36. ஸூரத்து யாஸீன்
மக்கீ, வசனங்கள்: 83

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
36:1
36:1 يٰسٓ ۚ‏
يٰسٓ ۚ‏ யா சீன்
36:1. யா-ஸீன்
36:1. யாஸீன்.
36:2
36:2 وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ ۙ‏
وَالْقُرْاٰنِ குர்ஆன் மீது சத்தியமாக! الْحَكِيْمِ ۙ‏ ஞானமிகுந்த(து)
36:2. வல்-குர்ஆனில்-ஹகீம்
36:2. ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
36:3
36:3 اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَۙ‏
اِنَّكَ நிச்சயமாக நீர் لَمِنَ الْمُرْسَلِيْنَۙ‏ இறைத்தூதர்களில் ஒருவர் ஆவீர்
36:3. இன்னக லமினல் முர்ஸலீன்
36:3. நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
36:4
36:4 عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍؕ‏
عَلٰى صِرَاطٍ பாதையில் مُّسْتَقِيْمٍؕ‏ நேரான(து)
36:4. 'அலா ஸிராதிம் முஸ்தகீம்
36:4. நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
36:5
36:5 تَنْزِيْلَ الْعَزِيْزِ الرَّحِيْمِ ۙ‏
تَنْزِيْلَ இறக்கிய வேதமாகும் الْعَزِيْزِ மிகைத்தவன் الرَّحِيْمِ ۙ‏ மகா கருணையாளன்
36:5. தன்Zஜீலல் 'அZஜீZஜிர் ரஹீம்
36:5. (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
36:6
36:6 لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اُنْذِرَ اٰبَآؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ‏
لِتُنْذِرَ நீர் எச்சரிப்பதற்காக قَوْمًا ஒரு சமுதாயத்தை مَّاۤ اُنْذِرَ எச்சரிக்கப்படவில்லை اٰبَآؤُ மூதாதைகள் هُمْ அவர்களின் فَهُمْ ஆகவே, அவர்கள் غٰفِلُوْنَ‏ அலட்சியக்காரர்களாக இருக்கின்றனர்
36:6. லிதுன்திர கவ்மம் மா உன்திர ஆBபா'உஹும் Fபஹும் காFபிலூன்
36:6. எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
36:7
36:7 لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰٓى اَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
لَقَدْ திட்டமாக حَقَّ உறுதியாகிவிட்டது الْقَوْلُ வாக்கு عَلٰٓى اَكْثَرِ அதிகமானவர்கள் மீது هِمْ அவர்களில் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
36:7. லகத் ஹக்கல் கவ்லு 'அலா அக்தரிஹிம் Fபஹும் லா யு'மினூன்
36:7. இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
36:8
36:8 اِنَّا جَعَلْنَا فِىْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِىَ اِلَى الْاَ ذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا ஏற்படுத்தி விட்டோம் فِىْۤ اَعْنَاقِهِمْ அவர்களின் கழுத்துகள் மீது اَغْلٰلًا அரிகண்டங்களை فَهِىَ அவை اِلَى الْاَ ذْقَانِ தாடைகள் வரை فَهُمْ ஆகவே, அவர்கள் مُّقْمَحُوْنَ‏ உயர்த்தியவர்களாக
36:8. இன்னா ஜ'அல்னா Fபீ அஃனாகிஹிம் அக்லாலன் Fபஹிய இலல் அத்கானி Fபஹும் முக்மஹூன்
36:8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
36:9
36:9 وَجَعَلْنَا مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ‏
وَجَعَلْنَا நாம் ஆக்கினோம் مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னும் سَدًّا ஒரு தடுப்பை وَّمِنْ خَلْفِهِمْ அவர்களுக்கு பின்னும் سَدًّا ஒரு தடுப்பை فَاَغْشَيْنٰهُمْ ஆகவே நாம் அவர்க(ளின் பார்வைக)ளை மூடி விட்டோம் (-குருடாக்கி விட்டோம்) فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يُبْصِرُوْنَ‏ பார்க்கமாட்டார்கள்
36:9. வ ஜ'அல்னா மின் Bபய்னி அய்தீஹிம் ஸத்த(ன்)வ்-வ மின் கல்Fபிஹிம் ஸத்தன் Fப அக்ஷய் னாஹும் Fபஹும் லா யுBப்ஸிரூன்
36:9. இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
36:10
36:10 وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
وَسَوَآءٌ சமம் தான் عَلَيْهِمْ அவர்கள் மீது ءَاَنْذَرْتَهُمْ நீர் அவர்களை எச்சரித்தாலும் اَمْ அல்லது لَمْ تُنْذِرْهُمْ அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும் لَا يُؤْمِنُوْنَ‏ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
36:10. வ ஸவா'உன் 'அலய்ஹிம் 'அ-அன்தர்தஹும் அம் லம் துன்திர்ஹும் லா யு'மினூன்
36:10. இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
36:11
36:11 اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ‏
اِنَّمَا تُنْذِرُ நீர் எச்சரிப்பதெல்லாம் مَنِ எவர் اتَّبَعَ பின்பற்றினார் الذِّكْرَ இந்த வேதத்தை وَخَشِىَ இன்னும் பயந்தார் الرَّحْمٰنَ பேரருளாளனை بِالْغَيْبِۚ மறைவில் فَبَشِّرْهُ ஆகவே அவருக்கு நற்செய்தி கூறுவீராக! بِمَغْفِرَةٍ மன்னிப்பைக் கொண்டும் وَّاَجْرٍ கூலியைக் கொண்டும் كَرِيْمٍ‏ கண்ணியமான
36:11. இன்னமா துன்திரு மனித் தBப 'அத்-திக்ர வ கஷியர் ரஹ்மான Bபில்கய்Bப், FபBபஷ்ஷிர்ஹு Bபிமக்Fபிரதி(ன்)வ்-வ அஜ்ரின் கரீம்
36:11. நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
36:12
36:12 اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْؕؔ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ
اِنَّا نَحْنُ நிச்சயமாக நாம்தான் نُحْىِ உயிர்ப்பிக்கின்றோம் الْمَوْتٰى இறந்தவர்களை وَنَكْتُبُ இன்னும் பதிவு செய்வோம் مَا قَدَّمُوْا அவர்கள் முன்னர் செய்தவற்றையும் وَاٰثَارَ காலடிச் சுவடுகளை هُمْؕؔ அவர்களின் وَكُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் اَحْصَيْنٰهُ அதைப் பதிவு செய்துள்ளோம் فِىْۤ اِمَامٍ பதிவேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
36:12. இன்னா னஹ்னு னுஹ்யில் மவ்தா வ னக்துBபு மா கத்தமூ வ ஆதாரஹும்; வ குல்ல ஷய்'இன் அஹ்ஸய்னாஹு Fபீ இமாமிம் முBபீன்
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.  
36:13
36:13 وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا اَصْحٰبَ الْقَرْيَةِ ‌ۘ اِذْ جَآءَهَا الْمُرْسَلُوْنَۚ‏
وَاضْرِبْ எடுத்துச் சொல்வீராக! لَهُمْ அவர்களுக்கு مَّثَلًا உதாரணமாக اَصْحٰبَ الْقَرْيَةِ ۘ அந்த ஊர் வாசிகளை اِذْ جَآءَهَا அவர்களிடம் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக! الْمُرْسَلُوْنَۚ‏ தூதர்கள்
36:13. வள்ரிBப் லஹும் மதலன் அஸ்ஹாBபல் கர்யதிஹ்; இத் ஜா'அஹல் முர்ஸலூன்
36:13. (நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
36:14
36:14 اِذْ اَرْسَلْنَاۤ اِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُـوْۤا اِنَّاۤ اِلَيْكُمْ مُّرْسَلُوْنَ‏
اِذْ اَرْسَلْنَاۤ நாம் அனுப்பியபோது اِلَيْهِمُ அவர்களிடம் اثْنَيْنِ இருவரை فَكَذَّبُوْ அவர்கள் பொய்ப்பித்தனர் هُمَا அவ்விருவரையும் فَعَزَّزْنَا பலப்படுத்தினோம் بِثَالِثٍ மூன்றாவது ஒருவரைக்கொண்டு فَقَالُـوْۤا அவர்கள் கூறினர் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلَيْكُمْ உங்கள் பக்கம் مُّرْسَلُوْنَ‏ அனுப்பப்பட்ட தூதர்கள்
36:14. இத் அர்ஸல்னா இலய்ஹிமுத்னய்னி Fபகத்தBபூஹுமா Fப'அZஜ்ZஜZஜ்னா Bபிதாலிதின் Fபகாலூ இன்னா இலய்கும் முர்ஸலூன்
36:14. நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
36:15
36:15 قَالُوْا مَاۤ اَنْـتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ۙ وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَىْءٍۙ اِنْ اَنْـتُمْ اِلَّا تَكْذِبُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் مَاۤ اَنْـتُمْ நீங்கள் இல்லை اِلَّا அன்றி بَشَرٌ மனிதர்கள் مِّثْلُـنَا ۙ எங்களைப் போன்ற وَمَاۤ اَنْزَلَ இறக்கவில்லை الرَّحْمٰنُ பேரருளாளன் مِنْ شَىْءٍۙ எதையும் اِنْ اَنْـتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர تَكْذِبُوْنَ‏ பொய் சொல்கின்றவர்களாகவே
36:15. காலூ மா அன்தும் இல்லா Bபஷரும் மித்லுனா வ மா அன்Zஜலர் ரஹ்மானு மின் ஷய்'இன் இன் அன்தும் இல்லா தக்திBபூன்
36:15. (அதற்கு அம்மக்கள்:) “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
36:16
36:16 قَالُوْا رَبُّنَا يَعْلَمُ اِنَّاۤ اِلَيْكُمْ لَمُرْسَلُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் رَبُّنَا எங்கள் இறைவன் يَعْلَمُ நன்கறிவான் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلَيْكُمْ உங்கள் பக்கம் لَمُرْسَلُوْنَ‏ அனுப்பப்பட்ட தூதர்கள்
36:16. காலூ ரBப்Bபுனா யஃலமு இன்னா இலய்கும் லமுர்ஸலூன்
36:16. (இதற்கு அவர்கள்:) “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்” என்று கூறினர்.
36:17
36:17 وَمَا عَلَيْنَاۤ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ‏
وَمَا عَلَيْنَاۤ எங்கள் மீது இல்லை اِلَّا தவிர الْبَلٰغُ எடுத்துரைப்பதை الْمُبِيْنُ‏ தெளிவாக
36:17. வமா 'அலய்னா இல்லல் Bபலாகுல் முBபீன்
36:17. “இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (என்றும் கூறினார்).
36:18
36:18 قَالُـوْۤا اِنَّا تَطَيَّرْنَا بِكُمْۚ لَٮِٕنْ لَّمْ تَنْتَهُوْا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْمٌ‏
قَالُـوْۤا அவர்கள் கூறினர் اِنَّا நிச்சயமாக நாங்கள் تَطَيَّرْنَا துர்ச்குனமாக கருதுகின்றோம் بِكُمْۚ உங்களை لَٮِٕنْ لَّمْ تَنْتَهُوْا நீங்கள் விலகவில்லை என்றால் لَنَرْجُمَنَّكُمْ நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறிவோம் وَلَيَمَسَّنَّكُمْ இன்னும் நிச்சயமாக உங்களை வந்தடையும் مِّنَّا எங்களிடமிருந்து عَذَابٌ வேதனை اَلِيْمٌ‏ வலிமிகுந்த
36:18. காலூ இன்னா ததய்யர்னா Bபிகும் ல'இல்-லம் தன்தஹூ லனர் ஜுமன்னகும் வ ல-யமஸ்ஸன் னகும் மின்னா 'அதாBபுன் அலீம்
36:18. (அதற்கு அம்மக்கள்:) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்.”
36:19
36:19 قَالُوْا طٰۤٮِٕـرُكُمْ مَّعَكُمْؕ اَٮِٕنْ ذُكِّرْتُمْ ؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் طٰۤٮِٕـرُ துர்ச்சகுனம் كُمْ உங்கள் مَّعَكُمْؕ உங்களுடன்தான் اَٮِٕنْ ذُكِّرْتُمْ ؕ நீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமா بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் قَوْمٌ மக்கள் مُّسْرِفُوْنَ‏ வரம்பு மீறுகின்ற
36:19. காலூ தா'இருகும் ம'அகும்; அ'இன் துக்கிர்தும்; Bபல் அன்தும் கவ்மும் முஸ்ரிFபூன்
36:19. அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்: “உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது; உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.
36:20
36:20 وَجَآءَ مِنْ اَقْصَا الْمَدِيْنَةِ رَجُلٌ يَّسْعٰى قَالَ يٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِيْنَۙ‏
وَجَآءَ வந்தார் مِنْ اَقْصَا கடைக்கோடியில் இருந்து الْمَدِيْنَةِ பட்டணத்தின் رَجُلٌ ஓர் ஆடவர் يَّسْعٰى விரைந்தவராக قَالَ அவர் கூறினார் يٰقَوْمِ என் மக்களே! اتَّبِعُوا நீங்கள் பின்பற்றுங்கள் الْمُرْسَلِيْنَۙ‏ தூதர்களை
36:20. வ ஜா'அ மின் அக்ஸல் மதீனதி ரஜுலு(ன்)ய் யஸ்'ஆ கால யா கவ்மித் தBபி'உல் முர்ஸலீன்
36:20. (அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
36:21
36:21 اتَّبِعُوْا مَنْ لَّا يَسْــٴَــلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ‏
اتَّبِعُوْا பின்பற்றுங்கள் مَنْ எவர் لَّا يَسْــٴَــلُكُمْ உங்களிடம் கேட்க மாட்டார் اَجْرًا கூலியை وَّهُمْ அவர்கள்தான் مُّهْتَدُوْنَ‏ நேர்வழி பெற்றவர்கள்
36:21. இத்தBபி'ஊ மல்-லா யஸ்'அலுகும் அஜ்ர(ன்)வ்-வ ஹும் முஹ்ததூன்
36:21. “உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).  
36:22
36:22 وَمَا لِىَ لَاۤ اَعْبُدُ الَّذِىْ فَطَرَنِىْ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
وَمَا لِىَ எனக்கு என்ன நேர்ந்தது? لَاۤ اَعْبُدُ நான் வணங்காமல் இருப்பதற்கு الَّذِىْ فَطَرَنِىْ என்னைப் படைத்தவனை وَاِلَيْهِ அவன் பக்கம்தான் تُرْجَعُوْنَ‏ நீங்களும் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
36:22. வமா லிய லா அஃBபுதுல் லதீ Fபதரனீ வ இலய்ஹி துர்ஜ'ஊன்
36:22. “அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
36:23
36:23 ءَاَ تَّخِذُ مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً اِنْ يُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّىْ شَفَاعَتُهُمْ شَيْئًا وَّلَا يُنْقِذُوْنِ‌ۚ‏
ءَاَ تَّخِذُ நான் எடுத்துக் கொள்வேனா! مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اٰلِهَةً (வேறு) தெய்வங்களை اِنْ يُّرِدْنِ எனக்கு நாடினால் الرَّحْمٰنُ பேரருளாளன் بِضُرٍّ ஒரு தீங்கை لَّا تُغْنِ தடுக்காது عَنِّىْ என்னை விட்டும் شَفَاعَتُهُمْ அவற்றின் சிபாரிசு شَيْئًا எதையும் وَّلَا يُنْقِذُوْنِ‌ۚ‏ இன்னும் அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்
36:23. 'அ-அத்தகிது மின் தூனிஹீ ஆலிஹதன் இ(ன்)ய்-யுரித்னிர் ரஹ்மானு Bபிளுர்ரில்-லா துக்னி 'அன்னீ ஷFபா 'அதுஹும் ஷய் 'அ(ன்)வ்-வ லா யுன்கிதூன்
36:23. “அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியாது.
36:24
36:24 اِنِّىْۤ اِذًا لَّفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
اِنِّىْۤ நிச்சயமாக நான் اِذًا அப்போது لَّفِىْ ضَلٰلٍ வழிகேட்டில்தான் مُّبِيْنٍ‏ தெளிவான
36:24. இன்னீ இதல்-லFபீ ளலா-லிம்-முBபீன்
36:24. “(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
36:25
36:25 اِنِّىْۤ اٰمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُوْنِؕ‏
اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰمَنْتُ நம்பிக்கை கொண்டேன் بِرَبِّكُمْ உங்கள் இறைவனை فَاسْمَعُوْنِؕ‏ ஆகவே எனக்கு செவிசாயுங்கள்!
36:25. இன்னீ ஆமன்து Bபி ரBப்Bபிகும் Fபஸ்ம'ஊன்
36:25. “உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்.”
36:26
36:26 قِيْلَ ادْخُلِ الْجَـنَّةَ ؕ قَالَ يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَۙ‏
قِيْلَ கூறப்பட்டது ادْخُلِ நீர் நுழைவீராக! الْجَـنَّةَ ؕ சொர்க்கத்தில் قَالَ அவர் கூறினார் يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَۙ‏ என் மக்கள் (இதை) அறியவேண்டுமே!
36:26. கீலத் குலில் ஜன்னத கால யா லய்த கவ்மீ யஃலமூன்
36:26. (ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
36:27
36:27 بِمَا غَفَرَلِىْ رَبِّىْ وَجَعَلَنِىْ مِنَ الْمُكْرَمِيْنَ‏
بِمَا غَفَرَ மன்னிப்பு வழங்கியதையும் لِىْ எனக்கு رَبِّىْ என் இறைவன் وَجَعَلَنِىْ என்னை அவன் ஆக்கியதையும் مِنَ الْمُكْرَمِيْنَ‏ கண்ணியமானவர்களில்
36:27. Bபிமா கFபர லீ ரBப்Bபீ வ ஜ'அலனீ மினல் முக்ரமீன்
36:27. “என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்” (என்பதை).
36:28
36:28 وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى قَوْمِهٖ مِنْۢ بَعْدِهٖ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَآءِ وَمَا كُـنَّا مُنْزِلِيْنَ‏
وَمَاۤ اَنْزَلْنَا நாம் இறக்கவில்லை عَلٰى மீது قَوْمِهٖ அவருடைய மக்கள் مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் مِنْ جُنْدٍ ஒரு படையை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து وَمَا كُـنَّا நாம் இல்லை مُنْزِلِيْنَ‏ இறக்குபவர்களாகவும்
36:28. வ மா அன்Zஜல்னா 'அலா கவ்மிஹீ மிம் Bபஃதிஹீ மின் ஜுன்திம் மினஸ்-ஸமா'இ வமா குன்னா முன்Zஜிலீன்
36:28. தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
36:29
36:29 اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خٰمِدُوْنَ‏
اِنْ كَانَتْ அது இருக்கவில்லை اِلَّا தவிர صَيْحَةً ஒரு சப்தமாகவே وَّاحِدَةً ஒரே ஒரு فَاِذَا هُمْ ஆகவே, அப்போது அவர்கள் خٰمِدُوْنَ‏ அழிந்து விட்டார்கள்
36:29. இன் கானத் இல்லா ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் Fப-இதா ஹும் காமிதூன்
36:29. ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
36:30
36:30 يٰحَسْرَةً عَلَى الْعِبَادِ ؔ‌ۚ مَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
يٰحَسْرَةً நிகழ்ந்த துக்கமே! عَلَى الْعِبَادِ ؔ‌ۚ அடியார்கள் மீது مَا يَاْتِيْهِمْ அவர்களிடம் வரவில்லை مِّنْ رَّسُوْلٍ எந்த ஒரு தூதரும் اِلَّا தவிர كَانُوْا அவர்கள் இருந்தே بِهٖ அவரை يَسْتَهْزِءُوْنَ‏ அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக
36:30. யா ஹஸ்ரதன் 'அலல் 'இBபாத்; மா ய'தீஹிம் மிர் ரஸூலின் இல்லா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி 'ஊன்
36:30. அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
36:31
36:31 اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَـكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ اَنَّهُمْ اِلَيْهِمْ لَا يَرْجِعُوْنَؕ‏
اَلَمْ يَرَوْا அவர்கள் கவனிக்க மாட்டார்களா? كَمْ எத்தனையோ اَهْلَـكْنَا நாம் அழித்திருக்கின்றோம் قَبْلَهُمْ அவர்களுக்கு முன்னர் مِّنَ الْقُرُوْنِ தலைமுறைகளை اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اِلَيْهِمْ தங்கள் பக்கம் لَا يَرْجِعُوْنَؕ‏ திரும்பி வரமாட்டார்கள்
36:31. அலம் யரவ் கம் அஹ்லக் னா கBப்லஹும் மினல் குரூனி அன்னஹும் இலய்ஹிம் லா யர்ஜி'ஊன்
36:31. “அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
36:32
36:32 وَاِنْ كُلٌّ لَّمَّا جَمِيْعٌ لَّدَيْنَا مُحْضَرُوْنَ
وَاِنْ كُلٌّ (அவர்கள்) எல்லோரும் இல்லை لَّمَّا தவிர جَمِيْعٌ அனைவரும் لَّدَيْنَا நம்மிடம் مُحْضَرُوْنَ‏ ஆஜர்படுத்தப்பட்டவர்களாகவே
36:32. வ இன் குல்லுல் லம்மா ஜமீ'உல்-லதய்னா முஹ்ளரூன்
36:32. மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.  
36:33
36:33 وَاٰيَةٌ لَّهُمُ الْاَرْضُ الْمَيْتَةُ ۖۚ اَحْيَيْنٰهَا وَاَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَاْكُلُوْنَ‏
وَاٰيَةٌ அத்தாட்சி لَّهُمُ அவர்களுக்கு الْاَرْضُ பூமியாகும் الْمَيْتَةُ ۖۚ இறந்துபோன اَحْيَيْنٰهَا அதை நாம் உயிர்ப்பித்தோம் وَاَخْرَجْنَا நாம் வெளியாக்கினோம் مِنْهَا அதிலிருந்து حَبًّا வித்துக்களை فَمِنْهُ அதில் இருந்துதான் يَاْكُلُوْنَ‏ அவர்கள் சாப்பிடுகின்றார்கள்
36:33. வ ஆயதுல் லஹுமுல் அர்ளுல் மய்தது அஹ்யய்னாஹா வ அக்ரஜ்னா மின்ஹா ஹBப்Bபன் Fபமின்ஹு ய'குலூன்
36:33. அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
36:34
36:34 وَجَعَلْنَا فِيْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِيْهَا مِنَ الْعُيُوْنِۙ‏
وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் فِيْهَا அதில் جَنّٰتٍ தோட்டங்களை مِّنْ نَّخِيْلٍ பேரித்த மரங்கள் وَّاَعْنَابٍ இன்னும் திராட்சைகளின் وَّفَجَّرْنَا உதித்தோடச்செய்தோம் فِيْهَا அதில் مِنَ الْعُيُوْنِۙ‏ ஊற்றுக் கண்களை
36:34. வ ஜ'அல்னா Fபீஹா ஜன்னாதிம் மின் னகீலி(ன்)வ் வ அஃனாBபி(ன்)வ் வ Fபஜ்ஜர்னா Fபீஹா மினல் 'உயூன்
36:34. மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
36:35
36:35 لِيَاْكُلُوْا مِنْ ثَمَرِهٖ ۙ وَمَا عَمِلَـتْهُ اَيْدِيْهِمْ‌ ؕ اَفَلَا يَشْكُرُوْنَ‏
لِيَاْكُلُوْا அவர்கள் புசிப்பதற்காக مِنْ ثَمَرِهٖ ۙ அவனுடைய கனிகளில் இருந்து وَمَا عَمِلَـتْهُ இவற்றை செய்யவில்லை اَيْدِيْهِمْ‌ ؕ அவர்களின் கரங்கள் اَفَلَا يَشْكُرُوْنَ‏ அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
36:35. லி ய'குலூ மின் தமரிஹீ வமா 'அமிலத்-ஹு அய்தீஹிம்; அFபலா யஷ்குரூன்
36:35. அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
36:36
36:36 سُبْحٰنَ الَّذِىْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُوْنَ‏
سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் الَّذِىْ خَلَقَ படைத்தவன் الْاَزْوَاجَ பல வகைகளை كُلَّهَا எல்லாம் مِمَّا تُنْۢبِتُ முளைக்க வைக்கக்கூடியதில் الْاَرْضُ பூமி وَمِنْ اَنْفُسِهِمْ அவர்களிலும் وَمِمَّا لَا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறியாதவற்றிலும்
36:36. ஸுBப்ஹானல் லதீ கலகல் அZஜ்வாஜ குல்லஹா மிம்மா தும்Bபிதுல் அர்ளு வ மின் அன்Fபுஸிஹிம் வ மிம்மா லா யஃலமூன்
36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
36:37
36:37 وَاٰيَةٌ لَّهُمُ الَّيْلُ ۖۚ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَۙ‏
وَاٰيَةٌ இன்னும் அத்தாட்சி لَّهُمُ அவர்களுக்கு الَّيْلُ ۖۚ இரவாகும் نَسْلَخُ உரித்தெடுக்கின்றோம் مِنْهُ அதிலிருந்து النَّهَارَ பகலை فَاِذَا هُمْ அப்போது அவர்கள் مُّظْلِمُوْنَۙ‏ இருளில் ஆகிவிடுகின்றனர்
36:37. வ ஆயதுல் லஹுமுல் லய்லு னஸ்லகு மின்ஹுன் னஹார Fப-இதா ஹும் முள்லிமூன்
36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
36:38
36:38 وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ‌ؕ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِؕ‏
وَالشَّمْسُ சூரியன் تَجْرِىْ ஓடுகிறது لِمُسْتَقَرٍّ இருப்பிடத்தை நோக்கி لَّهَا ؕ தனது ذٰلِكَ அது تَقْدِيْرُ ஏற்பாடாகும் الْعَزِيْزِ மிகைத்தவனுடைய الْعَلِيْمِؕ‏ நன்கறிந்த(வன்)
36:38. வஷ்-ஷம்ஸு தஜ்ரீ லிமுஸ்தகர்ரில் லஹா; தாலிக தக்தீருல் 'அZஜீZஜில் அலீம்
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
36:39
36:39 وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏
وَالْقَمَرَ சந்திரனை قَدَّرْنٰهُ அதை நாம் திட்டமிட்டோம் مَنَازِلَ பல தங்குமிடங்களில் حَتّٰى இறுதியாக عَادَ திரும்பிவிடுகின்றது كَالْعُرْجُوْنِ பேரிச்ச குலையின் காய்ந்த மட்டையைப் போல் الْقَدِيْمِ‏ பழைய
36:39. வல்கமர கத்தர்னாஹு மனாZஜில ஹத்தா 'ஆத கல்'உர் ஜூனில் கதீம்
36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:40
36:40 لَا الشَّمْسُ يَنْۢبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ‌ؕ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏
لَا الشَّمْسُ يَنْۢبَغِىْ சூரியன் ஆகுமாகாது لَهَاۤ அதற்கு اَنْ تُدْرِكَ அது அடைவது الْقَمَرَ சந்திரனை وَلَا الَّيْلُ سَابِقُ இரவு முந்திவிடாது النَّهَارِ‌ؕ பகலை وَكُلٌّ ஒவ்வொன்றும் فِىْ فَلَكٍ ஒரு கோளில் يَّسْبَحُوْنَ‏ நீந்துகின்றன
36:40. லஷ் ஷம்ஸு யம்Bபகீ லஹா அன் துத்ரிகல் கமர வலல் லய்லு ஸாBபிகுன் னஹார்; வ குல்லுன் Fபீ Fபலகி யஸ்Bபஹூன்
36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
36:41
36:41 وَاٰيَةٌ لَّهُمْ اَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ‏
وَاٰيَةٌ இன்னும் அத்தாட்சியாவது لَّهُمْ அவர்களுக்கு اَنَّا நிச்சயமாக நாம் حَمَلْنَا நாம் பயணிக்க வைத்தோம் ذُرِّيَّتَهُمْ அவர்களின் சந்ததிகளை فِى الْفُلْكِ கப்பலில் الْمَشْحُوْنِۙ‏ நிரம்பிய
36:41. வ ஆயதுல் லஹும் அன்னா ஹமல்னா துர்ரியதஹும் Fபில் Fபுல்கில் மஷ்ஹூன்
36:41. இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
36:42
36:42 وَخَلَقْنَا لَهُمْ مِّنْ مِّثْلِهٖ مَا يَرْكَبُوْنَ‏
وَخَلَقْنَا நாம் படைத்தோம் لَهُمْ அவர்களுக்கு مِّنْ مِّثْلِهٖ அதைப் போன்று مَا يَرْكَبُوْنَ‏ அவர்கள் வாகணிப்பதை
36:42. வ கலக்னா லஹும் மிம்-மித்லிஹீ மா யர்கBபூன்
36:42. இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
36:43
36:43 وَاِنْ نَّشَاْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيْخَ لَهُمْ وَلَا هُمْ يُنْقَذُوْنَۙ‏
وَاِنْ نَّشَاْ நாம் நாடினால் نُغْرِقْهُمْ அவர்களை மூழ்கடிப்போம் فَلَا صَرِيْخَ لَهُمْ அவர்களுக்கு உதவியாளர் அறவே இல்லை وَلَا هُمْ يُنْقَذُوْنَۙ‏ இன்னும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்
36:43. வ இன் னஷா னுக்ரிக்ஹும் Fபலா ஸரீக லஹும் வலா ஹும் யுன்கதூன்
36:43. அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
36:44
36:44 اِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَاعًا اِلٰى حِيْنٍ‏
اِلَّا எனினும் رَحْمَةً கருணையினாலும் مِّنَّا நமது وَمَتَاعًا சுகம் அனுபவிப்பதற்காகவும் اِلٰى حِيْنٍ‏ சில காலம் வரை
36:44. இல்லா ரஹ்மதம் மின்னா வ மதா'அன் இலா ஹீன்
36:44. நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி),
36:45
36:45 وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّقُوْا مَا بَيْنَ اَيْدِيْكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمُ அவர்களுக்கு اتَّقُوْا நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! مَا بَيْنَ اَيْدِيْكُمْ உங்களுக்கு முன்னுள்ளதையும் وَمَا خَلْفَكُمْ உங்களுக்கு பின்னுள்ளதையும் لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏ நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
36:45. வ இதா கீல லஹுமுத்தகூ மா Bபய்ன அய்தீகும் வமா கல்Fபகும் ல'அல்லகும் துர்ஹமூன்
36:45. “இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும் -
36:46
36:46 وَمَا تَاْتِيْهِمْ مِّنْ اٰيَةٍ مِّنْ اٰيٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَ‏
وَمَا تَاْتِيْهِمْ அவர்களிடம் வருவதில்லை مِّنْ اٰيَةٍ ஓர் அத்தாட்சி مِّنْ اٰيٰتِ அத்தாட்சிகளில் இருந்து رَبِّهِمْ அவர்களுடைய இறைவனின் اِلَّا தவிர كَانُوْا அவர்கள் இருந்தே عَنْهَا அதை مُعْرِضِيْنَ‏ புறக்கணித்தவர்களாக
36:46. வமா த'தீஹிம் மின் ஆயதிம் மின் ஆயாதி ரBப்Bபிஹிம் இல்லா கானூ 'அன்ஹா முஃரிளீன்
36:46. அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
36:47
36:47 وَاِذَا قِيْلَ لَهُمْ اَنْفِقُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ۙ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنُطْعِمُ مَنْ لَّوْ يَشَآءُ اللّٰهُ اَطْعَمَهٗٓ ۖ  اِنْ اَنْـتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு اَنْفِقُوْا நீங்கள் தர்மம் செய்யுங்கள் مِمَّا رَزَقَكُمُ உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து اللّٰهُ ۙ அல்லாஹ் قَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களை நோக்கி اَنُطْعِمُ நாங்கள் உணவளிக்க வேண்டுமா? مَنْ لَّوْ يَشَآءُ எவருக்கு/நாடினால் اللّٰهُ அல்லாஹ் اَطْعَمَهٗٓ அவருக்கு உணவளித்து விடுவான் ۖ  اِنْ اَنْـتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர فِىْ ضَلٰلٍ வழிகேட்டிலேயே مُّبِيْنٍ‏ தெளிவான
36:47. வ இதா கீல லஹும் அன்Fபிகூ மிம்மா ரZஜககுமுல் லாஹு காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனூ அனுத்'இமு மல்-லவ் யஷா'உல் லாஹு அத்'அமஹூ இன் அன்தும் இல்லா Fபீ ளலாலிம் முBபீன்
36:47. “அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.
36:48
36:48 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறுகின்றனர் مَتٰى எப்போது நிகழும் هٰذَا இந்த الْوَعْدُ வாக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
36:48. வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
36:48. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?” என்று.
36:49
36:49 مَا يَنْظُرُوْنَ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً تَاْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُوْنَ‏
مَا يَنْظُرُوْنَ அவர்கள் எதிர்பார்க்கவில்லை اِلَّا صَيْحَةً சப்தத்தைத் தவிர وَّاحِدَةً ஒரே ஒரு تَاْخُذُهُمْ அவர்களை அது பிடித்துக் கொள்ளும் وَهُمْ يَخِصِّمُوْنَ‏ அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்
36:49. மா யன்ளுரூன இல்லா ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் த'குதுஹும் வ ஹும் யகிஸ்ஸிமூன்
36:49. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:50
36:50 فَلَا يَسْتَطِيْعُوْنَ تَوْصِيَةً وَّلَاۤ اِلٰٓى اَهْلِهِمْ يَرْجِعُوْنَ
فَلَا يَسْتَطِيْعُوْنَ அவர்கள் சக்தி பெறமாட்டார்கள் تَوْصِيَةً மரண சாசனம் கூறுவதற்கு وَّلَاۤ اِلٰٓى اَهْلِهِمْ இன்னும் தங்கள் குடும்பத்தாரிடம் يَرْجِعُوْنَ‏ திரும்பி வர மாட்டார்கள்
36:50. Fபலா யஸ்ததீ'ஊன தவ் ஸியத(ன்)வ்-வ லா இலா அஹ்லிஹிம் யர்ஜி'ஊன்
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.  
36:51
36:51 وَنُفِخَ فِى الصُّوْرِ فَاِذَا هُمْ مِّنَ الْاَجْدَاثِ اِلٰى رَبِّهِمْ يَنْسِلُوْنَ‏
وَنُفِخَ ஊதப்படும் فِى الصُّوْرِ சூரில் فَاِذَا هُمْ அப்போது அவர்கள் مِّنَ الْاَجْدَاثِ கப்ருகளில் இருந்து اِلٰى رَبِّهِمْ தங்கள் இறைவன் பக்கம் يَنْسِلُوْنَ‏ விரைவாக வெளியேறி வருவார்கள்
36:51. வ னுFபிக Fபிஸ்-ஸூரி Fப-இதா ஹும் மினல் அஜ்தாதி இலா ரBப்Bபிஹிம் யன்ஸிலூன்
36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
36:52
36:52 قَالُوْا يٰوَيْلَنَا مَنْۢ بَعَثَنَا مِنْ مَّرْقَدِنَاۘؔ ٚ هٰذَا مَا وَعَدَ الرَّحْمٰنُ وَصَدَقَ الْمُرْسَلُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் يٰوَيْلَنَا எங்கள் நாசமே! مَنْۢ بَعَثَنَا யார் எங்களை எழுப்பியது? مِنْ مَّرْقَدِنَاۘؔ ٚ எங்கள் தூங்குமிடத்தில் இருந்து هٰذَا இது مَا وَعَدَ வாக்களித்தது(ம்) الرَّحْمٰنُ பேரருளாளன் وَصَدَقَ உண்மையாகக் கூறியதும் الْمُرْسَلُوْنَ‏ தூதர்கள்
36:52. காலூ யா வய்லனா மம் Bப'அதனா மிம் மர்கதினா; ஹாத மா வ'அதர் ரஹ்மனு வ ஸதகல் முர்ஸலூன்
36:52. “எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
36:53
36:53 اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ جَمِيْعٌ لَّدَيْنَا مُحْضَرُوْنَ‏
اِنْ كَانَتْ அது இருக்காது اِلَّا தவிர صَيْحَةً சப்தமே وَّاحِدَةً ஒரே ஒரு فَاِذَا هُمْ அப்போது அவர்கள் جَمِيْعٌ அனைவரும் لَّدَيْنَا நம்மிடம் مُحْضَرُوْنَ‏ ஆஜராக்கப்படுவார்கள்
36:53. இன் கானத் இல்லா ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் Fப-இதா ஹும் ஜமீ'உல் லதய்னா முஹ்ளரூன்
36:53. ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும்) இருக்காது; உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.
36:54
36:54 فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَّلَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
فَالْيَوْمَ இன்றைய தினம் لَا تُظْلَمُ نَفْسٌ அநீதி இழைக்கப்படாது/எந்த ஓர் ஆன்மாவும் شَيْئًا சிறிதளவும் وَّلَا تُجْزَوْنَ கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர
36:54. Fபல்-யவ்ம லா துள்லமு னFப்ஸுன் ஷய்'அ(ன்)வ்-வ லா துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
36:54. அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
36:55
36:55 اِنَّ اَصْحٰبَ الْجَـنَّةِ الْيَوْمَ فِىْ شُغُلٍ فٰكِهُوْنَ‌ۚ‏
اِنَّ நிச்சயமாக اَصْحٰبَ الْجَـنَّةِ சொர்க்கவாசிகள் الْيَوْمَ இன்று فِىْ شُغُلٍ வேளையில் இருந்துகொண்டு فٰكِهُوْنَ‌ۚ‏ இன்பமனுபவிப்பார்கள்
36:55. இன்ன அஷ்ஹாBபல் ஜன்னதில் யவ்ம Fபீ ஷுகுலின் Fபாகிஹூன்
36:55. அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
36:56
36:56 هُمْ وَاَزْوَاجُهُمْ فِىْ ظِلٰلٍ عَلَى الْاَرَآٮِٕكِ مُتَّكِــــٴُـوْنَ‏
هُمْ அவர்களும் وَاَزْوَاجُهُمْ அவர்களின் மனைவிகளும் فِىْ ظِلٰلٍ நிழல்களில் عَلَى الْاَرَآٮِٕكِ கட்டில்கள் மீது مُتَّكِــــٴُـوْنَ‏ சாய்ந்தவர்களாக
36:56. ஹும் வ அZஜ்வாஜுஹும் Fபீ ளிலாலின் 'அலல் அரா'இகி முத்தகி'ஊன்
36:56. அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
36:57
36:57 لَهُمْ فِيْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا يَدَّعُوْنَ‌ ۖ‌ۚ‏
لَهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் கிடைக்கும் فَاكِهَةٌ கனிகள் وَّلَهُمْ இன்னும் அவர்களுக்கு مَّا يَدَّعُوْنَ‌ ۖ‌ۚ‏ அவர்கள் ஆசைப்படுவதும்
36:57. லஹும் Fபீஹா Fபாகிஹ து(ன்)வ்-வ லஹும் மா யத்த'ஊன்
36:57. அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.
36:58
36:58 سَلٰمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ‏
سَلٰمٌ ஸலாம் உண்டாகட்டும் قَوْلًا கூறப்படும் مِّنْ رَّبٍّ இறைவன் புறத்தில் رَّحِيْمٍ‏ மகா கருணையாளன்
36:58. ஸலாமுன் கவ்லம் மிர் ரBப்Bபிர் ரஹீம்
36:58. “ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.
36:59
36:59 وَامْتَازُوا الْيَوْمَ اَيُّهَا الْمُجْرِمُوْنَ‏
وَامْتَازُوا நீங்கள் பிரிந்து விடுங்கள்! الْيَوْمَ இன்றைய தினம் اَيُّهَا الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகளே!
36:59. வம்தாZஜுல் யவ்ம அய்யுஹல் முஜ்ரிமூன்
36:59. அன்றியும்: “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:60
36:60 اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يٰبَنِىْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطٰنَ‌‌ۚ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ‏
اَلَمْ اَعْهَدْ நான் கட்டளையிடவில்லையா? اِلَيْكُمْ உங்களுக்கு يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் மக்களே! اَنْ لَّا تَعْبُدُوا நீங்கள் வணங்காதீர்கள் என்று الشَّيْطٰنَ‌ۚ ஷைத்தானை اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரியாவான் مُّبِيْنٌ ۙ‏ தெளிவான
36:60. அலம் அஃஹத் இலய்கும் யா Bபனீ ஆதம அல்-லா தஃBபுதுஷ் ஷய்தான இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61
36:61 وَّاَنِ اعْبُدُوْنِىْ ؔ‌ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
وَّاَنِ اعْبُدُوْنِىْ ؔ‌ؕ இன்னும் என்னை வணங்குங்கள் هٰذَا இதுதான் صِرَاطٌ பாதையாகும் مُّسْتَقِيْمٌ‏ நேரான
36:61. வ அனி'Bபுதூனீ; ஹாதா ஸிராதும் முஸ்தகீம்
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
36:62
36:62 وَلَقَدْ اَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِيْرًا‌ ؕ اَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَضَلَّ அவன் வழிகெடுத்துள்ளான் مِنْكُمْ உங்களில் جِبِلًّا படைப்புகளை كَثِيْرًا‌ ؕ அதிகமான اَفَلَمْ تَكُوْنُوْا நீங்கள்இருக்கவில்லையா? تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிகின்றவர்களாக
36:62. வ லகத் அளல்ல மின்கும் ஜிBபில்லன் கதீரா; அFபலம் தகூனூ தஃகிலூன்
36:62. “அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
36:63
36:63 هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏
هٰذِهٖ இதுதான் جَهَنَّمُ நரகம் الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏ நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த
36:63. ஹாதிஹீ ஜஹன்னமுல் லதீ குன்தும் தூ'அதூன்
36:63. “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும்.
36:64
36:64 اِصْلَوْهَا الْيَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
اِصْلَوْهَا அதில் நீங்கள் பொசுங்குங்கள் الْيَوْمَ இன்று بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏ நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்
36:64. இஸ்லவ்ஹல் யவ்ம Bபிமா குன்தும் தக்Fபுரூன்
36:64. “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:65
36:65 اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
اَلْيَوْمَ இன்று نَخْتِمُ முத்திரையிடுவோம் عَلٰٓى اَفْوَاهِهِمْ அவர்களின் வாய்களின் மீது وَتُكَلِّمُنَاۤ இன்னும் நம்மிடம் பேசும் اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் وَتَشْهَدُ இன்னும் சாட்சி சொல்லும் اَرْجُلُهُمْ அவர்களின் கால்கள் بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏ அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு
36:65. அல்-யவ்ம னக்திமு 'அலா அFப்வாஹிஹிம் வ துகல்லிமுனா அய்தீஹிம் வ தஷ்ஹது அர்ஜுலுஹும் Bபிமா கானூ யக்ஸிBபூன்
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
36:66
36:66 وَلَوْ نَشَآءُ لَـطَمَسْنَا عَلٰٓى اَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَاَنّٰى يُبْصِرُوْنَ‏
وَلَوْ نَشَآءُ நாம் நாடியிருந்தால் لَـطَمَسْنَا குருடாக்கி இருப்போம் عَلٰٓى اَعْيُنِهِمْ அவர்களின் கண்களை فَاسْتَبَقُوا தவறி இருப்பார்கள் الصِّرَاطَ பாதை فَاَنّٰى ஆக, எப்படி يُبْصِرُوْنَ‏ பார்ப்பார்கள்
36:66. வ லவ் னஷா'உ லத மஸ்ன 'அலா அஃயுனிஹிம் Fபஸ்த Bபகுஸ்-ஸிராத Fப-அன்னா யுBப்ஸிரூன்
36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
36:67
36:67 وَلَوْ نَشَآءُ لَمَسَخْنٰهُمْ عَلٰى مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوْا مُضِيًّا وَّلَا يَرْجِعُوْنَ
وَلَوْ نَشَآءُ நாம் நாடியிருந்தால் لَمَسَخْنٰهُمْ அவர்களை உட்கார வைத்திருப்போம் عَلٰى مَكَانَتِهِمْ அவர்களின் இடத்திலேயே فَمَا اسْتَطَاعُوْا ஆக, அவர்கள் ஆற்றல் பெறமாட்டார்கள் مُضِيًّا நடப்பதற்கு(ம்) وَّلَا يَرْجِعُوْنَ‏ திரும்பி வரவும் மாட்டார்கள்
36:67. வ லவ் னஷா'உ லமஸக்னாஹும் 'அலா மகானதிஹிம் Fபமஸ்-ததா'ஊ முளிய்ய(ன்)வ்-வ லா யர்ஜி'ஊன்
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.  
36:68
36:68 وَمَنْ نُّعَمِّرْهُ نُـنَكِّسْهُ فِى الْخَـلْقِ‌ؕ اَفَلَا يَعْقِلُوْنَ‏
وَمَنْ نُّعَمِّرْهُ நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கின்றோமோ نُـنَكِّسْهُ அவரை திருப்பி விடுவோம் فِى الْخَـلْقِ‌ؕ படைப்பில் اَفَلَا يَعْقِلُوْنَ‏ அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
36:68. வ மன் னு 'அம்மிர்ஹு னுனக்கிஸ்ஹு Fபில்-கல்க்; அFபலா யஃகிலூன்
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
36:69
36:69 وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا يَنْۢبَغِىْ لَهٗؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِيْنٌۙ‏
وَمَا عَلَّمْنٰهُ நாம் அவருக்கு கற்றுத்தரவில்லை الشِّعْرَ கவிதைகளை وَمَا يَنْۢبَغِىْ தகுதியானதும் இல்லை لَهٗؕ அவருக்கு اِنْ هُوَ இது இல்லை اِلَّا ذِكْرٌ அறிவுரை(யும்) அன்றி وَّقُرْاٰنٌ குர்ஆனும் مُّبِيْنٌۙ‏ தெளிவான(து)
36:69. வமா 'அல்லம்னாஹுஷ் ஷிஃர வமா யம்Bபகீ லஹ்; இன் ஹுவ இல்லா திக்ரு(ன்)வ்-வ குர்ஆனும் முBபீன்
36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
36:70
36:70 لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ‏
لِّيُنْذِرَ அது எச்சரிப்பதற்காகவும் مَنْ எவர் كَانَ இருக்கின்றார் حَيًّا உயிருள்ளவராக وَّيَحِقَّ உறுதியாகி விடுவதற்காகவும் الْقَوْلُ வாக்கு عَلَى மீது الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
36:70. லியுன்திர மன் கான ஹய்ய(ன்)வ்-வ யஹிக்கல் கவ்லு 'அலல்-காFபிரீன்
36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
36:71
36:71 اَوَلَمْ يَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَيْدِيْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اَنَّا நிச்சயமாக நாம் خَلَقْنَا நாம் படைத்ததை لَهُمْ அவர்களுக்கு مِّمَّا عَمِلَتْ செய்தவற்றிலிருந்து اَيْدِيْنَاۤ நமது கரங்கள் اَنْعَامًا கால்நடைகளை فَهُمْ அவர்கள் لَهَا அவற்றுக்கு مٰلِكُوْنَ‏ உரிமையாளர்களாக
36:71. அவலம் யரவ் அன்னா கலக்னா லஹும் மிம்மா 'அமிலத் அய்தீனா அன்'ஆமன் Fபஹும் லஹா மாலிகூன்
36:71. நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
36:72
36:72 وَذَلَّـلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا يَاْكُلُوْنَ‏
وَذَلَّـلْنٰهَا நாம் அவற்றை பணியவைத்தோம் لَهُمْ அவர்களுக்கு فَمِنْهَا அவற்றில் رَكُوْبُهُمْ அவர்களின் வாகனங்களும் وَمِنْهَا இன்னும் அவற்றில் இருந்து يَاْكُلُوْنَ‏ அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்
36:72. வ தல்லல்னாஹா லஹும் Fபமின்ஹா ரகூBபுஹும் வ மின்ஹா ய'குலூன்
36:72. மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
36:73
36:73 وَلَهُمْ فِيْهَا مَنَافِعُ وَمَشَارِبُ‌ؕ اَفَلَا يَشْكُرُوْنَ‏
وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு فِيْهَا இவற்றில் مَنَافِعُ பலன்கள் وَمَشَارِبُ‌ؕ குடிபானங்களும் اَفَلَا يَشْكُرُوْنَ‏ அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
36:73. வ லஹும் Fபீஹா மனா Fபி'உ வ மஷாரிBப்; அFபலா யஷ்குரூன்
36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
36:74
36:74 وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ يُنْصَرُوْنَؕ‏
وَاتَّخَذُوْا அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اٰلِهَةً பல கடவுள்களை لَّعَلَّهُمْ يُنْصَرُوْنَؕ‏ தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக
36:74. வத்தகதூ மின் தூனில் லாஹி ஆலிஹதல் ல'அல்லஹும் யுன்ஸரூன்
36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:75
36:75 لَا يَسْتَطِيْعُوْنَ نَصْرَهُمْۙ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُّحْضَرُوْنَ‏
لَا يَسْتَطِيْعُوْنَ அவர்கள் சக்தி பெறமாட்டார்கள் نَصْرَ உதவுவதற்கு هُمْۙ அவர்களுக்கு وَهُمْ இன்னும் அவர்கள் لَهُمْ அவர்கள் முன் جُنْدٌ ராணுவமாக مُّحْضَرُوْنَ‏ தயாராக இருக்கின்ற
36:75. லா யஸ்ததீ'ஊன னஸ்ரஹும் வ ஹும் லஹும் ஜுன்தும் முஹ்ளரூன்
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
36:76
36:76 فَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ‌ۘ اِنَّا نَـعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ‏
فَلَا يَحْزُنْكَ ஆகவே உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம் قَوْلُهُمْ‌ۘ அவர்களின் பேச்சு اِنَّا نَـعْلَمُ நிச்சயமாக நாம் நன்கறிவோம் مَا يُسِرُّوْنَ அவர்கள் மறைத்து பேசுவதை(யும்) وَمَا يُعْلِنُوْنَ‏ அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதை(யும்)
36:76. Fபலா யஹ்Zஜுன்க கவ்லுஹும்; இன்னா னஃலமு மா யுஸிர்ரூன வமா யுஃலினூன்
36:76. (நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
36:77
36:77 اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ‏
اَوَلَمْ يَرَ பார்க்கவில்லையா? الْاِنْسَانُ மனிதன் اَنَّا خَلَقْنٰهُ நிச்சயமாக நாம் அவனை படைத்துள்ளோம் مِنْ نُّطْفَةٍ ஓர் இந்திரியத் துளியில் இருந்து فَاِذَا هُوَ ஆனால், அவனோ خَصِيْمٌ தர்க்கம் செய்பவனாக مُّبِيْنٌ‏ தெளிவாக
36:77. அவலம் யரல் இன்ஸானு அன்னா கலக்னாஹு மின் னுத்Fபதின் Fப-இதா ஹுவ கஸீமும் முBபீன்
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78
36:78 وَضَرَبَ لَـنَا مَثَلًا وَّ نَسِىَ خَلْقَهٗ‌ ؕ قَالَ مَنْ يُّحْىِ الْعِظَامَ وَهِىَ رَمِيْمٌ‏
وَضَرَبَ விவரிக்கின்றான் لَـنَا நமக்கு مَثَلًا ஓர் உதாரணத்தை وَّ نَسِىَ அவன் மறந்துவிட்டான் خَلْقَهٗ‌ ؕ தான் படைக்கப்பட்டதை قَالَ அவன் கூறுகின்றான் مَنْ யார் يُّحْىِ உயிர்ப்பிப்பான்? الْعِظَامَ எலும்புகளை وَهِىَ رَمِيْمٌ‏ அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்றபோது
36:78. வ ளரBப லனா மத்ல(ன்)வ்-வ னஸிய கல்கஹூ கால மய்-யுஹ்யில்'இளாம வ ஹிய ரமீம்
36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
36:79
36:79 قُلْ يُحْيِيْهَا الَّذِىْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ‌ ؕ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيْمُ ۙ‏
قُلْ கூறுவீராக! يُحْيِيْهَا அவற்றை உயிர்ப்பிப்பான் الَّذِىْۤ اَنْشَاَهَاۤ அவற்றை உருவாக்கியவன்தான் اَوَّلَ முதல் مَرَّةٍ‌ ؕ முறை وَهُوَ இன்னும் அவன் بِكُلِّ எல்லா خَلْقٍ படைப்புகளையும் عَلِيْمُ ۙ‏ நன்கறிந்தவன்
36:79. குல் யுஹ் யீஹல் லதீ அன்ஷ அஹா அவ்வல மர்ரஹ்; வ ஹுவ Bபிகுல்லி கல்கின் 'அலீம்
36:79. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80
36:80 اۨلَّذِىْ جَعَلَ لَـكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًا فَاِذَاۤ اَنْـتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ‏
اۨلَّذِىْ எவன் جَعَلَ ஏற்படுத்துகின்றான் لَـكُمْ உங்களுக்கு مِّنَ الشَّجَرِ மரத்தில் இருந்து الْاَخْضَرِ பச்சை نَارًا நெருப்பை فَاِذَاۤ اَنْـتُمْ அப்போது நீங்கள் مِّنْهُ அதில் تُوْقِدُوْنَ‏ நெருப்பை மூட்டிக்கொள்கிறீர்கள்
36:80. அல்லதீ ஜ'அல லகும் மினஷ் ஷஜரில் அக்ளரி னாரன் Fப-இதா அன்தும் மின்ஹு தூகிதூன்
36:80. “பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81
36:81 اَوَلَيْسَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْؔؕ بَلٰی وَهُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏
اَوَلَيْسَ இல்லையா? الَّذِىْ خَلَقَ படைத்தவன் السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் بِقٰدِرٍ ஆற்றலுடையவனாக عَلٰٓى اَنْ يَّخْلُقَ படைப்பதற்கு مِثْلَهُمْؔؕ இவர்களைப் போன்றவர்களை بَلٰی ஏன் இல்லை! وَهُوَ அவன்தான் الْخَـلّٰقُ மகா படைப்பாளன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
36:81. அவ லய்ஸல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபிகாதிரின் 'அலா அய்-யக்லுக மித்லஹும்; Bபலா வ ஹுவல் கல்லாகுல் 'அலீம்
36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:82
36:82 اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
اِنَّمَاۤ اَمْرُهٗۤ அவனது கட்டளை எல்லாம் اِذَاۤ اَرَادَ அவன் நாடினால் شَیْـٴًـــا எதையும் اَنْ يَّقُوْلَ அவன் கூறுவதுதான் لَهٗ அதற்கு كُنْ ஆகு (என்று) فَيَكُوْنُ‏ அது ஆகிவிடும்
36:82. இன்னமா அம்ருஹூ இதா அராத ஷய்'அன் அய்-யகூல லஹூ குன் Fப-யகூன்
36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆகுக!) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
36:83
36:83 فَسُبْحٰنَ الَّذِىْ بِيَدِهٖ مَلَـكُوْتُ كُلِّ شَىْءٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ
فَسُبْحٰنَ ஆக, அவன் மகா பரிசுத்தமானவன் الَّذِىْ எவன் بِيَدِهٖ அவனுடைய கரத்தில் مَلَـكُوْتُ பேராட்சி كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் وَّاِلَيْهِ அவன் பக்கம்தான் تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
36:83. Fப ஸுBப்ஹானல் லதீ Bபியதிஹீ மலகூது குல்லி ஷய்-இ(ன்)வ்-வ இலய்ஹி துர்ஜ'ஊன்
36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.