106. ஸூரத்து குறைஷின்(குறைஷிகள்)
மக்கீ, வசனங்கள்: 4

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
106:1
106:1 لِاِيْلٰفِ قُرَيْشٍۙ‏
لِاِيْلٰفِ விருப்பத்தை ஏற்படுத்தியதால் قُرَيْشٍۙ‏ குறைஷிகளுக்கு
106:1. குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
106:1. குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி,
106:1. குறைஷிகள் நன்கு பழக்கப்பட்டுவிட்டார்கள்.
106:1. குரைஷியர்களுக்கு (பிரயாணத்தில்) விருப்பமுண்டாக்குவதற்காக,
106:2
106:2 اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّيْفِ‌ۚ‏
اٖلٰفِهِمْ அவர்களுக்கு விருப்பமாக்கியதால் رِحْلَةَ பயணத்தை الشِّتَآءِ குளிர்காலம் وَالصَّيْفِ‌ۚ‏ இன்னும் கோடைகாலம்
106:2. மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
106:2. குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக,
106:2. (அதாவது) குளிர்கால மற்றும் கோடைகாலப் பயணங்களில் நன்கு பழக்கப்பட்டு விட்டார்கள்.
106:2. மாரிகால, கோடைகால பிரயாணத்தில் அவர்களுக்கு விருப்பமுண்டாக்குவதற்காக (யானைப்படையினரை அழித்து கஃபாவை அல்லாஹ் காப்பாற்றினான்).
106:3
106:3 فَلْيَـعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِۙ‏
فَلْيَـعْبُدُوْا அவர்கள் வணங்கவும் رَبَّ அதிபதியை هٰذَا இந்த الْبَيْتِۙ‏ கஅபாவின்
106:3. இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
106:3. (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும்.
106:3. எனவே அவர்கள் இந்த இல்லத்தின் அதிபதியை அடிபணிந்து வணங்கட்டும்.
106:3. எனவே (கஅபாவாகிய) இவ்வீட்டின் இரட்சகனையே அவர்கள் வணங்குவார்களாக!
106:4
106:4 الَّذِىْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ   ۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ‏
الَّذِىْۤ எவன் اَطْعَمَهُمْ அவர்களுக்கு உணவளித்தான் مِّنْ جُوْعٍ பசிக்கு   ۙ وَّاٰمَنَهُمْ இன்னும் அவர்களுக்கு அபயமளித்தான் مِّنْ خَوْفٍ‏ பயத்திலிருந்து
106:4. அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
106:4. அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்.
106:4. அவனோ அவர்களைப் பசியிலிருந்து காப்பாற்றி உண்ணக் கொடுத்தான். மேலும், அச்சத்திலிருந்து அவர்களை மீட்டு அமைதியை வழங்கினான்.
106:4. அவன் எத்தகையவனென்றால், (இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) பசிக்கு அவர்களுக்கு உணவளித்தான், மேலும், அவர்களுக்கு (பிறரால் ஏற்பட்டுக்கொண்டிருந்த) பயத்திலிருந்து அவன் அபயமளித்தான்.