54. ஸூரத்துல் கமர் (சந்திரன்)
மக்கீ, வசனங்கள்: 55

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
54:1
54:1 اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏
اِقْتَـرَبَتِ நெருங்கிவிட்டது السَّاعَةُ மறுமை وَانْشَقَّ இன்னும் பிளந்து விட்டது الْقَمَرُ‏ சந்திரன்
54:1. இக்தரBபதிஸ் ஸா'அது வன் ஷக்கல் கமர்
54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
54:2
54:2 وَاِنْ يَّرَوْا اٰيَةً يُّعْرِضُوْا وَيَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ‏
وَاِنْ يَّرَوْا அவர்கள் பார்த்தால் اٰيَةً ஓர் அத்தாட்சியை يُّعْرِضُوْا புறக்கணிக்கின்றனர் وَيَقُوْلُوْا இன்னும் கூறுகின்றனர் سِحْرٌ சூனியமாகும் مُّسْتَمِرٌّ‏ தொடர்ச்சியான(து)
54:2. வ இ(ன்)ய் யரவ் ஆயத(ன்)ய் யுஃரிளூ வ யகூலூ ஸிஹ்ருன் முஸ்தமிர்ர்
54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
54:3
54:3 وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ‌ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ‏
وَكَذَّبُوْا இன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர் وَاتَّبَعُوْۤا இன்னும் பின்பற்றினார்கள் اَهْوَآءَهُمْ‌ தங்கள் மன இச்சைகளை وَكُلُّ எல்லா اَمْرٍ காரியங்களும் مُّسْتَقِرٌّ‏ நிலையாகத் தங்கக் கூடியதுதான்
54:3. வ கத்தBபூ வத்தBப'ஊ அஹ்வா'அஹும்; வ குல்லு அம்ரின் முஸ்தகிர்ர்
54:3. அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
54:4
54:4 وَلَقَدْ جَآءَهُمْ مِّنَ الْاَنْۢبَآءِ مَا فِيْهِ مُزْدَجَرٌۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَ வந்துவிட்டது هُمْ அவர்களிடம் مِّنَ الْاَنْۢبَآءِ செய்திகளில் مَا فِيْهِ எதில் இருக்குமோ مُزْدَجَرٌۙ‏ எச்சரிக்கை
54:4. வ லகத் ஜா'அஹும் மினல் அன்Bபா'இ மா Fபீஹி முZஜ்தஜர்
54:4. அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.
54:5
54:5 حِكْمَةٌ ۢ بَالِغَةٌ‌ فَمَا تُغْنِ النُّذُرُۙ‏
حِكْمَةٌ ۢ ஞானம் بَالِغَةٌ‌ மிக ஆழமான(து) فَمَا تُغْنِ ஆனால், பலனளிக்க முடியவில்லை النُّذُرُۙ‏ எச்சரிப்பாளர்கள்
54:5. ஹிக்மதுன் Bபாலிகதுன் Fபமா துக்னின் னுதுர்
54:5. நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
54:6
54:6 فَتَوَلَّ عَنْهُمْ‌ۘ يَوْمَ يَدْعُ الدَّاعِ اِلٰى شَىْءٍ نُّكُرٍۙ‏
فَتَوَلَّ ஆகவே, நீர் விலகி விடுவீராக! عَنْهُمْ‌ۘ அவர்களை விட்டு يَوْمَ நாளில் يَدْعُ அழைக்கின்ற الدَّاعِ அழைப்பாளர் اِلٰى شَىْءٍ ஒன்றை நோக்கி نُّكُرٍۙ‏ மிக கடினமான(து)
54:6. Fபதவல்ல 'அன்ஹும்; யவ்ம யத்'உத் தா'இ இலா ஷய் 'இன் னுகுர்
54:6. ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும்; (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்:
54:7
54:7 خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ‏
خُشَّعًا இழிவடைந்தநிலையில் اَبْصَارُهُمْ அவர்களது பார்வைகள் يَخْرُجُوْنَ அவர்கள் வெளியேறுவார்கள் مِنَ الْاَجْدَاثِ புதைக்குழிகளைவிட்டு كَاَنَّهُمْ جَرَادٌ அவர்கள் வெட்டுக் கிளிகளைப் போல مُّنْتَشِرٌۙ‏ பரவி வரக்கூடிய(து)
54:7. குஷ்ஷ'அன் அBப்ஸாருஹும் யக்ருஜூன மினல் அஜ்தாதி க அன்னஹும் ஜராதும் முன்தஷிர்
54:7. (தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.
54:8
54:8 مُّهْطِعِيْنَ اِلَى الدَّاعِ‌ؕ يَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا يَوْمٌ عَسِرٌ‏
مُّهْطِعِيْنَ பணிவுடன் பயத்துடன் விரைந்தவர்களாக வருவார்கள் اِلَى الدَّاعِ‌ؕ அழைப்பாளரை நோக்கி يَقُوْلُ கூறுவார்கள் الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் هٰذَا இது يَوْمٌ ஒரு நாள் عَسِرٌ‏ சிரமமான
54:8. முஹ்தி'ஈன இலத் தா'இ யகூலுல் காFபிரூன ஹாதா யவ்முன் 'அஸிர்
54:8. அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள்; “இது மிகவும் கஷ்டமான நாள்” என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
54:9
54:9 كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمُ மக்கள் نُوْحٍ நூஹூடைய فَكَذَّبُوْا ஆக, அவர்கள் பொய்ப்பித்தனர் عَبْدَنَا நமது அடியாரை وَقَالُوْا இன்னும் கூறினர் مَجْنُوْنٌ ஒரு பைத்தியக்காரர் وَّازْدُجِرَ‏ இன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்
54:9. கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹின் Fபகத்தBபூ 'அBப்தனா வ காலூ மஜ்னூனு(ன்)வ் வZஜ்துஜிர்
54:9. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.
54:10
54:10 فَدَعَا رَبَّهٗۤ اَنِّىْ مَغْلُوْبٌ فَانْـتَصِرْ‏
فَدَعَا ஆகவே, அவர் பிரார்த்தித்தார் رَبَّهٗۤ தனது இறைவனிடம் اَنِّىْ நிச்சயமாக நான் مَغْلُوْبٌ தோற்கடிக்கப்பட்டேன் فَانْـتَصِرْ‏ ஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!
54:10. Fபத'ஆ ரBப்Bபஹூ அன்னீ மக்லூBபுன் Fபன்தஸிர்
54:10. அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
54:11
54:11 فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ۖ‏
فَفَتَحْنَاۤ ஆகவே, நாம் திறந்து விட்டோம் اَبْوَابَ வாசல்களை السَّمَآءِ மேகத்தின் بِمَآءٍ மழையைக் கொண்டு مُّنْهَمِرٍ ۖ‏ அடை
54:11. FபFபதஹ்னா அBப்வாBபஸ் ஸமா'இ Bபி மா'இன் முன்ஹமிர்
54:11. ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
54:12
54:12 وَّفَجَّرْنَا الْاَرْضَ عُيُوْنًا فَالْتَقَى الْمَآءُ عَلٰٓى اَمْرٍ قَدْ قُدِرَ‌ۚ‏
وَّفَجَّرْنَا இன்னும் பீறிட்டு ஓடச்செய்தோம் الْاَرْضَ பூமியை عُيُوْنًا ஊற்றுக் கண்களால் فَالْتَقَى சந்தித்தன الْمَآءُ தண்ணீர் عَلٰٓى اَمْرٍ ஒரு காரியத்தின் மீது قَدْ قُدِرَ‌ۚ‏ திட்டமாகநிர்ணயிக்கப்பட்டது
54:12. வ Fபஜ்ஜர்னல் அர்ள 'உயூனன் Fபல்தகல் மா'உ 'அலா அம்ரின் கத் குதிர்
54:12. மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.
54:13
54:13 وَحَمَلْنٰهُ عَلٰى ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍۙ‏
وَحَمَلْنٰهُ அவரை பயணிக்க வைத்தோம் عَلٰى மீது ذَاتِ உடைய (கப்பல்) اَلْوَاحٍ பலகைகள் وَّدُسُرٍۙ‏ இன்னும் ஆணிகள்
54:13. வ ஹமல்னாஹு 'அலா தாதி அல்வாஹி(ன்)வ் வ துஸுர்
54:13. அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.
54:14
54:14 تَجْرِىْ بِاَعْيُنِنَا‌ۚ جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ‏
تَجْرِىْ அது செல்கிறது بِاَعْيُنِنَا‌ۚ நமது கண்களுக்கு முன்பாக جَزَآءً கூலி கொடுப்பதற்காக لِّمَنْ كَانَ كُفِرَ‏ நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு
54:14. தஜ்ரீ Bபி அஃயுனினா ஜZஜா'அன் லிமன் கான குFபிர்
54:14. எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
54:15
54:15 وَلَقَدْ تَّرَكْنٰهَاۤ اٰيَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக تَّرَكْنٰهَاۤ அதை விட்டுவைத்தோம் اٰيَةً ஓர் அத்தாட்சியாக فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏ நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
54:15. வ லகத் தரக்னாஹா ஆயதன் Fபஹல் மின் முத்தகிர்
54:15. நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:16
54:16 فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ‏
فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தன عَذَابِىْ எனது வேதனையும் وَنُذُرِ‏ எனது எச்சரிக்கையும்
54:16. Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
54:16. ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
54:17
54:17 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக يَسَّرْنَا நாம் எளிதாக்கினோம் الْقُرْاٰنَ இந்த குர்ஆனை لِلذِّكْرِ நல்லறிவு பெறுவதற்காக فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏ நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
54:17. வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
54:17. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:18
54:18 كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தது عَادٌ ஆது சமுதாயம் فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தன عَذَابِىْ எனது வேதனை(யும்) وَنُذُرِ‏ எனது எச்சரிக்கையும்
54:18. கத்தBபத் 'ஆதுன் Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
54:18. “ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)
54:19
54:19 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِىْ يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّۙ‏
اِنَّاۤ நிச்சயமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது رِيْحًا காற்றை صَرْصَرًا குளிர்ந்த சூறாவளி فِىْ يَوْمِ நாளில் نَحْسٍ ஒரு தீமையுடைய مُّسْتَمِرٍّۙ‏ நிலையான
54:19. இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹன் ஸர்ஸரன் Fபீ யவ்மி னஹ்ஸின் முஸ்தமிர்ர்
54:19. நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
54:20
54:20 تَنْزِعُ النَّاسَۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ‏
تَنْزِعُ அது கழட்டி எரிந்தது النَّاسَۙ மக்களை كَاَنَّهُمْ போல்/அவர்கள் ஆகிவிட்டார்கள் اَعْجَازُ பின் பகுதிகளை نَخْلٍ பேரீட்ச மரத்தின் مُّنْقَعِرٍ‏ வேரோடு சாய்ந்த
54:20. தன்Zஜி'உன் னாஸ க அன்னஹும் அஃஜாZஜு னக்லின் முன்க'இர்
54:20. நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்தூறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.
54:21
54:21 فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ‏
فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தன عَذَابِىْ எனது வேதனை(யும்) وَنُذُرِ‏ எனது எச்சரிக்கையும்
54:21. Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
54:21. ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
54:22
54:22 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
وَلَقَدْ திட்டவட்டமாக يَسَّرْنَا நாம் எளிதாக்கினோம் الْقُرْاٰنَ இந்த குர்ஆனை لِلذِّكْرِ நல்லறிவு பெறுவதற்காக فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏ நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
54:22. வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
54:22. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  
54:23
54:23 كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் ثَمُوْدُ ஸமூது சமுதாயம் بِالنُّذُرِ‏ எச்சரிக்கையை
54:23. கத்தBபத் தமூது Bபின்னுதுர்
54:23. ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.
54:24
54:24 فَقَالُـوْۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّفِىْ ضَلٰلٍ وَّسُعُرٍ‏
فَقَالُـوْۤا கூறினர் اَبَشَرًا ஒரு மனிதரையா مِّنَّا எங்களில் இருந்து وَاحِدًا ஒருவராக نَّتَّبِعُهٗۤ ۙ நாங்கள் அவரைப் பின்பற்றுவோம்! اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِذًا அப்படி என்றால் لَّفِىْ ضَلٰلٍ வழிகேட்டிலும் ஆகிவிடுவோம் وَّسُعُرٍ‏ சிரமத்திலும்
54:24. Fபகாலூ அ' Bபஷரன் மின்னா வாஹிதன் னத்தBபி'உஹூ இன்னா இதல் லFபீ ளலாலி(ன்)வ் வ ஸு'உர்
54:24. “நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்” என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.
54:25
54:25 ءَاُلْقِىَ الذِّكْرُ عَلَيْهِ مِنْۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ‏
ءَاُلْقِىَ இறக்கப்பட்டதா? الذِّكْرُ இறைவேதம் عَلَيْهِ அவருக்கு மட்டும் مِنْۢ بَيْنِنَا எங்களுக்கு மத்தியில் بَلْ இல்லை هُوَ அவர் كَذَّابٌ பெரும் பொய்யர் اَشِرٌ‏ பெருமையுடைய(வர்)
54:25. 'அ உல்கியத் திக்ரு 'அலய்ஹி மின் Bபய்னினா Bபல் ஹுவ கத்தாBபுன் அஷிர்
54:25. “நம்மிடையே இருந்து அவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும்; அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்” (என்றும் அவர்கள் கூறினர்).
54:26
54:26 سَيَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ‏
سَيَعْلَمُوْنَ விரைவில் அறிவார்கள் غَدًا நாளை مَّنِ الْكَذَّابُ பெரும் பொய்யர் யார் الْاَشِرُ‏ பெருமையுடைய(வர்)
54:26. ஸ-யஃலமூன கதன் மனில் கத்தாBபுல் அஷிர்
54:26. “ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?” என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
54:27
54:27 اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ‏
اِنَّا நிச்சயமாக நாம் مُرْسِلُوا அனுப்புவோம் النَّاقَةِ பெண் ஒட்டகத்தை فِتْنَةً சோதனையாக لَّهُمْ அவர்களுக்கு فَارْتَقِبْهُمْ அவர்களிடம் நீர் எதிர்பார்த்திருப்பீராக! وَاصْطَبِرْ‏ இன்னும் பொறுமை காப்பீராக!
54:27. இன்னா முர்ஸிலுன் னாகதி Fபித்னதன் லஹும் Fபர்தகிBப்ஹும் வஸ்தBபிர்
54:27. அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம்; ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
54:28
54:28 وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ ۢ بَيْنَهُمْ‌ۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ‏
وَنَبِّئْهُمْ அவர்களுக்கு அறிவிப்பீராக اَنَّ الْمَآءَ நிச்சயமாக தண்ணீர் قِسْمَةٌ ۢ பங்காகும் بَيْنَهُمْ‌ۚ அவர்களுக்கு மத்தியில் كُلُّ شِرْبٍ எல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிக்கப்படுகின்ற مُّحْتَضَرٌ‏ ஆஜராக வேண்டும்
54:28. வ னBப்Bபி'ஹும் அன்னல் மா'அ கிஸ்மதுன் Bபய்னஹும் குல்லு ஷிர்Bபின் முஹ்தளர்
54:28. (அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
54:29
54:29 فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰى فَعَقَرَ‏
فَنَادَوْا அவர்கள் அழைத்தனர் صَاحِبَهُمْ தங்கள் தோழரை فَتَعَاطٰى அவன் பிடித்தான் فَعَقَرَ‏ இன்னும் அறுத்தான்
54:29. Fப னாதவ் ஸாஹிBபஹும் Fப த'ஆதா Fப 'அகர்
54:29. ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர்; அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.
54:30
54:30 فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ‏
فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தன عَذَابِىْ எனது வேதனையும் وَنُذُرِ‏ எனது எச்சரிக்கையும்
54:30. Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
54:30. என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
54:31
54:31 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِيْمِ الْمُحْتَظِرِ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنَا அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது صَيْحَةً ஒரு சப்தத்தை وَّاحِدَةً ஒரே فَكَانُوْا அவர்கள் ஆகிவிட்டனர் كَهَشِيْمِ தீணிகளைப் போல் الْمُحْتَظِرِ‏ தொழுவத்தின்
54:31. இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் Fபகானூ கஹஷீமில் முஹ்தளிர்
54:31. நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.
54:32
54:32 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக يَسَّرْنَا நாம் எளிதாக்கினோம் الْقُرْاٰنَ இந்த குர்ஆனை لِلذِّكْرِ நல்லறிவு பெறுவதற்காக فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏ நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
54:32. வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
54:32. நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:33
54:33 كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ ۢ بِالنُّذُرِ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَوْمُ மக்களும் لُوْطٍ ۢ லூத்துடைய بِالنُّذُرِ‏ எச்சரிக்கையை
54:33. கத்தBபத் கவ்மு லூதின் Bபின்னுதுர்
54:33. லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
54:34
54:34 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ‌ؕ نَّجَّيْنٰهُمْ بِسَحَرٍۙ‏
اِنَّاۤ நிச்சயமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது حَاصِبًا கல் மழையை اِلَّاۤ اٰلَ لُوْطٍ‌ؕ லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர نَّجَّيْنٰهُمْ அவர்களைப் பாதுகாத்தோம் بِسَحَرٍۙ‏ அதிகாலையில்
54:34. இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஹாஸிBபன் இல்லா ஆல லூதின் னஜ்ஜய்னாஹும் Bபிஸஹர்
54:34. லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
54:35
54:35 نِّعْمَةً مِّنْ عِنْدِنَا‌ؕ كَذٰلِكَ نَجْزِىْ مَنْ شَكَرَ‏
نِّعْمَةً அருட்கொடையாக مِّنْ عِنْدِنَا‌ؕ நம்மிடமிருந்து كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِىْ நாம் கூலி கொடுப்போம் مَنْ شَكَرَ‏ நன்றி செலுத்துபவர்களுக்கு
54:35. னிஃமதன் மின் 'இன்தினா; கதாலிக னஜ்Zஜீ மன் ஷகர்
54:35. நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.
54:36
54:36 وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَـنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَنْذَرَهُمْ அவர் அவர்களுக்கு எச்சரித்தார் بَطْشَتَـنَا நமது தண்டனையை فَتَمَارَوْا அவர்கள் சந்தேகித்தனர் بِالنُّذُرِ‏ எச்சரிக்கையை
54:36. வ லகத் அன்தரஹும் Bபத்ஷதனா Fபதமாரவ் Bபின்னுதுர்
54:36. திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்கலாயினர்.
54:37
54:37 وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَيْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْيُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِىْ وَنُذُرِ‏
وَلَقَدْ رَاوَدُوْهُ திட்டவட்டமாக அவரிடம் அடம்பிடித்தனர் عَنْ ضَيْفِهٖ அவரது விருந்தினர்களை வேண்டி فَطَمَسْنَاۤ சமமாக்கி விட்டோம் اَعْيُنَهُمْ அவர்களின் கண்களை فَذُوْقُوْا ஆகவே சுவையுங்கள் عَذَابِىْ என் தண்டனையையும் وَنُذُرِ‏ என் எச்சரிக்கையையும்
54:37. வ லகத் ராவதூஹு 'அன்ளய்Fபீஹீ Fபதமஸ்னா அஃயுனஹும் Fபதூகூ 'அதாBபீ வ னுதுர்
54:37. அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்; ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).
54:38
54:38 وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ‌ ۚ‏
وَلَقَدْ صَبَّحَهُمْ திட்டமாக காலையில் அவர்களை வந்தடைந்தது بُكْرَةً அதிகாலை சூரியன் விடிவதற்கு முன் عَذَابٌ வேதனை مُّسْتَقِرٌّ‌ ۚ‏ நிலைத்திருக்கக்கூடிய
54:38. வ லகத் ஸBப்Bபஹஹும் Bபுக்ரதன் 'அதாBபுன் முஸ்தகிர்ர்
54:38. எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.
54:39
54:39 فَذُوْقُوْا عَذَابِىْ وَنُذُرِ‏
فَذُوْقُوْا ஆகவே சுவையுங்கள் عَذَابِىْ என் வேதனையையும் وَنُذُرِ‏ என் எச்சரிக்கையையும்
54:39. Fபதூகூ 'அதாBபீ வ னுதுர்
54:39. “ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறினோம்).
54:40
54:40 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
وَلَقَدْ திட்டவட்டமாக يَسَّرْنَا நாம் எளிதாக்கினோம் الْقُرْاٰنَ இந்த குர்ஆனை لِلذِّكْرِ நல்லறிவு பெறுவதற்காக فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏ நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
54:40. வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
54:40. நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  
54:41
54:41 وَلَقَدْ جَآءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُ‌ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَ வந்தன اٰلَ فِرْعَوْنَ ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு النُّذُرُ‌ۚ‏ எச்சரிக்கை
54:41. வ லகத் ஜா'அ ஆல Fபிர்'அவ்னன் னுதுர்
54:41. ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.
54:42
54:42 كَذَّبُوْا بِاٰيٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِيْزٍ مُّقْتَدِرٍ‏
كَذَّبُوْا அவர்கள் பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளை كُلِّهَا எல்லாம் فَاَخَذْنٰهُمْ ஆகவே அவர்களை தண்டித்தோம் اَخْذَ தண்டனையால் عَزِيْزٍ மிக்க மிகைத்தவன் مُّقْتَدِرٍ‏ மகா வல்லமை உடையவனின்
54:42. கத்தBபூ Bபி ஆயாதினா குல்லிஹா Fப அகத்னாஹும் அக்த 'அZஜீZஜிம் முக்ததிர்
54:42. ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்; அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
54:43
54:43 اَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ اُولٰٓٮِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِى الزُّبُرِ‌ۚ‏
اَكُفَّارُكُمْ خَيْرٌ உங்களுடைய நிராகரிப்பாளர்கள் சிறந்தவர்களா? مِّنْ اُولٰٓٮِٕكُمْ அவர்களை விட اَمْ لَكُمْ அவர்கள் உங்களுக்கு இருக்கிறதா? بَرَآءَةٌ விடுதலை பத்திரம் فِى الزُّبُرِ‌ۚ‏ வேதங்களில்
54:43. 'அ குFப்Fபாருகும் கய்ருன் மின் உலா'இகும் அம் லகும் Bபரா'அதுன் FபிZஜ் ZஜுBபுர்
54:43. (சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா?
54:44
54:44 اَمْ يَقُوْلُوْنَ نَحْنُ جَمِيْعٌ مُّنْتَصِرٌ‏
اَمْ يَقُوْلُوْنَ அல்லது கூறுகிறார்களா? نَحْنُ நாங்கள் ஆவோம் جَمِيْعٌ கூட்டம் مُّنْتَصِرٌ‏ பழிதீர்த்துக் கொள்கின்ற
54:44. அம் யகூலூன னஹ்னு ஜமீ'உன் முன்தஸிர்
54:44. அல்லது (நபியே!) “நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்” என்று அவர்கள் கூறுகின்றார்களா?
54:45
54:45 سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ‏
سَيُهْزَمُ விரைவில் தோற்கடிக் கப்படுவார்கள் الْجَمْعُ இந்த கூட்டங்கள் وَيُوَلُّوْنَ இன்னும் காட்டுவார்கள் الدُّبُرَ‏ புறமுதுகு
54:45. ஸ யுஹ்Zஜமுல் ஜம்'உ வ யுவல்லூனத் துBபுர்
54:45. அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
54:46
54:46 بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰى وَاَمَرُّ‏
بَلِ மாறாக السَّاعَةُ மறுமைதான் مَوْعِدُ வாக்களிக்கப்பட்ட நேரமாகும் هُمْ இவர்களின் وَالسَّاعَةُ மறுமை اَدْهٰى மிக பயங்கரமானதும் وَاَمَرُّ‏ மிக கசப்பானதாகும்
54:46. Bபலிஸ் ஸா'அது மவ்'இதுஹும் வஸ் ஸா'அது அத்ஹா வ அமர்ர்
54:46. அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.
54:47
54:47 اِنَّ الْمُجْرِمِيْنَ فِىْ ضَلٰلٍ وَّسُعُرٍ‌ۘ‏
اِنَّ நிச்சயமாக الْمُجْرِمِيْنَ குற்றவாளிகள் فِىْ ضَلٰلٍ வழிகேட்டிலும் وَّسُعُرٍ‌ۘ‏ மிகப் பெரிய சிரமத்திலும்
54:47. இன்னல் முஜ்ரிமீன Fபீ ளலாலி(ன்)வ் வ ஸு'உர்
54:47. நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.
54:48
54:48 يَوْمَ يُسْحَبُوْنَ فِى النَّارِ عَلٰى وُجُوْهِهِمْؕ ذُوْقُوْا مَسَّ سَقَرَ‏
يَوْمَ நாளில் يُسْحَبُوْنَ இழுக்கப்படுவார்கள் فِى النَّارِ நரகத்தில் عَلٰى وُجُوْهِهِمْؕ அவர்களின் முகங்கள் மீது ذُوْقُوْا சுவையுங்கள்! مَسَّ கடுமையை سَقَرَ‏ சகர் நரகத்தின்
54:48. யவ்ம யுஸ்-ஹBபூன Fபின் னாரி 'அலா வுஜூஹிஹிம் தூகூ மஸ்ஸ ஸகர்
54:48. அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
54:49
54:49 اِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ‏
اِنَّا நிச்சயமாக நாம் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் خَلَقْنٰهُ அவற்றைப் படைத்தோம் بِقَدَرٍ‏ ஓர் அளவில்
54:49. இன்னா குல்ல ஷய்'இன் கலக்னாஹு Bபி கதர்
54:49. நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
54:50
54:50 وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍۢ بِالْبَصَرِ‏
وَمَاۤ اَمْرُنَاۤ நமது கட்டளை இல்லை اِلَّا وَاحِدَةٌ ஒன்றைத் தவிர كَلَمْحٍۢ சிமிட்டுவதைப் போல் بِالْبَصَرِ‏ கண்
54:50. வ மா அம்ருனா இல்லா வாஹிததுன் க லம்ஹின் Bபில் Bபஸர்
54:50. நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
54:51
54:51 وَلَقَدْ اَهْلَـكْنَاۤ اَشْيَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَهْلَـكْنَاۤ நாம் அழித்தோம் اَشْيَاعَكُمْ உங்கள் சக கொள்கையுடையவர்களை فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏ நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?
54:51. வ லகத் அஹ்லக்னா அஷ்யா'அகும் Fபஹல் மின் முத்தகிர்
54:51. (நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
54:52
54:52 وَكُلُّ شَىْءٍ فَعَلُوْهُ فِى الزُّبُرِ‏
وَكُلُّ شَىْءٍ எல்லா விஷயங்கள் فَعَلُوْهُ செய்தனர்/அவற்றை فِى الزُّبُرِ‏ ஏடுகளில் உள்ளன
54:52. வ குல்லு ஷய்'இன் Fப'அலூஹு FபிZஜ் ZஜுBபுர்
54:52. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.
54:53
54:53 وَ كُلُّ صَغِيْرٍ وَّكَبِيْرٍ مُّسْتَطَرٌ‏
وَ كُلُّ எல்லா صَغِيْرٍ சிறியவையும் وَّكَبِيْرٍ பெரியவையும் مُّسْتَطَرٌ‏ எழுதப்பட்டு உள்ளது
54:53. வ குல்லு ஸகீரி(ன்)வ் வ கBபீரின் முஸ்ததர்
54:53. சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
54:54
54:54 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّنَهَرٍۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ இறையச்சமுடையவர்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் وَّنَهَرٍۙ‏ இன்னும் நதிகளில்
54:54. இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ னஹர்
54:54. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்
54:55
54:55 فِىْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ
فِىْ مَقْعَدِ சபையில் صِدْقٍ உண்மையான பேச்சுகளுடைய عِنْدَ مَلِيْكٍ பேரரசனுக்கு அருகில் مُّقْتَدِرٍ‏ மகா வல்லமையுடையவன்
54:55. Fபீ மக்'அதி ஸித்கின் 'இன்த மலீகின் முக்ததிர்
54:55. உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.