டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 102. ஸூரத்துத் தகாஸுர்(பேராசை)
மக்கீ, வசனங்கள்: 8
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
102:1 اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ
اَلْهٰٮكُمُ உங்களை ஈடுபடுத்தியது التَّكَاثُرُۙ அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல்
102:1. அல் ஹாகு முத் தகதுர்
102:1. (செல்வத்தையும் மக்களையும்) ஒருவருக்கொருவர் அதிகமாகத் தேடிக்கொள்வது உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராமுகமாக்கிவிட்டது.
102:2 حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ
حَتّٰى زُرْتُمُ நீங்கள் சந்திக்கின்ற வரை الْمَقَابِرَؕ புதை குழிகளை
102:2. ஹத்த Zஜுர்துமுல்-மகாBபிர்
102:2. நீங்கள் மண்ணறை (கப்ரு)களைச் சந்திக்கும் வரை.
102:3 كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ
كَلَّا அவ்வாறல்ல سَوْفَ تَعْلَمُوْنَۙ (விரைவில்) அறிவீர்கள்
102:3. கல்லா ஸவ்Fப தஃலமூன்
102:3. அவ்வாறில்லை! விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
102:4 ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ
ثُمَّ பிறகு كَلَّا அவ்வாறல்ல سَوْفَ تَعْلَمُوْنَؕ (விரைவில்) அறிவீர்கள்
102:4. தும்ம கல்லா ஸவ்Fப தஃலமூன்
102:4. பின்னர், அவ்வாறல்ல! விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
102:5 كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ
كَلَّا அவ்வாறல்ல لَوْ تَعْلَمُوْنَ நீங்கள் அறிந்தால் عِلْمَ الْيَقِيْنِؕ மிக உறுதியாக அறிவது
102:5. கல்லா லவ் தஃலமூன 'இல்மல் யகீன்
102:5. அவ்வாறல்ல! உறுதியான அறிவைக் கொண்டு அறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராமுகமாக்காது).
102:6 لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ
لَتَرَوُنَّ நிச்சயமாகப் பார்ப்பீர்கள் الْجَحِيْمَۙ ஜஹீம் நரகத்தை
102:6. லதர-வுன் னல் ஜஹீம்
102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
102:7 ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ
ثُمَّ பிறகு لَتَرَوُنَّهَا அதை நிச்சயமாகப் பார்ப்பீர்கள் عَيْنَ الْيَقِيْنِۙ கண்கூடாக
102:7. தும்ம லதர வுன்னஹா 'அய்னல் யகீன்
102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
102:8 ثُمَّ لَـتُسْــٴَــلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ النَّعِيْمِ
ثُمَّ பிறகு لَـتُسْــٴَــلُنَّ நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள் يَوْمَٮِٕذٍ அந்நாளில் عَنِ النَّعِيْمِ அருட்கொடையைப் பற்றி
102:8. தும்ம லதுஸ் அலுன்ன யவ்ம-இதின் 'அனின் ன'ஈம்
102:8. பின்னர், அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட்கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.