33. ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்)
மதனீ, வசனங்கள்: 73

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
33:1
33:1 يٰۤـاَيُّهَا النَّبِىُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ۙ‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! اتَّقِ பயந்துகொள்ளுங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை وَلَا تُطِعِ கீழ்ப்படியாதீர் الْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கும் وَالْمُنٰفِقِيْنَ‌ ؕ நயவஞ்சகர்களுக்கும் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا ۙ‏ மகா ஞானவானாக
33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! நிராகரிப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானம் மிக்கவன்.
33:1. நபியே! நீர் அல்லாஹ்வுக்கே பயப்படுவீராக. நிராகரிப்பவர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனாக,ஞானமுடையவனாக இருக்கிறான்.
33:1. நபியே! அல்லாஹ்வுக்கு அஞ்சும்! மேலும், நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். உண்மையில், அல்லாஹ்தான் நன்கு அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
33:1. நபியே! நீர் அல்லாஹ்வை பயந்துகொள்வீராக! நிராகரிப்போருக்கும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளுக்கும் கீழ்ப்படியாதிருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
33:2
33:2 وَّاتَّبِعْ مَا يُوْحٰٓى اِلَيْكَ مِنْ رَّبِّكَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ۙ‏
وَّاتَّبِعْ இன்னும் பின்பற்றுவீராக مَا يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுவதை اِلَيْكَ உமக்கு مِنْ رَّبِّكَ‌ ؕ உமது இறைவனிடமிருந்து اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கின்றான் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை خَبِيْرًا ۙ‏ ஆழ்ந்தறிந்தவனாக
33:2. இன்னும், (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
33:2. உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாகவே இருக்கிறான்.
33:2. உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுகின்ற விஷயத்தை நீர் பின்பற்றும்! நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
33:2. இன்னும், (நபியே!) உமதிரட்சகனிடமிருந்து உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக! நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாக இருக்கிறான்.
33:3
33:3 وَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏
وَّتَوَكَّلْ இன்னும் சார்ந்திருப்பீராக! عَلَى اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வை وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا‏ பொறுப்பாளனாக இருக்க
33:3. (நபியே!) அல்லாஹ்வையே நீர் சார்ந்திருப்பீராக! அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.
33:3. (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்றுக்கொள்ள போதுமானவன்.
33:3. அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
33:3. மேலும், நீர் அல்லாஹ்வின் மீது (அவனிடமே சகல பொறுப்பையும் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பீராக! (உமது காரியங்களுக்குப்) பொறுப்பேற்றுக் கொள்கிறவனாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.
33:4
33:4 مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَيْنِ فِىْ جَوْفِهٖ ۚ وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـئِْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ‌ۚ وَمَا جَعَلَ اَدْعِيَآءَكُمْ اَبْنَآءَكُمْ‌ ؕ ذٰ لِكُمْ قَوْلُـكُمْ بِاَ فْوَاهِكُمْ‌ ؕ وَاللّٰهُ يَقُوْلُ الْحَقَّ وَهُوَ يَهْدِى السَّبِيْلَ‏
مَا جَعَلَ அமைக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِرَجُلٍ ஒரு மனிதனுக்கு مِّنْ قَلْبَيْنِ இரு உள்ளங்களை فِىْ جَوْفِهٖ ۚ அவனது உடலில் وَمَا جَعَلَ அவன்ஆக்கவில்லை اَزْوَاجَكُمُ உங்கள்மனைவிகளை الّٰٓـئِْ எவர்கள் تُظٰهِرُوْنَ ளிஹார்செய்கின்றீர்கள் مِنْهُنَّ அவர்களில் اُمَّهٰتِكُمْ ۚ உங்கள் தாய்மார்களாக وَمَا جَعَلَ அவன்ஆக்கவில்லை اَدْعِيَآءَ வளர்ப்புபிள்ளைகளை كُمْ உங்கள் اَبْنَآءَكُمْ‌ ؕ உங்கள் பிள்ளைகளாக ذٰ لِكُمْ அது قَوْلُـكُمْ நீங்கள் கூறுவதாகும் بِاَ فْوَاهِكُمْ‌ ؕ உங்கள் வாய்களால் وَاللّٰهُ அல்லாஹ் يَقُوْلُ கூறுகின்றான் الْحَقَّ உண்மையை وَهُوَ அவன்தான் يَهْدِى வழிகாட்டுகின்றான் السَّبِيْلَ‏ நல்ல பாதைக்கு
33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இதயங்களை உண்டாக்கவில்லை; உங்கள் மனைவியரில் எவரையும் (தன் மனைவியைத் தன் தாய் போன்றவள் என்று கூறி) நீங்கள் உங்களுடைய தாய்மார்களுக்கு ஒப்பாகக் கூறுவதனால் - உங்களுடைய தாய்களாக அவன் ஆக்கவில்லை; (அவ்வாறே) உங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கவில்லை; இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தையாகும்; அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும், அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
33:4. எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்கள் (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்கள் பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே (தவிர. உண்மையல்ல). அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான்.
33:4. அல்லாஹ் எந்த மனிதனுள்ளும் இரு இதயங்களை அமைத்திடவில்லை, நீங்கள் “ளிஹார்”* செய்கின்ற உங்கள் மனைவிகளை உங்களுடைய அன்னையராய் அவன் ஆக்கவு மில்லை. மேலும், அவன் உங்களுடைய வளர்ப்பு மகன்களை உங்களின் சொந்த மகன்களாய் ஆக்கவுமில்லை. இவை நீங்களே உங்கள் வாய்களிலிருந்து வெளிப்படுத்தும் வெறும் வார்த்தைகளாகும். ஆனால், அல்லாஹ் சத்தியத்(தின் அடிப்படையிலான)தைக் கூறுகின்றான். மேலும்; அவனே நேரிய வழியின் பக்கம் வழி காட்டுகின்றான்.
33:4. எம்மனிதனுக்கும் அவனுடைய உட்புறத்தில் இரண்டு இதயங்களை அல்லாஹ் அமைக்கவில்லை, இன்னும், உங்கள் மனைவியரை_அவர்களிலிருந்து (தன் மனைவியைத் தன் தாய் போன்றவள் என்று கூறி) உங்களுடைய தாய்மார்களுக்கு ஒப்பாகக் கூறுகிறவர்களை_ உங்களுடைய (உண்மைத்) தாய்மார்களாகவும் அவன் ஆக்கவில்லை. (அவ்வாறே) உங்களுடைய வளர்ப்புப் புதல்வர்களாகவும் அவன் ஆக்கவில்லை. இவை (யாவும்), உங்கள் வாய்களால் கூறும் உங்கள் வார்த்தைகளே (தவிர உண்மையல்ல.) மேலும், அல்லாஹ் உண்மையைக் கூறுகிறான், அவனே (நேர்) வழியையும் காட்டுகிறான்.
33:5
33:5 اُدْعُوْهُمْ لِاٰبَآٮِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ‌ ۚ فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا اٰبَآءَهُمْ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ وَمَوَالِيْكُمْ‌ؕ وَ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيْمَاۤ اَخْطَاْ تُمْ بِهٖۙ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
اُدْعُوْ அழையுங்கள்! هُمْ அவர்களை لِاٰبَآٮِٕهِمْ அவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே) هُوَ அதுதான் اَقْسَطُ மிக நீதமானது عِنْدَ اللّٰهِ‌ ۚ அல்லாஹ்விடம் فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا நீங்கள் அறியவில்லை என்றால் اٰبَآءَ தந்தைகளை هُمْ அவர்களின் فَاِخْوَانُكُمْ உங்கள் சகோதரர்கள் فِى الدِّيْنِ மார்க்கத்தில் وَمَوَالِيْكُمْ‌ؕ இன்னும் உங்கள் உதவியாளர்கள் وَ لَيْسَ இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது جُنَاحٌ குற்றம் فِيْمَاۤ எதில் اَخْطَاْ تُمْ நீங்கள் தவறு செய்தீர்களோ بِهٖۙ அதில் وَلٰكِنْ என்றாலும் مَّا எதை تَعَمَّدَتْ வேண்டுமென்று செய்தது قُلُوْبُكُمْ‌ ؕ உங்கள் உள்ளங்கள் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ மகா கருணையாளனாக
33:5. எனவே, நீங்கள் எடுத்து வளர்த்த அவர்களை அவர்களின் தந்தையரின் பெயர்களைச் சொல்லி இன்னாரின் பிள்ளையென அழையுங்கள்: அதுவே, அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்: ஆனால், அவர்களுடைய தந்தையரின் பெயர்களை நீங்கள் அறியவில்லையாயின் அவர்கள் மார்க்கத்தில் உங்களுடைய சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்: முன்னர் இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள்மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய உள்ளங்கள் வேண்டுமென்றே செய்கின்ற ஒன்றுதான் (உங்கள்மீது குற்றமாகும்); அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
33:5. ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கிறது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்கள் மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க நண்பர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது நண்பரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. (எனினும், இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலே தவிர (அதுதான் உங்கள் மீது குற்றமாகும்). அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மகா கருணை உடையவனாக இருக்கிறான்.
33:5. வளர்ப்பு மகன்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள். இது அல்லாஹ்விடம் மிக்க நீதமானதாகும். ஆனால் அவர்களுடைய தந்தையர் யார் என்று நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுடைய மார்க்கம் சார்ந்த சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றார்கள். தெரியாமல் நீங்கள் ஏதேனும் பேசிவிட்டால், அதற்காக உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆயினும், மனப்பூர்வமாக நாடி நீங்கள் கூறினால் அது நிச்சயம் குற்றமாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
33:5. ஆகவே, நீங்கள் (வளர்த்த) அவர்களை, அவர்களுடைய தந்தைகளுக்கே (அவர்களின் பெயர்களைக் கூறியே) அழையுங்கள், அதுதான் அல்லாஹ்விடத்தில் மிக நீதமாகும், ஆனால், அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியவில்லையாயின், அப்பொழுது மார்க்கத்தில் உங்களுடைய சகோதரர்களாகவும், உங்கள் சிநேகிதர்களாகவும் இருக்கின்றனர், (இதற்கு முன்னர்) எதில் நீங்கள் தவறுசெய்தீர்களோ (அதைப் பற்றி) உங்கள் மீது எவ்வித குற்றமுமில்லை, எனினும், உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்று எண்ணுவதே (குற்றமாகும்), மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.
33:6
33:6 اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ‌ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ‌ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُهٰجِرِيْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْ مَّعْرُوْفًا‌ ؕ كَانَ ذٰ لِكَ فِى الْكِتٰبِ مَسْطُوْرًا‏
اَلنَّبِىُّ நபிதான் اَوْلٰى மிக உரிமையாளர் بِالْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு مِنْ اَنْفُسِهِمْ‌ அவர்களின் ஆன்மாக்களைவிட وَاَزْوَاجُهٗۤ இன்னும் அவருடைய மனைவிமார்கள் اُمَّهٰتُهُمْ‌ ؕ அவர்களுக்கு தாய்மார்கள் وَاُولُوا الْاَرْحَامِ இன்னும் இரத்தபந்தங்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلٰى உரிமையுள்ளவர்கள் بِبَعْضٍ சிலருக்கு فِىْ كِتٰبِ வேதத்தின் படி اللّٰهِ அல்லாஹ்வின் مِنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை(யும்) விட وَالْمُهٰجِرِيْنَ முஹாஜிர்களையும் اِلَّاۤ தவிர اَنْ تَفْعَلُوْۤا நீங்கள்ஏதும்செய்தால் اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْ உங்கள் பொறுப்பாளர்களுக்கு مَّعْرُوْفًا‌ ؕ ஒரு நன்மையை كَانَ இருக்கின்றது ذٰ لِكَ இது فِى الْكِتٰبِ வேதத்தில் مَسْطُوْرًا‏ எழுதப்பட்டதாக
33:6. இந்த நபி நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்; (ஒரு விசுவாசியின் சொத்தை அடைவதற்கு) மற்ற நம்பிக்கையாளர்களைவிடவும், (நாடு துறந்த) முஹாஜிர்களைவிடவும் உறவினர்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (உரிமையுடைய) வர்களாவார்கள்; இதுதான் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் தவிர (முறைப்படி செய்யலாம்); இது, வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.
33:6. நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நம் தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களைவிடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தான் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப்பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் நண்பர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக்கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
33:6. திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார். மேலும், நபியின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராவர். ஆயினும், அல்லாஹ்வின் வேதத்தின்படி ஏனைய பொது முஸ்லிம்களை விடவும், ஹிஜ்ரத்* செய்து வந்தவர்களை விடவும் இரத்தபந்த உறவினர்கள்தாம் ஒருவர் மற்றவருக்கு உதவி புரிவதில் அதிக உரிமையுடையவர்கள் ஆவர். ஆயினும், உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை (செய்ய விரும்பினால்) செய்துகொள்ளலாம். இந்த விதி இறைவேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
33:6. விசுவாசிகளுக்கு, அவர்களுடைய உயிர்களைவிட இந்த நபி மிக முன்னுரிமைக்குரியவராவார்; இன்னும், அவருடைய மனைவியர்கள் அவர்களுடைய தாய்மார்களாவார்கள்; மேலும், விசுவாசிகளை விடவும், ஹிஜ்ரத் செய்தவர்களை விடவும் சொந்தபந்துக்களே அவர்களில் சிலர் சிலரைவிட அல்லாஹ்வுடைய வேதத்திலுள்ள பிரகாரம் (ஒரு முஸ்லிமுடைய சொத்தையடைய) மிக உரியவர்களாகவர்; (என்றாலும்) உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு நன்மையைச் செய்ய நாடினால் தவிர (அவர்களுக்கு உங்கள் விருப்பப்படி செய்ய உங்களுக்கு அனுமதியுண்டு). இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கிறது.
33:7
33:7 وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِيّٖنَ مِيْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًاغَلِيْظًا ۙ‏
وَاِذْ اَخَذْنَا நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராக مِنَ النَّبِيّٖنَ எல்லா நபிமார்களிடமும் مِيْثَاقَهُمْ அவர்களின் ஒப்பந்தத்தை وَمِنْكَ உம்மிடமும் وَمِنْ نُّوْحٍ இன்னும் நூஹிடம் وَّاِبْرٰهِيْمَ இன்னும் இப்ராஹீம் وَمُوْسٰى இன்னும் மூஸா وَعِيْسَى இன்னும் ஈஸா ابْنِ மகன் مَرْيَمَ மர்யமின் وَاَخَذْنَا இன்னும் நாம் வாங்கினோம் مِنْهُمْ அவர்களிடம் مِّیْثَاقًا ஒப்பந்தத்தை غَلِيْظًا ۙ‏ உறுதியான
33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக்கூறுமாறு) நபிமார்கள் (அனைவர்களிடமும்), (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் நாம் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
33:7. (நபியே! நம் தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கியதை நினைவு கூர்வீராக, மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்திருக்கிறோம்.
33:7. மேலும் (நபியே!) எல்லா நபிமார்களிடமிருந்தும் என்ன வாக்குறுதியை நாம் வாங்கினோமோ அதனை நீர் நினைவு கூரும்: உம்மிடமிருந்தும், மேலும் நூஹ், இப்ராஹீம், மூஸா மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரிடமிருந்தும் (நாம் வாக்குறுதி வாங்கினோம்). அனைவரிடமிருந்தும் நாம் வலு வான வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம்.
33:7. மேலும், நபிமார்களிடமிருந்தும்_உம்மிடமிருந்தும், நூஹிடமிருந்தும் இன்னும், இப்றாஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரிடமிருந்தும் அவர்களின் உறுதிமொழியையே நாம் எடுத்த சமயத்தில்_அவர்களிடமிருந்து மிக்க உறுதியான உறுதிமொழியையே நாம் எடுத்தோம் (என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்துவீராக! ஏனெனில்.)
33:8
33:8 لِّيَسْئَلَ الصّٰدِقِيْنَ عَنْ صِدْقِهِمْ‌ۚ وَاَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا اَ لِيْمًا‏
لِّيَسْئَلَ விசாரிப்பதற்காக الصّٰدِقِيْنَ உண்மையாளர்களை عَنْ صِدْقِهِمْ‌ۚ அவர்களின் உண்மையைப் பற்றி وَاَعَدَّ ஏற்படுத்திஇருக்கிறான் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابًا தண்டனையை اَ لِيْمًا‏ வலிமிகுந்த(து)
33:8. உண்மையாளர்களை அவர்களுடைய உண்மையைப் பற்றி அவன் விசாரிப்பதற்காக (இவ்வாறு வாக்குறுதி வாங்கினான்); மேலும், நிராகரிப்பாளர்களுக்கு நோவினைதரும் வேதனையை அவன் சித்தம் செய்திருக்கின்றான்.
33:8. ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (அல்லாஹ்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
33:8. உண்மையாளர்களிடம் அவர்களின் உண்மை குறித்து (அவர்களின் இறைவன்) விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக! மேலும், நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார் செய்தே வைத்திருக்கின்றான்.
33:8. (தூதர்களான) உண்மையாளர்களிடம், அவர்களுடைய (தூதின்) உண்மையைப் பற்றி அவன் கேட்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தான்), நிராகரித்தோர்க்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார் செய்தும் வைத்திருக்கிறான்.
33:9
33:9 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا‌ ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اذْكُرُوْا நினைத்துப் பாருங்கள் نِعْمَةَ அருட்கொடையை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீதுள்ள اِذْ جَآءَتْكُمْ உங்களிடம்வந்தபோது جُنُوْدٌ பல ராணுவங்கள் فَاَرْسَلْنَا நாம் அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக رِيْحًا காற்றை(யும்) وَّجُنُوْدًا ராணுவங்களையும் لَّمْ تَرَوْهَا‌ ؕ நீங்கள் பார்க்கவில்லை/ அவர்களை وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை بَصِيْرًا ۚ‏ உற்று நோக்கியவனாக
33:9. நம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்: உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்தபோது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்றுநோக்குபவனாக இருக்கிறான்.
33:9. நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
33:9. நம்பிக்கையாளர்களே! (அண்மையில்) அல்லாஹ் உங்களுக்குச் செய்திருக்கின்ற பேருதவியை நினைவுகூருங்கள்: எதிரிப்படையினர் உங்களைத் தாக்க வந்தபோது, நாம் அவர்கள் மீது ஒரு கடும் புயல்காற்றை ஏவினோம். உங்கள் கண்களுக்குத் தென்படாத படைகளையும் அனுப்பினோம். அப்போது நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
33:9. விசுவாசங்கொண்டோரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள், உங்கள் மீது (எதிரிகளின்) படைகள் வந்த சமயத்தில் (புயற்) காற்றையும், நீங்கள் அதைப்பார்க்கவில்லையே அத்தகைய படைகளையும் அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம், மேலும், நீங்கள் செய்பவகளை அல்லாஹ் பார்க்கக்கூடியவனாக இருக்கிறான்.
33:10
33:10 اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَـنَـاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ؕ‏
اِذْ جَآءُوْ அவர்கள் வந்த சமயத்தில் كُمْ உங்களிடம் مِّنْ فَوْقِكُمْ உங்களுக்கு மேல் புறத்திலிருந்(தும்) وَمِنْ اَسْفَلَ கீழ்ப்புறத்திலிருந்தும் مِنْكُمْ உங்களுக்கு وَاِذْ இன்னும் சமயத்தில் زَاغَتِ சொருகின الْاَبْصَارُ பார்வைகள் وَبَلَغَتِ இன்னும் எட்டின الْقُلُوْبُ உள்ளங்கள் الْحَـنَـاجِرَ தொண்டைகளுக்கு وَتَظُنُّوْنَ நீங்கள் எண்ணினீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது الظُّنُوْنَا ؕ‏ பல எண்ணங்களை
33:10. உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்தபோது, (உங்களுடைய) பார்வைகள் சாய்ந்து, (உங்களுடைய) இதயங்கள் தொண்டைக் குழி (முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறான எண்ணங்களை எண்ணிக்கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை) நினைவு கூருங்கள்.
33:10. உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
33:10. பகைவர்கள் மேலிருந்தும், கீழிருந்தும் உங்கள் மீது படையெடுத்து வந்த நேரத்தில் உங்கள் கண்கள் பீதியினால் மருண்டுவிட்டன; இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொண்டன! மேலும், நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி விதவிதமான சந்தேகங்கள் கொள்ளத் தலைப்பட்டீர்கள்.
33:10. உங்களுக்கு மேற்புறமிருந்தும், உங்களுக்குக் கீழ் புறமிருந்தும் அவர்கள் (படையெடுத்து) உங்களிடம் வந்த சமயத்தில், இன்னும் (உங்களுடைய) பார்வைகள் (மாறிச்) சாய்ந்தும், (உங்களுடைய) இதயங்கள் உங்கள் தொண்டை(க்குழி)களை அடைந்துமிருந்த சமயத்தில் (உங்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்.) மேலும், அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாக) பலவாறான எண்ணங்களை எண்ணிய சமயத்தில் (அல்லாஹ் உங்களுக்குச் செய்த பேரருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.)
33:11
33:11 هُنَالِكَ ابْتُلِىَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِيْدًا‏
هُنَالِكَ அங்குதான் ابْتُلِىَ சோதிக்கப்பட்டார்கள் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் وَزُلْزِلُوْا زِلْزَالًا இன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள் شَدِيْدًا‏ கடுமையாக
33:11. அவ்விடத்தில் நம்பிக்கையாளர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டார்கள்.
33:11. அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர் (அச்சுறுத்தப்பட்டனர்).
33:11. அந்த(க் கடினமான) நேரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நன்கு சோதிக்கப்பட்டார்கள். மேலும், கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள்.
33:11. அந்த இடத்தில், விசுவாசிகள் (பெரும்) சோதனைக்குள்ளாக்கப்பட்டு மிக்க கடினமான அலைக்கழித்தலாக அலைக்கழிக்கப்பட்டும் விட்டனர்.
33:12
33:12 وَاِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اِلَّا غُرُوْرًا‏
وَاِذْ يَقُوْلُ இன்னும் கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள் الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகர்களும் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் مَّا وَعَدَنَا நமக்கு வாக்களிக்கவில்லை اللّٰهُ அல்லாஹ்(வும்) وَرَسُوْلُهٗۤ அவனது தூதரும் اِلَّا தவிர غُرُوْرًا‏ பொய்யை
33:12. மேலும் (அச்சமயம்) நயவஞ்சகர்களும், எவர்களின் இதயங்களில் நோயிருந்ததோ அவர்களும் - "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை" என்று கூறிய சமயத்தையும் நினைவுகூருங்கள்.
33:12. ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.
33:12. மேலும், அந்த நேரத்தை நினைவுகூருங்கள்: ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் செய்திருந்த வாக்குறுதிகள் யாவும் ஏமாற்று வேலையே தவிர வேறொன்றும் இல்லை’ என்று நயவஞ்சகர்களும் மற்றும் எவர்களின் உள்ளங்களில் பிணி இருந்ததோ அவர்களும் வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருந்தார்கள்;
33:12. மேலும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளும், எவர்களின் இதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் எமக்கு வாக்களிக்கவில்லை” என்று கூறியதையும்_ (நினைவு கூர்வீராக!)
33:13
33:13 وَاِذْ قَالَتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ يٰۤـاَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا‌ ۚ وَيَسْتَاْذِنُ فَرِيْقٌ مِّنْهُمُ النَّبِىَّ يَقُوْلُوْنَ اِنَّ بُيُوْتَنَا عَوْرَة‌ٌ  ‌ۛؕ وَمَا هِىَ بِعَوْرَةٍ  ۛۚ اِنْ يُّرِيْدُوْنَ اِلَّا فِرَارًا‏
وَاِذْ قَالَتْ கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள் طَّآٮِٕفَةٌ ஒரு சாரார் مِّنْهُمْ அவர்களில் يٰۤـاَهْلَ يَثْرِبَ யஸ்ரிப் வாசிகளே! لَا مُقَامَ தங்குவது அறவே முடியாது لَكُمْ உங்களுக்கு فَارْجِعُوْا‌ ۚ ஆகவே, திரும்பிவிடுங்கள் وَيَسْتَاْذِنُ அனுமதிகேட்கின்றனர் فَرِيْقٌ ஒரு பிரிவினர் مِّنْهُمُ அவர்களில் النَّبِىَّ நபியிடம் يَقُوْلُوْنَ கூறியவர்களாக اِنَّ நிச்சயமாக بُيُوْتَنَا எங்கள் இல்லங்கள் عَوْرَة‌ٌ  ‌ۛؕ பாதுகாப்பு அற்றதாக இருக்கின்றன وَمَا ஆனால் இல்லை. هِىَ அவை بِعَوْرَةٍ  ۛۚ பாதுகாப்பு அற்றதாக اِنْ يُّرِيْدُوْنَ அவர்கள் நாடவில்லை اِلَّا தவிர فِرَارًا‏ விரண்டோடுவதை
33:13. மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் (உறுதியாக) நிற்க முடியாது; ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்" என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்: "நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன" என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி (போர்க் களத்திலிருந்து சென்று விட) நபியிடம் அனுமதி கோரினார்கள்; இவர்கள் (போர்க் களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
33:13. அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ‘‘யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் ‘‘ நிச்சயமாக எங்கள் வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நம்) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை.
33:13. அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் “யத்ரிப் வாசிகளே! இனி, நீங்கள் இங்கு தங்கியிருக்க உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. திரும்பிச் சென்றுவிடுங்கள்!” என்று கூறினார்கள்; மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர் “எங்களுடைய வீடுகள் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றன” என்று கூறி, நபியிடம் அனுமதி கோரிக் கொண்டிருந்தனர். ஆனால், அவை ஆபத்திற்குள்ளாகியிருக்கவில்லை. உண்மை யாதெனில், அவர்கள் (போர்க் களத்திலிருந்து) ஓடிவிடவே விரும்பினார்கள்.
33:13. மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தினர், (மதீனா வாசிகளிடம்,) “யஸ்ரிப் வாசிகளே! (யுத்தகளத்தில்) உங்களுக்குத் தங்குதல் இல்லை, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினரோ, “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்றவையாக இருக்கின்றன” என்று கூறி, அவை பாதுகாப்பற்றவையாக இல்லாமலிருந்தும், (அங்கிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள், (அங்கிருந்து) வெருண்டோடுவததைத் தவிர (வேறெதனையும்) அவர்கள் நாடவில்லை.
33:14
33:14 وَلَوْ دُخِلَتْ عَلَيْهِمْ مِّنْ اَقْطَارِهَا ثُمَّ سُٮِٕلُوا الْفِتْنَةَ لَاٰتَوْهَا وَمَا تَلَبَّثُوْا بِهَاۤ اِلَّا يَسِيْرًا‏
وَلَوْ دُخِلَتْ நுழைந்தால் عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنْ اَقْطَارِ சுற்றுப் புறங்களில் இருந்து هَا அதன் ثُمَّ பிறகு سُٮِٕلُوا அவர்களிடம் கேட்கப்பட்டால் الْفِتْنَةَ குழப்பத்தை لَاٰتَوْ அவர்கள் செய்திருப்பார்கள் هَا அதை وَمَا تَلَبَّثُوْا அவர்கள் தாமதித்திருக்க மாட்டார்கள் بِهَاۤ அதற்கு اِلَّا يَسِيْرًا‏ கொஞ்சமே தவிர
33:14. மேலும், அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது (எதிரிப் படைகள்) புகுத்தப்பட்டு, பிறகு குழப்பம் செய்யும்படி அவர்களிடம் கேட்கப்பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்திருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிதுநேரமே தவிர தாமதப்படுத்த மாட்டார்கள்.
33:14. பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். மேலும், (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமே தவிர அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.)
33:14. நகரின் நாற்புறங்களிலிருந்தும் எதிரிகள் ஊடுருவி, பிறகு குழப்பம் விளைவிக்குமாறு இவர்கள் அழைக்கப்பட்டிருந்தால், அதற்கு இவர்கள் தயாராயிருந்திருப்பார்கள். குழப்பத்தில் பங்கு பெறுவதில் அவர்களுக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்காது, சிறிதளவே தவிர!
33:14. மேலும், அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது (எதிரிப் படைகள்) புகுத்தப்பட்டு, பின்னர் குழப்பம் செய்யுமாறு அவர்களைக் கேட்கப்பட்டிருந்தால் அவர்கள் அதனைச் செய்திருப்பார்கள். சொற்பமேயன்றி அவர்கள் அதில் தங்கவுமாட்டார்கள்.
33:15
33:15 وَلَقَدْ كَانُوْا عَاهَدُوا اللّٰهَ مِنْ قَبْلُ لَا يُوَلُّوْنَ الْاَدْبَارَ‌ ؕ وَكَانَ عَهْدُ اللّٰهِ مَسْــــٴُـوْلًا‏
وَلَقَدْ திட்டவட்டமாக كَانُوْا عَاهَدُوا ஒப்பந்தம் செய்திருந்தனர் اللّٰهَ அல்லாஹ்விடம் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் لَا يُوَلُّوْنَ ஓடமாட்டார்கள் الْاَدْبَارَ‌ ؕ புறமுதுகிட்டு وَكَانَ இருக்கின்றது عَهْدُ ஒப்பந்தம் اللّٰهِ அல்லாஹ்வின் مَسْــــٴُـوْلًا‏ விசாரிக்கப்படுவதாக
33:15. எனினும், அவர்கள் (போரிலிருந்து) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்வுடைய வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாகும்.
33:15. அவர்கள் (யுத்தத்தில்) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை (அவர்கள் மீறியதை)ப் பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள்.
33:15. இதற்கு முன்னரோ ‘புறங்காட்டி ஓடமாட்டோம்’ என்று அல்லாஹ்விடம் இவர்கள் வாக்குறுதி தந்திருந்தார்கள். மேலும், அல்லாஹ்விடம் அளித்திருந்த வாக்குறுதி விசாரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது.
33:15. அவர்கள் (போரில்) புறமுதுகிட்டு ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் திட்டமாக வாக்குறுதியும் செய்திருந்தார்கள், மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி (மறுமையில்) விசாரிக்கப்படுவதாக உள்ளது.
33:16
33:16 قُلْ لَّنْ يَّنْفَعَكُمُ الْفِرَارُ اِنْ فَرَرْتُمْ مِّنَ الْمَوْتِ اَوِ الْقَتْلِ وَاِذًا لَّا تُمَتَّعُوْنَ اِلَّا قَلِيْلًا‏
قُلْ கூறுவீராக! لَّنْ يَّنْفَعَكُمُ உங்களுக்கு அறவே பலனளிக்காது الْفِرَارُ விரண்டோடுவது اِنْ فَرَرْتُمْ நீங்கள் விரண்டோடினால் مِّنَ الْمَوْتِ மரணத்தைவிட்டு اَوِ الْقَتْلِ அல்லது கொல்லப்படுவதை விட்டு وَاِذًا அப்போதும் لَّا تُمَتَّعُوْنَ சுகமளிக்கப்பட மாட்டீர்கள் اِلَّا قَلِيْلًا‏ கொஞ்சமே தவிர
33:16. "மரணத்தைவிட்டோ அல்லது கொல்லப்படுவதைவிட்டோ, நீங்கள் விரண்டு ஓடிவீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது; அப்பொழுதும் நீங்கள் வெகுசொற்பமேயன்றி சுகம் கொடுக்கப்படமாட்டீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
33:16. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மரணத்தைவிட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடிய போதிலும், உங்கள் ஓட்டம் உங்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்ட போதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்.''
33:16. (நபியே!) நீர் இவர்களிடம் கூறும்: “நீங்கள் மரணத்திலிருந்து அல்லது கொல்லப்படுவதிலிருந்து ஓடினால் அவ்வாறு ஓடுவது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. அதன் பின்னர் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க சிறிதளவு சந்தர்ப்பமே உங்களுக்குக் கிடைக்கும்.
33:16. (நபியே!) நீர் கூறுவீராக, “மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ நீங்கள் வெருண்டோடுவீர்களாயின், அவ்வாறு வெருண்டோடுவது உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது, மேலும், அது சமயம் வெகு சொற்பமேயன்றி நீங்கள் சுகம் கொடுக்கப்பட மாட்டீர்கள்!”
33:17
33:17 قُلْ مَنْ ذَا الَّذِىْ يَعْصِمُكُمْ مِّنَ اللّٰهِ اِنْ اَرَادَ بِكُمْ سُوْٓءًا اَوْ اَرَادَ بِكُمْ رَحْمَةً ‌ؕ وَلَا يَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا‏
قُلْ கூறுவீராக! مَنْ யார்? ذَا الَّذِىْ يَعْصِمُكُمْ உங்களைப் பாதுகாக்கின்றவர் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வைவிட்டும் اِنْ اَرَادَ நாடினால் بِكُمْ உங்களுக்கு سُوْٓءًا ஒரு தீங்கை اَوْ அல்லது اَرَادَ அவன் நாடினால் بِكُمْ உங்களுக்கு رَحْمَةً ؕ கருணை புரிய وَلَا يَجِدُوْنَ இன்னும் காணமாட்டார்கள் لَهُمْ தங்களுக்கு مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَلِيًّا பொறுப்பாளரையோ وَّلَا نَصِيْرًا‏ உதவியாளரையோ
33:17. "அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன் உங்களுக்கு அருளை நாடினால், (அதை உங்களுக்குத் தடைசெய்பவர் யார்?): அல்லாஹ்வையன்றி தங்களுக்கு (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
33:17. (நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவன் யார் அல்லது உங்களுக்கு அருள்புரிய நாடினால் அதை தடுப்பவன் யார்? அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாப்பவர்களையும் காணமாட்டார்கள்.
33:17. மேலும், இவர்களிடம் கேளும்: “அல்லாஹ் உங்களுக்குத் தீங்களிக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்? அவன் உங்கள் மீது கருணை பொழிய நாடினால் அவனுடைய கருணையைத் தடுக்க யாரால் முடியும்?” அல்லாஹ்வுக்கு எதிராக எந்த ஆதரவாளரையும் உதவியாளரையும் இவர்கள் காணமாட்டார்கள்.
33:17. (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: ”அல்லாஹ்விடமிருந்து_அவன் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால்_ உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன் அருள் புரிய நாடினால் (உங்களை விட்டு அதனை தடுத்துவிடுபவர் யார்?) அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவலரையும், உதவி செய்பவரையும் அவர்கள் காணமாட்டார்கள்.”
33:18
33:18 قَدْ يَعْلَمُ اللّٰهُ الْمُعَوِّقِيْنَ مِنْكُمْ وَالْقَآٮِٕلِيْنَ لِاِخْوَانِهِمْ هَلُمَّ اِلَيْنَا‌ ۚ وَلَا يَاْتُوْنَ الْبَاْسَ اِلَّا قَلِيْلًا ۙ‏
قَدْ திட்டமாக يَعْلَمُ நன்கறிவான் اللّٰهُ அல்லாஹ் الْمُعَوِّقِيْنَ தடுப்பவர்களை(யும்) مِنْكُمْ உங்களில் وَالْقَآٮِٕلِيْنَ சொல்பவர்களையும் لِاِخْوَانِهِمْ தங்கள் சகோதரர்களுக்கு هَلُمَّ வந்துவிடுங்கள் اِلَيْنَا‌ ۚ எங்களிடம் وَلَا يَاْتُوْنَ இன்னும் வரமாட்டார்கள் الْبَاْسَ போருக்கு اِلَّا قَلِيْلًا ۙ‏ குறைவாகவே தவிர
33:18. உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும், தம் சகோதரர்களை நோக்கி, "நம்மிடம் வந்துவிடுங்கள்" என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான்; அன்றியும், அவர்கள் சொற்பமாகவே போர்புரிய வருகிறார்கள்.
33:18. உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் ‘‘(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்து விடுங்கள்'' என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை.
33:18. உங்களில் எவர்கள் (போர்ப் பணிகளில்) இடையூறு விளைவிக்கின்றார்களோ அவர்களையும், மேலும், “எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று தங்களின் சகோதரர்களிடம் கூறுகின்ற வர்களையும் அல்லாஹ் நன்கறிவான். மேலும், அவர்கள் போரில் பங்கு கொண்டாலும், பெயரளவுக்குத்தான் பங்கு பெறுவார்கள்.
33:18. உங்களில் (போர்செய்யச் செல்வோரைத்) தடை செய்வோரையும், தங்கள் சகோதரர்களிடம், “நீங்கள் நம்மிடம் வந்துவிடுங்கள்” என்று கூறுவோரையும் நிச்சயமாக அல்லாஹ் அறிவான், மேலும், (அவர்களில்) சொற்பமானவர்களன்றி (பெரும்பாலோர்) யுத்தத்திற்கு வரமாட்டார்கள்.
33:19
33:19 اَشِحَّةً عَلَيْكُمْ ‌‌ۖۚ فَاِذَا جَآءَ الْخَوْفُ رَاَيْتَهُمْ يَنْظُرُوْنَ اِلَيْكَ تَدُوْرُ اَعْيُنُهُمْ كَالَّذِىْ يُغْشٰى عَلَيْهِ مِنَ الْمَوْتِ‌ ۚ فَاِذَا ذَهَبَ الْخَـوْفُ سَلَقُوْكُمْ بِاَ لْسِنَةٍ حِدَادٍ اَشِحَّةً عَلَى الْخَيْـرِ‌ ؕ اُولٰٓٮِٕكَ لَمْ يُؤْمِنُوْا فَاَحْبَطَ اللّٰهُ اَعْمَالَهُمْ‌ ؕ وَكَانَ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا‏
اَشِحَّةً மிகக் கருமிகளாக இருக்கின்றனர் عَلَيْكُمْ ۖۚ உங்கள் விஷயத்தில் فَاِذَا جَآءَ வந்தால் الْخَوْفُ பயம் رَاَيْتَهُمْ அவர்களை நீர் காண்பீர் يَنْظُرُوْنَ அவர்கள் பார்க்கக் கூடியவர்களாக اِلَيْكَ உம் பக்கம் تَدُوْرُ சுழலக்கூடிய நிலையில் اَعْيُنُهُمْ அவர்களது கண்கள் كَالَّذِىْ يُغْشٰى மயக்கம் அடைகின்றவனைப் போல் عَلَيْهِ அவன் மீது مِنَ الْمَوْتِ‌ ۚ மரணத்தால் فَاِذَا ذَهَبَ சென்றுவிட்டால் الْخَـوْفُ பயம் سَلَقُوْكُمْ உங்களுக்கு தொந்தரவு தருகின்றனர் بِاَ لْسِنَةٍ நாவுகளினால் حِدَادٍ கூர்மையான اَشِحَّةً பேராசையுடையவர்களாக عَلَى الْخَيْـرِ‌ ؕ செல்வத்தின் மீது اُولٰٓٮِٕكَ அவர்கள் لَمْ يُؤْمِنُوْا நம்பிக்கை கொள்ளவில்லை فَاَحْبَطَ ஆகவே, பாழ்ப்படுத்தி விட்டான் اللّٰهُ அல்லாஹ் اَعْمَالَهُمْ‌ ؕ அவர்களின் அமல்களை وَكَانَ இருக்கின்றது ذٰ لِكَ இது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرًا‏ மிக எளிதாக
33:19. (அவர்கள்) உங்கள்மீது கஞ்சத்தனத்தைக் கைக்கொள்கின்றனர்; ஆனால், (பகைவர்கள் பற்றி) பயம் வந்துவிட்டால், மரணத்தினால் மயக்க நிலை அடைந்தவனைப்போன்று அவர்களுடைய கண்கள் சுழல்கின்ற நிலையில், அவர்கள் உம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால், அந்தப் பயம் நீங்கிவிட்டாலோ, (போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச்சென்ற) செல்வப் பொருள்மீது பேராசைகொண்டவர்களாய் கூரிய நாவுக் கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளவில்லை; ஆகவே, அவர்களுடைய (நற்)செயல்களையும் அல்லாஹ் பாழாக்கிவிட்டான்; இது, அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.
33:19. (அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) ஒரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீர் காண்பீர். அந்த பயம் நீங்கி (நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தைகளைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதாகவே இருக்கிறது.
33:19. உங்களுக்கு உதவுவதில் அவர்கள் கடும் கஞ்சத்தனம் உள்ளவர்களாய் இருப்பார்கள். ஆபத்தான நேரம் வந்து விட்டாலோ, மரணத்தருவாயில் இருப்பவனுக்கு மயக்கம் வருவது போன்று கண்களைச் சுழற்றியவாறு உம் பக்கம் பார்ப்பார்கள். ஆனால், ஆபத்து நீங்கிவிட்டாலோ, இதே மக்கள் ஆதாயங்களின் மீது பேராசை கொண்டவர்களாய் (கத்தரிக்கோலைப் போன்று) கூர்மையான நாவுகளோடு உங்களை வரவேற்க வந்துவிடுகின்றார்கள். இத்தகையவர்கள் அறவே நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே, அல்லாஹ் இவர்களுடைய செயல்கள் அனைத்தையும் வீணாக்கிவிட்டான். மேலும், இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்து மிகவும் எளிதானதாகும்.
33:19. (போர்க்களத்தில் கிடைத்த பொருட்களில் அவர்கள்) உங்கள் மீது கஞ்சத்தனமாக இருக்கின்றனர், அப்பொழுது, (எதிரிகளைப் பற்றி) பயம் வந்துவிட்டால், மரணத்தினால் மயக்கப்பட்டவரைப் போன்று அவர்கள் கண்கள் சுழல்கின்ற நிலையில், அவர்கள் உம்மைப் பார்த்த வண்ணமாயிருப்பதை நீர் காண்பீர். அபயம் நீங்கி (விசுவாசிகளுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ நன்மையின் மீது (யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் மீது) பேராசைக் கொண்டு கூறிய நாவுகளால் (கொடிய வார்த்தைகளைக் கூறி) உங்களை(க் கடிந்து) இம்சிக்கின்றனர். இத்தகையோர் (உண்மையாக) விசுவாசங்கொள்ளவில்லை, ஆகவே, அவர்களின் (நற்)செயல்களை அல்லாஹ் அழித்துவிட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதாக இருக்கிறது.
33:20
33:20 يَحْسَبُوْنَ الْاَحْزَابَ لَمْ يَذْهَبُوْا‌ ۚ وَاِنْ يَّاْتِ الْاَحْزَابُ يَوَدُّوْا لَوْ اَنَّهُمْ بَادُوْنَ فِى الْاَعْرَابِ يَسْـاَ لُوْنَ عَنْ اَنْۢبَآٮِٕكُمْ‌ ؕ وَلَوْ كَانُوْا فِيْكُمْ مَّا قٰتَلُوْۤا اِلَّا قَلِيْلًا‏
يَحْسَبُوْنَ எண்ணுகின்றனர் الْاَحْزَابَ இராணுவங்கள் لَمْ يَذْهَبُوْا‌ ۚ அவர்கள் செல்லவில்லை وَاِنْ يَّاْتِ வந்தால் الْاَحْزَابُ அந்த இராணுவங்கள் يَوَدُّوْا ஆசைப்படுகின்றனர் لَوْ اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் இருந்திருக்க வேண்டுமே بَادُوْنَ கிராமங்களில் فِى الْاَعْرَابِ தாங்கள் கிராமவாசிகளுடன் يَسْـاَ لُوْنَ அவர்கள் விசாரிக்கின்றனர் عَنْ اَنْۢبَآٮِٕكُمْ‌ ؕ உங்கள் செய்திகளைப் பற்றி وَلَوْ كَانُوْا அவர்கள் இருந்தாலும் فِيْكُمْ உங்களுடன் مَّا قٰتَلُوْۤا அவர்கள் போர் புரிந்திருக்க மாட்டார்கள் اِلَّا قَلِيْلًا‏ மிகக் குறைவாகவே தவிர
33:20. அந்த (எதிரி)ப் படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ்வெதிரி)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச்சென்று நாட்டுப்புற அரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருக்க வேண்டுமே என்று தான் விரும்புவார்கள்; ஆயினும், அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தால் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிடமாட்டார்கள்.
33:20. (முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவங்கள் முற்றுகையை எடுத்துக் கொண்டுசென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த ராணுவங்கள் திரும்ப வந்துவிட்டாலோ ஒரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ தோல்வியுறுகிறீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கி இருந்தாலும், ஒரு சொற்ப நேரமே தவிர (அதிக நேரம்) போர் புரிய மாட்டார்கள்.
33:20. இவர்கள் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்; தாக்க வந்த கூட்டத்தார் இன்னும் திரும்பிச் செல்லவில்லை என்று! அவர்கள் மீண்டும் தாக்க வந்துவிட்டாலோ, அப்போது எங்கேனும் (பாலைவனத்தில்) நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட வேண்டும். மேலும், அங்கிருந்தவாறு உம்முடைய நிலைமையைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். ஒரு வேளை இவர்கள் உங்கள் மத்தியில் இருந்தாலும் போரில் குறைவாகவே பங்கு பெறுவார்கள்.
33:20. (எதிர்ப்பு) அணியினர் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணுவார்கள், (அந்த எதிர்ப்பு) அணியினர் (திரும்ப) வந்துவிட்டால் கிராமப்புறங்களில் அவர்கள் நிச்சயமாக வெளியேறிச்சென்று, உங்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டு விசாரித்துக் கொண்டிருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள், அவர்கள் உங்களுடன் இருந்திருப்பினும் சொற்பமேயன்றி (அதிகமாக) அவர்கள் யுத்தம் புரிய மாட்டார்கள்.
33:21
33:21 لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ‏
لَقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கிறது لَكُمْ உங்களுக்கு فِىْ رَسُوْلِ தூதரில் اللّٰهِ அல்லாஹ்வின் اُسْوَةٌ முன்மாதிரி حَسَنَةٌ அழகிய(து) لِّمَنْ كَانَ يَرْجُوا ஆதரவு வைக்கின்றவராக இருப்பவருக்கு اللّٰهَ அல்லாஹ்வையும் وَالْيَوْمَ الْاٰخِرَ மறுமை நாளையும் وَذَكَرَ இன்னும் அவர் நினைவு கூர்வார் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا ؕ‏ அதிகம்
33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
33:21. எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.
33:21. உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்!
33:21. (உங்களில்) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு, அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
33:22
33:22 وَلَمَّا رَاَ الْمُؤْمِنُوْنَ الْاَحْزَابَ ۙ قَالُوْا هٰذَا مَا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗ وَ صَدَقَ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَمَا زَادَهُمْ اِلَّاۤ اِيْمَانًـا وَّتَسْلِيْمًا ؕ‏
وَلَمَّا رَاَ பார்த்தபோது الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் الْاَحْزَابَ ۙ இராணுவங்களை قَالُوْا கூறினார்கள் هٰذَا இது مَا وَعَدَنَا எங்களுக்கு வாக்களித்ததாகும் اللّٰهُ அல்லாஹ்(வும்) وَرَسُوْلُهٗ அவனது தூதரும் وَ صَدَقَ உண்மை கூறினார்(கள்) اللّٰهُ அல்லாஹ்வும் وَرَسُوْلُهٗ அவனது தூதரும் وَمَا زَادَ அதிகப்படுத்தவில்லை هُمْ அவர்களுக்கு اِلَّاۤ தவிர اِيْمَانًـا நம்பிக்கை(யையும்) وَّتَسْلِيْمًا ؕ‏ திருப்தியையும்
33:22. அன்றியும், நம்பிக்கையாளர்கள் (எதிரிகளின்) கூட்டுப் படைகளைக் கண்டபோது, "இதுதான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்" என்று கூறினார்கள்; இன்னும், அது அவர்களுடைய நம்பிக்கையையும் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்படுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.
33:22. நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை.
33:22. மேலும், உண்மையான நம்பிக்கையாளர்கள் (நிலை இவ்வாறு இருந்தது: அதாவது) தாக்க வந்த கூட்டத்தாரை அவர்கள் பார்த்ததுமே உரக்கக் கூறினார்கள்: “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் வாக்களித்தது இதுதான்.” அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வாக்கு முற்றிலும் உண்மையாக இருந்தது. இந்நிகழ்ச்சி நம்பிக்கையையும் அடிபணிதலையும் அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டது.
33:22. மேலும், விசுவாசிகள் (எதிர்ப்பு) அணியினரைக் கண்டபொழுது, “இது, அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்ததாகும். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்” என்று கூறினார்கள், அவர்களுடைய விசுவாசத்தையும், வழிப்படுதலையும் தவிர (வேறெதையும்) அவர்களுக்கு அது அதிகப்படுத்திடவில்லை.
33:23
33:23 مِنَ الْمُؤْمِنِيْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَيْهِ‌ۚ فَمِنْهُمْ مَّنْ قَضٰى نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ يَّنْتَظِرُ‌ ۖ  وَمَا بَدَّلُوْا تَبْدِيْلًا ۙ‏
مِنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் رِجَالٌ ஆண்களும் صَدَقُوْا உண்மைப்படுத்தினர் مَا எதை عَاهَدُوا ஒப்பந்தம் செய்தார்களோ اللّٰهَ அல்லாஹ்விடம் عَلَيْهِ‌ۚ அதன் மீது فَمِنْهُمْ அவர்களில் مَّنْ قَضٰى நிறைவேற்றியவரும் உண்டு نَحْبَهٗ தனது நேர்ச்சையை وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ يَّنْتَظِرُ‌ ۖ  எதிர்பார்ப்பவரும் உண்டு وَمَا بَدَّلُوْا تَبْدِيْلًا ۙ‏ இன்னும் அவர்கள் மாற்றிவிடவில்லை
33:23. நம்பிக்கையாளர்களில் சில மனிதர்கள் இருக்கின்றனர்; எதன் மீது அவர்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்களோ அதை அவர்கள் உண்மையாக்கினார்கள்; அவர்களில் சிலர் (வீரமரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; (எந்த நிலையிலும்) அவர்கள் (தங்கள் வாக்குறுதியிலிருந்து) சிறிதும் மாறுபடவில்லை.
33:23. நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து ‘ஷஹாதத்' என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர். வேறு சிலர் (மரணிக்கவில்லை என்றாலும் அதை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டுவிடவே இல்லை.
33:23. நம்பிக்கையாளரில் இத்தகையவர்களும் இருக்கின்றனர்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டிவிட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள் அவர்கள் (தம்முடைய நடத்தையில்) எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை.
33:23. விசுவாசிகளில் சில ஆடவர்கள் இருக்கின்றனர், எதன் மீது அவர்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்களோ அதை உண்மையாக்கி வைத்தார்கள், ஆகவே, அவர்களில் தங்கள் இலட்சியத்தை (வீரமரணத்தை) அடைந்துவிட்டவரும் இருக்கின்றனர், அவர்களில் (அதற்காக) எதிர்ப்பார்ப்பவரும் இருக்கின்றனர், (தங்கள் வாக்குறுதியில்) அவர்கள் மாறிவிடவே இல்லை.
33:24
33:24 لِّيَجْزِىَ اللّٰهُ الصّٰدِقِيْنَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ اِنْ شَآءَ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۚ‏
لِّيَجْزِىَ இறுதியாக நற்கூலி தருவான் اللّٰهُ அல்லாஹ் الصّٰدِقِيْنَ உண்மையாளர்களுக்கு بِصِدْقِهِمْ அவர்களின் உண்மைக்கு وَيُعَذِّبَ இன்னும் தண்டிப்பான் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களை اِنْ شَآءَ அவன் நாடினால் اَوْ அல்லது يَتُوْبَ பிழை பொறுப்பான் عَلَيْهِمْ‌ ؕ அவர்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا ۚ‏ மகா கருணையாளனாக
33:24. உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் நயவஞ்சகர்களை வேதனை செய்வான்; அல்லது அவர்களை மன்னிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
33:24. உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
33:24. (இதுவெல்லலாம் நிகழ்ந்தது) எதற்காகவெனில், அல்லாஹ் வாய்மையாளர்களுக்கு அவர்களுடைய வாய்மைக்கான கூலியை வழங்குவதற்காகவும் மேலும், நயவஞ்சகர்களுக்கு நாடினால் அவன் தண்டனை அளிப்பதற்காகவும், நாடினால் அவர்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்வதற்காகவும்தான்! நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
33:24. உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மையின் காரணத்தால், அல்லாஹ் (நற்)கூலி வழங்குவதற்காகவும், அவன் நாடினால் முனாஃபிக்குகளை (வேஷதாரிகளை) வேதனை செய்வதற்காகவும், அல்லது அவர்களின் தவ்பாவை அங்கீகரிப்பதற்காகவும் (அடியார்களை இவ்வாறு சோதிக்கிறான்), நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.
33:25
33:25 وَرَدَّ اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوْا خَيْرًا‌ ؕ وَكَفَى اللّٰهُ الْمُؤْمِنِيْنَ الْقِتَالَ‌ ؕ وَكَانَ اللّٰهُ قَوِيًّا عَزِيْزًا ۚ‏
وَرَدَّ திருப்பிவிட்டான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்களை بِغَيْظِهِمْ அவர்களது கோபத்துடன் لَمْ يَنَالُوْا அவர்கள் அடையவில்லை خَيْرًا‌ ؕ எந்த நன்மையையும் وَكَفَى பாதுகாத்தான் اللّٰهُ அல்லாஹ் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை الْقِتَالَ‌ ؕ போரை விட்டும் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் قَوِيًّا மகா வலிமை மிக்கவனாக عَزِيْزًا ۚ‏ மிகைத்தவனாக
33:25. நிராகரிப்பவர்களை அவர்களுடைய கோபத்தில் (மூழ்கிக் கிடக்குமாறே) அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால், இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை; மேலும், போரில் நம்பிக்கையாளர்களுக்கு (வெற்றியளிக்க) அல்லாஹ் போதுமானவன்; மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன், (யாவரையும்) மிகைத்தவன்.
33:25. நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்து விட்டான். (இப்போரில்) அவர்கள் ஒரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமே அடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே பாதுகாத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்.
33:25. அல்லாஹ் நிராகரிப்பாளர்களைத் திருப்பிவிட்டான். அவர்கள் எந்தப் பயனும் அடையாமல் தம் மன எரிச்சலுடனே அப்படியே திரும்பிவிட்டனர். நம்பிக்கையாளர்களின் சார்பில் போரிடுவதற்கு அல்லாஹ்வே போதுமாகிவிட்டான். அல்லாஹ் பேராற்றலுடையவனாகவும் யாவற்றையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.
33:25. மேலும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோரை_அவர்களுடைய கடுங்கோபத்தில் அல்லாஹ் திருப்பி விட்டான், (இந்த யுத்தத்தில்) அவர்கள் யாதொரு நன்மையை(யும்) அடையவில்லை, (அகழ்) யுத்தத்தில் விசுவாசிகளுக்கு (வெற்றியளிக்க) அல்லாஹ் போதுமானவனாக இருந்தான், மேலும், அல்லாஹ் (யாவரையும் விட) மிக்க பலமிக்கவனாக (யாவரையும்) மிகைத்தவனாக இருக்கின்றான்.
33:26
33:26 وَاَنْزَلَ الَّذِيْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَيَاصِيْهِمْ وَقَذَفَ فِىْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِيْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِيْقًا ۚ‏
وَاَنْزَلَ இறக்கினான் الَّذِيْنَ ظَاهَرُوْ உதவியவர்களை هُمْ அவர்களுக்கு مِّنْ இருந்து اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் مِنْ صَيَاصِيْهِمْ அவர்களின் கோட்டைகளில் இருந்து وَقَذَفَ இன்னும் போட்டான் فِىْ قُلُوْبِهِمُ அவர்களின் உள்ளங்களில் الرُّعْبَ திகிலை فَرِيْقًا ஒரு பிரிவினரை تَقْتُلُوْنَ கொன்றீர்கள் وَتَاْسِرُوْنَ இன்னும் சிறைப்பிடித்தீர்கள் فَرِيْقًا ۚ‏ ஒரு பிரிவினரை
33:26. இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவிபுரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்: (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்; இன்னும், ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.
33:26. (நம்பிக்கையாளர்களே! உங்கள்) எதிரிகளுக்கு உதவி செய்த வேதக்காரர்(களாகிய யூதர்)களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்கவைத்து அவர்களுடைய உள்ளங்களில் (திடுக்கத்தையும்) நடுக்கத்தையும் போட்டுவிட்டான். ஆகவே, அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் வெட்டி விட்டீர்கள்; மற்றொரு தொகையினரை நீங்கள் சிறை பிடித்தீர்கள்.
33:26. மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் இவ்வாறு தாக்க வந்த படையினர்க்கு உதவினார்களோ அவர்களை அல்லாஹ், அவர்களுடைய கோட்டைகளிலிருந்து இறக்கிக் கொண்டு வந்தான். மேலும், அவர்களுடைய உள்ளங்களில் திகிலை ஏற்படுத்தினான். நீங்கள் (இன்று அவர்களில்) ஒரு பிரிவினரை கொன்றுகொண்டும் மற்றொரு பிரிவினரைக் கைது செய்துகொண்டும் இருக்கிறீர்கள்.
33:26. இன்னும் வேதக்காரர்களிலிருந்து, அ(ப்பகை)வர்களுக்கு உதவி செய்தார்களே அவர்களை, அவர்களுடைய கோட்டையிலிருந்து (அல்லாஹ்) இறக்கிவிட்டான், அவர்களுடைய இதயங்களில் கடும் பயத்தையும் போட்டு விட்டான், (ஆகவே) ஒரு சாராரை நீங்கள் கொன்று விட்டீர்கள், (மற்றும்) ஒரு சாராரை நீங்கள் சிறைபிடித்தும் கொண்டீர்கள்.
33:27
33:27 وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَ اَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَــــٴُـوْهَا‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرًا‏
وَاَوْرَثَكُمْ இன்னும் உங்களுக்கு சொந்தமாக்கினான் اَرْضَهُمْ அவர்களின் பூமியை(யும்) وَدِيَارَ இல்லங்களையும் هُمْ அவர்களின் وَ اَمْوَالَهُمْ அவர்களின் செல்வங்களையும் وَاَرْضًا இன்னும் ஒரு பூமியையும் لَّمْ تَطَــــٴُـوْهَا‌ ؕ நீங்கள் மிதிக்காத وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرًا‏ பேராற்றலுடையவனாக
33:27. இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கிவிட்டான்; மேலும், அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
33:27. அவர்களுடைய பூமிகளையும், அவர்களுடைய வீடுகளையும், அவர்களுடைய பொருள்களையும் (இதுவரை) நீங்கள் கால் வைக்காத அவர்களுடைய மற்ற பூமிகளையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்த மாக்கித் தந்தான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
33:27. மேலும், அவன் அவர்களுடைய நிலத்திற்கும், அவர்களுடைய இல்லங்களுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும் உங்களை வாரிசுகளாக்கினான்; நீங்கள் கால் வைத்திருக்காத பூமியையும் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
33:27. இன்னும், (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களுடைய பூமி, மற்றும் அவர்களுடைய வீடுகள் மற்றும் அவர்களுடைய செல்வங்கள் இன்னும் (இதுவரையில்) நீங்கள் மிதித்திராத (அவர்களுடைய மற்ற) பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினான், மேலும் அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
33:28
33:28 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا فَتَعَالَيْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيْلًا‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! قُلْ சொல்வீராக! لِّاَزْوَاجِكَ உமது மனைவிகளுக்கு اِنْ كُنْتُنَّ நீங்கள் இருந்தால் تُرِدْنَ நீங்கள் விரும்புகிறவர்களாக الْحَيٰوةَ வாழ்க்கையை(யும்) الدُّنْيَا உலக وَزِيْنَتَهَا அதன் அலங்காரத்தையும் فَتَعَالَيْنَ வாருங்கள் اُمَتِّعْكُنَّ உங்களுக்கு செல்வம் தருகின்றேன் وَاُسَرِّحْكُنَّ இன்னும் உங்களை விட்டுவிடுகின்றேன் سَرَاحًا جَمِيْلًا‏ அழகிய முறையில்
33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம் நீர் கூறுவீராக! "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்."
33:28. நபியே! உமது மனைவிகளை நோக்கி கூறுவீராக: ‘‘ நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன்.
33:28. நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன்.
33:28. நபியே! உம்முடைய மனைவியருக்கு நீர் கூறுவீராக “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக நீங்கள் இருந்தால், வாருங்கள்! உங்களுக்கு (வாழ்க்கைகுரியதைக் கொடுத்து) சுகத்தை அளிக்கிறேன், அழகிய விடுவித்தலாக (விவாக பந்தத்தை) விடுவித்தும் விடுகிறேன்.”
33:29
33:29 وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِيْمًا‏
وَاِنْ كُنْتُنَّ நீங்கள் இருந்தால் تُرِدْنَ விரும்புகிறவர்களாக اللّٰهَ அல்லாஹ்வை(யும்) وَرَسُوْلَهٗ அவனது தூதரையும் وَالدَّارَ வீட்டையும் الْاٰخِرَةَ மறுமை فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اَعَدَّ தயார்படுத்தி வைத்துள்ளான் لِلْمُحْسِنٰتِ நல்லவர்களுக்கு مِنْكُنَّ உங்களில் اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தான
33:29. "ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமை வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான கூலியை நிச்சயமாகச் சித்தம் செய்திருக்கிறான்."
33:29. நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மை செய்பவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
33:29. ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் நாடுகிறீர்களென்றால் (அறிந்து கொள்ளுங்கள்) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார் செய்து வைத்துள்ளான்.”
33:29. “அன்றியும் நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும். இறுதி வீட்டையும் நாடுபவர்களாக நீங்கள் இருந்தால், அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் உங்களில் (இத்தகைய) நன்மையுடையோருக்கு மகத்தான கூலியை தயார் செய்து வைத்திருக்கிறான்.”
33:30
33:30 يٰنِسَآءَ النَّبِىِّ مَنْ يَّاْتِ مِنْكُنَّ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ يُّضٰعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَيْنِ ‌ؕ وَكَانَ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا‏
يٰنِسَآءَ மனைவிகளே! النَّبِىِّ நபியின் مَنْ யார் يَّاْتِ செய்வாரோ مِنْكُنَّ உங்களில் بِفَاحِشَةٍ மானக்கேடான செயலை مُّبَيِّنَةٍ தெளிவான يُّضٰعَفْ இரு மடங்காக ஆக்கப்படும் لَهَا அவருக்கு الْعَذَابُ வேதனை ضِعْفَيْنِ ؕ இரு மடங்காக وَكَانَ இருக்கின்றது ذٰ لِكَ அது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرًا‏ இலகுவானதாக
33:30. நபியுடைய மனைவியரே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடான காரியத்தைச் செய்வீராயின், அவருக்கு (மறுமையில்) இரு மடங்காக வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!
33:30. நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான ஒரு மானக் கேடான காரியத்தைச் செய்வாராயின் அதற்குரிய தண்டனை அவருக்கு இரு மடங்காக அதிகரிக்கப்படும். இது அல்லாஹ்விற்கு மிக்க சுலபமாக இருக்கிறது.
33:30. நபியின் மனைவியரே! உங்களில் எவரேனும் வெளிப்படையான, மானக்கேடான செயலைச் செய்தால் அவருக்கு இருமடங்கு வேதனை அளிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதான காரியமாகும்.
33:30. நபியுடைய மனைவியரே! உங்களில் எவர் பகிரங்கமான மானக்கேடான ஒரு காரியத்தைச் செய்வாரோ, அவருக்கு இரு மடங்காக வேதனை இரட்டிப்பாக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதாகவே இருக்கிறது.
33:31
33:31 وَمَنْ يَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًـا نُّؤْتِهَـآ اَجْرَهَا مَرَّتَيْنِۙ وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيْمًا‏
وَمَنْ யார் يَّقْنُتْ பணிந்து நடப்பாரோ مِنْكُنَّ உங்களில் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு(ம்) وَرَسُوْلِهٖ அவனது தூதருக்கும் وَتَعْمَلْ இன்னும் செய்வாரோ صَالِحًـا நன்மையை نُّؤْتِهَـآ அவருக்கு நாம் கொடுப்போம் اَجْرَهَا அவரது கூலியை مَرَّتَيْنِۙ இருமுறை وَاَعْتَدْنَا لَهَا இன்னும் அவருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம் رِزْقًا உணவை كَرِيْمًا‏ கண்ணியமான
33:31. அன்றியும், உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நற்செயல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும், அவருக்குக் கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
33:31. உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். மேலும், மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
33:31. மேலும், உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், மேலும், நற்செயல் புரிந்தால், அவர்களுக்கு நாம் இருமடங்கு கூலி வழங்குவோம். மேலும், நாம் அவர்களுக்காக கண்ணியமான நற்பாக்கியங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம்.
33:31. அன்றியும், உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து, நற்கருமங்களையும் செய்கிறாரோ, அவருக்குரிய (நற்)கூலியை அவருக்கு நாம் இரு முறை தருவோம், இன்னும் அவருக்கு (சுவனத்தில்) மிக்க கண்ணியமான உணவை நாம் தயார் படுத்தி வைத்திருக்கின்றோம்.
33:32
33:32 يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ‏
يٰنِسَآءَ மனைவிகளே! النَّبِىِّ நபியின் لَسْتُنَّ நீங்கள் இல்லை كَاَحَدٍ ஒருவரைப் போன்று مِّنَ النِّسَآءِ பெண்களில் اِنِ اتَّقَيْتُنَّ நீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால் فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ ஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள் فَيَـطْمَعَ தப்பாசைப்படுவான் الَّذِىْ فِىْ قَلْبِهٖ எவன்/ தனது உள்ளத்தில் مَرَضٌ நோய் وَّقُلْنَ இன்னும் பேசுங்கள் قَوْلًا பேச்சை مَّعْرُوْفًا ۚ‏ சரியான
33:32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள்; ஏனென்றால், எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் சபலம் கொள்வான்; இன்னும், நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
33:32. நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறிய போதிலும்) யதார்த்தவாதிகளைப்போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள்.
33:32. நபியின் மனைவியரே! நீங்கள் ஏனைய சாதாரணப் பெண்களைப் போன்றவர்களல்லர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாயிருந்தால், மென்மையாகப் பேசாதீர்கள். ஏனெனில், உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும்! ஆகவே, தெளிவாய் நேர்த்தியாய்ப் பேசுங்கள்.
33:32. நபியுடைய மனைவியரே! நீங்கள் (இதர) பெண்களில் எந்த ஒருவரைப் போன்றவர்களுமல்லர், நீங்கள் (அல்லாஹ்வுக்கு) பயந்து கொண்டவர்களானால் (அந்நியருடன்) பேச்சில் நீங்கள் நளினம் காட்டாதீர்கள், ஏனென்றால், எவனுடைய இதயத்தில் (பாவ) நோய் இருக்கின்றதோ அத்தகையவன் (தவறான விருப்பங்களில்) ஆசை கொள்வான், மேலும், நீங்கள் (நேர்மையான) பேச்சையே பேசிவிடுங்கள்.
33:33
33:33 وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ‏
وَقَرْنَ தங்கியிருங்கள் فِىْ بُيُوْتِكُنَّ உங்கள் இல்லங்களில் وَلَا تَبَـرَّجْنَ அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள் تَبَرُّجَ அலங்காரங்களை வெளிப்படுத்தியதுபோன்று الْجَاهِلِيَّةِ அறியாமைக்காலத்தில் الْاُوْلٰى முந்திய وَاَقِمْنَ நிலைநிறுத்துங்கள்! الصَّلٰوةَ தொழுகையை وَاٰتِيْنَ கொடுங்கள்! الزَّكٰوةَ ஸகாத்தை وَاَطِعْنَ கீழ்ப்படியுங்கள்! اللّٰهَ அல்லாஹ்விற்கும் وَرَسُوْلَهٗ ؕ அவனது தூதருக்கும் اِنَّمَا يُرِيْدُ நாடுவதெல்லாம் اللّٰهُ அல்லாஹ் لِيُذْهِبَ போக்குவதற்கும் عَنْكُمُ உங்களை விட்டும் الرِّجْسَ அசுத்தத்தை اَهْلَ الْبَيْتِ வீட்டார்களே! وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ‏ முற்றிலும் உங்களை சுத்தப்படுத்துவதற்கும்தான்
33:33. (நபியின் மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் ஒப்பனையையும் ஒய்யாரத்தையும்) வெளிப்படுத்தித் திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் வெளிப்படுத்தித் திரியாதீர்கள்; தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்; அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
33:33. (நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச் சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.
33:33. மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நபியினுடைய குடும்பத்தினராகிய உங்களிலிருந்து தூய்மையின்மையை அகற்றி உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றுதான் அல்லாஹ் நாடுகின்றான்.
33:33. இன்னும், (நபியுடைய மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள், மேலும், தொழுகையை நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடு(த்து வாரு)ங்கள், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், (நபியுடைய) வீட்டினரே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும்தான்.
33:34
33:34 وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِىْ بُيُوْتِكُنَّ مِنْ اٰيٰتِ اللّٰهِ وَالْحِكْمَةِؕ اِنَّ اللّٰهَ كَانَ لَطِيْفًا خَبِيْرًا‏
وَاذْكُرْنَ இன்னும் மனனம் செய்யுங்கள் مَا يُتْلٰى ஓதப்படுகின்றவற்றையும் فِىْ بُيُوْتِكُنَّ உங்கள் இல்லங்களில் مِنْ اٰيٰتِ அதாவது,வசனங்களில் اللّٰهِ அல்லாஹ்வின் وَالْحِكْمَةِؕ இன்னும் ஞானத்தை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் لَطِيْفًا மிக கருணையாளனாக خَبِيْرًا‏ ஆழ்ந்தறிபவனாக
33:34. மேலும், உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.
33:34. உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞானவாக்கியங்க(ளான ஹதீஸ்க)ளையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.
33:34. உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற இறைவசனங்களையும், விவேகமான விஷயங்களையும் நினைவில் வையுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் நுண்மையானவனாகவும் யாவும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
33:34. மேலும், உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஹிக்மத் (எனும் சுன்னத்தை)தையும் நினைவு கூறுங்கள், (அவற்றின் மூலம் உபதேசம் அடையுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவனாக (யாவையும்) நன்கறிந்தோனாக இருக்கிறான்.
33:35
33:35 اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏
اِنَّ الْمُسْلِمِيْنَ நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள் وَالْمُسْلِمٰتِ இன்னும் முஸ்லிமான பெண்கள் وَالْمُؤْمِنِيْنَ இன்னும் முஃமினான ஆண்கள் وَالْمُؤْمِنٰتِ இன்னும் முஃமினான பெண்கள் وَالْقٰنِتِيْنَ இன்னும் பணிவான ஆண்கள் وَالْقٰنِتٰتِ இன்னும் பணிவான பெண்கள் وَالصّٰدِقِيْنَ இன்னும் உண்மையான ஆண்கள் وَالصّٰدِقٰتِ இன்னும் உண்மையான பெண்கள் وَالصّٰبِرِيْنَ இன்னும் பொறுமையான ஆண்கள் وَالصّٰبِرٰتِ இன்னும் பொறுமையான பெண்கள் وَالْخٰشِعِيْنَ இன்னும் உள்ளச்சமுடைய ஆண்கள் وَالْخٰشِعٰتِ இன்னும் உள்ளச்சமுடைய பெண்கள் وَالْمُتَصَدِّقِيْنَ இன்னும் தர்மம் செய்கின்ற ஆண்கள் وَ الْمُتَصَدِّقٰتِ இன்னும் தர்மம் செய்கின்ற பெண்கள் وَالصَّآٮِٕمِيْنَ இன்னும் நோன்பாளியான ஆண்கள் وَالصّٰٓٮِٕمٰتِ இன்னும் நோன்பாளியான பெண்கள் وَالْحٰفِظِيْنَ இன்னும் பேணுகின்ற ஆண்கள் فُرُوْجَهُمْ இன்னும் தங்கள் மறைவிடங்களை وَالْحٰـفِظٰتِ இன்னும் பேணுகின்ற பெண்கள் وَالذّٰكِرِيْنَ இன்னும் நினைவு கூரக்கூடிய ஆண்கள் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا அதிகம் وَّ الذّٰكِرٰتِ ۙ இன்னும் நினைவு கூரக்கூடிய பெண்கள் اَعَدَّ ஏற்படுத்தி இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ இவர்களுக்கு مَّغْفِرَةً மன்னிப்பை(யும்) وَّاَجْرًا கூலியையும் عَظِيْمًا‏ மகத்தான
33:35. நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும்; நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) வழிப்படும் ஆண்களும், வழிப்படும் பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், உண்மையே பேசும் பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பொறுமையுள்ள பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) அஞ்சிய ஆண்களும், அஞ்சிய பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களைக் காத்துக்கொள்ளும் ஆண்களும், (கற்பைக்) காத்துக்கொள்ளும் பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமதிகம்) தியானம் செய்யும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கிறான்.
33:35. நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
33:35. ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ, திண்ணமாக, அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.
33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும், (அல்லாஹ்வுக்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும், வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையே கூறுபவர்களான ஆண்களும், உண்மையே கூறுபவர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செய்பவர்களான பெண்களும், நோன்பு நோற்பவர்களான ஆண்களும், நோன்பு நோற்பவர்களான பெண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக் கொள்பவர்களான ஆண்களும், (மர்மஸ்தானங்களைக்) காத்து கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூறுபவர்களான பெண்களும்_(ஆகிய) இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான (நற்)கூலியையும் தயார் செய்து வைத்திருக்கிறான்.
33:36
33:36 وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏
وَمَا كَانَ ஆகுமானதல்ல لِمُؤْمِنٍ நம்பிக்கையுடைய ஆணுக்கு(ம்) وَّلَا مُؤْمِنَةٍ நம்பிக்கையுடைய பெண்ணுக்கும் اِذَا قَضَى முடிவுசெய்துவிட்டால் اللّٰهُ அல்லாஹ்வும் وَرَسُوْلُهٗۤ அவனது தூதரும் اَمْرًا ஒரு காரியத்தை اَنْ يَّكُوْنَ இருப்பது لَهُمُ அவர்களுக்கு الْخِيَرَةُ ஒரு விருப்பம் مِنْ اَمْرِهِمْ ؕ தங்களது காரியத்தில் وَمَنْ யார் يَّعْصِ மாறு செய்வாரோ اللّٰهَ அல்லாஹ்வுக்கும் وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் فَقَدْ திட்டமாக ضَلَّ ضَلٰلًا வழிகெட்டுவிட்டார் مُّبِيْنًا‏ தெளிவாக
33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு - நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறுசெய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.
33:36. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.
33:36. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்துவிட்டால், பிறகு அந்த விவகாரத்தில் சுயமாகத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இறைநம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது. மேலும், எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றானோ, அவன் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டான்.
33:36. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்பவதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்தப் பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழிகெட்டுவிட்டார்.
33:37
33:37 وَاِذْ تَقُوْلُ لِلَّذِىْۤ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِ وَاَنْعَمْتَ عَلَيْهِ اَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِىْ فِىْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِيْهِ وَتَخْشَى النَّاسَ ‌ۚ وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰٮهُ ؕ فَلَمَّا قَضٰى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنٰكَهَا لِكَىْ لَا يَكُوْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ حَرَجٌ فِىْۤ اَزْوَاجِ اَدْعِيَآٮِٕهِمْ اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا‏
وَاِذْ تَقُوْلُ நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! لِلَّذِىْۤ எவருக்கு اَنْعَمَ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ்(வும்) عَلَيْهِ அவர் மீது وَاَنْعَمْتَ இன்னும் அருள் புரிந்தீர் عَلَيْهِ அவர் மீது اَمْسِكْ வைத்துக்கொள்! عَلَيْكَ உன்னுடன் زَوْجَكَ உன் மனைவியை وَاتَّقِ இன்னும் அஞ்சிக்கொள் ! اللّٰهَ அல்லாஹ்வை وَتُخْفِىْ நீர் மறைக்கிறீர் فِىْ نَفْسِكَ உமது உள்ளத்தில் مَا ஒன்றை اللّٰهُ அல்லாஹ் مُبْدِيْهِ அதை வெளிப்படுத்தக்கூடியவனாக وَتَخْشَى இன்னும் பயப்படுகின்றீர் النَّاسَ ۚ மக்களை وَاللّٰهُ அல்லாஹ்தான் اَحَقُّ மிகத் தகுதியானவன் اَنْ تَخْشٰٮهُ ؕ அவனை நீர் பயப்படுவதற்கு فَلَمَّا قَضٰى முடித்துவிட்ட போது زَيْدٌ சைது مِّنْهَا அவளிடம் وَطَرًا தேவையை زَوَّجْنٰكَهَا அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம் لِكَىْ لَا يَكُوْنَ இருக்கக்கூடாது என்பதற்காக عَلَى الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு حَرَجٌ சிரமம் فِىْۤ اَزْوَاجِ மனைவிகள் விஷயத்தில் اَدْعِيَآٮِٕهِمْ அவர்களது வளர்ப்பு பிள்ளைகளின் اِذَا قَضَوْا அவர்கள் முடித்துவிட்டபோது مِنْهُنَّ அவர்களிடம் وَطَرًا ؕ தேவையை وَكَانَ இருக்கின்றது اَمْرُ காரியம் اللّٰهِ அல்லாஹ்வின் مَفْعُوْلًا‏ நடக்கக்கூடியதாக
33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது உபகாரம் செய்தீரோ அவரிடத்தில் நீர்: "உம் மனைவியை (விவாக விலக்குச் செய்துவிடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக்கொள்ளும்; மேலும் அல்லாஹ்வை பயந்து கொள்ளும்" என்று சொன்னபோது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்துவைத்திருந்தீர்; ஆனால், அல்லாஹ் - அவன்தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே, ஜைது (என்பவர்) அவளிடமிருந்து (விவாகரத்து செய்யவேண்டுமென்ற தம்) விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டபொழுது, உமக்கு நாம் அவளைத் திருமணம் செய்துவைத்தோம்; (ஏனெனில்,) நம்பிக்கையாளர்கள் மீது அவர்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில், அவர்களிலிருந்து (விவாகரத்து செய்யவேண்டுமென்ற தம்) விருப்பத்தை (வளர்ப்புப் பிள்ளைகளான) இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால், (அவர்களை மண முடித்துக்கொள்வதில்) எவ்விதக் குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்படக்கூடியதாக உள்ளது.
33:37. (நபியே!) அல்லாஹ்வும், நீரும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி ‘‘ நீ அல்லாஹ்வுக்குப் பயந்து உன் மனைவியை (நீக்காது) உன்னிடமே நிறுத்திக் கொள்'' என்று கூறிய சமயத்தில், நீர் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உமது உள்ளத்தில் மறைத்தீர். நீர் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) ‘ஜைது' (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்.
33:37. மேலும் (நபியே!) அந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாரும்; எவர் மீது அல்லாஹ்வும் நீரும் உபகாரம் செய்திருந்தீர்களோ, அவரிடம் நீர் கூறிக்கொண்டிருந்தீர்: “உம்முடைய மனைவியைக் கைவிட்டு விடாதே! மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சு” நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உம்முடைய உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர். மேலும், நீர் மனிதர்களுக்கு அஞ்சிக் கொண்டிருந்தீர். ஆனால், அல்லாஹ்தான் நீர் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன்! ஸைத் அவளுடைய விஷயத்தில் தம் நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு (விவாகரத்து செய்யப்பட்ட) அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம் நம்பிக்கையாளர்களின் வளர்ப்பு மகன்கள் தம்முடைய மனைவிமார் விஷயத்தில் தம் தேவையை நிறைவேற்றி விடும்போது (விவாகரத்தான) அப்பெண்களின் விவகாரத்தில் நம்பிக்கையாளர்க்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ்வின் கட்டளையோ செயல்படுத்தப்பட வேண்டிய தாகவே இருந்தது.
33:37. அல்லாஹ் எவருக்கு (நேர் வழி காட்டுவதன் மூலம்) அருள் புரிந்து, நீரும் எவருக்கு (அடிமைத்தனத்திலிருந்து உரிமை விடுவதன் மூலம்) உபகாரம் செய்தீரோ அவரிடத்தில் “(ஜைனபு ஆகிய) உம்முடைய மனைவியை (விவாக பந்தத்திலிருந்து நீக்காது) உம்மிடமே (மனைவியாக) நிறுத்திக் கொள்ளும், இன்னும் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளும்” என்று நீர் கூறிய சமயத்தில்_(நடந்த இச்சம்பவத்தை நினைவு கூர்வீராக) அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைந்திருந்தீர். மேலும், மனிதர்களுக்கு நீர் பயப்படுகிறீர், இன்னும் அல்லாஹ்_அவன்தான் நீர் பயப்படுவதற்கு மிக உரியவன் (மனிதர்களல்ல). ஜைது (என்பவர்) ஜைனபைத் திருமணம் செய்து தாம்பத்திய வாழ்க்கை எனும் தன்) தேவையை அவளிடமிருந்து நிறைவேற்றிவிட்டபோது, நாம் அவளை உமக்குத் திருமணம் செய்து வைத்தோம், ஏனென்றால், விசுவாசிகளால் வளர்க்கப் பட்டவர்கள் தங்கள் தேவையை (அப்பெண்களான) அவர்களிடம் பூர்த்தி செய்துகொண்டு (அவர்களைத் தலாக்குக் கூறி)விட்டால், (அவர்களை வளர்த்த) விசுவாசிகள், (அவ்வாறு தலாக் கூறப்பட்ட) அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் யாதொரு குற்றமிருக்கக்கூடாது என்பதற்காக (உமக்கு, உமது வளர்ப்பு மகனால் விவாகரத்துச் செய்யப்பட்ட ஜைனபை திருமணம் செய்துவைத்தோம்.) மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை (இவ்வாறு) நடைபெற்றுத்தீர வேண்டியதாக இருந்தது.
33:38
33:38 مَا كَانَ عَلَى النَّبِىِّ مِنْ حَرَجٍ فِيْمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ؕ سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ قَدَرًا مَّقْدُوْرَا  ۙ‏
مَا كَانَ இருக்கவில்லை عَلَى மீது النَّبِىِّ நபியின் مِنْ حَرَجٍ அறவே குற்றம் فِيْمَا فَرَضَ கடமையாக்கியதை اللّٰهُ அல்லாஹ் لَهٗ ؕ தனக்கு سُنَّةَ வழிமுறையைத்தான் اللّٰهِ அல்லாஹ்வின் فِى الَّذِيْنَ خَلَوْا சென்றவர்களில் مِنْ قَبْلُ ؕ இதற்கு முன்னர் وَكَانَ இருக்கின்றது اَمْرُ செயல் اللّٰهِ அல்லாஹ்வின் قَدَرًا தீர்ப்பாக مَّقْدُوْرَا  ۙ‏ நிறைவேற்றப்படுகின்ற
33:38. நபியின் மீது - அல்லாஹ் அவருக்கு விதியாக்கியதில் (அதை அவர் நிறைவேற்றுவதில்) எந்தக் குற்றமும் இல்லை; இதற்குமுன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும்; இன்னும், அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாகும்.
33:38. அல்லாஹ் தனக்கு சட்டமாக்கிய ஒரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் உள்ளவர்களுக்கு (நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.
33:38. அல்லாஹ் எந்த ஒரு பணியை நபிக்காக நிர்ணயித்துள்ளானோ அந்தப் பணியை ஆற்றுவதில் நபியின் மீது எந்தத் தடையும் இல்லை. முன்பு சென்ற நபிமார்களின் விவகாரத்திலும் இதுதான் அல்லாஹ்வுடைய நியதியாய் இருந்திருக்கின்றது. மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்ட தீர்ப்பாய் இருக்கின்றது.
33:38. (ஜைனபை மணமுடிக்கும் விஷயத்தில்) நபியின் மீது அல்லாஹ் அவருக்காக விதியாக்கியதில் எவ்வித குற்றமும் இல்லை, இதற்கு முன் சென்றுவிட்டவர்(களாகிய நபிமார்)களுக்கு (அல்லாஹ் ஏற்படுத்திய) வழியும் இதுவே; இன்னும் அல்லாஹ்வுடைய கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கின்றது.
33:39
33:39 اۨلَّذِيْنَ يُبَـلِّـغُوْنَ رِسٰلٰتِ اللّٰهِ وَيَخْشَوْنَهٗ وَلَا يَخْشَوْنَ اَحَدًا اِلَّا اللّٰهَ ؕ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا‏
اۨلَّذِيْنَ يُبَـلِّـغُوْنَ அவர்கள் எடுத்துச் சொல்வார்கள் رِسٰلٰتِ தூதுச் செய்திகளை اللّٰهِ அல்லாஹ்வின் وَيَخْشَوْنَهٗ இன்னும் அவனை பயப்படுவார்கள் وَلَا يَخْشَوْنَ இன்னும் பயப்பட மாட்டார்கள் اَحَدًا ஒருவரையும் اِلَّا اللّٰهَ ؕ தவிர/அல்லாஹ்வை وَكَفٰى போதுமான(வன்) بِاللّٰهِ அல்லாஹ்வே حَسِيْبًا‏ விசாரணையாளன்
33:39. (இறைத் தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் தூதுச்செய்திகளை (மக்களுக்கு) எத்திவைப்பார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; இன்னும், அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
33:39. அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீர் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
33:39. (இது அல்லாஹ்வின் நியதியாகும்; இந்த மக்களுக்காக) அவர்களோ அல்லாஹ்வின் தூதுச்செய்திகளை சேர்ப்பிக்கின்றார்கள். அவனுக்கே அஞ்சுகின்றார்கள். மேலும், ஓரிறைவனைத் தவிர வேறு எவருக்கும் அவர்கள் அஞ்சுவதில்லை. மேலும், கணக்கு வாங்கிட அல்லாஹ் போதுமானவன்.
33:39. (முன் சென்றுவிட்ட) அவர்கள் எத்தகயோரென்றால் அல்லாஹ்வுடைய (இத்தகைய) தூதுச் செய்திகளை (மக்களுக்குக் கூடுதல் குறைவின்றி) எத்திவைப்பார்கள், இன்னும் அவர்கள் அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள், அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள், கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
33:40
33:40 مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏
مَا كَانَ இருக்கவில்லை مُحَمَّدٌ முஹம்மது اَبَآ தந்தையாக اَحَدٍ ஒருவருக்கும் مِّنْ رِّجَالِكُمْ உங்கள் ஆண்களில் وَلٰـكِنْ என்றாலும் رَّسُوْلَ தூதராகவும் اللّٰهِ அல்லாஹ்வின் وَخَاتَمَ இறுதி முத்திரையாகவும் النَّبِيّٖنَ ؕ நபிமார்களின் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
33:40. முஹம்மது உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார்; மேலும், அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
33:40. (நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் ஒரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
33:40. (மக்களே!) முஹம்மத் உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையல்லர். ஆனால், அவர் அல்லாஹ்வின் தூதராகவும், இறுதிநபியாகவும் இருக்கின்றார். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான்.
33:40. உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது தகப்பனாக இருக்கவில்லை, எனினும் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு(க் கடைசி) முத்திரையாகவும், (இறுதி நபியாகவும்) இருக்கிறார், அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிந்தோனாக இருக்கிறான்.
33:41
33:41 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا ۙ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اذْكُرُوْا நினைவு கூறுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை ذِكْرًا كَثِيْرًا ۙ‏ மிக அதிகம்
33:41. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுங்கள்.
33:41. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள்.
33:41. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்.
33:41. விசுவாசிகளே! அல்லாஹ்வை அதிகமான நினைவு கூறுதலாக நினைவு கூறுங்கள்.
33:42
33:42 وَّ سَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا‏
وَّ سَبِّحُوْهُ இன்னும் அவனை துதியுங்கள் بُكْرَةً காலையிலும் وَّاَصِيْلًا‏ மாலையிலும்
33:42. இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
33:42. காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.
33:42. மேலும், காலையிலும், மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருங்கள். அவனே உங்கள் மீது கருணை பொழிகின்றான்.
33:42. காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
33:43
33:43 هُوَ الَّذِىْ يُصَلِّىْ عَلَيْكُمْ وَمَلٰٓٮِٕكَتُهٗ لِيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ؕ وَكَانَ بِالْمُؤْمِنِيْنَ رَحِيْمًا‏
هُوَ الَّذِىْ அவன்தான் يُصَلِّىْ அருள் புரிவான் -பிரார்த்திப்பார்(கள்) عَلَيْكُمْ உங்கள் மீது وَمَلٰٓٮِٕكَتُهٗ இன்னும் அவனது வானவர்கள் لِيُخْرِجَكُمْ உங்களை அவன் வெளியேற்றுவதற்காக مِّنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى النُّوْرِ ؕ வெளிச்சத்தின் பக்கம் وَكَانَ அவன் இருக்கிறான் بِالْمُؤْمِنِيْنَ நம்பிக்கை யாளர்கள் மீது رَحِيْمًا‏ மகா கருணையுள்ளவனாக
33:43. உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின்பால் கொண்டுவருவதற்காக உங்கள்மீது அருள்புரிகிறவன் அவனே; இன்னும், அவனுடைய வானவர்களும் (அவ்வாறே பிரார்த்திக்கின்றனர்); மேலும், அவன் நம்பிக்கையாளர்களின் மீது இரக்கமுடையவனாக இருக்கின்றான்.
33:43. அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டுவந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
33:43. அவனுடைய வானவர்களும் உங்கள் மீது கருணை புரியும்படி இறைஞ்சுகின்றார்கள்; அவன் உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் கொண்டுவருவதற்காக! அவன் நம்பிக்கையாளர்கள் மீது பெருங்கருணை பொழிபவனாக இருக்கின்றான்.
33:43. அவன் எத்தகையவனென்றால், உங்கள் மீது அவன் அருள் புரிகின்றான், இன்னும் அவனது மலக்குகளும் (உங்களுக்காக பாவ மன்னிப்புக் கேட்கிறார்கள்), காரணம், இருள்களிலிருந்து ஒளியின்பால் உங்களை அவன் வெளியேற்றுவதற்காக மேலும், அல்லாஹ் விசுவாசி(களாகிய உங்)கள் மீது மிக்க கிருபையுடையோனாக இருக்கிறான்.
33:44
33:44 تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهٗ سَلٰمٌ ۖۚ وَاَعَدَّ لَهُمْ اَجْرًا كَرِيْمًا‏
تَحِيَّتُهُمْ அவர்களது முகமன் يَوْمَ يَلْقَوْنَهٗ அவனை அவர்கள் சந்திக்கின்ற நாளில் سَلٰمٌ ۖۚ ஸலாம் وَاَعَدَّ இன்னும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான் لَهُمْ அவர்களுக்கு اَجْرًا கூலியை كَرِيْمًا‏ கண்ணியமான
33:44. அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களுக்குரிய காணிக்கை (உங்களுக்கு) "சாந்தி உண்டாவதாக" என்பதாகும்; மேலும், அவர்களுக்காக கண்ணியமான (நற்)கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
33:44. (நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) ‘‘ஈடேற்றம் உண்டாவதாக'' என்று ஆசீர்வதிப்பான். அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
33:44. அவர்கள், அவனைச் சந்திக்கும் நாளில் ஸலாம் சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்துக் கூறி வரவேற்கப்படுவார்கள். மேலும், அல்லாஹ் அவர்களுக்காக கண்ணியமான கூலியை தயார் செய்து வைத்துள்ளான்.
33:44. அவனை அவர்கள் சந்திக்கும் நாளில், அவர்களுக்குரிய காணிக்கை “(உங்களுக்குச்) சாந்தி உண்டாவதாக” என்பதாகும், மேலும், அவர்களுக்காக கண்ணியமான கூலியையும் அவன் தயாராக்கி வைத்திருக்கிறான்.
33:45
33:45 يٰۤـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنٰكَ நாம் உம்மை அனுப்பினோம் شَاهِدًا சாட்சியாளராக(வும்) وَّمُبَشِّرًا நற்செய்தி கூறுபவராகவும் وَّنَذِيْرًا ۙ‏ அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்
33:45. நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாளராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
33:45. நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
33:45. நபியே! (சத்தியத்திற்காகச்) சாட்சியம் பகருபவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், அச்சமூட்டி, எச்சரிக்கை செய்பவராகவும்,
33:45. நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சாட்சியாளராகவும், நன்மாராயங்கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
33:46
33:46 وَّدَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا‏
وَّدَاعِيًا அழைப்பவராகவும் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் بِاِذْنِهٖ அவனது அனுமதிகொண்டு وَسِرَاجًا விளக்காகவும் مُّنِيْرًا‏ பிரகாசிக்கின்ற
33:46. இன்னும், அல்லாஹ்வின்பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி அழைப்பவராகவும், பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்).
33:46. மேலும், அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி (மக்களை நீர்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கிறீர்).
33:46. அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய அனுமதியுடன் அழைப்பு விடுப்பவராகவும், சுடர்வீசும் விளக்காகவும் நாம் உம்மை அனுப்பியிருக்கின்றோம்.
33:46. இன்னும், அல்லாஹ்வின்பால்_அவனின் அனுமதி கொண்டு_(ஜனங்களை) நீர் அழைப்பவராகவும், பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.)
33:47
33:47 وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ بِاَنَّ لَهُمْ مِّنَ اللّٰهِ فَضْلًا كَبِيْرًا‏
وَبَشِّرِ நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு بِاَنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடம் فَضْلًا அருள் كَبِيْرًا‏ மிகப் பெரிய
33:47. எனவே, நம்பிக்கையாளர்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாகப் பேரருள் இருக்கிறதென நன்மாராயம் கூறுவீராக!
33:47. ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
33:47. எனவே, எவர்கள் (உம்மீது) நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு, அல்லாஹ்விடமிருந்து திண்ணமாக, பெரும் வெகுமதி இருக்கின்றது எனும் நற்செய்தியினை அறிவிப்பீராக!
33:47. (நபியே!) விசுவாசிகளுக்கு_அல்லாஹ்விடமிருந்து, நிச்சயமாக அவர்களுக்கு_பெரும்பேரருள் உண்டு என்று நீர் நன்மாராயமும் கூறுவீராக!
33:48
33:48 وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ وَدَعْ اَذٰٮهُمْ وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏
وَلَا تُطِعِ கீழ்ப்படியாதீர் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு(ம்) وَالْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களுக்கும் وَدَعْ இன்னும் விட்டுவிடுவீராக! اَذٰٮهُمْ அவர்களின் தொந்தரவை وَتَوَكَّلْ இன்னும் சார்ந்து இருப்பீராக! عَلَى اللّٰهِ ؕ அல்லாஹ்வை وَكَفٰى போதுமான(வன்) بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا‏ பொறுப்பாளன்
33:48. அன்றியும், நிராகரிப்போருக்கும் நயவஞ்சகர்களுக்கும் நீர் கீழ்ப்படியவேண்டாம்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக! அல்லாஹ்வையே சார்ந்து இருப்பீராக! பாதுகாவலனாக இருக்க அல்லாஹ்வே போதுமானவனாக இருக்கின்றான்.
33:48. நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவர்களால் (உமக்கு) ஏற்படும் துன்பங்களை புறக்கணித்து விடுவீராக. (உம்முடைய எல்லா காரியங்களின்) பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுவீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்கப் போதுமானவன்.
33:48. நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் ஒருபோதும் நீர் பணிந்துவிடாதீர். அவர்களுடைய துன்புறுத்தலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! (மனிதன் தன்னுடைய) விவகாரங்களை ஒப்படைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
33:48. மேலும், நிராகரிப்போருக்கும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளுக்கும் நீர் கீழ்படியாதீர், அவர்கள் (இழைக்கும்) துன்பங்களையும் நீர் (புறக்கணித்து) விட்டுவிடுவீராக! (உம்முடைய சகல காரியங்களையும் அவனிடமே ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் வைப்பீராக! பொறுப்பேற்கிறவனாக இருக்க அல்லாஹ்வே (உமக்குப்) போதுமானவன்.
33:49
33:49 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَـكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَا ۚ فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِيْلًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا نَكَحْتُمُ நீங்கள் திருமணம் முடித்தால் الْمُؤْمِنٰتِ நம்பிக்கைகொண்ட பெண்களை ثُمَّ பிறகு طَلَّقْتُمُوْهُنَّ அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் مِنْ قَبْلِ முன்னர் اَنْ تَمَسُّوْ நீங்கள் உறவு வைப்பதற்கு هُنَّ அவர்களுடன் فَمَا لَـكُمْ உங்களுக்கு இல்லை عَلَيْهِنَّ அவர்கள் மீது مِنْ عِدَّةٍ எவ்வித இத்தாவும் تَعْتَدُّوْنَهَا ۚ நீங்கள் அதைக் கணக்கிட வேண்டிய فَمَتِّعُوْ செல்வத்தை கொடுங்கள்! هُنَّ அவர்களுக்கு وَسَرِّحُوْ இன்னும் விடுவித்து விடுங்கள் هُنَّ அவர்களை سَرَاحًا விடுவித்தல் جَمِيْلًا‏ அழகிய முறையில்
33:49. நம்பிக்கை கொண்டவர்களே! நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்னமேயே அவர்களை விவாகரத்து செய்துவிட்டீர்களேயானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய இத்தா (தவணை) ஒன்றும் உங்களுக்கு இல்லை; ஆகவே, அவர்களுக்கு(த் தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்துவிடுங்கள்.
33:49. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே ‘தலாக்' கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்கவேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள்.
33:49. நம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து பின்னர் அவர்களைத் தொடுவதற்கு முன்பாக விவாகரத்துச் செய்து விட்டால், நிறைவேற்றுமாறு நீங்கள் கோரக்கூடிய வகையில் உங்களுக்காக அவர்கள் மீது ‘இத்தா’ எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்குக் கொஞ்சம் பொருள்களைக் கொடுத்து நல்ல முறையில் அவர்களை அனுப்பி வைத்துவிடுங்கள்.
33:49. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விசுவாசங்கொண்ட பெண்களைத் திருமணம் செய்து, பிறகு அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் தலாக் கூறி விட்டால், (மற்ற விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்காக) நீங்கள் எதைக் கணக்கிடுவீர்களோ அத்தகைய எந்த “இத்தா”வும் அவர்களின் மீது (நிர்ணயிக்க) உங்களுக்கு (உரிமை) இல்லை. எனவே, நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (விவாக பந்தத்திலிருந்து) அவர்களை விடுவித்தும் விடுங்கள்.
33:50
33:50 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَـكَ اَزْوَاجَكَ الّٰتِىْۤ اٰتَيْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَـكَتْ يَمِيْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَيْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِىْ هَاجَرْنَ مَعَكَ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِىِّ اِنْ اَرَادَ النَّبِىُّ اَنْ يَّسْتَـنْكِحَهَا خَالِصَةً لَّـكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ؕ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِىْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُوْنَ عَلَيْكَ حَرَجٌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! اِنَّاۤ நிச்சயமாக நாம் اَحْلَلْنَا ஆகுமாக்கினோம் لَـكَ உமக்கு اَزْوَاجَكَ உமது மனைவிகளை(யும்) الّٰتِىْۤ எவர்கள் اٰتَيْتَ நீர் கொடுத்தீர் اُجُوْرَ திருமணக் கொடைகளை هُنَّ அவர்களின் وَمَا இன்னும் எவர்கள் مَلَـكَتْ சொந்தமாகிய(து) يَمِيْنُكَ உமது வலக்கரம் مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ அல்லாஹ் போரில் கொடுத்தவர்களிலிருந்து عَلَيْكَ உமக்கு وَبَنٰتِ மகள்களையும் عَمِّكَ உமது சாச்சாவின் وَبَنٰتِ மகள்களையும் عَمّٰتِكَ உமது மாமியின் وَبَنٰتِ மகள்களையும் خَالِكَ உமது தாய் மாமாவின் وَبَنٰتِ மகள்களையும் خٰلٰتِكَ உமது காலாவின் الّٰتِىْ எவர்கள் هَاجَرْنَ ஹிஜ்ரா செய்தனர் مَعَكَ உம்முடன் وَامْرَاَةً இன்னும் ஒரு பெண் مُّؤْمِنَةً முஃமினான اِنْ وَّهَبَتْ அன்பளிப்பு செய்தால் نَفْسَهَا தன்னை لِلنَّبِىِّ நபிக்கு اِنْ اَرَادَ நாடினால் النَّبِىُّ நபி(யும்) اَنْ يَّسْتَـنْكِحَهَا அவளை மணமுடிக்க خَالِصَةً பிரத்தியோகமாகும் لَّـكَ உமக்கு மட்டும் مِنْ دُوْنِ அன்றி الْمُؤْمِنِيْنَ ؕ முஃமின்கள் قَدْ திட்டமாக عَلِمْنَا நாம் அறிவோம் مَا فَرَضْنَا நாம் கடமையாக்கியதை عَلَيْهِمْ அவர்கள் மீது فِىْۤ اَزْوَاجِهِمْ அவர்களின் மனைவிமார்களின் விஷயத்தில் وَمَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் لِكَيْلَا يَكُوْنَ இருக்கக் கூடாது என்பதற்காக عَلَيْكَ உமக்கு حَرَجٌ ؕ சிரமம் وَكَانَ اللّٰهُ அல்லாஹ் இருக்கின்றான் غَفُوْرًا மன்னிப்பாளனாக, رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரைக் கொடுத்துவிட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களையும், உம்முடன் ஹிஜ்ரத் செய்துவந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரருடைய மகள்களையும், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்களையும், உம் தாயின் சகோதரருடைய மகள்களையும், உம் தாயின் சகோதரிகளின் மகள்களையும் நாம் உமக்கு அனுமதித்துள்ளோம்; அன்றியும், நம்பிக்கைகொண்ட ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்துகொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது, மற்ற நம்பிக்கையாளர்களுக்கன்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியேகமாக உள்ளதாகும்; (மற்ற நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும் அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்: உமக்கு ஏதும் சிரமம் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதிவிலக்களித்தோம்); மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க அன்புடையவன்.
33:50. நபியே! நிச்சயமாக நீர் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்ட பெண்களையும், அல்லாஹ் உமக்கு (யுத்தத்தில்) கொடுத்தவர்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். உமது தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உமது அத்தையின் மகள்கள், உமது தாய்மாமனின் மகள்கள், உமது தாயின் சகோதரியுடைய மகள்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீர் திருமணம் செய்துகொள்ள நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். மேலும்) நம்பிக்கை கொண்ட ஒரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். (நபியே!) இது சொந்தமாக உமக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கல்ல. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது சட்டமாக்கி இருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உமக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உமக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
33:50. நபியே! நீர் மஹர் கொடுத்துவிட்ட உம்முடைய மனைவியரையும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும், மற்றும் உம்மோடு ஹிஜ்ரத்* செய்த பெண்களாகிய உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதரர்களின் மகள்கள், உம் தாயின் சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் திண்ணமாக, நாம் உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம். மேலும், இறைநம்பிக்கை கொண்ட பெண்ணையும் அவள் தன்னைத் தானே நபிக்காக அன்பளிப்பாய் வழங்கி, நபியும் அவளைத் திருமணம் செய்திட விரும்பும் பட்சத்தில் (உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம்). இந்தச் சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும்; பிற நம்பிக்கையாளர்களுக்கு இல்லை! ஏனைய நம்பிக்கையாளர்கள் மீது அவர்களுடைய மனைவிகள் மற்றும் அடிமைப் பெண்களின் விஷயத்தில் என்னென்ன வரையறைகளை நாம் விதித்திருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். (இவ்வரையறைகளிலிருந்து உமக்கு நாம் விலக்களித்திருப்பது) உமக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்! மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
33:50. நபியே! எவர்களின் மஹர்களை நீர் கொடுத்து விட்டீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் உமக்கு (யுத்தத்தில்) அளித்து உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், (மக்காவை விட்டு) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரரின் புதல்வியரையும், உம் தந்தையின் சகோதரிகளுடைய புதல்வியரையும், உமது தாய் மாமனின் புதல்வியரையும், உம் தாயின் சகோதரிகளுடைய புதல்வியரையும் மஹர் கொடுத்து நீர் திருமணம் செய்து கொள்ள) நிச்சயமாக நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம், மேலும், விசுவாசங்கொண்ட ஒரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து, நபியும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், (அவளையும் மணக்க உமக்கு அனுமதி அளித்தோம்.) நபியே! இது மற்ற விசுவாசிகளுக்கன்றி உமக்கு மட்டும் பிரத்தியேகமாக உள்ளதாகும், (மற்ற விசுவாசிகள்) அவர்கள் மனைவியரிலும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவற்றிலும், நாம் அவர்கள் மீது விதித்திருக்கும் கட்டளையை நாம் நன்கறிவோம், உமக்கு (அனுமதிக்கப்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்ட விஷயத்தில்) எவ்வித சங்கடமும் எற்படாமலிப்பதற்காக (அக்கடமையிலிருந்து உமக்கு விதி விலக்குச் செய்தோம்.) மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்.
33:51
33:51 تُرْجِىْ مَنْ تَشَآءُ مِنْهُنَّ وَتُـــْٔوِىْۤ اِلَيْكَ مَنْ تَشَآءُ ؕ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ تَقَرَّ اَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَاۤ اٰتَيْتَهُنَّ كُلُّهُنَّ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِىْ قُلُوْبِكُمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَلِيْمًا‏
تُرْجِىْ தள்ளிவைப்பீராக! مَنْ تَشَآءُ நீர் நாடுகின்றவரை مِنْهُنَّ அவர்களில் وَتُـــْٔوِىْۤ சேர்த்துக்கொள்வீராக! اِلَيْكَ உம் பக்கம் مَنْ تَشَآءُ ؕ நீர் நாடுகின்றவரை وَمَنِ ابْتَغَيْتَ இன்னும் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ مِمَّنْ عَزَلْتَ நீர்நீக்கிவிட்டவர்களில் فَلَا جُنَاحَ குற்றம் இல்லை عَلَيْكَ ؕ உம்மீது ذٰ لِكَ இது اَدْنٰٓى சுலபமானதாகும் اَنْ تَقَرَّ குளிர்ச்சி அடைவதற்கு(ம்) اَعْيُنُهُنَّ அவர்களின் கண்கள் وَلَا يَحْزَنَّ அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும் وَيَرْضَيْنَ இன்னும் அவர்கள் திருப்தி அடைவதற்கும் بِمَاۤ اٰتَيْتَهُنَّ நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு كُلُّهُنَّ ؕ அவர்கள் எல்லோரும் وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا فِىْ قُلُوْبِكُمْ ؕ உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَلِيْمًا‏ மகா சகிப்பாளனாக
33:51. அவர்களில் நீர் விரும்பியவரை ஒதுக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவரை உம்முடன் தங்க வைக்கலாம்; நீர் ஒதுக்கிவைத்தவர்களில் எவரையேனும் நீர் (மீண்டும் சேர்த்துக் கொள்ள) நாடினால் (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும், அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக்கொண்டு திருப்தி அடைவதற்காகவும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும், அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
33:51. (நபியே!) உமது மனைவிகளில் நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) விலக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் விலக்கியவர்களில் நீர் விரும்பியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவற்றைப் பற்றி) உம் மீது ஒரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீர் அவர்களுக்குக் கொடுத்தவற்றைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கிறது. உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக, பொறுமையுடையவனாக இருக்கிறான்.
33:51. உம்முடைய மனைவியரில் உம்முடைய விருப்பப்படி சிலரை உம்மைவிட்டுத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், நீர் விரும்புகின்றபடி வேறு சிலரை உம்முடன் வைத்துக் கொள்வதற்கும், நீர் தனிமைப்படுத்தி வைத்தவர்களில் எவரையாவது நீர் அழைத்துக் கொள்வதற்கும் அனுமதி இருக்கிறது, (இந்த விவகாரத்தில்) உம் மீது எத்தகைய தவறுமில்லை. இதனால் இவர்கள் கண் குளிர்ந்தும் வருத்தமற்றும் இருப்பார்கள் என்பதையும், மேலும், எதனை நீர் அவர்களுக்கு அளித்தாலும் அதனைக் குறித்து அவர்கள் அனைவரும் திருப்தி கொள்வார்கள் என்பதையும் அதிகம் எதிர்பார்க்கலாம். உங்களுடைய உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். மேலும், அல்லாஹ் யாவும் அறிந்தவனாகவும், சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
33:51. (நபியே! உம்முடைய மனைவியராகிய) அவர்களில், நீர் விரும்பியவரை ஒதுக்கி வைக்கலாம், நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவும் வைக்கலாம், நீர் ஒதுக்கியவர்களில், நீர் எவரையேனும் (மீண்டும்) நாடினால் உம்மீது குற்றமில்லை. அது, அவர்களுடைய கண்கள் குளிர்சியடைவதற்கும், அவர்கள் கவலைபடாமலிருப்பதற்கும், நீர் அவர்களனைவருக்கும் எதைக் கொடுத்தீரோ அதைக் கொண்டு திருப்தியடைவதற்கும் மிக்க நெருக்கமானதாகும், இன்னும், உங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிவான், மேலும், அல்லாஹ் (யாவையும்) நன்கறிந்தவனாக, சகித்துக் கொள்பவனாக இருக்கிறான்.
33:52
33:52 لَا يَحِلُّ لَـكَ النِّسَآءُ مِنْۢ بَعْدُ وَلَاۤ اَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ اَزْوَاجٍ وَّلَوْ اَعْجَبَكَ حُسْنُهُنَّ اِلَّا مَا مَلَـكَتْ يَمِيْنُكَ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ رَّقِيْبًا‏
لَا يَحِلُّ ஆகுமாக மாட்டார்கள் لَـكَ உமக்கு النِّسَآءُ பெண்கள் مِنْۢ بَعْدُ பின்னர் وَلَاۤ اَنْ تَبَدَّلَ இன்னும் நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல بِهِنَّ இவர்களுக்கு பதிலாக مِنْ اَزْوَاجٍ (வேறு) பெண்களை وَّلَوْ اَعْجَبَكَ உம்மைக் கவர்ந்தாலும் சரியே! حُسْنُهُنَّ அவர்களின் அழகு اِلَّا தவிர مَا مَلَـكَتْ சொந்தமாக்கிய பெண்கள் يَمِيْنُكَ‌ؕ உமது வலக்கரம் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் رَّقِيْبًا‏ கண்காணிப்பவனாக
33:52. இவர்களுக்குப் பின்னால், உம் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஆகுமாகமாட்டார்கள்; இன்னும், இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக்கொள்வதும் உமக்கு (ஆகுமானது) இல்லை; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே! மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.
33:52. (நபியே! இப்போதிருக்கும் உமது மனைவிகளுக்குப்) பின்னர், வேறு பெண்கள் (அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள) உமக்கு ஆகுமாக மாட்டார்கள். மேலும், ஒரு பெண்ணின் அழகு உம்மை கவர்ந்தபோதிலும் உமது மனைவிகளில் எவரையும் நீக்கி, அதற்குப் பதிலாக அவளை எடுத்துக் கொள்வதும் உமக்கு ஆகுமாகாது. ஆயினும், உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறல்ல. (அவள் உமக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கிறான்.
33:52. இதற்குப் பின்னர், வேறு பெண்கள் உமக்கு ஆகுமானவர்களல்லர். மேலும், இம்மனைவியருக்குப் பகரமாக நீர் வேறு மனைவியரை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அனுமதியில்லை. அவர்களின் அழகு உமக்கு மிகவும் பிடித்தமானதாயினும் சரியே! ஆயினும் உமக்கு அடிமைப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ் யாவற்றையும் கண்காணிப்பவனாயிருக்கின்றான்.
33:52. (நபியே! இதற்குப்) பின்னர், உம்வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர (நீர் திருமணம் செய்து கொள்ள) வேறு பெண்கள் உமக்கு ஆகுமாகமாட்டர்கள், இன்னும், அவர்களுடைய (இடத்தில் வேறு பெண்களின்) அழகு உம்மை கவர்ந்த போதிலும் அவர்களை, (உம்முடைய மனைவியராக) இவர்களைக் கொண்டு நீர் மாற்றிக் கொள்வதும் உமக்கு (அனுமதி) இல்லை, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் கண்காணிக்கிறவனாக இருக்கிறான்.
33:53
33:53 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ ؕ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تَدْخُلُوْا நுழையாதீர்கள் بُيُوْتَ வீடுகளுக்குள் النَّبِىِّ நபியின் اِلَّاۤ தவிர اَنْ يُّؤْذَنَ அனுமதி கொடுக்கப்பட்டால் لَـكُمْ உங்களுக்கு اِلٰى طَعَامٍ ஓர் உணவின் பக்கம் غَيْرَ نٰظِرِيْنَ எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும் اِنٰٮهُ அது தயாராவதை وَلٰـكِنْ என்றாலும், اِذَا دُعِيْتُمْ நீங்கள் அழைக்கப்பட்டால் فَادْخُلُوْا நுழையுங்கள் فَاِذَا طَعِمْتُمْ நீங்கள் சாப்பிட்டுவிட்டால் فَانْتَشِرُوْا பிரிந்துவிடுங்கள் وَلَا مُسْتَاْنِسِيْنَ புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும் لِحَـدِيْثٍ ؕ பேச்சை اِنَّ ذٰلِكُمْ நிச்சயமாக இது كَانَ இருக்கின்றது يُؤْذِى தொந்தரவு தரக்கூடியதாக النَّبِىَّ நபிக்கு فَيَسْتَحْىٖ அவர்வெட்கப்படுவார் مِنْكُمْ உங்களிடம் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَسْتَحْىٖ வெட்கப்படமாட்டான் مِنَ الْحَـقِّ ؕ சத்தியத்திற்கு وَاِذَا سَاَ لْتُمُوْ நீங்கள் கேட்டால் هُنَّ அவர்களிடம் مَتَاعًا ஒரு பொருளை فَسْــٴَــــلُوْ கேளுங்கள் هُنَّ அவர்களிடம் مِنْ وَّرَآءِ பின்னால் இருந்து حِجَابٍ ؕ திரைக்கு ذٰ لِكُمْ அதுதான் اَطْهَرُ மிகத் தூய்மையானது لِقُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்களுக்கு(ம்) وَقُلُوْبِهِنَّ ؕ அவர்களின் உள்ளங்களுக்கும் وَمَا كَانَ ஆகுமானதல்ல لَـكُمْ உங்களுக்கு اَنْ تُؤْذُوْا நீங்கள் தொந்தரவு தருவது(ம்) رَسُوْلَ தூதருக்கு اللّٰهِ அல்லாஹ்வின் وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا நீங்கள் மணமுடிப்பதும் اَزْوَاجَهٗ அவருடைய மனைவிகளை مِنْۢ بَعْدِهٖۤ அவருக்குப் பின்னர் اَبَدًا ؕ எப்போதும் اِنَّ ذٰ لِكُمْ நிச்சயமாக/இவை كَانَ இருக்கின்றது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் عَظِيْمًا‏ பெரிய பாவமாக
33:53. நம்பிக்கை கொண்டோரே! உணவின்பால் (அதை உண்ண) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலன்றி, அது சமையலாவதை எதிர்பார்த்து (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும், நீங்கள் உணவருந்திவிட்டால் (உடனே) கலைந்து போய்விடுங்கள்; பேச்சில் மூழ்கி விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாக இருக்கிறது; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார்; ஆனால், உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; (நபியுடைய மனைவியர்களாகிய) அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டு)க் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள்; அதுவே, உங்களுடைய இதயங்களுக்கும், அவர்களுடைய இதயங்களுக்கும் தூய்மையானதாகும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் (பாவத்தால்) மகத்தானதாக இருக்கிறது.
33:53. நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்கள் நபி விருந்துக்காக அழைத்திருந்த போதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள்.அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப்பட்டால்தான் உள்ளே செல்லவும். மேலும், நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளியேறி விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் ஒரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமான தல்ல. மேலும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்.
33:53. நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் அனுமதியின்றி நுழையாதீர்கள்; உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்லுங்கள்; சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஈடுபட்டு விடாதீர்கள்; உங்களுடைய இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் மனைவியரிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை கொடுப்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் திருமணம் முடிப்பதும் ஒருபோதும் ஆகுமானதன்று. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் திண்ணமாக, பெரும் பாவமாகும்.
33:53. விசுவாசங்கொண்டோரே! உணவின்பால் (அதை உண்ண) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலே தவிர, அது தயாராவதை எதிர்பார்த்திராதவர்களாக (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள். எனினும் நீங்கள் அழைக்கப்பட்டால், அப்பொழுது பிரவேசியுங்கள், பின்னர் நீங்கள் உணவைப் புசித்துவிட்டால், (அங்கிருந்து கொண்டே) பேசுவதில் விருப்பம் கொண்டவர்களாகவும் ஆகிவிடாது கலைந்து சென்று விடுங்கள், நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாக இருந்தது, ஆகவே, (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுகிறார், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படவுமாட்டான், மேலும், (நபியுடைய மனைவியராக) அவர்களிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(க நேரிட்)டால், நீங்கள் திரைக்கு அப்பால் இருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள், அ(வ்வாறு செய்வ)து உங்கள் உள்ளங்களுக்கும், அவர்கள் உள்ளங்களுக்கும் மிகப் பரிசுத்தமானதாகும், மேலும், அல்லாஹ்வுடைய தூதருக்கு நீங்கள் தொல்லை கொடுப்பது உங்களுக்குத் தகுமானதன்று, அவருடைய மனைவியரை அவருக்குப் பின்னர் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் ஒரு காலத்திலும் கூடாது, நிச்சயமாக அது அல்லாஹ்விடத்தில் (பாவத்தால்) மிக்க மகத்தானதாக இருக்கிறது.
33:54
33:54 اِنْ تُبْدُوْا شَيْئًا اَوْ تُخْفُوْهُ فَاِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏
اِنْ تُبْدُوْا நீங்கள்வெளிப்படுத்தினால் شَيْئًا ஒரு விஷயத்தை اَوْ அல்லது تُخْفُوْهُ அதை நீங்கள் மறைத்தால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் بِكُلِّ شَىْءٍ எல்லா விஷயங்களையும் عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
33:54. நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கிறான்.
33:54. நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்ட போதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே நன்கறிபவனாக இருக்கிறான்.
33:54. நீங்கள் எதையேனும் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்தாலும், திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
33:54. ஒரு விஷயத்தை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கு அறிகிறவனாக இருக்கிறான்.
33:55
33:55 لَا جُنَاحَ عَلَيْهِنَّ فِىْۤ اٰبَآٮِٕهِنَّ وَلَاۤ اَبْنَآٮِٕهِنَّ وَلَاۤ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اَخَوٰتِهِنَّ وَلَا نِسَآٮِٕهِنَّ وَلَا مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ ۚ وَاتَّقِيْنَ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدًا‏
لَا جُنَاحَ குற்றம் இல்லை عَلَيْهِنَّ அவர்கள் மீது فِىْۤ اٰبَآٮِٕهِنَّ தங்கள் தந்தைமார்கள் விஷயத்தில் وَلَاۤ اَبْنَآٮِٕهِنَّ இன்னும் தங்கள் ஆண் பிள்ளைகள் وَلَاۤ اِخْوَانِهِنَّ இன்னும் தங்கள் சகோதரர்கள் وَلَاۤ اَبْنَآءِ இன்னும் ஆண் பிள்ளைகள் اِخْوَانِهِنَّ தங்கள் சகோதரர்களின் وَلَاۤ اَبْنَآءِ இன்னும் ஆண் பிள்ளைகள் اَخَوٰتِهِنَّ தங்கள் சகோதரிகளின் وَلَا نِسَآٮِٕهِنَّ இன்னும் தங்கள் பெண்கள் وَلَا مَا مَلَـكَتْ இன்னும் சொந்தமாக்கியவர்கள் اَيْمَانُهُنَّ ۚ தங்கள் வலக்கரங்கள் وَاتَّقِيْنَ பயந்து கொள்ளுங்கள்! اللّٰهَ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கின்றான் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் شَهِيْدًا‏ நன்கு பார்த்தவனாக
33:55. (நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள் தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள்மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.
33:55. நபியுடைய மனைவிகள் தங்கள் தந்தைகள் முன்பாகவும், தங்கள் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்களின் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரிகளின் மகன்கள் முன்பாகவும், தங்கள் (போன்ற நம்பிக்கையாளர்களான) பெண்கள் முன்பாகவும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் முன்பாகவும் (வருவதில்) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இவர்களைத் தவிர மற்றவர்கள் முன்பாக வருவதைப் பற்றி நபியுடைய மனைவிகளே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் பார்த்தவனாகவே இருக்கிறான்.
33:55. நபியின் மனைவியர் மீது இவ்விஷயத்தில் எந்தக் குற்றமும் இல்லை; அவர்களின் தந்தைகள், அவர்களின் மகன்கள், அவர்களின் சகோதரர்கள், அவர்களின் சகோதரர்களின் மகன்கள், அவர்களுடைய சகோதரிகளின் மகன்கள், அவர்களுடன் நட்பு கொண்டுள்ள பெண்கள் மற்றும் அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் ஆகியோர் அவர்களுடைய இல்லங்களுக்கு வரலாம். (பெண்களே!) அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் நேரடிப் பார்வை வைத்திருக்கின்றான்.
33:55. (நபியுடைய மனைவியர்) தங்களுடைய தந்தைகள் (முன்பாகவும்), தங்கள் ஆண்மக்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரிகளின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் பெண்கள் (முன்பாகவும்), தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களி(ன் முன்பாக வருவதி)லும் அவர்களின் மீது குற்றமில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
33:56
33:56 اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ்வும் وَمَلٰٓٮِٕكَتَهٗ அவனது மலக்குகளும் يُصَلُّوْنَ வாழ்த்துகின்றனர் عَلَى النَّبِىِّ ؕ நபியை يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே صَلُّوْا நீங்களும் வாழ்த்துங்கள்! عَلَيْهِ அவரை وَسَلِّمُوْا இன்னும் அவருக்கு ஸலாம் கூறுங்கள்! تَسْلِيْمًا‏ முகமன்
33:56. நிச்சயமாக இந்த நபியின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான்; வானவர்களும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர்; நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
33:56. நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
33:56. அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத் எனும் நல்வாழ்த்துக்களை அனுப்புகின்றார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்.
33:56. நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து (அருள், பிரார்த்தனை)ச் செய்கிறார்கள், (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள் அவர் மீது ஸலாவத்துச் சொல்லுங்கள், ஸலாமும் கூறுங்கள்.
33:57
33:57 اِنَّ الَّذِيْنَ يُؤْذُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِيْنًا‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يُؤْذُوْنَ தொந்தரவு தருபவர்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு(ம்) وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் لَعَنَهُمُ அவர்களை சபிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் فِى الدُّنْيَا இம்மையிலும் وَالْاٰخِرَةِ மறுமையிலும் وَاَعَدَّ இன்னும் ஏற்படுத்தியிருக்கின்றான் لَهُمْ அவர்களுக்கு عَذَابًا வேதனையை مُّهِيْنًا‏ இழிவுபடுத்துகின்ற
33:57. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.
33:57. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
33:57. எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் தொல்லை கொடுக்கின்றார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கின்றான். மேலும், இழிவுபடுத்தும் வேதனையையும் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
33:57. நிச்சயமாக, அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களே அத்தகையோர்_அவர்களை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபித்து விட்டான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்கு தயார் செய்து வைத்திருக்கிறான்.
33:58
33:58 وَالَّذِيْنَ يُؤْذُوْنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏
وَالَّذِيْنَ يُؤْذُوْنَ தொந்தரவு தருபவர்கள் الْمُؤْمِنِيْنَ முஃமினான ஆண்களுக்கு(ம்) وَالْمُؤْمِنٰتِ முஃமினான பெண்களுக்கும் بِغَيْرِ مَا اكْتَسَبُوْا அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு فَقَدِ திட்டமாக احْتَمَلُوْا சுமந்துகொண்டார்கள் بُهْتَانًا அபாண்டமான பழியை(யும்) وَّاِثْمًا பாவத்தையும் مُّبِيْنًا‏ தெளிவான
33:58. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், நம்பிக்கை கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றைக் கொண்டு எவர்கள் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
33:58. எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்.
33:58. மேலும், நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ, அவர்கள் ஒரு மாபெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்துகொள்கிறார்கள்.
33:58. மேலும், விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாத (குற்றத்)தை(ச் செய்ததாக)க் கூறி துன்புறுத்துகிறார்களே அத்தகையவர்கள், நிச்சயமாக(ப் பெரும்) அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டனர்.
33:59
33:59 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! قُلْ கூறுங்கள்! لِّاَزْوَاجِكَ உமது மனைவிமார்களுக்கு(ம்) وَبَنٰتِكَ உமது பெண் பிள்ளைகளுக்கும் وَنِسَآءِ பெண்களுக்கும் الْمُؤْمِنِيْنَ முஃமின்களின் يُدْنِيْنَ அவர்கள் போர்த்திக்கொள்ளும்படி عَلَيْهِنَّ தங்கள் மீது مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ தங்கள் பர்தாக்களை ذٰ لِكَ இது اَدْنٰٓى மிக சுலபமானதாகும் اَنْ يُّعْرَفْنَ அவர்கள் அறியப்படுவதற்கு فَلَا يُؤْذَيْنَ ؕ ஆகவே, அவர்கள் தொந்தரவுக்கு ஆளாக மாட்டார்கள் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தங்கள் மீது தொங்கவிட்டுக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்!
33:59. நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இதுசுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
33:59. நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமலிருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
33:59. நபியே! உம்முடைய மனைவியருக்கும், உங்கள் புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும், அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள், இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.
33:60
33:60 لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ الْمُنٰفِقُوْنَ وَ الَّذِيْنَ فِى قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْمُرْجِفُوْنَ فِى الْمَدِيْنَةِ لَـنُغْرِيَـنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُوْنَكَ فِيْهَاۤ اِلَّا قَلِيْلًا ۛۚ  ۖ‏
لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ விலகவில்லை என்றால் الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகர்களு(ம்) وَ الَّذِيْنَ எவர்கள் فِى قُلُوْبِهِمْ مَّرَضٌ தங்கள் உள்ளங்களில் நோய் وَّالْمُرْجِفُوْنَ கெட்ட விஷயங்களில் ஈடுபடுபவர்களும் فِى الْمَدِيْنَةِ மதீனாவில் لَـنُغْرِيَـنَّكَ உம்மை தூண்டிவிடுவோம் بِهِمْ அவர்கள் மீது ثُمَّ பிறகு لَا يُجَاوِرُوْنَكَ உம்முடன் வசிக்க மாட்டார்கள் فِيْهَاۤ அதில் اِلَّا தவிர قَلِيْلًا ۛۚ  ۖ‏ குறைவாகவே
33:60. நயவஞ்சகர்களும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச் செயல்களிலிருந்து) விலகிக்கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக நாம் உம்மை நிச்சயமாகச் சாட்டுவோம்; பிறகு, அவர்கள் வெகு சொற்ப (கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக வசித்திருக்கமாட்டார்கள்.
33:60. (நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும் (இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொள்ளாவிடில் நிச்சயமாக நாம் உம்மையே அவர்கள் மீது ஏவிவிட்டு விடுவோம். பின்னர், அதில் உமக்கு அருகில் வெகு சொற்ப நாள்களே தவிர அவர்கள் வசித்திருக்க முடியாது.
33:60. நயவஞ்சகர்களும், எவர்களின் உள்ளங்களில் பிணி படிந்துள்ளதோ அவர்களும் மற்றும் மதீனாவில் கொந்தளிப்பை உருவாக்கும் வதந்திகளைப் பரப்பக்கூடியவர்களும் (தங்களின் செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உம்மை வீறுகொண்டு எழச்செய்வோம். பிறகு, அவர்களால் இந்நகரத்தில் சொற்பகாலமே உம்முடன் வசிக்க முடியும்.
33:60. (நபியே! வேஷதாரிகளான) முனாஃபிக்குகளும், எவர்களுடைய இதயத்தில் (பாவ)நோய் உள்ளதோ அத்தகையோரும், மதீனாவில் பொய்யான விஷயங்களை மக்களுக்கு மத்தியில் பரப்பக்கூடியவர்களும், (தங்களின் இச்செயலிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில், நிச்சயமாக நாம் உம்மை அவர்களின் மீது சாட்டிவிடுவோம், பின்னர், வெகு சொற்பமே தவிர (மதீனாவாகிய) அதில் உம் அண்டை வீட்டினராக அவர்கள் வசித்திருக்கமாட்டார்கள்.
33:61
33:61 مَّلْـعُوْنِيْنَ ‌ۛۚ اَيْنَمَا ثُقِفُوْۤا اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِيْلًا‏
مَّلْـعُوْنِيْنَ ۛۚ அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் اَيْنَمَا ثُقِفُوْۤا அவர்கள் எங்கு காணப்பட்டாலும் اُخِذُوْا அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும் وَقُتِّلُوْا تَقْتِيْلًا‏ இன்னும் முற்றிலும் கொல்லப்படவேண்டும்
33:61. அத்தகையதீயவர்கள் சபிக்கப்பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும், கொன்றொழிக்கப்படுவார்கள்.
33:61. அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள்.
33:61. (எல்லாத் திசைகளிலிருந்தும்) அவர்கள் சரமாரியாய் சபிக்கப்படுவார்கள்; காணுமிடமெல்லாம் அவர்கள் பிடிக்கப்படுவார்கள். மேலும், மோசமான முறையில் கொல்லப்படுவார்கள்.
33:61. சபிக்கப்பட்டவர்களாக (அவர்கள் இருப்பர், ஆகவே) அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் பிடிக்கப்படுவார்கள், இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.
33:62
33:62 سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُۚ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلًا‏
سُنَّةَ நடைமுறைதான் اللّٰهِ அல்லாஹ்வின் فِى الَّذِيْنَ خَلَوْا சென்றவர்களில் مِنْ قَبْلُۚ இதற்கு முன்னர் وَلَنْ تَجِدَ அறவே நீர் காணமாட்டீர் لِسُنَّةِ நடைமுறையில் اللّٰهِ அல்லாஹ்வின் تَبْدِيْلًا‏ எவ்வித மாற்றத்தையும்
33:62. அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்குமுன் சென்றவர்களிலும் இதுவேதான்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
33:62. அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடைய வழியில் எவ்வித மாறுதலையும் நீர் காணமாட்டீர்.
33:62. இது அல்லாஹ்வின் நியதியாகும். இத்தகையவர்களின் விவகாரத்தில் இந்நியதி முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது! மேலும், அல்லாஹ்வுடைய நியதியில் நீர் எவ்வித மாற்றத்தையும் காணமாட்டீர்.
33:62. இதற்கு முன் சென்றுவிட்டார்களே அத்தகையோரில் அல்லாஹ்வின் வழிமுறை (இது) தான், ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ்வுடைய வழிமுறையில் யாதொரு மாறுதலையும் காணவே மாட்டீர்.
33:63
33:63 يَسْــٴَــلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِؕ وَمَا يُدْرِيْكَ لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ قَرِيْبًا‏
يَسْــٴَــلُكَ உம்மிடம் கேட்கின்றனர் النَّاسُ மக்கள் عَنِ السَّاعَةِؕ மறுமையைப் பற்றி قُلْ கூறுவீராக! اِنَّمَا عِلْمُهَا அதன் அறிவெல்லாம் عِنْدَ اللّٰهِؕ அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது وَمَا يُدْرِيْكَ உமக்குத் தெரியுமா? لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ மறுமை இருக்கக்கூடும் قَرِيْبًا‏ சமீபமாக
33:63. (நியாயத் தீர்ப்புக்குரிய) மறுமைநாளைப் பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; "அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது" என்று நீர் கூறுவீராக! மறுமைநாள் சமீபத்திலும் வந்துவிடலாம் என உமக்கு எது அறிவித்துக் கொடுக்கும்?
33:63. (நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘ (அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கிறது. நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்.''
33:63. மறுமைநாள் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” உமக்குத் தெரியுமா என்ன? அந்நாள் நெருங்கி வந்திருக்கலாம்.
33:63. (நபியே!) மறுமை நாளைப்பற்றி (“அது எப்பொழுது” என்று) உம்மிடம் மனிதர்கள் கேட்கின்றனர், (அதற்கு) நீர் கூறும், (“அது எப்பொழுது என்ற) அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கின்றது, மேலும், மறுமை நாள் சமீபத்தில் வந்து விடக்கூடும் என உமக்கு எது அறிவித்துக் கொடுக்கும்?
33:64
33:64 اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِيْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِيْرًا ۙ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَعَنَ சபித்தான் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை وَاَعَدَّ ஏற்படுத்தினான் لَهُمْ அவர்களுக்கு سَعِيْرًا ۙ‏ கொழுந்து விட்டெரியும் நரகத்தை
33:64. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறான்.
33:64. மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
33:64. எவ்வாறாயினும் நிராகரிப்பாளர்களை அல்லாஹ் திண்ணமாகச் சபித்துவிட்டான். மேலும், அவர்களுக்காக, கொழுந்து விட்டெரியும் நெருப்பைத் தயார் செய்துவிட்டிருக்கின்றான்;
33:64. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரைச் சபித்துவிட்டான், கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்குத் தயார் செய்தும் வைத்திருகின்றான்.
33:65
33:65 خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ۚ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ۚ‏
خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள் فِيْهَاۤ அதில் اَبَدًا ۚ எப்போதும் لَا يَجِدُوْنَ காணமாட்டார்கள் وَلِيًّا பொறுப்பாளரையோ وَّلَا نَصِيْرًا ۚ‏ உதவியாளரையோ
33:65. அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்குபவர்கள், தங்களைக் காப்பவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
33:65. அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களை) பாதுகாப்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.
33:65. அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள். எந்த ஓர் ஆதரவாளரையும் உதவியாளரையும் அவர்கள் பெறமாட்டார்கள்.
33:65. அவர்கள் என்றென்றும் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள், (அவர்களைக்) காப்பவரையும், (அவர்களுக்கு) உதவி செய்பவரையும் அவர்கள் (அங்கு) காணமாட்டார்கள்.
33:66
33:66 يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا‏
يَوْمَ நாளில் تُقَلَّبُ புரட்டப்படுகின்ற وُجُوْهُهُمْ அவர்களது முகங்கள் فِى النَّارِ நெருப்பில் يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَاَطَعْنَا இன்னும் நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! الرَّسُوْلَا‏ ரசூலுக்கு
33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.
33:66. நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் ‘‘எங்கள் கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!'' என்று கதறுவார்கள்.
33:66. எந்நாளில் அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டி எடுக்கப்படுமோ அந்நாளில் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தோமில்லையே!”
33:66. அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில், “நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள்.
33:67
33:67 وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا‏
وَقَالُوْا அவர்கள் கூறுவார்கள் رَبَّنَاۤ எங்கள் இறைவா! اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اَطَعْنَا கீழ்ப்படிந்தோம் سَادَتَنَا எங்கள் தலைவர்களுக்கு(ம்) وَكُبَرَآءَنَا எங்கள் பெரியோருக்கும் فَاَضَلُّوْنَا السَّبِيْلَا‏ அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்
33:67. "எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
33:67. மேலும் ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்.
33:67. மேலும், கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். அவர்கள் எங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்துவிட்டார்கள்.
33:67. மேலும், “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆகவே, அவர்கள் எங்களை வழி தவறச்செய்து விட்டார்கள்.”
33:68
33:68 رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيْرًا‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா! اٰتِهِمْ அவர்களுக்கு கொடு! ضِعْفَيْنِ இரு மடங்கு مِنَ الْعَذَابِ வேதனையை وَالْعَنْهُمْ இன்னும் அவர்களை சபிப்பாயாக! لَعْنًا சாபத்தால் كَبِيْرًا‏ பெரிய
33:68. "எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக!" (என்பர்).
33:68. (ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்களை பெரும் சாபத்தால் சபித்துவிடு'' என்று கூறுவார்கள்.
33:68. எங்கள் இறைவனே! இவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடுப்பாயாக! மேலும், அவர்களைக் கடுமையாக சபிப்பாயாக!”
33:68. ஆகவே “எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கை கொடுப்பாயாக! இன்னும், பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக!” (என்றும் கூறுவார்கள்).
33:69
33:69 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ اٰذَوْا مُوْسٰى فَبَـرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ؕ وَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِيْهًا ؕ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَكُوْنُوْا நீங்கள் ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ اٰذَوْا தொந்தரவு தந்தவர்களைப் போன்று مُوْسٰى மூஸாவிற்கு فَبَـرَّاَهُ அவரை நிரபராதியாக்கினான் اللّٰهُ அல்லாஹ் مِمَّا قَالُوْا ؕ அவர்கள் கூறியதிலிருந்து وَكَانَ அவர் இருந்தார் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் وَجِيْهًا ؕ‏ மிகசிறப்பிற்குரியவராக
33:69. நம்பிக்கை கொண்டவர்களே! மூஸாவைப் (பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; அப்போது, அவர்கள் கூறியதைவிட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமாக்கிவிட்டான்; மேலும், அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவராகவே இருந்தார்.
33:69. நம்பிக்கையாளர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை)த்துன்புறுத்திய மக்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூற்றிலிருந்து மூஸாவை அல்லாஹ் பரிசுத்தமாக்கி விட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவராகவே இருந்தார்.
33:69. நம்பிக்கை கொண்டவர்களே! மூஸாவுக்கு தொல்லை அளித்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் இட்டுக் கட்டிக் கூறிய விஷயங்களிலிருந்து அல்லாஹ் அவரை விடுவித்து விட்டான். மேலும், அல்லாஹ்விடத்தில் அவர் கண்ணியத்துக்குரியவராய் இருந்தார்.
33:69. விசுவாசங்கொண்டோரே! மூஸாவை நோவினை செய்தார்களே அவர்களைப் போல் நீங்கள் ஆகிவிடவேண்டாம், பின்னர், அவர்கள் கூறியதிலிருந்து அல்லாஹ் அவரை நீக்கி விட்டான், மேலும், அவர் அல்லாஹ்விடத்தில் பெரும் தகுதியுடையவராக இருந்தார்.
33:70
33:70 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَقُوْلُوْا இன்னும் பேசுங்கள் قَوْلًا பேச்சை سَدِيْدًا ۙ‏ நேர்மையான
33:70. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
33:70. (ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்.
33:70. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், நேர்மையான சொல்லை மொழியுங்கள்.
33:70. (ஆகவே) விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், நேர்மையான கூற்றையே கூறுங்கள்.
33:71
33:71 يُّصْلِحْ لَـكُمْ اَعْمَالَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا‏
يُّصْلِحْ அவன்சீர்படுத்துவான் لَـكُمْ உங்களுக்கு اَعْمَالَـكُمْ உங்கள் அமல்களை وَيَغْفِرْ இன்னும் மன்னிப்பான் لَـكُمْ உங்களுக்கு ذُنُوْبَكُمْؕ உங்கள் பாவங்களை وَمَنْ யார் يُّطِعِ கீழ்ப்படிகின்றாரோ اللّٰهَ அல்லாஹ்வுக்கு(ம்) وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் فَقَدْ திட்டமாக فَازَ வெற்றிபெறுவார் فَوْزًا வெற்றி عَظِيْمًا‏ மகத்தான
33:71. (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கிவைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ, அவர் மகத்தான வெற்றிகொண்டு விட்டார்.
33:71. அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார்.
33:71. அல்லாஹ் உங்களுடைய செயல்களைச் சீர்திருத்திவிடுவான்; மேலும், உங்களுடைய குற்றங்களை மன்னிக்கவும் செய்வான். எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றானோ, அவன் மகத்தான வெற்றி அடைந்துவிட்டான்.
33:71. (அவ்வாறு நீங்கள் செய்தால்) அவன் உங்களுடைய செயல்களை உங்களுக்குச் சீர் படுத்தி வைப்பான், உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான், மேலும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப் படிகின்றாரோ அப்போது அவர், திட்டமாக மகத்தான வெற்றியாக வெற்றியடைந்து விட்டார்.
33:72
33:72 اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَيْنَ اَنْ يَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَ حَمَلَهَا الْاِنْسَانُؕ اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் عَرَضْنَا சமர்ப்பித்தோம் الْاَمَانَةَ அமானிதத்தை عَلَى السَّمٰوٰتِ வானங்கள் மீது وَالْاَرْضِ இன்னும் பூமி وَالْجِبَالِ இன்னும் மலைகள் فَاَبَيْنَ அவைமறுத்துவிட்டன اَنْ يَّحْمِلْنَهَا அதை சுமப்பதற்கு وَاَشْفَقْنَ இன்னும் அவை பயந்தன مِنْهَا அதனால் وَ حَمَلَهَا அதை சுமந்து கொண்டான் الْاِنْسَانُؕ மனிதன் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் ظَلُوْمًا அநியாயக்காரனாக جَهُوْلًا ۙ‏ அறியாதவனாக
33:72. நிச்சயமாக வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது அமானிதத்தை (சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம்; ஆனால், அதைச் சுமந்துகொள்ள அவை மறுத்தன; அதைப் பற்றி அவை அஞ்சின; ஆனால், மனிதன் அதைச் சுமந்தான்; நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்.
33:72. நிச்சயமாக ‘‘(நம்) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?'' என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் நாம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றிப் பயந்து, அதைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாதவனாக தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவனாக இருக்கிறான்.
33:72. நாம் இந்த அமானிதத்தை வானங்கள், பூமி மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்தபோது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும், அதனைக் கண்டு அஞ்சின. ஆனால், மனிதன் அதனை ஏற்றுக்கொண்டான். திண்ணமாக, அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின்றான்.
33:72. நிச்சயமாக நாம் அமானித்தை வானங்கள், பூமி மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச் சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக் காட்டினோம், அப்போது அதைச் சுமந்து கொள்வதிலிருந்து அவை விலகிக் கொண்டன, இன்னும், அ(தைச் சுமப்ப)திலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச் சுமந்து கொண்டான், நிச்சயமாக அவன் (அமானிதத்தை நிறைவேற்றும் விஷயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.
33:73
33:73 لِّيُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكٰتِ وَيَتُوْبَ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
لِّيُعَذِّبَ வேதனை செய்வதற்காக اللّٰهُ அல்லாஹ் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகமுடைய ஆண்களை(யும்) وَالْمُنٰفِقٰتِ நயவஞ்சகமுடைய பெண்களையும் وَالْمُشْرِكِيْنَ இணைவைக்கின்ற ஆண்களையும் وَالْمُشْرِكٰتِ இணைவைக்கின்ற பெண்களையும் وَيَتُوْبَ மன்னிப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் عَلَى الْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களை وَالْمُؤْمِنٰتِؕ நம்பிக்கை கொண்ட பெண்களை وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
33:73. எனவே, (இவ்வமானிதத்திற்கு மாறுசெய்யும்) நயவஞ்சகர்களான ஆண்களையும், நயவஞ்சகர்களான பெண்களையும்; இணைவைப்பவர்களான ஆண்களையும், இணைவைப்பவர்களான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால், இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களான ஆண்களையும், நம்பிக்கையாளர்களான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான்; அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையவன்.
33:73. (அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பிவிடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக கருணை உடையவனாக இருக்கிறான்.
33:73. ஏனெனில், (இந்த அமானிதம் எனும் பொறுப்பை அவன் ஏற்றுக்கொண்டான். அதன் தவிர்க்க முடியாத விளைவு இதுதான்:) நயவஞ்சகம் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும், இணைவைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் தண்டனை அளிக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
33:73. (அத்தகைய அமானிதத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு மாறாக நடக்கும்) முனாஃபிக்கான (வேஷதாரிகளான) ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணை வைத்துக் கொண்டிருக்கும் ஆண்களையும், இணை வைத்துக் கொண்டிருக்கும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காகவும், (அந்த அமானிதத்தை ஏற்றபின் மதித்து நடக்கும்) விசுவாசிகளான ஆண்களையும், விசுவாசிகளான பெண்களையும் அவர்களுடைய தவ்பாவை ஏற்று மன்னிப்பதற்காகவும் (இவ்வாறு எடுத்துக்காட்டினான்). மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.