12. ஸூரத்து யூஸுஃப்
மக்கீ, வசனங்கள்: 111
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
12:1 الٓرٰ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْن
الٓرٰ அலிஃப், லாம், றா تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْكِتٰبِ வேதம் الْمُبِيْن தெளிவான(து)
12:1. அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
12:1. அலிஃப் லாம் றா. இவை (-இந்த அத்தியாயம்) தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
12:1. அலிஃப் லாம் றா. இவை (தனது கருத்தைத்) தெளிவாக விவரிக்கும் வேதத்தின் வசனங்களாகும்.
12:1. அலிப் லாம் றா. இவை தெளிவான (இவ்)வேதத்தின் வசனங்களாகும்.
12:2 اِنَّاۤ اَنْزَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் قُرْءٰنًا குர்ஆனாக عَرَبِيًّا அரபி لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
12:2. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.
12:2. (அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே அரபி மொழியில் இறக்கி வைத்தோம்.
12:2. இதனை (அரபிகளாகிய) நீங்கள் நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு குர்ஆனாக அரபிமொழியில் திண்ணமாக நாம் இறக்கிவைத்துள்ளோம்.
12:2. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபி மொழியிலான குர் ஆனாக நிச்சயமாக நாம் இறக்கி வைத்தோம்.
12:3 نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَ ۖ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِيْنَ
نَحْنُ நாம் نَقُصُّ விவரிக்கிறோம் عَلَيْكَ உமக்கு اَحْسَنَ மிக அழகானதை الْقَصَصِ சரித்திரங்களில் بِمَاۤ اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்ததன் மூலம் اِلَيْكَ உமக்கு هٰذَا الْقُرْاٰنَ இந்த குர்ஆனை ۖ وَاِنْ كُنْتَ நிச்சயமாக இருந்தீர் مِنْ قَبْلِهٖ இதற்கு முன்னர் لَمِنَ الْغٰفِلِيْنَ அறியாதவர்களில்
12:3. (நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.
12:3. (நபியே!) வஹ்யி மூலம் நாம் உமக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உமக்கு நாம் விவரிக்கிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் இதை அறியாதவராகவே இருந்தீர்.
12:3. (நபியே!) நாம் இந்தக் குர்ஆனை உமக்கு வஹி மூலம் அருளி, சம்பவங்களையும் உண்மை நிலைகளையும் மிக அழகிய முறையில் உமக்கு எடுத்துரைக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் (இவற்றைப் பற்றி) எதுவும் அறியாதிருந்தீர்.
12:3. (நபியே!) இந்தக் குர் ஆனை நாம் உமக்கு அறிவித்திருப்பதின் மூலம் மிக்க அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகிறோம், இதற்கு முன்னர் நிச்சயமாக (இதனைப்பற்றி) அறியாதவர்களில் (ஒருவராக) நீர் இருந்தீர்.
12:4 اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ
اِذْ சமயம் قَالَ கூறினார் يُوْسُفُ யூஸுஃப் لِاَبِيْهِ தன் தந்தைக்கு يٰۤاَبَتِ என் தந்தையே اِنِّىْ நிச்சயமாக நான் رَاَيْتُ கனவில் கண்டேன் اَحَدَ عَشَرَ பதினொரு كَوْكَبًا நட்சத்திரத்தை وَّالشَّمْسَ இன்னும் சூரியன் وَالْقَمَرَ இன்னும் சந்திரன் رَاَيْتُهُمْ அவற்றை நான் கனவில் கண்டேன் لِىْ எனக்கு سٰجِدِيْنَ சிரம் பணியக்கூடியவையாக
12:4. யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.
12:4. யூஸுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்'' என்று கூறிய சமயத்தில்,
12:4. இதனை நினைவுகூர்வீராக: யூஸுஃப் தன் தந்தையிடம், “என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் சந்திரனையும் நான் கனவில் கண்டேன்; அக்கனவில் அவை என் முன் தாழ்ந்து பணிந்து கொண்டிருப்பதாகவும் கண்டேன்!” என்று கூறினார்.
12:4. யூஸுஃப் தன் தந்தையிடம் “என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களையும் சூரியனையும், சந்திரனையும் நிச்சயமாக நான் (கனவில்) கண்டேன், எனக்குச் சிரம் பணிபவையாக அவற்றை நான் கண்டேன்” என்று கூறிய சமயத்தில்,
12:5 قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا ؕ اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ
قَالَ கூறினார் يٰبُنَىَّ என்னருமை மகனே لَا تَقْصُصْ விவரிக்காதே رُءْيَاكَ உன் கனவை عَلٰٓى اِخْوَتِكَ உன் சகோதரர்களிடம் فَيَكِيْدُوْا சூழ்ச்சி செய்வார்கள் لَـكَ உனக்கு كَيْدًا ؕ ஒரு சூழ்ச்சியை اِنَّ الشَّيْطٰنَ நிச்சயமாக ஷைத்தான் لِلْاِنْسَانِ மனிதனுக்கு عَدُوٌّ எதிரி مُّبِيْنٌ பகிரங்கமான(வன்)
12:5. “என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.
12:5. (யஅகூப் நபி யூஸுஃபை நோக்கி) ‘‘என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக் கூடும்)'' என்று கூறினார்.
12:5. அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “என் அருமை மகனே! உனது கனவை உன் சகோதரர்களிடம் கூறிவிடாதே! அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு எதிராக சதி செய்ய முற்படுவார்கள். திண்ணமாக, ஷைத்தான் மனிதனின் வெளிப்படையான பகைவனாவான்.
12:5. “என் அருமை மகனே! நீர் கண்ட கனவை உம் சகோதரர்களிடம் சொல்லிக்காட்ட வேண்டாம், (அவ்வாறு செய்தால்) அவர்கள் உமக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். (ஏனெனில்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான விரோதியாக இருக்கிறான்” என்று (யஃகூப் நபியாகிய) அவர் கூறினார்.
12:6 وَكَذٰلِكَ يَجْتَبِيْكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ وَيُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَعَلٰٓى اٰلِ يَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰٓى اَبَوَيْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبَّكَ عَلِيْمٌ حَكِيْمٌ
وَكَذٰلِكَ இவ்வாறே يَجْتَبِيْكَ தேர்ந்தெடுப்பான்/உன்னை رَبُّكَ உன் இறைவன் وَيُعَلِّمُكَ இன்னும் கற்பிப்பான்/ உனக்கு مِنْ تَاْوِيْلِ விளக்கத்திலிருந்து الْاَحَادِيْثِ பேச்சுகளின் وَيُتِمُّ இன்னும் முழுமையாக்குவான் نِعْمَتَهٗ அவன் தன் அருளை عَلَيْكَ உம்மீது وَعَلٰٓى இன்னும் மீது اٰلِ கிளையார் يَعْقُوْبَ யஃகூபின் كَمَاۤ போன்று اَتَمَّهَا عَلٰٓى முழுமைப்படுத்தினான்/அதை/மீது اَبَوَيْكَ உன்இருபாட்டன்கள் مِنْ قَبْلُ முன்னர் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْحٰقَ ؕ இன்னும் இஸ்ஹாக் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உன் இறைவன் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ மகா ஞானவான்
12:6. இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
12:6. மேலும், ‘‘(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஅகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்றாஹீம், இஸ்ஹாக் ஆகிய உன் இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' (என்றும் கூறினார்).
12:6. மேலும், இ(க்கனவில் நீ கண்ட)து போன்றே நடைபெறும். உன் அதிபதி உன்னைத் (தனது பணிக்காக) தேர்ந்தெடுப்பான். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்துகொள்ளும் முறையை உனக்குக் கற்றுத் தருவான். இதற்கு முன்னர் உன் மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உன் மீதும், யஃகூபின் குடும்பத்தினர் மீதும் நிறைவு செய்வான். திண்ணமாக, உன் இறைவன் நன்கறிந்தவனும், நுண்ணறிவாளனும் ஆவான்.”
12:6. மேலும், “(நீர் கனவில் கண்ட) அவ்வாறே உமதிரட்சகன் உம்மைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கங்களையும் உமக்குக் கற்றுக் கொடுத்து இதற்கு முன்னர் இப்றாஹீம், இஷ்ஹாக் (ஆகிய உம்முடைய இரு மூதாதையர் மீதும் (தம் அருளாகிய) அதனைப் பூர்த்தியாக்கி வைத்தவாரே உம் மீதும், யஃகூபின் (மற்ற) குடும்பத்தினர் மீதும் அவன் தன் அருளைப் பூர்த்தியாக்கி வைப்பான், நிச்சயமாக உமதிரட்சகன் (யாவற்றையும்) நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்” (என்றும் கூறினார்.)
12:7 لَقَدْ كَانَ فِىْ يُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰيٰتٌ لِّـلسَّآٮِٕلِيْنَ
لَقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கின்றன فِىْ يُوْسُفَ யூஸுஃபில் وَاِخْوَتِهٖۤ இன்னும் அவரது சகோதரர்கள் اٰيٰتٌ அத்தாட்சிகள் لِّـلسَّآٮِٕلِيْنَ வினவுகின்றவர்களுக்கு
12:7. நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
12:7. (நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
12:7. யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாறு பற்றிக் கேட்பவர்களுக்கு அதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன.
12:7. (நபியே!) நிச்சயமாக யூஸுஃபின் சரித்திரத்திலும் அவரது சகோதரர்களின் சரித்திரத்திலும் வினவுகின்றவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
12:8 اِذْ قَالُوْا لَيُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰٓى اَبِيْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ؕ اِنَّ اَبَانَا لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنِ ۖ ۚ
اِذْ சமயம் قَالُوْا கூறினர் لَيُوْسُفُ திட்டமாக யூஸுஃபு وَاَخُوْهُ இன்னும் அவருடையசகோதரர் اَحَبُّ அதிகப் பிரியமுள்ளவர்(கள்) اِلٰٓى اَبِيْنَا நம் தந்தைக்கு مِنَّا நம்மைவிட وَنَحْنُ நாம் عُصْبَةٌ ؕ ஒரு கூட்டமாக اِنَّ நிச்சயமாக اَبَانَا நம் தந்தை لَفِىْ ضَلٰلٍ தவறில்தான் مُّبِيْنِ ۖ ۚ பகிரங்கமானது
12:8. (யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
12:8. (யஅகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்'' என்றும்,
12:8. (இந்த வரலாறு இப்படித் தொடங்குகின்றது:) அவருடைய சகோதரர்கள் தமக்கிடையே கூறினார்கள்: “யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம்மைவிட நம் தந்தைக்கு மிகப் பிரியமானவர்களாய் இருக்கின்றனர். ஆயினும், நாம்தாமே அதிக எண்ணிக்கையுள்ள ஒரு குழுவாக இருக்கின்றோம். திண்ணமாக, நம் தந்தை பெருந் தவறில் இருக்கின்றார்.
12:8. “நாம் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், நிச்சயமாக யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாயிருக்கின்றனர், (இதில்) நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவற்றில் இருக்கிறார்” என்று அவர்கள் கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக!)
12:9 اۨقْتُلُوْا يُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا يَّخْلُ لَـكُمْ وَجْهُ اَبِيْكُمْ وَ تَكُوْنُوْا مِنْۢ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِيْنَ
اۨقْتُلُوْا கொல்லுங்கள் يُوْسُفَ யூஸுஃபை اَوِ அல்லது اطْرَحُوْهُ எறியுங்கள்/அவரை اَرْضًا பூமியில் يَّخْلُ தனியாகிவிடும் لَـكُمْ உங்களுக்கு وَجْهُ முகம் اَبِيْكُمْ உங்கள் தந்தையின் وَ تَكُوْنُوْا இன்னும் மாறிவிடுவீர்கள் مِنْۢ بَعْدِهٖ இதன் பின்னர் قَوْمًا மக்களாக صٰلِحِيْنَ நல்லவர்கள்
12:9. “யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,
12:9. ஆகவே, ‘‘யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்தி விடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மக்களாகி விடுங்கள்'' என்றும் கூறினார்கள்.
12:9. எனவே, யூஸுஃபைக் கொன்று விடுங்கள்; அல்லது அவரை எங்காவது கொண்டுபோய் வீசி விடுங்கள்! இவ்வாறு செய்தால்தான் உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கம் மட்டும் திரும்பும். மேலும், இதன் பின்னர் நீங்கள் நல்ல மனிதர்களாகிவிடுவீர்கள்.”
12:9. “(ஆகவே) யூஸுஃபைக் கொலை செய்துவிடுங்கள், அல்லது பூமியில் எங்கேனும் எறிந்து விடுங்கள், உங்கள் தந்தையின் முகம் (கவனம்) முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும், இதன் பின்னர், நீங்கள் (அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்லவர்களான கூட்டத்தினராகிவிடுவீர்கள்” (என்று கூறினார்கள்.)
12:10 قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا يُوْسُفَ وَاَلْقُوْهُ فِىْ غَيٰبَتِ الْجُـبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ
قَالَ கூறினார் قَآٮِٕلٌ கூறுபவர் مِّنْهُمْ அவர்களில் لَا تَقْتُلُوْا கொல்லாதீர்கள் يُوْسُفَ யூஸுஃபை وَاَلْقُوْ போடுங்கள் هُ அவரை فِىْ غَيٰبَتِ ஆழத்தில் الْجُـبِّ கிணற்றின் يَلْتَقِطْهُ எடுத்துக் கொள்வார்(கள்)/அவரை بَعْضُ சிலர் السَّيَّارَةِ வழிப்போக்கர்களில் اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ நீங்கள் செய்பவர்களாக இருந்தால்
12:10. அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
12:10. (அதற்கு) அவர்களில் ஒருவர், ‘‘யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்து விடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்'' என்று கூறினார்.
12:10. அவர்களில் ஒருவர் கூறினார்: “யூஸுஃபைக் கொன்றுவிடாதீர்கள்! நீங்கள் ஏதேனும் செய்துதான் ஆகவேண்டும் என்று இருந்தால், அவரை ஆழமானதொரு கிணற்றில் போட்டுவிடுங்கள்! அவ்வழியே வந்து போகும் பயணிகளில் எவரேனும் அவரை வெளியே எடுத்துக் கொண்டு போகக்கூடும்.”
12:10. (அதற்கு) அவர்களில் (நற்போதனை) கூறக்கூடிய ஒருவர், “யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள; இன்னும், நீங்கள் (அவருக்கு ஏதும் தீமை) செய்பவர்களாக இருந்தால், ஆழமான ஒரு பாழ் கிணற்றில் அவரை போட்டு விடுங்கள்; பிரயாணிகளில் சிலர் அவரை(க் கிணற்றிலிருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
12:11 قَالُوْا يٰۤاَبَانَا مَا لَـكَ لَا تَاْمَنَّا عَلٰى يُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ
قَالُوْا கூறினர் يٰۤاَبَانَا எங்கள் தந்தையே مَا لَـكَ உனக்கென்ன நேர்ந்தது? لَا நீங்கள் நம்புவதில்லை تَاْمَنَّا எங்களை عَلٰى يُوْسُفَ யூஸுஃப் விஷயத்தில் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَهٗ அவருக்கு لَنٰصِحُوْنَ நன்மையை நாடுபவர்கள்தான்
12:11. (பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
12:11. (பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) ‘‘எங்கள் தந்தையே! என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை? நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்கள் ஆவோம்'' என்றும்,
12:11. (இந்தத் திட்டத்தின்படித் தம் தந்தையிடம் சென்று) அவர்கள் கேட்டார்கள்: “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கும் நிலையில், அவர் விஷயத்தில் நீங்கள் எங்களை நம்பாமலிருக்கக் காரணம் என்ன?
12:11. (பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து) “எங்கள் தந்தையே! யூஸுஃபை ப்பற்றி (அவர் விஷயத்தில்) நீங்கள் எங்களை நம்பாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நாங்களோ, நிச்சயமாக அவருக்கு நன்மையை நாடுபவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
12:12 اَرْسِلْهُ مَعَنَا غَدًا يَّرْتَعْ وَيَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ
اَرْسِلْهُ அவரைஅனுப்புவீராக مَعَنَا எங்களுடன் غَدًا நாளை يَّرْتَعْ மகிழ்ச்சியாகஇருப்பார் وَيَلْعَبْ இன்னும் விளையாடுவார் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَهٗ அவரை لَحٰـفِظُوْنَ பாதுகாப்பவர்கள்தான்
12:12. “நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.
12:12. ‘‘நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பிவையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்'' என்றும் கூறினார்கள்.
12:12. நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள்; அவர் உண்டு மகிழ்ந்து விளையாடட்டும்! அவரைப் பாதுகாத்திட நாங்கள் இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
12:12. “நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள், அவர் (காட்டிலுள்ள கனிகளை) நன்கு புசித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார், நிச்சயமாக, நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
12:13 قَالَ اِنِّىْ لَيَحْزُنُنِىْ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ يَّاْكُلَهُ الذِّئْبُ وَاَنْـتُمْ عَنْهُ غٰفِلُوْنَ
قَالَ கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் لَيَحْزُنُنِىْ கவலையளிக்கும்/ எனக்கு اَنْ تَذْهَبُوْا بِهٖ நீங்கள்அவரை அழைத்துச் செல்வது وَاَخَافُ இன்னும் பயப்படுகின்றேன் اَنْ يَّاْكُلَهُ அவரை தின்றுவிடுவதை الذِّئْبُ ஓநாய் وَاَنْـتُمْ நீங்கள் عَنْهُ அவரை விட்டு غٰفِلُوْنَ கவனமற்றவர்கள்
12:13. (அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
12:13. (அதற்கவர்) ‘‘நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
12:13. தந்தை கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது என்னைக் கவலையில் ஆழ்த்துகிறது. மேலும், நீங்கள் அவர் விஷயத்தில் கவனக் குறைவாக இருக்கும்போது அவரை ஓநாய் அடித்துத் தின்றுவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”
12:13. அ(தற்க)வர் “நீங்கள் அவரை (அழைத்து)க் கொண்டு செல்வது நிச்சயமாக என்னைக் கவலையடையச் செய்கிறது, நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை விட்டும் பாராமுகமானவர்களாகயிருக்கும் நிலையில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்று விடும் என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
12:14 قَالُوْا لَٮِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّاۤ اِذًا لَّخٰسِرُوْنَ
قَالُوْا கூறினர் لَٮِٕنْ اَكَلَهُ அவரை தின்றால் الذِّئْبُ ஓநாய் وَنَحْنُ நாங்கள் இருக்க عُصْبَةٌ ஒரு கூட்டமாக اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِذًا அப்போது لَّخٰسِرُوْنَ நஷ்டவாளிகள்தான்
12:14. (அதற்கு) அவர்கள் “நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்“ என்று கூறினார்கள்.
12:14. அதற்கவர்கள், ‘‘பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் அப்போது நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்'' என்று கூறி (தங்கள் தந்தையை சம்மதிக்கச் செய்த)னர்.
12:14. அதற்கு அவர்கள், “நாங்கள் ஒரு குழுவாக இருக்கும்போது அவரை ஓநாய் தின்று விடுமானால், திண்ணமாக, நாங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் அல்லவா ஆகி விடுவோம்!” என்று பதில் கூறினார்கள்.
12:14. அ(தற்க)வர்கள், “(ஆற்றல் மிக்க) ஒரு கூட்டத்தினராக நாங்கள் இருந்தும் அவரை ஓர் ஓநாய் தின்றுவிடுமானால், நிச்சயமாக நாங்கள் அப்போது நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினர்.
12:15 فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْۤا اَنْ يَّجْعَلُوْهُ فِىْ غَيٰبَتِ الْجُبِّۚ وَاَوْحَيْنَاۤ اِلَيْهِ لَـتُنَـبِّئَـنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا يَشْعُرُوْنَ
فَلَمَّا அவர்கள் சென்றனர் ذَهَبُوْا போது بِهٖ அவரைக் கொண்டு وَاَجْمَعُوْۤا ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர் اَنْ يَّجْعَلُوْهُ அவரை அவர்கள் ஆக்கிவிடவேண்டாம் فِىْ غَيٰبَتِ ஆழத்தில் الْجُبِّۚ கிணற்றின் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلَيْهِ அவருக்கு لَـتُنَـبِّئَـنَّهُمْ நிச்சயமாக அறிவிப்பீர்/அவர்களுக்கு بِاَمْرِ காரியத்தை هِمْ அவர்களுடைய هٰذَا இந்த وَهُمْ அவர்கள் لَا يَشْعُرُوْنَ உணரமாட்டார்கள்
12:15. (இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்ந்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
12:15. (யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். ‘‘அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்'' என்று நாம் யூஸுஃபுக்கு வஹ்யி அறிவித்தோம்.
12:15. (இவ்வாறு வற்புறுத்தி) அவரை அழைத்துச் சென்று, ஓர் ஆழமான கிணற்றில் போட்டுவிட வேண்டுமென அவர்கள் முடிவு செய்தார்கள். அப்போது நாம் யூஸுஃபுக்கு அறிவித்தோம்: “ஒரு காலம் வரும்; அப்போது அவர்கள் தங்களுடைய இந்தச் செயல்களின் விளைவுகளை அறியாதிருக்கும் நிலையில் நீர் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பீர்!”
12:15. ஆகவே, (யூஸுஃபாகிய) அவரை (அழைத்து)க் கொண்டு சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் ஆக்கிவிட வேண்டுமென்றே அவர்கள் ஒருமித்து முடிவு செய்தபோது, “அவர்களோ (உம்மை) அறியாதவர்களாக இருக்க அவர்களுடைய இக்காரியத்தைப்பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிவிப்பீர்” என்று (யூஸுஃபாகிய) அவருக்கு நாம் வஹீ அறிவித்தோம்.
12:16 وَجَآءُوْۤ اَبَاهُمْ عِشَآءً يَّبْكُوْنَؕ
وَجَآءُوْۤ வந்தனர் اَبَاهُمْ தம் தந்தையிடம் عِشَآءً மாலை சாய்ந்த பின் يَّبْكُوْنَؕ அழுதவர்களாக
12:16. இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.
12:16. அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுது கொண்டே வந்தனர்,
12:16. அந்தி சாயும் நேரத்தில் அழுது புலம்பிக் கொண்டு தங்கள் தந்தையிடம் அவர்கள் வந்து கூறினார்கள்:
12:16. மேலும், (அன்று) பொழுதடைந்த பின் அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதவர்களாகவே வந்தனர்.
12:17 قَالُوْا يٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِيْنَ
قَالُوْا கூறினர் يٰۤاَبَانَاۤ எங்கள் தந்தையே اِنَّا நிச்சயமாக நாங்கள் ذَهَبْنَا நாங்கள் சென்றோம் نَسْتَبِقُ அம்பெறிகிறோம் وَتَرَكْنَا இன்னும் விட்டுவிட்டோம் يُوْسُفَ யூஸுஃபை عِنْدَ مَتَاعِنَا எங்கள் பொருளிடம் فَاَكَلَهُ தின்றது/அவரை الذِّئْبُۚ ஓநாய் وَمَاۤ இல்லை اَنْتَ நீர் بِمُؤْمِنٍ நம்புபவராக لَّنَا எங்களை وَلَوْ كُنَّا நாங்கள் இருந்தாலும் صٰدِقِيْنَ உண்மையாளர்களாக
12:17. “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்.
12:17. ‘‘எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.
12:17. “எங்கள் தந்தையே! நாங்கள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தோம். யூஸுஃபை எங்கள் பொருட்களின் அருகில் விட்டிருந்தோம். திடீரென்று ஓநாய் வந்து அவரைத் தின்றுவிட்டது; (இப்போது) நாங்கள் உண்மை சொல்பவர்களாய் இருந்தாலும் எங்களை நீங்கள் நம்பமாட்டீர்கள்.”
12:17. “எஙகள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் ஒருவரை ஒருவர்) முந்திக் கொண்டு சென்று விட்டோம், யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் நாங்கள் விட்டுவிட்டோம், அப்போது அவரை ஓநாய் (அடித்துத்) தின்று விட்டது, நாங்கள் (எவ்வளவு) உண்மையாளர்களாக இருப்பினும் நீர் எங்களை நம்பக் கூடியவர் அல்லர்” என்று கூறினார்கள்.
12:18 وَجَآءُوْ عَلٰى قَمِيـْصِهٖ بِدَمٍ كَذِبٍؕ قَالَ بَلْ سَوَّلَتْ لَـكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاؕ فَصَبْرٌ جَمِيْلٌؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ
وَجَآءُوْ இன்னும் வந்தனர் عَلٰى قَمِيـْصِهٖ அவருடைய சட்டையில் بِدَمٍ இரத்தத்தைக்கொண்டு كَذِبٍؕ பொய்யான(து) قَالَ கூறினார் بَلْ மாறாக سَوَّلَتْ அலங்கரித்தன لَـكُمْ உங்களுக்கு اَنْفُسُكُمْ உங்கள் மனங்கள் اَمْرًاؕ ஒரு காரியத்தை فَصَبْرٌ ஆகவே பொறுமை جَمِيْلٌؕ அழகியது وَاللّٰهُ அல்லாஹ் الْمُسْتَعَانُ உதவி தேடப்படுபவன் عَلٰى மீது مَا எவை تَصِفُوْنَ வருணிக்கிறீர்கள்
12:18. (மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
12:18. (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு ‘‘அவரை ஓநாய் அடித்துத் தின்னவே) இல்லை'' உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ்விடம் உதவி தேடுகிறேன்'' என்று கூறினார்கள்.
12:18. மேலும், அவர்கள் யூஸுஃபின் சட்டையில் போலி இரத்தத்தைத் தேய்த்துக் கொண்டு வந்திருந்தார்கள். இதனைக் கேட்ட அவர்களுடைய தந்தை கூறினார்: “அவ்வாறில்லை, உங்கள் மனம் ஒரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கிவிட்டது. சரி, மிக அழகிய முறையில் நான் பொறுமையை மேற்கொள்வேன். நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்.”
12:18. அன்றியும் (தங்கள் கூற்றைப் பலப்படுத்த) அவருடைய சட்டையில் (ஆட்டின் பொய்யான இரத்தத்தை(த் தோய்த்து)க் கொண்டு வந்(து காண்பித்)தார்கள், (இரத்தம் தோய்ந்த அச்சட்டை கிழியாதிருப்பதைக் கண்ட யாஃகூப் நபி) “இல்லை, உங்கள் மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டன, ஆகவே, அழகான பொறுமை(யைக்கடைப் பிடிப்பது)தான் நன்று, மேலும், நீங்கள் வர்ணிக்கின்றவற்றிலிருந்து (யூஸுஃபை இரட்சிக்க) அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன், (அவனிடமே உதவி தேடுகிறேன்)”, என்று கூறினார்.
12:19 وَجَآءَتْ سَيَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰى دَلْوَهٗ ؕ قَالَ يٰبُشْرٰى هٰذَا غُلٰمٌ ؕ وَاَسَرُّوْهُ بِضَاعَةً ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَعْمَلُوْنَ
وَجَآءَتْ வந்தது سَيَّارَةٌ ஒரு பயணக் கூட்டம் فَاَرْسَلُوْا அனுப்பினார்கள் وَارِدَهُمْ தங்களில் நீர் கொண்டு வருபவரை فَاَدْلٰى இறக்கினார் دَلْوَهٗ ؕ அவர் வாளியை قَالَ கூறினார் يٰبُشْرٰى ஆ... நற்செய்தி! هٰذَا இதோ غُلٰمٌ ؕ ஒரு சிறுவர் وَاَسَرُّوْهُ மறைத்தார்கள்/அவரை بِضَاعَةً ؕ வர்த்தகப் பொருளாக وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிபவன் بِمَا يَعْمَلُوْنَ அவர்கள் செய்வதை
12:19. பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
12:19. பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்கள் பணியாளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பினார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு ‘‘உங்களுக்கு) நற்செய்தி! இதோ (அழகிய) சிறுவர் ஒருவர்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.
12:19. (அங்கு) பயணக் கூட்டமொன்று வந்தது. அவர்கள் தங்களுக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்தவரை அனுப்பி வைத்தார்கள். அவர் (கிணற்றினுள்) தம்முடைய வாளியை விட்டதும் யூஸுஃபைக் கண்டார். உடனே, “இதோ ஒரு நற்செய்தி! இங்கு ஒரு சிறுவன் இருக்கின்றான்!” என்று (உரக்கக்) கூறினார். அவர்கள் அச்சிறுவனை வணிகப் பொருளாகக் கருதி மறைத்துக் கொண்டனர். ஆயினும், அவர்கள் செய்து வந்தவற்றை அல்லாஹ் நன்கறிந்திருந்தான்.
12:19. (பின்னர், அக்கிணற்றின் சமீபமாக) ஒரு பிரயாணக் கூட்டமும் வந்தது, தங்களது தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக) அவர்கள் அனுப்பினார்கள், அவர் தன் வாளியை (அக் கிணற்றில்) விட்டார், (யூஸுஃப் அதில் உட்கார்ந்து கொண்டார், அதைக் கண்டு “உங்களுக்கு ஓ நன்மாராயமே! இதோ ஓர் (அழகிய) சிறுவன்” என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினார், (அவரைக் கண்ணுற்ற அவர்கள், தங்கள்) வர்த்தகப் பொருளாக அவரை (ஆக்கிக் கொள்ளக் கருதி) மறைத்துக் கொண்டார்கள், மேலும், அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிகிறவன்.
12:20 وَشَرَوْهُ بِثَمَنٍۢ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ ۚ وَكَانُوْا فِيْهِ مِنَ الزّٰهِدِيْنَ
وَشَرَوْهُ விற்றார்கள்அவரை بِثَمَنٍۢ ஒரு தொகைக்குப்பகரமாக بَخْسٍ குறைவான(து) دَرَاهِمَ திர்ஹம்களுக்கு مَعْدُوْدَةٍ ۚ எண்ணப்பட்ட وَكَانُوْا இன்னும் இருந்தனர் فِيْهِ அவர் விஷயத்தில் مِنَ الزّٰهِدِيْنَ ஆசையற்றவர்களில்
12:20. (இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.
12:20. (இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து ‘‘இவன் தப்பி ஓடி வந்து விட்ட எங்கள் அடிமை'' எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்தவர்களாகவே இருந்தனர்.
12:20. இறுதியாக அவர்கள் அவரை மிக அற்ப விலைக்கு ஒரு சில வெள்ளி நாணயங்களுக்கு விற்று விட்டார்கள்! அவருக்கு விலை நிர்ணயிப்பதில் அவர்கள் அதிகம் எதிர்பார்க்காதவர்களாய் இருந்தார்கள்.
12:20. மேலும், அவரை அவர்கள் அற்பக் கிரயத்திற்கு-(விரல் விட்டு எண்ணப்படுகின்ற (சொற்ப) வெள்ளிக் காசுகளுக்கு விற்று விட்டார்கள், மேலும், அவர்கள் அதில் பற்றற்றவர்களாக இருந்தனர்.
12:21 وَقَالَ الَّذِى اشْتَرٰٮهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِىْ مَثْوٰٮهُ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا ؕ وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِوَلِنُعَلِّمَهٗ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِؕ وَاللّٰهُ غَالِبٌ عَلٰٓى اَمْرِهٖ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
وَقَالَ கூறினார் الَّذِى எவர் اشْتَرٰٮهُ விலைக்கு வாங்கினார்/அவரை مِنْ مِّصْرَ எகிப்தில் لِامْرَاَتِهٖۤ தன் மனைவிக்கு اَكْرِمِىْ நீ கண்ணியப்படுத்து مَثْوٰٮهُ தங்குமிடத்தை/இவரின் عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ அவர் பலனளிக்கலாம்/நமக்கு اَوْ نَـتَّخِذَهٗ அல்லது/ஆக்கிக்கொள்ளலாம்/அவரை وَلَدًا ؕ ஒரு பிள்ளையாக وَكَذٰلِكَ இவ்வாறுதான் مَكَّنَّا ஆதிக்கமளித்தோம் لِيُوْسُفَ யூஸுஃபுக்கு فِى الْاَرْضِ பூமியில் وَلِنُعَلِّمَهٗ இன்னும் கற்பிப்பதற்காக/அவருக்கு مِنْ تَاْوِيْلِ விளக்கத்திலிருந்து الْاَحَادِيْثِؕ செய்திகளின் وَاللّٰهُ அல்லாஹ் غَالِبٌ மிகைத்தவன் عَلٰٓى اَمْرِهٖ தன் காரியத்தில் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
12:21. (யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
12:21. (அவரை வாங்கியவர்கள், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்று விட்டனர்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி ‘‘நீ இவரை கண்ணியமாக வைத்துக்கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம் (வளர்ப்பு) மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கியானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ், தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவன் ஆவான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
12:21. அவரை விலை கொடுத்து வாங்கிய எகிப்தியர் தன் மனைவியிடம் கூறினார்: “இவரைக் கண்ணியமான முறையில் கவனித்துக்கொள்; இவர் நமக்குப் பயன்படலாம் அல்லது இவரை நாம் மகனாக ஆக்கிக் கொள்ளலாம்.” இவ்வாறு, அந்த பூமியில் காலூன்றுவதற்கான சூழ்நிலையை யூஸுஃபுக்கு நாம் ஏற்படுத்தினோம். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்து கொள்ளும் முறையை நாம் அவருக்குக் கற்றுக் கொடுப்பதற்கும் தக்க ஏற்பாடு செய்தோம். அல்லாஹ் தன் பணிகளை நிறைவேற்றியே தீருவான்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
12:21. (யூஸுஃபை வாங்கியவர் அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து விற்று விட்டார்.) எகிப்தில் அவரை வாங்கியவர் தன் மனைவியிடம், “நீ அவர் தங்குமிடத்தை கண்ணியமாக வைத்துக் கொள், அவர் நமக்குப்பயன் தரலாம், அல்லது அவரை நாம் (சுவீகாரப்) புத்திரனாக எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார், அவ்வாறே அந்த (எகிப்து) பூமியில் யூஸுஃபுக்கு நாம் இடமளித்தோம், கனவுகளின் விளக்கங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (நாம் அவருக்கு இடமளித்தோம்.) அல்லாஹ், தன் காரியத்தில் (யாவரையும்) மிகைத்தவன் எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
12:22 وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗۤ اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ
وَلَمَّا போது بَلَغَ அடைந்தார் اَشُدَّهٗۤ முழு ஆற்றல்களை/அவர் اٰتَيْنٰهُ அவருக்கு நாம் கொடுத்தோம் حُكْمًا ஞானத்தை وَّعِلْمًا ؕ கல்வியை وَكَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி தருவோம் الْمُحْسِنِيْنَ நல்லறம் புரிபவர்களுக்கு
12:22. அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.
12:22. அவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்கமுடையவர்களுக்கு இவ்வாறு தான் நாம் கூலி தருகிறோம்.
12:22. அவர் முழுமையான வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்குத் தீர்மானிக்கும் ஆற்றலையும் ஞானத்தையும் வழங்கினோம். இவ்வாறே நாம் நல்லவர்களுக்குக் கூலி வழங்குகின்றோம்.
12:22. இன்னும், அவர் தன் வாலிபத்தை அடைந்தபொழுது நாம் அவருக்கு சட்ட நுணுக்கத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி தருகிறோம்.
12:23 وَرَاوَدَتْهُ الَّتِىْ هُوَ فِىْ بَيْتِهَا عَنْ نَّـفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَـكَؕ قَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّىْۤ اَحْسَنَ مَثْوَاىَؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ
وَرَاوَدَتْهُ விருப்பத்திற்கு அழைத்தாள் / அவரை الَّتِىْ எவள் هُوَ அவர் فِىْ بَيْتِهَا அவளுடைய வீட்டில் عَنْ نَّـفْسِهٖ பலவந்தமாக وَغَلَّقَتِ இன்னும் மூடினாள் الْاَبْوَابَ கதவுகளை وَقَالَتْ இன்னும் கூறினாள் هَيْتَ لَـكَؕ வருவீராக قَالَ கூறினார் مَعَاذَ اللّٰهِ அல்லாஹ்வின் பாதுகாப்பை اِنَّهٗ நிச்சயமாக அவர் رَبِّىْۤ என் எஜமானர் اَحْسَنَ அழகுபடுத்தினார் مَثْوَاىَؕ என் தங்குமிடத்தை اِنَّهٗ நிச்சயமாக செய்தி لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்(கள்) الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள்
12:23. அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார்.
12:23. அவர் இருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை ‘வாரும்' என்றழைத்தாள். அதற்கவர், ‘‘(என்னை)அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாக! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்'' என்று கூறினார்.
12:23. அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் அவரை அடைய வலை விரித்தாள்! (ஒரு நாள்) வாயில்களை எல்லாம் அடைத்துத் தாழிட்டு விட்டு “வாரும்!” என்று அழைத்தாள். அதற்கு யூஸுஃப் கூறினார்: “அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்! திண்ணமாக என் ரப் அதிபதி எனக்கு நல்ல கண்ணியத்தை வழங்கியுள்ளான். (அப்படியிருக்க இத்தகைய இழிசெயலை நான் செய்வேனா? இத்தகைய) அக்கிரமக்காரர்கள் ஒருபோதும் வெற்றி அடைவதில்லை!”
12:23. மேலும், அவர் எவளுடைய வீட்டில் இருந்தாரோ, அவள், அவர் மீது காதல் கொண்டு, தன் விருப்பத்திற்கிணங்குமாறு எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, அவரை “வாரும்” என்றழைத்தாள், அ(தற்க)வர் “அல்லாஹ் (இத் தீய செயலிலிருந்து) காத்தருள்வானாகவும் நிச்சயமாக, என் எஜமானனாகிய(உன் கண)வர் என் தங்குமிடத்தை அழகாக்கி வைத்திருக்கிறார், நிச்சயமாக (இத்தகைய நன்மை செய்வோருக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார்.
12:24 وَلَـقَدْ هَمَّتْ بِهٖۚ وَهَمَّ بِهَا لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖؕ كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّۤوْءَ وَالْـفَحْشَآءَؕ اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِيْنَ
وَلَـقَدْ உறுதியாக هَمَّتْ நாடினாள் بِهٖۚ அவரை وَهَمَّ இன்னும் நாடினார் بِهَا அவளை لَوْلَاۤ اَنْ رَّاٰ நிச்சயமாக அவர் பார்த்திருக்கவில்லையெனில் بُرْهَانَ ஆதாரத்தை رَبِّهٖؕ தன் இறைவனின் كَذٰلِكَ இவ்வாறுதான் لِنَصْرِفَ நாம் திருப்புவதற்காக عَنْهُ அவரை விட்டு السُّۤوْءَ கெட்டதை وَالْـفَحْشَآءَ மானக்கேடானதை اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் الْمُخْلَصِيْنَ தூய்மையாக்கப் பட்டவர்கள்
12:24. ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
12:24. அவள் அவரை நடினாள்; அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் (அவர் தவறு செய்திருப்பார்). எனினும், கெட்ட செயல்களிலிருந்தும் மானக் கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம் (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
12:24. அவள் அவரை அடைய முனைந்து விட்டாள். தன் அதிபதியின் தெளிவான சான்றினை உணராதிருந்தால் அவரும் அவளை அடைய முனைந்திருப்பார்! தீமையையும் மானக்கேடானவற்றையும் அவரை விட்டு விலக்கிவிட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தோம். உண்மையிலேயே அவர் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களுள் ஒருவராவார்.
12:24. அவள் அவரை (அடைய) திடமாக ஆசை கொண்டு விட்டாள், அவர் தன் இரட்சகனுடைய சான்றைக் கண்டிராவிடில், அவரும் அவள்மீது ஆசை கொண்டே இருப்பார், தீமையையும் மானக்கேடான செயல்களையும் அவரைவிட்டும் நாம் திருப்பிவிடுவதற்காக (அவருக்கு) இவ்வாறு (எச்சரிக்கை செய்தோம்.) நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அடியார்களில் உள்ளவராவார்.
12:25 وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَيَا سَيِّدَهَا لَدَا الْبَابِؕ قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْۤءًا اِلَّاۤ اَنْ يُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِيْمٌ
وَاسْتَبَقَا இருவரும் முந்தினர் الْبَابَ வாசலிற்கு وَقَدَّتْ அவள் கிழித்தால் قَمِيْصَهٗ அவருடைய சட்டையை مِنْ دُبُرٍ பின் புறத்திலிருந்து وَّاَلْفَيَا இருவரும் பெற்றனர் سَيِّدَ கணவரை هَا அவளுடைய لَدَا الْبَابِؕ வாசலில் قَالَتْ கூறினாள் مَا இல்லை جَزَآءُ தண்டனை مَنْ எவர் اَرَادَ நாடினார் بِاَهْلِكَ உம் மனைவிக்கு سُوْۤءًا ஒரு கெட்டதை اِلَّاۤ தவிர வேறில்லை اَنْ يُّسْجَنَ அவன் சிறையிடப்படுவது اَوْ அல்லது عَذَابٌ ஒரு வேதனை اَلِيْمٌ துன்புறுத்தக் கூடியது
12:25. (யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
12:25. (யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறத்தை கிழித்துவிட்டாள். அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக் கொள்ளக் கருதி) அவரை நோக்கி ‘‘உமது மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்துகின்ற வேதனையைத் தருவதோ தவிர வேறு தண்டனை உண்டா?'' என்று கேட்டாள்.
12:25. இறுதியில் யூஸுஃபும், அவளும் (முன்னும் பின்னுமாக) வாயிலை நோக்கி ஓடினார்கள். அவள் பின்புறத்திலிருந்து அவருடைய சட்டையை (இழுத்து)க் கிழித்தாள்! அவ்வேளை வாயிலில், அவளுடைய கணவர் நிற்பதை இருவரும் கண்டார்கள். (அவரைப் பார்த்ததும்) அவள் கூறலானாள்: “உம்முடைய மனைவியிடம் தீய நோக்கத்துடன் நடந்துகொள்ள முயன்றவனுக்குத் தண்டனை என்ன? சிறையில் அடைப்பதையோ, கடும் வேதனையில் ஆழ்த்துவதையோ தவிர வேறு என்னதான் தண்டனை இருக்க முடியும்?”
12:25. (யூஸுஃப் அவளை விட்டுத் தப்பிக்க வெளியில் செல்ல ஓடினார், அவள் அவரைப் பிடிக்க இவ்வாறாக) இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசல் பக்கம் ஓடினார்கள், (யூஸுஃப், முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையை அவள் பிடித்திழுத்தாள்.) ஆகவே அவருடைய சட்டையைப் பின்புறமாக அவள் கிழித்துவிட்டாள்; (அச்சமயம்) வாசலில் அவளுடைய கணவரை இருவரும் காணப்பெற்றனர், (ஆகவே, அவள் தான் தப்பிக்க அவரிடம்) “உம்முடைய மனைவிக்குத் தீங்கை நாடியவனுக்கு அவன் சிறையிலிடப்படுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனையையோ தவிர (வேறு) என்ன தண்டனை (இருக்கக்கூடும்?) என்று கூறினாள்.
12:26 قَالَ هِىَ رَاوَدَتْنِىْ عَنْ نَّـفْسِىْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَاۚ اِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِيْنَ
قَالَ கூறினார் هِىَ அவள்தான் رَاوَدَتْنِىْ தன் விருப்பத்திற்கு அழைத்தாள்/என்னை عَنْ نَّـفْسِىْ என்னைபலவந்தமாக وَشَهِدَ இன்னும் சாட்சி கூறினார் شَاهِدٌ ஒரு சாட்சியாளர் مِّنْ இருந்து اَهْلِهَاۚ அவளுடைய குடும்பம் اِنْ كَانَ இருந்தால் قَمِيْصُهٗ அவருடைய சட்டை قُدَّ கிழிக்கப்பட்டது مِنْ قُبُلٍ முன் புறத்திலிருந்து فَصَدَقَتْ உண்மை கூறினாள் وَهُوَ அவர் مِنَ الْكٰذِبِيْنَ பொய்யர்களில்
12:26. (இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
12:26. (யூஸுஃப் அதை மறுத்து) ‘‘அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்'' என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: ‘‘அவருடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் இவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே! (ஆனால்,)
12:26. அதற்கு யூஸுஃப், “இவள்தான் தவறான வழிக்கு என்னை அழைத்தாள்!” என்று கூறினார். அவளுடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் (சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு) சாட்சியம் கூறினார்: “யூஸுஃபுடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் சொல்வதுதான் உண்மை; அவர் பொய்யராவார்!
12:26. (யூஸுஃப் அதனை மறுத்து) “அவள்தான் தன் விருப்பத்திற்கிணங்குமாறு என்னை அழைத்தாள்” என்று கூறினார், (அது சமயம்) அவளுடைய குடும்பத்திலிருந்த சாட்சியாளர் ஒருவர் (பின் வருமாறு) சாட்சி கூறினார், “அவருடைய சட்டை முன்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை சொல்கிறாள், அவரோ பொய்யர்களில் உள்ளவராவார்.
12:27 وَاِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِيْنَ
وَاِنْ كَانَ இருந்தால் قَمِيْصُهٗ அவருடைய சட்டை قُدَّ கிழிக்கப்பட்டதாக مِنْ دُبُرٍ பின் புறத்திலிருந்து فَكَذَبَتْ அவள்பொய்கூறினாள் وَهُوَ அவர் مِنَ الصّٰدِقِيْنَ உண்மையாளர்களில்
12:27. “ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”
12:27. அவருடைய சட்டைப் பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால், இவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மை கூறுபவர்தான்'' (என்றார்).
12:27. அவருடைய சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் கூறுவது பொய்; அவர் கூறுவது உண்மையாகும்!”
12:27. அன்றியும் அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால், அவள் பொய் சொல்கிறாள், அவர் உண்மையாளவர்களில் உள்ளவராவார்” என்றார்.
12:28 فَلَمَّا رَاٰ قَمِيْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَيْدِكُنَّؕ اِنَّ كَيْدَكُنَّ عَظِيْمٌ
فَلَمَّا رَاٰ அவர் பார்த்தபோது قَمِيْصَهٗ அவருடைய சட்டையை قُدَّ கிழிக்கப்பட்டதாக مِنْ دُبُرٍ பின் புறத்திலிருந்து قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக இது مِنْ كَيْدِ சதியிலிருந்து كُنَّؕ உங்கள் اِنَّ நிச்சயமாக كَيْدَكُنَّ உங்கள் சதி عَظِيْمٌ மகத்தானது
12:28. (யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
12:28. (ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) ‘‘நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியே; நிச்சயமாக உங்கள் சதி மகத்தானது'' என்று கூறி,
12:28. அவளுடைய கணவர், யூஸுஃபுடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோது கூறினார்: “திண்ணமாக, இது பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சிதான். உண்மை யாதெனில், உங்கள் சூழ்ச்சி மிகவும் அபாயகரமானதாகும்.
12:28. ஆகவே, (யூஸுஃபாகிய) அவருடைய சட்டையை – அது பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்தபோது (தன் மனைவியிடம்) “நிச்சயமாக இது பெண்களாகிய) உங்களுடைய சதியிலுள்ளதே! நிச்சயமாக உஙகளின் சதி மகத்தானது” என்று கூறினார்.
12:29 يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ وَاسْتَغْفِرِىْ لِذَنْۢبِكِ ۖ ۚ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِٮـِٕيْنَ
يُوْسُفُ யூஸுஃபே اَعْرِضْ புறக்கணிப்பீராக عَنْ هٰذَا ٚ இதை விட்டு وَاسْتَغْفِرِىْ இன்னும் மன்னிப்புத் தேடு لِذَنْۢبِكِ ۖ ۚ நீ உன் பாவத்திற்கு اِنَّكِ நிச்சயமாக நீ كُنْتِ இருக்கிறாய் مِنَ الْخٰطِٮـِٕيْنَ தவறிழைத்தவர்களில்
12:29. (என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.
12:29. (யூஸுஃபை நோக்கி) ‘‘யூஸுஃபே! நீர் இதை இத்துடன் விட்டுவிடுவீராக. (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்'' என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) ‘‘நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்'' (என்று கூறினார்.)
12:29. யூஸுஃபே! இதனைப் பொருட்படுத்தாதீர்!” பிறகு (தன் மனைவியை நோக்கி), “உனது குற்றத்திற்காக நீ மன்னிப்புத் தேடிக்கொள்! ஏனெனில் நீதான் உண்மையில் தவறிழைத்திருக்கின்றாய்!”
12:29. (யூஸுஃபிடம்,) ”யூஸுஃபே! நீர் இதனை விட்டும் புறக்கணித்து விடும் (என்று கூறி மீண்டும் அவளிடம்,) நீ உன் பாவத்திற்கு மன்னிப்புத் தேடிக்கொள், நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் இருக்கிறாய்” என்று (அவளது கணவராகிய) அவர் கூறினார் .
12:30 وَقَالَ نِسْوَةٌ فِى الْمَدِيْنَةِ امْرَاَتُ الْعَزِيْزِ تُرَاوِدُ فَتٰٮهَا عَنْ نَّـفْسِهٖۚ قَدْ شَغَفَهَا حُبًّا ؕ اِنَّا لَـنَرٰٮهَا فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
وَقَالَ கூறினர் نِسْوَةٌ பெண்கள் فِى الْمَدِيْنَةِ நகரத்தில் امْرَاَتُ மனைவி الْعَزِيْزِ அதிபரின் تُرَاوِدُ தன் விருப்பத்திற்கு அழைக்கிறாள் فَتٰٮهَا தன் வாலிபனை عَنْ نَّـفْسِهٖۚ பலவந்தமாக قَدْ திட்டமாக ஈர்த்து விட்டார் شَغَفَهَا அவளை حُبًّا ؕ அன்பால் اِنَّا நிச்சயமாக நாம் لَـنَرٰٮهَا காண்கிறோம்/அவளை فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ தெளிவான(து)
12:30. அப்பட்டிணத்தில் சில பெண்கள்; “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்” என்று பேசிக் கொண்டார்கள்.
12:30. (இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டிணத்திலுள்ள பெண்கள் பலரும் (இதை இழிவாகக் கருதி) ‘‘அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள ஒரு (அடிமையான) ஒரு வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்'' என்று (இழிவாகப்) பேசலானார்கள்.
12:30. நகரத்திலுள்ள பெண்கள், தமக்கிடையே பேசிக் கொள்ளலாயினர்: “அஜீஸுடைய மனைவி தன்(னிடம் அடிமையாய் உள்ள) இளைஞரிடம் தகாத முறையில் நடந்திட முயன்றிருக்கின்றாள். அவர் மீதுள்ள காதல் அவளை நிதானமிழக்கச் செய்து விட்டது! உண்மையில் ஒரு வெளிப்படையான தவறை அவள் செய்து கொண்டிருக்கிறாள் என்றே நாங்கள் கருதுகின்றோம்.”
12:30. அப்பட்டணத்திலுள்ள பெண்கள், பலரும் “(எகிப்திய அரசின்) அமைச்சருடைய மனைவி தன்னுடைய (அடிமை) வாலிபனை தன் விருப்பத்திற்கிணங்குமாறு அழைக்கிறாள், காதலால் அவர் அவளை மிகைந்து விட்டார், நிச்சயமாக, அவளை பகிரங்கமான வழிகேட்டிலேயே நாம் காண்கின்றோம்” என்று (இழிவாகக்) கூறினர்.
12:31 فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَيْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّيْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ ۚ فَلَمَّا رَاَيْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا ؕ اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِيْمٌ
فَلَمَّا سَمِعَتْ அவள் செவியுற்றபோது بِمَكْرِهِنَّ அவர்களின் சூழ்ச்சியை اَرْسَلَتْ அனுப்பினாள் اِلَيْهِنَّ அவர்களிடம் وَاَعْتَدَتْ இன்னும் ஏற்பாடுசெய்தாள் لَهُنَّ அவர்களுக்கு مُتَّكَـاً ஒரு விருந்தை وَّاٰتَتْ இன்னும் கொடுத்தாள் كُلَّ وَاحِدَةٍ ஒவ்வொருவருக்கும் مِّنْهُنَّ அவர்களில் سِكِّيْنًا ஒரு கத்தியை وَّقَالَتِ இன்னும் கூறினாள் اخْرُجْ வெளியேறுவீராக عَلَيْهِنَّ ۚ அவர்கள் முன் فَلَمَّا போது رَاَيْنَهٗۤ பார்த்தனர்/அவரை اَكْبَرْنَهٗ மிக உயர்வாக எண்ணினர்/அவரை وَقَطَّعْنَ இன்னும் அறுத்தனர் اَيْدِيَهُنَّ தங்கள் கைகளை وَقُلْنَ இன்னும் கூறினர் حَاشَ பாதுகாப்பானாக لِلّٰهِ அல்லாஹ் مَا هٰذَا بَشَرًا ؕ இல்லை /இவர்/மனிதராக اِنْ இல்லை هٰذَاۤ இவர் اِلَّا தவிர مَلَكٌ ஒரு வானவரே كَرِيْمٌ கண்ணியமான
12:31. அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
12:31. (அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து வந்து ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியையும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தியையும் கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய் மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.
12:31. இவ்வாறு அப்பெண்கள் இழிவாகப் பேசிக் கொள்வதை அவள் கேள்விப்பட்டபோது, அவர்களுக்கு அழைப்பு அனுப் பினாள். அவர்களுக்காக சாய்விருக்கைகளைக் கொண்ட மண்டபத்தைத் தயாராக்கினாள். மேலும் (விருந்துண்ணும்போது) அப்பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கத்தியைக் கொடுத்தாள். (அவர்கள் பழத்தை அறுத்துத் தின்னும் சந்தர்ப்பத்தில், யூஸுஃபை நோக்கி) அவர்களின் முன்னே செல்லும் என சாடை காட்டினாள். அப்பெண்கள் அவரைப் பார்த்ததும் பிரமித்துப் போய் தம் கைகளை அறுத்துக் கொண்டார்கள். “ஹாஷலில்லாஹ்! (அல்லாஹ் மிகத் தூய்மையானவன்) இவர் ஒரு மனிதரே அல்லர்; இவர் சிறப்புக்குரிய ஒரு வானவரே ஆவார்!” என்று (தங்களையும் மறந்து) கூறினர்.
12:31. அவர்களின் சூழ்ச்சியை (-எகிப்திய அரசின் அமைச்சருடைய மனைவியாகிய அவள் செவியுற்றபோது (அழைத்து வருபவரை அப்பெண்களாகிய)வர்கள்பால் அனுப்பினாள், அவர்களுக்காக ஒரு விருந்து சபையை ஏற்பாடும் செய்தாள், அ(ங்கு வந்திருந்த)வர்களில் ஒவ்வொருத்திக்கும் (ஒரு பழமும்) ஒரு கத்தியும் கொடுத்தாள், இன்னும் (யூஸுஃபாகிய) அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வெளிப்படுவீராக” என்று கூறினாள், (அப்பெண்களாகிய) அவர்கள் அவரைப் பார்த்த பொழுது (அவருடைய அழகில் மயங்கி) அவரை மிக்க மேன்மையாகக் கண்டு, தங்கள் கை (விரல்)களை அறுத்துக் கொண்டனர், மேலும் “அல்லாஹ் பரிசுத்தமானவன், இவர் மனிதரல்ல!! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கே தவிர (வேறு) இல்லை” என்று கூறினார்கள்.
12:32 قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِىْ لُمْتُنَّنِىْ فِيْهِؕ وَ لَـقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّـفْسِهٖ فَاسْتَعْصَمَؕ وَلَٮِٕنْ لَّمْ يَفْعَلْ مَاۤ اٰمُرُهٗ لَـيُسْجَنَنَّ وَلَيَكُوْنًا مِّنَ الصّٰغِرِيْنَ
قَالَتْ கூறினாள் فَذٰلِكُنَّ இவர்தான் الَّذِىْ எவர் لُمْتُنَّنِىْ பழித்தீர்கள்/என்னை فِيْهِؕ அவர் விஷயத்தில் وَ لَـقَدْ திட்டவட்டமாக رَاوَدْتُّهٗ என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை عَنْ نَّـفْسِهٖ பலவந்தமாக فَاسْتَعْصَمَؕ காத்துக்கொண்டார் وَلَٮِٕنْ لَّمْ يَفْعَلْ அவர் செய்யவில்லையெனில் مَاۤ اٰمُرُهٗ எதை/ஏவுகிறேன்/அவருக்கு لَـيُسْجَنَنَّ நிச்சயமாக சிறையிலிடப்படுவார் وَلَيَكُوْنًا இன்னும் நிச்சயமாக ஆகுவார் مِّنَ الصّٰغِرِيْنَ இழிவானவர்களில்
12:32. அதற்கவள் “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்” என்று சொன்னாள்.
12:32. அதற்கவள் ‘‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர்தான் இவர். நிச்சயமாக நான் இவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், இவர் தப்பித்துக்கொண்டார். இனியும் இவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக இவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப் படுவார்''என்று கூறினாள்.
12:32. மன்னரின் மனைவி கூறினாள்: “(பார்த்தீர்களா!) எவர் விஷயத்தில் என்னை நீங்கள் பழித்தீர்களோ அவர் இவர்தான்; சந்தேகமில்லாமல், நான்தான் இவரை என் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினேன். ஆனால் இவர் தப்பிவிட்டார்; நான் சொல்வதை இவர் கேட்டு நடக்காவிட்டால் திண்ணமாக சிறையிலடைக்கப்பட்டு, சிறுமைக்குள்ளாவார்!”
12:32. அ(தற்க)வள், ‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர் இவர்தான், நிச்சயமாக நான்தான் என் விருப்பத்திற்கிணங்குமாறு அவரை நான் அழைத்தேன், எனினும், அவர் மன உறுதியுடன் தப்பித்து(விலகி)க் கொண்டார், இனியும் நான் கட்டளையிடுகிறபடி அவர் செய்யாவிடில், நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், மேலும் அவர் சிறுமைப்பட்டவர்களில் உள்ளவராக நிச்சயமாக ஆகிவிடுவார்” என்று கூறினாள்.
12:33 قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَىَّ مِمَّا يَدْعُوْنَنِىْۤ اِلَيْهِۚ وَاِلَّا تَصْرِفْ عَنِّىْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா السِّجْنُ சிறை اَحَبُّ மிக விருப்பமானது اِلَىَّ எனக்கு مِمَّا எதை விட يَدْعُوْنَنِىْۤ அழைக்கிறார்கள்/என்னை اِلَيْهِۚ அதன் பக்கம் وَاِلَّا تَصْرِفْ நீ திருப்பவில்லையெனில் عَنِّىْ என்னை விட்டு كَيْدَهُنَّ சூழ்ச்சியை/ அவர்களின் اَصْبُ இச்சைகொள்வேன் اِلَيْهِنَّ அவர்கள் பக்கம் وَاَكُنْ இன்னும் ஆகிவிடுவேன் مِّنَ الْجٰهِلِيْنَ அறிவீனர்களில்
12:33. (அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
12:33. அதற்கவர், ‘‘என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தை விட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளா விட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகிவிடுவேன்'' என்று பிரார்த்தித்தார்.
12:33. யூஸுஃப் கூறினார்: “என் இறைவனே! எந்தச் செயலைச் செய்ய வேண்டுமென என்னை இவர்கள் அழைக்கின்றார்களோ அந்தச் செயலைவிட சிறையே எனக்கு மிகவும் உவப்பானது! மேலும், அவர்களின் சூழ்ச்சிகளிலிருந்து என்னை நீ காப்பாற்றாவிட்டால், நான் அவர்களுடைய வலையில் சிக்கியிருப்பேன். மேலும், அறியாதவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேன்”
12:33. அ(தற்க)வர் “என் இரட்சகனே! அவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ அ(த் தீய காரியத்)தை விட சிறைக்கூடமே எனக்கு மிக விருப்பமானதாகும், ஆகவே, (இப்பெண்களாகிய) அவர்களுடைய சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் திருப்பாவிட்டால் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன், மேலும் (பாவம் செய்யும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
12:34 فَاسْتَجَابَ لَهٗ رَبُّهٗ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
فَاسْتَجَابَ பதிலளித்தான் لَهٗ அவருக்கு رَبُّهٗ அவருடைய இறைவன் فَصَرَفَ ஆகவேதிருப்பினான் عَنْهُ அவரை விட்டு كَيْدَ சூழ்ச்சியை هُنَّؕ அவர்களின் اِنَّهٗ நிச்சயமாக அவன் هُوَ அவன் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ நன்கறிந்தவன்
12:34. எனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
12:34. (அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
12:34. அவருடைய இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, அப்பெண்களின் சூழ்ச்சிகளிலிருந்து அவரைக் காப்பாற்றினான். திண்ணமாக, அவனே அனைத்தையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
12:34. எனவே அவரது பிரார்த்தனையை அவருடைய இரட்சகன் அங்கீகரித்தான், பின்னர், (அப்பெண்களாகிய) அவர்களின் சூழச்சியை அவரைவிட்டும் திருப்பிவிட்டான், நிச்சயமாக அவனே செவியுறுகிறவன், யாவையும் நன்கறிகிறவன்.
12:35 ثُمَّ بَدَا لَهُمْ مِّنْۢ بَعْدِ مَا رَاَوُا الْاٰيٰتِ لَيَسْجُنُـنَّهٗ حَتّٰى حِيْنٍ
ثُمَّ பிறகு بَدَا தோன்றியது لَهُمْ அவர்களுக்கு مِّنْۢ بَعْدِ பின்னரும் مَا رَاَوُا அவர்கள் பார்த்த الْاٰيٰتِ அத்தாட்சிகளை لَيَسْجُنُـنَّهٗ நிச்சயமாக அவர்கள் சிறையில் அடைக்கவேண்டும்/ அவரை حَتّٰى வரை حِيْنٍ ஒரு காலம்
12:35. (யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
12:35. (யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.)
12:35. பிறகு, (யூஸுஃபுடைய ஒழுக்கத் தூய்மைக்கும், தம் பெண்கள்தாம் தவறிழைத்தவர்கள் என்பதற்கும்) தெளிவான சான்றுகளை அவர்கள் கண்ட பின்பும், சிறிதுகாலம் அவரைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குத் தோன்றியது.
12:35. பின்னர், (யூஸுஃப் தூயவர் என்பதற்குரிய) அத்தாட்சிகளை அவர்கள் கண்டதன் பிறகு, சிறிது காலம் வரை (யூஸுஃபாகிய) அவரை, நிச்சயமாக சிறையிலிட வேண்டும் என அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரைச் சிறையிலிட்டனர்).
12:36 وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيٰنِؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَعْصِرُ خَمْرًا ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِىْ خُبْزًا تَاْكُلُ الطَّيْرُ مِنْهُ ؕ نَبِّئْنَا بِتَاْوِيْلِهٖ ۚ اِنَّا نَرٰٮكَ مِنَ الْمُحْسِنِيْنَ
وَدَخَلَ நுழைந்தார்(கள்) مَعَهُ அவருடன் السِّجْنَ சிறையில் فَتَيٰنِؕ இரு வாலிபர்கள் قَالَ கூறினான் اَحَدُهُمَاۤ அவ்விருவரில் ஒருவன் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮنِىْۤ கனவு கண்டேன்/என்னை اَعْصِرُ خَمْرًا ۚ பிழிகிறேன்/மதுவை وَقَالَ இன்னும் கூறினான் الْاٰخَرُ மற்றவன் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮنِىْۤ கனவு கண்டேன்/என்னை اَحْمِلُ சுமக்கிறேன் فَوْقَ மேல் رَاْسِىْ என் தலை خُبْزًا ரொட்டியை تَاْكُلُ புசிப்பதாக الطَّيْرُ பறவைகள் مِنْهُ ؕ அதிலிருந்து نَبِّئْنَا அறிவிப்பீராக/எங்களுக்கு بِتَاْوِيْلِهٖ ۚ இதன் விளக்கத்தை اِنَّا நிச்சயமாக நாங்கள் نَرٰٮكَ காண்கிறோம்/உம்மை مِنَ الْمُحْسِنِيْنَ நல்லறம்புரிபவர்களில்
12:36. அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
12:36. (அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) ‘‘நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறினான். மற்றவன் ‘‘நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீர் எங்களுக்கு அறிவிப்பீராக!'' (என்று கூறினான்).
12:36. அவருடன், இரு இளைஞர்களும் சிறை புகுந்தார்கள். (ஒருநாள்) அவ்விருவரில் ஒருவர், “நான் திராட்சைச் சாறு பிழிந்து கொண்டிருப்பதாகக் கனவு கண்டேன்” என்று கூறினார். மற்றொருவர் கூறினார்: “நான் என் தலை மீது ரொட்டிகளைச் சுமந்திருப்பதாகவும் அவற்றைப் பறவைகள் தின்று கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்.” (அவ்விருவரும் யூஸுஃபிடம் கூறினர்:) “நீர் இதன் விளக்கத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உம்மை ஒரு நல்ல மனிதராக நாங்கள் காண்கிறோம்.”
12:36. மேலும், (மற்ற குற்றங்களுக்காக வேறு) இரு வாலிபர்கள் அவருடன் சிறையில் நுழைந்தனர், அவ்விவருவரில் ஒருவன், நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரஸம் தயார் செய்து கொண்டிருப்பதாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்” என்று கூறினான், மற்றவன், “என் தலையின் மீது ரொட்டியை சுமந்து கொண்டிருக்க அதிலிருந்து பட்சிகள் (கொத்திப்) புசிப்பதாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்,” என்று கூறி, “இவற்றின் விளக்கத்தை எங்களுக்கு நீர் தெரிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் (ஒருவராகக்) காண்கிறோம்” (என்று யூஸுஃபிடம் கூறினார்கள்.)
12:37 قَالَ لَا يَاْتِيْكُمَا طَعَامٌ تُرْزَقٰنِهٖۤ اِلَّا نَـبَّاْتُكُمَا بِتَاْوِيْلِهٖ قَبْلَ اَنْ يَّاْتِيَكُمَا ؕ ذٰ لِكُمَا مِمَّا عَلَّمَنِىْ رَبِّىْ ؕ اِنِّىْ تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ
قَالَ கூறினார் لَا يَاْتِيْكُمَا உங்களிடம் வராது طَعَامٌ ஓர் உணவு تُرْزَقٰنِهٖۤ உணவளிக் கப்படுகிறீர்கள்/அதை اِلَّا نَـبَّاْتُكُمَا தவிர/அறிவித்தேன்/உங்கள் இருவருக்கும் بِتَاْوِيْلِهٖ அதன் விளக்கத்தை قَبْلَ முன்னர் اَنْ يَّاْتِيَكُمَا ؕ அது வருவதற்கு/உங்கள் இருவருக்கும் ذٰ لِكُمَا இது مِمَّا இருந்து/எவை عَلَّمَنِىْ கற்பித்தான்/எனக்கு رَبِّىْ ؕ என் இறைவன் اِنِّىْ நிச்சயமாக நான் تَرَكْتُ விட்டுவிட்டேன் مِلَّةَ மார்க்கத்தை قَوْمٍ மக்களுடைய لَّا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَهُمْ இன்னும் அவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை هُمْ كٰفِرُوْنَ அவர்கள் நிராகரிக்கின்றார்கள்
12:37. அதற்கு அவர் கூறினார்: “உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.
12:37. (அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் புசிக்கக்கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமையை நிராகரிக்கின்ற மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்.
12:37. அதற்கு அவர் கூறினார்: “இங்கு உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்பே இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்து விடுவேன். என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ள அறிவுகளில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமலும், மறுமையை ஏற்காமலும் வாழ்கின்ற சமூகத்தாரின் வழிமுறையைத் திண்ணமாக நான் விட்டுவிட்டேன்.
12:37. (அதற்கு யூஸுஃப்,) நீங்களிருவரும் எதை உணவாக வழங்கப்படுகிறீர்களோ அது உங்களிருவருக்கும் வந்து சேரும் முன் அதன் விளக்கத்தை உங்களிருவருக்கும் நான் அறிவித்தே அல்லாது (அந்த) உணவு உங்களிருவருக்கும் வருவதில்லை, இவ்விரண்டு(க்குரிய விளக்கமும்) என் இரட்சகன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றில் உள்ளவையாகும், அல்லாஹ்வை விசுவாசிக்காத சமூகத்தாரின் மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன், இன்னும் அவர்கள்-அவர்களே மறுமையை நிராகரிக்கக் கூடியவர்கள்.
12:38 وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِىْۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَىْءٍؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ
وَاتَّبَعْتُ இன்னும் பின்பற்றினேன் مِلَّةَ மார்க்கத்தை اٰبَآءِىْۤ என் மூதாதைகளாகிய اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَؕ யஃகூப் مَا كَانَ தகுமானதல்ல لَنَاۤ எங்களுக்கு اَنْ نُّشْرِكَ நாங்கள் இணைவைப்பது بِاللّٰهِ அல்லாஹ்வின் مِنْ شَىْءٍؕ எதையும் ذٰلِكَ இது مِنْ இருந்து فَضْلِ அருள் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْنَا எங்கள் மீது وَعَلَى இன்னும் மீது النَّاسِ மக்கள் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَشْكُرُوْنَ நன்றி செலுத்த மாட்டார்கள்
12:38. “நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
12:38. என் மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
12:38. என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக் மற்றும் யஃகூப் ஆகியோரின் வழிமுறையைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுடன் எதனையும் இணையாக்குவது எங்களுடைய பணி அல்ல. உண்மையிலேயே, (அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் நாம் அடிமைகளல்லர் எனும்) இந்நிலை, நம்மீதும் மனித குலம் அனைத்தின் மீதும் அல்லாஹ் பொழிந்துள்ள ஓர் அருட்பேறாகும். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதற்கு நன்றி செலுத்துவதில்லை.
12:38. அன்றியும், என்னுடைய மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தையே நான் பின்பற்றி விட்டேன், (ஆதலால்,) அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல, இ(க் கொள்கை மீது இருப்ப)து, எங்கள்மீதும், (மற்ற) மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த பேரருளாகும், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்,
12:39 يٰصَاحِبَىِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُّتَفَرِّقُوْنَ خَيْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُؕ
يٰصَاحِبَىِ என் (இரு) தோழர்களே السِّجْنِ சிறை ءَاَرْبَابٌ ?/தெய்வங்கள் مُّتَفَرِّقُوْنَ பிரிந்துள்ளவர்கள் خَيْرٌ மேலானவர்(கள்) اَمِ அல்லது اللّٰهُ அல்லாஹ் الْوَاحِدُ ஒருவன் الْقَهَّارُؕ அடக்கி ஆளுபவன்
12:39. “சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அல்லாஹ்வா?
12:39. சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (ஒரு சக்தியுமற்ற) மாறுபட்ட பல்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா?
12:39. என்னுடைய சிறைத் தோழர்களே! (நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!) பல்வேறுபட்ட கடவுளர்கள் சிறந்தவர்களா? அல்லது யாவற்றையும் அடக்கியாளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் சிறந்தவனா?
12:39. சிறைச்சாலையின் என்னிரு தோழர்களே! (யாதொரு சக்தியுமற்ற) பல்வேறு தெய்வங்கள் மேலா? அல்லது (யாவற்றையும்) அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா?
12:40 مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اَسْمَآءً سَمَّيْتُمُوْهَاۤ اَنْـتُمْ وَ اٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِؕ اَمَرَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُؕ ذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
مَا تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குவதில்லை مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اِلَّاۤ தவிர اَسْمَآءً பெயர்களை سَمَّيْتُمُوْهَاۤ சூட்டினீர்கள்/ அவற்றை اَنْـتُمْ நீங்களும் وَ اٰبَآؤُ இன்னும் மூதாதைகளும் كُمْ உங்கள் مَّاۤ اَنْزَلَ இறக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் بِهَا இவற்றுக்கு مِنْ எவ்வித سُلْطٰنٍؕ ஆதாரத்தை اِنِ இல்லை الْحُكْمُ அதிகாரம் اِلَّا தவிர لِلّٰهِؕ அல்லாஹ்விற்கே اَمَرَ கட்டளையிட்டான் اَلَّا تَعْبُدُوْۤا நிச்சயமாக வணங்காதீர்கள் اِلَّاۤ தவிர اِيَّاهُؕ அவனை ذٰلِكَ இது الدِّيْنُ மார்க்கம் الْقَيِّمُ நேரானது وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
12:40. “அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
12:40. அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,)
12:40. அவனை விடுத்து எவற்றுக்கு நீங்கள் அடிபணிந்து வருகின்றீர்களோ அவை யாவும் நீங்களும், உங்கள் மூதாதையர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களே(தவிர வேறொன்றுமில்லை)! அவற்றை வணங்குவதற்கு எத்தகைய ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கி வைக்கவில்லை. ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியக் கூடாதென்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை நெறியாகும்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறியாதிருக்கின்றனர்.
12:40. அவனையன்றி நீங்கள் வணங்குபவை வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர (வேறொன்றும்) இல்லை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அவற்றைப் பெயர்களாக வைத்துக் கொண்டீர்கள்; அல்லாஹ் இதற்கு யாதோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (மற்றெவருக்கும்) அதிகாரம் இல்லை; அவனைத் தவிர மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான்; இதுதான் நிலையான மார்க்கமாகும், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள், (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்தபின்),
12:41 يٰصَاحِبَىِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَيَسْقِىْ رَبَّهٗ خَمْرًاۚ وَاَمَّا الْاٰخَرُ فَيُصْلَبُ فَتَاْكُلُ الطَّيْرُ مِنْ رَّاْسِهٖؕ قُضِىَ الْاَمْرُ الَّذِىْ فِيْهِ تَسْتَفْتِيٰنِؕ
يٰصَاحِبَىِ என் இரு தோழர்களே السِّجْنِ சிறை اَمَّاۤ ஆக اَحَدُكُمَا உங்களிருவரில் ஒருவன் فَيَسْقِىْ புகட்டுவான் رَبَّهٗ தன் எஜமானனுக்கு خَمْرًاۚ மது وَاَمَّا ஆக الْاٰخَرُ மற்றவன் فَيُصْلَبُ கழுமரத்தில் அறையப்படுவான் فَتَاْكُلُ தின்னும் الطَّيْرُ பறவைகள் مِنْ رَّاْسِهٖؕ அவனுடையதலையில் قُضِىَ விதிக்கப்பட்டது الْاَمْرُ காரியம் الَّذِىْ எது فِيْهِ அதில் تَسْتَفْتِيٰنِؕ விளக்கம் கேட்கிறீர்கள்
12:41. “சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
12:41. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) ‘‘உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன், முன்செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன்பு போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானம் கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்'' என்று கூறினார்.)
12:41. என்னுடைய சிறைத் தோழர்களே! (உங்கள் கனவுகளுக்கான விளக்கம் இதுதான்:) உங்களில் ஒருவர் தம் எஜமான(னாகிய எகிப்து அரச)னுக்கு மது புகட்டுவார். மற்றொருவர் கழுவிலேற்றப்படுவார்; பறவைகள் அவருடைய தலையைக் கொத்தித் தின்னும்! நீங்கள் எந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்டீர்களோ அந்த விஷயம் தீர்மானிக்கப்பட்டு விட்டது.”
12:41. (அவர்களிடம்,) “சிறைச்சாலையின் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் விளக்கம் உங்களில் ஒருவன் (முன்போலவே) தன் எஜமானனுக்கு மது ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான், மற்றொருவனோ சிலுவையில் அறையப்பட்டு அவன் தலையிலிருந்து பட்சிகள் (கொத்தித்) தின்னும், எதில் நீங்கள் இருவரும் விளக்கம் தேடினீர்களோ அக்காரியம் விதிக்கப்பட்டுவிட்டது, (அவ்வாறு நடந்தே தீரும்)” என்று கூறினார்.
12:42 وَقَالَ لِلَّذِىْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِىْ عِنْدَ رَبِّكَ فَاَنْسٰٮهُ الشَّيْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِى السِّجْنِ بِضْعَ سِنِيْنَ
وَقَالَ இன்னும் கூறினார் لِلَّذِىْ எவருக்கு ظَنَّ எண்ணினார் اَنَّهٗ நிச்சயமாக எவர் نَاجٍ தப்பிப்பவர் مِّنْهُمَا அவ்விருவரில் اذْكُرْنِىْ நினைவுகூரு/என்னை عِنْدَ இடம் رَبِّكَ உன் எஜமான் فَاَنْسٰٮهُ அவருக்கு மறக்கடித்தான் الشَّيْطٰنُ ஷைத்தான் ذِكْرَ நினைவு கூருவதை رَبِّهٖ தன் இறைவனை فَلَبِثَ ஆகவே தங்கினார் فِى السِّجْنِ சிறையில் بِضْعَ سِنِيْنَ சில ஆண்டுகள்
12:42. அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!” என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.
12:42. மேலும், அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னார். எனினும் (சிறைக் கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான், அவனுக்கு மறக்கடித்துவிட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (இன்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்.
12:42. பிறகு, அவ்விருவரில் எவரைக் குறித்து திண்ணமாக அவர் விடுதலையாகி விடுவார் என்று யூஸுஃப் கருதினாரோ அவரிடம் “உன்னுடைய எஜமான(னாகிய எகிப்தின் அரச)னிடம் என்னைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும்” என்றார். ஆனால், தன் எஜமானனிடம் (யூஸுஃபை) நினைவுபடுத்தவிடாமல் அவரை ஷைத்தான் மறதியிலாழ்த்தி விட்டான். யூஸுஃப் மேலும் சில ஆண்டுகள் சிறையிலே கிடந்தார்.
12:42. அவ்விருவரில் எவர் நிச்சயமாக விடுதலை பெறுவார் என அவர் எண்ணினாரோ அத்தகையவரிடம், “நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றிக் கூறுவாயாக” என்று (யூஸீஃபாகிய) அவர் கூறினார், ஆனால் (சிறைக் கூடத்திலிருந்து வெளியேறிய அவர் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான் அவருக்கு மறக்கடித்துவிட்டான், ஆதலால் அவர் சிறைக் கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் தங்கிவிட்டார்.
12:43 وَقَالَ الْمَلِكُ اِنِّىْۤ اَرٰى سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ يَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍؕ يٰۤاَيُّهَا الْمَلَاُ اَفْتُوْنِىْ فِىْ رُءْيَاىَ اِنْ كُنْتُمْ لِلرُّءْيَا تَعْبُرُوْنَ
وَقَالَ கூறினார் الْمَلِكُ அரசர் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰى கனவில் கண்டேன் سَبْعَ ஏழு بَقَرٰتٍ பசுக்கள் سِمَانٍ கொழுத்தவை يَّاْكُلُهُنَّ புசிக்கின்றன/அவற்றை سَبْعٌ ஏழு عِجَافٌ இளைத்தவை وَّسَبْعَ இன்னும் ஏழு سُنْۢبُلٰتٍ கதிர்களை خُضْرٍ பசுமையானவை وَّاُخَرَ இன்னும் வேறு يٰبِسٰتٍؕ காய்ந்தவை يٰۤاَيُّهَا الْمَلَاُ பிரமுகர்களே اَفْتُوْنِىْ விளக்கம் தாருங்கள்/எனக்கு فِىْ رُءْيَاىَ என் கனவில் اِنْ كُنْتُمْ இருந்தீர்களானால் لِلرُّءْيَا கனவிற்கு تَعْبُرُوْنَ வியாக்கியானம் கூறுகிறீர்கள்
12:43. நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்” என்று (தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்.
12:43. (ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான வேறு ஏழு) கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் இக்கனவின் பலனை அறிவியுங்கள்'' என்று கூறினார்.
12:43. (ஒருநாள்) அரசன் கூறினான்: “நான் ஒரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருக்கின்றன; மேலும் பசுமையான ஏழு தானியக் கதிர்களையும், ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன். எனவே, அவையோரே! கனவிற்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்தவர்களாயிருந்தால் எனது கனவுக்குரிய விளக்கத்தைக் கூறுங்கள்!”
12:43. மேலும், (எகிப்தின்) அரசர், (தம் பிரதானிகளிடம்,) “கொழுத்துப் பருத்த ஏழு பசுக்கள் - அவற்றை இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு (ஏழு) கதிர்களையும் நிச்சயமாக நான் (கனவில்) கண்டேன், என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என்னுடைய கனவுக்கு விளக்கம் கூறுங்கள்” என்று கூறினார்.
12:44 قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍۚ وَمَا نَحْنُ بِتَاْوِيْلِ الْاَحْلَامِ بِعٰلِمِيْنَ
قَالُوْۤا கூறினார்கள் اَضْغَاثُ பொய்யானவை اَحْلَامٍۚ கனவுகள் وَمَا இல்லை نَحْنُ நாங்கள் بِتَاْوِيْلِ விளக்கத்தை الْاَحْلَامِ கனவுகளுக்குரிய بِعٰلِمِيْنَ அறிந்தவர்களாக
12:44. “(இவை) குழப்பமான கனவுகளேயாகும், எனவே நாங்கள் (இக்) கனவுகளுக்கு விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள்.
12:44. அதற்கவர்கள், ‘‘இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல'' என்று கூறினார்கள்.
12:44. அதற்கு அவர்கள், “இவை குழப்பமான கனவுகளாகும். இவை போன்ற கனவுகளுக்கான விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்லர்” என்றனர்.
12:44. அ(தற்க)வர்கள், “இது பொய்க் கனவுகளாகும், (இத்தகைய) பொய்க் கனவுகளுக்கு விளக்கம் கூற தாங்கள் அறிந்தோராக இல்லை” என்று கூறினார்கள்.
12:45 وَقَالَ الَّذِىْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَـبِّئُكُمْ بِتَاْوِيْلِهٖ فَاَرْسِلُوْنِ
وَقَالَ கூறினான் الَّذِىْ எவன் نَجَا தப்பித்தான் مِنْهُمَا அவ்விருவரில் وَادَّكَرَ இன்னும் நினைவு கூர்ந்தான் بَعْدَ பின்னர் اُمَّةٍ சில ஆண்டு اَنَا நான் اُنَـبِّئُكُمْ அறிவிப்பேன்/ உங்களுக்கு بِتَاْوِيْلِهٖ அவருடைய விளக்கத்தை فَاَرْسِلُوْنِ ஆகவே அனுப்புங்கள்/என்னை
12:45. அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
12:45. (யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக் கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) ‘‘அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பிவையுங்கள்'' என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பிவைத்தார்.)
12:45. அவ்விரு கைதிகளில் விடுதலையடைந்தவர், வெகு காலத்திற்குப் பிறகு (யூஸுஃப் பற்றி) நினைவு வந்தபோது கூறினார்: “நான் இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்னை(ச்சிறையில் உள்ள யூஸுஃபிடம்) அனுப்புங்கள்!”
12:45. மேலும் அவ்விருவரில், விடுதலையடைந்தவர், இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (யூஸுஃபை) நினைவுபடுத்திக் கொண்டவராகிய அவர், “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், ஆகவே, என்னை (சிறைக்கூடத்திற்கு) அனுப்பி வையுங்கள்” என்று கூறினான்.
12:46 يُوْسُفُ اَيُّهَا الصِّدِّيْقُ اَ فْتِنَا فِىْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ يَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍ ۙ لَّعَلِّىْۤ اَرْجِعُ اِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ
يُوْسُفُ யூஸுஃபே! اَيُّهَا الصِّدِّيْقُ உண்மையாளரே! اَ فْتِنَا எங்களுக்கு விளக்கம் தருவீராக فِىْ سَبْعِ بَقَرٰتٍ ஏழுபசுக்கள்பற்றியும் سِمَانٍ கொழுத்தவை يَّاْكُلُهُنَّ புசிக்கின்றன/அவற்றை سَبْعٌ ஏழு عِجَافٌ இளைத்தவை وَّسَبْعِ இன்னும் ஏழு سُنْۢبُلٰتٍ கதிர்கள் خُضْرٍ பசுமையானவை وَّاُخَرَ இன்னும் மற்றவை يٰبِسٰتٍ ۙ காய்ந்தவை لَّعَلِّىْۤ اَرْجِعُ நான் திரும்பி செல்லவேண்டும் اِلَى النَّاسِ மக்களிடம் لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ அவர்கள் அறியவேண்டும்
12:46. (சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
12:46. (அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி “கனவுகளுக்கு) உண்மை(யான வியாக்கியானம்) கூறுபவரே! யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதை) நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! (என்னை அனுப்பிய) மக்கள் (இதைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கிறது'' என்று கூறினான்.
12:46. (அவர் அங்கு சென்று கூறினார்:) “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருப்பதாகவும், மேலும் பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து போன ஏழு கதிர்களையும் கனவில் கண்டால் அதன் விளக்கம் என்ன என்பதை எங்களுக்குக் கூறுவீராக! நான் இம்மக்களிடம் திரும்பச் செல்ல வேண்டும்; அவர்கள் அறிந்து கொள்ளக்கூடும்!”
12:46. (சிறைக்கூடம் சென்று அவன்,) “யூஸுஃபே! உண்மையாளரே கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை – அவற்றை இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் பற்றியும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்து உலர்ந்த மற்ற (ஏழு) கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பொருள் என்ன? என்பதைப்) பற்றி நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! என்னை (அனுப்பிய) மக்கள் (இதனைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கின்றது” (என்று கேட்டார்.)
12:47 قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًاۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِىْ سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَاْكُلُوْنَ
قَالَ கூறினார் تَزْرَعُوْنَ விவசாயம்செய்வீர்கள் سَبْعَ سِنِيْنَ ஏழு ஆண்டுகள் دَاَبًاۚ வழக்கமாக فَمَا எதை حَصَدْتُّمْ அறுவடை செய்தீர் فَذَرُوْهُ விட்டு விடுங்கள்/அதை فِىْ سُنْۢبُلِهٖۤ அதன் கதிரிலேயே اِلَّا قَلِيْلًا கொஞ்சத்தை தவிர مِّمَّا تَاْكُلُوْنَ நீங்கள் புசிப்பதற்குத் தேவையான
12:47. “நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
12:47. அதற்கவர் கூறியதாவது: ‘‘தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
12:47. யூஸுஃப் கூறினார்: “ஏழாண்டுகள் வரை தொடர்ந்து நீங்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பீர்கள். (அந்த ஏழாண்டுகளில்) நீங்கள் அறுவடை செய்வதில் உங்கள் உணவுக்குப் பயன்படும் ஒரு சிறு பாகத்தைத் தவிர, மற்றவற்றை அவற்றின் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்!
12:47. அ(தற்க)வர், “தொடர்ந்து வழக்கப்படி (நல்ல விதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள், நீங்கள் அறுவடை செய்வதை – நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத் தவிர – (மற்ற யாவற்றையும்) அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள் என்று கூறினார்.
12:48 ثُمَّ يَاْتِىْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَّاْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِيْلًا مِّمَّا تُحْصِنُوْنَ
ثُمَّ பிறகு يَاْتِىْ வரும் مِنْۢ بَعْدِ பின்னர் ذٰلِكَ அதற்கு سَبْعٌ ஏழு شِدَادٌ கடினமானவை يَّاْكُلْنَ அவை தின்னும் مَا எவற்றை قَدَّمْتُمْ முற்படுத்தினீர்கள் لَهُنَّ அவற்றுக்காக اِلَّا قَلِيْلًا கொஞ்சத்தை தவிர مِّمَّا تُحْصِنُوْنَ நீங்கள் பத்திரப்படுத்தியதிலிருந்து
12:48. “பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.
12:48. அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றில் (விதைப்பதற்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும்.
12:48. அதன் பின்னர் மிகக் கடினமான ஏழாண்டுகள் வரும். அப்போது அந்நேரத்திற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் உட்கொள்ளப்பட்டு விடும்! அவற்றிலிருந்து நீங்கள் தனியே பாதுகாத்து வைத்திருந்ததைத் தவிர!
12:48. “பின்னர், அதற்கப்பால், கடினமான (பஞ்சத்தைக் கொண்ட) ஏழு (ஆண்டுகள்) வரும், நீங்கள் சேமித்து வைத்திருப்பவற்றிலிருந்து, (பஞ்சமான வருடங்களாகிய) இவைகளுக்காக நீங்கள் (கதிர்களில்) முற்படுத்தி வைத்தவற்றில் குறைவானவற்றைத் தவிர (மற்றதை) அவை தின்றுவிடும்.
12:49 ثُمَّ يَاْتِىْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِيْهِ يُغَاثُ النَّاسُ وَفِيْهِ يَعْصِرُوْنَ
ثُمَّ பிறகு يَاْتِىْ வரும் مِنْۢ بَعْدِ பின்னர் ذٰلِكَ அதற்கு عَامٌ ஓர் ஆண்டு فِيْهِ அதில் يُغَاثُ மழை பொழியப்படுவார்(கள்) النَّاسُ மக்கள் وَفِيْهِ இன்னும் அதில் يَعْصِرُوْنَ பிழிவார்கள்
12:49. பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சுகமாக) இருப்பார்கள்” என்று கூறினார்.
12:49. அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிவார்கள்'' (என்றும் கூறினார்).
12:49. பின்னர் மீண்டும் ஓர் ஆண்டு வரும். அப்பொழுது அருள் மாரி பொழியப்பட்டு மக்களின் துயரங்கள் களையப்படும். அன்று அவர்கள் பழரசங்கள் பிழிவார்கள் (செழிப்பாக வாழ்வார்கள்)!”
12:49. பின்னர், “அதற்கப்பால் ஒரு வருடம் வரும், அதில் மனிதர்கள் ஏராளமாக மழை பொழிவிக்கப்படுவர், (கனி வர்க்கங்களிளிருந்து அவற்றின் ரஸத்தைப்) பிழிந்து கொண்டுமிருப்பார்கள்” (என்றும் கூறினார்.)
12:50 وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِىْ بِهٖۚ فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰى رَبِّكَ فَسْـٴَــلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِىْ قَطَّعْنَ اَيْدِيَهُنَّؕ اِنَّ رَبِّىْ بِكَيْدِهِنَّ عَلِيْمٌ
وَقَالَ கூறினார் الْمَلِكُ அரசர் ائْتُوْنِىْ வாருங்கள்/என்னிடம் بِهٖۚ அவரைக் கொண்டு فَلَمَّا جَآءَ வந்த போது هُ அவரிடம் الرَّسُوْلُ தூதர் قَالَ கூறினார் ارْجِعْ நீ திரும்பிச் செல் اِلٰى رَبِّكَ உன் எஜமானனிடம் فَسْـٴَــلْهُ கேள்/அவரை مَا بَالُ விஷயமென்ன? النِّسْوَةِ பெண்களின் الّٰتِىْ எவர்கள் قَطَّعْنَ வெட்டினர் اَيْدِيَهُنَّؕ தங்கள் கைகளை اِنَّ رَبِّىْ நிச்சயமாக என் இறைவன் بِكَيْدِ சூழ்ச்சியை هِنَّ அவர்களின் عَلِيْمٌ நன்கறிந்தவன்
12:50. (“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
12:50. (யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் ‘‘(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) ‘‘நீர் உமது எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேட்பீராக. நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறினார்.
12:50. அரசர், “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்றார். (அரசரின்) தூதுவர் வந்தபோது, யூஸுஃப் அவரிடம் கூறினார்: “நீர் உம் எஜமானனிடம் திரும்பிச் சென்று, ‘தம் கைகளை அறுத்துக் கொண்ட பெண்களின் நிலை என்னவாயிற்று?’ என்று கேட்டுவாரும். திண்ணமாக, என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை நன்கு அறிந்தவனாவான்.”
12:50. மேலும், (கனவுகளின் விளக்கம் பற்றி அவன் கேட்டு வந்ததை அரசருக்கு அவன் அறிவிக்கவே) அதற்கு அரசர், (இவ்விளக்கங் கூறிய) “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக்(கட்டளையிட்டுக்) கூறினார், அவருடைய தூதர் யூஸுஃபிடம் (இது பற்றிச் சொல்ல) வரவே, (அவரிடம்) “நீர் உம் எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கைகளை வெட்டிக் கொண்டவர்களான பெண்களின் நிலை என்ன?” என்று அவரைக்கேளும், நிச்சயமாக அவர்களின் சூழ்ச்சியை என் இரட்சகன் நன்கறிந்தவன்” என்று கூறினார்.
12:51 قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ يُوْسُفَ عَنْ نَّـفْسِهٖؕ قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِنْ سُوْۤءٍ ؕ قَالَتِ امْرَاَتُ الْعَزِيْزِ الْــٰٔنَ حَصْحَصَ الْحَقُّ اَنَا رَاوَدْتُّهٗ عَنْ نَّـفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ
قَالَ கேட்டார் مَا خَطْبُكُنَّ உங்கள்நிலைஎன்ன? اِذْ போது رَاوَدْتُّنَّ ஆசைக்கு அழைத்தீர்கள் يُوْسُفَ யூஸுஃபை عَنْ نَّـفْسِهٖؕ பலவந்தமாக قُلْنَ கூறினர் حَاشَ பாதுகாப்பானாக لِلّٰهِ அல்லாஹ் مَا عَلِمْنَا நாங்கள் அறியவில்லை عَلَيْهِ அவரிடத்தில் مِنْ سُوْۤءٍ ؕ ஒரு தீங்கை قَالَتِ கூறினாள் امْرَاَتُ மனைவி الْعَزِيْزِ அதிபரின் الْــٰٔنَ இப்போது حَصْحَصَ வெளிப்பட்டு விட்டது الْحَقُّ உண்மை اَنَا நான்தான் رَاوَدْتُّهٗ என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை عَنْ نَّـفْسِهٖ நிர்பந்தமாக وَاِنَّهٗ நிச்சயமாக அவர் لَمِنَ الصّٰدِقِيْنَ உண்மையாளர்களில்
12:51. (இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
12:51. (இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) ‘‘நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?'' என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் ‘‘அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை'' என்று கூறிவிட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்'' என்று கூறினாள்.
12:51. பிறகு அரசன் அப்பெண்களிடம் வினவினான்: “நீங்கள் யூஸுஃபை உங்கள் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?” அதற்கு அப்பெண்கள், “ஹாஷலில்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்!) நாங்கள் அவரிடம் எத்தகைய தீய அம்சத்தையும் காணவில்லை” என ஒருமித்த குரலில் கூறினர். அஜீஸின் மனைவி கூறினாள்: “இப்பொழுது உண்மை வெளிப்பட்டுவிட்டது. நானே அவரை என் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சி செய்தேன். திண்ணமாக, அவர் முற்றிலும் வாய்மையுடையவரே!”
12:51. (அதற்கரசர், அப்பெண்களை அழைத்து,) “நீங்கள் யூஸுஃபை (கண்டு) விரும்பியபோது, உங்களுக்கு நேர்ந்ததென்ன?” என்று கேட்டார், அ(தற்க)வர்கள், “அல்லாஹ் தூய்மையானவன் நாங்கள் அவரிடத்தில் யாதொரு தீங்கையும் அறியவில்லை” என்று கூறிவிட்டார்கள், (எகிப்திய அரசின்) அமைச்சருடைய மனைவி, “உண்மை இப்போது வெளிப்பட்டுவிட்டது, நான்தான் என் விருப்பத்திற்கிணங்குமாறு அவரை அழைத்தேன், (யூஸுஃப் அழைக்கவில்லை) நிச்சயமாக, அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்-
12:52 ذٰ لِكَ لِيَـعْلَمَ اَنِّىْ لَمْ اَخُنْهُ بِالْغَيْبِ وَاَنَّ اللّٰهَ لَا يَهْدِىْ كَيْدَ الْخَـآٮِٕنِيْنَ
ذٰ لِكَ அது لِيَـعْلَمَ அவர் அறிவதற்காக اَنِّىْ لَمْ اَخُنْهُ நிச்சயமாகநான்/அவருக்கு துரோகம் செய்யவில்லை بِالْغَيْبِ மறைவில் وَ இன்னும் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَهْدِىْ நல்வழி படுத்த மாட்டான் كَيْدَ சூழ்ச்சியை الْخَـآٮِٕنِيْنَ துரோகிகளின்
12:52. இ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; “நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.
12:52. (இதைக் கேள்வியுற்ற யூஸுஃப் ‘‘முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணை செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என்(பதை அறிவிப்)பதற்காகவுமே'' (என்று கூறினார்).
12:52. (யூஸுஃப் கூறினார்): “இதில் எனது நோக்கம் என்ன வெனில், திரை மறைவில் அஜீஸுக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்யவில்லை என்பதையும், நம்பிக்கைத் துரோகம் செய்வோரின் சூழ்ச்சிகளை அல்லாஹ் ஒருபோதும் வெற்றியடையச் செய்வதில்லை என்பதையும் அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
12:52. இதன் காரணம்: “நிச்சயமாக (என்னைவிட்டு அவரும், அவரை விட்டு நானும் மறைவாக இருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சிக்கு வழி காட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிந்து கொள்வதற்காகவேதான்” (என்றும்),
12:53 وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْۚ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌۢ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ ؕاِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ
وَمَاۤ اُبَرِّئُ நான் தூய்மைப்படுத்த மாட்டேன் نَفْسِىْۚ என் ஆன்மாவை اِنَّ النَّفْسَ நிச்சயமாக ஆன்மா لَاَمَّارَةٌۢ அதிகம் தூண்டக்கூடியதே بِالسُّوْٓءِ பாவத்திற்கு اِلَّا தவிர مَا எது رَحِمَ அருள்புரிந்தான் رَبِّىْ என் இறைவன் ؕاِنَّ رَبِّىْ நிச்சயமாக என் இறைவன் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ பெரும் கருணையாளன்
12:53. “அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்).
12:53. ‘‘நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்'' என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கிறது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்'' (என்றார்.)
12:53. மேலும், நான் என்னைத் தூய்மையானவன் எனக் கூறிக் கொள்ளவில்லை. ஏனெனில், திண்ணமாக மனித மனம், தீயவற்றை அதிகமாக தூண்டிவிடக்கூடியதாகும்; ஆனால் எவருக்கு இறைவன் கருணை புரிந்தானோ அவருடைய மனத்தைத் தவிர! திண்ணமாக, என் இறைவன் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெரும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.”
12:53. “மேலும், நான் (யூஸுஃபின் மீது மோகங்கொள்ளவில்லை என்று கூறி என் மனதை நான் தூய்மைப்படுத்தவில்லை; (ஏனென்றால்) நிச்சயமாக என் இரட்சகன் அருள் புரிந்தவரையன்றி (மனிதனுடைய) மனம் பாவம் செய்யும்படி அதிகம் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது, நிச்சயமாக என் இரட்சகன் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்” (என்று எகிப்திய அரசரின் அமைச்சருடைய மனைவி கூறனாள்.)
12:54 وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِىْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِىْۚ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِيْنٌ اَمِيْنٌ
وَقَالَ கூறினார் الْمَلِكُ அரசர் ائْتُوْنِىْ வாருங்கள்/என்னிடம் بِهٖۤ அவரைக் கொண்டு اَسْتَخْلِصْهُ பிரத்தியேகமாக நான் ஆக்கிக்கொள்வேன்/அவரை لِنَفْسِىْۚ எனக்கென மட்டும் فَلَمَّا போது كَلَّمَهٗ பேசினார்/அவருடன் قَالَ கூறினார் اِنَّكَ நிச்சயமாக நீர் الْيَوْمَ இன்று لَدَيْنَا நம்மிடம் مَكِيْنٌ தகுதியுடையவர் اَمِيْنٌ நம்பிக்கையாளர்
12:54. இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.
12:54. (யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) ‘‘அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்'' என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) ‘‘நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்'' என்றார்.
12:54. அரசர் “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை எனக்கே உரியவராய் வைத்துக் கொள்கின்றேன்” என்றார். யூஸுஃப் அவரிடம் உரையாடினார். அப்போது அரசர் கூறினார்: “இப்போது நீர் திண்ணமாக நம்மிடம் மதிப்பிற்குரியவராகவும் முழுநம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.”
12:54. (சிறைச்சாலையிலிருக்கும் யூஸுஃபின் ஞானத்தை அறிந்த) அரசர் “அவரை என்னிடம் (அழைத்துக்) கொணடு வாருங்கள் எனக்கு மட்டும் பிரத்தியேகமானவராக அவரை நான் அமர்த்திக் கொள்வேன்” என்று கூறினார், (ஆகவே சிறையிலிருந்து வெளியாகிய) அவருடன் பேசியபொழுது, நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்றவராக இருக்கிறீர்” என்று கூறினார்.
12:55 قَالَ اجْعَلْنِىْ عَلٰى خَزَآٮِٕنِ الْاَرْضِۚ اِنِّىْ حَفِيْظٌ عَلِيْمٌ
قَالَ கூறினார் اجْعَلْنِىْ ஆக்குவீராக/என்னை عَلٰى மீது خَزَآٮِٕنِ கஜானாக்கள் الْاَرْضِۚ நாட்டின் اِنِّىْ நிச்சயமாக நான் حَفِيْظٌ பாதுகாப்பவன் عَلِيْمٌ நன்கறிந்தவன்
12:55. (யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”
12:55. (அதற்கவர்) ‘‘தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக என்னை ஆக்கி விடுவீராக. நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்'' என்று சொன்னார். (அவ்வாறே அரசர் ஆக்கினார்.)
12:55. அதற்கு யூஸுஃப் “நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.
12:55. அ(தற்க)வர், “இந்தப் பூமியின் களஞ்சியங்களின் மீது (நிர்வாகியாக) என்னை ஆக்கிவிடும், நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்கக் கூடியவன், நன்கறிந்தவன்” என்று சொன்னார் (அரசரும் அவ்வாறே செய்தார்.)
12:56 وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِۚ يَتَبَوَّاُ مِنْهَا حَيْثُ يَشَآءُ ؕ نُصِيْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُۚ وَلَا نُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ
وَكَذٰلِكَ இவ்வாறே مَكَّنَّا வசதியளித்தோம் لِيُوْسُفَ யூஸுஃபுக்கு فِى الْاَرْضِۚ அந்நாட்டில் يَتَبَوَّاُ தங்கிக்கொள்வார் مِنْهَا அதில் حَيْثُ இடம் يَشَآءُ ؕ நாடுகின்றார் نُصِيْبُ நாம் தருகிறோம் بِرَحْمَتِنَا நம் அருளை مَنْ எவர் نَّشَآءُۚ நாடுகின்றோம் وَلَا نُضِيْعُ வீணாக்க மாட்டோம் اَجْرَ கூலியை الْمُحْسِنِيْنَ நல்லறம் புரிபவர்களின்
12:56. யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
12:56. யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை.
12:56. மேலும், இவ்வாறு நாம் யூஸுஃபுக்கு அந்த பூமியில் அதிகாரத்தை வழங்கினோம். அங்கே, தாம் விரும்பும் எந்த இடத்திலும் அவர் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார். நாம் விரும்புகின்றவர்கள் மீது நமது கருணையைப் பொழிகின்றோம். நல்லவர்களின் கூலியை நாம் வீணாக்கிட மாட்டோம்.
12:56. இவ்வாறே யூஸுஃபுக்கு பூமியில் அவர் விரும்பியவாறு வசித்துக் கொள்ள நாம் அவருக்கு வசதியளித்தோம், நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) நம் அருளை கிடைக்கும்படிச் செய்கிறோம், நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்கிவிடவுமாட்டோம்.
12:57 وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّـلَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ
وَلَاَجْرُ திட்டமாக கூலி الْاٰخِرَةِ மறுமையின் خَيْرٌ மேலானது لِّـلَّذِيْنَ எவர்களுக்கு اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَكَانُوْا இன்னும் இருந்தனர் يَتَّقُوْنَ அஞ்சுகின்றவர்களாக
12:57. மேலும், பயபக்தியுடையவர்களான முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.
12:57. எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கையாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப்படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.)
12:57. மேலும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறப்புடையதாகும்.
12:57. மேலும், விசுவாசங்கொண்டு, பயபக்தியுடையவர்களாகவும் இருந்தார்களே அவர்களுக்கு மறுமையின் கூலியானது மிக மேலானதாக இருக்கும்.
12:58 وَجَآءَ اِخْوَةُ يُوْسُفَ فَدَخَلُوْا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ
وَجَآءَ வந்தார்(கள்) اِخْوَةُ சகோதரர்கள் يُوْسُفَ யூஸுஃபுடைய فَدَخَلُوْا இன்னும் நுழைந்தார்கள் عَلَيْهِ அவரிடம் فَعَرَفَهُمْ அறிந்தார்/அவர்களை وَهُمْ அவர்கள் لَهٗ அவரை مُنْكِرُوْنَ அறியாதவர்களாக
12:58. (பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,
12:58. ஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தான் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை.
12:58. பிறகு யூஸுஃபின் சகோதரர்கள் எகிப்துக்கு வந்து அவருடைய அவைக்குச் சென்றார்கள். அப்போது அவர் அவர்களை அறிந்து கொண்டார். ஆனால் அவர்கள் அவரை அறியவில்லை.
12:58. மேலும், யூஸுஃபுடைய சகோதரர்கள் (கன் ஆனிலிருந்து) வந்து, அவரிடம் நுழைந்தபொழுது அவர்களோ அவரை (யூஸுஃபை) அறியாதவர்களாக இருந்த நிலையில் அவர்களை (தன் சகோதரர்கள் என யூஸுஃபாகிய) அவர் அறிந்துகொண்டார்.
12:59 وَ لَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِىْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِيْكُمْۚ اَلَا تَرَوْنَ اَنِّىْۤ اُوْفِی الْكَيْلَ وَاَنَا خَيْرُ الْمُنْزِلِيْنَ
وَ لَمَّا போது جَهَّزَ தயார்படுத்தினார் هُمْ அவர்களுக்கு بِجَهَازِ சாமான்களை هِمْ அவர்களுடைய قَالَ கூறினார் ائْتُوْ வாருங்கள் نِىْ என்னிடம் بِاَخٍ ஒரு சகோதரனைக் கொண்டு لَّكُمْ உங்களுக்குள்ள مِّنْ மூலமாக اَبِيْكُمْۚ உங்கள் தந்தை اَلَا تَرَوْنَ நீங்கள் கவனிக்கவில்லையா? اَنِّىْۤ நிச்சயமாக நான் اُوْفِی முழுமையாக்குவேன் الْكَيْلَ அளவையை وَاَنَا خَيْرُ நான் சிறந்தவன் الْمُنْزِلِيْنَ விருந்தளிப்பவர்களில்
12:59. (யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
12:59. (யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு ‘‘மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் என்னிடம் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்த போதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா?
12:59. யூஸுஃப், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கிட ஏற்பாடு செய்துவிட்டு (அவர்கள் புறப்படும் நேரத்தில்) கூறினார்: “உங்கள் தந்தைவழிச் சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் எவ்வளவு நிறைவாக அளந்து தருகின்றேன்; எப்படிச் சிறந்த முறையில் விருந்துபசாரம் செய்பவனாக இருக்கின்றேன் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
12:59. மேலும், (யூஸுஃபாகிய) அவர் அவர்களுக்கு (வேண்டிய) தானியங்களைத் தயார்படுத்திக் கொடுத்தபோது (மறுமுறை நீங்கள் வந்தால்) “உங்களுடைய தந்தையிலிருந்துள்ள உங்களுக்குரிய சகோதர(ன் புன்யாமீ)னையும் என்னிடம் (அழைத்துக்) கொண்டு வாருங்கள், நான் நிச்சயமாக (உங்களுக்கு தானியங்களைப்) பூர்த்தியாக்குபவன் என்பதையும், விருந்துபசாரம் செய்பவர்களில் நான் மிகச் சிறந்தவன் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கூறினார்.
12:60 فَاِنْ لَّمْ تَاْتُوْنِىْ بِهٖ فَلَا كَيْلَ لَـكُمْ عِنْدِىْ وَلَا تَقْرَبُوْنِ
فَاِنْ لَّمْ تَاْتُوْنِىْ நீங்கள் வரவில்லையெனில்/என்னிடம் بِهٖ அவரைக் கொண்டு فَلَا அறவேஇல்லை كَيْلَ அளவை لَـكُمْ உங்களுக்கு عِنْدِىْ என்னிடம் وَلَا تَقْرَبُوْنِ இன்னும் என்னை நெருங்காதீர்கள்
12:60. “ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை; நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது” என்று கூறினார்.
12:60. நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிட்டால் என்னிடமுள்ள (தானியத்)தை உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது'' என்று கூறினார்.
12:60. நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிடில், இனி என்னிடத்திலிருந்து உங்களுக்கு எந்த தானியமும் கிடைக்காது. ஏன், என் அருகிலும்கூட நீங்கள் வரக்கூடாது.”
12:60. “ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிடில், என்னிடம் உங்களுக்கு (தானியத்தை) அளப்பது இல்லை, நீங்கள் என்னை நெருங்கவும் வேண்டாம்” (என்று கூறினார்).
12:61 قَالُوْا سَنُرَاوِدُ عَنْهُ اَبَاهُ وَاِنَّا لَفَاعِلُوْنَ
قَالُوْا கூறினார்கள் سَنُرَاوِدُ தொடர்ந்து கேட்போம் عَنْهُ அவரை اَبَاهُ அவருடைய தந்தையிடம் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَفَاعِلُوْنَ செய்பவர்கள்தான்
12:61. “அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான்” என்று கூறினார்கள்.
12:61. அதற்கவர்கள் ‘‘நாங்கள் அவருடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டு (அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு) வேண்டிய முயற்சிகளை நிச்சயமாகச் செய்வோம்'' என்று கூறினார்கள்.
12:61. அதற்கு அவர்கள், “அவரை எங்களுடன் அனுப்புவதற்காக அவருடைய தந்தையின் சம்மதத்தைப் பெற முயல்வோம். கண்டிப்பாக நாங்கள் இதனைச் செய்வோம்” என்று கூறினார்கள்.
12:61. அ(தற்க)வர்கள், “நாங்கள் அவருடைய தந்தையிடம் (உங்களிடம் அவரைக் கொண்டுவர) அவரைப் பற்றி (சாத்தியமான எல்லா) முயற்சிகளையும் மேற்கொள்வோம், நிச்சயமாக நாங்கள் (அதைச்) செய்பவர்களாகவும் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
12:62 وَقَالَ لِفِتْيٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِىْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰٓى اَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
وَقَالَ கூறினார் لِفِتْيٰنِهِ தன் வாலிபர்களிடம் اجْعَلُوْا வையுங்கள் بِضَاعَتَهُمْ அவர்களுடைய கிரயத்தை فِىْ رِحَالِهِمْ அவர்களுடைய மூட்டைகளில் لَعَلَّهُمْ அவர்கள் அறியவேண்டும் يَعْرِفُوْنَهَاۤ அதை اِذَا انْقَلَبُوْۤا அவர்கள் திரும்பினால் اِلٰٓى اَهْلِهِمْ தங்கள் குடும்பத்திடம் لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ அவர்கள் திரும்பி வரவேண்டும்
12:62. (பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
12:62. (பின்னர் யூஸுஃப்) தன் (பணி) ஆட்களை நோக்கி ‘‘அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதை அறிந்துகொண்டு (அதை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்'' என்று கூறினார்.
12:62. யூஸுஃப், தம் பணியாட்களிடம் “தானியத்துக்காக அவர்கள் கொடுத்த சரக்குகளை அவர்களுடைய பொதிகளிலேயே (மறைத்து) வைத்து விடுங்கள்!” என்று கூறினார். அவர்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றதும் (மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்ட) பொருட்களை அறிந்து கொள்ளக்கூடும். (மேலும், இந்தப் பேருதவிக்கு நன்றியுள்ளவர்களாகக் கூடும்) மேலும், அவர்கள் திரும்பி வரவும் கூடும் (எனும் நம்பிக்கையில் யூஸுஃப் இவ்வாறு செய்தார்.)
12:62. (பின்னர் யூஸுஃப்) தன் பிணையாட்களிடம் “(கிரயமாகக் கொடுத்த அவர்களின் பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் ஆக்கி (மறைத்து வைத்து) விடுங்கள், அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றடைந்தால், (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதனை அவர்கள் அறிந்துகொண்டு, (அதனை நம்மிடம் செலுத்த) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
12:63 فَلَمَّا رَجَعُوْۤا اِلٰٓى اَبِيْهِمْ قَالُوْا يٰۤاَبَانَا مُنِعَ مِنَّا الْكَيْلُ فَاَرْسِلْ مَعَنَاۤ اَخَانَا نَكْتَلْ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ
فَلَمَّا போது رَجَعُوْۤا அவர்கள் திரும்பினர் اِلٰٓى தந்தையிடம் اَبِيْهِمْ தம் قَالُوْا கூறினர் يٰۤاَبَانَا எங்கள் தந்தையே مُنِعَ தடுக்கப்பட்டது مِنَّا எங்களுக்கு الْكَيْلُ அளவை فَاَرْسِلْ ஆகவே அனுப்புவீராக مَعَنَاۤ எங்களுடன் اَخَانَا சகோதரனை/எங்கள் نَكْتَلْ அளந்து (வாங்கி) வருவோம் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَهٗ அவரை لَحٰـفِظُوْنَ பாதுகாப்பவர்கள்தான்
12:63. அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி: “எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்” என்று சொன்னார்கள்.
12:63. (தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்த பொழுது ‘‘எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பிவைப்பீராக. நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்'' என்று கூறினார்கள்.
12:63. அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வரும்போது, “எங்கள் தந்தையே! (இனிமேல்) நமக்குத் தானியம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுடன் எங்கள் சகோதரரையும் அனுப்பி வையுங்கள், நாங்கள் தானியம் வாங்கி வருகின்றோம். மேலும், அவரைப் பாதுகாக்க நாங்கள் பொறுப்பேற்கிறோம்” என்று கூறினார்கள்.
12:63. அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்தபொழுது, “எங்கள் தந்தையே! எங்களுக்கு (த்தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிட்டது, ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பிவையுங்கள், நாங்கள் தானியம் அளந்து வாங்கிக் கொண்டு, நிச்சயமாக அவரையும் பாதுகாப்பவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
12:64 قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَيْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰٓى اَخِيْهِ مِنْ قَبْلُؕ فَاللّٰهُ خَيْرٌ حٰفِظًا وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
قَالَ கூறினார் هَلْ اٰمَنُكُمْ உங்களை நான் நம்புவதா? عَلَيْهِ இவர் விசயத்தில் اِلَّا தவிர كَمَاۤ போல் اَمِنْتُكُمْ நம்பினேன்/உங்களை عَلٰٓى اَخِيْهِ இவருடைய சகோதரர் விஷயத்தில் مِنْ قَبْلُؕ முன்னர் فَاللّٰهُ அல்லாஹ் خَيْرٌ மிக மேலானவன் حٰفِظًا பாதுகாவலன் وَّهُوَ அவன் اَرْحَمُ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ அருள் புரிபவர்களில்
12:64. அதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார்.
12:64. (அதற்கு யஅகூப்) ‘‘இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்'' என்று கூறிவிட்டார்.
12:64. அதற்கு யஃகூப், “இதற்கு முன் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் உங்களை நான் நம்பியது போன்று இவர் விஷயத்தில் இப்பொழுது உங்களை நான் நம்புவேனா? அல்லாஹ்தான் மிகச் சிறந்த பாதுகாவலன்; அவன் கருணையாளர்களிலேயே மிகவும் கருணையாளன்” என்று பதில் கூறினார்.
12:64. அதற்கு (யாஃகூபாகிய) அவர், “இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் அல்லாது இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவேனா? (முடியாது) ஆகவே, பாதுகாப்பவனில் அல்லாஹ் மிக்க மேலானவன், மேலும், அவனே அருள் புரிவோரிலெல்லாம் மிக்க அருளாளன்” என்று கூறிவிட்டார்.
12:65 وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَيْهِمْؕ قَالُوْا يٰۤاَبَانَا مَا نَـبْغِىْؕ هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَيْنَا ۚ وَنَمِيْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيْرٍؕ ذٰ لِكَ كَيْلٌ يَّسِيْرٌ
وَلَمَّا போது فَتَحُوْا அவர்கள் திறந்தனர் مَتَاعَهُمْ தங்கள் பொருளை وَجَدُوْا கண்டனர் بِضَاعَتَهُمْ தங்கள் கிரயம் رُدَّتْ திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது اِلَيْهِمْؕ தங்களிடம் قَالُوْا கூறினர் يٰۤاَبَانَا எங்கள் தந்தையே مَا نَـبْغِىْؕ என்ன தேடுகிறோம்? هٰذِهٖ இதோ بِضَاعَتُنَا நம் கிரயம் رُدَّتْ திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது اِلَيْنَا ۚ நம்மிடமே وَنَمِيْرُ தானியங்களைக் கொண்டு வருவோம் اَهْلَنَا நம் குடும்பத்திற்கு وَنَحْفَظُ இன்னும் காப்பாற்றுவோம் اَخَانَا சகோதரனை/எங்கள் وَنَزْدَادُ இன்னும் அதிகமாக்குவோம் كَيْلَ அளவையை بَعِيْرٍؕ ஓர் ஒட்டகத்தின் ذٰ لِكَ كَيْلٌ இது/ஓர் அளவை يَّسِيْرٌ இலகுவானது
12:65. அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், “எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்” என்று கூறினார்கள்.
12:65. பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு ‘‘எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டு விட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்'' என்று கூறினார்கள்.
12:65. பின்னர் அவர்கள் தம் பொதிகளை அவிழ்த்தபோது அவர்களின் சரக்குகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு “எங்கள் தந்தையே! இனி நமக்கு என்ன வேண்டும்? இதோ (பாருங்கள்!) நம்முடைய சரக்குகள் நம்மிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன. (நாங்கள் சென்று) நமது குடும்பத்துக்கு வேண்டிய உணவுப் பொருட்களை வாங்கி வருவோம்; மேலும், எங்கள் சகோதரரைப் பாதுகாத்துக் கொள்வோம்; மேலும், ஓர் ஒட்டகச் சுமையளவு தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம். இந்த அளவு அதிக தானியம் எளிதில் கிடைத்துவிடும்” என்று கூறினார்கள்.
12:65. இன்னும், அவர்கள் தங்கள் சாமான் (மூட்டை)களை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருளை அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு, “எங்கள் தந்தையே! (இன்னும்,) நாங்கள் எதைத் தேடுவோம்? இதோ, நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டது; (ஆகவே, புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களையும் நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரனையும், பாதுகாத்து வருவோம்; (அவருக்காகவும்) ஓர் ஒட்டகச் சுமை தானியத்தை அதிகமாகவும் கொண்டு வருவோம்; இ(வ்வாறு அவர்கள் அதிகமாகக் கொடுப்ப)து, எளிதான (தானிய) அளவைதான்” என்று கூறினார்கள்.
12:66 قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰى تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَــتَاْتُنَّنِىْ بِهٖۤ اِلَّاۤ اَنْ يُّحَاطَ بِكُمْۚ فَلَمَّاۤ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ
قَالَ கூறினார் لَنْ அனுப்பவே மாட்டேன் اُرْسِلَهٗ அவரை مَعَكُمْ உங்களுடன் حَتّٰى வரை تُؤْتُوْنِ கொடுப்பீர்கள்/எனக்கு مَوْثِقًا ஓர் உறுதிமானத்தை مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் لَــتَاْتُنَّنِىْ நிச்சயமாக வருவீர்கள்/என்னிடம் بِهٖۤ அவரைக் கொண்டு اِلَّاۤ தவிர اَنْ يُّحَاطَ அழிவு ஏற்பட்டால் بِكُمْۚ உங்களுக்கு فَلَمَّاۤ போது اٰتَوْ அவர்கள்கொடுத்தனர் هُ அவருக்கு مَوْثِقَهُمْ தங்கள் உறுதிமானத்தை قَالَ கூறினார் اللّٰهُ அல்லாஹ்வே عَلٰى مَا نَقُوْلُ நாம் கூறுவதற்கு وَكِيْلٌ பொறுப்பாளன்/சாட்சியாளன்
12:66. அதற்கு யஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
12:66. (அதற்கு அவர்களின் தந்தை) ‘‘உங்கள் அனைவரையுமே (ஒரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலே தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுக்கின்ற வரை நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்'' என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே, அதற்கு அவர் ‘‘நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்'' என்று கூறினார். (பிறகு, புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்.)
12:66. அதற்குத் தந்தை கூறினார்: “நீங்கள் கண்டிப்பாக அவரை என்னிடம் (திரும்ப) அழைத்து வந்து விடுவீர்கள் என்று அல்லாஹ்வின் பெயரால் எனக்கு உறுதிமொழி தராதவரை ஒருபோதும் அவரை நான் உங்களுடன் அனுப்ப மாட்டேன்; ஆனால் ஏதேனும் ஆபத்து உங்களைச் சூழ்ந்து கொண்டாலே தவிர!” அவர்கள் அவ்வாறு அவரிடம் உறுதிமொழி அளித்தபோது, அவர் கூறினார்: “நாம் இவ்வாறு பேசிக் கொள்வதை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்கின்றான்!”
12:66. (அதற்கு) “உங்கள் யாவரையும் (ஏதேனும் ஆபத்து) சூழ்ந்து கொண்டாலன்றி நிச்சயமாக அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (யாவரும்) எனக்கு உறுதிமொழி கொடுக்கும்வரை, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று (யாஃகூப் நபியாகிய) அவர் கூறினார்; ஆகவே, அவர்கள் (அவ்வாறு) அவருக்கு உறுதிமொழி கொடுக்கவே, (அதற்கு) அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே கண்காணிப்பவனாக இருக்கிறான்” என்று கூறினார்.
12:67 وَقَالَ يٰبَنِىَّ لَا تَدْخُلُوْا مِنْۢ بَابٍ وَّاحِدٍ وَّادْخُلُوْا مِنْ اَبْوَابٍ مُّتَفَرِّقَةٍؕ وَمَاۤ اُغْنِىْ عَنْكُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَىْءٍؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِؕ عَلَيْهِ تَوَكَّلْتُۚ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ
وَقَالَ இன்னும் கூறினார் يٰبَنِىَّ என் பிள்ளைகளே لَا تَدْخُلُوْا நுழையாதீர்கள் مِنْۢ بَابٍ ஒரு வாசல் வழியாக وَّاحِدٍ ஒரே وَّادْخُلُوْا இன்னும் நுழையுங்கள் مِنْ اَبْوَابٍ வாசல்கள் வழியாக مُّتَفَرِّقَةٍؕ பல்வேறு وَمَاۤ اُغْنِىْ நான் தடுக்க முடியாது عَنْكُمْ உங்களை விட்டும் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ شَىْءٍؕ எதையும் اِنِ இல்லை الْحُكْمُ அதிகாரம் اِلَّا தவிர لِلّٰهِؕ அல்லாஹ்வுக்கே عَلَيْهِ அவன் மீதே تَوَكَّلْتُۚ நான் நம்பிக்கை வைத்து விட்டேன் وَعَلَيْهِ அவன் மீதே فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கவும் الْمُتَوَكِّلُوْنَ நம்பிக்கை வைப்பவர்கள்
12:67. (பின்னும்) அவர், “என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது; (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!” என்று கூறினார்.
12:67. பின்னும் (அவர்களை நோக்கி) ‘‘என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் எதையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்புபவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்'' என்றார்.
12:67. பிறகு யஃகூப் கூறினார்: “என்னுடைய மக்களே! (எகிப்தின் தலைநகரினுள்) நீங்கள் எல்லோரும் ஒரே வாயில் வழியாக நுழையாதீர்கள்! மாறாக பல்வேறு வாயில்கள் வழியாக நுழையுங்கள். ஆயினும், அல்லாஹ்வின் நாட்டத்திலிருந்து உங்களை என்னால் சிறிதும் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே அன்றி வேறெவருக்கும் இல்லை. நான் அவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். சார்ந்திருப்பவர்கள் அனைவரும் முழுமையாக அவனைச் சார்ந்திருக்கட்டும்!”
12:67. இன்னும் (அவர்களிடம்,) “என் (அருமை) மக்களே! (எகிப்தினுள்) ஒரே வாசலில் நுழையாதீர்கள், வெவ்வேறு வாசல்களில் நுழையுங்கள், அல்லாஹ்விடமிருந்து (ஏற்படவிருக்கும்) எந்த ஒன்றை விட்டும் உங்களை நான் தடுத்துவிடவும் முடியாது, (ஏனென்றால், சகல) அதிகாரம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை, (உங்கள் யாவரையும் அவனிடமே ஒப்படைத்து முழுமையாக) அவன் மீது நம்பிக்கை வைத்துவிட்டேன், ஆகவே, முழுமையாக நம்பிக்கை வைக்கிறவர்கள் (இவ்வாறே) அவன் மிதே (முழுமையாக நம்பிக்கை வைக்கவும்” என்றார்.
12:68 وَلَمَّا دَخَلُوْا مِنْ حَيْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕمَا كَانَ يُغْنِىْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَىْءٍ اِلَّا حَاجَةً فِىْ نَفْسِ يَعْقُوْبَ قَضٰٮهَاؕ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
وَلَمَّا போது دَخَلُوْا நுழைந்தனர் مِنْ حَيْثُ முறையில் اَمَرَ கட்டளையிட்டார் هُمْ அவர்களுக்கு اَبُوْهُمْ தந்தை/தங்கள் ؕمَا كَانَ يُغْنِىْ தடுப்பதாக இல்லை عَنْهُمْ அவர்களைவிட்டு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ شَىْءٍ எதையும் اِلَّا ஒரு தேவை حَاجَةً தவிர فِىْ نَفْسِ மனதில் يَعْقُوْبَ யஃகூபுடைய قَضٰٮهَاؕ நிறைவேற்றினார்/அதை وَاِنَّهٗ நிச்சயமாக அவர் لَذُوْ عِلْمٍ அறிவுடையவர் لِّمَا நாம் கற்பித்த காரணத்தால் عَلَّمْنٰهُ அவருக்கு وَلٰكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
12:68. (மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
12:68. (எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஅகூபினுடைய மனதிலிருந்த (ஓர்) எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய (விதியில் உள்ள எந்த) ஒரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. (ஏனென்றால், இறுதியாக புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதை) அறிந்தவராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதை) அறியாதவர்களாகவே இருந்தனர்.
12:68. ஆனால் (நடந்தது இது தான்:) அவர்கள் தம் தந்தை கட்டளையிட்டபடி நகரினுள் (பல்வேறு வாயில்கள் வழியாக) நுழைந்தபோது அவர்களின் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக எவ்விதப் பலனையும் அவர்களுக்கு அளித்திடவில்லை. ஆனால் யஃகூபின் மனத்திற்குள் ஒரு சஞ்சலம் இருந்தது. அதனை நீக்குவதற்கு அவராக ஒரு முயற்சி செய்து கொண்டார். மேலும், அவருக்கு நாம் கற்றுத் தந்தவற்றைக் கொண்டு அவர் அறிவுடையவராகவே திகழ்ந்தார். ஆனால், மக்களில் பெரும்பாலோர் (இந்த விஷயத்தின் எதார்த்தத்தை) அறிந்து கொள்வதில்லை.
12:68. மேலும், அவர்களின் தந்தை அவர்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்கள் (எகிப்தில்) நுழைந்தபோது யாஃகூபினுடைய மனதிலிருந்த ஒரு தேவையை-அதை அவர் நிறைவேற்றி விட்டார் என்பதைத் தவிர, அல்லாஹ்விடமிருந்து (ஏற்படயிருந்த) எந்த ஒன்றையும் அவர்களைவிட்டு அவர் தடுத்துவிடுபவராக இருக்கவில்லை, மேலும், நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவுடையவராக இருந்தார், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டார்கள்.
12:69 وَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَخَاهُ قَالَ اِنِّىْۤ اَنَا اَخُوْكَ فَلَا تَبْتَٮِٕسْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
وَلَمَّا போது دَخَلُوْا நுழைந்தனர் عَلٰى يُوْسُفَ யூஸுஃபிடம் اٰوٰٓى ஒதுக்கிக் கொண்டார் اِلَيْهِ தன் பக்கம் اَخَاهُ தன் சகோதரனை قَالَ கூறினார் اِنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் اَخُوْكَ உம் சகோதரன் فَلَا تَبْتَٮِٕسْ ஆகவே வேதனைப்படாதே بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ அவர்கள்செய்வார்கள்
12:69. (பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.
12:69. அவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உமது சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீர் கவலைப்படாதீர்'' என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உம்மை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்.)
12:69. அவர்கள் யூஸுஃபின் அவைக்கு வந்தபோது அவர் தம் சகோதரரை மட்டுமே தம்மருகே அமர்த்திக் கொண்டார். பிறகு, “நான்தான் (காணாமல் போன) உன்னுடைய சகோதரன்; எனவே, இவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக நீ வருந்தாதே!” என்று கூறினார்.
12:69. மேலும், யூஸுஃபிடம் அவர்கள் நுழைந்தபொழுது, அவர்கள் சகோதர(ன் புன்யாமீ)னைத் (தனியாக அழைத்து) தன்பால் ஒதுக்கிக் கொண்டு “நிச்சயமாக நான்தான் உம்முடைய சகோதரன் (யூஸுஃப்) ஆகவே, (எனக்கு இவர்கள்) செய்தவற்றைப் பற்றி நீர் கவலைப்படாதீர்” எனறு (இரகசியமாகக்) கூறினார்.
12:70 فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِىْ رَحْلِ اَخِيْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَ يَّـتُهَا الْعِيْرُ اِنَّكُمْ لَسَارِقُوْنَ
فَلَمَّا அவர் தயார்படுத்தியபோது جَهَّزَهُمْ அவர்களுக்கு بِجَهَازِهِمْ பொருள்களை/அவர்களுடைய جَعَلَ வைத்தார் السِّقَايَةَ குவளையை فِىْ رَحْلِ சுமையில் اَخِيْهِ தன் சகோதரனின் ثُمَّ பிறகு اَذَّنَ அறிவித்தார் مُؤَذِّنٌ ஓர் அறிவிப்பாளர் اَ يَّـتُهَا الْعِيْرُ ஓ! பயணக் கூட்டத்தார்களே! اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَسَارِقُوْنَ திருடர்கள்தான்
12:70. பின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!” என்று கூறினார்.
12:70. பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன் சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்து விட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) ‘‘ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்'' என்று சப்தமிட்டான்.
12:70. யூஸுஃப் (தம் சகோதரர்களாகிய) அவர்களுக்கு வேண்டிய பொருள்களை வழங்கிட ஏற்பாடு செய்தபின் தம் சகோதரரின் பொதியுனுள் தமது கோப்பையை வைத்துவிட்டார். பிறகு அறிவிப்பாளர் ஒருவர், “பயணக்கூட்டத்தினரே! நீங்களெல்லோரும் திருடர்கள்!” என உரக்கக் கூவினார்.
12:70. பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார் செய்தபொழுது தன்னுடைய சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்) குவளையை ஆக்கி விட்டார், பின்னர், (அவர்கள் சிறிது தூரம் செல்லவே) “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே” என்று ஓர் அறிவிப்பாளர் அறிவித்தார்.
12:71 قَالُوْا وَاَقْبَلُوْا عَلَيْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ
قَالُوْا கூறினர் وَاَقْبَلُوْا இன்னும் முன்னோக்கி வந்தனர் عَلَيْهِمْ அவர்கள் பக்கம் مَّاذَا எதை? تَفْقِدُوْنَ இழக்கிறீர்கள்
12:71. (அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, “நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்” எனக் கேட்டார்கள்.
12:71. அதற்கவர்கள், இவர்களை முன்னோக்கி வந்து ‘‘நீங்கள் எதை இழந்து விட்டீர்கள்?'' என்று கேட்டார்கள்.
12:71. அதற்கு அவர்கள் அவரை நோக்கித் திரும்பி வந்து, “உங்களுடைய எந்தப் பொருள் காணாமல் போய்விட்டது?” என்று வினவினார்கள்.
12:71. அ(தற்க)வர்கள், இவர்களை முன்னோக்கி வந்து “நீங்கள் எதை இழந்து விட்டீர்கள்?” என்று கேட்டார்கள்.
12:72 قَالُوْا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَآءَ بِهٖ حِمْلُ بَعِيْرٍ وَّاَنَا بِهٖ زَعِيْمٌ
قَالُوْا கூறினர் نَفْقِدُ இழக்கிறோம் صُوَاعَ குவளையை الْمَلِكِ அரசருடைய وَلِمَنْ எவருக்கு? جَآءَ வந்தார் بِهٖ அதைக் கொண்டு حِمْلُ சுமை بَعِيْرٍ ஓர் ஒட்டகை وَّاَنَا நான் بِهٖ அதற்கு زَعِيْمٌ பொறுப்பாளன்
12:72. “நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்; அதனை எவர்கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை (தானியம் சன்மானமாக) உண்டு; இதற்கு நானே பொறுப்பாளி” என்று கூறினார்கள்.
12:72. அதற்கவர்கள், ‘‘அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதை எவர் (தேடிக்) கொடுத்த போதிலும் அவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி'' என்று (அவர்களில் ஒருவன்) கூறினான்.
12:72. அதற்கு (அரசு ஊழியர்களாகிய) அவர்கள், “அரசரின் அளவுக் கோப்பையைக் காணவில்லை” என்று கூறினார்கள். மேலும் (அந்த ஊழியர்களின் தலைவர் கூறினார்:) “யார் அதனைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை அளவு வெகுமதி உண்டு; அதனை வாங்கித்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.”
12:72. அ(தற்க)வர்கள், “அரசருடைய (ஒரு பொற்) குவளையை நாங்கள் இழந்துவிட்டோம், மேலும், அதனை எவர் (தேடிக்) கொண்டுவந்தபோதிலும் அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை(தானியம் வெகுமதி) உண்டு, இதற்கு நானே பொறுப்பாளியாவேன்” என்று (அவர்களில் ஒருவன்) கூறினான்.
12:73 قَالُوْا تَاللّٰهِ لَـقَدْ عَلِمْتُمْ مَّا جِئْنَا لِـنُفْسِدَ فِى الْاَرْضِ وَمَا كُنَّا سَارِقِيْنَ
قَالُوْا கூறினர் تَاللّٰهِ அல்லாஹ் மீது சத்தியமாக لَـقَدْ عَلِمْتُمْ நீங்கள்அறிந்திருக்கிறீர்கள் مَّا جِئْنَا நாங்கள் வரவில்லை لِـنُفْسِدَ நாங்கள் விஷமம் செய்வதற்கு فِى الْاَرْضِ இவ்வூரில் وَمَا كُنَّا இன்னும் நாங்கள் இருக்கவில்லை سَارِقِيْنَ திருடர்களாக
12:73. (அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்” என்றார்கள்.
12:73. அதற்கு இவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்காக வரவில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். மேலும், நாங்கள் திருடுபவர்களும் அல்ல'' என்று கூறினார்கள்.
12:73. அச்சகோதரர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இந்த நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை என்பதையும், நாங்கள் திருடர்கள் அல்லர் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.”
12:73. அ(தற்க)வர்கள் “அல்லாஹ்வின்மீது சத்தியமாக நாங்கள் (இப்)பூமியில் குழப்பம் செய்வதற்காக வரவில்லை என்பதைத் திட்டமாக நீங்களும், நன்கறிந்திருக்கிறீர்கள், அன்றியும், நாங்கள் திருடர்களாக இருந்ததுமில்லை” என்று கூறினார்கள்.
12:74 قَالُوْا فَمَا جَزَاۤؤُهٗۤ اِنْ كُنْتُمْ كٰذِبِيْنَ
قَالُوْا فَمَا جَزَاۤؤُهٗۤ கூறினர்/என்ன?/தண்டனை/அதன் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் كٰذِبِيْنَ பொய்யர்களாக
12:74. (அதற்கு) அவர்கள், “நீங்கள் பொய்யர்களாக இருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?” என்று கேட்டார்கள்.
12:74. அதற்கு அவர்கள் ‘‘நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அதற்குரிய தண்டனை என்ன?'' என்று கேட்டனர்.
12:74. அதற்கு அவர்கள், “சரி, நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபணமானால் திருடியவருக்குரிய தண்டனை என்ன?” என்று வினவினார்கள.
12:74. அ(தற்கவர்கள், “நீங்கள் (இதில்) பொய்யர்களாயிருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?” என்று கேட்டனர்.
12:75 قَالُوْا جَزَاۤؤُهٗ مَنْ وُّجِدَ فِىْ رَحْلِهٖ فَهُوَ جَزَاۤؤُهٗؕ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ
قَالُوْا கூறினர் جَزَاۤؤُهٗ அதன் தண்டனை مَنْ எவர் وُّجِدَ காணப்பட்டது فِىْ சுமையில் رَحْلِهٖ அவருடைய فَهُوَ அவரே جَزَاۤؤُهٗؕ அதற்குரிய தண்டனையாவார் كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى நாம் தண்டிப்போம் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களை
12:75. அதற்குரிய தண்டனையாவது, “எவருடைய சுமையில் அது காணப்படுகிறதோ (அவரை பிடித்து வைத்துக் கொள்வதே) அதற்குத் தண்டனை; அநியாயம் செய்வோரை இவ்வாறே நாங்கள் தண்டிக்கிறோம்” என்று (அந்த சகோதரர்கள்) கூறினார்கள்.
12:75. அதற்கவர்கள் ‘‘எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவனே அதற்குரிய தண்டனையாவான். (ஆகவே, அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம். திருடும்) அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்'' என்று கூறினார்கள்.
12:75. அதற்கவர்கள் “அவருக்குரிய தண்டனை...? எவருடைய மூட்டையில் அந்தப் பொருள் காணப்படுகின்றதோ அவரைப் பிடித்து வைத்துக்கொள்வதே அவருக்குரிய தண்டனையாகும். இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு இம்முறையில்தான் நாங்கள் தண்டனை வழங்குவோம்” என்று மறுமொழி கூறினார்கள்.
12:75. “இதற்குரிய தண்டனையானது, எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அப்போது அவனே அதற்குரிய தண்டனையாகும், அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்? என்று அவர்கள் கூறினார்கள்.
12:76 فَبَدَاَ بِاَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَآءِ اَخِيْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَآءِ اَخِيْهِؕ كَذٰلِكَ كِدْنَا لِيُوْسُفَؕ مَا كَانَ لِيَاْخُذَ اَخَاهُ فِىْ دِيْنِ الْمَلِكِ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُؕ وَفَوْقَ كُلِّ ذِىْ عِلْمٍ عَلِيْمٌ
فَبَدَاَ ஆரம்பித்தார் بِاَوْعِيَتِهِمْ மூட்டைகளில்/அவர்களின் قَبْلَ முன்பாக وِعَآءِ மூட்டைக்கு اَخِيْهِ தன் சகோதரனின் ثُمَّ اسْتَخْرَجَهَا பிறகு/வெளிப்படுத்தினார்/அதை مِنْ وِّعَآءِ மூட்டையிலிருந்து اَخِيْهِؕ தன் சகோதரனின் كَذٰلِكَ இப்படித்தான் كِدْنَا காரணம் செய்தோம் لِيُوْسُفَؕ யூஸுஃபுக்கு مَا كَانَ அவர் இல்லை لِيَاْخُذَ எடுப்பவராக اَخَاهُ தன் சகோதரனை فِىْ دِيْنِ சட்டப்படி الْمَلِكِ அரசரின் اِلَّاۤ اَنْ يَّشَآءَ தவிர/நாடினால் اللّٰهُؕ அல்லாஹ் نَرْفَعُ உயர்த்துகின்றோம் دَرَجٰتٍ பதவிகளால் مَّنْ எவரை نَّشَآءُؕ விரும்புகின்றோம் وَفَوْقَ இன்னும் மேல் كُلِّ ஒவ்வொரு ذِىْ عِلْمٍ கல்வியுடையவர் عَلِيْمٌ ஒரு கல்விமான்
12:76. ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய பொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம் (சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
12:76. பின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவே) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலே தவிர அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒரு கல்விமான் இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும்விட மேலான கல்விமான்.)
12:76. (அப்போது யூஸுஃப்) தம் சகோதரரின் மூட்டையைச் சோதனையிடுவதற்கு முன் அவர்களின் மூட்டைகளைச் சோதனையிடத் தொடங்கினார். பின்னர் தம் சகோதரரின் மூட்டையிலிருந்து காணாமல் போன பொருளைக் கண்டெடுத்தார். இவ்வாறு (நமது உபாயத்தின் மூலம்) யூஸுஃபுக்கு நாம் உதவினோம். மன்னனின் தீனின்படி (அதாவது, எகிப்து நாட்டு அரசுச் சட்டப்படி) தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை; ஆனால் அல்லாஹ் அதனை நாடினாலே தவிர! நாம் நாடுபவர்களின் தகுதிகளை உயர்த்தி விடுகின்றோம். மேலும், அனைத்து அறிவாளிகளுக்கும் மேலாக ஓர் அறிவாளி இருக்கின்றான்.
12:76. ஆகவே, தன் சகோதர(ன் புன்யாமீனி)ன் பொதிக்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார், பின்னர் தன் சகோதரனின் பொதியிலிருந்து அதனை வெளிப்படுத்தினார், யூஸுஃபுக்கு இவ்வுபாயத்தை நாம் ஏற்படுத்திக்கொடுத்தோம், அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தன் சகோதரனை எடுத்துக் கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தார், நாம் நாடியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம், அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலாக (அவரைவிட) மிக அறிந்தவர் இருக்கிறார்.
12:77 قَالُوْۤا اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ ۚ فَاَسَرَّهَا يُوْسُفُ فِىْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْ ۚ قَالَ اَنْـتُمْ شَرٌّ مَّكَانًا ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ
قَالُوْۤا கூறினர் اِنْ يَّسْرِقْ அவர் திருடினால் فَقَدْ سَرَقَ திருடி விட்டான் اَخٌ ஒரு சகோதரன் لَّهٗ அவருடைய مِنْ قَبْلُ ۚ முன்னர் فَاَسَرَّهَا மறைத்தார்/அதை يُوْسُفُ யூஸுஃப் فِىْ نَفْسِهٖ தன் உள்ளத்தில் وَلَمْ வெளியாக்கவில்லை يُبْدِهَا அதை لَهُمْ ۚ அவர்களுக்கு قَالَ கூறினார் اَنْـتُمْ நீங்கள் شَرٌّ மிகவும் கெட்டவர்கள் مَّكَانًا ۚ தரம் وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا تَصِفُوْنَ நீங்கள் வருணிப்பதை
12:77. (அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.
12:77. (புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக் கொண்டு ‘‘நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதை அல்லாஹ் நன்கறிவான்'' என்று கூறிவிட்டார்.
12:77. அச்சகோதரர்கள் கூறலானார்கள்: “இவர் திருடினார் என்றால் ஆச்சரியம் எதுவுமில்லை; ஏனெனில் இதற்கு முன்பு (யூஸுஃப் எனும்) இவருடைய சகோதரரும் திருடியிருக்கின்றார்.” அவர்களின் இந்தப் பேச்சை யூஸுஃப் தம் மனத்திற்குள் வைத்துக் கொண்டார். உண்மை நிலையை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. “நீங்கள் மிகவும் கெட்டவர்கள்; மேலும், (என் முன்னிலையில் என்மீது) நீங்கள் எந்தக் குற்றச்சாட்டை சுமத்துகின்றீர்களோ, அதன் உண்மை நிலையை அல்லாஹ் நன்கறிவான்!” என்று (மெதுவாகக்) கூறினார்.
12:77. (இவ்வாறு கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்,)” அவன் (அதனைத் திருடியிருந்தால், அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாக திருடியே இருப்பான்” என்று கூறிக் கொண்டனர், யூஸுஃப் அவர்களுக்கு வெளியாக்காது அவர் அதைத் தன்மனதுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு “நீங்கள் இடத்தால் தீயவர்கள், (இவர் சகோதரரும் திருடியதாக) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதனை அல்லாஹ் மிக்க அறிந்தவன்” என்று (மனதில்) கூறிக் கொண்டார்.
12:78 قَالُوْا يٰۤاَيُّهَا الْعَزِيْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَيْخًا كَبِيْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗۚ اِنَّا نَرٰٮكَ مِنَ الْمُحْسِنِيْنَ
قَالُوْا கூறினர் يٰۤاَيُّهَا الْعَزِيْزُ ஓ அதிபரே! اِنَّ நிச்சயமாக لَهٗۤ அவருக்கு اَبًا ஒரு தந்தை شَيْخًا முதியவர் كَبِيْرًا பெரியவர் فَخُذْ எடுப்பீராக اَحَدَنَا எங்களில் ஒருவரை مَكَانَهٗۚ இவருடைய இடத்தில் اِنَّا நிச்சயமாக நாம் نَرٰٮكَ காண்கிறோம்/உம்மை مِنَ الْمُحْسِنِيْنَ நல்லறம்புரிபவர்களில்
12:78. அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும்; நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வேரில் ஒருவராகவே காண்கிறோம்” என்று கூறினார்கள்.
12:78. அதற்கவர்கள் (யூஸுஃபை நோக்கி எகிப்தின் அதிபதியாகிய) ‘‘அஜீஸே! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீர் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீர் எடுத்துக்கொள்வீராக. நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்'' என்று கூறினார்கள்.
12:78. அவர்கள் கூறினார்கள்: “அரசாதிபதியே! (அஜீஸே!) இவருடைய தந்தை மிகவும் வயது முதிர்ந்தவராய் இருக்கின்றார். எனவே இவருக்குப் பதிலாக எங்களில் எவரையேனும் நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்! திண்ணமாக, உங்களை மிகவும் நல்லவராக நாங்கள் காண்கிறோம்.”
12:78. அ(தற்க)வர்கள் (யூஸுஃபிடம், எகிப்திய அரசின்) “அமைச்சரே! நிச்சயமாக முதிர்ச்சியடைந்த வயோதிகரான தந்தை அவருக்கு இருக்கிறார், ஆகவே அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்வீராக! நிச்சயமாக நாம் உம்மை உபகாரம் செய்பவர்களில் (ஒருவராகக்)காண்கிறோம்” என்று கூறினார்கள்.
12:79 قَالَ مَعَاذَ اللّٰهِ اَنْ نَّاْخُذَ اِلَّا مَنْ وَّجَدْنَا مَتَاعَنَا عِنْدَهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّظٰلِمُوْنَ
قَالَ கூறினார் مَعَاذَ பாதுகாப்பானாக اللّٰهِ அல்லாஹ் اَنْ نَّاْخُذَ நாம் பிடிப்பதை اِلَّا தவிர مَنْ எவரை وَّجَدْنَا கண்டோம் مَتَاعَنَا நம் பொருளை عِنْدَهٗۤ ۙ அவரிடம் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِذًا அப்படி செய்தால் لَّظٰلِمُوْنَ அநியாயக்காரர்கள்தான்
12:79. அதற்கவர், “எங்கள் பொருளை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
12:79. அதற்கவர், எவரிடம் நம் பொருள் காணப்பட்டதோ அவரைத் தவிர (மற்றெவரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டு அல்லாஹ் எங்களைக் காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நாம் பெரும் அநியாயக்காரர்கள் ஆகிவிடுவோம்'' என்று கூறிவிட்டார்.
12:79. அதற்கு யூஸுஃப் கூறினார்: “அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! எவரிடத்தில் எங்கள் பொருள் இருப்பதைக் கண்டோமோ, அவரைத் தவிர வேறொருவரை எவ்வாறு நாங்கள் பிடித்து வைத்துக் கொள்ள இயலும்? அவ்வாறு செய்தால் திண்ணமாக நாங்கள் அக்கிரமக்காரர்களாகி விடுவோம்.”
12:79. அ(தற்க)வர், “எம்முடைய பொருளை எவரிடம் நாங்கள் பெற்றுக் கொண்டோமோ அவரைத் தவிர, (மற்றெவரையும்) பிடித்துக் கொள்ளாது (எங்களை) அல்லாஹ் காப்பாற்றுவானாக! (மற்றெவரையும் பிடித்துக் கொண்டால்) அச்சமயத்தில் நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று கூறி விட்டார்.
12:80 فَلَمَّا اسْتَايْــٴَــسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِيًّا ؕ قَالَ كَبِيْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَيْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِىْ يُوْسُفَ ۚ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰى يَاْذَنَ لِىْۤ اَبِىْۤ اَوْ يَحْكُمَ اللّٰهُ لِىْ ۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ
فَلَمَّا போது اسْتَايْــٴَــسُوْا அவர்கள் நம்பிக்கையிழந்தனர் مِنْهُ அவரிடம் خَلَصُوْا அவர்கள் விலகினர் نَجِيًّا ؕ ஆலோசித்தவர்களாக قَالَ கூறினார் كَبِيْرُ பெரியவர் هُمْ அவர்களில் اَلَمْ تَعْلَمُوْۤا நீங்கள் அறியவில்லையா? اَنَّ நிச்சயமாக اَبَاكُمْ தந்தை/உங்கள் قَدْ திட்டமாக اَخَذَ வாங்கினார் عَلَيْكُمْ உங்களிடம் مَّوْثِقًا ஓர் உறுதிமானத்தை مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَمِنْ قَبْلُ இன்னும் முன்னர் مَا فَرَّطْتُّمْ நீங்கள் தவறிழைத்ததை فِىْ يُوْسُفَ ۚ யூஸுஃப் விஷயத்தில் فَلَنْ اَبْرَحَ ஆகவே நகர மாட்டேன் الْاَرْضَ பூமியைவிட்டு حَتّٰى வரை يَاْذَنَ அனுமதியளிக்கின்றார் لِىْۤ எனக்கு اَبِىْۤ என் தந்தை اَوْ அல்லது يَحْكُمَ தீர்ப்பளிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لِىْ ۚ எனக்கு وَهُوَ அவன் خَيْرُ மிக மேலானவன் الْحٰكِمِيْنَ தீர்ப்பளிப்பவர்களில்
12:80. எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்: நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.
12:80. அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரை அல்லது அல்லாஹ் எனக்கு ஒரு தீர்ப்பளிக்கும் வரை இங்கிருந்து நான் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்'' என்று கூறினார்.
12:80. யூஸுஃபிடம் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, அவர்கள் எல்லோரும் தனியாகச் சென்று தங்களுக்கிடையே ஆலோசனை செய்தார்கள். அவர்களில் மூத்தவர் கூறினார்: “உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் வாக்குறுதி வாங்கியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியாதா? இதற்கு முன்னர் யூஸுஃபின் விவகாரத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, என் தந்தை எனக்கு அனுமதி தரும் வரையில் அல்லது அல்லாஹ் என் விஷயத்தில் ஏதாவது தீர்ப்பு வழங்கும் வரையில் நான் இங்கிருந்து வரவே மாட்டேன்! அவன் தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவனாவான்.
12:80. அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள், அவர்களில் பெரியவர், (மற்றவர்களிடம்), “உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் உறுதிமொழியை வாங்கியிருப்பதையும், இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த பெருங்குறையையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரையில், அல்லது அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கும் வரையில் (நான் இருக்கும்) இப்பூமியிலிருந்து நான் அகலவே மாட்டேன், தீர்ப்பளிப்போரில் அவன்தான் மிக்க மேலானவன்” என்று கூறினார்.
12:81 اِرْجِعُوْۤا اِلٰٓى اَبِيْكُمْ فَقُوْلُوْا يٰۤاَبَانَاۤ اِنَّ ابْنَكَ سَرَقَۚ وَمَا شَهِدْنَاۤ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حٰفِظِيْنَ
اِرْجِعُوْۤا திரும்பிச்செல்லுங்கள் اِلٰٓى اَبِيْكُمْ உங்கள் தந்தையிடம் فَقُوْلُوْا இன்னும் கூறுங்கள் يٰۤاَبَانَاۤ எங்கள் தந்தையே اِنَّ நிச்சயமாக ابْنَكَ உம் மகன் سَرَقَۚ திருடினான் وَمَا شَهِدْ சாட்சி பகரவில்லை نَاۤ நாங்கள் اِلَّا தவிர بِمَا عَلِمْنَا நாங்கள் அறிந்ததைக் கொண்டு وَمَا كُنَّا நாங்கள் இருக்கவில்லை لِلْغَيْبِ மறைவானவற்றை حٰفِظِيْنَ பாதுகாப்பவர்களாக
12:81. ஆகவே, “நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, “எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை; மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்;
12:81. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே தவிர (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்;
12:81. நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று கூறுங்கள்: எங்கள் தந்தையே! திண்ணமாக உங்கள் மகன் திருடிவிட்டார். அவர் திருடியதை நாங்கள் பார்க்கவில்லை; ஆனால் எங்களுக்குத் தெரியவந்ததைச் சொல்கின்றோம். மேலும், மறைவில் நடைபெற்ற விஷயங்களை எங்களால் கண்காணிக்க இயலவில்லை.
12:81. (மேலும், அவர்களிடம்) “நீங்கள் (யாவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யமீன்) நிச்சயமாகத் திருடி விட்டான், உண்மையாகவே நாங்கள் கண்டதையே அன்றி (வேறெதையும்) நாங்கள் கூறவில்லை, இன்னும், மறைவானவற்றின் பாதுகாவலர்களாகவும், நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுங்கள்.
12:82 وَسْــٴَــلِ الْقَرْيَةَ الَّتِىْ كُنَّا فِيْهَا وَالْعِيْرَ الَّتِىْ اَقْبَلْنَا فِيْهَاؕ وَاِنَّا لَصٰدِقُوْنَ
وَسْــٴَــلِ நீர் கேட்பீராக الْقَرْيَةَ ஊரை الَّتِىْ எது كُنَّا நாங்கள் இருந்தோம் فِيْهَا அதில் وَالْعِيْرَ இன்னும் பயணக் கூட்டம் الَّتِىْ எது اَقْبَلْنَا வந்தோம் فِيْهَاؕ அதில் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَصٰدِقُوْنَ உண்மையாளர்கள்தான்
12:82. “நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).
12:82. (நாங்கள் சொல்வதை நீர் நம்பாவிட்டால்) நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீர் கேட்டறிந்து கொள்வீராக. நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்'' (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.)
12:82. நாங்கள் தங்கியிருந்த ஊர் மக்களிடமும் (கேட்டுப் பாருங்கள்!) எந்தப் பயணக் கூட்டத்துடன் நாங்கள் வந்தோமோ அந்தப் பயணக் கூட்டத்திட மும் விசாரித்துப் பாருங்கள்; திண்ணமாக நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம்!”
12:82. “(எங்கள் கூற்றை நீங்கள் நம்பாவிட்டால்,) நாங்கள் தங்கியிருந்த அவ்வூராரையும், எங்களுடன் வந்த ஒட்டகைக் கூட்டத்தினரையும் நீங்கள் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள், நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாவோம்” (என்று சொல்லுங்கள்), என்று கூறியனுப்பினார்.
12:83 قَالَ بَلْ سَوَّلَتْ لَـكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاؕ فَصَبْرٌ جَمِيْلٌؕ عَسَى اللّٰهُ اَنْ يَّاْتِيَنِىْ بِهِمْ جَمِيْعًاؕ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
قَالَ கூறினார் بَلْ மாறாக سَوَّلَتْ அலங்கரித்தன لَـكُمْ உங்களுக்கு اَنْفُسُكُمْ உங்கள் ஆன்மாக்கள் اَمْرًاؕ ஒரு காரியத்தை فَصَبْرٌ ஆகவே பொறுமை جَمِيْلٌؕ அழகியது, நல்லது عَسَى கூடும் اللّٰهُ அல்லாஹ் اَنْ يَّاْتِيَنِىْ வருவான் / என்னிடம் بِهِمْ அவர்களைக்கொண்டு جَمِيْعًاؕ அனைவரையும் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْعَلِيْمُ நன்கறிந்தவன் الْحَكِيْمُ மகா ஞானவான்
12:83. (ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) “இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன; ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.
12:83. (ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதைத் தங்கள் தந்தை யஅகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் ‘‘நீங்கள் கூறுவது சரியல்ல!) மாறாக, உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' என்று கூறிவிட்டு,
12:83. (இதைக் கேட்ட) தந்தை கூறினார்: “உண்மை என்ன வெனில், உங்கள் மனம் இன்னொரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கி விட்டது. இப்போது நான் அழகிய பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் கொண்டு வந்து சேர்த்திடக் கூடும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், அனைத்துச் செயல்களையும் நுண்ணறிவோடு மேற்கொள்பவனும் ஆவான்!”
12:83. (ஊர்) திரும்பியவர்கள் நடந்தவற்றைத் தங்கள் தந்தையிடம் கூறவே அதற்கவர், “நீங்கள் கூறுவது) சரியல்ல! உங்கள் மனங்கள் ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டன, ஆகவே, அழகான பொறுமையைக் கைக்கொள்வதே மிக்க நன்று, அல்லாஹ் அவர்கள் யாவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்த்து வைக்கப் போதுமானவன், நிச்சயமாக அவனே யாவற்றையும் அறிந்தோன், தீர்க்கமான அறிவுடையோன்” என்று கூறினார்.
12:84 وَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰۤاَسَفٰى عَلٰى يُوْسُفَ وَابْيَـضَّتْ عَيْنٰهُ مِنَ الْحُـزْنِ فَهُوَ كَظِيْمٌ
وَتَوَلّٰى இன்னும் விலகினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰۤاَسَفٰى என் துயரமே عَلٰى மீது يُوْسُفَ யூஸுஃப் وَابْيَـضَّتْ வெளுத்தன عَيْنٰهُ அவரது இரு கண்கள் مِنَ الْحُـزْنِ கவலையால் فَهُوَ அவர் كَظِيْمٌ அடக்கிக் கொள்பவர்
12:84. பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
12:84. அவர்களை விட்டுவிலகிச் சென்று, ‘‘யூஸுஃபைப் பற்றி என் துக்கமே!'' என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார்.
12:84. பிறகு அவர், அவர்களை விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு, “ஐயகோ, யூஸுஃபே!” என்று புலம்பலானார். கவலையால் அவருடைய கண்கள் வெளுத்துப் போயிருந்தன. இந்தக் கடும் துன்பத்தை அவர் மனத்திற்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தார்.
12:84. இன்னும் அவர்களை விட்டு அவர் விலகிச்சென்று “யூஸுஃபைப் பற்றி ஏற்பட்டிருக்கும் என்னுடைய துக்கமே!” என்று அவர் (வருத்தப்பட்டுக்)கூறினார், அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் போயின, பின்னர், அவர் (தன் துக்கத்தையும்) விழுங்கி (அடக்கி)க் கொள்பவராக இருந்தார்.
12:85 قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ يُوْسُفَ حَتّٰى تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهَالِكِيْنَ
قَالُوْا கூறினர் تَاللّٰهِ அல்லாஹ் மீது சத்தியமாக تَفْتَؤُا تَذْكُرُ நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர் يُوْسُفَ யூஸுஃபை حَتّٰى வரை تَكُوْنَ ஆகுவீர் حَرَضًا அழிவை நெருங்கியவராக اَوْ அல்லது تَكُوْنَ ஆகுவீர் مِنَ الْهَالِكِيْنَ இறந்தவர்களில்
12:85. (இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
12:85. (இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீர் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரை (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்'' என்று கடிந்து கூறினார்கள்.
12:85. அதற்கு அவருடைய புதல்வர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃப் பற்றி கவலைப்பட்டு அந்தக் கவலையிலேயே உருகிப் போய்விடும் அளவுக்கு அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அவரை நினைத்துக்கொண்டே இருக்கிறீர்களே!” என்று கூறினர்.
12:85. (இதனைக் கண்ட அவருடைய மக்கள் தந்தையே)” அல்லாஹ்வின் மீது சத்தியமாக (நீங்கள் யூஸுஃபை நினைத்து நினைத்து) இளைத்தவராக நீர் ஆகிவிடும்வரை அல்லது அழிந்துவிடுவோரில் நீர் ஆகிவிடும்வரை யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர்” என்று (கடிந்து) கூறினார்கள்.
12:86 قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّـىْ وَحُزْنِىْۤ اِلَى اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
قَالَ கூறினார் اِنَّمَاۤ اَشْكُوْا நான் முறையிடுவதெல்லாம் بَثِّـىْ என் துக்கத்தை وَحُزْنِىْۤ இன்னும் என் கவலையை اِلَى اللّٰهِ அல்லாஹ்விடம்தான் وَاَعْلَمُ இன்னும் அறிவேன் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَا لَا تَعْلَمُوْنَ நீங்கள் அறியாதவற்றை
12:86. அதற்கவர், “என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்);
12:86. அதற்கவர் ‘‘என் கவலையையும் துக்கத்தையும் அல்லாஹ்விடமே நான் முறையிடுகிறேன். நீங்கள் அறியாதவற்றையும் அல்லாஹ்வி(ன் அருளி)னால் நான் அறிந்திருக்கிறேன்.
12:86. அதற்கு அவர் கூறினார்: “என்னுடைய துக்கத்தையும் துயரத்தையும் நான் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து நான் பெற்றிருக்கும் அறிவை நீங்கள் பெற்றிருக்கவில்லை.
12:86. அ(தற்க)வர், “என்னுடைய துக்கத்தையும், கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடமேதான், நீங்கள் அறியாதவற்றையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் மிக்க அறிந்திருக்கிறேன்” என்று கூறினார்.
12:87 يٰبَنِىَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ يُّوْسُفَ وَاَخِيْهِ وَلَا تَايْــٴَــسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِؕ اِنَّهٗ لَا يَايْــٴَــسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ
يٰبَنِىَّ என் பிள்ளைகளே اذْهَبُوْا செல்லுங்கள் فَتَحَسَّسُوْا இன்னும் தேடுங்கள் مِنْ يُّوْسُفَ யூஸுஃபை وَاَخِيْهِ இன்னும் அவரது சகோதரரை وَلَا تَايْــٴَــسُوْا நம்பிக்கை இழக்காதீர்கள் مِنْ رَّوْحِ அருளில் اللّٰهِؕ அல்லாஹ்வின் اِنَّهٗ நிச்சயமாக செய்தி لَا يَايْــٴَــسُ நம்பிக்கை இழக்க மாட்டார்(கள்) مِنْ رَّوْحِ அருளில் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَّا தவிர الْقَوْمُ மக்கள் الْكٰفِرُوْنَ நிராகரிக்கின்றவர்கள்
12:87. “என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்.
12:87. என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப்பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்'' என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார்.
12:87. என் பிள்ளைகளே! நீங்கள் சென்று யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரைப் பற்றித் தீர விசாரியுங்கள்; அல்லாஹ்வின் கருணையைக் குறித்து நிராசை அடையாதீர்கள்! நிராகரிக்கும் மக்கள்தாம் அவனுடைய கருணையைக் குறித்து நிராசை அடைகின்றார்கள்.
12:87. “என்னுடைய மக்களே! நீங்கள் செல்லுங்கள், பின்னர், யூஸுஃபையும், அவரது சகோதரரையும் துருவித்தேடுங்கள்; அல்லாஹ்வின் அருளிலிருந்து நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! நிச்சயமாக (அல்லாஹ்வின் மீது நம்பிக்கையற்ற) நிராகரிப்போரைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்” (என்றும் கூறினார்.)
12:88 فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يٰۤاَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰٮةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاؕ اِنَّ اللّٰهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ
فَلَمَّا போது دَخَلُوْا அவர்கள் நுழைந்தனர் عَلَيْهِ அவரிடம் قَالُوْا கூறினர் يٰۤاَيُّهَا الْعَزِيْزُ ஓ அதிபரே! مَسَّنَا ஏற்பட்டது/எங்களுக்கு وَاَهْلَنَا இன்னும் குடும்பத்திற்கும்/ எங்கள் الضُّرُّ வறுமை, கொடுமை وَجِئْنَا நாங்கள் வந்தோம் بِبِضَاعَةٍ ஒரு பொருளைக் கொண்டு مُّزْجٰٮةٍ அற்பமானது فَاَوْفِ ஆகவே முழு மைப்படுத்துவீராக لَنَا எங்களுக்கு الْكَيْلَ அளவையை وَتَصَدَّقْ இன்னும் தானம் புரிவீராக عَلَيْنَاؕ எங்கள் மீது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَجْزِى கூலியளிப்பான் الْمُتَصَدِّقِيْنَ தர்மசாலிகளுக்கு
12:88. அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
12:88. பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி (‘‘மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நல்ல பிரதிபலன் அளிப்பான்'' என்று கூறினார்கள்.
12:88. அவர்கள் (எகிப்து சென்று) யூஸுஃபின் அவைக்கு வந்தபோது கூறினார்கள்: “அரசாதிபதியே! எங்களையும், எங்கள் குடும்பத்தாரையும் கடுந்துன்பம் பீடித்துள்ளது. மேலும், நாங்கள் அற்பமான சில பொருள்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; (அவற்றுக்குப் பதிலாக) நீங்கள் எங்களுக்கு நிறைவாக தானியம் வழங்கி எங்களுக்கு நன்மை செய்யுங்கள்! இவ்வாறு நன்மை செய்வோருக்குத் திண்ணமாக அல்லாஹ் கூலி வழங்குகின்றான்.”
12:88. பிறகு, அவர்கள் (எகிப்துக்கு வந்து யூஸுஃபாகிய) அவர்பால் நுழைந்து அவரிடம் (எகிப்திய அரசின்) “அமைச்சரே” எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் (பஞ்சத்தின்) கொடுமை பீடித்துக் கொண்டது, (எங்களிடமிருந்த) அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம், ஆகவே, (அதனைப் பெற்றுக்கொண்டு) எங்களுக்கு வேண்டிய (தானியத்)தைப் பூரணமாக அளந்து கொடுத்து (மேற்கொண்டும்) எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்வோருக்கு நற்கூலி அளிப்பான்” என்று கூறினார்கள்.
12:89 قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِيُوْسُفَ وَاَخِيْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ
قَالَ கூறினார் هَلْ عَلِمْتُمْ நீங்கள்அறிந்தீர்களா? مَّا فَعَلْتُمْ என்ன செய்தீர்கள்? بِيُوْسُفَ யூஸுஃபுக்கு وَاَخِيْهِ இன்னும் அவருடைய சகோதரருக்கு اِذْ இருந்தபோது اَنْتُمْ நீங்கள் جٰهِلُوْنَ அறியாதவர்கள்
12:89. (அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.
12:89. (அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்.
12:89. (இதைக் கேட்டதும் பொறுக்க முடியாமல்) யூஸுஃப் கூறினார்: “நீங்கள் அறிவற்றவர்களாய் இருந்தபோது, யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது நீங்கள் அறிந்த விஷயம்தானே!”
12:89. (அச்சமயம் அவர்,) “நீங்கள் அறிவீனர்களாக இருந்தபோது, யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்.
12:90 قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ يُوْسُفُؕ قَالَ اَنَا يُوْسُفُ وَهٰذَاۤ اَخِىْ قَدْ مَنَّ اللّٰهُ عَلَيْنَاؕ اِنَّهٗ مَنْ يَّتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ
قَالُوْۤا கூறினர் ءَاِنَّكَ ?/நிச்சயமாக நீர் لَاَنْتَ நீர்தான் يُوْسُفُؕ யூஸுஃப் قَالَ கூறினார் اَنَا நான் يُوْسُفُ யூஸுஃப் وَهٰذَاۤ இன்னும் இவர் اَخِىْ என் சகோதரர் قَدْ திட்டமாக مَنَّ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْنَاؕ எங்கள் மீது اِنَّهٗ நிச்சயமாக செய்தி مَنْ يَّتَّقِ எவர் அஞ்சுவார் وَيَصْبِرْ இன்னும் பொறுப்பார் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُضِيْعُ வீணாக்க மாட்டான் اَجْرَ கூலியை الْمُحْسِنِيْنَ நல்லறம் புரிபவர்கள்
12:90. (அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார்.
12:90. அதற்கவர்கள் (திடுக்கிட்டு) ‘‘மெய்யாகவே நீர் யூஸுஃபாக இருப்பீரோ?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘நான்தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, சிரமங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவர்களின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை'' என்று கூறினார்.
12:90. உடனே அவர்கள், “நீர்தானா யூஸுஃப்?” என்று (ஆச்சரியத்துடன் கேட்டனர்.) அதற்கவர், “(ஆம்!) நான்தான் யூஸுஃப். இவர் என் சகோதரர்! அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்துள்ளான். திண்ணமாக, எவர்கள் இறையச்சம் கொண்டு, நிலைகுலையாது இருக்கின்றார்களோ அத்தகைய நல்லவர்களின் கூலியை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கி விடுவதில்லை!” என்று கூறினார்.
12:90. அ(தற்க)வர்கள் (திடுக்கிட்டு) “நிச்சயமாக நீர்தான், யூஸுஃபா,” என்று கேட்டார்கள், அ(தற்க)வர், “நான்தான் யூஸுஃப், இவர் என் சகோதரர், திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான், (ஏனென்றால்,) அது நிச்சயமாக எவர் பயபக்தியுடன் இருந்து (கஷ்டங்களையும் சகித்துப்) பொறுத்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தோரின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான்” என்று கூறினார்.
12:91 قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَيْنَا وَاِنْ كُنَّا لَخٰـطِــِٕيْنَ
قَالُوْا கூறினர் تَاللّٰهِ அல்லாஹ்வின் மீது சத்தியமாக لَقَدْ மேன்மைப் படுத்திவிட்டான் اٰثَرَكَ உம்மை اللّٰهُ அல்லாஹ் عَلَيْنَا எங்களை விட وَاِنْ كُنَّا நிச்சயமாகஇருந்தோம் لَخٰـطِــِٕيْنَ தவறிழைப்பவர் களாகத்தான்
12:91. அதற்கவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்” என்று கூறினார்கள்.
12:91. அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உமக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)'' என்று கூறினார்கள்.
12:91. அதற்கவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உண்மையில் அல்லாஹ் எங்களைவிட உமக்குச் சிறப்பை வழங்கியுள்ளான். மேலும், திண்ணமாக நாங்கள் தவறிழைத்தவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.
12:91. அ(தற்க)வர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உமக்கு பெரும்) தவறிழைத்தவர்களாக இருப்பினும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட(பெருங்கிருபை கொண்டு) உம்மை மேன்மையாக்கி வைத்திருக்கிறான்” என்று கூறினார்கள்.
12:92 قَالَ لَا تَثْرِيْبَ عَلَيْكُمُ الْيَوْمَؕ يَغْفِرُ اللّٰهُ لَـكُمْ وَهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
قَالَ கூறினார் لَا அறவே இல்லை تَثْرِيْبَ பழிப்பு عَلَيْكُمُ உங்கள் மீது الْيَوْمَؕ இன்றைய தினம் يَغْفِرُ மன்னிப்பான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களை وَهُوَ அவன் اَرْحَمُ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ கருணையாளர்களில்
12:92. அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
12:92. அதற்கவர் ‘‘இன்றைய தினம் உங்கள் மீது ஒரு குற்றமும் இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று கூறினார்.
12:92. அதற்கு அவர் கூறினார்: “இன்று உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னிப்பான். அவன் எல்லோரையும்விட அதிகம் கருணை புரிபவனாவான்.
12:92. அ(தற்க)வர் “இன்றையத்தினம் உங்கள் மீது யாதொரு நிந்தனையும் இல்லை, அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மகாக்கிருபையாளன்” என்று கூறினார்.
12:93 اِذْهَبُوْا بِقَمِيْصِىْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰى وَجْهِ اَبِىْ يَاْتِ بَصِيْرًاۚ وَاْتُوْنِىْ بِاَهْلِكُمْ اَجْمَعِيْنَ
اِذْهَبُوْا செல்லுங்கள் بِقَمِيْصِىْ எனது சட்டையைக் கொண்டு هٰذَا இந்த فَاَلْقُوْهُ போடுங்கள்/அதை عَلٰى وَجْهِ முகத்தில் اَبِىْ என் தந்தையின் يَاْتِ அவர் வருவார் بَصِيْرًاۚ பார்வையுடையவராக وَاْتُوْنِىْ வாருங்கள்/என்னிடம் بِاَهْلِكُمْ உங்கள் குடும்பத்தினரைக் கொண்டு اَجْمَعِيْنَ அனைவரையும்
12:93. “என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).
12:93. ‘‘நீங்கள் என் இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்'' என்று கூறி (அனுப்பி)னார்.
12:93. எனது இந்த அங்கியைக் கொண்டு சென்று என் தந்தையின் முகத்தில் படச் செய்யுங்கள்; அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துவிடும். மேலும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!”
12:93. “நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டுபோய் என் தந்தை முகத்தின் மீது போடுங்கள், (அதனால், உடனே) அவர் பார்வையுடையவராக(த்திரும்பி) வருவார், பின்னர், நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள யாவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்” என்று கூறி (அனுப்பி)னார்.
12:94 وَلَمَّا فَصَلَتِ الْعِيْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّىْ لَاَجِدُ رِيْحَ يُوْسُفَ لَوْلَاۤ اَنْ تُفَـنِّدُوْنِ
وَلَمَّا فَصَلَتِ பிரிந்த போது الْعِيْرُ பயணக் கூட்டம் قَالَ கூறினார் اَبُوْهُمْ அவர்களின் தந்தை اِنِّىْ நிச்சயமாக நான் لَاَجِدُ உறுதியாக பெறுகிறேன் رِيْحَ வாடையை يُوْسُفَ யூஸுஃபுடைய لَوْلَاۤ اَنْ تُفَـنِّدُوْنِ நீங்கள் அறிவீனனாக்காமல் இருக்கவேண்டுமே/என்னை
12:94. (அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!” என்றார்.
12:94. அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (‘‘இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமலிருக்க வேண்டுமே!'' என்றார்.
12:94. அந்தப் பயணக் கூட்டம் (எகிப்தை விட்டு) புறப்பட்டபோது, அவர்களின் தந்தை (கன்ஆன் என்ற ஊரில்) கூறினார்: “திண்ணமாக நான் யூஸுஃபின் நறுமணத்தை உணர்கின்றேன்; முதுமையில் நான் ஏதோ, அறிவிழந்து போய் பேசுவதாக நீங்கள் நினைத்துவிடாதீர்கள்!”
12:94. (அவர்களுடைய) ஒட்டகக்கூட்டம் (எகிப்திலிருந்து) பிரிந்த சமயமே அவர்களின் தந்தை “(இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன், (முதுமையின் காரணமாக) அறிவு மங்கிப் பேசுவதாக என்னை நீங்கள் கூறாதிருக்க வேண்டுமே!” என்றார்.
12:95 قَالُوْا تَاللّٰهِ اِنَّكَ لَفِىْ ضَلٰلِكَ الْقَدِيْمِ
قَالُوْا கூறினர் تَاللّٰهِ அல்லாஹ்வின் மீது சத்தியமாக اِنَّكَ நிச்சயமாக நீர் لَفِىْ ضَلٰلِكَ உம் தவறில்தான் الْقَدِيْمِ பழையது
12:95. (அதற்கவர்கள்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உங்களுடைய பழைய தவறிலேயே இருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள்.
12:95. (இதைச் செவியுற்ற அவருடைய மக்கள்) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மெய்யாகவே நீர் உமது பழைய தவறான எண்ணத்தில்தான் இருக்கிறீர்'' என்று கூறினார்கள்.
12:95. வீட்டிலுள்ளவர்கள் கூறினர்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (இன்னும்) உங்களுடைய பழைய மனக்குழப்பத்திலேயே உழன்று கொண்டிருக்கிறீர்கள்.”
12:95. (இதனைச் செவியுற்ற அவருடைய ஏனைய மக்கள்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் உம்முடைய பழைய வழிகேட்டில்தான் இருக்கிறீர்” என்று கூறினார்கள்.
12:96 فَلَمَّاۤ اَنْ جَآءَ الْبَشِيْرُ اَلْقٰٮهُ عَلٰى وَجْهِهٖ فَارْتَدَّ بَصِيْرًا ؕۚ قَالَ اَلَمْ اَقُلْ لَّـكُمْ ۚ ۙ اِنِّىْۤ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
فَلَمَّاۤ போது اَنْ جَآءَ வந்தார் الْبَشِيْرُ நற்செய்தியாளர் اَلْقٰٮهُ போட்டார்/அதை عَلٰى وَجْهِهٖ அவருடைய முகத்தில் فَارْتَدَّ அவர் திரும்பினார் بَصِيْرًا ؕۚ பார்வையுடையவராக قَالَ கூறினார் اَلَمْ اَقُلْ நான் கூறவில்லையா? لَّـكُمْ ۚ ۙ உங்களுக்கு اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعْلَمُ அறிவேன் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَا لَا تَعْلَمُوْنَ நீங்கள் அறியாதவற்றை
12:96. பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,
12:96. அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன் கண்) பார்வையை அடைந்து ‘‘(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாத வற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று கேட்டார்.
12:96. பிறகு நற்செய்தி அறிவிப்பவர் (யஃகூபிடம்) வந்தார்; யூஸுஃபின் அங்கியை அவருடைய முகத்தில் படச்செய்தார். உடனே அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துவிட்டது! (அப்போது) அவர் கூறினார்: “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என்று உங்களிடம் நான் முன்பே கூறவில்லையா?”
12:96. அப்போது (யூஸுஃபைப்பற்றி) நன்மாராயங்கூறுபவர் வந்து (யூஸுஃபுடைய சட்டையாகிய) அதனை அவர் (தந்தையின்) முகத்தின் மீது போடவே, அவர் (இழந்த தன்) பார்வையை அடைந்து, (யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிச்சயமாக நான் அறிவேன், என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கேட்டார்.
12:97 قَالُوْا يٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰـطِــِٕيْنَ
قَالُوْا கூறினர் يٰۤاَبَانَا எங்கள் தந்தையே اسْتَغْفِرْ மன்னிக்க கோருவீராக لَنَا எங்களுக்கு ذُنُوْبَنَاۤ எங்கள் பாவங்களை اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا இருந்தோம் خٰـطِــِٕيْنَ தவறிழைப்பவர்களாக
12:97. (அதற்கு அவர்கள்) “எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
12:97. (அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) ‘‘எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீர் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்'' என்று (அவர்களே) கூறினார்கள்.
12:97. பிறகு அவர்கள் எல்லோரும் “எங்கள் தந்தையே! நீங்கள் எங்கள் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுங்கள்; உண்மையிலேயே நாங்கள் தவறிழைத்தவர்கள்தாம்!” என்று வேண்டினார்கள்.
12:97. “எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு நீங்கள் எங்களுக்காக மன்னிப்புத் தேடுவீர்களாக! நிச்சயமாகவே நாங்கள் குற்றவாளிகளாகவே இருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
12:98 قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَـكُمْ رَبِّىْؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
قَالَ கூறினார் سَوْفَ اَسْتَغْفِرُ மன்னிப்புக் கோருவேன் لَـكُمْ உங்களுக்காக رَبِّىْؕ என் இறைவனிடம் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ பெரும் கருணையாளன்
12:98. நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.
12:98. அதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்'' என்று கூறினார்.
12:98. அதற்கவர், “நான் உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்புக்கோருவேன். திண்ணமாக அவன் மிக்க மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.
12:98. அ(தற்க)வர், “நான் என் இரட்சகனிடம் அடுத்து உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன், நிச்சயமாக அவனே மிக மன்னிப்போன், மிகக் கிருபையுடையோன்” என்று கூறினார்.
12:99 فَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَؕ
فَلَمَّا போது دَخَلُوْا நுழைந்தனர் عَلٰى يُوْسُفَ யூஸுஃபிடம் اٰوٰٓى அரவணைத்தார் اِلَيْهِ தன் பக்கம் اَبَوَيْهِ தன் பெற்றோரை وَقَالَ இன்னும் கூறினார் ادْخُلُوْا நுழையுங்கள் مِصْرَ எகிப்தில் اِنْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் اٰمِنِيْنَؕ அச்சமற்றவர்களாக
12:99. (பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.
12:99. (பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து) மிக மரியாதையுடன் வரவேற்று ‘‘(அல்லாஹ்வின் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்'' என்று கூறினார்.
12:99. பிறகு, அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரைத் தம்முடன் அமர்த்திக் கொண்டார். மேலும் (தம் குடும்பத்தார் அனைவரையும் நோக்கி,) “நகரத்தினுள் செல்லுங்கள்! அல்லாஹ் நாடினால் நிம்மதியுடனும் அமைதியுடனும் வாழ்வீர்கள்!” என்றார்.
12:99. (பின்னர், குடும்பத்துடன் கன் ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்து நுழைந்தபொழுது, அவர் தன் தாய் தந்தையை (மிக்க மரியாதையுடன் வரவேற்று) தன் பக்கம் சேர்த்துக் கொண்டு, “அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்” என்றும் கூறினார்.
12:100 وَرَفَعَ اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًاۚ وَقَالَ يٰۤاَبَتِ هٰذَا تَاْوِيْلُ رُءْيَاىَ مِنْ قَبْلُقَدْ جَعَلَهَا رَبِّىْ حَقًّاؕ وَقَدْ اَحْسَنَ بِىْۤ اِذْ اَخْرَجَنِىْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْۢ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِىْ وَبَيْنَ اِخْوَتِىْؕ اِنَّ رَبِّىْ لَطِيْفٌ لِّمَا يَشَآءُؕ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
وَرَفَعَ இன்னும் உயர்த்தினார் اَبَوَيْهِ தன் பெற்றோரை عَلَى மேல் الْعَرْشِ (அரச) கட்டில் وَخَرُّوْا இன்னும் விழுந்தனர் لَهٗ அவருக்கு سُجَّدًاۚ சிரம் பணிந்தவர்களாக وَقَالَ இன்னும் கூறினார் يٰۤاَبَتِ என் தந்தையே هٰذَا இது تَاْوِيْلُ விளக்கம் رُءْيَاىَ என் கனவின் مِنْ قَبْلُ முன்னர் قَدْ ஆக்கி விட்டான் جَعَلَهَا அதை رَبِّىْ என் இறைவன் حَقًّاؕ உண்மையாக وَقَدْ اَحْسَنَ நன்மை புரிந்திருக்கிறான் بِىْۤ எனக்கு اِذْ போது اَخْرَجَنِىْ அவன் வெளியேற்றினான்/என்னை مِنَ இருந்து السِّجْنِ சிறை وَجَآءَ இன்னும் வந்தான் بِكُمْ உங்களைக் கொண்டு مِّنَ இருந்து الْبَدْوِ கிராமம் مِنْۢ بَعْدِ பின்னர் اَنْ نَّزَغَ பிரிவினையை உண்டு பண்ணினான் الشَّيْطٰنُ ஷைத்தான் بَيْنِىْ எனக்கிடையில் وَبَيْنَ இன்னும் இடையில் اِخْوَتِىْؕ என் சகோதரர்கள் اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் لَطِيْفٌ மகா நுட்பமானவன் لِّمَا يَشَآءُؕ தான் நாடியதற்கு اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْعَلِيْمُ நன்கறிந்தவன் الْحَكِيْمُ மகா ஞானவான்
12:100. இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்.
12:100. பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதை செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) ‘‘என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவன். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்'' என்றார்.
12:100. (நகரத்தில் நுழைந்த பின்னர்) அவர் தம்முடைய தாய் தந்தையரை (தம் அருகிலிருந்த அரியணையின் மீது) அமர வைத்தார். அனைவரும் (தம்மையும் அறியாமல்) அவர் முன் சிரம் பணிந்தார்கள். அப்பொழுது யூஸுஃப் கூறினார்: “என் தந்தையே! நான் முன்னர் கண்ட கனவிற்கு இதுதான் விளக்கமாகும். என் இறைவன் அக்கனவை நனவாக்கிவிட்டான். மேலும் எனக்கு அவன் பேருதவி செய்தான். அதாவது சிறையிலிருந்து எனக்கு விடுதலை அளித்தான். எனக்கும் என்னுடைய சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்திய பின்னரும் உங்களையெல்லாம் பாலைவனச் சிற்றூரில் இருந்து (என்னிடம்) கொண்டுவந்து சேர்த்தான். உண்மை யாதெனில், என் இறைவன் மிக நுட்பமான முறையில் தன் நாட்டங்களை நிறைவேற்றுகின்றான். திண்ணமாக, அவன் நன்கறிந்தோனும் நுண்ணறிவாளனுமாவான்.
12:100. இன்னும், அவர் தன் பெற்றோரை சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (கண்ணியமாக அமரச்செய்யலா)னார், (எகிப்தின் அதிபதியாக இருந்த)அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தவர்களாகவும் விழுந்தார்கள், அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையிடம்) “என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் விளக்கம் இதுதான், என் இரட்சகன் அதனைத் திட்டமாக உண்மையாக்கிவிட்டான், (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை (அல்லாஹ்வாகிய) அவன் வெளியேற்றியபோது (அல்லாஹ்) எனக்குத் திட்டமாக பேருபகாரம் புரிந்துவிட்டான், எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும், உங்கள் யாவரையும் கிராமப்புறத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்துள்ளான், நிச்சயமாக என் இரட்சகன், தான் நாடியதை மிக நுட்பமாகச் செய்கின்றவன், நிச்சயமாக அவனே (யாவற்றையும்) நன்கறிந்தோன், தீர்க்கமான அறிவுடையோன்” என்றார்.
12:101 رَبِّ قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ
رَبِّ என் இறைவா قَدْ திட்டமாக اٰتَيْتَنِىْ எனக்கு தந்தாய் مِنَ الْمُلْكِ ஆட்சியை وَ عَلَّمْتَنِىْ இன்னும் கற்பித்தாய் / எனக்கு مِنْ تَاْوِيْلِ விளக்கத்தை الْاَحَادِيْثِ ۚ பேச்சுகளின் فَاطِرَ படைத்தவனே السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضِ இன்னும் பூமியை(யும்) اَنْتَ وَلِىّٖ நீ என் பாதுகாவலன் فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ ۚ இன்னும் மறுமை تَوَفَّنِىْ உயிர் கைப்பற்றிக் கொள்/என்னை مُسْلِمًا முஸ்லிமாக وَّاَلْحِقْنِىْ இன்னும் சேர்த்து விடு/என்னை بِالصّٰلِحِيْنَ நல்லவர்களுடன்
12:101. “என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)
12:101. ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!'' (என்று பிரார்த்தித்தார்.)
12:101. என் இறைவா! நீ எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்து கொள்ளும் முறையைக் கற்றுத் தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்க சீலர்களுடன் சேர்ப்பாயாக!”
12:101. (அன்றி) “என் இரட்சகனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்(தருள் புரிந்)து கனவுகளின் விளக்கங்களையும் எனக்குக் கற்பித்தாய்! வானங்களை மற்றும் பூமியைப் படைத்தவனே! இம்மையிலும், மறுமையிலும் நீயே என் பாதுகாவலன், முற்றிலும் (உனக்கு) கீழ்ப்படிந்த (முஸ்லீமான)வனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லோர்களுடன் என்னையும் சேர்த்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்.)
12:102 ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَۚ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ اَجْمَعُوْۤا اَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُوْنَ
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ இவை/விஷயங்களில் الْغَيْبِ மறைவான نُوْحِيْهِ வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை اِلَيْكَۚ உமக்கு وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை لَدَيْهِمْ அவர்களிடம் اِذْ போது اَجْمَعُوْۤا ஒருமித்து முடிவெடுத்தனர் اَمْرَهُمْ தங்கள்காரியத்தில் وَهُمْ அவர்கள் يَمْكُرُوْنَ சூழ்ச்சி செய்கின்றனர்
12:102. (நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
12:102. (நபியே) இது (நீர் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவற்றை நாம் உமக்கு வஹ்யி மூலமே அறிவித்தோம்.
12:102. (நபியே!) இவ்வரலாறு நீர் அறியாத செய்திகளைச் சேர்ந்ததாகும். அதனை நாம் உமக்கு வஹியின் மூலம் அறிவித்துக் கொண்டிருக்கின்றோம். யூஸுஃபின் சகோதரர்கள் சதித் திட்டம் தீட்டி, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று தங்களுக்குள் முடிவு செய்தபோது நீர் அவர்களிடையே இருக்கவில்லையே!
12:102. (நபியே) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும், இதை உமக்கு நாம் (வஹீ மூலமே) அறிவிக்கிறோம், இன்னும், அவர்கள் சூழ்ச்சி செய்கிறவர்களாக, (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்று) தங்கள் காரியத்தில் முடிவெடுக்க ஒருமித்தபோது நீர் அவர்களிடத்தில் இருக்கவுமில்லை.
12:103 وَمَاۤ اَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِيْنَ
وَمَاۤ இல்லை اَكْثَرُ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் وَلَوْ حَرَصْتَ நீர் பேராசைப்பட்டாலும் بِمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
12:103. ஆனால் நீர் எவ்வளவு அதிகமாக விரும்பினாலும் (அம்) மனிதர்களில் பெரும் பாலோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள்.
12:103. நீங்கள் எவ்வளவுதான் விரும்பியபோதிலும் (அந்த)மனிதரில் பெரும் பாலானவர்கள் (உம்மை நபி என்று) நம்பவே மாட்டார்கள்.
12:103. ஆனால், நீர் எவ்வளவுதான் விரும்பினாலும், மக்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ளக்கூடி யவர்களாய் இல்லை.
12:103. நீர் (எவ்வளவுதான்) பேராவல் கொண்டாலும் (அம்)மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வை) விசுவாசங்கொள்பவர்களாக இல்லை.
12:104 وَمَا تَسْـٴَــلُهُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّـلْعٰلَمِيْنَ
وَمَا நீர் கேட்பதில்லை تَسْـٴَــلُهُمْ அவர்களிடம் عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍؕ ஒரு கூலியையும் اِنْ இல்லை هُوَ இது اِلَّا தவிர ذِكْرٌ அறிவுரை لِّـلْعٰلَمِيْنَ அகிலகத்தார்களுக்கு
12:104. இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை. இது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை.
12:104. இதற்காக நீர் அவர்களிடத்தில் ஒரு கூலியும் கேட்பது இல்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்ல படிப்பினையே தவிர வேறில்லை.
12:104. உண்மையில் இதற்காக நீர் அவர்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. இந்தக் குர்ஆன், அகிலத்தார் அனைவருக்கும் உரிய ஒரு நல்லுரையே ஆகும்.
12:104. இதற்காக நீர் அவர்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்பதில்லை, அகிலத்தார்க்கும் இது ஒரு நல்லுபதேசமே தவிர (வேறு) இல்லை.
12:105 وَكَاَيِّنْ مِّنْ اٰيَةٍ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ يَمُرُّوْنَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ
وَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ اٰيَةٍ அத்தாட்சிகள் فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ வானங்களில்/இன்னும் பூமி يَمُرُّوْنَ செல்கின்றனர் عَلَيْهَا அவற்றின் அருகே وَهُمْ அவர்களோ عَنْهَا அவற்றை مُعْرِضُوْنَ புறக்கணிப்பவர்களாக
12:105. இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.
12:105. (இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர்.
12:105. வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. இவர்கள் அவற்றைக் கடந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள். ஆயினும் அவற்றைக் குறித்து சற்றும் கவனம் செலுத்துவதில்லை.
12:105. இன்னும், வானங்களில், மற்றும் பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, (ஆனால்) அவற்றை(ச் சிந்திக்காது) புறக்கணித்தவர்களாகவே அவற்றின் பக்கம் அவர்கள் (அனுதினமும்) செல்கின்றனர்.
12:106 وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ
وَمَا يُؤْمِنُ நம்பிக்கை கொள்ள மாட்டார்(கள்) اَكْثَرُ அதிகமானவர்(கள்) هُمْ அவர்களில் بِاللّٰهِ அல்லாஹ்வை اِلَّا தவிர وَهُمْ அவர்கள் مُّشْرِكُوْنَ இணைவைப்பவர்கள்
12:106. மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
12:106. அவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை, அவர்கள் அவனுக்கு இணைவைத்தே தவிர.
12:106. அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆயினும் (அவனோடு மற்றவர்களையும்) இணையாக்குகிறார்கள்.
12:106. மேலும், அவர்களில் பெரும்பாலோர்-அவர்கள் இணை வைக்கிறவர்களாகவே தவிர அல்லாஹ்வை விசுவாசிப்பதில்லை.
12:107 اَفَاَمِنُوْۤا اَنْ تَاْتِيَهُمْ غَاشِيَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَاْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّ هُمْ لَا يَشْعُرُوْنَ
اَفَاَمِنُوْۤا அச்சமற்றுவிட்டனரா? اَنْ تَاْتِيَهُمْ அவர்களுக்கு வருவதை غَاشِيَةٌ சூழக்கூடியது مِّنْ عَذَابِ வேதனையிலிருந்து اللّٰهِ அல்லாஹ்வின் اَوْ تَاْتِيَهُمُ அவர்கள்/வருவதை/அவர்களுக்கு السَّاعَةُ (முடிவு) காலம் بَغْتَةً திடீரென وَّ هُمْ அவர்கள் لَا يَشْعُرُوْنَ அறியமாட்டார்கள்
12:107. (அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?
12:107. (அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
12:107. அல்லாஹ்வின் வேதனைகளிலிருந்து அவர்களைத் திணற அடிக்கக்கூடிய ஒரு வேதனை அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று இறுதிநாள் அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றார்களா
12:107. (அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றியும், அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய முடிவு காலமான) மறுமை அவர்களுக்கு வந்து விடுவதைப் பற்றியும் அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
12:108 قُلْ هٰذِهٖ سَبِيْلِىْۤ اَدْعُوْۤا اِلَى اللّٰهِ ؔعَلٰى بَصِيْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِىْؕ وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
قُلْ கூறுவீராக هٰذِهٖ இது سَبِيْلِىْۤ என் வழி اَدْعُوْۤا அழைக்கின்றேன் (அழைக்கின்றோம்) اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் ؔعَلٰى மீது بَصِيْرَةٍ தெளிவான அறிவு اَنَا நான் وَمَنِ இன்னும் எவர் اتَّبَعَنِىْؕ பின்பற்றினார்/என்னை وَسُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் وَمَاۤ இல்லை اَنَا நான் مِنَ الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களில்
12:108. (நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.”
12:108. (நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.''
12:108. நீர் அவர்களிடம் தெளிவாகக் கூறி விடும்: “இதுதான் என்னுடைய வழி; நான் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் முழுத் தெளிவுடன் (எங்கள் பாதை எது என்பதை அறிந்து) இருக்கின்றோம்; மேலும் அல்லாஹ் தூய்மையானவன். அவனுக்கு இணை கற்பிப்பவர்களுடன் எனக்கு எத்தகைய தொடர்பும் இல்லை.
12:108. (நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஆதாரத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன், நான் அவனுக்கு இணைவைப்போரில் உள்ளவனுமல்லன்.
12:109 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ مِّنْ اَهْلِ الْقُرٰىؕ اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ وَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّـلَّذِيْنَ اتَّقَوْا ؕ اَفَلَا تَعْقِلُوْنَ
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் اِلَّا தவிர رِجَالًا ஆண்களை نُّوْحِىْۤ வஹீ அறிவிப்போம் اِلَيْهِمْ அவர்களுக்கு مِّنْ اَهْلِ الْقُرٰىؕ ஊர்வாசிகளில் اَفَلَمْ يَسِيْرُوْا அவர்கள் செல்லவில்லையா? فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا பார்ப்பார்கள் كَيْفَ எப்படி? كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْؕ இவர்களுக்கு முன்னர் وَلَدَارُ வீடுதான் الْاٰخِرَةِ மறுமையின் خَيْرٌ மிக மேலானது لِّـلَّذِيْنَ எவர்களுக்கு اتَّقَوْا ؕ அஞ்சினார்கள் اَفَلَا تَعْقِلُوْنَ நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
12:109. (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?
12:109. உமக்கு முன்னர் பற்பல ஊராருக்கும் நாம் அனுப்பிய தூதர்கள் அவ்வூர்களிலிருந்த ஆடவர்களே தவிர வேறில்லை. எனினும், அவர்களுக்கு (நம் கட்டளைகளை) வஹ்யி மூலம் அறிவித்தோம். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை இவர்கள் கண்டு கொள்வார்கள். மறுமையின் வீடுதான் இறையச்சம் உடையவர்களுக்கு மிக்க மேலானது. இவ்வளவுகூட நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
12:109. (நபியே!) உமக்கு முன்னர் (பல்வேறு ஊர்களுக்கு) தூதர்களாக நாம் அனுப்பி வைத்திருந்த அனைவரும் மனிதர்களாகவும் அந்தந்த ஊர்களைச் சார்ந்தவர்களாகவும்தாம் இருந்தார்கள். அவர்களுக்கு நாம் வஹி அறிவித்துக் கொண்டிருந்தோம். பின்னர் இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் சென்றுபோனவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? எவர்கள் (இறைத்தூதர்களின் சொல்லை ஏற்று) இறையச்சத்துடன் வாழ்ந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மறுமை இல்லம் மிகவும் சிறந்ததாகும். (இனியும்) நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
12:109. உமக்கு முன்னர் ஊர்வாசிகளிலுள்ள (மனித இனத்தவர்களில்) ஆடவர்களை அல்லாமல் (மலக்குகளை) நாம் (தூதர்களாக) அனுப்பவில்லை, அவர்களுக்கு (நம்முடைய கட்டளைகளை) வஹீமூலம் அறிவிக்கின்றோம், அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா?” (அவ்வாறு பிரயாணம் செய்தால்) அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி ஆயிற்று என்பதை அவர்கள் கண்டுகொள்வார்கள், மறுமையின் வீடோ பயபக்தியுடையோர்களுக்கு மிக்க மேலானது, நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?
12:110 حَتّٰۤى اِذَا اسْتَيْــٴَــسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ فَـنُجِّىَ مَنْ نَّشَآءُ ؕ وَلَا يُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ
حَتّٰۤى இறுதியாக اِذَا போது اسْتَيْــٴَــسَ நிராசையடைந்தார்(கள்) الرُّسُلُ தூதர்கள் وَظَنُّوْۤا இன்னும் எண்ணினர் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் قَدْ كُذِبُوْا பொய்ப்பிக்கப்பட்டனர் جَآءَ வந்தது هُمْ அவர்களை نَصْرُنَا ۙ நம் உதவி فَـنُجِّىَ பாதுகாக்கப்பட்டனர் مَنْ نَّشَآءُ ؕ எவர்/நாடுகின்றோம் وَلَا يُرَدُّ இன்னும் திருப்பப்படாது بَاْسُنَا நம் தண்டனை عَنِ الْقَوْمِ சமுதாயத்தை விட்டு الْمُجْرِمِيْنَ குற்றவாளிகள்,பாவிகள்
12:110. (நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.
12:110. நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நினைத்து, நம்பிக்கை இழந்து விடும்வரை (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம்.) பின்னர், நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களை விட்டு நம் வேதனை நீக்கப்படாது.
12:110. (முந்திய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்று வந்தார்கள். ஆனால் மக்கள் அதனைக் கேட்கவில்லை) எதுவரையெனில், மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும் தங்களிடம் பொய்தான் சொல்லப்பட்டது என்று மக்களும் கருதலானார்கள். அப்பொழுது, நம் உதவி இறைத்தூதர்களுக்குக் கிடைத்துவிட்டது. (இவ்வாறான சந்தர்ப்பங்களில் நமது நியதி இதுதான்:) நாம் யாரை நாடுகின்றோமோ அவர்களைக் காப்பாற்றி விடுகின்றோம். மேலும் குற்றம் புரிந்த மக்களை விட்டு நமது தண்டனை அகற்றப்படுவதே இல்லை.
12:110. (நபியே! எந்த சமூகத்தார் மீதும் தண்டனையை நாம் துரிதப்படுத்தவில்லை) எதுவரையெனில், (தம் சமூகத்தவர்கள் விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள் என அத்)தூதர்கள் நிராசை அடைந்து, நிச்சயமாக நாம் (அவர்களால்) பொய்ப் படுத்தப்பட்டு விட்டோம் என அவர்கள் உறுதி கொண்டுவிட்டனர், (அப்போது) அவர்களுக்கு நம்முடைய உதவி வந்தது, (பின்னர்) நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர், குற்றவாளிகளான சமூகத்தாரை விட்டும், நம் தண்டனை நீக்கப்படவுமாட்டாது.
12:111 لَـقَدْ كَانَ فِىْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِؕ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَـرٰى وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَىْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ
لَـقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கிறது فِىْ قَصَصِهِمْ இவர்களுடைய சரித்திரங்களில் عِبْرَةٌ ஒரு படிப்பினை لِّاُولِى الْاَلْبَابِؕ அறிவுடையவர்களுக்கு مَا كَانَ இருக்கவில்லை حَدِيْثًا ஒரு செய்தியாக يُّفْتَـرٰى புனையப்படுகின்ற وَلٰـكِنْ எனினும் تَصْدِيْقَ உண்மைப்படுத்துவது الَّذِىْ எது بَيْنَ يَدَيْهِ தனக்கு முன் وَتَفْصِيْلَ இன்னும் விவரிப்பது كُلِّ شَىْءٍ எல்லாவற்றை وَّهُدًى இன்னும் நேர்வழி وَّرَحْمَةً இன்னும் ஓர் அருள் لِّـقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள்
12:111. (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
12:111. அறிவுடையவர்களுக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையல்ல; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. மேலும், நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது.
12:111. முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது. (குர்ஆனில் விவரித்துக் கூறப்படுகின்ற) இச்செய்திகள் புனைந்துரைக்கப்பட்டவை அல்ல. மாறாக, இந்தக் குர்ஆன் தனக்கு முன் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பிக்கக் கூடியதாகவும், ஒவ்வொன்றையும் விவரிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது; மேலும், நம்பிக்கை கொள்ளும் சமூகத்தாருக்கு நேர்வழியாகவும் அருளாகவும் திகழ்கின்றது.
12:111. அறிவுடையோருக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய வரலாற்றில் நல்லதொரு படிப்பினை திட்டமாக இருக்கிறது, (இந்தக் குர் ஆன்) பொய்யாகக் கற்பனை செய்யப்படுகின்ற செய்தியாக இருந்ததில்லை, ஆயினும், இதற்கு முன் உள்ள (வேதத்)தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது, அன்றியும், விசுவாசங் கொண்டோருக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.