104. ஸூரத்துல் ஹுமஜா(புறங்கூறல்)
மக்கீ, வசனங்கள்: 9
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
104:1 وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ
وَيْلٌ கேடுதான் لِّـكُلِّ எல்லோருக்கும் هُمَزَةٍ புறம் பேசுபவர் لُّمَزَةِ ۙ குறை கூறுபவர்
104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
104:1. குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
104:1. (மக்களை நேருக்கு நேர்) இழித்துரைத்துக் கொண்டும், (முதுகுக்குப் பின்) குறை கூறிக் கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.
104:1. (பிறரைக்) குறைகூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்.
104:2 اۨلَّذِىْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۙ
اۨلَّذِىْ எவன் جَمَعَ சேகரித்தான் مَالًا செல்வத்தை وَّعَدَّدَهٗ ۙ இன்னும் அதை எண்ணி எண்ணிப் பார்த்தான்
104:2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
104:2. பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்,
104:2. அவன் பொருளைச் சேகரிக்கின்றான்.
104:2. இத்தகையவன் பொருளைச் சேகரித்து அதனை எண்ணி வைத்துக்கொண்டும் இருந்தான்.
104:3 يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ ۚ
يَحْسَبُ கருதுகிறான் اَنَّ مَالَهٗۤ நிச்சயமாக தன் செல்வம் اَخْلَدَهٗ ۚ தன்னை நிரந்தரமாக்கும்
104:3. நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
104:3. தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்.
104:3. மேலும் அதனை எண்ணி எண்ணி வைக்கின்றான். அவன் கருதுகின்றான், தன்னுடைய பொருள் தன்னிடம் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று!
104:3. நிச்சயமாக, தன் பொருள் தன்னை (என்றென்னும் உலகில்) நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணுகிறான்.
104:4 كَلَّا لَيُنْۢبَذَنَّ فِى الْحُطَمَةِؗۖ
كَلَّا அவ்வாறல்ல لَيُنْۢبَذَنَّ நிச்சயமாக எறியப்படுவான் فِى الْحُطَمَةِؗۖ ஹூதமாவில்
104:4. அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
104:4. அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.
104:4. அவ்வாறன்று! சிதைத்துச் சின்னாபின்னமாக்குகின்ற ஓரிடத்தில் அவன் வீசியெறியப்படுவான்.
104:4. (பொருளைச் சேகரித்து வைத்துக்கொண்டு உலகில் அவனை நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணியிருந்தானே) அவ்வாறன்று! (அல்லாஹ்வின் மீது சத்தியமாக) ஹூதமாவில் அவன் எறியப்படுவான்.
104:5 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحُطَمَةُ ؕ
وَمَاۤ எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்னவென்று الْحُطَمَةُ ؕ ஹூதமா
104:5. ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
104:5. (நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா?
104:5. மேலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா என்ன?
104:5. (நபியே!) “ஹூதமா” என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
104:6 نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۙ
نَارُ நெருப்பு اللّٰهِ அல்லாஹ்வுடைய الْمُوْقَدَةُ ۙ எரிக்கப்பட்ட
104:6. அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
104:6. (அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.
104:6. அது அல்லாஹ்வின் நெருப்பு; அதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கின்றது;
104:6. எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் (நரக) நெருப்பு.
104:7 الَّتِىْ تَطَّلِعُ عَلَى الْاَفْـــِٕدَةِ ؕ
الَّتِىْ அது تَطَّلِعُ எட்டிப் பார்க்கும் عَلَى الْاَفْـــِٕدَةِ ؕ உள்ளங்களில்
104:7. அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
104:7. (அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்.
104:7. இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது;
104:7. அது எத்தகையதென்றால், (தேகத்தில் பட்டவுடன்) இதயங்கள் மீது சென்றடையும், (காரணம் இதயங்கள் தான் தீய கொள்கைகளுக்கு இருப்பிடமாக இருந்தது)
104:8 اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌ ۙ
اِنَّهَا நிச்சயமாக அது عَلَيْهِمْ அவர்கள் மீது مُّؤْصَدَةٌ ۙ மூடப்படும்
104:8. நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
104:8,9,8. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
104:8. நிச்சயமாக அதனால் அவர்கள் சூழப்பட்டு மூடப்படுவார்கள்.
104:8. நிச்சயமாக அது அவர்களின் மீது (சூழ்ந்து) மூடப்பட்டதாய் இருக்கும்.
104:9 فِىْ عَمَدٍ مُّمَدَّدَةٍ
فِىْ عَمَدٍ தூண்களில் مُّمَدَّدَةٍ உயரமான
104:9. நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
104:8,9,9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
104:9. உயர உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்பட்ட நிலையில்).
104:9. நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டிருப்பார்கள்).