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன்தான் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرٌ ۙ‏ பேராற்றலுடையவன்
22:6. தாலிக Bபி அன்னல் லாஹ ஹுவல் ஹக்கு வ அன்னஹூ யுஹ்யில் மவ்தா வ அன்னஹூ 'அலாகுல்லி ஷய்'இன் கதீர்
22:6. இது ஏனெனில்: நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால்.
22:7
22:7 وَّاَنَّ السَّاعَةَ اٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا ۙ وَاَنَّ اللّٰهَ يَـبْعَثُ مَنْ فِى الْقُبُوْرِ‏
وَّاَنَّ மேலும் நிச்சயமாக السَّاعَةَ மறுமை اٰتِيَةٌ வரக்கூடியதுதான் لَّا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهَا ۙ அதில் وَاَنَّ اللّٰهَ மேலும் நிச்சயமாக அல்லாஹ் يَـبْعَثُ எழுப்புவான் مَنْ فِى الْقُبُوْرِ‏ புதைக்குழிகளில் உள்ளவர்களை
22:7. வ அன்னஸ் ஸா'அத ஆதிய துல் லா ரய்Bப Fபீஹா வ அன்னல் லாஹ யBப்'அதுமன் Fபில் குBபூர்
22:7. (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
22:8
22:8 وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّلَا هُدًى وَلَا كِتٰبٍ مُّنِيْرٍ ۙ‏
وَمِنَ النَّاسِ மனிதர்களில் مَنْ எவர் يُّجَادِلُ தர்க்கிப்பார் فِى اللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்தில் بِغَيْرِ عِلْمٍ எவ்வித அறிவுமில்லாமலும் وَّلَا هُدًى நேர்வழி இல்லாமலும் وَلَا كِتٰبٍ வேதமும் இல்லாமலும் مُّنِيْرٍ ۙ‏ வெளிப்படுத்தக்கூடிய
22:8. வ மினன் னாஸி மய் யுஜாதிலு Fபில் லாஹி Bபிகய்ரி 'இல்மி(ன்)வ் வலா ஹுத(ன்)வ் வலா கிதாBபிம் முனீர்
22:8. இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.
22:9
22:9 ثَانِىَ عِطْفِهٖ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ ‌ؕ لَهٗ فِى الدُّنْيَا خِزْىٌ‌ وَّنُذِيْقُهٗ يَوْمَ الْقِيٰمَةِ عَذَابَ الْحَرِيْقِ‏
ثَانِىَ عِطْفِهٖ தனது கழுத்தைத் திருப்பியவனாக لِيُضِلَّ தடுப்பதற்காக عَنْ سَبِيْلِ மார்க்கத்திலிருந்து اللّٰهِ ؕ அல்லாஹ்வின் لَهٗ அவனுக்கு فِى الدُّنْيَا இவ்வுலகத்தில் خِزْىٌ‌ கேவலம் உண்டு وَّنُذِيْقُهٗ நாம் அவனுக்கு சுவைக்க வைப்போம் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் عَذَابَ الْحَرِيْقِ‏ பொசுக்கக்கூடிய வேதனையை
22:9. தானிய 'இத்Fபிஹீ லியுளில்ல 'அன் ஸBபீலில் லாஹி லஹூ Fபித்துன் யா கிZஜ்யு(ன்)வ் வ னுதீகுஹூ யவ்மல் கியாமதி 'அதாBபல் ஹரீக்
22:9. (அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்.
22:10
22:10 ذٰ لِكَ بِمَا قَدَّمَتْ يَدٰكَ وَاَنَّ اللّٰهَ لَـيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ
ذٰ لِكَ அது بِمَا قَدَّمَتْ முற்படுத்தியதன் காரணமாகவும் يَدٰكَ உனது கரங்கள் وَاَنَّ اللّٰهَ இன்னும் நிச்சயம் அல்லாஹ் لَـيْسَ இல்லை بِظَلَّامٍ அநியாயம் செய்பவன் لِّلْعَبِيْدِ‏ அடியார்களுக்கு
22:10. தாலிக Bபிமா கத்தமத் யதாக வ அன்னல் லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில்'அBபீத்
22:10. “உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்)
22:11
22:11 وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ‌ ‌ۚ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ‌ ۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖ‌ۚ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ‌ ؕ ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ‏
وَمِنَ النَّاسِ மக்களில் இருக்கின்றார் مَنْ எவர் يَّعْبُدُ வணங்குவார் اللّٰهَ அல்லாஹ்வை عَلٰى حَرْفٍ‌ ۚ சந்தேகத்துடன் فَاِنْ اَصَابَهٗ அவருக்கு கிடைத்தால் خَيْرٌ நன்மை اۨطْمَاَنَّ திருப்தியடைகிறார் بِهٖ‌ ۚ அதைக் கொண்டு وَاِنْ اَصَابَتْهُ அவருக்கு ஏற்பட்டால் فِتْنَةُ சோதனை اۨنْقَلَبَ திரும்பி விடுகிறார் عَلٰى மீதே وَجْهِهٖ‌ۚ தனது முகத்தின் خَسِرَ அவர் நஷ்டமடைந்து விட்டார் الدُّنْيَا இவ்வுலகிலும் وَالْاٰخِرَةَ ؕ மறு உலகிலும் ذٰ لِكَ هُوَ இதுதான் الْخُسْرَانُ (பெரும்) நஷ்டமாகும் الْمُبِيْنُ‏ தெளிவான
22:11. வ மினன் னாஸி மய் யஃBபுதுல் லாஹ 'அலா ஹர்Fபின் Fப இன் அஸாBபஹூ கய்ருனித் ம'அன்ன Bபிஹீ வ இன் அஸாBபத் ஹு Fபித்னதுனின் கலBப 'அலா வஜ்ஹிஹீ கஸிரத் துன்யா வல் ஆகிரஹ்; தாலிக ஹுவல் குஸ்ரானுல் முBபீன்
22:11. இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
22:12
22:12 يَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهٗ وَمَا لَا يَنْفَعُهٗ ‌ؕ ذٰ لِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِيْدُ‌ ۚ‏
يَدْعُوْا வணங்குகிறார் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مَا لَا يَضُرُّهٗ தனக்கு தீங்கிழைக்காததை وَمَا لَا يَنْفَعُهٗ ؕ இன்னும் தனக்கு நன்மை செய்யாததை ذٰ لِكَ هُوَ இதுதான் الضَّلٰلُ வழிகேடாகும் الْبَعِيْدُ‌ ۚ‏ மிக தூரமான
22:12. யத்'ஊ மின் தூனில் லாஹி மா லா யளுர்ருஹூ வமா லா யன்Fப'உஹ்' தாலிக ஹுவள் ளலாலுல் Bப'இத்
22:12. அவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான் - இதுதான் நெடிய வழிகேடாகும்.
22:13
22:13 يَدْعُوْا لَمَنْ ضَرُّهٗۤ اَقْرَبُ مِنْ نَّـفْعِهٖ‌ؕ لَبِئْسَ الْمَوْلٰى وَلَبِئْسَ الْعَشِيْرُ‏
يَدْعُوْا அவர் அழைக்கிறார் لَمَنْ எவரை ضَرُّهٗۤ அவருடைய தீமை اَقْرَبُ மிக சமீபமாக இருக்கிறது مِنْ نَّـفْعِهٖ‌ؕ அவருடைய நன்மையைவிட لَبِئْسَ الْمَوْلٰى இவன் கெட்ட பங்காளியாவான் وَلَبِئْسَ الْعَشِيْرُ‏ அவன்கெட்டதோழன்
22:13. யத்'ஊ லமன் ளர்ருஹூ அக்ரBபு மின் னFப்'இஹ்; லBபி'ஸல்மவ்லா வ லBபி'ஸல் 'அஷீர்
22:13. எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் - திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே.
22:14
22:14 اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ‌ؕ اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُدْخِلُ நுழைப்பான் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகள் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ ؕ நதிகள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَفْعَلُ செய்கிறான் مَا يُرِيْدُ‏ தான் நாடுவதை
22:14. இன்னல் லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; இன்னல் லாஹ யFப்'அலு மா யுரீத்
22:14. நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல் செய்பவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் - நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.
22:15
22:15 مَنْ كَانَ يَظُنُّ اَنْ لَّنْ يَّـنْصُرَهُ اللّٰهُ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ فَلْيَمْدُدْ بِسَبَبٍ اِلَى السَّمَآءِ ثُمَّ لْيَـقْطَعْ فَلْيَنْظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهٗ مَا يَغِيْظُ‏
مَنْ யார் كَانَ இருக்கின்றானோ يَظُنُّ எண்ணுகிறான் اَنْ لَّنْ يَّـنْصُرَهُ அவருக்கு உதவவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் فِى الدُّنْيَا இவ்வுலகிலும் وَالْاٰخِرَةِ மறு உலகிலும் فَلْيَمْدُدْ தொங்கவிடட்டும் بِسَبَبٍ ஒரு கயிறை اِلَى السَّمَآءِ முகட்டில் ثُمَّ பிறகு لْيَـقْطَعْ துண்டித்துக் கொள்ளவும் فَلْيَنْظُرْ அவன் பார்க்கட்டும் هَلْ يُذْهِبَنَّ நிச்சயமாகபோக்கி விடுகிறதா كَيْدُهٗ அவனுடைய சூழ்ச்சி مَا يَغِيْظُ‏ அவனுக்கு கோபமூட்டுவதை
22:15. மன் கான யளுன்னு அல்லய் யன்ஸுரஹுல் லாஹு Fபித் துன்யா வல் ஆகிரதி Fபல் யம்துத் BபிஸBபBபின் இலஸ் ஸமா'இ தும்மல் யக்தஃ Fபல்யன்ளுர் ஹல் யுத்ஹிBபன்ன கய்துஹூ மா யகீள்
22:15. எவன் (நம் தூதர் மேல் பொறாமை கொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் உதவி செய்யமாட்டான் என்று எண்ணுகிறானோ, அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர் (நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே! இந்த வழி தன்னை ஆத்திர மூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்!
22:16
22:16 وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ اٰيٰتٍۢ بَيِّنٰتٍۙ وَّاَنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يُّرِيْدُ‏
وَكَذٰلِكَ இவ்வாறே اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் اٰيٰتٍۢ அத்தாட்சிகளாக بَيِّنٰتٍۙ தெளிவான وَّاَنَّ மேலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَهْدِىْ நேர்வழி காட்டுகின்றான் مَنْ يُّرِيْدُ‏ தான் நாடியவருக்கு
22:16. வ கதாலிக அன்Zஜல்னாஹு ஆயாதிம் Bபய்யினாதி(ன்)வ் வ அன்னல் லாஹ யஹ்தீ மய் யுரீத்
22:16. இன்னும், இதே விதமாக நாம் (குர்ஆனை) தெளிவான வசனங்களாக இறக்கியிருக்கின்றோம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்.
22:17
22:17 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَ الصّٰبِـِٕیْنَ وَالنَّصٰرٰى وَالْمَجُوْسَ وَالَّذِيْنَ اَشْرَكُوْۤا ۖ  اِنَّ اللّٰهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَالَّذِيْنَ هَادُوْا இன்னும் யூதர்கள் وَ الصّٰبِـِٕیْنَ இன்னும் ஸாபியீன்கள் وَالنَّصٰرٰى இன்னும் கிறித்தவர்கள் وَالْمَجُوْسَ இன்னும் மஜுஸிகள் وَالَّذِيْنَ اَشْرَكُوْۤا இன்னும் இணைவைத்தவர்கள் ۖ  اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَفْصِلُ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ இவர்களுக்கு மத்தியில் يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ மறுமை நாளில் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلٰى மீதும் كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் شَهِيْدٌ‏ சாட்சியாளன்
22:17. இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வஸ் ஸாBபி'ஈன வன் னஸாரா வல் மஜூஸ வல்லதீன அஷ்ரகூ இன்னல் லாஹ யFப்ஸிலு Bபய்னஹும் யவ்மல் கியாமஹ்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
22:17. திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.
22:18
22:18 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَسْجُدُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَ الْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَكَثِيْرٌ مِّنَ النَّاسِ‌ ؕ وَكَثِيْرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ‌ؕ وَمَنْ يُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍ‌ؕ اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يَشَآءُ ۩  ؕ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَسْجُدُ சிரம் பணிகின்றனர் لَهٗ அவனுக்குத்தான் مَنْ فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்களும் وَمَنْ فِى الْاَرْضِ பூமியில் உள்ளவர்களும் وَالشَّمْسُ சூரியனும் وَالْقَمَرُ சந்திரனும் وَالنُّجُوْمُ நட்சத்திரங்களும் وَ الْجِبَالُ மலைகளும் وَالشَّجَرُ மரங்களும் وَالدَّوَآبُّ கால்நடைகளும் وَكَثِيْرٌ அதிகமானவர்களும் مِّنَ النَّاسِ‌ ؕ மக்களில் وَكَثِيْرٌ இன்னும் பலர் حَقَّ உறுதியாகி விட்டது عَلَيْهِ அவர்கள் மீது الْعَذَابُ‌ؕ வேதனை وَمَنْ இன்னும் எவரை يُّهِنِ இழிவுபடுத்தினானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا எவரும் இல்லை لَهٗ அவரை مِنْ مُّكْرِمٍ‌ؕ கண்ணியப்படுத்துபவர் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَفْعَلُ செய்வான் مَا يَشَآءُ ۩  ؕ‏ தான் நாடுகின்றதை
22:18. அலம் தர அன்னல் லாஹ யஸ்ஜுது லஹூ மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ளி வஷ் ஷம்ஸு வல்கமரு வன் னு ஜூமு வல் ஜிBபாலு வஷ் ஷஜரு வத் தவாBப்Bபு வ கதீரும் மினன் னாஸி வ கதீருன் ஹக்க 'அலய்ஹில் 'அதாBப்; வ மய் யுஹினில் லாஹு Fபமா லஹூ மிம் முக்ரிம்; இன்னல்லாஹ யFப்'அலு மா யஷா
22:18. வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
22:19
22:19 هٰذٰنِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِىْ رَبِّهِمْ‌ فَالَّذِيْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنْ نَّارٍ ؕ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِيْمُ‌ۚ‏
هٰذٰنِ خَصْمٰنِ இவ்விருவரும் اخْتَصَمُوْا தர்க்கிக்கின்றனர் فِىْ رَبِّهِمْ‌ தங்கள் இறைவனின் விஷயத்தில் فَالَّذِيْنَ ஆக, எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்களோ قُطِّعَتْ வெட்டப்படும் لَهُمْ அவர்களுக்கு ثِيَابٌ ஆடைகள் مِّنْ نَّارٍ ؕ நரக நெருப்பில் يُصَبُّ ஊற்றப்படும் مِنْ فَوْقِ மேலிருந்து رُءُوْسِهِمُ அவர்களின் தலைகளுக்கு الْحَمِيْمُ‌ۚ‏ நன்கு கொதிக்கின்ற சுடு நீர்
22:19. ஹாதானி கஸ்மானிக் தஸமூ Fபீ ரBப்Bபிஹிம் Fபல் லதீன கFபரூ குத்தி'அத் லஹும் தியாBபும் மின் னார்; யுஸBப்Bபு மின் Fபவ்கி ரு'ஊஸிஹிமுல் ஹமீம்
22:19. (முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.
22:20
22:20 يُصْهَرُ بِهٖ مَا فِىْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُؕ‏
يُصْهَرُ உருக்கப்படும் بِهٖ அதன்மூலம் مَا فِىْ بُطُوْنِهِمْ அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை وَالْجُلُوْدُؕ‏ இன்னும் தோல்கள்
22:20. யுஸ்ஹரு Bபிஹீ மா Fபீ Bபுதூனிஹிம் வல்ஜுலூத்
22:20. அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.
22:21
22:21 وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِيْدٍ‏
وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு مَّقَامِعُ சம்பட்டிகள் مِنْ حَدِيْدٍ‏ இரும்பு
22:21. வ லஹும் மகாமி'உ மின் ஹதீத்
22:21. இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.
22:22
22:22 كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ يَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِيْدُوْا فِيْهَا وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ
كُلَّمَاۤ اَرَادُوْۤا நாடும்போதெல்லாம் اَنْ يَّخْرُجُوْا அவர்கள் வெளியேறுவதற்கு مِنْهَا அதிலிருந்து مِنْ غَمٍّ துக்கத்தால் اُعِيْدُوْا திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் فِيْهَا அதில் وَذُوْقُوْا இன்னும் சுவையுங்கள் عَذَابَ வேதனையை الْحَرِيْقِ‏ பொசுக்கக்கூடிய
22:22. குல்லமா அராதூ அ(ன்)ய் யக்ருஜூ மின்ஹா மின் கம்மின் உ'ஈதூ Fபீஹா வ தூகூ 'அதாBபல் ஹரீக்
22:22. (இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” (என்று சொல்லப்படும்).
22:23
22:23 اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُـؤْلُـؤًا ‌ؕ وَلِبَاسُهُمْ فِيْهَا حَرِيْرٌ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُدْخِلُ நுழைப்பான் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகள் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் يُحَلَّوْنَ அணிவிக்கப் படுவார்கள் فِيْهَا அவற்றில் مِنْ اَسَاوِرَ வளையல்களும் مِنْ ذَهَبٍ தங்கத்தினாலான وَّلُـؤْلُـؤًا ؕ இன்னும் முத்து وَلِبَاسُهُمْ இன்னும் அவர்களது ஆடை فِيْهَا அவற்றில் حَرِيْرٌ‏ பட்டாகும்
22:23. இன்னல் லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ லு'லு'ஆ; வ லிBபாஸுஹும் Fபீஹா ஹரீர்
22:23. ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.
22:24
22:24 وَهُدُوْۤا اِلَى الطَّيِّبِ مِنَ الْقَوْلِ‌ ۖۚ وَهُدُوْۤا اِلٰى صِرَاطِ الْحَمِيْدِ‏
وَهُدُوْۤا இன்னும் வழிகாட்டப்பட்டார்கள் اِلَى الطَّيِّبِ நல்லதற்கு مِنَ الْقَوْلِ‌ ۖۚ பேச்சுகளில் وَهُدُوْۤا இன்னும் வழிகாட்டப்பட்டார்கள் اِلٰى صِرَاطِ பாதைக்கு الْحَمِيْدِ‏ புகழுக்குரியவனின்
22:24. வ ஹுதூ இலத் தய்யிBபி மினல் கவ்லி வ ஹுதூ இலா ஸிராதில் ஹமீத்
22:24. ஏனெனில் அவர்கள் (கலிமா தையிபா எனும்) பரிசுத்தமான சொல்லின் பக்கம் (இம்மையில்) வழிகாட்டப்பட்டிருந்தார்கள்; இன்னும் புகழுக்குரிய (இறை)வனின் பாதையின் பக்கமும் அவர்கள் செலுத்தப்பட்டிருந்தார்கள்.
22:25
22:25 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَـرَامِ الَّذِىْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَآءَ اۨلْعَاكِفُ فِيْهِ وَالْبَادِ‌ ؕ وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَـادٍۢ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَ لِيْمٍ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் وَيَصُدُّوْنَ இன்னும் தடுப்பார்கள் عَنْ سَبِيْلِ பாதையிலிருந்து اللّٰهِ அல்லாஹ்வின் وَالْمَسْجِدِ இன்னும் அல்மஸ்ஜிது الْحَـرَامِ ஹராம் الَّذِىْ எது جَعَلْنٰهُ அதை ஆக்கியிருக்கிறோம் لِلنَّاسِ மக்களுக்கு سَوَآءَ பொதுவானது اۨلْعَاكِفُ தங்கிஇருப்பவருக்கும் فِيْهِ அதில் وَالْبَادِ‌ ؕ வெளியிலிருந்து வருபவருக்கும் وَمَنْ எவர் يُّرِدْ فِيْهِ அதில் நாடுவாரோ بِاِلْحَـادٍۢ வரம்பு மீறுவதை بِظُلْمٍ அநியாயமாக نُّذِقْهُ அவருக்கு நாம் சுவைக்க வைப்போம் مِنْ عَذَابٍ வேதனையை اَ لِيْمٍ‏ வலி தருகின்ற
22:25. இன்னல் லதீன கFபரூ வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி வல் மஸ்ஜிதில் ஹராமில் லதீ ஜ'அல்னாஹு லின்னாஸி ஸவா'அனில் 'ஆகிFபு Fபீஹி வல்Bபாத்; வ மய் யுரித் Fபீஹி Bபி இல்ஹாதிம் Bபிளுல்மின் னுதிக்ஹு மின் 'அதாBபின் அலீம்
22:25. நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.
22:26
22:26 وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِيْمَ مَكَانَ الْبَيْتِ اَنْ لَّا تُشْرِكْ بِىْ شَيْـٴًـــا وَّطَهِّرْ بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْقَآٮِٕمِيْنَ وَ الرُّكَّعِ السُّجُوْدِ‏
وَاِذْ بَوَّاْنَا நாம் உறுதிப்படுத்திய சமயத்தை لِاِبْرٰهِيْمَ இப்றாஹீமுக்கு مَكَانَ இடத்தை الْبَيْتِ வீட்டுடைய اَنْ لَّا تُشْرِكْ நீர் இணைவைக்காதீர் بِىْ شَيْـٴًـــا எனக்கு எதையும் وَّطَهِّرْ இன்னும் சுத்தமாக வைத்திருப்பீராக بَيْتِىَ எனது வீட்டை لِلطَّآٮِٕفِيْنَ தவாஃப் செய்பவர்களுக்காக وَالْقَآٮِٕمِيْنَ இன்னும் நின்று தொழுபவர்களுக்காக وَ الرُّكَّعِ இன்னும் குனிந்து தொழுபவர்களுக்காக السُّجُوْدِ‏ சிரம் பணிந்து தொழுபவர்களுக்காக
22:26. வ இத் Bபவ்வானா லி இBப்ராஹீம மகானல் Bபய்தி அல்லா துஷ்ரிக் Bபீ ஷய்'அ(ன்)வ் வ தஹ்ஹிர் Bபய்திய லிதா'இFபீன வல்கா' இமீன வர்ருக்க 'இஸ் ஸுஜூத்
22:26. நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).
22:27
22:27 وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ‏
وَاَذِّنْ இன்னும் அறிவிப்(புச் செய்து அழைப்)பீராக! فِى النَّاسِ மக்களுக்கு بِالْحَجِّ ஹஜ்ஜுக்காக يَاْتُوْكَ உம்மிடம் வருவார்கள் رِجَالًا நடந்தவர்களாகவும் وَّعَلٰى இன்னும் மீது كُلِّ எல்லாம் ضَامِرٍ மெலிந்த வாகனம் يَّاْتِيْنَ அவர்கள் வருவார்கள் مِنْ كُلِّ فَجٍّ பாதைகளிலிருந்து عَمِيْقٍ ۙ‏ தூரமான
22:27. வ அத்தின் Fபின் னாஸி Bபில் ஹஜ்ஜி யாதூக ரிஜால(ன்)வ் வ 'அலா குல்லி ளாமிரி(ன்)ய் யாதீன மின் குல்லி Fபஜ்ஜின் 'அமீக்
22:27. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).
22:28
22:28 لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِ‌‌ ۚ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآٮِٕسَ الْفَقِيْـرَ‏
لِّيَشْهَدُوْا அவர்கள் அடைவதற்காக مَنَافِعَ பலாபலன்களை لَهُمْ அவர்கள் தங்களுக்குரிய وَيَذْكُرُوا நினைவு கூர்வதற்காக اسْمَ பெயர் اللّٰهِ அல்லாஹ்வுடைய فِىْۤ اَ يَّامٍ நாட்களில் مَّعْلُوْمٰتٍ குறிப்பிட்ட عَلٰى மீது مَا رَزَقَهُمْ அவர்களுக்குக் கொடுத்த مِّنْۢ இருந்து بَهِيْمَةِ பிராணிகள் الْاَنْعَامِ‌ ۚ கால்நடைகள் فَكُلُوْا ஆகவே புசியுங்கள் مِنْهَا அவற்றிலிருந்து وَاَطْعِمُوا இன்னும் உணவளியுங்கள் الْبَآٮِٕسَ வறியவருக்கு(ம்) الْفَقِيْـرَ‏ ஏழைக்கு(ம்)
22:28. லி யஷ்ஹதூ மனாFபி'அ லஹும் வ யத்குருஸ் மல் லாஹி Fபீ அய்யாமிம்மஃலூமாதின் 'அலா மா ரZஜகஹும் மிம் Bபஹீமதில் அன்'ஆமி Fபகுலூ மின்ஹா வ அத்'இமுல் Bபா'இஸல் Fபகீர்
22:28. தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
22:29
22:29 ثُمَّ لْيَـقْضُوْا تَفَثَهُمْ وَلْيُوْفُوْا نُذُوْرَهُمْ وَلْيَطَّوَّفُوْا بِالْبَيْتِ الْعَتِيْقِ‏
ثُمَّ பிறகு لْيَـقْضُوْا இன்னும் அவர்கள் நீக்கிக் கொள்ளட்டும் تَفَثَهُمْ தங்களது அழுக்குகளை وَلْيُوْفُوْا இன்னும் அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும் نُذُوْرَ நேர்ச்சைகளை هُمْ தங்களது وَلْيَطَّوَّفُوْا இன்னும் அவர்கள் தவாஃப் செய்யட்டும் بِالْبَيْتِ வீட்டை الْعَتِيْقِ‏ மிகப் பழமையான
22:29. தும்மல் யக்ளூ தFபதஹும் வல் யூFபூ னுதூரஹும் வல் யத்தவ்வFபூ Bபில் Bபய்தில் 'அதீக்
22:29. பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்.
22:30
22:30 ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ حُرُمٰتِ اللّٰهِ فَهُوَ خَيْرٌ لَّهٗ عِنْدَ رَبِّهٖ‌ؕ وَاُحِلَّتْ لَـكُمُ الْاَنْعَامُ اِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ‌ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْاَوْثَانِ وَاجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِۙ‏
ذٰلِكَ அவைதான் وَمَنْ எவர் يُّعَظِّمْ மதிப்பார் حُرُمٰتِ புனிதங்களை اللّٰهِ அல்லாஹ்வுடைய فَهُوَ அது خَيْرٌ மிகச் சிறந்தது لَّهٗ அவருக்கு عِنْدَ رَبِّهٖ‌ؕ அவருடைய இறைவனிடம் وَاُحِلَّتْ ஆகுமாக்கப் பட்டுள்ளன لَـكُمُ உங்களுக்கு الْاَنْعَامُ கால்நடைகள் اِلَّا தவிர مَا يُتْلٰى ஓதிக்காட்டப்படுபவற்றை عَلَيْكُمْ‌ உங்களுக்கு فَاجْتَنِبُوا விலகிக்கொள்ளுங்கள் الرِّجْسَ அசுத்தங்களை مِنَ الْاَوْثَانِ சிலைகளை وَاجْتَنِبُوْا இன்னும் விலகிக் கொள்ளுங்கள் قَوْلَ பேச்சை (விட்டு) الزُّوْرِۙ‏ பொய்
22:30. தாலிக வ மய் யு'அள்ளிம் ஹுருமாதில் லாஹி Fபஹுவ கய்ருல் லஹூ 'இன்த ரBப்Bபிஹ்; வ உஹில்லத் லகுமுல் அன்'ஆமு இல்லா மா யுத்லா 'அலய்கும் Fபஜ்தனிBபுர் ரிஜ்ஸ மினல் அவ்தானி வஜ்தனிBபூ கவ்லZஜ் Zஜூர்
22:30. இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.
22:31
22:31 حُنَفَآءَ لِلّٰهِ غَيْرَ مُشْرِكِيْنَ بِهٖ‌ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَكَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَآءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ اَوْ تَهْوِىْ بِهِ الرِّيْحُ فِىْ مَكَانٍ سَحِيْقٍ‏
حُنَفَآءَ முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களாக لِلّٰهِ அல்லாஹ்விற்கு غَيْرَ مُشْرِكِيْنَ (எதையும்) இணையாக்காதவர்களாக بِهٖ‌ؕ அவனுக்கு وَمَنْ எவர் يُّشْرِكْ இணை கற்பிப்பாரோ بِاللّٰهِ அல்லாஹ்விற்கு فَكَاَنَّمَا போன்று خَرَّ கீழே விழுந்தார் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து فَتَخْطَفُهُ அவரைக் கொத்திச் சென்றன الطَّيْرُ பறவைகள் اَوْ அல்லது تَهْوِىْ எறிந்தது بِهِ அவரை الرِّيْحُ காற்று فِىْ مَكَانٍ இடத்தில் سَحِيْقٍ‏ தூரமான
22:31. ஹுனFபா'அ லில்லாஹி கய்ர முஷ்ரிகீன Bபிஹ்; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி Fபக அன்னமா கர்ர மினஸ் ஸமா'இ Fபதக் தFபுஹுத் தய்ரு அவ் தஹ்வீ Bபிஹிர் ரீஹு Bபீ மகானின் ஸஹீக்
22:31. அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.
22:32
22:32 ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏
ذٰلِكَ அவைதான் وَمَنْ இன்னும் எவர் يُّعَظِّمْ கண்ணியப் படுத்துவாரோ شَعَآٮِٕرَ அடையாளங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَاِنَّهَا நிச்சயமாக அது مِنْ تَقْوَى இறையச்சத்திலிருந்து الْقُلُوْبِ‏ உள்ளங்களின்
22:32. தாலிக வ மய் யு'அள்ளிம் ஷ'ஆ'இரல் லாஹி Fப இன்னஹா மின் தக்வல் குலூBப்
22:32. இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.
22:33
22:33 لَـكُمْ فِيْهَا مَنَافِعُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ مَحِلُّهَاۤ اِلَى الْبَيْتِ الْعَتِيْقِ
لَـكُمْ உங்களுக்கு فِيْهَا இவற்றில் مَنَافِعُ பலன்கள் உள்ளன اِلٰٓى வரை اَجَلٍ ஒரு காலம் مُّسَمًّى குறிப்பிட்ட ثُمَّ பின்னர் مَحِلُّهَاۤ அவற்றுக்குரிய இடம் اِلَى பக்கம் الْبَيْتِ அல் பைத்துல் الْعَتِيْقِ‏ அதீக்
22:33. லகும் Fபீஹா மனாFபி'உ இலா அஜலிம் முஸம்மன் தும்ம மஹில்லுஹா இலல் Bபய்தில் 'அதீக்
22:33. (குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானிக்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது.
22:34
22:34 وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِ ؕ فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌ ؕ وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏
وَلِكُلِّ ஒவ்வொரு اُمَّةٍ சமுதாயத்திற்கும் جَعَلْنَا ஆக்கி இருக்கிறோம் مَنْسَكًا குர்பானியை அறுப்பதை لِّيَذْكُرُوا நினைவு கூருவதற்காக اسْمَ பெயரை اللّٰهِ அல்லாஹ்வின் عَلٰى மீது مَا رَزَقَهُمْ அவர்களுக்குக் கொடுத்த مِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِ ؕ கால்நடைகளின் فَاِلٰهُكُمْ ஆக, உங்கள் கடவுள் اِلٰـهٌ ஒரு கடவுள்தான் وَّاحِدٌ ஒரே فَلَهٗۤ ஆகவே, அவனுக்கே اَسْلِمُوْا‌ ؕ பணிந்து வழிபடுங்கள் وَبَشِّرِ நற்செய்தி கூறுவீராக الْمُخْبِتِيْنَ ۙ‏ கீழ்ப்படிந்தவர்களுக்கு
22:34. வ லிகுல்லி உம்மதின் ஜ'அல்னா மன்ஸகல் லியத்குருஸ் மல் லாஹி 'அலா மா ரZஜகஹும் மிம் Bபஹீமதில் அன்'ஆம்; Fப இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹிதுன் Fபலஹூ அஸ்லிமூ; வ Bபஷ்ஷிரில் முக்Bபிதீன்
22:34. இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
22:35
22:35 الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصّٰبِرِيْنَ عَلٰى مَاۤ اَصَابَهُمْ وَالْمُقِيْمِى الصَّلٰوةِ ۙ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‏
الَّذِيْنَ எவர்கள் اِذَا ذُكِرَ நினைவுகூரப்பட்டால் اللّٰهُ அல்லாஹ் وَجِلَتْ பயப்படும் قُلُوْبُهُمْ அவர்களது உள்ளங்கள் وَالصّٰبِرِيْنَ இன்னும் பொறுமையாக இருப்பார்கள் عَلٰى மீது مَاۤ اَصَابَهُمْ அவர்களுக்கு ஏற்பட்டவற்றின் وَالْمُقِيْمِى இன்னும் நிலைநிறுத்துவார்கள் الصَّلٰوةِ ۙ தொழுகையை وَمِمَّا رَزَقْنٰهُمْ இன்னும் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து يُنْفِقُوْنَ‏ தர்மம் செய்வார்கள்
22:35. அல்லதீன இதா துகிரல் லாஹு வஜிலத் குலூBபுஹும் வஸ்ஸாBபிரீன 'அலா மா அஸாBபஹும் வல்முகீமிஸ் ஸலாதி வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
22:35. அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.
22:36
22:36 وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَـكُمْ مِّنْ شَعَآٮِٕرِ اللّٰهِ لَـكُمْ فِيْهَا خَيْرٌ‌ ‌ۖ  فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهَا صَوَآفَّ‌ ۚ فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَـرَّ ‌ؕ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَـكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
وَالْبُدْنَ இன்னும் கொழுத்த ஒட்டகங்கள் جَعَلْنٰهَا அவற்றை நாம் ஆக்கி இருக்கின்றோம் لَـكُمْ உங்களுக்கு مِّنْ شَعَآٮِٕرِ அடையாள சின்னங்களில் اللّٰهِ அல்லாஹ்வின் لَـكُمْ உங்களுக்கு فِيْهَا அவற்றில் خَيْرٌ‌ நன்மைகள் உண்டு ۖ  فَاذْكُرُوا ஆகவே கூறுங்கள் اسْمَ பெயரை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْهَا அவற்றின் மீது صَوَآفَّ‌ ۚ நின்றவையாக இருக்க فَاِذَا وَجَبَتْ சாய்ந்து விட்டால் جُنُوْبُهَا அவற்றின் விலாக்கள் فَكُلُوْا சாப்பிடுங்கள் مِنْهَا அவற்றிலிருந்து وَاَطْعِمُوا இன்னும் உணவளியுங்கள் الْقَانِعَ யாசிப்பவருக்கும் وَالْمُعْتَـرَّ ؕ எதிர்பார்த்து வருபவருக்கும் كَذٰلِكَ இவ்வாறே سَخَّرْنٰهَا அதை வசப்படுத்தித் தந்தோம் لَـكُمْ உங்களுக்கு لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
22:36. வல்Bபுத்ன ஜ'அல்னாஹா லகும் மின் ஷ'ஆ'இரில் லாஹி லகும் Fபீஹா கய்ருன் Fபத்குருஸ்மல் லாஹி 'அலய்ஹா ஸவாFப்Fப்; Fப இதா வஜBபத் ஜுனூBபுஹா Fபகுலூ மின்ஹா வ அத்'இமுல் கானி'அ வல்முஃதர்ர்; கதாலிக ஸக்கர்னாஹா லகும் ல'அல்லகும் தஷ்குரூன்
22:36. இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
22:37
22:37 لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏
لَنْ يَّنَالَ அறவே அடையாது اللّٰهَ அல்லாஹ்வை لُحُـوْمُهَا அவற்றின்இறைச்சிகள் وَلَا دِمَآؤُهَا இன்னும் அவற்றின்இரத்தங்கள் وَلٰـكِنْ எனினும் يَّنَالُهُ அவனை அடையும் التَّقْوٰى இறையச்சம் مِنْكُمْ‌ؕ உங்களிடமிருந்து كَذٰلِكَ இவ்வாறுதான் سَخَّرَهَا அவற்றை வசப்படுத்திக் கொடுத்தான் لَـكُمْ உங்களுக்கு لِتُكَبِّرُوا பெருமைப் படுத்துவதற்காக اللّٰهَ அல்லாஹ்வை عَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕ அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக وَبَشِّرِ நற்செய்தி கூறுவீராக الْمُحْسِنِيْنَ‏ அழகிய முறையில் கீழ்ப்படிகின்றவர்களுக்கு
22:37. ல(ன்)ய் யனாலல் லாஹ லுஹூ முஹா வலா திமா'உஹா வ லாகி(ன்)ய் யனாலுஹுத் தக்வா மின்கும்; கதாலிக ஸக்கர்ஹா லகும் லிதுகBப்Bபிருல் லாஹ 'அலா ம ஹதாகும்; வ Bபஷ்ஷிருல் முஹ்ஸினீன்
22:37. (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
22:38
22:38 اِنَّ اللّٰهَ يُدٰفِعُ عَنِ الَّذِيْنَ اٰمَنُوْٓا‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُوْرٍ
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُدٰفِعُ தடுத்து விடுவான் عَنِ விட்டும் الَّذِيْنَ اٰمَنُوْٓا‌ ؕ நம்பிக்கை கொண்டவர்களை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் كُلَّ எல்லா خَوَّانٍ மோசடிக்காரர்களை كَفُوْرٍ‏ நன்றிகெட்டவர்களை
22:38. இன்னல் லாஹ யுதாFபி' 'அனில் லதீன ஆமனூ; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு குல்ல கவ்வானின் கFபூர்
22:38. நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
22:39
22:39 اُذِنَ لِلَّذِيْنَ يُقٰتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْا‌ ؕ وَاِنَّ اللّٰهَ عَلٰى نَـصْرِهِمْ لَـقَدِيْرُ ۙ‏
اُذِنَ அனுமதிக்கப்பட்டுள்ளது لِلَّذِيْنَ يُقٰتَلُوْنَ சண்டையிடப்படக் கூடியவர்களுக்கு بِاَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் ظُلِمُوْا‌ ؕ அநீதியிழைக்கப்பட்டார்கள் وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلٰى نَـصْرِهِمْ அவர்களுக்கு உதவி செய்ய لَـقَدِيْرُ ۙ‏ பேராற்றலுடையவன்
22:39. உதின லில்லதீன யுகாதலூன Bபி அன்னஹும் ளுலிமூ; வ இன்னல் லாஹ 'அலா னஸ்ரிஹிம் ல கதீர்ர்
22:39. போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.
22:40
22:40 اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ‌ ؕ وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا‌ ؕ وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏
اۨلَّذِيْنَ எவர்கள் اُخْرِجُوْا வெளியேற்றப்பட்டார்கள் مِنْ دِيَارِهِمْ தங்கள் இல்லங்களிலிருந்து بِغَيْرِ حَقٍّ எவ்வித நியாயமுமின்றி اِلَّاۤ தவிர اَنْ يَّقُوْلُوْا அவர்கள் கூறுவதற்காகவே رَبُّنَا எங்கள் இறைவன் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَلَوْلَا دَ فْعُ பாதுகாப்பது இல்லை என்றால் اللّٰهِ அல்லாஹ் النَّاسَ மக்களை بَعْضَهُمْ அவர்களில் சிலரை بِبَـعْضٍ சிலரைக் கொண்டு لَّهُدِّمَتْ உடைக்கப்பட்டிருக்கும் صَوَامِعُ துறவிகளின் தங்குமிடங்களும் وَبِيَعٌ கிறித்துவ ஆலயங்களும் وَّصَلَوٰتٌ யூத ஆலயங்களும் وَّمَسٰجِدُ மஸ்ஜிதுகளும் يُذْكَرُ நினைவு கூரப்படும் فِيْهَا அதில் اسْمُ பெயரை اللّٰهِ அல்லாஹ்வின் كَثِيْرًا‌ ؕ அதிகமாக وَلَيَنْصُرَنَّ நிச்சயமாக அவருக்கு உதவுவான் اللّٰهُ அல்லாஹ் مَنْ எவர் يَّنْصُرُهٗ ؕ அவனுக்கு உதவுவாரோ اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَقَوِىٌّ வலிமை உள்ளவன் عَزِيْزٌ‏ மிகைத்தவன்
22:40. அல்லதீன உக்ரிஜூ மின் தியாரிஹிம் Bபிகய்ரி ஹக்கின் இல்லா அ(ன்)ய் யகூலூ ரBப்Bபுனல்லாஹ்; வ லவ் லா தFப்'உல் லாஹின் னாஸ Bபஃளஹும் BபிBபஃளில் லஹுத்திமத் ஸவாமி'உ வ Bபிய'உ(ன்)வ் வ ஸலவாது(ன்)வ் வ மஸாஜிது யுத்கரு Fபீஹஸ்முல் லாஹி கதீரா; வ லயன்ஸுரன்னல் லாஹு மய் யன்ஸுருஹ்; இன்னல் லாஹ ல கவிய்யுன் 'அZஜீZஜ்
22:40. இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.
22:41
22:41 اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ‌ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ‏
اَ لَّذِيْنَ எவர்கள் اِنْ مَّكَّنّٰهُمْ அவர்களுக்கு நாம் இடமளித்தால் فِى الْاَرْضِ பூமியில் اَقَامُوا நிறைவேற்றுவார்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتَوُا இன்னும் கொடுப்பார்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَاَمَرُوْا இன்னும் ஏவுவார்கள் بِالْمَعْرُوْفِ நன்மையை وَنَهَوْا இன்னும் தடுப்பார்கள் عَنِ الْمُنْكَرِ‌ ؕ தீமையிலிருந்து وَلِلّٰهِ அல்லாஹ்வின் பக்கமே عَاقِبَةُ முடிவு الْاُمُوْرِ‏ எல்லாக் காரியங்களின்
22:41. அல்லதீன இம் மக்கன் னாஹும் Fபில் அர்ளி அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத வ அமரூ Bபில்மஃரூFபி வ னஹவ் 'அனில் முன்கர்; வ லில்லாஹி 'ஆகிBபதுல் உமூர்
22:41. அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
22:42
22:42 وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۙ‏
وَاِنْ يُّكَذِّبُوْكَ உம்மை இவர்கள் பொய்ப்பித்தால் فَقَدْ திட்டமாக كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمُ மக்களும் نُوْحٍ நூஹூடைய وَّعَادٌ இன்னும் ஆது وَّثَمُوْدُ ۙ‏ ஸமூது சமுதாயமும்
22:42. வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ ஆது(ன்)வ் வ தமூத்
22:42. (நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது (சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப்) பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
22:43
22:43 وَقَوْمُ اِبْرٰهِيْمَ وَقَوْمُ لُوْطٍ ۙ‏
وَقَوْمُ மக்களும் اِبْرٰهِيْمَ இப்றாஹீமுடைய وَقَوْمُ மக்களும் لُوْطٍ ۙ‏ லூத்துடைய
22:43. வ கவ்மு இBப்ராஹீம வ கவ்மு லூத்
22:43. (இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).
22:44
22:44 وَّاَصْحٰبُ مَدْيَنَ‌ۚ وَكُذِّبَ مُوْسٰى فَاَمْلَيْتُ لِلْكٰفِرِيْنَ ثُمَّ اَخَذْتُهُمْ‌ۚ فَكَيْفَ كَانَ نَكِيْرِ‏
وَّاَصْحٰبُ வாசிகளும் مَدْيَنَ‌ۚ மத்யன் وَكُذِّبَ பொய்ப்பிக்கப்பட்டார் مُوْسٰى மூஸாவும் فَاَمْلَيْتُ நான் அவகாசம் அளித்தேன் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு ثُمَّ பிறகு اَخَذْتُهُمْ‌ۚ நான் அவர்களைப் பிடித்தேன் فَكَيْفَ ஆகவே, எப்படி? كَانَ இருந்தது نَكِيْرِ‏ எனது மறுப்பு
22:44. வ அஸ் ஹாBபு மத்யன வ குத்திBப மூஸா Fப அம்லய்து லில்காFபிரீன தும்ம அகத்துஹும் Fபகய்Fப கான னகீர்
22:44. (இவ்வாறே) மத்யன் வாசிகளும் (முற்பட்டனர்); இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்கவே முற்பட்டனர் -எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்; என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதை கவனிப்பீராக!)
22:45
22:45 فَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ اَهْلَكْنٰهَا وَهِىَ ظَالِمَةٌ فَهِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَّقَصْرٍ مَّشِيْدٍ‏
فَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ قَرْيَةٍ ஊர்களை اَهْلَكْنٰهَا நாம் அவற்றை அழித்தோம் وَهِىَ அவை ظَالِمَةٌ அநியாயம் புரிபவையாக இருக்க فَهِىَ அவை خَاوِيَةٌ வீழ்ந்துள்ளன عَلٰى மீது عُرُوْشِهَا தமது முகடுகள் وَبِئْرٍ கிணறுகள் مُّعَطَّلَةٍ விடப்பட்ட وَّقَصْرٍ மாளிகைகளை مَّشِيْدٍ‏ சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு கட்டப்பட்ட
22:45. Fபக அய்யிம் மின் கர்யதின் அஹ்லக்னாஹா வ ஹிய ளாலிமதுன் Fபஹிய காவியதுன் 'அலா 'உரூஷிஹா வ Bபி'ரிம் மு'அத் தலதி(ன்)வ் வ கஸ்ரிம் மஷீத்
22:45. அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் - அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன).
22:46
22:46 اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا‌ ۚ فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ وَلٰـكِنْ تَعْمَى الْـقُلُوْبُ الَّتِىْ فِى الصُّدُوْرِ‏
اَفَلَمْ يَسِيْرُوْا அவர்கள் பயணம் செய்ய வேண்டாமா? فِى الْاَرْضِ பூமியில் فَتَكُوْنَ உண்டாகும் لَهُمْ அவர்களுக்கு قُلُوْبٌ உள்ளங்களும் يَّعْقِلُوْنَ சிந்தித்து புரிகின்றனர் بِهَاۤ அவற்றின் மூலம் اَوْ அல்லது اٰذَانٌ காதுகளும் يَّسْمَعُوْنَ செவிமடுக்கின்ற بِهَا‌ ۚ அவற்றின் மூலம் فَاِنَّهَا ஏனெனில் நிச்சயமாக لَا تَعْمَى குருடாகுவதில்லை الْاَبْصَارُ பார்வைகள் وَلٰـكِنْ எனினும் تَعْمَى குருடாகி விடுகின்றன الْـقُلُوْبُ உள்ளங்கள்தான் الَّتِىْ فِى الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ள
22:46. அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fபதகூன லஹும் குலூBபு(ன்)ய் யஃகிலூன Bபிஹா அவ் ஆதானு(ன்)ய் யஸ்ம'ஊன Bபிஹா Fப இன்னஹா லா தஃமல் அBப்ஸாரு வ லாகின் தஃமல் குலூBபுல் லதீ Fபிஸ்ஸுதூர்
22:46. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.
22:47
22:47 وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ يُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗ‌ ؕ وَاِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَ لْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ‏
وَيَسْتَعْجِلُوْنَكَ அவர்கள் உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர் بِالْعَذَابِ வேதனையை وَلَنْ يُّخْلِفَ அறவே மாற்ற மாட்டான் اللّٰهُ அல்லாஹ் وَعْدَهٗ‌ ؕ தனது வாக்கை وَاِنَّ நிச்சயமாக يَوْمًا ஒரு நாள் عِنْدَ رَبِّكَ உமது இறைவனிடம் كَاَ لْفِ ஆயிரம் போன்று سَنَةٍ ஆண்டுகளை مِّمَّا تَعُدُّوْنَ‏ நீங்கள் எண்ணக்கூடியவற்றிலிருந்து
22:47. வ யஸ்தஃஜிலூனக Bபில்'அதாBபி வ ல(ன்)ய் யுக்லிFபல் லாஹு வஃதஹ்; வ இன்ன யவ்மன் 'இன்த ரBப்Bபிக க'அல்Fபி ஸனதிம் மிம்மா த'உத்தூன்
22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
22:48
22:48 وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ اَمْلَيْتُ لَهَا وَهِىَ ظَالِمَةٌ ثُمَّ اَخَذْتُهَا‌ۚ وَاِلَىَّ الْمَصِيْرُ
وَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ قَرْيَةٍ ஊர்கள் اَمْلَيْتُ நான் அவகாசம் அளித்தேன் لَهَا அவற்றுக்கு وَهِىَ அவை ظَالِمَةٌ அநியாயம் செய்பவையாக இருக்க ثُمَّ பிறகு اَخَذْتُهَا‌ۚ அவற்றைப்பிடித்தேன் وَاِلَىَّ என் பக்கமே الْمَصِيْرُ‏ மீளுதல் இருக்கிறது
22:48. வ க அய்யிம் மின் கர்யதின் அம்லய்து லஹா வ ஹிய ளாலிமதுன் தும்ம அகத்துஹா வ இலய்யல் மஸீர்
22:48. அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்.
22:49
22:49 قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّمَاۤ اَنَا لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌ‌ۚ‏
قُلْ கூறுவீராக يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே اِنَّمَاۤ اَنَا நிச்சயமாக நான் எல்லாம் لَـكُمْ உங்களுக்கு نَذِيْرٌ எச்சரிப்பாளர்தான் مُّبِيْنٌ‌ۚ‏ தெளிவான
22:49. குல் யா அய்யுஹன் னாஸு இன்னமா அன லகும் னதீரும் முBபீன்
22:49. “மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவனாகவே இருக்கின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
22:50
22:50 فَالَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏
فَالَّذِيْنَ ஆகவே, எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகள் لَهُمْ அவர்களுக்கு உண்டு مَّغْفِرَةٌ பாவமன்னிப்பு(ம்) وَّرِزْقٌ உணவும் كَرِيْمٌ‏ கண்ணியமான
22:50. Fபல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
22:50. “எனவே, எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
22:51
22:51 وَالَّذِيْنَ سَعَوْا فِىْۤ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ‏
وَالَّذِيْنَ எவர்கள் سَعَوْا முயற்சித்தார்கள் فِىْۤ اٰيٰتِنَا நமது வசனங்களில் مُعٰجِزِيْنَ மிகைத்துவிட முயற்சித்தவர்களாக اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் اَصْحٰبُ الْجَحِيْمِ‏ நரகவாசிகள்
22:51. வல்லதீன ஸ'அவ் Fபீ ஆயாதினா மு'ஆஜிZஜீன உலா இக அஸ்-ஹாBபுல் ஜஹீம்
22:51. “ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களை தோற்கடிக்க முயல்கின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே!”
22:52
22:52 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِىٍّ اِلَّاۤ اِذَا تَمَنّٰٓى اَلْقَی الشَّيْطٰنُ فِىْۤ اُمْنِيَّتِهٖ ‌ۚ فَيَنْسَخُ اللّٰهُ مَا يُلْقِى الشَّيْطٰنُ ثُمَّ يُحْكِمُ اللّٰهُ اٰيٰتِهٖ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ۙ‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் مِنْ رَّسُوْلٍ எந்த தூதரையும் وَّلَا نَبِىٍّ நபியையும் اِلَّاۤ தவிர اِذَا تَمَنّٰٓى அவர் ஓதும்போது اَلْقَى கூறினான் الشَّيْطٰنُ ஷைத்தான் فِىْۤ اُمْنِيَّتِهٖ ۚ அவர் ஓதுவதில் فَيَنْسَخُ பின்னர் போக்கி விடுவான் اللّٰهُ அல்லாஹ் مَا يُلْقِى الشَّيْطٰنُ ஷைத்தான் கூறுவதை ثُمَّ பிறகு يُحْكِمُ உறுதிப்படுத்துவான் اللّٰهُ அல்லாஹ் اٰيٰتِهٖ‌ ؕ தனது வசனங்களை وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ ۙ‏ மகா ஞானவான்
22:52. வ மா அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ரஸூலின்(ன்)வ் வலா னBபிய்யின் இல்லா இதா தமன்னா அல்கஷ் ஷய்தானு Fபீ உம்னிய் யதிஹீ Fப யன்ஸகுல் லாஹு மா யுல்கிஷ் ஷய்தானு தும்ம யுஹ்கிமுல் லாஹு ஆயாதிஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
22:52. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
22:53
22:53 لِّيَجْعَلَ مَا يُلْقِى الشَّيْطٰنُ فِتْـنَةً لِّـلَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْقَاسِيَةِ قُلُوْبُهُمْ‌ ۚ وَ اِنَّ الظّٰلِمِيْنَ لَفِىْ شِقَاقٍۭ بَعِيْدٍۙ‏
لِّيَجْعَلَ (முடிவில்)ஆக்குவான் مَا يُلْقِى கூறுவதை الشَّيْطٰنُ ஷைத்தான் فِتْـنَةً சோதனையாக لِّـلَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ எவர்களுக்கு/அவர்களுடைய உள்ளங்களில் مَّرَضٌ நோய் وَّالْقَاسِيَةِ இன்னும் இறுகியவர்களுக்கு قُلُوْبُهُمْ‌ ۚ அவர்கள் உள்ளங்கள் وَ اِنَّ நிச்சயமாக الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் لَفِىْ شِقَاقٍۭ முரண்பாட்டில்தான் இருக்கின்றனர் بَعِيْدٍۙ‏ மிக தூரமான
22:53. லியஜ்'அல மா யுல்கிஷ் ஷய்தானு Fபித்னதல் லில்லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)வ் வல்காஸியதி குலூBபுஹும்; வ இன்னள் ளாலிமீன லFபீ ஷிகாகிம் Bப'ஈத்
22:53. ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.
22:54
22:54 وَّلِيَـعْلَمَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّكَ فَيُؤْمِنُوْا بِهٖ فَـتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
وَّلِيَـعْلَمَ (முடிவில்,) அறிந்து கொள்வார்(கள்) الَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்கள் الْعِلْمَ அறிவு اَنَّهُ நிச்சயமாக இது الْحَـقُّ உண்மைதான் مِنْ رَّبِّكَ உமது இறைவன் புறத்திலிருந்து فَيُؤْمِنُوْا நம்பிக்கை கொண்டு بِهٖ அதை فَـتُخْبِتَ பணிந்து விடும் لَهٗ அதற்கு قُلُوْبُهُمْ‌ ؕ அவர்களுடைய உள்ளங்கள் وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَهَادِ வழிகாட்டக் கூடியவன் الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கை கொண்டவர்களை اِلٰى صِرَاطٍ பாதைக்கு مُّسْتَقِيْمٍ‏ நேரான
22:54. வ லியஃலமல் லதீன ஊதுல் 'இல்ம அன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிக Fப யு'மினூ Bபிஹீ Fபதுக்Bபித லஹூ குலூBபுஹும்; வ இன்னல் லாஹ லஹாதில் லதீன ஆமனூ இலா ஸிராதிம் முஸ்தகீம்
22:54. (ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.
22:55
22:55 وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ مِرْيَةٍ مِّنْهُ حَتّٰى تَاْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً اَوْ يَاْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيْمٍ‏
وَلَا يَزَالُ தொடர்ந்து இருக்கின்றனர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் فِىْ مِرْيَةٍ சந்தேகத்தில்தான் مِّنْهُ இதில் حَتّٰى வரை تَاْتِيَهُمُ அவர்களிடம் வருகின்ற السَّاعَةُ மறுமை بَغْتَةً திடீரென اَوْ அல்லது يَاْتِيَهُمْ அவர்களிடம் வருகின்ற عَذَابُ வேதனை يَوْمٍ நாளின் عَقِيْمٍ‏ மலட்டு
22:55. வ லா யZஜாலுல் லதீன கFபரூ Fபீ மிர்யதிம் மின்ஹு ஹத்தா தாதியஹுமுஸ் ஸா'அது Bபக்ததன் அவ் யாதியஹும் 'அதாBபு யவ்மின் 'அகீம்
22:55. நிராகரித்தவர்கள் மறுமை நாள் திடீரென அவர்களிடம் வரும் வரை அல்லது மலட்டு நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை அதுபற்றி சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்.
22:56
22:56 اَ لْمُلْكُ يَوْمَٮِٕذٍ لِّلّٰهِ ؕ يَحْكُمُ بَيْنَهُمْ‌ ؕ فَالَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فِىْ جَنّٰتِ النَّعِيْمِ‏
اَ لْمُلْكُ ஆட்சி يَوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلّٰهِ ؕ அல்லாஹ்விற்கே உரியது يَحْكُمُ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ‌ ؕ அவர்களுக்கு மத்தியில் فَالَّذِيْنَ ஆக, எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை فِىْ جَنّٰتِ சொர்க்கங்களில் النَّعِيْمِ‏ “நயீம்” இன்பமிகு
22:56. அல்முல்கு யவ்ம'இதில் லில்லாஹி யஹ்குமு Bபய்னஹும்; Fபல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபீ ஜன்னாதின் ன'ஈம்
22:56. அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்கள்.
22:57
22:57 وَالَّذِيْنَ كَفَرُوْا وَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا فَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் وَ كَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நமது வசனங்களை فَاُولٰٓٮِٕكَ அவர்கள் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை مُّهِيْنٌ‏ இழிவுதரக்கூடிய
22:57. வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா Fப உலா'இக லஹும் 'அதாBபும் முஹீன்
22:57. (ஆனால்) எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களோ, அவர்களுக்குத்தான் இழிவு மிக்க வேதனை உண்டு.
22:58
22:58 وَالَّذِيْنَ هَاجَرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ قُتِلُوْۤا اَوْ مَاتُوْا لَيَرْزُقَنَّهُمُ اللّٰهُ رِزْقًا حَسَنًا‌ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏
وَالَّذِيْنَ எவர்கள் هَاجَرُوْا நாடு துறந்து சென்றார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் ثُمَّ பிறகு قُتِلُوْۤا கொல்லப்பட்டு விட்டார்களோ اَوْ அல்லது مَاتُوْا மரணித்து விட்டார்களோ لَيَرْزُقَنَّهُمُ நிச்சயமாக அவர்களுக்கு கொடுப்பான் اللّٰهُ அல்லாஹ் رِزْقًا உணவை حَسَنًا‌ؕ அழகிய وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَهُوَ அவன் خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰزِقِيْنَ‏ உணவளிப்பவர்களில்
22:58. வல்லதீன ஹாஜரூ Fபீ ஸBபீலில் லாஹி தும்ம குதிலூ அவ் மாதூ ல யர்Zஜுகன் னஹுமுல் லாஹு ரிZஜ்கன் ஹஸனா; வ இன்னல் லாஹ ல ஹுவ கய்ருர் ராZஜிகீன்
22:58. இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்.
22:59
22:59 لَيُدْخِلَـنَّهُمْ مُّدْخَلًا يَّرْضَوْنَهٗ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَعَلِيْمٌ حَلِيْمٌ‏
لَيُدْخِلَـنَّهُمْ நிச்சயமாக அவர்களை நுழைப்பான் مُّدْخَلًا நுழைவிடத்தில் يَّرْضَوْنَهٗ‌ ؕ அவர்கள் திருப்தி படுவார்கள் / அதை وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَعَلِيْمٌ நன்கறிந்தவன் حَلِيْمٌ‏ மகா சகிப்பாளன்
22:59. ல யுத்கிலன் னஹும் முத் கல(ன்)ய் யர்ளவ்னஹ்; வ இன்னல் லாஹ ல 'அலீமுன் ஹலீம்
22:59. நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; மேலும்: நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவன், மிக்க பொறுமையுடையவன்.
22:60
22:60 ذٰ لِكَ‌ۚ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوْقِبَ بِهٖ ثُمَّ بُغِىَ عَلَيْهِ لَيَنْصُرَنَّهُ اللّٰهُ ‌ؕ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ‏
ذٰ لِكَ‌ۚ அது وَمَنْ எவர் عَاقَبَ தண்டிப்பார் بِمِثْلِ مَا عُوْقِبَ தண்டிக்கப்பட்டது போன்று بِهٖ அதற்காக ثُمَّ பிறகு بُغِىَ வன்முறை செய்யப்பட்டது عَلَيْهِ தன்மீது لَيَنْصُرَنَّهُ நிச்சயமாக அவருக்கு உதவுவான் اللّٰهُ ؕ அல்லாஹ் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَعَفُوٌّ மகா மன்னிப்பாளன் غَفُوْرٌ‏ பெரும் பிழை பொறுப்பாளன்
22:60. தாலிக வ மன் 'ஆகBப Bபிமித்லி மா 'ஊகிBப Bபிஹீ தும்ம Bபுகிய 'அலய்ஹி ல யன்ஸுரன்னஹுல் லாஹ்; இன்னல் லாஹ ல 'அFபுவ்வுன் கFபூர்
22:60. அது (அப்படியே ஆகும்) எவன் தான் துன்புறுத்தப்படும் அளவே (துன்புறுத்தியவனை) தண்டித்து அதன் பின் அவன் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.
22:61
22:61 ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ‏
ذٰ لِكَ அது بِاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُوْلِجُ நுழைக்கிறான் الَّيْلَ இரவை فِى النَّهَارِ பகலில் وَيُوْلِجُ நுழைக்கிறான் النَّهَارَ فِى الَّيْلِ பகலை / இரவில் وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَمِيْعٌۢ நன்கு செவியுறுபவன் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
22:61. தாலிக Bபி அன்னல் லாஹ யூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ யூலிஜுன் னஹார Fபில் லய்லி வ அன்னல் லாஹ ஸமீ'உம் Bபஸீர்
22:61. அது(ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
22:62
22:62 ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ‏
ذٰ لِكَ بِاَنَّ அது / நிச்சயமாக اللّٰهَ هُوَ அல்லாஹ்தான் الْحَـقُّ உண்மையானவன் وَاَنَّ நிச்சயமாக مَا يَدْعُوْنَ அவர்கள் அழைக்கின்றவை مِنْ دُوْنِهٖ அவனையன்றி هُوَ அது الْبَاطِلُ பொய்யானவையாகும் وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ هُوَ அல்லாஹ்தான் الْعَلِىُّ மிக உயர்ந்தவன் الْكَبِيْرُ‏ மகா பெரியவன்
22:62. தாலிக Bபி அன்னல் லாஹ ஹுவல் ஹக்கு வ அன்ன மா யத்'ஊன மின் தூனிஹீ ஹுவல் Bபாதிலு வ அன்னல் லாஹ ஹுவல் 'அலிய்யுல் கBபீர்
22:62. இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்); மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.
22:63
22:63 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً  فَتُصْبِحُ الْاَرْضُ مُخْضَرَّةً ً  ؕاِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ‌ ۚ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اَنْزَلَ இறக்குகின்றான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً  மழையை فَتُصْبِحُ மாறுகின்றது الْاَرْضُ பூமி مُخْضَرَّةً ً பசுமையாக ؕاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَطِيْفٌ நுட்பமானவன் خَبِيْرٌ‌ ۚ‏ ஆழ்ந்தறிபவன்
22:63. அலம் தர அன்னல் லாஹ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fபதுஸ்Bபிஹுல் அர்ளு முக்ளர்ரஹ்; இன்னல் லாஹ லதீFபுன் கBபீர்
22:63. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
22:64
22:64 لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ
لَهٗ அவனுக்கே சொந்தமானவை مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவையும் وَمَا فِى الْاَرْضِ‌ ؕ பூமியில்உள்ளவையும் وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ لَهُوَ அல்லாஹ்தான் الْغَنِىُّ மகா செல்வந்தன் الْحَمِيْدُ‏ பெரும் புகழுக்குரியவன்
22:64. லஹூ ம Fபிஸ் ஸமாவாதி வ ம Fபில் அர்ள்; வ இன்னல் லாஹ ல ஹுவல் கனிய்யுல் ஹமீத்
22:64. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்.
22:65
22:65 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ سَخَّرَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ وَالْـفُلْكَ تَجْرِىْ فِى الْبَحْرِ بِاَمْرِهٖ ؕ وَيُمْسِكُ السَّمَآءَ اَنْ تَقَعَ عَلَى الْاَرْضِ اِلَّا بِاِذْنِهٖ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَخَّرَ வசப்படுத்தியுள்ளான் لَـكُمْ உங்களுக்கு مَّا فِى الْاَرْضِ பூமியில் உள்ளவற்றை وَالْـفُلْكَ கப்பலையும் تَجْرِىْ செல்கின்றதாக فِى الْبَحْرِ கடலில் بِاَمْرِهٖ ؕ அவனது கட்டளைப்படி وَيُمْسِكُ இன்னும் தடுத்திருக்கின்றான் السَّمَآءَ வானத்தை اَنْ تَقَعَ வீழ்ந்து விடாமல் عَلَى الْاَرْضِ பூமியின் மீது اِلَّا بِاِذْنِهٖ ؕ தவிர/அவனது கட்டளையைக் கொண்டே اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِالنَّاسِ மக்கள் மீது لَرَءُوْفٌ மகா இரக்கமுள்ளவன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
22:65. அலம் தர அன்னல் லாஹ ஸக்கர லகும் மா Fபில் அர்ளி வல் Fபுல்க தஜ்ரீ Fபில் Bபஹ்ரி Bபி அம்ரிஹீ வ யும்ஸிகுஸ் ஸமா'அ அன் தக'அ 'அலல் அர்ளி இல்லா Bபிஇத்னிஹ்; இன்னல் லாஹ Bபின்னாஸி ல ர'ஊFபுர் ரஹீம்
22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.
22:66
22:66 وَهُوَ الَّذِىْۤ اَحْيَاكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ‌ ؕ اِنَّ الْاِنْسَانَ لَـكَفُوْرٌ‏
وَهُوَ الَّذِىْۤ அவன்தான் اَحْيَاكُمْ உங்களை உயிர்ப்பித்தான் ثُمَّ பிறகு يُمِيْتُكُمْ உங்களை மரணிக்கச் செய்வான் ثُمَّ பிறகு يُحْيِيْكُمْ‌ ؕ உங்களை உயிர்ப்பிப்பான் اِنَّ நிச்சயமாக الْاِنْسَانَ மனிதன் لَـكَفُوْرٌ‏ மிக நன்றி கெட்டவன்
22:66. வ ஹுவல் லதீ அஹ்யாகும் தும்ம யுமீதுகும் தும்ம யுஹ்யீகும்; இன்னல் இன்ஸான ல கFபூர்
22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
22:67
22:67 لِّـكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوْهُ‌ فَلَا يُنَازِعُنَّكَ فِى الْاَمْرِ‌ وَادْعُ اِلٰى رَبِّكَ‌ ؕ اِنَّكَ لَعَلٰى هُدًى مُّسْتَقِيْمٍ‏
لِّـكُلِّ ஒவ்வொரு اُمَّةٍ சமுதாயத்திற்கும் جَعَلْنَا நாம் ஏற்படுத்தினோம் مَنْسَكًا ஒரு பலியை هُمْ அவர்கள் نَاسِكُوْهُ‌ அதைபலியிடுவார்கள் فَلَا يُنَازِعُنَّكَ ஆகவே அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டாம் فِى الْاَمْرِ‌ அந்த விஷயத்தில் وَادْعُ அழைப்பீராக اِلٰى பக்கம் رَبِّكَ‌ ؕ உமது இறைவனின் اِنَّكَ நிச்சயமாக நீர் لَعَلٰى هُدًى வழிகாட்டுதல் மீது இருக்கின்றீர் مُّسْتَقِيْمٍ‏ நேரான
22:67. லிகுல்லி உம்மதின் ஜ'அல்னா மன்ஸகன் ஹும் னாஸிகூஹு Fபலா யுனாZஜி 'உன்னக Fபில் அம்ர்; வத்'உ இலா ரBப்Bபிக இன்னக ல 'அலா ஹுதன் முஸ்தகீம்
22:67. (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.
22:68
22:68 وَاِنْ جَادَلُوْكَ فَقُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ‏
وَاِنْ جَادَلُوْكَ அவர்கள் உம்மிடம் தர்க்கித்தால் فَقُلِ நீர் கூறுவீராக اللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்கின்றதை
22:68. வ இன் ஜாதலூக Fபகுலில் லாஹு அஃலமு Bபிமா தஃமலூன்
22:68. (நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக.
22:69
22:69 اَللّٰهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏
اَللّٰهُ அல்லாஹ் يَحْكُمُ தீர்ப்பளிப்பான் بَيْنَكُمْ உங்கள் மத்தியில் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏ நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில்
22:69. அல்லாஹு யஹ்குமு Bபய்னகும் யவ்மல் கியாமதி Fபீமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
22:69. “நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.”
22:70
22:70 اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمَآءِ وَالْاَرْضِ‌ؕ اِنَّ ذٰ لِكَ فِىْ كِتٰبٍ‌ ؕ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ‏
اَلَمْ تَعْلَمْ நீர் அறியவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا فِى السَّمَآءِ வானத்தில் உள்ளவற்றை وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் اِنَّ நிச்சயமாக ذٰ لِكَ இவை فِىْ كِتٰبٍ‌ ؕ ‘லவ்ஹூல் மஹ்பூலில்’ اِنَّ நிச்சயமாக ذٰ لِكَ இது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرٌ‏ மிக சுலபமானதே
22:70. அலம் தஃலம் அன்னல் லாஹ யஃலமு மா Fபிஸ் ஸமா'இ வல் அர்ள்; இன்ன தாலிக Fபீ கிதாBப்; இன்ன தாலிக 'அலல் லாஹி யஸீர்
22:70. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது.
22:71
22:71 وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّمَا لَـيْسَ لَهُمْ بِهٖ عِلْمٌ‌ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ‏
وَيَعْبُدُوْنَ அவர்கள் வணங்குகின்றனர் مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ்வை مَا لَمْ يُنَزِّلْ எதை/இறக்கவில்லை بِهٖ அதற்கு سُلْطٰنًا ஓர் ஆதாரத்தையும் وَّمَا இன்னும் எதை لَـيْسَ இல்லை لَهُمْ அவர்களுக்கு بِهٖ அதைப் பற்றி عِلْمٌ‌ؕ அறிவும் وَمَا இல்லை لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு مِنْ نَّصِيْرٍ‏ உதவியாளர் யாரும்
22:71. வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ ஸுல்தான(ன்)வ் வமா லய்ஸ லஹும் Bபிஹீ 'இல்ம்; வமா லிள்ளாலிமீன மின் னஸீர்
22:71. மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை.
22:72
22:72 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰـتُـنَا بَيِّنٰتٍ تَعْرِفُ فِىْ وُجُوْهِ الَّذِيْنَ كَفَرُوا الْمُنْكَرَ‌ ؕ يَكَادُوْنَ يَسْطُوْنَ بِالَّذِيْنَ يَتْلُوْنَ عَلَيْهِمْ اٰيٰتِنَا‌ ؕ قُلْ اَفَاُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰ لِكُمُ‌ ؕ اَلنَّارُؕ وَعَدَهَا اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْا‌ ۚ وَبِئْسَ الْمَصِيْرُ
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰـتُـنَا நமது வசனங்கள் بَيِّنٰتٍ தெளிவான تَعْرِفُ நீர் பார்ப்பீர் فِىْ وُجُوْهِ முகங்களில் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுடைய الْمُنْكَرَ‌ ؕ விரும்பாததை يَكَادُوْنَ அவர்கள் முயற்சிக்கின்றனர் يَسْطُوْنَ கடுமையாகப் பிடித்து விடுவதற்கு بِالَّذِيْنَ يَتْلُوْنَ ஓதிக் காட்டுபவர்களை عَلَيْهِمْ அவர்களுக்கு முன் اٰيٰتِنَا‌ ؕ நமது வசனங்களை قُلْ நீர் கூறுவீராக اَفَاُنَبِّئُكُمْ நான் உங்களுக்கு அறிவிக்கவா بِشَرٍّ வெறுப்பானதை مِّنْ ذٰ لِكُمُ‌ ؕ இவர்களைவிட اَلنَّارُؕ நரகம் وَعَدَهَا அதை வாக்களித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ كَفَرُوْا‌ ۚ நிராகரித்தவர்களுக்கு وَبِئْسَ அது மிகக் கெட்டது الْمَصِيْرُ‏ மீளுமிடங்களில்
22:72. வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் தஃரிFபு Fபீ வுஜூஹில் லதீன கFபருல் முன்கர யகாதூன யஸ்தூன Bபில் லதீன யத்லூன 'அலய்ஹிம் ஆயாதினா; குல் அFப உனBப் Bபி'உகும் Bபிஷர்ரிம் மின் தாலிகும்; அன் னாரு வ 'அதஹல் லாஹுல் லதீன கFபரூ வ Bபி'ஸல் மஸீர்
22:72. இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடூரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
22:73
22:73 يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மக்களே ضُرِبَ விவரிக்கப்படுகிறது مَثَلٌ ஓர் உதாரணம் فَاسْتَمِعُوْا செவிமடுத்து கேளுங்கள் لَهٗ ؕ அதை اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ تَدْعُوْنَ நீங்கள் அழைக்கின்றவை مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி لَنْ يَّخْلُقُوْا அறவே படைக்க மாட்டார்கள் ذُبَابًا ஒரு ஈயையும் وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕ அவர்கள் ஒன்று சேர்ந்தாலும் சரி/அதற்கு وَاِنْ يَّسْلُبْهُمُ அதைப் பறித்தால் / அவர்களிடமிருந்து الذُّبَابُ شَيْــٴًـــا எதையும் لَّا அவர்கள் பாதுகாக்க மாட்டார்கள் يَسْتَـنْـقِذُوْهُ அதை مِنْهُ‌ ؕ அதனிடமிருந்து ضَعُفَ பலவீனமானவர்(களே) الطَّالِبُ தேடக்கூடியதும் وَالْمَطْلُوْبُ‏ தேடப்படுவதும்
22:73. யா அய்யுஹன் னாஸு ளுரிBப மதலுன் Fபஸ்தமி'ஊ லஹ்; இன்னல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி லய் யக்லுகூ துBபாBப(ன்)வ் வ லவிஜ்தம'ஊ லஹூ வ இ(ன்)ய் யஸ்லுBப் ஹுமுத் துBபாBபு ஷய்'அன் லா யஸ்தன்கிதூஹு மின்ஹ்; ள'உFபத் தாலிBபு வல் மத்லூBப்
22:73. மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
22:74
22:74 مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏
مَا قَدَرُوا கண்ணியப்படுத்தவில்லை اللّٰهَ அல்லாஹ்வை حَقَّ தக்கவாறு قَدْرِهٖؕ அவனுடைய தகுதிக்கு اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَقَوِىٌّ மகா வலிமையுடையவன் عَزِيْزٌ‏ மிகைத்தவன்
22:74. மா கத்ருல் லாஹ ஹக்க கத்ரிஹ்; இன்னல் லாஹ ல கவிய்யுன் 'அZஜீZஜ்
22:74. அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
22:75
22:75 اَللّٰهُ يَصْطَفِىْ مِنَ الْمَلٰٓٮِٕكَةِ رُسُلًا وَّمِنَ النَّاسِ‌ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ ‌ۚ‏
اَللّٰهُ அல்லாஹ் يَصْطَفِىْ தேர்வு செய்கிறான் مِنَ الْمَلٰٓٮِٕكَةِ வானவர்களிலிருந்தும் رُسُلًا தூதர்களை وَّمِنَ النَّاسِ‌ؕ மனிதர்களிலிருந்தும் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَمِيْعٌۢ நன்கு செவியுறுபவன் بَصِيْرٌ ۚ‏ உற்று நோக்குபவன்
22:75. அல்லாஹு யஸ்தFபீ மினல் மலா'இகதி ருஸுல(ன்)வ் வ மினன் னாஸ்; இன்னல் லாஹ ஸமீ'உன் Bபஸீர்
22:75. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.
22:76
22:76 يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏
يَعْلَمُ அவன் நன்கறிவான் مَا بَيْنَ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னர் இருந்தவற்றையும் وَمَا خَلْفَهُمْ‌ؕ அவர்களுக்கு பின்னர் இருப்பவற்றையும் وَاِلَى பக்கமே اللّٰهِ அல்லாஹ்வின் تُرْجَعُ திருப்பப்படுகின்றன الْاُمُوْرُ‏ காரியங்கள்
22:76. யஃலமு மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
22:76. அவர்களுக்கு முன் (சென்று) இருப்பதையும், அவர்களுக்குப் பின் (வர) இருப்பதையும் அவன் நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் (தீர்வுக்காக) மீட்கப்படும்.
22:77
22:77 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ۩ ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே ارْكَعُوْا குனியுங்கள் وَاسْجُدُوْا இன்னும் சிரம்பணியுங்கள் وَ اعْبُدُوْا இன்னும் வணங்குங்கள் رَبَّكُمْ உங்கள் இறைவனை وَافْعَلُوْا செய்யுங்கள் الْخَيْرَ நன்மை لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ۩ ۚ‏ நீங்கள் வெற்றி அடைவதற்காக
22:77. யா அய்யுஹல் லதீன ஆமனுர் க'ஊ வஸ்ஜுதூ வஃBபுதூ ரBப்Bபகும் வFப்'அலுல் கய்ர ல'அல்லகும் துFப்லிஹூன்
22:77. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.
22:78
22:78 وَجَاهِدُوْا فِى اللّٰهِ حَقَّ جِهَادِهٖ‌ؕ هُوَ اجْتَبٰٮكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍ‌ؕ مِلَّةَ اَبِيْكُمْ اِبْرٰهِيْمَ‌ؕ هُوَ سَمّٰٮكُمُ الْمُسْلِمِيْنَ ۙ مِنْ قَبْلُ وَفِىْ هٰذَا لِيَكُوْنَ الرَّسُوْلُ شَهِيْدًا عَلَيْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ‌ ‌ۖۚ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِؕ هُوَ مَوْلٰٮكُمْ‌ۚ فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
وَجَاهِدُوْا போரிடுங்கள் فِى اللّٰهِ அல்லாஹ்வின் பாதையில் حَقَّ முழுமையாக جِهَادِهٖ‌ؕ போரிடுவதாக هُوَ அவன்தான் اجْتَبٰٮكُمْ உங்களைத் தேர்ந்தெடுத்தான் وَمَا جَعَلَ அவன் வைக்கவில்லை عَلَيْكُمْ உங்கள் மீது فِى الدِّيْنِ மார்க்கத்தில் مِنْ حَرَجٍ‌ؕ எவ்வித நெருக்கடியையும் مِلَّةَ மார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள் اَبِيْكُمْ உங்கள் தந்தை اِبْرٰهِيْمَ‌ؕ இப்றாஹீமுடைய هُوَ அவன் سَمّٰٮكُمُ உங்களுக்கு பெயர் வைத்தான் الْمُسْلِمِيْنَ ۙ முஸ்லிம்கள் مِنْ قَبْلُ இதற்கு முன்னரும் وَفِىْ هٰذَا இதிலும் لِيَكُوْنَ இருப்பதற்காகவும் الرَّسُوْلُ தூதர் شَهِيْدًا சாட்சியாளராக عَلَيْكُمْ உங்கள் மீது وَتَكُوْنُوْا இன்னும் நீங்கள் இருப்பதற்காக شُهَدَآءَ சாட்சியாளர்களாக عَلَى النَّاسِ‌ ۖۚ மக்கள் மீது فَاَقِيْمُوا ஆகவே நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتُوا இன்னும் கொடுங்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَاعْتَصِمُوْا உறுதியாக நம்புங்கள் بِاللّٰهِؕ அல்லாஹ்வை هُوَ அவன்தான் مَوْلٰٮكُمْ‌ۚ உங்கள் பொறுப்பாளன் فَنِعْمَ அவன் சிறந்தவன் الْمَوْلٰى பொறுப்பாளன் (எஜமானன்) وَنِعْمَ அவன் சிறந்தவன் النَّصِيْرُ‏ உதவியாளன்
22:78. வ ஜாஹிதூ Fபில் லாஹி ஹக்க ஜிஹாதிஹ்; ஹுவஜ் தBபாகும் வமா ஜ'அல 'அலய்கும் Fபித் தீனி மின் ஹரஜ்; மில்லத அBபீகும் இBப்ராஹீம்; ஹுவ ஸம்மாகுமுல் முஸ்லிமீன மின் கBப்லு வ Fபீ ஹாத லி யகூனர் ரஸூலு ஷஹீதன் 'அலய்கும் வ தகூனூ ஷுஹதா'அ 'அலன் னாஸ்; Fப அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வஃதஸிமூ Bபில்லாஹி ஹுவ மவ்லாகும் Fபனிஃமல் மவ்லா வ னிஃமன் னஸீர்
22:78. இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.