25. ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)
மக்கீ, வசனங்கள்: 77
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
25:1 تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ
تَبٰـرَكَ மிக்க அருள் நிறைந்தவன் الَّذِىْ எவன் نَزَّلَ இறக்கினான் الْـفُرْقَانَ பகுத்தறிவிக்கும் வேதத்தை عَلٰى عَبْدِهٖ தனது அடியார் மீது لِيَكُوْنَ அவர் இருப்பதற்காக لِلْعٰلَمِيْنَ அகிலத்தார்களை نَذِيْرَا ۙ எச்சரிப்பவராக
25:1. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
25:1. (நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கிறது.
25:1. பெரும்பாக்கியம் நிறைந்தவனாக இருக்கின்றான், தன்னுடைய அடியார் மீது (சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும்) இந்த ஃபுர்கானை (அதாவது குர்ஆனை) இறக்கி வைத்தவன். அகிலத்தார் அனைவருக்கும் (அவர்) எச்சரிக்கை செய்யக் கூடியவராக திகழ வேண்டும் என்பதற்காக!
25:1. தன் அடியார் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்) மீது (அசத்தியத்திலிருந்து சத்தியத்தைப் பிரித்தறிவிக்கும்) ஃபுர்கானை – அது அகிலத்தார்க்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியதாக ஆவதற்காக இறக்கி வைத்தானே அத்தகையோன் மிக்க பாக்கியமுடையவன்.
25:2 اۨلَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا
اۨلَّذِىْ எவன் لَهٗ அவனுக்கே உரியது مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَلَمْ يَتَّخِذْ அவன் எடுத்துக் கொள்ளவில்லை وَلَدًا குழந்தையை وَّلَمْ يَكُنْ இல்லை لَّهٗ அவனுக்கு شَرِيْكٌ இணை فِى الْمُلْكِ ஆட்சியில் وَخَلَقَ இன்னும் அவன்படைத்தான் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் فَقَدَّرَهٗ அவற்றை நிர்ணயித்தான் تَقْدِيْرًا சீராக
25:2. (அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது; அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை; அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.
25:2. (இவ்வேதத்தை அருளியவன் எத்தகையவனென்றால்,) வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் ஒரு சந்ததியை எடுத்துக் கொள்ளவும் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு ஒரு துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவற்றுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன்.
25:2. அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி. மேலும், அவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் பங்கு உடையோர் எவரும் இல்லை! மேலும், அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து, பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதியை நிர்ணயித்தான்.
25:2. (இவ்வேதத்தை அருட்செய்தவன்) எத்தகையோனென்றால் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, அவன் (தனக்கென) மகனை எடுத்துக்கொள்ளவுமில்லை, (அவனுடைய) ஆட்சியில் அவனுக்குக் கூட்டுக்காரரும் இல்லை, அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்தான், பிறகு அதனதன் முறைப்படி அதைச் சரியாக அமைத்தான்.
25:3 وَاتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً لَّا يَخْلُقُوْنَ شَيْـٴًـــا وَّهُمْ يُخْلَقُوْنَ وَلَا يَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ ضَرًّا وَّلَا نَفْعًا وَّلَا يَمْلِكُوْنَ مَوْتًا وَّلَا حَيٰوةً وَّلَا نُشُوْرًا
وَاتَّخَذُوْا அவர்கள் எடுத்துக் கொண்டனர் مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اٰلِهَةً கடவுள்களை لَّا يَخْلُقُوْنَ படைக்க மாட்டார்கள் شَيْـٴًـــا எதையும் وَّهُمْ அவர்கள் يُخْلَقُوْنَ படைக்கப்படுகிறார்கள் وَلَا يَمْلِكُوْنَ இன்னும் உரிமை பெற மாட்டார்கள் لِاَنْفُسِهِمْ தங்களுக்குத் தாமே ضَرًّا தீமை செய்வதற்கும் وَّلَا نَفْعًا நன்மை செய்வதற்கும் وَّلَا يَمْلِكُوْنَ இன்னும் உரிமை பெற மாட்டார்கள் مَوْتًا இறப்பிற்கும் وَّلَا حَيٰوةً வாழ்விற்கும் وَّلَا نُشُوْرًا மீண்டும் உயிர்த்தெழ செய்வதற்கும்
25:3. (எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.
25:3. (இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவையோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. எதையும் அவை படைக்கவில்லை. எவ்வித நன்மையையும் தீமையையும் தங்களுக்கு செய்து கொள்ள அவை சக்தியற்றவை. உயிர்ப்பிக்கவோ, மரணிக்க வைக்கவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ அவை சக்திபெற மாட்டா.
25:3. ஆனால், மக்கள் அவனை விடுத்து எத்தகைய கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால், அந்தக் கடவுள்கள் எந்தப் பொருளையும் படைப்பதில்லை ஏன், அவர்களே படைக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். மேலும், தங்களுக்குக்கூட எத்தகைய இலாபத்தையும் நஷ்டத்தையும் அளிக்கும் அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், மரணிக்கச் செய்யவும், உயிர் கொடுக்கவும் (இறந்தவர்களை) மீண்டும் எழுப்பவும் அவர்களால் இயலாது!
25:3. (ஆனால் இணைவைத்துக் கொண்டிருப்போர்) அவனையன்றி (வேறு வணக்கத்திற்குரிய) தெய்வங்களை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் எதையும் படைக்க (சக்தி பெற) மாட்டார்கள், அவர்களோ (அல்லாஹ்வினால்) படைக்கப்படுகிறார்கள், மேலும், அவர்கள் தங்களுக்ககுத் தீமையையோ, நன்மையையோ செய்து கொள்ள அதிகாரம் (சக்தி) பெற மாட்டார்கள், இன்னும் அவர்கள் (யாரையும்) மரணிக்கச் செய்யவோ, (எதையும்) உயிர்ப்பிக்கவோ, (இறந்ததை உயிர் கொடுத்து) மீண்டும் எழுப்பவோ அதிகாரம் பெற மாட்டார்கள்.
25:4 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اِفْكٌ اۨفْتَـرٰٮهُ وَاَعَانَهٗ عَلَيْهِ قَوْمٌ اٰخَرُوْنَ ۛۚ فَقَدْ جَآءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۛۚ
وَقَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பாளர்கள் اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّاۤ தவிர اِفْكٌ இட்டுக்கட்டப்பட்டதே اۨفْتَـرٰٮهُ இதை இட்டுக்கட்டினார் وَاَعَانَهٗ இன்னும் உதவினர்/இவருக்கு عَلَيْهِ இதற்கு قَوْمٌ மக்கள் اٰخَرُوْنَ ۛۚ மற்ற فَقَدْ ஆகவே, திட்டமாக جَآءُوْ இவர்கள் வந்தனர் ظُلْمًا அநியாயத்திற்கும் وَّزُوْرًا ۛۚ பொய்யுக்கும்
25:4. “இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை; இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார்; இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்; ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.
25:4. ‘‘ (திருகுர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே தவிர, வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்'' என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர்.
25:4. எவர்கள் (நபியின் கூற்றை) ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த ஃபுர்கான் புனைந்துரைக்கப்பட்ட ஒன்றேயாகும்; இதனை இவரே இயற்றிக்கொண்டார். மேலும், (இது விஷயத்தில்) வேறு சில மனிதர்கள் இவருக்கு உதவியுள்ளார்கள்!” இத்தகைய பெரும் கொடுமை புரியும் அளவிற்கும், கடும் பொய்யைக் கூறும் அளவிற்கும் அவர்கள் இறங்கி வந்துவிட்டார்கள்.
25:4. இன்னும் (குர் ஆனாகிய) “இது பொய்யே அன்றி (வேறு) இல்லை, இதனை (அபாண்டமாக) அவர் கற்பனை செய்து கொண்டார், இதில் வேறு கூட்டத்தினரும் அவருக்கு உதவி புரிந்துள்ளார்கள்” என்று நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
25:5 وَقَالُوْۤا اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ اكْتَتَبَهَا فَهِىَ تُمْلٰى عَلَيْهِ بُكْرَةً وَّاَصِيْلًا
وَقَالُوْۤا இன்னும் கூறினர் اَسَاطِيْرُ கதைகள் الْاَوَّلِيْنَ முன்னோரின் اكْتَتَبَهَا அவர் எழுதிக் கொண்டார்/இவற்றை فَهِىَ இவை تُمْلٰى எடுத்தியம்பப் படுகின்றன عَلَيْهِ அவர் மீது بُكْرَةً காலையிலும் وَّاَصِيْلًا இன்னும் மாலையிலும்
25:5. இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே; அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.”
25:5. ‘‘இது முன்னோர்களின் கட்டுக்கதைகள். காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கிறார்'' என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர்.
25:5. மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “இவை பழங்காலத்து மக்களால் எழுதப்பட்டவையாகும். இவர் அவற்றை நகல் எடுக்கச் செய்கின்றார். அவை, காலையிலும், மாலையிலும் இவருக்கு ஓதிக் காட்டப்படுகின்றன.”
25:5. இன்னும், (இது) முன்னோர்களின் கட்டுக்கதைகள் (மற்றவரின் உதவி கொண்டு) இவற்றை இவரே எழுதச்செய்து கொண்டிருக்கிறார், அது இவருக்குக் காலையிலும், மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகிறது என்று (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் கூறுகிறார்கள்.
25:6 قُلْ اَنْزَلَهُ الَّذِىْ يَعْلَمُ السِّرَّ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ اِنَّهٗ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا
قُلْ கூறுவீராக اَنْزَلَهُ இதை இறக்கினான் الَّذِىْ எவன் يَعْلَمُ அறிகின்றான் السِّرَّ இரகசியத்தை فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِؕ பூமியிலும் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கிறான் غَفُوْرًا மகாமன்னிப்பாளனாக رَّحِيْمًا பெரும் கருணையாளனாக
25:6. (நபியே!) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவீராக!
25:6. (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘ (அவ்வாறல்ல.) வானங்களிலும், பூமியிலுமுள்ள ரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே இதை இறக்கிவைத்தான். (நீங்கள் மனம் வருந்தி அவனளவில் திரும்பினால்) நிச்சயமாக அவன் (உங்கள் குற்றங்களை) மன்னிப்பவனாகவும் மகா கருணையுடையவனாகவும் இருக்கிறான்.’‘
25:6. (நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “பூமி மற்றும் வானங்களில் உள்ள இரகசியங்களை அறிகின்றவன்தான் இதனை இறக்கி அருளினான். திண்ணமாக, அவன் அதிகம் மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.”
25:6. (அதற்கு) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியத்தை அறிகின்றானே அத்தகையவன் இதனை இறக்கி வைத்தான், “நிச்சயமாக அவன் மிக்க மன்னிக்கிறவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
25:7 وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ يَاْكُلُ الطَّعَامَ وَيَمْشِىْ فِى الْاَسْوَاقِ ؕ لَوْلَاۤ اُنْزِلَ اِلَيْهِ مَلَكٌ فَيَكُوْنَ مَعَهٗ نَذِيْرًا ۙ
وَقَالُوْا அவர்கள் கூறுகின்றனர் مَالِ என்ன! هٰذَا இந்த الرَّسُوْلِ தூதருக்கு يَاْكُلُ இவர் சாப்பிடுகிறார் الطَّعَامَ உணவு وَيَمْشِىْ இன்னும் நடக்கிறார் فِى الْاَسْوَاقِ ؕ கடைத் தெருக்களில் لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட்டு இருக்க வேண்டாமா? اِلَيْهِ இவர் மீது مَلَكٌ ஒரு வானவர் فَيَكُوْنَ அவர் இருக்கிறார் مَعَهٗ இவருடன் نَذِيْرًا ۙ எச்சரிப்பவராக
25:7. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?”
25:7. (பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: ‘‘ இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக ஒரு வானவர் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்துகொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே!
25:7. மேலும், கூறுகின்றார்கள்: “இவர் எத்தகைய இறைத்தூதர்! உணவு உண்ணுகிறாரே; கடை வீதிகளில் நடமாடுகின்றாரே! இவரிடம் ஒரு வானவர் அனுப்பப்பட்டிருக்கக் கூடாதா? அவர், இவருடன் சேர்ந்து (ஏற்றுக் கொள்ளாதவர்களை) எச்சரிக்கை செய்வதற்காக!
25:7. மேலும் அவர்கள் கூறுகின்றனர், “இந்தத் தூதருக்கென்ன? அவர் (மற்ற மனிதர்களைப் போன்றே) உணவு உண்ணுகிறார், இன்னும், கடைவீதிகளில் நடக்கிறார், (அல்லாஹ்வுடைய தூதராக அவர் இருந்தால்,) அவர்பால் ஒரு மலக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அப்பொழுது அவர் இவருடனிருந்து அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்பவராக இருப்பார்.
25:8 اَوْ يُلْقٰٓى اِلَيْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ يَّاْكُلُ مِنْهَا ؕ وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
اَوْ அல்லது يُلْقٰٓى இறக்கப்பட வேண்டாமா! اِلَيْهِ இவருக்கு كَنْزٌ ஒரு பொக்கிஷம் اَوْ அல்லது تَكُوْنُ இருக்க வேண்டாமா! لَهٗ இவருக்கு جَنَّةٌ ஒரு தோட்டம் يَّاْكُلُ இவர் புசிப்பாரே! مِنْهَا ؕ அதிலிருந்து وَقَالَ இன்னும் கூறுகின்றனர் الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் اِنْ تَتَّبِعُوْنَ நீங்கள் பின்பற்றவில்லை اِلَّا தவிர رَجُلًا ஒரு மனிதரை مَّسْحُوْرًا குடல் உள்ள
25:8. “அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்.
25:8. அல்லது அவருக்கு ஒரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சோலை அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்கின்ற ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் கூறுகின்றனர்.
25:8. அல்லது அவருக்கு ஏதேனுமொரு கருவூலமாவது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது (நிம்மதியாக) உணவு பெறுவதற்குரிய ஏதேனும் தோட்டமாயினும் இவருக்கு இருந்திருக்கக்கூடாதா?” மேலும், இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றார்கள்: “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரின் பின்னால்தான் நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள்!”
25:8. அல்லது அவர்பால் ஒரு புதையல் போடப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவர் அதிலிருந்து புசித்துக் கொள்வாரே அத்தகைய ஒரு சோலை அவருக்கு உண்டாகி இருக்க வேண்டாமா? (என்றும் கூறுகிறார்கள்.) அன்றியும் இந்த அநியாயக்காரர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை என்று (விசுவாசிகளிடம்) கூறுகிறார்கள்.
25:9 اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَـكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلاً
اُنْظُرْ பார்ப்பீராக! كَيْفَ எப்படி ضَرَبُوْا அவர்கள் விவரிக்கின்றனர் لَـكَ உமக்கு الْاَمْثَالَ தன்மைகளை فَضَلُّوْا ஆகவே, அவர்கள் வழிகெட்டனர் فَلَا يَسْتَطِيْعُوْنَ அவர்கள் சக்தி பெறமாட்டார்கள் سَبِيْلاً ஒரு பாதைக்கு
25:9. (நபியே! உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.
25:9. ஆகவே, (நபியே!) உம்மைப் பற்றி இவ்வக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகிறார்கள் என்பதை கவனித்துப் பார்ப்பீராக. ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது.
25:9. பாருங்கள்! உம் விஷயத்தில் எத்தகைய விந்தையான வாதங்களை இவர்கள் உம் முன் எடுத்துரைக்கின்றார்கள்! எந்த அளவுக்கு இவர்கள் வழிதவறிப் போய்விட்டார்களெனில் உறுதியாக நிற்பதற்கான எந்த விஷயமும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.
25:9. உம்மைப்பற்றி அவர்கள் எப்படி உதாரணங்களைக் கூறுகின்றார்கள் என்பதை (நபியே கவனித்து)ப் பார்ப்பீராக! இவர்கள் வழிகெட்டுப் போனார்கள், ஆதலால் நேர்வழிக்கு (வர) அவர்கள் சக்திபெற மாட்டார்கள்.
25:10 تَبٰـرَكَ الَّذِىْۤ اِنْ شَآءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّنْ ذٰ لِكَ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ وَيَجْعَلْ لَّكَ قُصُوْرًا
تَبٰـرَكَ அருள் நிறைந்தவன் الَّذِىْۤ اِنْ شَآءَ எவன்/அவன் நாடினால் جَعَلَ ஏற்படுத்துவான் لَكَ உமக்கு خَيْرًا சிறந்ததை مِّنْ ذٰ لِكَ இவற்றை விட جَنّٰتٍ சொர்க்கங்களை تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றை சுற்றி الْاَنْهٰرُ ۙ நதிகள் وَيَجْعَلْ இன்னும் ஏற்படுத்துவான் لَّكَ உமக்கு قُصُوْرًا மாளிகைகளை
25:10. (நபியே! இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.
25:10. (நபியே! உமது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவற்றைச் சொந்தமாக்கி மிக்க மேலான சொர்க்கங்களை உமக்குத் தரக்கூடியவன். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உமக்குப் பல மாட மாளிகைகளையும் அமைத்து விடுவான்.
25:10. பெரும் பாக்கியம் நிறைந்தவனாவான் அவன். தான் நாடினால், இவர்கள் சொன்னவற்றையெல்லாம் விட மிகச் சிறந்ததை உமக்கு வழங்கிட முடியும் (ஒன்றல்ல) கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் பல தோப்புகளையும், பெரும் பெரும் மாளிகைகளையும் (அவனால் வழங்கிட முடியும்).
25:10. (நபியே!) மிக்க பாக்கியமுடைய அவன் எத்தகையவனெனின், அவன் நாடினால், இதைவிட மிக்க மேலான சுவனங்களை உமக்கு ஆக்கித்தருவான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், இன்னும் உமக்கு (அதில்) மாளிகைகளையும் அமைத்துவிடுவான்.
25:11 بَلْ كَذَّبُوْا بِالسَّاعَةِ وَاَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيْرًا ۚ
بَلْ மாறாக كَذَّبُوْا அவர்கள் பொய்ப்பித்தனர் بِالسَّاعَةِ உலக முடிவை وَاَعْتَدْنَا இன்னும் தயார்படுத்தியுள்ளோம் لِمَنْ كَذَّبَ பொய்ப்பிப்பவருக்கு بِالسَّاعَةِ உலக முடிவை سَعِيْرًا ۚ கொழுந்து விட்டெரியும் நெருப்பை
25:11. எனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
25:11. உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எரியும் நரகத்தைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
25:11. உண்மை யாதெனில், இவர்கள் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினர். யார் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினார்களோ அவர்களுக்குக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
25:11. எனினும், இவர்கள் மறுமை நாளைப் பொய்யாக்குகின்றனர், மறுமை நாளைப் பொய்யாக்குகிறவனுக்கு (கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும்) நரகத்தை நாம் தயார் செய்தும் வைத்துள்ளோம்.
25:12 اِذَا رَاَتْهُمْ مِّنْ مَّكَانٍۢ بَعِيْدٍ سَمِعُوْا لَهَا تَغَيُّظًا وَّزَفِيْرًا
اِذَا رَاَتْهُمْ பார்த்தால் / அவர்களை அது مِّنْ مَّكَانٍۢ இடத்திலிருந்து بَعِيْدٍ தூரமான سَمِعُوْا செவிமடுப்பார்கள் لَهَا அதனுடைய تَغَيُّظًا சப்தத்தையும் وَّزَفِيْرًا இரைச்சலையும்
25:12. (அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.
25:12. அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவிமடுத்துக் கொள்வார்கள்.
25:12. அது தொலைவான இடத்திலிருந்து இவர்களைப் பார்க்குமாயின், அதன் ஆவேசம் மற்றும் சீற்றத்தின் இரைச்சல்களை இவர்கள் கேட்பார்கள்.
25:12. அ(ந்நரகமான)து இவர்களை வெகு தொலைவான இடத்திலிருந்து கண்டால் அதற்குரிய கொந்தளிப்பையும், அது மூச்சுவிடும் பேரிரைச்சலையும் இவர்கள் (தங்கள் செவியால்) கேட்பார்கள்.
25:13 وَاِذَاۤ اُلْقُوْا مِنْهَا مَكَانًـا ضَيِّقًا مُّقَرَّنِيْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا ؕ
وَاِذَاۤ اُلْقُوْا அவர்கள் போடப்பட்டால் مِنْهَا அதில் مَكَانًـا இடத்தில் ضَيِّقًا நெருக்கமான مُّقَرَّنِيْنَ கட்டப்பட்டவர்களாக دَعَوْا அழைப்பார்கள் هُنَالِكَ அங்கு ثُبُوْرًا ؕ கைசேதமே என்று
25:13. மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.
25:13. அவர்க(ளின் கை கால்க)ளைக் கட்டி, அதில் மிக்க நெருக்கடியான ஓரிடத்தில் எறியப்பட்டால் (துன்பத்தைத் தாங்க முடியாமல் மரணத்தைத் தரக்கூடிய) அழிவையே அவர்கள் கேட்பார்கள்.
25:13. மேலும், கை, கால்கள் விலங்கிடப்பட்டு அதன் நெருக்கடியான ஓர் இடத்தில் அவர்கள் வீசி யெறியப்படுவார்கள். அங்கே அவர்கள் மரணத்தை அழைக்கத் தொடங்குவார்கள்.
25:13. மேலும், அவர்கள் (சங்கிலியால்) கட்டப்பட்டவர்களாக, அதில் மிக்க நெருக்கடியான ஓர் இடத்தில் போடப்பட்டால் (கஷ்டத்தைத் தாங்க முடியாமல்) அழிவை அங்கு அவர்கள் அழைப்பார்கள்.
25:14 لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُوْرًا وَّاحِدًا وَّادْعُوْا ثُبُوْرًا كَثِيْرًا
لَا تَدْعُوا அழைக்காதீர்கள் الْيَوْمَ இன்று ثُبُوْرًا கைசேதமே என்று وَّاحِدًا ஒரு முறை وَّادْعُوْا அழையுங்கள் ثُبُوْرًا கைசேதமே என்று كَثِيْرًا பல முறை
25:14. “இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
25:14. (ஆகவே, அந்நேரத்தில் அவர்களை நோக்கி,) ‘‘ இன்றைய தினம் நீங்கள் ஓர் அழிவை மாத்திரம் கேட்காதீர்கள். பல அழிவுகளை கேட்டுக் கொள்ளுங்கள்'' (என்று கூறப்படும்).
25:14. (அப்போது அவர்களிடம் கூறப்படும்:) “இன்று ஒரு மரணத்தையல்ல, பல மரணங்களை அழையுங்கள்!”
25:14. “இன்றையத்தினம் நீங்கள் ஓர் அழிவை மாத்திரம் அழைக்காதீர்கள், இன்னும் அநேக அழிவுகளை அழைத்துக் கொள்ளுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்)
25:15 قُلْ اَذٰ لِكَ خَيْرٌ اَمْ جَنَّةُ الْخُـلْدِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ كَانَتْ لَهُمْ جَزَآءً وَّمَصِيْرًا
قُلْ நீர் கேட்பீராக! اَذٰ لِكَ அது? خَيْرٌ சிறந்ததா اَمْ அல்லது جَنَّةُ الْخُـلْدِ ஜன்னதுல் குல்து الَّتِىْ எது وُعِدَ வாக்களிக்கப்பட்டனர் الْمُتَّقُوْنَ ؕ இறையச்சமுள்ளவர்கள் كَانَتْ அது இருக்கும் لَهُمْ அவர்களுக்கு جَزَآءً கூலியாகவும் وَّمَصِيْرًا மீளுமிடமாகவும்
25:15. அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறும்.
25:15. (நபியே! அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘ அந்த நரகம் மேலா? அல்லது பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சொர்க்கம் மேலா? அது அவர்களுக்கு (நற்)கூலியாகவும், அவர்கள் சேருமிடமாகவும் இருக்கிறது.
25:15. இவர்களிடம் கேளுங்கள்: “இந்த முடிவு சிறந்ததா? அல்லது இறையச்சம் கொண்ட தூய்மையாளர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நிலையான சுவனம் சிறந்ததா? அது எத்தகையது எனில், அவர்களின் (செயல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும் இருக்கும்.
25:15. “(நரகமாகிய) அது மேலானதா? அல்லது பயபக்தியுடையவர்கள் வாக்களிக்கப்பட்டுள்ளார்களே அத்தகைய நிலையான சுவனபதி மேலானதா?” என்று நீர் கேட்பீராக! அது அவர்களுக்கு (நற்) கூலியாகவும், (அவர்கள்) சேருமிடமாகவும் இருக்கின்றது.
25:16 لَّهُمْ فِيْهَا مَا يَشَآءُوْنَ خٰلِدِيْنَ ؕ كَانَ عَلٰى رَبِّكَ وَعْدًا مَّسْــــٴُـوْلًا
لَّهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் مَا அவர்கள் நாடுவார்கள் يَشَآءُوْنَ எது خٰلِدِيْنَ ؕ நிரந்தரமாக இருப்பார்கள் كَانَ இருக்கிறது عَلٰى மீது رَبِّكَ உமது இறைவன் وَعْدًا வாக்காக مَّسْــــٴُـوْلًا வேண்டப்பட்ட
25:16. “அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.”
25:16. ‘‘ அதில் அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும். (அதில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.'' (நபியே!) இது உமது இறைவன் மீது (அவனால்) வாக்களிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.
25:16. அதில் அவர்களுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதனை வழங்குவது உம் இறைவனின் பொறுப்பில் உள்ள நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகும்.
25:16. அவர்கள் நாடியவைகளெல்லாம் அதில் அவர்களுக்குண்டு, (அதில்) அவர்கள் நிரந்தரமாக (த் தங்கி) இருப்பவர்கள், (நபியே!) அது உமது இரட்சகனிடம் (மலக்குகளால் பிரார்த்தித்துக்) கேட்கப்படக் கூடிய வாக்குறுதியாக இருக்கிறது.
25:17 وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَقُوْلُ ءَاَنْـتُمْ اَضْلَلْـتُمْ عِبَادِىْ هٰٓؤُلَاۤءِ اَمْ هُمْ ضَلُّوا السَّبِيْلَ ؕ
وَيَوْمَ நாளின்போது يَحْشُرُ அவன் எழுப்புவான் هُمْ அவர்களையும் وَمَا يَعْبُدُوْنَ அவர்கள் வணங்கியவர்களையும் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி فَيَقُوْلُ கேட்பான் ءَاَنْـتُمْ اَضْلَلْـتُمْ நீங்கள் வழிகெடுத்தீர்களா? عِبَادِىْ எனது அடியார்களை هٰٓؤُلَاۤءِ நீங்கள்தான் اَمْ அல்லது هُمْ அவர்கள் ضَلُّوا தாமாகதவறவிட்டனரா السَّبِيْلَ ؕ பாதையை
25:17. அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) “என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?” என்று (இறைவன்) கேட்பான்.
25:17. (இணைவைத்து வணங்கிய) அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கும் நாளில், ‘‘ என் இவ்வடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி தவறி சென்று விட்டனரா'' என்று (இறைவன்) கேட்பான்.
25:17. மேலும், அந்நாளிலேயே (உம் இறைவன்) இவர்களையும் ஒன்று திரட்டுவான். (இன்று) அல்லாஹ்வை விடுத்து இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் தெய்வங்களையும் கூப்பிடுவான். பிறகு, அவன் அவர்களிடம் கேட்பான்: “என்னுடைய இந்த அடிமைகளை நீங்கள்தாம் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்களே வழி கெட்டுப் போனார்களா?”
25:17. அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த (அல்லாஹ் அல்லாத)வர்களையும் அவன் (விசாரணைக்காக) ஒன்று திரட்டும் (மறுமை) நாளில், “என்னுடைய இந்த அடியார்களை நீங்கள்தாம் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழிகெட்டு விட்டனரா?” என்று (அல்லாஹ்) கேட்பான்.
25:18 قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ يَنْۢبَغِىْ لَنَاۤ اَنْ نَّـتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِيَآءَ وَ لٰـكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَآءَهُمْ حَتّٰى نَسُوا الذِّكْرَۚ وَكَانُوْا قَوْمًۢا بُوْرًا
قَالُوْا அவர்கள் கூறுவர் سُبْحٰنَكَ நீ மிகப் பரிசுத்தமானவன் مَا كَانَ இல்லை يَنْۢبَغِىْ தகுதியானதாக لَنَاۤ எங்களுக்கு اَنْ نَّـتَّخِذَ எடுத்துக் கொள்வது مِنْ دُوْنِكَ உன்னை அன்றி مِنْ اَوْلِيَآءَ பாதுகாவலர்களை وَ لٰـكِنْ எனினும் مَّتَّعْتَهُمْ நீ அவர்களுக்கு சுகமளித்தாய் وَاٰبَآءَ மூதாதைகளுக்கும் هُمْ அவர்களுடைய حَتّٰى இறுதியாக نَسُوا அவர்கள் மறந்தனர் الذِّكْرَۚ அறிவுரையை وَكَانُوْا இன்னும் ஆகிவிட்டனர் قَوْمًۢا மக்களாக بُوْرًا அழிந்து போகும்
25:18. (அதற்கு) அவர்கள் “இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்” என்று கூறுவர்.
25:18. அதற்கு அவை (இறைவனை நோக்கி) ‘‘ நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னைத் தவிர (மற்றெவரையும்) நாங்கள் எங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்வது எங்களுக்குத் தகுதியல்ல. எனினும், நீதான் அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் சுகபோகத்தைக் கொடுத்தாய். அதனால் அவர்கள் (உன்னை) நினைப்பதை(யும் உனது அறிவுரையையும்) மறந்து (பாவங்களில் மூழ்கி) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள்'' என்று அவை கூறும்.
25:18. அதற்கு அவர்கள் பணிந்து கூறுவார்கள்: “நீ தூய்மையானவன்! உன்னைத் தவிர வேறு யாரையும் எங்களுடைய பாதுகாவலர்களாக்கிக் கொள்வதற்கு எங்களுக்குத் துணிவு ஏது? ஆயினும், நீ இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையர்களுக்கும் வாழ்க்கை வசதிகளை தாராளமாக வழங்கியிருந்தாய்; இறுதியில் இவர்கள் இந்தப் படிப்பினையை மறந்து விட்டனர். கடும் நாசத்திற்குரியவராகிவிட்டனர்!”
25:18. அ(தற்க)வர்கள் “நீ மிகப் பரிசுத்தமானவன், உன்னையன்றி (மற்றெதனையும்) நாங்கள் எங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வது எங்களுக்கு அவசியமன்று, எனினும், நீதான் அவர்களையும் அவர்களின் மூதாதையரையும் (உன்னை) நினனைவு கூர்வதை அவர்கள் மறந்துவிடும்வரை சுகமனுபவிக்கச் செய்தாய், மேலும் அவர்கள் அழிந்து போகும் கூட்டத்தாராகி விட்டார்கள்” என்று கூறுவர்.
25:19 فَقَدْ كَذَّبُوْكُمْ بِمَا تَقُوْلُوْنَۙ فَمَا تَسْتَطِيْعُوْنَ صَرْفًا وَّلَا نَـصْرًاۚ وَمَنْ يَّظْلِمْ مِّنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيْرًا
فَقَدْ ஆகவே, திட்டமாக كَذَّبُوْ பொய்ப்பித்துவிட்டனர் كُمْ உங்களை بِمَا تَقُوْلُوْنَۙ நீங்கள் கூறியதில் فَمَا تَسْتَطِيْعُوْنَ ஆகவே, நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள் صَرْفًا திருப்பி விடுவதற்கோ وَّلَا نَـصْرًاۚ உதவுவதற்கோ وَمَنْ யார் يَّظْلِمْ அநீதி இழைத்துக் கொண்டாரோ مِّنْكُمْ உங்களில் نُذِقْهُ அவருக்கு சுவைக்க வைப்போம் عَذَابًا தண்டனையை كَبِيْرًا பெரிய
25:19. நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர்; ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்” (என்று இறைவன் கூறுவான்).
25:19. (ஆகவே, அந்த நிராகரிப்பவர்களை நோக்கி ‘‘ உங்களை வழி கெடுத்தவை இவைதான் என்று) நீங்கள் கூறியதை இவையே பொய்யாக்கி விட்டன. ஆதலால், (நம் வேதனையைத்) தட்டிக் கழிக்கவும் உங்களால் முடியாது. (இவற்றின்) உதவியைப் பெற்றுக் கொள்ளவும் உங்களால் முடியாது.. ஆகவே, உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ அவன் பெரும் வேதனையைச் சுவைக்கும்படி நிச்சயமாக நாம் செய்வோம்'' (என்று கூறுவோம்).
25:19. இவ்வாறு அவர்கள் (உங்களுடைய தெய்வங்கள்) பொய்யெனக் கூறிவிடுவார்கள், இன்று நீங்கள் வாதித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய விஷயங்களை! பிறகு (உங்களுக்கு ஏற்படும் நாசத்தை) உங்களால் தடுக்கவும் இயலாது; எங்கிருந்தும் உதவியைப் பெறவும் இயலாது. மேலும், உங்களில் எவரேனும் கொடுமை புரிந்தால் அவருக்குக் கடுமையான வேதனையை நாம் சுவைக்கக் கொடுப்போம்.
25:19. ஆகவே, நீங்கள் கூறியதை திட்டமாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர், ஆதலால் (நம்முடைய தண்டனையைத்) தடுத்துக் கொள்ளவோ, இன்னும் உதவியைப் பெற்றுக்கொள்ளவோ நீங்கள் சக்திபெற மாட்டீர்கள், மேலும், உங்களில் எவர் அநியாயம் செய்கிறாரோ அவரை மாபெரும் வேதனையைச் சுவைக்குமாறு நாம் செய்வோம்” (என்று அவர்களுக்கு நாம் கூறுவோம்).
25:20 وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِيْنَ اِلَّاۤ اِنَّهُمْ لَيَاْكُلُوْنَ الطَّعَامَ وَيَمْشُوْنَ فِى الْاَسْوَاقِ ؕ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ؕ اَتَصْبِرُوْنَۚ وَكَانَ رَبُّكَ بَصِيْرًا
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை قَبْلَكَ உமக்கு முன்னர் مِنَ الْمُرْسَلِيْنَ தூதர்களில் எவரையும் اِلَّاۤ தவிர اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَيَاْكُلُوْنَ உண்பவர்களாக الطَّعَامَ உணவு وَيَمْشُوْنَ இன்னும் நடந்து செல்பவர்களாக فِى الْاَسْوَاقِ ؕ கடைத் தெருக்களில் وَجَعَلْنَا ஆக்கினோம் بَعْضَكُمْ உங்களில் சிலரை لِبَعْضٍ சிலருக்கு فِتْنَةً ؕ சோதனையாக اَتَصْبِرُوْنَۚ நீங்கள் பொறுப்பீர்களா? وَكَانَ இருக்கிறான் رَبُّكَ உமது இறைவன் بَصِيْرًا உற்று நோக்குபவனாக
25:20. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும் தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
25:20. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம் தூதர்களெல்லாம் நிச்சயமாக (உம்மைப் போல்) உணவு உண்பவர்களாகவும், கடைகளுக்குச் செல்பவர்களாகவும் இருந்தார்கள். எனினும், உங்களில் சிலரை சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம். ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்கள் உங்களை துன்புறுத்துவதை) நீங்களும் சகித்துக் கொண்டிருங்கள். (நபியே!) உமது இறைவன் (அனைத்தையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
25:20. மேலும் (நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பி வைத்திருந்த தூதர்கள் அனைவரும் உணவு உண்பவர்களாயும் கடைவீதிகளில் நடமாடுபவர்களாயும்தாம் இருந்தார்கள். உண்மையில் நாம் உங்களில் ஒரு சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கிவைத்துள்ளோம். நீங்கள் பொறுமையை மேற்கொள்வீர்களா? உம் இறைவன் அனைத்தையும் பார்ப்பவனாய் இருக்கின்றான்.
25:20. மேலும், (நபியே! உமக்கு) முன்னர் (நாம் அனுப்பிய) தூதர்களிலிருந்து நிச்சயமாக அவர்கள் உணவு உண்பவர்களாகவும், கடைத்தெருவில் நடமாடுபவர்களாகவுமே தவிர நாம் அனுப்பவில்லை, மேலும் உங்களில் சிலரை, (மற்றும்) சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம், (அச்சோதனையில்) நீங்கள் பொறுமையாய் இருப்பீர்களா? (நபியே!) மேலும், உம்முடைய இரட்சகன் (யாவற்றையும்) பார்க்கக்கூடியவனாக இருக்கிறான்.
25:21 وَقَالَ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْنَا الْمَلٰٓٮِٕكَةُ اَوْ نَرٰى رَبَّنَا ؕ لَـقَدِ اسْتَكْبَرُوْا فِىْۤ اَنْفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِيْرًا
وَقَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ لَا يَرْجُوْنَ ஆதரவு வைக்காதவர்கள் لِقَآءَنَا நம் சந்திப்பை لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட வேண்டாமா? عَلَيْنَا எங்கள் மீது الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் اَوْ அல்லது نَرٰى நாங்கள் பார்க்க வேண்டாமா? رَبَّنَا ؕ எங்கள் இறைவனை لَـقَدِ திட்டவட்டமாக اسْتَكْبَرُوْا அவர்கள் பெருமை அடித்தனர் فِىْۤ اَنْفُسِهِمْ தங்களுக்குள் وَعَتَوْ عُتُوًّا இன்னும் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர் كَبِيْرًا மிகப்பெரிய அளவில்
25:21. மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்: “எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?” என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.
25:21. (மறுமை நாளில்) நம்மைச் சந்திப்பதை எவர்கள் நம்பவில்லையோ அவர்கள், ‘‘ எங்கள் மீது (நேரடியாகவே) வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது (எங்கள் கண்களால்) எங்கள் இறைவனைப் பார்க்க வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். இவர்கள் தங்களை மிக மிகப் பெரிதாக எண்ணிக்கொண்டு அளவு கடந்து (பெரும் பாவத்தில் சென்று) விட்டனர்.
25:21. எவர்கள் நம் திருமுன் வருவதைக் குறித்து சற்றும் கவலை கொள்ளாமல் இருக்கின்றார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “எங்களிடம் வானவர்கள் ஏன் அனுப்பப்படவில்லை? அல்லது எங்கள் இறைவனை நாங்கள் ஏன் காணுவதில்லை?” இவர்கள் தங்களையே பெரிதாக எண்ணி ஆணவம் கொண்டு திரிகின்றார்கள். மேலும், இவர்கள் தங்கள் அக்கிரமத்தில் பெரிதும் வரம்பு மீறிச் சென்றுவிட்டார்கள்.
25:21. மேலும், (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாதிருக்கிறார்களே அத்தகையோர், “எங்கள்மீது மலக்குகள் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது நாங்கள் எங்கள் இரட்சகனை (கண்களால்) காண வேண்டாமா?” என்று கூறுகின்றனர், இவர்கள் தங்கள் மனங்களில் திட்டமாக தங்களைப் பெரிதாக எண்ணிக் கொண்டனர், பெரிய அளவு வரம்பு கடந்து (சென்று)ம் விட்டனர்.
25:22 يَوْمَ يَرَوْنَ الْمَلٰٓٮِٕكَةَ لَا بُشْرٰى يَوْمَٮِٕذٍ لِّـلْمُجْرِمِيْنَ وَ يَقُوْلُوْنَ حِجْرًا مَّحْجُوْرًا
يَوْمَ நாளில் يَرَوْنَ அவர்கள் பார்ப்பார்கள் الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை لَا அறவே இல்லை بُشْرٰى நற்செய்தி يَوْمَٮِٕذٍ இந்நாளில் لِّـلْمُجْرِمِيْنَ குற்றவாளிகளுக்கு وَ يَقُوْلُوْنَ இன்னும் கூறுவார்கள் حِجْرًا உங்களுக்கு தடுக்கப்பட்டு விட்டது مَّحْجُوْرًا முற்றிலும்
25:22. அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது; (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
25:22. (அவர்கள் விரும்பியவாறு) வானவர்களை அவர்கள் காணும் நாளில், இக்குற்றவாளிகளை நோக்கி ‘‘ இன்றைய தினம் (உங்களுக்கு அழிவைத் தவிர) வேறு ஒரு நல்ல செய்தியும் இல்லை'' என்று (அவ்வானவர்கள்) கூறுவார்கள். (அக்குற்றவாளிகளோ தங்களை அழிக்க வரும் அவ்வானவர்களைத்) ‘‘ தடுத்துக் கொள்ளுங்கள்; தடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சப்தமிடுவார்கள்.
25:22. எந்த நாளில் இவர்கள் வானவர்களைக் காண்பார்களோ அந்த நாள் குற்றவாளிகளுக்கு நற்செய்திக்குரிய நாளாக இராது. (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
25:22. (அவர்களை மரணிக்கச் செய்ய வரும்) மலக்குகளை அவர்கள் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு அன்றையத்தினம் யாதொரு நற்செய்தியும் இராது, (உங்களுக்கு நற்செய்தி கூறப்படுவது) முற்றாகத் தடுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர்கள் கூறுவார்கள்.
25:23 وَقَدِمْنَاۤ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا
وَقَدِمْنَاۤ நாம் நாடுவோம் اِلٰى مَا عَمِلُوْا அவர்கள் செய்ததை مِنْ عَمَلٍ செயல்களில் فَجَعَلْنٰهُ பிறகு அதை ஆக்கிவிடுவோம் هَبَآءً புழுதியாக مَّنْثُوْرًا பரத்தப்பட்ட
25:23. இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
25:23. (இம்மையில்) அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் நோக்கினால் (அதில் ஒரு நன்மையும் இல்லாததனால்) பறக்கும் தூசிகளைப் போல் அவற்றை நாம் ஆக்கிவிடுவோம்.
25:23. மேலும், அவர்கள் செய்த செயல்கள் எதுவாக இருந்தாலும் அதைப் புழுதியாக்கிப் பறக்க விட்டுவிடுவோம்.
25:23. மேலும், (இம்மையில்) செயலால் அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின்பால் நாம் முன்னோக்கி, பின்னர் (அவர்கள் உலகில் விசுவாசம் கொள்ளாததால்) பரத்தப்பட்ட புழுதியாக (பலனற்றதாக) அவைகளை நாம் ஆக்கிவிடுவோம்.
25:24 اَصْحٰبُ الْجَنَّةِ يَوْمَٮِٕذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَّاَحْسَنُ مَقِيْلًا
اَصْحٰبُ الْجَنَّةِ சொர்க்கவாசிகள் يَوْمَٮِٕذٍ அந்நாளில் خَيْرٌ சிறந்தவர்கள் مُّسْتَقَرًّا தங்குமிடத்தால் وَّاَحْسَنُ இன்னும் மிக சிறப்பானவர்கள் مَقِيْلًا ஓய்வெடுக்கும் இடத்தால்
25:24. அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாகவும், சுகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
25:24. அந்நாளில் (நம்பிக்கையாளர்களான) சொர்க்கவாசிகளோ, நல்ல தங்குமிடத்திலும் அழகான (இன்பமான) ஓய்வு பெறும் இடத்திலும் இருப்பார்கள்.
25:24. ஆனால், எவர்கள் சுவனத்துக்குத் தகுதியானவர்களோ அவர்கள்தாம் அந்நாளில் சிறந்த இடத்தில் தங்குவார்கள். மதிய வேளையைக் கழிப்பதற்கு மிக அழகிய இடத்தைப் பெறுவார்கள்.
25:24. அந்நாளில் சுவனவாசிகள் தங்குமிடத்தால் மிகச் சிறந்தவர்களாகவும், ஓய்வுபெறும் இடத்தால் மிக அழகானவர்களாகவும் இருப்பர்.
25:25 وَيَوْمَ تَشَقَّقُ السَّمَآءُ بِالْـغَمَامِ وَنُزِّلَ الْمَلٰٓٮِٕكَةُ تَنْزِيْلًا
وَيَوْمَ நாளில் تَشَقَّقُ பிளந்துவிடும் السَّمَآءُ வானம் بِالْـغَمَامِ வெள்ளை மேகத்தைக் கொண்டு وَنُزِّلَ இன்னும் இறக்கப்படும் (நாளில்) الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் تَنْزِيْلًا இறங்குதல்
25:25. இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.
25:25. வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் வானவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள்.
25:25. அந்நாளில் வானத்தைப் பிளந்துகொண்டு ஒரு மேகம் வெளிப்படும். மேலும், வானவர்கள் கூட்டங்கூட்டமாய் இறக்கி வைக்கப்படுவார்கள்.
25:25. இன்னும், வானம் மேகத்தால் பிளந்து, மலக்குகள் உறுதியாகவே இறக்கிவைக்கப்படும் நாளை-(அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக).
25:26 اَلْمُلْكُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ لِلرَّحْمٰنِؕ وَكَانَ يَوْمًا عَلَى الْكٰفِرِيْنَ عَسِيْرًا
اَلْمُلْكُ ஆட்சி يَوْمَٮِٕذِ அந்நாளில் اۨلْحَـقُّ உண்மையான لِلرَّحْمٰنِؕ ரஹ்மானிற்கே وَكَانَ இருக்கும் يَوْمًا நாளாக عَلَى الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَسِيْرًا மிக சிரமமான
25:26. அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்; மேலும் காஃபிர்களுக்கு கடுமையான நாளாகவும் இருக்கும்.
25:26. அந்நாளில் உண்மையான ஆட்சி ரஹ்மான் ஒருவனுக்கே இருக்கும். நிராகரிப்பவர்களுக்கு அது மிக்க கடினமான நாளாகவும் இருக்கும்.
25:26. அந்நாளில் உண்மையான ஆட்சியதிகாரம், ரஹ்மானுக்கே கருணைமிக்க இறைவனுக்கே உரியதாக இருக்கும். மேலும், அது இறைநிராகரிப்பாளர்களுக்கு மிகக் கடினமான நாளாக இருக்கும்.
25:26. அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மா(ன் ஒருவ)னுக்கே இருக்கும், மேலும், நிராகரிப்போருக்கு அது (மிக்க) கடினமான நாளாகவும் இருக்கும்.
25:27 وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا
وَيَوْمَ அந்நாளில் يَعَضُّ கடிப்பான் الظَّالِمُ அநியாயக்காரன் عَلٰى يَدَيْهِ தனது இரு கரங்களையும் يَقُوْلُ கூறுவான் يٰلَيْتَنِى اتَّخَذْتُ நான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே! مَعَ الرَّسُوْلِ தூதருடன் سَبِيْلًا ஒரு வழியை
25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு: “அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான்.
25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு ‘‘நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?'' என்று கூறுவான்.
25:27. மேலும், அந்நாளில் கொடுமை புரிந்த மனிதன் தன்னுடைய கைகளைக் கடித்தபடிக் கூறுவான்: “அந்தோ! நான் இறைத்தூதருக்குத் துணைபுரிந்திருக்கக் கூடாதா?
25:27. மேலும், “அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே!” என்று கூறியவனாக அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொள்ளும் நாளை (அவர்களுக்கு நீர் நினைவுபடுத்துவீராக)
25:28 يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا
يٰوَيْلَتٰى என் நாசமே! لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ நான் எடுத்திருக்கக் கூடாதே! فُلَانًا இன்னவனை خَلِيْلًا நண்பனாக
25:28. “எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”
25:28. ‘‘என் துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் (எனது) நண்பனாக ஆக்காமல் இருந்திருக்க வேண்டாமா?
25:28. ஐயகோ! எனது துர்பாக்கியமே! நான் இன்ன மனிதனை நண்பனாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!
25:28. “எனக்கு வந்த கேடே! (வழிகேட்டிற்கு அழைத்த) இன்னவனை நான் என்னுடைய சிநேகிதனாக ஆக்கிக் கொள்ளாதிருந்திருக்க வேண்டுமே! (என்றும்),
25:29 لَقَدْ اَضَلَّنِىْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِىْ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا
لَقَدْ திட்டவட்டமாக اَضَلَّنِىْ என்னை வழிகெடுத்து விட்டான் عَنِ الذِّكْرِ அறிவுரையிலிருந்து بَعْدَ பின்னர் اِذْ جَآءَنِىْ ؕ அது என்னிடம் வந்த وَكَانَ இருக்கிறான் الشَّيْطٰنُ ஷைத்தான் لِلْاِنْسَانِ மனிதனை خَذُوْلًا கைவிடுபவனாக
25:29. “நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.)
25:29. நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!'' (என்றும் புலம்புவான்.)
25:29. நான் அவனுடைய வழிகேட்டுக்குப் பலியாகி என்னிடம் வந்த அறிவுரையை ஏற்காமல் இருந்துவிட்டேனே! ஷைத்தான் மனிதனை மிகவும் ஏமாற்றக்கூடியவன் என்று நிரூபணமாகிவிட்டது.”
25:29. “நல்லுபதேசத்தை விட்டும்-அது என்னிடம் வந்ததன் பின்னர் (நல்லுபதேசம் பெறுவதிலிருந்து) அவன்தான் என்னைத் திட்டமாக வழி கெடுத்துவிட்டான், மேலும், “ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் மோசக்காரனாக இருக்கிறான்” (என்றும் பிதற்றுவான்).
25:30 وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا
وَقَالَ கூறுவார் الرَّسُوْلُ தூதர் يٰرَبِّ என் இறைவா! اِنَّ நிச்சயமாக قَوْمِى எனது மக்கள் اتَّخَذُوْا எடுத்துக் கொண்டனர் هٰذَا الْقُرْاٰنَ இந்த குர்ஆனை مَهْجُوْرًا புறக்கணிக்கப் பட்டதாக
25:30. “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்.
25:30. (அச்சமயம் நம்) தூதர் ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் இந்த மக்கள் இந்த குர்ஆனை முற்றிலும் வெறுத்து(த் தள்ளி) விட்டார்கள்'' என்று கூறுவார்.
25:30. மேலும், இறைத்தூதர் கூறுவார்: “என் இறைவா! என் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இந்தக் குர்ஆனை நகைப்புக்குரியதாக்கிக் கொண்டிருந்தார்கள்.”
25:30. (நம்முடைய) தூதர், “என் இரட்சகனே! நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்தக் குர் ஆனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக எடுத்துக் கொண்டனர்” என்று கூறுவார்.
25:31 وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِيْنَؕ وَكَفٰى بِرَبِّكَ هَادِيًا وَّنَصِيْرًا
وَكَذٰلِكَ இவ்வாறுதான் جَعَلْنَا நாம் ஆக்கினோம் لِكُلِّ ஒவ்வொரு نَبِىٍّ நபிக்கும் عَدُوًّا எதிரிகளை مِّنَ الْمُجْرِمِيْنَؕ குற்றவாளிகளில் وَكَفٰى போதுமானவன் بِرَبِّكَ உமது இறைவன் هَادِيًا நேர்வழி காட்டுபவனாக وَّنَصِيْرًا இன்னும் உதவுபவனாக
25:31. மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.
25:31. இவ்வாறே ஒவ்வொரு நபிமாருக்கும் குற்றவாளிகளை நாம் எதிரிகளாக ஏற்படுத்தி இருந்தோம். (நபியே!) உமக்கு நேரான வழியை அறிவித்து, உதவி செய்ய உமது இறைவனே போதுமானவன்.
25:31. (நபியே!) இவ்வாறே நாம் குற்றவாளிகளை இறைத்தூதர் ஒவ்வொருவருக்கும் பகைவர்களாக்கினோம். மேலும், வழிகாட்டுவதற்கும், உதவி புரிவதற்கும் உங்கள் இறைவனே உங்களுக்குப் போதுமானவன்.
25:31. இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், குற்றவாளிகளிலிருந்து பகைவரை நாம் ஆக்கினோம், நேர் வழிகாட்டுபவனாகவும், உதவி செய்பவனாகவும் இருக்க (நபியே!) உம் இரட்சகன் (உமக்குப்) போதுமானவன்.
25:32 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْـقُرْاٰنُ جُمْلَةً وَّاحِدَةً ۛۚ كَذٰلِكَ ۛۚ لِنُثَبِّتَ بِهٖ فُـؤَادَكَ وَرَتَّلْنٰهُ تَرْتِيْلًا
وَقَالَ கூறினர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் لَوْلَا نُزِّلَ இறக்கப்பட வேண்டாமா! عَلَيْهِ இவர் மீது الْـقُرْاٰنُ இந்த குர்ஆன் جُمْلَةً ஒட்டு மொத்தமாக وَّاحِدَةً ۛۚ ஒரே தடவையில் كَذٰلِكَ ۛۚ இவ்வாறுதான் لِنُثَبِّتَ உறுதிப்படுத்துவதற்காக بِهٖ அதன் மூலம் فُـؤَادَكَ உமது உள்ளத்தை وَرَتَّلْنٰهُ இன்னும் இதை கற்பித்தோம். تَرْتِيْلًا சிறிது சிறிதாக
25:32. இன்னும்: “இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.
25:32. (நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் ‘‘ இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் அவர்மீது இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (இதை) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி (வரிசை முறைப்படி) ஒழுங்குபடுத்துவதெல்லாம் உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே ஆகும்.
25:32. மேலும், இறைநிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்: “இவர் மீது குர்ஆன் முழுவதும் ஒரே நேரத்தில் ஏன் இறக்கி வைக்கப்படவில்லை? ஆம்! இவ்வாறு ஏன் செய்யப்பட்டிருக்கின்றது என்றால், இதனை நல்ல முறையில் உமது இதயத்தில் நாம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும் (இதே நோக்கத்திற்காகத்தான்) இதனை நாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்துடன் தனித்தனிப் பகுதிகளாக்கினோம்.
25:32. மேலும், (நபியே!) நிராகரித்தோர் “இவர் மீது குர் ஆன் (தவ்றாத், இன்ஜீல், ஜபூர் ஆகிய வேதங்கள் இறக்கப்பட்டது போன்று முழுவதும்) ஒரே தொகுப்பாக இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று கூறுகின்றனர், அப்படித்தான் அதைக்கொண்டு உம் இதயத்தை நாம் உறுதிப்படுத்துவதற்காக (இறக்கிவைத்தோம்.) இன்னும் இதனைப் படிப்படியாக நாம் ஓதிக்காண்பித்(து விளக்கத்தையும் தெளிவு செய்)தோம்.
25:33 وَلَا يَاْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَـقِّ وَاَحْسَنَ تَفْسِيْرًا ؕ
وَلَا يَاْتُوْنَكَ அவர்கள் உம்மிடம் கூறமாட்டார்கள் بِمَثَلٍ எந்த ஒரு தன்மையையும் اِلَّا தவிர جِئْنٰكَ உமக்கு நாம் கூறியே بِالْحَـقِّ சத்தியத்தையும் وَاَحْسَنَ இன்னும் மிக அழகான تَفْسِيْرًا ؕ விளக்கத்தை(யும்)
25:33. அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும், (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.
25:33. இந்நிராகரிப்பவர்கள் (எத்தகைய கேள்விகளைக் கேட்டு அதற்காக ஆச்சரியமான) எந்த உதாரணத்தை உங்களிடம் அவர்கள் கொண்டு வந்த போதிலும் (அதைவிட) உண்மையான விஷயத்தையும், அழகான வியாக்கியானத்தையும் (விவரத்தையும்) நாம் உங்களுக்கு கூறாமல் இருக்கவில்லை.
25:33. மேலும் (இதில் இந்த விவேகம் இருக்கின்றது:) அவர்கள் உம்மிடம் விநோதமான விஷயத்தை (அல்லது வியப்புக்குரிய கேள்வியை)க் கேட்டு வந்த போதெல்லாம் அதற்குரிய சரியான விடையை (உரிய நேரத்தில்) உமக்கு நாம் அளித்துள்ளோம். மேலும், மிக அழகான முறையில் விஷயத்தை விளக்கியுள்ளோம்.
25:33. உம்மிடம் எந்த உதாரணத்தையும் அவர்கள் கொண்டு வருவதில்லை, (அதைவிட) உண்மையானதையும், விளக்கத்தால் மிக அழகானதையும் நாம் உம்மிடம் கொண்டுவந்தே தவிர,
25:34 اَلَّذِيْنَ يُحْشَرُوْنَ عَلٰى وُجُوْهِهِمْ اِلٰى جَهَـنَّمَۙ اُولٰٓٮِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِيْلًا
اَلَّذِيْنَ எவர்கள் يُحْشَرُوْنَ எழுப்பப்படுகிறார்களோ عَلٰى மீது وُجُوْهِهِمْ தங்கள் முகங்களின் اِلٰى பக்கம் جَهَـنَّمَۙ நரகத்தின் اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் شَرٌّ மிக கெட்டவர்கள் مَّكَانًا தங்குமிடத்தால் وَّاَضَلُّ இன்னும் மிக வழிதவறியவர்கள் سَبِيْلًا பாதையால்
25:34. எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழி கெட்டவர்கள்.
25:34. இவர்கள்தான் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லப்படுபவர்கள். இவர்கள்தான் மகாகெட்ட இடத்தில் தங்குபவர்களும் வழி தவறியவர்களும் ஆவார்கள்.
25:34. நரகத்தை நோக்கி எவர்கள் முகம் குப்புற இழுத்துச் செல்லப்படவிருக்கின்றார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிகமிகத் தவறானதாகும்.
25:34. தங்களின் முகங்களின் மீது (முகங்குப்புற) நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்களே அத்தகையோர் -அவர்கள் (தங்கும்) இடத்தால் மிகவும் கெட்டவர்கள், பாதையால் மிகவும் வழி தவறியவர்கள்.
25:35 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِيْرًا ۖ ۚ
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவுக்கு الْكِتٰبَ வேதத்தை وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் مَعَهٗۤ அவருடன் اَخَاهُ அவரது சகோதரர் هٰرُوْنَ ஹாரூனை وَزِيْرًا ۖ ۚ உதவியாளராக
25:35. மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
25:35. (இதற்கு முன்னர்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு(த் ‘தவ்றாத்' என்னும்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு மந்திரியாகவும் ஆக்கினோம்.
25:35. மேலும், நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவி யாளராய் ஆக்கினோம்.
25:35. மேலும், நிச்சயமாக, மூஸாவுக்கு(த் ‘தவ்றாத்’ என்னும்) வேதத்தை நாம் கொடுத்தோம், அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஆக்கினோம்.
25:36 فَقُلْنَا اذْهَبَاۤ اِلَى الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاؕ فَدَمَّرْنٰهُمْ تَدْمِيْرًاؕ
فَقُلْنَا நாம் கூறினோம் اذْهَبَاۤ நீங்கள் இருவரும் செல்லுங்கள் اِلَى الْقَوْمِ மக்களிடம் الَّذِيْنَ كَذَّبُوْا பொய்ப்பித்தவர்கள் بِاٰيٰتِنَاؕ நமது அத்தாட்சிகளை فَدَمَّرْنٰهُمْ ஆகவே நாம் அவர்களை அழித்து விட்டோம் تَدْمِيْرًاؕ முற்றிலும் தரை மட்டமாக
25:36. ஆகவே நாம், “நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்” என்று கூறினோம். பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.
25:36. அவ்விருவரையும் நோக்கி, ‘‘நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிய மக்களிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள்'' எனக் கூறினோம். (அவ்வாறு அவர்கள் சென்று அவர்களுக்குக் கூறியதை அந்த மக்கள் நிராகரித்து விட்டதனால்) நாம் அவர்களை அடியோடு அழித்துவிட்டோம்.
25:36. அவ்விருவர்க்கும் கூறினோம்: “நமது சான்றுகளைப் பொய்யென வாதிட்டுக் கொண்டிருக்கின்ற சமூகத்தாரிடம் செல்லுங்கள்!” இறுதியில், அச்சமூகத்தை நாம் அழித்தொழித்துவிட்டோம்.
25:36. ஆகவே நாம், “நீங்கள் இருவரும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யாக்கினார்களே அத்தகைய சமூகத்தாரிடம் செல்லுங்கள்” எனக் கூறினோம், பின்னர், (அவ்விருவரையும் விசுவாசம் கொள்ளாத) அவர்களை நாம் அடியோடு அழித்துவிட்டோம்.
25:37 وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰيَةً ؕ وَاَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ عَذَابًا اَ لِيْمًا ۖ ۚ
وَقَوْمَ இன்னும் மக்களையும் نُوْحٍ நூஹூடைய لَّمَّا போது كَذَّبُوا அவர்கள் பொய்ப்பித்தனர் الرُّسُلَ தூதர்களை اَغْرَقْنٰهُمْ அவர்களை மூழ்கடித்தோம் وَجَعَلْنٰهُمْ அவர்களை ஆக்கினோம் لِلنَّاسِ மக்களுக்கு اٰيَةً ؕ ஓர் அத்தாட்சியாக وَاَعْتَدْنَا இன்னும் நாம் தயார் படுத்தியுள்ளோம் لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு عَذَابًا தண்டனையை اَ لِيْمًا ۖ ۚ வலி தரும்
25:37. இன்னும்: நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
25:37. நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய சமயத்தில் அவர்களையும் மூழ்கடித்து, அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இத்தகைய அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
25:37. இதே கதிதான் நூஹ் உடைய சமூகத்தார்க்கும் ஏற்பட்டது; தூதர்களைப் பொய்யர்களென்று அவர்கள் தூற்றியபோது! அவர்களை நாம் மூழ்கடித்தோம். மேலும் (அனைத்துலக) மக்களுக்கும் ஒரு படிப்பினை தரும் சான்றாக அவர்களை ஆக்கினோம். மேலும், அந்தக் கொடுமைக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
25:37. இன்னும், (நபி) நூஹ்வுடைய சமூகத்தாரை – அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கியபோது அவர்களை மூழ்கடித்தோம், அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம், இன்னும், அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக்கி வைத்திருக்கிறோம்.
25:38 وَّعَادًا وَّثَمُوْدَا۟ وَ اَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًۢا بَيْنَ ذٰ لِكَ كَثِيْرًا
وَّعَادًا ஆது وَّثَمُوْدَا۟ ஸமூது وَ اَصْحٰبَ الرَّسِّ கிணறு வாசிகள் وَقُرُوْنًۢا இன்னும் பல தலைமுறையினரை بَيْنَ ذٰ لِكَ இவர்களுக்கிடையில் كَثِيْرًا பல
25:38. இன்னும் “ஆது” “ஸமூது” (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).
25:38. ஆது, ஸமூது மக்களையும், றஸ் (அகழ்) வாசிகளையும், இவர்களுக்கிடையில் வசித்த இன்னும் பல வகுப்பினரையும் (நாம் அழித்திருக்கிறோம்).
25:38. இதேபோன்று ஆத், ஸமூத் சமூகத்தினரும் ‘ரஸ்’ சமூகத்தினரும், மேலும், அவர்களுக்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்த அநேக மக்களும் அழித்தொழிக்கப்பட்டனர்.
25:38. ஆ(துக்கூட்டத்)தையும், ஸமூ(துக் கூட்டத்)தையும், ரஸ் (கிணறு) வாசிகளையும் இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினர்களையும் (நாம் அழித்துவிட்டோம்)
25:39 وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَ وَكُلًّا تَبَّـرْنَا تَـتْبِيْرًا
وَكُلًّا எல்லோருக்கும் ضَرَبْنَا நாம் விவரித்தோம் لَهُ அவர்களுக்கு الْاَمْثَالَ பல உதாரணங்களை وَكُلًّا எல்லோரையும் تَبَّـرْنَا நாம் அழித்துவிட்டோம் تَـتْبِيْرًا அடியோடு
25:39. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை தெளிவுபடுத்தினோம். மேலும் (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.
25:39. (அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு அழிந்துபோன முன்னிருந்தவர்களின் சரித்திரங்களை) அவர்கள் அனைவருக்கும் நாம் பல உதாரணங்களாகக் கூறினோம். (அவர்கள் அவற்றை நிராகரித்து விடவே,) அவர்கள் அனைவரையும் நாம் அடியோடு அழித்து விட்டோம்.
25:39. மேலும், அவர்களில் ஒவ்வொருவருக்கும் (முன்னர் அழிந்து போனவர்களின்) உதாரணங்களைக் கூறி விளக்கினோம். இறுதியில், ஒவ்வொருவரையும் அடியோடு அழித்துவிட்டோம்.
25:39. ஓவ்வொருவருக்கும் (நாம் தெளிவான சான்றுகளைக் கொடுத்து) அவ(ரவ)ருக்குரிய பல உதாரணங்களையும் கூறினோம், (அவைகளை ஏற்காது மறுத்துவிட்ட) ஒவ்வொருவரையும் நாம் அடியோடு அழித்துவிட்டோம்.
25:40 وَلَقَدْ اَتَوْا عَلَى الْقَرْيَةِ الَّتِىْۤ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ ؕ اَفَلَمْ يَكُوْنُوْا يَرَوْنَهَا ۚ بَلْ كَانُوْا لَا يَرْجُوْنَ نُشُوْرًا
وَلَقَدْ திட்டவட்டமாக اَتَوْا அவர்கள் வந்திருக்கின்றனர் عَلَى அருகில் الْقَرْيَةِ ஊரின் الَّتِىْۤ اُمْطِرَتْ பொழியப்பட்டது مَطَرَ மழை السَّوْءِ ؕ மிக மோசமான اَفَلَمْ يَكُوْنُوْا يَرَوْنَهَا ۚ அதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா? بَلْ மாறாக كَانُوْا இருந்தனர் لَا يَرْجُوْنَ அவர்கள் ஆதரவு வைக்காதவர்களாக نُشُوْرًا எழுப்பப்படுவதை
25:40. இன்னும்: நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.
25:40. நிச்சயமாக (மக்காவிலுள்ள நிராகரிப்பாளர்கள்) கெட்ட (கல்) மாரி பொழிந்த ஊரின் சமீபமாக (அடிக்கடி)ச் சென்றே இருக்கின்றனர். அதை இவர்கள் பார்க்கவில்லையா? உண்மையில் இவர்கள் (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை நம்பவேயில்லை.
25:40. மேலும், எந்த ஊர் மீது கொடுமையான மழை பொழிவிக்கப்பட்டதோ அந்த ஊரினூடே இவர்கள் சென்றிருக்கின்றார்கள். என்ன, அதனுடைய கதியை இவர்கள் பார்க்கவில்லையா? இருப்பினும், இவர்கள் மரணத்திற்குப் பின் மற்றொரு வாழ்க்கையை நம்பாதவர்களாகவே இருக்கின்றனர்.
25:40. நிச்சயமாக (மக்கத்துக் காஃபிர்களான) இவர்கள், தீய (கல்மாரி) மழை பொழிவிக்கப்பட்டிருந்ததே அத்தகைய ஊருக்கு (ச் சென்று) வந்திருக்கிறார்கள், அதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா? எனினும், (மரணத்திற்குப்பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை அவர்கள் நம்பாதவர்களாக இருந்தனர்.
25:41 وَاِذَا رَاَوْكَ اِنْ يَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِىْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا
وَاِذَا رَاَوْكَ அவர்கள் உம்மைப் பார்த்தால் اِنْ يَّتَّخِذُوْنَكَ உம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள் اِلَّا தவிர هُزُوًا ؕ கேலியாகவே اَهٰذَا இவரையா? الَّذِىْ எவர் بَعَثَ அனுப்பினான் اللّٰهُ அல்லாஹ் رَسُوْلًا தூதராக
25:41. “இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்” (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக் கேலிக்குரியவராக அவர்கள் கருதுகின்றனர்.
25:41. (நபியே!) இவர்கள் உம்மைக் கண்டால் உம்மைப் பற்றி ‘‘இவரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பி வைத்தான்?'' என்று பரிகாசமாகக் கூறுகின்றனர்.
25:41. மேலும், இவர்கள் உம்மைக் காண்பார்களானால், உம்மைக்கேலிக்கு உரியவராக எடுத்துக் கொள்கின்றார்கள். (அவர்கள் கூறுகின்றார்கள்:) “இவரைத்தான் இறைவன் தூதராய் அனுப்பியிருக்கின்றானா?
25:41. மேலும், (நபியே!) அவர்கள் உம்மைப் பார்த்துவிட்டால், பரிகாசமாகவே தவிர அவர்கள் உம்மை எடுத்துக் கொள்வதில்லை, “அல்லாஹ் (தன்னுடைய) தூதராக அனுப்பினானே அத்தகையவர்தானா இவர்?” (என்று கூறுகின்றனர்).
25:42 اِنْ كَادَ لَيُضِلُّنَا عَنْ اٰلِهَـتِنَا لَوْ لَاۤ اَنْ صَبَـرْنَا عَلَيْهَا ؕ وَسَوْفَ يَعْلَمُوْنَ حِيْنَ يَرَوْنَ الْعَذَابَ مَنْ اَضَلُّ سَبِيْلًا
اِنْ كَادَ لَيُضِلُّنَا இவர் நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார் عَنْ اٰلِهَـتِنَا நமது தெய்வங்களை விட்டு لَوْ لَاۤ اَنْ صَبَـرْنَا நாம் உறுதியாக இருந்திருக்க வில்லையென்றால் عَلَيْهَا ؕ அவற்றின் மீது وَسَوْفَ يَعْلَمُوْنَ அவர்கள் அறிந்து கொள்வார்கள் حِيْنَ போது يَرَوْنَ அவர்கள் பார்க்கும் الْعَذَابَ தண்டனையை مَنْ யார் اَضَلُّ மிக வழிகெட்டவர் سَبِيْلًا பாதையால்
25:42. “நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்; (மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது, பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.
25:42. ‘‘நாம் உறுதியாக இல்லையென்றால், நம் தெய்வங்களை விட்டும் நம்மை இவர் வழிகெடுத்தே இருப்பார்'' (என்றும் கூறுகின்றனர். மறுமையில்) அவர்கள் வேதனையைத் தங்கள் கண்ணால் காணும் நேரத்தில் வழி கெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.
25:42. நம் தெய்வங்கள் மீது உள்ள நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்கவில்லையானால் இவரோ நம்மை வழிகெடுத்து அந்தத் தெய்வங்களை விட்டு நம்மை விலக்கியே வைத்திருப்பார்.” சரி! அந்த நேரம் வெகு தூரத்தில் இல்லை இவர்கள் வேதனையைக் காணும்போது யார் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்கள் என்பது இவர்களுக்குத் தாமாகவே தெரிந்துவிடும்.
25:42. (தெய்வங்களாகிய) அவற்றின் மீது நாம் உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை விட்டும் திரும்பி நம்மை இவர் வழிகெடுக்க சமீபித்து இருப்பார் (என்றும் கூறுகின்றனர். மறுமையில்) அவர்கள் வேதனையைக் கண்ணால் காணும் நேரத்தில், பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.
25:43 اَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ ؕ اَفَاَنْتَ تَكُوْنُ عَلَيْهِ وَكِيْلًا ۙ
اَرَءَيْتَ நீர் பார்த்தீரா? مَنِ اتَّخَذَ எடுத்துக் கொண்டவனை اِلٰهَهٗ தனது கடவுளாக هَوٰٮهُ ؕ தனது மன இச்சையை اَفَاَنْتَ நீர்? تَكُوْنُ ஆகுவீரா عَلَيْهِ அவனுக்கு وَكِيْلًا ۙ பொறுப்பாளராக
25:43. தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?
25:43. (நபியே!) எவன் தன் சரீர இச்சையை(த் தான் பின்பற்றும்) தன் தெய்வமாக எடுத்துக் கொண்டானோ அவனை நீர் பார்த்தீரா? (அவன் வழி தவறாது) நீர் அவனுக்குப் பாதுகாப்பாளராக இருப்பீரா?
25:43. தனது மனஇச்சையைத் தன் கடவுளாக்கிக் கொண்டவனின் நிலை குறித்து என்றேனும் நீர் சிந்தித்ததுண்டா? இத்த கையவனை நேர்வழியில் கொண்டுவரும் பொறுப்பை நீர் ஏற்க முடியுமா?
25:43. (நபியே!) தன் மனோ இச்சையைத் தன் (வணக்கத்திற்குரிய) தெய்வமாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? நீர் அவனுக்குப் பாதுகாப்பாளராக இருப்பீரா?
25:44 اَمْ تَحْسَبُ اَنَّ اَكْثَرَهُمْ يَسْمَعُوْنَ اَوْ يَعْقِلُوْنَ ؕ اِنْ هُمْ اِلَّا كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ سَبِيْلًا
اَمْ அல்லது تَحْسَبُ நீர் எண்ணுகிறீரா? اَنَّ என்று اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் يَسْمَعُوْنَ செவிமடுப்பார்கள் اَوْ அல்லது يَعْقِلُوْنَ ؕ சிந்தித்து புரிவார்கள் اِنْ هُمْ அவர்கள் இல்லை اِلَّا தவிர كَالْاَنْعَامِ கால்நடைகளைப் போன்றே بَلْ மாறாக هُمْ அவர்கள் اَضَلُّ வழிகெட்டவர்கள் سَبِيْلًا பாதையால்
25:44. அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை-அல்ல; (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.
25:44. அவர்களில் பெரும்பாலானவர்கள் (உமது வார்த்தைகளைக் காதால்) கேட்கிறார்கள் என்றோ அல்லது அதை(த் தங்கள் மனதால்) உணர்ந்து பார்க்கிறார்கள் என்றோ நீங்கள் எண்ணிக் கொண்டீரா? அன்று! அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களே தவிர, வேறில்லை. மாறாக, (மிருகங்களை விட) மிகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
25:44. என்ன, இவர்களில் பெரும்பாலோர் செவியேற்கின்றார்கள் என்றோ, புரிந்து கொள்கின்றார்கள் என்றோ நீர் கருதுகின்றீரா? இவர்களோ கால்நடைகளைப் போன்றவர்களாவர். ஏன், அவற்றை விடவும் இவர்கள் மிகவும் தரங்கெட்டவர்களாவர்.
25:44. அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம்முடைய கூற்றை) கேட்கின்றார்கள் என்றோ, அல்லது அதனை விளங்கிக் கொள்கிறார்கள் என்றோ நீர் எண்ணிக் கொண்டீரா? அவர்கள் (ஆடு, மாடு, ஒட்டகங்கள் ஆகிய) கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை, அல்ல, (அவற்றைவிட) அவர்கள் பாதையால் மிக வழிதவறியவர்கள்.
25:45 اَلَمْ تَرَ اِلٰى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ ۚ وَلَوْ شَآءَ لَجَـعَلَهٗ سَاكِنًا ۚ ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيْلًا ۙ
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلٰى பக்கம் رَبِّكَ உமது இறைவன் كَيْفَ எப்படி مَدَّ நீட்டுகிறான் الظِّلَّ ۚ நிழலை وَلَوْ شَآءَ அவன் நாடியிருந்தால் لَجَـعَلَهٗ அதை ஆக்கியிருப்பான் سَاكِنًا ۚ நிரந்தரமாக ثُمَّ பிறகு جَعَلْنَا நாம் ஆக்கினோம் الشَّمْسَ சூரியனை عَلَيْهِ அதன் மீது دَلِيْلًا ۙ ஆதாரமாக
25:45. (நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம் தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.
25:45. (நபியே!) உமது இறைவன் நிழலை எவ்வாறு (குறைத்து, பின்பு அதை) நீட்டுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடியிருந்தால், அதை ஒரே நிலையில் வைத்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு வழிகாட்டியாக நாம்தான் ஆக்கினோம்.
25:45. உம் இறைவன் எவ்வாறு நிழலை விரிக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடினால், அந்நிழலை நிலையானதாய் ஆக்கியிருப்பான். பிறகு, நாம் சூரியனை அதற்கு வழிகாட்டி ஆக்கினோம்.
25:45. (நபியே!) உம் இரட்சகனின் பக்கம் - நிழலை அவன் எவ்வாறு நீட்டுகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை நிலைபெற்றதாகவும் ஆக்கிவிடுவான், பிறகு சூரியனை (நிழலாகிய) அதற்கு ஆதாரமாக நாம் ஆக்கினோம்.
25:46 ثُمَّ قَبَضْنٰهُ اِلَـيْنَا قَبْضًا يَّسِيْرًا
ثُمَّ பிறகு قَبَضْنٰهُ அதை கைப்பற்றி விடுகிறோம் اِلَـيْنَا நம் பக்கம் قَبْضًا கைப்பற்றுதல் يَّسِيْرًا மறைவாக
25:46. பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.
25:46. பின்னர் நாம்தான் அதை சிறுகச் சிறுகக் குறைத்து விடுகிறோம்.
25:46. பிறகு (சூரியன் மேலே செல்லச் செல்ல) அந்நிழலை நாம் மெல்ல மெல்ல நம் பக்கமாக சுருட்டிக் கொண்டே போகின்றோம்.
25:46. பின்னர், நாம் அதனைச் சிறுகச் சிறுக குறைத்து நம்மளவில் அதைக் கைப்பற்றிக் கொள்கிறோம்.
25:47 وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا
وَهُوَ الَّذِىْ அவன்தான் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الَّيْلَ இரவை لِبَاسًا ஓர் ஆடையாகவும் وَّالنَّوْمَ இன்னும் தூக்கத்தை سُبَاتًا ஓய்வாகவும் وَّجَعَلَ இன்னும் ஆக்கினான் النَّهَارَ பகலை نُشُوْرًا விழிப்பதற்கும்
25:47. அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.
25:47. அவன்தான் உங்களுக்கு இரவைப் போர்வையாகவும், தூக்கத்தை ஓய்வளிக்கக் கூடியதாகவும், பகலை (உங்கள்) நடமாட்டத்திற்காக (பிரகாசமாக)வும் ஆக்கினான்.
25:47. மேலும், அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை அமைதியாகவும் பகலை உயிர்த்தெழும் வேளையாகவும் ஆக்கினான்.
25:47. இன்னும், அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கினான், பகலை (நீங்கள் தூக்கத்திலிருந்து) மீண்டெழு(ந்து வாழ்க்கைக்குரியவற்றை பூமியின் பல பாகங்களிலும் தேடிக் கொள்)வதற்காகவும் ஆக்கினான்.
25:48 وَهُوَ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۙ
وَهُوَ الَّذِىْۤ அவன்தான் اَرْسَلَ அனுப்புகிறான் الرِّيٰحَ காற்றுகளை بُشْرًۢا நற்செய்தி கூறக்கூடியதாக بَيْنَ يَدَىْ முன்பாக رَحْمَتِهٖۚ தன் அருளுக்கு وَاَنْزَلْنَا இன்னும் நாம் இறக்குகிறோம் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً மழை நீரை طَهُوْرًا ۙ பரிசுத்தமான
25:48. இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.
25:48. அவன்தான் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அனுப்பி வைக்கிறான். (மனிதர்களே!) நாம்தான் மேகத்திலிருந்து பரிசுத்தமான நீரை பொழியச் செய்கிறோம்.
25:48. மேலும், அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றான். பிறகு, வானத்தில் இருந்து தூய்மையான நீரை இறக்குகின்றான்.
25:48. மேலும், அவன் எத்தகையவனென்றால், (மழை எனும்) தன் அருளுக்கு முன்னதாகக் (குளிர்ந்த) காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான், (மனிதர்களே!) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம்.
25:49 لِّـنُحْیَِۧ بِهٖ بَلْدَةً مَّيْتًا وَّنُسْقِيَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِىَّ كَثِيْرًا
لِّـنُحْیَِۧ நாம் உயிர்ப்பிப்பதற்காகவும் بِهٖ அதன்மூலம் بَلْدَةً பூமியை مَّيْتًا இறந்த وَّنُسْقِيَهٗ இன்னும் நாம் அதை புகட்டுவதற்காகவும் مِمَّا خَلَقْنَاۤ நாம் படைத்தவற்றில் اَنْعَامًا பல கால்நடைகளுக்கும் وَّاَنَاسِىَّ இன்னும் மனிதர்களுக்கும் كَثِيْرًا அதிகமான
25:49. இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.
25:49. இறந்த பூமிக்கு அதைக்கொண்டு நாம் உயிர் கொடுத்து நம் படைப்புகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற உயிரினங்களுக்கும் பல மனிதர்களுக்கும் அதைப் புகட்டுகிறோம்.
25:49. பூமியின் உயிரற்ற பகுதிகளுக்கு அதன் மூலம் நாம் உயிர் கொடுப்பதற்காகவும், மேலும், நம்முடைய படைப்பினங்களில் அநேக கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தண்ணீர் புகட்டுவதற்காகவும்தான்!
25:49. அதனைக் கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்பதற்காகவும், நாம் படைத்தவற்றில் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்று) கால்நடைகளுக்கும், அநேக மனிதர்களுக்கும் அதனைப் புகட்டுவதற்காகவும் (நீரை இறக்கி வைக்கிறோம்).
25:50 وَلَـقَدْ صَرَّفْنٰهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوْا ۖ فَاَبٰٓى اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا
وَلَـقَدْ صَرَّفْنٰهُ அதை நாம் பிரித்துக் கொடுத்தோம் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் لِيَذَّكَّرُوْا ۖ அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக فَاَبٰٓى மறுத்து விட்டனர் اَكْثَرُ மிகஅதிகமானவர்கள் النَّاسِ மனிதர்களில் اِلَّا தவிர كُفُوْرًا நிராகரிப்பதை
25:50. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.
25:50. அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இவ்விஷயத்தைப் பலவாறாக அவர்களுக்கு எடுத்துரைத்தோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மிக்க நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர்.
25:50. இந்த விந்தைகளை அவர்களிடையே அடிக்கடி நாம் நிகழ்த்துகின்றோம், அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நிராகரிப்பு மற்றும் நன்றி கொல்லும் நடத்தையைத் தவிர வேறெதனையும் மேற்கொள்ள மறுக்கின்றார்கள்.
25:50. திட்டமாக நாம் (நம் அருட்கொடைகளை) அவர்கள் நினைவு கூர்வதற்காக (மழையான)அதை அவர்களுக்கிடையில் (தேவைக்குத் தக்க) பங்கீடு செய்தோம், (ஆனால்) மனிதர்களில் அதிகமானவர்கள் நிராகரிப்பைத் தவிர (வேறு எதையும்) ஏற்பதில்லை.
25:51 وَلَوْ شِئْنَا لَبَـعَثْنَا فِىْ كُلِّ قَرْيَةٍ نَّذِيْرًا ۖ
وَلَوْ شِئْنَا நாம் நாடியிருந்தால் لَبَـعَثْنَا அனுப்பியிருப்போம் فِىْ كُلِّ ஒவ்வொரு قَرْيَةٍ ஊரிலும் نَّذِيْرًا ۖ ஓர் எச்சரிப்பாளரை
25:51. மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.
25:51. நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய ஒவ்வொரு தூதரை (இன்றைய தினமும்) நாம் அனுப்பியே இருப்போம்.
25:51. மேலும், நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் எச்சரிக்கையாளரை அனுப்பி வைத்திருப்போம்.
25:51. மேலும், நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவரை, திட்டமாக நாம் அனுப்பியிருப்போம்.
25:52 فَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَ جَاهِدْهُمْ بِهٖ جِهَادًا كَبِيْرًا
فَلَا تُطِعِ ஆகவே கீழ்ப்படியாதீர் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு وَ جَاهِدْ போர் செய்வீராக! هُمْ அவர்களிடம் بِهٖ இதன்மூலம் جِهَادًا போர் كَبِيْرًا பெரும்
25:52. ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர்; இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.
25:52. ஆகவே, (நபியே!) நீர் இந்த நன்றி கெட்டவர்களுக்கு கட்டுப்படாதீர். இந்த குர்ஆனை (ஆதாரமாக) கொண்டு நீர் அவர்களிடத்தில் பெரும் போராக போராடுவீராக!
25:52. எனவே, (நபியே!) நிராகரிப்பாளர்களின் பேச்சை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்! மேலும், இந்தக் குர்ஆனைக் கொண்டு அவர்களுடன் பெரும் ஜிஹாதில் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுங்கள்.
25:52. ஆகவே, (நபியே!) நீர் நிராகரிப்போருக்கு கீழ்ப்படியாதீர்; அன்றி (குர் ஆனாகிய) இதனை (சான்றாக)க் கொண்டு, நீர் அவர்களுடன் பலமாகப் போராடுவீராக.
25:53 وَهُوَ الَّذِىْ مَرَجَ الْبَحْرَيْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌ ۚ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا
وَهُوَ الَّذِىْ அவன்தான் مَرَجَ இணைத்தான் الْبَحْرَيْنِ இரு கடல்களை هٰذَا இது عَذْبٌ மிக்க மதுரமானது فُرَاتٌ இனிப்பு நீராகும் وَّهٰذَا இதுவோ مِلْحٌ உப்பு நீராகும் اُجَاجٌ ۚ மிக்க உவர்ப்பானது وَجَعَلَ இன்னும் அவன் ஆக்கினான் بَيْنَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் بَرْزَخًا ஒரு திரையையும் وَّحِجْرًا தடுப்பையும் مَّحْجُوْرًا முற்றிலும் தடுக்கக்கூடியது
25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கிறான். ஒன்று, மிக்க இன்பமும் மதுரமுமான தண்ணீர். மற்றொன்று, உப்பும் கசப்புமான தண்ணீர். (இவை ஒன்றோடொன்று கலந்து விடாதிருக்கும் பொருட்டு) இவ்விரண்டுக்கும் இடையில் திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தி இருக்கிறான்.
25:53. மேலும், இரு கடல்களை ஒன்றிணைத்து வைத்திருப்பவன் அவனே! ஒன்று சுவையும் இனிமையும் வாய்ந்தது; மற்றொன்று, உப்பும் கசப்பும் கலந்தது. மேலும், இரண்டுக்குமிடையே ஒரு திரை ஒரு தடுப்பு இருக்கிறது. (அவை ஒன்றோடொன்று கலந்து விடாதவாறு) அது தடுத்துக் கொண்டிருக்கிறது.
25:53. இன்னும் அவன் எத்தகையவனென்றால், இரு கடல்களையும் அவன் ஒன்று சேர்த்திருக்கின்றான்; (அதில் ஒன்றான) இது மிக்க மதுரமானது, தாகம் தீர்க்கக் கூடியது, (அதில் மற்றொன்றான) இது உப்புக்கரிப்பானது கசப்பானது; இவ்விரண்டிற்கிடையில் (அவை ஒன்றோடொன்று கலந்திடாமல்) திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் அவன் ஆக்கியிருக்கின்றான்.
25:54 وَهُوَ الَّذِىْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّ صِهْرًا ؕ وَكَانَ رَبُّكَ قَدِيْرًا
وَهُوَ الَّذِىْ அவன்தான் خَلَقَ படைத்தான் مِنَ الْمَآءِ நீரிலிருந்து بَشَرًا மனிதனை فَجَعَلَهٗ இன்னும் அவனை ஆக்கினான் نَسَبًا இரத்த பந்தமுடையவனாக وَّ صِهْرًا ؕ இன்னும் திருமண பந்தமுடையவனாக وَكَانَ இருக்கிறான் رَبُّكَ உமது இறைவன் قَدِيْرًا பேராற்றலுடையவனாக
25:54. இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
25:54. அவன்தான் (ஒரு துளி) தண்ணீரிலிருந்து மனிதனை உற்பத்தி செய்கிறான். பின்னர், அவனுக்குச் சந்ததிகளையும் சம்பந்திகளையும் ஆக்குகிறான். (நபியே!) உமது இறைவன் (தான் விரும்பியவாறெல்லாம் செய்ய) ஆற்றலுடையவனாகவே இருக்கிறான்.
25:54. மேலும், நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, வம்ச உறவின் மூலமாகவும், திருமணத் தொடர்பின் மூலமாகவும் இரு தனித்தனியான உறவு முறைகளை அவன் ஏற்படுத்தினான். உம் இறைவன் பெரும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்.
25:54. இன்னும் அவன் எத்தகையவனென்றால், மனிதனை (ஒரு துளி) நீரிலிருந்து படைத்தான். பின்னர் அவனுக்கு வம்சாவழியையும் (அதன் மூலம் ஏற்படும் உறவையும் திருமணம் மூலம் ஏற்படும்) சம்பந்தத்தையும் ஆக்கினான், மேலும், (நபியே!) உம் இரட்சகன் (எவ்வாறும் செய்ய) ஆற்றலுடையோனாக இருக்கின்றான்.
25:55 وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْؕ وَكَانَ الْـكَافِرُ عَلٰى رَبِّهٖ ظَهِيْرًا
وَيَعْبُدُوْنَ அவர்கள் வணங்குகின்றனர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مَا لَا يَنْفَعُهُمْ அவர்களுக்கு நற்பலனளிக்காதவற்றை وَلَا يَضُرُّ இன்னும் தீங்கிழைக்காதவற்றை هُمْؕ அவர்களுக்கு وَكَانَ இருக்கிறான் الْـكَافِرُ நிராகரிப்பாளன் عَلٰى எதிராக رَبِّهٖ தன் இறைவனுக்கு ظَهِيْرًا உதவக்கூடியவனாக
25:55. இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்; நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.
25:55. இவ்வாறிருந்தும் அவர்களோ தங்களுக்கு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்றதை அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றனர். நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு விரோதமானவர்களாக இருக்கின்றனர்.
25:55. மேலும், அல்லாஹ்வை விடுத்து தமக்கு எவ்வித நன்மையும் தீமையும் அளித்திட இயலாத தெய்வங்களை மக்கள் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இது தவிர நிராகரிப்பாளன் தன் இறைவனுக்கு எதிரான ஒவ்வொரு துரோகிக்கும் உதவியாளனாக இருக்கின்றான்.
25:55. மேலும், அல்லாஹ்வையன்றி தங்களுக்கு பலன்தராதவற்றையும், தங்களுக்கு இடர் செய்யாதவற்றையும் இணைவைப்பவர்களான அவர்கள் வணங்குகின்றனர், நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு விரோதமாக (ஷைத்தானுக்கு) உதவுபவனாக இருக்கின்றான்.
25:56 وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًا
وَمَاۤ اَرْسَلْنٰكَ உம்மை நாம் அனுப்பவில்லை اِلَّا தவிர مُبَشِّرًا நற்செய்தி கூறுபவராக وَّنَذِيْرًا இன்னும் எச்சரிப்பவராகவே
25:56. இன்னும் (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.
25:56. (நபியே!) நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே தவிர, உம்மை நாம் அனுப்பவில்லை.
25:56. (நபியே!) நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மட்டுமே உம்மை நாம் அனுப்பியிருக்கின்றோம்.
25:56. மேலும், நன்மாராயங்கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே தவிர (நபியே!) உம்மை நாம் அனுப்பவில்லை.
25:57 قُلْ مَاۤ اَسْـٴَــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ اِلَّا مَنْ شَآءَ اَنْ يَّـتَّخِذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا
قُلْ கூறுவீராக! مَاۤ اَسْـٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ எவ்வித கூலியையும் اِلَّا எனினும் مَنْ யார் شَآءَ நாடினானோ اَنْ يَّـتَّخِذَ எடுத்துக்கொள்ள اِلٰى رَبِّهٖ தன் இறைவனுடைய سَبِيْلًا வழியில்
25:57. “அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர” என்று (நபியே!) நீர் கூறும்.
25:57. (அவர்களை நோக்கி) ‘‘இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், எவன் தன் இறைவனின் வழியில் செல்ல விரும்புகிறானோ அவன் செல்வதை (நீங்கள் தடை செய்யாமல் இருப்பதை)யே (நான் உங்களிடம்) விரும்புகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக.
25:57. இவர்களிடம் கூறிவிடும்: “இப்பணிக்காக உங்களிடம் நான் கூலி எதுவும் கேட்கவில்லை. எனது கூலியோ, எவர் தன் இறைவன் பக்கம் சென்றடைவதற்கான வழியினை மேற்கொள்ள விரும்புகின்றாரோ அவர் இதனை மேற்கொள்வதுதான்!”
25:57. இதன்மீது எந்தக் கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை, தன் இரட்சகனின் பக்கம் (செல்லும்) வழியை எடுத்துக்கொள்ள நாடுகிறவரைத்தவிர (மற்ற யாவரும் நஷ்டத்தில் உள்ளனர்) என்று (நபியே!) நீர் கூறுவீராக!
25:58 وَتَوَكَّلْ عَلَى الْحَـىِّ الَّذِىْ لَا يَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖ ؕ وَكَفٰى بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرَ ا ۛۚ ۙ
وَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَى மீது الْحَـىِّ உயிருள்ளவன் الَّذِىْ எவன் لَا يَمُوْتُ மரணிக்கமாட்டான் وَسَبِّحْ இன்னும் துதிப்பீராக! بِحَمْدِهٖ ؕ அவனைப் புகழ்ந்து وَكَفٰى போதுமானவன் بِهٖ அவனே بِذُنُوْبِ பாவங்களை عِبَادِهٖ தன் அடியார்களின் خَبِيْرَ ا ۛۚ ۙ ஆழ்ந்தறிபவனாக
25:58. எனவே மரணிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.
25:58. மரணமற்ற என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீர் நம்புவீராக. அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து வருவீராக. அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்திருப்பதே போதுமானது. (அதற்குரிய தண்டனையை அவன் கொடுப்பான்.)
25:58. மேலும் (நபியே!) என்றென்றும் உயிருடன் இருப்பவனும் ஒருபோதும் மரணிக்காதவனுமான இறைவனை முழுவதுஞ் சார்ந்திருப்பீராக! அவனைப் புகழ்வதுடன் அவன் தூய்மையையும் எடுத்துரைப்பீராக! தன்னுடைய அடிமைகளின் பாவங்களை நன்கு அறிந்துகொள்ள அவனே போதுமானவன்.
25:58. இறந்து விடமாட்டானே அத்தகைய உயிருள்ளவனின் மீது (உமது காரியங்களை ஒப்படைத்து அவன் மீது முழு) நம்பிக்கையும் வைப்பீராக! இன்னும், அவனின் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்வீராக! இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை நன்குணர்ந்திருப்பது அவனுக்குப் போதுமானதாகும்.
25:59 اۨلَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ ۛۚ اَلرَّحْمٰنُ فَسْــٴَــــلْ بِهٖ خَبِيْرًا
اۨلَّذِىْ அவன்தான் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும் فِىْ سِتَّةِ اَيَّامٍ ஆறு நாட்களில் ثُمَّ பிறகு اسْتَوٰى உயர்ந்து விட்டான் عَلَى மீது الْعَرْشِ ۛۚ அர்ஷின் اَلرَّحْمٰنُ அவன் பேரருளாளன் فَسْــٴَــــلْ கேட்பீராக! بِهٖ அவனை خَبِيْرًا அறிந்தவனிடம்
25:59. அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான்; (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
25:59. அவன் எத்தகையவனென்றால் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அவன் ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன்). இதைப் பற்றித் தெரிந்தவர்களைக் கேட்டறிந்து கொள்வீராக.
25:59. அவன் எத்தகையவனெனில் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையேயுள்ள அனைத்துப் பொருட்களையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு அர்ஷின்* மீது அமர்ந்தான்; அவன் ரஹ்மான்கருணை மிக்கவன். அவனுடைய மாட்சிமை பற்றி யாரேனும் அறிந்தவரிடம் கேளுங்கள்.
25:59. அவன் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும் இவையிரண்டுக் கிடையிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் அவன் படைத்தான், பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், அவன்தான் (பேரருளாளனாகிய) அர்ரஹ்மான், அவனைப்பற்றி நன்கு தெரிந்தவரைக் கேட்பீராக!
25:60 وَاِذَا قِيْلَ لَهُمُ اسْجُدُوْا لِلرَّحْمٰنِ قَالُوْا وَمَا الرَّحْمٰنُ اَنَسْجُدُ لِمَا تَاْمُرُنَا وَزَادَهُمْ نُفُوْرًا ۩
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمُ அவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு قَالُوْا கூறுகின்றனர் وَمَا யார்? الرَّحْمٰنُ பேரருளாளன் اَنَسْجُدُ நாங்கள் சிரம் பணிய வேண்டுமா? لِمَا تَاْمُرُنَا நீர்ஏவக்கூடியவனுக்கு وَزَادَ அதிகப்படுத்தியது هُمْ அவர்களுக்கு نُفُوْرًا ۩ வெறுப்பை
25:60. “இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அர்ரஹ்மான் என்பவன் யார்? நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?” என்று கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.
25:60. (ஆகவே,) அந்த ரஹ்மானைச் சிரம் பணிந்து வணங்குங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், அவர்களுக்கு வெறுப்பு அதிகரித்து ‘‘ரஹ்மான் யார்? நீங்கள் கூறியவர்களுக்கெல்லாம் நாம் சிரம் பணிந்து வணங்குவதா?'' என்று கேட்கின்றனர்.
25:60. “ரஹ்மானுக்கு கருணைமிக்க இறைவனுக்கு ஸுஜூது• செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “ரஹ்மான் என்றால் யார்? நீர் சொல்வோருக்கெல்லாம் நாங்கள் ஸஜ்தா செய்துகொண்டிருக்க வேண்டுமா?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். இந்த அழைப்பு அவர்களுடைய வெறுப்பை இன்னும் அதிகமாக்கி விடுகின்றது.
25:60. (ஆகவே. மிகக்கிருபையுடையவனாகிய) அர்ரஹ்மானுக்கு சிரம் பணியுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், அர்ரஹ்மான் யார்? நீர் கட்டளையிடுபவனுக்கு நாங்கள் சிரம் பணிவோமா? என்று கேட்கின்றனர். (அர்ரஹ்மானுக்கு சிரம் பணியுங்கள் என கூறப்பட்டதாகிய) அது அவர்களுக்கு (மார்க்கத்தின் மீது) வெறுப்பையே அதிகமாக்கியது.
25:61 تَبٰـرَكَ الَّذِىْ جَعَلَ فِى السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِيْرًا
تَبٰـرَكَ மிக்க அருள் நிறைந்தவன் الَّذِىْ எவன் جَعَلَ அமைத்தான் فِى السَّمَآءِ வானங்களில் بُرُوْجًا பெரும் கோட்டைகளை وَّجَعَلَ இன்னும் அமைத்தான் فِيْهَا அதில் سِرٰجًا சூரியனையும் وَّقَمَرًا சந்திரனையும் مُّنِيْرًا ஒளிரும்
25:61. வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
25:61. (அந்த ரஹ்மான்) மிக்க பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரிய) ஒளியையும், பிரகாசம் தரக்கூடிய சந்திரனையும் அமைத்தான்.
25:61. பெரும் பாக்கியம் உடையவனாவான்; விண்ணில் உறுதியான மண்டலங்கள் அமைத்து அதில் ஒளிவிளக்கையும் ஒளிர்கின்ற சந்திரனையும் பிரகாசிக்கச் செய்தவன்!
25:61. வானத்தில் (கோளங்கள் சுழன்று வர) பெரும் தங்குமிடங்களை ஆக்கி, அதில் ஒரு விளக்கை (ப்போன்று சூரியனை)யும், பிரகாசிக்கக்கூடிய சந்திரனையும் அமைத்தானே அத்தகையவன் (-அந்த ரஹ்மான் மிக்க) பாக்கியமுடையவன்.
25:62 وَهُوَ الَّذِىْ جَعَلَ الَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ يَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا
وَهُوَ الَّذِىْ அவன்தான் جَعَلَ அமைத்தான் الَّيْلَ இரவையும் وَالنَّهَارَ பகலையும் خِلْفَةً பகரமாக لِّمَنْ اَرَادَ நாடுபவருக்கு اَنْ يَّذَّكَّرَ நல்லறிவு பெற اَوْ அல்லது اَرَادَ நாடினார் شُكُوْرًا நன்றிசெய்ய
25:62. இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.
25:62. அவன்தான் இரவையும், பகலையும் மாறி மாறி வரும்படி செய்திருக்கிறான். (இதைக் கொண்டு) எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று, அவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறார்களோ அவர்களுக்காக (இதைக் கூறுகிறான்).
25:62. அவனே, இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்து வரக்கூடியதாக அமைத்தான்படிப்பினை பெற நாடும் அல்லது நன்றியுடையவராக இருக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்காகவும்!
25:62. இன்னும் அவன் எத்தகையவனென்றால், (அவனது பேராற்றலை) நினைவு கூர நாடியவர்களுக்கு, அல்லது (அவனுக்கு) நன்றி செலுத்த நாடியவர்களுக்கு இரவையும் பகலையும் ஒன்றன் பின் ஒன்றாக (மாறி மாறி) வருமாறு ஆக்கினான்.
25:63 وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا
وَعِبَادُ அடியார்கள் الرَّحْمٰنِ பேரருளாளனுடைய الَّذِيْنَ எவர்கள் يَمْشُوْنَ நடப்பார்கள் عَلَى الْاَرْضِ பூமியில் هَوْنًا மென்மையாக وَّاِذَا خَاطَبَهُمُ இன்னும் அவர்களிடம் பேசினால் الْجٰهِلُوْنَ அறிவீனர்கள் قَالُوْا கூறி விடுவார்கள் سَلٰمًا ஸலாம்
25:63. இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
25:63. ரஹ்மானுடைய அடியார்கள்: பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் ‘ஸலாம்' கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள்.
25:63. மேலும், ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள்; அறிவீனர்கள் அவர்களுடன் முறைகேடாக உரையாடினால், “உங்களுக்கு ஸலாம்சாந்தி உண்டாகட்டும்” என்று கூறிவிடுவார்கள்.
25:63. இன்னும், அர்ரஹ்மானுடைய அடியார்கள் எத்தகையோரெனில், அவர்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள், மூடர்கள் அவர்களுடன் (வேண்டாதவற்றைப்) பேச முற்பட்டால், “ஸலாமுன்” (சாந்தி உண்டாகட்டும்) என்று கூறி (அவர்களைவிட்டு விலகி) விடுவார்கள்.
25:64 وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا
وَالَّذِيْنَ எவர்கள் يَبِيْتُوْنَ இரவு கழிப்பார்கள் لِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு سُجَّدًا சிரம் பணிந்தவர்களாக وَّقِيَامًا நின்றவர்களாக
25:64. இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
25:64. அவர்கள் தங்கள் இறைவனை, நின்றவர்களாகவும் சிரம் பணிந்தவர்களாகவும் இரவெல்லாம் வணங்குவார்கள்.
25:64. மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் திருமுன் ஸுஜூது செய்தும் நின்றும் வணங்கியவாறு இரவைக் கழிப்பார்கள்.
25:64. இன்னும், அவர்கள் எத்தகையோரெனில், தங்கள் இரட்சகனை சிரம்பணிந்தவர்களாக (ஸஜ்தா செய்தவர்களாக)வும், நின்றவர்களாகவும் (அல்லாஹ்வின் வழிபாட்டில்) இரவைக் கழிப்பார்கள்.
25:65 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۖ
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா! اصْرِفْ திருப்பி விடு عَنَّا எங்களை விட்டு عَذَابَ தண்டனையை جَهَـنَّمَ நரகமுடைய ۖ اِنَّ நிச்சயமாக عَذَابَهَا அதனுடைய தண்டனை كَانَ இருக்கிறது غَرَامًا ۖ நீங்காத ஒன்றாக
25:65. “எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.
25:65. அவர்கள் “எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ தடுத்துக் கொள்வாயாக! ஏனென்றால், அதன் வேதனையானது நிச்சயமாக நிலையான துன்பமாகும்'' என்று பிரார்த்தனை செய்வார்கள்.
25:65. மேலும், அவர்கள் இறைஞ்சுவார்கள்: “எங்கள் இறைவனே! நரக வேதனையை எங்களைவிட்டு அகற்றுவாயாக! அதன் வேதனையோ ஓயாது தொல்லை தரக்கூடியதாக இருக்கின்றது.
25:65. இன்னும், அவர்கள் எத்தகையோரெனில், “எங்கள் இரட்சகனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டும் நீர் திருப்பிவிடுவாயாக! ஏனென்றால்,) நிச்சயமாக அதன் வேதனை நிலையானதாகும், என்று (பிரார்த்தனை செய்து) கூறுவார்கள்.
25:66 اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا
اِنَّهَا நிச்சயமாக அது سَآءَتْ மிக கெட்டது مُسْتَقَرًّا நிரந்தரமானது وَّمُقَامًا தற்காலிகமான தங்குமிடத்தாலும்
25:66. நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.
25:66. ‘‘ சிறிது நேரமோ அல்லது எப்பொழுதுமோ தங்குவதற்கும் அது மிகக் கெட்ட இடமாகும் (ஆகவே, அதில் இருந்து எங்களை நீ பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்திப்பார்கள்).
25:66. திண்ணமாக, நரகம் தீய தங்குமிடமாகவும் மிகவும் மோசமான இடமாகவும் இருக்கின்றது!”
25:66. “நிச்சயமாக அது நிலையாகத் தங்குமிடத்தாலும், சிறிது நேரம் தங்குமிடத்தாலும் மிகக்கெட்டது.
25:67 وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا
وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا அவர்கள் செலவு செய்தால் لَمْ يُسْرِفُوْا வரம்பு மீறமாட்டார்கள் وَلَمْ يَقْتُرُوْا இன்னும் கருமித்தனமும் காட்ட மாட்டார்கள் وَكَانَ இருக்கும் بَيْنَ மத்தியில் ذٰلِكَ அதற்கு قَوَامًا நடுநிலையாக
25:67. இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
25:67. அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள்.
25:67. மேலும், அவர்கள் செலவு செய்யும்போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.
25:67. இன்னும், அவர்கள் எத்தகையோரெனில், அவர்கள் செலவு செய்தால், வீண் விரயம் செய்யமாட்டார்கள், (ஒரேயடியாக) சுருக்கிக் கொள்ளவும் மாட்டார்கள், அ(வ்வாறு செலவு செய்வதான)து அவ்விரண்டு நிலைகளுக்கும் மத்தியிலிருக்கும்.
25:68 وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ
وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ அவர்கள் அழைக்க மாட்டார்கள் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَ வேறு وَلَا يَقْتُلُوْنَ இன்னும் கொல்ல மாட்டார்கள் النَّفْسَ உயிரை الَّتِىْ எது حَرَّمَ தடுத்தான் اللّٰهُ அல்லாஹ் اِلَّا தவிர بِالْحَـقِّ உரிமையைக் கொண்டே وَلَا يَزْنُوْنَ ۚ இன்னும் விபசாரம் செய்யமாட்டார்கள் وَمَنْ يَّفْعَلْ யார் செய்வாரோ ذٰ لِكَ இவற்றை يَلْقَ அவர் சந்திப்பார் اَثَامًا ۙ தண்டனையை
25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
25:68. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான்.
25:68. மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபச்சாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் தன் பாவத்திற்கான கூலியைப் பெற்றே தீருவான்;
25:68. இன்னும் அவர்கள் எத்தகையோரெனில், அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை (வணக்கத்திற்குரியவனாக பிரார்த்தித்து) அழைக்கமாட்டார்கள், அல்லாஹ் தடுத்திருக்கும் எந்த உயிரையும் அவர்கள் உரிமையின்றி கொலை செய்துவிடவுமாட்டார்கள், அவர்கள் விபச்சாரமும் செய்யமாட்டார்கள், எவரேனும் இவைகளைச் செய்ய முற்பட்டால், அவர் (அதற்குரிய) தண்டனையைச் சந்திப்பார்.
25:69 يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا ۖ
يُضٰعَفْ பன்மடங்காக ஆக்கப்படும் لَهُ அவருக்கு الْعَذَابُ அந்த தண்டனை يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وَيَخْلُدْ நிரந்தரமாக தங்கி விடுவார் فِيْهٖ அதில் مُهَانًا ۖ இழிவுபடுத்தப்பட்டவராக
25:69. கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
25:69. மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவுபட்டவனாக அந்த வேதனையில் என்றென்றும் தங்கிவிடுவான்.
25:69. மறுமைநாளில் அவனுக்கு இரட்டிப்பு தண்டனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் என்றென்றும் அவன் வீழ்ந்து கிடப்பான்.
25:69. மறுமை நாளில் அவருக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; மேலும் இழிவுப்படுத்தப்பட்டவராக அதில் என்றென்றும் தங்கிவிடுவார்.
25:70 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
اِلَّا எனினும், مَنْ யார் تَابَ திருந்தினார்(கள்) وَاٰمَنَ இன்னும் நம்பிக்கை கொண்டார்(கள்) وَعَمِلَ இன்னும் செய்தார் عَمَلًا செயலை صَالِحًـا நன்மையான فَاُولٰٓٮِٕكَ அவர்கள் يُبَدِّلُ மாற்றி விடுவான் اللّٰهُ அல்லாஹ் سَيِّاٰتِهِمْ அவர்களுடைய தீய செயல்களை حَسَنٰتٍ ؕ நல்ல செயல்களாக وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا பெரும் கருணையாளனாக
25:70. ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
25:70. ஆயினும், (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்புக் கோரி) நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்துவிட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல; அவற்றை) நன்மைகளாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மகா கருணையுடையவனாகவும் இருக்கிறான்.
25:70. ஆனால் (இந்தப் பாவங்களுக்குப் பின்னர்) எவர் மன்னிப்புக்கோரி, மேலும், நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத்தொடங்கி விட்டிருக்கின்றாரோ அவரைத் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுவான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனுமாவான்!
25:70. (இப்பாவங்களிலிருந்து) எவர் தவ்பாச்செய்து, விசுவாசமும் கொண்டு நற்செயலும் செய்தாரோ அவரைத்தவிர, எனவே அத்தகையோர்-அவர்களுடைய தீமைகளை நன்மைகளாக அல்லாஹ் மாற்றிவிடுவான், மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக இருக்கிறான்.
25:71 وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًـا فَاِنَّهٗ يَتُوْبُ اِلَى اللّٰهِ مَتَابًا
وَمَنْ யார் تَابَ திருந்துவார் وَعَمِلَ இன்னும் செய்வார் صَالِحًـا நன்மை فَاِنَّهٗ நிச்சயமாக அவர் يَتُوْبُ திரும்பி விடுகிறார் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் مَتَابًا திரும்புதல்-முற்றிலும்
25:71. இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.
25:71. ஆகவே, எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி மன்னிப்புக் கோருவதுடன், நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்விடமே திரும்பிவிடுகின்றனர்.
25:71. எவர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் எவ்வாறு திரும்பி வர வேண்டுமோ அவ்வாறு திரும்பி வருகின்றார்.
25:71. இன்னும், எவர் தவ்பாச் செய்து, நற்கருமங்களையும் செய்கின்றாரோ அவர், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்வின்பாலே திரும்பிவிடுகின்றார்.
25:72 وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ இன்னும் அவர்கள் ஆஜராக மாட்டார்கள் الزُّوْرَۙ பொய்யான செயலுக்கு وَ اِذَا مَرُّوْا இன்னும் இவர்கள் கடந்து சென்றால் بِاللَّغْوِ வீணான செயலுக்கு مَرُّوْا கடந்து சென்று விடுவார்கள் كِرَامًا கண்ணியவான்களாக
25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
25:72. இன்னும், எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியம் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டு விட்டபோதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதைக் கடந்து) சென்று விடுகிறார்களோ அவர்களும்,
25:72. மேலும் (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள்.
25:72. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், பொய்சாட்சி சொல்ல மாட்டார்கள், (ஒருகால்) வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் அவர்கள் சென்றுவிட்டால், கண்ணியமானவர்களாக (அதனைவிட்டும் ஒதுங்கிச்) சென்று விடுவார்கள்.
25:73 وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا
وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا இன்னும் எவர்கள்/அவர்கள் அறிவுறுத்தப்பட்டால் بِاٰيٰتِ வசனங்களைக் கொண்டு رَبِّهِمْ தங்கள் இறைவனின் لَمْ يَخِرُّوْا விழ மாட்டார்கள் عَلَيْهَا அவற்றின் மீது صُمًّا செவிடர்களாக وَّعُمْيَانًا இன்னும் குருடர்களாக
25:73. இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)
25:73. இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது (அடித்து) விழாமல்; (அதை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்)
25:73. மேலும், தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும்போது அவற்றைக் குறித்து குருடர்களாயும், செவிடர்களாயும் இருப்பதில்லை.
25:73. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் இரட்சகனின் வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டால் செவிடர்களாகவும், குருடர்களாகவும் அதன் மீது விழமாட்டார்கள் (அதனை நன்குணர்ந்து அதன்படி நடப்பார்கள்).
25:74 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா! هَبْ தருவாயாக! لَـنَا எங்களுக்கு مِنْ اَزْوَاجِنَا எங்கள் மனைவிகள் மூலமும் وَذُرِّيّٰتِنَا எங்கள் சந்ததிகள் மூலமும் قُرَّةَ குளிர்ச்சியை اَعْيُنٍ கண்களுக்கு وَّاجْعَلْنَا எங்களை ஆக்குவாயாக! لِلْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்களுக்கு اِمَامًا இமாம்களாக
25:74. மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
25:74. மேலும், எவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!'' என்று பிரார்த்திப்பார்களோ அவர்களும்;
25:74. மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: “எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!”
25:74. மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் “எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியர்களிடமிருந்தும், எங்கள் சந்ததிகளிலிருந்தும் எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியைத் தந்தருள்வாயாக! அன்றியும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை (நல்வழியில் நின்று அதன்பால் அழைக்கும்) வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
25:75 اُولٰٓٮِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا ۙ
اُولٰٓٮِٕكَ இவர்கள் يُجْزَوْنَ கூலியாக கொடுக்கப்படுவார்கள் الْغُرْفَةَ அறையை بِمَا صَبَرُوْا அவர்கள் பொறுமையாக இருந்ததால் وَيُلَقَّوْنَ சந்திக்கப்படுவார்கள் فِيْهَا அதில் تَحِيَّةً முகமனைக்கொண்டும் وَّسَلٰمًا ۙ ஸலாமைக் கொண்டும்
25:75. பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.
25:75. ஆகிய இத்தகையவர்களுக்கு, அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவற்றைச் செய்யும்போது ஏற்பட்ட) சிரமங்களைச் சகித்துக் கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். ‘‘ஸலாம் (உண்டாவதாக)'' என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
25:75. இத்தகையோரே தங்களுடைய பொறுமையின் பலனாக உயர்ந்த மாளிகைகளைப் பெறுவார்கள். மரியாதையுடனும் வாழ்த்துக்களுடனும் அவர்கள் அங்கு வரவேற்கப்படுவார்கள்.
25:75. அத்தகையோர் - அவர்கள் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டதன் காரணமாக, உயர்ந்த மாளிகையை (மறுமையில்) அவர்கள் கூலியாகக் கொடுக்கப்படுவார்கள், காணிக்கையாலும், சாந்தியாலும் அதில் வரவேற்கப்படுவார்கள்.
25:76 خٰلِدِيْنَ فِيْهَا ؕ حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا
خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள் فِيْهَا ؕ அதில் حَسُنَتْ அது மிக அழகானது مُسْتَقَرًّا நிரந்தரமான தங்குமிடத்தாலும் وَّمُقَامًا தற்காலிகமான தங்குமிடத்தாலும்
25:76. அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.
25:76. என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள். சிறிது நேரம் தங்குவதாயினும் சரி, என்றென்றும் தங்குவதாயினும் சரி, அது மிக்க (நல்ல) அழகான தங்குமிடம் ஆகும்.
25:76. அவர்கள் என்றென்றும் அங்குத் தங்கி வாழ்வார்கள். எவ்வளவு அழகானதாக இருக்கின்றது அந்தத் தங்குமிடம்! எவ்வளவு உன்னதமாக இருக்கிறது அந்த ஓய்விடம்!
25:76. அதில் (அவர்கள்) நிரந்தரமாக (த் தங்கி) இருப்பவர்கள், நிலையாகத் தங்குமிடத்தாலும், சிறிது நேரம் தங்குமிடத்தாலும் அது அழகானதாகிவிட்டது.
25:77 قُلْ مَا يَعْبَـؤُا بِكُمْ رَبِّىْ لَوْلَا دُعَآؤُكُمْۚ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُوْنُ لِزَامًا
قُلْ கூறுவீராக! مَا يَعْبَـؤُا ஒரு பொருட்டாகவே கருதமாட்டான் بِكُمْ உங்களை رَبِّىْ என் இறைவன் لَوْلَا இல்லாதிருந்தால் دُعَآؤُ பிரார்த்தனை كُمْۚ உங்கள் فَقَدْ திட்டமாக كَذَّبْتُمْ நீங்கள் பொய்ப்பித்தீர்கள் فَسَوْفَ يَكُوْنُ இது கண்டிப்பாக இருக்கும் لِزَامًا உங்களை தொடரக்கூடியதாக
25:77. (நபியே!) சொல்வீராக: “உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்; ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.”
25:77. (நபியே!) கூறுவீராக: ‘‘ நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் பொருட்படுத்தமாட்டான். ஏனென்றால், நீங்கள் (அவனுடைய வசனங்களை) நிச்சயமாக பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே, அதன் வேதனை (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.
25:77. (நபியே!) மக்களிடம் கூறுங்கள்: “என்னுடைய இறைவனை நீங்கள் அழைக்கவில்லையென்றால், அவனுக்கு உங்களுடைய தேவைதான் என்ன? இப்போது நீங்கள் (இறைத்தூதைப்) பொய்யெனக் கூறிவிட்டீர்கள். தடுக்க முடியாத கடும் தண்டனையை, விரைவில் நீங்கள் பெறத்தான் போகிறீர்கள்!”
25:77. (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் (அல்லாஹ்வை) அழைத்துப் பிரார்த்திப்பது (மட்டும்) இல்லையெனில், என்னுடைய இரட்சகன் உங்களை பொருட்படுத்தியிருக்க மாட்டான், ஏனெனில் நீங்கள் (அவனுடைய வசனங்களைப்) பொய்ப்படுத்திவிட்டீர்கள், எனவே அ(தற்குரிய தண்டனையான)து கட்டாயமாக உங்களுக்கு உண்டாகும்.