09. ஸூரத்துத் தவ்பா(மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)
மதனீ, வசனங்கள்: 129

9:1
9:1 بَرَآءَةٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَى الَّذِيْنَ عَاهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِيْنَ ؕ‏
بَرَآءَةٌ நீங்குதல், விலகுதல் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் புறத்திலிருந்து وَرَسُوْلِهٖۤ இன்னும் அவனுடைய தூதர் اِلَى الَّذِيْنَ எவர்களுக்கு عَاهَدْتُّمْ உடன்படிக்கை செய்தீர்கள் مِّنَ الْمُشْرِكِيْنَ ؕ‏ இணைவைப்பவர்களில்
9:1. Bபரா'அதும் மினல் லாஹி வ ரஸூலிஹீ இலல் லதீன 'ஆஹத்தும் மினல் முஷ்ரிகீன்
9:1. (முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
9:2
9:2 فَسِيْحُوْا فِى الْاَرْضِ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّاعْلَمُوْۤا اَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى اللّٰهِ‌ۙ وَاَنَّ اللّٰهَ مُخْزِى الْكٰفِرِيْنَ‏
فَسِيْحُوْا ஆகவே நீங்கள் சுற்றலாம் فِى الْاَرْضِ பூமியில் اَرْبَعَةَ நான்கு اَشْهُرٍ மாதங்கள் وَّاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّكُمْ நிச்சயம் நீங்கள் غَيْرُ مُعْجِزِى பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் اللّٰهِ‌ۙ அல்லாஹ்வை وَاَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் مُخْزِى இழிவுபடுத்துபவன் الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களை
9:2. Fபஸீஹூ Fபில் அர்ளி அர்Bப'அத அஷ்ஹுரி(ன்)வ் வஃலமூஅன்னகும் கய்ரு முஃஜிZஜில் லாஹி வ அன்னல் லாஹ முக்Zஜில் காFபிரீன்
9:2. நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
9:3
9:3 وَاَذَانٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْاَكْبَرِ اَنَّ اللّٰهَ بَرِىْۤءٌ مِّنَ الْمُشْرِكِيْنَ ‌ۙ  وَ رَسُوْلُهٗ‌ ؕ فَاِنْ تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَّـكُمْ ‌ۚ وَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى اللّٰهِ‌ ؕ وَبَشِّرِ الَّذِيْنَ كَفَرُوْا بِعَذَابٍ اَ لِيْمٍۙ‏
وَاَذَانٌ அறிவிப்பு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து وَرَسُوْلِهٖۤ இன்னும் அவனுடைய தூதர் اِلَى பக்கம் النَّاسِ மக்கள் يَوْمَ நாள் الْحَجِّ ஹஜ்ஜுடைய الْاَكْبَرِ மாபெரும் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بَرِىْۤءٌ விலகியவன் (விலகியவர்கள்) مِّنَ இருந்து الْمُشْرِكِيْنَ ۙ  இணைவைப்பவர்கள் وَ رَسُوْلُهٗ‌ ؕ இன்னும் அவனுடைய தூதர் فَاِنْ تُبْتُمْ நீங்கள் திருந்தினால் فَهُوَ அது خَيْرٌ لَّـكُمْ ۚ உங்களுக்கு மிக்க நன்று وَاِنْ تَوَلَّيْتُمْ நீங்கள் விலகினால் فَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் غَيْرُ مُعْجِزِى பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வை وَبَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بِعَذَابٍ اَ لِيْمٍۙ‏ துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு
9:3. வ அதானும் மினல் லாஹி வ ரஸூலிஹீ இலன் னாஸி யவ்மல் ஹஜ்ஜில் அக்Bபரி அன்னல் லாஹ Bபரீ'உம் மினல் முஷ்ரிகீன வ ரஸூலுஹ்; Fப-இன் துBப்தும் Fபஹுவ கய்ருல்லகும் வ இன் தவல்லய்தும் Fபஃலமூ அன்னகும் கய்ரு முஃஜிZஜில் லாஹ்; வ Bபஷிரில் லதீன கFபரூ BபிஅதாBபின் அலீம்
9:3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
9:4
9:4 اِلَّا الَّذِيْنَ عَاهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِيْنَ ثُمَّ لَمْ يَنْقُصُوْكُمْ شَيْـٴًـــا وَّلَمْ يُظَاهِرُوْا عَلَيْكُمْ اَحَدًا فَاَتِمُّوْۤا اِلَيْهِمْ عَهْدَهُمْ اِلٰى مُدَّتِهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் عَاهَدْتُّمْ நீங்கள் உடன்படிக்கை செய்தீர்கள் مِّنَ الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களில் ثُمَّ பிறகு لَمْ يَنْقُصُوْ அவர்கள் குறைக்காமல் كُمْ உங்களுக்கு شَيْـٴًـــا எதையும் وَّلَمْ يُظَاهِرُوْا அவர்கள் உதவாமல் عَلَيْكُمْ உங்களுக்கு எதிராக اَحَدًا ஒருவருக்கும் فَاَتِمُّوْۤا முழுமைப்படுத்துங்கள் اِلَيْهِمْ அவர்களுக்கு عَهْدَهُمْ அவர்களின் உடன்படிக்கையை اِلٰى مُدَّتِهِمْ‌ؕ அவர்களுடைய தவணை வரை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُتَّقِيْنَ‏ அஞ்சுபவர்களை
9:4. இல்லல் லதீன 'ஆஹத்தும் மினல் முஷ்ரிகீன தும்ம லம் யன்குஸூகும் ஷய்'அ(ன்)வ்-வ லம் யுளாஹிரூ 'அலய்கும் அஹதன் Fப அதிம்மூ இலய்ஹிம் 'அஹ்தஹும் இலா முத்ததிஹிம்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முத்தகீன்
9:4. ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:5
9:5 فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُـرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِيْنَ حَيْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍ‌ ۚ فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَ اٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِيْلَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
فَاِذَا انْسَلَخَ முடிந்துவிட்டால் الْاَشْهُرُ மாதங்கள் الْحُـرُمُ புனித(மானவை) فَاقْتُلُوا கொல்லுங்கள் الْمُشْرِكِيْنَ இணை வைப்பவர்களை حَيْثُ எங்கு وَجَدْتُّمُوْ கண்டீர்கள் هُمْ அவர்களை وَخُذُوْ இன்னும் பிடியுங்கள் هُمْ அவர்களை وَاحْصُرُوْ இன்னும் முற்றுகையிடுங்கள் هُمْ அவர்களை وَاقْعُدُوْا இன்னும் அமருங்கள் لَهُمْ அவர்களுக்காக كُلَّ ஒவ்வொரு مَرْصَدٍ‌ ۚ பதுங்குமிடத்தில் فَاِنْ تَابُوْا அவர்கள் திருந்தினால் وَاَقَامُوا இன்னும் நிலைநிறுத்தினால் الصَّلٰوةَ தொழுகையை وَ اٰتَوُا இன்னும் கொடுத்தால் الزَّكٰوةَ ஸகாத்தை فَخَلُّوْا விட்டுவிடுங்கள் سَبِيْلَهُمْ‌ ؕ அவர்களுடைய வழியை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
9:5. Fப இதன்ஸலகல் அஷ்ஹுருல் ஹுருமு Fபக்துலுல் முஷ்ரிகீன ஹய்து வஜத்துமூஹும் வ குதூஹும் வஹ்ஸுரூஹும் வக்'உதூ லஹும் குல்ல மர்ஸத்; Fப-இன் தாBபூ வ அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத Fபகல்லூ ஸBபீலஹும்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:6
9:6 وَاِنْ اَحَدٌ مِّنَ الْمُشْرِكِيْنَ اسْتَجَارَكَ فَاَجِرْهُ حَتّٰى يَسْمَعَ كَلَامَ اللّٰهِ ثُمَّ اَبْلِغْهُ مَاْمَنَهٗ‌ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُوْنَ
وَاِنْ ஆல் اَحَدٌ ஒருவர் مِّنَ الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களில் اسْتَجَارَكَ பாதுகாப்புத் தேடினார்/உம்மிடம் فَاَجِرْهُ பாதுகாப்பு அளிப்பீராக/அவருக்கு حَتّٰى يَسْمَعَ செவியுறும் வரை كَلَامَ பேச்சை اللّٰهِ அல்லாஹ்வின் ثُمَّ பிறகு اَبْلِغْهُ சேர்த்து விடுவீராக/அவரை مَاْمَنَهٗ‌ ؕ அவருடைய பாதுகாப்பான இடத்திற்கு ذٰ لِكَ நிச்சயமாக அவர்கள் بِاَنَّهُمْ அதற்குக் காரணம் قَوْمٌ சமுதாயம் لَّا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
9:6. வ இன் அஹதும் மினல் முஷ்ரிகீனஸ் தஜாரக Fப அஜிர்ஹு ஹத்தா யஸ்ம'அ கலாமல் லாஹி தும்ம அBப்லிக்ஹு மா மனஹ்; தாலிக Bபி அன்னஹும் கவ்முல் லா யஃலமூன்
9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
9:7
9:7 كَيْفَ يَكُوْنُ لِلْمُشْرِكِيْنَ عَهْدٌ عِنْدَ اللّٰهِ وَعِنْدَ رَسُوْلِهٖۤ اِلَّا الَّذِيْنَ عٰهَدْتُّمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ ۚ فَمَا اسْتَقَامُوْا لَـكُمْ فَاسْتَقِيْمُوْا لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ‏
كَيْفَ எப்படி? يَكُوْنُ இருக்கும் لِلْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களுக்கு عَهْدٌ ஒப்பந்தம் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் وَعِنْدَ رَسُوْلِهٖۤ இன்னும் அவனுடைய தூதரிடம் اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் عَاهَدتُّمْ நீங்கள் ஒப்பந்தம் செய்தீர்கள் عِنْدَ الْمَسْجِدِ மஸ்ஜிதிடம் الْحَـرَامِ‌ ۚ புனித(மானது) فَمَا اسْتَقَامُوْا அவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ளும் வரை لَـكُمْ உங்களுடன் فَاسْتَقِيْمُوْا ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் لَهُمْ‌ ؕ அவர்களுடன் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிப்பான் الْمُتَّقِيْنَ‏ அஞ்சுபவர்களை
9:7. கய்Fப யகூனு லில்முஷ் ரிகீன 'அஹ்துன் 'இன்தல்லாஹி வ 'இன்த ரஸூலிஹீ இல்லல் லதீன 'ஆஹத்தும் 'இன்தல் மஸ்ஜிதில் ஹராமி Fபமஸ் தகாமூ லகும் Fபஸ்தகீமூ லஹும்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுல் முத்தகீன்
9:7. அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன்(எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர; அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:8
9:8 كَيْفَ وَاِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ لَا يَرْقُبُوْا فِيْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً‌ ؕ يُرْضُوْنَـكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَاْبٰى قُلُوْبُهُمْ‌ۚ وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَ‌ۚ‏
كَيْفَ எவ்வாறு? وَاِنْ يَّظْهَرُوْا அவர்கள் வெற்றி கொண்டால் عَلَيْكُمْ உங்களை لَا يَرْقُبُوْا பொருட்படுத்த மாட்டார்கள் فِيْكُمْ உங்களுடன் اِلًّا உறவை وَّلَا ذِمَّةً‌ ؕ இன்னும் ஒப்பந்தத்தை يُرْضُوْنَـكُمْ திருப்திபடுத்துகின்றனர்/உங்களை بِاَفْوَاهِهِمْ தங்கள் வாய்களால் وَتَاْبٰى மறுக்கின்றன قُلُوْبُهُمْ‌ۚ அவர்களுடைய உள்ளங்கள் وَاَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானோர் فٰسِقُوْنَ‌ۚ‏ பாவிகள்
9:8. கய்Fப வ இ(ன்)ய்-யள்ஹரூ 'அலய்கும் லா யர்குBபூ Fபீகும் இல்ல(ன்)வ் வலா திம்மஹ்; யுர்ளூ னகும் BபிஅFப்வாஹிஹிம் வ த'Bபா குலூBபுஹும் வ அக்தருஹும் Fபாஸிகூன்
9:8. (எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை; அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.
9:9
9:9 اِشْتَرَوْا بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا فَصَدُّوْا عَنْ سَبِيْلِهٖ‌ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
اِشْتَرَوْا வாங்கினார்கள் بِاٰيٰتِ வசனங்களுக்குப் பகரமாக اللّٰهِ அல்லாஹ்வின் ثَمَنًا விலையை قَلِيْلًا சொற்பமானது فَصَدُّوْا தடுத்தனர் عَنْ سَبِيْلِهٖ‌ ؕ அவனுடைய பாதையை விட்டு اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் سَآءَ கெட்டு விட்டது مَا எது كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
9:9. இஷ்தரவ் Bபி ஆயாதில் லாஹி தமனன் கலீலன் Fபஸத்தூ 'அன் ஸBபீலிஹ்; இன்னஹும் ஸா'அ மா கானூ யஃமலூன்
9:9. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.
9:10
9:10 لَا يَرْقُبُوْنَ فِىْ مُؤْمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً‌ ؕ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُعْتَدُوْنَ‏
لَا يَرْقُبُوْنَ பொருட்படுத்த மாட்டார்கள் فِىْ مُؤْمِنٍ நம்பிக்கையாளர்(கள்) விஷயத்தில் اِلًّا உறவை وَّلَا ذِمَّةً‌ ؕ இன்னும் ஒப்பந்தத்தை وَاُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُعْتَدُوْنَ‏ வரம்பு மீறிகள்
9:10. லா யர்குBபூன Fபீ மு'மினின் இல்ல(ன்)வ் வலா திம்மஹ் வ உலா 'இக ஹுமுல்மு 'ததூன்
9:10. அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.”
9:11
9:11 فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ‌ؕ وَنُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
فَاِنْ تَابُوْا அவர்கள் திருந்தினால் وَاَقَامُوا இன்னும் நிலைநிறுத்தினால் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتَوُا இன்னும் கொடுத்தால் الزَّكٰوةَ ஸகாத்தை فَاِخْوَانُكُمْ உங்கள் சகோதரர்கள் فِى الدِّيْنِ‌ؕ மார்க்கத்தில் وَنُفَصِّلُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّعْلَمُوْنَ‏ அறிகின்றார்கள்
9:11. Fப இன் தாBபூ வ அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத Fப இக்வானுகும் Fபித் தீன்; வ னுFபஸ்ஸிலுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
9:11. ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
9:12
9:12 وَاِنْ نَّكَثُوْۤا اَيْمَانَهُمْ مِّنْۢ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوْا فِىْ دِيْـنِكُمْ فَقَاتِلُوْۤا اَٮِٕمَّةَ الْـكُفْرِ‌ۙ اِنَّهُمْ لَاۤ اَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُوْنَ‏
وَاِنْ نَّكَثُوْۤا அவர்கள் முறித்தால் اَيْمَانَهُمْ தங்கள் சத்தியங்களை مِّنْۢ بَعْدِ பின்னர் عَهْدِهِمْ தங்கள் ஒப்பந்தம் وَطَعَنُوْا இன்னும் குறை கூறினர் فِىْ دِيْـنِكُمْ உங்கள் மார்க்கத்தில் فَقَاتِلُوْۤا போரிடுங்கள் اَٮِٕمَّةَ தலைவர்களிடம் الْـكُفْرِ‌ۙ நிராகரிப்பு اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَاۤ اَيْمَانَ அறவே சத்தியங்களில்லை لَهُمْ அவர்களுக்கு لَعَلَّهُمْ يَنْتَهُوْنَ‏ அவர்கள் விலகிக் கொள்வதற்காக
9:12. வ இன் னகதூ அய்மானஹும் மிம் Bபஃதி 'அஹ்திஹிம் வ த'அனூ Fபீ தீனிகும் Fபகாதிலூ அ'இம்மதல் குFப்ரி இன்னஹும் லா அய்மான லஹும் ல'அல்லஹும் யன்தஹூன்
9:12. அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களை அவர்கள் முறித்துக் கொண்டு, உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.
9:13
9:13 اَلَا تُقَاتِلُوْنَ قَوْمًا نَّكَثُوْۤا اَيْمَانَهُمْ وَهَمُّوْا بِاِخْرَاجِ الرَّسُوْلِ وَهُمْ بَدَءُوْكُمْ اَوَّلَ مَرَّةٍ‌ ؕ اَتَخْشَوْنَهُمْ‌ ۚ فَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشَوْهُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
اَلَا تُقَاتِلُوْنَ நீங்கள் போர்புரிய மாட்டீர்களா? قَوْمًا மக்களிடம் نَّكَثُوْۤا முறித்தனர் اَيْمَانَهُمْ தங்கள் சத்தியங்களை وَهَمُّوْا இன்னும் உறுதியாகநாடினர் بِاِخْرَاجِ வெளியேற்றுவதற்கு الرَّسُوْلِ தூதரை وَهُمْ அவர்கள்தான் بَدَءُوْ ஆரம்பித்தனர் كُمْ உங்களிடம் اَوَّلَ مَرَّةٍ‌ ؕ முதல் முறையாக اَتَخْشَوْنَهُمْ‌ ۚ நீங்கள் பயப்படுகிறீர்களா? / அவர்களை فَاللّٰهُ அல்லாஹ்தான் اَحَقُّ மிகத் தகுதியானவன் اَنْ تَخْشَوْهُ நீங்கள் பயப்படுவதற்கு / அவனை اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக
9:13. அலா துகாதிலூன கவ்மன் னகதூ அய்மானஹும் வ ஹம்மூ Bபி இக்ராஜிர் ரஸூலி வ ஹும் Bபத'ஊகும் அவ்வல மர்ரஹ்; அதக்-ஷவ்னஹும்; Fபல்லாஹு அஹக்கு அன் தக்-ஷவ்ஹு இன் குன்தும் மு'மினீன்
9:13. தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.
9:14
9:14 قَاتِلُوْهُمْ يُعَذِّبْهُمُ اللّٰهُ بِاَيْدِيْكُمْ وَيُخْزِهِمْ وَيَنْصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِيْنَۙ‏
قَاتِلُوْ போரிடுங்கள் هُمْ அவர்களிடம் يُعَذِّبْهُمُ வேதனை செய்வான்/அவர்களை اللّٰهُ அல்லாஹ் بِاَيْدِيْكُمْ உங்கள் கரங்களால் وَيُخْزِهِمْ இன்னும் இழிவுபடுத்துவான்/அவர்களை وَيَنْصُرْكُمْ இன்னும் உதவுவான்/உங்களுக்கு عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக وَيَشْفِ இன்னும் குணப்படுத்துவான் صُدُوْرَ நெஞ்சங்களை قَوْمٍ மக்களின் مُّؤْمِنِيْنَۙ‏ நம்பிக்கை கொண்டவர்கள்
9:14. காதிலூஹும் யு'அத் திBப்ஹுமுல் லாஹு Bபி அய்தீகும் வ யுக்Zஜிஹிம் வ யன்ஸுர்கும் 'அலய்ஹிம் வ யஷ்Fபி ஸுதூர கவ்மிம் மு 'மினீன்
9:14. நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.
9:15
9:15 وَيُذْهِبْ غَيْظَ قُلُوْبِهِمْ‌ ؕ وَ يَتُوْبُ اللّٰهُ عَلٰى مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
وَيُذْهِبْ இன்னும் போக்குவான் غَيْظَ கோபத்தை قُلُوْبِهِمْ‌ ؕ அவர்களுடைய உள்ளங்களின் وَ يَتُوْبُ பிழைபொறுப்பான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது مَنْ எவர் يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
9:15. வ யுத்ஹிBப் கய்ள குலூBபிஹிம்; வ யதூBபுல்லாஹு 'அலா மய் யஷா'; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
9:15. அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:16
9:16 اَمْ حَسِبْتُمْ اَنْ تُتْرَكُوْا وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَلَمْ يَتَّخِذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ وَلَا رَسُوْلِهٖ وَلَا الْمُؤْمِنِيْنَ وَلِيْجَةً‌ ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
اَمْ حَسِبْتُمْ எண்ணினீர்களா? اَنْ تُتْرَكُوْا நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று وَلَمَّا يَعْلَمِ அறியாமல் இருக்க اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ எவர்களை جَاهَدُوْا போர் புரிந்தனர் مِنْكُمْ உங்களில் وَلَمْ يَتَّخِذُوْا இன்னும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَلَا رَسُوْلِهٖ இன்னும் அவனுடையதூதர் وَلَا الْمُؤْمِنِيْنَ இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் وَلِيْجَةً‌ ؕ அந்தரங்க நண்பர்களாக وَاللّٰهُ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிந்தவன் بِمَا எதை تَعْمَلُوْنَ‏ செய்வீர்கள்
9:16. அம் ஹஸிBப்தும் அன் துத்ரகூ வ லம்மா யஃலமில் லாஹுல் லதீன ஜாஹதூ மின்கும் வ லம் யத்தகிதூ மின் தூனில் லாஹி வலா ரஸூலிஹீ வ லல்மு'மினீன வலீஜஹ்; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
9:16. (முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.
9:17
9:17 مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالْكُفْرِ‌ؕ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ‏
مَا كَانَ இருக்கவில்லை لِلْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களுக்கு உரிமை اَنْ يَّعْمُرُوْا அவர்கள் பரிபாலிப்பதற்கு مَسٰجِدَ மஸ்ஜிதுகளை اللّٰهِ அல்லாஹ்வுடைய شٰهِدِيْنَ சாட்சிகூறியவர்களாக عَلٰٓى اَنْفُسِهِمْ தங்கள் மீது بِالْكُفْرِ‌ؕ நிராகரிப்பிற்கு اُولٰۤٮِٕكَ அவர்கள் حَبِطَتْ அழிந்தன اَعْمَالُهُمْ ۖۚ அவர்களுடைய செயல்கள் وَ فِى النَّارِ இன்னும் நரகத்தில்தான் هُمْ அவர்கள் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
9:17. மா கான லில்முஷ்ரிகீன அய் யஃமுரூ மஸாஜிதல் லாஹி ஷாஹிதீன 'அலா அன்Fபுஸிஹிம் Bபில்குFப்ர்; உலா'இக ஹBபிதத் அஃமாலுஹும் வ Fபின் னாரி ஹும் காலிதூன்
9:17. “குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
9:18
9:18 اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏
اِنَّمَا يَعْمُرُ பராமரிப்பதெல்லாம் مَسٰجِدَ மஸ்ஜிதுகளை اللّٰهِ அல்லாஹ்வின் مَنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ இன்னும் இறுதி நாளை الْاٰخِرِ இறுதி وَاَ قَامَ இன்னும் நிலைநிறுத்தினார் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتَى இன்னும் கொடுத்தார் الزَّكٰوةَ ஸகாத்தை وَلَمْ يَخْشَ பயப்படவில்லை اِلَّا தவிர اللّٰهَ‌ அல்லாஹ்வை فَعَسٰٓى கூடும் اُولٰۤٮِٕكَ இவர்கள் اَنْ يَّكُوْنُوْا (அவர்கள்) இருக்க مِنَ الْمُهْتَدِيْنَ‏ நேர்வழி பெற்றவர்களில்
9:18. இன்னமா யஃமுரு மஸா ஜிதல் லாஹி மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ அகாமஸ் ஸலாத வ ஆதZஜ் Zஜகாத வ லம் யக்-ஷா இல்லல் லாஹ Fப'அஸா உலா'இக அய் யகூனூ மினல் முஹ்ததீன்
9:18. அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
9:19
9:19 اَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَـآجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَـرَامِ كَمَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَجَاهَدَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ لَا يَسْتَوٗنَ عِنْدَ اللّٰهِ ‌ؕ وَ اللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‌ۘ‏
اَجَعَلْتُمْ ஆக்கினீர்களா? سِقَايَةَ தண்ணீர் புகட்டுவதை الْحَـآجِّ ஹாஜிக்கு وَعِمَارَةَ இன்னும் பராமரிப்பதை الْمَسْجِدِ மஸ்ஜிது الْحَـرَامِ புனிதமானது كَمَنْ எவரைப்போன்று اٰمَنَ நம்பிக்கை கொண்டார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ இன்னும் இறுதி நாளை وَجَاهَدَ இன்னும் போர் புரிந்தார் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் لَا يَسْتَوٗنَ சமமாக மாட்டார்கள் عِنْدَ اللّٰهِ ؕ அல்லாஹ்விடம் وَ اللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‌ۘ‏ அநியாயக்காரர்கள்
9:19. அஜ'அல்தும் ஸிகாயதல் ஹாஜ்ஜி வ 'இமாரதல் மஸ்ஜிதில் ஹராமி கம்மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ ஜாஹத Fபீ ஸBபீலில் லாஹ்; லா யஸ்தவூன 'இன்தல் லாஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
9:19. (ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
9:20
9:20 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۙ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ هَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجَاهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் بِاَمْوَالِهِمْ தங்கள்செல்வங்களால் وَاَنْفُسِهِمْۙ இன்னும் தங்கள் உயிர்களால் اَعْظَمُ மகத்தானவர்(கள்) دَرَجَةً பதவியால் عِنْدَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடம் وَاُولٰٓٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْفَآٮِٕزُوْنَ‏ வெற்றியாளர்கள்
9:20. அல்லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் அஃளமு தரஜதன் 'இன்தல் லாஹ்; வ உலா'இக ஹுமுல் Fபா'இZஜூன்
9:20. எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
9:21
9:21 يُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَّجَنّٰتٍ لَّهُمْ فِيْهَا نَعِيْمٌ مُّقِيْمٌ ۙ‏
يُبَشِّرُهُمْ நற்செய்தி கூறுகிறான்/அவர்களுக்கு رَبُّهُمْ அவர்களுடைய இறைவன் بِرَحْمَةٍ கருணையைக்கொண்டு مِّنْهُ தன்னிடமிருந்து وَرِضْوَانٍ இன்னும் பொருத்தம், மகிழ்ச்சி وَّجَنّٰتٍ இன்னும் சொர்க்கங்கள் لَّهُمْ அவர்களுக்கு فِيْهَا அவற்றில் نَعِيْمٌ مُّقِيْمٌ ۙ‏ இன்பம்/நிலையானது
9:21. யுBபஷ்ஷிருஹும் ரBப்Bபுஹும் Bபிரஹ்மதிம் மின்ஹு வ ரிள்வானி(ன்)வ் வ ஜன்னாதில் லஹும் Fபீஹா ன'ஈமும் முகீம்
9:21. அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
9:22
9:22 خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ اِنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ‏
خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَاۤ அவற்றில் اَبَدًا‌ ؕ எப்போதும் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عِنْدَهٗۤ அவனிடம் اَجْرٌ கூலி عَظِيْمٌ‏ மகத்தானது
9:22. காலிதீன Fபீஹா அBபதா; இன்னல் லாஹ 'இன்தஹூ அஜ்ருன் 'அளீம்
9:22. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு.
9:23
9:23 يٰۤاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْۤا اٰبَآءَكُمْ وَاِخْوَانَـكُمْ اَوْلِيَآءَ اِنِ اسْتَحَبُّوا الْـكُفْرَ عَلَى الْاِيْمَانِ‌ ؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاُولٰۤٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
يٰۤاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَتَّخِذُوْۤا எடுத்துக் கொள்ளாதீர்கள் اٰبَآءَكُمْ உங்கள் தாய் தந்தைகளை وَاِخْوَانَـكُمْ இன்னும் உங்கள் சகோதரர்களை اَوْلِيَآءَ பொறுப்பாளர்களாக اِنِ اسْتَحَبُّوا அவர்கள் விரும்பினால் الْـكُفْرَ நிராகரிப்பை عَلَى الْاِيْمَانِ‌ ؕ விட/இறைநம்பிக்கை وَمَنْ எவர்(கள்) يَّتَوَلَّهُمْ பொறுப்பாளர்களாக ஆக்கிக்கொள்வார்(கள்)/அவர்களை مِّنْكُمْ உங்களில் فَاُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
9:23. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதூ ஆBபா 'அகும் வ இக்வானகும் அவ்லியா'அ இனிஸ் தஹBப்Bபுல் குFப்ர 'அலல் ஈமான்; வ மய் யதவல் லஹும் மின்கும் Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
9:24
9:24 قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
قُلْ கூறுவீராக اِنْ كَانَ இருந்தால் اٰبَآؤُكُمْ உங்கள் பெற்றோர் وَاَبْنَآؤُكُمْ இன்னும் பிள்ளைகள்/உங்கள் وَاِخْوَانُكُمْ இன்னும் உங்கள் சகோதரர்கள் وَاَزْوَاجُكُمْ இன்னும் உங்கள் மனைவிகள் وَعَشِيْرَتُكُمْ இன்னும் உங்கள் குடும்பம் وَ اَمْوَالُ இன்னும் செல்வங்கள் ۨاقْتَرَفْتُمُوْهَا சம்பாதித்தீர்கள்/அவற்றை وَتِجَارَةٌ இன்னும் வர்த்தகம் تَخْشَوْنَ பயப்படுகிறீர்கள் كَسَادَهَا அது மந்தமாகி விடுவதை وَ مَسٰكِنُ இன்னும் வீடுகள் تَرْضَوْنَهَاۤ நீங்கள் விரும்புகிறீர்கள்/அவற்றை اَحَبَّ மிக விருப்பமாக اِلَيْكُمْ உங்களுக்கு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து وَرَسُوْلِهٖ இன்னும் அவனுடைய தூதர் وَ جِهَادٍ இன்னும் போரிடுவது فِىْ سَبِيْلِهٖ அவனுடைய பாதையில் فَتَرَ بَّصُوْا எதிர்பாருங்கள் حَتّٰى வரை يَاْتِىَ வருவான் اللّٰهُ அல்லாஹ் بِاَمْرِهٖ‌ ؕ தன் கட்டளையைக் கொண்டு وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الْفٰسِقِيْنَ‏ பாவிகள்
9:24. குல் இன் கான ஆBபா'உகும் வ அBப்னா'உகும் வ இக்வானுகும் வ அZஜ்வாஜுகும் வ 'அஷீரதுகும் வ அம்வாலுனிக் தரFப்துமூஹா வ திஜாரதுன் தக்-ஷவ்ன கஸாதஹா வ மஸாகினு தர்ளவ்னஹா அஹBப்Bப இலய்கும் மினல் லாஹி வ ரஸூலிஹீ வ ஜிஹாதின் Fபீ ஸBபீலிஹீ FபதரBப்Bபஸூ ஹத்தா ய'தியல்லஹு Bபி அம்ரிஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
9:25
9:25 لَـقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِىْ مَوَاطِنَ كَثِيْرَةٍ‌ ۙ وَّيَوْمَ حُنَيْنٍ‌ ۙ اِذْ اَعْجَبَـتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْـٴًـــا وَّضَاقَتْ عَلَيْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّـيْتُمْ مُّدْبِرِيْنَ‌ۚ‏
لَـقَدْ திட்டவட்டமாக نَصَرَ உதவினான் كُمُ உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் فِىْ مَوَاطِنَ போர்க்களங்களில் كَثِيْرَةٍ‌ ۙ அதிகமான وَّيَوْمَ இன்னும் அன்று حُنَيْنٍ‌ ۙ ஹுனைன் اِذْ اَعْجَبَـتْكُمْ போது/பெருமைப்படுத்தியது/உங்களை كَثْرَتُكُمْ நீங்கள் அதிகமாக இருப்பது فَلَمْ تُغْنِ பலன் தரவில்லை عَنْكُمْ உங்களுக்கு شَيْـٴًـــا எதையும் وَّضَاقَتْ இன்னும் நெருக்கடியாகி விட்டது عَلَيْكُمُ உங்கள் மீது الْاَرْضُ பூமி بِمَا رَحُبَتْ அது விசாலமாக இருந்தும் ثُمَّ பிறகு وَلَّـيْتُمْ திரும்பினீர்கள் مُّدْبِرِيْنَ‌ۚ‏ புறமுதுகு காட்டியவர்களாக
9:25. லகத் னஸரகுமுல் லாஹு Fபீ மவாதின கதீரதி(ன்)வ் வ யவ்ம ஹுனய்னின் இத் அஃஜBபத்கும் கத்ரதுகும் Fபலம் துக்னி 'அன்கும் ஷய்'அ(ன்)வ் வ ளாகத் 'அலய்குமுல் அர்ளு Bபிமா ரஹுBபத் தும்ம வல்லய்தும் முத்Bபிரீன்
9:25. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்:) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.
9:26
9:26 ثُمَّ اَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلٰى رَسُوْلِهٖ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَاَنْزَلَ جُنُوْدًا لَّمْ تَرَوْهَا‌ ۚ وَعَذَّبَ الَّذِيْنَ كَفَرُوْا‌ ؕ وَذٰ لِكَ جَزَآءُ الْـكٰفِرِيْنَ‏
ثُمَّ பிறகு اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் سَكِيْنَـتَهٗ தன் அமைதியை عَلٰى رَسُوْلِهٖ தன் தூதர் மீது وَعَلَى இன்னும் மீது الْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்டவர்கள் وَاَنْزَلَ இன்னும் இறக்கினான் جُنُوْدًا (சில) படைகளை لَّمْ تَرَوْهَا‌ ۚ நீங்கள் பார்க்கவில்லை/அவற்றை وَعَذَّبَ இன்னும் வேதனை செய்தான் الَّذِيْنَ எவர்களை كَفَرُوْا‌ ؕ நிராகரித்தனர் وَذٰ لِكَ جَزَآءُ இன்னும் இதுதான் கூலி الْـكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களின்
9:26. தும்ம அன்Zஜலல் லாஹு ஸகீனதஹூ 'அலா ரஸூலிஹீ வ'அலல் மு'மினீன வ அன்Zஜல ஜுனூதல் லம் தரவ்ஹா வ அத்தBபல் லதீன கFபரூ; வ தாலிக ஜZஜா'உல் காFபிரீன்
9:26. பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான்; நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
9:27
9:27 ثُمَّ يَتُوْبُ اللّٰهُ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ عَلٰى مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
ثُمَّ பிறகு يَتُوْبُ பிழை பொறுப்பான் اللّٰهُ அல்லாஹ் مِنْۢ بَعْدِ பின்னர் ذٰ لِكَ அதற்கு عَلٰى மீது مَنْ எவர் يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
9:27. தும்ம யதூBபுல் லாஹு மிம் Bபஃதி தாலிக 'அலா மய் யஷா'; வல்லாஹு கFபூருர் ரஹீம்
9:27. அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
9:28
9:28 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَـرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا‌ ۚ وَ اِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ حَكِيْمٌ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِنَّمَا எல்லாம் الْمُشْرِكُوْنَ இணைவைப்பவர்கள் نَجَسٌ அசுத்தமானவர்கள் فَلَا يَقْرَبُوا நெருங்கக் கூடாது الْمَسْجِدَ மஸ்ஜிதை الْحَـرَامَ புனிதமானது بَعْدَ பின்னர் عَامِهِمْ هٰذَا‌ ۚ அவர்களுடைய ஆண்டு/இந்த وَ اِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் عَيْلَةً வறுமையை فَسَوْفَ விரைவில்  يُغْنِيْكُمُ உங்களை நிறைவாக்குவான் اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖۤ தனது அருளினால் اِنْ شَآءَ‌ ؕ நாடினால் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
9:28. யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்னமல் முஷ்ரிகூன னஜஸுன் Fபலா யக்ரBபுல் மஸ்ஜிதல் ஹராம Bபஃத 'ஆமிஹிம் ஹாத; வ இன் கிFப்தும் 'அய்லதன் Fபஸவ்Fப யுக்னீ குமுல் லாஹு மின் Fபள்லிஹீ இன் ஷா'; இன்னல்லாஹ 'அலீமுன் ஹகீம்
9:28. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:29
9:29 قَاتِلُوا الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ وَلَا يُحَرِّمُوْنَ مَا حَرَّمَ اللّٰهُ وَ رَسُوْلُهٗ وَلَا يَدِيْنُوْنَ دِيْنَ الْحَـقِّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْـكِتٰبَ حَتّٰى يُعْطُوا الْجِزْيَةَ عَنْ يَّدٍ وَّهُمْ صٰغِرُوْنَ
قَاتِلُوا போர் புரியுங்கள் الَّذِيْنَ எவர்களிடம் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَلَا இன்னும் இல்லை بِالْيَوْمِ الْاٰخِرِ மறுமை நாளை وَلَا يُحَرِّمُوْنَ இன்னும் தடை செய்ய மாட்டார்கள் مَا எதை حَرَّمَ தடை செய்தான் اللّٰهُ அல்லாஹ் وَ رَسُوْلُهٗ இன்னும் அவனுடைய தூதர் وَلَا يَدِيْنُوْنَ மார்க்கமாக ஏற்க மாட்டார்கள் دِيْنَ மார்க்கத்தை الْحَـقِّ உண்மை, சத்தியம் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْـكِتٰبَ வேதம் حَتّٰى வரை يُعْطُوا கொடுப்பார்கள் الْجِزْيَةَ வரியை (ஜிஸ்யா) عَنْ يَّدٍ உடனே وَّهُمْ அவர்கள் இருக்க صٰغِرُوْنَ‏ பணிந்தவர்கள்
9:29. காதிலுல் லதீன லா யு'மினூன Bபில்லாஹி வலா Bபில் யவ்மில் ஆகிரி வலா யுஹர்ரிமூன மா ஹர்ரமல் லாஹு வ ரஸூலுஹூ வலா யதீனூன தீனல் ஹக்கி மினல் லதீன ஊதுல் கிதாBப ஹத்தா யுஃதுல் ஜிZஜ்யத அய் யதி(ன்)வ் வ ஹும் ஸாகிரூன்
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
9:30
9:30 وَقَالَتِ الْيَهُوْدُ عُزَيْرُ ۨابْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَى الْمَسِيْحُ ابْنُ اللّٰهِ‌ؕ ذٰ لِكَ قَوْلُهُمْ بِاَ فْوَاهِهِمْ‌ ۚ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ‌ ؕ قَاتَلَهُمُ اللّٰهُ ‌ۚ اَنّٰى يُؤْفَكُوْنَ‏‏
وَقَالَتِ கூறுகிறா(ர்க)ள் الْيَهُوْدُ யூதர்கள் عُزَيْرُ உஜைர் ۨابْنُ மகன் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَقَالَتِ இன்னும் கூறுகிறா(ர்க)ள் النَّصٰرَى கிறித்தவர்கள் الْمَسِيْحُ மஸீஹ் ابْنُ மகன் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய ذٰ لِكَ இது قَوْلُهُمْ அவர்களின் கூற்று بِاَ فْوَاهِهِمْ‌ ۚ அவர்களின் வாய்களிலிருந்து يُضَاهِئُونَ ஒப்பாகின்றனர் قَوْلَ கூற்றுக்கு الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ قَبْلُ‌ ؕ முன்னர் قَاتَلَهُمُ அவர்களை அழிப்பான் اللّٰهُ ۚ அல்லாஹ் اَنّٰى எப்படி يُؤْفَكُوْنَ‏‏ திருப்பப்படுகின்றனர்
9:30. வ காலதில் யஹூது 'உZஜய்ருனிBப் னுல் லாஹி வ காலதின் னஸாரல் மஸீஹுBப் னுல் லாஹி தாலிக கவ்லுஹும் Bபி அFப்வாஹிஹிம் யுளாஹி'ஊன கவ்லல் லதீன கFபரூ மின் கBப்ல்; கதலஹுமுல் லாஹ்; அன்னா யு'Fபகூன்
9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
9:31
9:31 اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ‌ ۚ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ؕ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ‏
اِتَّخَذُوْۤا எடுத்துக் கொண்டனர் اَحْبَارَ அறிஞர்களை هُمْ தங்கள் وَرُهْبَانَهُمْ இன்னும் துறவிகளை/தங்கள் اَرْبَابًا (வணங்கப்படும்) கடவுள்களாக مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَالْمَسِيْحَ இன்னும் மஸீஹை ابْنَ மகன் مَرْيَمَ‌ ۚ மர்யமுடைய وَمَاۤ اُمِرُوْۤا அவர்கள் ஏவப்படவில்லை اِلَّا தவிர لِيَـعْبُدُوْۤا அவர்கள் வணங்குவதற்கு اِلٰهًا வணக்கத்திற்குரிய ஒரு கடவுளை وَّاحِدًا‌ ۚ ஒரே لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணங்கப்படும் கடவுள் اِلَّا هُوَ‌ ؕ அவனைத் தவிர سُبْحٰنَهٗ அவன் மிகத் தூயவன் عَمَّا எதைவிட்டு يُشْرِكُوْنَ‏ இணைவைப்பார்கள்
9:31. இத்தகதூ அஹ்Bபாரஹும் வ ருஹ்Bபானஹும் அர்BபாBபம்மின் தூனில் லாஹி வல் மஸீஹBப் ன மர்யம வ மா உமிரூ இல்லா லியஃBபுதூ இலாஹ(ன்)வ் வா ஹிதன் லா இலாஹ இல்லா ஹூ; ஸுBப்ஹானஹூ 'அம்மா யுஷ்ரிகூன்
9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
9:32
9:32 يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏
يُرِيْدُوْنَ நாடுகின்றனர் اَنْ يُّطْفِـــٴُـــوْا அவர்கள் அணைப்பதற்கு نُوْرَ ஒளியை اللّٰهِ அல்லாஹ்வுடைய بِاَ فْوَاهِهِمْ தங்கள் வாய்களைக் கொண்டு وَيَاْبَى மறுக்கிறான் اللّٰهُ அல்லாஹ் اِلَّاۤ தவிர اَنْ يُّتِمَّ (அவன்) முழுமைப்படுத்துவதை نُوْرَهٗ தன் ஒளியை وَلَوْ كَرِهَ அவர்(கள்) வெறுத்தாலும் الْـكٰفِرُوْنَ‏ நிராகரிப்பவர்கள்
9:32. யுரீதூன அய் யுத்Fபி'ஊ னூரல் லாஹி Bபி'அFப்வாஹிஹிம் வ ய'Bபல்லாஹு இல்லா அய் யுதிம்ம னூரஹூ வ லவ் கரிஹல் காFபிரூன்
9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
9:33
9:33 هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖۙ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ‏
هُوَ அவன் الَّذِىْۤ எவன் اَرْسَلَ அனுப்பினான் رَسُوْلَهٗ தன் தூதரை بِالْهُدٰى நேர்வழியைக் கொண்டு وَدِيْنِ இன்னும் மார்க்கம் الْحَـقِّ உண்மை لِيُظْهِرَهٗ அவன் ஓங்க வைப்பதற்காக/அதை عَلَى الدِّيْنِ كُلِّهٖۙ எல்லா மார்க்கங்களை பார்க்கிலும் وَلَوْ كَرِهَ அவர்(கள்) வெறுத்தாலும் الْمُشْرِكُوْنَ‏ இணைவைப்பவர்கள்
9:33. ஹுவல் லதீ அர் ஸல ரஸூலஹூ Bபில்ஹுதா வ தீனில் ஹக்கி லியுள்ஹிரஹூ 'அலத் தீனி குல்லிஹீ வ லவ் கரிஹல் முஷ்ரிகூன்
9:33. அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
9:34
9:34 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ كَثِيْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَاْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானோர் مِّنَ இருந்து الْاَحْبَارِ யூத, கிறித்துவ அறிஞர்கள் وَالرُّهْبَانِ இன்னும் துறவிகள் لَيَاْكُلُوْنَ புசிக்கின்றனர், அனுபவிக்கின்றனர் اَمْوَالَ செல்வங்களை النَّاسِ மக்களின் بِالْبَاطِلِ தவறாக وَيَصُدُّوْنَ இன்னும் தடுக்கின்றனர் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَالَّذِيْنَ எவர்கள் يَكْنِزُوْنَ சேமிக்கின்றனர் الذَّهَبَ தங்கத்தை وَالْفِضَّةَ இன்னும் வெள்ளியை وَلَا மாட்டார்கள் يُنْفِقُوْنَهَا அவற்றை தர்மம் செய்ய فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِۙ அல்லாஹ்வின் فَبَشِّرْ நற்செய்தி கூறுவீராக هُمْ அவர்களுக்கு بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَلِيْمٍۙ‏ துன்புறுத்தக் கூடியது
9:34. யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்ன கதீரம்மினல் அஹ்Bபாரி வர்ருஹ்Bபானி ல ய'குலூன அம்வாலன் னாஸி Bபில் Bபாதிலி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லதீன யக்னிZஜூனத் தஹBப வல் Fபிள்ளத வ லாயுன்Fபிகூனஹா Fபீ ஸBபீலில் லாஹி FபBபஷ்ஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
9:34. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
9:35
9:35 يَّوْمَ يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ‌ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ‏
يَّوْمَ நாளில் يُحْمٰى பழுக்கக்காய்ச்சப்படும் عَلَيْهَا அவற்றின் மீது فِىْ نَارِ நெருப்பில் جَهَـنَّمَ நரகம் فَتُكْوٰى சூடிடப்படும் بِهَا அவற்றைக் கொண்டு جِبَاهُهُمْ நெற்றிகள்/அவர்களுடைய وَجُنُوْبُهُمْ இன்னும் விலாக்கள்/அவர்களுடைய وَظُهُوْرُهُمْ‌ؕ இன்னும் முதுகுகள்/அவர்களுடைய هٰذَا இவை مَا எவை كَنَزْتُمْ சேமித்தீர்கள் لِاَنْفُسِكُمْ உங்களுக்காக فَذُوْقُوْا ஆகவே சுவையுங்கள் مَا எவற்றை كُنْتُمْ இருந்தீர்கள் تَكْنِزُوْنَ‏ சேமிப்பீர்கள்
9:35. யவ்ம யுஹ்மா 'அலய்ஹா Fபீ னாரி ஜஹன்னம Fபதுக்வா Bபிஹா ஜிBபாஹுஹும் வ ஜுனூBபுஹும் வ ளுஹூருஹும் ஹாதா மா கனZஜ்தும் லி அன்Fபுஸிகும் Fபதூகூ மா குன்தும் தக்னிZஜூன்
9:35. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).
9:36
9:36 اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌ ؕ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌  ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏
اِنَّ நிச்சயமாக عِدَّةَ எண்ணிக்கை الشُّهُوْرِ மாதங்களின் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் اثْنَا عَشَرَ பனிரெண்டு شَهْرًا மாதங்களாகும் فِىْ كِتٰبِ புத்தகத்தில், விதியில் اللّٰهِ அல்லாஹ்வின் يَوْمَ நாள் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை مِنْهَاۤ அவற்றில் اَرْبَعَةٌ நான்கு حُرُمٌ‌ ؕ புனிதமானவை ذٰ لِكَ الدِّيْنُ இது/மார்க்கம் الْقَيِّمُ ۙ நேரானது فَلَا تَظْلِمُوْا ஆகவே அநீதி இழைக்காதீர்கள் فِيْهِنَّ அவற்றில் اَنْفُسَكُمْ‌ ؕ உங்களுக்கு وَقَاتِلُوا போர் புரியுங்கள் الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்கள் كَآفَّةً ஒன்றிணைந்து كَمَا போன்று يُقَاتِلُوْنَكُمْ போர் புரிகின்றனர்/உங்களிடம் كَآفَّةً‌  ؕ ஒன்றிணைந்து وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் مَعَ الْمُتَّقِيْنَ‏ அஞ்சுபவர்களுடன்
9:36. இன்ன 'இத்ததஷ் ஷுஹூரி 'இன்தல் லாஹித் னா 'அஷர ஷஹ்ரன் Fபீ கிதாBபில் லாஹி யவ்ம கலகஸ் ஸமாவாதி வல் அர்ள மின்ஹா அர்Bப'அதுன் ஹுரும்; தாலிகத் தீனுல் கய்யிம்; Fபலா தள்லிமூ Fபீஹின்ன அன்Fபுஸகும்; வ காதிலுல் முஷ்ரிகீன காFப்Fபதன் கமா யுகாதி லூனகும் காFப்Fபஹ்; வஃலமூ அன்னல் லாஹ ம'அல் முத்தகீன்
9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும், அவர்கள் அனைவருட னும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
9:37
9:37 اِنَّمَا النَّسِىْٓءُ زِيَادَةٌ فِى الْكُفْرِ‌ يُضَلُّ بِهِ الَّذِيْنَ كَفَرُوْا يُحِلُّوْنَهٗ عَامًا وَّيُحَرِّمُوْنَهٗ عَامًا لِّيُوَاطِـــٴُـــوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَيُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ‌ ؕ زُيِّنَ لَهُمْ سُوْۤءُ اَعْمَالِهِمْ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ
اِنَّمَا النَّسِىْٓءُ பிற்படுத்துவதெல்லாம் زِيَادَةٌ அதிகப்படுத்துவது فِى الْكُفْرِ‌ நிராகரிப்பில் يُضَلُّ வழி கெடுக்கப்படுகின்றனர் بِهِ இதன் மூலம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் يُحِلُّوْنَهٗ ஆகுமாக்குகின்றனர்/அதை عَامًا ஓர் ஆண்டில் وَّيُحَرِّمُوْنَهٗ இன்னும் அதைத் தடை செய்கின்றனர் عَامًا ஓர் ஆண்டில் لِّيُوَاطِـــٴُـــوْا அவர்கள் ஒத்து வருவதற்காக عِدَّةَ எண்ணிக்கைக்கு مَا எதை حَرَّمَ தடை செய்தான் اللّٰهُ அல்லாஹ் فَيُحِلُّوْا ஆகுமாக்குவார்கள் مَا எதை حَرَّمَ தடை செய்தான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் زُيِّنَ அலங்கரிக்கப்பட்டன لَهُمْ அவர்களுக்கு سُوْۤءُ தீய(வை) اَعْمَالِهِمْ‌ ؕ அவர்களுடைய செயல்கள் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الْـكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களான
9:37. இன்ன மன் னஸீ'உ Zஜியாததுன் Fபில்குFப்ரி யுளல்லு Bபிஹில் லதீன கFபரூ யுஹில் லூனஹூ 'ஆம(ன்)வ் வ யுஹர் ரிமூனஹூ 'ஆமல் லியுவாதி'ஊ 'இத்தத மா ஹர்ரமல் லாஹு Fபயுஹில்லூ மா ஹர்ரமல்-லாஹ்; Zஜுய்யின லஹும் ஸூ'உ அஃமாலிஹிம்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
9:37. (போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.  
9:38
9:38 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَا لَـكُمْ اِذَا قِيْلَ لَـكُمُ انْفِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اثَّاقَلْـتُمْ اِلَى الْاَرْضِ‌ ؕ اَرَضِيْتُمْ بِالْحَيٰوةِ الدُّنْيَا مِنَ الْاٰخِرَةِ‌ ۚ فَمَا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا قَلِيْلٌ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே مَا என்ன? لَـكُمْ உங்களுக்கு اِذَا قِيْلَ கூறப்பட்டால் لَـكُمُ உங்களுக்கு انْفِرُوْا புறப்படுங்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் اثَّاقَلْـتُمْ சாய்ந்து விட்டீர்கள் اِلَى பக்கம் الْاَرْضِ‌ ؕ பூமி, உலகம் اَرَضِيْتُمْ திருப்தியடைந்தீர்களா بِالْحَيٰوةِ வாழ்க்கையைக் கொண்டு الدُّنْيَا உலக مِنَ விட الْاٰخِرَةِ‌ ۚ மறுமை فَمَا இல்லை مَتَاعُ இன்பம் الْحَيٰوةِ வாழ்க்கை الدُّنْيَا உலகம் فِى الْاٰخِرَةِ மறுமையில் اِلَّا தவிர قَلِيْلٌ‏ அற்பமானதே
9:38. யா அய்யுஹல் லதீன ஆமனூ மா லகும் இதா கீல லகுமுன் Fபிரூ Fபீ ஸBபீலில் லாஹித் தாகல்தும் இலல் அர்ள்; அரளீதும் Bபில்ஹயாதித் துன்யா மினல் ஆகிரஹ்; Fபமாமதா'உல் ஹயாதித்துன்யா Fபில் ஆகிரதி இல்லா கலீல்
9:38. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
9:39
9:39 اِلَّا تَـنْفِرُوْا يُعَذِّبْكُمْ عَذَابًا اَلِيْمًا   ۙ وَّيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوْهُ شَيْـٴًــــا‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
اِلَّا تَـنْفِرُوْا நீங்கள் புறப்படாவிட்டால் يُعَذِّبْكُمْ வேதனை செய்வான்/உங்களை عَذَابًا வேதனையால் اَلِيْمًا   ۙ துன்புறுத்தக்கூடியது وَّيَسْتَبْدِلْ இன்னும் மாற்றி விடுவான் قَوْمًا ஒரு சமுதாயத்தை غَيْرَكُمْ உங்களை அன்றி وَلَا تَضُرُّوْ நீங்கள் தீங்கிழைக்க முடியாது هُ அவனுக்கு شَيْـٴًــــا‌ ؕ எதையும் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى மீதும் كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
9:39. இல்லா தன்Fபிரூ யு'அத் திBப்கும் 'அதாBபன் அலீம(ன்)வ் வ யஸ்தBப்தில் கவ்மன் கய்ரகும் வலா தளுர்ரூஹு ஷய்'ஆ; வல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
9:39. நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.
9:40
9:40 اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌ ۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى‌ ؕ وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏
اِلَّا تَـنْصُرُوْ நீங்கள் உதவவில்லையெனில் هُ அவருக்கு فَقَدْ نَصَرَ உதவிசெய்துவிட்டான் هُ அவருக்கு اللّٰهُ அல்லாஹ் اِذْ اَخْرَجَهُ போது/வெளியேற்றினார்(கள்)/அவரை الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் ثَانِىَ ஒருவராக اثْنَيْنِ இருவரில் اِذْ போது هُمَا அவ்விருவரும் فِى الْغَارِ குகையில் اِذْ போது يَقُوْلُ கூறுகிறார் لِصَاحِبِهٖ தன் தோழருக்கு لَا تَحْزَنْ கவலைப்படாதே اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مَعَنَا‌ ۚ நம்முடன் فَاَنْزَلَ ஆகவே, இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் سَكِيْنَـتَهٗ தன் அமைதியை عَلَيْهِ அவர் மீது وَاَ يَّدَهٗ இன்னும் பலப்படுத்தினான் / அவரை بِجُنُوْدٍ படைகளைக்கொண்டு لَّمْ تَرَوْهَا நீங்கள் பார்க்கவில்லை / அவற்றை وَجَعَلَ இன்னும் ஆக்கினான் كَلِمَةَ வார்த்தையை الَّذِيْنَ எவர்களின் كَفَرُوا நிராகரித்தனர் السُّفْلٰى‌ ؕ மிகத் தாழ்ந்ததாக وَكَلِمَةُ வார்த்தை اللّٰهِ அல்லாஹ்வின் هِىَ அதுதான் الْعُلْيَا ؕ மிக உயர்வானது وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
9:40. இல்லா தன்ஸுரூஹு Fபகத் னஸரஹுல் லாஹு இத் அக்ரஜஹுல் லதீன கFபரூ தானியத்னய்னி இத் ஹுமா Fபில்காரி இத் யகூலு லிஸாஹிBபிஹீ லா தஹ்Zஜன் இன்ன்னல் லாஹ ம'அனா; Fப அன்Zஜலல்லாஹு ஸகீனதஹூ 'அலய்ஹி வ அய்யதஹூ Bபிஜுனூதில் லம் தரவ்ஹா வ ஜ'அல கலிமதல் லதீன கFபருஸ் ஸுFப்லா; வ கலிமதுல் லாஹி ஹியல் 'உல்யா; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
9:40. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
9:41
9:41 اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالًا وَّجَاهِدُوْا بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
اِنْفِرُوْا புறப்படுங்கள் خِفَافًا இலகுவானவர்களாக وَّثِقَالًا இன்னும் கனமானவர்களாக وَّجَاهِدُوْا இன்னும் போரிடுங்கள் بِاَمْوَالِكُمْ உங்கள் செல்வங்களாலும் وَاَنْفُسِكُمْ உங்கள் உயிர்களாலும் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் ذٰ لِكُمْ இதுவே خَيْرٌ மிகச் சிறந்தது لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறிபவர்களாக
9:41. இன்Fபிரூ கிFபாFப(ன்)வ் வ திகால(ன்)வ் வ ஜாஹிதூ Bபி அம்வாலிகும் வ அன்Fபுஸிகும் Fபீ ஸBபீலில் லாஹ்; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
9:42
9:42 لَوْ كَانَ عَرَضًا قَرِيْبًا وَّسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوْكَ وَلٰـكِنْۢ بَعُدَتْ عَلَيْهِمُ الشُّقَّةُ ‌ ؕ وَسَيَحْلِفُوْنَ بِاللّٰهِ لَوِ اسْتَطَعْنَا لَخَـرَجْنَا مَعَكُمْ ۚ يُهْلِكُوْنَ اَنْفُسَهُمْ‌ ۚ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ
لَوْ كَانَ இருந்திருந்தால் عَرَضًا பொருளாக قَرِيْبًا அருகில் உள்ளது وَّسَفَرًا இன்னும் பயணமாக قَاصِدًا சமீபமானது لَّاتَّبَعُوْكَ பின்பற்றியிருப்பார்கள்/உம்மை وَلٰـكِنْۢ எனினும் بَعُدَتْ தூரமாகி விட்டது عَلَيْهِمُ அவர்கள் மீது الشُّقَّةُ ؕ எல்லை وَسَيَحْلِفُوْنَ இன்னும் சத்தியம் செய்கிறார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது لَوِ اسْتَطَعْنَا நாங்கள் ஆற்றல் பெற்றிருந்தால் لَخَـرَجْنَا வெளியேறிஇருப்போம் مَعَكُمْ ۚ உங்களுடன் يُهْلِكُوْنَ அழிக்கின்றனர் اَنْفُسَهُمْ‌ ۚ தங்களையே وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ அறிவான் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்தான்
9:42. லவ் கான 'அரளன் கரீBப(ன்)வ் வ ஸFபரன் காஸிதல் லத்தBப'ஊக வ லாகிம் Bப'உதத் 'அலய்ஹிமுஷ் ஷுக்கஹ்; வ ஸயஹ்லிFபூன Bபில்லாஹி லவிஸ் தத'னா லகரஜ்னா ம'அகும்; யுஹ்லிகூன அன்Fபுஸஹும் வல் லாஹு யஃலமு இன்னஹும் லகா திBபூன்
9:42. “(நபியே! போர்ப் பிராயாணம்) நடுத்தரமான பிரயாணமாகவும் (அதில் கிடைக்கும் வெற்றிப் பொருள்கள்) எளிதில் (பெறப்படும் வெற்றிப்) பொருளாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் (போர்க்)களம் தூரமாக இருக்கின்றது. நாங்கள் சக்தி பெற்றிருந்தால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடுகிறார்கள். அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
9:43
9:43 عَفَا اللّٰهُ عَنْكَ‌ۚ لِمَ اَذِنْتَ لَهُمْ حَتّٰى يَتَبَيَّنَ لَكَ الَّذِيْنَ صَدَقُوْا وَتَعْلَمَ الْـكٰذِبِيْنَ‏
عَفَا மன்னிப்பான் اللّٰهُ அல்லாஹ் عَنْكَ‌ۚ உம்மை لِمَ اَذِنْتَ ஏன்அனுமதியளித்தீர்? لَهُمْ அவர்களுக்கு حَتّٰى வரை يَتَبَيَّنَ தெளிவாகி لَكَ உமக்கு الَّذِيْنَ صَدَقُوْا உண்மை உரைத்தவர்கள் وَتَعْلَمَ இன்னும் நீர் அறிகின்ற الْـكٰذِبِيْنَ‏ பொய்யர்களை
9:43. 'அFபல் லாஹு 'அன்க லிம அதின்த லஹும் ஹத்தா யதBபய் யன லகல் லதீன ஸதகூ வ தஃலமல் காதிBபீன்
9:43. (நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்?
9:44
9:44 لَا يَسْتَـاْذِنُكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ اَنْ يُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالْمُتَّقِيْنَ‏
لَا மாட்டார்(கள்) يَسْتَـاْذِنُكَ உம்மிடம் அனுமதி கோர الَّذِيْنَ எவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ இன்னும் இறுதி நாளை اَنْ يُّجَاهِدُوْا அவர்கள் போரிடுவதிலிருந்து بِاَمْوَالِهِمْ தங்கள் செல்வங்களால் وَاَنْفُسِهِمْ‌ؕ இன்னும் தங்கள் உயிர்களால் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِالْمُتَّقِيْنَ‏ அஞ்சுபவர்களை
9:44. லா யஸ்தாதினுகல் லதீன யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி அய் யுஜா ஹிதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம்; வல்லாஹு 'அலீமும் Bபில்முத் தகீன்
9:44. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.
9:45
9:45 اِنَّمَا يَسْتَاْذِنُكَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَارْتَابَتْ قُلُوْبُهُمْ فَهُمْ فِىْ رَيْبِهِمْ يَتَرَدَّدُوْنَ‏
اِنَّمَا எல்லாம் يَسْتَاْذِنُكَ அனுமதி கோருவார்(கள்)/உம்மிடம் الَّذِيْنَ எவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ இன்னும் இறுதி நாளை وَارْتَابَتْ இன்னும் சந்தேகித்தன قُلُوْبُهُمْ உள்ளங்கள்/அவர்களுடைய فَهُمْ எனவே, அவர்கள் فِىْ رَيْبِهِمْ தங்கள் சந்தேகத்தில் يَتَرَدَّدُوْنَ‏ தடுமாறுகின்றனர்
9:45. இன்னமா யஸ்தாதினுகல் லதீன லா யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வர்தாBபத் குலூBபுஹும் Fபஹும் Fபீ ரய்Bபிஹிம் யதரத்ததூன்
9:45. (போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன; ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்கு மங்கும்) உழலுகின்றனர்.
9:46
9:46 وَلَوْ اَرَادُوْا الْخُـرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّلٰـكِنْ كَرِهَ اللّٰهُ انۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِيْنَ‏
وَلَوْ اَرَادُوْا அவர்கள் நாடியிருந்தால் الْخُـرُوْجَ வெளியேறுவதை لَاَعَدُّوْا ஏற்பாடு செய்திருப்பார்கள் لَهٗ அதற்கு عُدَّةً ஒரு தயாரிப்பை وَّلٰـكِنْ எனினும் كَرِهَ வெறுத்தான் اللّٰهُ அல்லாஹ் انۢبِعَاثَهُمْ அவர்கள் புறப்படுவதை فَثَبَّطَهُمْ ஆகவே தடுத்து விட்டான்/அவர்களை وَقِيْلَ இன்னும் கூறப்பட்டது اقْعُدُوْا தங்கி விடுங்கள் مَعَ உடன் الْقٰعِدِيْنَ‏ தங்குபவர்கள்
9:46. வ லவ் அராதுல் குரூஜ ல-'அத்தூ லஹூ 'உத்தத(ன்)வ் வ லாகின் கரிஹல் லாஹும் Bபி'ஆதஹும் FபதBப்Bபதஹும் வ கீலக் 'உதூ ம'அல் கா'இதீன்
9:46. அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) “தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.
9:47
9:47 لَوْ خَرَجُوْا فِيْكُمْ مَّا زَادُوْكُمْ اِلَّا خَبَالًا وَّلَا۟اَوْضَعُوْا خِلٰلَـكُمْ يَـبْغُوْنَـكُمُ الْفِتْنَةَ ۚ وَفِيْكُمْ سَمّٰعُوْنَ لَهُمْ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏
لَوْخَرَجُوْا அவர்கள் வெளியேறி இருந்தால் فِيْكُمْ உங்களுடன் مَّا زَادُوْ அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள் كُمْ உங்களுக்கு اِلَّا தவிர خَبَالًا தீமையை وَّلَا۟اَوْضَعُوْا இன்னும் விரைந்திருப்பார்கள் خِلٰلَـكُمْ உங்களுக்கிடையில் يَـبْغُوْنَـكُمُ தேடுவார்கள்/உங்களுக்கு الْفِتْنَةَ ۚ குழப்பத்தை وَفِيْكُمْ இன்னும் உங்களுடன் سَمّٰعُوْنَ ஒற்றர்கள் لَهُمْ‌ ؕ அவர்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِالظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
9:47. லவ் கரஜூ Fபீகும் மா Zஜாதூகும் இல்லா கBபால(ன்)வ் வ ல அவ்ள'ஊ கிலாலகும் யBப்கூன குமுல் Fபித்னத வ Fபீகும் ஸம்மா'ஊன லஹும்; வல்லாஹு 'அலீமும் Bபிள் ளாலிமீன்
9:47. உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்.
9:48
9:48 لَـقَدِ ابْتَغَوُا الْفِتْنَةَ مِنْ قَبْلُ وَقَلَّبُوْا لَكَ الْاُمُوْرَ حَتّٰى جَآءَ الْحَـقُّ وَظَهَرَ اَمْرُ اللّٰهِ وَهُمْ كٰرِهُوْنَ‏
لَـقَدِ ابْتَغَوُا தேடியுள்ளனர் الْفِتْنَةَ குழப்பத்தை مِنْ قَبْلُ முன்னர் وَقَلَّبُوْا இன்னும் புரட்டினர் لَكَ உமக்கு الْاُمُوْرَ காரியங்களை حَتّٰى இறுதியாக جَآءَ வந்தது الْحَـقُّ சத்தியம் وَظَهَرَ இன்னும் வென்றது اَمْرُ கட்டளை اللّٰهِ அல்லாஹ்வின் وَهُمْ அவர்கள் இருந்தும் كٰرِهُوْنَ‏ வெறுப்பவர்களாக
9:48. லகதிBப் தகவுல் Fபித்னத மின் கBப்லு வ கல்லBபூ லகல் உமூர ஹத்தா ஜா'அல் ஹக்கு வ ளஹர அம்ருல் லாஹி வ ஹும் காரிஹூன்
9:48. நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.
9:49
9:49 وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ ائْذَنْ لِّىْ وَلَا تَفْتِنِّىْ‌ ؕ اَلَا فِى الْفِتْنَةِ سَقَطُوْا‌ ؕ وَاِنَّ جَهَـنَّمَ لَمُحِيْطَةٌ ۢ بِالْـكٰفِرِيْنَ‏
وَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் يَّقُوْلُ கூறுகிறார் ائْذَنْ அனுமதி தருவீராக لِّىْ எனக்கு وَلَا تَفْتِنِّىْ‌ ؕ சோதிக்காதீர்/என்னை اَلَا அறிந்துகொள்ளுங்கள்! فِى الْفِتْنَةِ சோதனையில் سَقَطُوْا‌ ؕ விழுந்தனர் وَاِنَّ جَهَـنَّمَ நிச்சயமாக நரகம் لَمُحِيْطَةٌ ۢ சூழ்ந்தே உள்ளது بِالْـكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களை
9:49. வ மின்ஹும் மய் யகூலு' தல் லீ வலா தFப்தின்னீ; அலா Fபில் Fபித்னதி ஸகதூ; வ இன்ன ஜஹன்னம லமுஹீததும் Bபில் காFபிரீன்
9:49. “(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
9:50
9:50 اِنْ تُصِبْكَ حَسَنَةٌ تَسُؤْهُمْ‌ ۚ وَاِنْ تُصِبْكَ مُصِيْبَةٌ يَّقُوْلُوْا قَدْ اَخَذْنَاۤ اَمْرَنَا مِنْ قَبْلُ وَيَتَوَلَّوْا وَّهُمْ فَرِحُوْنَ‏
اِنْ تُصِبْكَ அடைந்தால் / உம்மை حَسَنَةٌ ஒரு நன்மை تَسُؤْهُمْ‌ ۚ துக்கப்படுத்துகிறது / அவர்களை وَاِنْ تُصِبْكَ இன்னும் அடைந்தால் / உம்மை مُصِيْبَةٌ ஒரு சோதனை يَّقُوْلُوْا கூறுகின்றனர் قَدْ اَخَذْنَاۤ எடுத்துக் கொண்டோம் اَمْرَنَا எங்கள் காரியத்தை مِنْ قَبْلُ முன்னரே وَيَتَوَلَّوْا திரும்புகின்றனர் وَّهُمْ அவர்கள் فَرِحُوْنَ‏ மகிழ்ச்சியடைந்தவர்களாக
9:50. இன் துஸிBப்க ஹஸனதுன் தஸு'ஹும்; வ இன் துஸிBப்க முஸீBபது(ன்)ய் யகூலூ கத் அகத்னா அம்ரனா மின் கBப்லு வ யதவல்லவ் வ ஹும் Fபரிஹூன்
9:50. உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது; உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்” என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்.
9:51
9:51 قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَا ‌ ۚ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
قُلْ கூறுவீராக لَّنْ அறவே يُّصِيْبَـنَاۤ எங்களை அடையாது اِلَّا தவிர مَا எதை كَتَبَ விதித்தான் اللّٰهُ அல்லாஹ் لَـنَا ۚ எங்களுக்கு هُوَ அவன்தான் مَوْلٰٮنَا ۚ எங்கள் இறைவன் وَعَلَى இன்னும் மீது اللّٰهِ அல்லாஹ் فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கவும் الْمُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
9:51. குல் ல(ன்)ய்-யுஸீBபனா இல்லா மா கதBபல் லாஹு லனா ஹுவ மவ்லானா; வ 'அலல் லாஹி Fபல் யதவக்க லில் மு'மினூன்
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
9:52
9:52 قُلْ هَلْ تَرَبَّصُوْنَ بِنَاۤ اِلَّاۤ اِحْدَى الْحُسْنَيَيْنِ‌ؕ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ اَنْ يُّصِيْبَكُمُ اللّٰهُ بِعَذَابٍ مِّنْ عِنْدِهٖۤ اَوْ بِاَيْدِيْنَا  ‌ۖ  فَتَرَبَّصُوْۤا اِنَّا مَعَكُمْ مُّتَرَبِّصُوْنَ‏
قُلْ கூறுவீராக هَلْ تَرَبَّصُوْنَ எதிர்பார்க்கிறீர்களா? بِنَاۤ எங்களுக்கு اِلَّاۤ தவிர اِحْدَى ஒன்றை الْحُسْنَيَيْنِ‌ؕ (இரு) சிறப்பானவற்றில் وَنَحْنُ நாங்கள் نَتَرَبَّصُ எதிர்பார்க்கிறோம் بِكُمْ உங்களுக்கு اَنْ يُّصِيْبَكُمُ சோதிப்பதை / உங்களை اللّٰهُ அல்லாஹ் بِعَذَابٍ مِّنْ عِنْدِهٖۤ ஒரு வேதனையைக் கொண்டு/தன்னிடமிருந்து اَوْ அல்லது بِاَيْدِيْنَا  ۖ  எங்கள் கரங்களால் فَتَرَبَّصُوْۤا ஆகவே எதிர்பாருங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் مَعَكُمْ உங்களுடன் مُّتَرَبِّصُوْنَ‏ எதிர்பார்ப்பவர்கள்
9:52. குல் ஹல் தரBப்Bபஸூன Bபினா இல்லா இஹ்தல் ஹுஸ்னயய்னி வ னஹ்னு னத்ரBப்Bபஸு Bபிகும் அய் யுஸ் ஈBபகுமுல் லாஹு Bபி'அதா Bபிம் மின் 'இன்திஹீ அவ் Bபிஅய்தீ னா FபதரBப்Bபஸூ இன்னா ம'அகும் முதரBப்Bபிஸூன்
9:52. (நபியே!) நீர் கூறுவீராக: ”(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?” ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
9:53
9:53 قُلْ اَنْفِقُوْا طَوْعًا اَوْ كَرْهًا لَّنْ يُّتَقَبَّلَ مِنْكُمْ‌ؕ اِنَّكُمْ كُنْتُمْ قَوْمًا فٰسِقِيْنَ‏
قُلْ கூறுவீராக اَنْفِقُوْا தர்மம் செய்யுங்கள் طَوْعًا விருப்பமாக اَوْ அல்லது كَرْهًا வெறுப்பாக لَّنْ يُّتَقَبَّلَ அறவே அங்கீகரிக்கப்படாது مِنْكُمْ‌ؕ உங்களிடமிருந்து اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் كُنْتُمْ ஆகிவிட்டீர்கள் قَوْمًا மக்களாக فٰسِقِيْنَ‏ பாவிகளான
9:53. குல் அன்Fபிகூ தவ்'அன் அவ் கர்ஹல் ல(ன்)ய் யுதகBப்Bபல மின் கும் இன்னகும் குன்தும் கவ்மன் Fபாஸிகீன்
9:53. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.
9:54
9:54 وَمَا مَنَعَهُمْ اَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقٰتُهُمْ اِلَّاۤ اَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَبِرَسُوْلِهٖ وَلَا يَاْتُوْنَ الصَّلٰوةَ اِلَّا وَهُمْ كُسَالٰى وَلَا يُنْفِقُوْنَ اِلَّا وَهُمْ كٰرِهُوْنَ‏
وَمَا இல்லை مَنَعَهُمْ அவர்களுக்கு தடையாக இருக்க اَنْ تُقْبَلَ அங்கீகரிக்கப்படுவதற்கு مِنْهُمْ அவர்களிடமிருந்து نَفَقٰتُهُمْ அவர்களுடைய தர்மங்கள் اِلَّاۤ தவிர اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வை وَبِرَسُوْلِهٖ இன்னும் அவனுடைய தூதரை وَلَا يَاْتُوْنَ இன்னும் வரமாட்டார்கள் الصَّلٰوةَ தொழுகைக்கு اِلَّا தவிர وَهُمْ அவர்கள் இருந்தே كُسَالٰى சோம்பேறிகளாக وَلَا يُنْفِقُوْنَ தர்மம் புரிய மாட்டார்கள் اِلَّا தவிர وَهُمْ அவர்கள் இருந்தே كٰرِهُوْنَ‏ வெறுத்தவர்களாக
9:54. வமா மன'அஹும் 'அன் துக்Bபல மின்ஹும் னFபகாதுஹும் இல்லா அன்னஹும் கFபரூ Bபில்லாஹி வ Bபி ரஸூலிஹீ வலா ய'தூனஸ் ஸலாத இல்லா வ ஹும் குஸாலா வலா யுன்Fபிகூன இல்லா வ ஹும் காரிஹூன்
9:54. அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.
9:55
9:55 فَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ‌ؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ بِهَا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ‏
فَلَا வேண்டாம் تُعْجِبْكَ உம்மை ஆச்சரியப்படுத்த اَمْوَالُهُمْ செல்வங்கள்/அவர்களுடைய وَلَاۤ اَوْلَادُ இன்னும் பிள்ளைகள் هُمْ‌ؕ அவர்களுடைய اِنَّمَا எல்லாம் يُرِيْدُ நாடுவான் اللّٰهُ அல்லாஹ் لِيُعَذِّبَهُمْ வேதனை செய்வதை/அவர்களை بِهَا அவற்றின் மூலம் فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا உலகம் وَتَزْهَقَ இன்னும் பிரிந்து சென்று விடுவதை, அழிந்து விடுவதை اَنْفُسُهُمْ அவர்களுடைய உயிர்கள் وَهُمْ அவர்கள் இருக்க كٰفِرُوْنَ‏ நிராகரிப்பவர்களாக
9:55. Fபலா துஃஜிBப்க அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும்; இன்னமா யுரீதுல் லாஹு லியு'அத் திBபஹும் Bபிஹா Fபில் ஹயாதித் துன்யா வ தZஜ்ஹக அன்Fபுஸுஹும் வ ஹும் காFபிரூன்
9:55. அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.
9:56
9:56 وَيَحْلِفُوْنَ بِاللّٰهِ اِنَّهُمْ لَمِنْكُمْؕ وَمَا هُمْ مِّنْكُمْ وَلٰـكِنَّهُمْ قَوْمٌ يَّفْرَقُوْنَ‏
وَيَحْلِفُوْنَ சத்தியம்செய்கின்றனர் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَمِنْكُمْؕ உங்களைச் சேர்ந்தவர்கள்தான் وَمَا هُمْ مِّنْكُمْ அவர்கள் இல்லை/உங்களைச் சேர்ந்தவர்கள் وَلٰـكِنَّهُمْ என்றாலும் அவர்கள் قَوْمٌ மக்கள் يَّفْرَقُوْنَ‏ பயப்படுகிறார்கள்
9:56. வ யஹ்லிFபூன Bபில்லாஹி இன்ன்னஹும் லமின்கும் வமா ஹும் மின்கும் வ லாகின்னஹும் கவ்மு(ன்)ய் யFப்ரகூன்
9:56. நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்;என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.
9:57
9:57 لَوْ يَجِدُوْنَ مَلْجَاً اَوْ مَغٰرٰتٍ اَوْ مُدَّخَلًا لَّوَلَّوْا اِلَيْهِ وَهُمْ يَجْمَحُوْنَ‏
لَوْ يَجِدُوْنَ அவர்கள் கண்டால் مَلْجَاً ஒரு ஒதுங்குமிடத்தை اَوْ அல்லது مَغٰرٰتٍ குகைகளை اَوْ அல்லது مُدَّخَلًا ஒரு சுரங்கத்தை لَّوَلَّوْا திரும்பியிருப்பார்கள் اِلَيْهِ அதன் பக்கம் وَهُمْ அவர்களோ يَجْمَحُوْنَ‏ விரைந்தவர்களாக
9:57. லவ் யஜிதூன மல்ஜ'அன் அவ் மகாராதின் அவ் முத்த கலல் லவல்லவ் இலய்ஹி வ ஹும் யஜ்மஹூன்
9:57. ஓர் ஒதுங்கும் இடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களாயின் (உம்மை விட்டு) அதன் பக்கம் விரைந்து ஓடிவிடுவார்கள்.
9:58
9:58 وَمِنْهُمْ مَّنْ يَّلْمِزُكَ فِى الصَّدَقٰتِ‌ ۚ فَاِنْ اُعْطُوْا مِنْهَا رَضُوْا وَاِنْ لَّمْ يُعْطَوْا مِنْهَاۤ اِذَا هُمْ يَسْخَطُوْنَ‏
وَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர்(கள்) يَّلْمِزُكَ குறை கூறுகிறார்(கள்)/உம்மை فِى الصَّدَقٰتِ‌ ۚ தர்மங்களில் فَاِنْ اُعْطُوْا அவர்கள் கொடுக்கப்பட்டால் مِنْهَا அவற்றிலிருந்து رَضُوْا திருப்தியடைவார்கள் وَاِنْ لَّمْ يُعْطَوْا அவர்கள் கொடுக்கப்பட வில்லையென்றால் مِنْهَاۤ அவற்றிலிருந்து اِذَا அப்போது هُمْ அவர்கள் يَسْخَطُوْنَ‏ ஆத்திரப்படுகின்றனர்
9:58. வ மின்ஹும் மய் யல்மிZஜுக Fபிஸ் ஸதகாதி Fப-இன் உஃதூ மின்ஹா ரளூ வ இல்லம் யுஃதவ் மின்ஹா இதா ஹும் யஸ்கதூன்
9:58. (நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.
9:59
9:59 وَلَوْ اَنَّهُمْ رَضُوْا مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗۙ وَقَالُوْا حَسْبُنَا اللّٰهُ سَيُؤْتِيْنَا اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَ رَسُوْلُهٗۙ اِنَّاۤ اِلَى اللّٰهِ رٰغِبُوْنَ
وَلَوْ اَنَّهُمْ رَضُوْا நிச்சயம் அவர்கள் திருப்தியடைந்து مَاۤ اٰتٰٮهُمُ எதை/கொடுத்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் وَرَسُوْلُهٗۙ இன்னும் அவனுடைய தூதர் وَقَالُوْا இன்னும் கூறவேண்டுமே حَسْبُنَا எங்களுக்கு போதுமானவன் اللّٰهُ அல்லாஹ் سَيُؤْتِيْنَا கொடுப்பார்கள்/எங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ இருந்து فَضْلِهٖ தன் அருள் وَ رَسُوْلُهٗۙ இன்னும் அவனுடைய தூதர் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம்தான் رٰغِبُوْنَ‏ ஆசை உள்ளவர்கள்
9:59. வ லவ் அன்னஹும் ரளூ மா ஆதாஹுமுல் லாஹு வ ரஸூலுஹூ வ காலூ ஹஸ்Bபுனல் லாஹு ஸயு'தீனல்லாஹு மின் Fபள்லிஹீ வ ரஸூலுஹூ இன்னா இலல்லாஹி ராகிBபூன்
9:59. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, “அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்” என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்).
9:60
9:60 اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
اِنَّمَا எல்லாம் الصَّدَقٰتُ ஸகாத்துகள் لِلْفُقَرَآءِ வரியவர்களுக்கு وَالْمَسٰكِيْنِ இன்னும் ஏழைகள் وَالْعٰمِلِيْنَ இன்னும் ஊழியம் செய்பவர்கள் عَلَيْهَا அவற்றுக்கு وَالْمُؤَلَّـفَةِ இன்னும் இணைக்கப்பட்டவர்கள் قُلُوْبُهُمْ அவர்களின் உள்ளங்கள் وَفِى الرِّقَابِ இன்னும் அடிமைகளுக்கும் وَالْغٰرِمِيْنَ இன்னும் கடனாளிகள் وَفِىْ سَبِيْلِ இன்னும் பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَابْنِ السَّبِيْلِ‌ؕ இன்னும் வழிப்போக்கர்கள் فَرِيْضَةً கடமையாக مِّنَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடமிருந்து وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கிறந்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
9:60. இன்னமஸ் ஸதகாது லில்Fபுகரா'இ வல்மஸாகீனி வல் 'ஆமிலீன 'அலய்ஹா வல் மு'அல் லFபதி குலூBபுஹும் வ Fபிர் ரிகாBபி வல்காரிமீன வ Fபீ ஸBபீலில் லாஹி வBப்னிஸ் ஸBபீலி Fபரீளதம் மினல் லாஹ்; வல் லாஹு 'அலீமுன் ஹகீம்
9:60. (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
9:61
9:61 وَمِنْهُمُ الَّذِيْنَ يُؤْذُوْنَ النَّبِىَّ وَيَقُوْلُوْنَ هُوَ اُذُنٌ‌ ؕ قُلْ اُذُنُ خَيْرٍ لَّـكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِيْنَ وَرَحْمَةٌ لِّـلَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ‌ ؕ وَالَّذِيْنَ يُؤْذُوْنَ رَسُوْلَ اللّٰهِ لَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
وَمِنْهُمُ அவர்களில் الَّذِيْنَ எவர்கள் يُؤْذُوْنَ இகழ்கிறார்கள், குறை கூறுகிறார்கள் النَّبِىَّ நபியை وَيَقُوْلُوْنَ கூறுகின்றனர் هُوَ அவர் اُذُنٌ‌ ؕ ஒரு காது قُلْ கூறுவீராக اُذُنُ காது خَيْرٍ நல்லது لَّـكُمْ உங்களுக்கு يُؤْمِنُ நம்பிக்கைகொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَيُؤْمِنُ இன்னும் ஏற்றுக் கொள்கிறார் لِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை وَرَحْمَةٌ இன்னும் கருணை لِّـلَّذِيْنَ எவர்களுக்கு اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مِنْكُمْ‌ ؕ உங்களில் وَالَّذِيْنَ எவர்கள் يُؤْذُوْنَ இகழ்கின்றனர் رَسُوْلَ தூதரை اللّٰهِ அல்லாஹ்வின் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக்கூடியது
9:61. வ மின்ஹுமுல் லதீன யு'தூனன் னBபிய்ய வ யகூலூன ஹுவ உதுன்; குல் உதுனு கய்ரில் லகும் யு'மினு Bபில்லாஹி வ யு'மினு லில் மு'மினீன வ ரஹ்மதுல் லில் லதீன ஆமனூ மின்கும்; வல்லதீன யு'தூன ரஸூலல் லாஹி லஹும் 'அதாBபுன் 'அலீம்
9:61. (இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்;” எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
9:62
9:62 يَحْلِفُوْنَ بِاللّٰهِ لَـكُمْ لِيُرْضُوْكُمْ‌ۚ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ‏
يَحْلِفُوْنَ சத்தியம் செய்கின்றனர் بِاللّٰهِ அல்லாஹ் மீது لَـكُمْ உங்களுக்காக لِيُرْضُوْ அவர்கள் திருப்தி படுத்துவதற்காக كُمْ‌ۚ உங்களை وَاللّٰهُ அல்லாஹ் وَرَسُوْلُهٗۤ இன்னும் அவனுடைய தூதர் اَحَقُّ மிகவும் தகுதியுடையவர்கள் اَنْ يُّرْضُوْهُ அவனை அவர்கள் திருப்தி படுத்துவதற்கு اِنْ كَانُوْا அவர்கள் இருந்தால் مُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
9:62. யஹ்லிFபூன Bபில்லாஹி லகும் லியுர்ளூகும் வல்லாஹு வ ரஸூலுஹூ அஹக்கு அய் யுர்ளூஹு இன் கானூ மு'மினீன்
9:62. (முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.
9:63
9:63 اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّهٗ مَنْ يُّحَادِدِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاَنَّ لَهٗ نَارَ جَهَـنَّمَ خَالِدًا فِيْهَا‌ ؕ ذٰ لِكَ الْخِزْىُ الْعَظِيْمُ‏
اَلَمْ يَعْلَمُوْۤا அவர்கள் அறியவில்லையா? اَنَّهٗ நிச்சயமாக செய்தி مَنْ எவர் يُّحَادِدِ முரண்படுவார் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு فَاَنَّ நிச்சயமாக لَهٗ அவருக்கு نَارَ நெருப்பு جَهَـنَّمَ நரகத்தின் خَالِدًا நிரந்தரமானவர் فِيْهَا‌ ؕ அதில் ذٰ لِكَ இதுதான் الْخِزْىُ இழிவு, கேவலம் الْعَظِيْمُ‏ பெரிய
9:63. அலம் யஃலமூ அன்னஹூ மய் யுஹாதிதில்லாஹ வ ரஸூலஹூ Fப'அன்ன லஹூ னார ஜஹன்னம காலிதன் Fபீஹா; தாலிகல் கிZஜ்யுல் 'அளீம்
9:63. எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.
9:64
9:64 يَحْذَرُ الْمُنٰفِقُوْنَ اَنْ تُنَزَّلَ عَلَيْهِمْ سُوْرَةٌ تُنَبِّئُهُمْ بِمَا فِىْ قُلُوْبِهِمْ‌ ؕ قُلِ اسْتَهْزِءُوْا‌ ۚ اِنَّ اللّٰهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُوْنَ‏
يَحْذَرُ பயப்படுகின்றனர் الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகர்கள் اَنْ تُنَزَّلَ இறக்கப்பட்டு عَلَيْهِمْ அவர்கள் மீது سُوْرَةٌ ஓர் அத்தியாயம் تُنَبِّئُهُمْ அறிவித்துவிடுவதை/அவர்களுக்கு بِمَا எவற்றை فِىْ قُلُوْبِهِمْ‌ ؕ தங்கள் உள்ளங்களில் قُلِ கூறுவீராக اسْتَهْزِءُوْا‌ ۚ பரிகசித்துக் கொள்ளுங்கள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் مُخْرِجٌ வெளியாக்குபவன் مَّا எதை تَحْذَرُوْنَ‏ பயப்படுகிறீர்கள்
9:64. யஹ்தருல் முனாFபிகூன அன் துனZஜ் Zஜல 'அலய்ஹிம் ஸூரதுன் துனBப்Bபி 'உஹும் Bபிமா FபீகுலூBபிஹிம்; குலிஸ்தஹ்Zஜி'ஊ இன்னல் லாஹ முக்ரிஜும் மா தஹ்தரூன்
9:64. முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்: “ நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.”
9:65
9:65 وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ لَيَـقُوْلُنَّ اِنَّمَا كُنَّا نَخُوْضُ وَنَلْعَبُ‌ؕ قُلْ اَبِاللّٰهِ وَاٰيٰتِهٖ وَرَسُوْلِهٖ كُنْتُمْ تَسْتَهْزِءُوْنَ‏
وَلَٮِٕنْ நீர் கேட்டால் سَاَلْتَهُمْ அவர்களை لَيَـقُوْلُنَّ நிச்சயம் கூறுவார்கள் اِنَّمَا எல்லாம் كُنَّا நாங்கள் இருந்தோம் نَخُوْضُ மூழ்குபவர்களாக وَنَلْعَبُ‌ؕ இன்னும் விளையாடுபவர்களாக قُلْ கூறுவீராக اَبِاللّٰهِ அல்லாஹ்வையா? وَاٰيٰتِهٖ இன்னும் அவனுடைய வசனங்களை وَرَسُوْلِهٖ இன்னும் அவனுடயை தூதரை كُنْتُمْ இருந்தீர்கள் تَسْتَهْزِءُوْنَ‏ பரிகசிக்கிறீர்கள்
9:65. வல'இன் ஸ அல்தஹும் லயகூலுன்ன இன்னமா குன்னா னகூளு வ னல்'அBப்; குல் அBபில்லாஹி வ 'ஆயாதிஹீ வ ரஸூலிஹீ குன்தும் தஸ்தஹ்Zஜி'ஊன்
9:65. (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
9:66
9:66 لَا تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ‌ ؕ اِنْ نَّـعْفُ عَنْ طَآٮِٕفَةٍ مِّنْكُمْ نُـعَذِّبْ طَآٮِٕفَةً ۢ بِاَنَّهُمْ كَانُوْا مُجْرِمِيْنَ
لَا تَعْتَذِرُوْا புகல் கூறாதீர்கள் قَدْ كَفَرْتُمْ நிராகரித்து விட்டீர்கள் بَعْدَ اِيْمَانِكُمْ‌ ؕ பின்னர்/நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு اِنْ نَّـعْفُ நாம் மன்னித்தால் عَنْ طَآٮِٕفَةٍ ஒரு கூட்டத்தை مِّنْكُمْ உங்களில் نُـعَذِّبْ வேதனை செய்வோம் طَآٮِٕفَةً ۢ ஒரு கூட்டத்தை بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் مُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளாக
9:66. லா தஃததிரூ கத் கFபர்தும் Bபஃத ஈமானிகும்; இன் னஃFபு 'அன் தா'இFபதின் மின்கும் னு'அத் திBப் தா'இFபதன் Bபி அன்னஹும் கானூ முஜ்ரிமீன்
9:66. புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.
9:67
9:67 اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْۢ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَيَقْبِضُوْنَ اَيْدِيَهُمْ‌ؕ نَسُوا اللّٰهَ فَنَسِيَهُمْ‌ؕ اِنَّ الْمُنٰفِقِيْنَ هُمُ الْفٰسِقُوْنَ‏
اَلْمُنٰفِقُوْنَ நயவஞ்சக ஆண்கள் وَالْمُنٰفِقٰتُ இன்னும் நயவஞ்சக பெண்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் مِّنْۢ بَعْضٍ‌ۘ சிலரைச் சேர்ந்தவர்கள் يَاْمُرُوْنَ ஏவுகின்றனர் بِالْمُنْكَرِ தீமையை وَيَنْهَوْنَ இன்னும் தடுக்கின்றனர் عَنِ الْمَعْرُوْفِ நன்மையை விட்டு وَيَقْبِضُوْنَ இன்னும் மூடிக் கொள்கின்றனர் اَيْدِيَهُمْ‌ؕ தங்கள் கரங்களை نَسُوا மறந்தார்கள் اللّٰهَ அல்லாஹ்வை فَنَسِيَهُمْ‌ؕ ஆகவே மறந்தான்/அவர்களை اِنَّ நிச்சயமாக الْمُنٰفِقِيْنَ هُمُ நயவஞ்சகர்கள்தான் الْفٰسِقُوْنَ‏ பாவிகள்
9:67. அல்முனாFபிகூன வல் முனாFபிகாது Bபஃளுஹும் மிம் Bபஃள்; யாமுரூன Bபில்முன்கரி வ யன்ஹவ்ன 'அனில் மஃரூFபி வ யக்Bபிளூன அய்தியஹும்; னஸுல் லாஹ Fபனஸியஹும்; இன்னல் முனாFபிகீன ஹுமுல் Fபாஸிகூன்
9:67. நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.
9:68
9:68 وَعَدَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْـكُفَّارَ نَارَ جَهَـنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ هِىَ حَسْبُهُمْ‌ ۚ وَلَـعَنَهُمُ اللّٰهُ‌ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّقِيْمٌ ۙ‏
وَعَدَ வாக்களித்தான் اللّٰهُ அல்லாஹ் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சக ஆண்களுக்கு وَالْمُنٰفِقٰتِ இன்னும் நயவஞ்சக பெண்களுக்கு وَالْـكُفَّارَ இன்னும் நிராகரிப்பாளர்களுக்கு نَارَ நெருப்பை جَهَـنَّمَ நரகத்தின் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا‌ ؕ அதில் هِىَ அதுவே حَسْبُهُمْ‌ ۚ அவர்களுக்கு போதும் وَلَـعَنَهُمُ இன்னும் சபித்தான்/அவர்களை اللّٰهُ‌ ۚ அல்லாஹ் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை مُّقِيْمٌ ۙ‏ நிலையானது
9:68. வ'அதல் லாஹுல் முனFபிகீன வல் முனாFபிகாதி வல் குFப்Fபார னார ஜஹன்ன்னம்ம காலிதீன Fபீஹா; ஹிய ஹஸ்Bபுஹும்; வ ல'அன்னஹுமுல் லாஹு வ லஹும் 'அதாBபும் முகீம்
9:68. நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.
9:69
9:69 كَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ كَانُوْۤا اَشَدَّ مِنْكُمْ قُوَّةً وَّاَكْثَرَ اَمْوَالًا وَّاَوْلَادًا ؕ فَاسْتَمْتَعُوْا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِىْ خَاضُوْا‌ ؕ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ۚ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
كَالَّذِيْنَ எவர்களைப்போன்றே مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் كَانُوْۤا இருந்தனர் اَشَدَّ கடுமையானவர்களாக مِنْكُمْ உங்களை விட قُوَّةً பலத்தால் وَّاَكْثَرَ இன்னும் அதிகமானவர்களாக اَمْوَالًا செல்வங்களால் وَّاَوْلَادًا ؕ இன்னும் சந்ததிகளால் فَاسْتَمْتَعُوْا சுகமடைந்தார்கள் بِخَلَاقِهِمْ தங்கள் பங்கைக் கொண்டு فَاسْتَمْتَعْتُمْ நீங்கள் சுகமடைந்தீர்கள் بِخَلَاقِكُمْ உங்கள் பங்கைக் கொண்டு كَمَا போன்று اسْتَمْتَعَ சுகமடைந்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் بِخَلَاقِهِمْ தங்கள் பங்கைக் கொண்டு وَخُضْتُمْ மூழ்கினீர்கள் كَالَّذِىْ எது போன்று خَاضُوْا‌ ؕ اُولٰۤٮِٕكَ மூழ்கினர்/அவர்கள் حَبِطَتْ அழிந்தன اَعْمَالُهُمْ அவர்களுடைய செயல்கள் فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ‌ ۚ இன்னும் மறுமையில் وَاُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்
9:69. கல்லதீன மின் கBப்லிகும் கானூ அஷத்த மின்கும் குவ்வத(ன்)வ் வ அக்தர அம்வால(ன்)வ் வ அவ்லாதன் Fபஸ்தம்த'ஊ Bபிகலாகிஹிம் Fபஸ்தம்தஃதும் Bபிகலாகிகும் கமஸ் தம்த'அல் லதீன மின் கBப்லிகும் Bபிகலா கிஹிம் வ குள்தும் கல்லதீ காளூ; உலா'இக ஹBபிதத் அஃமாலுஹும் Fபித் துன்யா வல் ஆகிரதி வ உலா'இக ஹுமுல் காஸிரூன்
9:69. (முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
9:70
9:70 اَلَمْ يَاْتِهِمْ نَبَاُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ  ۙ وَقَوْمِ اِبْرٰهِيْمَ وَاَصْحٰبِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكٰتِ‌ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ‌‌ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
اَلَمْ வரவில்லையா يَاْتِهِمْ அவர்களுக்கு نَبَاُ செய்தி, சரித்திரம் الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் قَوْمِ சமுதாயம் نُوْحٍ நூஹூடைய وَّعَادٍ இன்னும் ஆது وَّثَمُوْدَ  ۙ இன்னும் ஸமூது وَقَوْمِ இன்னும் சமுதாயம் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاَصْحٰبِ مَدْيَنَ இன்னும் மத்யன் வாசிகள் وَالْمُؤْتَفِكٰتِ‌ ؕ தலைகீழாக புரட்டப்பட்ட ஊர்கள் اَتَتْهُمْ அவர்கள் வந்தார்கள் رُسُلُهُمْ அவர்களுடைய தூதர்கள் بِالْبَيِّنٰتِ‌ ۚ அத்தாட்சிகளைக் கொண்டு فَمَا كَانَ இருக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِيَظْلِمَهُمْ அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக وَلٰـكِنْ எனினும் كَانُوْۤا இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ‏ அநீதியிழைப்பவர்களாக
9:70. அலம் ய'திஹிம் னBப உல் லதீன மின் கBப்லிஹிம் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வ கவ்மி இBப்ராஹீம வ அஸ்ஹாBபி மத்யன வல் மு'தFபிகாத்; அதத்ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானல் லாஹு லியள்லிமஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
9:70. இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
9:71
9:71 وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ؕ اُولٰۤٮِٕكَ سَيَرْحَمُهُمُ اللّٰهُؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
وَالْمُؤْمِنُوْنَ நம்பிக்கை கொண்ட ஆண்கள் وَالْمُؤْمِنٰتُ இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلِيَآءُ பொறுப்பாளர்கள் بَعْضٍ‌ۘ சிலருக்கு يَاْمُرُوْنَ ஏவுகின்றனர் بِالْمَعْرُوْفِ நன்மையை وَيَنْهَوْنَ இன்னும் தடுக்கின்றனர் عَنِ الْمُنْكَرِ தீமையைவிட்டு وَيُقِيْمُوْنَ இன்னும் நிலை நிறுத்துகின்றனர் الصَّلٰوةَ தொழுகையை وَيُؤْتُوْنَ இன்னும் கொடுக்கின்றனர் الزَّكٰوةَ ஸகாத்தை وَيُطِيْعُوْنَ இன்னும் கீழ்ப்படிகின்றனர் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَرَسُوْلَهٗ‌ؕ இன்னும் அவனுடைய தூதருக்கு اُولٰۤٮِٕكَ அவர்கள் سَيَرْحَمُهُمُ இவர்களுக்கு கருணை புரிவான் اللّٰهُؕ அல்லாஹ் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
9:71. வல் மு'மினூன வல் மு'மினாது Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; ய'முரூன Bபில்மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கரி வ யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ யுதீ'ஊனல் லாஹ வ ரஸூலஹ்; உலா'இக ஸயர்ஹமு ஹுமுல் லாஹ்; இன்னல்லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
9:71. முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:72
9:72 وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍ‌ ؕ وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ‌ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
وَعَدَ வாக்களித்தான் اللّٰهُ அல்லாஹ் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு وَالْمُؤْمِنٰتِ நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு جَنّٰتٍ சொர்க்கங்களை تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا அவற்றில் وَمَسٰكِنَ இன்னும் தங்குமிடங்கள் طَيِّبَةً நல்லது فِىْ جَنّٰتِ சொர்க்கங்களில் عَدْنٍ‌ ؕ நிலையான وَرِضْوَانٌ இன்னும் பொருத்தம் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் اَكْبَرُ‌ ؕ மிகப் பெரியது ذٰ لِكَ هُوَ இதுதான் الْفَوْزُ வெற்றி الْعَظِيْمُ‏ மகத்தானது
9:72. வ'அதல் லாஹுல்மு' மினீன வல்மு'மினாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா வ மஸாகின தய்யிBபதன் Fபீ ஜன்ன்னாதி 'அத்ன்; வ ரிள்வானும் மினல் லாஹி அக்Bபர்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
9:72. முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி.
9:73
9:73 يٰۤاَيُّهَا النَّبِىُّ جَاهِدِ الْـكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْ‌ؕ وَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! جَاهِدِ போரிடுவீராக الْـكُفَّارَ நிராகரிப்பவர்களிடம் وَالْمُنٰفِقِيْنَ இன்னும் நயவஞ்சகர்களிடம் وَاغْلُظْ கண்டிப்பீராக عَلَيْهِمْ‌ؕ அவர்களை وَ مَاْوٰٮهُمْ அவர்களுடைய தங்குமிடம் جَهَـنَّمُ‌ؕ நரகம்தான் وَبِئْسَ கெட்டுவிட்டது الْمَصِيْرُ‏ மீளுமிடத்தால் அது
9:73. யா அய்யுஹன் னBபிய்யு ஜாஹிதில் குFப்Fபார வல்முனாFபிகீன வக்லுள் 'அலய்ஹிம்; வ மாவாஹும் ஜஹன்ன்னமு வ Bபி'ஸல் மஸீர்
9:73. நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக; மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக; (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
9:74
9:74 يَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ؕ وَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْـكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ يَنَالُوْا‌ ۚ وَمَا نَقَمُوْۤا اِلَّاۤ اَنْ اَغْنٰٮهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ‌ ۚ فَاِنْ يَّتُوْبُوْا يَكُ خَيْرًا لَّهُمْ‌ ۚ وَاِنْ يَّتَوَلَّوْا يُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِيْمًا ۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ۚ وَمَا لَهُمْ فِى الْاَرْضِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏
يَحْلِفُوْنَ சத்தியமிடுகின்றனர் بِاللّٰهِ அல்லாஹ் மீது مَا قَالُوْا ؕ அவர்கள் கூறவில்லை وَلَقَدْ قَالُوْا கூறியிருக்கின்றனர் كَلِمَةَ வார்த்தை الْـكُفْرِ நிராகரிப்பின் وَكَفَرُوْا இன்னும் நிராகரித்தனர் بَعْدَ பின்னர் اِسْلَامِهِمْ அவர்கள் முஸ்லிமானதற்கு وَهَمُّوْا இன்னும் திட்டமிட்டனர் بِمَا எதற்கு لَمْ يَنَالُوْا‌ ۚ அவர்கள் அடையவில்லை وَمَا نَقَمُوْۤا அவர்கள் தண்டிக்கவில்லை اِلَّاۤ தவிர اَنْ اَغْنٰٮهُمُ என்பதற்காக/நிறைவாக்கினான்/இவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் وَرَسُوْلُهٗ இன்னும் அவனுடைய தூதர் مِنْ فَضْلِهٖ‌ ۚ தன் அருளினால் فَاِنْ يَّتُوْبُوْا அவர்கள் திருந்தினால் يَكُ இருக்கும் خَيْرًا சிறந்ததாக لَّهُمْ‌ ۚ அவர்களுக்கே وَاِنْ يَّتَوَلَّوْا அவர்கள் விலகிச்சென்றால் يُعَذِّبْهُمُ வேதனை செய்வான்/அவர்களை اللّٰهُ அல்லாஹ் عَذَابًا வேதனையால் اَلِيْمًا ۙ துன்புறுத்தக்கூடிய فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ‌ ۚ இன்னும் மறுமையில் وَمَا لَهُمْ அவர்களுக்கு இல்லை فِى الْاَرْضِ பூமியில் مِنْ وَّلِىٍّ ஒரு பாதுகாவலர் وَّلَا نَصِيْرٍ‏ ஓர் உதவியாளர்
9:74. யஹ்லிFபூன Bபில்லாஹி ம காலூ வ லகத் காலூ கலிமதல் குFப்ரி வ கFபரூ Bபஃத இஸ்லாமிஹிம் வ ஹம்மூ Bபிமா லம் யனாலூ; வமா னகமூ இல்லா அன் அக்னா ஹுமுல்லாஹு வ ரஸூலுஹூ மின் Fபள்லிஹ்; Fப-இ(ன்)ய் யதூBபூ யகு கய்ரல் லஹும் வ இ(ன்)ய் யதவல் லவ் யு'அத் திBப்ஹுமுல்லாஹு 'அதாBபன் அலீமன் Fபித்துன்யா வல் ஆகிரஹ்; வமா லஹும் Fபில் அர்ளி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
9:74. இவர்கள் நிச்சயமாக “குஃப்ருடைய” சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
9:75
9:75 وَمِنْهُمْ مَّنْ عَاهَدَ اللّٰهَ لَٮِٕنْ اٰتٰٮنَا مِنْ فَضْلِهٖ لَـنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِيْنَ‏
وَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர்கள் عَاهَدَ ஒப்பந்தம்செய்தார்கள் اللّٰهَ அல்லாஹ்விடம் لَٮِٕنْ அவன் கொடுத்தால் اٰتٰٮنَا எங்களுக்கு مِنْ فَضْلِهٖ தன் அருளிலிருந்து لَـنَصَّدَّقَنَّ நிச்சயமாக நாம் தர்மம்செய்வோம் وَلَنَكُوْنَنَّ நிச்சயமாக நாம் ஆகிவிடுவோம் مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில்
9:75. வ மின்ஹும் மன் 'ஆஹ தல் லாஹ ல'இன் ஆதானா மின் Fபள்லிஹீ லனஸ் ஸத்தகன்ன வ லனகூனன்ன மினஸ்ஸாலிஹீன்
9:75. அவர்களில் சிலர், “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.
9:76
9:76 فَلَمَّاۤ اٰتٰٮهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ‏
فَلَمَّاۤ اٰتٰٮهُمْ போது/கொடுத்தான்/அவர்களுக்கு مِّنْ فَضْلِهٖ தன் அருளிலிருந்து بَخِلُوْا கஞ்சத்தனம்செய்தனர் بِهٖ அதில் وَتَوَلَّوْا இன்னும் விலகிவிட்டனர் وَّهُمْ அவர்கள் مُّعْرِضُوْنَ‏ புறக்கணிப்பவர்களாக
9:76. Fபலம்மா ஆதாஹும் மின் Fபள்லிஹீ Bபகிலூ Bபிஹீ வ தவல்லவ் வ ஹும் முஃரிளூன்
9:76. (அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.
9:77
9:77 فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِىْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏
فَاَعْقَبَهُمْ ஆகவே முடிவாக்கினான்/அவர்களுக்கு نِفَاقًا நயவஞ்சகத்தை فِىْ قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்களில் اِلٰى يَوْمِ நாள் வரை يَلْقَوْنَهٗ சந்திப்பார்கள்/அவனை بِمَاۤ எதன் காரணமாக اَخْلَفُوا மாறாக நடந்தனர் اللّٰهَ அல்லாஹ்விடம் مَا எதை وَعَدُوْهُ வாக்களித்தனர்/அதை وَبِمَا இன்னும் எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْذِبُوْنَ‏ பொய்சொல்பவர்களாக
9:77. Fப அஃகBபஹும் னிFபாகன் Fபீ குலூBபிஹிம் இலா யவ்மி யல்கவ் னஹூ Bபிமா அக்லFபுல் லாஹ மா வ'அதூஹு வ Bபிமா கானூ யக்திBபூன்
9:77. எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.
9:78
9:78 اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُيُوْبِ‌ ۚ‏
اَلَمْ يَعْلَمُوْۤا அவர்கள் அறியவில்லையா? اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَعْلَمُ அறிவான் سِرَّهُمْ அவர்களின் ரகசியத்தை وَنَجْوٰٮهُمْ இன்னும் அவர்களின் பேச்சை وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلَّامُ மிக மிக அறிந்தவன் الْغُيُوْبِ‌ ۚ‏ மறைவானவற்றை
9:78. அலம் யஃலமூ அன்னல் லாஹ யஃலமு ஸிர்ரஹும் வ னஜ்வாஹும் வ அன்னல் லாஹ 'அல்லாமுல் குயூBப்
9:78. அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
9:79
9:79 اَلَّذِيْنَ يَلْمِزُوْنَ الْمُطَّوِّعِيْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ فِى الصَّدَقٰتِ وَالَّذِيْنَ لَا يَجِدُوْنَ اِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُوْنَ مِنْهُمْؕ سَخِرَ اللّٰهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
اَلَّذِيْنَ எவர்கள் يَلْمِزُوْنَ குறை கூறுகின்றனர், குத்திப் பேசுகின்றனர் الْمُطَّوِّعِيْنَ உபரியாக செய்பவர்களை مِنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் فِى الصَّدَقٰتِ தர்மங்களில் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் لَا يَجِدُوْنَ பெறமாட்டார்கள் اِلَّا தவிர جُهْدَهُمْ தங்கள் உழைப்பை فَيَسْخَرُوْنَ கேலிசெய்கின்றனர் مِنْهُمْؕ அவர்களை سَخِرَ கேலி செய்கிறான் اللّٰهُ அல்லாஹ் مِنْهُمْ அவர்களை وَلَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَلِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
9:79. அல்லதீன யல்மிZஜூனல் முத் தவ்வி'ஈன மினல்மு'மினீன Fபிஸ் ஸதகாதி வல்லதீன லா யஜிதூன இல்லா ஜுஹ்தஹும் Fபயஸ்கரூன மின்ஹும் ஸகிரல் லாஹு மின்ஹும் வ லஹும் அதாBபுன் அலீம்
9:79. இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.
9:80
9:80 اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْؕ اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِيْنَ مَرَّةً فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ‌ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
اِسْتَغْفِرْ நீர் மன்னிப்புத்தேடுவீராக لَهُمْ அவர்களுக்காக اَوْ அல்லது لَا تَسْتَغْفِرْ மன்னிப்புத் தேடாதீர் لَهُمْؕ அவர்களுக்காக اِنْ تَسْتَغْفِرْ நீர் மன்னிப்புத் தேடினாலும் لَهُمْ அவர்களுக்காக سَبْعِيْنَ எழுபது مَرَّةً முறை فَلَنْ يَّغْفِرَ மன்னிக்கவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ‌ؕ அவர்களை ذٰلِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرَسُوْلِهٖ‌ؕ இன்னும் அவனுடைய தூதரை وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்கள் الْفٰسِقِيْنَ‏ பாவிகளான
9:80. இஸ்தக்Fபிர் லஹும் அவ் லா தஸ்தக்Fபிர் லஹும் இன் தஸ்தக்Fபிர் லஹும் ஸBப்'ஈன மர்ரதன் Fபல(ன்)ய் யக்Fபிரல் லாஹு லஹும்; தாலிக Bபி அன்னஹும் கFபரூ Bபில்லாஹி வ ரஸூலிஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
9:80. (நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே! இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் - நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
9:81
9:81 فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْۤا اَنْ يُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِى الْحَـرِّؕ قُلْ نَارُ جَهَـنَّمَ اَشَدُّ حَرًّا‌ؕ لَوْ كَانُوْا يَفْقَهُوْنَ‏
فَرِحَ மகிழ்ச்சியடைந்தனர் الْمُخَلَّفُوْنَ பின்தங்கியவர்கள் بِمَقْعَدِهِمْ தாங்கள் தங்கியதைப் பற்றி خِلٰفَ மாறாக رَسُوْلِ தூதருக்கு اللّٰهِ அல்லாஹ்வின் وَكَرِهُوْۤا இன்னும் வெறுத்தனர் اَنْ يُّجَاهِدُوْا அவர்கள் போரிடுவதை بِاَمْوَالِهِمْ தங்கள் செல்வங்களால் وَاَنْفُسِهِمْ இன்னும் தங்கள் உயிர்களால் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَقَالُوْا கூறினர் لَا تَنْفِرُوْا புறப்படாதீர்கள் فِى الْحَـرِّؕ வெயிலில் قُلْ கூறுவீராக نَارُ நெருப்பு جَهَـنَّمَ நரகத்தின் اَشَدُّ மிகக் கடுமையானது حَرًّا‌ؕ வெப்பத்தால் لَوْ كَانُوْا அவர்கள் இருக்க வேண்டுமே! يَفْقَهُوْنَ‏ சிந்தித்து விளங்குபவர்களாக
9:81. Fபரிஹல் முகல்லFபூன Bபிமக்'அதிஹிம் கிலாFப ரஸூலில் லாஹி வ கரிஹூ அய் யுஜாஹிதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் Fபீ ஸBபீலில் லாஹி வ காலூ லா தன்Fபிரூ Fபில் ஹர்ர்; குல் னாரு ஜஹன்னம அஷத்து ஹர்ரா; லவ் கானூ யFப்கஹூன்
9:81. (தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).
9:82
9:82 فَلْيَـضْحَكُوْا قَلِيْلاً وَّلْيَبْكُوْا كَثِيْرًا‌ ۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
فَلْيَـضْحَكُوْا அவர்கள் சிரிக்கட்டும் قَلِيْلاً குறைவாக وَّلْيَبْكُوْا அவர்கள் அழட்டும் كَثِيْرًا‌ ۚ அதிகமாக جَزَآءًۢ கூலியாக بِمَا كَانُوْا இருந்ததற்காக يَكْسِبُوْنَ‏ செய்வார்கள்
9:82. Fபல்யள்ஹகூ கலீல(ன்)வ் வல்யBப்கூ கதீரன் ஜZஜா'அன் Bபிமா கானூ யக்ஸிBபூன்
9:82. எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.
9:83
9:83 فَاِنْ رَّجَعَكَ اللّٰهُ اِلٰى طَآٮِٕفَةٍ مِّنْهُمْ فَاسْتَـاْذَنُوْكَ لِلْخُرُوْجِ فَقُلْ لَّنْ تَخْرُجُوْا مَعِىَ اَبَدًا وَّلَنْ تُقَاتِلُوْا مَعِىَ عَدُوًّا‌ ؕ اِنَّكُمْ رَضِيْتُمْ بِالْقُعُوْدِ اَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوْا مَعَ الْخٰلـِفِيْنَ‏
فَاِنْ திருப்பினால் رَّجَعَكَ உம்மை اللّٰهُ அல்லாஹ் اِلٰى طَآٮِٕفَةٍ ஒரு கூட்டத்திடம் مِّنْهُمْ அவர்களில் فَاسْتَـاْذَنُوْكَ அனுமதி கோரினால்/உம்மிடம் لِلْخُرُوْجِ வெளியேறுவதற்கு فَقُلْ கூறுவீராக لَّنْ تَخْرُجُوْا அறவே புறப்படாதீர்கள் مَعِىَ என்னுடன் اَبَدًا ஒருபோதும் وَّلَنْ تُقَاتِلُوْا இன்னும் அறவே போரிடாதீர்கள் مَعِىَ என்னுடன் عَدُوًّا‌ ؕ ஒரு எதிரியிடம் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் رَضِيْتُمْ விரும்பினீர்கள் بِالْقُعُوْدِ உட்கார்ந்து விடுவதை اَوَّلَ مَرَّةٍ முதல் முறை فَاقْعُدُوْا ஆகவே உட்கார்ந்து விடுங்கள் مَعَ الْخٰلـِفِيْنَ‏ பின் தங்கி விடுபவர்களுடன்
9:83. Fப இர் ரஜ'அகல் லாஹு இலா தா'இFபதிம் மின்ஹும் Fபஸ்தா தனூக லில்குரூஜி Fபகுல் லன் தக்ருஜூ ம'இய அBபத(ன்)வ் வ லன் துகாதிலூ ம'இய 'அதுவ்வன் இன்னகும் ரளீதும் Bபில்கு'ஊதி அவ்வல மர்ரதின் Fபக்'உதூ ம'அல் காலிFபீன்
9:83. (நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பி வருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் “நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்த விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தன் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத் தான் பொருத்த மெனக்கொண்டீர்கள் - எனவே (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே இருந்து விடுங்கள்” என்று கூறுவீராக!.
9:84
9:84 وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ‏
وَلَا تُصَلِّ தொழாதீர் عَلٰٓى மீது اَحَدٍ ஒருவர் مِّنْهُمْ அவர்களில் مَّاتَ இறந்தார் اَبَدًا ஒருபோதும் وَّلَا تَقُمْ நிற்காதீர் عَلٰى அருகில் قَبْرِهٖ ؕ اِنَّهُمْ அவருடைய புதைகுழிக்கு/நிச்சயமாக அவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرَسُوْلِهٖ இன்னும் அவனுடைய தூதரை وَمَاتُوْا இன்னும் இறந்தனர் وَهُمْ அவர்களோ فٰسِقُوْنَ‏ பாவிகள்
9:84. வ லா துஸல்லி 'அலா அஹதிம் மின்ஹும் மாத அBபத(ன்)வ் வலா தகும் 'அலா கBப்ரிஹீ இன்னஹும் கFபரூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ மாதூ வ ஹும் Fபாஸிகூன்
9:84. அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
9:85
9:85 وَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَاَوْلَادُهُمْ‌ؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّعَذِّبَهُمْ بِهَا فِى الدُّنْيَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ‏
وَلَا ஆச்சரியப்படுத்த வேண்டாம் تُعْجِبْكَ உம்மை اَمْوَالُهُمْ செல்வங்கள்/அவர்களுடைய وَاَوْلَادُهُمْ‌ؕ இன்னும் பிள்ளைகள்/அவர்களுடைய اِنَّمَا يُرِيْدُ நாடுவதெல்லாம் اللّٰهُ அல்லாஹ் اَنْ வேதனை செய்வதற்கு يُّعَذِّبَهُمْ அவர்களை بِهَا அவற்றின் மூலம் فِى الدُّنْيَا உலகில் وَتَزْهَقَ இன்னும் பிரிவதற்கு, அழிவதற்கு اَنْفُسُهُمْ அவர்களுடைய உயிர்கள் وَهُمْ அவர்கள் இருக்க كٰفِرُوْنَ‏ நிராகரித்தவர்களாக
9:85. வ லா துஃஜிBப்க அம்வாலுஹும் வ அவ்லாதுஹும்; இன்னமா யுரீதுல் லாஹு அ(ன்)ய் யு'அத்திBபஹும் Bபிஹா Fபித் துன்யா வ தZஜ்ஹக அன்Fபுஸுஹும் வ ஹும் காFபிரூன்
9:85. இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
9:86
9:86 وَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ اَنْ اٰمِنُوْا بِاللّٰهِ وَجَاهِدُوْا مَعَ رَسُوْلِهِ اسْتَـاْذَنَكَ اُولُوا الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوْا ذَرْنَا نَكُنْ مَّعَ الْقٰعِدِيْنَ‏
وَاِذَاۤ اُنْزِلَتْ இறக்கப்பட்டால் سُوْرَةٌ ஓர் அத்தியாயம் اَنْ என்று اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَجَاهِدُوْا இன்னும் போரிடுங்கள் مَعَ உடன் رَسُوْلِهِ அவனுடயை தூதர் اسْتَـاْذَنَكَ அனுமதி கோரினார்(கள்) /உம்மிடம் اُولُوا الطَّوْلِ செல்வந்தர்கள் مِنْهُمْ அவர்களில் وَقَالُوْا இன்னும் கூறுகின்றனர் ذَرْنَا விட்டுவிடுவீராக/எங்களை نَكُنْ இருக்கிறோம் مَّعَ உடன் الْقٰعِدِيْنَ‏ உட்கார்ந்தவர்கள்
9:86. வ இதா உன்Zஜிலத் ஸூரதுன் அன் ஆமினூ Bபில்லாஹி வ ஜாஹிதூ ம'அ ரஸூலிஹிஸ் தாதனக உலுத்தவ்லி மின்ஹும் வ காலூ தர்னா னகும் ம'அல்கா 'இதீன்
9:86. மேலும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள்” என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதிபடைத்த செல்வந்தர்கள்: “எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கின்றோம்” என்று உம்மிடம் அனுமதி கோருகின்றனர்.
9:87
9:87 رَضُوْا بِاَنْ يَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ‏
رَضُوْا திருப்தியடைந்தனர் بِاَنْ يَّكُوْنُوْا அவர்கள் ஆகிவிடுவதைக் கொண்டு مَعَ الْخَوَالِفِ பின்தங்கிய பெண்களுடன் وَطُبِعَ முத்திரையிடப்பட்டது عَلٰى மீது قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்கள் فَهُمْ لَا يَفْقَهُوْنَ‏ ஆகவே அவர்கள்/சிந்தித்து விளங்கமாட்டார்கள்
9:87. ரளூ Bபி அய் யகூனூ ம'அல் கவாலிFபி வ துBபி'அ 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யFப்கஹூன்
9:87. (போரில் கலந்துகொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) பின் தங்கியவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள்மீது முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
9:88
9:88 لٰـكِنِ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ جَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ‌ؕ وَاُولٰۤٮِٕكَ لَهُمُ الْخَيْـرٰتُ‌ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
لٰـكِنِ எனினும் الرَّسُوْلُ தூதர் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் مَعَهٗ அவருடன் جَاهَدُوْا போரிட்டனர் بِاَمْوَالِهِمْ தங்கள் செல்வங்களாலும் وَاَنْفُسِهِمْ‌ؕ இன்னும் தங்கள் உயிர்களாலும் وَاُولٰۤٮِٕكَ لَهُمُ அவர்களுக்குத்தான் الْخَيْـرٰتُ‌ நன்மைகள் وَاُولٰۤٮِٕكَ هُمُ இன்னும் அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‏ வெற்றியாளர்கள்
9:88. லாகினிர் ரஸூலு வல் லதீன ஆமனூ ம'அஹூ ஜாஹதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம்; வ உலா'இக லஹுமுல் கய்ராது வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
9:88. எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
9:89
9:89 اَعَدَّ اللّٰهُ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ
اَعَدَّ ஏற்படுத்தினான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ அவர்களுக்காக جَنّٰتٍ சொர்க்கங்களை تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا‌ ؕ அவற்றில் ذٰ لِكَ அதுதான் الْـفَوْزُ வெற்றி الْعَظِيْمُ‏ மகத்தானது
9:89. அ'அத்தல் லாஹு லஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
9:89. அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் எந்நாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.
9:90
9:90 وَ جَآءَ الْمُعَذِّرُوْنَ مِنَ الْاَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِيْنَ كَذَبُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ ؕ سَيُصِيْبُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
وَ جَآءَ இன்னும் வந்தார்(கள்) الْمُعَذِّرُوْنَ புகல் கூறுபவர்கள் مِنَ الْاَعْرَابِ கிராமவாசிகளில் لِيُؤْذَنَ அனுமதி அளிக்கப்படுவதற்கு لَهُمْ தங்களுக்கு وَقَعَدَ இன்னும் உட்கார்ந்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَذَبُوا பொய்யுரைத்தனர் اللّٰهَ அல்லாஹ்விடம் وَرَسُوْلَهٗ‌ ؕ இன்னும் அவனுடைய தூதர் سَيُصِيْبُ அடையும் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْهُمْ இவர்களில் عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தும்
9:90. வ ஜா'அல் மு'அத் திரூன மினல் அஃராBபி லியு'தன லஹும் வ க'அதல் லதீன கதBபுல் லாஹ வ ரஸூலஹ்; ஸயுஸீBபுல் லதீன கFபரூ மின்ஹும் 'அதாBபுன் அலீம்
9:90. கிராம வாசிகளில் சிலர் உம்மிடம் புகல் சொல்லிக் கொண்டு, (போரில் கலந்து கொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்க வந்தனர்; இன்னும் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள் - அவர்களில் நிராகரித்தவர்களை வெகு விரைவில் நோவினை செய்யும் வேதனை வந்தடையும்.
9:91
9:91 لَـيْسَ عَلَى الضُّعَفَآءِ وَلَا عَلَى الْمَرْضٰى وَلَا عَلَى الَّذِيْنَ لَا يَجِدُوْنَ مَا يُنْفِقُوْنَ حَرَجٌ اِذَا نَصَحُوْا لِلّٰهِ وَ رَسُوْلِهٖ‌ؕ مَا عَلَى الْمُحْسِنِيْنَ مِنْ سَبِيْلٍ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌۙ‏
لَـيْسَ இல்லை عَلَى மீது الضُّعَفَآءِ பலவீனர்கள் وَلَا இன்னும் இல்லை عَلَى மீது الْمَرْضٰى நோயாளிகள் وَلَا இன்னும் இல்லை عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் لَا يَجِدُوْنَ பெறமாட்டார்கள் مَا எதை يُنْفِقُوْنَ செலவழிப்பார்கள் حَرَجٌ ஒரு சிரமம், குற்றம் اِذَا نَصَحُوْا நன்மையை நாடினால் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு وَ رَسُوْلِهٖ‌ؕ இன்னும் அவனுடைய தூதருக்கு مَا இல்லை عَلَى மீது الْمُحْسِنِيْنَ நல்லறம் புரிவோர் مِنْ سَبِيْلٍ‌ؕ وَاللّٰهُ வழி ஏதும்/அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌۙ‏ பெரும் கருணையாளன்
9:91. லய்ஸ 'அலள் ளு'ஆFபா'இ வலா 'அலல் மர்ளா வலா 'அலல் லதீன லா யஜிதூன மா யுன்Fபிகூன ஹரஜுன் இதா னஸஹூ லில்லாஹி வ ரஸூலிஹ்; மா 'அலல் முஹ்ஸினீன மின் ஸBபீல்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
9:91. பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.
9:92
9:92 وَّلَا عَلَى الَّذِيْنَ اِذَا مَاۤ اَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَاۤ اَجِدُ مَاۤ اَحْمِلُكُمْ عَلَيْهِ تَوَلَّوْا وَّاَعْيُنُهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ حَزَنًا اَلَّا يَجِدُوْا مَا يُنْفِقُوْنَؕ‏
وَّلَا இன்னும் இல்லை عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் اِذَا مَاۤ اَتَوْكَ அவர்கள் வந்தால் உம்மிடம் لِتَحْمِلَهُمْ நீர் ஏற்றுவதற்காக/அவர்களை قُلْتَ கூறினீர் لَاۤ اَجِدُ நான்பெறவில்லையே مَاۤ اَحْمِلُكُمْ எதை/ஏற்றுவேன்/உங்களை عَلَيْهِ அதன் மீது تَوَلَّوْا திரும்பினர் وَّاَعْيُنُهُمْ அவர்களுடைய கண்கள் تَفِيْضُ பொங்கி வழிகின்றன مِنَ الدَّمْعِ கண்ணீரால் حَزَنًا கவலையினால் اَلَّا يَجِدُوْا பெறமாட்டார்கள் என்பதற்காக مَا எதை يُنْفِقُوْنَؕ‏ செலவழிப்பார்கள்
9:92. வ லா 'அலல் லதீன இதா மா அதவ்க லிதஹ்மிலஹும் குல்த லா அஜிது மா அஹ்மிலுகும் 'அலய்ஹி தவல்லவ் வ அஃயுனுஹும் தFபீளு மினத்தம்'இ ஹZஜனன் அல்லா யஜிதூ மா யுன்Fபிகூன்
9:92. போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் “உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே” என்று நீர் கூறிய போது, (போருக்காகத்) தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்வித குற்றமும் இல்லை.
9:93
9:93 اِنَّمَا السَّبِيْلُ عَلَى الَّذِيْنَ يَسْتَاْذِنُوْنَكَ وَهُمْ اَغْنِيَآءُ‌ۚ رَضُوْا بِاَنْ يَّكُوْنُوْا مَعَ الْخَـوَالِفِۙ وَطَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
اِنَّمَا السَّبِيْلُ வழியெல்லாம் عَلَى மீதுதான் الَّذِيْنَ எவர்கள் يَسْتَاْذِنُوْنَكَ அனுமதி கோருகின்றனர்/உம்மிடம் وَهُمْ அவர்கள் இருக்க اَغْنِيَآءُ‌ۚ செல்வந்தர்களாக رَضُوْا திருப்தியடைந்தனர் بِاَنْ يَّكُوْنُوْا அவர்கள் ஆகுவது கொண்டு مَعَ உடன் الْخَـوَالِفِۙ பின்தங்கிய பெண்கள் وَطَبَعَ இன்னும் முத்திரையிட்டான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது قُلُوْبِهِمْ உள்ளங்கள்/அவர்களுடைய فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
9:93. இன்னமஸ் ஸBபீலு 'அலல் லதீன யஸ்த'தினூனக வ ஹும் அக்னியா'; ரளூ Bபிஅ(ன்)ய்-யகூனூ ம'அல் கவாலிFபி வ தBப'அல் லாஹு 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யஃலமூன்
9:93. குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் (யாரெனில், தாம்) செல்வந்தர்களாக இருந்தும், (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதிகோரி, பின் தங்கியிருப்பவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களே அவர்கள் தாம்; அவர்களுடைய இருதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் - ஆகவே அவர்கள் (இதன் இழிவை) அறிய மாட்டார்கள்.
9:94
9:94 يَعْتَذِرُوْنَ اِلَيْكُمْ اِذَا رَجَعْتُمْ اِلَيْهِمْ‌ ؕ قُلْ لَّا تَعْتَذِرُوْا لَنْ نُّـؤْمِنَ لَـكُمْ قَدْ نَـبَّاَنَا اللّٰهُ مِنْ اَخْبَارِكُمْ‌ ؕ وَ سَيَرَى اللّٰهُ عَمَلَـكُمْ وَرَسُوْلُهٗ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
يَعْتَذِرُوْنَ புகல் கூறுவார்கள் اِلَيْكُمْ உங்களிடம் اِذَا رَجَعْتُمْ நீங்கள் திரும்பினால் اِلَيْهِمْ‌ ؕ அவர்களிடம் قُلْ கூறுவீராக لَّا تَعْتَذِرُوْا புகல் கூறாதீர்கள் لَنْ نُّـؤْمِنَ நாங்கள் நம்பமாட்டோம் لَـكُمْ உங்களை قَدْ نَـبَّاَ அறிவித்து விட்டான் نَا எங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ இருந்து (சில) اَخْبَارِكُمْ‌ ؕ உங்கள் செய்திகள் وَ سَيَرَى இன்னும் பார்ப்பான் اللّٰهُ அல்லாஹ் عَمَلَـكُمْ உங்கள் செயலை وَرَسُوْلُهٗ இன்னும் அவனுடைய தூதர் ثُمَّ பிறகு تُرَدُّوْنَ திருப்பப்படுவீர்கள் اِلٰى عٰلِمِ அறிந்தவனிடம் الْغَيْبِ மறைவை وَالشَّهَادَةِ இன்னும் வெளிப்படை فَيُنَبِّئُكُمْ அறிவிப்பான்/உங்களுக்கு بِمَا எதை كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
9:94. யஃததிரூன இலய்கும் இதா ரஜஃதும் இலய்ஹிம்; குல் லா தஃததிரூ லன் னு'மின லகும் கத் னBப்Bப அன்னல் லாஹு மின் அக்Bபாரிகும்; வ ஸ யரல் லாஹு 'அமலகும் வ ரஸூலுஹூ தும்ம துரத்தூன இலா 'ஆலிமில் கய்Bபி வஷ்ஷஹாததி Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
9:94. (முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பிய போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகல் கூறுகின்றனர்; “புகல் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
9:95
9:95 سَيَحْلِفُوْنَ بِاللّٰهِ لَـكُمْ اِذَا انْقَلَبْتُمْ اِلَيْهِمْ لِتُعْرِضُوْا عَنْهُمْ‌ؕ فَاَعْرِضُوْا عَنْهُمْ‌ؕ اِنَّهُمْ رِجْسٌ‌ وَّمَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
سَيَحْلِفُوْنَ சத்தியமிடுவார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது لَـكُمْ உங்களிடம் اِذَا انْقَلَبْتُمْ நீங்கள் திரும்பினால் اِلَيْهِمْ அவர்களிடம் لِتُعْرِضُوْا நீங்கள் புறக்கணித்து விடுவதற்காக عَنْهُمْ‌ؕ அவர்களை فَاَعْرِضُوْا ஆகவே புறக்கணித்து விடுங்கள் عَنْهُمْ‌ؕ அவர்களை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் رِجْسٌ‌ அசுத்தமானவர்கள் وَّمَاْوٰٮهُمْ இன்னும் தங்குமிடம்/அவர்களுடைய جَهَـنَّمُ‌ۚ நரகம்தான் جَزَآءًۢ கூலியாக بِمَا எதற்கு كَانُوْا இருந்தனர் يَكْسِبُوْنَ‏ செய்கின்றனர்
9:95. ஸ யஹ்லிFபூன Bபில்லாஹி லகும் இதன்கலBப்தும் இலய்ஹிம் லிதுஃரிளூ 'அன்ஹும் Fப அஃரிளூ 'அன்ஹும் இன்னஹும் ரிஜ்ஸு(ன்)வ் வ ம'வாஹும் ஜஹன்னமு ஜZஜா'அன் Bபி மாகானூ யக்ஸிBபூன்
9:95. (போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பி வருங்கால், நீங்கள் அவர்களைக்(குற்றம் பிடிக்காது) புறக்கணித்து விட்டுவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள்; ஆகவே நீங்களும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு விடுங்கள் - அவர்கள் நிச்சயமாக அசுத்தமானவர்கள்; அவர்களுக்குப் புகலிடம் நரகமே; அதுவே அவர்களுக்கு தீவினைக்குரிய (சரியான) கூலியாகும்.
9:96
9:96 يَحْلِفُوْنَ لَـكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ‌ۚ فَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللّٰهَ لَا يَرْضٰى عَنِ الْقَوْمِ الْفٰسِقِيْنَ‏
يَحْلِفُوْنَ சத்தியமிடுகின்றனர் لَـكُمْ உங்களிடம் لِتَرْضَوْا நீங்கள் திருப்தியடைவதற்காக عَنْهُمْ‌ۚ அவர்களைப் பற்றி فَاِنْ تَرْضَوْا நீங்கள் திருப்தியடைந்தாலும் عَنْهُمْ அவர்களைப் பற்றி فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَرْضٰى திருப்தியடைய மாட்டான் عَنِ الْقَوْمِ மக்களைப் பற்றி الْفٰسِقِيْنَ‏ பாவிகளான
9:96. யஹ்லிFபூன லகும் லிதர்ளவ் 'அன்ஹும் Fப இன் தர்ளவ் 'அன்ஹும் Fப இன்னல் லாஹ லா யர்ளா 'அனில் கவ்மில் Fபாஸிகீன்
9:96. அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.
9:97
9:97 اَلْاَعْرَابُ اَشَدُّ كُفْرًا وَّ نِفَاقًا وَّاَجْدَرُ اَلَّا يَعْلَمُوْا حُدُوْدَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
اَلْاَعْرَابُ கிராம அரபிகள் اَشَدُّ மிகக் கடுமையானவர்(கள்) كُفْرًا நிராகரிப்பில் وَّ نِفَاقًا இன்னும் நயவஞ்சகத்தில் وَّاَجْدَرُ இன்னும் மிகத் தகுதியானவர்(கள்) اَلَّا يَعْلَمُوْا அவர்கள் அறியாமல் இருக்க حُدُوْدَ சட்டங்களை مَاۤ எது اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது رَسُوْلِهٖ‌ؕ தன் தூதர் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
9:97. அல் அஃராBபு அஷத்து குFப்ர(ன்)வ் வ னிFபாக(ன்)வ் வ அஜ்தரு அல்லா யஃலமூ ஹுதூத மா அன்Zஜலல் லாஹு 'அலா ரஸூலிஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
9:97. காட்டரபிகள் குஃப்ரிலும் (நிராகரிப்பிலும்) நயவஞ்சகத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். இன்னும் அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும்; ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:98
9:98 وَمِنَ الْاَعْرَابِ مَنْ يَّتَّخِذُ مَا يُنْفِقُ مَغْرَمًا وَّيَتَرَبَّصُ بِكُمُ الدَّوَآٮِٕرَ‌ؕ عَلَيْهِمْ دَآٮِٕرَةُ السَّوْءِ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
وَمِنَ இன்னும் இருந்து الْاَعْرَابِ கிராம அரபிகள் مَنْ எவர் يَّتَّخِذُ எடுத்துக் கொள்வார் مَا எதை يُنْفِقُ தர்மம் செய்கிறார் مَغْرَمًا நஷ்டமாக وَّيَتَرَبَّصُ இன்னும் எதிர்பார்க்கின்றனர் بِكُمُ உங்களுக்கு الدَّوَآٮِٕرَ‌ؕ சுழற்சிகளை عَلَيْهِمْ அவர்கள் மீதுதான் دَآٮِٕرَةُ சுழற்சி السَّوْءِ‌ؕ வேதனையின் وَاللّٰهُ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏ நன்கறிபவன்
9:98. வ மினல் அஃராBபி மய் யத்தகிது மா யுன்Fபிகு மக்ரம(ன்)வ் வ யதரBப்Bபஸு Bபிகுமுத் தவா'இர்; அலய்ஹிம் தா'இரதுஸ் ஸவ்'; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
9:98. கிராமப்புறத்தவர்களில் சிலர் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்; நீங்கள் (காலச் சுழலில் சிக்கித்) துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள் - ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது - இன்னும், அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும்(யாவற்றையும்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
9:99
9:99 وَمِنَ الْاَعْرَابِ مَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبٰتٍ عِنْدَ اللّٰهِ وَصَلَوٰتِ الرَّسُوْلِ‌ؕ اَلَاۤ اِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ‌ؕ سَيُدْخِلُهُمُ اللّٰهُ فِىْ رَحْمَتِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
وَمِنَ இன்னும் இருந்து الْاَعْرَابِ கிராம அரபிகளில் مَنْ எவர் يُّؤْمِنُ நம்பிக்கைகொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ இன்னும் இறுதி நாளை وَيَتَّخِذُ இன்னும் எடுத்துக் கொள்கிறார்கள் مَا எதை يُنْفِقُ தர்மம் புரிகிறார்(கள்) قُرُبٰتٍ வணக்கங்களாக عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் وَصَلَوٰتِ இன்னும் பிரார்த்தனைகளாக الرَّسُوْلِ‌ؕ தூதரின் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّهَا நிச்சயமாக அது قُرْبَةٌ வணக்கம் لَّهُمْ‌ؕ அவர்களுக்கு سَيُدْخِلُهُمُ நுழைப்பான்/அவர்களை اللّٰهُ அல்லாஹ் فِىْ رَحْمَتِهٖ‌ ؕ தன் கருணையில் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
9:99. வ மினல் அஃராBபி மய் யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ யத்தகிது மா யுன்Fபிகு குருBபாதின் 'இன்தல் லாஹி வ ஸலவாதிர் ரஸூல்; 'அலா இன்னஹா குர்Bபதுல் லஹும்; ஸயுத்கிலு ஹுமுல் லாஹு Fபீ ரஹ்மதிஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
9:99. கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
9:100
9:100 وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏
وَالسّٰبِقُوْنَ முந்தியவர்கள் الْاَوَّلُوْنَ முதலாமவர்கள் مِنَ الْمُهٰجِرِيْنَ முஹாஜிர்களில் وَالْاَنْصَارِ இன்னும் அன்ஸாரிகள் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اتَّبَعُوْ பின்பற்றினார்கள் هُمْ இவர்களை بِاِحْسَانٍ ۙ நல்லறத்தில் رَّضِىَ திருப்தியடைந்தான் اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ இவர்களைப் பற்றி وَرَضُوْا இன்னும் திருப்தியடைந்தனர் عَنْهُ அவனைப் பற்றி وَاَعَدَّ இன்னும் ஏற்படுத்தினான் لَهُمْ இவர்களுக்கு جَنّٰتٍ சொர்க்கங்களை تَجْرِىْ ஓடும் تَحْتَهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَاۤ அவற்றில் اَبَدًا‌ ؕ எப்போதும் ذٰ لِكَ இது الْـفَوْزُ வெற்றி الْعَظِيْمُ‏ மகத்தானது
9:100. வஸ் ஸாBபிகூனல் அவ்வலூன மினல் முஹாஜிரீன வல் அன்ஸாரி வல்லதீனத் தBப'ஊ ஹும் Bபி இஹ்ஸானிர் ரளியல் லாஹு 'அன்ஹும் வ ரளூ 'அன்ஹு வ அ'அத்த லஹும் ஜன்னாதின் தஜ்ரீ தஹ்தஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
9:101
9:101 وَمِمَّنْ حَوْلَــكُمْ مِّنَ الْاَعْرَابِ مُنٰفِقُوْنَ‌‌ ۛؕ وَمِنْ اَهْلِ الْمَدِيْنَةِ‌ ‌ ‌ؔۛمَرَدُوْا عَلَى النِّفَاقِلَا تَعْلَمُهُمْ ‌ؕ نَحْنُ نَـعْلَمُهُمْ‌ ؕ سَنُعَذِّبُهُمْ مَّرَّتَيْنِ ثُمَّ يُرَدُّوْنَ اِلٰى عَذَابٍ عَظِيْمٍ‌ ۚ‏
وَمِمَّنْ இன்னும் எவர்களில் حَوْلَــكُمْ உங்களைச் சூழவுள்ள مِّنَ الْاَعْرَابِ கிராம அரபிகளில் مُنٰفِقُوْنَ‌‌ ۛؕ நயவஞ்சகர்கள் وَ இன்னும் مِنْ اَهْلِ வாசிகளில் الْمَدِيْنَةِ‌ ‌ மதீனா ‌ؔۛمَرَدُوْا அவர்கள் ஊறி விட்டனர் عَلَى மீது النِّفَاقِ நயவஞ்சகம் لَا تَعْلَمُهُمْ ‌ؕ அறியமாட்டீர்/அவர்களை نَحْنُ நாம் نَـعْلَمُهُمْ‌ அறிவோம் ؕ அவர்களை سَنُعَذِّبُهُمْ வேதனை செய்வோம்/அவர்களை مَّرَّتَيْنِ இருமுறை ثُمَّ பிறகு يُرَدُّوْنَ திருப்பப்படுவார்கள் اِلٰى பக்கம் عَذَابٍ வேதனையின் عَظِيْمٍ‌ ۚ‏ பெரிய
9:101. வ மிம்மன்ன் ஹவ்லகும் மினல் அஃராBபி முனாFபிகூன வ மின் அஹ்லில் மதீனதி மரதூ 'அலன் னிFபாக், லா தஃலமுஹும் னஹ்னு னஃலமுஹும்; ஸனு'அத்திBபுஹும் மர்ரதய்னி தும்ம யுரத்தூன இலா 'அதாBபின் 'அளீம்
9:101. உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.
9:102
9:102 وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًـا وَّاٰخَرَ سَيِّئًا ؕ عَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَ عَلَيْهِمْ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَاٰخَرُوْنَ இன்னும் மற்றவர்கள் (சிலர்) اعْتَرَفُوْا ஒப்புக் கொண்டனர் بِذُنُوْبِهِمْ தங்கள் குற்றங்களை خَلَطُوْا கலந்தனர் عَمَلًا செயலை صَالِحًـا நல்லது وَّاٰخَرَ இன்னும் மற்றதை سَيِّئًا ؕ கெட்டது عَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَ கூடும்/அல்லாஹ்/மன்னிக்க عَلَيْهِمْ‌ ؕ அவர்களை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
9:102. வ ஆகரூ னஃதரFபூ BபிதுனூBபிஹிம் கலதூ 'அமலன் ஸாலிஹ(ன்)வ் வ ஆகர ஸய்யி'அன் 'அஸல் லாஹு 'அ(ன்)ய் யதூBப 'அலய்ஹிம்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
9:102. வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
9:103
9:103 خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ‌ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
خُذْ எடுப்பீராக مِنْ இருந்து اَمْوَالِهِمْ செல்வங்கள்/அவர்களுடைய صَدَقَةً தர்மத்தை تُطَهِّرُ நீர் சுத்தப்படுத்துவீர் هُمْ அவர்களை وَتُزَكِّيْهِمْ بِهَا இன்னும் உயர்த்துவீர்/அவர்களை/அதன் மூலம் وَصَلِّ இன்னும் பிரார்த்திப்பீராக عَلَيْهِمْ‌ؕ அவர்களுக்கு اِنَّ صَلٰوتَكَ நிச்சயமாக உம் பிரார்த்தனை سَكَنٌ நிம்மதி தரக்கூடியது لَّهُمْ‌ؕ அவர்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
9:103. குத் மின் அம்வாலிஹிம் ஸதகதன் துதஹ்ஹிருஹும் வ துZஜக்கீஹிம் Bபிஹா வ ஸல்லி 'அலய்ஹிம் இன்ன ஸலாதக ஸகனுல் லஹும்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
9:103. (நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
9:104
9:104 اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَاْخُذُ الصَّدَقٰتِ وَ اَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
اَلَمْ يَعْلَمُوْۤا அவர்கள் அறியவில்லையா? اَنَّ اللّٰهَ هُوَ நிச்சயமாக அல்லாஹ்தான் يَقْبَلُ ஏற்கிறான் التَّوْبَةَ பிழை பொறுப்பு عَنْ عِبَادِهٖ தன் அடியார்களிடமிருந்து وَيَاْخُذُ இன்னும் எடுக்கிறான் الصَّدَقٰتِ தர்மங்களை وَ اَنَّ اللّٰهَ هُوَ நிச்சயமாக அல்லாஹ்தான் التَّوَّابُ மகா அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
9:104. அலம் யஃலமூ அன்னல் லாஹ ஹுவ யக்Bபலுத் தவ்Bபத 'அன் இBபாதிஹீ வ ய'குதுஸ் ஸதகாதி வ அன்னல் லாஹ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
9:104. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்புக் கோருதலை - ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன்.
9:105
9:105 وَقُلِ اعْمَلُوْا فَسَيَرَى اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ وَالْمُؤْمِنُوْنَ‌ؕ وَسَتُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‌ۚ‏
وَقُلِ கூறுவீராக اعْمَلُوْا செய்யுங்கள் فَسَيَرَى பார்க்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَمَلَكُمْ உங்கள் செயலை وَرَسُوْلُهٗ இன்னும் அவனுடைய தூதர் وَالْمُؤْمِنُوْنَ‌ؕ இன்னும் நம்பிக்கையாளர்கள் وَسَتُرَدُّوْنَ இன்னும் திருப்பப்படுவீர்கள் اِلٰى பக்கம் عٰلِمِ அறிந்தவன் الْغَيْبِ மறைவை وَالشَّهَادَةِ இன்னும் வெளிப்படையை فَيُنَبِّئُكُمْ அறிவிப்பான்/உங்களுக்கு بِمَا எதை كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ‌ۚ‏ செய்கிறீர்கள்
9:105. வ குல் இஃமலூ Fபஸயரல் லாஹு 'அமலகும் வ ரஸூலுஹூ வல் மு'மினூன்; வ ஸதுரத்தூன இலா 'ஆலிமில் கய்Bபி வஷ்ஷஹாததி Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
9:105. (நபியே! அவர்களிடம்:) “நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும், அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறும்.
9:106
9:106 وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا يُعَذِّبُهُمْ وَاِمَّا يَتُوْبُ عَلَيْهِمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
وَاٰخَرُوْنَ இன்னும் மற்றவர்கள் مُرْجَوْنَ தள்ளிவைக்கப் பட்டவர்கள் لِاَمْرِ உத்தரவிற்காக اللّٰهِ அல்லாஹ்வின் اِمَّا ஒன்று يُعَذِّبُهُمْ தண்டிப்பான்/அவர்களை وَاِمَّا ஒன்று يَتُوْبُ மன்னிப்பான் عَلَيْهِمْ‌ؕ அவர்களை وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ மகா ஞானவான்
9:106. வ ஆகரூன முர்ஜவ்ன லி அம்ரில் லாஹி இம்மா யு'அத்திBபுஹும் வ இம்மா யதூBபு 'அலய்ஹிம்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
9:106. அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
9:107
9:107 وَالَّذِيْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِيْقًۢا بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ‌ؕ وَلَيَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰى‌ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اتَّخَذُوْا எடுத்துக் கொண்டனர் مَسْجِدًا ஒரு மஸ்ஜிதை ضِرَارًا கெடுதல் செய்வதற்காக وَّكُفْرًا இன்னும் நிராகரிப்பிற்காக وَّتَفْرِيْقًۢا இன்னும் பிரிப்பதற்காக بَيْنَ மத்தியில் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் وَاِرْصَادًا இன்னும் எதிர்பார்ப்பது لِّمَنْ எவர்களுக்கான حَارَبَ போரிட்டார்(கள்) اللّٰهَ அல்லாஹ்விடம் وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதர் مِنْ قَبْلُ‌ؕ முன்னர் وَلَيَحْلِفُنَّ இன்னும் நிச்சயமாக சத்தியம் செய்கின்றனர் اِنْ اَرَدْنَاۤ நாங்கள் நாடவில்லை اِلَّا தவிர الْحُسْنٰى‌ؕ நன்மையை وَاللّٰهُ அல்லாஹ் يَشْهَدُ சாட்சி கூறுகிறான் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்தான்
9:107. வல்லதீனத் தகதூ மஸ்ஜிதன் ளிரார(ன்)வ் வ குFப்ர(ன்)வ் வ தFப்ரீகன் Bபய்னல் மு'மினீன வ இர்ஸாதல் லிமன் ஹாரBபல் லாஹ வ ரஸூலஹூ மின் கBப்ல்; வ ல யஹ்லிFபுன்ன இன் அரத்னா இல்லல் ஹுஸ்னா வல்லாஹு யஷ் ஹது இன்னஹும் லகாதிBபூன்
9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
9:108
9:108 لَا تَقُمْ فِيْهِ اَبَدًا ‌ؕ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ؕ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏
لَا تَقُمْ நின்று வணங்காதீர் فِيْهِ அதில் اَبَدًا ؕ ஒரு போதும் لَمَسْجِدٌ மஸ்ஜிதுதான் اُسِّسَ அடித்தளமிடப்பட்டது عَلَى التَّقْوٰى இறையச்சத்தின் மீது مِنْ இருந்து اَوَّلِ முதல் يَوْمٍ நாள் اَحَقُّ மிகத் தகுதியானது اَنْ تَقُوْمَ நீர் நின்று வணங்குவதற்கு فِيْهِ‌ؕ அதில் فِيْهِ அதில் رِجَالٌ ஆண்கள் يُّحِبُّوْنَ விரும்புகின்றர் اَنْ يَّتَطَهَّرُوْا ؕ தாங்கள் அதிகம் பரிசுத்தமாகுவதை وَاللّٰهُ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُطَّهِّرِيْنَ‏ மிக பரிசுத்தமானவர்களை
9:108. லா தகும் Fபீஹி அBபதா; லமஸ்ஜிதுன் உஸ்ஸிஸ 'அலத் தக்வா மின் அவ்வலி யவ்மின் அஹக்கு 'அன் தகூம Fபீஹ்; Fபீஹி ரிஜாலு(ன்)ய் யுஹிBப்Bபூன 'அ(ன்)ய் யத தஹ் ஹரூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முத்தஹ் ஹிரீன்
9:108. ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
9:109
9:109 اَفَمَنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى تَقْوٰى مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَيْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِىْ نَارِ جَهَـنَّمَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
اَفَمَنْ எவர்? اَسَّسَ அடித்தளமிட்டார் بُنْيَانَهٗ தான் கட்டுவதை عَلٰى மீது تَقْوٰى அச்சம் مِنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَ இன்னும் رِضْوَانٍ பொருத்தம் خَيْرٌ சிறந்தது اَمْ அல்லது مَّنْ எவர் اَسَّسَ அடித்தளமிட்டார் بُنْيَانَهٗ தான் கட்டுவதை عَلٰى மீது شَفَا ஓரம் جُرُفٍ ஓடை هَارٍ சரிந்து விடக்கூடியது فَانْهَارَ அது சரிந்து விட்டது بِهٖ அவனுடன் فِىْ نَارِ جَهَـنَّمَ‌ؕ நெருப்பில்/நரகம் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
9:109. அFபமன் அஸ்ஸஸ Bபுன்யானஹூ 'அலா தக்வா மினல் லாஹி வ ரிள்வானின் கய்ருன் அம் மன் அஸ்ஸஸ Bபுன்யானஹூ 'அலா ஷFபா ஜுருFபின் ஹாரின் Fபன்ஹார Bபிஹீ Fபீ னாரி ஜஹன்னம்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
9:110
9:110 لَا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِىْ بَنَوْا رِيْبَةً فِىْ قُلُوْبِهِمْ اِلَّاۤ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
لَا يَزَالُ நீடித்திருக்கும் بُنْيَانُهُمُ அவர்களுடைய கட்டடம் الَّذِىْ எது بَنَوْا அவர்கள் கட்டினர் رِيْبَةً சந்தேகமாகவே فِىْ உள்ளங்களில் قُلُوْبِهِمْ அவர்களுடைய اِلَّاۤ தவிர اَنْ تَقَطَّعَ துண்டு துண்டானால் قُلُوْبُهُمْ‌ؕ وَاللّٰهُ உள்ளங்கள்/அவர்களுடைய/அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ மகா ஞானவான்
9:110. லா யZஜாலு Bபுன்யானு ஹுமுல் லதீ Bபனவ் ரீBபதன் Fபீ குலூBபிஹிம் இல்லா அன் தகத்த'அ குலூBபுஹும்; வல் லாஹு 'அலீமுன் ஹகீம்
9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.  
9:111
9:111 اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِيْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَــنَّةَ‌ ؕ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَيَقْتُلُوْنَ وَ يُقْتَلُوْنَ‌وَعْدًا عَلَيْهِ حَقًّا فِى التَّوْرٰٮةِ وَالْاِنْجِيْلِ وَالْقُرْاٰنِ‌ ؕ وَمَنْ اَوْفٰى بِعَهْدِهٖ مِنَ اللّٰهِ فَاسْتَـبْشِرُوْا بِبَيْعِكُمُ الَّذِىْ بَايَعْتُمْ بِهٖ‌ ؕ وَذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اشْتَرٰى விலைக்கு வாங்கினான் مِنَ இருந்து الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் اَنْفُسَهُمْ உயிர்களை/அவர்களுடைய وَاَمْوَالَهُمْ இன்னும் செல்வங்களை/அவர்களுடைய بِاَنَّ பகரமாக/நிச்சயம் لَهُمُ அவர்களுக்கு الْجَــنَّةَ‌ ؕ சொர்க்கம் يُقَاتِلُوْنَ போர் புரிவார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் فَيَقْتُلُوْنَ கொல்வார்கள் وَ يُقْتَلُوْنَ‌ இன்னும் கொல்லப்படுவார்கள் وَعْدًا வாக்குறுதியாக عَلَيْهِ தன் மீது حَقًّا கடமையான فِى التَّوْرٰٮةِ தவ்றாத்தில் وَالْاِنْجِيْلِ இன்னும் இன்ஜீல் وَالْقُرْاٰنِ‌ ؕ இன்னும் குர்ஆன் وَمَنْ யார் اَوْفٰى அதிகம் நிறைவேற்றுபவர் بِعَهْدِهٖ தன் வாக்கை مِنَ اللّٰهِ அல்லாஹ்வை விட فَاسْتَـبْشِرُوْا ஆகவேமகிழ்ச்சியுறுங்கள் بِبَيْعِكُمُ விற்பனையைக் கொண்டு/உங்கள் الَّذِىْ எது بَايَعْتُمْ விற்றுக் கொண்டீர்கள் بِهٖ‌ ؕ அதற்குப் பகரமாக وَذٰ لِكَ هُوَ இதுதான் الْفَوْزُ வெற்றி الْعَظِيْمُ‏ மகத்தானது
9:111. இன்னல் லாஹஷ் தரா மினல் மு'மினீன அன்Fபுஸஹும் வ அம்வாலஹும் Bபி அன்ன லஹுமுல் ஜன்னஹ்; யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி Fப யக்துலூன வ யுக்தலூன வஃதன் 'அலய்ஹி ஹக்கன் Fபித் தவ்ராதி வல் இன்ஜீலி வல் குர்'ஆன்; வ மன் அவ்Fபா Bபி'அஹ்திஹீ மினல் லாஹ்; Fபஸ்தBப்ஷிரூ Bபி Bபய்'இகுமுல் லதீ Bபாயஃதும் Bபிஹ்; வ தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
9:112
9:112 اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
اَلتَّاۤٮِٕبُوْنَ திருந்தியவர்கள் الْعٰبِدُوْنَ வணக்கசாலிகள் الْحٰمِدُوْنَ புகழ்பவர்கள் السّاۤٮِٕحُوْنَ நோன்புநோற்பவர்கள் الرّٰكِعُوْنَ குனிபவர்கள் السّٰجِدُوْنَ சிரம் பணிபவர்கள் الْاٰمِرُوْنَ ஏவக்கூடியவர்கள் بِالْمَعْرُوْفِ நன்மையை وَالنَّاهُوْنَ இன்னும் தடுக்கக்கூடியவர்கள் عَنِ الْمُنْكَرِ பாவத்தை விட்டு وَالْحٰــفِظُوْنَ இன்னும் பாதுகாப்பவர்கள் لِحُدُوْدِ வரம்புகளை, சட்டங்களை اللّٰه ؕ அல்லாஹ்வுடைய وَبَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
9:112. அத் தா'இBபூனல் 'ஆBபிதூனல் ஹாமிதூனஸ் ஸா'இஹூனர் ராகி'ஊனஸ் ஸாஜிதூனல் ஆமிரூன Bபில்மஃரூFபி வன்னாஹூன 'அனில் முன்கரி வல்ஹாFபிளூன லிஹுதூதில் லாஹ்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
9:112. மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
9:113
9:113 مَا كَانَ لِلنَّبِىِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِىْ قُرْبٰى مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ‏
مَا كَانَ தகுந்ததல்ல لِلنَّبِىِّ நபிக்கு وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْاۤ நம்பிக்கை கொண்டனர் اَنْ يَّسْتَغْفِرُوْا அவர்கள் மன்னிப்புக் கோருவது لِلْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களுக்கு وَ لَوْ كَانُوْۤا அவர்கள் இருந்தாலும் اُولِىْ قُرْبٰى உறவினர்களாக مِنْۢ بَعْدِ பின்னர் مَا تَبَيَّنَ தெளிவாகிய لَهُمْ தங்களுக்கு اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اَصْحٰبُ வாசிகள் الْجَحِيْمِ‏ நரகம்
9:113. மா கான லின் னBபிய்யி வல்லதீன ஆமனூ 'அ(ன்)ய் யஸ்தக்Fபிரூ லில் முஷ்ரிகீன வ லவ் கானூ உலீ குர்Bபா மின் Bபஃதி மா தBபியன லஹும் அன்னஹும் அஸ்'ஹாBபுல் ஜஹீம்
9:113. முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
9:114
9:114 وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُ‌ ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ‌ ؕ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ‏
وَمَا كَانَ இருக்கவில்லை اسْتِغْفَارُ மன்னிப்புக் கோரியது اِبْرٰهِيْمَ இப்றாஹீம் لِاَبِيْهِ தன் தந்தைக்கு اِلَّا தவிர عَنْ مَّوْعِدَةٍ ஒரு வாக்குறுதிக்காக وَّعَدَهَاۤ அதை வாக்களித்தார் اِيَّاهُ‌ ۚ அவருக்கு فَلَمَّا تَبَيَّنَ தெளிவான போது لَهٗۤ அவருக்கு اَنَّهٗ நிச்சயமாக அவர் عَدُوٌّ ஓர் எதிரி لِّلّٰهِ அல்லாஹ்வுக்கு تَبَرَّاَ அவர் விலகிக் கொண்டார் مِنْهُ‌ ؕ அவரிலிருந்து اِنَّ اِبْرٰهِيْمَ நிச்சயமாக இப்றாஹீம் لَاَوَّاهٌ அதிகம் பிரார்த்திப்பவர் حَلِيْمٌ‏ பெரும் சகிப்பாளர்
9:114. வமா கானஸ் திக்Fபாரு இBப்ராஹீம லி அBபீஹி இல்லா 'அன் மவ்'இததி(ன்)வ் வ 'அதஹா இய்யாஹு Fபலம்மா தBபய்யன லஹூ அன்னஹூ 'அதுவ்வுல் லில்லாஹி தBபர்ர அ மின்ஹ்; இன்ன இBப்ராஹீம ல அவ்வாஹுன் ஹலீம்
9:114. இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
9:115
9:115 وَمَا كَانَ اللّٰهُ لِيُـضِلَّ قَوْمًۢا بَعْدَ اِذْ هَدٰٮهُمْ حَتّٰى يُبَيِّنَ لَهُمْ مَّا يَتَّقُوْنَ‌ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
وَمَا كَانَ இருக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِيُـضِلَّ வழிகெடுப்பவனாக قَوْمًۢا ஒரு கூட்டத்தை بَعْدَ பின்னர் اِذْ هَدٰٮهُمْ அவன்/நேர்வழிப்படுத்திய/அவர்களை حَتّٰى வரை يُبَيِّنَ விவரிப்பான் لَهُمْ அவர்களுக்கு مَّا எவற்றை يَتَّقُوْنَ‌ؕ அவர்கள் தவிர்ந்து கொள்வார்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
9:115. வமா கானல் லாஹு லியுளில்ல கவ்மன் Bபஃத இத் ஹதாஹும் ஹத்தா யுBபய்யின லஹும் மா யத்தகூன்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
9:115. எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.
9:116
9:116 اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ يُحْىٖ وَيُمِيْتُ‌ؕ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَهٗ அவனுக்கே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியின் يُحْىٖ உயிர்ப்பிக்கிறான் وَيُمِيْتُ‌ؕ இன்னும் மரணிக்கச் செய்கிறான் وَمَا لَـكُمْ உங்களுக்கு இல்லை مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مِنْ وَّلِىٍّ ஒரு பாதுகாவலர் وَّلَا نَصِيْرٍ‏ ஓர் உதவியாளர் இல்லை
9:116. இன்னல் லாஹ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி யுஹ்யீ வ யுமீத்; வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
9:116. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரணிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
9:117
9:117 لَـقَدْ تَّابَ اللّٰهُ عَلَى النَّبِىِّ وَالْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ فِىْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْۢ بَعْدِ مَا كَادَ يَزِيْغُ قُلُوْبُ فَرِيْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ‌ؕ اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِيْمٌۙ ‏
لَـقَدْ திட்டவட்டமாக تَّابَ மன்னித்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَى النَّبِىِّ நபி மீது وَالْمُهٰجِرِيْنَ இன்னும் முஹாஜிர்கள் وَالْاَنْصَارِ இன்னும் அன்ஸாரிகள் الَّذِيْنَ எவர்கள் اتَّبَعُوْهُ அவரைப் பின்பற்றினார்கள் فِىْ سَاعَةِ காலத்தில் الْعُسْرَةِ சிரமம் مِنْۢ بَعْدِ பின்னர் مَا كَادَ நெருங்கியது يَزِيْغُ வழிதவற قُلُوْبُ உள்ளங்கள் فَرِيْقٍ ஒரு பிரிவினரின் مِّنْهُمْ அவர்களில் ثُمَّ பிறகு تَابَ மன்னித்தான் عَلَيْهِمْ‌ؕ அவர்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் بِهِمْ அவர்கள் மீது رَءُوْفٌ இரக்கமுள்ளவன் رَّحِيْمٌۙ பெரும் கருணையாளன்
9:117. லகத் தாBபல் லாஹு 'அலன் னBபிய்யி வல் முஹாஜிரீன வல் அன்ஸாரில் லதீனத் தBப'ஊஹு Fபீ ஸா'அதில் 'உஸ்ரதி மின் Bபஃதி மா காத யZஜீகு குலூBபு Fபரிகின் மின்ஹும் தும்ம தாBப 'அலய்ஹிம்; இன்னஹூ Bபிஹிம் ர'ஊFபுர் ரஹீம்
9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
9:118
9:118 وَّعَلَى الثَّلٰثَةِ الَّذِيْنَ خُلِّفُوْا ؕ حَتّٰۤى اِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْۤا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّاۤ اِلَيْهِ ؕ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوْبُوْا ‌ ؕ اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ
وَّعَلَى மீது الثَّلٰثَةِ மூவர் الَّذِيْنَ எவர்கள் خُلِّفُوْا ؕ பிற்படுத்தப்பட்டனர் حَتّٰۤى வரை اِذَا போது ضَاقَتْ நெருக்கடியானது عَلَيْهِمُ அவர்களுக்கு الْاَرْضُ பூமி بِمَا رَحُبَتْ விசாலமாக இருந்தும் وَضَاقَتْ இன்னும் நெருக்கடியானது عَلَيْهِمْ அவர்கள் மீது اَنْفُسُهُمْ ஆன்மாக்கள்/அவர்களின் وَظَنُّوْۤا இன்னும் அவர்கள் உறுதி கொண்டனர் اَنْ لَّا அறவே இல்லை مَلْجَاَ ஒதுங்குமிடம் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து اِلَّاۤ اِلَيْهِ ؕ தவிர/அவனிடமே ثُمَّ பிறகு تَابَ அவன் மன்னித்தான் عَلَيْهِمْ அவர்களை لِيَتُوْبُوْا ؕ அவர்கள் திருந்துவதற்காக اِنَّ اللّٰهَ هُوَ நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் التَّوَّابُ மகா அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
9:118. வ 'அலத் தலாததில் லதீன குல்லிFபூ ஹத்தா இதா ளாகத் 'அலய்ஹிமுல் அர்ளு Bபிமா ரஹுBபத் வ ளாகத் 'அலய்ஹிம் அன்Fபுஸுஹும் வ ளன்ன்னூ அல் லா மல்ஜ-அ மினல் லாஹி இல்லா இலய்ஹி தும்ம தாBப 'அலய்ஹிம் லியதூBபூ; இன்னல் லாஹ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
9:118. (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:119
9:119 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَكُوْنُوْا இன்னும் இருங்கள் مَعَ உடன் الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்கள்
9:119. யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வ கூனூ ம'அஸ் ஸாதிகீன்
9:119. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
9:120
9:120 مَا كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَ لَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّـفْسِهٖ ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَــٴُـــوْنَ مَوْطِئًا يَّغِيْظُ الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلاً اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَۙ‏
مَا كَانَ தகுந்ததல்ல لِاَهْلِ الْمَدِيْنَةِ மதீனாவாசிகளுக்கு وَمَنْ இன்னும் எவர் حَوْلَهُمْ அவர்களைச் சுற்றி مِّنَ الْاَعْرَابِ கிராம அரபிகளில் اَنْ يَّتَخَلَّفُوْا அவர்கள் பின்தங்குவது عَنْ رَّسُوْلِ தூதரை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் وَ لَا يَرْغَبُوْا இன்னும் அவர்கள் நேசிப்பது (தகுந்தது) இல்லை بِاَنْفُسِهِمْ தங்கள் உயிர்களை عَنْ نَّـفْسِهٖ ؕ அவருடைய உயிரைவிட ذٰ لِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் لَا அடையாது يُصِيْبُهُمْ அவர்களுக்கு ظَمَاٌ ஒரு தாகம் وَّلَا نَصَبٌ ஒரு களைப்பு وَّلَا مَخْمَصَةٌ ஒரு பசி فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا يَطَــٴُـــوْنَ இன்னும் மிதிக்கமாட்டார்கள் مَوْطِئًا ஓர் இடம் يَّغِيْظُ கோபமூட்டும் الْكُفَّارَ நிராகரிப்பாளர்களை وَلَا يَنَالُوْنَ இன்னும் அடையமாட்டார்கள் مِنْ இருந்து عَدُوٍّ ஓர் எதிரி نَّيْلاً ஒரு துன்பத்தை اِلَّا தவிர كُتِبَ எழுதப்பட்டது لَهُمْ அவர்களுக்கு بِهٖ இவற்றுக்குப் பதிலாக عَمَلٌ செயல் صَالِحٌ‌ ؕ நன்மையானது اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُضِيْعُ வீணாக்க மாட்டான் اَجْرَ கூலியை الْمُحْسِنِيْنَۙ‏ நல்லறம் புரிவோரின்
9:120. மா கான லி அஹ்லில் மதீனதி வ மன் ஹவ்லஹும் மினல் அஃராBபி அய் யதகல்லFபூ 'அர்-ரஸூலில் லாஹி வலா யர்கBபூ Bபி அன்Fபுஸிஹிம் 'அன் னFப்ஸிஹ்; தாலிக Bபி அன்னஹும் லா யுஸீBபுஹும் ளம உ(ன்)வ் வலா னஸBபு(ன்)வ் வலா மக்மஸதுன் Fபீ ஸBபீலில் லாஹி வலா யத'ஊன மவ்தி'அய் யகீளுல் குFப்Fபார வலா யனாலூன மின் 'அதுவ்வின் னய்லன் இல்லா குதிBப லஹும் Bபிஹீ 'அமலுன் ஸாலிஹ்; இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
9:120. மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
9:121
9:121 وَلَا يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَلَا يُنْفِقُوْنَ தர்மம் புரிய மாட்டார்கள் نَفَقَةً ஒரு தர்மத்தை صَغِيْرَةً சிறியது وَّلَا كَبِيْرَةً இன்னும் பெரியது وَّلَا يَقْطَعُوْنَ அவர்கள் கடக்க மாட்டார்கள் وَادِيًا ஒரு பள்ளத்தாக்கை اِلَّا தவிர كُتِبَ பதியப்பட்டது لَهُمْ அவர்களுக்கு لِيَجْزِيَهُمُ கூலி கொடுப்பதற்காக/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் اَحْسَنَ மிக அழகியதை مَا எதை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்கிறார்கள்
9:121. வ லா யுன்Fபிகூன னFப கதன் ஸகீரத(ன்)வ் வலா கBபீரத(ன்)வ் வலா யக்த'ஊன வாதியன் இல்லா குதிBப லஹும் லியஜ்Zஜியஹுமுல் லாஹு அஹ்ஸன மா கானூ யஃமலூன்
9:121. இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.
9:122
9:122 وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَآفَّةً‌ ؕ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآٮِٕفَةٌ لِّيَـتَفَقَّهُوْا فِى الدِّيْنِ وَ لِيُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ
وَمَا كَانَ சரியல்ல الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் لِيَنْفِرُوْا அவர்கள் புறப்படுவது كَآفَّةً‌ ؕ அனைவருமே فَلَوْلَا نَفَرَ புறப்பட்டிருக்க வேண்டாமா مِنْ இருந்து كُلِّ ஒவ்வொரு فِرْقَةٍ பிரிவு مِّنْهُمْ அவர்களில் طَآٮِٕفَةٌ ஒரு கூட்டம் لِّيَـتَفَقَّهُوْا அவர்கள் ஞானம் பெறுவதற்காக فِى الدِّيْنِ மார்க்கத்தில் وَ لِيُنْذِرُوْا இன்னும் அவர்களை எச்சரிப்பதற்காக قَوْمَهُمْ தங்கள் சமுதாயத்தை اِذَا போது رَجَعُوْۤا திரும்பினார்கள் اِلَيْهِمْ அவர்களிடம் لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ‏ அவர்கள் எச்சரிக்கையாக
9:122. வமா கானல் மு'மினூன லியன்Fபிரூ காFப்Fபஹ்; Fபலவ் லா னFபர மின் குல்லி Fபிர்கதிம் மின்ஹும் தா'இFபதுல் லியதFபக்கஹூ Fபித்தீனி வ லியுன்திரூ கவ்மஹும் இதா ரஜ'ஊ இலய்ஹிம் ல'அல்லஹும் யஹ்தரூன்
9:122. முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.
9:123
9:123 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِيْنَ يَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْيَجِدُوْا فِيْكُمْ غِلْظَةً‌  ؕ وَاعْلَمُوْاۤ اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே قَاتِلُوا போரிடுங்கள்/எவர்கள் الَّذِيْنَ அடுத்திருக்கின்றனர் يَلُوْنَكُمْ உங்களை مِّنَ الْكُفَّارِ நிராகரிப்பாளர்களில் وَلْيَجِدُوْا இன்னும் அவர்கள் காணட்டும் فِيْكُمْ உங்களிடம் غِلْظَةً‌  ؕ கடுமையை وَاعْلَمُوْاۤ இன்னும் அறிந்து கொள்ளுங்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் مَعَ الْمُتَّقِيْنَ‏ அஞ்சுபவர்களுடன்
9:123. யா அய்யுஹல் லதீன ஆமனூ காதிலுல் லதீன யலூனகும் மினல் குFப்Fபாரி வல்யஜிதூ Fபீகும் கில்ளஹ்; வஃலமூ அன்னல் லாஹ ம'அல் முத்தகீன்
9:123. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
9:124
9:124 وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ اَيُّكُمْ زَادَتْهُ هٰذِهٖۤ اِيْمَانًا‌ ۚ فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِيْمَانًا وَّهُمْ يَسْتَبْشِرُوْنَ‏
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ இறக்கப்பட்டால் سُوْرَةٌ ஓர் அத்தியாயம் فَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் يَّقُوْلُ கூறுவார் اَيُّكُمْ உங்களில் எவர் زَادَتْهُ هٰذِهٖۤ அதிகப்படுத்தியது/அவருக்கு/இது اِيْمَانًا‌ ۚ நம்பிக்கை فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் فَزَادَتْهُمْ அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு اِيْمَانًا நம்பிக்கையை وَّهُمْ அவர்களோ يَسْتَبْشِرُوْنَ‏ மகிழ்ச்சியடைகின்றனர்
9:124. வ இதா மா உன்Zஜிலத் ஸூரதுன் Fபமின்ஹும் மய் யகூலு அய்யுகும் Zஜாதத் ஹு ஹாதிஹீ ஈமானா; Fப அம்மல் லதீன ஆமனூ FபZஜாதத் ஹும் ஈமான(ன்)வ் வ ஹும் யஸ்தBப்ஷிரூன்
9:124. ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், “இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?” என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.
9:125
9:125 وَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰى رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ‏
وَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்களில் مَّرَضٌ ஒரு நோய் فَزَادَتْهُمْ அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு رِجْسًا ஒரு அசுத்தத்தை اِلٰى رِجْسِهِمْ அவர்களுடைய அசுத்தத்துடன் وَمَاتُوْا இன்னும் இறந்தனர் وَهُمْ كٰفِرُوْنَ‏ நிராகரிப்பாளர்களாகவே
9:125. வ அம்மல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் FபZஜாதத் ஹும் ரிஜ்ஸன் இலா ரிஜ்ஸிஹிம் வ மாதூ வ ஹும் காFபிரூன்
9:125. ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது; அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.
9:126
9:126 اَوَلَا يَرَوْنَ اَنَّهُمْ يُفْتَـنُوْنَ فِىْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوْبُوْنَ وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ‏
اَوَلَا يَرَوْنَ அல்லதுபார்க்கவில்லையா اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் يُفْتَـنُوْنَ சோதிக்கப்படுகின்றனர் فِىْ كُلِّ ஒவ்வொன்றில் عَامٍ ஆண்டு مَّرَّةً ஒரு முறை اَوْ அல்லது مَرَّتَيْنِ இரு முறைகள் ثُمَّ பிறகு لَا يَتُوْبُوْنَ அவர்கள் திருந்தவில்லை وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ‏ இன்னும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை
9:126. 'அ வலா யரவ்ன அன்னஹும் யுFப்தனூன Fபீ குல்லி 'ஆமின் மர்ரதன் 'அவ் மர்ரதய்னி தும்ம லா யதூBபூன வலா ஹும் யத்தக்கரூன்
9:126. ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்” என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை;(அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
9:127
9:127 وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍؕ هَلْ يَرٰٮكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْا‌ ؕ صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ‏
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ இறக்கப்பட்டால் سُوْرَةٌ ஓர் அத்தியாயம் نَّظَرَ பார்க்கிறார்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اِلٰى بَعْضٍؕ هَلْ சிலரின் பக்கம்/? يَرٰٮكُمْ பார்க்கின்றனர்/ உங்களை مِّنْ اَحَدٍ ثُمَّ ஒருவரும்/பின்னர் انْصَرَفُوْا‌ ؕ திரும்பி விடுகின்றனர் صَرَفَ திருப்பி விட்டான் اللّٰهُ அல்லாஹ் قُلُوْبَهُمْ உள்ளங்களை/அவர்களுடைய بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَوْمٌ மக்களாக لَّا يَفْقَهُوْنَ‏ அறியமாட்டார்கள்
9:127. வ இதா மா உன்Zஜிலத் ஸூரதுன் னளர Bபஃளுஹும் இலா Bபஃளின் ஹல் யராகும் மின் அஹதின் தும்மன் ஸரFபூ; ஸரFபல் லாஹு குலூBபஹும் Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
9:127. யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: “உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?” என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.
9:128
9:128 لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏
لَـقَدْ جَآءَ வந்து விட்டார் كُمْ உங்களிடம் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْ اَنْفُسِكُمْ உங்களிலிருந்தே عَزِيْزٌ கடினமானது عَلَيْهِ அவர் மீது مَا عَنِتُّمْ நீங்கள் சிரமப்படுவது حَرِيْصٌ பேராசையுடையவர் عَلَيْكُمْ உங்கள் மீது بِالْمُؤْمِنِيْنَ மீது/ நம்பிக்கையாளர்கள் رَءُوْفٌ பெரும் இரக்கமுள்ளவர் رَّحِيْمٌ‏ பெரும் கருணையுள்ளவர்
9:128. லகத் ஜா'அகும் ரஸூலும் மின் அன்Fபுஸிகும் 'அZஜீZஜுன் 'அலய்ஹி மா 'அனித்தும் ஹரீஸுன் 'அலய்கும் Bபில்மு'மினீன ர'ஊFபுர் ரஹீம்
9:128. (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
9:129
9:129 فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِىَ اللّٰهُ ۖ  لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ‌ ؕ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
فَاِنْ تَوَلَّوْا அவர்கள் திரும்பினால் فَقُلْ கூறுவீராக حَسْبِىَ اللّٰهُ  அல்லாஹ் எனக்குப் போதுமானவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ ؕ தவிர/அவனை عَلَيْهِ அவன் மீதே تَوَكَّلْتُ‌ ؕ நான் நம்பிக்கை வைத்து விட்டேன் وَهُوَ رَبُّ அவன் அதிபதி الْعَرْشِ அர்ஷின் الْعَظِيْمِ‏ மகத்தானது
9:129. Fப இன் தவல்லவ் Fபகுல் ஹஸ்Bபியல் லாஹு லா இலாஹ இல்லா ஹுவ 'அலய்ஹி தவக்க்கல்து வ ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் 'அளீம்
9:129. (நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!