டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 25. ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)
மக்கீ, வசனங்கள்: 77
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
25:1 تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ
تَبٰـرَكَ மிக்க அருள் நிறைந்தவன் الَّذِىْ எவன் نَزَّلَ இறக்கினான் الْـفُرْقَانَ பகுத்தறிவிக்கும் வேதத்தை عَلٰى عَبْدِهٖ தனது அடியார் மீது لِيَكُوْنَ அவர் இருப்பதற்காக لِلْعٰلَمِيْنَ அகிலத்தார்களை نَذِيْرَا ۙ எச்சரிப்பவராக
25:1. தBபாரகல் லதீ னZஜ்Zஜலல் Fபுர்கான 'அலா 'அBப்திஹீ லி யகூன லில்'ஆலமீன னதீரா
25:1. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
25:2 اۨلَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا
اۨلَّذِىْ எவன் لَهٗ அவனுக்கே உரியது مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَلَمْ يَتَّخِذْ அவன் எடுத்துக் கொள்ளவில்லை وَلَدًا குழந்தையை وَّلَمْ يَكُنْ இல்லை لَّهٗ அவனுக்கு شَرِيْكٌ இணை فِى الْمُلْكِ ஆட்சியில் وَخَلَقَ இன்னும் அவன்படைத்தான் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் فَقَدَّرَهٗ அவற்றை நிர்ணயித்தான் تَقْدِيْرًا சீராக
25:2. அல்லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லம் யத்தகித் வலத(ன்)வ் வ லம் யகுல் லஹூ ஷரீகுன் Fபில்முல்கி வ கலக குல்ல ஷய்'இன் Fபகத்தரஹூ தக்தீரா
25:2. அவன் எத்தகையவன் என்றால், வானங்கள் பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது; அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; (அவனுடைய) ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி எவருமில்லை; அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து அவற்றை அதனதன் அளவுப்படி அமைத்தான்.
25:3 وَاتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً لَّا يَخْلُقُوْنَ شَيْـٴًـــا وَّهُمْ يُخْلَقُوْنَ وَلَا يَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ ضَرًّا وَّلَا نَفْعًا وَّلَا يَمْلِكُوْنَ مَوْتًا وَّلَا حَيٰوةً وَّلَا نُشُوْرًا
وَاتَّخَذُوْا அவர்கள் எடுத்துக் கொண்டனர் مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اٰلِهَةً கடவுள்களை لَّا يَخْلُقُوْنَ படைக்க மாட்டார்கள் شَيْـٴًـــا எதையும் وَّهُمْ அவர்கள் يُخْلَقُوْنَ படைக்கப்படுகிறார்கள் وَلَا يَمْلِكُوْنَ இன்னும் உரிமை பெற மாட்டார்கள் لِاَنْفُسِهِمْ தங்களுக்குத் தாமே ضَرًّا தீமை செய்வதற்கும் وَّلَا نَفْعًا நன்மை செய்வதற்கும் وَّلَا يَمْلِكُوْنَ இன்னும் உரிமை பெற மாட்டார்கள் مَوْتًا இறப்பிற்கும் وَّلَا حَيٰوةً வாழ்விற்கும் وَّلَا نُشُوْرًا மீண்டும் உயிர்த்தெழ செய்வதற்கும்
25:3. வத்தகதூ மின் தூனிஹீ ஆலிஹதல் லா யக்லுகூன ஷய்'அ(ன்)வ் வ ஹும் யுக்லகூன வலா யம்லிகூன லி அன்Fபுஸிஹிம் ளர்ர(ன்)வ் வலா னFப்'அ(ன்)வ் வலா யம்லிகூன மவ்த(ன்)வ் வலா ஹயாத(ன்)வ் வலா னுஷூரா
25:3. (எனினும், இணைவைப்பவர்கள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்; அவைகள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டா; (ஏனெனில்,) அவைகளே படைக்கப்பட்டவைகள்; இன்னும், அவைகள் தங்களுக்கு நன்மை செய்துகொள்ளவோ, தீமையைத் தடுத்துக்கொள்ளவோ சக்திபெறமாட்டா; மேலும் அவைகள் உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பவோ இயலாதவைகளாக இருக்கின்றன.
25:4 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اِفْكٌ اۨفْتَـرٰٮهُ وَاَعَانَهٗ عَلَيْهِ قَوْمٌ اٰخَرُوْنَ ۛۚ فَقَدْ جَآءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۛۚ
وَقَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பாளர்கள் اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّاۤ தவிர اِفْكٌ இட்டுக்கட்டப்பட்டதே اۨفْتَـرٰٮهُ இதை இட்டுக்கட்டினார் وَاَعَانَهٗ இன்னும் உதவினர்/இவருக்கு عَلَيْهِ இதற்கு قَوْمٌ மக்கள் اٰخَرُوْنَ ۛۚ மற்ற فَقَدْ ஆகவே, திட்டமாக جَآءُوْ இவர்கள் வந்தனர் ظُلْمًا அநியாயத்திற்கும் وَّزُوْرًا ۛۚ பொய்யுக்கும்
25:4. வ காலல் லதீன கFபரூ இன் ஹாதா இல்லா இFப்குனிFப் தராஹு வ அ'ஆனஹூ 'அலய்ஹி கவ்முன் ஆகரூன Fபகத் ஜா'ஊ ளுல்ம(ன்)வ் வ Zஜூரா
25:4. "இன்னும், இது (அல்குர்ஆன்) பொய்யேயன்றி வேறில்லை; இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார்; இன்னும், வேறு கூட்டத்தினரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்; ஆனால், (இப்படிக் கூறுவதன் மூலம்) திட்டமாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.
25:5 وَقَالُوْۤا اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ اكْتَتَبَهَا فَهِىَ تُمْلٰى عَلَيْهِ بُكْرَةً وَّاَصِيْلًا
وَقَالُوْۤا இன்னும் கூறினர் اَسَاطِيْرُ கதைகள் الْاَوَّلِيْنَ முன்னோரின் اكْتَتَبَهَا அவர் எழுதிக் கொண்டார்/இவற்றை فَهِىَ இவை تُمْلٰى எடுத்தியம்பப் படுகின்றன عَلَيْهِ அவர் மீது بُكْرَةً காலையிலும் وَّاَصِيْلًا இன்னும் மாலையிலும்
25:5. வ காலூ அஸாதீருல் அவ்வலீனக் ததBபஹா Fபஹிய தும்லா 'அலய்ஹி Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
25:5. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: "அவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே; அவற்றை இவரே எழுதச் செய்துகொண்டிருக்கிறார்: ஆகவே, அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன."
25:6 قُلْ اَنْزَلَهُ الَّذِىْ يَعْلَمُ السِّرَّ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ اِنَّهٗ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا
قُلْ கூறுவீராக اَنْزَلَهُ இதை இறக்கினான் الَّذِىْ எவன் يَعْلَمُ அறிகின்றான் السِّرَّ இரகசியத்தை فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِؕ பூமியிலும் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கிறான் غَفُوْرًا மகாமன்னிப்பாளனாக رَّحِيْمًا பெரும் கருணையாளனாக
25:6. குல் அன்Zஜல்ஹுல் லதீ யஃலமுஸ் ஸிர்ர Fபிஸ் ஸமாவாதி வல்-அர்ள்; இன்னஹூ கான கFபூரர் ரஹீமா
25:6. (நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கிவைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிகக் கிருபைசெய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக.
25:7 وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ يَاْكُلُ الطَّعَامَ وَيَمْشِىْ فِى الْاَسْوَاقِ ؕ لَوْلَاۤ اُنْزِلَ اِلَيْهِ مَلَكٌ فَيَكُوْنَ مَعَهٗ نَذِيْرًا ۙ
وَقَالُوْا அவர்கள் கூறுகின்றனர் مَالِ என்ன! هٰذَا இந்த الرَّسُوْلِ தூதருக்கு يَاْكُلُ இவர் சாப்பிடுகிறார் الطَّعَامَ உணவு وَيَمْشِىْ இன்னும் நடக்கிறார் فِى الْاَسْوَاقِ ؕ கடைத் தெருக்களில் لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட்டு இருக்க வேண்டாமா? اِلَيْهِ இவர் மீது مَلَكٌ ஒரு வானவர் فَيَكُوْنَ அவர் இருக்கிறார் مَعَهٗ இவருடன் نَذِيْرًا ۙ எச்சரிப்பவராக
25:7. வ காலூ மா லி ஹாதர் ரஸூலி ய'குலுத் த'ஆம வ யம்ஷீ Fபில் அஸ்வாக்; லவ் லா உன்Zஜில இலய்ஹி மலகுன் Fப யகூன ம'அஹூ னதீரா
25:7. மேலும், அவர்கள் கூறுகிறார்கள்: "இந்தத் தூதருக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடைவீதிகளில் நடக்கிறார்; இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?"
25:8 اَوْ يُلْقٰٓى اِلَيْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ يَّاْكُلُ مِنْهَا ؕ وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
اَوْ அல்லது يُلْقٰٓى இறக்கப்பட வேண்டாமா! اِلَيْهِ இவருக்கு كَنْزٌ ஒரு பொக்கிஷம் اَوْ அல்லது تَكُوْنُ இருக்க வேண்டாமா! لَهٗ இவருக்கு جَنَّةٌ ஒரு தோட்டம் يَّاْكُلُ இவர் புசிப்பாரே! مِنْهَا ؕ அதிலிருந்து وَقَالَ இன்னும் கூறுகின்றனர் الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் اِنْ تَتَّبِعُوْنَ நீங்கள் பின்பற்றவில்லை اِلَّا தவிர رَجُلًا ஒரு மனிதரை مَّسْحُوْرًا குடல் உள்ள
25:8. அவ் யுல்கா இலய்ஹி கன்Zஜுன் அவ் தகூனு லஹூ ஜன்னது(ன்)ய் ய'குலு மின்ஹா; வ காலள் ளாலிமூன இன் தத்தBபி'ஊன இல்லா ரஜுலன் மஸ் ஹூரா
25:8. "அல்லது, இவருக்கு ஒரு புதையல் போடப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது, எதிலிருந்து அவர் உண்பாரோ அவ்விதத் தோட்டம், அவருக்கு உண்டாகியிருக்கவேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக்காரர்கள்: (நம்பிக்கையாளர்களை நோக்கி) "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை" என்று கூறுகிறார்கள்.
25:9 اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَـكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلاً
اُنْظُرْ பார்ப்பீராக! كَيْفَ எப்படி ضَرَبُوْا அவர்கள் விவரிக்கின்றனர் لَـكَ உமக்கு الْاَمْثَالَ தன்மைகளை فَضَلُّوْا ஆகவே, அவர்கள் வழிகெட்டனர் فَلَا يَسْتَطِيْعُوْنَ அவர்கள் சக்தி பெறமாட்டார்கள் سَبِيْلاً ஒரு பாதைக்கு
25:9. உன்ளுர் கய்Fப ளரBபூ லகல் அம்தால Fபளல்லூ Fபலா யஸ்ததீ'ஊன ஸBபீலா
25:9. (நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக்கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழிகெட்டுப் போய்விட்டார்கள்; ஆகவே, அவர்கள் நேர்வழிக்கு (வர) சக்தி பெறமாட்டார்கள்.
25:10 تَبٰـرَكَ الَّذِىْۤ اِنْ شَآءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّنْ ذٰ لِكَ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ وَيَجْعَلْ لَّكَ قُصُوْرًا
تَبٰـرَكَ அருள் நிறைந்தவன் الَّذِىْۤ اِنْ شَآءَ எவன்/அவன் நாடினால் جَعَلَ ஏற்படுத்துவான் لَكَ உமக்கு خَيْرًا சிறந்ததை مِّنْ ذٰ لِكَ இவற்றை விட جَنّٰتٍ சொர்க்கங்களை تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றை சுற்றி الْاَنْهٰرُ ۙ நதிகள் وَيَجْعَلْ இன்னும் ஏற்படுத்துவான் لَّكَ உமக்கு قُصُوْرًا மாளிகைகளை
25:10. தBபாரகல் லதீ இன் ஷா'அ ஜ'அல லக கய்ரன் மின் தாலிக ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வ யஜ்'அல் லக குஸூரா
25:10. (நபியே! இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவர்க்க(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே. அவன் பாக்கியம்மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும், உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.
25:11 بَلْ كَذَّبُوْا بِالسَّاعَةِ وَاَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيْرًا ۚ
بَلْ மாறாக كَذَّبُوْا அவர்கள் பொய்ப்பித்தனர் بِالسَّاعَةِ உலக முடிவை وَاَعْتَدْنَا இன்னும் தயார்படுத்தியுள்ளோம் لِمَنْ كَذَّبَ பொய்ப்பிப்பவருக்கு بِالسَّاعَةِ உலக முடிவை سَعِيْرًا ۚ கொழுந்து விட்டெரியும் நெருப்பை
25:11. Bபல் கத்தBபூ Bபிஸ் ஸா'அதி வ அஃதத்னா லிமன் கத்தBப Bபிஸ் ஸா'அதி ஸ'ஈரா
25:11. எனினும், அவர்கள் மறுமை நாளையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; ஆனால், நாம் மறுமை நாளைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
25:12 اِذَا رَاَتْهُمْ مِّنْ مَّكَانٍۢ بَعِيْدٍ سَمِعُوْا لَهَا تَغَيُّظًا وَّزَفِيْرًا
اِذَا رَاَتْهُمْ பார்த்தால் / அவர்களை அது مِّنْ مَّكَانٍۢ இடத்திலிருந்து بَعِيْدٍ தூரமான سَمِعُوْا செவிமடுப்பார்கள் لَهَا அதனுடைய تَغَيُّظًا சப்தத்தையும் وَّزَفِيْرًا இரைச்சலையும்
25:12. இதா ர'அத் ஹும் மின் மகானின் Bப'ஈதின் ஸமி'ஊ லஹா தகய்யுள(ன்)வ் வ ZஜFபீரா
25:12. அது (அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே, அதற்கே உரித்தான கொந்தளிப்பையும் பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.
25:13 وَاِذَاۤ اُلْقُوْا مِنْهَا مَكَانًـا ضَيِّقًا مُّقَرَّنِيْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا ؕ
وَاِذَاۤ اُلْقُوْا அவர்கள் போடப்பட்டால் مِنْهَا அதில் مَكَانًـا இடத்தில் ضَيِّقًا நெருக்கமான مُّقَرَّنِيْنَ கட்டப்பட்டவர்களாக دَعَوْا அழைப்பார்கள் هُنَالِكَ அங்கு ثُبُوْرًا ؕ கைசேதமே என்று
25:13. வ இதா உல்கூ மின்ஹா மகானன் ளய்யிகம் முகர் ரனீன த'அவ் ஹுனாலிக துBபூரா
25:13. மேலும், அ(ந்நரகத்)தில் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையைத் தாங்கமாட்டாமல்) அங்கே அவர்கள் அழிவை அழைப்பார்கள்.
25:14 لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُوْرًا وَّاحِدًا وَّادْعُوْا ثُبُوْرًا كَثِيْرًا
لَا تَدْعُوا அழைக்காதீர்கள் الْيَوْمَ இன்று ثُبُوْرًا கைசேதமே என்று وَّاحِدًا ஒரு முறை وَّادْعُوْا அழையுங்கள் ثُبُوْرًا கைசேதமே என்று كَثِيْرًا பல முறை
25:14. லா தத்'உல் யவ்ம துBபூர(ன்)வ் வாஹித(ன்)வ் வத்'ஊ துBபூரன் கதீரா
25:14. "இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் அநேக அழிவுகளை அழையுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்).
25:15 قُلْ اَذٰ لِكَ خَيْرٌ اَمْ جَنَّةُ الْخُـلْدِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ كَانَتْ لَهُمْ جَزَآءً وَّمَصِيْرًا
قُلْ நீர் கேட்பீராக! اَذٰ لِكَ அது? خَيْرٌ சிறந்ததா اَمْ அல்லது جَنَّةُ الْخُـلْدِ ஜன்னதுல் குல்து الَّتِىْ எது وُعِدَ வாக்களிக்கப்பட்டனர் الْمُتَّقُوْنَ ؕ இறையச்சமுள்ளவர்கள் كَانَتْ அது இருக்கும் لَهُمْ அவர்களுக்கு جَزَآءً கூலியாகவும் وَّمَصِيْرًا மீளுமிடமாகவும்
25:15. குல் அதாலிக கய்ருன் அம் ஜன்னதுல் குல்தில் லதீ வு'இதல் முத்தகூன்; கானத் லஹும் ஜZஜா'அ(ன்)வ் வ மஸீரா
25:15. "அத்தகைய நரகமானது நல்லதா? அல்லது இறையச்சமுடையவர்கள் வாக்களிக்கப்பட்டுள்ளார்களே அந்த நிலையான சுவர்க்கம் நல்லதா?" என்று (நபியே) நீர் கேட்பீராக! அது அவர்களுக்கு நற்கூலியாகவும் (அவர்கள்) போய்ச் சேருமிடமாகவும் இருக்கிறது.
25:16 لَّهُمْ فِيْهَا مَا يَشَآءُوْنَ خٰلِدِيْنَ ؕ كَانَ عَلٰى رَبِّكَ وَعْدًا مَّسْــــٴُـوْلًا
لَّهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் مَا அவர்கள் நாடுவார்கள் يَشَآءُوْنَ எது خٰلِدِيْنَ ؕ நிரந்தரமாக இருப்பார்கள் كَانَ இருக்கிறது عَلٰى மீது رَبِّكَ உமது இறைவன் وَعْدًا வாக்காக مَّسْــــٴُـوْلًا வேண்டப்பட்ட
25:16. லஹும் Fபீஹா மா யஷா'ஊன காலிதீன்; கான 'அலா ரBப்Bபிக வஃதன் மஸ்'ஊலா
25:16. "அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள்:" இதுவே, உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.
25:17 وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَقُوْلُ ءَاَنْـتُمْ اَضْلَلْـتُمْ عِبَادِىْ هٰٓؤُلَاۤءِ اَمْ هُمْ ضَلُّوا السَّبِيْلَ ؕ
وَيَوْمَ நாளின்போது يَحْشُرُ அவன் எழுப்புவான் هُمْ அவர்களையும் وَمَا يَعْبُدُوْنَ அவர்கள் வணங்கியவர்களையும் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி فَيَقُوْلُ கேட்பான் ءَاَنْـتُمْ اَضْلَلْـتُمْ நீங்கள் வழிகெடுத்தீர்களா? عِبَادِىْ எனது அடியார்களை هٰٓؤُلَاۤءِ நீங்கள்தான் اَمْ அல்லது هُمْ அவர்கள் ضَلُّوا தாமாகதவறவிட்டனரா السَّبِيْلَ ؕ பாதையை
25:17. வ யவ்ம யஹ்ஷுருஹும் வமா யஃBபுதூன மின் தூனில் லாஹி Fப யகூலு 'அ-அன்தும் அள்லல்தும் 'இBபாதீ ஹா'உலா'இ அம் ஹும் ளல்லுஸ் ஸBபீல்
25:17. அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில் (அத் தெய்வங்களை நோக்கி) "என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழிகெடுத்தீர்களா? அல்லது, அவர்கள் தாமாகவே வழிகெட்டுப் போனார்களா?" என்று (இறைவன்) கேட்பான்.
25:18 قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ يَنْۢبَغِىْ لَنَاۤ اَنْ نَّـتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِيَآءَ وَ لٰـكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَآءَهُمْ حَتّٰى نَسُوا الذِّكْرَۚ وَكَانُوْا قَوْمًۢا بُوْرًا
قَالُوْا அவர்கள் கூறுவர் سُبْحٰنَكَ நீ மிகப் பரிசுத்தமானவன் مَا كَانَ இல்லை يَنْۢبَغِىْ தகுதியானதாக لَنَاۤ எங்களுக்கு اَنْ نَّـتَّخِذَ எடுத்துக் கொள்வது مِنْ دُوْنِكَ உன்னை அன்றி مِنْ اَوْلِيَآءَ பாதுகாவலர்களை وَ لٰـكِنْ எனினும் مَّتَّعْتَهُمْ நீ அவர்களுக்கு சுகமளித்தாய் وَاٰبَآءَ மூதாதைகளுக்கும் هُمْ அவர்களுடைய حَتّٰى இறுதியாக نَسُوا அவர்கள் மறந்தனர் الذِّكْرَۚ அறிவுரையை وَكَانُوْا இன்னும் ஆகிவிட்டனர் قَوْمًۢا மக்களாக بُوْرًا அழிந்து போகும்
25:18. காலூ ஸுBப்ஹானக மா கான யன்Bபகீ லனா அன் னத்தகித மின் தூனிக மின் அவ்லியா'அ வ லாகின் மத்தஃதஹும் வ ஆBபா'அஹும் ஹத்தா னஸூத் திக்ர வ கானூ கவ்மன் Bபூரா
25:18. (அதற்கு) அவைகள் "(இறைவா!) நீ தூயவன்; உன்னையன்றி நாங்கள் பாதுகாவலர்களை ஏற்படுத்திக்கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும், நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; இறுதியாக அவர்களோ (உன்னை நினைவு கூர்வதை) மறந்தார்கள்; மேலும், அழிந்துபோகும் கூட்டத்தாரானார்கள்" என்று கூறும்.
25:19 فَقَدْ كَذَّبُوْكُمْ بِمَا تَقُوْلُوْنَۙ فَمَا تَسْتَطِيْعُوْنَ صَرْفًا وَّلَا نَـصْرًاۚ وَمَنْ يَّظْلِمْ مِّنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيْرًا
فَقَدْ ஆகவே, திட்டமாக كَذَّبُوْ பொய்ப்பித்துவிட்டனர் كُمْ உங்களை بِمَا تَقُوْلُوْنَۙ நீங்கள் கூறியதில் فَمَا تَسْتَطِيْعُوْنَ ஆகவே, நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள் صَرْفًا திருப்பி விடுவதற்கோ وَّلَا نَـصْرًاۚ உதவுவதற்கோ وَمَنْ யார் يَّظْلِمْ அநீதி இழைத்துக் கொண்டாரோ مِّنْكُمْ உங்களில் نُذِقْهُ அவருக்கு சுவைக்க வைப்போம் عَذَابًا தண்டனையை كَبِيْرًا பெரிய
25:19. Fபகத் கத்தBபூகும் Bபிமா தகூலூன Fபமா தஸ்ததீ'ஊன ஸர்Fப(ன்)வ் வலா னஸ்ரா; வ ம(ன்)ய் யள்லிம் மின்கும் னுதிக்ஹு 'அதாBபன் கBபீரா
25:19. "நீங்கள் சொல்லியதையெல்லாம் திட்டமாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர்; ஆகவே, (இப்போது வேதனையைத்) தடுத்துக்கொள்ளவோ, உதவி பெற்றுக்கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும், உங்களில் எவன் அநியாயம் செய்துகொண்டிருந்தானோ அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச் செய்வோம்" (என்று இறைவன் கூறுவான்).
25:20 وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِيْنَ اِلَّاۤ اِنَّهُمْ لَيَاْكُلُوْنَ الطَّعَامَ وَيَمْشُوْنَ فِى الْاَسْوَاقِ ؕ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ؕ اَتَصْبِرُوْنَۚ وَكَانَ رَبُّكَ بَصِيْرًا
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை قَبْلَكَ உமக்கு முன்னர் مِنَ الْمُرْسَلِيْنَ தூதர்களில் எவரையும் اِلَّاۤ தவிர اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَيَاْكُلُوْنَ உண்பவர்களாக الطَّعَامَ உணவு وَيَمْشُوْنَ இன்னும் நடந்து செல்பவர்களாக فِى الْاَسْوَاقِ ؕ கடைத் தெருக்களில் وَجَعَلْنَا ஆக்கினோம் بَعْضَكُمْ உங்களில் சிலரை لِبَعْضٍ சிலருக்கு فِتْنَةً ؕ சோதனையாக اَتَصْبِرُوْنَۚ நீங்கள் பொறுப்பீர்களா? وَكَانَ இருக்கிறான் رَبُّكَ உமது இறைவன் بَصِيْرًا உற்று நோக்குபவனாக
25:20. வ மா அர்ஸல்னா கBப்லக மினல் முர்ஸலீன இல்லா இன்னஹும் ல ய'குலூனத் த'ஆம வ யம்ஷூன Fபில் அஸ்வாக்; வ ஜ'அல்னா Bபஃளகும் லிBபஃளின் Fபித்னதன் அதஸ்Bபிரூன்; வ கான ரBப்Bபுக Bபஸீரா
25:20. (நபியே!) இன்னும், உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவு அருந்துபவர்களாகவும், கடைவீதிகளில் நடமாடுபவர்களாகவும்தான் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம்; ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
25:21 وَقَالَ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْنَا الْمَلٰٓٮِٕكَةُ اَوْ نَرٰى رَبَّنَا ؕ لَـقَدِ اسْتَكْبَرُوْا فِىْۤ اَنْفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِيْرًا
وَقَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ لَا يَرْجُوْنَ ஆதரவு வைக்காதவர்கள் لِقَآءَنَا நம் சந்திப்பை لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட வேண்டாமா? عَلَيْنَا எங்கள் மீது الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் اَوْ அல்லது نَرٰى நாங்கள் பார்க்க வேண்டாமா? رَبَّنَا ؕ எங்கள் இறைவனை لَـقَدِ திட்டவட்டமாக اسْتَكْبَرُوْا அவர்கள் பெருமை அடித்தனர் فِىْۤ اَنْفُسِهِمْ தங்களுக்குள் وَعَتَوْ عُتُوًّا இன்னும் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர் كَبِيْرًا மிகப்பெரிய அளவில்
25:21. வ காலல் லதீன லா யர்ஜூன லிகா'அனா லவ் லா உன்Zஜில 'அலய்னல் மலா'இகது அவ்னரா ரBப்Bபனா; லகதிஸ்தக்Bபரூ Fபீ அன்Fபுஸிஹிம் வ 'அதவ் 'உதுவ்வன் கBபீரா
25:21. மேலும், (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள், "எங்கள் மீது வானவர்கள் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது நாங்கள் எங்கள் இறைவனைக் (கண்களால்) காணவேண்டாமா?" என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்புமீறி (சென்று)விட்டனர்.
25:22 يَوْمَ يَرَوْنَ الْمَلٰٓٮِٕكَةَ لَا بُشْرٰى يَوْمَٮِٕذٍ لِّـلْمُجْرِمِيْنَ وَ يَقُوْلُوْنَ حِجْرًا مَّحْجُوْرًا
يَوْمَ நாளில் يَرَوْنَ அவர்கள் பார்ப்பார்கள் الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை لَا அறவே இல்லை بُشْرٰى நற்செய்தி يَوْمَٮِٕذٍ இந்நாளில் لِّـلْمُجْرِمِيْنَ குற்றவாளிகளுக்கு وَ يَقُوْلُوْنَ இன்னும் கூறுவார்கள் حِجْرًا உங்களுக்கு தடுக்கப்பட்டு விட்டது مَّحْجُوْرًا முற்றிலும்
25:22. யவ்ம யரவ்னல் மலா 'இகத லா Bபுஷ்ரா யவ்மய்தின் லில் முஜ்ரிமீன வ யகூலூன ஹிஜ்ரன் மஹ்ஜூரா
25:22. அவர்கள் வானவர்களைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது, "(நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டுவிட்டது" என்று அவர்கள் கூறுவார்கள்.
25:23 وَقَدِمْنَاۤ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا
وَقَدِمْنَاۤ நாம் நாடுவோம் اِلٰى مَا عَمِلُوْا அவர்கள் செய்ததை مِنْ عَمَلٍ செயல்களில் فَجَعَلْنٰهُ பிறகு அதை ஆக்கிவிடுவோம் هَبَآءً புழுதியாக مَّنْثُوْرًا பரத்தப்பட்ட
25:23. வ கதிம்னா இலா மா 'அமிலூ மின் 'அமலின் Fபஜ'அல்னாஹுஹBபா'அன் மன்தூரா
25:23. இன்னும், நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
25:24 اَصْحٰبُ الْجَنَّةِ يَوْمَٮِٕذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَّاَحْسَنُ مَقِيْلًا
اَصْحٰبُ الْجَنَّةِ சொர்க்கவாசிகள் يَوْمَٮِٕذٍ அந்நாளில் خَيْرٌ சிறந்தவர்கள் مُّسْتَقَرًّا தங்குமிடத்தால் وَّاَحْسَنُ இன்னும் மிக சிறப்பானவர்கள் مَقِيْلًا ஓய்வெடுக்கும் இடத்தால்
25:24. அஸ் ஹாBபுல் ஜன்னதி யவ்ம'இதின் கய்ருன் முஸ்தகர் ர(ன்)வ் வ அஹ்ஸனு மகீலா
25:24. அந்நாளில், சுவர்க்கவாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாகவும், சுகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
25:25 وَيَوْمَ تَشَقَّقُ السَّمَآءُ بِالْـغَمَامِ وَنُزِّلَ الْمَلٰٓٮِٕكَةُ تَنْزِيْلًا
وَيَوْمَ நாளில் تَشَقَّقُ பிளந்துவிடும் السَّمَآءُ வானம் بِالْـغَمَامِ வெள்ளை மேகத்தைக் கொண்டு وَنُزِّلَ இன்னும் இறக்கப்படும் (நாளில்) الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் تَنْزِيْلًا இறங்குதல்
25:25. வ யவ்ம தஷக்ககுஸ் ஸமா'உ Bபில்கமாமி வ னுZஜ்Zஜிலல் மலா'இகது தன்Zஜீலா
25:25. இன்னும், வானம் மேகத்தால் பிளந்து, வானவர்கள் அணியணியாய் (கீழே) இறக்கப்படும் நாளில்
25:26 اَلْمُلْكُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ لِلرَّحْمٰنِؕ وَكَانَ يَوْمًا عَلَى الْكٰفِرِيْنَ عَسِيْرًا
اَلْمُلْكُ ஆட்சி يَوْمَٮِٕذِ அந்நாளில் اۨلْحَـقُّ உண்மையான لِلرَّحْمٰنِؕ ரஹ்மானிற்கே وَكَانَ இருக்கும் يَوْمًا நாளாக عَلَى الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَسِيْرًا மிக சிரமமான
25:26. அல்முல்கு யவ்ம'இதினில் ஹக்கு லிர் ரஹ்மான்; வ கான யவ்மன்'அலல் காFபிரீன 'அஸீரா
25:26. அந்நாளில் உண்மையான ஆட்சி அளவற்ற அருளாளனுக்குத்தான்; மேலும், நிராகரிப்பாளர்களுக்கு அது கடுமையான நாளாகவும் இருக்கும்.
25:27 وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا
وَيَوْمَ அந்நாளில் يَعَضُّ கடிப்பான் الظَّالِمُ அநியாயக்காரன் عَلٰى يَدَيْهِ தனது இரு கரங்களையும் يَقُوْلُ கூறுவான் يٰلَيْتَنِى اتَّخَذْتُ நான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே! مَعَ الرَّسُوْلِ தூதருடன் سَبِيْلًا ஒரு வழியை
25:27. வ யவ்ம ய'அள்ளுள் ளாலிமு 'அலா யதய்ஹி யகூலு யா லய்தனித் தகத்து ம'அர் ரஸூலி ஸBபீலா
25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக்கொண்டு: "அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டுமே!" எனக் கூறுவான்.
25:28 يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا
يٰوَيْلَتٰى என் நாசமே! لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ நான் எடுத்திருக்கக் கூடாதே! فُلَانًا இன்னவனை خَلِيْلًا நண்பனாக
25:28. யா வய்லதா லய்தனீ லம் அத்தகித் Fபுலானன் கலீலா
25:28. "எனக்கு வந்த கேடே! (என்னை வழிகெடுத்த) இன்னவனை நான் நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டுமே!"
25:29 لَقَدْ اَضَلَّنِىْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِىْ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا
لَقَدْ திட்டவட்டமாக اَضَلَّنِىْ என்னை வழிகெடுத்து விட்டான் عَنِ الذِّكْرِ அறிவுரையிலிருந்து بَعْدَ பின்னர் اِذْ جَآءَنِىْ ؕ அது என்னிடம் வந்த وَكَانَ இருக்கிறான் الشَّيْطٰنُ ஷைத்தான் لِلْاِنْسَانِ மனிதனை خَذُوْلًا கைவிடுபவனாக
25:29. லகத் அளல்லனீ 'அனித் திக்ரி Bபஃத இத் ஜா'அனீ; வ கானஷ் ஷய்தானு லில் இன்ஸானி கதூலா
25:29. "நிச்சயமாக என்னிடம் உபதேசம் வந்த பின்னரும், அதிலிருந்து அவன் என்னை வழிகெடுத்துவிட்டான்; மேலும், ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருந்தான்!" (என்று புலம்புவான்.)
25:30 وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا
وَقَالَ கூறுவார் الرَّسُوْلُ தூதர் يٰرَبِّ என் இறைவா! اِنَّ நிச்சயமாக قَوْمِى எனது மக்கள் اتَّخَذُوْا எடுத்துக் கொண்டனர் هٰذَا الْقُرْاٰنَ இந்த குர்ஆனை مَهْجُوْرًا புறக்கணிக்கப் பட்டதாக
25:30. வ காலர் ரஸூலு யா ரBப்Bபி இன்ன கவ்மித் தகதூ ஹாதல் குர்'ஆன மஹ்ஜூரா
25:30. "என்னுடைய இறைவா! நிச்சயமாக என் சமூகத்தார் குர்ஆனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டார்கள்" என்று (நம்) தூதர் கூறுவார்.
25:31 وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِيْنَؕ وَكَفٰى بِرَبِّكَ هَادِيًا وَّنَصِيْرًا
وَكَذٰلِكَ இவ்வாறுதான் جَعَلْنَا நாம் ஆக்கினோம் لِكُلِّ ஒவ்வொரு نَبِىٍّ நபிக்கும் عَدُوًّا எதிரிகளை مِّنَ الْمُجْرِمِيْنَؕ குற்றவாளிகளில் وَكَفٰى போதுமானவன் بِرَبِّكَ உமது இறைவன் هَادِيًا நேர்வழி காட்டுபவனாக وَّنَصِيْرًا இன்னும் உதவுபவனாக
25:31. வ கதாலிக ஜ'அல்னா லிகுல்லி னBபிய்யின் 'அதுவ்வன் மினல் முஜ்ரிமீன்; வ கFபா Bபி ரBப்Bபிக ஹாதிய(ன்)வ் வ னஸீரா
25:31. மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டுபவனாகவும், உதவி புரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.
25:32 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْـقُرْاٰنُ جُمْلَةً وَّاحِدَةً ۛۚ كَذٰلِكَ ۛۚ لِنُثَبِّتَ بِهٖ فُـؤَادَكَ وَرَتَّلْنٰهُ تَرْتِيْلًا
وَقَالَ கூறினர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் لَوْلَا نُزِّلَ இறக்கப்பட வேண்டாமா! عَلَيْهِ இவர் மீது الْـقُرْاٰنُ இந்த குர்ஆன் جُمْلَةً ஒட்டு மொத்தமாக وَّاحِدَةً ۛۚ ஒரே தடவையில் كَذٰلِكَ ۛۚ இவ்வாறுதான் لِنُثَبِّتَ உறுதிப்படுத்துவதற்காக بِهٖ அதன் மூலம் فُـؤَادَكَ உமது உள்ளத்தை وَرَتَّلْنٰهُ இன்னும் இதை கற்பித்தோம். تَرْتِيْلًا சிறிது சிறிதாக
25:32. வ காலல் லதீன கFபரூ லவ் லா னுZஜ்Zஜில 'அலய்ஹில் குர்'ஆனு ஜும்லத(ன்)வ் வாஹிதஹ்; கதாலிக லினுதBப்Bபித Bபிஹீ Fபு'ஆதக வ ரத்தல்னாஹு தர்தீலா
25:32. இன்னும், "இவருக்கு இந்தக் குர்ஆன் ஒரே தொகுப்பாக (முழுமையாய்) ஏன் இறக்கப்படவில்லை?" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள். அப்படித்தான்! இதைக்கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக; இன்னும், இதனைப் படிப்படியாக நாம் ஓதிக்காண்பித்தோம்.
25:33 وَلَا يَاْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَـقِّ وَاَحْسَنَ تَفْسِيْرًا ؕ
وَلَا يَاْتُوْنَكَ அவர்கள் உம்மிடம் கூறமாட்டார்கள் بِمَثَلٍ எந்த ஒரு தன்மையையும் اِلَّا தவிர جِئْنٰكَ உமக்கு நாம் கூறியே بِالْحَـقِّ சத்தியத்தையும் وَاَحْسَنَ இன்னும் மிக அழகான تَفْسِيْرًا ؕ விளக்கத்தை(யும்)
25:33. வ லா ய'தூனக Bபி மதலின் இல்லா ஜி'னாக Bபில்ஹக்கி வ அஹ்ஸன தFப்ஸீரா
25:33. அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டுவந்தாலும், (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.
25:34 اَلَّذِيْنَ يُحْشَرُوْنَ عَلٰى وُجُوْهِهِمْ اِلٰى جَهَـنَّمَۙ اُولٰٓٮِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِيْلًا
اَلَّذِيْنَ எவர்கள் يُحْشَرُوْنَ எழுப்பப்படுகிறார்களோ عَلٰى மீது وُجُوْهِهِمْ தங்கள் முகங்களின் اِلٰى பக்கம் جَهَـنَّمَۙ நரகத்தின் اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் شَرٌّ மிக கெட்டவர்கள் مَّكَانًا தங்குமிடத்தால் وَّاَضَلُّ இன்னும் மிக வழிதவறியவர்கள் سَبِيْلًا பாதையால்
25:34. அல்லதீன யுஹ்ஷரூன 'அலா வுஜூஹிஹிம் இலா ஜஹன்னம உலா'இக ஷர்ருன் மகான(ன்)வ் வ அளல்லு ஸBபீலா
25:34. எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப்படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் மிகவும் வழி கெட்டவர்கள்.
25:35 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِيْرًا ۖ ۚ
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவுக்கு الْكِتٰبَ வேதத்தை وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் مَعَهٗۤ அவருடன் اَخَاهُ அவரது சகோதரர் هٰرُوْنَ ஹாரூனை وَزِيْرًا ۖ ۚ உதவியாளராக
25:35. வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ ஜ'அல்னா ம'அஹூ அகாஹு ஹாரூன வZஜீரா
25:35. மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம்; இன்னும், அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
25:36 فَقُلْنَا اذْهَبَاۤ اِلَى الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاؕ فَدَمَّرْنٰهُمْ تَدْمِيْرًاؕ
فَقُلْنَا நாம் கூறினோம் اذْهَبَاۤ நீங்கள் இருவரும் செல்லுங்கள் اِلَى الْقَوْمِ மக்களிடம் الَّذِيْنَ كَذَّبُوْا பொய்ப்பித்தவர்கள் بِاٰيٰتِنَاؕ நமது அத்தாட்சிகளை فَدَمَّرْنٰهُمْ ஆகவே நாம் அவர்களை அழித்து விட்டோம் تَدْمِيْرًاؕ முற்றிலும் தரை மட்டமாக
25:36. Fபகுல்னத் ஹBபா இலல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா Fபதம்மர்னாஹும் தத்மீரா
25:36. ஆகவே நாம், "நீங்கள் இருவரும் - நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே, அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்" என்று கூறினோம்; பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.
25:37 وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰيَةً ؕ وَاَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ عَذَابًا اَ لِيْمًا ۖ ۚ
وَقَوْمَ இன்னும் மக்களையும் نُوْحٍ நூஹூடைய لَّمَّا போது كَذَّبُوا அவர்கள் பொய்ப்பித்தனர் الرُّسُلَ தூதர்களை اَغْرَقْنٰهُمْ அவர்களை மூழ்கடித்தோம் وَجَعَلْنٰهُمْ அவர்களை ஆக்கினோம் لِلنَّاسِ மக்களுக்கு اٰيَةً ؕ ஓர் அத்தாட்சியாக وَاَعْتَدْنَا இன்னும் நாம் தயார் படுத்தியுள்ளோம் لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு عَذَابًا தண்டனையை اَ لِيْمًا ۖ ۚ வலி தரும்
25:37. வ கவ்ம னூஹின் லம்மா கத்தBபுர் ருஸுல அக்ரக்னாஹும் வ ஜ'அல்னாஹும் லின்னாஸி ஆயத(ன்)வ் வ அஃதத்னா லிள்ளாலிமீன 'அதாBபன் அலீமா
25:37. இன்னும், நூஹின் சமூகத்தாரை அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கியபோது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம். மேலும், அநியாயக்காரர்களுக்கு நோவினைசெய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
25:38 وَّعَادًا وَّثَمُوْدَا۟ وَ اَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًۢا بَيْنَ ذٰ لِكَ كَثِيْرًا
وَّعَادًا ஆது وَّثَمُوْدَا۟ ஸமூது وَ اَصْحٰبَ الرَّسِّ கிணறு வாசிகள் وَقُرُوْنًۢا இன்னும் பல தலைமுறையினரை بَيْنَ ذٰ لِكَ இவர்களுக்கிடையில் كَثِيْرًا பல
25:38. வ 'ஆத(ன்)வ் வ தமூத வ அஸ் ஹாBபர் ரஸ்ஸி வ குரூனன் Bபய்ன தாலிக கதீரா
25:38. இன்னும், ஆது, ஸமூது (கூட்டத்தாரையும்) ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).
25:39 وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَ وَكُلًّا تَبَّـرْنَا تَـتْبِيْرًا
وَكُلًّا எல்லோருக்கும் ضَرَبْنَا நாம் விவரித்தோம் لَهُ அவர்களுக்கு الْاَمْثَالَ பல உதாரணங்களை وَكُلًّا எல்லோரையும் تَبَّـرْنَا நாம் அழித்துவிட்டோம் تَـتْبِيْرًا அடியோடு
25:39. வ குல்லன் ளரBப்னா லஹுல் அம்தால வ குல்லன் தBப்Bபர்னா தத்Bபீரா
25:39. (அவர்கள்) ஒவ்வொருவருக்கும் நாம் (தெளிவான சான்றுகளையும் கொடுத்து) அவ(ரவ)ருக்குரிய பல உதாரணங்களையும் கூறினோம்; மேலும், (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.
25:40 وَلَقَدْ اَتَوْا عَلَى الْقَرْيَةِ الَّتِىْۤ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ ؕ اَفَلَمْ يَكُوْنُوْا يَرَوْنَهَا ۚ بَلْ كَانُوْا لَا يَرْجُوْنَ نُشُوْرًا
وَلَقَدْ திட்டவட்டமாக اَتَوْا அவர்கள் வந்திருக்கின்றனர் عَلَى அருகில் الْقَرْيَةِ ஊரின் الَّتِىْۤ اُمْطِرَتْ பொழியப்பட்டது مَطَرَ மழை السَّوْءِ ؕ மிக மோசமான اَفَلَمْ يَكُوْنُوْا يَرَوْنَهَا ۚ அதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா? بَلْ மாறாக كَانُوْا இருந்தனர் لَا يَرْجُوْنَ அவர்கள் ஆதரவு வைக்காதவர்களாக نُشُوْرًا எழுப்பப்படுவதை
25:40. வ லகத் அதவ் 'அலல் கர்யதில் லதீ உம்திரத் மதரஸ் ஸவ்'; அFபலம் யகூனூ யரவ்னஹா; Bபல் கானூ லா யர்ஜூன னுஷூரா
25:40. இன்னும், நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் ஒரு தீய (கல்மாரி) மழை பொழிவிக்கப்பட்ட ஊருக்கு வந்திருக்கிறார்கள்; அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? மாறாக, (மரணத்திற்குப்பின் உயிர்கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.
25:41 وَاِذَا رَاَوْكَ اِنْ يَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِىْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا
وَاِذَا رَاَوْكَ அவர்கள் உம்மைப் பார்த்தால் اِنْ يَّتَّخِذُوْنَكَ உம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள் اِلَّا தவிர هُزُوًا ؕ கேலியாகவே اَهٰذَا இவரையா? الَّذِىْ எவர் بَعَثَ அனுப்பினான் اللّٰهُ அல்லாஹ் رَسُوْلًا தூதராக
25:41. வ இதா ர அவ்க இ(ன்)ய் யத்தகிதூனக இல்லா ஹுZஜுவன் அஹாதல் லதீ Bப'அதல் லாஹு ரஸூலா
25:41. "இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்!" (என்று கூறி), உம்மை அவர்கள் காணும்பொழுது உம்மைக் கேலிக்குரியவராகவே அவர்கள் கருதுகின்றனர்.
25:42 اِنْ كَادَ لَيُضِلُّنَا عَنْ اٰلِهَـتِنَا لَوْ لَاۤ اَنْ صَبَـرْنَا عَلَيْهَا ؕ وَسَوْفَ يَعْلَمُوْنَ حِيْنَ يَرَوْنَ الْعَذَابَ مَنْ اَضَلُّ سَبِيْلًا
اِنْ كَادَ لَيُضِلُّنَا இவர் நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார் عَنْ اٰلِهَـتِنَا நமது தெய்வங்களை விட்டு لَوْ لَاۤ اَنْ صَبَـرْنَا நாம் உறுதியாக இருந்திருக்க வில்லையென்றால் عَلَيْهَا ؕ அவற்றின் மீது وَسَوْفَ يَعْلَمُوْنَ அவர்கள் அறிந்து கொள்வார்கள் حِيْنَ போது يَرَوْنَ அவர்கள் பார்க்கும் الْعَذَابَ தண்டனையை مَنْ யார் اَضَلُّ மிக வழிகெட்டவர் سَبِيْلًا பாதையால்
25:42. இன் காத ல யுளில்லுனா 'அன் ஆலிஹதினா லவ் லா அன் ஸBபர்னா 'அலய்ஹா; வ ஸவ்Fப யஃலமூன ஹீன யரவ்னல் 'அதாBப மன் அளல்லு ஸBபீலா
25:42. "(தெய்வங்களாகிய) அவற்றின் மீது நாம் உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களைவிட்டும் (திருப்பி) நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்" (என்றும் அவர்கள் கூறுகின்றனர்; மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.
25:43 اَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ ؕ اَفَاَنْتَ تَكُوْنُ عَلَيْهِ وَكِيْلًا ۙ
اَرَءَيْتَ நீர் பார்த்தீரா? مَنِ اتَّخَذَ எடுத்துக் கொண்டவனை اِلٰهَهٗ தனது கடவுளாக هَوٰٮهُ ؕ தனது மன இச்சையை اَفَاَنْتَ நீர்? تَكُوْنُ ஆகுவீரா عَلَيْهِ அவனுக்கு وَكِيْلًا ۙ பொறுப்பாளராக
25:43. அர'அய்த மனித் தகத இலாஹஹூ ஹவாஹு அFப அன்த தகூனு 'அலய்ஹி வகீலா
25:43. தன் மனோ இச்சையையே தன் (வணக்கத்திற்குரிய) தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?
25:44 اَمْ تَحْسَبُ اَنَّ اَكْثَرَهُمْ يَسْمَعُوْنَ اَوْ يَعْقِلُوْنَ ؕ اِنْ هُمْ اِلَّا كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ سَبِيْلًا
اَمْ அல்லது تَحْسَبُ நீர் எண்ணுகிறீரா? اَنَّ என்று اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் يَسْمَعُوْنَ செவிமடுப்பார்கள் اَوْ அல்லது يَعْقِلُوْنَ ؕ சிந்தித்து புரிவார்கள் اِنْ هُمْ அவர்கள் இல்லை اِلَّا தவிர كَالْاَنْعَامِ கால்நடைகளைப் போன்றே بَلْ மாறாக هُمْ அவர்கள் اَضَلُّ வழிகெட்டவர்கள் سَبِيْلًا பாதையால்
25:44. அம் தஹ்ஸBபு அன்ன அக்தரஹும் யஸ்ம'ஊன அவ் யஃகிலூன்; இன் ஹும் இல்லா கல் அன்'ஆமி Bபல் ஹும் அளல்லு ஸBபீலா
25:44. அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது, விளங்கிக்கொள்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை; அன்றியும் (அவற்றை விடவும்) அவர்கள் மிகவும் வழி கெட்டவர்கள்.
25:45 اَلَمْ تَرَ اِلٰى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ ۚ وَلَوْ شَآءَ لَجَـعَلَهٗ سَاكِنًا ۚ ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيْلًا ۙ
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلٰى பக்கம் رَبِّكَ உமது இறைவன் كَيْفَ எப்படி مَدَّ நீட்டுகிறான் الظِّلَّ ۚ நிழலை وَلَوْ شَآءَ அவன் நாடியிருந்தால் لَجَـعَلَهٗ அதை ஆக்கியிருப்பான் سَاكِنًا ۚ நிரந்தரமாக ثُمَّ பிறகு جَعَلْنَا நாம் ஆக்கினோம் الشَّمْسَ சூரியனை عَلَيْهِ அதன் மீது دَلِيْلًا ۙ ஆதாரமாக
25:45. அலம் தர இலா ரBப்Bபிக கய்Fப மத்தள் ளில்ல வ லவ் ஷா'அ ல ஜ'அலஹூ ஸாகினன் தும்ம ஜ'அல்னஷ் ஷம்ஸ 'அலய்ஹி தலீலா
25:45. (நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும், அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்யமுடியும்; (நபியே!) பின்னர், சூரியனை நாம்தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.
25:46 ثُمَّ قَبَضْنٰهُ اِلَـيْنَا قَبْضًا يَّسِيْرًا
ثُمَّ பிறகு قَبَضْنٰهُ அதை கைப்பற்றி விடுகிறோம் اِلَـيْنَا நம் பக்கம் قَبْضًا கைப்பற்றுதல் يَّسِيْرًا மறைவாக
25:46. தும்ம கBபள்னாஹு இலய்னா கBப்ள(ன்)ய் யஸீரா
25:46. பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.
25:47 وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا
وَهُوَ الَّذِىْ அவன்தான் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الَّيْلَ இரவை لِبَاسًا ஓர் ஆடையாகவும் وَّالنَّوْمَ இன்னும் தூக்கத்தை سُبَاتًا ஓய்வாகவும் وَّجَعَلَ இன்னும் ஆக்கினான் النَّهَارَ பகலை نُشُوْرًا விழிப்பதற்கும்
25:47. வ ஹுவல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லிBபாஸ(ன்)வ் வன்னவ்ம ஸுBபாத(ன்)வ் வ ஜ'அலன் னஹார னுஷூரா
25:47. அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை (உழைப்பிற்கு ஏற்றவாறு) மீண்டும் எழுவதற்காக ஆக்கியிருக்கிறான்.
25:48 وَهُوَ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۙ
وَهُوَ الَّذِىْۤ அவன்தான் اَرْسَلَ அனுப்புகிறான் الرِّيٰحَ காற்றுகளை بُشْرًۢا நற்செய்தி கூறக்கூடியதாக بَيْنَ يَدَىْ முன்பாக رَحْمَتِهٖۚ தன் அருளுக்கு وَاَنْزَلْنَا இன்னும் நாம் இறக்குகிறோம் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً மழை நீரை طَهُوْرًا ۙ பரிசுத்தமான
25:48. வ ஹுவல் லதீ அர்ஸலர் ரியாஹ Bபுஷ்ரன் Bபய்ன யதய் ரஹ்மதிஹ்; வ அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அன் தஹூரா
25:48. இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பிவைக்கிறான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கிவைக்கிறோம்.
25:49 لِّـنُحْیَِۧ بِهٖ بَلْدَةً مَّيْتًا وَّنُسْقِيَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِىَّ كَثِيْرًا
لِّـنُحْیَِۧ நாம் உயிர்ப்பிப்பதற்காகவும் بِهٖ அதன்மூலம் بَلْدَةً பூமியை مَّيْتًا இறந்த وَّنُسْقِيَهٗ இன்னும் நாம் அதை புகட்டுவதற்காகவும் مِمَّا خَلَقْنَاۤ நாம் படைத்தவற்றில் اَنْعَامًا பல கால்நடைகளுக்கும் وَّاَنَاسِىَّ இன்னும் மனிதர்களுக்கும் كَثِيْرًا அதிகமான
25:49. லினுஹ்யிய Bபிஹீ Bபல்ததன் மய்த(ன்)வ்-வ னுஸ்கியஹூ மிம்மா கலக்னா அன்'ஆம(ன்)வ் வ அனாஸிய்ய கதீரா
25:49. இறந்துபோன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால்நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதைப் பருகும்படிச் செய்கிறோம்.
25:50 وَلَـقَدْ صَرَّفْنٰهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوْا ۖ فَاَبٰٓى اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا
وَلَـقَدْ صَرَّفْنٰهُ அதை நாம் பிரித்துக் கொடுத்தோம் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் لِيَذَّكَّرُوْا ۖ அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக فَاَبٰٓى மறுத்து விட்டனர் اَكْثَرُ மிகஅதிகமானவர்கள் النَّاسِ மனிதர்களில் اِلَّا தவிர كُفُوْرًا நிராகரிப்பதை
25:50. வ லகத் ஸர்ரFப்னாஹு Bபய்னஹும் லி யத்தக்கரூ Fப அBபா அக்தருன் னாஸி இல்லா குFபூரா
25:50. அவர்கள் படிப்பினைப் பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவுபடுத்துகிறோம்; மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.
25:51 وَلَوْ شِئْنَا لَبَـعَثْنَا فِىْ كُلِّ قَرْيَةٍ نَّذِيْرًا ۖ
وَلَوْ شِئْنَا நாம் நாடியிருந்தால் لَبَـعَثْنَا அனுப்பியிருப்போம் فِىْ كُلِّ ஒவ்வொரு قَرْيَةٍ ஊரிலும் نَّذِيْرًا ۖ ஓர் எச்சரிப்பாளரை
25:51. வ லவ் ஷி'னா லBப'அத்னா Fபீ குல்லி கர்யதின் னதீரா
25:51. மேலும், நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊரிலும் அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.
25:52 فَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَ جَاهِدْهُمْ بِهٖ جِهَادًا كَبِيْرًا
فَلَا تُطِعِ ஆகவே கீழ்ப்படியாதீர் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு وَ جَاهِدْ போர் செய்வீராக! هُمْ அவர்களிடம் بِهٖ இதன்மூலம் جِهَادًا போர் كَبِيْرًا பெரும்
25:52. Fபலா துதி'இல் காFபிரீன வ ஜாஹித்ஹும் Bபிஹீ ஜிஹாதன் கBபீரா
25:52. ஆகவே, (நபியே!) நீர் இந்த நிராகரிப்பாளர்களுக்குக் கீழ்ப்படியாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பலமாகப் போரிடுவீராக!
25:53 وَهُوَ الَّذِىْ مَرَجَ الْبَحْرَيْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌ ۚ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا
وَهُوَ الَّذِىْ அவன்தான் مَرَجَ இணைத்தான் الْبَحْرَيْنِ இரு கடல்களை هٰذَا இது عَذْبٌ மிக்க மதுரமானது فُرَاتٌ இனிப்பு நீராகும் وَّهٰذَا இதுவோ مِلْحٌ உப்பு நீராகும் اُجَاجٌ ۚ மிக்க உவர்ப்பானது وَجَعَلَ இன்னும் அவன் ஆக்கினான் بَيْنَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் بَرْزَخًا ஒரு திரையையும் وَّحِجْرًا தடுப்பையும் مَّحْجُوْرًا முற்றிலும் தடுக்கக்கூடியது
25:53. வ ஹுவல் லதீ மரஜல் Bபஹ்ரய்னி ஹாதா 'அத்Bபுன் Fபுராது(ன்)வ் வ ஹாதா மில்ஹுன் உஜாஜ்; வ ஜ'அல Bபய்னஹுமா Bபர்Zஜக(ன்)வ் வ ஹிஜ்ரன் மஹ்ஜூரா
25:53. அவன்தான் இருகடல்களையும் ஒன்று சேர்த்தான்: (அதில் ஒன்றான) இது, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; (மற்றொன்றான) இது, உப்பும் கசப்புமானது; இவ்விரண்டிற்குமிடையே ஒரு திரையையும் மீறமுடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
25:54 وَهُوَ الَّذِىْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّ صِهْرًا ؕ وَكَانَ رَبُّكَ قَدِيْرًا
وَهُوَ الَّذِىْ அவன்தான் خَلَقَ படைத்தான் مِنَ الْمَآءِ நீரிலிருந்து بَشَرًا மனிதனை فَجَعَلَهٗ இன்னும் அவனை ஆக்கினான் نَسَبًا இரத்த பந்தமுடையவனாக وَّ صِهْرًا ؕ இன்னும் திருமண பந்தமுடையவனாக وَكَانَ இருக்கிறான் رَبُّكَ உமது இறைவன் قَدِيْرًا பேராற்றலுடையவனாக
25:54. வ ஹுவல் லதீ கலக மினல் மா'இ Bபஷரன் Fப ஜ'அலஹூ னஸBபன் வ ஸிஹ்ரா; வ கான ரBப்Bபுக கதீரா
25:54. இன்னும், அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும், உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
25:55 وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْؕ وَكَانَ الْـكَافِرُ عَلٰى رَبِّهٖ ظَهِيْرًا
وَيَعْبُدُوْنَ அவர்கள் வணங்குகின்றனர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مَا لَا يَنْفَعُهُمْ அவர்களுக்கு நற்பலனளிக்காதவற்றை وَلَا يَضُرُّ இன்னும் தீங்கிழைக்காதவற்றை هُمْؕ அவர்களுக்கு وَكَانَ இருக்கிறான் الْـكَافِرُ நிராகரிப்பாளன் عَلٰى எதிராக رَبِّهٖ தன் இறைவனுக்கு ظَهِيْرًا உதவக்கூடியவனாக
25:55. வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உஹும் வலா யளுர்ருஹும்; வ கானல் காFபிரு 'அலா ரBப்Bபிஹீ ளஹீரா
25:55. இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்; நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கின்றான்.
25:56 وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًا
وَمَاۤ اَرْسَلْنٰكَ உம்மை நாம் அனுப்பவில்லை اِلَّا தவிர مُبَشِّرًا நற்செய்தி கூறுபவராக وَّنَذِيْرًا இன்னும் எச்சரிப்பவராகவே
25:56. வமா அர்ஸல்னாக இல்லா முBபஷ்ஷிர(ன்)வ் வ னதீரா
25:56. இன்னும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.
25:57 قُلْ مَاۤ اَسْـٴَــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ اِلَّا مَنْ شَآءَ اَنْ يَّـتَّخِذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا
قُلْ கூறுவீராக! مَاۤ اَسْـٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ எவ்வித கூலியையும் اِلَّا எனினும் مَنْ யார் شَآءَ நாடினானோ اَنْ يَّـتَّخِذَ எடுத்துக்கொள்ள اِلٰى رَبِّهٖ தன் இறைவனுடைய سَبِيْلًا வழியில்
25:57. குல் மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இல்லா மன் ஷா'அ அய் யத்தகித இலா ரBப்Bபிஹீ ஸBபீலா
25:57. "அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை; தம் இறைவனின் பக்கம் செல்ல நேர்வழியை எடுத்துக்கொள்ள நாடுகிறவரைத் தவிர" (மற்ற யாவரும் நஷ்டத்தில் உள்ளனர்) என்று (நபியே!) நீர் கூறும்.
25:58 وَتَوَكَّلْ عَلَى الْحَـىِّ الَّذِىْ لَا يَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖ ؕ وَكَفٰى بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرَ ا ۛۚ ۙ
وَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَى மீது الْحَـىِّ உயிருள்ளவன் الَّذِىْ எவன் لَا يَمُوْتُ மரணிக்கமாட்டான் وَسَبِّحْ இன்னும் துதிப்பீராக! بِحَمْدِهٖ ؕ அவனைப் புகழ்ந்து وَكَفٰى போதுமானவன் بِهٖ அவனே بِذُنُوْبِ பாவங்களை عِبَادِهٖ தன் அடியார்களின் خَبِيْرَ ا ۛۚ ۙ ஆழ்ந்தறிபவனாக
25:58. வ தவக்கல் 'அலல் ஹய்யில் லதீ லா யமூது வ ஸBப்Bபிஹ் Bபிஹம்திஹ்; வ கFபா Bபிஹீ BபிதுனூBபி 'இBபாதிஹீ கBபீரா
25:58. எனவே, மரணிக்காமாட்டானே அந்த நித்திய ஜீவனை (அல்லாஹ்வை)யே சார்ந்திருப்பீராக! இன்னும், அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்துகொண்டிருப்பீராக! இன்னும், அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பது அவனுக்குப் போதுமானதாகும்.
25:59 اۨلَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ ۛۚ اَلرَّحْمٰنُ فَسْــٴَــــلْ بِهٖ خَبِيْرًا
اۨلَّذِىْ அவன்தான் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும் فِىْ سِتَّةِ اَيَّامٍ ஆறு நாட்களில் ثُمَّ பிறகு اسْتَوٰى உயர்ந்து விட்டான் عَلَى மீது الْعَرْشِ ۛۚ அர்ஷின் اَلرَّحْمٰنُ அவன் பேரருளாளன் فَسْــٴَــــلْ கேட்பீராக! بِهٖ அவனை خَبِيْرًا அறிந்தவனிடம்
25:59. அல்லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா Fபீ ஸித்ததி அய்யாமின் தும்ம ஸ்தவா 'அலல் 'அர்ஷ்; அர் ரஹ்மானு Fபஸ்'அல் Bபிஹீ கBபீரா
25:59. அவனே வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் (அரியாசனத்தின்) மீது நிலையானான்; அவன்தான் அளவற்ற அருளாளன்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப்பற்றிக் கேட்பீராக!
25:60 وَاِذَا قِيْلَ لَهُمُ اسْجُدُوْا لِلرَّحْمٰنِ قَالُوْا وَمَا الرَّحْمٰنُ اَنَسْجُدُ لِمَا تَاْمُرُنَا وَزَادَهُمْ نُفُوْرًا ۩
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمُ அவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு قَالُوْا கூறுகின்றனர் وَمَا யார்? الرَّحْمٰنُ பேரருளாளன் اَنَسْجُدُ நாங்கள் சிரம் பணிய வேண்டுமா? لِمَا تَاْمُرُنَا நீர்ஏவக்கூடியவனுக்கு وَزَادَ அதிகப்படுத்தியது هُمْ அவர்களுக்கு نُفُوْرًا ۩ வெறுப்பை
25:60. வ இதா கீல லஹுமுஸ் ஜுதூ லிர் ரஹ்மானி காலூ வ மர் ரஹ்மானு 'அ னஸ்ஜுது லிமா த'முருனா வ Zஜாதஹும் னுFபூரா
25:60. இன்னும், "அளவற்ற அருளாளனுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், "அளவற்ற அருளாளன் என்பவன் யார்? நீர் கட்டளையிடக்கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?" என்று கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.
25:61 تَبٰـرَكَ الَّذِىْ جَعَلَ فِى السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِيْرًا
تَبٰـرَكَ மிக்க அருள் நிறைந்தவன் الَّذِىْ எவன் جَعَلَ அமைத்தான் فِى السَّمَآءِ வானங்களில் بُرُوْجًا பெரும் கோட்டைகளை وَّجَعَلَ இன்னும் அமைத்தான் فِيْهَا அதில் سِرٰجًا சூரியனையும் وَّقَمَرًا சந்திரனையும் مُّنِيْرًا ஒளிரும்
25:61. தBபாரகல் லதீ ஜ'அல Fபிஸ் ஸமா'இ Bபுரூஜ(ன்)வ் வ ஜ'அல Fபீஹா ஸிராஜ(ன்)வ் வ கமரன் முனீரா
25:61. வான்மண்டலத்தில் பல கிரகங்களை அமைத்து அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும், ஒளிர்கின்ற சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
25:62 وَهُوَ الَّذِىْ جَعَلَ الَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ يَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا
وَهُوَ الَّذِىْ அவன்தான் جَعَلَ அமைத்தான் الَّيْلَ இரவையும் وَالنَّهَارَ பகலையும் خِلْفَةً பகரமாக لِّمَنْ اَرَادَ நாடுபவருக்கு اَنْ يَّذَّكَّرَ நல்லறிவு பெற اَوْ அல்லது اَرَادَ நாடினார் شُكُوْرًا நன்றிசெய்ய
25:62. வ ஹுவல் லதீ ஜ'அலல் லய்ல வன்னஹார கில்Fபதன் லிமன் அராத 'அ(ன்)ய் யத்தக்கர அவ் அராதா ஷுகூரா
25:62. இன்னும், சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.
25:63 وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا
وَعِبَادُ அடியார்கள் الرَّحْمٰنِ பேரருளாளனுடைய الَّذِيْنَ எவர்கள் يَمْشُوْنَ நடப்பார்கள் عَلَى الْاَرْضِ பூமியில் هَوْنًا மென்மையாக وَّاِذَا خَاطَبَهُمُ இன்னும் அவர்களிடம் பேசினால் الْجٰهِلُوْنَ அறிவீனர்கள் قَالُوْا கூறி விடுவார்கள் سَلٰمًا ஸலாம்
25:63. வ 'இBபாதுர் ரஹ்மானில் லதீன யம்ஷூன 'அலல் அர்ளி ஹவ்ன(ன்)வ் வ இதா காத Bபஹுமுல் ஜாஹிலூன காலூ ஸலாமா
25:63. இன்னும், அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; மூடர்கள் அவர்களுடன் பேச(வா)தாட முற்பட்டால், "சாந்தியுண்டாகட்டும்" என்று சொல்லி (விலகிப் போய்)விடுவார்கள்.
25:64 وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا
وَالَّذِيْنَ எவர்கள் يَبِيْتُوْنَ இரவு கழிப்பார்கள் لِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு سُجَّدًا சிரம் பணிந்தவர்களாக وَّقِيَامًا நின்றவர்களாக
25:64. வல்லதீன யBபீதூன லி ரBப்Bபிஹிம் ஸுஜ்ஜத(ன்)வ் வ கியாமா
25:64. இன்னும், அவர்கள் தங்கள் இறைவனுக்கு ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் (அல்லாஹ்வின் வழிபாட்டில்) இரவைக் கழிப்பார்கள்.
25:65 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۖ
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா! اصْرِفْ திருப்பி விடு عَنَّا எங்களை விட்டு عَذَابَ தண்டனையை جَهَـنَّمَ நரகமுடைய ۖ اِنَّ நிச்சயமாக عَذَابَهَا அதனுடைய தண்டனை كَانَ இருக்கிறது غَرَامًا ۖ நீங்காத ஒன்றாக
25:65. வல்லதீன யகூலூன ரBப்Bபனஸ் ரிFப் 'அன்னா 'அதாBப ஜஹன்னம இன்ன 'அதாBபஹா கான கராமா
25:65. இன்னும் அவர்கள், "எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்" என்று கூறுவார்கள்.
25:66 اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا
اِنَّهَا நிச்சயமாக அது سَآءَتْ மிக கெட்டது مُسْتَقَرًّا நிரந்தரமானது وَّمُقَامًا தற்காலிகமான தங்குமிடத்தாலும்
25:66. இன்னஹா ஸா'அத் முஸ்தகர்ர(ன்)வ் வ முகாமா
25:66. "நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்" (என்றும் கூறுவார்கள்).
25:67 وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا
وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا அவர்கள் செலவு செய்தால் لَمْ يُسْرِفُوْا வரம்பு மீறமாட்டார்கள் وَلَمْ يَقْتُرُوْا இன்னும் கருமித்தனமும் காட்ட மாட்டார்கள் وَكَانَ இருக்கும் بَيْنَ மத்தியில் ذٰلِكَ அதற்கு قَوَامًا நடுநிலையாக
25:67. வல்லதீன இதா அன்Fபகூ லம் யுஸ்ரிFபூ வ லம் யக்துரூ வ கான Bபய்ன தாலிக கவாமா
25:67. இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண்விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள்; எனினும், இரண்டிற்கும் மத்திய நிலையாக அது இருக்கும்.
25:68 وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ
وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ அவர்கள் அழைக்க மாட்டார்கள் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَ வேறு وَلَا يَقْتُلُوْنَ இன்னும் கொல்ல மாட்டார்கள் النَّفْسَ உயிரை الَّتِىْ எது حَرَّمَ தடுத்தான் اللّٰهُ அல்லாஹ் اِلَّا தவிர بِالْحَـقِّ உரிமையைக் கொண்டே وَلَا يَزْنُوْنَ ۚ இன்னும் விபசாரம் செய்யமாட்டார்கள் وَمَنْ يَّفْعَلْ யார் செய்வாரோ ذٰ لِكَ இவற்றை يَلْقَ அவர் சந்திப்பார் اَثَامًا ۙ தண்டனையை
25:68. வல்லதீன லா யத்'ஊன ம'அல் லாஹி இலாஹன் ஆகர வலா யக்துலூனன் னFப்ஸல் லதீ ஹர்ரமல் லாஹு இல்லா Bபில்ஹக்கி வலா யZஜ்னூன்; வ மய் யFப்'அல் தாலிக யல்க 'அதாமா
25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு இறைவனைப் பிரார்த்திக்க மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் தடுத்திருக்கும் எந்த உயிரையும் அவர்கள் உரிமையின்றிக் கொலை செய்து விடவும் மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள்: ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனையைச் சந்திப்பார்.
25:69 يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا ۖ
يُضٰعَفْ பன்மடங்காக ஆக்கப்படும் لَهُ அவருக்கு الْعَذَابُ அந்த தண்டனை يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وَيَخْلُدْ நிரந்தரமாக தங்கி விடுவார் فِيْهٖ அதில் مُهَانًا ۖ இழிவுபடுத்தப்பட்டவராக
25:69. யுளா'அFப் லஹுல் 'அதாBபு யவ்மல் கியாமதி வ யக்லுத் Fபீஹீ முஹானா
25:69. மறுமை நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும், அதில் அவர் இழிவாக்கப்பட்டவராக நிரந்தரமாகத் தங்கிவிடுவார்.
25:70 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
اِلَّا எனினும், مَنْ யார் تَابَ திருந்தினார்(கள்) وَاٰمَنَ இன்னும் நம்பிக்கை கொண்டார்(கள்) وَعَمِلَ இன்னும் செய்தார் عَمَلًا செயலை صَالِحًـا நன்மையான فَاُولٰٓٮِٕكَ அவர்கள் يُبَدِّلُ மாற்றி விடுவான் اللّٰهُ அல்லாஹ் سَيِّاٰتِهِمْ அவர்களுடைய தீய செயல்களை حَسَنٰتٍ ؕ நல்ல செயல்களாக وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا பெரும் கருணையாளனாக
25:70. இல்லா மன் தாBப வ 'ஆமன வ 'அமில 'அமலன் ஸாலிஹன் Fப உலா'இக யுBபத் திலுல் லாஹு ஸய்யி ஆதிஹிம் ஹஸனாத்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
25:70. ஆனால், (அவர்களில்) எவர் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு, நற்செயலைச் செய்தாரோ அவரைத் தவிர; அத்தகையோர் - அவர்களுடைய தீமைகளை நன்மைகளாக அல்லாஹ் மாற்றிவிடுவான்; மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கிறான்.
25:71 وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًـا فَاِنَّهٗ يَتُوْبُ اِلَى اللّٰهِ مَتَابًا
وَمَنْ யார் تَابَ திருந்துவார் وَعَمِلَ இன்னும் செய்வார் صَالِحًـا நன்மை فَاِنَّهٗ நிச்சயமாக அவர் يَتُوْبُ திரும்பி விடுகிறார் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் مَتَابًا திரும்புதல்-முற்றிலும்
25:71. வ மன் தாBப வ 'அமில ஸாலிஹன் Fப இன்னஹூ யதூBபு இலல் லாஹி மதாBபா
25:71. இன்னும், எவர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயல் செய்கின்றாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கம் முற்றிலுமாகத் திரும்பிவிடுகிறார்.
25:72 وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ இன்னும் அவர்கள் ஆஜராக மாட்டார்கள் الزُّوْرَۙ பொய்யான செயலுக்கு وَ اِذَا مَرُّوْا இன்னும் இவர்கள் கடந்து சென்றால் بِاللَّغْوِ வீணான செயலுக்கு مَرُّوْا கடந்து சென்று விடுவார்கள் كِرَامًا கண்ணியவான்களாக
25:72. வல்லதீன லா யஷ் ஹதூனZஜ் Zஜூர வ இதா மர்ரூ Bபில்லக்வி மர்ரூ கிராமா
25:72. அன்றியும், அவர்கள் பொய்ச்சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணானவற்றைக் கடக்கும்போது கண்ணியமானவர்களாகக் கடந்துவிடுவார்கள்.
25:73 وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا
وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا இன்னும் எவர்கள்/அவர்கள் அறிவுறுத்தப்பட்டால் بِاٰيٰتِ வசனங்களைக் கொண்டு رَبِّهِمْ தங்கள் இறைவனின் لَمْ يَخِرُّوْا விழ மாட்டார்கள் عَلَيْهَا அவற்றின் மீது صُمًّا செவிடர்களாக وَّعُمْيَانًا இன்னும் குருடர்களாக
25:73. வல்லதீன இதா துக்கிரூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் லம் யகிர்ரூ 'அலய்ஹா ஸும்ம(ன்)வ் வ'உம்யானா
25:73. இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவிசாய்ப்பார்கள்.)
25:74 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா! هَبْ தருவாயாக! لَـنَا எங்களுக்கு مِنْ اَزْوَاجِنَا எங்கள் மனைவிகள் மூலமும் وَذُرِّيّٰتِنَا எங்கள் சந்ததிகள் மூலமும் قُرَّةَ குளிர்ச்சியை اَعْيُنٍ கண்களுக்கு وَّاجْعَلْنَا எங்களை ஆக்குவாயாக! لِلْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்களுக்கு اِمَامًا இமாம்களாக
25:74. வல்லதீன யகூலூன ரBப்Bபனா ஹBப் லனா மின் அZஜ்வாஜினா வ துர்ரியாதினா குர்ரத அஃயுனி(ன்)வ் வஜ் 'அல்னா லில்முத்தகீன இமாமா
25:74. மேலும் அவர்கள்: "எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும், (உன்னை) அஞ்சுவோருக்கு வழிகாட்டியாக எங்களை ஆக்குவாயாக!" என்று பிரார்த்தனை செய்வார்கள்.
25:75 اُولٰٓٮِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا ۙ
اُولٰٓٮِٕكَ இவர்கள் يُجْزَوْنَ கூலியாக கொடுக்கப்படுவார்கள் الْغُرْفَةَ அறையை بِمَا صَبَرُوْا அவர்கள் பொறுமையாக இருந்ததால் وَيُلَقَّوْنَ சந்திக்கப்படுவார்கள் فِيْهَا அதில் تَحِيَّةً முகமனைக்கொண்டும் وَّسَلٰمًا ۙ ஸலாமைக் கொண்டும்
25:75. உலா'இக யுஜ்Zஜவ்னல் குர்Fபத Bபிமா ஸBபரூ வ யுலக்கவ்ன Fபீஹா தஹிய்யத(ன்)வ் வ ஸலாமா
25:75. பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு (சுவர்க்கபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
25:76 خٰلِدِيْنَ فِيْهَا ؕ حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا
خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள் فِيْهَا ؕ அதில் حَسُنَتْ அது மிக அழகானது مُسْتَقَرًّا நிரந்தரமான தங்குமிடத்தாலும் وَّمُقَامًا தற்காலிகமான தங்குமிடத்தாலும்
25:76. காலிதீன Fபீஹா; ஹஸுனத் முஸ்தகர்ர(ன்)வ் வ முகாமா
25:76. அதில் அவர்கள் நிரந்தரமாக(த் தங்கி) விடுவார்கள்; அது, நிலையாகத் தங்குமிடத்தாலும், சிறிது நேரம் தங்குமிடத்தாலும் அழகானதாகிவிட்டது.
25:77 قُلْ مَا يَعْبَـؤُا بِكُمْ رَبِّىْ لَوْلَا دُعَآؤُكُمْۚ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُوْنُ لِزَامًا
قُلْ கூறுவீராக! مَا يَعْبَـؤُا ஒரு பொருட்டாகவே கருதமாட்டான் بِكُمْ உங்களை رَبِّىْ என் இறைவன் لَوْلَا இல்லாதிருந்தால் دُعَآؤُ பிரார்த்தனை كُمْۚ உங்கள் فَقَدْ திட்டமாக كَذَّبْتُمْ நீங்கள் பொய்ப்பித்தீர்கள் فَسَوْفَ يَكُوْنُ இது கண்டிப்பாக இருக்கும் لِزَامًا உங்களை தொடரக்கூடியதாக
25:77. குல் மா யஃBப'உ Bபிகும் ரBப்Bபீ லவ் லா து'ஆ'உகும் Fபகத் கத்தBப்தும் Fபஸவ்Fப யகூனு லிZஜாமா
25:77. (நபியே!) நீர் சொல்வீராக! "உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்கமாட்டான்; ஆனால், நீங்களோ (சத்தியத்தை) பொய்யாக்கிவிட்டீர்கள்; எனவே, (அதன் வேதனை) பின்னர் (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும்."