74. ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)
மக்கீ, வசனங்கள்: 56

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
74:1
74:1 يٰۤاَيُّهَا الْمُدَّثِّرُۙ‏
يٰۤاَيُّهَا الْمُدَّثِّرُۙ‏ போர்வை போர்த்தியவரே!
74:1. யா அய்யுஹல் முத்தத்திர்
74:1. (போர்வை) போர்த்திக்கொண்டு இருப்பவரே!
74:2
74:2 قُمْ فَاَنْذِرْۙ‏
قُمْ எழுவீராக! فَاَنْذِرْۙ‏ எச்சரிப்பீராக!
74:2. கும் Fப அன்திர்
74:2. நீர் எழுந்து (மக்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
74:3
74:3 وَرَبَّكَ فَكَبِّرْۙ‏
وَرَبَّكَ இன்னும் உமது இறைவனை فَكَبِّرْۙ‏ பெருமைப்படுத்துவீராக!
74:3. வ ரBப்Bபக FபகBப்Bபிர்
74:3. மேலும், உம் இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!
74:4
74:4 وَثِيَابَكَ فَطَهِّرْۙ‏
وَثِيَابَكَ இன்னும் உமது ஆடையை فَطَهِّرْۙ‏ சுத்தப்படுத்துவீராக!
74:4. வ தியாBபக Fபதஹ்ஹிர்
74:4. உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக்கொள்வீராக!
74:5
74:5 وَالرُّجْزَ فَاهْجُرْۙ‏
وَالرُّجْزَ சிலைகளை فَاهْجُرْۙ‏ விட்டு விலகுவீராக!
74:5. வர்ருஜ்Zஜ Fபஹ்ஜுர்
74:5. அன்றியும், அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக!
74:6
74:6 وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُۙ‏
وَلَا تَمْنُنْ சொல்லிக் காண்பிக்காதீர்! تَسْتَكْثِرُۙ‏ நீர் பெரிதாக கருதி(யவராக)
74:6. வ லா தம்னுன் தஸ்தக்திர்
74:6. பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து அதிகமாகப் பெறக்கருதி உபகாரம் செய்யாதீர்!
74:7
74:7 وَ لِرَبِّكَ فَاصْبِرْؕ‏
وَ لِرَبِّكَ இன்னும் உமது இறைவனுக்காக فَاصْبِرْؕ‏ நீர் பொறுமையாக இருப்பீராக!
74:7. வ லி ரBப்Bபிக Fபஸ்Bபிர்
74:7. இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக!
74:8
74:8 فَاِذَا نُقِرَ فِى النَّاقُوْرِۙ‏
فَاِذَا نُقِرَ ஊதப்பட்டால் فِى النَّاقُوْرِۙ‏ எக்காளத்தில்
74:8. Fப இதா னுகிர Fபின் னாகூர்
74:8. மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது,
74:9
74:9 فَذٰلِكَ يَوْمَٮِٕذٍ يَّوْمٌ عَسِيْرٌۙ‏
فَذٰلِكَ அது يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّوْمٌ ஒரு நாள் عَسِيْرٌۙ‏ மிக சிரமமான
74:9. Fபதாலிக யவ்ம 'இதி(ன்)ய் யவ்முன் 'அஸீர்
74:9. அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.
74:10
74:10 عَلَى الْكٰفِرِيْنَ غَيْرُ يَسِيْرٍ‏
عَلَى الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு غَيْرُ يَسِيْرٍ‏ இலகுவானதல்ல
74:10. 'அலல் காFபிரீன கய்ரு யஸீர்
74:10. நிராகரிப்பாளர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.
74:11
74:11 ذَرْنِىْ وَمَنْ خَلَقْتُ وَحِيْدًا ۙ‏
ذَرْنِىْ என்னை(யும்) விட்டு விடுவீராக! وَمَنْ இன்னும் எவனை خَلَقْتُ படைத்தேனோ وَحِيْدًا ۙ‏ தனியாக
74:11. தர்னீ வ மன் கலக்து வஹீதா
74:11. என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.
74:12
74:12 وَّجَعَلْتُ لَهٗ مَالًا مَّمْدُوْدًا ۙ‏
وَّجَعَلْتُ இன்னும் ஏற்படுத்திக் கொடுத்தேன் لَهٗ அவனுக்கு مَالًا செல்வத்தை مَّمْدُوْدًا ۙ‏ விசாலமான
74:12. வ ஜ'அல்து லஹூ மாலம் மம்தூதா
74:12. இன்னும், அவனுக்கு ஏராளமான செல்வத்தையும் கொடுத்தேன்.
74:13
74:13 وَّبَنِيْنَ شُهُوْدًا ۙ‏
وَّبَنِيْنَ இன்னும் ஆண் பிள்ளைகளை شُهُوْدًا ۙ‏ ஆஜராகி இருக்கக் கூடிய(வர்கள்)
74:13. வ Bபனீன ஷுஹூதா
74:13. அவனுடன் இருக்கக்கூடிய புதல்வர்களையும் (கொடுத்தேன்).
74:14
74:14 وَّمَهَّدْتُّ لَهٗ تَمْهِيْدًا ۙ‏
وَّمَهَّدْتُّ இன்னும் வசதிகளை ஏற்படுத்தினோம் لَهٗ அவனுக்கு تَمْهِيْدًا ۙ‏ மிகுந்த வசதிகளை
74:14. வ மஹ்ஹத்து லஹூ தம்ஹீதா
74:14. இன்னும், அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்து வைத்தேன்.
74:15
74:15 ثُمَّ يَطْمَعُ اَنْ اَزِيْدَ  ۙ‏
ثُمَّ பிறகு يَطْمَعُ ஆசைப்படுகின்றான் اَنْ اَزِيْدَ  ۙ‏ நான் அதிகப்படுத்த வேண்டுமென்று
74:15. தும்ம யத் ம'உ அன் அZஜீத்
74:15. பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
74:16
74:16 كَلَّا ؕ اِنَّهٗ كَانَ لِاٰيٰتِنَا عَنِيْدًا ؕ‏
كَلَّا ؕ அவ்வாறல்ல اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் لِاٰيٰتِنَا நமது வசனங்களுக்கு عَنِيْدًا ؕ‏ முரண்படக்கூடியவனாக
74:16. கல்லா இன்னஹூ கான லி ஆயாதினா 'அனீதா
74:16. அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.
74:17
74:17 سَاُرْهِقُهٗ صَعُوْدًا ؕ‏
سَاُرْهِقُهٗ விரைவில் நிர்ப்பந்தித்து விடுவேன் صَعُوْدًا ؕ‏ மிகப் பெரிய சிரமத்திற்கு
74:17. ஸ உர்ஹிகுஹூ ஸ'ஊதா
74:17. விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தில் ஏற்றுவேன்.
74:18
74:18 اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَۙ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் فَكَّرَ யோசித்தான் وَقَدَّرَۙ‏ இன்னும் திட்டமிட்டான்
74:18. இன்னஹூ Fபக்கர வ கத்தர்
74:18. நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்தான்; இன்னும், முடிவெடுத்தான்.
74:19
74:19 فَقُتِلَ كَيْفَ قَدَّرَۙ‏
فَقُتِلَ அவன் அழியட்டும் كَيْفَ எப்படி قَدَّرَۙ‏ திட்டமிட்டான்
74:19. Fபகுதில கய்Fப கத்தர்
74:19. அவன் அழிவானாக! எப்படி அவன் முடிவெடுத்தான்?
74:20
74:20 ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَۙ‏
ثُمَّ பிறகு قُتِلَ அவன் அழியட்டும் كَيْفَ எப்படி قَدَّرَۙ‏ திட்டமிட்டான்
74:20. தும்ம குதில கய்Fப கத்தர்
74:20. பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் முடிவெடுத்தான்?
74:21
74:21 ثُمَّ نَظَرَۙ‏
ثُمَّ பிறகு نَظَرَۙ‏ தாமதித்தான்
74:21. தும்ம னளர்
74:21. பிறகு, (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.
74:22
74:22 ثُمَّ عَبَسَ وَبَسَرَۙ‏
ثُمَّ பிறகு عَبَسَ முகம் சுளித்தான் وَبَسَرَۙ‏ இன்னும் கடுகடுத்தான்
74:22. தும்ம 'அBபஸ வ Bபஸர்
74:22. பின்னர், (அது பற்றிக் குறைகூற இயலாதவனாக) கடுகடுத்தான்; இன்னும், (முகம்) சுளித்தான்.
74:23
74:23 ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَۙ‏
ثُمَّ பிறகு اَدْبَرَ புறக்கணித்தான் وَاسْتَكْبَرَۙ‏ இன்னும் பெருமையடித்தான்
74:23. தும்மா அத்Bபர வஸ்தக்Bபர்
74:23. அதன் பின்னர், (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும், பெருமை கொண்டான்.
74:24
74:24 فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ يُّؤْثَرُۙ‏
فَقَالَ அவன் கூறினான் اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا தவிர سِحْرٌ சூனியமே يُّؤْثَرُۙ‏ கற்றுக்கொள்ளப்பட்ட
74:24. Fபகால இன் ஹாதா இல்லா ஸிஹ்ரு(ன்)ய் யு'தர்
74:24. அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை."
74:25
74:25 اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِؕ‏
اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا தவிர قَوْلُ சொல்லே الْبَشَرِؕ‏ மனிதர்களின்
74:25. இன் ஹாதா இல்லா கவ்லுல் Bபஷர்
74:25. "இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்).
74:26
74:26 سَاُصْلِيْهِ سَقَرَ‏
سَاُصْلِيْهِ سَقَرَ‏ நான் விரைவில் பொசுக்குவேன்/அவனை/சகர்
74:26. ஸ உஸ்லீஹி ஸகர்
74:26. அவனை நான் சகர் (என்னும்) நரகில் புகச்செய்வேன்.
74:27
74:27 وَمَاۤ اَدْرٰٮكَ مَا سَقَرُؕ‏
وَمَاۤ اَدْرٰٮكَ உமக்குத் தெரியுமா? مَا سَقَرُؕ‏ சகர் என்றால் என்ன
74:27. வ மா அத்ராக மா ஸகர்
74:27. சகர் என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்?
74:28
74:28 لَا تُبْقِىْ وَ لَا تَذَرُ‌ۚ‏
لَا تُبْقِىْ வாழவைக்காது وَ لَا تَذَرُ‌ۚ‏ இன்னும் விட்டுவிடாது
74:28. லா துBப்கீ வலா ததர்
74:28. அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டுவிடவும் செய்யாது.
74:29
74:29 لَـوَّاحَةٌ لِّلْبَشَرِ‌ۖ‌ۚ‏
لَـوَّاحَةٌ கரித்துவிடும் لِّلْبَشَرِ‌ۖ‌ۚ‏ தோல்களை
74:29. லவ்வாஹதுல் லில்Bபஷர்
74:29. (அது) மனிதர்களை (எரித்துத் தோலை) மாற்றிவிடும்.
74:30
74:30 عَلَيْهَا تِسْعَةَ عَشَرَؕ‏
عَلَيْهَا அதன் மீது تِسْعَةَ عَشَرَؕ‏ பத்தொன்பது வானவர்கள்
74:30. 'அலய்ஹா திஸ்'அத 'அஷர்
74:30. அதன்மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
74:31
74:31 وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓٮِٕكَةً‌ وَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا ۙ لِيَسْتَيْقِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَيَزْدَادَ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِيْمَانًا‌ وَّلَا يَرْتَابَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَ‌ۙ وَلِيَقُوْلَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ‌ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ ‌ؕ وَمَا يَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ‌ؕ وَمَا هِىَ اِلَّا ذِكْرٰى لِلْبَشَرِ
وَمَا جَعَلْنَاۤ நாம் ஆக்கவில்லை اَصْحٰبَ النَّارِ நரகத்தின் காவலாளிகளை اِلَّا தவிர مَلٰٓٮِٕكَةً‌ வானவர்களாக وَّمَا جَعَلْنَا இன்னும் நாம் ஆக்கவில்லை عِدَّتَهُمْ அவர்களின் எண்ணிக்கையை اِلَّا தவிர فِتْنَةً ஒரு குழப்பமாகவே لِّلَّذِيْنَ كَفَرُوْا ۙ நிராகரித்தவர்களுக்கு لِيَسْتَيْقِنَ உறுதி கொள்ளவேண்டும் என்பதற்காக(வும்) الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ வேதம் கொடுக்கப்பட்டவர்கள் وَيَزْدَادَ அதிகரிப்பதற்காகவும் الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கை கொண்டவர்கள் اِيْمَانًا‌ நம்பிக்கையால் وَّلَا يَرْتَابَ சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ வேதம் கொடுக்கப்பட்டவர்களும் وَالْمُؤْمِنُوْنَ‌ۙ நம்பிக்கையாளர்களும் وَلِيَقُوْلَ கூறுவதற்காகவும் الَّذِيْنَ எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் وَّالْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்களும் مَاذَاۤ என்ன اَرَادَ நாடுகின்றான் اللّٰهُ அல்லாஹ் بِهٰذَا இதன் மூலம் مَثَلًا ؕ உதாரணத்தை كَذٰلِكَ இவ்வாறுதான் يُضِلُّ வழிகெடுக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவர்களை وَيَهْدِىْ நேர்வழி செலுத்துகின்றான் مَنْ يَّشَآءُ ؕ தான் நாடுகின்றவர்களை وَمَا يَعْلَمُ அறிய மாட்டார்(கள்) جُنُوْدَ இராணுவங்களை رَبِّكَ உமது இறைவனின் اِلَّا தவிர هُوَ ؕ அவனை وَمَا இல்லை هِىَ இது اِلَّا தவிர ذِكْرٰى ஒரு நினைவூட்டலே لِلْبَشَرِ‏ மனிதர்களுக்கு
74:31. வ மாஜ'அல்னா அஸ்-ஹாBபன் னாரி இல்லா மலா 'இகத(ன்)வ் வமா ஜ'அல்னா 'இத்ததஹும் இல்லா Fபித்னதல் லில்லதீன கFபரூ லியஸ்தய்கினல் லதீன ஊதுல் கிதாBப வ யZஜ்தாதல் லதீன ஆமனூ ஈமான(ன்)வ் வலா யர்தாBபல் லதீன ஊதுல் கிதாBப வல்மு'மினூன வ லியகூலல் லதீன Fபீ குலூ Bபிஹிம் மரளு(ன்)வ் வல்காFபிரூன மாதா அராதல் லாஹு Bபிஹாதா மதலா; கதாலிக யுளில்லுல் லாஹு மய் யஷா'உ வ யஹ்தீ மய் யஷா'; வமா யஃலமு ஜுனூத ரBப்Bபிக இல்லா ஹூ; வமா ஹிய இல்லா திக்ரா லில் Bபஷர்
74:31. அன்றியும், நரகக் காவலாளிகளை வானவர்கள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; நிராகரித்தவர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் உறுதிகொள்வதற்கும், நம்பிக்கைகொண்டவர்கள் நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வதற்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும், எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும், நிராகரிப்பாளர்களும் "அல்லாஹ் (பத்தொன்பது எனும்) இந்த (எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" எனக் கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்); இவ்வாறே அல்லாஹ், தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும், தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும், உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர (மற்றெவரும்) அறியமாட்டார்கள்; அது (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு (நினைவூட்டும்) உபதேசமேயன்றி வேறில்லை.
74:32
74:32 كَلَّا وَالْقَمَرِۙ‏
كَلَّا அவ்வாறல்ல وَالْقَمَرِۙ‏ சந்திரன் மீது சத்தியமாக!
74:32. கல்லா வல்கமர்
74:32. (ஸகர் என்னும் நரகம் நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல; இன்னும், சந்திரன்மீது சத்தியமாக!
74:33
74:33 وَالَّيْلِ اِذْ اَدْبَرَۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذْ اَدْبَرَۙ‏ அது முடியும் போது!
74:33. வல்லய்லி இத் அத்Bபர்
74:33. இரவின் மீது சத்தியமாக! அது பின்னோக்கிச் செல்லும் பொழுது -
74:34
74:34 وَالصُّبْحِ اِذَاۤ اَسْفَرَۙ‏
وَالصُّبْحِ அதிகாலை மீது சத்தியமாக اِذَاۤ اَسْفَرَۙ‏ அது ஒளி வீசும் போது!
74:34. வஸ்ஸுBப் ஹி இதா அஸ்Fபர்
74:34. விடியற் காலையின் மீது சத்தியமாக! அது வெளிச்சமாகும் பொழுது-
74:35
74:35 اِنَّهَا لَاِحْدَى الْكُبَرِۙ‏
اِنَّهَا நிச்சயமாக அது لَاِحْدَى الْكُبَرِۙ‏ மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்
74:35. இன்னஹா ல இஹ்தல் குBபர்
74:35. நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.
74:36
74:36 نَذِيْرًا لِّلْبَشَرِۙ‏
نَذِيْرًا எச்சரிக்கை செய்யக்கூடியதாகும் لِّلْبَشَرِۙ‏ மனிதர்களுக்கு
74:36. னதீரல் லில்Bபஷர்
74:36. (அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது.
74:37
74:37 لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ يَّتَقَدَّمَ اَوْ يَتَاَخَّرَؕ‏
لِمَنْ யார் شَآءَ நாடினாரோ مِنْكُمْ உங்களில் اَنْ يَّتَقَدَّمَ முன்னேறுவதற்கு اَوْ அல்லது يَتَاَخَّرَؕ‏ பின் தங்கிவிடுவதற்கு
74:37. லிமன் ஷா'அ மின்கும் அ(ன்)ய் யதகத்தம அவ் யத அக்கர்
74:37. உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).
74:38
74:38 كُلُّ نَفْسٍ ۢ بِمَا كَسَبَتْ رَهِيْنَةٌ ۙ‏
كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ۢ ஆன்மாவும் بِمَا كَسَبَتْ தான் செய்ததற்காக رَهِيْنَةٌ ۙ‏ பிடிக்கப்படும்
74:38. குல்லு னFப்ஸிம் Bபிம கஸBபத் ரஹீனஹ்
74:38. ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பிணையாக்கப்பட்டுள்ளான்.
74:39
74:39 اِلَّاۤ اَصْحٰبَ الْيَمِيْنِۛ ؕ‏
اِلَّاۤ اَصْحٰبَ الْيَمِيْنِۛ ؕ‏ வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர
74:39. இல்லா அஸ் ஹாBபல் யமீன்
74:39. வலப்புறத்தாரைத் தவிர.
74:40
74:40 فِىْ جَنّٰتٍ ۛ يَتَسَآءَلُوْنَۙ‏
فِىْ جَنّٰتٍ ۛ சொர்க்கங்களில் يَتَسَآءَلُوْنَۙ‏ தங்களுக்குள் கேட்டுக்கொள்வார்கள்
74:40. Fபீ ஜன்னாதி(ன்)ய் யத ஸா'அலூன்
74:40. (அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்.
74:41
74:41 عَنِ الْمُجْرِمِيْنَۙ‏
عَنِ الْمُجْرِمِيْنَۙ‏ பாவிகளைப் பற்றி
74:41. 'அனில் முஜ்ரிமீன்
74:41. குற்றவாளிகளைக் குறித்து
74:42
74:42 مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ‏
مَا سَلَـكَكُمْ உங்களை நுழைத்தது எது? فِىْ سَقَرَ‏ சகர் நரகத்தில்
74:42. மா ஸலககும் Fபீ ஸகர்
74:42. "உங்களை சகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)
74:43
74:43 قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் لَمْ نَكُ நாங்கள் இருக்கவில்லை مِنَ الْمُصَلِّيْنَۙ‏ தொழுகையாளிகளில்
74:43. காலூ லம் னகு மினல் முஸல்லீன்
74:43. அவர்கள் (பதில்) கூறுவார்கள்: "தொழுபவர்களில் நாங்கள் இருக்கவில்லை."
74:44
74:44 وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ‏
وَلَمْ نَكُ இன்னும் நாங்கள் இருக்கவில்லை نُطْعِمُ உணவளிப்பவர்களாக الْمِسْكِيْنَۙ‏ ஏழைகளுக்கு
74:44. வ லம் னகு னுத்'இமுல் மிஸ்கீன்
74:44. "அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை."
74:45
74:45 وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ‏
وَكُنَّا நாங்கள் இருந்தோம் نَخُوْضُ ஈடுபடுபவர்களாக مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ‏ வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன்
74:45. வ குன்னா னகூளு ம'அல் கா'இளீன்
74:45. (வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
74:46
74:46 وَ كُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّيْنِۙ‏
وَ كُنَّا நாங்கள் இருந்தோம் نُكَذِّبُ பொய்ப்பிப்பவர்களாக بِيَوْمِ நாளை الدِّيْنِۙ‏ கூலி
74:46. வ குன்னா னுகத்திBபு Bபி யவ்மித் தீன்
74:46. "இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்."
74:47
74:47 حَتّٰٓى اَتٰٮنَا الْيَقِيْنُؕ‏
حَتّٰٓى இறுதியாக اَتٰٮنَا எங்களுக்கு வந்தது الْيَقِيْنُؕ‏ மரணம்
74:47. ஹத்தா அதானல் யகீன்
74:47. "எங்களுக்கு (மரணம் எனும்) உறுதி வரும் வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).
74:48
74:48 فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشّٰفِعِيْنَؕ‏
فَمَا تَنْفَعُهُمْ அவர்களுக்கு பலனளிக்காது شَفَاعَةُ பரிந்துரை الشّٰفِعِيْنَؕ‏ பரிந்துரை செய்பவர்களின்
74:48. Fபமா தன்Fப'உஹும் ஷFபா'அதுஷ் ஷாFபி'ஈன்
74:48. ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்தச் சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
74:49
74:49 فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِيْنَۙ‏
فَمَا لَهُمْ அவர்களுக்கு என்ன ஆனது عَنِ التَّذْكِرَةِ இந்த அறிவுரையை விட்டு مُعْرِضِيْنَۙ‏ புறக்கணித்து செல்கிறார்கள்
74:49. Fபமா லஹும் 'அனித்தத்கிரதி முஃரிளீன்
74:49. உபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
74:50
74:50 كَاَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنْفِرَةٌ ۙ‏
كَاَنَّهُمْ போல்/அவர்கள் حُمُرٌ கழுதைகளை مُّسْتَنْفِرَةٌ ۙ‏ பயந்துபோன
74:50. க அன்னஹும் ஹுமுரும் முஸ்தன்Fபிரஹ்
74:50. அவர்கள் வெருண்டு ஓடும் (காட்டுக்) கழுதைகளைப் போல்
74:51
74:51 فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ ؕ‏
فَرَّتْ விரண்டோடுகின்ற(து) مِنْ قَسْوَرَةٍ ؕ‏ சிங்கத்தைப் பார்த்து
74:51. Fபர்ரத் மின் கஸ்வரஹ்
74:51. (அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதைபோல் இருக்கின்றனர்).
74:52
74:52 بَلْ يُرِيْدُ كُلُّ امْرِىٴٍ مِّنْهُمْ اَنْ يُّؤْتٰى صُحُفًا مُّنَشَّرَةً ۙ‏
بَلْ மாறாக يُرِيْدُ நாடுகின்றனர் كُلُّ امْرِىٴٍ ஒவ்வொரு மனிதனும் مِّنْهُمْ அவர்களில் اَنْ يُّؤْتٰى தனக்கு தரப்பட வேண்டும் என்று صُحُفًا ஏடுகள் مُّنَشَّرَةً ۙ‏ விரிக்கப்பட்ட
74:52. Bபல் யுரீது குல்லும் ரி'இம் மின்ஹும் அ(ன்)ய் யு'தா ஸுஹுFபம் முனஷ்ஷரஹ்
74:52. ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும், விரிக்கப்பட்ட ஏடுகள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.
74:53
74:53 كَلَّا ‌ؕ بَلْ لَّا يَخَافُوْنَ الْاٰخِرَةَ ؕ‏
كَلَّا ؕ அவ்வாறல்ல بَلْ மாறாக لَّا يَخَافُوْنَ அவர்கள் பயப்படுவதில்லை الْاٰخِرَةَ ؕ‏ மறுமையை
74:53. கல்லா Bபல் லா யகாFபூனல் ஆகிரஹ்
74:53. அவ்வாறில்லை! மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.
74:54
74:54 كَلَّاۤ اِنَّهٗ تَذْكِرَةٌ‌ ۚ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّهٗ நிச்சயமாக இது تَذْكِرَةٌ‌ ۚ‏ ஒரு நல்லுபதேசமாகும்
74:54. கல்லா இன்னஹூ தத்கிரஹ்
74:54. அப்படியல்ல! நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
74:55
74:55 فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ؕ‏
فَمَنْ شَآءَ யார் நாடுகின்றாரோ ذَكَرَهٗ ؕ‏ இதன் மூலம் உபதேசம் பெறுவார்
74:55. Fப மன் ஷா'அ தகரஹ்
74:55. (எனவே, நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ, அவர் இதை நினைவில் வைத்துக்கொள்ளட்டும்.
74:56
74:56 وَمَا يَذْكُرُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ‌ ؕ هُوَ اَهْلُ التَّقْوٰى وَاَهْلُ الْمَغْفِرَةِ
وَمَا يَذْكُرُوْنَ اِلَّاۤ உபதேசம் பெறமாட்டார்கள்/தவிர اَنْ يَّشَآءَ اللّٰهُ‌ ؕ அல்லாஹ் நாடினால் هُوَ அவன்தான் اَهْلُ التَّقْوٰى அஞ்சுவதற்கு(ம்) மிகத் தகுதியானவன் وَاَهْلُ الْمَغْفِرَةِ‏ மன்னிப்பதற்கும் மிகத் தகுதியானவன்
74:56. வமா யத்குரூன இல்லா அ(ன்)ய் யஷா'அல் லாஹ்; ஹுவ அஹ்லுத் தக்வா வ அஹ்லுல் மக்Fபிரஹ்
74:56. இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் படிப்பினை பெற முடியாது; (நீங்கள்) அஞ்சிக்கொள்வதற்கு அவனே உரியவன்; அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.