35. ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)
மக்கீ, வசனங்கள்: 45

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
35:1
35:1 اَ لْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓٮِٕكَةِ رُسُلًا اُولِىْۤ اَجْنِحَةٍ مَّثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ؕ يَزِيْدُ فِى الْخَـلْقِ مَا يَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
اَ لْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே فَاطِرِ படைத்தவன் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضِ பூமியையும் جَاعِلِ ஆக்கக்கூடியவன் الْمَلٰٓٮِٕكَةِ வானவர்களை رُسُلًا தூதர்களாகவும் اُولِىْۤ اَجْنِحَةٍ இறக்கைகளை உடையவர்களாகவும் مَّثْنٰى இரண்டு இரண்டு وَثُلٰثَ இன்னும் மூன்று மூன்று وَرُبٰعَ ؕ இன்னும் நான்கு நான்கு يَزِيْدُ அதிகப்படுத்துவான் فِى الْخَـلْقِ படைப்புகளில் مَا يَشَآءُ ؕ தான் நாடுவதை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
35:1. அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.
35:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான். வானவர்களைத் தன் தூதைக் கொண்டு போகிறவர்களாகவும் ஆக்கினான். அவர்கள் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றனர். அவன் விரும்பியதைத் தன் படைப்பில் மேலும் அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
35:1. வானங்களையும் பூமியையும் படைத்தவனும், வானவர்களைத் தூது கொண்டு செல்பவர்களாக நியமித்தவனும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! (அவ்வானவர்கள் எத்தகையோர் எனில்) அவர்களுக்கு இரண்டிரண்டு, மூன்று மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உள்ளன. அவன் தன்னுடைய படைப்புகளின் வடிவமைப்பில் தான் நாடுவதை அதிகப்படுத்துகின்றான். திண்ணமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான்.
35:1. அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும், அவன் வானங்களையும், பூமியையும் ஆரம்பமாகப் படைத்தவன். இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்நான்கும் இறக்கைகளுடைய மலக்குகளைத் தூதர்களாக ஆக்கியவன், அவன் நாடியதை(த்தன்) படைப்பில் (பின்னும்) அதிகப்படுத்துவான், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன்.
35:2
35:2 مَا يَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚ وَمَا يُمْسِكْ ۙ فَلَا مُرْسِلَ لَهٗ مِنْۢ بَعْدِه ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
مَا எதை(யும்) يَفْتَحِ திறந்தால் اللّٰهُ அல்லாஹ் لِلنَّاسِ மக்களுக்கு مِنْ இருந்து رَّحْمَةٍ அருள்(கள்) فَلَا مُمْسِكَ لَهَا ۚ தடுப்பவர் எவரும் இல்லை/அதை وَمَا يُمْسِكْ ۙ எதை/அவன் தடுத்து நிறுத்திவிட்டால் فَلَا مُرْسِلَ விடுபவர் எவரும் இல்லை لَهٗ அதை مِنْۢ بَعْدِه ؕ அவனுக்குப் பின் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
35:2. அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதை அனுப்பக்கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
35:2. அல்லாஹ் எந்த ஓர் அருள்வாயிலை மக்களுக்காகத் திறந்துவிட்டாலும், அதனைத் தடுக்கக்கூடியவர் யாருமிலர். மேலும், அவன் அதனை அடைத்துவிட்டால், அதற்குப் பிறகு அதனைத் திறக்கக்கூடியவர் வேறு யாருமிலர். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
35:2. அல்லாஹ்(தன்) அருளிலிருந்து மனிதர்களுக்குத் திறந்து விட்டால், அதனைத் தடுத்துவிடக்கூடியவர் (ஒருவரும்) இல்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதன் பின் அதனை அனுப்பக் கூடிய (ஒரு)வரும் இல்லை, இன்னும், அவன் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
35:3
35:3 يٰۤاَيُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْؕ هَلْ مِنْ خَالِـقٍ غَيْرُ اللّٰهِ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۖ فَاَنّٰى تُؤْفَكُوْنَ‏
يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே! اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَتَ அருட்கொடையை اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْكُمْؕ உங்கள் மீதுள்ள هَلْ مِنْ خَالِـقٍ ?/படைப்பாளன் யாரும் غَيْرُ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி يَرْزُقُكُمْ உணவளிக்கின்றான்/உங்களுக்கு مِّنَ السَّمَآءِ வானங்களில்இருந்தும் وَالْاَرْضِؕ பூமியில் இருந்தும் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَۖ அவனை فَاَنّٰى ஆகவே எப்படி تُؤْفَكُوْنَ‏ திருப்பப்படுகிறீர்கள்
35:3. மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
35:3. மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கிறானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகிறீர்கள்?
35:3. மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்துள்ள அருட்பேறுகளை நினைவில் வையுங்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்ற படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்கின்றாரா? வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. பிறகு எங்கிருந்து நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்?
35:3. மனிதர்களே! “உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நினைத்துப்பாருங்கள், வானத்திலிருந்தும்; பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வையன்றி வேறொரு படைக்கிறவன் இருக்கிறானா? அவனைத் தவிர வேறொரு(வணக்கத்திற்குரிய) நாயன் இல்லை, ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?
35:4
35:4 وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏
وَاِنْ يُّكَذِّبُوْكَ அவர்கள் உம்மை பொய்ப்பித்தால் فَقَدْ திட்டமாக كُذِّبَتْ பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர் رُسُلٌ பல தூதர்கள் مِّنْ قَبْلِكَؕ உமக்கு முன்னரும் وَاِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கமே تُرْجَعُ திருப்பப்படும் الْاُمُوْرُ‏ எல்லாக் காரியங்களும்
35:4. இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.
35:4. (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்படாதீர்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும்.
35:4. (நபியே!) இப்பொழுது இவர்கள் உம்மைப் பொய்யர் என்று தூற்றுகின்றார்கள் (என்றால் இது புதிய விஷயமல்ல). உமக்கு முன்பும் தூதர்கள் பலர் பொய்யர்கள் என்று தூற்றப்பட்டிருக்கின்றார்கள். மேலும், அனைத்து விவகாரங்களும் இறுதியில் அல்லாஹ்விடம் தான் திரும்பக் கொண்டு வரப்பட இருக்கின்றன.
35:4. மேலும், (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்படுத்தி விடுவார்களானால் (பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! ஏனெனில்,) உமக்கு முன்னர் (வந்த) தூதர்களும் பொய்ப்படுத்தப் பட்டனர், அன்றியும் அல்லாஹ்விடமே சகல காரியங்களும் மீட்டுக் கொண்டு வரப்படும்.
35:5
35:5 يٰۤـاَيُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَاوَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மக்களே! اِنَّ நிச்சயமாக وَعْدَ வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ உண்மையானதே! فَلَا تَغُرَّنَّكُمُ ஆகவே, உங்களை மயக்கிவிட வேண்டாம் الْحَيٰوةُ الدُّنْيَا உலக வாழ்க்கை وَلَا يَغُرَّنَّكُمْ இன்னும் உங்களை மயக்கிவிட வேண்டாம் بِاللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்தில் الْغَرُوْرُ‏ ஏமாற்றக் கூடியவன்
35:5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
35:5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.
35:5. மனிதர்களே! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், அந்தப் பெரும் ஏமாற்றுக்காரனும் உங்களை அல்லாஹ்வின் விஷயத்தில் ஏமாற்றிவிட வேண்டாம்.
35:5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும், ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களைத்திட்டமாக ஏமாற்றி விட வேண்டாம், (ஷைத்தானாகிய) ஏமாற்றுகிறவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களைத் திட்டமாக (மோசடியில் ஆக்கி) ஏமாற்றிவிட வேண்டாம்.
35:6
35:6 اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا ؕ اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِؕ‏
اِنَّ நிச்சயமாக الشَّيْطٰنَ ஷைத்தான் لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரி فَاتَّخِذُوْهُ ஆகவே, அவனை எடுத்துக்கொள்ளுங்கள்! عَدُوًّا ؕ எதிரியாகவே اِنَّمَا يَدْعُوْا அவன் அழைப்பதெல்லாம் حِزْبَهٗ தனது கூட்டத்தார்களை لِيَكُوْنُوْا அவர்கள் ஆகுவதற்காகத்தான் مِنْ اَصْحٰبِ السَّعِيْرِؕ‏ கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக
35:6. நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.
35:6. நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கிறான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தன்னைப் பின் பற்றிய) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே.
35:6. உண்மையாக ஷைத்தான் உங்களின் பகைவனாவான். ஆகையால், நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள். அவன் தன்னைப் பின் பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது, அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துவிட வேண்டுமென்பதற்காகத்தான்!
35:6. நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு விரோதியாக இருக்கின்றான், ஆகவே, அவனை நீங்களும் விரோதியாகவே எடுத்துக் கொள்ளுங்கள், அவன் (தனக்கு வழிபட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரகவாசிகளில் ஆகிவிடுவதற்காகவேதான்.
35:7
35:7 اَ لَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ؕ وَّالَّذِيْنَ اٰمَنُوا وَعَمِلُوْا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ‏
اَ لَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்களோ لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ தண்டனை شَدِيْدٌ ؕ கடுமையான وَّالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوْا இன்னும் செய்தார்களோ الصّٰلِحٰتِ நன்மைகளை لَهُمْ அவர்களுக்கு உண்டு مَّغْفِرَةٌ மன்னிப்பும் وَّاَجْرٌ كَبِيْرٌ‏ பெரிய கூலியும்
35:7. எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.  
35:7. எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரிய கூலியும் உண்டு.
35:7. எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கடுமையான வேதனை இருக்கின்றது. மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரும் கூலியும் இருக்கின்றன.
35:7. (ஷைத்தானைப் பின்பற்றி உண்மையை) நிராகரிக்கின்றார்களே அத்ததகையோர்_அவர்களுக்கு கடினமான வேதனையுண்டு. மேலும், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்கு மன்னிப்பும், (மிகப்) பெரிய (நற்)கூலியும் உண்டு.
35:8
35:8 اَفَمَنْ زُيِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ فَرَاٰهُ حَسَنًا ؕ فَاِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ ‌ۖ  فَلَا تَذْهَبْ نَـفْسُكَ عَلَيْهِمْ حَسَرٰتٍ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏
اَفَمَنْ ?/எவர் ஒருவர் زُيِّنَ அலங்கரிக்கப்பட்டது لَهٗ அவருக்கு سُوْٓءُ கெட்ட(து) عَمَلِهٖ தனது செயல் فَرَاٰهُ கருதினார்/அதை حَسَنًا ؕ அழகாக فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُضِلُّ வழிகெடுக்கின்றான் مَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவரை وَيَهْدِىْ இன்னும் நேர்வழிபடுத்துகின்றான் مَنْ يَّشَآءُ ۖ  தான் நாடுகின்றவரை فَلَا تَذْهَبْ ஆகவே போய்விடவேண்டாம் نَـفْسُكَ உமது உயிர் عَلَيْهِمْ அவர்கள் மீது حَسَرٰتٍ ؕ கவலைகளால் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِمَا يَصْنَـعُوْنَ‏ அவர்கள் செய்வதை
35:8. எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
35:8. எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதை அழகாகக் காண்கிறானோ அவனா (தீயதை தீயதாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறவனைப் போன்று ஆவான்)? (ஒரு போதும் ஆக மாட்டான்.) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உமது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீர் கவலைப்படாதீர். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
35:8. எந்த மனிதனுக்கு அவனுடைய தீயசெயல் அலங்காரமாக் கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ (அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?) திண்ணமாக, அல்லாஹ் தான் நாடுவோரை நெறிபிறழச் செய்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். எனவே (நபியே!) இவர்களுக்காகத் துக்கமும் வேதனையும் அடைந்தே உமது உயிர் உருகிப்போய்விட வேண்டாம். இவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
35:8. எனவே, எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாகக் காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாகக் காண்கின்றாரோ அவரா? (அதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?) ஆகவே, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான்; தான் நாடியவர்களை நேரான வழியிலும் செலுத்துகிறான்; ஆகவே, (நபியே!) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய் விடவேண்டாம்; நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறவன்.
35:9
35:9 وَاللّٰهُ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ فَتُثِيْرُ سَحَابًا فَسُقْنٰهُ اِلٰى بَلَدٍ مَّيِّتٍ فَاَحْيَيْنَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ كَذٰلِكَ النُّشُوْرُ‏
وَاللّٰهُ الَّذِىْۤ அல்லாஹ்தான் اَرْسَلَ அனுப்புகின்றான் الرِّيٰحَ காற்றுகளை فَتُثِيْرُ அவை கிளப்புகின்றன سَحَابًا மேகத்தை فَسُقْنٰهُ அதை ஓட்டி வருகிறோம் اِلٰى بَلَدٍ ஊருக்கு مَّيِّتٍ வறண்டுபோன فَاَحْيَيْنَا நாம் உயிர்ப்பிக்கின்றோம் بِهِ அதன்மூலம் الْاَرْضَ அந்த பூமியை بَعْدَ பின்னர் مَوْتِهَا ؕ அது வறண்டதற்கு كَذٰلِكَ இப்படித்தான் النُّشُوْرُ‏ எழுப்பப்படுவது(ம்)
35:9. மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.
35:9. அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகிறது. பின்னர், அவற்றை இறந்து (பட்டுப்)போன பூமியின் பக்கம் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கிறான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே.
35:9. மேலும், காற்றுகளை அனுப்புகின்றவன் அல்லாஹ்தான்! பின்னர் அவை மேகங்களை உயரே கிளப்புகின்றன. பிறகு அதனை வறண்ட பகுதிக்கு நாம் கொண்டு செல்கின்றோம். மேலும், இறந்து கிடக்கும் பூமியை அதன் மூலம் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்துபோன மனிதர்களை) மீண்டும் உயிரோடெழுப்புவதும் இவ்வாறுதான்!
35:9. மேலும், அல்லாஹ் எத்தகையவனென்றால், காற்றுகளை அவன் அனுப்புகிறான், அவை மேகங்களைக் கிளறுகின்றன, பின்னர், நாம் அவைகளை இறந்து போன ஊருக்கு (மழையாகப் பொழிவிக்க) இழுத்துச் செல்கிறோம், அப்போது அதனைக் கொண்டு பூமியை அது (வறண்டு) இறந்துபோன பின் உயிர்ப்பிக்கின்றோம். (மரணித்தோர் மறுமையில்) உயிர் பெற்றெழுவதும் இவ்வாறுதான்.
35:10
35:10 مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًا ؕ اِلَيْهِ يَصْعَدُ الْـكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ؕ وَ الَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ  ؕ وَمَكْرُ اُولٰٓٮِٕكَ هُوَ يَبُوْرُ‏
مَنْ யார் كَانَ இருப்பாரோ يُرِيْدُ நாடுகின்றவராக الْعِزَّةَ கண்ணியத்தை فَلِلّٰهِ அல்லாஹ்விற்குத்தான் الْعِزَّةُ கண்ணியம் جَمِيْعًا ؕ அனைத்தும் اِلَيْهِ அவன் பக்கம் தான் يَصْعَدُ உயர்கின்றன الْـكَلِمُ சொற்கள் الطَّيِّبُ நல்ல وَالْعَمَلُ இன்னும் செயல் الصَّالِحُ நல்ல(து) يَرْفَعُهٗ ؕ அதை உயர்த்துகிறது وَ الَّذِيْنَ يَمْكُرُوْنَ சூழ்ச்சி செய்பவர்கள் السَّيِّاٰتِ தீமைகளுக்கு لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ தண்டனை شَدِيْدٌ  ؕ கடுமையான(து) وَمَكْرُ சூழ்ச்சி اُولٰٓٮِٕكَ அவர்களின் هُوَ அது يَبُوْرُ‏ அழிந்துபோய்விடும்
35:10. எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ, கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; இன்னும், இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
35:10. எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகிறானோ, (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் பக்கமே உயருகின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்துகிறான். (நபியே!) எவர்கள் (உமக்குத்) தீங்கிழைக்க சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும்.
35:10. எவரேனும் கண்ணியத்தை விரும்பினால் கண்ணியம் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்). அவனை நோக்கி உயர்ந்து செல்வது தூய்மையான சொல் மட்டுமே! இன்னும் நற்செயல் அதனை மேலே உயர்த்துகின்றது. மேலும், எவர்கள் தீயசூழ்ச்சிகள் செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை இருக்கிறது. மேலும், அவர்களுடைய சூழ்ச்சிகள் தானாகவே அழியக்கூடியவையாக இருக்கின்றன.
35:10. எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும், தூய வாக்கியங்கள் அவனளவில் மேலேறிச் செல்கின்றன, நல்ல செயலும் அதை (அல்லாஹ்வின் பால்) உயர்த்துகிறது, மேலும், (நபியே!) தீமைகளுக்குச் சதி செய்கின்றார்களே அத்தகையோர்_ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு, இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அது அழிந்தே போகும்.
35:11
35:11 وَاللّٰهُ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ جَعَلَـكُمْ اَزْوَاجًا ؕ وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهؕ وَمَا يُعَمَّرُ مِنْ مُّعَمَّرٍ وَّلَا يُنْقَصُ مِنْ عُمُرِهٖۤ اِلَّا فِىْ كِتٰبٍؕ اِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ‏
وَاللّٰهُ அல்லாஹ்தான் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் مِّنْ تُرَابٍ மண்ணிலிருந்து ثُمَّ பிறகு مِنْ نُّطْفَةٍ இந்திரியத்திலிருந்து ثُمَّ பிறகு جَعَلَـكُمْ உங்களைஆக்கினான் اَزْوَاجًا ؕ ஜோடிகளாக وَمَا تَحْمِلُ கர்ப்பமாவதும் இல்லை مِنْ اُنْثٰى ஒரு பெண் وَلَا تَضَعُ கர்ப்பம் தரிப்பதும் இல்லை اِلَّا بِعِلْمِهؕ அவன் அறிந்தே தவிர وَمَا يُعَمَّرُ வயது கொடுக்கப்படுவதில்லை مِنْ مُّعَمَّرٍ நீண்ட வயது கொடுக்கப்பட்டவர் எவரும் وَّلَا يُنْقَصُ இன்னும் குறைக்கப்படுவதில்லை مِنْ عُمُرِهٖۤ அவருடைய வயதில் اِلَّا தவிர فِىْ كِتٰبٍؕ பதிவுப் புத்தகத்தில் اِنَّ நிச்சயமாக ذٰلِكَ இது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرٌ‏ மிக எளிதானதே
35:11. அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.
35:11. அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர், ஒரு துளி இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இல்லாமல் எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே!
35:11. அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பிறகு, இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், உங்களை (ஆண், பெண்) ஜோடிகளாய் ஆக்கினான். அல்லாஹ் அறியாமல் எந்த ஒரு பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; குழந்தையைப் பெறுவதுமில்லை! இவ்வாறே நீண்ட ஆயுள் உடையவர் அதிக வயதைப் பெறுவதுமில்லை, எவருடைய வயதும் குறைக்கப்படுவதுமில்லை; இவையெல்லாம் அந்த ஏட்டில் பதியப்படாமல்! திண்ணமாக, அல்லாஹ்வுக்கு இது மிக எளிய செயலாகும்.
35:11. மேலும் அல்லாஹ் உங்களை (துவக்கத்தில்) மண்ணிலிருந்து படைத்தான், பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து _பின்னர் (ஆண்_பெண் கொண்ட) ஜோடிகளாக ஆக்கினான், அவன் அறிவைக்கொண்டே தவிர எந்தப் பெண்ணும் கர்ப்பமாவதும் இல்லை, அவள் பிரசவிப்பதும் இல்லை, வயதானவரின் வயது அதிகப்படுத்தப்படுவதும், அவரின் வயதிலிருந்து குறைக்கப்படுவதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும் பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை, நிச்சயமாக இ(வை யாவற்றையும் செய்வ)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே!
35:12
35:12 وَمَا يَسْتَوِىْ الْبَحْرٰنِ ‌ۖ  هٰذَا عَذْبٌ فُرَاتٌ سَآٮِٕغٌ شَرَابُهٗ وَ هٰذَا مِلْحٌ اُجَاجٌ ؕ وَمِنْ كُلٍّ تَاْكُلُوْنَ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْنَ حِلْيَةً تَلْبَسُوْنَهَا ۚ وَتَرَى الْـفُلْكَ فِيْهِ مَوَاخِرَ لِتَبْـتَـغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّـكُمْ تَشْكُرُوْنَ‏
وَمَا يَسْتَوِىْ சமமாகாது الْبَحْرٰنِ இரண்டு கடல்களும் ۖ  هٰذَا இது عَذْبٌ சுவையான(து) فُرَاتٌ மதுரமான(து) سَآٮِٕغٌ இலகுவான(து) شَرَابُهٗ அதை குடிப்பது وَ هٰذَا இதுவோ مِلْحٌ மிகவும் கசப்பான(து) اُجَاجٌ ؕ உவர்ப்பான(து) وَمِنْ كُلٍّ எல்லாவற்றிலிருந்தும் تَاْكُلُوْنَ சாப்பிடுகிறீர்கள் لَحْمًا கறியை طَرِيًّا பசுமையான وَّتَسْتَخْرِجُوْنَ இன்னும் உற்பத்தி செய்துகொள்கிறீர்கள் حِلْيَةً ஆபரணங்களை تَلْبَسُوْنَهَا ۚ அணிகிறீர்கள் / அவற்றை وَتَرَى பார்க்கின்றீர் الْـفُلْكَ கப்பல்களை فِيْهِ அவற்றில் مَوَاخِرَ கிழித்து செல்லக்கூடியதாக لِتَبْـتَـغُوْا நீங்கள் தேடுவதற்காக(வும்) مِنْ فَضْلِهٖ அவனது அருள்களிலிருந்து وَلَعَلَّـكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்
35:12. இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
35:12. இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்தபோதிலும்), இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கிறீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய (முத்து, பவளம் போன்ற)வற்றையும் அவற்றிலிருந்து வெளியே எடுக்கிறீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
35:12. இரண்டு நீர்ப் பரப்புகள் சமமாகமாட்டா! ஒன்று சுவையானதாகவும், தாகம் தணிக்கக்கூடியதாகவும் குடிப்பதற்கு இன்பமாயும் இருக்கின்றது. மற்றொன்று, தொண்டையை கரகரக்கச் செய்யும் அளவு கடும் உவர்ப்பானதாய் இருக்கின்றது. ஆயினும், இரண்டிலிருந்தும் நீங்கள் புத்தம் புதிய இறைச்சியைப் பெற்றுக் கொள்ளுகின்றீர்கள். அணிவதற்கான அழகு சாதனங்களை வெளிக்கொணர்கிறீர்கள். மேலும் இந்த நீரில் (நீங்கள் பார்க்கின்றீர்கள்) அதன் மார்பைப் பிளந்துகொண்டு கப்பல்கள் செல்வதை நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேட வேண்டும்; அவனுக்கு நன்றி செலுத்துவோராய்த் திகழ வேண்டும் என்பதற்காக!
35:12. இன்னும், இரு கடல்களும் சமமாகிவிடாது (இரண்டில்) இது மிக்க மதுரமான (தாகம் தீர்க்கக்கூடியதான,) அதை அருந்துவதற்கு இலேசானது, இதுவோ, உப்பும் மிக்க கசப்பும் (உடைய நீர்) ஆகும். (இரு வகையாகிய) ஒவ்வொன்றிலிருந்தும் புதிய (சுவையான மீன்) இறைச்சியை உண்ணுகின்றீர்கள், எதை நீங்கள் அணிகின்றீர்களோ அத்தகைய ஆபரணங்களையும் (அவற்றிலிருந்து) வெளியாக்குகிறீர்கள், (யாத்திரையின் மூலம்) அவனது பேரருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், (அவற்றுக்காக) நீங்கள் நன்றி செய்வதற்காகவும் அதில் கப்பல்களை நீரைப் பிளந்து செல்பவையாக நீர் காண்கிறீர்.
35:13
35:13 يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ ۙ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ‌ۖ  كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَـهُ الْمُلْكُ ؕ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْرٍؕ‏
يُوْلِجُ நுழைக்கின்றான் الَّيْلَ இரவை فِى النَّهَارِ பகலில் وَيُوْلِجُ இன்னும் நுழைக்கின்றான் النَّهَارَ பகலை فِى الَّيْلِ ۙ இரவில் وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் الشَّمْسَ சூரியனையும் وَالْقَمَرَ ۖ  சந்திரனையும் كُلٌّ எல்லாம் يَّجْرِىْ ஓடுகின்றன لِاَجَلٍ தவணையை நோக்கி مُّسَمًّى ؕ குறிப்பிட்ட ذٰ لِكُمُ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் رَبُّكُمْ உங்கள் இறைவனாகிய لَـهُ அவனுக்கே உரியது الْمُلْكُ ؕ ஆட்சி அனைத்தும் وَالَّذِيْنَ تَدْعُوْنَ நீங்கள் அழைப்பவர்கள் مِنْ دُوْنِهٖ அவனையன்றி مَا يَمْلِكُوْنَ உரிமை பெற மாட்டார்கள் مِنْ قِطْمِيْرٍؕ‏ ஒரு தொலிக்குக் கூட
35:13. அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
35:13. அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சந்திரனையும் சூரியனையும் அடக்கி வைத்து இருக்கிறான். இவை அனைத்தும் அவற்றுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவற்றை நீங்கள் (இறைவனென உதவிக்கு) அழைக்கிறீர்களோ அவற்றுக்கு ஓர் அணு அளவும் அதிகாரமில்லை.
35:13. அவன் பகலினுள் இரவையும், இரவினுள் பகலையும் கோத்துக் கொண்டு வருகின்றான். மேலும், சூரியனையும் சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றான். இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சென்று கொண்டிருக்கும். (இந்தப் பணிகள் அனைத்தையும் செய்து கொண்டிருக்கும்) அந்த அல்லாஹ்தான் உங்கள் அதிபதி. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும், அவனை விடுத்து நீங்கள் யார் யாரை அழைக்கின்றீர்களோ, அவர்கள் ஓர் இம்மியளவுப் பொருளுக்கும் உரிமையாளர்கள் அல்லர்.
35:13. அவனே இரவைப் பகலில் நுழையச் செய்கிறான், இன்னும், பகலை இரவில் நுழையச் செய்கிறான், சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருக்கிறான், (இவை) ஒவ்வொன்றும் (அதற்குக்) குறிப்பிடப்பட்ட தவணைப்படியே செல்கின்றன, (இத்தகைய தகுதிகளுக்குரிய) அவன்தான் உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்; அரசாட்சி அவனுடயதே! இன்னும், அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள், ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
35:14
35:14 اِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَآءَكُمْ‌ ۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَـكُمْ ؕ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ وَلَا يُـنَـبِّـئُكَ مِثْلُ خَبِيْرٍ‏
اِنْ تَدْعُوْ நீங்கள்அழைத்தாலும் هُمْ அவர்களை لَا يَسْمَعُوْا அவர்கள் செவிமடுக்க மாட்டார்கள் دُعَآءَكُمْ‌ ۚ உங்கள் அழைப்பை وَلَوْ سَمِعُوْا அவர்கள் செவிமடுத்தாலும் مَا اسْتَجَابُوْا பதில் தர மாட்டார்கள் لَـكُمْ ؕ உங்களுக்கு وَيَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் يَكْفُرُوْنَ மறுத்து விடுவார்கள் بِشِرْكِكُمْ ؕ நீங்கள் இணைவைத்ததை وَلَا يُـنَـبِّـئُكَ உமக்கு அறிவிக்க முடியாது مِثْلُ போன்று خَبِيْرٍ‏ ஆழ்ந்தறிபவன்
35:14. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.  
35:14. அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்கள் அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவற்றை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவற்றின் செயலற்ற தன்மைகள்) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உமக்கு (இவ்வளவு தெளிவாக) அறிவிக்கமாட்டார்.
35:14. நீங்கள் அவர்களை அழைத்தால் அவ்வழைப்பினை அவர்களால் செவியேற்க முடிவதில்லை. மேலும், செவியேற்றாலும் அவர்களால் உங்களுக்கு எந்தப் பதிலையும் அளிக்க முடிவதில்லை. மேலும், மறுமை நாளில் உங்களுடைய இணைவைப்புச் செயலை அவர்கள் ஏற்க மறுத்துவிடுவார்கள். (எதார்த்த நிலை பற்றி இத்தகைய துல்லியமான தகவலை) யாவும் தெரிந்த ஒருவனைத் தவிர யாராலும் உங்களுக்கு அறிவித்துத் தர முடியாது.
35:14. அவர்களை நீங்கள் அழைத்தபோதிலும், உங்களுடைய அழைப்பை அவர்கள் செவியுறமாட்டர்கள், அவர்கள் செவியேற்ற போதிலும் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள், மறுமை நாளிலோ நீங்கள் (அவர்களை) இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள். (விஷயங்களை) அறிந்தவனைப் போல் (மற்றெவரும்) உமக்கு(ச் செய்திகளை) அறிவிக்கமாட்டார்.
35:15
35:15 يٰۤاَيُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَى اللّٰهِۚ وَاللّٰهُ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏
يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே! اَنْتُمُ நீங்கள்தான் الْفُقَرَآءُ தேவையுள்ளவர்கள் اِلَى اللّٰهِۚ அல்லாஹ்வின் பக்கம் وَاللّٰهُ அல்லாஹ் هُوَ அவன்தான் الْغَنِىُّ முற்றிலும் நிறைவானவன் الْحَمِيْدُ‏ புகழுக்குரியவன்
35:15. மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.
35:15. மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்.
35:15. மனிதர்களே! நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடை யவர்களாய் இருக்கின்றீர்கள்; ஆனால், அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்!
35:15. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் தேவையுடையவர்கள், அல்லாஹ்_ அவன்தான் (பிறர்) தேவையற்றவன், (சீமான்,) புகழுக்குரியவன்.
35:16
35:16 اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ وَيَاْتِ بِخَلْقٍ جَدِيْدٍۚ‏
اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُذْهِبْكُمْ உங்களை அழித்து விடுவான் وَيَاْتِ இன்னும் அவன் கொண்டு வருவான் بِخَلْقٍ ஒரு படைப்பை جَدِيْدٍۚ‏ புதிய
35:16. அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.
35:16. அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான்.
35:16. அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு உங்களுக்குப் பதிலாக ஏதேனும் புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான்.
35:16. அவன் நாடினால் உங்களைப் போக்கி விடுவான், (மற்றொரு) புதிய சிருஷ்டியைக் கொண்டு வந்தும் விடுவான்.
35:17
35:17 وَمَا ذٰ لِكَ عَلَى اللّٰهِ بِعَزِيْزٍ‏
وَمَا ذٰ لِكَ அது இல்லை عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு بِعَزِيْزٍ‏ சிரமமானதாக
35:17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
35:17. இது அல்லாஹ்வுக்கு ஒரு சிரமமானது அல்ல.
35:17. இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்துச் சிறிதும் சிரமமானதன்று!
35:17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
35:18
35:18 وَ لَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرَىٰ ؕ وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَىْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى ؕ اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏
وَ لَا تَزِرُ சுமக்காது وَازِرَةٌ பாவியான ஓர் ஆன்மா وِّزْرَ பாவத்தை اُخْرَىٰ ؕ மற்றொரு وَاِنْ تَدْعُ அழைத்தால் مُثْقَلَةٌ பாவச்சுமையுடைய ஓர் ஆன்மா اِلٰى حِمْلِهَا தனது சுமையின் பக்கம் لَا يُحْمَلْ சுமக்கப்பட முடியாது مِنْهُ அதிலிருந்து شَىْءٌ ஏதும் وَّلَوْ كَانَ அது இருந்தாலும் சரியே ذَا قُرْبٰى ؕ உறவினராக اِنَّمَا تُنْذِرُ நீர் எச்சரிப்பதெல்லாம் الَّذِيْنَ يَخْشَوْنَ அஞ்சுகின்றவர்களைத்தான் رَبَّهُمْ தங்கள் இறைவனை بِالْغَيْبِ மறைவில் وَاَقَامُوا இன்னும் நிலை நிறுத்துவார்கள் الصَّلٰوةَ ؕ தொழுகையை وَمَنْ تَزَكّٰى யார் பரிசுத்தம் அடைகிறாரோ فَاِنَّمَا يَتَزَكّٰى அவர் பரிசுத்தம் அடைவதெல்லாம் لِنَفْسِهٖ ؕ தனது நன்மைக்காகத்தான் وَاِلَى اللّٰهِ இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான் الْمَصِيْرُ‏ மீளுமிடம் இருக்கிறது
35:18. (மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.
35:18. (மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்து கொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்த போதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிப்பதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அவர்களைத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர் தன் நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கிறார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கிறது.
35:18. சுமை சுமக்கும் எவரும் மற்றொருவருடைய சுமையைச் சுமக்க மாட்டார். மேலும், சுமை ஏற்றப்பட்ட ஒருவர் தன்னுடைய சுமையைச் சுமக்கும்படி கெஞ்சினாலும், அவருடைய சுமையின் ஒரு சிறு பாகத்தைக்கூட ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரமாட்டார். அவர்மிக நெருங்கிய உறவினரானாலும் சரியே! (நபியே!) நேரில் காணாமலேயே தங்களுடைய இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ அவர்களை மட்டுமே உம்மால் எச்சரிக்கை செய்ய முடியும். எவர் தூய்மையை மேற்கொண்டாலும் அவர் தனது நலனுக்காகவே அதனை மேற்கொள்கின்றார். மேலும், அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.
35:18. பாவம் செய்த எந்த ஆத்மாவும் மற்றொரு பாவம் செய்த ஆத்மாவின் பாவத்தை (மறுமையில்) சுமக்காது; பாவச்சுமை கனத்துவிட்ட எந்த ஆத்மாவும், அதைச் சுமக்க (யாரையேனும் அது) அழைத்தாலும் (அழைக்கப் பட்டவன்) சுற்றத்தாராக இருப்பினும், அதிலிருந்து சிறிதளவேனும் (மற்றவர் மீது) சுமத்தப்படமாட்டாது; (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், (தங்கள் கண்களால் காணாமலிருந்தும்) மறைவிலும் தங்கள் இரட்சகனை பயந்து, தொழுகையையும் நிறைவேற்றிவருகின்றார்களே அத்தகையோரைத் தான்; எவர் பரிசுத்தமடைகின்றாரோ, அவர் பரிசுத்தமடைவதெல்லாம் (அதன் பலனெல்லாம்) தமக்காகத்தான். அல்லாஹ்விடமே (யாவும்) மீண்டு செல்ல வேண்டியதிருக்கின்றது.
35:19
35:19 وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ‏
وَمَا يَسْتَوِى சமமாக மாட்டார் الْاَعْمٰى குருடரும் وَالْبَصِيْرُ ۙ‏ பார்வையுடையவரும்
35:19. குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
35:19. குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
35:19. பார்வையற்றவனும், பார்வையுள்ளவனும் சமமாக மாட்டார்கள்.
35:19. குருடனும், பார்வையுடையோனும் சமமாவதில்லை.
35:20
35:20 وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوْرُۙ‏
وَلَا الظُّلُمٰتُ இருள்களும் وَلَا النُّوْرُۙ‏ வெளிச்சமும்
35:20. (அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா).
35:20. (அவ்வாறே) இருளும் பிரகாசமும் (சமமாகாது).
35:20. இருள்களும் ஒளியும் சமமானவை அல்ல;
35:20. (அவ்வாறே) இருள்களும், பிரகாசமும் (சமமாவது) இல்லை.
35:21
35:21 وَلَا الظِّلُّ وَلَا الْحَـرُوْرُۚ‏
وَلَا الظِّلُّ நிழலும் சமமாகாது وَلَا الْحَـرُوْرُۚ‏ வெயிலும் சமமாகாது
35:21. (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
35:21. நிழலும், வெயிலும் (சமமாகாது).
35:21. குளிர்தரும் நிழலும், வெயிலின் வெப்பமும் ஒன்றுபோல் இல்லை.
35:21. (அவ்வாறே) நிழலும், வெயிலும் (சமமாவது) இல்லை.
35:22
35:22 وَمَا يَسْتَوِى الْاَحْيَآءُ وَلَا الْاَمْوَاتُ ؕ اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَآءُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ‏
وَمَا يَسْتَوِى சமமாக மாட்டார்கள் الْاَحْيَآءُ உயிருள்ளவர்களும் وَلَا الْاَمْوَاتُ ؕ இறந்தவர்களும் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُسْمِعُ செவியேற்க வைப்பான் مَنْ يَّشَآءُ ۚ தான் நாடுகின்றவரை وَمَاۤ اَنْتَ நீர் இல்லை بِمُسْمِعٍ செவியேற்க வைப்பவராக مَّنْ فِى الْقُبُوْرِ‏ மண்ணறையில் உள்ளவர்களை
35:22. அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
35:22. உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கிறான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உம்மால் முடியாது.
35:22. மேலும், உயிருள்ளவர்களும், உயிரற்றவர்களும் சமமானவர்களல்லர். அல்லாஹ், தான் நாடுவோரைச் செவியேற்கச் செய்கின்றான். ஆயினும், (நபியே!) மண்ணறைகளில் அடக்கப்பட்டிருப்பவர்களைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.
35:22. மேலும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைச் செவியேற்குமாறு செய்கின்றான், (நபியே!) “கப்ரு” (சமாதி)களில் உள்ளவர்களைச் செவியேற்கச் செய்பவராகவும் நீர் இல்லை.
35:23
35:23 اِنْ اَنْتَ اِلَّا نَذِيْرٌ‏
اِنْ اَنْتَ நீர் இல்லை اِلَّا தவிர نَذِيْرٌ‏ அச்சமூட்டி எச்சரிப்பவரே
35:23. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
35:23. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே தவிர, (நீர் கூறுகிறவாறே அவர்கள் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்கக் கூடியவர்) அல்ல.
35:23. நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்.
35:23. நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர (வேறு) இல்லை.
35:24
35:24 اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَـقِّ بَشِيْرًا وَّنَذِيْرًاؕ وَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِيْهَا نَذِيْرٌ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنٰكَ உம்மை அனுப்பினோம் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு بَشِيْرًا நற்செய்தி கூறுபவராக(வும்) وَّنَذِيْرًاؕ அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் وَاِنْ مِّنْ اُمَّةٍ எந்த ஒரு சமுதாயமும் இல்லை اِلَّا خَلَا சென்றிருந்தே தவிர فِيْهَا அவர்களில் نَذِيْرٌ‏ அச்சமூட்டி எச்சரிப்பவர்
35:24. நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
35:24. (நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் (மட்டுமே) அனுப்பி இருக்கிறோம். அச்சமூட்டி எச்சரிக்கின்ற (நம்) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை.
35:24. நாமே உம்மை நற்செய்தி சொல்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் நியமித்து, சத்தியத்துடன் அனுப்பியுள்ளோம். மேலும், எச்சரிக்கை செய்பவர் எவரும் வருகை தராமல் எந்தச் சமுதாயமும் இருந்ததில்லை.
35:24. (நபியே!) நிச்சயமாக நாம் உம்மை சத்தியத்தைக் கொண்டு நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினோம்; மேலும் எந்த சமுதாயத்தவரும் அ(ச்சமுதாயத்)தில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் சென்றே தவிர இப்புவியில் இல்லை.
35:25
35:25 وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ۚ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتٰبِ الْمُنِيْرِ‏
وَاِنْ يُّكَذِّبُوْكَ இவர்கள் உம்மை பொய்ப்பித்தால் فَقَدْ திட்டமாக كَذَّبَ பொய்ப்பித்துள்ளனர் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ۚ இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் جَآءَتْهُمْ அவர்கள் கொண்டுவந்தனர் رُسُلُهُمْ அவர்களுடைய தூதர்கள் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளையும் وَبِالزُّبُرِ வேதங்களையும் وَبِالْكِتٰبِ வேதங்களையும் الْمُنِيْرِ‏ பிரகாசமான
35:25. இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.
35:25. (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களை) பொய்யாக்கினார்கள். அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் ‘ஸுஹுஃபு'களையும், பிரகாசமான வேதங்களையும் அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்.
35:25. (இப்போது) இவர்கள் உம்மைப் பொய்யர் என்று தூற்றுகின்றார்கள் எனில், இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் பொய்யர் என்று தூற்றியிருக்கின்றார்கள். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் வெளிப்படையான சான்றுகளையும், ஆகமங்களையும், தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் வேதத்தையும் கொண்டு வந்திருந்தார்கள்.
35:25. (நபியே!) இன்னும், அவர்கள் உம்மைப் பொய்ப்படுத்துவார்களானால் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கினார்கள். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் (அத்தாட்சிகளில்) தெளிவானவைகளையும், (“ஜூபுரு” எனும்) ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்திருந்தனர்.
35:26
35:26 ثُمَّ اَخَذْتُ الَّذِيْنَ كَفَرُوْا فَكَيْفَ كَانَ نَـكِيْرِ‏
ثُمَّ பிறகு اَخَذْتُ நான் தண்டித்தேன் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களை فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தது نَـكِيْرِ‏ எனது மாற்றம்
35:26. பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.  
35:26. ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். எனது தண்டனை எவ்வாறாயிற்று (என்பதை நீர் கவனித்தீரா)? (அவ்வாறே, உம்மை நிராகரிக்கும் இவர்களையும் வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்வோம்.)
35:26. பின்னர், எவர்கள் ஏற்கவில்லையோ, அவர்களை நான் பிடித்துக்கொண்டேன். மேலும், பார்த்துக் கொள்ளுங்கள் என்னுடைய தண்டனை எத்துணைக் கடுமையாக இருந்தது என்பதை!
35:26. பின்னர், நிராகரித்துக் கொண்டிருந்தோரை நான் பிடித்துக் கொண்டேன், ஆகவே, (அவர்களை அழிப்பதன் மூலம் என்னுடைய) மறுப்பு எப்படி இருந்தது? (என்பதை நீர் கவனித்தீரா?)
35:27
35:27 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ‌ۚ فَاَخْرَجْنَا بِهٖ ثَمَرٰتٍ مُّخْتَلِفًا اَلْوَانُهَاؕ وَمِنَ الْجِبَالِ جُدَدٌۢ بِيْضٌ وَّحُمْرٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهَا وَغَرَابِيْبُ سُوْدٌ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اَنْزَلَ இறக்கினான் مِنَ السَّمَآءِ மேகத்தில் இருந்து مَآءً ۚ மழையை فَاَخْرَجْنَا நாம் உற்பத்தி செய்தோம் بِهٖ அதன் மூலம் ثَمَرٰتٍ கனிகளை مُّخْتَلِفًا பலதரப்பட்ட اَلْوَانُهَاؕ அவற்றின் நிறங்கள் وَمِنَ الْجِبَالِ இன்னும் மலைகளில் جُدَدٌۢ பாதைகள் بِيْضٌ வெண்மையான وَّحُمْرٌ இன்னும் சிவப்பான مُّخْتَلِفٌ பலதரப்பட்டவையாக اَلْوَانُهَا அவற்றின் நிறங்கள் وَغَرَابِيْبُ இன்னும் மலைகளும் سُوْدٌ‏ கருப்பான
35:27. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.
35:27. (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? நாம் அதைக் கொண்டு பலவிதமான (ருசிகளையும்) நிறங்களையு(மு)டைய காய்கனிகளை வெளியாக்குகிறோம். இன்னும் மலைகளில் வெள்ளை, சிகப்பு முதலிய பல நிறங்கள் உள்ளவையும், சுத்தக்கருப்பு நிறம் உள்ளவையும் இருக்கின்றன.
35:27. நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றான்; பிறகு, அதன் மூலம் பல நிறங்கள் கொண்ட விதவிதமான கனிகளை நாம் வெளிக் கொணர்கின்றோம். மலைகளிலும்கூட வெண்மை, சிவப்பு, அடர்ந்த கறுப்பு ஆகிய நிறக்கோடுகள் காணப்படுகின்றன.
35:27. (நபியே!) நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி வைக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? பின்னர், நாம்தாம் அதனைக்கொண்டு, அவற்றின் நிறங்களை மாறுபட்டவையான கனிகளை வெளியாக்கினோம், இன்னும், மலைகளிலிருந்து, அதன் நிறங்கள் மாறுபட்டவையான வெள்ளையும், சிவப்புமான பாதைகளும், சுத்தக்கறுப்பு நிறமுடையதும் உள்ளன.
35:28
35:28 وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَ لْوَانُهٗ كَذٰلِكَ ؕ اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ‏
وَمِنَ النَّاسِ மக்களிலும் وَالدَّوَآبِّ கால்நடைகளிலும் وَالْاَنْعَامِ ஆடு மாடு ஒட்டகங்களிலும் مُخْتَلِفٌ மாறுபட்டவையாக اَ لْوَانُهٗ அவற்றின் நிறங்கள் كَذٰلِكَ ؕ இவ்வாறே اِنَّمَا يَخْشَى அஞ்சுவதெல்லாம் اللّٰهَ அல்லாஹ்வை مِنْ عِبَادِهِ அவனது அடியார்களில் الْعُلَمٰٓؤُا ؕ அறிஞர்கள்தான் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் غَفُوْرٌ‏ மகா மன்னிப்பாளன்
35:28. இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
35:28. மனிதர்களிலும், உயிருள்ளவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனும் ஆவான்.
35:28. மேலும், இவ்வாறே மனிதர்கள், விலங்குகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகின்றார்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.
35:28. இன்னும், அவ்வாறே மனிதர்களிலும், பூமியிலும் ஊர்ந்து திரிபவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால் நடைகளிலும் அதனுடைய நிறங்கள் மாறுபட்டிருக்கின்றன, நிச்சயமாக அல்லாஹ்வை_அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் (அவனைப்பற்றி அறிந்த) கல்விமான்கள் தாம், நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்புடையவன்.
35:29
35:29 اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً يَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَۙ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் يَتْلُوْنَ ஓதுகின்றார்கள் كِتٰبَ வேதத்தை اللّٰهِ அல்லாஹ்வின் وَاَقَامُوا இன்னும் நிலைநிறுத்தினர் الصَّلٰوةَ தொழுகையை وَاَنْفَقُوْا இன்னும் தர்மம் செய்தார்கள் مِمَّا رَزَقْنٰهُمْ நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து سِرًّا இரகசியமாகவும் وَّعَلَانِيَةً வெளிப்படையாகவும் يَّرْجُوْنَ ஆதரவு வைக்கின்றனர் تِجَارَةً வியாபாரத்தை لَّنْ تَبُوْرَۙ‏ அறவே அழிந்து போகாத
35:29. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
35:29. எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கிறார்கள்.
35:29. எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலை நாட்டுகின்றார்களோ, மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து மறைவாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக, என்றைக்கும் நஷ்டமடையாத ஒரு வணிகத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
35:29. அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் நிறைவேற்றி, நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (தர்மமாக) செலவு செய்கிறார்களே நிச்சயமாக அத்தகையோர்_என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை அவர்கள் ஆதரவு வைக்கிறார்கள்.
35:30
35:30 لِيُوَفِّيَهُمْ اُجُوْرَهُمْ وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ اِنَّهٗ غَفُوْرٌ شَكُوْرٌ‏
لِيُوَفِّيَهُمْ அவன் அவர்களுக்கு முழுமையாக நிறைவேற்றுவதற்கு(ம்) اُجُوْرَ கூலிகளை هُمْ அவர்களின் وَيَزِيْدَهُمْ மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கு مِّنْ فَضْلِهٖ ؕ தனது அருளிலிருந்து اِنَّهٗ நிச்சமாக அவன் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் شَكُوْرٌ‏ நன்றியுடையவன்
35:30. அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
35:30. (அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகவே கொடுத்து, தன் அருளை மேலும் அதிகமாகவும் அவர்களுக்கு கொடுப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்.
35:30. (இந்த வணிகத்தில் அவர்கள் தங்களிடமுள்ள அனைத்தையும் முதலீடு செய்வது) அவர்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகக் கொடுக்க வேண்டும்; மேலும், தன்னுடைய அருளிலிருந்து அதிகமாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும், உரிய மதிப் பளிப்பவனாகவும் இருக்கின்றான்.
35:30. காரணம்: (அல்லாஹ்வாகிய) அவன், அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகக் கொடுப்பதற்காகவும், தன்னுடைய பேரருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்காகவும்தான், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க நன்றி பாராட்டுபவன்.
35:31
35:31 وَالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ هُوَ الْحَـقُّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِؕ اِنَّ اللّٰهَ بِعِبَادِهٖ لَخَبِيْرٌۢ بَصِيْرٌ‏
وَالَّذِىْۤ எது اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு مِنَ الْكِتٰبِ அதாவது, இந்தவேதம் هُوَ அதுதான் الْحَـقُّ சத்தியமானது مُصَدِّقًا உண்மைப்படுத்துகிறது لِّمَا بَيْنَ يَدَيْهِؕ தனக்கு முன்னுள்ளதை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِعِبَادِهٖ தனது அடியார்களை لَخَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
35:31. (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்பதும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
35:31. (நபியே!) நாம் உமக்கு வஹ்யி மூலம் கொடுத்திருக்கும் வேதம் முற்றிலும் உண்மையானது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தி வைப்பதாகவும் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்கறிந்தவன், உற்று நோக்குபவன் ஆவான்.
35:31. (நபியே!) வஹி*யின் மூலம் நாம் உமக்கு அருளிய வேதம்தான் உண்மையானதாகும். இது தனக்கு முன் வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாய் இருக்கிறது. திண்ணமாக, அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நிலைமைகளை நன்கு புரிந்தவனாகவும், அனைத்தையும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.
35:31. மேலும், (நபியே!) நாம் உமக்கு வேதத்தால் எதை (வஹீ மூலம்) அறிவித்திருக்கின்றோமோ அதுதான்_ (வேதங்களில்) தனக்கு முன்னிருந்ததை உண்மைப்படுத்தக்கூடியதாக இருக்கும் நிலையில் _ சத்தியமானதாக இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்கிறவன், பார்க்கிறவன்.
35:32
35:32 ثُمَّ اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِيْنَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَاۚ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖ‌ۚ وَمِنْهُمْ مُّقْتَصِدٌ ‌ۚ وَمِنْهُمْ سَابِقٌۢ بِالْخَيْرٰتِ بِاِذْنِ اللّٰهِؕ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُؕ‏
ثُمَّ பிறகு اَوْرَثْنَا நாம் கொடுத்தோம் الْكِتٰبَ இந்த வேதத்தை الَّذِيْنَ اصْطَفَيْنَا நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு مِنْ عِبَادِنَاۚ நமது அடியார்களில் فَمِنْهُمْ அவர்களில் ظَالِمٌ தீமை செய்தவரும் لِّنَفْسِهٖ‌ۚ தனக்குத் தானே وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مُّقْتَصِدٌ ۚ நடுநிலையானவரும் وَمِنْهُمْ இன்னும் அவர்களில் سَابِقٌۢ முந்துகின்றவரும் بِالْخَيْرٰتِ நன்மைகளில் بِاِذْنِ அனுமதிப்படி اللّٰهِؕ அல்லாஹ்வின் ذٰلِكَ هُوَ இதுதான் الْفَضْلُ சிறப்பாகும் الْكَبِيْرُؕ‏ மாபெரும்
35:32. பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.
35:32. பின்னர், நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும்.
35:32. பிறகு, நாம் நம்முடைய அடிமைகளிலிருந்து (வேதத்தின் வாரிசுகளாக) எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை இவ்வேதத்துக்கு வாரிசுகளாக்கினோம். இப்போது அவர்களில் சிலர் தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாய் இருக்கின்றனர். மேலும் சிலர் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இன்னும் சிலர், அல்லாஹ்வின் கட்டளைப்படி நற்செயல்களில் முந்திச் செல்பவர்களாய் இருக்கின்றனர். இதுதான் மாபெரும் அருளாகும்.
35:32. பின்னர், நம்முடைய அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுத்தோமே அத்தகையோரை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக்கி வைத்தோம், ஆகவே, அவர்களில் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டவரும் உள்ளனர்; அவர்களில் நடு நிலையான வழியில் சென்றவர்களும் உள்ளனர்; அவர்களில், அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு நன்மையானவற்றில் முந்திக் கொண்டோரும் உள்ளனர்; இதுவே மிகப்பெரும் பேரருளாகும்.
35:33
35:33 جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُـؤْلُؤًا ۚ وَلِبَاسُهُمْ فِيْهَا حَرِيْرٌ‏
جَنّٰتُ சொர்க்கங்கள் عَدْنٍ அத்ன் يَّدْخُلُوْنَهَا அவர்கள் அவற்றில் நுழைவார்கள் يُحَلَّوْنَ அவர்கள் அணிவிக்கப்படுவார்கள் فِيْهَا அவற்றில் مِنْ اَسَاوِرَ கை காப்புகளிலிருந்து مِنْ ذَهَبٍ தங்கத்தினாலான وَّلُـؤْلُؤًا ۚ முத்தும் وَلِبَاسُهُمْ அவர்களின் ஆடைகள் فِيْهَا அவற்றில் حَرِيْرٌ‏ பட்டுத்துணி
35:33. அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைகள் பட்டா(லானவையா)க இருக்கும்.
35:33. (அவர்கள்) நிலையான சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள். முத்துப் பதிந்த பொற்காப்புக்கள் அவர்களுக்கு (விருதாக) அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளெல்லாம் மிருதுவான பட்டுக்களாக இருக்கும்.
35:33. நீடித்த நிலையான சுவனங்களில் இவர்கள் நுழைவார்கள். அங்கே தங்கக் காப்புகளும், முத்துக்களும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். அங்கு அவர்களின் உடைகள் பட்டாக இருக்கும்.
35:33. (அது) நிலையான சுவனபதிகள்_ அவற்றில் அவர்கள் நுழைவார்கள், அவற்றில் அவர்கள் பொன்னாலான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள், முத்துக்களையும் (அணிவிக்கப்படுவார்கள்) இன்னும் அவற்றில் அவர்களுடைய ஆடை பட்டாகும்.
35:34
35:34 وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَذْهَبَ عَـنَّا الْحَزَنَ ؕ اِنَّ رَبَّنَا لَـغَفُوْرٌ شَكُوْرُ ۙ‏
وَقَالُوا அவர்கள் கூறுவார்கள் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْۤ எவன் اَذْهَبَ போக்கினான் عَـنَّا எங்களை விட்டு الْحَزَنَ ؕ கவலையை اِنَّ நிச்சயமாக رَبَّنَا எங்கள் இறைவன் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் شَكُوْرُ ۙ‏ நன்றியுடையவன்
35:34. “எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
35:34. மேலும், (அவர்கள்) ‘‘தங்களை விட்டு எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரியன. நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்'' என்று புகழ்ந்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள்.
35:34. மேலும், அவர்கள் கூறுவார்கள்: “நம்மைவிட்டுக் கவலையை அகற்றிய அல்லாஹ்வுக்கு நன்றி! திண்ணமாக, நம்முடைய இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், உரிய மதிப்பை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.
35:34. இன்னும், அவர்கள் “எங்களை விட்டு கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும், நிச்சயமாக எங்கள் இரட்சகன் மிக்க மன்னிப்பவன், மிக்க நன்றி பாராட்டுபவன்” என்று (புகழ்ந்து) கூறுவார்கள்.
35:35
35:35 اۨلَّذِىْۤ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖ‌ۚ لَا يَمَسُّنَا فِيْهَا نَصَبٌ وَّلَا يَمَسُّنَا فِيْهَا لُـغُوْبٌ‏
اۨلَّذِىْۤ எவன் اَحَلَّنَا எங்களை தங்க வைத்தான் دَارَ இல்லத்தில் الْمُقَامَةِ நிரந்தர مِنْ فَضْلِهٖ‌ۚ தனது அருளினால் لَا يَمَسُّنَا எங்களுக்கு ஏற்படாது فِيْهَا அதில் نَصَبٌ சோர்வு(ம்) وَّلَا يَمَسُّنَا எங்களுக்கு ஏற்படாது فِيْهَا அதில் لُـغُوْبٌ‏ களைப்பும்
35:35. “அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை” (என்றும் கூறுவார்கள்).
35:35. ‘‘அவனே தன் அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் ஒரு கஷ்டமும் எங்களை அணுகுவதில்லை. ஒரு சடைவும் அதில் எங்களுக்கு ஏற்படுவதில்லை'' (என்றும் துதி செய்வார்கள்).
35:35. அவனே தன்னுடைய அருளால் நம்மை நிலையான இருப்பிடத்தில் தங்க வைத்துள்ளான். இங்கு எவ்விதச் சிரமமும் நமக்கு நேருவதில்லை. மேலும், எவ்விதச் சோர்வும் ஏற்படுவதில்லை.”
35:35. “அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய பேரருளால் என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இறக்கிவைத்தான், அதில் எவ்வித சிரமும் எங்களைத் தொடாது; யாதொரு சடைவும் எங்களை அதில் தொடாது (என்றும் கூறுவார்கள்).
35:36
35:36 وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ‌ۚ لَا يُقْضٰى عَلَيْهِمْ فَيَمُوْتُوْا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ؕ كَذٰلِكَ نَـجْزِىْ كُلَّ كَفُوْرٍۚ‏
وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لَهُمْ அவர்களுக்கு نَارُ நெருப்புதான் جَهَنَّمَ‌ۚ நரக لَا يُقْضٰى தீர்ப்பளிக்கப்படாது عَلَيْهِمْ அவர்களுக்கு فَيَمُوْتُوْا ஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள் وَلَا يُخَفَّفُ இன்னும் இலேசாக்கப்படாது عَنْهُمْ அவர்களை விட்டு مِّنْ عَذَابِهَا ؕ அதன் தண்டனை كَذٰلِكَ இப்படித்தான் نَـجْزِىْ கூலிகொடுப்போம் كُلَّ كَفُوْرٍۚ‏ எல்லா நிராகரிப்பாளர்களுக்கு(ம்)
35:36. எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது; அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது; அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது; இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.
35:36. எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) மேலும், அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம்.
35:36. மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புதான் இருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கபடவுமாட்டாது; நரகத்தின் வேதனையில் ஒரு சிறிதும் அவர்களுக்குக் குறைக்கப்படவுமாட்டாது. இவ்வாறே நிராகரிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நாம் கூலி கொடுக்கின்றோம்.
35:36. இன்னும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்_அவர்களுக்கு நரக நெருப்பு உண்டு. அவர்களுக்கு (இறப்பு ஏற்படவேண்டுமென) தீர்ப்புச் செய்யப்படமாட்டாது, (அவ்வாறு தீர்ப்புச் செய்யப்பட்டால்தானே) அவர்கள் இறப்பெய்துவார்கள், அதன் வேதனையிலிருந்து அவர்களுக்கு (ஒரு சிறிதும்) குறைக்கப்படவுமாட்டாது; இவ்வாறே ஒவ்வொரு நிராகரிப்போருக்கும் நாம் கூலி கொடுப்போம்.
35:37
35:37 وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ‏
وَهُمْ அவர்கள் يَصْطَرِخُوْنَ கதறுவார்கள் فِيْهَا ۚ அதில் رَبَّنَاۤ எங்கள் இறைவா اَخْرِجْنَا எங்களை வெளியேற்று نَـعْمَلْ صَالِحًـا நல்ல அமல்களை செய்வோம் غَيْرَ வேறு الَّذِىْ எது كُـنَّا نَـعْمَلُؕ நாங்கள் செய்து கொண்டிருந்தோம் اَوَلَمْ نُعَمِّرْكُمْ உங்களுக்கு நாம் வாழ்க்கையளிக்கவில்லையா? مَّا எது (-காலம்) يَتَذَكَّرُ அறிவுரை பெறுகின்றார் فِيْهِ அதில் مَنْ تَذَكَّرَ அறிவுரை பெறுபவர் وَجَآءَكُمُ இன்னும் உங்களிடம் வந்தார் النَّذِيْرُؕ அச்சமூட்டி எச்சரிப்பவர் فَذُوْقُوْا ஆகவே சுவையுங்கள் فَمَا لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு இல்லை مِنْ نَّصِيْرٍ‏ உதவியாளர் எவரும்
35:37. இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).  
35:37. அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்).
35:37. அவர்கள் அங்கு கூக்குரலிட்டுக் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை இங்கிருந்து வெளியேற்று; நாங்கள் முன்பு செய்துகொண்டிருந்த செயல்களுக்கு மாறுபட்டநல்ல செயல்களைப் புரிவதற்காக!” (அவர்களுக்குப் பதிலளிக்கப்படும்:) “ஒருவன் படிப்பினை பெற வேண்டுமென்று நினைத்தால் படிப்பினை பெறுவதற்குப் போதுமான ஆயுளை நாம் உங்களுக்கு வழங்கிடவில்லையா? மேலும், எச்சரிப்பவரும் உங்களிடம் வந்திருந்தாரே! இப்போது நன்கு சுவையுங்கள். கொடுமையாளர்களுக்கு (இங்கு) உதவி செய்வார் யாருமில்லை.”
35:37. அ(ந்நரகத்)தில் அவர்கள், “எங்கள் இரட்சகனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றிவிடு, (இனி) நாங்கள் செய்து கொண்டிருந்ததல்லாத நற்செயலையே செய்வோம்” என்று பெரும் சப்தமிடுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான நீண்ட காலம் வரை, நாம் அதில் உங்களை (வாழ) விட்டுவைத்திருக்கவில்லையா? மேலும், (இது பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருந்தார், ஆதலால் (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக்கொண்டிருங்கள், அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளருமில்லை” (என்று கூறுவான்).
35:38
35:38 اِنَّ اللّٰهَ عٰلِمُ غَيْبِ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عٰلِمُ நன்கறிந்தவன் غَيْبِ மறைவானவற்றை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِؕ மற்றும் பூமி(யில் உள்ள) اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளவற்றை
35:38. நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைத்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.
35:38. வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நிச்சயமாக அவன் உள்ளங்களில் இருப்பவற்றையும் நன்கறிந்தவன்.
35:38. திண்ணமாக, அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் மறைவாக உள்ள ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களைக்கூட நன்கறிகின்றான்.
35:38. நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும், பூமியில் மறைந்திருப்பதை அறிகிறவன், நிச்சயமாக அவன், இதயங்களில் இருப்பவற்றை நன்கறிகிறவன்.
35:39
35:39 هُوَ الَّذِىْ جَعَلَـكُمْ خَلٰٓٮِٕفَ فِى الْاَرْضِ ؕ فَمَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهٗ ؕ وَلَا يَزِيْدُ الْـكٰفِرِيْنَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ اِلَّا مَقْتًا ۚ وَلَا يَزِيْدُ الْـكٰفِرِيْنَ كُفْرُهُمْ اِلَّا خَسَارًا‏
هُوَ الَّذِىْ அவன்தான் جَعَلَـكُمْ உங்களை ஆக்கினான் خَلٰٓٮِٕفَ பிரதிநிதிகளாக فِى الْاَرْضِ ؕ பூமியில் فَمَنْ எவர் كَفَرَ நிராகரிப்பாரோ فَعَلَيْهِ அவருக்குத்தான் தீங்காகும் كُفْرُهٗ ؕ அவருடைய நிராகரிப்பு وَلَا يَزِيْدُ அதிகப்படுத்தாது الْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு كُفْرُ நிராகரிப்பு هُمْ அவர்களின் عِنْدَ رَبِّهِمْ அவர்களின் இறைவனிடம் اِلَّا தவிர مَقْتًا ۚ கோபத்தை / வெறுப்பை وَلَا يَزِيْدُ அதிகப்படுத்தாது الْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு كُفْرُ நிராகரிப்பு هُمْ அவர்களின் اِلَّا தவிர خَسَارًا‏ நஷ்டத்தை
35:39. அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.
35:39. அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதேசாரும். இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு கோபத்தை தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை. இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுக்கு நஷ்டத்தையே தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை.
35:39. அவனே பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாய் ஆக்கியிருக்கின்றான். இனி, எவன் நிராகரித்தாலும் அவனுடைய நிராகரிப்பின் தீயவிளைவு அவனையே சாரும். மேலும், நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனின் கோபத்தை அவர்கள் மீது அதிகப்படுத்துமே தவிர வேறெந்த முன்னேற்றத்தையும் அவர்களுக்கு அளிக்காது. நிராகரிப்பாளர்களுக்கு இழப்பு அதிகமாவதைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.
35:39. அவன் எத்தகையவனென்றால், உங்களை இப்புவியில் (முந்தையவர்களுக்கு) பின்தோன்றல்களாக ஆக்கினான், ஆகவே, (உங்களில்) எவர் நிராகரிக்கின்றாரோ அவரின் நிராகரி(ப்பின் பாதிப்)பு அவர் மீதேயாகும்; மேலும், நிராகரிப்போருக்கு அவர்களுடைய நிராகரிப்பு, அவர்களுடைய இரட்சகனிடத்தில் கோபத்தைத் தவிர (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை. நிராகரிப்போருக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை.
35:40
35:40 قُلْ اَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ‌ ۚ اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰى بَيِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ اِنْ يَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا‏
قُلْ கூறுவீராக! اَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள் شُرَكَآءَ இணை தெய்வங்களை كُمُ உங்கள் الَّذِيْنَ எவர்கள் تَدْعُوْنَ நீங்கள் அழைக்கின்றீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ ؕ அல்லாஹ்வையன்றி اَرُوْنِىْ எனக்கு காண்பியுங்கள் مَاذَا எதை خَلَقُوْا படைத்தார்கள் مِنَ الْاَرْضِ பூமியில் اَمْ அல்லது لَهُمْ அவர்களுக்கு شِرْكٌ பங்கு فِى السَّمٰوٰتِ‌ ۚ வானங்களில் اَمْ அல்லது اٰتَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கொடுத்தோம் كِتٰبًا ஒரு வேதத்தை فَهُمْ ஆகவே, அவர்கள் عَلٰى بَيِّنَتٍ தெளிவான சான்றின் மீது مِّنْهُ ۚ அது விஷயத்தில் بَلْ மாறாக اِنْ يَّعِدُ வாக்களிப்பதில்லை الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் بَعْضًا சிலருக்கு اِلَّا غُرُوْرًا‏ ஏமாற்றத்தைத் தவிர
35:40. “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்).
35:40. (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) அழைப்பவற்றைப் பற்றி நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதையும் படைத்திருக்கின்றனவா? அதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவற்றுக்குப் பங்குண்டா? அல்லது (அவற்றைத் தெய்வங்களெனக் கூறுவதற்குத்) தெளிவான ஆதாரமாக இருக்கின்ற ஒரு வேதத்தையாவது நாம் அவற்றுக்குக் கொடுத்திருக்கின்றோமா? (இவை ஒன்றுமே) இல்லை. (இந்தத் தெய்வங்கள் பாதுகாத்துக் கொள்ளுமென்று) இந்த அநியாயக்காரர்கள் சிலர் சிலருக்குச் செய்யும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலே தவிர வேறில்லை.
35:40. (நபியே!) இவர்களிடம் கேளும்: “இறைவனை விடுத்து நீங்கள் பிரார்த்திக்கின்ற உங்களுடைய இணைத் தெய்வங்களைப் பற்றி எப்போதேனும் நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? பூமியில் எதைத்தான் அவர்கள் படைத்திருக்கின்றார்கள்? அல்லது வானங்களில் அவர்களுக்கு உரிய பங்கு என்ன என்பதை எனக்குக் காண்பியுங்கள். (அவர்களால் இதைக் காண்பிக்க முடியாவிட்டால், அவர்களிடம் கேளுங்கள்:) “நாம் ஏதேனும் எழுத்து மூலம் இவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கின்றோமா? அதன் அடிப்படையில் (தம் இணைவைப்புச் செயல்களுக்கு) ஏதேனும் தெளிவான சான்றுகளை இவர்கள் வைத்திருக்கின்றார்களா?” இல்லை! மாறாக, இந்த அக்கிரமக்காரர்கள் ஒருவருக்கொருவர் அளிக்கும் வாக்குறுதி ஏமாற்றுதலேயாகும்.
35:40. (நபியே!) நீர் கூறுவீராக:” அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் கூட்டுகாரர்களை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் பூமியிலிருந்து எதைப் படைத்திருக்கிறார்கள் என்பதை எனக்குக் காண்பியுங்கள், அல்லது அவர்களுக்கு வானங்களில் (_அங்கு நடந்தேறும் காரியங்களில்) கூட்டு உண்டா? அல்லது (அவர்களை இணையாளர்களெனக் கூறுவதற்கு) இவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்து அதிலிருந்து அப்போது அவர்கள் தெளிவான ஆதாரத்தின் மீது இருக்கிறார்களா?” இல்லை, அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் மற்ற சிலருக்கு ஏமாற்றுதலைத் தவிர (வேறு எதையும்) வாக்களிப்பதில்லை.
35:41
35:41 اِنَّ اللّٰهَ يُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا ۚوَلَٮِٕنْ زَالَــتَاۤ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْۢ بَعْدِهٖ ؕ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُمْسِكُ தடுத்து வைத்திருக்கின்றான் السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் اَنْ تَزُوْلَا ۚ இரண்டும் நீங்கிவிடாமல் وَلَٮِٕنْ زَالَــتَاۤ அவை இரண்டும் நீங்கிவிட்டால் اِنْ اَمْسَكَهُمَا அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது مِنْ اَحَدٍ எவர் ஒருவரும் مِّنْۢ بَعْدِهٖ ؕ அவனுக்குப் பின்னர் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் حَلِيْمًا மகா சகிப்பாளனாக غَفُوْرًا‏ மகா மன்னிப்பாளனாக
35:41. நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்.
35:41. வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.
35:41. உண்மையில் அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் விலகிவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றான். அப்படி அவை விலகிவிட்டால் அல்லாஹ்வுக்குப் பிறகு அவற்றைத் தடுத்து நிறுத்துவோர் வேறு யாருமில்லை. திண்ணமாக, அல்லாஹ் மிகவும் சகிப்புத்தன்மையுடையவனும் பெரிதும் மன்னிப்பவனும் ஆவான்.
35:41. நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியை அவையிரண்டும் அதனதன் இடத்திலிருந்து நீங்கி விடாதபடி தடுத்து வைத்திருக்கின்றான், அவ்விரண்டும் அதனிடத்திலிருந்து நீங்கிவிடுமாயின், அதற்குப்பிறகு அவ்விரண்டையும் நீங்கி விடாதபடி தடுத்து நிறுத்த (அவனையன்றி) எவருமில்லை, நிச்சயமாக அவன், சகித்துக் கொள்ளக்கூடியவனாக, மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்.
35:42
35:42 وَاَ قْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ جَآءَهُمْ نَذِيْرٌ لَّيَكُوْنُنَّ اَهْدٰى مِنْ اِحْدَى الْاُمَمِۚ فَلَمَّا جَآءَهُمْ نَذِيْرٌ مَّا زَادَهُمْ اِلَّا نُفُوْرًا ۙ‏
وَاَ قْسَمُوْا சத்தியம் செய்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது جَهْدَ اَيْمَانِهِمْ மிக உறுதியாக சத்தியம் செய்தல் لَٮِٕنْ جَآءَ வந்தால் هُمْ அவர்களிடம் نَذِيْرٌ ஓர் எச்சரிப்பாளர் لَّيَكُوْنُنَّ நிச்சயமாக இருந்திருப்பார்கள் اَهْدٰى மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக مِنْ اِحْدَى الْاُمَمِۚ சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தை விட فَلَمَّا جَآءَ வந்த போது هُمْ அவர்களிடம் نَذِيْرٌ ஓர் எச்சரிப்பாளர் مَّا زَادَ அதிகப்படுத்தவில்லை هُمْ அவர்களுக்கு اِلَّا தவிர نُفُوْرًا ۙ‏ விலகிச் செல்வதை
35:42. அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிரமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.
35:42. ‘‘எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்'' என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
35:42. எச்சரிக்கை செய்பவர் எவரேனும் அவர்களிடம் வந்திருந்தால் (உலகிலுள்ள) ஏனைய சமூகத்தாரைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் நேர்வழி நடப்பவர்களாகி விடுவார்கள் என்று இந்த மக்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தார்கள். ஆயினும், எச்சரிக்கை செய்பவர் இவர்களிடம் வந்துவிட்டபோது, அவருடைய வருகை இவர்களில் சத்தியத்தைவிட்டு விரண்டோடுவதைத் தவிர வேறெதையும் அதிகமாக்கவில்லை.
35:42. இன்னும், தங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தால் நிச்சயமாக தாங்கள், (அல்லாஹ்வின் தூதர்களைப் பொய்ப்படுத்திய மற்ற) சமூகங்களில் உள்ள எந்த ஒரு சமுதாயத்தாரையும் விட மிக்க நேர் வழியில் ஆகிவிடுவார்கள் என அவர்கள் அல்லாஹ்வின் மீது மிக்க உறுதியான சத்தியம் செய்தார்கள். பின்னர், அவர்களிடம் (நம் தூதரான) அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்த பொழுது, அவர்களுக்கு அது வெருண்டோடுவதைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தவில்லை.
35:43
35:43 اۨسْتِكْبَارًا فِى الْاَرْضِ وَمَكْرَ السَّیِّئِ ؕ وَلَا يَحِيْقُ الْمَكْرُ السَّيِّـئُ اِلَّا بِاَهْلِهٖ ؕ فَهَلْ يَنْظُرُوْنَ اِلَّا سُنَّتَ الْاَوَّلِيْنَ ۚ فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبْدِيْلًا ۚ وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَحْوِيْلًا‏
اۨسْتِكْبَارًا பெருமையடிப்பதை(யும்) فِى الْاَرْضِ பூமியில் وَمَكْرَ சூழ்ச்சி செய்வதையும் السَّیِّئِ ؕ தீய(து) وَلَا يَحِيْقُ சூழ்ந்துகொள்ளாது الْمَكْرُ சூழ்ச்சி السَّيِّـئُ தீய(து) اِلَّا தவிர بِاَهْلِهٖ ؕ அதை செய்தவர்களை فَهَلْ يَنْظُرُوْنَ இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? اِلَّا سُنَّتَ வழிமுறையைத் தவிர الْاَوَّلِيْنَ ۚ முன் சென்றோரின் فَلَنْ تَجِدَ அறவே நீர் காணமாட்டீர் لِسُنَّتِ வழிமுறையில் اللّٰهِ அல்லாஹ்வின் تَبْدِيْلًا ۚ மாற்றத்தை وَلَنْ تَجِدَ இன்னும் நீர் காணமாட்டீர் لِسُنَّتِ வழிமுறையில் اللّٰهِ அல்லாஹ்வின் تَحْوِيْلًا‏ எவ்வித திருப்பத்தை
35:43. (அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.
35:43. (மேலும்,) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர் பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீர் காண மாட்டீர். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீர் காணமாட்டீர்.
35:43. இவர்கள் பூமியில் இன்னும் அதிகம் இறுமாப்புக் கொள்ளவும், தீய சூழ்ச்சிகளைச் செய்யவும்தான் தலைப்பட்டார்கள். உண்மையில், தீயசூழ்ச்சிகள் அவற்றைச் செய்பவர்களையே தாக்கும். முந்தைய சமூகத்தார்களுடன் அல்லாஹ்வின் நியதி எதுவாக இருந்ததோ அதுவே இவர்கள் விஷயத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவர்கள் இப்பொழுது எதிர்பார்க்கின்றார்களா? (அப்படியென்றால்) அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றத்தையும் எப்போதும் நீர் காணமாட்டீர். மேலும், அல்லாஹ்வின் நியதியை (அதற்கென நிர்ணயிக்கப்பட்ட வழியிலிருந்து ஏதேனும் ஒரு சக்தியால்) திருப்பிவிட முடியும் என்பதையும் நீர் காணமாட்டீர்.
35:43. பூமியில் பெருமையடிப்பதையும், தீய சூழ்ச்சியையும் (தவிர வேறு எதையும் அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை, ஆகவே, நம் தூதரை விட்டும் தூரமானார்கள்). மேலும் தீய சூழ்ச்சி, அந்த சூழ்ச்சிக்காரரைத் தவிர (மற்றெவரையும்) சூழ்ந்து கொள்ளாது, ஆகவே முந்தியவர்களின் வழியைத் தவிர, (வேறு எவ்வழியையும்) இவர்கள் எதிபார்க்கின்றனரா? (இல்லை) ஆகவே, அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் யாதொரு மாற்றத்தை நீர் காணவே மாட்டீர், (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் யாதொரு திருப்பத்தையும் நீர் காணவேமாட்டீர்.
35:44
35:44 اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُعْجِزَهٗ مِنْ شَىْءٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ ؕ اِنَّهٗ كَانَ عَلِيْمًا قَدِيْرًا‏
اَوَلَمْ يَسِيْرُوْا அவர்கள் பயணிக்கவில்லையா? فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا அவர்கள் பார்க்கவில்லை كَيْفَ எப்படி كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் وَكَانُوْۤا அவர்கள் இருந்தனர் اَشَدَّ கடுமையானவர்களாக مِنْهُمْ இவர்களை விட قُوَّةً ؕ பலத்தால் وَمَا كَانَ இருக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِيُعْجِزَهٗ அவனை பலவீனப்படுத்தக் கூடியதாக مِنْ شَىْءٍ எதுவும் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَلَا فِى الْاَرْضِ ؕ இன்னும் பூமியில் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் عَلِيْمًا நன்கறிந்தவனாக قَدِيْرًا‏ பேராற்றலுடையவனாக
35:44. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.
35:44. பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால்,) வானத்திலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக, பெரும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
35:44. இவர்கள், பூமியில் சுற்றித் திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விடவும் அதிக வலிமையுடையவர்களாய் இருந்தார்கள்! அல்லாஹ்வை தோல்வியுறச் செய்யக்கூடிய எந்தப் பொருளும் இல்லை. வானத்திலும் இல்லை, பூமியிலும் இல்லை. அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாகவும் இருக்கின்றான்.
35:44. பூமியில் அவர்கள் சுற்றித்திரிந்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அவர்கள் காணவில்லையா? மேலும், அவர்கள் இவர்களைவிட பலத்தால் மிகக் கடினமானவர்களாக இருந்தனர், (அவ்வாறிருந்தும், அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து அவர்களால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.) மேலும், அல்லாஹ்_அவனை இயலாமையில் ஆக்குவதற்கு வானங்களிலோ, பூமியிலோ எப்பொருளும் இருக்கவில்லை, நிச்சயமாக அவன் (யாவையும்) நன்கறிந்தவனாக, மிக்க ஆற்றலுடையோனாக இருக்கிறான்.
35:45
35:45 وَلَوْ يُـؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِمَا كَسَبُوْا مَا تَرَكَ عَلٰى ظَهْرِهَا مِنْ دَآ بَّةٍ وَّلٰـكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ فَاِنَّ اللّٰهَ كَانَ بِعِبَادِهٖ بَصِيْرًا‏
وَلَوْ يُـؤَاخِذُ தண்டிப்பதாக இருந்தால் اللّٰهُ அல்லாஹ் النَّاسَ மக்களை بِمَا كَسَبُوْا அவர்கள் செய்ததற்காக مَا تَرَكَ அவன் விட்டிருக்க மாட்டான் عَلٰى ظَهْرِهَا அதன் மேற்பரப்பில் مِنْ دَآ بَّةٍ எந்த உயிரினத்தையும் وَّلٰـكِنْ எனினும் يُّؤَخِّرُ அவன் பிற்படுத்தி வைக்கின்றான் هُمْ அவர்களை اِلٰٓى اَجَلٍ தவணை வரை مُّسَمًّىۚ ஒரு குறிப்பிட்ட فَاِذَا جَآءَ வந்துவிட்டால் اَجَلُهُمْ அவர்களுடைய தவணை فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கின்றான் بِعِبَادِهٖ தனது அடியார்களை بَصِيْرًا‏ உற்றுநோக்கியவனாக
35:45. மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.
35:45. மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் ஓர் உயிரையும் விட்டு வைக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரை விட்டுவைக்கிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
35:45. அல்லாஹ் மக்களை அவர்கள் செய்யும் தீய செயல்களுக்காகத் தண்டிப்பானாகில், பூமியின் மீது எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவன் அவகாசம் அளித்துக் கொண்டிருக்கின்றான். பிறகு, அவர்களுக்குரிய காலம் பூர்த்தியானால் திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளைப் பார்த்துக் கொள்வான்!
35:45. மேலும், மனிதர்களை அவர்கள் சம்பாதித்துக் கொண்டவைக்காக வேண்டி அல்லாஹ் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால், (பூமியாகிய) அதன் முதுகின் மீது யாதொரு ஊர்ந்து திரிபவற்றையும் அவன் விட்டுவைத்திருக்க மாட்டான். எனினும், குறிப்பிடப்பட்ட தவணைவரை அவர்களை அவன் பிற்படுத்துகிறான், ஆகவே அவர்களுடைய தவணை வந்து விட்டால் (அவர்களைப் பிடித்துவிடுவான்). எனவே நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான்.