23. ஸூரத்துல் முஃமினூன்(விசுவாசிகள்)
மக்கீ, வசனங்கள்: 118

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
23:1
23:1 قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏
قَدْ اَفْلَحَ வெற்றி பெற்று விட்டார்கள் الْمُؤْمِنُوْنَۙ‏ நம்பிக்கையாளர்கள்
23:1. கத் அFப்லஹல் மு'மினூன்
23:1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
23:2
23:2 الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் فِىْ صَلَاتِهِمْ தங்கள் தொழுகையில் خَاشِعُوْنَ ۙ‏ உள்ளச்சமுடையவர்கள்
23:2. அல்லதீன ஹும் Fபீ ஸலாதிஹிம் காஷி'ஊன்
23:2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
23:3
23:3 وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் عَنِ اللَّغْوِ வீணான விஷயங்களை விட்டு مُعْرِضُوْنَۙ‏ விலகியவர்கள்
23:3. வல்லதீன ஹும் 'அனில்லக்விமுஃரிளூன்
23:3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
23:4
23:4 وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் لِلزَّكٰوةِ ஸகாத்தை فَاعِلُوْنَۙ‏ நிறைவேற்றக்கூடியவர்கள்
23:4. வல்லதீன ஹும் லிZஜ் Zஜகாதி Fபா'இலூன்
23:4. ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
23:5
23:5 وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் لِفُرُوْجِهِمْ தங்கள் மர்மஸ்தலங்களை حٰفِظُوْنَۙ‏ பாதுகாக்கக் கூடியவர்கள்
23:5. வல்லதீன ஹும் லிFபுரூ ஜிஹிம் ஹாFபிளூன்
23:5. மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
23:6
23:6 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏
اِلَّا தவிர عَلٰٓى اَزْوَاجِهِمْ தங்கள் மனைவியர்களிடம் اَوْ அல்லது مَا مَلَـكَتْ சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் اَيْمَانُهُمْ தங்கள் வலக்கரங்கள் فَاِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் غَيْرُ அல்லர் مَلُوْمِيْنَ‌ۚ‏ பழிக்கப்படுபவர்கள்
23:6. இல்லா 'அலா அZஜ்வாஜிஹிம் அவ் மா மலகத் அய்மானுஹும் Fப இன்னஹும் கய்ரு மலூமீன்
23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
23:7
23:7 فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ‌ ۚ‏
فَمَنِ யார் ابْتَغٰى தேடுவார்களோ وَرَآءَ பின்னர் ذٰ لِكَ அதற்கு فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْعٰدُوْنَ‌ ۚ‏ எல்லை மீறிகள்
23:7. FபமனிBப் தகா வரா'அ தாலிக Fப உலா'இக ஹுமுல் 'ஆதூன்
23:7. ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
23:8
23:8 وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் لِاَمٰنٰتِهِمْ தங்கள் அமானிதங்களையும் وَعَهْدِهِمْ இன்னும் தங்கள் உடன்படிக்கையையும் رَاعُوْنَ ۙ‏ பேணக்கூடியவர்கள்
23:8. வல்லதீன ஹும் லி அமானாதிஹிம் வ 'அஹ்திஹிம் ரா'ஊன்
23:8. இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
23:9
23:9 وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் عَلٰى صَلَوٰتِهِمْ தங்கள் தொழுகைகளை يُحَافِظُوْنَ‌ۘ‏ பாதுகாப்பார்கள்
23:9. வல்லதீன ஹும் 'அலா ஸலவாதிஹிம் யுஹாFபிளூன்
23:9. மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
23:10
23:10 اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ‏
اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْوَارِثُوْنَ ۙ‏ சொந்தமாக்கிக் கொள்பவர்கள்
23:10. உலா'இக ஹுமுல் வாரிதூன்
23:10. இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
23:11
23:11 الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
الَّذِيْنَ يَرِثُوْنَ சொந்தமாக்கிக் கொள்வார்கள் الْفِرْدَوْسَؕ ஃபிர்தவ்ஸ் சொர்க்கத்தை هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
23:11. அல்லதீன யரிதூனல் Fபிர்தவ்ஸ ஹும் Fபீஹா காலிதூன்
23:11. இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
23:12
23:12 وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ‌ ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا நாம் படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை مِنْ سُلٰلَةٍ ஈரச்சத்திலிருந்து مِّنْ طِيْنٍ‌ ۚ‏ களிமண்ணிலிருந்து
23:12. வ லகத் கலக்னல் இன்ஸான மின் ஸுலாலதிம் மின்தீன்
23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
23:13
23:13 ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ‏
ثُمَّ பிறகு جَعَلْنٰهُ அவனை நாம் வைத்தோம் نُطْفَةً ஒரு இந்திரியத் துளியாக فِىْ قَرَارٍ ஒரு தங்குமிடத்தில் مَّكِيْنٍ‏ உறுதியான
23:13. தும்ம ஜ'அல்னாஹு னுத்Fபதன் Fபீ கராரிம் மகீன்
23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.
23:14
23:14 ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ‌ ؕ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ؕ‏
ثُمَّ பிறகு خَلَقْنَا நாம் படைத்தோம் النُّطْفَةَ இந்திரியத் துளியை عَلَقَةً ஒரு இரத்தக்கட்டியாக فَخَلَقْنَا நாம் படைத்தோம் الْعَلَقَةَ இரத்தக் கட்டியை مُضْغَةً ஒரு சதைத் துண்டாக فَخَلَقْنَا நாம் படைத்தோம் الْمُضْغَةَ சதைத் துண்டை عِظٰمًا எலும்புகளாக فَكَسَوْنَا அணிவித்தோம் الْعِظٰمَ எலும்புகளுக்கு لَحْمًا சதையை ثُمَّ பிறகு اَنْشَاْنٰهُ அவனைப் படைத்தோம் خَلْقًا படைப்பாக اٰخَرَ‌ ؕ வேறு ஒரு فَتَبٰـرَكَ மிக்க அருள் வளம் நிறைந்து விட்டான் اللّٰهُ அல்லாஹ் اَحْسَنُ மிக அழகியவனாகிய الْخٰلِقِيْنَ ؕ‏ செய்பவர்களில்
23:14. தும்ம கலக்னன் னுத்Fபத 'அலகதன் Fபகலக்னல் 'அலகத முள்கதன் Fபகலக் னல் முள்கத 'இளாமன் Fபகஸவ்னல் 'இளாம லஹ்மன் தும்ம அன்ஷானாஹு கல்கன் ஆகர்; FபதBபாரகல் லாஹு அஹ்ஸனுல் காலிகீன்
23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
23:15
23:15 ثُمَّ اِنَّكُمْ بَعْدَ ذٰلِكَ لَمَيِّتُوْنَؕ‏
ثُمَّ பிறகு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் بَعْدَ ذٰلِكَ இதற்குப் பின்னர் لَمَيِّتُوْنَؕ‏ இறப்பெய்யக் கூடியவர்கள்தான்
23:15. தும்ம இன்னகும் Bபஃத தாலிக ல மய்யிதூன்
23:15. பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள்.
23:16
23:16 ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ تُبْعَثُوْنَ‏
ثُمَّ பிறகு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் تُبْعَثُوْنَ‏ எழுப்பப்படுவீர்கள்
23:16. தும்ம இன்னகும் யவ்மல் கியாமதி துBப்'அதூன்
23:16. பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.
23:17
23:17 وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآٮِٕقَ ۖ  وَمَا كُنَّا عَنِ الْخَـلْقِ غٰفِلِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا நாம் படைத்தோம் فَوْقَكُمْ உங்களுக்கு மேல் سَبْعَ ஏழு طَرَآٮِٕقَ வானங்களை ۖ  وَمَا كُنَّا நாம் இருக்கவில்லை عَنِ الْخَـلْقِ படைப்பைப் பற்றி غٰفِلِيْنَ‏ கவனமற்றவர்களாக
23:17. வ லகத் கலக்னா Fபவ்ககும் ஸBப்'அ தரா'இக வமா குன்னா 'அனில் கல்கி காFபிலீன்
23:17. அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுதுமே பராமுகமாக இருக்கவில்லை.
23:18
23:18 وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ‌ۖ وَاِنَّا عَلٰى ذَهَابٍۢ بِهٖ لَقٰدِرُوْنَ‌ ۚ‏
وَاَنْزَلْنَا இன்னும் நாம் இறக்கினோம் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءًۢ மழையை بِقَدَرٍ ஓர் அளவின் படி فَاَسْكَنّٰهُ அதை தங்க வைத்தோம் فِى الْاَرْضِ‌ۖ பூமியில் وَاِنَّا நிச்சயமாக நாம் عَلٰى ذَهَابٍۢ போக்கி விடுவதற்கு بِهٖ அதை لَقٰدِرُوْنَ‌ ۚ‏ ஆற்றலுடையவர்கள்தான்
23:18. வ அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அம் Bபிகதரின் Fப-அஸ்கன்னாஹு Fபில் அர்ளி வ இன்னா 'அலா தஹாBபிம் Bபிஹீ லகா திரூன்
23:18. மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
23:19
23:19 فَاَنْشَاْنَا لَـكُمْ بِهٖ جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّ اَعْنَابٍ‌ ۘ لَـكُمْ فِيْهَا فَوَاكِهُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۙ‏
فَاَنْشَاْنَا நாம் உருவாக்கினோம் لَـكُمْ உங்களுக்காக بِهٖ அதன் மூலம் جَنّٰتٍ தோட்டங்களை مِّنْ نَّخِيْلٍ பேரீட்சை மரங்கள் وَّ اَعْنَابٍ‌ ۘ இன்னும் திராட்சை செடிகள் لَـكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் فَوَاكِهُ பழங்கள் كَثِيْرَةٌ அதிகமான وَّمِنْهَا அவற்றிலிருந்து تَاْكُلُوْنَ ۙ‏ நீங்கள் சாப்பிடுகிறீர்கள்
23:19. Fப அன்ஷானா லகும் Bபிஹீ ஜன்னாதிம் மின் னகீலி(ன்)வ் வ அஃனாBப்; லகும் Fபீஹா Fபவாகிஹு கதீரது(ன்)வ் வ மின்ஹா தாகுலூன்
23:19. அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
23:20
23:20 وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَيْنَآءَ تَنْۢبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِيْنَ‏
وَشَجَرَةً இன்னும் ஒரு மரத்தை تَخْرُجُ உற்பத்தி ஆகக்கூடியது مِنْ طُوْرِ மலையிலிருந்து سَيْنَآءَ ஸினாய் تَنْۢبُتُ முளைப்பிக்கிறது بِالدُّهْنِ எண்ணையை وَصِبْغٍ சுவையான உணவை لِّلْاٰكِلِيْنَ‏ உண்பவர்களுக்கு
23:20. வ ஷஜரதன் தக்ருஜு மின் தூரி ஸய்னா'அ தம்Bபுது Bபித்துஹ்னி வ ஸிBப்கில் லில் ஆகிலீன்
23:20. இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).
23:21
23:21 وَ اِنَّ لَـكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةً‌   ؕ نُسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهَا وَلَـكُمْ فِيْهَا مَنَافِعُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۙ‏
وَ اِنَّ நிச்சயமாக لَـكُمْ உங்களுக்கு فِى الْاَنْعَامِ கால்நடையில் لَعِبْرَةً‌   ؕ ஒரு படிப்பினை نُسْقِيْكُمْ உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் مِّمَّا فِىْ بُطُوْنِهَا அவற்றின் வயிற்றிலிருந்து وَلَـكُمْ இன்னும் உங்களுக்கு فِيْهَا அவற்றில் مَنَافِعُ பலன்களும் كَثِيْرَةٌ அதிகமான وَّمِنْهَا இன்னும் அவற்றிலிருந்து تَاْكُلُوْنَ ۙ‏ நீங்கள் புசியுங்கள்
23:21. வ இன்ன லகும் Fபில் அன்'ஆமி ல'இBப்ரஹ்; னுஸ்கீகும் மிம்மா Fபீ Bபுதூனிஹா வ லகும் Fபீஹா மனாFபி'உ கதீரது(ன்)வ் வ மின்ஹா தாகுலூன்
23:21. நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.  
23:22
23:22 وَعَلَيْهَا وَعَلَى الْـفُلْكِ تُحْمَلُوْنَ
وَعَلَيْهَا அவற்றின் மீதும் وَعَلَى الْـفُلْكِ கப்பல்கள் மீதும் تُحْمَلُوْنَ‏ நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்
23:22. வ 'அலய்ஹா வ'அலல் Fபுல்கி துஹ்மலூன்
23:22. மேலும் அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள்.
23:23
23:23 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் نُوْحًا நூஹை اِلٰى قَوْمِهٖ அவருடைய மக்களிடம் فَقَالَ அவர் கூறினார் يٰقَوْمِ எனது மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا இல்லை لَـكُمْ உங்களுக்கு مِّنْ اِلٰهٍ கடவுள் யாரும் غَيْرُهٗ ؕ அவனையன்றி اَفَلَا تَتَّقُوْنَ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
23:23. வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃBபுதுல் லாஹ மா லகும் மின் இலஹின் கய்ருஹூ அFபலா தத்தகூன்
23:23. இன்னும்: நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடத்தில் அனுப்பினோம்; அப்போது அவர் (தம் சமூகத்தாரிடம்) “என் சமூகத்தவர்களே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் - அவனன்றி உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை, நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” என்று கூறினார்.
23:24
23:24 فَقَالَ الْمَلَؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يُرِيْدُ اَنْ يَّـتَفَضَّلَ عَلَيْكُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰٓٮِٕكَةً  ۖۚ مَّا سَمِعْنَا بِهٰذَا فِىْۤ اٰبَآٮِٕنَا الْاَوَّلِيْنَ‌ ۚ‏
فَقَالَ கூறினர் الْمَلَؤُا தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய மக்களில் مَا இல்லை هٰذَاۤ இவர் اِلَّا தவிர بَشَرٌ மனிதரே مِّثْلُكُمْ ۙ உங்களைப் போன்ற يُرِيْدُ அவர் நாடுகிறார் اَنْ يَّـتَفَضَّلَ மேன்மை அடைய عَلَيْكُمْ ؕ உங்கள் மீது وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَاَنْزَلَ இறக்கி இருப்பான் مَلٰٓٮِٕكَةً  ۖۚ வானவர்களை مَّا سَمِعْنَا நாங்கள் கேள்விப்பட்டதில்லை بِهٰذَا இதை فِىْۤ اٰبَآٮِٕنَا எங்கள் மூதாதைகளில் الْاَوَّلِيْنَ‌ ۚ‏ முன்னோர்களான
23:24. Fபகாலல் மல'உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ மா ஹாதா இல்லா Bபஷரும் மித்லுகும் யுரீது அய் யதFபள்ளல 'அலய்கும் வ லவ் ஷா'அல் லாஹு ல அன்Zஜல மலா'இகதம் மா ஸமிஃனா Bபிஹாதா Fபீ ஆBபா'இனல் அவ்வலீன்
23:24. ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.
23:25
23:25 اِنْ هُوَ اِلَّا رَجُلٌۢ بِهٖ جِنَّةٌ فَتَرَبَّصُوْا بِهٖ حَتّٰى حِيْنٍ‏
اِنْ هُوَ அவர் இல்லை اِلَّا தவிர رَجُلٌۢ ஓர் ஆடவரே بِهٖ அவருக்கு جِنَّةٌ பைத்தியம் (ஏற்பட்டிருக்கிறது) فَتَرَبَّصُوْا எதிர் பார்த்திருங்கள் بِهٖ அவருக்கு حَتّٰى வரை حِيْنٍ‏ ஒரு காலம்
23:25. இன் ஹுவ இல்லா ரஜுலும் Bபிஹீ ஜின்னதுன் FபதரBப்Bபஸூ Bபிஹீ ஹத்தா ஹீன்
23:25. “இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை; எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்” (எனவும் கூறினர்).
23:26
23:26 قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா انْصُرْنِىْ எனக்கு நீ உதவுவாயாக بِمَا كَذَّبُوْنِ‏ அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
23:26. கால ரBப்Bபின் ஸுர்னீ Bபிமா கத்தBபூன்
23:26. “என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!” என்று கூறினார்.
23:27
23:27 فَاَوْحَيْنَاۤ اِلَيْهِ اَنِ اصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَ وَحْيِنَا فَاِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّـنُّوْرُ‌ۙ فَاسْلُكْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْ‌ۚ وَلَا تُخَاطِبْنِىْ فِى الَّذِيْنَ ظَلَمُوْا‌ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ‏
فَاَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْهِ அவருக்கு اَنِ اصْنَعِ நீர் செய்வீராக الْفُلْكَ கப்பலை بِاَعْيُنِنَا நமது கண்களுக்கு முன்னும் وَ وَحْيِنَا நமது அறிவிப்பின்படியும் فَاِذَا جَآءَ வந்துவிட்டால் اَمْرُنَا நம் கட்டளை وَفَارَ பொங்க ஆரம்பித்து விட்டால் التَّـنُّوْرُ‌ۙ அடுப்பு فَاسْلُكْ அதில் فِيْهَا ஏற்றுவீராக مِنْ كُلٍّ எல்லாவற்றிலிருந்தும் زَوْجَيْنِ ஜோடிகளையும் اثْنَيْنِ இரண்டு وَاَهْلَكَ இன்னும் உமது குடும்பத்தினரையும் اِلَّا தவிர مَنْ எவன் سَبَقَ முந்திவிட்டதோ عَلَيْهِ அவன் மீது الْقَوْلُ வாக்கு مِنْهُمْ‌ۚ அவர்களில் وَلَا تُخَاطِبْنِىْ இன்னும் என்னிடம் நீர் உரையாடாதீர் فِى الَّذِيْنَ ظَلَمُوْا‌ۚ அநியாயக்காரர்கள் விஷயத்தில் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مُّغْرَقُوْنَ‏ மூழ்கடிக்கப்படுவார்கள்
23:27. Fப அவ்ஹய்னா இலய்ஹி அனிஸ் ன'இல் Fபுல்க Bபி அஃயுனினா வ வஹ்யினா Fப இதா ஜா'அ அம்ருனா வ Fபாரத் தன்னூரு Fபஸ்லுக் Fபீஹா மின் குல்லின் Zஜவ்ஜய்னித் னய்னி வ அஹ்லக இல்லா மன் ஸBபக 'அலய்ஹில் கவ்லு மின்ஹும் வலா துகாதிBப்னீ Fபில் லதீன ளலமூ இன்னாஹும் முக்ரகூன்
23:27. அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும்: அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று அவருக்கு நாம் அறிவித்தோம்.
23:28
23:28 فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْـفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ نَجّٰٮنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
فَاِذَا اسْتَوَيْتَ நீர் ஏறிவிட்டால் اَنْتَ நீரும் وَمَنْ مَّعَكَ இன்னும் உன்னுடன் இருப்பவரும் عَلَى الْـفُلْكِ கப்பலில் فَقُلِ கூறுவீராக الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ எவன் نَجّٰٮنَا எங்களை பாதுகாத்தான் مِنَ الْقَوْمِ மக்களிடமிருந்து الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
23:28. Fப இதஸ் தவய்த அன்த வ மம் ம'அக 'அலல் Fபுல்கி Fபகுலில் ஹம்து லில்லாஹில் லதீ னஜ்ஜானா மினல் கவ்மிள் ளாலிமீன்
23:28. “நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்: “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!
23:29
23:29 وَقُلْ رَّبِّ اَنْزِلْنِىْ مُنْزَلًا مُّبٰـرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ‏
وَقُلْ இன்னும் கூறுவீராக رَّبِّ என் இறைவா اَنْزِلْنِىْ என்னை தங்க வைப்பாயாக مُنْزَلًا ஓர் இடத்தில் مُّبٰـرَكًا அருள் நிறைந்த وَّاَنْتَ நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الْمُنْزِلِيْنَ‏ தங்க வைப்பவர்களில்
23:29. வ குர் ரBப்Bபி அன்Zஜில்னீ முன்Zஜலம் முBபாரக(ன்)வ் வ அன்த கய்ருல் முன்Zஜிலீன்
23:29. மேலும் “இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).
23:30
23:30 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் உள்ளன لَاٰيٰتٍ (பல) அத்தாட்சிகள் وَّاِنْ كُنَّا நிச்சயமாக நாம் இருந்தோம் لَمُبْتَلِيْنَ‏ சோதிப்பவர்களாகவே
23:30. இன்ன Fபீ தாலிக ல ஆயாதி(ன்)வ் வ இன் குன்னா லமுBப்தலீன்
23:30. நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; நாம் (இவ்வாறே மனிதர்களைச்) சோதிப்பவராக இருக்கின்றோம்.
23:31
23:31 ثُمَّ اَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ‌ ۚ‏
ثُمَّ பிறகு اَنْشَاْنَا நாம் உருவாக்கினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு قَرْنًا தலைமுறையினரை اٰخَرِيْنَ‌ ۚ‏ வேறு ஒரு
23:31. தும்மா அன்ஷான மிம் Bபஃதிஹிம் கர்னன் ஆகரீன்
23:31. பின்னர், (பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களை அடுத்து வேறொரு தலைமுறையினரை உண்டாக்கினோம்.
23:32
23:32 فَاَرْسَلْنَا فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ اَفَلَا تَتَّقُوْنَ
فَاَرْسَلْنَا நாம் அனுப்பினோம் فِيْهِمْ அவர்களில் رَسُوْلًا ஒரு தூதரை مِّنْهُمْ அவர்களில் اَنِ اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا இல்லை لَـكُمْ உங்களுக்கு مِّنْ اِلٰهٍ வணங்கத்தகுதியான (வேறு) கடவுள் யாரும் غَيْرُهٗ‌ ؕ அவனையன்றி اَفَلَا تَتَّقُوْنَ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
23:32. Fப அர்ஸல்னா Fபீஹிம் ரஸூலம் மின்ஹும் அனிஃBபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ அFபலா தத்தகூன்
23:32. அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். “அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” (என்றும் அவர் கூறினார்.)  
23:33
23:33 وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهِ الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِلِقَآءِ الْاٰخِرَةِ وَاَتْرَفْنٰهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يَاْكُلُ مِمَّا تَاْكُلُوْنَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ ۙ‏
وَقَالَ கூறினர் الْمَلَاُ தலைவர்கள் مِنْ قَوْمِهِ அவருடைய மக்களில் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا இன்னும் நிராகரித்தனர் وَكَذَّبُوْا இன்னும் பொய்யாக்கினர் بِلِقَآءِ சந்திப்பை الْاٰخِرَةِ மறுமையின் وَاَتْرَفْنٰهُمْ நாம் அவர்களுக்கு செல்வத்தை வழங்கியிருந்தோம் فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ உலக வாழ்வில் مَا இல்லை هٰذَاۤ இவர் اِلَّا தவிர بَشَرٌ மனிதரே مِّثْلُكُمْ ۙ உங்களைப் போன்ற يَاْكُلُ அவர் சாப்பிடுகிறார் مِمَّا تَاْكُلُوْنَ நீங்கள் சாப்பிடுவதிலிருந்து مِنْهُ அதில் وَيَشْرَبُ இன்னும் அவர் குடிக்கிறார் مِمَّا تَشْرَبُوْنَ ۙ‏ நீங்கள் குடிப்பதிலிருந்து
23:33. வ காலல் மல-உ மின் கவ்மிஹில் லதீன கFபரூ வ கத்தBபூ Bபி லிகா'இல் ஆகிரதி வ அத்ரFப்னாஹும் Fபில் ஹயாதித் துன்யா மா ஹாதா இல்லா Bபஷரும் மித்லுகும் யாகுலு மிம்மா தாகுலூன மின்ஹு வ யஷ்ரBபு மிம்மா தஷ்ரBபூன்
23:33. ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும், இறுதித் தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சுகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
23:34
23:34 وَلَٮِٕنْ اَطَعْتُمْ بَشَرًا مِّثْلَـكُمْ اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَۙ‏
وَلَٮِٕنْ اَطَعْتُمْ நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால் بَشَرًا மனிதருக்கு مِّثْلَـكُمْ உங்களைப் போன்ற اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِذًا அப்போது لَّخٰسِرُوْنَۙ‏ நஷ்டவாளிகள்தான்
23:34. வ ல'இன் அதஃதும் Bபஷரம் மித்லகும் இன்னகும் இதல் லகாஸிரூன்
23:34. எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே!
23:35
23:35 اَيَعِدُكُمْ اَنَّكُمْ اِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَّعِظَامًا اَنَّكُمْ مُّخْرَجُوْنَ ۙ‏
اَيَعِدُكُمْ அவர் உங்களுக்கு வாக்குறுதி கூறுகிறாரா اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِذَا مِتُّمْ நீங்கள் மரணித்துவிட்டால் وَكُنْتُمْ இன்னும் ஆகிவிட்டால் تُرَابًا மண்ணாகவும் وَّعِظَامًا எலும்புகளாகவும் اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مُّخْرَجُوْنَ ۙ‏ வெளியேற்றப்படுவீர்கள்
23:35. அ-ய'இதுகும் அன்னகும் இதா மித்தும் வ குன்தும் துராBப(ன்)வ் வ இளாமன் அன்னகும் முக்ரஜூன்
23:35. “நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர் நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?
23:36
23:36 هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوْعَدُوْنَ ۙ‏
هَيْهَاتَ வெகு தூரம் هَيْهَاتَ வெகு தூரம் لِمَا تُوْعَدُوْنَ ۙ‏ நீங்கள் வாக்களிக்கப்படுவது
23:36. ஹய்ஹாத ஹய்ஹாத லிமா தூ'அதூன்
23:36. “(அப்படியாயின்) உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது, வெகு தொலைவு, வெகு தொலைவு (ஆகவே இருக்கிறது.)
23:37
23:37 اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ۙ‏
اِنْ هِىَ இது اِلَّا தவிர حَيَاتُنَا நமது வாழ்க்கை الدُّنْيَا உலக نَمُوْتُ நாம் இறந்து விடுகிறோம் وَنَحْيَا இன்னும் நாம் வாழ்கிறோம் وَمَا இன்னும் அல்லர் نَحْنُ நாம் بِمَبْعُوْثِيْنَ ۙ‏ எழுப்பப்படுபவர்கள்
23:37. இன் ஹிய இல்லா ஹயாதுனத் துன்யா னமூது வ னஹ்யா வமா னஹ்னு BபிமBப்'ஊதீன்
23:37. “நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்ல.
23:38
23:38 اِنْ هُوَ اِلَّا رَجُلُ اۨفْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِيْنَ‏
اِنْ هُوَ அவர் இல்லை اِلَّا தவிர رَجُلُ ஒரு மனிதரே اۨفْتَـرٰى இட்டுக்கட்டினார் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் كَذِبًا பொய்யை وَّمَا இல்லை نَحْنُ நாங்கள் لَهٗ அவரை بِمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொண்டவர்களாக
23:38. இன் ஹுவ இல்லா ரஜுலுனிFப் தரா 'அலல் லாஹி கதிBப(ன்)வ் வமா னஹ்னுஉ லஹூ Bபிமு'மினீன்
23:38. “இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டும் மனிதரேயன்றி வேறில்லை - எனவே இவரை நாம் நம்பமாட்டோம்” என்று (கூறினர்).
23:39
23:39 قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா انْصُرْنِىْ எனக்கு நீ உதவுவாயாக بِمَا كَذَّبُوْنِ‏ அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
23:39. கால ரBப்Bபின் ஸுர்னீ Bபிமா கத்தBபூன்
23:39. “என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று கூறினார்.
23:40
23:40 قَالَ عَمَّا قَلِيْلٍ لَّيُصْبِحُنَّ نٰدِمِيْنَ‌ۚ‏
قَالَ கூறினான் عَمَّا قَلِيْلٍ விரைவில் لَّيُصْبِحُنَّ அவர்கள் ஆகிவிடுவார்கள் نٰدِمِيْنَ‌ۚ‏ கைசேதப்பட்டவர்களாக
23:40. கால 'அம்மா கலீலில் ல யுஸ்Bபிஹுன்ன னாதிமீன்
23:40. “சிறிது காலத்தில் அவர்கள் நிச்சயமாகக் கைசேதப்பட்டவர்களாகி விடுவார்கள்” என்று கூறினார்.
23:41
23:41 فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَـقِّ فَجَعَلْنٰهُمْ غُثَآءً‌ۚ فَبُعْدًا لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
فَاَخَذَتْهُمُ அவர்களைப் பிடித்துக் கொண்டது الصَّيْحَةُ பெரிய சப்தம் بِالْحَـقِّ உண்மையில் فَجَعَلْنٰهُمْ அவர்களை மாற்றி விடுவோம் غُثَآءً‌ۚ நுரைகளாக فَبُعْدًا தொலைந்து போகட்டும் لِّـلْقَوْمِ கூட்டம் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார
23:41. Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது Bபில்ஹக்கி Fபஜ'அல்னாஹும் குதா'ஆ; FபBபுஃதல் லில்கவ் மிள் ளாலிமீன்
23:41. அப்பால், (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் நியாயமான முறையில் அவர்களைப் பிடித்துக்கொண்டது; நாம் அவர்களை கூளங்களாக ஆக்கிவிட்டோம்; எனவே அநியாயக்கார சமூகத்தார் (இறை ரஹ்மத்திலிருந்தும்) தொலைவிலே ஆகிவிட்டார்கள்.
23:42
23:42 ثُمَّ اَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قُرُوْنًا اٰخَرِيْنَؕ‏
ثُمَّ பிறகு اَنْشَاْنَا நாம் உருவாக்கினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு قُرُوْنًا தலைமுறைகளை اٰخَرِيْنَؕ‏ வேறு (பல)
23:42. தும்ம அன்ஷானா மிம் Bபஃதிஹிம் குரூனன் ஆகரீன்
23:42. அப்பால், நாம் அவர்களுக்குப் பின் வேறு தலைமுறையினர்களையும் உண்டாக்கினோம்.
23:43
23:43 مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَـاْخِرُوْنَؕ‏
مَا تَسْبِقُ முந்தவும் மாட்டார்கள் مِنْ اُمَّةٍ எந்த ஒரு சமுதாயம் اَجَلَهَا தனது தவணையை وَمَا يَسْتَـاْخِرُوْنَؕ‏ இன்னும் பிந்தவும் மாட்டார்கள்
23:43. மா தஸ்Bபிகு மின் உம்மதின் அஜலஹா வமா யஸ்தாகிரூன்
23:43. எந்த ஒரு சமுதாயமும் அதற்குரிய தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
23:44
23:44 ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْـرَا‌ ؕ كُلَّ مَا جَآءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ‌ فَاَتْبَـعْنَا بَعْـضَهُمْ بَعْـضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِيْثَ‌ ۚ فَبُـعْدًا لِّـقَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ‏
ثُمَّ பிறகு اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் رُسُلَنَا நமது தூதர்களை تَتْـرَا‌ ؕ தொடர்ச்சியாக كُلَّ مَا جَآءَ வந்தபோதெல்லாம் اُمَّةً ஒரு சமுதாயத்திற்கு رَّسُوْلُهَا அதன் தூதர் كَذَّبُوْهُ‌ அவர்கள் அவரை பொய்ப்பித்தனர் فَاَتْبَـعْنَا ஆகவே, பின்னர் கொண்டு வந்தோம் بَعْـضَهُمْ அவர்களில் சிலரை بَعْـضًا சிலரை وَّجَعَلْنٰهُمْ அவர்களை நாம் ஆக்கிவிட்டோம் اَحَادِيْثَ‌ ۚ படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக فَبُـعْدًا தொலைந்து போகட்டும் لِّـقَوْمٍ மக்கள் لَّا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
23:44. தும்ம அர்ஸல்னா ருஸுலனா தத்ரா குல்ல மா ஜா'அ உம்மதர் ரஸூலுஹா கத்தBபூஹ்; Fப அத்Bபஃனா Bபஃளஹும் Bபஃள(ன்)வ் வ ஜ'அல்னாஹும் அஹாதீத்; FபBபுஃதல் லிகவ்மில் லா யு'மினூன்
23:44. பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்.
23:45
23:45 ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰى وَاَخَاهُ هٰرُوْنَ ۙ بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ‏
ثُمَّ பிறகு اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் مُوْسٰى மூஸாவையும் وَاَخَاهُ இன்னும் அவருடையசகோதரர் هٰرُوْنَ ۙ ஹாரூனையும் بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளைக் கொண்டும் وَسُلْطٰنٍ இன்னும் ஆதாரத்தைக் கொண்டும் مُّبِيْنٍۙ‏ தெளிவான
23:45. தும்ம அர்ஸல்னா மூஸா வ அகாஹு ஹாரூன Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
23:45. பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-
23:46
23:46 اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ٮِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عٰلِيْنَ‌ ۚ‏
اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடமும் وَمَلَا۟ٮِٕهٖ இன்னும் அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும் فَاسْتَكْبَرُوْا அவர்கள் பெருமையடித்தனர் وَكَانُوْا அவர்கள் இருந்தனர் قَوْمًا மக்களாக عٰلِيْنَ‌ ۚ‏ ஆதிக்கம் செலுத்தக்கூடிய
23:46. இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் 'ஆலீன்
23:46. ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் - அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்.
23:47
23:47 فَقَالُـوْۤا اَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَـنَا عٰبِدُوْنَ‌ۚ‏
فَقَالُـوْۤا கூறினர் اَنُؤْمِنُ நாங்கள் நம்பிக்கை கொள்வோமா لِبَشَرَيْنِ இரு மனிதர்களை مِثْلِنَا எங்களைப் போன்ற وَقَوْمُهُمَا அவ்விருவரின் சமுதாயமோ لَـنَا எங்களுக்கு عٰبِدُوْنَ‌ۚ‏ பணிந்தவர்களாக இருக்கின்றனர்
23:47. Fபகாலூ அன்னு'மினு லிBபஷரய்னி மித்லினா வ கவ்முஹுமா லனா 'ஆBபிதூன்
23:47. எனவே: “நம்மைப் போன்ற இவ்விரு மனிதர்கள் மீதுமா நாம் ஈமான் கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்!” எனக் கூறினர்.
23:48
23:48 فَكَذَّبُوْهُمَا فَكَانُوْا مِنَ الْمُهْلَـكِيْنَ‏
فَكَذَّبُوْ அவர்கள் பொய்ப்பித்தனர் هُمَا அவ்விருவரையும் فَكَانُوْا ஆகவே, அவர்கள் ஆகிவிட்டனர் مِنَ الْمُهْلَـكِيْنَ‏ அழிக்கப்பட்டவர்களில்
23:48. Fபகத்தBபூஹுமா Fபகானூ மினல் முஹ்லகீன்
23:48. ஆகவே இவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; (அதன் விளைவாய்) அவர்கள் அழிந்தோராயினர்.
23:49
23:49 وَلَـقَدْ اٰتَيْنَا مُوْسَى الْـكِتٰبَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْـكِتٰبَ வேதத்தை لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏ அவர்கள் நேர்வழி பெறுவதற்காக
23:49. வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப ல'அல்லஹும் யஹ்ததூன்
23:49. (தவிர) அவர்கள் நேர்வழி பெறுவதற்காக நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தையும் கொடுத்தோம்.
23:50
23:50 وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗۤ اٰيَةً وَّاٰوَيْنٰهُمَاۤ اِلٰى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِيْنٍ
وَجَعَلْنَا இன்னும் நாம் ஆக்கினோம் ابْنَ மகனையும் مَرْيَمَ மர்யமுடைய وَاُمَّهٗۤ அவருடைய தாயையும் اٰيَةً ஓர் அத்தாட்சியாக وَّاٰوَيْنٰهُمَاۤ இன்னும் அவ்விருவரையும் ஒதுங்க வைத்தோம் اِلٰى رَبْوَةٍ உயரமானதின் பக்கம் ذَاتِ உறுதியாக قَرَارٍ சமமான இடத்திற்கும் وَّمَعِيْنٍ‏ ஓடும் நீரூற்றுக்கும்
23:50. வ ஜ'அல்னBப் ன மர்யம வ உம்மஹூ ஆயதன்(ன்)வ் வ ஆவய்னாஹுமா இலா ரBப்வதின் தாதி கராரி(ன்)வ் வ ம'ஈன்
23:50. மேலும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம்; அன்றியும் அவ்விருவருக்கும், வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்.  
23:51
23:51 يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ؕ‏
يٰۤـاَيُّهَا الرُّسُلُ தூதர்களே كُلُوْا சாப்பிடுங்கள் مِنَ الطَّيِّبٰتِ நல்லவற்றிலிருந்து وَاعْمَلُوْا இன்னும் செய்யுங்கள் صَالِحًـا‌ ؕ நல்ல செயலை اِنِّىْ நிச்சயமாக நான் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை عَلِيْمٌ ؕ‏ நன்கறிந்தவன்
23:51. யா அய்யுஹர் ருஸுலு குலூ மினத் தய்யிBபாதி வஃமலூ ஸாலிஹன் இன்னீ Bபிமா தஃமலூன 'அலீம்
23:51. (நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
23:52
23:52 وَاِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّاَنَا رَبُّكُمْ فَاتَّقُوْنِ‏
وَاِنَّ நிச்சயமாக هٰذِهٖۤ இதுதான் اُمَّتُكُمْ உங்களது மார்க்கம் اُمَّةً மார்க்கம் وَّاحِدَةً ஒரே ஒரு وَّاَنَا நான்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் فَاتَّقُوْنِ‏ ஆகவே, என்னை அஞ்சிக் கொள்ளுங்கள்
23:52. வ இன்ன ஹாதிஹீ உம்மதுகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ அன ரBப்Bபுகும் Fபத்தகூன்
23:52. “இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
23:53
23:53 فَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا‌ ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏
فَتَقَطَّعُوْۤا அவர்கள் பிரித்துக் கொண்டனர் اَمْرَ காரியத்தை هُمْ தங்களது بَيْنَهُمْ தங்களுக்கு மத்தியில் زُبُرًا‌ ؕ பல வேதங்களாக كُلُّ ஒவ்வொரு حِزْبٍۢ பிரிவும் بِمَا لَدَيْهِمْ தங்களிடம் உள்ளதைக் கொண்டு فَرِحُوْنَ‏ பெருமைப்படுகின்றனர்
23:53. Fபதகத்த'ஊ அம்ரஹும் Bபய்னஹும் ZஜுBபுரா; குல்லு ஹிZஜ்Bபிம் Bபிமா லதய்ஹிம் Fபரிஹூன்
23:53. ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
23:54
23:54 فَذَرْهُمْ فِىْ غَمْرَتِهِمْ حَتّٰى حِيْنٍ‏
فَذَرْهُمْ ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக! فِىْ غَمْرَتِهِمْ அவர்களுடைய வழிகேட்டில் حَتّٰى வரை حِيْنٍ‏ காலம்
23:54. Fபதர்ஹும் Fபீ கம்ரதிஹிம் ஹத்தா ஹீன்
23:54. எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.
23:55
23:55 اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَۙ‏
اَيَحْسَبُوْنَ அவர்கள் எண்ணுகின்றனரா اَنَّمَا نُمِدُّ நிச்சயமாக எதை நாம் கொடுக்கிறோமோ هُمْ அவர்களுக்கு بِهٖ அதை مِنْ مَّالٍ செல்வத்திலிருந்தும் وَّبَنِيْنَۙ‏ ஆண் பிள்ளைகளிலிருந்தும்
23:55. அ-யஹ்ஸBபூன அன்ன்னமா னுமிதுஹும் Bபிஹீ மிம்மாலி(ன்)வ் வ Bபனீன்
23:55. அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?
23:56
23:56 نُسَارِعُ لَهُمْ فِى الْخَيْـرٰتِ‌ ؕ بَلْ لَّا يَشْعُرُوْنَ‏
نُسَارِعُ நாம் விரைகிறோம் لَهُمْ அவர்களுக்கு فِى الْخَيْـرٰتِ‌ ؕ நன்மைகளில் بَلْ மாறாக لَّا يَشْعُرُوْنَ‏ அவர்கள் உணர மாட்டார்கள்
23:56. னுஸாரி'உ லஹும் Fபில் கய்ராத்; Bபல் லா யஷ்'உரூன்
23:56. அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.
23:57
23:57 اِنَّ الَّذِيْنَ هُمْ مِّنْ خَشْيَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் مِّنْ خَشْيَةِ பயத்தால் رَبِّهِمْ தங்கள் இறைவனின் مُّشْفِقُوْنَۙ‏ அச்சம் கொண்டவர்கள்
23:57. இன்னல் லதீன ஹும் மின் கஷ்யதி ரBப்Bபிஹிம் முஷ்Fபிகூன்
23:57. நிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்-
23:58
23:58 وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் بِاٰيٰتِ வசனங்களை رَبِّهِمْ தங்கள் இறைவனின் يُؤْمِنُوْنَۙ‏ நம்பிக்கை கொள்பவர்கள்
23:58. வல்லதீன ஹும் Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் யு'மினூன்
23:58. இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்-
23:59
23:59 وَالَّذِيْنَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் بِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு لَا يُشْرِكُوْنَۙ‏ இணைவைக்காதவர்கள்
23:59. வல்லதீன ஹும் Bபி ரBப்Bபிஹிம் லா யுஷ்ரிகூன்
23:59. இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்-
23:60
23:60 وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّ قُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰى رَبِّهِمْ رٰجِعُوْنَ ۙ‏
وَالَّذِيْنَ இன்னும் அவர்கள் يُؤْتُوْنَ கொடுப்பார்கள் مَاۤ اٰتَوْا எதைக் கொடுத்தார்கள் وَّ قُلُوْبُهُمْ அவர்களுடைய உள்ளங்களோ وَجِلَةٌ பயந்தவையாக இருக்கும் اَنَّهُمْ நிச்சயம் தாங்கள் اِلٰى பக்கம் رَبِّهِمْ தங்கள் இறைவனின் رٰجِعُوْنَ ۙ‏ திரும்பக்கூடியவர்கள்
23:60. வல்லதீன யு'தூன மா ஆதவ் வ குலூBபுஹும் வஜிலதுன் அன்னஹும் இலா ரBப்Bபிஹிம் ராஜி'ஊன்
23:60. இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-
23:61
23:61 اُولٰٓٮِٕكَ يُسَارِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَهُمْ لَهَا سٰبِقُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் يُسَارِعُوْنَ விரைகின்றார்கள் فِىْ الْخَيْـرٰتِ நன்மைகளில் وَهُمْ இன்னும் அவர்கள் لَهَا அவற்றுக்கு سٰبِقُوْنَ‏ முந்தக் கூடியவர்கள்
23:61. உலா'இக யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ ஹும் லஹா ஸாBபிகூன்
23:61. இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.
23:62
23:62 وَلَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌ وَلَدَيْنَا كِتٰبٌ يَّـنْطِقُ بِالْحَـقِّ‌ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَلَا نُـكَلِّفُ நாம் சிரமம் தருவதில்லை نَفْسًا எந்த ஓர் ஆன்மாவுக்கும் اِلَّا தவிர وُسْعَهَا‌ அதன் வசதிக்கு உட்பட்டே وَلَدَيْنَا இன்னும் நம்மிடம் இருக்கின்றது كِتٰبٌ ஒரு புத்தகம் يَّـنْطِقُ பேசுகின்றது بِالْحَـقِّ‌ சத்தியத்தைக் கொண்டு وَهُمْ அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
23:62. வ லா னுகல்லிFபு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா வ லதய்னா கிதாBபு(ன்)ய் யன்திகு Bபில்ஹக்கி வ ஹும் ல யுள்லமூன்
23:62. நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
23:63
23:63 بَلْ قُلُوْبُهُمْ فِىْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ‏
بَلْ மாறாக قُلُوْبُهُمْ அவர்களது உள்ளங்கள் فِىْ غَمْرَةٍ அறியாமையில் مِّنْ هٰذَا இதை விட்டு وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு اَعْمَالٌ செயல்கள் مِّنْ دُوْنِ ذٰلِكَ வேறு உள்ளன هُمْ அவர்கள் لَهَا அதைத்தான் عٰمِلُوْنَ‏ செய்பவர்கள்
23:63. Bபல் குலூBபுஹும் Fபீ கம்ரதிம் மின் ஹாதா வ லஹும் அஃமாலும் மின் தூனி தாலிக ஹும் லஹா 'ஆமிலூன்
23:63. ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன; இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.
23:64
23:64 حَتّٰۤى اِذَاۤ اَخَذْنَا مُتْـرَفِيْهِمْ بِالْعَذَابِ اِذَا هُمْ يَجْــٴَــرُوْنَؕ‏
حَتّٰۤى இறுதியாக اِذَاۤ اَخَذْنَا நாம் பிடித்தால் مُتْـرَفِيْهِمْ அவர்களின் சுகவாசிகளை بِالْعَذَابِ வேதனையைக் கொண்டு اِذَا هُمْ அப்போது அவர்கள் يَجْــٴَــرُوْنَؕ‏ கதறுகின்றனர்
23:64. ஹத்தா இதா அகத்னா முத்ரFபீஹிம் Bபில்'அதாBபி இதா ஹும் யஜ்'அரூன்
23:64. (இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.
23:65
23:65 لَا تَجْــٴَــرُوا الْيَوْمَ‌ اِنَّكُمْ مِّنَّا لَا تُنْصَرُوْنَ‏
لَا تَجْــٴَــرُوا கதறாதீர்கள் الْيَوْمَ‌ இன்றைய தினம் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مِّنَّا நம்மிடமிருந்து لَا تُنْصَرُوْنَ‏ பாதுகாக்கப்பட மாட்டீர்கள்
23:65. லா தஜ்'அருல் யவ்ம இன்னகும் மின்னா லா துன்ஸரூன்
23:65. “இன்று நீங்கள் உதவிக்காக அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
23:66
23:66 قَدْ كَانَتْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَـكُنْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ تَـنْكِصُوْنَۙ‏
قَدْ திட்டமாக كَانَتْ இருந்தன اٰيٰتِىْ எனது வசனங்கள் تُتْلٰى ஓதப்பட்டும் عَلَيْكُمْ உங்கள் மீது فَـكُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் عَلٰٓى மீது اَعْقَابِكُمْ உங்கள் குதிங்கால்கள் تَـنْكِصُوْنَۙ‏ பின்னோக்கி செல்பவர்களாக
23:66. கத் கானத் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபகுன்தும் 'அலா அஃகாBபிகும் தன்கிஸூன்
23:66. என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன; ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.
23:67
23:67 مُسْتَكْبِرِيْنَ ‌ۖ  بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ‏
مُسْتَكْبِرِيْنَ பெருமை அடித்தவர்களாக ۖ  بِهٖ அதைக் கொண்டு سٰمِرًا இரவில் நிம்மதியாக இதைப் பேசியவர்களாக تَهْجُرُوْنَ‏ வீணானதைக் கூறுகின்றனர்
23:67. முஸ்தக்Bபிரீன Bபிஹீ ஸாமிரன் தஹ்ஜுரூன்
23:67. ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).
23:68
23:68 اَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ يَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِيْنَ‏
اَفَلَمْ يَدَّبَّرُوا இவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா الْقَوْلَ இந்த பேச்சை اَمْ அல்லது جَآءَ வந்ததா هُمْ இவர்களிடம் مَّا لَمْ يَاْتِ எது/வரவில்லை اٰبَآءَ மூதாதைகளுக்கு هُمُ இவர்களது الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களான
23:68. அFபலம் யத்தBப்Bபர்ருல் கவ்ல அம் ஜா'அஹும் மா லம் யாதி ஆBபா'அஹுமுல் அவ்வலீன்
23:68. (குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது தம் முன்னவர்களான மூதாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா?
23:69
23:69 اَمْ لَمْ يَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ‏
اَمْ அல்லது لَمْ يَعْرِفُوْا அறியவில்லையா رَسُوْلَهُمْ தங்களது தூதரை فَهُمْ ஆகவே, அவர்கள் لَهٗ அவரை مُنْكِرُوْنَ‏ மறுக்கின்றனரா
23:69. அம் லம் யஃரிFபூ ரஸூலஹும் Fபஹும் லஹூ முன்கிரூன்
23:69. அல்லது அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா?
23:70
23:70 اَمْ يَـقُوْلُوْنَ بِهٖ جِنَّةٌ  ؕ بَلْ جَآءَهُمْ بِالْحَـقِّ وَاَكْثَرُهُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ‏
اَمْ அல்லது يَـقُوْلُوْنَ இவர்கள் கூறுகின்றனரா بِهٖ அவருக்கு جِنَّةٌ  ؕ பைத்தியம் بَلْ மாறாக جَآءَ வந்துள்ளார் هُمْ அவர்களிடம் بِالْحَـقِّ உண்மையைக் கொண்டு وَاَكْثَرُ இன்னும் அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لِلْحَقِّ உண்மையை كٰرِهُوْنَ‏ வெறுக்கின்றார்கள்
23:70. அம் யகூலூன Bபிஹீ ஜின்ன்னஹ்; Bபல் ஜா'அஹும் Bபில்ஹக்கி வ அக்தருஹும் லில் ஹக்கி காரிஹூன்
23:70. அல்லது, “அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை; அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.
23:71
23:71 وَلَوِ اتَّبَعَ الْحَـقُّ اَهْوَآءَهُمْ لَفَسَدَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ‌ؕ بَلْ اَتَيْنٰهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُّعْرِضُوْنَؕ‏
وَلَوِ اتَّبَعَ பின்பற்றினால் الْحَـقُّ உண்மையாளன் اَهْوَآءَ விருப்பங்களை هُمْ அவர்களது لَفَسَدَتِ நாசமடைந்து இருப்பார்கள் السَّمٰوٰتُ வானங்களும் وَالْاَرْضُ இன்னும் பூமியும் وَمَنْ فِيْهِنَّ‌ؕ இன்னும் அவற்றில் உள்ளவர்களும் بَلْ اَتَيْنٰهُمْ மாறாக அவர்களுக்குக் கொடுத்தோம் بِذِكْرِهِمْ அவர்களுக்குரிய விளக்கத்தை فَهُمْ ஆனால் அவர்கள் عَنْ ذِكْرِ கூறப்பட்ட விளக்கத்தை هِمْ தங்களுக்கு مُّعْرِضُوْنَؕ‏ புறக்கணிக்கக் கூடியவர்கள்
23:71. வ லவித் தBப'அல் ஹக்கு அஹ்வா'அஹும் லFபஸததிஸ் ஸமாவாது வல் அர்ளு வ மன் Fபீஹின்ன்ன்; Bபல் அதய்னாஹும் Bபிதிக்ரிஹிம் Fபஹும் 'அன் திக்ரிஹிம் முஃரிளூன்
23:71. இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை - குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை - குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.
23:72
23:72 اَمْ تَسْـٴَــلُهُمْ خَرْجًا فَخَرٰجُ رَبِّكَ خَيْرٌ‌ ‌ۖ  وَّهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏
اَمْ அல்லது تَسْـٴَــلُهُمْ அவர்களிடம் நீர் எதையும் கேட்கிறீரா خَرْجًا கூலி فَخَرٰجُ எனவே கூலிதான் رَبِّكَ உமது இறைவனின் خَيْرٌ‌ ۖ மிகச் சிறந்தது  وَّهُوَ அவன் خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰزِقِيْنَ‏ கொடை வழங்குபவர்களில்
23:72. அம் தஸ்'அலுஹும் கர்ஜன் Fபகராஜு ரBப்Bபிக கய்ரு(ன்)வ் வ ஹுவ கய்ருர் ராZஜிகீன்
23:72. அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது - இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்.
23:73
23:73 وَاِنَّكَ لَـتَدْعُوْهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَـتَدْعُوْ அழைக்கிறீர் هُمْ அவர்களை اِلٰى பக்கம் صِرَاطٍ பாதையின் مُّسْتَقِيْمٍ‏ நேரான
23:73. வ இன்னக லதத்'ஊஹும் இலா ஸிராதிம் முஸ்தகீம்
23:73. மேலும், நிச்சயமாக நீர் அவர்களை - ஸிராத்தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர்.
23:74
23:74 وَاِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ عَنِ الصِّرَاطِ لَـنٰكِبُوْنَ‏
وَاِنَّ நிச்சயமாக الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளாதவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை عَنِ الصِّرَاطِ பாதையை விட்டு لَـنٰكِبُوْنَ‏ விலகக்கூடியவர்கள்தான்
23:74. வ இன்ன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி 'அனிஸ் ஸிராதி லனாகிBபூன்
23:74. இன்னும் எவர் மறுமையை நம்பவில்லையோ, நிச்சயமாக அவர் அந்த (நேர்) வழியை விட்டு விலகியவர் ஆவார்.
23:75
23:75 وَلَوْ رَحِمْنٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِّنْ ضُرٍّ لَّـلَجُّوْا فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏
وَلَوْ رَحِمْنٰهُمْ அவர்கள் மீது நாம் கருணை புரிந்தால் وَكَشَفْنَا இன்னும் நாம் நீக்கி விட்டால் مَا بِهِمْ அவர்களுக்குள்ள مِّنْ ضُرٍّ தீங்கை لَّـلَجُّوْا பிடிவாதம் பிடித்திருப்பார்கள் فِىْ طُغْيَانِهِمْ தங்களது வரம்பு மீறுவதில்தான் يَعْمَهُوْنَ‏ அவர்கள் தடுமாறியவர்களாக
23:75. வ லவ் ரஹிம்னாஹும் வ கஷFப்னா மா Bபிஹிம் மின் ளுர்ரில் லலஜ்ஜூ Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
23:75. ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர்.
23:76
23:76 وَلَقَدْ اَخَذْنٰهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوْا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَخَذْنٰهُمْ அவர்களை நாம் பிடித்தோம் بِالْعَذَابِ வேதனையைக் கொண்டு فَمَا اسْتَكَانُوْا அவர்கள் பணியவில்லை لِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு وَمَا يَتَضَرَّعُوْنَ‏ இன்னும் மன்றாடவும் இல்லை
23:76. வ லகத் அகத்னாஹும் Bபில்'அதாBபி Fபமஸ்தகானூ லி ரBப்Bபிஹிம் வமா யதளர்ர'ஊன்
23:76. திடனாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்திருக்கிறோம்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணியவுமில்லை; தாழ்ந்து பிரார்த்திக்கவுமில்லை.
23:77
23:77 حَتّٰٓى اِذَا فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا ذَا عَذَابٍ شَدِيْدٍ اِذَا هُمْ فِيْهِ مُبْلِسُوْنَ
حَتّٰٓى இறுதியாக اِذَا فَتَحْنَا நாம் திறந்தால் عَلَيْهِمْ அவர்கள் மீது بَابًا ஒரு கதவை ذَا عَذَابٍ வேதனையுடைய شَدِيْدٍ கடுமையான اِذَا هُمْ அப்போது அவர்கள் فِيْهِ அதில் مُبْلِسُوْنَ‏ கவலைப்பட்டவர்களாக
23:77. ஹத்தா இதா Fபதஹ்னா 'அலய்ஹிம் BபாBபன் தா 'அதாBபின் ஷதீதின் இதா ஹும் Fபீஹி முBப்லிஸூன்
23:77. எதுவரையிலெனின், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விடுவோமானால், அவர்கள் அதனால் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.  
23:78
23:78 وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ‌  ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏
وَهُوَ الَّذِىْۤ அவன்தான் اَنْشَاَ لَـكُمُ உங்களுக்கு ஏற்படுத்தினான் السَّمْعَ செவியையும் وَالْاَبْصَارَ பார்வையையும் وَالْاَفْـِٕدَةَ‌  ؕ உள்ளங்களையும் قَلِيْلًا குறைவாகவே مَّا تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றிசெலுத்துகிறீர்கள்
23:78. வ ஹுவல் லதீ அன்ஷ அ-லகுமுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வல் அFப்'இதஹ்; கலீலம் மா தஷ்குரூன்
23:78. இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.
23:79
23:79 وَهُوَ الَّذِىْ ذَرَاَكُمْ فِى الْاَرْضِ وَاِلَيْهِ تُحْشَرُوْنَ‏
وَهُوَ الَّذِىْ அவன்தான் ذَرَاَكُمْ உங்களை படைத்தான் فِى الْاَرْضِ பூமியில் وَاِلَيْهِ இன்னும் அவனிடம்தான் تُحْشَرُوْنَ‏ நீங்கள் எழுப்பப்படுவீர்கள்
23:79. வ ஹுவல் லதீ தர அகும் Fபில் அர்ளி வ இலய்ஹி துஹ்ஷரூன்
23:79. மேலும், அவன்தான் உங்களை இப்பூமியில் பல்கிப் பெருகச் செய்தான்; இன்னும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
23:80
23:80 وَهُوَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُ وَلَـهُ اخْتِلَافُ الَّيْلِ وَالنَّهَارِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
وَهُوَ الَّذِىْ இன்னும் அவன்தான் يُحْىٖ உயிர் கொடுக்கின்றான் وَيُمِيْتُ இன்னும் மரணத்தை தருகிறான் وَلَـهُ அவனுடையதுதான் اخْتِلَافُ மாறிமாறி வருவதும் الَّيْلِ இரவு وَالنَّهَارِ‌ؕ இன்னும் பகல் اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
23:80. வ ஹுவல் லதீ யுஹ்யீ வ யுமீது வ லஹுக் திலாFபுல் லய்லி வன்னஹார்; அFபலா தஃகிலூன்
23:80. அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
23:81
23:81 بَلْ قَالُوْا مِثْلَ مَا قَالَ الْاَوَّلُوْنَ‏
بَلْ قَالُوْا மாறாக கூறினர் مِثْلَ போன்றே مَا قَالَ கூறியது الْاَوَّلُوْنَ‏ முன்னோர்கள்
23:81. Bபல் காலூ மித்ல மா காலல் அவ்வலூன்
23:81. மாறாக, முன்னிருந்தவர்கள் கூறியதைப் போலவே, இவர்களும் கூறுகிறார்கள்.
23:82
23:82 قَالُوْۤا ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّ عِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ‏
قَالُوْۤا கூறினர் ءَاِذَا مِتْنَا நாங்கள் இறந்து விட்டால் ? وَكُنَّا இன்னும் மாறிவிட்டால் تُرَابًا மண்ணாகவும் وَّ عِظَامًا எலும்புகளாகவும் ءَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَمَبْعُوْثُوْنَ‏ எழுப்பப்படுவோமா
23:82. காலூ 'அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ-இன்னா லமBப் 'ஊதூன்
23:82. “நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள்.
23:83
23:83 لَـقَدْ وُعِدْنَا نَحْنُ وَاٰبَآؤُنَا هٰذَا مِنْ قَبْلُ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
لَـقَدْ திட்டவட்டமாக وُعِدْنَا வாக்களிக்கப்பட்டோம் نَحْنُ நாங்களும் وَاٰبَآؤُنَا எங்கள் மூதாதைகளும் هٰذَا இதை مِنْ قَبْلُ இதற்கு முன்னர் اِنْ هٰذَاۤ இது வேறில்லை اِلَّاۤ தவிர اَسَاطِيْرُ கட்டுக் கதைகளே الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களின்
23:83. லகத் வு'இத்னா னஹ்னு வ ஆBபா'உனா ஹாதா மின் கBப்லு இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
23:83. “மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் - இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை” (என்றும் கூறுகின்றனர்).
23:84
23:84 قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
قُلْ கூறுவீராக لِّمَنِ எவனுக்கு சொந்தம் الْاَرْضُ பூமியும் وَمَنْ فِيْهَاۤ இன்னும் அதில் உள்ளவர்களும் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக
23:84. குல் லிமனில் அர்ளு வ மன் Fபீஹா இன் குன்தும் தஃலமூன்
23:84. “நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக!
23:85
23:85 سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ اَفَلَا تَذَكَّرُوْنَ‏
سَيَقُوْلُوْنَ கூறுவார்கள் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்விற்கே قُلْ கூறுவீராக اَفَلَا تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா
23:85. ஸ-யகூலூன லில்லாஹ்; குல் அFபலா ததக்க்கரூன்
23:85. “அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
23:86
23:86 قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ‏
قُلْ கூறுவீராக مَنْ யார் رَّبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்களின் السَّبْعِ ஏழு وَرَبُّ இன்னும் இறைவன் யார் الْعَرْشِ அர்ஷுடைய الْعَظِيْمِ‏ மகத்தான
23:86. குல் மர் ரBப்Bபுஸ் ஸமாவாதிஸ் ஸBப்'இ வ ரBப்Bபுல் 'அர்ஷில் 'அளீம்
23:86. “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.
23:87
23:87 سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏
سَيَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்விற்கே قُلْ நீர் கூறுவீராக اَفَلَا تَتَّقُوْنَ‏ ஆகவே நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?
23:87. ஸ யகூலூன லில்லாஹ்; குல் அFபலா தத்தகூன்
23:87. “அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
23:88
23:88 قُلْ مَنْۢ بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَىْءٍ وَّهُوَ يُجِيْرُ وَلَا يُجَارُ عَلَيْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
قُلْ கூறுவீராக مَنْۢ யாருடைய بِيَدِهٖ அவனுடைய கரத்தில் இருக்கிறது مَلَكُوْتُ பேராட்சி كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் وَّهُوَ அவன்தான் يُجِيْرُ பாதுகாப்பு அளிக்கின்றான் وَلَا يُجَارُ இன்னும் பாதுகாப்பு அளிக்கப்படாது عَلَيْهِ அவனுக்கு எதிராக اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக
23:88. குல் மம் Bபி யதிஹீ மலகூது குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுவ யுஜீரு வலா யுஜாரு 'அலய்ஹி இன் குன்தும் தஃலமூன்
23:88. “எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.
23:89
23:89 سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ‏
سَيَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்விற்கு உரியதே قُلْ நீர் கூறுவீராக فَاَنّٰى ஆக, எவ்வாறு تُسْحَرُوْنَ‏ திருப்பப்படுகிறீர்கள்
23:89. ஸ யகூலூன லில்லாஹ்; குல் Fப அன்னா துஸ் ஹரூன்
23:89. அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.
23:90
23:90 بَلْ اَتَيْنٰهُمْ بِالْحَـقِّ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ‏
بَلْ மாறாக اَتَيْنٰهُمْ நாம் அவர்களுக்கு கொண்டு வந்துள்ளோம் بِالْحَـقِّ உண்மையை وَاِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் لَكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்தான்
23:90. Bபல் அதய்னாஹும் Bபில் ஹக்கி வ இன்னஹும் லகாதிBபூன்
23:90. எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம்; ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.
23:91
23:91 مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ‌ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍۢ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ‏
مَا اتَّخَذَ ஏற்படுத்திக் கொள்ளவில்லை اللّٰهُ அல்லாஹ் مِنْ وَّلَدٍ எந்த ஒரு குழந்தையையும் وَّمَا كَانَ இருக்கவில்லை مَعَهٗ அவனுடன் مِنْ اِلٰهٍ‌ எந்தக் கடவுளும் اِذًا அப்படி இருந்திருந்தால் لَّذَهَبَ கொண்டு சென்று விடுவார்கள் كُلُّ ஒவ்வொரு اِلٰهٍۢ கடவுளும் بِمَا خَلَقَ இன்னும் அவர்களில் சிலர் ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள் وَلَعَلَا بَعْضُهُمْ தான் படைத்ததை عَلٰى بَعْضٍ‌ؕ சிலர் மீது سُبْحٰنَ மகா பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் عَمَّا يَصِفُوْنَۙ‏ அவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு
23:91. மத் தகதல் லாஹு மி(ன்)வ் வலதி(ன்)வ் வமா கான ம'அஹூ மின் இலாஹ்; இதல் லதஹBப குல்லு இலாஹிம் Bபிமா கலக வ ல'அலா Bபஃளுஹும் 'அலா Bபஃள்; ஸுBப்ஹான்னல் லாஹி 'அம்மா யஸிFபூன்
23:91. அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
23:92
23:92 عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
عٰلِمِ நன்கறிந்தவன் الْغَيْبِ மறைவையும் وَالشَّهَادَةِ இன்னும் வெளிப்படையையும் فَتَعٰلٰى அவன் மிக உயர்ந்தவன் عَمَّا يُشْرِكُوْنَ‏ அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
23:92. 'ஆலிமில் கய்Bபி வஷ் ஷஹ்ஹாததி Fபத'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
23:92. அவன் மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிபவன்; எனவே அவர்கள் (அவனுக்கு) இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.  
23:93
23:93 قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ‏
قُلْ கூறுவீராக رَّبِّ என் இறைவா اِمَّا تُرِيَنِّىْ நீ எனக்கு காண்பித்தால் مَا يُوْعَدُوْنَۙ‏ அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை
23:93. குர் ரBப்Bபி இம்ம்மா துரியன்னீ மா யூ'அதூன்
23:93. (நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்:
23:94
23:94 رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
رَبِّ என் இறைவா فَلَا تَجْعَلْنِىْ ஆகவே, என்னையும் நீ ஆக்கிவிடாதே فِى الْقَوْمِ மக்களில் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார
23:94. ரBப்Bபி Fபலா தஜ்'அல்னீ Fபில் கவ்மிள் ளாலிமீன்
23:94. “என் இறைவனே! அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக” என்று.
23:95
23:95 وَاِنَّا عَلٰٓى اَنْ نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقٰدِرُوْنَ‏
وَاِنَّا நிச்சயமாக عَلٰٓى اَنْ نُّرِيَكَ நாம் உமக்கு காண்பிப்பதற்கு مَا نَعِدُ நாம் வாக்களிப்பதை هُمْ அவர்களுக்கு لَقٰدِرُوْنَ‏ ஆற்றலுடையவர்கள்தான்
23:95. வ இன்னா 'அலா அன் னுரியக மா ன'இதுஹும் லகாதிரூன்
23:95. இன்னும், நிச்சயமாக, அவர்களுக்கு வாக்களிப்பதை (வேதனையை) உமக்குக் காண்பிக்க ஆற்றலுடையோம் நாம்.
23:96
23:96 اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ السَّيِّئَةَ‌ ؕ نَحْنُ اَعْلَمُ بِمَا يَصِفُوْنَ‏
اِدْفَعْ தடுப்பீராக بِالَّتِىْ கொண்டு هِىَ اَحْسَنُ மிக அழகிய (குணத்)தை السَّيِّئَةَ‌ ؕ கெட்டதை نَحْنُ நாம் اَعْلَمُ மிக அறிந்தவர்கள் بِمَا يَصِفُوْنَ‏ அவர்கள் வர்ணிக்கின்றவற்றை
23:96. இத்Fபஃ Bபில்லதீ ஹிய அஹ்ஸனுஸ் ஸய்யி'அஹ்; னஹ்னு அஃலமு Bபிமா யஸிFபூன்
23:96. (நபியே!) நீர் அழகிய நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அவர்கள் வர்ணிப்பதை நாம் நன்கறிவோம்.
23:97
23:97 وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏
وَقُلْ கூறுவீராக رَّبِّ என் இறைவா اَعُوْذُ بِكَ உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் مِنْ هَمَزٰتِ நெறிப்பதை விட்டும் الشَّيٰطِيْنِۙ‏ ஷைத்தான்கள்
23:97. வ குர் ரBப்Bபி அ'ஊது Bபிக மின் ஹமZஜாதிஷ் ஷயாதீன்
23:97. இன்னும்: நீர் கூறுவீராக! “என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” (என்றும்)
23:98
23:98 وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏
وَاَعُوْذُ بِكَ رَبِّ உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் / என் இறைவா! اَنْ يَّحْضُرُوْنِ‏ அவர்கள் என்னிடம் வருவதை விட்டும்
23:98. வ அ'ஊது Bபிக ரBப்Bபி அய்-யஹ்ளுரூன்
23:98. “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)!
23:99
23:99 حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏
حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءَ வந்தால் اَحَدَ ஒருவருக்கு هُمُ அவர்களில் الْمَوْتُ மரணம் قَالَ அவன் கூறுகிறான் رَبِّ என் இறைவா! ارْجِعُوْنِۙ‏ என்னை திருப்பு
23:99. ஹத்தா இதா ஜா'அ அஹத ஹுமுல் மவ்து கால ரBப்Bபிர் ஜி'ஊன்
23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
23:100
23:100 لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏
لَعَلِّىْۤ اَعْمَلُ நான் செய்வதற்காக صَالِحًـا நல்ல அமல்களை فِيْمَا تَرَكْتُ‌ؕ நான் விட்டுவிட்டவற்றிலிருந்து كَلَّا‌ ؕ ஒரு போதும் அவ்வாறு அல்ல اِنَّهَا நிச்சயமாக இது كَلِمَةٌ ஒரு பேச்சாகும் هُوَ அவன் قَآٮِٕلُهَا‌ؕ அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான் وَمِنْ இருக்கிறது وَّرَآٮِٕهِمْ அவர்களுக்கு முன் بَرْزَخٌ ஒரு தடை اِلٰى يَوْمِ நாள் வரை يُبْعَثُوْنَ‏ எழுப்பப்படுகின்ற
23:100. ல'அல்லீ அஃமலு ஸாலிஹன் Fபீமா தரக்து கல்லா; இன்னஹா கலிமதுன் ஹுவ கா'இலுஹா வ மி(ன்)வ் வரா'இஹிம் Bபர்Zஜகுன் இலா யவ்மி யுBப்'அதூன்
23:100. “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
23:101
23:101 فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ فَلَاۤ اَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَٮِٕذٍ وَّلَا يَتَسَآءَلُوْنَ‏
فَاِذَا نُفِخَ ஊதப்பட்டால் فِى الصُّوْرِ சூரில் فَلَاۤ اَنْسَابَ உறவுகள் அறவே இருக்காது بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் يَوْمَٮِٕذٍ அந்நாளில் وَّلَا يَتَسَآءَلُوْنَ‏ அவர்கள் தங்களுக்குள் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்
23:101. Fப இதா னுFபிக Fபிஸ் ஸூரி Fபலா அன்ஸாBப Bபய்னஹும் யவ்ம'இதி(ன்)வ் வலா யதஸா'அலூன்
23:101. எனவே ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
23:102
23:102 فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
فَمَنْ எனவே, எவர் ثَقُلَتْ கனத்தனவோ مَوَازِيْنُهٗ அவரின் எடைகள் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‏ வெற்றி பெற்றவர்கள்
23:102. Fபமன் தகுலத் மவாZஜீ னுஹூ Fப உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
23:102. எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
23:103
23:103 وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِىْ جَهَـنَّمَ خٰلِدُوْنَ‌ ۚ‏
وَمَنْ எவர் خَفَّتْ இலகுவாகி விட்டனவோ مَوَازِيْنُهٗ அவரின் எடைகள் فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ அவர்கள்தான் خَسِرُوْۤا நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் اَنْفُسَهُمْ தங்களுக்குத் தாமே فِىْ جَهَـنَّمَ நரகில் خٰلِدُوْنَ‌ ۚ‏ அவர்கள் நிரந்தரமானவர்கள்
23:103. வ மன் கFப்Fபத் மவா Zஜீனுஹூ Fப உலா'இகல் லதீன கஸிரூ 'அன்Fபுஸஹும் Fபீ ஜஹன்னம காலிதூன்
23:103. ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.
23:104
23:104 تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كٰلِحُوْنَ‏
تَلْفَحُ பொசுக்கிவிடும் وُجُوْهَهُمُ அவர்களது முகத்தை النَّارُ நெருப்பு وَهُمْ இன்னும் அவர்கள் فِيْهَا அதில் كٰلِحُوْنَ‏ உதடுகள் பொசுங்கி பற்கள் வெளிப்பட்டவர்களாக இருப்பார்கள்
23:104. தல்Fபஹு வுஜூஹஹுமுன் னாரு வ ஹும் Fபீஹா காலிஹூன்
23:104. (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
23:105
23:105 اَلَمْ تَكُنْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏
اَلَمْ تَكُنْ இருந்ததல்லவா اٰيٰتِىْ எனது வசனங்கள் تُتْلٰى ஓதப்படுகின்றன عَلَيْكُمْ உங்கள் மீது فَكُنْتُمْ ஆனால், நீங்கள் இருந்தீர்கள் بِهَا அவற்றை تُكَذِّبُوْنَ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
23:105. அலம் தகுன் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபகுன்தும் Bபிஹா துகத்திBபூன்
23:105. “என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்” (என்று கூறப்படும்)
23:106
23:106 قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா غَلَبَتْ மிகைத்து விட்டது عَلَيْنَا எங்களை شِقْوَتُنَا எனவே துர்பாக்கியம் وَكُنَّا நாங்கள் இருந்தோம் قَوْمًا மக்களாக ضَآلِّيْنَ‏ வழிகெட்டவர்கள்
23:106. காலூ ரBப்Bபனா கலBபத் 'அலய்னா ஷிக்வதுனா வ குன்னா கவ்மன் ளால்லீன்
23:106. “எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது; நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
23:107
23:107 رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْهَا فَاِنْ عُدْنَا فَاِنَّا ظٰلِمُوْنَ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اَخْرِجْنَا எங்களை வெளியேற்று مِنْهَا அதிலிருந்து فَاِنْ عُدْنَا திரும்பச் சென்றால் فَاِنَّا நிச்சயமாக நாங்கள் ظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்தான்
23:107. ரBப்Bபனா அக்ரிஜ்னா மின்ஹா Fப இன் 'உத்னா Fப இன்னா ளாலிமூன்
23:107. “எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக! திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” (என்றும் கூறுவர்.)
23:108
23:108 قَالَ اخْسَــٴُــوْا فِيْهَا وَلَا تُكَلِّمُوْنِ‏
قَالَ அவன் கூறுவான் اخْسَــٴُــوْا நீங்கள் இழிவுடன் தங்கி விடுங்கள் فِيْهَا அதில் وَلَا تُكَلِّمُوْنِ‏ என்னிடம்பேசாதீர்கள்
23:108. காலக் ஸ'ஊ Fபீஹா வலா துகல்லிமூன்
23:108. (அதற்கவன்) “அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான்.
23:109
23:109 اِنَّهٗ كَانَ فَرِيْقٌ مِّنْ عِبَادِىْ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‌‌ۖ‌ۚ‏
اِنَّهٗ நிச்சயமாக كَانَ இருந்தார்(கள்) فَرِيْقٌ ஒரு கூட்டம் مِّنْ عِبَادِىْ என் அடியார்களில் يَقُوْلُوْنَ கூறுபவர்களாக رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் فَاغْفِرْ ஆகவே மன்னித்து விடு لَـنَا எங்களை وَارْحَمْنَا எங்கள் மீது கருணை புரி وَاَنْتَ இன்னும் நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰحِمِيْنَ‌ۖ‌ۚ‏ கருணை புரிபவர்களில்
23:109. இன்னஹூ கான Fபரீகும் மின் 'இBபாதீ யகூலூன ரBப்Bபனா ஆமன்னா Fபக்Fபிர் லனா வர்ஹம்னா வ அன்த கய்ருர் ராஹிமீன்
23:109. நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.
23:110
23:110 فَاتَّخَذْتُمُوْهُمْ سِخْرِيًّا حَتّٰٓى اَنْسَوْكُمْ ذِكْرِىْ وَكُنْتُمْ مِّنْهُمْ تَضْحَكُوْنَ‏
فَاتَّخَذْتُمُوْ ஆனால் எடுத்துக்கொண்டீர்கள் هُمْ அவர்களை سِخْرِيًّا பரிகாசமாக حَتّٰٓى இறுதியாக اَنْسَوْ அவர்கள் மறக்க வைத்துவிட்டார்கள் كُمْ உங்களை ذِكْرِىْ என் நினைவை وَكُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் مِّنْهُمْ அவர்களைப் பார்த்து تَضْحَكُوْنَ‏ சிரிக்கின்றீர்கள்
23:110. Fபத்தகத்துமூஹும் ஸிக்ரிய்யன் ஹத்தா அன்ஸவ்கும் திக்ரீ வ குன்தும் மின்ஹும் தள்ஹகூன்
23:110. அப்போது நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டீர்கள், எது வரையெனின் என் நினைவே உங்களுக்கு மறக்கலாயிற்று; இன்னும் அவர்களைப் பற்றி நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டும் இருந்தீர்கள்.
23:111
23:111 اِنِّىْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ اَنَّهُمْ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏
اِنِّىْ நிச்சயமாக நான் جَزَيْتُهُمُ அவர்களுக்கு கூலியாகக் கொடுத்தேன் الْيَوْمَ இன்றைய தினம் بِمَا صَبَرُوْۤا ۙ அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் اَنَّهُمْ هُمُ நிச்சயமாக அவர்கள்தான் الْفَآٮِٕزُوْنَ‏ வெற்றியாளர்கள்
23:111. இன்னீ ஜZஜய்துஹுமுல் யவ்ம Bபிமா ஸBபரூ அன்னஹும் ஹுமுல் Fபா'இZஜூன்
23:111. நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!”
23:112
23:112 قٰلَ كَمْ لَبِثْتُمْ فِى الْاَرْضِ عَدَدَ سِنِيْنَ‏
قٰلَ கூறுவான் كَمْ எத்தனை لَبِثْتُمْ தங்கி இருந்தீர்கள் فِى الْاَرْضِ பூமியில் عَدَدَ பல سِنِيْنَ‏ ஆண்டுகள்
23:112. கால கம் லBபித்தும் Fபில் அர்ளி 'அதத ஸினீன்
23:112. “ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?” என்று கேட்பான்.
23:113
23:113 قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ فَسْـٴَــلِ الْعَآدِّيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் لَبِثْنَا தங்கினோம் يَوْمًا ஒரு நாள் اَوْ அல்லது بَعْضَ يَوْمٍ பகுதி நாள் فَسْـٴَــلِ நீ கேட்பாயாக الْعَآدِّيْنَ‏ எண்ணக்கூடியவர்களிடம்
23:113. காலூ லBபித்னா யவ்மன் அவ் Bபஃள யவ்மின் Fபஸ்'அலில் 'ஆத்தீன்
23:113. “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள்.
23:114
23:114 قٰلَ اِنْ لَّبِثْـتُمْ اِلَّا قَلِيْلًا لَّوْ اَنَّكُمْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
قٰلَ அவன் கூறுவான் اِنْ لَّبِثْـتُمْ நீங்கள் தங்கவில்லை اِلَّا தவிர قَلِيْلًا குறைவாகவே لَّوْ اَنَّكُمْ வேண்டுமே كُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் تَعْلَمُوْنَ‏ அறிகின்றீர்கள்
23:114. கால இல் லBபித்தும் இல்லா கலீலல் லவ் அன்னகும் குன்தும் தஃலமூன்
23:114. “ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!” என்று (இறைவன்) கூறுவான்.
23:115
23:115 اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏
اَفَحَسِبْتُمْ எண்ணிக் கொண்டீர்களா اَنَّمَا خَلَقْنٰكُمْ நாம் உங்களைப் படைத்ததெல்லாம் عَبَثًا வீணாகத்தான் وَّاَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِلَيْنَا நம்மிடம் لَا تُرْجَعُوْنَ‏ திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள்
23:115. அFபஹஸிBப்தும் அன்னமா கலக்னாகும் 'அBபத(ன்)வ் வ அன்னகும் இலய்னா லா துர்ஜ'ஊன்
23:115. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.)
23:116
23:116 فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ رَبُّ الْعَرْشِ الْـكَرِيْمِ‏
فَتَعٰلَى எனவே மிக உயர்ந்தவன் اللّٰهُ அல்லாஹ் الْمَلِكُ அரசனாகிய الْحَـقُّ‌ ۚ உண்மையாளனாகிய لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரிய இறைவன் اِلَّا தவிர هُوَ‌ۚ அவனை رَبُّ அதிபதி الْعَرْشِ அர்ஷுடைய الْـكَرِيْمِ‏ கண்ணியமிக்க
23:116. Fபத'ஆலல் லாஹுல் மலிகுல் ஹக்க்; லா இலாஹ இல்லா ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் கரீம்
23:116. ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!
23:117
23:117 وَمَنْ يَّدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۙ لَا بُرْهَانَ لَهٗ بِهٖۙ فَاِنَّمَا حِسَابُهٗ عِنْدَ رَبِّهٖؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الْـكٰفِرُوْنَ‏
وَمَنْ யார் يَّدْعُ அழைப்பாரோ مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَۙ வேறு لَا بُرْهَانَ அறவே ஆதாரம் இல்லாமல் இருக்க لَهٗ அதற்கு بِهٖۙ அவரிடம் فَاِنَّمَا حِسَابُهٗ அவருடைய விசாரணையெல்லாம் عِنْدَ رَبِّهٖؕ அவரது இறைவனிடம்தான் اِنَّهٗ நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்கள் الْـكٰفِرُوْنَ‏ நிராகரிப்பாளர்கள்
23:117. வ மய் யத்'உ ம'அல்லாஹி இலாஹன் ஆகர லா Bபுர்ஹான லஹூ Bபிஹீ Fப இன்ன மா ஹிஸாBபுஹூ 'இன்த ரBப்Bபிஹ்; இன்னஹூ லா யுFப்லிஹுல் காFபிரூன்
23:117. மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை; அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது; நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
23:118
23:118 وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ
وَقُلْ கூறுவீராக رَّبِّ என் இறைவா اغْفِرْ மன்னிப்பாயாக وَارْحَمْ இன்னும் கருணைபுரிவாயாக وَاَنْتَ நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰحِمِيْنَ‏ கருணை புரிபவர்களில்
23:118. வ குல் ரBப்Bபிக் Fபிர் வர்ஹம் வ அன்த கய்ருர் ராஹிமீன்
23:118. இன்னும், “என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!