டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 17. பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
மக்கீ, வசனங்கள்: 111
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
17:1 سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் الَّذِىْۤ எத்தகையவன் اَسْرٰى அழைத்துச்சென்றான் بِعَبْدِهٖ தன் அடிமையை لَيْلًا இரவில் مِّنَ இருந்து الْمَسْجِدِ மஸ்ஜிது الْحَـرَامِ புனிதமானது اِلَى வரை الْمَسْجِدِ அல் மஸ்ஜிது الْاَقْصَا அல் அக்ஸா الَّذِىْ எது بٰرَكْنَا அருள் வளம் புரிந்தோம் حَوْلَهٗ அதைச் சுற்றி لِنُرِيَهٗ நாம் காண்பிப்பதற்காக/அவருக்கு مِنْ اٰيٰتِنَا ؕ நம் அத்தாட்சிகளில் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْبَصِيْرُ உற்று நோக்குபவன்
17:1. ஸுBப்ஹானல் லதீ அஸ்ரா Bபி'அBப்திஹீ லய்லம் மினல் மஸ்ஜிதில் ஹராமி இலல் மஸ்ஜிதில் அக்ஸல்-லதீ Bபாரக்னா ஹவ் லஹூ லினுரியஹூ மின் ஆயாதினா;இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல்-Bபஸீர்
17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
17:2 وَاٰتَيْنَا مُوْسَى الْـكِتٰبَ وَ جَعَلْنٰهُ هُدًى لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِىْ وَكِيْلًا ؕ
وَاٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْـكِتٰبَ வேதத்தை وَ جَعَلْنٰهُ இன்னும் ஆக்கினோம் / அதை هُدًى நேர்வழி காட்டியாக لِّبَنِىْۤ சந்ததிகளுக்கு اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் اَلَّا تَتَّخِذُوْا நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று مِنْ دُوْنِىْ என்னைத் தவிர وَكِيْلًا ؕ பொறுப்பாளனாக (பாதுகாவலனாக)
17:2. வ ஆதய்னா மூஸல்-கிதாBப வ ஜ'அல்னாஹு ஹுதல்-லிBபனீ இஸ்ரா'ஈல்; அல்லா தத்-தகிதூ மின் தூனீ வகீலா.
17:2. இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
17:3 ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍؕ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا
ذُرِّيَّةَ சந்ததிகளே مَنْ எவர்கள் حَمَلْنَا ஏற்றினோம் مَعَ نُوْحٍؕ நூஹூடன் اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருந்தார் عَبْدًا ஓர் அடியாராக شَكُوْرًا அதிகம் நன்றி செலுத்துகிறவர்
17:3. துர்ரிய்யத மன் ஹமல்னா ம'அ னூஹின் இன்னஹூ கான 'அBப்தன் ஷகூரா
17:3. நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
17:4 وَقَضَيْنَاۤ اِلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَـتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا
وَقَضَيْنَاۤ அறிவித்தோம் اِلٰى க்கு بَنِىْۤ சந்ததிகள் اِسْرَاۤءِيْلَ இஸ்ராயீலின் فِى الْكِتٰبِ வேதத்தில் لَـتُفْسِدُنَّ நிச்சயம் விஷமம் செய்வீர்கள் فِى الْاَرْضِ பூமியில் مَرَّتَيْنِ இரு முறை وَلَتَعْلُنَّ இன்னும் நிச்சயமாக பெருமைகொள்வீர்கள் عُلُوًّا பெருமை كَبِيْرًا பெரியது
17:4. வ களய்னா இலா Bபனீ இஸ்ரா'ஈல Fபில் கிதாBபி லதுFப்ஸிதுன்ன Fபில் அர்ளி மர்ரதய்ன்; வ லதஃலுன்ன'உலுவ்வன் கBபீரா
17:4. நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.
17:5 فَاِذَا جَآءَ وَعْدُ اُوْلٰٮهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَاۤ اُولِىْ بَاْسٍ شَدِيْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّيَارِ ؕ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا
فَاِذَا جَآءَ வரும்போது وَعْدُ வாக்கு اُوْلٰٮهُمَا அவ்விரண்டில் முதல் بَعَثْنَا அனுப்பினோம் عَلَيْكُمْ உங்கள் மீது عِبَادًا அடியார்களை لَّنَاۤ நமக்குரிய اُولِىْ உடையவர்கள் بَاْسٍ பலம் شَدِيْدٍ கடுமையானது فَجَاسُوْا ஊடுருவிச் சென்றனர் خِلٰلَ நடுவில் الدِّيَارِ ؕ வீடுகளுக்கு وَكَانَ இருந்தது وَعْدًا ஒரு வாக்காக مَّفْعُوْلًا நிறைவேற்றப்பட்டது
17:5. Fப-இதா ஜா'அ வஃதுஊலாஹுமா Bப'அத்னா 'அல்ய்கும் 'இBபாதல்-லனா உலீ Bபாஸின் ஷதீதின் Fபஜாஸூ கிலாலத் தியார்; வ கான வஃதம் மFப்'ஊலா
17:5. எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது.
17:6 ثُمَّ رَدَدْنَا لَـكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَاَمْدَدْنٰـكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِيْرًا
ثُمَّ பிறகு رَدَدْنَا திருப்பினோம் لَـكُمُ உங்களுக்குசாதகமாக الْكَرَّةَ தாக்குதலை عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக وَاَمْدَدْنٰـكُمْ இன்னும் உதவினோம்/உங்களுக்கு بِاَمْوَالٍ செல்வங்களைக் கொண்டு وَّبَنِيْنَ இன்னும் ஆண்பிள்ளைகள் وَجَعَلْنٰكُمْ இன்னும் ஆக்கினோம்/ உங்களை اَكْثَرَ அதிகமானவர்களாக نَفِيْرًا எண்ணிக்கையில்
17:6. தும்ம ரதத்னா லகுமுல் கர்ரத 'அலய்ஹிம் வ அம்தத்-னாகும்-Bபி அம்வாலினுவ் வ Bபனீன்; வ ஜ'அல்னாகும் அக்தர னFபீரா
17:6. பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
17:7 اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُم ۫وَ اِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕفَاِذَاجَآءَوَعْدُالْاٰ خِرَةِلِیَسُوْٓءٗاوُجُوْهَكُمْ وَ لِیَدْخُلُواالْمَسْجِدَكَمَادَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّ لِیُتَبِّرُوْامَاعَلَوْاتَتْبِیْرًا
اِنْ اَحْسَنْتُمْ நீங்கள் நன்மை செய்தால் اَحْسَنْتُمْ நன்மை செய்தீர்கள் لِاَنْفُسِكُمْ உங்கள் ஆன்மாக்களுக்குத்தான் وَاِنْ اَسَاْتُمْ நீங்கள் தீமை செய்தால் فَلَهَا ؕ அதுவும் அவற்றுக்கே فَاِذَا جَآءَ வந்த போது وَعْدُ الْاٰخِرَةِ முறை / மறு لِیَسُوْٓءٗا அவர்கள் கெடுப்பதற்கு وُجُوْهَكُمْ உங்கள் முகங்களை وَلِيَدْخُلُوا இன்னும் அவர்கள் நுழைவதற்கு الْمَسْجِدَ மஸ்ஜிதில் كَمَا அவர்கள் நுழைந்தது போன்று دَخَلُوْهُ அதில் اَوَّلَ முதல் مَرَّةٍ முறை وَّلِيُتَبِّرُوْا இன்னும் அவர்கள் அழிப்பதற்காக مَا எவற்றை عَلَوْا மிகைத்தனர் تَتْبِيْرًا அழித்தல்
17:7. இன் அஹ்ஸன்தும் அஹ்ஸன்தும் லி அன்Fபுஸிகும் வ இன் அஸாதும் Fபலஹா; Fப இதா ஜா'அ வஃதுல் ஆகிரதி லியஸூ'ஊ வுஜூ ஹகும் வ லியத்குலுல் மஸ்ஜித கமா தகலூஹு அவ்வல மர்ரதி(ன்)வ் வ லியுதBப்Bபிரூ மா அ'லவ் தத்Bபீரா
17:7. நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் அனுப்பினோம்).
17:8 عَسٰى رَبُّكُمْ اَنْ يَّرْحَمَكُمْ ۚ وَاِنْ عُدْتُّمْ عُدْنَاۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِيْنَ حَصِيْرًا
عَسٰى ஆகலாம் رَبُّكُمْ உங்கள் இறைவன் اَنْ يَّرْحَمَكُمْ ۚ கருணை புரிய/உங்களுக்கு وَاِنْ عُدْتُّمْ நீங்கள் திரும்பினால் عُدْنَاۘ நாம் திரும்புவோம் وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் جَهَنَّمَ நரகத்தை لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு حَصِيْرًا விரிப்பாக
17:8. 'அஸா ரBப்Bபுகும் அ(ன்)ய்யர்ஹமகும்; வ இன் 'உத்தும் 'உத்னா; வ ஜ'அல்னா ஜஹன்னம லில்காFபிரீன ஹஸீரா
17:8. (இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம்.
17:9 اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَهْدِىْ لِلَّتِىْ هِىَ اَقْوَمُ وَ يُبَشِّرُ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِيْرًا ۙ
اِنَّ நிச்சயமாக هٰذَا இது الْقُرْاٰنَ குர்ஆன் يَهْدِىْ நேர்வழி காட்டுகிறது لِلَّتِىْ எதன் பக்கம் هِىَ அது اَقْوَمُ மிக சரியானது وَ يُبَشِّرُ இன்னும் நற்செய்தி கூறுகிறது الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு الَّذِيْنَ எவர்கள் يَعْمَلُوْنَ செய்வார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை اَنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு اَجْرًا கூலி كَبِيْرًاۙ பெரியது
17:9. இன்ன ஹாதல் குர்'ஆன யஹ்தீ லில்லதீ ஹிய அக்வமு வ யுBபஷ்ஷிருல் மு'மினீனல் லதீன யஃமலூனஸ் ஸாலிஹாதி அன்ன லஹும் அஜ்ரன் கBபீரா
17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.
17:10 وَّاَنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِيْمًا
وَّاَنَّ இன்னும் நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِالْاٰخِرَةِ மறுமையை اَعْتَدْنَا ஏற்படுத்தி இருக்கிறோம் لَهُمْ அவர்களுக்கு عَذَابًا வேதனையை اَلِيْمًا துன்புறுத்தக்கூடியது
17:10. வ அன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி அஃதத்னா லஹும் 'அதாBபன் அலீமா
17:10. மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம்.
17:11 وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَيْرِ ؕ وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا
وَيَدْعُ பிரார்த்திக்கிறான் الْاِنْسَانُ மனிதன் بِالشَّرِّ தீமைக்கு دُعَآءَهٗ அவன் பிரார்த்திப்பதைப் (போலவே) بِالْخَيْرِ ؕ நன்மைக்கு وَكَانَ இன்னும் இருக்கின்றான் الْاِنْسَانُ மனிதன் عَجُوْلًا அவசரக்காரனாக
17:11. வ யத்'உல் இன்ஸானு Bபிஷ்ஷர்ரி து'ஆ 'அஹூ Bபில்கய்ர்; வ கானல் இன்ஸானு 'அஜூலா
17:11. மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
17:12 وَجَعَلْنَا الَّيْلَ وَالنَّهَارَ اٰيَتَيْنِ فَمَحَوْنَاۤ اٰيَةَ الَّيْلِ وَجَعَلْنَاۤ اٰيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ وَلِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَؕ وَكُلَّ شَىْءٍ فَصَّلْنٰهُ تَفْصِيْلًا
وَجَعَلْنَا ஆக்கினோம் الَّيْلَ இரவை وَالنَّهَارَ இன்னும் பகலை اٰيَتَيْنِ இரு அத்தாட்சிகளாக فَمَحَوْنَاۤ இன்னும் மங்கச்செய்தோம் اٰيَةَ அத்தாட்சியை الَّيْلِ இரவின் وَجَعَلْنَاۤ இன்னும் ஆக்கினோம் اٰيَةَ அத்தாட்சியை النَّهَارِ பகலின் مُبْصِرَةً ஒளிரக்கூடியதாக لِّتَبْتَغُوْا நீங்கள் தேடுவதற்காக فَضْلًا அருளை مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَلِتَعْلَمُوْا இன்னும் அறிவதற்காக عَدَدَ எண்ணிக்கையை السِّنِيْنَ ஆண்டுகளின் وَالْحِسَابَؕ இன்னும் கணக்கை وَكُلَّ شَىْءٍ எல்லா விஷயங்களையும் فَصَّلْنٰهُ விவரித்தோம்/ அவற்றை تَفْصِيْلًا விரிவாக
17:12. வ ஜ'அல்னல் லய்ல வன்னஹார ஆயதய்னி Fபமஹவ்னா ஆயதல் லய்லி வ ஜ'அல்னா ஆயதன் னஹாரி முBப்ஸிரதல் லிதBப்தகூ Fபள்லம் மிர் ரBப்Bபிகும் வ லிதஃலமூ 'அததஸ் ஸினீன வல்ஹிஸாBப்; வ குல்ல ஷய்'இன் Fபஸ்ஸல்னாஹு தFப்ஸீலா
17:12. இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.
17:13 وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا
وَكُلَّ இன்னும் எல்லா اِنْسَانٍ மனிதன் اَلْزَمْنٰهُ இணைத்தோம்/அவனுக்கு طٰۤٮِٕرَهٗ அவனுடையசெயலை فِىْ عُنُقِهٖؕ அவனுடைய கழுத்தில் وَنُخْرِجُ வெளிப்படுத்துவோம் لَهٗ அவனுக்கு يَوْمَ நாளில் الْقِيٰمَةِ மறுமை كِتٰبًا ஒரு புத்தகம் يَّلْقٰٮهُ அதை சந்திப்பான் مَنْشُوْرًا விரிக்கப்பட்டதாக
17:13. வ குல்ல இன்ஸானின் அல்Zஜம்னாஹு தா'இரஹூ Fபீ 'உனுகிஹீ வ னுக்ரிஜி லஹூ யவ்மல் கியாமதி கிதாBப(ன்)ய் யல்காஹு மன்ஷூரா
17:13. ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.
17:14 اِقْرَاْ كِتٰبَك َؕ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًا ؕ
اِقْرَاْ நீ படி! كِتٰبَك ؕ உன் புத்தகத்தை كَفٰى போதுமானவன் بِنَفْسِكَ நீயே الْيَوْمَ இன்று عَلَيْكَ உனக்கெதிராக حَسِيْبًا ؕ விசாரிப்பாளன்
17:14. இக்ர கிதாBபக கFபா Bபி னFப்ஸிகல் யவ்ம 'அலய்க ஹஸீBபா
17:14. “நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்).
17:15 مَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى ؕ وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتّٰى نَبْعَثَ رَسُوْلًا
مَنِ எவர் اهْتَدٰى நேர்வழிசெல்வார் فَاِنَّمَا يَهْتَدِىْ அவர் நேர்வழி செல்வதெல்லாம் لِنَفْسِهٖ ۚ தன் நன்மைக்காக وَمَنْ இன்னும் எவர் ضَلَّ வழிகெடுவார் فَاِنَّمَا يَضِلُّ அவர் வழிகெடுவதெல்லாம் عَلَيْهَا ؕ தனக்கெதிராக وَلَا تَزِرُ சுமக்காது وَازِرَةٌ சுமக்கக்கூடியது وِّزْرَ (பாவச்) சுமையை اُخْرٰى ؕ மற்றொன்றின் وَمَا كُنَّا நாம் இருக்கவில்லை مُعَذِّبِيْنَ வேதனை செய்பவர்களாக حَتّٰى نَبْعَثَ நாம் அனுப்பும் வரை رَسُوْلًا ஒரு தூதரை
17:15. மனிஹ்ததா Fப இன்னமா யஹ்ததீ லினFப்ஸிஹீ வ மன் ளல்ல Fப இன்னமா யளில்லு 'அலய்ஹா; வலா தZஜிரு வாZஜிரது(ன்)வ் விZஜ்ர உக்ரா; வமா குன்னா மு'அத்திBபீன ஹத்தா னBப்'அத ரஸூலா
17:15. எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.
17:16 وَاِذَاۤ اَرَدْنَاۤ اَنْ نُّهْلِكَ قَرْيَةً اَمَرْنَا مُتْرَفِيْهَا فَفَسَقُوْا فِيْهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنٰهَا تَدْمِيْرًا
وَاِذَا اَرَدْنَاۤ நாம் நாடினால் اَنْ نُّهْلِكَ நாம் அழிக்க قَرْيَةً ஓர் ஊரை اَمَرْنَا ஏவுவோம் مُتْرَفِيْهَا அதன் சுகவாசிகளை فَفَسَقُوْا ஆகவேபாவம்புரிவார்கள் فِيْهَا அதில் فَحَقَّ ஆகவே நிகழ்ந்துவிடும் عَلَيْهَا அதன் மீது الْقَوْلُ வாக்கு فَدَمَّرْنٰهَا தரைமட்டமாக்கி விடுவோம்/அதை تَدْمِيْرًا தரைமட்டமாக்குதல்
17:16. வ இதா அரத்னா அன் னுஹ்லிக கர்யதன் அமர்னா முத்ரFபீஹா FபFபஸகூ Fபீஹா Fபஹக்க 'அலய்ஹல் கவ்லு Fபதம்மர்னாஹா தத்மீரா
17:16. நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.
17:17 وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْۢ بَعْدِ نُوْحٍؕ وَكَفٰى بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا
وَكَمْ எத்தனை اَهْلَكْنَا அழித்தோம் مِنَ الْقُرُوْنِ தலைமுறைகளை مِنْۢ بَعْدِ பின்னர் نُوْحٍؕ நூஹூக்கு وَكَفٰى இன்னும் போதுமானவன் بِرَبِّكَ உம் இறைவனே بِذُنُوْبِ பாவங்களை عِبَادِهٖ தன் அடியார்களின் خَبِيْرًۢا ஆழ்ந்தறிபவனாக بَصِيْرًا உற்று நோக்குபவனாக
17:17. வ கம் அஹ்லக்னா மினல் குரூனி மின் Bபஃதி னூஹ்; வ கFபா Bபி ரBப்Bபிக BபிதுனூBபி 'இBபாதிஹீ கBபீரம் Bபஸீரா
17:17. நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.
17:18 مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِيْهَا مَا نَشَآءُ لِمَنْ نُّرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَۚ يَصْلٰٮهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا
مَنْ எவர் كَانَ இருப்பார் يُرِيْدُ நாடுகின்றவராக الْعَاجِلَةَ இம்மையை عَجَّلْنَا முற்படுத்தி கொடுப்போம் لَهٗ அவருக்கு فِيْهَا அதில் مَا எதை نَشَآءُ நாடுவோம் لِمَنْ எவருக்கு نُّرِيْدُ நாடுவோம் ثُمَّ பிறகு جَعَلْنَا ஆக்குவோம் لَهٗ அவருக்கு جَهَنَّمَۚ நரகத்தை يَصْلٰٮهَا எரிந்து பொசுங்குவார்/அதில் مَذْمُوْمًا இகழப்பட்டவராக مَّدْحُوْرًا தூரமாக்கப்பட்டவராக
17:18. மன் கான யுரீதுல் 'ஆஜிலத 'அஜ்ஜல்னா லஹூ Fபீஹா மா னஷா'உ லிமன் னுரீது தும்ம ஜ'அல்னா லஹூ ஜஹன்னம யஸ்லாஹா மத்மூமம்மத் ஹூரா
17:18. எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.
17:19 وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا
وَمَنْ எவர்(கள்) اَرَادَ நாடுவார்(கள்) الْاٰخِرَةَ மறுமையை وَسَعٰى இன்னும் முயற்சி செய்வார்(கள்) لَهَا அதற்கு سَعْيَهَا அதற்குரிய முயற்சி وَهُوَ அவர்(கள்) مُؤْمِنٌ நம்பிக்கை கொண்டவர்(களாக) فَاُولٰۤٮِٕكَ அவர்கள் كَانَ இருந்தது سَعْيُهُمْ அவர்களுடைய முயற்சி مَّشْكُوْرًا நன்றி செலுத்தப்பட்டதாக
17:19. வ மன் அராதல் ஆகிரத வ ஸ'ஆ லஹா ஸஃயஹா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக கான ஸஃயுஹும் மஷ்கூரா
17:19. இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
17:20 كُلًّا نُّمِدُّ هٰٓؤُلَاۤءِ وَهٰٓؤُلَاۤءِ مِنْ عَطَآءِ رَبِّكَ ؕ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُوْرًا
كُلًّا எல்லோருக்கும் نُّمِدُّ கொடுத்துதவுவோம் هٰٓؤُلَاۤءِ இவர்களுக்கு وَهٰٓؤُلَاۤءِ இன்னும் இவர்களுக்கு مِنْ இருந்து عَطَآءِ கொடை رَبِّكَ ؕ உம் இறைவனின் وَمَا كَانَ இருக்கவில்லை عَطَآءُ கொடை رَبِّكَ உம் இறைவனின் مَحْظُوْرًا தடுக்கப்பட்டதாக
17:20. குல்லன் னுமித்து ஹா 'உலா'இ வ ஹா'உலா'இ மின் 'அதா'இ ரBப்Bபிக்; வமா கான 'அதா'உ ரBப்Bபிக மஹ்ளூரா
17:20. இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
17:21 اُنْظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ ؕ وَلَـلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِيْلًا
اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எப்படி فَضَّلْنَا மேன்மையாக்கினோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ ؕ சிலரை وَلَـلْاٰخِرَةُ மறுமைதான் اَكْبَرُ மிகப் பெரியது دَرَجٰتٍ பதவிகளால் وَّاَكْبَرُ இன்னும் மிகப் பெரியது تَفْضِيْلًا மேன்மையால்
17:21. உன்ளுர் கய்Fப Fபள்ளல்னா Bபஃளஹும் 'அலா Bபஃள்; வ லல் ஆகிரது அக்Bபரு தரஜாதி(ன்)வ் வ அக்Bபரு தFப்ளீலா
17:21. (நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
17:22 لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا
لَا تَجْعَلْ ஆக்காதீர் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَ வேறு فَتَقْعُدَ அமர்ந்து விடுவீர் مَذْمُوْمًا இகழப்பட்டவராக مَّخْذُوْلًا கைவிடப்பட்டவராக
17:22. லா தஜ்'அல் ம'அல் லாஹி இலாஹன் ஆகர Fபதக்'உத மதூமம் மக்தூலா
17:22. அல்லாஹ்வுடன் மற்றோர் ஆண்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.
17:23 وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا
وَقَضٰى கட்டளையிட்டு இருக்கின்றான் رَبُّكَ உம் இறைவன் اَلَّا تَعْبُدُوْۤا வணங்காதீர்கள் என்று اِلَّاۤ اِيَّاهُ அவனைத் தவிர وَبِالْوَالِدَيْنِ இன்னும் பெற்றோருக்கு اِحْسَانًا ؕ நன்மை புரியுங்கள் اِمَّا يَـبْلُغَنَّ நிச்சயமாக அடைந்தால் عِنْدَكَ உன்னிடம் الْكِبَرَ முதுமையை اَحَدُهُمَاۤ அவ்விருவர்களில் ஒருவர் اَوْ அல்லது كِلٰهُمَا அவர்கள் இருவரும் فَلَا تَقُلْ சொல்லாதே! لَّهُمَاۤ அவ்விருவரையும் اُفٍّ “சீ” وَّلَا تَنْهَرْ இன்னும் வெருட்டாதே! هُمَا அவ்விருவரை وَقُلْ இன்னும் சொல்! لَّهُمَا அவ்விருவருக்கும் قَوْلًا சொல்லை كَرِيْمًا மரியாதையானது
17:23. வ களா ரBப்Bபுக அல்லா தஃBபுதூ இல்லா இய்யாஹு வ Bபில்வாலிதய்னி இஹ்ஸானா; இம்மா யBப்லுகன்ன 'இன்தகல் கிBபர அஹதுஹுமா அவ் கிலாஹுமா Fபலா தகுல் லஹுமா உFப்Fபி(ன்)வ் வலா தன்ஹர்ஹுமா வ குல்லஹுமா கவ்லன் கரீமா
17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
17:24 وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ
وَاخْفِضْ இன்னும் தாழ்த்து لَهُمَا அவர்களுக்கு முன் جَنَاحَ இறக்கையை الذُّلِّ பணிவின் مِنَ الرَّحْمَةِ கருணையுடன் وَقُلْ இன்னும் கூறு! رَّبِّ என் இறைவா ارْحَمْهُمَا நீயும் கருணை புரி!/அவ்விருவருக்கு كَمَا அவர்கள் வளர்த்தவாறே رَبَّيٰنِىْ என்னை صَغِيْرًا ؕ சிறியவனாக
17:24. வக்Fபிள் லஹுமா ஜனாஹத் துல்லி மினர் ரஹ்மதி வ குர் ரBப்Bபிர் ஹம்ஹுமா கமா ரBப்Bபயானீ ஸகீரா
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
17:25 رَّبُّكُمْ اَعْلَمُ بِمَا فِىْ نُفُوْسِكُمْؕ اِنْ تَكُوْنُوْا صٰلِحِيْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِيْنَ غَفُوْرًا
رَّبُّكُمْ உங்கள் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا எதை فِىْ نُفُوْسِكُمْؕ உங்கள் மனங்களில் اِنْ تَكُوْنُوْا நீங்கள் இருந்தால் صٰلِحِيْنَ நல்லவர்களாக فَاِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் لِلْاَوَّابِيْنَ மீளுகிறவர்களுக்கு غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக
17:25. ரBப்Bபுகும் அஃலமு Bபிமா Fபீ னுFபூஸிகும்; இன் தகூனூ ஸாலிஹீன Fப இன்னஹூ கான லில் அவ்வாBபீன கFபூரா
17:25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.
17:26 وَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا
وَاٰتِ இன்னும் கொடு! ذَا الْقُرْبٰى உறவினருக்கு حَقَّهٗ அவருடைய உரிமையை وَالْمِسْكِيْنَ இன்னும் ஏழைக்கு وَابْنَ السَّبِيْلِ இன்னும் வழிப்போக்கருக்கு وَلَا تُبَذِّرْ இன்னும் மிதமிஞ்சி செலவழிக்காதே! تَبْذِيْرًا மித மிஞ்சி, மிக வீணாக செலவழித்தல்
17:26. வ ஆதி தல் குர்Bபா ஹக்கஹூ வல்மிஸ்கீன வBப்னஸ் ஸBபீலி வலா துBபத்திர் தBப்தீரா
17:26. இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.
17:27 اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا
اِنَّ الْمُبَذِّرِيْنَ நிச்சயமாக மிதமிஞ்சி செலவழிப்பவர்கள் كَانُوْۤا இருக்கின்றனர் اِخْوَانَ சகோதரர்களாக الشَّيٰطِيْنِ ؕ ஷைத்தான்களின் وَكَانَ இன்னும் இருக்கின்றான் الشَّيْطٰنُ ஷைத்தான் لِرَبِّهٖ தன் இறைவனுக்கு كَفُوْرًا நன்றி கெட்டவனாக
17:27. இன்னல் முBபத்திரீன கானூ இக்வானஷ் ஷயாதீனி வ கானஷ் ஷய்தானு லி ரBப்Bபிஹீ கFபூரா
17:27. நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
17:28 وَاِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَآءَ رَحْمَةٍ مِّنْ رَّبِّكَ تَرْجُوْهَا فَقُلْ لَّهُمْ قَوْلًا مَّيْسُوْرًا
وَاِمَّا تُعْرِضَنَّ நீ புறக்கணித்தால் عَنْهُمُ அவர்களை ابْتِغَآءَ நாடி رَحْمَةٍ ஓர் அருளை مِّنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் تَرْجُوْهَا ஆதரவு வைத்தவனாக/ அதை فَقُلْ ஆகவே சொல் لَّهُمْ அவர்களுக்கு قَوْلًا சொல்லை مَّيْسُوْرًا மென்மையானது
17:28. வ இம்மா துஃரிளன்ன 'அன்ஹும் உBப்திகா'அ ரஹ்மதிம் மிர் ரBப்Bபிக தர்ஜூஹா Fபகுல் லஹும் கவ்லம் மய்ஸூரா
17:28. (உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!
17:29 وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا
وَلَا تَجْعَلْ ஆக்காதே يَدَكَ உனது கையை مَغْلُوْلَةً விலங்கிடப்பட்டதாக اِلٰى عُنُقِكَ உன் கழுத்தில் وَلَا تَبْسُطْهَا இன்னும் விரிக்காதே / அதை كُلَّ الْبَسْطِ முற்றிலும் விரித்ததாக فَتَقْعُدَ அதனால் தங்கிவிடுவாய் مَلُوْمًا பழிக்கப்பட்டவராக مَّحْسُوْرًا முடக்கப்பட்டவராக
17:29. வ லா தஜ்'அல் யதக மக்லூலதன் இலா 'உனுகிக வலா தBப்ஸுத் ஹா குல்லல் Bபஸ்தி Fபதக்'உத மலூமம் மஹ்ஸூரா
17:29. (உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.
17:30 اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் يَبْسُطُ விரிவாக்குகின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு وَيَقْدِرُؕ இன்னும் அளவாகக் கொடுக்கின்றான் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் بِعِبَادِهٖ தன் அடியார்களை خَبِيْرًۢا ஆழ்ந்தறிபவனாக بَصِيْرًا உற்று நோக்குபவனாக
17:30. இன்ன ரBப்Bபக யBப்ஸுதுர்ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; இன்னஹூ கான Bபி'இBபாதிஹீ கBபீரன் Bபஸீரா
17:30. நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
17:31 وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍؕ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْؕ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا
وَلَا تَقْتُلُوْۤا கொல்லாதீர்கள் اَوْلَادَكُمْ குழந்தைகளை/உங்கள் خَشْيَةَ பயந்து اِمْلَاقٍؕ வறுமையை نَحْنُ نَرْزُقُهُمْ நாம்/உணவளிக்கின்றோம்/அவர்களுக்கு وَاِيَّاكُمْؕ இன்னும் உங்களுக்கு اِنَّ நிச்சயமாக قَتْلَهُمْ கொல்வது/அவர்களை كَانَ இருக்கிறது خِطْاً குற்றமாக كَبِيْرًا பெரியது
17:31. வ லா தக்துலூ அவ்லாதகும் கஷ்யத இம்லாகின் னஹ்னு னர்Zஜுகுஹும் வ இய்யாகும்; இன்ன கத்லஹும் கான கித் 'அன் கBபீரா
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
17:32 وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً ؕ وَسَآءَ سَبِيْلًا
وَلَا تَقْرَبُوا நெருங்காதீர்கள் الزِّنٰٓى விபச்சாரத்தை اِنَّهٗ நிச்சயமாக அது كَانَ இருக்கின்றது فَاحِشَةً ؕ மானக்கேடானதாக وَسَآءَ இன்னும் கெட்ட(து) سَبِيْلًا வழி
17:32. வ லா தக்ரBபுZஜ் Zஜினா இன்னஹூ கான Fபாஹிஷத(ன்)வ் வ ஸா'அ ஸBபீலா
17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
17:33 وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ ؕ وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِـوَلِيِّهٖ سُلْطٰنًا فَلَا يُسْرِفْ فِّى الْقَتْلِ ؕ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا
وَلَا تَقْتُلُوا கொல்லாதீர்கள் النَّفْسَ உயிரை الَّتِىْ எது حَرَّمَ தடுத்தான் اللّٰهُ அல்லாஹ் اِلَّا بِالْحَـقِّ ؕ உரிமையின்றி وَمَنْ எவர் قُتِلَ கொல்லப்பட்டார் مَظْلُوْمًا அநீதி செய்யப்பட்டவராக فَقَدْ جَعَلْنَا ஏற்படுத்தினோம் لِـوَلِيِّهٖ உறவினருக்கு/ அவருடைய سُلْطٰنًا அதிகாரத்தை فَلَا يُسْرِفْ ஆகவே, அவர் அளவு கடக்க வேண்டாம் فِّى الْقَتْلِ ؕ கொல்வதில் اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் مَنْصُوْرًا உதவி செய்யப்பட்டவராக
17:33. வ லா தக்துலுன் னFப்ஸல் லதீ ஹர்ரமல் லாஹு இல்லா Bபில்ஹக்க்; வ மன் குதில மள்லூமன் Fபகத் ஜ'அல்னா லிவலிய்யிஹீ ஸுல்தானன் Fபலா யுஸ்ரிFப் Fபில் கத்லி இன்னஹூ கான மன்ஸூரா
17:33. (கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.
17:34 وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ وَاَوْفُوْا بِالْعَهْدِۚ اِنَّ الْعَهْدَ كَانَ مَسْــــٴُـوْلًا
وَلَا تَقْرَبُوْا நெருங்காதீர்கள் مَالَ செல்வத்தை الْيَتِيْمِ அநாதையின் اِلَّا தவிர بِالَّتِىْ எதில் هِىَ அது اَحْسَنُ மிக அழகியது حَتّٰى வரை يَبْلُغَ அவர் அடையும் اَشُدَّهٗ தன் வாலிபத்தை وَاَوْفُوْا இன்னும் நிறைவேற்றுங்கள் بِالْعَهْدِۚ ஒப்பந்தத்தை اِنَّ நிச்சயமாக الْعَهْدَ ஒப்பந்தம் كَانَ இருக்கிறது مَسْــــٴُـوْلًا விசாரிக்கப்படுவதாக
17:34. வ லா தக்ரBபூ மாலல் யதீமி இல்லா Bபில்லதீ ஹிய அஹ்ஸனு ஹத்தா யBப்லுக அஷுத்தஹ்; வ அவ்Fபூ Bபில்'அஹ்த், இன்னல் 'அஹ்த கான மஸ்'ஊலா
17:34. அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.
17:35 وَاَوْفُوا الْـكَيْلَ اِذَا كِلْتُمْ وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا
وَاَوْفُوا இன்னும் முழுமையாக்குங்கள் الْـكَيْلَ அளவையை اِذَا كِلْتُمْ நீங்கள் அளந்தால் وَزِنُوْا இன்னும் நிறுங்கள் بِالْقِسْطَاسِ தராசைக் கொண்டு الْمُسْتَقِيْمِؕ சரியானது ذٰ لِكَ அது خَيْرٌ மிகச் சிறந்தது وَّاَحْسَنُ மிக அழகியது تَاْوِيْلًا முடிவால்
17:35. வ அவ்Fபுல் கய்ல இதா கில்தும் வ Zஜினூ Bபில்கிஸ்தாஸில் முஸ்தகீம்; தாலிக கய்ரு(ன்)வ் வ அஹ்ஸனு த'வீலா
17:35. மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும்.
17:36 وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا
وَلَا تَقْفُ பின் தொடராதே مَا எதை لَـيْسَ இல்லை لَـكَ உனக்கு بِهٖ அதில் عِلْمٌ ؕ கல்வி அறிவு اِنَّ நிச்சயமாக السَّمْعَ செவி وَالْبَصَرَ இன்னும் பார்வை وَالْفُؤَادَ இன்னும் உள்ளம் كُلُّ எல்லாம் اُولٰۤٮِٕكَ இவை كَانَ இருக்கின்றன عَنْهُ அவற்றைப் பற்றி مَسْــٴُـوْلًا விசாரிக்கப் படுபவையாக
17:36. வ லா தக்Fபு மா லய்ஸ லக Bபிஹீ 'இல்ம்; இன்னஸ் ஸம்'அ வல்Bபஸர வல்Fபு'ஆத குல்லு உலா'இக கான 'அன்ஹு மஸ்'ஊலா
17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
17:37 وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا
وَلَا تَمْشِ இன்னும் நடக்காதே فِى الْاَرْضِ பூமியில் مَرَحًا ۚ கர்வம் கொண்டவனாக اِنَّكَ நிச்சயமாக நீ لَنْ تَخْرِقَ அறவே நீ கிழிக்க(வும்) முடியாது الْاَرْضَ பூமியை وَلَنْ تَبْلُغَ இன்னும் அறவே நீ அடைய(வும்) முடியாது الْجِبَالَ மலைகளின் طُوْلًا உயரத்தை
17:37. வ லா தம்ஷி Fபில் அர்ளி மரஹன் இன்னக லன் தக்ரிகல் அர்ள வ லன் தBப்லுகல் ஜிBபால தூலா
17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.
17:38 كُلُّ ذٰ لِكَ كَانَ سَيِّئُهٗ عِنْدَ رَبِّكَ مَكْرُوْهًا
كُلُّ எல்லாம் ذٰ لِكَ இவை كَانَ இருக்கின்றது سَيِّئُهٗ இவற்றின் தீமை عِنْدَ இடம் رَبِّكَ உமது இறைவன் مَكْرُوْهًا வெறுக்கப்பட்டதாக
17:38. குல்லு தாலிக கான ஸய்யி'உஹூ இன்த ரBப்Bபிக மக்ரூஹா
17:38. இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.
17:39 ذٰ لِكَ مِمَّاۤ اَوْحٰۤى اِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِ ؕ وَلَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتُلْقٰى فِىْ جَهَنَّمَ مَلُوْمًا مَّدْحُوْرًا
ذٰ لِكَ இவை مِمَّاۤ எதிலிருந்து اَوْحٰۤى வஹீ அறிவித்தான் اِلَيْكَ உமக்கு رَبُّكَ உம் இறைவன் مِنَ இருந்து الْحِكْمَةِ ؕ ஞானம் وَلَا تَجْعَلْ இன்னும் ஆக்காதீர் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَ வேறு فَتُلْقٰى எறியப்படுவீர் فِىْ جَهَنَّمَ நரகில் مَلُوْمًا இகழப்பட்டவராக مَّدْحُوْرًا தூரமாக்கப்பட்டவராக
17:39. தாலிக மிம்மா அவ்ஹா இலய்க ரBப்Bபுக மினல் ஹிக்மஹ்; வலா தஜ்'அல் ம'அல்லாஹி இலாஹன் ஆகர Fபதுல்கா Fபீ ஜஹன்னம மலூமம் மத் ஹூரா
17:39. இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
17:40 اَفَاَصْفٰٮكُمْ رَبُّكُمْ بِالْبَـنِيْنَ وَ اتَّخَذَ مِنَ الْمَلٰۤٮِٕكَةِ اِنَاثًا ؕ اِنَّكُمْ لَتَقُوْلُوْنَ قَوْلًا عَظِيْمًا
اَفَاَصْفٰٮكُمْ சொந்தமாக்கினானா?/உங்களுக்கு رَبُّكُمْ உங்கள் இறைவன் بِالْبَـنِيْنَ ஆண் பிள்ளைகளை وَ اتَّخَذَ இன்னும் ஆக்கிக் கொண்டான் مِنَ الْمَلٰۤٮِٕكَةِ வானவர்களிலிருந்து اِنَاثًا ؕ பெண்களை اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَتَقُوْلُوْنَ உறுதியாக கூறுகின்றீர்கள் قَوْلًا கூற்றை عَظِيْمًا பெரிய(து)
17:40. அFப அஸ்Fபாகும் ரBப்Bபுகும் Bபில்Bபனீன வத்தகத மினல் மலா'இகதி இனாதா; இன்னகும் லதகூலூன கவ்லன் 'அளீமா
17:40. (முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை எடுத்துக்கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.
17:41 وَلَقَدْ صَرَّفْنَا فِىْ هٰذَا الْقُرْاٰنِ لِيَذَّكَّرُوْا ؕ وَمَا يَزِيْدُهُمْ اِلَّا نُفُوْرًا
وَلَقَدْ صَرَّفْنَا திட்டமாக விவரித்தோம் فِىْ هٰذَا الْقُرْاٰنِ இந்த குர்ஆனில் لِيَذَّكَّرُوْا ؕ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக وَمَا அதிகப்படுத்தவில்லை يَزِيْدُهُمْ அவர்களுக்கு اِلَّا தவிர نُفُوْرًا வெறுப்பை
17:41. வ லகத் ஸர்ரFப்னா Fபீ ஹாதல் குர்'ஆனி லியத்தக்கரூ வமா யZஜீதுஹும் இல்லா னுFபூரா
17:41. இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!
17:42 قُلْ لَّوْ كَانَ مَعَهٗۤ اٰلِهَةٌ كَمَا يَقُوْلُوْنَ اِذًا لَّابْتَغَوْا اِلٰى ذِى الْعَرْشِ سَبِيْلًا
قُلْ கூறுவீராக لَّوْ كَانَ இருந்திருந்தால் مَعَهٗۤ அவனுடன் اٰلِهَةٌ பல கடவுள்கள் كَمَا يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவது போல் اِذًا அப்போது لَّابْتَغَوْا தேடியிருப்பார்கள் اِلٰى பக்கம் ذِى الْعَرْشِ அர்ஷ் உடையவன் سَبِيْلًا ஒரு வழியை
17:42. குல் லவ் கான ம'அஹூ ஆலிஹதுன் கமா யகூலூன இதல் லBப்தகவ் இலா தில் 'அர்ஷி ஸBபீலா
17:42. (நபியே!) நீர் சொல்வீராக: அவர்கள் கூறுவதுபோல் அவனுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அப்போது அவை அர்ஷுடையவன் (அல்லாஹ் தஆலாவின்) அளவில் ஒரு வழியைத் தேடிக்கண்டு பிடித்துச் (சென்று) இருக்கும் என்று.
17:43 سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَقُوْلُوْنَ عُلُوًّا كَبِيْرًا
سُبْحٰنَهٗ அவன் மிகப் பரிசுத்தமானவன் وَتَعٰلٰى இன்னும் உயர்ந்துவிட்டான் عَمَّا எதை விட்டு يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் عُلُوًّا உயர்வாக كَبِيْرًا மிகப் பெரியது
17:43. ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்மா யகூலூன 'உலுவ்வன் கBபீரா
17:43. அவன் மிகவும் பரிசுத்தமானவன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.
17:44 تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّؕ وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰـكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْؕ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا
تُسَبِّحُ துதிக்கின்றன(ர்) لَهُ அவனையே السَّمٰوٰتُ வானங்கள் السَّبْعُ ஏழு وَالْاَرْضُ இன்னும் பூமி وَمَنْ இன்னும் எவர் فِيْهِنَّؕ இவற்றில் وَاِنْ இல்லை مِّنْ شَىْءٍ எந்த ஒரு பொருளும் اِلَّا தவிர يُسَبِّحُ துதிக்கிறது بِحَمْدِهٖ அவனைப் புகழ்ந்து وَلٰـكِنْ எனினும் لَّا تَفْقَهُوْنَ அறிய மாட்டீர்கள் تَسْبِيْحَهُمْؕ அவர்களின் துதியை اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கிறான் حَلِيْمًا மகா சகிப்பாளனாக غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக
17:44. துஸBப்Bபிஹு லஹுஸ் ஸமாவாதுஸ் ஸBப்'உ வல் அர்ளு வ மன் Fபீஹின்ன்; வ இம் மின் ஷய்'இன் இல்லா யுஸBப்Bபிஹு Bபிஹம்திஹீ வ லாகில் லா தFப்கஹூன தஸ்Bபீஹஹும்; இன்னஹூ கான ஹலீமன் கFபூரா
17:44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
17:45 وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ۙ
وَاِذَا قَرَاْتَ நீர் ஓதினால் الْقُرْاٰنَ குர்ஆனை جَعَلْنَا ஆக்கிவிடுவோம் بَيْنَكَ உமக்கு இடையில் وَبَيْنَ இன்னும் இடையில் الَّذِيْنَ எவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِالْاٰخِرَةِ மறுமையை حِجَابًا ஒரு திரையை مَّسْتُوْرًا ۙ மறைக்கப்பட்டது
17:45. வ இதா கர' தல் குர்'ஆன ஜ'அல்னா Bபய்னக வ Bபய்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி ஹிஜாBபம் மஸ்தூரா
17:45. (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.
17:46 وَّجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ نُفُوْرًا
وَّجَعَلْنَا ஆக்கிவிடுவோம் عَلٰى قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் மீது اَكِنَّةً மூடிகளை اَنْ يَّفْقَهُوْهُ அவர்கள் விளங்குவதற்கு / அதை وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ இன்னும் காதுகளில்/அவர்களுடைய/கனத்தை وَاِذَا ذَكَرْتَ நீர் நினைவுகூர்ந்தால் رَبَّكَ உம் இறைவனை فِى الْقُرْاٰنِ குர்ஆனில் وَحْدَهٗ அவனை மட்டும் وَلَّوْا திரும்புகின்றனர் عَلٰٓى மீது اَدْبَارِهِمْ தங்கள் பின்புறங்கள் نُفُوْرًا வெறுத்து
17:46. வ ஜ'அல்னா 'அலா குலூ Bபிஹிம் அகின்னதன் அ(ன்)ய் யFப்கஹூஹு வ Fபீ ஆதானிஹிம் வக்ரா; வ இதா தகர்த ரBப்Bபக Fபில் குர்'ஆனி வஹ்தஹூ வல்லவ் 'அலா அத்Bபாரிஹிம் னுFபூரா
17:46. இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்.
17:47 نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖۤ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
نَحْنُ நாம் اَعْلَمُ மிக அறிந்தவர்கள் بِمَا எதற்காக يَسْتَمِعُوْنَ செவிமடுக்கின்றனர் بِهٖۤ அதை اِذْ يَسْتَمِعُوْنَ அவர்கள் செவிமடுக்கும் போது اِلَيْكَ உமக்கு وَاِذْ இன்னும் /போது هُمْ அவர்கள் نَجْوٰٓى தனித்து பேசுபவர்கள் اِذْ يَقُوْلُ கூறும் போது الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் اِنْ تَتَّبِعُوْنَ நீங்கள் பின்பற்றவில்லை اِلَّا ஓர் ஆடவரை رَجُلًا தவிர مَّسْحُوْرًا (மனித இனத்தை சேர்ந்தவர்,) உண்ணவும் குடிக்கவும் செய்பவர்
17:47. னஹ்னு அஃலமு Bபிமா யஸ்தமி'ஊன Bபிஹீ இத் யஸ்தமி'ஊன இலய்க வ இத் ஹும் னஜ்வா இத் யகூலுள் ளாலிமூன இன் தத்தBபி'ஊன இல்லா ரஜுலம் மஸ் ஹூரா
17:47. (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
17:48 اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلًا
اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு ضَرَبُوْا விவரித்தார்கள் لَكَ உமக்கு الْاَمْثَالَ தன்மைகளை فَضَلُّوْا ஆகவே வழிகெட்டனர் فَلَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் سَبِيْلًا வழி(பெற)
17:48. உன்ளுர் கய்Fப ளரBபூ லகல் அம்தால Fபளல்லூ Fபலா யஸ்ததீ'ஊன ஸBபீலா
17:48. (நபியே!) உமக்கு அவர்கள் எத்தகைய உவமைகளைச் சொல்கிறார்கள் என்பதை கவனித்துப்பாரும்! ஆகவே, அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; (நேரான) வழிக்கு அவர்கள் சக்திப்பெற மாட்டார்கள்.
17:49 وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا
وَقَالُوْۤا கூறுகிறார்கள் ءَاِذَا كُنَّا நாங்கள் ஆகிவிட்டால்? عِظَامًا எலும்புகளாக وَّرُفَاتًا இன்னும் மக்கியவர்களாக ءَاِنَّا ?/நிச்சயமாக நாம் لَمَبْعُوْثُوْنَ எழுப்பப்படுவோம் خَلْقًا படைப்பாக جَدِيْدًا புதிய
17:49. வ காலூ 'அ இதா குன்னா 'இளாம(ன்)வ் வ ருFபாதன் 'அ இன்னா லமBப்'ஊதூன கல்கன் ஜதீதா
17:49. இன்னும:; “(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
17:50 قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِيْدًا
قُلْ கூறுவீராக كُوْنُوْا ஆகிவிடுங்கள் حِجَارَةً கல்லாக اَوْ حَدِيْدًا அல்லது இரும்பாக
17:50. குல் கூனூ ஹிஜாரதன் அவ் ஹதீதா
17:50. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
17:51 اَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِىْ صُدُوْرِكُمْۚ فَسَيَـقُوْلُوْنَ مَنْ يُّعِيْدُنَا ؕ قُلِ الَّذِىْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍ ۚ فَسَيُنْغِضُوْنَ اِلَيْكَ رُءُوْسَهُمْ وَيَقُوْلُوْنَ مَتٰى هُوَ ؕ قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَرِيْبًا
اَوْ அல்லது خَلْقًا ஒரு படைப்பாக مِّمَّا உள்ளவற்றில் يَكْبُرُ பெரியதாக فِىْ صُدُوْرِكُمْۚ உங்கள் நெஞ்சங்களில் فَسَيَـقُوْلُوْنَ அவர்கள் கூறட்டும் مَنْ யார்? يُّعِيْدُنَا ؕ மீட்பார் / எங்களை قُلِ கூறுவீராக الَّذِىْ எவன் فَطَرَكُمْ படைத்தான்/உங்களை اَوَّلَ முதல் مَرَّةٍ ۚ முறையாக فَسَيُنْغِضُوْنَ ஆகவே ஆட்டுவார்கள் اِلَيْكَ உம் பக்கம் رُءُوْسَهُمْ தலைகளை/தங்கள் وَيَقُوْلُوْنَ பிறகு கூறுவார்கள் مَتٰى எப்போது هُوَ ؕ அது قُلْ கூறுவீராக عَسٰٓى கூடும் اَنْ يَّكُوْنَ இருக்க قَرِيْبًا சமீபமாக
17:51. அவ் கல்கம் மிம்மா யக்Bபுரு Fபீ ஸுதூரிகும்; Fபஸ யகூலூன மய் யு'ஈதுனா குலில் லதீ Fபதரகும் அவ்வல மர்ரஹ்; Fபஸ யுன்கிளூன இலய்க ரு'ஊஸஹும் வ யகூலூன மதாஹூ; குல் 'அஸா அ(ன்)ய் யகூன கரீBபா
17:51. “அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!
17:52 يَوْمَ يَدْعُوْكُمْ فَتَسْتَجِيْبُوْنَ بِحَمْدِهٖ وَتَظُنُّوْنَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِيْلًا
يَوْمَ يَدْعُوْكُمْ நாள்/அழைப்பான்/உங்களை فَتَسْتَجِيْبُوْنَ பதில் அளிப்பீர்கள் بِحَمْدِ புகழ்ந்து هٖ அவனுடைய وَتَظُنُّوْنَ இன்னும் எண்ணுவீர்கள் اِنْ لَّبِثْتُمْ நீங்கள் தங்கவில்லை اِلَّا தவிர قَلِيْلًا சொற்பமாக
17:52. யவ்ம யத்'ஊகும் Fபதஸ்தஜீBபூன Bபிஹம்திஹீ வ தளுன்னூன இல் லBபித்தும் இல்லா கலீலா
17:52. உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிருந்ததாக நீங்கள் நினைப்பீர்கள்.
17:53 وَقُلْ لِّعِبَادِىْ يَقُوْلُوا الَّتِىْ هِىَ اَحْسَنُؕ اِنَّ الشَّيْطٰنَ يَنْزَغُ بَيْنَهُمْؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا
وَقُلْ கூறுவீராக لِّعِبَادِىْ என் அடியார்களுக்கு يَقُوْلُوا அவர்கள் கூறவும் الَّتِىْ எது هِىَ அது اَحْسَنُؕ மிக அழகியது اِنَّ நிச்சயமாக الشَّيْطٰنَ ஷைத்தான் يَنْزَغُ குழப்பம், கெடுதி செய்வான் بَيْنَهُمْؕ அவர்களுக்கிடையில் اِنَّ الشَّيْطٰنَ நிச்சயமாக ஷைத்தான் كَانَ இருக்கின்றான் لِلْاِنْسَانِ மனிதனுக்கு عَدُوًّا எதிரியாக مُّبِيْنًا தெளிவான
17:53. வ குல் லி'இBபாதீ யகூலுல் லதீ ஹிய அஹ்ஸன்; இன்னஷ் ஷய்தான யன்Zஜகு Bபய்னஹும்; இன்னஷ் ஷய்தான கான லில் இன்ஸானி 'அதுவ்வம் முBபீனா
17:53. (நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.
17:54 رَبُّكُمْ اَعْلَمُ بِكُمْؕ اِنْ يَّشَاْ يَرْحَمْكُمْ اَوْ اِنْ يَّشَاْ يُعَذِّبْكُمْ ؕ وَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ وَكِيْلًا
رَبُّكُمْ உங்கள் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِكُمْؕ உங்களை اِنْ يَّشَاْ அவன் நாடினால் يَرْحَمْكُمْ اَوْ அருள் புரிவான்/உங்களுக்கு/அல்லது اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُعَذِّبْكُمْ ؕ வேதனை செய்வான் / உங்களை وَمَاۤ اَرْسَلْنٰكَ உம்மை நாம் அனுப்பவில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَكِيْلًا பொறுப்பாளராக
17:54. ரBப்Bபுகும் அஃலமு Bபிகும் இ(ன்)ய் யஷ' யர்ஹம்கும் அவ் இ(ன்)ய் யஷ' யு'அத்திBப்கும்; வ மா அர்ஸல்னாக 'அலய்ஹிம் வகீலா
17:54. உங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்; நாம் உம்மை அவர்களுக்கு வகீலாக (பொறுப்பாளியாக) அனுப்பவில்லை.
17:55 وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيّٖنَ عَلٰى بَعْضٍ وَّاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا
وَرَبُّكَ உம் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنْ எவர்களை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِؕ இன்னும் பூமி وَلَقَدْ திட்டவட்டமாக فَضَّلْنَا மேன்மைப்படுத்தினோம் بَعْضَ சிலரை النَّبِيّٖنَ நபிமார்களில் عَلٰى بَعْضٍ சிலர் மீது وَّاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا ஜபூரை
17:55. வ ரBப்Bபுக அஃலமு Bபிமன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ லகத் Fபள்ளல்னா Bபஃளன் னBபிய்யீன 'அலா Bபஃளி(ன்)வ் வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
17:56 قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِهٖ فَلَا يَمْلِكُوْنَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيْلًا
قُلِ கூறுவீராக ادْعُوا அழையுங்கள் الَّذِيْنَ எவர்களை زَعَمْتُمْ கூறினீர்கள் مِّنْ دُوْنِهٖ அவனையன்றி فَلَا يَمْلِكُوْنَ உரிமை, ஆற்றல் பெற மாட்டார்கள் كَشْفَ நீக்குவதற்கு الضُّرِّ துன்பத்தை عَنْكُمْ உங்களை விட்டு وَلَا تَحْوِيْلًا இன்னும் திருப்புவதற்கும்
17:56. குலித் 'உல் லதீன Zஜ'அம்தும் மின் தூனிஹீ Fபலா யம்லிகூன கஷ்Fபத் ளுர்ரி'அன்கும் வலா தஹ்வீலா
17:56. அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்).
17:57 اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ يَدْعُوْنَ يَبْتَغُوْنَ اِلٰى رَبِّهِمُ الْوَسِيْلَةَ اَيُّهُمْ اَقْرَبُ وَيَرْجُوْنَ رَحْمَتَهٗ وَيَخَافُوْنَ عَذَابَهٗؕ اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا
اُولٰۤٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்களை يَدْعُوْنَ பிரார்த்திக்கிறார்கள் يَبْتَغُوْنَ தேடுகின்றனர் اِلٰى பக்கம் رَبِّهِمُ தங்கள் இறைவன் الْوَسِيْلَةَ நன்மையை اَيُّهُمْ தங்களில் யார் اَقْرَبُ மிக நெருங்கியவராக وَيَرْجُوْنَ இன்னும் ஆதரவு வைக்கின்றனர் رَحْمَتَهٗ அவனுடையஅருளை وَيَخَافُوْنَ இன்னும் பயப்படுகின்றனர் عَذَابَهٗؕ வேதனையை/அவனுடைய اِنَّ நிச்சயமாக عَذَابَ வேதனை رَبِّكَ உம் இறைவனின் كَانَ இருக்கின்றது مَحْذُوْرًا பயப்படவேண்டியதாக
17:57. உலா'இகல் லதீன யத்'ஊன யBப்தகூன இலா ரBப்Bபிஹிமுல் வஸீலத அய்யுஹும் அக்ரBபு வ யர்ஜூன ரஹ்மதஹூ வ யகாFபூன 'அதாBபஹ்; இன்ன 'அதாBப ரBப்Bபிக கான மஹ்தூரா
17:57. (அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது.
17:58 وَاِنْ مِّنْ قَرْيَةٍ اِلَّا نَحْنُ مُهْلِكُوْهَا قَبْلَ يَوْمِ الْقِيٰمَةِ اَوْ مُعَذِّبُوْهَا عَذَابًا شَدِيْدًا ؕ كَانَ ذٰ لِكَ فِى الْـكِتٰبِ مَسْطُوْرًا
وَاِنْ مِّنْ அறவே இல்லை قَرْيَةٍ ஊர் اِلَّا தவிர نَحْنُ நாம் مُهْلِكُوْهَا அதை அழிப்பவர்களாக قَبْلَ முன்பு يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளுக்கு اَوْ அல்லது مُعَذِّبُوْهَا வேதனை செய்பவர்களாக/அதை عَذَابًا வேதனை شَدِيْدًا ؕ கடுமையானது كَانَ இருக்கின்றது ذٰ لِكَ இது فِى الْـكِتٰبِ புத்தகத்தில் مَسْطُوْرًا எழுதப்பட்டதாக
17:58. வ இன் மின் கர்யதின் இல்லா னஹ்னு முஹ்லிகூஹா கBப்ல யவ்மில் கியாமதி அவ் மு'அத் திBபூஹா 'அதாBபன் ஷதீதா; கான தாலிக Fபில் கிதாBபி மஸ்தூரா
17:58. இன்னும் கியாம நாளைக்கு முன்னே (அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊரையும் நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை; இது(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் வரையப்பெற்றே இருக்கிறது.
17:59 وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰيٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَؕ وَاٰتَيْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَاؕ وَمَا نُرْسِلُ بِالْاٰيٰتِ اِلَّا تَخْوِيْفًا
وَمَا தடுக்கவில்லை مَنَعَنَاۤ நம்மை اَنْ نُّرْسِلَ நாம் அனுப்பிவைக்க بِالْاٰيٰتِ அத்தாட்சிகளை اِلَّاۤ தவிர اَنْ كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) بِهَا அவற்றை الْاَوَّلُوْنَؕ முன்னோர் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் ثَمُوْدَ ஸமூதுக்கு النَّاقَةَ பெண் ஒட்டகத்தை مُبْصِرَةً தெளிவான அத்தாட்சியாக فَظَلَمُوْا தீங்கிழைத்தனர் بِهَاؕ அதற்கு وَمَا نُرْسِلُ அனுப்ப மாட்டோம் بِالْاٰيٰتِ அத்தாட்சிகளை اِلَّا தவிர تَخْوِيْفًا பயமுறுத்தலாகவே
17:59. வமா மன'அனா அன் னுர்ஸில Bபில் ஆயாதி இல்லா அன் கத்தBப Bபிஹல் அவ்வலூன்; வ ஆதய்னா தமூதன் னாகத முBப்ஸிரதன் Fபளலமூ Bபிஹா; வமா னுர்ஸிலு Bபில் ஆயாதி இல்லா தக்வீFபா
17:59. (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.
17:60 وَاِذْ قُلْنَا لَـكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِ ؕ وَمَا جَعَلْنَا الرُّءْيَا الَّتِىْۤ اَرَيْنٰكَ اِلَّا فِتْنَةً لِّلنَّاسِ وَ الشَّجَرَةَ الْمَلْعُوْنَةَ فِى الْقُرْاٰنِ ؕ وَنُخَوِّفُهُمْۙ فَمَا يَزِيْدُهُمْ اِلَّا طُغْيَانًا كَبِيْرًا
وَاِذْ قُلْنَا நாம் கூறிய சமயம் لَـكَ உமக்கு اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் اَحَاطَ சூழ்ந்து கொண்டான் بِالنَّاسِ ؕ மனிதர்களை وَمَا جَعَلْنَا இன்னும் நாம்ஆக்கவில்லை الرُّءْيَا காட்சியை الَّتِىْۤ எது اَرَيْنٰكَ உமக்குகாண்பித்தோம் اِلَّا தவிர فِتْنَةً சோதனையாக لِّلنَّاسِ மனிதர்களுக்கு وَ الشَّجَرَةَ இன்னும் மரத்தை الْمَلْعُوْنَةَ சபிக்கப்பட்டது فِى الْقُرْاٰنِ ؕ குர்ஆனில் وَنُخَوِّفُهُمْۙ இன்னும் பயமுறுத்துகிறோம்/அவர்களை فَمَا يَزِيْدُ அதிகப்படுத்துவ தில்லை هُمْ அவர்களுக்கு اِلَّا தவிர طُغْيَانًا அட்டூழியத்தை كَبِيْرًا பெரியது
17:60. வ இத் குல்னா லக இன்ன ரBப்Bபக அஹாத Bபின்னாஸ்; வமா ஜ'அல்னர் ரு'யல் லதீ அரய்னாக இல்லா Fபித்னதல் லின்னாஸி வஷ்ஷஜரதல் மல்'ஊனத Fபில் குர்'ஆன்; வ னுகவ் விFபுஹும் Fபமா யZஜீதுஹும் இல்லா துக்யானன் கBபீரா
17:60. (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.
17:61 وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِيْنًا ۚ
وَاِذْ قُلْنَا நாம் கூறிய சமயம் لِلْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْۤا சிரம் பணிந்தனர் اِلَّاۤ தவிர اِبْلِيْسَ இப்லீஸ் قَالَ கூறினான் ءَاَسْجُدُ நான் சிரம் பணிவதா? لِمَنْ எவருக்கு خَلَقْتَ நீ படைத்தாய் طِيْنًا ۚ மண்ணிலிருந்து
17:61. வ இத் குல்னா லில் மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ கால 'அ-அஸ்ஜுது லிமன் கலக்த தீனா
17:61. இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.
17:62 قَالَ اَرَءَيْتَكَ هٰذَا الَّذِىْ كَرَّمْتَ عَلَىَّ لَٮِٕنْ اَخَّرْتَنِ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَاَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهٗۤ اِلَّا قَلِيْلًا
قَالَ கூறினான் اَرَءَيْتَكَ நீ அறிவிப்பாயாக هٰذَا இவர்தானா الَّذِىْ எவர் كَرَّمْتَ நீ கண்ணியப்படுத்தினாய் عَلَىَّ என்னை விட لَٮِٕنْ اَخَّرْتَنِ நீ பிற்படுத்தினால் / என்னை اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாள் لَاَحْتَنِكَنَّ நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன் ذُرِّيَّتَهٗۤ இவருடைய சந்ததிகளை اِلَّا தவிர قَلِيْلًا குறைவானவர்களை
17:62. கால அர'அய்தக ஹாதல் லதீ கர்ரம்த 'அலய்ய ல'இன் அகர்தனி இலா யவ்மில் கியாமதி ல அஹ்தனிகன்ன துர்ரிய்யதஹூ இல்லா கலீலா
17:62. “எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
17:63 قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَاِنَّ جَهَـنَّمَ جَزَآؤُكُمْ جَزَآءً مَّوْفُوْرًا
قَالَ கூறினான் اذْهَبْ போய்விடு فَمَنْ تَبِعَكَ யார்/பின்பற்றினார்/உன்னை مِنْهُمْ அவர்களில் فَاِنَّ நிச்சயமாக جَهَـنَّمَ நரகம்தான் جَزَآؤُ கூலி كُمْ உங்கள் جَزَآءً கூலியாக مَّوْفُوْرًا முழுமையானது
17:63. காலத் ஹBப் Fபமன் தBபி'அக மின்ஹும் Fப இன்ன ஜஹன்னம ஜZஜா'உகும் ஜZஜா'அம் மவ்Fபூரா
17:63. “நீ போய் விடு; அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் - நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிறப்பமான கூலியாக இருக்கும்.
17:64 وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ وَعِدْهُمْ ؕ وَمَا يَعِدُهُمُ الشَّيْطٰنُ اِلَّا غُرُوْرًا
وَاسْتَفْزِزْ இன்னும் தூண்டிவிடு مَنِ எவர் اسْتَطَعْتَ நீ இயன்றாய் مِنْهُمْ அவர்களில் بِصَوْتِكَ உன் சப்தத்தைக் கொண்டு وَاَجْلِبْ இன்னும் ஏவிவிடு عَلَيْهِمْ அவர்கள் மீது بِخَيْلِكَ உன் குதிரைப் படைகளை وَرَجِلِكَ இன்னும் உன் காலாட்படைகள் وَشَارِكْهُمْ இன்னும் நீ இணைந்து விடு/அவர்களுடன் فِى الْاَمْوَالِ செல்வங்களில் وَالْاَوْلَادِ இன்னும் சந்ததிகளில் وَعِدْ இன்னும் வாக்களி هُمْ ؕ அவர்களுக்கு وَمَا يَعِدُ வாக்களிக்க மாட்டான் هُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் اِلَّا தவிர غُرُوْرًا ஏமாற்றுவதற்கே
17:64. வஸ்தFப்ZஜிZஜ் மனிஸ் ததஃத மின்ஹும் Bபிஸவ்திக வ அஜ்லிBப் 'அலய்ஹிம் Bபிகய்லிக வ ரஜிலிக வ ஷாரிக் ஹும் Fபில் அம்வாலி வல் அவ்லாதி வ 'இத்ஹும்; வமா ய'இதுஹுமுஷ் ஷய்தானு இல்லா குரூரா
17:64. “இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.
17:65 اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَـكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ ؕ وَكَفٰى بِرَبِّكَ وَكِيْلًا
اِنَّ عِبَادِىْ நிச்சயமாக என் அடியார்கள் لَـيْسَ இல்லை لَـكَ உனக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது سُلْطٰنٌ ؕ ஓர் அதிகாரம் وَكَفٰى போதுமாகி விட்டான் بِرَبِّكَ உம் இறைவனே وَكِيْلًا பொறுப்பாளனாக
17:65. இன்ன 'இBபாதீ லய்ஸ லக 'அலய்ஹிம் ஸுல்தான்; வ கFபா Bபி ரBப்Bபிக வகீலா
17:65. “நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை” (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்.
17:66 رَبُّكُمُ الَّذِىْ يُزْجِىْ لَـكُمُ الْفُلْكَ فِى الْبَحْرِ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖؕ اِنَّهٗ كَانَ بِكُمْ رَحِيْمًا
رَبُّكُمُ உங்கள் இறைவன் الَّذِىْ எத்தகையவன் يُزْجِىْ செலுத்துகிறான் لَـكُمُ உங்களுக்காக الْفُلْكَ فِى الْبَحْرِ கப்பலை/கடலில் لِتَبْتَغُوْا நீங்கள் தேடுவதற்காக مِنْ فَضْلِهٖؕ அவனுடைய அருளிலிருந்து اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் بِكُمْ உங்கள் மீது رَحِيْمًا பெரும் கருணையாளனாக
17:66. ரBப்Bபுகுமுல் லதீ யுZஜ்ஜீ லகுமுல் Fபுல்க Fபில் Bபஹ்ரி லிதBப்தகூ மின் Fபள்லிஹ்; இன்னஹூ கான Bபிகும் ரஹீமா
17:66. (மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
17:67 وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِى الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّاۤ اِيَّاهُ ۚ فَلَمَّا نَجّٰٮكُمْ اِلَى الْبَرِّ اَعْرَضْتُمْ ؕ وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا
وَاِذَا ஏற்பட்டால் مَسَّكُمُ உங்களுக்கு الضُّرُّ தீங்கு, துன்பம் فِى الْبَحْرِ கடலில் ضَلَّ மறைந்துவிடுகின்றனர் مَنْ எவர், எவை تَدْعُوْنَ பிரார்தித்தீர்கள் اِلَّاۤ தவிர اِيَّاهُ ۚ அவனை فَلَمَّا அவன் பாதுகாத்தபோது نَجّٰٮكُمْ உங்களை اِلَى الْبَرِّ கரையில் اَعْرَضْتُمْ ؕ புறக்கணிக்கின்றீர்கள் وَكَانَ இருக்கின்றான் الْاِنْسَانُ மனிதன் كَفُوْرًا மகா நன்றி கெட்டவனாக
17:67. வ இதா மஸ்ஸகுமுள்ளுர்ரு Fபில் Bபஹ்ரி ளல்ல மன் தத்'ஊன இல்லா இய்யாஹு Fபலம்மா னஜ்ஜாகும் இலல் Bபர்ரி அஃரள்தும்; வ கானல் இன்ஸானு கFபூரா
17:67. இன்னும், கடலில் உங்களை ஏதேனும் துன்பம் தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
17:68 اَفَاَمِنْتُمْ اَنْ يَّخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ اَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوْالَـكُمْ وَكِيْلًا ۙ
اَفَاَمِنْتُمْ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? اَنْ يَّخْسِفَ அவன் சொருகிவிடுவதை بِكُمْ உங்களை جَانِبَ ஓரத்தில் الْبَرِّ பூமியில் اَوْ அல்லது يُرْسِلَ அவன் அனுப்புவதை عَلَيْكُمْ உங்கள் மீது حَاصِبًا கல் மழையை ثُمَّ பிறகு لَا تَجِدُوْا காணமாட்டீர்கள் لَـكُمْ உங்களுக்கு وَكِيْلًا ۙ ஒரு பொறுப்பாளரை
17:68. அFப அமின்தும் அ(ன்)ய் யக்ஸிFப Bபிகும் ஜானிBபல் Bபர்ரி அவ் யுர்ஸில 'அலய்கும் ஹாஸிBபன் தும்ம லா தஜிதூ லகும் வகீலா
17:68. (கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.
17:69 اَمْ اَمِنْتُمْ اَنْ يُّعِيْدَكُمْ فِيْهِ تَارَةً اُخْرٰى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِّنَ الرِّيْحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْۙ ثُمَّ لَا تَجِدُوْا لَـكُمْ عَلَيْنَا بِهٖ تَبِيْعًا
اَمْ اَمِنْتُمْ அல்லது பயமற்று இருக்கின்றீர்களா? اَنْ يُّعِيْدَ அவன் மீட்பதை كُمْ உங்களை فِيْهِ அதில் تَارَةً முறை اُخْرٰى மற்றொரு فَيُرْسِلَ அனுப்புவான் عَلَيْكُمْ உங்கள் மீது قَاصِفًا உடைத்தெரியக் கூடியது مِّنَ இருந்து الرِّيْحِ காற்று فَيُغْرِقَكُمْ அவன் மூழ்கடிப்பான்/உங்களை بِمَا كَفَرْتُمْۙ நீங்கள் நன்றி கெட்டதால் ثُمَّ பிறகு لَا تَجِدُوْا காணமாட்டீர்கள் لَـكُمْ உங்களுக்கு عَلَيْنَا நம்மிடம் بِهٖ அதற்காக تَبِيْعًا பழிதீர்ப்பவரை
17:69. அம் அமின்தும் அ(ன்)ய் யு'ஈதகும் Fபீஹி தாரதன் உக்ரா Fப யுர்ஸில 'அலய்கும் காஸிFபம் மினர் ரீஹி Fப யுக் ரிககும் Bபிமா கFபர்தும் தும்ம லா தஜிதூ லகும் 'அலய்னா Bபிஹீ தBபீ'ஆ
17:69. அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்.
17:70 وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا
وَلَـقَدْ திட்டவட்டமாக كَرَّمْنَا நாம் கண்ணியப்படுத்தினோம் بَنِىْۤ சந்ததிகளை اٰدَمَ ஆதமுடைய وَحَمَلْنٰهُمْ இன்னும் வாகனிக்கச் செய்தோம்/அவர்களை فِى الْبَرِّ கரையில் وَالْبَحْرِ இன்னும் கடலில் وَرَزَقْنٰهُمْ இன்னும் உணவளித்தோம்/அவர்களுக்கு مِّنَ இருந்து الطَّيِّبٰتِ நல்லவை وَفَضَّلْنٰهُمْ இன்னும் மேன்மைப்படுத்தினோம்/அவர்களை عَلٰى விட كَثِيْرٍ அதிகமானது مِّمَّنْ எவற்றிலிருந்து خَلَقْنَا நாம் படைத்தோம் تَفْضِيْلًا மேன்மையாக
17:70. வ லகத் கர்ரம்னா Bபனீ ஆதம வ ஹமல்னாஹும் Fபில் Bபர்ரி வல்Bபஹ்ரி வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி வ Fபள்ளல்னாஹும் 'அலா கதீரிம் மிம்மன் கலக்னா தFப்ளீலா
17:70. நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
17:71 يَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍۢ بِاِمَامِهِمْۚ فَمَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ فَاُولٰۤٮِٕكَ يَقْرَءُوْنَ كِتٰبَهُمْ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا
يَوْمَ நாள் نَدْعُوْا நாம் அழைப்போம் كُلَّ ஒவ்வொரு اُنَاسٍۢ மனிதன் بِاِمَامِهِمْۚ அவர்களின் தலைவர்களுடன் فَمَنْ எவர்(கள்) اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) كِتٰبَهٗ தமது புத்தகத்தை بِيَمِيْنِهٖ தமது வலக்கையில் فَاُولٰۤٮِٕكَ அத்தகையவர்கள் يَقْرَءُوْنَ வாசிப்பார்கள் كِتٰبَهُمْ தங்கள் புத்தகத்தை وَلَا يُظْلَمُوْنَ இன்னும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் فَتِيْلًا ஒரு நூல் அளவு
17:71. யவ்ம னத்'ஊ குல்ல உனாஸிம் Bபி இமாமிஹிம் Fபமன் ஊதிய கிதாBபஹூ Bபி யமீனிஹீ Fப உலா'இக யக்ர'ஊன கிதாBபஹும் வலா யுள்லமூன Fபதீலா
17:71. (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
17:72 وَمَنْ كَانَ فِىْ هٰذِهٖۤ اَعْمٰى فَهُوَ فِى الْاٰخِرَةِ اَعْمٰى وَاَضَلُّ سَبِيْلًا
وَمَنْ எவர் كَانَ இருந்தார் فِىْ هٰذِهٖۤ இம்மையில் اَعْمٰى குருடராக فَهُوَ فِى الْاٰخِرَةِ அவர் மறுமையில் اَعْمٰى குருடர் وَاَضَلُّ இன்னும் மிக வழிகெட்டவர் سَبِيْلًا பாதையால்
17:72. வ மன் கான Fபீ ஹாதிஹீ அஃமா Fபஹுவ Fபில் ஆகிரதி அஃமா வ அளல்லு ஸBபீலா
17:72. யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்.
17:73 وَاِنْ كَادُوْا لَيَـفْتِنُوْنَكَ عَنِ الَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ لِتَفْتَرِىَ عَلَيْنَا غَيْرَهٗ ۖ وَاِذًا لَّاتَّخَذُوْكَ خَلِيْلًا
وَاِنْ كَادُوْا நிச்சயமாக நெருங்கி விட்டனர் لَيَـفْتِنُوْنَكَ அவர்கள் திருப்பிவிட/உம்மை عَنِ விட்டு الَّذِىْۤ எதை اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு لِتَفْتَرِىَ ஏனெனில் நீர் இட்டுக்கட்டுவதற்காக عَلَيْنَا நம் மீது غَيْرَهٗ அது அல்லாததை ۖ وَاِذًا அப்போது لَّاتَّخَذُوْكَ எடுத்துக் கொண்டிருப்பார்கள்/உம்மை خَلِيْلًا உற்ற நண்பராக
17:73. வ இன் காதூ ல யFப்தினூனக 'அனில் லதீ அவ்ஹய்னா இலய்க லிதFப்தரிய 'அலய்னா கய்ரஹூ வ இதல்லத் தகதூக கலீலா
17:73. (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே, அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்,) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
17:74 وَلَوْلَاۤ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَيْهِمْ شَيْــٴًـــا قَلِيْلًا ۙ
وَلَوْلَاۤ اَنْ ثَبَّتْنٰكَ நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால்/உம்மை لَقَدْ كِدْتَّ நெருங்கி இருப்பீர் تَرْكَنُ நீர் சாய்ந்துவிட اِلَيْهِمْ அவர்கள் பக்கம் شَيْــٴًـــا ஓர் அளவு قَلِيْلًا ۙ கொஞ்சம்
17:74. வ லவ் லா அன் தBப்Bபத்னாக லகத் கித்த தர்கனு இலய்ஹிம் ஷய்'அன் கலீலா
17:74. மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.
17:75 اِذًا لَّاَذَقْنٰكَ ضِعْفَ الْحَيٰوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَـكَ عَلَيْنَا نَصِيْرًا
اِذًا அப்போது لَّاَذَقْنٰكَ சுவைக்க வைத்திருப்போம்/உம்மை ضِعْفَ இரு மடங்கு தண்டனையையும் الْحَيٰوةِ இவ்வாழ்க்கையில் وَضِعْفَ இன்னும் இரட்டிப்பு الْمَمَاتِ மரணத்திற்குப் பின் ثُمَّ பிறகு لَا تَجِدُ காணமாட்டீர் لَـكَ உமக்கு عَلَيْنَا நமக்கு எதிராக نَصِيْرًا உதவக்கூடியவரை
17:75. இதல் ல அதக்னாக ளிஃFபல் ஹயாதி வ ளிஃFபல் மமாதி தும்ம லா தஜிது லக 'அலய்னா னஸீரா
17:75. (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.
17:76 وَاِنْ كَادُوْا لَيَسْتَفِزُّوْنَكَ مِنَ الْاَرْضِ لِيُخْرِجُوْكَ مِنْهَا وَاِذًا لَّا يَلْبَـثُوْنَ خِلٰفَكَ اِلَّا قَلِيْلًا
وَاِنْ كَادُوْا நிச்சயமாக முயற்சிக்கின்றனர் لَيَسْتَفِزُّوْنَكَ அவர்கள் தூண்டிவிட/உம்மை مِنَ الْاَرْضِ ஊரிலிருந்து لِيُخْرِجُوْكَ அவர்கள் வெளியேற்றுவதற்காக/உம்மை مِنْهَا அதிலிருந்து وَاِذًا لَّا يَلْبَـثُوْنَ அப்போது வசித்திருக்க மாட்டார்கள் خِلٰفَكَ உமக்குப் பின்னால் اِلَّا قَلِيْلًا சொற்ப காலமே தவிர
17:76. வ இன் காதூ ல யஸ்தFபிZஜ்Zஜூனக மினல் அர்ளி லியுக்ரி ஜூக மின்ஹா வ இதல் லா யல்Bபதூன கிலாFபக இல்லா கலீலா
17:76. (நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள்.
17:77 سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيْلًا
سُنَّةَ நடைமுறை مَنْ எவர் قَدْ திட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் قَبْلَكَ உமக்கு முன்பு مِنْ رُّسُلِنَا நம் தூதர்களில் وَلَا تَجِدُ நீர் காணமாட்டீர் لِسُنَّتِنَا நம் நடைமுறையில் تَحْوِيْلًا மாற்றத்தை
17:77. ஸுன்னத மன் கத் அர்ஸல்னா கBப்லகமிர் ருஸுலினா வலா தஜிது லிஸுன்னதினா தஹ்வீலா
17:77. திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது; நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
17:78 اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِؕ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا
اَقِمِ நிலை நிறுத்துவீராக الصَّلٰوةَ தொழுகையை لِدُلُوْكِ சாய்ந்ததிலிருந்து الشَّمْسِ சூரியன் اِلٰى غَسَقِ இருள் வரை الَّيْلِ இரவின் وَقُرْاٰنَ இன்னும் தொழுகை الْـفَجْرِؕ ஃபஜ்ர் உடைய اِنَّ قُرْاٰنَ நிச்சயமாக தொழுகை الْـفَجْرِ ஃபஜ்ர் كَانَ இருக்கின்றது مَشْهُوْدًا வானவர்கள் கலந்து கொள்ளக்கூடியதாக
17:78. அகிமிஸ் ஸலாத லிதுலூ கிஷ் ஷம்ஸி இலா கஸகில் லய்லி வ குர்'ஆனல் Fபஜ்ரி இன்ன குர்'ஆனல் Fபஜ்ரி கான மஷ்ஹூதா
17:78. (நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.
17:79 وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ۖ عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا
وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ இரவில்/உறங்கி எழுந்து தொழுவீராக بِهٖ அதை (ஓதி) نَافِلَةً உபரியா(னதா)க لَّكَ உமக்கு ۖ عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ எழுப்புவான்/உம்மை رَبُّكَ உம் இறைவன் مَقَامًا இடத்தில் مَّحْمُوْدًا மஹ்மூது
17:79. வ மினல் லய்லி Fபதஹஜ்ஜத் Bபிஹீ னாFபிலதல் லக 'அஸா அ(ன்)ய் யBப்'அதக ரBப்Bபுக மகாமம் மஹ்மூதா
17:79. இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்ற (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.
17:80 وَقُلْ رَّبِّ اَدْخِلْنِىْ مُدْخَلَ صِدْقٍ وَّ اَخْرِجْنِىْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّىْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا
وَقُلْ இன்னும் கூறுவீராக رَّبِّ என் இறைவா اَدْخِلْنِىْ நுழையவை/என்னை مُدْخَلَ நுழைவிடத்தில் صِدْقٍ நல்லது وَّ اَخْرِجْنِىْ இன்னும் வெளியேற்று / என்னை مُخْرَجَ வெளியேறுமிடத்தில் صِدْقٍ நல்லது وَّاجْعَلْ இன்னும் ஏற்படுத்து لِّىْ எனக்கு مِنْ لَّدُنْكَ உன்னிடமிருந்து سُلْطٰنًا ஓர் ஆதாரத்தை نَّصِيْرًا உதவக்கூடியதாக
17:80. வ குர் ரBப்Bபி அத்கில்னீ முத்கல ஸித்கி(ன்)வ் வ அக்ரிஜ்னீ முக்ரஜ ஸித்கி(ன்)வ் வஜ்'அல் லீ மில்லதுன்க ஸுல்தானன் னஸீரா
17:80. “என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக.
17:81 وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا
وَقُلْ இன்னும் கூறுவீராக جَآءَ வந்தது الْحَـقُّ சத்தியம் وَزَهَقَ இன்னும் அழிந்தது الْبَاطِلُؕ அசத்தியம் اِنَّ الْبَاطِلَ நிச்சயமாகஅசத்தியம் كَانَ இருக்கின்றது زَهُوْقًا அழியக்கூடியதாக
17:81. வ குல் ஜா'அல் ஹக்கு வ Zஜஹகல் Bபாதில்; இன்னல் Bபாதில கான Zஜஹூகா
17:81. (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
17:82 وَنُنَزِّلُ مِنَ الْـقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا
وَنُنَزِّلُ இறக்குகிறோம் مِنَ الْـقُرْاٰنِ குர்ஆனில் مَا எது هُوَ அது شِفَآءٌ நோய் நிவாரணி وَّرَحْمَةٌ இன்னும் அருள் لِّـلْمُؤْمِنِيْنَۙ நம்பிக்கையாளர்களுக்கு وَلَا يَزِيْدُ அதிகப்படுத்தாது الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு اِلَّا خَسَارًا நஷ்டத்தைத் தவிர
17:82. வ னுனZஜ்Zஜிலு மினல் குர்'ஆனி மா ஹுவ ஷிFபா'உ(ன்)வ் வ ரஹ்மதுல்லில் மு'மினீன வலா யZஜீதுள் ளாலிமீன இல்லா கஸாரா
17:82. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
17:83 وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَـــٴُـوْسًا
وَاِذَاۤ اَنْعَمْنَا நாம் அருள் புரிந்தால் عَلَى الْاِنْسَانِ மனிதனுக்கு اَعْرَضَ புறக்கணிக்கின்றான் وَنَاٰ بِجَانِبِهٖۚ இன்னும் தூரமாகி விடுகிறான் وَاِذَا مَسَّهُ அணுகினால் / அவனை الشَّرُّ ஒரு தீங்கு كَانَ ஆகிவிடுகின்றான் يَـــٴُـوْسًا நிராசையுடையவனாக
17:83. வ இதா அன்'அம்னா 'அலல் இன்ஸானி அஃரள வ னஆ Bபிஜானி Bபிஹீ வ இதா மஸ்ஸஹுஷ் ஷர்ரு கான ய'ஊஸா
17:83. நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.
17:84 قُلْ كُلٌّ يَّعْمَلُ عَلٰى شَاكِلَتِهٖؕ فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰى سَبِيْلًا
قُلْ கூறுவீராக كُلٌّ ஒவ்வொருவரும் يَّعْمَلُ அமல் செய்கிறார் عَلٰى شَاكِلَتِهٖؕ தனது பாதையில் فَرَبُّكُمْ ஆகவே, உங்களது இறைவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنْ யார் என்பதை هُوَ அவர் اَهْدٰى மிக நேர்வழி பெற்றவர் سَبِيْلًا பாதையால்
17:84. குல் குல்லு(ன்)ய் யஃமலு 'அலா ஷாகிலதிஹீ Fப ரBப்Bபுகும் அஃலமு Bபிமன் ஹுவ அஹ்தா ஸBபீலா
17:84. (நபியே!) நீர் கூறுவீராக: “ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்.”
17:85 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا
وَيَسْــٴَــلُوْنَكَ கேட்கிறார்கள்/உம்மிடம் عَنِ பற்றி الرُّوْحِ ؕ ரூஹ் قُلِ கூறுவீராக الرُّوْحُ ரூஹ் مِنْ اَمْرِ கட்டளையினால் رَبِّىْ என் இறைவன் وَمَاۤ اُوْتِيْتُمْ நீங்கள் கொடுக்கப்படவில்லை مِّنَ الْعِلْمِ கல்வியில் اِلَّا தவிர قَلِيْلًا சொற்பமே
17:85. வ யஸ்'அலூனக 'அனிர்ரூஹ்; குலிர் ரூஹு மின் அம்ரி ரBப்Bபீ வ மா ஊதீதும் மினல் 'இல்மி இல்லா கலீலா
17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
17:86 وَلَٮِٕنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَـكَ بِهٖ عَلَيْنَا وَكِيْلًا ۙ
وَلَٮِٕنْ شِئْنَا நாம் நாடினால் لَنَذْهَبَنَّ நிச்சயம் போக்கி விடுவோம் بِالَّذِىْۤ எவற்றை اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு ثُمَّ பிறகு لَا تَجِدُ காணமாட்டீர் لَـكَ உமக்கு بِهٖ அதற்கு عَلَيْنَا நமக்கு எதிராக وَكِيْلًا ۙ ஒரு பொறுப்பாளரை
17:86. வ ல'இன் ஷி'னா லனத் ஹBபன்ன Bபில்லதீ அவ்ஹய்னா இலய்க தும்ம லா தஜிது லக Bபிஹீ 'அலய்னா வகீலா
17:86. (நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.
17:87 اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَيْكَ كَبِيْرًا
اِلَّا ஆனால் رَحْمَةً அருள் مِّنْ رَّبِّكَ ؕ உம் இறைவனுடைய اِنَّ நிச்சயமாக فَضْلَهٗ அவனுடைய அருள் كَانَ இருக்கிறது عَلَيْكَ உம்மீது كَبِيْرًا மிகப் பெரிதாக
17:87. இல்லா ரஹ்மதம் மிர் ரBப்Bபிக்; இன்ன Fபள்லஹூ கான 'அலய்க கBபீரா
17:87. ஆனால் உம் இறைவனுடைய ரஹ்மத்தைத் தவிர (இவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு வேறெதுவுமில்லை); நிச்சயமாக உம் மீது அவனுடைய அருட்கொடை மிகப் பெரிதாகவே இருக்கிறது.
17:88 قُلْ لَّٮِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰٓى اَنْ يَّاْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا يَاْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيْرًا
قُلْ கூறுவீராக لَّٮِٕنِ اجْتَمَعَتِ ஒன்று சேர்ந்தால் الْاِنْسُ மனிதர்கள் وَالْجِنُّ இன்னும் ஜின்கள் عَلٰٓى மீது اَنْ يَّاْتُوْا அவர்கள் வர بِمِثْلِ போன்றதைக் கொண்டு هٰذَا இது الْقُرْاٰنِ குர்ஆன் لَا يَاْتُوْنَ வர மாட்டார்கள் بِمِثْلِهٖ இது போன்றதைக் கொண்டு وَلَوْ كَانَ இருந்தாலும் சரியே بَعْضُهُمْ அவர்களில் சிலர் لِبَعْضٍ சிலருக்கு ظَهِيْرًا உதவியாளராக
17:88. குல் ல'இனிஜ் தம'அதில் இன்ஸு வல்ஜின்னு 'அலா அ(ன்)ய் ய'தூ Bபிமித்லி ஹாதல் குர்'ஆனி லா ய'தூன Bபிமித்லிஹீ வ லவ் கான Bபஃளுஹும் லிBபஃளின் ளஹீரா
17:88. “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.
17:89 وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِىْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ فَاَبٰٓى اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا
وَلَقَدْ திட்டவட்டமாக صَرَّفْنَا விவரித்தோம் لِلنَّاسِ மக்களுக்கு فِىْ هٰذَا இதில் الْقُرْاٰنِ குர்ஆன் مِنْ كُلِّ مَثَلٍ எல்லா உதாரணங்களையும் فَاَبٰٓى மறுத்தனர் اَكْثَرُ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் اِلَّا தவிர كُفُوْرًا நிராகரிப்பதை
17:89. வ லகத் ஸர்ரFப்னா லின்னாஸி Fபீ ஹாதல் குர்'ஆனி மின் குல்லி மதலின் Fப அBபா அக்தருன் னாஸி இல்லா குFபூரா
17:89. நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.
17:90 وَقَالُوْا لَنْ نُّـؤْمِنَ لَـكَ حَتّٰى تَفْجُرَ لَنَا مِنَ الْاَرْضِ يَنْۢبُوْعًا ۙ
وَقَالُوْا இன்னும் கூறினர் لَنْ نُّـؤْمِنَ நம்பிக்கை கொள்ளவே மாட்டோம் لَـكَ உம்மை حَتّٰى வரை تَفْجُرَ நீர் பிளந்து விடுவீர் لَنَا எங்களுக்கு مِنَ الْاَرْضِ பூமியில் يَنْۢبُوْعًا ۙ ஓர் ஊற்றை
17:90. வ காலூ லன் னு'மின லக ஹத்தா தFப்ஜுர லனா மினல் அர்ளி யம்Bபூ'ஆ
17:90. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.
17:91 اَوْ تَكُوْنَ لَـكَ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّعِنَبٍ فَتُفَجِّرَ الْاَنْهٰرَ خِلٰلَهَا تَفْجِيْرًا ۙ
اَوْ அல்லது تَكُوْنَ இருக்கிறது لَـكَ உமக்கு جَنَّةٌ ஒரு தோட்டம் مِّنْ இருந்து نَّخِيْلٍ பேரிட்சை மரம் وَّعِنَبٍ இன்னும் திராட்சை செடி فَتُفَجِّرَ பிளந்தோடச் செய்கின்றீர் الْاَنْهٰرَ நதிகளை خِلٰلَهَا அதற்கு மத்தியில் تَفْجِيْرًا ۙ பிளப்பதாக
17:91. அவ் தகூன லக ஜன்னதும் மின் னகீலி(ன்)வ் வ 'இனBபின் FபதுFபஜ்ஜிரல் அன்ஹார கிலாலஹா தFப்ஜீரா
17:91. “அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும்.
17:92 اَوْ تُسْقِطَ السَّمَآءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا اَوْ تَاْتِىَ بِاللّٰهِ وَالْمَلٰۤٮِٕكَةِ قَبِيْلًا ۙ
اَوْ அல்லது تُسْقِطَ நீர் விழவைக்கின்றீர் السَّمَآءَ வானத்தை كَمَا போன்று زَعَمْتَ நீர் கூறியது عَلَيْنَا எங்கள் மீது كِسَفًا துண்டுகளாக اَوْ அல்லது تَاْتِىَ بِاللّٰهِ அல்லாஹ்வை வரவைக்கின்றீர் وَالْمَلٰۤٮِٕكَةِ இன்னும் வானவர்களை قَبِيْلًا ۙ கண்முன்
17:92. அவ் துஸ்கிதஸ் ஸமா'அ கமா Zஜ'அம்த 'அலய்னா கிஸFபன் அவ் த'திய Bபில்லாஹி வல் மலா'இகதி கBபீலா
17:92. “அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை; அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் (நமக்குமுன்) நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி.
17:93 اَوْ يَكُوْنَ لَـكَ بَيْتٌ مِّنْ زُخْرُفٍ اَوْ تَرْقٰى فِى السَّمَآءِ ؕ وَلَنْ نُّـؤْمِنَ لِرُقِيِّكَ حَتّٰى تُنَزِّلَ عَلَيْنَا كِتٰبًا نَّـقْرَؤُهٗ ؕ قُلْ سُبْحَانَ رَبِّىْ هَلْ كُنْتُ اِلَّا بَشَرًا رَّسُوْلًا
اَوْ அல்லது يَكُوْنَ இருக்கும் لَـكَ உமக்கு بَيْتٌ ஒரு வீடு مِّنْ زُخْرُفٍ தங்கத்தில் اَوْ அல்லது تَرْقٰى நீர் ஏறுவாய் فِى السَّمَآءِ ؕ வானத்தில் وَلَنْ نُّـؤْمِنَ அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம் لِرُقِيِّكَ உமது ஏறுதலுக்காக حَتّٰى வரை تُنَزِّلَ இறக்கி வைப்பீர் عَلَيْنَا எங்கள் மீது كِتٰبًا ஒரு வேதத்தை نَّـقْرَؤُهٗ ؕ அதைப் படிக்கின்றோம் قُلْ கூறுவீராக سُبْحَانَ மிகப்பரிசுத்தமானவன் رَبِّىْ என் இறைவன் هَلْ ? كُنْتُ இருக்கின்றேன் اِلَّا தவிர بَشَرًا ஒரு மனிதராக رَّسُوْلًا தூதரான
17:93. அவ் யகூன லக Bபய்தும் மின் Zஜுக்ருFபின் அவ் தர்கா Fபிஸ் ஸமா'இ வ லன் னு'மின லிருகிய்யிக ஹத்தா துனZஜ்Zஜில 'அலய்னா கிதாBபன் னக்ர'உஹ்; குல் ஸுBப்ஹான ரBப்Bபீ ஹல் குன்து இல்லா Bபஷரர் ரஸூலா
17:93. “அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.
17:94 وَمَا مَنَعَ النَّاسَ اَنْ يُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰٓى اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا
وَمَا مَنَعَ தடுக்கவில்லை النَّاسَ மனிதர்களை اَنْ يُّؤْمِنُوْۤا அவர்கள் நம்பிக்கைகொள்வது اِذْ போது جَآءَهُمُ அவர்களுக்கு வந்தது الْهُدٰٓى நேர்வழி اِلَّاۤ தவிர اَنْ قَالُـوْۤا அவர்கள் கூறியது اَبَعَثَ அனுப்பினானா? اللّٰهُ அல்லாஹ் بَشَرًا மனிதரை رَّسُوْلًا தூதராக
17:94. வமா மன'அன் னாஸ அ(ன்)ய் யு'மினூ இத் ஜா'அஹுமுல் ஹுதா இல்லா அன் காலூ அBப'அதல் லாஹு Bபஷரர் ரஸூலா
17:94. மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, “ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்” என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை.
17:95 قُلْ لَّوْ كَانَ فِى الْاَرْضِ مَلٰۤٮِٕكَةٌ يَّمْشُوْنَ مُطْمَٮِٕنِّيْنَ لَـنَزَّلْنَا عَلَيْهِمْ مِّنَ السَّمَآءِ مَلَـكًا رَّسُوْلًا
قُلْ கூறுவீராக لَّوْ كَانَ இருந்திருந்தால் فِى الْاَرْضِ பூமியில் مَلٰۤٮِٕكَةٌ வானவர்கள் يَّمْشُوْنَ நடக்கின்றனர் مُطْمَٮِٕنِّيْنَ நிம்மதியானவர்களாக لَـنَزَّلْنَا இறக்கியிருப்போம் عَلَيْهِمْ அவர்களிடம் مِّنَ இருந்து السَّمَآءِ வானம் مَلَـكًا வானவரை رَّسُوْلًا ஒரு தூதராக
17:95. குல் லவ் கான Fபில் அர்ளி மலா 'இகது(ன்)ய் யம்ஷூன முத்ம'இன் னீன லனZஜ்Zஜல்னா 'அலய்ஹிம் மினஸ் ஸமா'இ மலகர் ரஸூலா
17:95. (நபியே!) நீர் கூறும்: “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று.
17:96 قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنِىْ وَبَيْنَكُمْؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا
قُلْ கூறுவீராக كَفٰى போதுமாகி விட்டான் بِاللّٰهِ அல்லாஹ்வே شَهِيْدًۢا சாட்சியாளனாக بَيْنِىْ எனக்கிடையில் وَبَيْنَكُمْؕ இன்னும் உங்களுக்கிடையில் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் بِعِبَادِهٖ தன் அடியார்களை خَبِيْرًۢا ஆழ்ந்தறிந்தவனாக بَصِيْرًا உற்று நோக்கினவனாக
17:96. குல் கFபா Bபில்லாஹி ஷஹீதம் Bபய்னீ வ Bபய்னகும்; இன்னஹூ கான Bபி'இBபாதிஹீ கBபீரம் Bபஸீரா
17:96. “எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
17:97 وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِيَآءَ مِنْ دُوْنِهٖ ؕ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيٰمَةِ عَلٰى وُجُوْهِهِمْ عُمْيًا وَّبُكْمًا وَّصُمًّا ؕ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ ؕ كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِيْرًا
وَمَنْ எவரை يَّهْدِ நேர்வழி செலுத்துவான் اللّٰهُ அல்லாஹ் فَهُوَ அவர்தான் الْمُهْتَدِ ۚ நேர்வழி பெற்றவர் وَمَنْ இன்னும் எவரை يُّضْلِلْ வழிகெடுப்பான் فَلَنْ تَجِدَ அறவே காணமாட்டீர் لَهُمْ அவர்களுக்கு اَوْلِيَآءَ உதவியாளர்களை مِنْ دُوْنِهٖ ؕ அவனையன்றி وَنَحْشُرُ இன்னும் ஒன்றுசேர்ப்போம் هُمْ அவர்களை يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் عَلٰى وُجُوْهِهِمْ தங்கள் முகங்கள் மீது عُمْيًا குருடர்களாக وَّبُكْمًا இன்னும் ஊமையர்களாக وَّصُمًّا ؕ இன்னும் செவிடர்களாக مَاْوٰٮهُمْ அவர்களுடைய தங்குமிடம் جَهَـنَّمُ ؕ நரகம்தான் كُلَّمَا خَبَتْ அது அனல் தணியும் போதெல்லாம் زِدْنٰهُمْ அதிகப்படுத்துவோம்/அவர்களுக்கு سَعِيْرًا கொழுந்து விட்டெரியும் நெருப்பை
17:97. வ மய் யஹ்தில் லாஹு Fபஹுவல் முஹ்தத்; வ மய் யுள்லில் Fபலன் தஜித லஹும் அவ்லியா'அ மின் தூனிஹ்; வ னஹ்ஷுருஹும் யவ்மல் கியாமதி 'அலா வுஜூஹிஹிம் உம்ய(ன்)வ் வ Bபுக்ம(ன்)வ் வ ஸும்மா; ம'வாஹும் ஜஹன்னமு குல்லமா கBபத் Zஜித்னாஹும் ஸ'ஈரா
17:97. அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.
17:98 ذٰلِكَ جَزَآؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰيٰتِنَا وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا
ذٰلِكَ இது جَزَآؤُهُمْ கூலி, தண்டனை/அவர்களின் بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக/அவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَقَالُوْۤا இன்னும் கூறினர் ءَاِذَا كُنَّا நாங்கள் ஆகிவிட்டால்? عِظَامًا எலும்புகளாக وَّرُفَاتًا இன்னும் மக்கியவர்களாக ءَاِنَّا ?/நிச்சயமாக நாம் لَمَبْعُوْثُوْنَ எழுப்பப்படுவோம் خَلْقًا படைப்பாக جَدِيْدًا புதியது
17:98. தாலிக ஜZஜா'உஹும் Bபி அன்னஹும் கFபரூ Bபி ஆயாதினா வ காலூ 'அ இதா குன்னா 'இளாம(ன்)வ் வ ருFபாதன் 'அ இன்னா ல மBப்'ஊதூன கல்கன் ஜதீதா
17:98. அவர்கள் தம் வசனங்களை நிராகரித்து, “நாம் (மரித்து) எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு மண்ணாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பபடுவோமா?” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுடைய கூலி இது தான்.
17:99 اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ قَادِرٌ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ اَجَلًا لَّا رَيْبَ فِيْهِ ؕ فَاَبَى الظّٰلِمُوْنَ اِلَّا كُفُوْرًا
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் الَّذِىْ எத்தகையவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை قَادِرٌ ஆற்றலுடையவன் عَلٰٓى மீது اَنْ يَّخْلُقَ அவன் படைக்க مِثْلَهُمْ அவர்கள் போன்றவர்களை وَجَعَلَ இன்னும் ஆக்கினான் لَهُمْ அவர்களுக்கு اَجَلًا ஒரு தவணையை لَّا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ ؕ அதில் فَاَبَى ஏற்க மறுத்தார்(கள்) الظّٰلِمُوْنَ அக்கிரமக்காரர்கள் اِلَّا தவிர كُفُوْرًا நிராகரிப்பை
17:99. அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள காதிருன் 'அலா அ(ன்)ய் யக்லுக மித்லஹும் வ ஜ'அல லஹும் அஜலல் லா ரய்Bப Fபீ; Fப அBபள் ளாலிமூன இல்லா குFபூரா
17:99. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை, எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை!
17:100 قُلْ لَّوْ اَنْـتُمْ تَمْلِكُوْنَ خَزَآٮِٕنَ رَحْمَةِ رَبِّىْۤ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْيَةَ الْاِنْفَاقِ ؕ وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا
قُلْ கூறுவீராக لَّوْ اَنْـتُمْ تَمْلِكُوْنَ நீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால் خَزَآٮِٕنَ பொக்கிஷங்களை رَحْمَةِ அருளின் رَبِّىْۤ என் இறைவனுடைய اِذًا அப்போது لَّاَمْسَكْتُمْ தடுத்துக் கொண்டிருப்பீர்கள் خَشْيَةَ பயந்து الْاِنْفَاقِ ؕ தர்மம் செய்வது وَكَانَ இருக்கின்றான் الْاِنْسَانُ மனிதன் قَتُوْرًا மகா கஞ்சனாக
17:100. குல் லவ் அன்தும் தம்லிகூன கZஜா'இன ரஹ்மதி ரBப்Bபீ இதல் ல அம்ஸக்தும் கஷ் யதல் இன்Fபாக்; வ கானல் இன்ஸானு கதூரா
17:100. “என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறும்.
17:101 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسٰى تِسْعَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ فَسْــٴَــلْ بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ اِذْ جَآءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّىْ لَاَظُنُّكَ يٰمُوْسٰى مَسْحُوْرًا
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسٰى மூஸாவிற்கு تِسْعَ ஒன்பது اٰيٰتٍۢ அத்தாட்சிகள் بَيِّنٰتٍ தெளிவானவை فَسْــٴَــلْ ஆகவே கேட்பீராக بَنِىْۤ சந்ததிகளை اِسْرَاۤءِيْلَ இஸ்ராயீலின் اِذْ جَآءَ அவர் வந்த போது هُمْ அவர்களிடம் فَقَالَ கூறினான் لَهٗ அவரைக் நோக்கி فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் اِنِّىْ நிச்சயமாக நான் لَاَظُنُّكَ எண்ணுகிறேன்/உம்மை يٰمُوْسٰى மூஸாவே! مَسْحُوْرًا சூனியக்காரராக
17:101. வ லகத் ஆதய்னா மூஸா திஸ்'அ ஆயாதிம் Bபய்யினாதின் Fபஸ்'அல் Bபனீ இஸ்ரா'ஈல இத் ஜா'அஹும் Fபகால லஹூ Fபிர்'அவ்னு இன்னீ ல அளுன்னுக யா மூஸா மஸ் ஹூரா
17:101. நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்” என்று கூறினான்.
17:102 قَالَ لَقَدْ عَلِمْتَ مَاۤ اَنْزَلَ هٰٓؤُلَاۤءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَآٮِٕرَ ۚ وَاِنِّىْ لَاَظُنُّكَ يٰفِرْعَوْنُ مَثْبُوْرًا
قَالَ கூறினார் لَقَدْ திட்டவட்டமாக عَلِمْتَ நீ அறிந்தாய் مَاۤ اَنْزَلَ இறக்கிவைக்கவில்லை هٰٓؤُلَاۤءِ இவற்றை اِلَّا தவிர رَبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ இன்னும் பூமி بَصَآٮِٕرَ ۚ தெளிவான அத்தாட்சிகளாக وَاِنِّىْ இன்னும் நிச்சயமாக நான் لَاَظُنُّكَ எண்ணுகிறேன்/உன்னை يٰفِرْعَوْنُ ஃபிர்அவ்னே مَثْبُوْرًا அழிந்துவிடுபவனாக
17:102. கால லகத் 'அலிம்த மா அன்Zஜல ஹா'உலா'இ இல்லா ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி Bபஸா'இர வ இன்னீ ல அளுன் னுக யா Fபிர்'அவ்னு மத்Bபூரா
17:102. (அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.
17:103 فَاَرَادَ اَنْ يَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَ مَنْ مَّعَهٗ جَمِيْعًا ۙ
فَاَرَادَ நாடினான் اَنْ يَّسْتَفِزَّ அவன் விரட்டிவிட هُمْ இவர்களை مِّنَ الْاَرْضِ பூமியிலிருந்து فَاَغْرَقْنٰهُ ஆகவே மூழ்கடித்தோம்/ அவனை وَ مَنْ இன்னும் எவர்கள் مَّعَهٗ அவனுடன் جَمِيْعًا ۙ அனைவரையும்
17:103. Fப அராத அ(ன்)ய் யஸ்தFபிZஜ்Zஜஹும் மினல் அர்ளி Fப அக்ரக்னாஹு வ மம் ம'அஹூ ஜமீ'ஆ
17:103. ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
17:104 وَّقُلْنَا مِنْۢ بَعْدِهٖ لِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ اسْكُنُوا الْاَرْضَ فَاِذَا جَآءَ وَعْدُ الْاٰخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيْفًا ؕ
وَّقُلْنَا இன்னும் நாம் கூறினோம் مِنْۢ بَعْدِهٖ இதன் பின்னர் لِبَنِىْۤ சந்ததிகளுக்கு اِسْرَاۤءِيْلَ இஸ்ராயீலின் اسْكُنُوا நீங்கள் வசியுங்கள் الْاَرْضَ பூமியில் فَاِذَا جَآءَ வந்தால் وَعْدُ வாக்குறுதி الْاٰخِرَةِ மறுமையின் جِئْنَا بِكُمْ உங்களை வரவைப்போம் لَفِيْفًا ؕ அனைவரையும், ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக
17:104. வ குல்னா மின் Bபஃதிஹீ லி Bபனீ இஸ்ரா'ஈலஸ் குனுல் அர்ள Fப இதா ஜா'அ வஃதுல் ஆகிரதி ஜி'னா Bபிகும் லFபீFபா
17:104. இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”
17:105 وَبِالْحَـقِّ اَنْزَلْنٰهُ وَبِالْحَـقِّ نَزَلَ ؕ وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًا ۘ
وَبِالْحَـقِّ இன்னும் உண்மையைக் கொண்டே اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் وَبِالْحَـقِّ இன்னும் உண்மையைக் கொண்டே نَزَلَ ؕ இது இறங்கியது وَمَاۤ நாம் அனுப்பவில்லை اَرْسَلْنٰكَ உம்மை اِلَّا தவிர مُبَشِّرًا நற்செய்தி கூறுபவராக وَّنَذِيْرًا ۘ இன்னும் எச்சரிப்பவராக
17:105. வ Bபில்ஹக்கி அன்Zஜல்னாஹு வ Bபில்ஹக்கி னZஜல்; வ மா அர்ஸல்னாக இல்லா முBபஷ் ஷிர(ன்)வ் வ னதீரா
17:105. இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது; மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.
17:106 وَقُرْاٰنًا فَرَقْنٰهُ لِتَقْرَاَهٗ عَلَى النَّاسِ عَلٰى مُكْثٍ وَّنَزَّلْنٰهُ تَنْزِيْلًا
وَقُرْاٰنًا இன்னும் குர்ஆனாக فَرَقْنٰهُ நாம் தெளிவு படுத்தினோம்/இதை لِتَقْرَاَهٗ நீர் ஓதுவதற்காக/இதை عَلَى النَّاسِ மக்களுக்கு عَلٰى مُكْثٍ கவனத்துடன் وَّنَزَّلْنٰهُ இன்னும் இறக்கினோம்/இதை تَنْزِيْلًا கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்
17:106. வ குர்'ஆனன் Fபரக்னாஹு லிதக்ர அஹூ 'அலன் னாஸி 'அலா முக்தி(ன்)வ் வ னZஜ்Zஜல்னாஹு தன்Zஜீலா
17:106. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம்.
17:107 قُلْ اٰمِنُوْا بِهٖۤ اَوْ لَا تُؤْمِنُوْٓا ؕ اِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهٖۤ اِذَا يُتْلٰى عَلَيْهِمْ يَخِرُّوْنَ لِلْاَذْقَانِ سُجَّدًا ۙ
قُلْ கூறுவீராக اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِهٖۤ இதை اَوْ அல்லது لَا تُؤْمِنُوْٓا ؕ நம்பிக்கை கொள்ளாதீர்கள் اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டனர் الْعِلْمَ கல்வி مِنْ قَبْلِهٖۤ இதற்கு முன்னர் اِذَا يُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது يَخِرُّوْنَ விழுவார்கள் لِلْاَذْقَانِ தாடைகள் மீது سُجَّدًا ۙ சிரம்பணிந்தவர்களாக
17:107. குல் ஆமினூ Bபிஹீ அவ் லா து'மினூ; இன்னல் லதீன ஊதுல் 'இல்ம மின் கBப்லிஹீ இதா யுத்லா 'அலய்ஹிம் யகிர்ரூன லில் அத்கானி ஸுஜ்ஜதா
17:107. (நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
17:108 وَّيَقُوْلُوْنَ سُبْحٰنَ رَبِّنَاۤ اِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُوْلًا
وَّيَقُوْلُوْنَ இன்னும் கூறுவார்கள் سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் رَبِّنَاۤ எங்கள் இறைவன் اِنْ நிச்சயமாக كَانَ இருக்கிறது وَعْدُ வாக்கு رَبِّنَا எங்கள் இறைவனின் لَمَفْعُوْلًا நிறைவேற்றப்பட்டதாகவே
17:108. வ யகூலூன ஸுBப்ஹான ரBப்Bபினா இன் கான வஃது ரBப்Bபினா லமFப்'ஊலா
17:108. அன்றியும், “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
17:109 وَيَخِرُّوْنَ لِلْاَذْقَانِ يَبْكُوْنَ وَيَزِيْدُهُمْ خُشُوْعًا ۩
وَيَخِرُّوْنَ இன்னும் விழுவார்கள் لِلْاَذْقَانِ தாடைகள் மீது يَبْكُوْنَ அழுவார்கள் (அழுதவர்களாக) وَيَزِيْدُ இன்னும் அதிகப்படுத்தும் هُمْ அவர்களுக்கு خُشُوْعًا ۩ அச்சத்தை, பணிவை
17:109. வ யகிர்ரூன லில் அத்கானி யBப்கூன வ யZஜீதுஹும் குஷூ'ஆ
17:109. இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.
17:110 قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا
قُلِ கூறுவீராக ادْعُوا அழையுங்கள் اللّٰهَ அல்லாஹ் اَوِ அல்லது ادْعُوا அழையுங்கள் الرَّحْمٰنَ ؕ பேரருளாளன் اَ يًّا مَّا எப்படி, எதை تَدْعُوْا அழைத்தாலும் فَلَهُ அவனுக்கு الْاَسْمَآءُ பெயர்கள் الْحُسْنٰى ۚ மிக அழகியவை وَلَا تَجْهَرْ மிக சப்தமிட்டு ஓதாதீர் بِصَلَاتِكَ உமது தொழுகையில் وَلَا تُخَافِتْ மிக மெதுவாகவும் ஓதாதீர் بِهَا அதில் وَابْتَغِ தேடுவீராக بَيْنَ இடையில் ذٰ لِكَ அது سَبِيْلًا ஒரு வழியை
17:110. குலித்'உல் லாஹ அவித்'உர் ரஹ்மான அய்யம் மா தத்'ஊ Fபலஹுல் அஸ்மா'உல் ஹுஸ்னா; வலா தஜ்ஹர் Bபி ஸலாதிக வலா துகாFபித் Bபிஹா வBப்தகி Bபய்ன தாலிக ஸBபீலா
17:110. “நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக.
17:111 وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِىٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيْرًا
وَقُلِ இன்னும் கூறுவீராக الْحَمْدُ புகழனைத்தும் لِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே الَّذِىْ எத்தகையவன் لَمْ يَتَّخِذْ அவன் ஆக்கிக் கொள்ளவில்லை وَلَدًا குழந்தையை وَّلَمْ يَكُنْ இன்னும் அறவே இல்லை لَّهٗ அவனுக்கு شَرِيْكٌ இணை فِى الْمُلْكِ ஆட்சியில் وَلَمْ يَكُنْ அறவே இல்லை لَّهٗ அவனுக்கு وَلِىٌّ நண்பன் مِّنَ الذُّلِّ பலவீனத்தினால் وَكَبِّرْهُ இன்னும் பெருமைப்படுத்துவீராக/அவனை تَكْبِيْرًا பெருமைப்படுத்துதல்
17:111. வ குலில் ஹம்து லில்லாஹில் லதீ லம் யத்தகித் வலத(ன்)வ் வ லம் யகுல் லஹூ ஷரீகுன் Fபில் முல்கி வ லம் யகுல் லஹூ வலிய்யும் மினத் துல்லி வ கBப்Bபிர்ஹு தக்Bபீரா
17:111. “அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.