112. ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)
மக்கீ, வசனங்கள்: 4

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
112:1
112:1 قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏
قُلْ கூறுவீராக هُوَ அவன் اللّٰهُ அல்லாஹ் اَحَدٌ‌ ۚ‏ ஒருவன்
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:1. (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
112:1. கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,
112:1. (நபியே!) நீர் கூறுவீராக அவன் “அல்லாஹ்” ஒருவனே!
112:2
112:2 اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏
اَللّٰهُ அல்லாஹ் الصَّمَدُ‌ ۚ‏ தலைவன்
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:2. (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். (அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!)
112:2. அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!).
112:3
112:3 لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
لَمْ يَلِدْ   ۙ அவன் பெற்றெடுக்கவில்லை وَلَمْ يُوْلَدْ ۙ‏ இன்னும் பெற்றெடுக்கப்படவுமில்லை
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
112:3. அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
112:3. அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை.
112:4
112:4 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
وَلَمْ يَكُنْ இன்னும் இல்லை لَّهٗ அவனுக்கு كُفُوًا நிகராக اَحَدٌ‏ ஒருவரும்
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
112:4. (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை.
112:4. மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
112:4. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.