டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 88. ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)
மக்கீ, வசனங்கள்: 26
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
88:1 هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْغَاشِيَةِؕ
هَلْ اَتٰٮكَ உமக்கு வந்ததா? حَدِيْثُ செய்தி الْغَاشِيَةِؕ சூழக்கூடியதின்
88:1. ஹல் அதாக ஹதீதுல் காஷியஹ்
88:1. சூழ்ந்துகொள்வதின் (மறுமை நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
88:2 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ خَاشِعَةٌ ۙ
وُجُوْهٌ முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் خَاشِعَةٌ ۙ இழிவடையும்
88:2. வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதின் காஷி'அஹ்
88:2. அந்நாளில் சில முகங்கள் பணிவுடனிருக்கும்.
88:3 عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ
عَامِلَةٌ அனுபவிக்கும் نَّاصِبَةٌ ۙ களைப்படையும்
88:3. 'ஆமிலதுன் னாஸிBபஹ்
88:3. அவை (தவறான காரியங்களை நல்லவை எனக் கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
88:4 تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ
تَصْلٰى பற்றி எரியும் نَارًا நெருப்பில் حَامِيَةً ۙ கடுமையாக எரியக்கூடிய
88:4. தஸ்லா னாரன் ஹாமியஹ்
88:4. கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் அவை புகும்.
88:5 تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍؕ
تُسْقٰى புகட்டப்படும் مِنْ இருந்து عَيْنٍ ஊற்று اٰنِيَةٍؕ கொதிக்கக்கூடிய
88:5. துஸ்கா மின் 'அய்னின் ஆனியஹ்
88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து (அவர்களுக்கு நீர்) புகட்டப்படும்.
88:6 لَـيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ
لَـيْسَ இல்லை لَهُمْ அவர்களுக்கு طَعَامٌ உணவு اِلَّا தவிர مِنْ ضَرِيْعٍۙ விஷச் செடியிலிருந்து
88:6. லய்ஸ லஹும் த'ஆமுன் இல்லா மின் ளரீ'
88:6. அவர்களுக்கு முட்செடிகளைத் தவிர வேறு உணவில்லை.
88:7 لَّا يُسْمِنُ وَلَا يُغْنِىْ مِنْ جُوْعٍؕ
لَّا يُسْمِنُ கொழுக்க வைக்காது وَلَا يُغْنِىْ இன்னும் போக்காது مِنْ جُوْعٍؕ பசியை
88:7. லா யுஸ்மினு வலா யுக்னீ மின் ஜூ'
88:7. அது அவர்களைக் கொழுத்துச் செழிக்கவும் வைக்காது; அன்றியும், பசியையும் தணிக்காது.
88:8 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاعِمَةٌ ۙ
وُجُوْهٌ முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் نَّاعِمَةٌ ۙ இன்புற்றிருக்கும்
88:8. வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதின் னா'இமஹ்
88:8. அந்நாளில், சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
88:9 لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ
لِّسَعْيِهَا தன் செயலுக்காக رَاضِيَةٌ ۙ திருப்தியடைந்திருக்கும்
88:9. லிஸஃயிஹா ராளியஹ்
88:9. தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
88:10 فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ
فِىْ جَنَّةٍ சொர்க்கத்தில் عَالِيَةٍۙ உயர்வான
88:10. Fபீ ஜன்னதின் 'ஆலியஹ்
88:10. உன்னதமான சுவர்க்கச் சோலையில்
88:11 لَّا تَسْمَعُ فِيْهَا لَاغِيَةً ؕ
لَّا تَسْمَعُ செவியுறாது فِيْهَا அதில் لَاغِيَةً ؕ வீண் பேச்சை
88:11. லா தஸ்ம'உ Fபீஹா லாகியஹ்
88:11. அதில் வீணானதை அவை செவியுறுவதில்லை.
88:12 فِيْهَا عَيْنٌ جَارِيَةٌ ۘ
فِيْهَا அதில் இருக்கும் عَيْنٌ ஊற்று جَارِيَةٌ ۘ ஓடக்கூடிய
88:12. Fபீஹா 'அய்னுன் ஜாரியஹ்
88:12. அதில் ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
88:13 فِيْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۙ
فِيْهَا அதில் இருக்கும் سُرُرٌ கட்டில்கள் مَّرْفُوْعَةٌ ۙ உயர்வான
88:13. Fபீஹா ஸுருரும் மர்Fபூ'அஹ்
88:13. அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
88:14 وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۙ
وَّاَكْوَابٌ இன்னும் குவளைகள் مَّوْضُوْعَةٌ ۙ (நிரப்பி) வைக்கப்பட்ட
88:14. வ அக்வாBபும் மவ்ளூ'அஹ்
88:14. (அருந்தக்) குவளைகளும் வைக்கப்பட்டிருக்கும்.
88:15 وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۙ
وَّنَمَارِقُ இன்னும் தலையணைகள் مَصْفُوْفَةٌ ۙ வரிசையாக வைக்கப்பட்ட
88:15. வ னமாரிகு மஸ்FபூFபஹ்
88:15. மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும் (தலையணைகள்)
88:16 وَّزَرَابِىُّ مَبْثُوْثَةٌ ؕ
وَّزَرَابِىُّ இன்னும் உயர்ரக விரிப்புகள் مَبْثُوْثَةٌ ؕ விரிக்கப்பட்ட
88:16. வ ZஜராBபிய்யு மBப்தூதஹ்
88:16. விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
88:17 اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِ بِلِ كَيْفَ خُلِقَتْ
اَفَلَا يَنْظُرُوْنَ பார்க்கமாட்டார்களா? اِلَى பக்கம் الْاِ بِلِ ஒட்டகத்தின் كَيْفَ எவ்வாறு خُلِقَتْ அது படைக்கப்பட்டுள்ளது
88:17. அFபலா யன்ளுரூன இலலிBபிலி கய்Fப குலிகத்
88:17. (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று.
88:18 وَاِلَى السَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
وَاِلَى இன்னும் பக்கம் السَّمَآءِ வானத்தின் كَيْفَ எவ்வாறு رُفِعَتْ அது உயர்த்தப்பட்டுள்ளது
88:18. வ இலஸ் ஸமா'இ கய்Fப ருFபி'அத்
88:18. மேலும், வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? (என்றும்.)
88:19 وَاِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
وَاِلَى இன்னும் பக்கம் الْجِبَالِ மலைகளின் كَيْفَ எவ்வாறு نُصِبَتْ அது நிறுவப்பட்டுள்ளது
88:19. வ இலல் ஜிBபாலி கய்Fப னுஸிBபத்
88:19. இன்னும், மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? (என்றும்)
88:20 وَاِلَى الْاَرْضِ كَيْفَ سُطِحَتْ
وَاِلَى இன்னும் பக்கம் الْاَرْضِ பூமியின் كَيْفَ எவ்வாறு سُطِحَتْ அது விரிக்கப்பட்டுள்ளது
88:20. வ இலல் அர்ளி கய்Fப ஸுதிஹத்
88:20. இன்னும், பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
88:21 فَذَكِّرْ ؕ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ؕ
فَذَكِّرْ ؕ ஆகவே, அறிவுரை கூறுவீராக اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் مُذَكِّرٌ ؕ அறிவுரை கூறுபவர்தான்
88:21. Fபதக்கிர் இன்னம அன்த முதக்கிர்
88:21. ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) உபதேசம் செய்வீராக! நிச்சயமாக நீர் உபதேசம் செய்பவர்தாம்.
88:22 لَـسْتَ عَلَيْهِمْ بِمُصَۜيْطِرٍۙ
لَـسْتَ நீர் இல்லை عَلَيْهِمْ அவர்களை بِمُصَۜيْطِرٍۙ நிர்ப்பந்திப்பவராக
88:22. லஸ்த 'அலய்ஹிம் Bபிமுஸய்திர்
88:22. அவர்கள் மீது நீர் பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
88:23 اِلَّا مَنْ تَوَلّٰى وَكَفَرَۙ
اِلَّا எனினும் مَنْ யார் تَوَلّٰى விலகினாரோ وَكَفَرَۙ இன்னும் நிராகரித்தாரோ
88:23. இல்லா மன் தவல்லா வ கFபர்
88:23. ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ -
88:24 فَيُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَؕ
فَيُعَذِّبُهُ அவரை வேதனைசெய்வான் اللّٰهُ அல்லாஹ் الْعَذَابَ வேதனையால் الْاَكْبَرَؕ மிகப்பெரும்
88:24. Fப யு'அத்திBபுஹுல் லாஹுல் 'அதாBபல் அக்Bபர்
88:24. அவனை அல்லாஹ் மிகப்பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
88:25 اِنَّ اِلَيْنَاۤ اِيَابَهُمْۙ
اِنَّ நிச்சயமாக اِلَيْنَاۤ நம் பக்கம்தான் اِيَابَهُمْۙ அவர்களின் திரும்புதல்
88:25. இன்னா இலய்னா இயாBபஹும்
88:25. நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீட்பு இருக்கிறது.
88:26 ثُمَّ اِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ
ثُمَّ பிறகு اِنَّ عَلَيْنَا நிச்சயமாக நம்மீதே حِسَابَهُمْ அவர்களை விசாரிப்பது
88:26. தும்ம இன்ன 'அலய்னா ஹிஸாBபஹும்
88:26. பின்னர், நிச்சயமாக அவர்களின் கேள்விக் கணக்கும் நம்மீதே இருக்கிறது.