15. ஸூரத்துல் ஹிஜ்ர்(மலைப்பாறை)
மக்கீ, வசனங்கள்: 99
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
15:1 الۤرٰ تِلْكَ اٰيٰتُ الْـكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِيْنٍ
الۤرٰ அலிஃப்; லாம்; றா تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْـكِتٰبِ வேதங்களின் وَقُرْاٰنٍ இன்னும் குர்ஆனின் مُّبِيْنٍ தெளிவான(து)
15:1. அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகவும்.
15:1. அலிஃப் லாம் றா. (நபியே!) இவை (முந்திய) வேதங்களுடைய இன்னும் தெளிவான (இந்த) குர்ஆனுடைய (சில) வசனங்களாகும்.
15:1. அலிஃப், லாம், றா. இறைமறையின் மற்றும் தெளிவான குர்ஆனின் வசனங்களாகும் இவை.
15:1. அலிஃப் லாம் றா. இவை இவ்வேதத்தினுடைய - இன்னும், தெளிவான குர் ஆனுடைய – வசனங்களாகும்.
15:2 رُبَمَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِيْنَ
رُبَمَا يَوَدُّ பெரிதும் விரும்புவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لَوْ كَانُوْا தாங்கள் இருந்திருக்க வேண்டுமே! مُسْلِمِيْنَ முஸ்லிம்களாக
15:2. தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.
15:2. தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே? என்று நிராகரிப்பவர்கள் (மறுமையில்) பெரிதும் விரும்புவர்.
15:2. (இன்று இஸ்லாத்தின் அழைப்பை) ஏற்க மறுத்தவர்கள் “நாமும் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கூறும் நேரம் விரைவில் வரும்.
15:2. நிராகரிப்போர் தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்று பெரிதும் விரும்புவர்.
15:3 ذَرْهُمْ يَاْكُلُوْا وَيَتَمَتَّعُوْا وَيُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ يَعْلَمُوْنَ
ذَرْهُمْ விடுவீராக/அவர்களை يَاْكُلُوْا அவர்கள் புசிக்கட்டும் وَيَتَمَتَّعُوْا இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும் وَيُلْهِهِمُ இன்னும் மறக்கடிக்கட்டும்/அவர்களை الْاَمَلُ ஆசை فَسَوْفَ يَعْلَمُوْنَ (பின்னர்) அறிவார்கள்
15:3. (இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
15:3. (நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீர் அவர்களை விட்டுவிடுவீராக. அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
15:3. (நபியே!) அவர்களை அவர்களுடைய போக்கில் விட்டுவிடும்! அவர்கள் உண்டு மகிழ்ந்து சுகம் அனுபவித்துக் கொள்ளட்டும்! மேலும், அவர்களின் நப்பாசைகள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி வைத்திருக்கட்டும்! இவர்கள் விரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்;
15:3. (நபியே!) நீர் அவர்களை விட்டு விடுவீராக! அவர்கள் உண்ணட்டும், சுகமனுபவிக்கட்டும், (அவர்களுடைய வீண்) ஆசை (மறுமையை) அவர்களுக்கு மறக்கடித்துவிட்டது, (இதன் முடிவை) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
15:4 وَمَاۤ اَهْلَـكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ
وَمَاۤ اَهْلَـكْنَا நாம் அழிக்கவில்லை مِنْ قَرْيَةٍ எவ்வூரையும் اِلَّا தவிர وَلَهَا அதற்கு كِتَابٌ தவணை مَّعْلُوْمٌ குறிப்பிட்ட
15:4. எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அவர்களுக்கெனக் குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை.
15:4. (பாவத்தில் மூழ்கிய) எவ்வூராரையும் அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணையிலேயே தவிர நாம் அவர்களை அழித்து விடவில்லை.
15:4. இதற்கு முன்பு நாம் எந்த ஊரை அழித்திருக்கின்றோமோ அதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தவணை நிர்ணயிக்கப்பட்டே இருந்தது.
15:4. எவ்வூ(ரா)ரையும், அதற்குக் குறிப்பிட்ட (காலத்) தவணையிலன்றி, நாம் (அவர்களை) அழித்துவிடவில்லை.
15:5 مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَاْخِرُوْنَ
مَا تَسْبِقُ முந்த மாட்டா(ர்க)ள் مِنْ اُمَّةٍ எந்த சமுதாயமும் اَجَلَهَا தங்கள் தவணையை وَمَا يَسْتَاْخِرُوْنَ இன்னும் பிந்தமாட்டார்கள்
15:5. எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
15:5. ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
15:5. எந்தச் சமூகத்தினரும் தமக்குரிய காலத் தவணை முடியும் முன்பே அழியவும் முடியாது; அது முடிந்த பின்பு வாழவும் முடியாது.
15:5. (அழிக்கப்படுவதற்காக உள்ள) எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணையை முந்தவும் மாட்டாது; அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்.
15:6 وَ قَالُوْا يٰۤاَيُّهَا الَّذِىْ نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌؕ
وَ قَالُوْا கூறுகின்றனர் يٰۤاَيُّهَا ஓ! الَّذِىْ எவர் نُزِّلَ இறக்கப்பட்டது عَلَيْهِ அவர்மீது الذِّكْرُ அறிவுரை اِنَّكَ நிச்சயமாக நீர் لَمَجْنُوْنٌؕ பைத்தியக்காரர்தான்
15:6. (நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.
15:6. (நம் நபியாகிய உம்மை நோக்கி) ‘‘வேதம் அருளப்பட்டதாகக் கூறுகின்ற நீர் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்'' என்று கூறுகின்றனர்.
15:6. இம்மக்கள் கூறுகின்றார்கள்: “இறை வாக்கு (திக்ர்) இறக்கியருளப்பட்டிருப்பவரே! திண்ணமாக, நீர் ஒரு பைத்தியக்காரர் ஆவீர்.
15:6. மேலும் (குர் ஆனாகிய) “உபதேசம் எவர்மீது இறக்கப்பட்டுள்ளதோ அத்தகையவரே! நீர் நிச்சயமாக பைத்தியக்காரர்தான்” என அவர்கள் கூறுகின்றனர்.
15:7 لَوْ مَا تَاْتِيْنَا بِالْمَلٰۤٮِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
لَوْ مَا تَاْتِيْنَا நீர்வரலாமே/நம்மிடம் بِالْمَلٰۤٮِٕكَةِ வானவர்களைக் கொண்டு اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ உண்மையாளர்களில்
15:7. “நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்.)
15:7. ‘‘மெய்யாகவே நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (உமக்குச் சாட்சியாக) நீர் வானவர்களை அழைத்துக் கொண்டுவர வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.)
15:7. நீர் உண்மையாளராய் இருப்பின் ஏன் எங்களிடம் வானவர்களை நீர் அழைத்து வருவதில்லை?”
15:7. “உண்மையாளர்களில் உள்ளவராக நீர் இருந்தால், (உமக்குச் சாட்சியாக) நீர் எங்களிடம் மலக்குகளை (அழைத்து)க் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்.)
15:8 مَا نُنَزِّلُ الْمَلٰۤٮِٕكَةَ اِلَّا بِالْحَـقِّ وَمَا كَانُوْۤا اِذًا مُّنْظَرِيْنَ
مَا نُنَزِّلُ இறக்கமாட்டோம் الْمَلٰۤٮِٕكَةَ வானவர்களை اِلَّا தவிர بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டே وَمَا كَانُوْۤا இருக்கமாட்டார்கள் اِذًا அப்போது مُّنْظَرِيْنَ அவகாசமளிக்கப்படுபவர்களாக
15:8. நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை; அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
15:8. (நபியே!) நாம் வானவர்களை இறக்கிவைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழித்து முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்.)
15:8. நாம் வான வர்களை (வெறுமனே இறக்குவதில்லை.) அவர்கள் இறங்கும்போது சத்தியத்துடனே இறங்குவார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவதில்லை.
15:8. (நபியே!) உண்மையைக் கொண்டல்லாது மலக்குகளை நாம் இறக்கி வைப்பதில்லை, (எனவே, வேதனையைக்கொண்டு அவர்கள் இறங்கினால்) அச்சமயம் அவர்கள் அவகாசம் கொடுக்கப்படுவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
15:9 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ
اِنَّا نَحْنُ நிச்சயமாக நாம்தான் نَزَّلْنَا இறக்கினோம் الذِّكْرَ அறிவுரையை وَ இன்னும் اِنَّا நிச்சயமாக நாம் لَهٗ அதை لَحٰـفِظُوْنَ பாதுகாப்பவர்கள்
15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
15:9. நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம் மீது) இறக்கிவைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதைப் பாதுகாத்துக் கொள்வோம்.
15:9. திண்ணமாக, இந்த நல்லு ரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும், நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்.
15:9. நிச்சயமாக நாம்தான் (திக்ரு என்னும் இவ்)வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்பவர்கள்.
15:10 وَلَـقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِىْ شِيَعِ الْاَوَّلِيْنَ
وَلَـقَدْ اَرْسَلْنَا திட்டமாக அனுப்பினோம் مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فِىْ شِيَعِ பிரிவுகளில் الْاَوَّلِيْنَ முன்னோர்களின்
15:10. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.
15:10. (நபியே!) உமக்கு முன்னர் சென்றுபோன கூட்டங்களுக்கும் நிச்சயமாக நாம் தூதர்கள் பலரை அனுப்பிவைத்தோம்.
15:10. (நபியே!) உமக்கு முன் சென்று போன எத்தனையோ சமூகங்களுக்குத் தூதர்களை நாம் அனுப்பியிருக்கின்றோம்.
15:10. (நபியே!) உமக்கு முன்னர் (சென்று போன) முந்தைய பல கூட்டத்தார்களிலும் நிச்சயமாக நாம் தூதர்களை) அனுப்பி வைத்தோம்.
15:11 وَمَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
وَمَا வருவதில்லை يَاْتِيْهِمْ அவர்களிடம் مِّنْ رَّسُوْلٍ எந்த ஒரு தூதரும் اِلَّا தவிர كَانُوْا இருந்தனர் بِهٖ அவரை يَسْتَهْزِءُوْنَ பரிகசிப்பார்கள்
15:11. எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.
15:11. (எனினும்,) அவர்களிடம் (நமது) தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாதிருக்கவில்லை.
15:11. அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதும் அவரை அவர்கள் ஏளனம் செய்யாமல் இருக்கவில்லை.
15:11. (நம்முடைய) எந்தத் தூதரும் - அவரை அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக இருந்தேயல்லாது அவர்களிடம்- அவர் வரவில்லை.
15:12 كَذٰلِكَ نَسْلُكُهٗ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَۙ
كَذٰلِكَ அவ்வாறே نَسْلُكُهٗ புகுத்துகிறோம்/அதை فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الْمُجْرِمِيْنَۙ குற்றவாளிகள்
15:12. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்.
15:12. (அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்திவிட்டோம்.
15:12. இவ்வாறே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இந்நல்லுரையை (கம்பியைப் போன்று) செலுத்துகிறோம்.
15:12. இவ்வாறே குற்றவாளிகளின் உள்ளங்களிலும் அ(வ்விஷமத்)தை நாம் புகச் செய்கிறோம்.
15:13 لَا يُؤْمِنُوْنَ بِهٖۚ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِيْنَ
لَا يُؤْمِنُوْنَ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِهٖۚ இவரை وَقَدْ خَلَتْ சென்றுவிட்டது سُنَّةُ வழிமுறை الْاَوَّلِيْنَ முன்னோரின்
15:13. அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான் கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில் அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன.
15:13. (ஆகவே,) இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். முன் சென்றவர்களுடைய நடைமுறை சென்றிருக்கிறது. (அவர்கள் அழிந்தது போல இவர்களும் அழிந்து விடுவர்.)
15:13. அதன்மீது அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. தொன்றுதொட்டே இத்தகைய இயல்புடைய மக்களிடம் இதே நடைமுறைதான் இருந்து வருகிறது.
15:13. (ஆகவே, வேதமான) இதனை அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள், (இவ்வாறே அவர்களுக்கு) முன் சென்றவர்களின் வழிமுறை திட்டமாகச் சென்றே விட்டது.
15:14 وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِيْهِ يَعْرُجُوْنَۙ
وَلَوْ فَتَحْنَا நாம் திறந்தால் عَلَيْهِمْ அவர்கள் மீது بَابًا ஒரு வாசலை مِّنَ இருந்து السَّمَآءِ வானம் فَظَلُّوْا பகலில் அவர்கள் ஆகினர் فِيْهِ அதில் يَعْرُجُوْنَۙ ஏறுபவர்களாக
15:14. இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
15:14. வானத்தில் ஒரு வாசலை இவர்களுக்கு நாம் திறந்துவிட்டு, அதில் பகல் நேரத்திலே இவர்கள் ஏறியபோதிலும் (நம்பிக்கை கொள்ளாமல்),
15:14. மேலும், வானத்தின் வாயிலொன்றை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டிருந்தாலும், அதில் அவர்கள் பட்டப் பகலிலே ஏறத் தொடங்கிவிட்டிருந்தாலும்
15:14. மேலும், வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் அவர்களுக்குத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுவதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும், (அவ்வேதத்தை உண்மைப்படுத்த மாட்டார்கள், மாறாக, அவர்கள்)
15:15 لَـقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ
لَـقَالُوْۤا நிச்சயம் அவர்கள் கூறுவர் اِنَّمَا سُكِّرَتْ மயக்கப்பட்டு விட்டன اَبْصَارُنَا எங்கள் கண்கள் بَلْ இல்லை نَحْنُ நாங்கள் قَوْمٌ மக்கள் مَّسْحُوْرُوْنَ சூனியம் செய்யப்பட்டவர்கள்
15:15. “நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்“ என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
15:15. ‘‘எங்கள் கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியம் செய்யப்பட்டு விட்டோம்'' என்றே கூறுவார்கள். (உண்மையை நம்பமாட்டார்கள்.)
15:15. அப்பொழுதும் அவர்கள் இவ்வாறே கூறியிருப்பர்: “எங்கள் கண்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன; சரியாகச் சொல்வதானால் எங்களுக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது!”
15:15. (பார்க்க முடியாது, தடுக்கப்பட்டு) “மயக்கப்பட்டதெல்லாம் எங்களுடைய பார்வைகள்தான், (அது மட்டும்) அல்ல, நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர்” என்றே கூறுவார்கள்.
15:16 وَلَـقَدْ جَعَلْنَا فِى السَّمَآءِ بُرُوْجًا وَّزَيَّـنّٰهَا لِلنّٰظِرِيْنَۙ
وَلَـقَدْ திட்டவட்டமாக جَعَلْنَا அமைத்தோம் فِى السَّمَآءِ بُرُوْجًا வானத்தில்/பெரிய நட்சத்திரங்களை وَّزَيَّـنّٰهَا இன்னும் அலங்காரமாக்கினோம்/அவற்றை لِلنّٰظِرِيْنَۙ பார்ப்பவர்களுக்கு
15:16. வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
15:16. நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதை அலங்காரமாகவும் ஆக்கி வைத்தோம்.
15:16. (இது நமது செயல் திறனாகும்:) திண்ணமாக நாம், வானத்தில் உறுதி வாய்ந்த அரண்களை அமைத்தோம்; பார்ப்பவர்களுக்காக (நட்சத்திரங்களால்) அவற்றை அலங்கரித்தோம்;
15:16. மேலும், நிச்சயமாக நாம் வானத்தில் கிரகங்களை அமைத்து பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்.
15:17 وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ
وَحَفِظْنٰهَا இன்னும் பாதுகாத்தோம்/அதை مِنْ எல்லாம் كُلِّ விட்டு شَيْطٰنٍ ஷைத்தான் رَّجِيْمٍۙ விரட்டப்பட்டவன்
15:17. விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.
15:17. விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானும் அவற்றை நெருங்காது காத்துக்கொண்டோம்.
15:17. மேலும், விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானைவிட்டும் அவற்றைப் பாதுகாக்கவும் செய்தோம்.
15:17. மேலும், விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் அவற்றை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
15:18 اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَ تْبَعَهٗ شِهَابٌ مُّبِيْنٌ
اِلَّا எனினும் مَنِ எவன் اسْتَرَقَ السَّمْعَ ஒட்டுக் கேட்பான் فَاَ تْبَعَهٗ பின்தொடர்ந்தது / அவனை شِهَابٌ ஓர் எரி நட்சத்திரம் مُّبِيْنٌ தெளிவானது
15:18. திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.
15:18. ஆகவே, (வானவர்களின்) ஒரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதைத் தவிர, (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜூவாலை அதை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும்.
15:18. ஆகையால் எந்த ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது; எதையேனும் ஒட்டுக் கேட்பதைத் தவிர! (அப்படி அவன் ஒட்டுக் கேட்க முயன்றால்) பிரகாசமான ஒரு தீச்சுவாலை அவனைப் பின்சென்று விரட்டும்!
15:18. திருட்டுத்தனமாக (ஒட்டு)க் கேட்பவ(னான ஷைத்தா)னைத் தவிர, அப்போது பிரகாசமான தீப்பந்தம் அவனை (விரட்டி)ப் பின்தொடர்ந்து செல்லும்.
15:19 وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِىَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ شَىْءٍ مَّوْزُوْنٍ
وَالْاَرْضَ இன்னும் பூமி مَدَدْنٰهَا விரித்தோம்/அதை وَاَلْقَيْنَا இன்னும் நிறுவினோம் فِيْهَا அதில் رَوَاسِىَ அசையாத மலைகளை وَاَنْۢبَتْنَا இன்னும் முளைக்க வைத்தோம் فِيْهَا அதில் مِنْ كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் مَّوْزُوْنٍ நிறுக்கப்படும்
15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
15:19. நாம் பூமியை விரித்து, அதில் உறுதிமிக்க அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம்.
15:19. மேலும், நாம், பூமியை விரித்தோம்; அதில் மலைகளை நாட்டினோம். அதில், எல்லா வகையான தாவரங்களையும் மிகப் பொருத்தமான அளவில் முளைக்கச் செய்தோம்.
15:19. பூமியை – அதனை நாம் விரித்து அதில் அசையாத மலைகளையும் நாட்டினோம், மேலும், ஒவ்வொரு பொருளையும் (அதற்குரிய) அளவின்படி அதில் நாம் முளைக்க வைத்தோம்.
15:20 وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِيْنَ
وَجَعَلْنَا அமைத்தோம் لَـكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் مَعَايِشَ வாழ்வாதாரங்களை وَمَنْ இன்னும் எவர் لَّسْتُمْ நீங்கள் இல்லை لَهٗ அவருக்கு بِرٰزِقِيْنَ உணவளிப்பவர்களாக
15:20. நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.
15:20. உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கின்ற எண்ணற்ற) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை நாமே அதில் அமைத்தோம்.
15:20. மேலும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நாம் அதில் அமைத்தோம் உங்களுக்காகவும் நீங்கள் எவற்றுக்கு உணவளிப்பவர்களாக இல்லையோ அத்தகைய எண்ணற்ற படைப்பினங்களுக்காகவும்!
15:20. “உங்களுக்கும், நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழத்தேவையானவற்றை அதில் நாமே ஆக்கியுள்ளோம்.
15:21 وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآٮِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ
وَاِنْ مِّنْ شَىْءٍ எப்பொருளும்/இல்லை اِلَّا தவிர عِنْدَنَا நம்மிடம் خَزَآٮِٕنُهٗ பொக்கிஷங்கள்/அதன் وَمَا இன்னும் இறக்க மாட்டோம் نُنَزِّلُهٗۤ அதை اِلَّا தவிர بِقَدَرٍ ஓர் அளவில் مَّعْلُوْمٍ குறிப்பிடப்பட்ட
15:21. ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.
15:21. ஒவ்வொரு பொருளின் பொக்கிஷங்களும் நம்மிடமே இருக்கின்றன. எனினும், அவற்றை (அந்தந்தக் காலத்தில் அவற்றிற்குக்) குறிப்பிட்ட அளவில்தான் நாம் இறக்கி வைக்கிறோம்.
15:21. எந்தப் பொருள்களாய் இருந்தாலும் சரி, அதன் கருவூலம் நம்மிடம் இல்லாமல் இல்லை. எந்தப் பொருளையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நாம் இறக்கி வைக்கின்றோம்.
15:21. எந்தப் பொருளும் அதன் களஞ்சியங்கள் நம்மிடமிருந்தே தவிர இல்லை, எனினும், அவற்றை குறிப்பிட்ட அளவிலே தவிர நாம் இறக்கிவைப்பதும் இல்லை.
15:22 وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ
وَاَرْسَلْنَا இன்னும் அனுப்புகிறோம் الرِّيٰحَ காற்றுகளை لَوَاقِحَ கருக்கொள்ள வைக்கக் கூடியதாக فَاَنْزَلْنَا இறக்குகிறோம் مِنَ السَّمَآءِ மேகத்திலிருந்து مَآءً மழை நீரை فَاَسْقَيْنٰكُمُوْهُۚ புகட்டுகிறோம்/உங்களுக்கு/அதை وَمَاۤ இல்லை اَنْتُمْ நீங்கள் لَهٗ அதை بِخٰزِنِيْنَ சேகரிப்பவர்களாக
15:22. இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
15:22. மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பிவைக்கிறோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கிறோம். அதை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். (மழை நீரை மேகத்திலும், நிலத்திலும்) நீங்கள் சேகரித்து வைக்கவில்லை; (நாம்தான் சேகரிக்கிறோம்.)
15:22. மேலும் (மேகங்களை) கருக்கொள்ளச் செய்யும் காற்றை நாமே அனுப்புகின்றோம். பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். மேலும், அதனை உங்களுக்குப் புகட்டுகின்றோம். அதன் கருவூலதாரர் நீங்கள் அல்லவே!
15:22. இன்னும், காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம், பின்னர் வானத்திலிருந்து நாமே (மழையெனும்) நீரைப் பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம், நீங்கள் அதனைச் சேமித்து வைப்பவர்களாகவும் இல்லை.
15:23 وَ اِنَّا لَــنَحْنُ نُحْىٖ وَنُمِيْتُ وَنَحْنُ الْوٰرِثُوْنَ
وَ اِنَّا لَــنَحْنُ நிச்சயமாக நாம்தான் نُحْىٖ உயிர் கொடுக்கிறோம் وَنُمِيْتُ இன்னும் மரணிக்க வைக்கிறோம் وَنَحْنُ நாம் الْوٰرِثُوْنَ அனந்தரக்காரர்கள்
15:23. நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரணிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.
15:23. நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்).
15:23. திண்ணமாக, வாழ்வையும் மரணத்தையும் நாமே அளிக்கின்றோம். மேலும், அனைத்திற்கும் நாமே வாரிசாவோம்.
15:23. (படைப்பினங்களுக்கு) நிச்சயமாக நாம் தாம் உயிரும் கொடுக்கிறோம், நாமே (அவற்றை) இறக்கவும் வைக்கிறோம், (யாவற்றிற்கும்) நாமே வாரிசாவோம்.
15:24 وَلَـقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِيْنَ مِنْكُمْ وَلَـقَدْ عَلِمْنَا الْمُسْتَـاْخِرِيْنَ
وَلَـقَدْ திட்டவட்டமாக عَلِمْنَا அறிந்தோம் الْمُسْتَقْدِمِيْنَ முன் சென்றவர்களை مِنْكُمْ உங்களில் وَلَـقَدْ திட்டவட்டமாக عَلِمْنَا அறிந்தோம் الْمُسْتَـاْخِرِيْنَ பின் வருபவர்களை
15:24. உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்.
15:24. உங்களுக்கு முன் சென்றவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்; (உங்களுக்குப்) பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்.
15:24. உங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களையும் பின்னால் வரப்போகின்றவர்களையும் நாம் அறிந்திருக்கின்றோம்.
15:24. மேலும், உங்களில் (உங்களுக்கு) முன் சென்றோரையும் நிச்சயமாக நாம் அறிந்துள்ளோம், (உங்களுக்குப்)பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிந்துள்ளோம்.
15:25 وَاِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْؕ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ هُوَ உம் இறைவன்தான் يَحْشُرُ ஒன்று திரட்டுவான் هُمْؕ இவர்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் حَكِيْمٌ மகா ஞானவான் عَلِيْمٌ நன்கறிந்தவன்
15:25. நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
15:25. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் இவர்கள் அனைவரையும் (விசாரணைக்காக மறுமையில் தன் முன்) ஒன்று கூட்டுவான். நிச்சயமாக அவன் ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
15:25. நிச்சயம் உம் அதிபதியே அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான்; திண்ணமாக அவன் நுண்ணறிவாளனும் மிக அறிந்தவனுமாவான்.
15:25. இன்னும், (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன்தான் அவர்களை மறுமையில் ஒன்று திரட்டுவான், நிச்சயமாக அவன் தீர்க்கமான அறிவுடையவன், (யாவற்றையும்) நன்கறிகிறவன்.
15:26 وَلَـقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍۚ
وَلَـقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை مِنْ இருந்து صَلْصَالٍ ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது مِّنْ இருந்து حَمَاٍ களிமண் مَّسْنُوْنٍۚ பிசுபிசுப்பானது
15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
15:26. (காய்ந்தபின் ‘கன் கன்' என்று) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நிச்சயமாக நாமே (உங்கள் மூலப் பிதாவாகிய முதல்) மனிதனை படைத்தோம்.
15:26. பேதகமடைந்த, (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை நாம் படைத்தோம்.
15:26. இன்னும் (தட்டினால்) சப்தம் வரக்கூடிய மாற்றமடைந்த கறுப்பான களிமண்ணிலிருந்து மனிதனை (-ஆதமை) திட்டமாக நாம் படைத்தோம்.
15:27 وَالْجَـآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ
وَالْجَـآنَّ ஜின்னை خَلَقْنٰهُ படைத்தோம்/அதை مِنْ قَبْلُ முன்பே مِنْ இருந்து نَّارِ நெருப்பு السَّمُوْمِ கொடிய உஷ்ணமுள்ளது
15:27. (அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.
15:27. அதற்கு முன்னதாக ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.
15:27. அதற்கு முன்பு தீயின் கடும் வெப்பத்திலிருந்து ஜின்களைப் படைத்திருந்தோம்.
15:27. மேலும், ஜின்னை (அதற்கு) முன்னதாகக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து அதனை நாம் படைத்தோம்.
15:28 وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤٮِٕكَةِ اِنِّىْ خَالـِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை رَبُّكَ உம் இறைவன் لِلْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اِنِّىْ நிச்சயமாக நான் خَالـِقٌۢ படைக்கப்போகிறேன் بَشَرًا ஒரு மனிதனை مِّنْ صَلْصَالٍ ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது مِّنْ இருந்து حَمَاٍ களிமண் مَّسْنُوْنٍ பிசுபிசுப்பானது
15:28. (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,
15:28. (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான், மனிதனை (காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைக்கப்போகிறேன்'' என்று கூறிய சமயத்தில்,
15:28. பின்பு உம் அதிபதி வானவர்களை நோக்கிக் கூறியதை நினைவுகூரும்: “பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை திண்ணமாக நான் படைக்கப் போகின்றேன்.
15:28. மேலும், (நபியே!) உமதிரட்சகன் மலக்குகளிடம், “நிச்சயமாக நான் மனிதனை (தட்டினால்) சப்தம் வரக்கூடிய, மாற்றமடைந்த கறுப்புக் களிமண்ணிலிருந்து படைக்கப்போகிறேன்” என்று கூறிய சமயத்தை-(நபியே! நினைவு கூர்வீராக!)
15:29 فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ
فَاِذَا سَوَّيْتُهٗ அவரை நான் செம்மை செய்துவிட்டால் وَنَفَخْتُ இன்னும் ஊதினேன் فِيْهِ அவரில் مِنْ رُّوْحِىْ என் உயிரிலிருந்து فَقَعُوْا விழுங்கள் لَهٗ அவருக்கு முன் سٰجِدِيْنَ சிரம்பணிந்தவர்களாக
15:29. அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
15:29. ‘‘நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்'' (என்று கூறி, பிறகு, சிரம்பணிய கட்டளையிட்டான்.)
15:29. நான் அவரை முழுமையாக்கி, அவருக்குள் என்னுடைய உயிரிலிருந்து ஊதியதும் நீங்கள் அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்திட வேண்டும்!”
15:29. பின்னர், “அவரை நான் சரியாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்தும் நான் ஊதியபோது அவருக்கு சிரம்பணிந்தவர்களாக விழுங்கள்” (என்று மலக்குகளிடம் அல்லாஹ் கூறியதும்)
15:30 فَسَجَدَ الْمَلٰۤٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ
فَسَجَدَ சிரம் பணிந்தார்(கள்) الْمَلٰۤٮِٕكَةُ வானவர்கள் كُلُّهُمْ அவர்கள் எல்லோரும் اَجْمَعُوْنَۙ அனைவரும்
15:30. அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
15:30. அவ்வாறே வானவர்கள் அனைவரும் (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம் பணிந்தார்கள்;
15:30. வானவர்கள் அனைவரும் அவ்வாறே சிரம் பணிந்தார்கள்.
15:30. உடனே மலக்குகள் - அவர்கள் ஒவ்வொருவரும் ஒருமித்து (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம் பணிந்தார்கள்-
15:31 اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰٓى اَنْ يَّكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ
اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர اَبٰٓى மறுத்து விட்டான் اَنْ يَّكُوْنَ مَعَ ஆகுவதற்கு/உடன் السّٰجِدِيْنَ சிரம் பணிந்தவர்கள்
15:31. இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
15:31. இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான்.
15:31. இப்லீஸைத் தவிர! அவன் சிரம்பணிபவர்களுடன் சேர்ந்திட மறுத்து விட்டான்.
15:31. - இப்லீஸைத் தவிர சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதிலிருந்து அவன் விலகிக் கொண்டான்.
15:32 قَالَ يٰۤاِبْلِيْسُ مَا لَـكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ
قَالَ கூறினான் يٰۤاِبْلِيْسُ இப்லீஸே! مَا لَـكَ உனக்கென்ன நேர்ந்தது? اَلَّا تَكُوْنَ நீ ஆகாதிருக்க مَعَ உடன் السّٰجِدِيْنَ சிரம் பணிந்தவர்கள்
15:32. “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான்.
15:32. (அதற்கு உமது இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன?'' என்று கேட்டான்.
15:32. அப்போது இறைவன் கேட்டான்: “இப்லீஸே! உனக்கு என்ன நேர்ந்து விட்டது? சிரம் பணிந்தவர்களுடன் நீ சேரவில்லையே, ஏன்?”
15:32. (அதற்கு அல்லாஹ்) “இப்லீஸே! சிரம் பணிந்தோருடன் நீயும் ஆகாதிருக்க உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டான்.
15:33 قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ
قَالَ கூறினான் لَمْ اَكُنْ நான் இல்லை لِّاَسْجُدَ சிரம் பணிபவனாக لِبَشَرٍ ஒரு மனிதனுக்கு خَلَقْتَهٗ படைத்தாய்/அவனை مِنْ இருந்து صَلْصَالٍ ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது مِّنْ இருந்து حَمَاٍ களிமண் مَّسْنُوْنٍ பிசுபிசுப்பானது
15:33. அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்.
15:33. அதற்கவன் ‘‘(காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிய தயாரில்லை; (ஏனென்றால், நான் அவரைவிட மேலானவன்)'' என்று கூறினான்.
15:33. அதற்கு அவன் கூறினான்: “இந்த மனிதருக்குச் சிரம்பணிவது என் வேலை அல்ல! ஏனெனில் பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து அவரை நீ படைத்துள்ளாய்!”
15:33. அ(தற்க)வன், “(தட்டினால்) சப்தம் கொடுக்கக் கூடிய மாற்றமடைந்த கருப்புக் களிமண்ணால் நீ அவரை சிருஷ்டித்த (ஒரு) மனிதனுக்கு, (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிபவனாக இருப்பதற்கில்லை” என்று கூறினான்.
15:34 قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌۙ
قَالَ கூறினான் فَاخْرُجْ வெளியேறு مِنْهَا இதிலிருந்து فَاِنَّكَ நிச்சயமாக நீ رَجِيْمٌۙ விரட்டப்பட்டவன்
15:34. “அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.”
15:34. அதற்கு இறைவன் ‘‘நீ இங்கிருந்து அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (நமது சமூகத்திலிருந்து) விரட்டப்பட்டு விட்டாய்'' என்று கூறினான்.
15:34. அதற்கு இறைவன் “அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு! ஏனெனில், திண்ணமாக நீ விரட்டப்பட வேண்டியவனாய் இருக்கின்றாய்!
15:34. “இங்கிருந்து நீ வெளியேறிவிடு, ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன் என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
15:35 وَّاِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ اِلٰى يَوْمِ الدِّيْنِ
وَّاِنَّ இன்னும் நிச்சயமாக عَلَيْكَ உம்மீது اللَّعْنَةَ சாபம் اِلٰى يَوْمِ الدِّيْنِ கூலி நாள் வரை
15:35. “மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவனும்) கூறினான்.
15:35. மேலும், ‘‘விசாரணை நாள் (வரும்) வரை உன் மீது நிச்சயமாக என் சாபமும் (கோபமும்) உண்டாவதாக!'' (என்றும் கூறினான்.)
15:35. இனி கூலி கொடுக் கப்படும் நாள் வரை திண்ணமாக உன்மீது சாபம் விதிக்கப்பட்டிருக்கும்!” என்று கூறினான்.
15:35. மேலும், “நியாயத்தீர்ப்பு நாள் வரையில் உன் மீது நிச்சயமாக (என்னுடைய) சாபம் உண்டாவதாக! (என்றும் அல்லாஹ் கூறினான்).
15:36 قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ
قَالَ கூறினான் رَبِّ என் இறைவா فَاَنْظِرْ அவகாசமளி نِىْۤ எனக்கு اِلٰى வரை يَوْمِ நாள் يُبْعَثُوْنَ எழுப்பப்படுவார்கள்
15:36. “என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்.
15:36. அதற்கவன் ‘‘என் இறைவனே! (இறந்தவர்கள்) உயிர் பெற்றெழும்பும் நாள் (வரும்) வரை நீ எனக்கு அவகாசமளி'' என்று கேட்டான்.
15:36. அதற்கு அவன், “என் இறைவனே! (அப்படியானால்) மக்கள் அனைவரும் மீண்டும் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று வேண்டிக் கொண்டான்.
15:36. அ(தற்க)வன், “என்னுடைய இரட்சகனே! (இறந்தோரான) அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையில் நீ எனக்கு அவகாசமளிப்பாயாக” என்று கூறினான்.
15:37 قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ
قَالَ கூறினான் فَاِنَّكَ நிச்சயமாக நீ مِنَ الْمُنْظَرِيْنَۙ அவகாசமளிக்கப்பட்டவர்களில்
15:37. “நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்;”
15:37,38,37. அதற்கு (இறைவன்) ‘‘நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது'' என்றான்.
15:37. அதற்கு அல்லாஹ் கூறினான்: “உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
15:37. (அதற்கு அல்லாஹ்,) நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் இருக்கிறாய்” என்று கூறினான்.
15:38 اِلٰى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ
اِلٰى வரை يَوْمِ நாள் الْوَقْتِ நேரத்தின் الْمَعْلُوْمِ குறிப்பிடப்பட்டது
15:38. “குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்” என்று அல்லாஹ் கூறினான்.
15:37,38,38. அதற்கு (இறைவன்) ‘‘நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது'' என்றான்.
15:38. “நாம் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய அந்த நாள் வரும்வரை.”
15:38. “குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரை” (என்று அல்லாஹ் கூறினான்.)
15:39 قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ
قَالَ கூறினான் رَبِّ என் இறைவா بِمَاۤ நீ வழி கெடுத்ததன் காரணமாக اَغْوَيْتَنِىْ என்னை لَاُزَيِّنَنَّ நிச்சயமாக அலங்கரிப்பேன் لَهُمْ அவர்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் وَلَاُغْوِيَـنَّهُمْ இன்னும் நிச்சயமாக வழிகெடுப்பேன்/அவர்களை اَجْمَعِيْنَۙ அனைவரையும்
15:39. (அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
15:39. அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்.
15:39. அதற்கு அவன் கூறினான்: “என் இறைவனே! நீ என்னை வழிபிறழச் செய்தது போன்று, திண்ணமாக நானும் உலகில் அவர்களுக்குக் கவர்ச்சிகளை ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் வழிபிறழச் செய்வேன்;
15:39. அ(தற்க)வன், “என்னுடைய இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு விட்டதன் காரணமாக பூமியில் (உள்ளவற்றை) நான், நிச்சயமாக அவர்களுக்கு அலங்கரித்துக் காண்பித்து, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நான் வழிகெடுத்து விடுவேன்” என்று கூறினான்.
15:40 اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ
اِلَّا தவிர عِبَادَكَ உன் அடியார்களை مِنْهُمُ அவர்களில் الْمُخْلَصِيْنَ பரிசுத்தமானவர்கள்
15:40. “அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.
15:40. எனினும், அவர்களில் கலப்பற்ற (பரிசுத்த) உள்ளத்தை உடைய உன் (நல்ல) அடியார்களைத் தவிர; (அவர்களை வழி கெடுக்க என்னால் முடியாது)'' என்று கூறினான்.
15:40. ஆனால், உன் அடியார்களில் எவர்களை வாய்மையாளர்களாய் நீ ஆக்கினாயோ அவர்களைத் தவிர!”
15:40. “அவர்களில் (உன்னால்) தேர்ந்தெடுக்கப்பட்ட உன் (அருள் பெற்ற நல்) அடியார்களைத் தவிர”
15:41 قَالَ هٰذَا صِرَاطٌ عَلَىَّ مُسْتَقِيْمٌ
قَالَ கூறினான் هٰذَا இது صِرَاطٌ வழி عَلَىَّ என் பக்கம் مُسْتَقِيْمٌ நேரானது
15:41. (அதற்கு இறைவன் “அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
15:41. அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி.’‘
15:41. அதற்கு அல்லாஹ் கூறினான்: “இதுதான் (அந்த வாய்மையாளர்களின் வழிதான்) என் பக்கம் கொண்டு வந்து சேர்க்கும் நேரிய வழியாகும்.
15:41. (அதற்கு என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களின் வழியாகிய) “இதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்” என்று கூறினான்.
15:42 اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَـعَكَ مِنَ الْغٰوِيْنَ
اِنَّ நிச்சயமாக عِبَادِىْ என் அடியார்கள் لَـيْسَ இல்லை لَكَ உனக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது سُلْطٰنٌ அதிகாரம் اِلَّا தவிர مَنِ எவர்(கள்) اتَّبَـعَكَ பின்பற்றுகின்றார்(கள்)/ உன்னை مِنَ الْغٰوِيْنَ வழிகெட்டவர்கள்
15:42. “நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான்.
15:42. (மனத்தூய்மையுடைய) என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு ஒரு செல்வாக்கும் இருக்காது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர.
15:42. திண்ணமாக, என்னுடைய வாய்மையான அடியார்கள் மீது உனது அதிகாரம் செல்லுபடியாகாது. ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகின்றார்களோ, அவர்களிடம் மட்டும் உனது அதிகாரம் செல்லுபடியாகும்.
15:42. “நிச்சயமாக என்னுடைய அடியார்கள், உனக்கு அவர்கள்மீது யாதொரு அதிகாரமும் இல்லை, (திசை திருப்பப்பட்டு) வழிகெட்டவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர.
15:43 وَاِنَّ جَهَـنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِيْنَۙ
وَاِنَّ நிச்சயமாக جَهَـنَّمَ நரகம் لَمَوْعِدُهُمْ வாக்களிக்கப்பட்ட இடம்/அவர்கள் اَجْمَعِيْنَۙ அனைவரின்
15:43. நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
15:43. (உன்னைப் பின்பற்றிய) அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடம் நிச்சயமாக நரகம்தான்.
15:43. திண்ணமாக, அத்தகையவர்கள் அனைவர்க்கும் நரகம் இருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.”
15:43. நிச்சயமாக நரகமாகிறது, (உன்னைப் பின்பற்றிய) அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
15:44 لَهَا سَبْعَةُ اَبْوَابٍؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ
لَهَا அதற்கு سَبْعَةُ ஏழு اَبْوَابٍؕ வாசல்கள் لِكُلِّ ஒவ்வொரு بَابٍ வாசலுக்கும் مِّنْهُمْ அவர்களில் جُزْءٌ ஒரு பிரிவினர் مَّقْسُوْمٌ பிரிக்கப்பட்ட
15:44. அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.
15:44. அந்நரகத்திற்கு ஏழு வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் (செல்லக்கூடிய வகையில்) அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவார்கள்.
15:44. (இப்லீஸைப் பின்பற்றுவோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ள) அந்நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பிரிவினர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
15:44. “அதற்கு ஏழுவாசல்கள் இருக்கின்றன, ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களிலிருந்து (குறிப்பிட்ட) பங்கீடு செய்யப்பட்ட ஒரு பகுதி உண்டு” (என்றும் அல்லாஹ் கூறினான்.)
15:45 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍؕ
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ அஞ்சியவா்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் وَّعُيُوْنٍؕ இன்னும் நீரருவிகளில்
15:45. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.
15:45. நிச்சயமாக, இறையச்சமுடையவர்களோ சொர்க்கங்களிலும் (அதிலுள்ள) நீரருவிகளிலும் (உல்லாசமாக) இருப்பார்கள்.
15:45. ஆனால், இறையச்சமுள்ளவர்கள் சுவனங்களிலும் (அங்குள்ள) நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
15:45. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (மகிழ்ச்சியுடையோராக) இருப்பார்கள்.
15:46 اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِيْنَ
اُدْخُلُوْ நுழையுங்கள் هَا அதில் بِسَلٰمٍ ஸலாம் உடன் اٰمِنِيْنَ அச்சமற்றவர்களாக
15:46. (அவர்களை நோக்கி) “சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்).
15:46. (அவர்களை நோக்கி) நீங்கள் ஈடேற்றத்துடனும் அச்சமற்றவர்களாகவும் இதில் நுழையுங்கள்'' (என்று கூறப்படும்).
15:46. மேலும், அவர்களிடம் கூறப்படும்: “எவ்வித அச்சமுமின்றி சாந்தியுடன் அவற்றினுள் நுழையுங்கள்!”
15:46. (அவர்களிடம்,) “நீங்கள் சாந்தியுடன், அச்சமற்றவர்களாக அவற்றில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்.)
15:47 وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ
وَنَزَعْنَا நீக்கிவிடுவோம் مَا எதை فِىْ நெஞ்சங்களில் صُدُوْرِهِمْ அவர்களுடைய مِّنْ غِلٍّ குரோதத்தை اِخْوَانًا சகோதரர்களாக عَلٰى سُرُرٍ கட்டில்கள் மீது مُّتَقٰبِلِيْنَ ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக
15:47. மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
15:47. (ஒருவருக்கு ஒருவர்மீது இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம். (அவர்களும்) சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி கட்டில்களில் (உல்லாசமாகச் சாய்ந்து) இருப்பார்கள்.
15:47. அவர்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் குரோதங்களை நாம் அகற்றி விடுவோம். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்;
15:47. மேலும், (இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம், (அவர்களும் உண்மையான) சகோதரர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கியவர்களாகக் கட்டில்களில் (மகிழ்ச்சியுடையோராக) சாய்ந்து இருப்பார்கள்.
15:48 لَا يَمَسُّهُمْ فِيْهَا نَـصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِيْنَ
لَا يَمَسُّهُمْ ஏற்படாது / அவர்களுக்கு فِيْهَا அதில் نَـصَبٌ சிரமம் وَّمَا இன்னும் இல்லை هُمْ அவர்கள் مِّنْهَا அதிலிருந்து بِمُخْرَجِيْنَ வெளியேற்றப்படுபவர்களாக
15:48. அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.
15:48. அதில் அவர்களை ஒரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
15:48. அங்கு அவர்களுக்கு யாதொரு சிரமமும் ஏற்படாது; அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
15:48. அவற்றில் அவர்களை யாதொரு சிரமமும் அணுகாது, அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களும் அல்லர்.
15:49 نَبِّئْ عِبَادِىْۤ اَنِّىْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِيْمُۙ
نَبِّئْ அறிவிப்பீராக عِبَادِىْۤ என் அடியார்களுக்கு اَنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُۙ மகா கருணையாளன்
15:49. (நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக: “நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்.”
15:49. (நபியே!) நீர் என் அடியார்களுக்கு அறிவிப்பீராக: ‘‘நிச்சயமாக நான் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவேன்.
15:49. ‘திண்ணமாக நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணை புரிபவனாகவும் இருக்கின்றேன்’ என்பதை என் அடிமைகளுக்கு (நபியே!) நீர் அறிவித்து விடும்!
15:49. (நபியே!) “நிச்சயமாக, நானே மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்” என என் அடியார்களுக்குத் தெரிவிப்பீராக!
15:50 وَاَنَّ عَذَابِىْ هُوَ الْعَذَابُ الْاَلِيْمُ
وَاَنَّ இன்னும் நிச்சயமாக عَذَابِىْ هُوَ என் வேதனைதான் الْعَذَابُ வேதனை الْاَلِيْمُ துன்புறுத்தக்கூடியது
15:50. “(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்” (என்றும் சொல்லும்).
15:50. இன்னும் நிச்சயமாக என் வேதனைதான் மிக்க கொடிய வேதனை.
15:50. ‘அத்துடன் என்னுடைய வேதனை மிகவும் துன்புறுத்தும் வேதனையாய் இருக்கும்’ என்பதையும் அறிவித்துவிடும்.
15:50. “என்னுடைய வேதனையோ, அதுவே நோவினை தரும் வேதனையாகும்” (என்றும் நபியே! நீர் தெரிவிப்பீராக!)
15:51 وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ اِبْرٰهِيْمَۘ
وَنَبِّئْهُمْ அறிவிப்பீராக/அவர்களுக்கு عَنْ ضَيْفِ விருந்தாளிகள் பற்றி اِبْرٰهِيْمَۘ இப்றாஹீமுடைய
15:51. இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
15:51. (நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகளின் வரலாற்றை நீர் அவர்களுக்கு அறிவிப்பீராக.
15:51. மேலும், இப்ராஹீமின் விருந்தாளிகளைப் பற்றியும் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக!”
15:51. இன்னும், (நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகள் பற்றி நீர் அவர்களுக்கு தெரிவிப்பீராக!
15:52 اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًاؕ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ
اِذْ دَخَلُوْا அவர்கள் நுழைந்த போது عَلَيْهِ அவரிடம் فَقَالُوْا கூறினர் سَلٰمًاؕ ஸலாம் قَالَ கூறினார் اِنَّا நிச்சயமாக நாங்கள் مِنْكُمْ உங்களைப் பற்றி وَجِلُوْنَ பயமுள்ளவர்கள்
15:52. அவர்கள் அவரிடம் வந்து, “உங்களுக்குச் சாந்தி (ஸலாமுன்) உண்டாவதாக!” என்று சொன்ன போது அவர், “நாம் உங்களைப்பற்றி பயப்படுகிறோம்” என்று கூறினார்.
15:52. அவர்கள் இப்றாஹீமிடம் சென்று ‘ஸலாமுன்' (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) என்று கூறியதற்கு, அவர் ‘‘நிச்சயமாக நான் உங்களைப் பற்றி பயப்படுகிறேன்' என்றார்.
15:52. அவ்விருந்தாளிகள், “உம் மீது சாந்தி நிலவுவதாக!” என்று கூறி அவரிடம் வந்தபோது “உங்களைக் குறித்து எங்களுக்குப் பயமாக இருக்கிறது!” என்று அவர் கூறினார்.
15:52. அவர்கள் அவரிடம் நுழைந்தபோது “ஸலாமுன்” (சாந்தி உண்டாவதாக!) என்று கூறினார்கள். “நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக்கூடியவர்கள்” என்றார்.
15:53 قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ
قَالُوْا கூறினார்கள் لَا تَوْجَلْ பயப்படாதீர் اِنَّا நிச்சயமாக நாம் نُبَشِّرُ நற்செய்திகூறுகிறோம் كَ உமக்கு بِغُلٰمٍ ஒரு மகனைக் கொண்டு عَلِيْمٍ அறிஞர்
15:53. அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
15:53. அதற்கவர்கள், ‘‘நீர் பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு மிக்க ஞானமுடைய ஓர் மகன் ஒருவரைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்'' என்று கூறினார்கள்.
15:53. அதற்கு அவர்கள், “நீர் அஞ்ச வேண்டாம்! அறிவுக் கூர்மையுள்ள ஒரு குழந்தையைப் பற்றிய நற்செய்தியை உமக்கு நாங்கள் அறிவிக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.
15:53. அ(தற்க)வர்கள், “நீர் பயப்படாதீர், நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
15:54 قَالَ اَبَشَّرْتُمُوْنِىْ عَلٰٓى اَنْ مَّسَّنِىَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ
قَالَ கூறினார் اَبَشَّرْتُمُوْنِىْ எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? عَلٰٓى اَنْ مَّسَّنِىَ எனக்கு ஏற்பட்டிருக்க الْكِبَرُ முதுமை فَبِمَ எதைக் கொண்டு? تُبَشِّرُوْنَ நற்செய்தி கூறுகிறீர்கள்
15:54. அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.
15:54. அதற்கவர் ‘‘இம்முதுமையிலா நீங்கள் எனக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறீர்கள்!'' என்று கூறினார்.
15:54. அதற்கு இப்ராஹீம், “இந்தத் தள்ளாத வயதிலா எனக்கு (குழந்தைப்பேறு பற்றி) நற்செய்தி அறிவிக்கின்றீர்கள்? நீங்கள் எப்படிப்பட்ட நற்செய்தியை அறிவிக்கிறீர்கள் என்பதைச் சற்று சிந்தியுங்கள்!” என்று கூறினார்.
15:54. அ(தற்க)வர், “என்னை முதுமை வந்தடைந்துவிட்டபோதா நீங்கள் எனக்கு (குமாரனைக் கொண்டு) நன்மாராயங் கூறுகின்றீர்கள்? எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
15:55 قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَـقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِيْنَ
قَالُوْا கூறினார்கள் بَشَّرْنٰكَ நற்செய்தி கூறினோம்/உமக்கு بِالْحَـقِّ உண்மையைக் கொண்டு فَلَا تَكُنْ ஆகவே ஆகிவிடாதீர் مِّنَ الْقٰنِطِيْنَ அவநம்பிக்கையாளர்களில்
15:55. அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள்.
15:55. அதற்கவர்கள், (‘‘பரிகாசமாக அல்ல) மெய்யாகவே நாங்கள் உமக்கு (மகனைப் பற்றி) நற்செய்தி கூறுகிறோம். (அதைப் பற்றி) நீர் அவநம்பிக்கைக் கொள்ளாதீர்'' என்று கூறினார்கள்.
15:55. அதற்கு அவர்கள், “நாங்கள் சத்தியமான நற்செய்தியைத்தான் உமக்கு அறிவிக்கின்றோம்; நீர் நம்பிக்கை இழந்துவிடாதீர்!” என்று பதில் கூறினார்கள்.
15:55. அ(தற்க)வர்கள், “உண்மையைக் கொண்டே நாங்கள் உமக்கு (மகனைப் பற்றி) நன்மாராயம் கூறுகின்றோம், (அதைப்பற்றி) நிராசை கொண்டோரில் நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள்.
15:56 قَالَ وَمَنْ يَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ
قَالَ கூறினார் وَمَنْ யார்? يَّقْنَطُ அவநம்பிக்கை கொள்வார் مِنْ رَّحْمَةِ அருளில் இருந்து رَبِّهٖۤ தன் இறைவனின் اِلَّا தவிர الضَّآلُّوْنَ வழிகெட்டவர்கள்
15:56. “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,
15:56. அதற்கவர், ‘‘வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனுடைய அருளைப் பற்றி எவன்தான் அவநம்பிக்கை கொள்ளக்கூடும்'' என்றார்.
15:56. “வழிபிறழ்ந்தவர்கள் தாம் தம் இறைவனின் கருணை குறித்து நம்பிக்கையிழப்பார்கள்” என்று இப்ராஹீம் கூறினார்.
15:56. அ(தற்க)வர், “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகனின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்?” என்றார்.
15:57 قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ
قَالَ கூறினார் فَمَا என்ன? خَطْبُكُمْ உங்கள் காரியம் اَيُّهَا الْمُرْسَلُوْنَ தூதர்களே!
15:57. “(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார்.
15:57. (பின்னர் வானவர்களை நோக்கி, ‘‘இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?'' என்று கேட்டார்.
15:57. பிறகு, “இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பவர்களே! உங்கள் வருகையின் முக்கிய நோக்கம் என்ன?” என்று அவர் வினவினார்.
15:57. (பின்னர் மலக்குகளிடம் “அல்லாஹ்வினால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் செய்தி என்ன? என்று கேட்டார்.
15:58 قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ
قَالُـوْۤا கூறினார்கள் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اُرْسِلْنَاۤ அனுப்பப்பட்டோம் اِلٰى பக்கம் قَوْمٍ மக்களின் مُّجْرِمِيْنَۙ குற்றம் புரிகின்றவர்கள்
15:58. அதற்கவர்கள், “குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
15:58. அதற்கவர்கள் ‘‘(மிகப்பெரிய) குற்றம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் (அவர்களை அழித்துவிட) மெய்யாகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள்.
15:58. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “குற்றம் புரிந்த சமுதாயத்தினரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
15:58. அ(தறக)வர்கள் “பாவிகளான ஒரு கூட்டத்தார்பால் (அவர்களை அழித்துவிட) நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.
15:59 اِلَّاۤ اٰلَ لُوْطٍؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِيْنَۙ
اِلَّاۤ தவிர اٰلَ குடும்பத்தார் لُوْطٍؕ லூத்துடைய اِنَّا நிச்சயமாக நாங்கள் لَمُنَجُّوْ பாதுகாப்பவர்கள்தான் هُمْ அவர்களை اَجْمَعِيْنَۙ அனைவரையும்
15:59. “லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
15:59. ‘‘எனினும், லூத்துடைய சந்ததிகளைத் தவிர (மற்ற அனைவரையும் அழித்து விடுவோம்). நிச்சயமாக நாங்கள் அவர் (சந்ததி)கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வோம்
15:59. ஆனால் லூத்துடைய குடும்பத்தார்கள் விதிவிலக்கானவர்கள். திண்ணமாக, அவர்கள் அனைவரையும் நாம் காப்பாற்றுவோம்!
15:59. லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர- நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறவர்கள்.
15:60 اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِيْنَ
اِلَّا தவிர امْرَاَتَهٗ அவருடைய மனைவி قَدَّرْنَاۤ ۙ முடிவு செய்தோம் اِنَّهَا நிச்சயமாக அவள் لَمِنَ الْغٰبِرِيْنَ தங்கிவிடுபவர்களில்தான்
15:60. ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.
15:60. எனினும், அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கி விடுவாளென்று நாம் முடிவு செய்துவிட்டோம்'' (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்.)
15:60. ஆனால், அவருடைய மனைவியைத் தவிர! (அவளைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “வேதனையை அனுபவிக்க) தங்கியிருப்பவர்களுள் அவளும் ஒருத்தியாவாள் என்று நாம் விதித்துவிட்டோம்.”
15:60. –“அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (வேதனையடைவதில்) தங்கியவர்களில் உள்ளவளென்று நாம் நிர்ணயித்துவிட்டோம்” என்று அல்லாஹ் கூறியதாகக் கூறினார்கள்.)
15:61 فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ ۨالْمُرْسَلُوْنَۙ
فَلَمَّا جَآءَ வந்த போது اٰلَ குடும்பத்தார் لُوْطِ லூத்துடைய ۨالْمُرْسَلُوْنَۙ தூதர்கள்
15:61. (இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
15:61. (இறைவனால்) அனுப்பப்பட்ட (அவ்)வானவர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது,
15:61. பிறகு அந்தத் தூதர்கள் லூத்திடம் வந்தபோது,
15:61. (அல்லாஹ்வால்) அனுப்ப்பபட்ட (மலக்குகளான அத்தூது)வர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது-
15:62 قَالَ اِنَّـكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ
قَالَ கூறினார் اِنَّـكُمْ நிச்சயமாக நீங்கள் قَوْمٌ கூட்டம் مُّنْكَرُوْنَ அறியப்படாதவர்கள்
15:62. (அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார்,
15:62. (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கிறீர்களே!'' என்று அவர் கூறினார்.
15:62. “நீங்கள் அறிமுகமற்றவர்களாய் இருக்கிறீர்களே” என்று லூத் கூறினார்.
15:62. அவர் (அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் (எனக்கு) அறிமுகமில்லாக் கூட்டத்தவர்” என்று கூறினார்.
15:63 قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِيْهِ يَمْتَرُوْنَ
قَالُوْا கூறினர் بَلْ மாறாக جِئْنٰكَ வந்துள்ளோம்/உம்மிடம் بِمَا எதைக் கொண்டு كَانُوْا இருந்தனர் فِيْهِ அதில் يَمْتَرُوْنَ சந்தேகிக்கின்றனர்
15:63. (அதற்கு அவர்கள்,) “அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
15:63. அதற்கவர்கள், ‘‘(உங்கள் மக்களாகிய) இவர்கள் எதைச் சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்.
15:63. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “இல்லை! எதனைக் குறித்து இவர்கள் சந்தேகம் கொண்டிருந்தார்களோ அதனையே நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்.
15:63. அ(தற்க)வர்கள், “அல்ல! அவர்கள் எதை சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.
15:64 وَ اَتَيْنٰكَ بِالْحَـقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ
وَ اَتَيْنٰكَ இன்னும் வந்துள்ளோம் / உம்மிடம் بِالْحَـقِّ உண்மையைக் கொண்டு وَاِنَّا நிச்சயமாக நாம் لَصٰدِقُوْنَ உண்மையாளர்கள்தான்
15:64. (உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
15:64. மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்து விடுவோம், என்று உங்களுக்கு) உண்மையே கூறுகிறோம்.
15:64. நாங்கள் சத்தியத்துடன் உம்மிடம் வந்திருக்கின்றோம். நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம்.
15:64. “(நடந்தேறக்கூடியதான) உண்மையையே நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம், நிச்சயமாக நாம் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
15:65 فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْـتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ
فَاَسْرِ ஆகவே, செல்வீராக بِاَهْلِكَ உமது குடும்பத்தினருடன் بِقِطْعٍ ஒரு பகுதியில் مِّنَ الَّيْلِ இரவின் وَاتَّبِعْ இன்னும் பின்பற்றுவீராக اَدْبَارَهُمْ அவர்களுக்குப் பின்னால் وَلَا يَلْـتَفِتْ திரும்பிப் பார்க்கவேண்டாம் مِنْكُمْ உங்களில் اَحَدٌ ஒருவரும் وَّامْضُوْا இன்னும் செல்லுங்கள் حَيْثُ இடத்திற்கு تُؤْمَرُوْنَ ஏவப்பட்டீர்கள்
15:65. ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
15:65. ஆகவே, இன்றிரவில் சிறிது நேரம் இருக்கும்பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, (அவர்கள் முன்னும்) நீங்கள் பின்னுமாகச் செல்லுங்கள். உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்காது உங்களுக்கு ஏவப்பட்ட இடத்திற்குச் சென்று விடுங்கள்'' என்றார்கள்.
15:65. எனவே, நீர் இரவு சற்று இருக்கும்போதே உம்முடைய குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வெளியேறிவிடும்; மேலும், நீர் அவர்களைப் பின்தொடர்ந்தே செல்லும்! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; எங்கு செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்படுகின்றதோ அங்கு நேராகச் செல்லுங்கள்!”
15:65. ஆகவே, இரவின் ஒரு பகுதியில் நீர் உம் குடும்பத்தினருடன் சென்று விடுவீராக! அன்றியும், அவர்களுக்குப் பின்னால் நீர் தொடர்ந்து செல்வீராக! உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்கவும் வேண்டாம், நீங்கள் ஏவப்பட்ட இடத்திற்குச் சென்றும் விடுங்கள்” (என்றார்கள்.)
15:66 وَقَضَيْنَاۤ اِلَيْهِ ذٰ لِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰٓؤُلَاۤءِ مَقْطُوْعٌ مُّصْبِحِيْنَ
وَقَضَيْنَاۤ முடிவு செய்தோம் اِلَيْهِ அவருக்கு ذٰ لِكَ அது الْاَمْرَ காரியம் اَنَّ دَابِرَ நிச்சயமாக வேர் هٰٓؤُلَاۤءِ இவர்களின் مَقْطُوْعٌ துண்டிக்கப்படும் مُّصْبِحِيْنَ விடிந்தவர்களாக
15:66. மேலும், “இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்”.
15:66. மேலும், நிச்சயமாக இவர்கள் அனைவரும் விடிவதற்குள்ளாகவே வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் (அவ்வானவர்கள் மூலமாக) அவருக்கு அறிவித்தோம்.
15:66. மேலும், விடிவதற்குள் இவர்கள் அனைவரும் வேரோடு அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நமது இந்த முடிவை நாம் திட்டவட்டமாக அவருக்கு அறிவித்து விட்டோம்.
15:66. அன்றியும், நிச்சயமாக இவர்கள் அனைவரும் காலைப்பொழுதை அடைந்தவர்களாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் முடிவெடுத்து அவருக்கு அறிவித்தோம்.
15:67 وَجَآءَ اَهْلُ الْمَدِيْنَةِ يَسْتَـبْشِرُوْنَ
وَجَآءَ வந்தார்(கள்) اَهْلُ الْمَدِيْنَةِ அந்நகரவாசிகள் يَسْتَـبْشِرُوْنَ மகிழ்ச்சியடைந்தவர்களாக
15:67. (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
15:67. (இதற்கிடையில் லூத் நபியின் வீட்டிற்கு வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்து) அவ்வூரார் மிக்க சந்தோஷத்துடன் (லூத் நபியின் வீட்டிற்கு) வந்து (கூடி) விட்டனர்.
15:67. (இதற்குள்ளாக) ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாக லூத்தின் இல்லம் வந்(து சூழ்ந்)தனர்.
15:67. மேலும், (வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்த) அந்நகரவாசிகள், மிக்க மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்து விட்டனர்.
15:68 قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِىْ فَلَا تَفْضَحُوْنِۙ
قَالَ கூறினார் اِنَّ هٰٓؤُلَاۤءِ நிச்சயமாக இவர்கள் ضَيْفِىْ என் விருந்தினர் فَلَا تَفْضَحُوْنِۙ ஆகவே அவமானப் படுத்தாதீர்கள் / என்னை
15:68. (லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
15:68. (லூத் நபி அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர்கள் என் விருந்தாளிகள். ஆகவே, (அவர்கள் முன்பாக) நீங்கள் என்னை இழிவு படுத்தாதீர்கள்.
15:68. லூத் கூறினார்; “(சகோதரர்களே!) இவர்கள் என்னுடைய விருந்தாளிகள்; என்னை அவமானப்படுத்திவிடாதீர்கள்;
15:68. (லூத் நபி அவர்களிடம்) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தாளிகள், ஆகவே, (அவர்கள் விஷயத்தில்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்” என்று கூறினார்.
15:69 وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ
وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَلَا تُخْزُوْنِ இன்னும் இழிவு படுத்தாதீர்கள் / என்னை
15:69. “அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்” என்றும் கூறினார்.
15:69. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்'' என்று கூறினார்.
15:69. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்!”
15:69. “அன்றியும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், என்னை இழிவுபடுத்தியும் விடாதீர்கள்” (என்று கூறினார்.)
15:70 قَالُـوْۤا اَوَلَمْ نَـنْهَكَ عَنِ الْعٰلَمِيْنَ
قَالُـوْۤا கூறினர் اَوَلَمْ நாம் தடுக்கவில்லையா? نَـنْهَكَ உம்மை عَنِ الْعٰلَمِيْنَ உலகமக்களை விட்டு
15:70. அதற்கவர்கள், “உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.
15:70. அதற்கவர்கள் ‘‘உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?'' என்று கூறினார்கள்.
15:70. அதற்கு அவர்கள், “ஊர் உலகத்துக்கெல்லாம் நீர் வக்காலத்து வாங்க வேண்டாமென்று நாம் பலமுறை உம்மைத் தடுக்கவில்லையா?” என்றார்கள்.
15:70. அ(தற்கவர்கள், “அகிலத்தார் பற்றியெல்லாம் (பேச வேண்டாம் என) நாம் உம்மைத் தடுக்கவில்லையா?” எனறு கூறினார்கள்.
15:71 قَالَ هٰٓؤُلَاۤءِ بَنٰتِىْۤ اِنْ كُنْـتُمْ فٰعِلِيْنَؕ
قَالَ கூறினார் هٰٓؤُلَاۤءِ இவர்கள் بَنٰتِىْۤ என் பெண் மக்கள் اِنْ كُنْـتُمْ நீங்கள் இருந்தால் فٰعِلِيْنَؕ செய்பவர்களாக
15:71. அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.
15:71. அதற்கவர் ‘‘இதோ! என் பெண் மக்கள் இருக்கின்றனர். நீங்கள் (ஏதும்) செய்தே தீரவேண்டுமென்று கருதினால் (இவர்களைத் திருமணம்) செய்து கொள்ளலாம்'' என்று கூறினார்.
15:71. அதற்கு லூத், “நீங்கள் எதையும் செய்தே தீர வேண்டுமென்றால் இதோ என்னுடைய பெண் மக்கள் இருக்கின்றனர்!” என்று கூறினார்.
15:71. அ(தற்க)வர், “இவர்கள் என்னுடைய பெண்மக்கள், நீங்கள் (ஏதும்) செய்பவர்களாக இருந்தால்) இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” (என்று கூறினார்)
15:72 لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِىْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَ
لَعَمْرُكَ உம்வாழ்வின்சத்தியம் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் لَفِىْ سَكْرَتِهِمْ தங்கள் மயக்கத்தில் يَعْمَهُوْنَ தடுமாறுகின்றனர்
15:72. (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
15:72. (நபியே!) உம் மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (ஆதலால், அதற்கு செவி சாய்க்கவில்லை.)
15:72. (நபியே!) உம்முடைய உயிர் மீது ஆணையாக! சந்தேகமின்றி அவர்கள் ஒருவிதமான மயக்கத்தில் சிக்கி, அதில் தங்களை மறந்து தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
15:72. (நபியே!) உம்முடைய உயிரின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் தங்களுடைய மதிமயக்கத்திலேயே தட்டழிந்து கொண்டிருக்கிறார்கள்.
15:73 فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ
فَاَخَذَتْهُمُ ஆகவே, அவர்களைப் பிடித்தது الصَّيْحَةُ சப்தம்,இடிமுழக்கம் مُشْرِقِيْنَۙ வெளிச்சமடைந்தவர்களாக
15:73. ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
15:73. ஆகவே, சூரியன் உதித்ததற்கு பின்னுள்ள நேரத்தை அடைந்தபோது அவர்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது.
15:73. இறுதியில் விடியும் வேளையில் பயங்கரமான பேரோசை ஒன்று அவர்களைத் தாக்கியது!
15:73. ஆகவே,பொழுது உதயத்திற்குப்பிறகுள்ள நேரத்தை அவர்கள் அடைய பேரிடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
15:74 فَجَعَلْنَا عَالِيـَهَا سَافِلَهَا وَ اَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍؕ
فَجَعَلْنَا ஆக்கினோம் عَالِيـَهَا அதன் மேல் புறத்தை سَافِلَهَا அதன் கீழ்ப்புறமாக وَ اَمْطَرْنَا இன்னும் பொழிந்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது حِجَارَةً கல்லை مِّنْ سِجِّيْلٍؕ களிமண்ணின்
15:74. பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
15:74. அச்சமயம் அவர்கள் மீது செங்கற்களை பொழியச் செய்து அவர்களுடைய ஊரை தலைக் கீழாகப் புரட்டிவிட்டோம்.
15:74. மேலும், நாம் அவ்வூரைத் தலைகீழாகப் புரட்டினோம்; அவர்கள் மீது சுடப்பட்ட கற்களைப் பொழியச் செய்தோம்.
15:74. அ(வ்வூரான)தன் மேற்பகுதியை அதன் கீழ்ப்பகுதியாக (-மேல் கீழாக) ஆக்கிவிட்டோம், இன்னும் (களிமண்ணாலான) சுடப்பட்ட கற்களை அவர்கள்மீது நாம் பொழியச் செய்தோம்.
15:75 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـلْمُتَوَسِّمِيْنَ
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيٰتٍ அத்தாட்சிகள் لِّـلْمُتَوَسِّمِيْنَ நுண்ணறி வாளர்களுக்கு
15:75. நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
15:75. உண்மையைக் கண்டறிபவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
15:75. திண்ணமாக, இந்நிகழ்ச்சிகளில் நுணுக்கமாய் சிந்திப்பவர்களுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
15:75. சிந்திப்போருக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
15:76 وَاِنَّهَا لَبِسَبِيْلٍ مُّقِيْمٍ
وَاِنَّهَا நிச்சயமாக அது لَبِسَبِيْلٍ பாதையில் مُّقِيْمٍ நிலையான, தெளிவான
15:76. நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.
15:76. நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் யாத்திரைக்கு) வரப் போகக்கூடிய வழியில்தான் (இன்னும்) இருக்கிறது.
15:76. மேலும், இந்த (நிகழ்ச்சி நடைபெற்ற) இடம் முதன்மைச் சாலையிலேயே அமைந்துள்ளது.
15:76. நிச்சயமாக அ(வ்வூரான)து, (நீங்கள் பிரயாணத்தில் சென்று திரும்பும்) நேரான பாதையில்தான் இருக்கிறது.
15:77 اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيَةً لِّـلْمُؤْمِنِيْنَؕ
اِنَّ فِىْ ذٰلِكَ நிச்சயமாக/அதில் لَاٰيَةً ஓர் அத்தாட்சி لِّـلْمُؤْمِنِيْنَؕ நம்பிக்கையாளர்களுக்கு
15:77. திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.
15:77. நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது.
15:77. நிச்சயமாக நம்பிக்கையாளர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
15:77. நிச்சயமாக இதில் விசுவாசங்கொண்டோர்க்கு ஒரு அத்தாட்சி இருக்கிறது.
15:78 وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَيْكَةِ لَظٰلِمِيْنَۙ
وَاِنْ كَانَ நிச்சயமாக இருந்தார்(கள்) اَصْحٰبُ الْاَيْكَةِ தோப்புடையவர்கள் لَظٰلِمِيْنَۙ அநியாயக்காரர்களாகவே
15:78. இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.
15:78. (இவர்களைப் போலவே ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்களும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.
15:78. திண்ணமாக, ‘அய்கா’ வாசிகள் அக்கிரமக்காரர்களாய் இருந்தார்கள்.
15:78. (ஷுஐபுடைய சமூகத்தாராகிய) அடர்ந்த தோப்புடையோரும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.
15:79 فَانْتَقَمْنَا مِنْهُمْۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِيْنٍؕ
فَانْتَقَمْنَا ஆகவே பழிவாங்கினோம் مِنْهُمْۘ அவர்களை وَاِنَّهُمَا நிச்சயமாக அவ்விரண்டும் لَبِاِمَامٍ வழியில்தான் مُّبِيْنٍؕ தெளிவானது
15:79. எனவே அவர்களிடமும் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து) வழியில் தான் இருக்கின்றன.
15:79. ஆகவே, அவர்களையும் நாம் பழி வாங்கினோம். (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் தெளிவான வழியில்தான் இருக்கின்றன.
15:79. எனவே, நாம் அவர்களையும் பழி வாங்கினோம் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்)! இவ்விரு சமூகத்தாரின் (பாழடைந்துபோன) பகுதிகள் அனைவரும் அறியக்கூடிய பாதையில் இருக்கின்றன.
15:79. ஆகவே, அவர்களை நாம் தண்டித்தோம், நிச்சயமாக (அழிக்கப்பட்ட) இவ்விரண்டு (ஊர்களு)ம் பகிரங்கமான வழியில்தான் இருக்கின்றன.
15:80 وَلَـقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِيْنَۙ
وَلَـقَدْ திட்டவட்டமாக كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) اَصْحٰبُ الْحِجْرِ ஹிஜ்ர் வாசிகள் الْمُرْسَلِيْنَۙ தூதர்களை
15:80. (இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
15:80. (இவ்வாறே) ‘ஹிஜ்ர்' என்னும் இடத்திலிருந்த (ஸமூது என்னும்) மக்களும் நம் தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
15:80. “ஹிஜ்ர் வாசிகளும் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள்.
15:80. (மதீனாவிற்கும், தபூக்கிற்கும் இடைப்பகுதியிலுள்ள “ஹிஜ்ர்” என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஸமூது கூட்டத்தினரான) ஹிஜ்ருவாசிகளும் (நம்) தூதர்களை திட்டமாகப் பொய்யாக்கினர்.
15:81 وَاٰتَيْنٰهُمْ اٰيٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَۙ
وَاٰتَيْنٰهُمْ கொடுத்தோம்/அவர்களுக்கு اٰيٰتِنَا நம் அத்தாட்சிகளை فَكَانُوْا இருந்தனர் عَنْهَا அவற்றை مُعْرِضِيْنَۙ புறக்கணித்தவர்களாக
15:81. அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
15:81. நாம் அவர்களுக்கு நமது (பல) அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தும், அவற்றை அவர்கள் புறக்கணித்துக் கொண்டே வந்தார்கள்.
15:81. நாம் நம்முடைய வசனங்களை அவர்களுக்கு அருளி (நம்முடைய சான்றுகளைக் காட்டி)னோம். ஆனால், அவர்கள் அவை அனைத்தையும் புறக்கணித்துக் கொண்டேயிருந்தார்கள்.
15:81. நாம் அவர்களுக்கு நம்முடைய பல அத்தாட்சிகளையும் கொடுத்தோம், அப்பொழுது அவற்றைவிட்டும் அவர்கள் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
15:82 وَكَانُوْا يَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا اٰمِنِيْنَ
وَكَانُوْا இன்னும் இருந்தனர் يَنْحِتُوْنَ குடைகின்றனர் مِنَ الْجِبَالِ بُيُوْتًا மலைகளில்/வீடுகளை اٰمِنِيْنَ அச்சமற்றவர்களாக
15:82. அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
15:82. அச்சமற்று வாழலாம் எனக் கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள்.
15:82. மலைகளைக் குடைந்து, வீடுகள் அமைத்து அவற்றில் (எவ்வித அச்சமுமின்றி) நிம்மதியாக இருந்தார்கள்.
15:82. அவர்கள் அச்சமற்றவர்களாக மலைகளிலிருந்து வீடுகளைக் குடை(ந்து உருவாக்கு)பவர்களாகவும் இருந்தனர்.
15:83 فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ
فَاَخَذَتْهُمُ அவர்களைப் பிடித்தது الصَّيْحَةُ சப்தம் مُصْبِحِيْنَۙ பொழுது விடிந்தவர்களாக இருக்க
15:83. ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது,
15:83. அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது.
15:83. இறுதியில் கடுமையான பேரோசையொன்று அதிகாலையில் அவர்களைத் தாக்கியது!
15:83. அவர்கள் அதிகாலைப்பொழுதை அடைந்தவர்களாக இருக்க பேரிடி முழக்கம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
15:84 فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَؕ
فَمَاۤ اَغْنٰى தடுக்கவில்லை عَنْهُمْ அவர்களை விட்டும் مَّا எவை كَانُوْا இருந்தனர் يَكْسِبُوْنَؕ செய்வார்கள்
15:84. அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை.
15:84. அவர்கள் (தங்களை பாதுகாத்துக் கொள்ள) செய்திருந்தவற்றில் ஒன்றுமே அவர்களுக்குப் பலனளிக்க வில்லை.
15:84. அப்போது அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
15:84. அவர்கள் (தங்களைப் பாதுகாத்துக் கொள்ளச்) செய்திருந்தவைகளில் ஏதும் அவர்களுக்கு அப்போது பலனளிக்கவில்லை.
15:85 وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَاۤ اِلَّا بِالْحَـقِّ ؕ وَاِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيْلَ
وَمَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை وَمَا بَيْنَهُمَاۤ இன்னும் அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவை اِلَّا بِالْحَـقِّ ؕ உண்மையான நோக்கத்திற்கே தவிர وَاِنَّ நிச்சயம் السَّاعَةَ மறுமை لَاٰتِيَةٌ வரக்கூடியதே فَاصْفَحِ ஆகவே புறக்கணிப்பீராக الصَّفْحَ புறக்கணிப்பாக الْجَمِيْلَ அழகியது
15:85. நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது; ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.
15:85. வானங்களையும் பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரை இத்தீயவர்களின் விஷமத்தை) நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வருவீராக.
15:85. நாம் வானங்களையும், பூமியையும் இன்னும் அவற்றில் இருக்கின்ற அனைத்தையும் சத்தியத்தின் அடிப்படையிலேயே அன்றி படைக்கவில்லை. திண்ணமாக, இறுதித் தீர்ப்பு நாள் வரத்தான் போகிறது! எனவே (நபியே!) நீர் (அவர்களுடைய முறையற்ற செயல்களை) பொருட்படுத்தாமல் கண்ணியமான முறையில் விட்டுவிடும்!
15:85. வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் உண்மையைக் கொண்டேயல்லாது நாம் படைக்கவில்லை, (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய காலமான) மறுமை நாள் நிச்சயமாக வரச்கூடியதே! (அது வரையில் இத் தீயவர்களின் துன்புறுத்தலை) நீர் முற்றாகப் புறக்கணித்து அழகாக மன்னித்துவிடுவீராக!
15:86 اِنَّ رَبَّكَ هُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ
اِنَّ رَبَّكَ هُوَ நிச்சயமாக/உம் இறைவன்தான் الْخَـلّٰقُ மகா படைப்பாளன் الْعَلِيْمُ நன்கறிந்தவன்
15:86. நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
15:86. நிச்சயமாக உமது இறைவனே (அனைத்தையும்) படைத்தவன், இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன் ஆவான்.
15:86. திண்ணமாக, உம் அதிபதி அனைத்தையும் படைத்தவனும் நன்கறிந்தவனுமாவான்.
15:86. நிச்சயமாக உமதிரட்சகன் - அவனே (அனைத்தையும்) படைத்தோன், (இவர்களைப்பற்றி) நன்கறிந்தோன்.
15:87 وَلَـقَدْ اٰتَيْنٰكَ سَبْعًا مِّنَ الْمَـثَانِىْ وَالْـقُرْاٰنَ الْعَظِيْمَ
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنٰكَ கொடுத்தோம்/உமக்கு سَبْعًا ஏழு வசனங்களை مِّنَ الْمَـثَانِىْ மீண்டும் மீண்டும் ஓதப்படுகின்ற வசனங்களில் وَالْـقُرْاٰنَ இன்னும் குர்ஆனை الْعَظِيْمَ மகத்துவமிக்கது
15:87. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.
15:87. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களை (உடைய ‘அல்ஹம்து' என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான (முழு) குர்ஆனையும் அளித்திருக்கிறோம்.
15:87. திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவமிக்க குர்ஆனையும் திண்ணமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம்.
15:87. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய ஏழு வசனங்களை(யுடைய அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை)யும் இந்த மகத்தான குர் ஆனையும் தந்திருக்கிறோம்.
15:88 لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِيْنَ
لَا تَمُدَّنَّ கண்டிப்பாக நீட்டாதீர் عَيْنَيْكَ உம் இரு கண்களை اِلٰى பக்கம் مَا எதை مَتَّعْنَا சுகமளித்தோம் بِهٖۤ அதைக் கொண்டு اَزْوَاجًا சில வகையினர்களுக்கு مِّنْهُمْ இவர்களில் وَلَا تَحْزَنْ இன்னும் கவலைப்படாதீர் عَلَيْهِمْ அவர்கள் மீது وَاخْفِضْ இன்னும் தாழ்த்துவீராக جَنَاحَكَ உமது புஜத்தை لِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு
15:88. அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.
15:88. (பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவற்றின் பக்கம் நீர் உமது இரு கண்களையும் நீட்டாதீர்; நீர் இவர்களுக்காக கவலையும் படாதீர். எனினும், நீர் நம்பிக்கையாளர்களுக்கு உமது பணிவான அன்பைக் காட்டுவீராக.
15:88. நாம் இம்மக்களில் பலதரப்பட்டவர்களுக்கு அளித்திருக்கும் வாழ்க்கை வசதிகளை நீர் ஏறிட்டும் பார்க்காதீர்! இவர்களின் நிலை குறித்து வருந்தாதீர். (இவர்களை விட்டுவிட்டு) நம்பிக்கையார்களின்பால் பணிவுடனும் கனிவுடனும் இருப்பீராக!
15:88. எதை நாம் அவர்களில் பலதரப்பட்டவர்களுக்கு சுகமனுபவிக்க வைத்துள்ளோமோ, அதன்பால் உம்முடைய இருகண்களை(பார்வைகளை)யும் நிச்சயமாக நீர் நீட்டாதீர்! நீர் அவர்களுக்காக கவலையும் படாதீர், இன்னும், நீர் விசுவாசிகளுக்கு (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக.
15:89 وَقُلْ اِنِّىْۤ اَنَا النَّذِيْرُ الْمُبِيْنُۚ
وَقُلْ கூறுவீராக اِنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் النَّذِيْرُ எச்சரிப்பாளன் الْمُبِيْنُۚ தெளிவானவன்
15:89. “பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக;
15:89. ‘‘நிச்சயமாக நான் தெளிவான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்'' என்றும் கூறுவீராக.
15:89. “திண்ணமாக, நான் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கக்கூடியவனே!” என்று (சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களிடம்) நீர் கூறிவிடும்.
15:89. அன்றியும், “நிச்சயமாக நானே பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்” என்றும் நீர் கூறுவீராக!
15:90 كَمَاۤ اَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِيْنَۙ
كَمَاۤ اَنْزَلْنَا நாம் இறக்கியது போன்றே عَلَى மீது الْمُقْتَسِمِيْنَۙ பிரித்தவர்கள்
15:90. (நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,
15:90. (நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,
15:90. இந்த எச்சரிக்கை, பிளவை ஏற்படுத்தியவர்களுக்கு நாம் அனுப்பியிருந்த எச்சரிக்கையைப் போன்றதாகும்.
15:90. (நபியே!) முந்தைய வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தோர் மீது இறக்கியவாறே (வேதனையை நாம் இறக்குவோம்-)
15:91 الَّذِيْنَ جَعَلُوا الْـقُرْاٰنَ عِضِيْنَ
الَّذِيْنَ எவர்கள் جَعَلُوا ஆக்கினார்கள் الْـقُرْاٰنَ குர்ஆனை عِضِيْنَ பல வகைகளாக
15:91. இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
15:91. இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பவர்கள் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
15:91. அவர்களோ (தங்களுடைய) வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்து விட்டிருந்தார்கள்.
15:91. அவர்கள் எத்தகையோரென்றால் (இந்தக்) குர் ஆனைப் பல பாகங்களாக ஆக்கி விட்டனர்.
15:92 فَوَرَبِّكَ لَـنَسْـٴَــلَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ
فَوَرَبِّكَ உம் இறைவன் மீது சத்தியமாக لَـنَسْـٴَــلَـنَّهُمْ நிச்சயமாக அவர்களை விசாரிப்போம் اَجْمَعِيْنَۙ அனைவரையும்
15:92. உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.
15:92. (ஆகவே,) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரிடமும் கேள்வி கணக்குக் கேட்போம்,
15:92. உம் இறைவன் மீது ஆணையாக, இவர்கள் அனைவரையும் நாம் நிச்சயமாக விசாரிப்போம்!
15:92. ஆகவே, உமதிரட்சகன்மீது சத்தியமாக, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் (விசாரணை செய்து) கேட்போம்.
15:93 عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ
عَمَّا பற்றி كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ செய்கின்றனர்
15:93. அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்) செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்).
15:93. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி.
15:93. இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று.
15:93. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி.
15:94 فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ
فَاصْدَعْ ஆகவே தெளிவுடன் பகிரங்கப்படுத்துவீராக بِمَا எதை تُؤْمَرُ நீர் ஏவப்படுகிறீர் وَ اَعْرِضْ இன்னும் புறக்கணிப்பீராக عَنِ الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களை
15:94. ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!
15:94. ஆகவே, உமக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு விவரித்தறிவித்து விடுவீராக. மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
15:94. எனவே, (நபியே!) உமக்குக் கட்டளையிடப்படுகின்றவற்றை வெளிப்படையாகக் கூறிவிடும்; மேலும், இணைவைப்போரைச் சிறிதும் பொருட்படுத்தாதீர்!
15:94. ஆகவே, உமக்கு ஏவப்பட்டதை (த் தயக்கமின்றி) நீர் அவர்களுக்குத் தெளிவாகக் கூறி விடுவீராக! இணை வைத்துக் கொண்டிருப்போரை புறக்கணித்தும் விடுவீராக!
15:95 اِنَّا كَفَيْنٰكَ الْمُسْتَهْزِءِيْنَۙ
اِنَّا நிச்சயமாக நாம் كَفَيْنٰكَ பாதுகாத்தோம்/ உம்மை الْمُسْتَهْزِءِيْنَۙ பரிகசிப்பவர்களிடமிருந்து
15:95. உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
15:95. பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கை விட்டு) நிச்சயமாக நாமே உம்மைப் பாதுகாப்போம்.
15:95. (உம்மை) ஏளனம் செய்கின்ற இந்த மக்களைக் கவனித்துக்கொள்ள உமக்காக நாமே போதுமாக இருக்கின்றோம்.
15:95. (உம்மைப்) பரிகாசம் செய்பவர்களுக்கு (தண்டனை அளிக்க) நிச்சயமாக நாமே உமக்குப் போதுமானவர்களாக இருக்கிறோம்.
15:96 الَّذِيْنَ يَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۚ فَسَوْفَ يَعْلَمُوْنَ
الَّذِيْنَ எவர்கள் يَجْعَلُوْنَ ஆக்குகிறார்கள் مَعَ உடன் اللّٰهِ அல்லாஹ் اِلٰهًا வணங்கப்படும் தெய்வத்தை اٰخَرَۚ மற்றொரு فَسَوْفَ يَعْلَمُوْنَ விரைவில்அறிவார்கள்
15:96. இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.
15:96. இவர்கள் (உம்மைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
15:96. அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் கடவுளாக்குகின்றவர்கள் விரைவில் அறிந்துகொள்ளத்தான் போகின்றார்கள்.
15:96. அவர்கள் எத்தகையோரென்றால்- அல்லாஹ்வுடன் (பொய்யாக) மற்றொரு வணக்கத்திற்குரிய (தெய்வத்)தையும் (இணையாக) ஆக்குகிறார்கள். (இதன் முடிவைப் பின்னர்) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
15:97 وَلَـقَدْ نَـعْلَمُ اَنَّكَ يَضِيْقُ صَدْرُكَ بِمَا يَقُوْلُوْنَۙ
وَلَـقَدْ திட்டவட்டமாக نَـعْلَمُ அறிவோம் اَنَّكَ நிச்சயமாக நீர் يَضِيْقُ நெருக்கடிக்குள்ளாகிறது صَدْرُكَ உம் நெஞ்சு بِمَا يَقُوْلُوْنَۙ அவர்கள் கூறுவதால்
15:97. (நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்.
15:97. (நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உமது உள்ளத்தை நெருக்குகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீர் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்.)
15:97. (உம்மைக் குறித்து) இவர்கள் கூறும் கூற்றுகளால் உமது உள்ளம் வருந்துவதை திண்ணமாக நாம் அறிவோம்.
15:97. மேலும், (நபியே!) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவற்றின் காரணமாக உமது நெஞ்சம் கலக்கத்திற்குள்ளாவதை நிச்சயமாக நாம் அறிவோம்.
15:98 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِيْنَۙ
فَسَبِّحْ ஆகவே துதிப்பீராக بِحَمْدِ புகழ்ந்து رَبِّكَ உம் இறைவனை وَكُنْ இன்னும் ஆகிவிடுவீராக مِّنَ السّٰجِدِيْنَۙ சிரம் பணிபவர்களில்
15:98. நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
15:98. நீர் உமது இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குவீராக;
15:98. (அதற்கான நிவாரணம் இதுதான்:) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! அவன் முன் சிரம்பணிபவராய்த் திகழ்வீராக!
15:98. ஆகவே நீர் (அவர்களின் கூற்றைப் பொருட்படுத்தாது) உமதிரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பீராக! இன்னும், சிரம் பணிவோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ
وَاعْبُدْ வணங்குவீராக رَبَّكَ உம் இறைவனை حَتّٰى يَاْتِيَكَ வரை/வரும்/உமக்கு الْيَـقِيْنُ யகீன்
15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!
15:99. உமக்கு ‘எகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக!
15:99. மேலும், கட்டாயம் வரக்கூடிய அந்தக் கடைசி நேரம் வரை உம் இறைவனுக்கு அடிபணிந்து கொண்டிருப்பீராக!
15:99. உமக்கு (யகீன் என்னும்) மரணம் வரும் வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!