86. ஸூரத்துத் தாரிஃக்(விடிவெள்ளி)
மக்கீ, வசனங்கள்: 17

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
86:1
86:1 وَالسَّمَآءِ وَالطَّارِقِۙ‏
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக وَالطَّارِقِۙ‏ ‘தாரிக்’கின் மீது சத்தியமாக
86:1. வஸ்ஸமா'இ வத்தாரிக்
86:1. வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
86:2
86:2 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الطَّارِقُۙ‏
وَمَاۤ இன்னும் எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) الطَّارِقُۙ‏ தாரிக்
86:2. வ மா அத்ராக மத்தாரிக்
86:2. தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
86:3
86:3 النَّجْمُ الثَّاقِبُۙ‏
النَّجْمُ நட்சத்திரம் الثَّاقِبُۙ‏ மின்னக்கூடிய
86:3. அன்னஜ்முத் தாகிBப்
86:3. அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
86:4
86:4 اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌؕ‏
اِنْ இல்லை كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மாவும் لَّمَّا தவிர عَلَيْهَا அதன் மீது حَافِظٌؕ‏ ஒரு காவலர்
86:4. இன் குல்லு னFப்ஸில் லம்மா 'அலய்ஹா ஹாFபிள்
86:4. ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
86:5
86:5 فَلْيَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَؕ‏
فَلْيَنْظُرِ ஆகவே பார்க்கட்டும் الْاِنْسَانُ மனிதன் مِمَّ எதிலிருந்து خُلِقَؕ‏ படைக்கப்பட்டான்
86:5. Fபல் யன்ளுரில் இன்ஸானு மிம்ம குலிக்
86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
86:6
86:6 خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍۙ‏
خُلِقَ படைக்கப்பட்டான் مِنْ مَّآءٍ தண்ணீரிலிருந்து دَافِقٍۙ‏ வேகமாக ஊற்றப்படக்கூடிய
86:6. குலிக மிம் மா'இன் தாFபிக்
86:6. குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
86:7
86:7 يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَآٮِٕبِؕ‏
يَّخْرُجُ அது வெளியேறுகிறது مِنْۢ بَيْنِ மத்தியிலிருந்து الصُّلْبِ முதுகந்தண்டுக்கும் وَالتَّرَآٮِٕبِؕ‏ நெஞ்செலும்புகளுக்கும்
86:7. யக்ருஜு மிம் Bபய்னிஸ்ஸுல்Bபி வத் தரா'இBப்
86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
86:8
86:8 اِنَّهٗ عَلٰى رَجْعِهٖ لَقَادِرٌؕ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلٰى رَجْعِهٖ அவனை மீட்பதற்கு لَقَادِرٌؕ‏ ஆற்றல் மிக்கவனே
86:8. இன்னஹூ 'அலா ரஜ்'இஹீ லகாதிர்
86:8. இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
86:9
86:9 يَوْمَ تُبْلَى السَّرَآٮِٕرُۙ‏
يَوْمَ நாளில் تُبْلَى சோதிக்கப்படுகின்ற السَّرَآٮِٕرُۙ‏ இரகசியங்கள்
86:9. யவ்ம துBப்லஸ் ஸரா'இர்
86:9. இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
86:10
86:10 فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍؕ‏
فَمَا ஆகவே இல்லை لَهٗ அவனுக்கு مِنْ قُوَّةٍ எந்த சக்தியும் وَّلَا نَاصِرٍؕ‏ இன்னும் எந்த உதவியாளரும் இல்லை
86:10. Fபமா லஹூ மின் குவ்வதி(ன்)வ் வலா னாஸிர்
86:10. மனிதனுக்கு எந்த பலமும் இராது; (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
86:11
86:11 وَالسَّمَآءِ ذَاتِ الرَّجْعِۙ‏
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக ذَاتِ الرَّجْعِۙ‏ மழைபொழியும்
86:11. வஸ்ஸமா'இ தாதிர் ரஜ்'
86:11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
86:12
86:12 وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِۙ‏
وَالْاَرْضِ பூமியின் மீது சத்தியமாக ذَاتِ الصَّدْعِۙ‏ தாவரங்களை முளைப்பிக்கும்
86:12. வல் அர்ளி தாதிஸ் ஸத்'
86:12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
86:13
86:13 اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌۙ‏
اِنَّهٗ நிச்சயமாக இது لَقَوْلٌ கூற்றுதான் فَصْلٌۙ‏ பிரித்தறிவிக்கக்கூடிய
86:13. இன்னஹூ லகவ்லுன் Fபஸ்ல்
86:13. நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
86:14
86:14 وَّمَا هُوَ بِالْهَزْلِؕ‏
وَّمَا هُوَ இன்னும் இது இல்லை بِالْهَزْلِؕ‏ விளையாட்டாக
86:14. வமா ஹுவ Bபில் ஹZஜ்ல்
86:14. அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
86:15
86:15 اِنَّهُمْ يَكِيْدُوْنَ كَيْدًا ۙ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் يَكِيْدُوْنَ சூழ்ச்சி செய்கிறார்கள் كَيْدًا ۙ‏ சூழ்ச்சிதான்
86:15. இன்னஹும் யகீதூன கய்தா
86:15. நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
86:16
86:16 وَّاَكِيْدُ كَيْدًا ۚۖ‏
وَّاَكِيْدُ இன்னும் சூழ்ச்சி செய்கிறேன் كَيْدًا ۚۖ‏ சூழ்ச்சிதான்
86:16. வ அகீது கய்தா
86:16. நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
86:17
86:17 فَمَهِّلِ الْكٰفِرِيْنَ اَمْهِلْهُمْ رُوَيْدًا
فَمَهِّلِ ஆகவே அவகாசமளிப்பீராக الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு اَمْهِلْهُمْ அவர்களுக்கு அவகாசம் அளிப்பீராக رُوَيْدًا‏ கொஞ்சம்
86:17. Fபமஹ்ஹிலில் காFபிரீன அம்ஹில்ஹும் ருவய்தா
86:17. எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.