37. ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)
மக்கீ, வசனங்கள்: 182

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
37:1
37:1 وَالصّٰٓفّٰتِ صَفًّا ۙ‏
وَالصّٰٓفّٰتِ அணிவகுப்பவர்கள் மீது சத்தியமாக! صَفًّا ۙ‏ அணி அணியாக
37:1. அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
37:1. அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக!
37:1. அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக!
37:1. அணியாக அணிவகுத்து நிற்போர் மீது சத்தியமாக,
37:2
37:2 فَالزّٰجِرٰتِ زَجْرًا ۙ‏
فَالزّٰجِرٰتِ விரட்டுகின்றவர்கள் மீது சத்தியமாக! زَجْرًا ۙ‏ (கடுமையாக) விரட்டுதல்
37:2. பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
37:2. (தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக!
37:2. பின்னர், கண்டித்து விரட்டுவோர் மீது சத்தியமாக!
37:2. தீவிரமாக விரட்டுவோர் மீது சத்தியமாக,
37:3
37:3 فَالتّٰلِيٰتِ ذِكْرًا ۙ‏
فَالتّٰلِيٰتِ ஓதுபவர்கள் மீது சத்தியமாக! ذِكْرًا ۙ‏ வேதத்தை
37:3. (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
37:3. (இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
37:3. பின்னர், நல்லுரையை எடுத்தியம்புவோர் மீது சத்தியமாக!
37:3. (அல்லாஹ்வின்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
37:4
37:4 اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ؕ‏
اِنَّ நிச்சயமாக اِلٰهَكُمْ உங்கள் கடவுள் لَوَاحِدٌ ؕ‏ ஒருவன்தான்
37:4. நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.
37:4. நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான்.
37:4. உங்களுடைய உண்மையான இறைவன் ஒருவன்தான்;
37:4. நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய நாயன் ஒரே ஒருவன் தான்.
37:5
37:5 رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ؕ‏
رَبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் وَرَبُّ இன்னும் நிர்வகிப்பவன் الْمَشَارِقِ ؕ‏ அவன் சூரியன் உதிக்கும் இடங்களையும்
37:5. வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.
37:5. வானங்கள், பூமி இன்னும் அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன் அவனே. கீழ் திசை(கள் மேல் திசை)களின் இறைவனும் அவனே.
37:5. அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் அதிபதியும் கிழக்குகளின் உரிமையாளனுமாவான்.
37:5. வானங்களுக்கும், பூமிக்கும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றிற்கும் (அவனே) இரட்சகன், (மேல்திசை) கீழ்த்திசைகளுக்கும் (அவனே) இரட்சகன்.
37:6
37:6 اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنْيَا بِزِيْنَةِ اۨلْكَوَاكِبِۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் زَيَّنَّا அலங்கரித்துள்ளோம் السَّمَآءَ வானத்தை الدُّنْيَا சமீபமான(து) بِزِيْنَةِ அலங்காரத்தால் اۨلْكَوَاكِبِۙ‏ நட்சத்திரங்களின்
37:6. நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
37:6. நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம்.
37:6. அருகிலுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம்.
37:6. நிச்சயமாக நாம், (இந்தப் பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு அலங்கரித்துள்ளோம்.
37:7
37:7 وَحِفْظًا مِّنْ كُلِّ شَيْطٰنٍ مَّارِدٍ‌ۚ‏
وَحِفْظًا பாதுகாப்பதற்காகவும் مِّنْ كُلِّ شَيْطٰنٍ எல்லா ஷைத்தான்களிடமிருந்து مَّارِدٍ‌ۚ‏ அடங்காத
37:7. (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).
37:7. மிக்க விஷமிகளான ஷைத்தான்களுக்கு ஒரு தடையாகவும் (ஆக்கி வைத்தோம்).
37:7. மேலும், மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதனை நாம் பாதுகாத்திருக்கின்றோம்.
37:7. கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் பாதுகாப்பதற்காக (நாம் ஆக்கினோம்).
37:8
37:8 لَّا يَسَّمَّعُوْنَ اِلَى الْمَلَاِ الْاَعْلٰى وَيُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍۖ ‏
لَّا يَسَّمَّعُوْنَ அவர்களால் செவியுற முடியாது اِلَى الْمَلَاِ கூட்டத்தினரின் பக்கம் الْاَعْلٰى மிக உயர்ந்த وَيُقْذَفُوْنَ இன்னும் எறியப்படுவார்கள் مِنْ இருந்தும் كُلِّ எல்லா جَانِبٍۖ ‏ பக்கங்களில்
37:8. (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
37:8. மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளிகளால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர்.
37:8. ஷைத்தான்களால் ‘மலா அஃலா’வின்* செய்திகளைச் செவியுற முடியாது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் எறியப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.
37:8. மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களின் பேச்சுக்களை மறைந்திருந்து ஷைத்தான்களாகிய) இவர்கள் செவியேற்கமாட்டார்கள், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரி கொள்ளிகளால்) எறியப்படுவார்கள்.
37:9
37:9 دُحُوْرًا  وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ  ۙ‏
دُحُوْرًا  தடுக்கப்படுவதற்காக وَّلَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை وَّاصِبٌ  ۙ‏ நிரந்தரமான
37:9. (அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
37:9. மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.
37:9. அவர்களுக்குத் தொடர்ச்சியான வேதனை இருக்கிறது.
37:9. விரட்டப்படுவதற்காக (எறியப்படுவார்கள்), அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
37:10
37:10 اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ‏
اِلَّا எனினும் مَنْ யார் خَطِفَ திருடினான் الْخَطْفَةَ திருட்டுத்தனமாக فَاَتْبَعَهٗ அவரை பின்தொடரும் شِهَابٌ நெருப்புக் கங்கு ثَاقِبٌ‏ எரிக்கின்ற
37:10. (ஏதேனும் செய்தியை) இறாய்ஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.
37:10. (தப்பித் தவறி ஒரு வார்த்தையை) பறித்துச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்து விட்டெரியும்) பிரகாசமான நெருப்பு பின்தொடர்கிறது.
37:10. ஆயினும், அந்த ஷைத்தான்களில் யாரேனும் ஒருவன் எதையேனும் இறாஞ்சிக்கொண்டு செல்ல முயன்றால் பிரகாசமான தீச்சுவாலை ஒன்று அவனைப் பின்தொடர்கின்றது.
37:10. (திருட்டுத்தனமாக ஏதேனும்) செய்தியை இராய்ஞ்சிச் செல்பவனைத் தவிர _ அப்போது பிரகாசமான தீப்பந்தம் அவனைப் பின் தொடரும்.
37:11
37:11 فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَاؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ‏
فَاسْتَفْتِهِمْ அவர்களிடம் விளக்கம் கேட்பீராக! اَهُمْ ?/அவர்கள் اَشَدُّ பலமிக்கவர்கள் خَلْقًا படைப்பால் اَمْ அல்லது مَّنْ எவர்கள் خَلَقْنَاؕ படைத்தோம் اِنَّا நிச்சயமாக நாம் خَلَقْنٰهُمْ அவர்களை படைத்தோம் مِّنْ طِيْنٍ மண்ணிலிருந்து لَّازِبٍ‏ பிசுபிசுப்பான
37:11. ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
37:11. (நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீர் கேட்பீராக: (இறந்த பின்) உங்களைப் படைப்பது சிரமமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவற்றைப் படைப்பது சிரமமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கிறோம்.
37:11. இப்போது அவர்களிடம் கேளும்: எது அதிகக் கடினமானது? இவர்களைப் படைத்திருப்பதா? அல்லது இப்பொருள்களை நாம் படைத்திருப்பதா? திண்ணமாக, நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்துள்ளோம்.
37:11. ஆகவே “படைப்பால் அவர்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது நாம் படைத்திருப்பைவைகளா?” என இவர்களிடம் (நபியே! நீர்) விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணால் படைத்திருக்கின்றோம்.
37:12
37:12 بَلْ عَجِبْتَ وَيَسْخَرُوْنَ‏
بَلْ மாறாக عَجِبْتَ நீர் ஆச்சரியப்பட்டீர் وَيَسْخَرُوْنَ‏ அவர்கள் பரிகாசிக்கின்றனர்
37:12. (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
37:12. மாறாக, (நபியே!) நீர் (அல்லாஹ்வின் வல்லமையைக்கண்டு) ஆச்சரியப்படுகிறீர்; அவர்களோ (அதைப்) பரிகசிக்கின்றனர்.
37:12. உண்மையில் (அல்லாஹ்வுடைய வியத்தகு ஆற்றல்களைப் பற்றி) நீர் வியப்புறுகின்றீர். ஆனால் இவர்களோ அவனைப் பரிகாசம் செய்துகொண்டு இருக்கிறார்கள்!
37:12. எனினும், (நபியே!) நீர் ஆச்சரியப்படுகின்றீர்; அவர்களோ, (அதனைப்) பரிகசிக்கின்றனர்.
37:13
37:13 وَاِذَا ذُكِّرُوْا لَا يَذْكُرُوْنَ‏
وَاِذَا ذُكِّرُوْا அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் لَا يَذْكُرُوْنَ‏ அறிவுரை பெறமாட்டார்கள்
37:13. அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.
37:13. மேலும், அவர்களுக்கு நல்லுபதேசம் கூறிய போதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை.
37:13. விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
37:13. அன்றியும், அவர்கள் உபதேசிக்கப்பட்டால், அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள்.
37:14
37:14 وَاِذَا رَاَوْا اٰيَةً يَّسْتَسْخِرُوْنَ‏
وَاِذَا رَاَوْا அவர்கள் பார்த்தால் اٰيَةً ஓர் அத்தாட்சியை يَّسْتَسْخِرُوْنَ‏ பரிகாசம் செய்கிறார்கள்
37:14. அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
37:14. எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
37:14. ஏதேனும் சான்றினை அவர்கள் பார்த்தால் அதனை ஏளனம் செய்கிறார்கள்.
37:14. எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் அளவு கடந்து பரிகாசம் செய்கின்றனர்.
37:15
37:15 وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‌ ۖ‌ۚ‏
وَقَالُوْۤا கூறுகின்றனர் اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا سِحْرٌ சூனியமே தவிர مُّبِيْنٌ‌ ۖ‌ۚ‏ தெளிவான
37:15. “இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
37:15. மேலும், ‘‘ இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்றும் கூறுகின்றனர்.
37:15. மேலும், கூறுகின்றார்கள்: “இது அப்பட்டமான சூனியமே;
37:15. “இது பகிரங்கமான சூனியமே தவிர (வேறு) இல்லை” என்றும் கூறுகின்றனர்.
37:16
37:16 ءَاِذَا مِتْنَا وَكُـنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏
ءَاِذَا مِتْنَا நாங்கள் இறந்து விட்டால் ? وَكُـنَّا تُرَابًا மண்ணாக(வும்) மாறிவிட்டால் وَّعِظَامًا எலும்புகளாகவும் ءَاِنَّا ?/நிச்சயமாக நாங்கள் لَمَبْعُوْثُوْنَۙ‏ எழுப்பப்படுவோம்
37:16. “நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)
37:16. ‘‘நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும், போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்),
37:16. நாம் இறந்து மண்ணாகி, எலும்புக்கூடாகி விட்டாலும் மீண்டும் நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா?
37:16. நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், (பின்னர்) நிச்சயமாக நாம் எழுப்பப்படுவோர்களா? (என்றும் கேட்கின்றனர்).
37:17
37:17 اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَؕ‏
اَوَاٰبَآؤُنَا இன்னும் எங்கள் முன்னோர்களுமா? الْاَوَّلُوْنَؕ‏ முந்திய
37:17. “அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)
37:17. (அவ்வாறே) நம் மூதாதைகளுமா? (எழுப்பப்படுவார்கள்'' என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.)
37:17. முன்பு வாழ்ந்து சென்ற நம்முடைய மூதாதையர்களும்கூட எழுப்பப்படுவார்களா?”
37:17. “எம்முடைய முன்னோர்களான மூதாதையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்)” என்றும் கேட்கின்றனர்.
37:18
37:18 قُلْ نَعَمْ وَاَنْـتُمْ دٰخِرُوْنَ‌ۚ‏
قُلْ கூறுவீராக! نَعَمْ ஆம் وَاَنْـتُمْ நீங்கள் دٰخِرُوْنَ‌ۚ‏ மிகவும் சிறுமைப்பட்டவர்களாக
37:18. “ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
37:18. அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் எழுப்பப்படுவது) உண்மைதான். அச்சமயம் நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்.
37:18. இவர்களிடம் நீர் கூறும்: “ஆம்! (அல்லாஹ்வுக்கு எதிராக) நீங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாவீர்கள்.”
37:18. (நபியே!) நீர் கூறுவீராக:”ஆம்! நீங்களும் சிறுமைப்பட்டவர்களாக (எழுப்பப்படுவீர்கள்).
37:19
37:19 فَاِنَّمَا هِىَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ يَنْظُرُوْنَ‏
فَاِنَّمَا هِىَ அதுவெல்லாம் زَجْرَةٌ பலமான சப்தம்தான் وَّاحِدَةٌ ஒரே ஒரு فَاِذَا هُمْ يَنْظُرُوْنَ‏ அப்போது அவர்கள் பார்ப்பார்கள்
37:19. ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.
37:19. அது ஒரே ஒரு சப்தம்தான்; உடனே அவர்கள் (எழுந்து நின்று திருதிருவென்று) விழிப்பார்கள்.
37:19. ஒரே ஒரு பேரிரைச்சல்தான்! உடனே அவர்கள் (தங்களுக்குக் கூறப்பட்டு வரும் விஷயங்கள் அனைத்தையும் திடீரென்று தம் கண்களால்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்!
37:19. அதுவெல்லாம் ஒரே ஒரு சப்தம்தான், உடனே அவர்கள் (எழுந்து மறுமை நாள் நிலைபெற்றுவிட்டதைப்) பார்ப்பார்கள்.
37:20
37:20 وَقَالُوْا يٰوَيْلَنَا هٰذَا يَوْمُ الدِّيْنِ‏
وَقَالُوْا அவர்கள் கூறுவார்கள் يٰوَيْلَنَا எங்கள் நாசமே! هٰذَا இதுதான் يَوْمُ நாள் الدِّيْنِ‏ கூலி கொடுக்கப்படும்
37:20. (அவ்வேளை) “எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே” என்று அவர்கள் கூறுவர்.
37:20. நாங்கள் கெட்டோம்! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே'' என்றும் அவர்கள் கூறுவார்கள்.
37:20. அவ்வேளை அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! எங்கள் துர்ப்பாக்கியமே! இது கூலி கொடுக்கப்படும் நாளாயிற்றே!”
37:20. “எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கப்படும் நாள் (ஆயிற்றே!)” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
37:21
37:21 هٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‏
هٰذَا இதுதான் يَوْمُ நாள் الْفَصْلِ தீர்ப்பு الَّذِىْ எதை كُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் بِهٖ இதை تُكَذِّبُوْنَ‏ பொய்ப்பிப்பவர்களாக
37:21. “நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)  
37:21. (அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த தீர்ப்பு நாள் இதுதான்'' (என்றும் கூறப்படும்).
37:21. எதனை நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அதே தீர்ப்புநாள்தான் இது!
37:21. “எதை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
37:22
37:22 اُحْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ‏
اُحْشُرُوا ஒன்று திரட்டுங்கள்! الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களை وَاَزْوَاجَهُمْ அவர்களின் இனத்தவர்களையும் وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ‏ இன்னும் அவர்கள் வணங்கி வந்தவர்களையும்
37:22. “அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
37:22. அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் நீங்கள் ஒன்று சேர்த்து,
37:22. (இவ்வாறு கட்டளையிடப்படும்:) “அக்கிரமம் இழைத்துக் கொண்டிருந்தவர்களையும் அவர்களுடைய கூட்டாளிகளையும் மற்றும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு வாருங்கள்.
37:22. “அநியாயம் செய்தார்களே அவர்களையும், (அநியாயம் செய்வதில் அவர்களுக்கு நிகரானவர்களான) அவர்களின் துணைவர்களையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தார்களே அவர்களையும் ஒன்று திரட்டுங்கள்”.
37:23
37:23 مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰى صِرَاطِ الْجَحِيْمِ‏
مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி فَاهْدُوْ வழிகாட்டுங்கள் هُمْ அவர்களுக்கு اِلٰى صِرَاطِ பாதைக்கு الْجَحِيْمِ‏ நரகத்தின்
37:23. “அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை); பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.
37:23. ‘‘அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்'' (என்றும்),
37:23. பிறகு அவர்கள் அனைவருக்கும் நரகத்துக்கான வழியினைக் காட்டுங்கள்
37:23. “அல்லாஹ்வையன்றி (வணங்கிக் கொண்டிருந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்) பின்னர் அவர்களுக்கு நரகத்தின் பாதையின்பால் வழிகாட்டுங்கள்.
37:24
37:24 وَقِفُوْهُمْ‌ اِنَّهُمْ مَّسْــٴُــوْلُوْنَۙ‏
وَقِفُوْ நிறுத்துங்கள்! هُمْ‌ அவர்களை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مَّسْــٴُــوْلُوْنَۙ‏ விசாரிக்கப்படுவார்கள்
37:24. “இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)
37:24. ‘‘அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கிறது'' (என்றும் கூறப்படும்).
37:24. சற்றே அவர்களை நிறுத்தி வையுங்கள்! அவர்களிடம் கொஞ்சம் விசாரிக்க வேண்டியிருக்கிறது!
37:24. (அங்கு) அவர்களை நிறுத்தியும் வையுங்கள், நிச்சயமாக அவர்கள் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள் (என்றும் கூறப்படும்).
37:25
37:25 مَا لَـكُمْ لَا تَنَاصَرُوْنَ‏
مَا என்ன நேர்ந்தது? لَـكُمْ உங்களுக்கு لَا تَنَاصَرُوْنَ‏ நீங்கள் உங்களுக்குள் உதவிக்கொள்ளவில்லை
37:25. “உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).
37:25. ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை'' (என்றும் கேட்கப்படும்).
37:25. உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இப்போது ஏன் ஒருவருக்கொருவர் நீங்கள் உதவி புரிந்து கொள்வதில்லை?
37:25. உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் உதவி செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை? (என்றும் கேட்கப்படும்).
37:26
37:26 بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُوْنَ‏
بَلْ هُمُ மாறாக அவர்கள் الْيَوْمَ இன்று مُسْتَسْلِمُوْنَ‏ முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்
37:26. ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
37:26. எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்தவர்களாக இருப்பார்கள்.
37:26. அடே! இன்று அவர்கள் தங்களையும் (ஒருவருக்கொருவர் மற்றவர்களையும் இறைவனிடம்) சரணடையச் செய்து கொண்டிருக்கின்றார்களே!”
37:26. இல்லை, இன்றையத்தினம் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) சரணடைந்தவர்களாக இருப்பார்கள்.
37:27
37:27 وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏
وَاَقْبَلَ முன்னோக்கி(னர்) بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَسَآءَلُوْنَ‏ விசாரித்துக் கொள்வார்கள்
37:27. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
37:27,28,27. அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.
37:27. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள்; ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்யத் தொடங்குவார்கள்.
37:27. இன்னும், அவர்களில் சிலர் சிலரை முன்னோக்க்கிக் (கேள்விகளைக்) கேட்டுக் கொள்வார்கள்.
37:28
37:28 قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْيَمِيْنِ‏
قَالُوْۤا அவர்கள் கூறுவார்கள் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் كُنْتُمْ இருந்தீர்கள் تَاْتُوْنَنَا எங்களிடம் வருபவர்களாக عَنِ الْيَمِيْنِ‏ நன்மையை விட்டுத் தடுக்க
37:28. (தம் தலைவர்களை நோக்கி:) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
37:27,28,28. அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.
37:28. (பின்பற்றி வாழ்ந்த மக்கள் தம்முடைய தலைவர்களை நோக்கி) கூறுவார்கள்: “சரியான திசையில் வருவது போல் எங்களிடம் நீங்கள் வந்தீர்கள்.”
37:28. “வலப்பக்கத்திலிருந்து எங்களிடம் (உங்கள் பலத்தால் நல்லவற்றைச் செய்வதிலிருந்து தடுத்தும், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதிலிருந்து எங்களைத் திருப்பி விட்டும்) வருபவர்களாகவும் இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
37:29
37:29 قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‌ۚ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلْ لَّمْ تَكُوْنُوْا மாறாக/நீங்கள் இருக்கவில்லை مُؤْمِنِيْنَ‌ۚ‏ நம்பிக்கையாளர்களாக
37:29. (“அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!” என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
37:29. அதற்கு அ(த்தலை)வர்கள் ‘‘அவ்வாறல்ல. (நாங்கள் உங்களைத் தடை செய்யவில்லை.) நீங்கள்தான் நம்பிக்கை கொள்ளவில்லை.''
37:29. அதற்கவர்கள் பதிலளிப்பார்கள்: “இல்லை, நீங்கள்தான் நம்பிக்கை கொள்வோராய் இருக்கவில்லை!
37:29. (அதற்கு) “அவ்வாறல்ல! நீங்கள் தாம் விசுவசங்கொண்டவர்களாக இருக்கவில்லை” என்று அ(த்தலை)வர்கள் கூறுவார்கள்.
37:30
37:30 وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِيْنَ‏
وَمَا كَانَ இருக்கவில்லை لَنَا எங்களுக்கு عَلَيْكُمْ உங்கள் மீது مِّن سُلْطٰنٍۚ எவ்வித அதிகாரமும் بَلْ كُنْتُمْ மாறாக நீங்கள் இருந்தீர்கள் قَوْمًا மக்களாக طٰغِيْنَ‏ எல்லை மீறுகின்ற(வர்கள்)
37:30. “அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை; எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்.”
37:30. ‘‘எங்களுக்கு உங்கள் மீது ஓர் அதிகாரமும் இருக்கவில்லை. நீங்கள் தான் பொல்லாத மக்களாக இருந்தீர்கள்.
37:30. எங்களுக்கு உங்கள்மீது எந்த அதிகாரமும் இருந்ததில்லை. நீங்களே வரம்புமீறிய மக்களாய் வாழ்ந்தீர்கள்.
37:30. எங்களுக்கு உங்கள் மீது யாதோர் அதிகாரமும் இருக்கவில்லை எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்த கூட்டத்தாராக இருந்தீர்கள்.
37:31
37:31 فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ اِنَّا لَذَآٮِٕقُوْنَ‏
فَحَقَّ ஆகவே, உறுதியாகிவிட்டது عَلَيْنَا நம் மீது قَوْلُ வாக்கு رَبِّنَآ ۖ நமது இறைவனுடைய اِنَّا நிச்சயமாக நாம் لَذَآٮِٕقُوْنَ‏ சுவைப்பவர்கள்தான்
37:31. ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது; நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!
37:31. ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்களே.
37:31. இறுதியில், ‘நாங்கள் வேதனையைச் சுவைத்தே ஆக வேண்டும்’ எனும் எங்கள் இறைவனின் தீர்ப்புக்கு உரித்தானவர்களாகிவிட்டோம்!
37:31. “ஆதலால், எங்கள் இரட்சகனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது, நிச்சயமாக நாம் (வேதனையச்) சுவைக்க வேண்டியவர்கள்தாம்.
37:32
37:32 فَاَغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ‏
فَاَغْوَيْنٰكُمْ ஆக, நாங்கள் உங்களை வழி கெடுத்தோம் اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் غٰوِيْنَ‏ வழி கெட்டவர்களாகவே
37:32. “(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்.”
37:32. நிச்சயமாக நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். ஏனென்றால், நாங்கள் வழிகெட்டே போயிருந்தோம் என்று கூறுவார்கள்.
37:32. ஆகவே, நாங்கள் உங்களை வழிதவறச்செய்தோம். ஏனெனில், நாங்களே வழிதவறிப்போயிருந்தோம்!”
37:32. “(ஆம்!) உங்களை நாங்கள் வழிகெடுத்தோம்: (ஏனென்றால்) நிச்சயமாக நாங்களும் வழிகெட்டுப் போயிருந்தோம்” (என்று கூறுவார்கள்).
37:33
37:33 فَاِنَّهُمْ يَوْمَٮِٕذٍ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ‏
فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் يَوْمَٮِٕذٍ அந்நாளில் فِى الْعَذَابِ வேதனையில் مُشْتَرِكُوْنَ‏ கூட்டாகுவார்கள்
37:33. ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.
37:33. முடிவில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அன்றைய தினம் வேதனையில் (சம) பங்காளிகள்தான்.
37:33. இவ்வாறு அந்நாளில் அவர்கள் அனைவரும் வேதனையில் பங்கு பெறுபவர்களாய் இருப்பார்கள்.
37:33. எனவே, நிச்சயமாக அவர்கள் அந்நாளில் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பர்.
37:34
37:34 اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இப்படித்தான் نَفْعَلُ நடந்து கொள்வோம் بِالْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளுடன்
37:34. குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.
37:34. நிச்சயமாக நாம், குற்றவாளிகளை இவ்வாறே நடத்துவோம்.
37:34. திண்ணமாக, நாம் குற்றவாளிகளை இவ்வாறுதான் நடத்துகின்றோம்.
37:34. நிச்சயமாக நாம் குற்றவாளிகளை இவ்வாறே செய்வோம்.
37:35
37:35 اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِيْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ يَسْتَكْبِرُوْنَۙ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْۤا இருந்தனர் اِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا اللّٰهُۙ அல்லாஹ்வைத் தவிர يَسْتَكْبِرُوْنَۙ‏ பெருமை அடிப்பவர்களாக
37:35. “அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
37:35. ‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் அறவே இல்லை (ஆகவே, அவனையே வணங்குங்கள்)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொள்கின்றனர்,
37:35. இவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்களெனில், “உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்கள் தற்பெருமை கொண்டார்கள்;
37:35. “அல்லாஹ்வைத் தவிர வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயன் இல்லை!” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள், பெருமையடிப்பவர்களாக இருந்தனர்.
37:36
37:36 وَيَقُوْلُوْنَ اَٮِٕنَّا لَتٰرِكُوْۤا اٰلِهَـتِنَا لِشَاعِرٍ مَّجْـنُوْنٍ ؕ‏
وَيَقُوْلُوْنَ கூறுகின்றனர் اَٮِٕنَّا ?/நிச்சயமாக நாங்கள் لَتٰرِكُوْۤا விட்டுவிடுவோம் اٰلِهَـتِنَا எங்கள் தெய்வங்களை لِشَاعِرٍ ஒரு கவிஞருக்காக مَّجْـنُوْنٍ ؕ‏ பைத்தியக்காரரான
37:36. “ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
37:36. ‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
37:36. மேலும், கூறினார்கள்: ‘பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கைவிட்டு விடுவோமா என்ன?’
37:36. “நாங்கள் பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்களுடைய வணக்கத்துக்குரியவர்(களான தெய்வங்)களை நிச்சயமாக விட்டுவிடுகின்றவர்களா?” என்றும் அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர்.
37:37
37:37 بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِيْنَ‏
بَلْ جَآءَ بِالْحَقِّ மாறாக அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார் وَصَدَّقَ இன்னும் உண்மைப்படுத்தினார் الْمُرْسَلِيْنَ‏ தூதர்களை
37:37. அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
37:37. ‘‘(அவர் பைத்தியக்காரர் அல்ல.) மாறாக, அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.)
37:37. அவரோ உண்மையில் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தார்; மேலும், ஏனைய இறைத்தூதர்களை மெய்ப்படுத்திக் கொண்டுமிருந்தார்.
37:37. (அவர் பைத்தியக்காரர்) அல்ல! அவர் உண்மையான(மார்க்கத்)தையே கொண்டு வந்தார், (தனக்கு முன்சென்ற) தூதர்களையும் அவர் உண்மைப்படுத்தினார்.
37:38
37:38 اِنَّكُمْ لَذَآٮِٕقُوا الْعَذَابِ الْاَلِيْمِ‌ۚ‏
اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَذَآٮِٕقُوا சுவைப்பீர்கள் الْعَذَابِ வேதனையை الْاَلِيْمِ‌ۚ‏ வலிதரும்
37:38. (இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.
37:38. ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான்.
37:38. (இப்போது அவர்களிடம் கூறப்படும்:) ‘துன்புறுத்தும் வேதனையின் இன்பத்தை நீங்கள் சுவைக்கப் போவது திண்ணம்.
37:38. நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையச் சுவைக்க வேண்டியவர்கள்தாம்.
37:39
37:39 وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ‏
وَمَا تُجْزَوْنَ நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள் اِلَّا அன்றி مَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ‏ நீங்கள் செய்து வந்ததற்கே
37:39. ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
37:39. நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்படவில்லை'' (என்றும் கூறப்படும்).
37:39. உங்களுக்கு எவ்விதக் கூலி கொடுக்கப்பட்டாலும் நீங்கள் செய்துகொண்டிருந்த அதே செயல்களுக்குப் பதிலாகத்தான் அது கொடுக்கப்படும்.’
37:39. நீங்கள் செய்துகொண்டிருந்தவைகளுக்கல்லாமல் (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள் (என்றும் கூறப்படும்).
37:40
37:40 اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏
اِلَّا தவிர عِبَادَ அடியார்களை اللّٰهِ அல்லாஹ்வின் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான
37:40. அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-
37:40. கலப்பற்ற, மனத்தூய்மையுடைய அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.
37:40. ஆயினும், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் இந்தத் தீயகதியிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
37:40. (அல்லாஹ்வால்) தேர்ந்தேடுக்கப்பட்டோரான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர,
37:41
37:41 اُولٰٓٮِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌۙ‏
اُولٰٓٮِٕكَ لَهُمْ அவர்களுக்கு உண்டு رِزْقٌ உணவு مَّعْلُوْمٌۙ‏ அறியப்பட்ட
37:41. அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.
37:41. அவர்களுக்கு (அல்லாஹ்வின் புறத்திலிருந்து உயர்ரக) பழக்கமான உணவு தயார் செய்யப்பட்டிருக்கும்.
37:41. நன்கு அறியப்பட்ட அருட்பேறுகள் அவர்களுக்கு இருக்கின்றன;
37:41. அத்தகையோர்_அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு உண்டு.
37:42
37:42 فَوَاكِهُ‌ۚ وَهُمْ مُّكْرَمُوْنَۙ‏
فَوَاكِهُ‌ۚ பழங்கள் وَهُمْ இன்னும் அவர்கள் مُّكْرَمُوْنَۙ‏ கண்ணியப்படுத்தப்படுவார்கள்
37:42. கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
37:42. (இன்னும், சுவையான) கனிவர்க்கங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்கள் (இவ்வாறு) கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
37:42. எல்லாவகையான சுவையான பொருள்களும்! அவர்கள் கண்ணியத்தோடு அமர்த்தப்படுவார்கள்.
37:42. (அது)கனி(வகை)கள், இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுபவர்கள்.
37:43
37:43 فِىْ جَنّٰتِ النَّعِيْمِۙ‏
فِىْ جَنّٰتِ சொர்க்கங்களில் النَّعِيْمِۙ‏ இன்பமிகு
37:43. இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
37:43. இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்.
37:43. அருள் நிறைந்த சுவனப்பூங்காக்களில்
37:43. இன்பம் தரும் சுவனபதிகளில்_
37:44
37:44 عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ‏
عَلٰى سُرُرٍ கட்டில்கள் மீது مُّتَقٰبِلِيْنَ‏ ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
37:44. ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
37:44. கட்டில்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாகப் பேசிக்கொண்டு) உட்கார்ந்திருப்பார்கள்.
37:44. மஞ்சங்களில் எதிரெதிரே உட்கார்ந்திருப்பார்கள்.
37:44. கட்டில்கள் மீது (அமர்ந்து) ஒருவர் மற்றொருவரை முன் நோக்கியவர்களாக (உல்லாசமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்).
37:45
37:45 يُطَافُ عَلَيْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۢ ۙ‏
يُطَافُ சுற்றி வரப்படும் عَلَيْهِمْ அவர்களை بِكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۢ ۙ‏ மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன்
37:45. தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.
37:45. மிகத் தெளிவான ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.
37:45. மது ஊற்றுகளிலிருந்து நிரப்பப் பெற்ற கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவரச் செய்யப்படும்.
37:45. சுத்தமான (மது) பானம் நிறைந்த குவளை (சிறார்கள் மூலம்) அவர்களைச் சுற்றி கொண்டுவரப்படும்.
37:46
37:46 بَيْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِيْنَ‌ ۖ‌ۚ‏
بَيْضَآءَ வெள்ளைநிற لَذَّةٍ மிக இன்பமான لِّلشّٰرِبِيْنَ‌ ۖ‌ۚ‏ குடிப்பவர்களுக்கு
37:46. (அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.
37:46. (அது) மிக்க வெண்மையானதாகவும், குடிப்பவர்களுக்கு மிக்க இன்பமானதாகவும் இருக்கும்.
37:46. ஒளிரக்கூடிய மது அது பருகுவோருக்குச் சுவையாக இருக்கும்.
37:46. மிக்க வெண்மையானது (அதை) அருந்துவோருக்கு மதுரமளிக்கக் கூடியதாகும்.
37:47
37:47 لَا فِيْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ‏
لَا فِيْهَا அதில் இருக்காது غَوْلٌ போதை(யும்) وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ‏ அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்
37:47. அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
37:47. அதில் போதையே இருக்காது; அதனால், அவர்களுடைய அறிவும் நீங்கிவிடாது.
37:47. (அவர்களின் உடல்களுக்கு) அதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது; அவர்களின் மதியும் கெட்டுப்போகாது.
37:47. அதில் கெடுதியும் இருக்காது, அதனால் (போதையுற்று) அவர்கள் மதிமயக்கப்படவும் மாட்டார்கள்.
37:48
37:48 وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِيْنٌۙ‏
وَعِنْدَهُمْ அவர்களிடம் قٰصِرٰتُ பார்வைகளை الطَّرْفِ தாழ்த்திய عِيْنٌۙ‏ கண்ணழகிகள்
37:48. இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.
37:48. அவர்களிடத்தில் கீழ் நோக்கிய, அடக்கமான பார்வையையுடைய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழகிகளும் இருப்பார்கள்.
37:48. மேலும், தாழ்த்திய பார்வை உடைய அழகிய கண்களைக்கொண்ட நங்கையரும் அவர்களிடம் இருப்பர்.
37:48. அவர்களிடத்தில் பார்வை தாழ்த்திய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழிகிகளும் இருப்பார்கள்.
37:49
37:49 كَاَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُوْنٌ‏
كَاَنَّهُنَّ அவர்கள் போன்று இருப்பார்கள் بَيْضٌ முட்டையைப்போன்று مَّكْنُوْنٌ‏ பாதுகாக்கப்பட்ட(து)
37:49. (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
37:49. அவர்களின் நிறம் (இறக்கைகளில்) மறைக்கப்பட்ட (நெருப்புக் கோழியின் இலேசான மஞ்சள் வர்ணமுடைய) முட்டைகளைப் போலிருக்கும்.
37:49. அப்பெண்கள் முட்டை ஓட்டின் கீழே மறைந்திருக்கும் மெல்லிய தோலைப் போன்று மென்மையாய் இருப்பார்கள்.
37:49. அவர்கள் (கறைபடாது) மறைக்கப்பட்ட முட்டைக(ளின் உள்ளிருக்கும் வெள்ளைத் தொளிக)ளைப் போன்று (பாதுகாக்கப்பட்டு)இருப்பர்.
37:50
37:50 فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏
فَاَقْبَلَ முன்னோக்குவார்(கள்) بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَسَآءَلُوْنَ‏ விசாரிப்பார்கள்
37:50. (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
37:50. அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி, (இம்மையில் நடைபெற்றவற்றைப் பற்றி மகிழ்ச்சியுடன்) பேசிக் கொண்டிருப்பார்கள்.
37:50. பிறகு, அவர்கள் ஒருவர் மற்றவரின் பக்கம் முன்னோக்கி நிலைமைகளை விசாரிப்பார்கள்.
37:50. பின்னர், அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கியவாறு (உலகத்தில் இருந்த அவர்களின் நிலைபற்றி) ஒருவரை ஒருவர் கேட்டு) (விசாரித்து)க் கொள்வார்கள்.
37:51
37:51 قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ اِنِّىْ كَانَ لِىْ قَرِيْنٌۙ‏
قَالَ கூறுவார் قَآٮِٕلٌ கூறக்கூடிய ஒருவர் مِّنْهُمْ அவர்களில் اِنِّىْ நிச்சயமாக كَانَ இருந்தான் لِىْ எனக்கு قَرِيْنٌۙ‏ ஒரு நண்பன்
37:51. அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
37:51. அவர்களில் ஒருவர் கூறுவார்: ‘‘(இம்மையில்) மெய்யாகவே எனக்கொரு நண்பன் இருந்தான்.
37:51. அவர்களில் ஒருவர் கூறுவார் “(உலகில்) எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.
37:51. அவர்களில் சொல்லக்கூடிய ஒருவர், “நிச்சயமாக நான்_ எனக்கு (இம்மையில்) ஒரு நண்பன் இருந்தான்” எனக் கூறுவார்.
37:52
37:52 يَقُوْلُ اَءِ نَّكَ لَمِنَ الْمُصَدِّقِيْنَ‏
يَقُوْلُ கூறுவான் اَءِ نَّكَ நிச்சயமாக நீ இருக்கின்றாயா لَمِنَ الْمُصَدِّقِيْنَ‏ உண்மைப்படுத்துபவர்களில்
37:52. (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
37:52. அவன் என்னை நோக்கி ‘‘நிச்சயமாக நீ இதை நம்புகிறாயா?'' என்று கேட்டான்.
37:52. ‘என்ன, உண்மை என ஏற்றுக்கொள்பவரில் நீயும் ஒருவனா?
37:52. அவன் (என்னிடம் மறுமையை) உண்மைப்படுத்தக்கூடியவர்களில் நிச்சயமாக நீயுமா? எனக்கூறுவான்.
37:53
37:53 ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِيْنُوْنَ‏
ءَاِذَا مِتْنَا நாங்கள் இறந்து விட்டால் ? وَكُنَّا இன்னும் மாறிவிட்டால் تُرَابًا மண்ணாக(வும்) وَّعِظَامًا எலும்புகளாகவும் ءَاِنَّا ?/நிச்சயமாக நாம் لَمَدِيْنُوْنَ‏ கூலி கொடுக்கப்படுவோம்
37:53. “நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
37:53. என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?'' என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தான்.
37:53. நாம் இறந்து மண்ணோடு மண்ணாகி எலும்புக் கூடுகளாய் ஆன பின்னரும் திண்ணமாக நமக்குக் கூலியும், தண்டனையும் வழங்கப்படுமா?’ என்றெல்லாம் அவன் என்னிடம் வினவிக்கொண்டிருந்தான்.
37:53. நிச்சயமாக நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும், ஆகிவிட்டாலும் (உயிர்ப்பித்து) நாம் கூலி வழங்கப்படுவோரா? (என்றும் கூறுபவனாக இருந்தான்).
37:54
37:54 قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ‏
قَالَ அவர் கூறுவார் اَنْتُمْ நீங்கள் مُّطَّلِعُوْنَ‏ எட்டிப்பார்ப்பீர்களா
37:54. (அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.
37:54. ‘‘(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கூறி,
37:54. (இப்போது அவன் எங்கிருக்கின்றான் என்பதை) நீங்கள் காண விரும்புகின்றீர்களா?”
37:54. (ஆகவே அவனை) நீங்கள் எட்டிப்பார்க்(கவிரும்பு)கின்றீர்களா? என்று கேட்டார்.
37:55
37:55 فَاطَّلَعَ فَرَاٰهُ فِىْ سَوَآءِ الْجَحِيْمِ‏
فَاطَّلَعَ அவர்எட்டிப்பார்ப்பார் فَرَاٰهُ அவனை பார்ப்பார் فِىْ سَوَآءِ நடுவில் الْجَحِيْمِ‏ நரகத்தின்
37:55. அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
37:55. அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு,
37:55. இவ்வாறு கூறிக்கொண்டே அவர் குனிவார். அப்போது நரகின் ஆழத்தில் அவனைக் கண்டு கொள்வார்.
37:55. பிறகு அவர் எட்டிப் பார்க்கிறார்: அப்போது அவனை நரகத்தின் மத்தியில் அவர் காண்கிறார்.
37:56
37:56 قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَـتُرْدِيْنِۙ‏
قَالَ அவர் கூறுவார் تَاللّٰهِ அல்லாஹ்வின் மீது சத்தியமாக اِنْ كِدْتَّ நிச்சயமாக நீ நெருக்கமாக இருந்தாய் لَـتُرْدِيْنِۙ‏ என்னை நாசமாக்குவதற்கு
37:56. (அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
37:56. (அவனை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்.''
37:56. மேலும், அவனை நோக்கிக் கூறுவார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயம் நீ என்னை அழித்துவிடவே முனைந்திருந்தாய்.
37:56. (அவனிடம்) “அல்லாஹ்வின்மீது சத்தியமாக, நீ என்னை (உலகில் இருக்கும் போது வழி கெடுத்து நரகக்) குழியில் தள்ளிவிடவே எத்தனித்தாய்” என்று கூறுவார்.
37:57
37:57 وَلَوْلَا نِعْمَةُ رَبِّىْ لَـكُنْتُ مِنَ الْمُحْضَرِيْنَ‏
وَلَوْلَا نِعْمَةُ அருள் இல்லாதிருந்தால் رَبِّىْ என் இறைவனின் لَـكُنْتُ நானும் ஆகி இருப்பேன் مِنَ الْمُحْضَرِيْنَ‏ ஆஜர்படுத்தப்படுபவர்களில்
37:57. “என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
37:57. ‘‘என் இறைவனுடைய அருள் எனக்குக் கிடைக்காதிருந்தால், நானும் (உன்னுடன் நரகத்தில்) சேர்க்கப்பட்டே இருப்பேன்.
37:57. என் இறைவனின் அருள் என்னை அரவணைக்காதிருந்தால், பிடித்துக் கொண்டு வரப்பட்டிருப்பவர்களில் நானும் ஒருவனாகி இருந்திருப்பேன்.
37:57. “என் இரட்சகனுடைய அருள் (என்மீது) இல்லாதிருந்தால், நானும், (நரகத்திற்கு) ஆஜர்படுத்தப்பட்டவர்களில் ஒருவனாக இருந்திருப்பேன்” (என்றும் கூறுவார்).
37:58
37:58 اَفَمَا نَحْنُ بِمَيِّتِيْنَۙ‏
اَفَمَا نَحْنُ நாங்கள் இல்லைதானே? بِمَيِّتِيْنَۙ‏ மரணிப்பவர்களாக
37:58. “(மற்றொரு முறையும்) நாம் இறந்து விடுவோமா?
37:58. (இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா?
37:58. சரி, இனி நாம் மரணிக்கக்கூடியவர் அல்லவே!
37:58. (பின்னர் சுவர்க்கவாசிகளிடம்,) “நாம் (மற்றொரு முறையும்) இறந்து விடுபவர்கள் இல்லையே? (என்பார்).
37:59
37:59 اِلَّا مَوْتَتَـنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‏
اِلَّا مَوْتَتَـنَا எங்கள் மரணத்தை தவிர الْاُوْلٰى முதல் وَمَا نَحْنُ இன்னும் நாங்கள் இல்லை بِمُعَذَّبِيْنَ‏ வேதனை செய்யப்படுபவர்களாக
37:59. “(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.
37:59. (பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சொர்க்கத்தில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்'' (என்றும் கூறுவார்).
37:59. நமக்கு வரவேண்டிய மரணமோ முன்பே வந்துவிட்டதே! இனி நமக்கு எவ்வித வேதனையும் ஏற்படப்போவதில்லை!”
37:59. “நம்முடைய முந்தைய மரணத்தைத் தவிர (வேறில்லை), நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர் (என்றும் சுவனவாசிகள் கூறுவர்).
37:60
37:60 اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் الْفَوْزُ வெற்றியாகும் الْعَظِيْمُ‏ மகத்தான
37:60. நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
37:60. நிச்சயமாக இதுதான் மகத்தான பாக்கியமாகும்.
37:60. திண்ணமாக, இதுவே மகத்தான வெற்றியாகும்.
37:60. நிச்சயமாக இதுவே மகத்தானதொரு வெற்றியாகும்!
37:61
37:61 لِمِثْلِ هٰذَا فَلْيَعْمَلِ الْعٰمِلُوْنَ‏
لِمِثْلِ போன்றதற்காக هٰذَا இது فَلْيَعْمَلِ அமல் செய்யட்டும். الْعٰمِلُوْنَ‏ அமல்செய்பவர்கள்
37:61. எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
37:61. ஏதும் நன்மை செய்யக்கூடியவர்கள் எல்லோரும் இதைப் போன்ற (நற்பேறுகளை பெறுவ)தற்காகவே பாடுபடவும்.
37:61. செயல்படுவோர் இத்தகைய வெற்றிக்காகவே செயல்பட வேண்டும்!
37:61. இது போன்றதற்காகவே, செயல்படக்கூடியவர்கள் செயல்படவும்.
37:62
37:62 اَذٰ لِكَ خَيْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ‏
اَذٰ لِكَ خَيْرٌ அது மிகச் சிறந்ததா نُّزُلًا விருந்தோம்பலால் اَمْ அல்லது شَجَرَةُ மரமா الزَّقُّوْمِ‏ ஸக்கூம்
37:62. அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?
37:62. (சொர்க்கத்தில் கிடைக்கும்) இது மேலான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம் மேலான விருந்தா?
37:62. இந்த விருந்து சிறந்ததா? அல்லது ‘ஜக்கூம்’ மரமா? (என்பதை நீங்கள் கூறுங்கள்).
37:62. (அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்) விருந்துபசாரத்தால் அது சிறந்ததா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளி மரமா?
37:63
37:63 اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنٰهَا அதை ஆக்கினோம் فِتْنَةً ஒரு சோதனையாக لِّلظّٰلِمِيْنَ‏ இணைவைப்ப வர்களுக்கு
37:63. நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
37:63. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை வேதனை செய்வதற்காகவே அதை உண்டு பண்ணி இருக்கிறோம்.
37:63. நாம் அந்த மரத்தை அக்கிரமக்காரர்களுக்கு ஒரு சோதனையாக ஆக்கியிருக்கிறோம்.
37:63. நிச்சயமாக நாம் அதனை, அநியாயகாரர்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியிருக்கின்றோம்.
37:64
37:64 اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىْۤ اَصْلِ الْجَحِيْمِۙ‏
اِنَّهَا நிச்சயமாக அது شَجَرَةٌ ஒரு மரமாகும் تَخْرُجُ முளைக்கின்ற(து) فِىْۤ اَصْلِ الْجَحِيْمِۙ‏ நரகத்தின் அடியில்
37:64. மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
37:64. மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு மரமாகும்.
37:64. அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து முளைத்து வருகின்ற ஒரு மரம்.
37:64. நிச்சயமாக அது, நரகத்தின் அடித் தளத்திலிருந்து வெளிப்படும் ஒரு மரமாகும்.
37:65
37:65 طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّيٰطِيْنِ‏
طَلْعُهَا அதன் கனிகள் كَاَنَّهٗ போல் இருக்கும் رُءُوْسُ தலைகளை الشَّيٰطِيْنِ‏ ஷைத்தான்களின்
37:65. அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.
37:65. அதன் கிளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும்.
37:65. அதன் பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருக்கும்.
37:65. (குழைகளுக்கொப்பான) அதன் பழங்கள், நிச்சயமாக ஷைத்தான்களின் தலைகளைப்போலிருக்கும்.
37:66
37:66 فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمٰلِـــٴُـــوْنَ مِنْهَا الْبُطُوْنَ ؕ‏
فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَاٰكِلُوْنَ சாப்பிடுவார்கள் مِنْهَا அதிலிருந்து فَمٰلِـــٴُـــوْنَ இன்னும் நிரப்புவார்கள் مِنْهَا அதிலிருந்து الْبُطُوْنَ ؕ‏ வயிறுகளை
37:66. நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
37:66. நிச்சயமாக அவர்கள் (தங்கள் பசிக் கொடுமையினால்) அதை புசிப்பார்கள்! இன்னும், (வேறு உணவின்றி) அதிலிருந்தே (தங்கள்) வயிறுகளை நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.
37:66. நரகவாசிகள்தாம் அதனைத் தின்பார்கள். மேலும் அதனைக் கொண்டே வயிறுகளை நிரப்புவார்கள்.
37:66. எனவே, நிச்சயமாக அவர்கள், திட்டமாக அதிலிருந்து உண்ணக் கூடியவர்கள், பின்னர் அதிலிருந்து வயிறுகளை நிரப்பிக் கொள்ளக் கூடியவர்கள்.
37:67
37:67 ثُمَّ اِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيْمٍ‌ۚ‏
ثُمَّ பின்னர் اِنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு عَلَيْهَا அதற்கு மேல் لَشَوْبًا கலக்கப்படும் مِّنْ حَمِيْمٍ‌ۚ‏ கொதி நீரில் இருந்து
37:67. பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
37:67. பின்னர், அதற்கு மேலும் நரகத்தில் கொதித்து சூடேறி இருக்கும் (சீழ் கலந்த) தண்ணீரே நிச்சயமாக அவர்களுக்கு பானமாக கொடுக்கப்படும்.
37:67. பிறகு, அத்துடன் அவர்களுக்கு கொதிக்கும் நீர் குடிக்கக் கிடைக்கும்.
37:67. பின்னர், நிச்சயமாக அதற்குமேல் கடுமையாகக் கொதிக்கவைக்கப்பட்டுள்ள நீரிலிருந்து கலப்பு (பானமு)ம் அவர்களுக்கு உண்டு.
37:68
37:68 ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَا۟اِلَى الْجَحِيْمِ‏
ثُمَّ اِنَّ பிறகு நிச்சயமாக مَرْجِعَهُمْ அவர்களின் மீளுமிடம் لَا۟اِلَى الْجَحِيْمِ‏ நரக நெருப்பின் பக்கம்தான்
37:68. அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.
37:68. (இவற்றைப் புசித்துக் குடித்த) பின்னர், நிச்சயமாக ‘ஜஹீம்' என்ற நரகத்திற்கே திருப்பப்படுவார்கள்.
37:68. பின்னர் அதே நரகத்திற்குத்தான் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும்.
37:68. பின்னர், நிச்சயமாக அவர்கள் திரும்பிச் செல்லுமிடம் நரகத்தின் பாலாகும்.
37:69
37:69 اِنَّهُمْ اَلْفَوْا اٰبَآءَهُمْ ضَآلِّيْنَۙ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اَلْفَوْا பெற்றார்கள் اٰبَآءَهُمْ தங்கள் மூதாதைகளை ضَآلِّيْنَۙ‏ வழிகெட்டவர்களாக
37:69. நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.
37:69. இவர்கள் தங்கள் மூதாதைகளை மெய்யாகவே வழி கெட்டவர்களாகக் கண்டு கொண்டார்கள்.
37:69. இவர்கள் எப்படிப்பட்ட மக்களென்றால், தம் முன்னோர்கள் நெறிதவறிச் செல்பவர்களாய் இருக்கக் கண்டார்கள்.
37:69. நிச்சயமாக, இவர்கள் தங்கள் மூதாதையரை வழிகெட்டவர்களாகக் கண்டார்கள்.
37:70
37:70 فَهُمْ عَلٰٓى اٰثٰرِهِمْ يُهْرَعُوْنَ‏
فَهُمْ இவர்கள் عَلٰٓى اٰثٰرِهِمْ அவர்களின் அடிச்சுவடுகளில் يُهْرَعُوْنَ‏ விரைகின்றார்கள்
37:70. ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.
37:70. அவ்வாறிருந்தும், அவர்களுடைய அடிச்சுவட்டையே இவர்கள் பின்பற்றி ஓடினார்கள்.
37:70. மேலும், அவர்களுடைய அடிச்சுவட்டிலேயே விரைந்து சென்றார்கள்.
37:70. ஆகவே, அவர்களுடைய அடிச்சுவடுகளின் மீதே இவர்கள் விரைந்து செல்ல தூண்டப்பட்டார்கள்.
37:71
37:71 وَلَـقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِيْنَۙ‏
وَلَـقَدْ ضَلَّ திட்டமாகவழி கெட்டுள்ளனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் اَكْثَرُ அதிகமானவர்கள் الْاَوَّلِيْنَۙ‏ முன்னோரில்
37:71. இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.
37:71. இவர்களுக்கு முன்னிருந்த பெரும்பாலானவர்களும் (இவ்வாறே) தவறான வழியில் சென்றனர்.
37:71. உண்மையில் அவர்களுக்கு முன்னர் பெரும்பாலோர் வழிகெட்டுப் போயிருந்தார்கள்.
37:71. முன்னோர்களில் பெரும்பாலோர் (இவ்வாறே) அவர்களுக்கு முன்னரும் திட்டமாக வழி கெட்டிருந்தனர்.
37:72
37:72 وَلَقَدْ اَرْسَلْنَا فِيْهِمْ مُّنْذِرِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் فِيْهِمْ அவர்களில் مُّنْذِرِيْنَ‏ அச்சமூட்டி எச்சரிப்பவர்களை
37:72. மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.
37:72. நிச்சயமாக நாம் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கும் (நம்) தூதர்களை அனுப்பியே வைத்தோம்.
37:72. மேலும், அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர்களையும் நாம் அனுப்பியிருந்தோம்.
37:72. மேலும், அவர்களுக்கிடையே அச்சமூட்டி எச்சரிக்கக்கூடியவர்களை திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம்.
37:73
37:73 فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَۙ‏
فَانْظُرْ ஆகவே நீர் பார்ப்பீராக! كَيْفَ كَانَ எப்படி இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُنْذَرِيْنَۙ‏ எச்சரிக்கப்பட்டவர்களின்
37:73. பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.
37:73. ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட இவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) பார்ப்பீராக.
37:73. இப்போது பாருங்கள்: அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் கதி என்னவாயிற்று?
37:73. ஆகவே, “அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டவர்களுடைய முடிவு எப்படி இருந்தது” என்பதை (நபியே!) நீர் காண்பீராக!
37:74
37:74 اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏
اِلَّا எனினும் عِبَادَ அடியார்கள் اللّٰهِ அல்லாஹ்வின் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான(வர்கள்)
37:74. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.  
37:74. அல்லாஹ்வுடைய பரிசுத்த எண்ணமுள்ள அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் எல்லோரும்) நம் வேதனைக்கு ஆளாகி விட்டார்கள்.
37:74. ஆனால், இத்தீய கதியிலிருந்து தப்பித்தவர்கள், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் மட்டுமே!
37:74. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.
37:75
37:75 وَلَقَدْ نَادٰٮنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِيْبُوْنَ  ۖ‏
وَلَقَدْ திட்டவட்டமாக نَادٰٮنَا நம்மை அழைத்தார் نُوْحٌ நூஹ் فَلَنِعْمَ நாம் மிகச் சிறந்தவர்கள் الْمُجِيْبُوْنَ  ۖ‏ பதில் தருபவர்களில்
37:75. அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
37:75. நூஹ் (நபி) நம்மிடம் (உதவி கோரி) பிரார்த்தனை செய்தார். (நாமோ) பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவர்களில் மிக்க சிறந்தவர்கள்.
37:75. (இதற்கு முன்னர்) நூஹ் நம்மை அழைத்திருக்கின்றார்; அப்போது எத்துணைச் சிறந்த முறையில் அவருக்கு நாம் பதிலளித்தோம் (என்பதைப் பாருங்கள்).
37:75. மேலும், நூஹ் நம்மைத் திட்டமாக அழைத்தார், (நாமே) பதிலளிப்போரில் மிக நல்லோர் (ஆவோம்).
37:76
37:76 وَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ  ۖ‏
وَنَجَّيْنٰهُ அவரை(யும்) பாதுகாத்தோம் وَاَهْلَهٗ அவரது குடும்பத்தாரையும் مِنَ الْكَرْبِ துக்கத்தில் இருந்து الْعَظِيْمِ  ۖ‏ மிகப் பெரிய
37:76. ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.
37:76. ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடுமையான சிரமத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
37:76. அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக்கொண்டோம்.
37:76. அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் மகத்தான (மிகப்பெரும்) கஷ்டத்திலிருந்து காப்பாற்றினோம்.
37:77
37:77 وَجَعَلْنَا ذُرِّيَّتَهٗ هُمُ الْبٰقِيْنَ  ۖ‏
وَجَعَلْنَا நாம் ஆக்கினோம் ذُرِّيَّتَهٗ هُمُ அவரது சந்ததிகளைத்தான் الْبٰقِيْنَ  ۖ‏ மீதமானவர்களாக
37:77. மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.
37:77. அவர்களுடைய சந்ததிகளைப் பிற்காலத்தில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.
37:77. இன்னும் அவருடைய சந்ததிகளையே நிலைத்திருக்கும்படிச் செய்தோம்.
37:77. அவருடைய சந்ததியையே எஞ்சியுள்ளோராய் நாம் ஆக்கினோம்.
37:78
37:78 وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ  ۖ‏
وَتَرَكْنَا நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம் عَلَيْهِ அவரைப் பற்றி فِى الْاٰخِرِيْنَ  ۖ‏ பின் வருபவர்களில்
37:78. மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
37:78. அவருடைய கீர்த்தியையும், பின்னுள்ளோர்களில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.
37:78. மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம்.
37:78. மேலும், அவருக்காக (அவருடைய கீர்த்தியை,) பின்னுள்ளோர்களில் (நிலைத்திருக்க) விட்டுவைத்தோம்.
37:79
37:79 سَلٰمٌ عَلٰى نُوْحٍ فِى الْعٰلَمِيْنَ‏
سَلٰمٌ பாதுகாப்பு உண்டாகட்டும் عَلٰى نُوْحٍ நூஹூக்கு فِى الْعٰلَمِيْنَ‏ உலகத்தார்களில்
37:79. “ஸலாமுன் அலாநூஹ்” - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
37:79. ‘‘ஸலாம்'' ஈடேற்றம் நூஹுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது.
37:79. சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்!
37:79. அகிலத்தார் அனைத்திலும் நூஹ்மீது ஸலாம் (சாந்தி) உண்டாவதாக.
37:80
37:80 اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களுக்கு
37:80. இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
37:80. இவ்வாறே நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
37:80. நன்மை புரிவோர்க்கு இவ்வாறே நாம் கூலி வழங்கி வருகின்றோம்.
37:80. நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்கிறவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
37:81
37:81 اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏
اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
37:81. நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:81. (நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் ஒருவராகவே இருந்தார்.
37:81. உண்மையில், நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் விளங்கினார்.
37:81. நிச்சயமாக அவர் விசுவாசிகளான நம் அடியார்களில் உள்ளவராவார்.
37:82
37:82 ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ‏
ثُمَّ பிறகு اَغْرَقْنَا நாம் மூழ்கடித்தோம் الْاٰخَرِيْنَ‏ மற்றவர்களை
37:82. பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.
37:82. (ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம்.
37:82. பிறகு, மற்ற கூட்டத்தார்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.
37:82. பின்னர், மற்றவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.
37:83
37:83 وَاِنَّ مِنْ شِيْعَتِهٖ لَاِبْرٰهِيْمَ‌ۘ‏
وَاِنَّ நிச்சயமாக مِنْ شِيْعَتِهٖ அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் لَاِبْرٰهِيْمَ‌ۘ‏ இப்ராஹீம்
37:83. நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.
37:83. நிச்சயமாக நூஹ் (நபி) உடைய வழியைப் பின்பற்றியவர்தான் இப்ராஹீம்.
37:83. மேலும், நூஹின் வழியில் செல்பவராகவே இப்ராஹீம் இருந்தார்;
37:83. மேலும், நிச்சயமாக அவருடைய வழியைப் பின் பற்றியவர்களில் உள்ள (ஒரு)வர் தாம் இப்றாஹீம்.
37:84
37:84 اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِيْمٍ‏
اِذْ جَآءَ அவர் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக! رَبَّهٗ தனது இறைவனிடம் بِقَلْبٍ உள்ளத்துடன் سَلِيْمٍ‏ ஈடேற்றம் பெற்ற
37:84. அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
37:84. அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில்,
37:84. தம் இறைவனிடம் பண்பட்ட தூய உள்ளத்துடன் அவர் வந்தபோது,
37:84. அவர் தன் இரட்சகனிடம் தூய (பண்பட்ட) இதயத்துடன் வந்த சமயத்தை (நபியே! நினைவு கூர்வீராக!)
37:85
37:85 اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! لِاَبِيْهِ தனது தந்தைக்கு(ம்) وَقَوْمِهٖ தனது மக்களுக்கும் مَاذَا எதை تَعْبُدُوْنَ‌ۚ‏ நீங்கள் வணங்குகிறீர்கள்
37:85. அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி “நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
37:85. அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்,
37:85. தம் தந்தையிடமும் தம் சமூகத்திடமும் இவ்வாறு கூறியபோது: “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்?
37:85. அவர் தம் தந்தை மற்றும் தம் சமூகத்தாரிடம் “எதனை நீங்கள் வணங்குகிறீர்கள்” என்று கூறியபோது.
37:86
37:86 اَٮِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِيْدُوْنَؕ‏
اَٮِٕفْكًا اٰلِهَةً பல பொய்யான தெய்வங்களையா دُوْنَ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி تُرِيْدُوْنَؕ‏ நீங்கள் நாடுகிறீர்கள்
37:86. “அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?”
37:86. ‘‘நீங்கள் அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையே விரும்புகிறீர்களா?
37:86. அல்லாஹ்வை விடுத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட கடவுளையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?
37:86. “நீங்கள் அல்லாஹ்வையன்றி (வணக்கத்திற்குரிய) பொய்யான தெய்வங்களை நாடுகிறீர்களா?”
37:87
37:87 فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ‏
فَمَا ظَنُّكُمْ உங்கள் எண்ணம் என்ன? بِرَبِّ இறைவனைப் பற்றி الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
37:87. “அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?” (என்று கேட்டார்.)
37:87. அவ்வாறாயின், உலகத்தாரைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?'' (என்று கேட்டார்).
37:87. பிறகு அகில உலகங்களின் அதிபதி பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?”
37:87. அவ்வாறாயின், “அகிலத்தாரின் இரட்சகனைப்பற்றி உங்கள் எண்ணமென்ன?” (என்றும் கேட்டார்)
37:88
37:88 فَنَظَرَ نَظْرَةً فِى النُّجُوْمِۙ‏
فَنَظَرَ அவர் பார்த்தார் نَظْرَةً ஒரு பார்வை فِى النُّجُوْمِۙ‏ நட்சத்திரங்களின் பக்கம்
37:88. பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
37:88. ‘‘பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்தார்.
37:88. பிறகு, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை செலுத்தினார்.
37:88. பின்னர், நட்சத்திரங்களில் (ஆழ்ந்த சிந்தனையோடு) ஒரு பார்வை பார்த்தார்.
37:89
37:89 فَقَالَ اِنِّىْ سَقِيْمٌ‏
فَقَالَ அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் سَقِيْمٌ‏ ஒரு நோயாளி
37:89. “நிச்சயமாக நான் நோயாளியாக இருக்கிறேன்” என்றும் கூறினார்.
37:89. நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் (போல் இருக்கிறது)'' என்று கூறினார்,
37:89. மேலும் கூறினார்: “நான் நோயுற்றிருக்கின்றேன்.”
37:89. பின்னர், நிச்சயமாக நான் நோயுற்றிருக்கிறேன் எனக்கூறினார்.
37:90
37:90 فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِيْنَ‏
فَتَوَلَّوْا ஆகவே, அவர்கள் விலகிச் சென்றனர் عَنْهُ அவரை விட்டு مُدْبِرِيْنَ‏ முகம் திருப்பியவர்களாக
37:90. எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
37:90. ஆகவே, அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்று விட்டனர்.
37:90. எனவே, அம்மக்கள் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
37:90. அவர்கள் அவரை (ஊரில்) விட்டு விட்டு (திருவிழாவிற்கு)ச் சென்று விட்டனர்.
37:91
37:91 فَرَاغَ اِلٰٓى اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ‌ۚ‏
فَرَاغَ ஆக, அவர் விரைந்தார் اِلٰٓى اٰلِهَتِهِمْ அவர்களின் தெய்வங்கள் பக்கம் فَقَالَ கூறினார் اَلَا تَاْكُلُوْنَ‌ۚ‏ நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
37:91. அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று; “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.
37:91. (பின்னர்) அவர், (அவர்களுடைய கோயிலுக்குள்) அவர்களுடைய தெய்வங்களிடம் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) ‘‘நீங்கள் இவற்றை ஏன் புசிப்பதில்லை?
37:91. பின்னர் அவர் அவர்களுடைய கடவுளரின் கோயிலுக்குள் இரகசியமாக நுழைந்து (அவற்றை நோக்கிக்) கூறினார்: “நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை?
37:91. பின்னர், அவர் அவர்களுடைய வணக்கத்துக்குரியவர்(களான தெய்வங்)களின் பால் (மறைவாகச்) சென்று (அங்கு அவர்களுக்கென படைக்கப் பட்டிருந்தவற்றைச் சுட்டிக்காட்டி) “நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கேட்டார்.
37:92
37:92 مَا لَـكُمْ لَا تَنْطِقُوْنَ‏
مَا لَـكُمْ உங்களுக்கு என்ன ஏற்பட்டது? لَا تَنْطِقُوْنَ‏ நீங்கள் ஏன் பேசுவதில்லை
37:92. “உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?” (என்றும் கேட்டார்.)
37:92. உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?'' என்று கேட்டார். (ஆனால், அவை பதில் அளிக்கவில்லை.)
37:92. நீங்கள் பேசாமலிருக்கிறீர்களே? உங்களுக்கு நேர்ந்ததென்ன?”
37:92. “உங்களுக்கென்ன (நேர்ந்தது?) நீங்கள் (ஏன்) பேசுவதில்லை?”(என்று கேட்டார்).
37:93
37:93 فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِالْيَمِيْنِ‏
فَرَاغَ பாய்ந்தார் عَلَيْهِمْ அவற்றின் மீது ضَرْبًۢا அடிப்பதற்காக بِالْيَمِيْنِ‏ வலக்கரத்தால்
37:93. பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
37:93. ஆகவே, அவற்றைப் பலமாக அடித்து (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார்.
37:93. அதன் பிறகு அவர் அவற்றின் மீது பாய்ந்து வலக்கரத்தால் தாக்கினார்.
37:93. பின்னர் அவற்றின் பால் சென்று தன் வலக்கையினால் அவைகளை அடித்து (உடைத்து) விட்டார்.
37:94
37:94 فَاَقْبَلُوْۤا اِلَيْهِ يَزِفُّوْنَ‏
فَاَقْبَلُوْۤا அவர்கள் வந்தனர் اِلَيْهِ அவரை நோக்கி يَزِفُّوْنَ‏ விரைந்தவர்களாக
37:94. (அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
37:94. ஆகவே, (திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதைக் கண்டதும் அதைப் பற்றிக் கேட்கவே) இப்ராஹீமிடம் ஓடி வந்தனர்.
37:94. பின்னர், அம்மக்கள் (திரும்பி வந்ததும்) அவரிடம் ஓடிவர,
37:94. (திருவிழாவிலிருந்து திரும்பி வந்து) அவர்பால் அவர்கள் விரைந்து (ஓடி) வந்தனர்.
37:95
37:95 قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَۙ‏
قَالَ அவர் கூறினார் اَتَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகிறீர்களா مَا تَنْحِتُوْنَۙ‏ நீங்கள் செதுக்குகின்றவற்றை
37:95. அவர் கூறினார்! “நீங்கள் செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”
37:95. அவர், (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா?
37:95. அவர் கேட்டார்: “என்ன, நீங்களாகவே செதுக்கிய பொருள்களையா நீங்கள் பூஜை செய்கிறீர்கள்?
37:95. அவர் (அவர்களிடம்) “நீங்கள் செதுக்கியவைகளை நீங்களே வணங்குகிறீர்களா?” என்று கேட்டார்.
37:96
37:96 وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ‏
وَاللّٰهُ அல்லாஹ்தான் خَلَقَكُمْ உங்களை(யும்) படைத்தான் وَمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதையும்
37:96. “உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”
37:96. உங்களையும், நீங்கள் சித்தரித்த அவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்'' என்றார்.
37:96. உண்மையில் அல்லாஹ்தானே உங்களையும் படைத்தான்; நீங்கள் உருவாக்கிய அப்பொருள்களையும் படைத்தான்?”
37:96. “உங்களையும், நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” (என்றார்).
37:97
37:97 قَالُوا ابْنُوْا لَهٗ بُنْيَانًا فَاَلْقُوْهُ فِى الْجَحِيْمِ‏
قَالُوا அவர்கள் கூறினர் ابْنُوْا கட்டுங்கள் لَهٗ அவருக்கு بُنْيَانًا ஒரு கட்டிடத்தை فَاَلْقُوْهُ அவரை எறிந்து விடுங்கள் فِى الْجَحِيْمِ‏ அந்த நெருப்பில்
37:97. அவர்கள் கூறினார்கள்: “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.”
37:97. (அதற்கு அவர்கள் பதில்கூற வகையறியாது கோபம் கொண்டு,) ‘‘இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.
37:97. அவர்கள் தமக்கிடையே கூறிக்கொண்டார்கள். “இவருக்காக ஒரு நெருப்புக் குண்டத்தை உருவாக்குங்கள்; கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இவரை வீசிவிடுங்கள்!”
37:97. (அவர்கள் கோபங் கொண்டு) இவருக்காக ஒரு கிடங்கை எழுப்புங்கள், பின்னர், (அதில் நெருப்பை உண்டாக்கி) அந்நெருப்பில் அவரைப்போட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.
37:98
37:98 فَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِيْنَ‏
فَاَرَادُوْا அவர்கள் நாடினர் بِهٖ அவருக்கு كَيْدًا ஒரு சூழ்ச்சியை فَجَعَلْنٰهُمُ நாம் அவர்களை(த்தான்) ஆக்கினோம் الْاَسْفَلِيْنَ‏ மிகத் தாழ்ந்தவர்களாக
37:98. (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
37:98. இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக்கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவானவர்களாக ஆக்கி விட்டோம்.
37:98. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் திட்டமிட்டனர். எனினும், நாம் அவர்களையே தோல்வியுறச்செய்தோம்.
37:98. ஆகவே, அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள், ஆனால், நாம் அவர்களை இழிவடைந்தோராய் ஆக்கிவிட்டோம்.
37:99
37:99 وَقَالَ اِنِّىْ ذَاهِبٌ اِلٰى رَبِّىْ سَيَهْدِيْنِ‏
وَقَالَ அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் ذَاهِبٌ செல்கிறேன் اِلٰى رَبِّىْ என் இறைவனின் பக்கம் سَيَهْدِيْنِ‏ அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்
37:99. மேலும், அவர் கூறினார்: “நிச்சயமாக நாம் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.”
37:99. பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) ‘‘நான் என் இறைவனிடமே செல்கிறேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்'' என்று கூறினார்.
37:99. இப்ராஹீம் கூறினார்: “நான் என்னுடைய இறைவனின் பக்கம் செல்கின்றேன்; அவனே எனக்கு வழிகாட்டுவான்.
37:99. (பின்னர், இப்றாஹீம்) “நிச்சயமாக நான், என் இரட்சகனின்பால் செல்லுகிறேன், அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்” என்றும் கூறினார்.
37:100
37:100 رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏
رَبِّ என் இறைவா هَبْ لِىْ எனக்கு தா! مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் (ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையை)
37:100. “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
37:100. ‘‘என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!'' (என்றார்.)
37:100. என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்.”
37:100. “என் இரட்சகனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாகத்) தந்தருள் புரிவாயாக” (என்றார்).
37:101
37:101 فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِيْمٍ‏
فَبَشَّرْنٰهُ ஆகவே, அவருக்கு நற்செய்தி கூறினோம் بِغُلٰمٍ ஒரு குழந்தையைக்கொண்டு حَلِيْمٍ‏ மிக சகிப்பாளரான
37:101. எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
37:101. ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.
37:101. (இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு) சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் அவருக்கு நற்செய்தி அறிவித்தோம்.
37:101. ஆதலால், மிகுந்த சகிப்புத்தன்மையுடைய (இஸ்மாயீல் எனும்) மகனைக் கொண்டு அவருக்கு நன்மாராயம் கூறினோம்.
37:102
37:102 فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ؕ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏
فَلَمَّا بَلَغَ பருவத்தை அடைந்தபோது مَعَهُ அவருடன் السَّعْىَ உழைக்கின்ற قَالَ அவர் கூறினார் يٰبُنَىَّ என் மகனே! اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰى பார்க்கிறேன் فِى الْمَنَامِ கனவில் اَنِّىْۤ நிச்சயமாக நான் اَذْبَحُكَ உன்னை பலியிடுவதாக فَانْظُرْ ஆகவே, நீ யோசி مَاذَا என்ன تَرٰى‌ؕ நீ கருதுகிறாய் قَالَ அவர் கூறினார் يٰۤاَبَتِ என் தந்தையே! افْعَلْ நீர் செய்வீராக! مَا تُؤْمَرُ‌ உமக்கு ஏவப்படுவதை سَتَجِدُنِىْۤ என்னை நீர் காண்பீர் اِنْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் مِنَ الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்களில் (ஒருவராக)
37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
37:102. (அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தன் மகனை நோக்கி) ‘‘என் அருமை மைந்தனே! நான் உன்னை (என் கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?'' என்று கேட்டார். அதற்கவர், ‘‘என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதைச் சகித்துக் கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்'' என்று கூறினார்.
37:102. அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராஹீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.”
37:102. எனவே, (இஸ்மாயீல்) அவருடன் சேர்ந்து உழைக்ககூடிய பருவத்தை அவர் அடைந்தபொழுது, அவர் (தன் மகனிடம்) ”என் அருமை மகனே! நிச்சயமாக நான், உன்னை அறு(த்து)ப் ப(லியிடுவ)தாக, நிச்சயமாக நான் கனவில் கண்டேன், (இதைப் பற்றி) நீ என்ன அபிப்ராயப்படுகிறாய்?” என்று கேட்டார், அ(தற்க)வர், “என் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள், அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகக் காண்பீர்கள்” என்று கூறினார்.
37:103
37:103 فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِ‌ۚ‏
فَلَمَّاۤ اَسْلَمَا அப்போது அவர்கள் இருவரும் முற்றிலும் பணிந்தனர் وَتَلَّهٗ அவர் அவரை கீழே சாய்த்தார் لِلْجَبِيْنِ‌ۚ‏ கன்னத்தின் மீது
37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் பணிந்து, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) அவரை முகங்குப்புறக் கிடத்தினார்.
37:103. இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராஹீம் மகனை முகங்குப்புறக் கிடத்தினார்.
37:103. ஆகவே, அவ்விருவரும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து, (இப்றாஹீமாகிய) அவர், (இஸ்மாயிலாகிய) அவரை (அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தியபோது,
37:104
37:104 وَنَادَيْنٰهُ اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏
وَنَادَيْنٰهُ நாம் அவரை அழைத்தோம் اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏ இப்ராஹீமே! என்று
37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
37:104. அச்சமயம் நாம் ‘‘இப்ராஹீமே!'' என அழைத்தோம்:
37:104. அப்போது நாம் அவரை அழைத்துக் கூறினோம்: “இப்ராஹீமே!
37:104. (அச்சமயம்) நாம் அவரை “இப்றாஹீமே!” என அழைத்தோம்.
37:105
37:105 قَدْ صَدَّقْتَ الرُّءْيَا ‌ ‌ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
قَدْ திட்டமாக صَدَّقْتَ உண்மைப்படுத்தினீர் الرُّءْيَا ۚ கனவை اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களுக்கு
37:105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
37:105. உண்மையாகவே நீர் உமது கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர் என்றும், நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்'' (என்றும் கூறி,)
37:105. நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம்.
37:105. “நிச்சயமாக நீர் (உம்முடைய) கனவை உண்மையாக்கி வைத்துவிட்டீர் நிச்சயமாக, நன்மை செய்கிறவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
37:106
37:106 اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِيْنُ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் الْبَلٰٓؤُا சோதனையாகும் الْمُبِيْنُ‏ தெளிவான
37:106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
37:106. ‘‘நிச்சயமாக இதுதான் மாபெரும் சோதனையாகும்'' (என்றும் கூறினோம்).
37:106. திண்ணமாக, இது ஒரு தெளிவான சோதனையாய் இருந்தது.”
37:106. “நிச்சயமாக இது_இதுவே தெளிவான பெரும் சோதனையாகும் (என்றும் கூறினோம்).
37:107
37:107 وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ‏
وَفَدَيْنٰهُ அவரை விடுதலை செய்தோம் بِذِبْحٍ ஒரு பலிப் பிராணியைக்கொண்டு عَظِيْمٍ‏ மகத்தான
37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
37:107. ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
37:107. மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம்.
37:107. மேலும், (அவருக்கு பதிலாக) ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவரைப் பகரமாக்கினோம்.
37:108
37:108 وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌ۖ‏
وَتَرَكْنَا عَلَيْهِ அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம் فِى الْاٰخِرِيْنَ‌ۖ‏ பின்னோரில்
37:108. இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
37:108. அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்.
37:108. பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம்.
37:108. இன்னும் அவருக்காக (அவரின் கீர்த்தியைப்) பின்னுள்ளோர்களில் (நிலைத்திருக்க) விட்டுவைத்தோம்.
37:109
37:109 سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ‏
سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகட்டும் عَلٰٓى اِبْرٰهِيْمَ‏ இப்றாஹீமுக்கு
37:109. “ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
37:109. (ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) ‘‘இப்ராஹீமுக்கு ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாவதாகுக' (என்றும் கூறுகின்றனர்).
37:109. சாந்தி உண்டாகட்டும், இப்ராஹீம் மீது!
37:109. இப்றாஹீமின் மீது சாந்தி உண்டாவதாக.
37:110
37:110 كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
كَذٰلِكَ இப்படித்தான் نَجْزِى நாம் கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களுக்கு
37:110. இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
37:110. இவ்வாறே, நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
37:110. நன்மை புரிவோருக்கு நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம்.
37:110. இவ்வாறே நன்மை செய்கிறவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
37:111
37:111 اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏
اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
37:111. நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:111. நிச்சயமாக அவர் மிக்க நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் இருந்தார்.
37:111. திண்ணமாக, நம்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
37:111. நிச்சயமாக அவர், விசுவாசிகளான நமது அடியார்களில் உள்ளவர்.
37:112
37:112 وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏
وَبَشَّرْنٰهُ நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம் بِاِسْحٰقَ இஸ்ஹாக்கைக் கொண்டு نَبِيًّا நபி(யாகவும்) مِّنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் (ஒருவராகவும்)
37:112. ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
37:112. இதன் பின்னர், நல்லடியார்களிலுள்ள இஸ்ஹாக் நபியை அவருக்கு (மற்றுமொரு மகனாகத் தருவதாக) நற்செய்தி கூறினோம்.
37:112. மேலும், இஸ்ஹாக் பற்றியும் அவருக்கு நாம் நற்செய்தி அறிவித்தோம். அவர் ஒரு நபியாகவும் சான்றோர்களுள் ஒருவராகவும் இருந்தார்.
37:112. இன்னும், நல்லோர்களிலுள்ளவரான இஸ்ஹாக்கை நபியாக அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.
37:113
37:113 وَبٰرَكْنَا عَلَيْهِ وَعَلٰٓى اِسْحٰقَ‌ؕ وَ مِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِيْنٌ‌‏
وَبٰرَكْنَا அருள் வளம் புரிந்தோம் عَلَيْهِ அவருக்கு(ம்) وَعَلٰٓى اِسْحٰقَ‌ؕ இஸ்ஹாக்கிற்கும் وَ مِنْ ذُرِّيَّتِهِمَا அவ்விருவரின் சந்ததியில் مُحْسِنٌ நல்லவரும் وَّظَالِمٌ தீங்கிழைத்தவரும் لِّنَفْسِهٖ தனக்கு مُبِيْنٌ‌‏ தெளிவாக
37:113. இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
37:113. அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நம் நற்பாக்கியங்களைச் சொரிந்தோம். அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர்.
37:113. மேலும், அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் அருட்பாக்கியங்களைப் பொழிந்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இன்னும் சிலர் தமக்குத் தாமே வெளிப்படையாக கொடுமை புரிபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
37:113. அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நமது பாக்கியங்களை நல்கினோம். அவ்விருவரின் சந்ததியரில் நன்மை செய்பவரும், பகிரங்கமாகத் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொள்பவரும் இருக்கின்றனர்.
37:114
37:114 وَلَقَدْ مَنَنَّا عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ‌ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக مَنَنَّا அருள்புரிந்தோம் عَلٰى مُوْسٰى மூஸாவிற்கு(ம்) وَهٰرُوْنَ‌ۚ‏ ஹாரூனுக்கு
37:114. மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
37:114. நிச்சயமாக நாம் மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் அருள் புரிந்தோம்.
37:114. மேலும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் பேருபகாரம் செய்தோம்.
37:114. நிச்சயமாக நாம் மூஸா, இன்னும் ஹாரூன் மீதும் பேருபகாரம் புரிந்தோம்.
37:115
37:115 وَنَجَّيْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ‌ۚ‏
وَنَجَّيْنٰهُمَا அவ்விருவரையு(ம்) பாதுகாத்தோம் وَقَوْمَهُمَا அவ்விருவரின் மக்களையும் مِنَ الْكَرْبِ துக்கத்தில் இருந்து الْعَظِيْمِ‌ۚ‏ பெரிய
37:115. அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்தோம்.
37:115. அவ்விருவரையும், அவர்களுடைய மக்களையும் கடுமையான துன்பத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
37:115. அவர்களையும் அவர்களின் சமூகத்தார்களையும் மாபெரும் துன்பத்திலிருந்து விடுவித்தோம்.
37:115. அவ்விருவரையும், அவ்விருவரின் சமூகத்தாரையும் மகத்தானதொரு துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
37:116
37:116 وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ‌ۚ‏
وَنَصَرْنٰهُمْ அவர்களுக்கு உதவினோம் فَكَانُوْا ஆகவே, ஆனார்கள் هُمُ அவர்கள்தான் الْغٰلِبِيْنَ‌ۚ‏ வெற்றியாளர்களாக
37:116. மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
37:116. அவர்களுக்கு உதவிபுரிந்தோம். ஆகவே, அவர்கள் (தங்கள் எதிரிகளை) வெற்றி கொண்டார்கள்.
37:116. அவர்களுக்கு உதவி வழங்கினோம். அதன் காரணமாக அவர்களே வெற்றி கொள்வோராகத் திகழ்ந்தார்கள்.
37:116. மேலும், நாம் அவர்களுக்கு உதவிசெய்தோம், ஆகவே, (தங்கள் விரோதிகளின் மீது) அவர்கள்தாம் வெற்றிபெற்றோராக இருந்தனர்.
37:117
37:117 وَاٰتَيْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِيْنَ‌ۚ‏
وَاٰتَيْنٰهُمَا அவ்விருவருக்கும் கொடுத்தோம் الْكِتٰبَ வேதத்தை الْمُسْتَبِيْنَ‌ۚ‏ தெளிவான
37:117. அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.
37:117. அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்.
37:117. மிகத் தெளிவான வேதத்தை அவர்களுக்கு வழங்கினோம்.
37:117. அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்.
37:118
37:118 وَهَدَيْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ‌ۚ‏
وَهَدَيْنٰهُمَا அவ்விருவரையும் நேர்வழி நடத்தினோம் الصِّرَاطَ பாதையில் الْمُسْتَقِيْمَ‌ۚ‏ நேரான
37:118. இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.
37:118. அவ்விருவரையும் நேரான வழியிலும் நாம் செலுத்தினோம்.
37:118. மேலும், அவர்களுக்கு நேரிய வழியையும் காண்பித்தோம்.
37:118. அவ்விருவருக்கும் நேர்வழியையும் நாம் காண்பித்தோம்.
37:119
37:119 وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى الْاٰخِرِيْنَۙ‏
وَتَرَكْنَا நற்பெயரை ஏற்படுத்தினோம் عَلَيْهِمَا அவ்விருவருக்கும் فِى الْاٰخِرِيْنَۙ‏ பின்னோரில்
37:119. இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
37:119. பிற்காலத்திலும் அவ்விருவரின் கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
37:119. பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் நிலைத்திருக்கச் செய்தோம்.
37:119. மேலும், அவ்விருவருக்காக (அவ்விருவரின் கீர்த்தியை) பின்னோர்களில் (நிலைத்திருக்க) விட்டு வைத்தோம்.
37:120
37:120 سَلٰمٌ عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ‏
سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகட்டும் عَلٰى مُوْسٰى மூஸாவிற்கும் وَهٰرُوْنَ‏ ஹாரூனுக்கும்
37:120. “ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
37:120. (ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்).
37:120. சாந்தி உண்டாகட்டும், மூஸா மற்றும் ஹாரூன் மீது!
37:120. மூஸா, இன்னும் ஹாரூன் மீதும் சாந்தி உண்டாவதாக.
37:121
37:121 اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களுக்கு
37:121. இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
37:121. நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கிறோம்.
37:121. நன்மை செய்வோருக்கு நாம் இத்தகைய நற்கூலியையே வழங்குகின்றோம்.
37:121. நிச்சயமாக நாம் நன்மை செய்கிறவர்களுக்கு இவ்வாறே கூலி கொடுக்கின்றோம்.
37:122
37:122 اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏
اِنَّهُمَا நிச்சயமாக அவ்விருவரும் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் உள்ளவர்கள் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
37:122. நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
37:122. நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் இருந்தனர்.
37:122. உண்மையில் அவ்விருவரும் நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் உள்ளவர்களாவர்.
37:122. நிச்சயமாக அவ்விருவரும் விசுவாசங் கொண்டவர்களான நமது அடியார்களில் உள்ளவர்களாவர்.
37:123
37:123 وَاِنَّ اِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏
وَاِنَّ இன்னும் நிச்சயமாக اِلْيَاسَ இல்யாஸ் لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ தூதர்களில் உள்ளவர்தான்
37:123. மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
37:123. நிச்சயமாக இல்யாஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
37:123. மேலும், இல்யாஸும் திண்ணமாக இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார்.
37:123. நிச்சயமாக இல்யாஸும் (நமது தூதர்களாக) அனுப்பப்பட்டவர்களில் உள்ளவராவர்.
37:124
37:124 اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ‏
اِذْ قَالَ அவர் கூறிய சமயத்தை لِقَوْمِهٖۤ தனது மக்களுக்கு اَلَا تَتَّقُوْنَ‏ நீங்கள் அஞ்சிக் கொள்ள மாட்டீர்களா?
37:124. அவர் தம் சமூகத்தவரிடம்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
37:124. அவர் தன் மக்களை நோக்கி, ‘‘நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?'' என்று கூறிய சமயத்தில்,
37:124. அவர் தம் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறிய சந்தர்ப்பத்தை நினைத்துப்பாருங்கள்: நீங்கள் அஞ்சுவதில்லையா?
37:124. அவர் தம் சமூகத்தாரிடம், நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படமாட்டீர்களா? என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக!)
37:125
37:125 اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخٰلِقِيْنَۙ‏
اَتَدْعُوْنَ நீங்கள் வணங்குகிறீர்களா? بَعْلًا பஃலை وَّتَذَرُوْنَ விட்டுவிடுகிறீர்களா? اَحْسَنَ மிக அழகியவனை الْخٰلِقِيْنَۙ‏ படைப்பாளர்களில்
37:125. “நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
37:125. ‘‘படைப்பவர்களில் மிக அழகானவனை நீங்கள் புறக்கணித்து விட்டு, ‘பஅலு' என்னும் சிலையை வணங்குகிறீர்களா?
37:125. ‘பஅலை’* அழைக்கின்றீர்கள். படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்தவனை விட்டுவிடுகின்றீர்களே!
37:125. “படைப்பவர்களில் மிகச் சிறந்தவனை நீங்கள் விட்டு விட்டு ‘பஅல்’ (என்னும்) விக்ரகத்தை நீங்கள் அழைக்கின்றீர்களா?
37:126
37:126 اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏
اللّٰهَ அல்லாஹ்வை رَبَّكُمْ உங்கள் இறைவனான وَرَبَّ இன்னும் இறைவனுமான اٰبَآٮِٕكُمُ உங்கள் மூதாதைகளின் الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களான
37:126. “அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”
37:126. உங்கள் இறைவனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவனுமான அல்லாஹ்வை விட்டு விடுகிறீர்களா?''
37:126. அதாவது, உங்களின் அதிபதியும், உங்களுக்கு முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் அதிபதியுமான அல்லாஹ்வை!
37:126. உங்கள் இரட்சகனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இரட்சகனுமான அல்லாஹ்வை(விட்டு விடுகிறீர்களா என்று கூறினார்).
37:127
37:127 فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ‏
فَكَذَّبُوْهُ அவரை பொய்ப்பித்தனர் فَاِنَّهُمْ ஆகவே நிச்சயமாக அவர்கள் لَمُحْضَرُوْنَۙ‏ ஆஜர்படுத்தப்படுவார்கள்
37:127. ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.
37:127. ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள்.
37:127. ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகையால், திண்ணமாக அவர்கள் இப்போது தண்டனைக்காகக் கொண்டுவரப்படுபவர்களாய் உள்ளனர்.
37:127. பின்னர், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள், ஆதலால், நிச்சயமாக அவர்கள் (நம்மிடம் தண்டனைக்காக) முன்னிலைப் படுத்தபடுகிறவர்களாவர்.
37:128
37:128 اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏
اِلَّا எனினும் عِبَادَ اللّٰهِ அல்லாஹ்வின் அடியார்கள் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான
37:128. அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
37:128. அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களைத் தவிர, (நல்லடியார்களுக்கு நல்ல சன்மானமுண்டு.)
37:128. ஆனால், வாய்மையாளர்களாய் ஆக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர!
37:128. தேர்ந்தெடுக்கப்பட்டோரான அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர (இவர்களுக்கு நல்ல சன்மானமுண்டு).
37:129
37:129 وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَۙ‏
وَتَرَكْنَا நற்பெயரை ஏற்படுத்தினோம் عَلَيْهِ அவருக்கு فِى الْاٰخِرِيْنَۙ‏ பின்னோரில்
37:129. மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
37:129. பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
37:129. மேலும், பின் தோன்றிய தலைமுறைகளில் இல்யாஸுடைய நற்புகழை நிலைப்படுத்தினோம்.
37:129. இன்னும், அவருக்காக (அவருடைய கீர்த்தியை)ப் பின்னுள்ளோர்களில் (நிலைக்க) விட்டுவைத்தோம்.
37:130
37:130 سَلٰمٌ عَلٰٓى اِلْ يَاسِيْنَ‏
سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகட்டும் عَلٰٓى اِلْ يَاسِيْنَ‏ இல்யாசுக்கு
37:130. “ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
37:130. (ஆகவே உலகத்திலுள்ளவர்கள்) ‘‘இல்யாஸுக்கு ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாவதாகுக!'' (என்று கூறுகின்றனர்).
37:130. சாந்தி உண்டாகட்டும், இல்யாஸ் மீது!
37:130. “இல்யாஸீன் மீது சாந்தி உண்டாவதாக!”
37:131
37:131 اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இப்படித்தான் نَجْزِى கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களுக்கு
37:131. இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
37:131. நிச்சயமாக நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.
37:131. நன்மை செய்வோருக்குத் திண்ணமாக நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம்.
37:131. நிச்சயமாக நன்மை செய்கிறவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.
37:132
37:132 اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏
اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
37:132. நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)அடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:132. நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் ஒருவராக இருந்தார்.
37:132. உண்மையில் நம்மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராய் அவர் திகழ்ந்தார்.
37:132. நிச்சயமாக அவர் விசுவாசங் கொண்டவர்களான நமது அடியார்களில் உள்ளவராவர்.
37:133
37:133 وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِيْنَؕ‏
وَاِنَّ நிச்சயமாக لُوْطًا லூத் لَّمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ தூதர்களில்
37:133. மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
37:133. நிச்சயமாக லூத்தும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
37:133. மேலும், இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டவர்களுள் லூத்தும் ஒருவராய்த் திகழ்ந்தார்.
37:133. நிச்சயமாக ‘லூத்’தும் (நமது தூதர்களாக) அனுப்பப்பட்டவர்களில் உள்ளவராவர்.
37:134
37:134 اِذْ نَجَّيْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِيْنَۙ‏
اِذْ نَجَّيْنٰهُ நாம் அவரை(யும்) பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக! وَاَهْلَهٗۤ அவரது குடும்பத்தாரையும் اَجْمَعِيْنَۙ‏ அனைவரையும்
37:134. அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -
37:134. அவரையும் அவருடைய குடும்பம் முழுவதையும் பாதுகாத்துக் கொண்டோம்.
37:134. அந்தச் சந்தர்ப்பத்தை நினைவு கூருங்கள்: லூத்தையும், அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றினோம்.
37:134. அவரையும், அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் நாம் காப்பாற்றியதை (நினைவு கூர்வீராக!)
37:135
37:135 اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ‏
اِلَّا தவிர عَجُوْزًا ஒரு மூதாட்டியை فِى الْغٰبِرِيْنَ‏ தங்கி விடுபவர்களில் (தங்கிவிடுகின்ற)
37:135. பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
37:135. ஆயினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர, அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள்.
37:135. பின்தங்கியவர்களோடு சேர்ந்துவிட்ட ஒரு கிழவியைத் தவிர!
37:135. தங்கிவிட்டோர்களில் இருந்துவிட்ட (அவருடைய) கிழ (மனை)வியைத் தவிர (அவள் வேதனை செய்யப்படுபவர்களுடன் தங்கிவிட்டாள்).
37:136
37:136 ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ‏
ثُمَّ பிறகு دَمَّرْنَا நாம் அழித்தோம் الْاٰخَرِيْنَ‏ மற்றவர்களை
37:136. பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
37:136. (பிறகு பாவம் செய்த) மற்றவர்களையும் நாம் அழித்து விட்டோம்.
37:136. பின்னர், எஞ்சியிருந்த மற்றவர்கள் அனைவரையும் அடியோடு அழித்துவிட்டோம்.
37:136. பின்னர், மற்றவர்களை நாம் அழித்துவிட்டோம்.
37:137
37:137 وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَيْهِمْ مُّصْبِحِيْنَۙ‏
وَاِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَتَمُرُّوْنَ கடந்து செல்கிறீர்கள் عَلَيْهِمْ அவர்களை مُّصْبِحِيْنَۙ‏ காலையிலும்
37:137. இன்னும், நீங்கள் காலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
37:137. ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்காக ஷாம் தேசம் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களை கடந்து செல்கிறீர்கள்.
37:137. நீங்கள் (இப்போது இரவிலும், பகலிலும்) அழிந்து போன அவர்களின் நகரங்களின் அருகே கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்!
37:137. ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்குச் சென்று திரும்புகின்ற போது) காலைப் பொழுதை அடைந்தவர்களாக நிச்சயமாக நீங்கள் அவர்களின் (ஊரின்) மீதே நடந்து செல்கின்றீர்கள்.
37:138
37:138 وَبِالَّيْلِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‌‏
وَبِالَّيْلِ‌ؕ இரவிலும் اَفَلَا تَعْقِلُوْنَ‌‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
37:138. இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?  
37:138. (இதைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெறவேண்டாமா?
37:138. நீங்கள் அறிவு பெறமாட்டீர்களா, என்ன?
37:138. இரவிலும் (அவ்வூர்ப்பக்கம் செல்கின்றீர்கள்). இதனைக்கொண்டு நீங்கள் நல்லறிவு பெறமாட்டீர்களா?
37:139
37:139 وَاِنَّ يُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏
وَاِنَّ நிச்சயமாக يُوْنُسَ யூனுஸ் لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ தூதர்களில் உள்ளவர்தான்
37:139. மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
37:139. நிச்சயமாக யூனுஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
37:139. திண்ணமாக, யூனுஸும் இறைத்தூதர்களுள் ஒருவராய் இருந்தார்.
37:139. நிச்சயமாக யூனுஸும் (நம் தூதர்களாக) அனுப்பப்பட்டவர்களில் உள்ளவராவர்.
37:140
37:140 اِذْ اَبَقَ اِلَى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ‏
اِذْ اَبَقَ அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக اِلَى الْفُلْكِ கப்பலை நோக்கி الْمَشْحُوْنِۙ‏ நிரம்பிய(து)
37:140. நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
37:140. (மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்).
37:140. அவர் ஒரு நிரம்பிய கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைத்துப் பாருங்கள்!
37:140. நிரப்பப்பட்ட கப்பலின் பக்கம் அவர் வெருண்டோடிய சமயத்தில் (அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டு அதில் அவர் ஏறிக்கொண்டார்).
37:141
37:141 فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِيْنَ‌ۚ‏
فَسَاهَمَ குலுக்கிப் போட்டார் فَكَانَ ஆகிவிட்டார் مِنَ الْمُدْحَضِيْنَ‌ۚ‏ குலுக்கலில் பெயர்வந்தவர்களில்
37:141. அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
37:141. அ(க்கப்பலில் உள்ள)வர்கள் சீட்டு (குலுக்கி)ப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்.
37:141. பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்து கொண்டார். அதில் தோற்றுப் போனார்.
37:141. அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுப்போட்டனர், (அதில் அவர் பெயர்வரவே கடலில் எறியப்பட வேண்டிய) தோல்வியுற்றோரில் அவர் ஆகிவிட்டார்.
37:142
37:142 فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِيْمٌ‏
فَالْتَقَمَهُ அவரை விழுங்கியது الْحُوْتُ திமிங்கிலம் وَهُوَ அவர் مُلِيْمٌ‏ பழிப்புக்குரியவர்
37:142. ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.
37:142. (அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்.
37:142. இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது; அவரோ பழிப்புக்குரியவராய் இருந்தார்.
37:142. எனவே, (இவரை அவர்கள் கடலில் எறியவே) அவர் நிந்தனைக்கு ஆளானவராகயிருக்க, (ஒரு) மீன் அவரை விழுங்கிற்று.
37:143
37:143 فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِيْنَۙ‏
فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ நிச்சயமாக அவர் இருந்திருக்கவில்லை என்றால் مِنَ الْمُسَبِّحِيْنَۙ‏ துதிப்பவர்களில்
37:143. ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
37:143. நிச்சயமாக அவர் நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால்,
37:143. அவர் இறைவனைத் துதிப்பவர்களுள் ஒருவராய் இல்லாதிருந்தால்
37:143. நிச்சயமாக அவர் (மீன் வயிற்றினுள் நம்மைத்) துதி செய்து கொண்டிருப்பவர்களில் இல்லாமலிருந்திருந்தால்,
37:144
37:144 لَلَبِثَ فِىْ بَطْنِهٖۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‌ۚ‏
لَلَبِثَ தங்கி இருந்திருப்பார் فِىْ بَطْنِهٖۤ அதனுடைய வயிற்றில் اِلٰى يَوْمِ நாள் வரை يُبْعَثُوْنَ‌ۚ‏ எழுப்பப்படுகின்ற
37:144. (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
37:144. (மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.
37:144. மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே இருந்திருப்பார்.
37:144. (மறுமைக்காக படைப்பினங்களாகிய) அவர்கள் எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில், அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.
37:145
37:145 فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِيْمٌ‌ۚ‏
فَنَبَذْنٰهُ அவரை எறிந்தோம் بِالْعَرَآءِ பெருவெளியில் وَهُوَ அவர் سَقِيْمٌ‌ۚ‏ நோயுற்றவராக இருந்தார்
37:145. ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
37:145. (அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்.
37:145. இறுதியில் அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலைவெளியில் அவரை நாம் எறிந்தோம்.
37:145. (அவர் துதி செய்ததன் காரணமாக) அவர் நோயுற்றவராக இருந்தநிலையில் வெட்டவெளியில், (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறிந்தோம்.
37:146
37:146 وَاَنْۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّنْ يَّقْطِيْنٍ‌ۚ‏
وَاَنْۢبَتْنَا முளைக்க வைத்தோம் عَلَيْهِ அவருக்கு அருகில் شَجَرَةً ஒரு செடியை مِّنْ يَّقْطِيْنٍ‌ۚ‏ சுரைக்காய்
37:146. அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.
37:146. ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச்செடியை முளைப்பித்தோம்.
37:146. பிறகு படர்கின்ற கொடியை அவர் மீது (நிழலிட) முளைக்கச் செய்தோம்.
37:146. மேலும், அவரின் மீது (நிழல்தருவதற்காக) ஒரு சுரைக்கொடியை நாம் முளைப்பித்தோம்.
37:147
37:147 وَاَرْسَلْنٰهُ اِلٰى مِائَةِ اَلْفٍ اَوْ يَزِيْدُوْنَ‌ۚ‏
وَاَرْسَلْنٰهُ அவரைஅனுப்பினோம் اِلٰى مِائَةِ اَلْفٍ ஒரு இலட்சம் اَوْ அல்லது يَزِيْدُوْنَ‌ۚ‏ அதிகமானவர்களுக்கு
37:147. மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
37:147. பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம் தூதராக அனுப்பி வைத்தோம்.
37:147. பின்னர், அவரை நாம் ஓர் இலட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் அனுப்பினோம்.
37:147. இன்னும், நாம் அவரை ஒரு நூறாயிரம், அல்லது (அதற்கு) அதிகமானவர்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்தோம்.
37:148
37:148 فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍؕ‏
فَاٰمَنُوْا நம்பிக்கைகொண்டனர் فَمَتَّعْنٰهُمْ ஆகவே, நாம் அவர்களுக்கு சுகமளித்தோம் اِلٰى حِيْنٍؕ‏ ஒரு காலம் வரை
37:148. ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள்;ஆகையால் நாம் அவர்களை ஒரு காலம் வரை சுகிக்கச் செய்தோம்.  
37:148. அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டார்கள். ஆதலால், நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரை சுகமாக வாழவைத்தோம்.
37:148. அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். பிறகு ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்களை வாழவிட்டோம்.
37:148. ஆகவே, அவர்கள் விசுவாசங்கொண்டார்கள், ஆகவே, நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரையில் சுகமாக வாழவைத்தோம்.
37:149
37:149 فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَۙ‏
فَاسْتَفْتِهِمْ ஆகவே, அவர்களிடம் கேட்பீராக! اَلِرَبِّكَ உமது இறைவனுக்கு الْبَنَاتُ பெண் பிள்ளைகளும் وَلَهُمُ அவர்களுக்கு الْبَنُوْنَۙ‏ ஆண் பிள்ளைகளுமா
37:149. (நபியே!) அவர்களிடம் கேளும்: உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
37:149. (நபியே!) அவர்களை கேட்பீராக: ‘‘(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? (விரும்புகிறீர்கள்.)
37:149. பின்னர், இவர்களிடம் சற்று வினவுவீராக: உம் இறைவனுக்குப் பெண்மக்கள்; இவர்களுக்கு ஆண் மக்களா? (இந்தப் பேச்சு இவர்களின் மனதுக்கு சரியெனப் படுகிறதா என்ன?)
37:149. (நபியே! இணைவைப்பவர்களான) அவர்களிடம், “உமது இரட்சகனுக்கு பெண்மக்களும், அவர்களுக்கு ஆண்மக்களுமா” என்று நீர் விளக்கம் கேட்பீராக!
37:150
37:150 اَمْ خَلَقْنَا الْمَلٰٓٮِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ‏
اَمْ ? خَلَقْنَا நாம் படைத்தோம் الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை اِنَاثًا பெண்களாகவா وَّهُمْ அவர்கள் شٰهِدُوْنَ‏ பார்த்துக்கொண்டு இருந்தார்களா?
37:150. அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
37:150. அல்லது நாம் வானவர்களைப் பெண்களாக படைத்த(தாகக் கூறுகின்றனரே அ)தை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
37:150. அல்லது உண்மையில், நாம் வானவர்களைப் பெண் மக்களாகவே படைத்திருக்கின்றோமா? கண்ணால் பார்த்தவற்றைத்தான் இவர்கள் கூறுகின்றார்களா?
37:150. அல்லது மலக்குகளைப் பெண்களாக, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க நாம் படைத்தோமா?
37:151
37:151 اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَيَقُوْلُوْنَۙ‏
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مِّنْ اِفْكِهِمْ தங்களது பெரும் பொய்யில் لَيَقُوْلُوْنَۙ‏ அவர்கள் கூறுகின்றனர்
37:151. “அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”
37:151,152,151. ‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!
37:151. நன்கு கேட்டுக்கொள்ளுங்கள். தாமாகப் புனைந்துதான் அவர்கள் கூறுகின்றார்கள்;
37:151. அறிந்து கொள்வீராக! நிச்சயமாக இவர்கள் தங்கள் பொய்யினால் கூறுகின்றனர்,
37:152
37:152 وَلَدَ اللّٰهُۙ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
وَلَدَ اللّٰهُۙ அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான் وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்
37:152. “அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
37:151,152,152. ‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!
37:152. அல்லாஹ் குழந்தைகளைப் பெற்றெடுத்தான் என்று. மேலும், உண்மையில் இவர்கள் பொய்யர்களாவர்.
37:152. அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் (என்று)_ நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
37:153
37:153 اَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِيْنَؕ‏
اَصْطَفَى அவன் தேர்தெடுத்துக் கொண்டானா? الْبَنَاتِ பெண் பிள்ளைகளை عَلَى الْبَنِيْنَؕ‏ ஆண் பிள்ளைகளை விட
37:153. (அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
37:153. (அதிலும்) ஆண் சந்ததிகளைவிட்டு, பெண் சந்ததிகளையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?
37:153. ஆண்மக்களை விட்டு விட்டு பெண்மக்களை அல்லாஹ் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
37:153. (அதிலும்) ஆண்(மக்)களைவிட பெண்(மக்)களை அவன் தெரிவு செய்து கொண்டானா?
37:154
37:154 مَا لَـكُمْ كَيْفَ تَحْكُمُوْنَ‏
مَا لَـكُمْ உங்களுக்கு என்ன? كَيْفَ எப்படி تَحْكُمُوْنَ‏ தீர்ப்பளிக்கிறீர்கள்
37:154. உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
37:154. (இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நியாயம் (இருக்கிறது.) ஏன் இவ்வாறு (பொய்யாக) தீர்மானிக்கிறீர்கள்?
37:154. உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எப்படிப்பட்ட முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள்!
37:154. (இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இதைப் பற்றி) எவ்வாறு நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்?
37:155
37:155 اَفَلَا تَذَكَّرُوْنَ‌ۚ‏
اَفَلَا تَذَكَّرُوْنَ‌ۚ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
37:155. நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
37:155. நீங்கள் இதை கவனித்துச் சிந்திக்க வேண்டாமா?
37:155. நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
37:155. நீங்கள் (என்ன கூறுகிறீர்களென்று) சிந்திக்கமாட்டீர்களா?
37:156
37:156 اَمْ لَـكُمْ سُلْطٰنٌ مُّبِيْنٌۙ‏
اَمْ لَـكُمْ உங்களிடம் ஏதும் இருக்கிறதா? سُلْطٰنٌ ஆதாரம் مُّبِيْنٌۙ‏ தெளிவான
37:156. அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
37:156. அல்லது உங்களுக்கு (இதற்காக ஒரு) தெளிவான ஆதாரம் இருக்கிறதா?
37:156. அல்லது (உங்களின் வாதங்களுக்கு) தெளிவான ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா?
37:156. அல்லது உங்களுக்கு (இதற்காக ஏதேனும்) தெளிவான சான்று உண்டா?
37:157
37:157 فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
فَاْتُوْا بِكِتٰبِكُمْ உங்கள் வேதத்தை கொண்டு வாருங்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
37:157. நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
37:157. (கிறிஸ்தவர்களே! அவ்வாறு) நீங்கள் கூறுவது உண்மையாகவே இருப்பின், அதற்கு உங்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வாருங்கள்.
37:157. நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் அத்தகைய உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!
37:157. (அவ்வாறு கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் (அதற்கு) உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டுவாருங்கள்.
37:158
37:158 وَجَعَلُوْا بَيْنَهٗ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ‌ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ‏
وَجَعَلُوْا அவர்கள் ஏற்படுத்தினர் بَيْنَهٗ அவனுக்கு இடையில் وَبَيْنَ இன்னும் இடையில் الْجِنَّةِ ஜின்களுக்கு نَسَبًا ؕ ஓர் உறவை وَلَقَدْ திட்டவட்டமாக عَلِمَتِ அறிந்து கொண்டனர் الْجِنَّةُ ஜின்கள் اِنَّهُمْ நிச்சயமாக தாங்கள் لَمُحْضَرُوْنَۙ‏ ஆஜர்படுத்தப்படுவோம்
37:158. அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
37:158. (நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர்.
37:158. அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும் இடையே இவர்கள் உறவுமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். உண்மையில் இவர்கள் குற்றவாளிகளாய் கொண்டு வரப்படுவார்கள் என்பதை வானவர்கள் நன்கறிந்துள்ளார்கள்.
37:158. மேலும் (நபியே!) இவர்கள், அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் வம்சா வழி உறவை (கற்பனையாக) ஆக்குகின்றனர், ஜின்கள் (தண்டனைக்காக) நிச்சயமாக தாம் (அல்லாஹ்விடம்) கொண்டுவரப்படுபவர்கள் என்று திட்டமாக அறிந்தும் இருகின்றனர்.
37:159
37:159 سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ‏
سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் عَمَّا يَصِفُوْنَۙ‏ அவர்கள் வர்ணிப்பதை விட்டும்
37:159. எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
37:159. அவர்கள் கூறும் இவ்வர்ணிப்புகளை விட்டு அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
37:159. (மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்:) அல்லாஹ் தூய்மை வாய்ந்தவன், அந்தத் தன்மைகளை விட்டு!
37:159. அவர்கள் வர்ணிக்கின்றவைகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
37:160
37:160 اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏
اِلَّا தவிர عِبَادَ அடியார்களை اللّٰهِ அல்லாஹ்வின் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான
37:160. அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.
37:160. அல்லாஹ்வின் கலப்பற்ற நம்பிக்கையுள்ள அடியார்களைத் தவிர, (அவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள்.)
37:160. அதாவது, அவனுடைய வாய்மையான அடியார்களைத் தவிர மற்றவர்கள் (அவனைக் குறித்து) கற்பிக்கின்ற தன்மைகளை விட்டு!
37:160. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் தண்டனைக்குரியவர்களாவர்).
37:161
37:161 فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَۙ‏
فَاِنَّكُمْ நிச்சயமாக நீங்களும் وَمَا تَعْبُدُوْنَۙ‏ நீங்கள் வணங்குகின்றவையும்
37:161. ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
37:161,162,161. (நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
37:161. ஆக, நீங்களும் நீங்கள் வணங்கி வருகின்ற இந்தத் தெய்வங்களும் ,
37:161. எனவே நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவைகளும்,
37:162
37:162 مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ بِفٰتِنِيْنَۙ‏
مَاۤ اَنْـتُمْ நீங்கள் இல்லை عَلَيْهِ அதன் மூலம் بِفٰتِنِيْنَۙ‏ வழி கெடுப்பவர்களாக
37:162. (எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
37:161,162,162. (நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
37:162. அல்லாஹ்வை விட்டு எவரையும் திசைதிருப்பிவிட முடியாது;
37:162. (ஒன்று சேர்ந்தபோதிலும் எவரையும் அல்லாஹ்வாகிய) அவனுக்கு விரோதமாக நீங்கள் வழி கெடுத்து விடுபவர்களல்லர்_
37:163
37:163 اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيْمِ‏
اِلَّا தவிர مَنْ هُوَ صَالِ எரிந்து பொசுங்குகின்றவரை الْجَحِيْمِ‏ நரகத்தில்
37:163. நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
37:163. நரகம் செல்லக்கூடியவனைத் தவிர.
37:163. ஆனால், கொழுந்துவிட்டு எரியும் நரக நெருப்பில் எரிந்து கரிந்து போகக் கூடியவனைத்தவிர!
37:163. நரகத்தில் புக இருக்கிறானே அவனை தவிர.
37:164
37:164 وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌۙ‏
وَمَا مِنَّاۤ எங்களில் (யாரும்) இல்லை اِلَّا لَهٗ அவருக்கு இருந்தே தவிர مَقَامٌ தகுதி مَّعْلُوْمٌۙ‏ ஒரு குறிப்பிட்ட(து)
37:164. (மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்:) “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.”
37:164. (வானவர்கள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு;
37:164. மேலும், எங்களுடைய நிலைமை என்னவெனில், எங்களில் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஓர் இடம் இருக்கின்றது.
37:164. மேலும், (மலக்குகளாகிய) எங்களில் எவருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் (வானத்தில்) அவருக்கில்லாமலில்லை (என்றும்),
37:165
37:165 وَّاِنَّا لَـنَحْنُ الصَّآفُّوْنَ‌ۚ‏
وَّاِنَّا لَـنَحْنُ நிச்சயமாக நாங்கள்தான் الصَّآفُّوْنَ‌ۚ‏ அணிவகுப்பவர்கள்
37:165. “நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).
37:165. நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கிறோம்.
37:165. மேலும், திண்ணமாக, நாங்களே அணிவகுத்து நின்று பணிபுரிபவர்களாய் இருக்கின்றோம்.
37:165. நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே இருக்கின்றோம் (என்றும்),
37:166
37:166 وَاِنَّا لَـنَحْنُ الْمُسَبِّحُوْنَ‏
وَاِنَّا لَـنَحْنُ நிச்சயமாக நாங்கள்தான் الْمُسَبِّحُوْنَ‏ துதித்து தொழுபவர்கள்
37:166. “மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.”
37:166. நிச்சயமாக நாங்கள் அவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருக்கிறோம்.
37:166. இன்னும் திண்ணமாக, நாங்களே துதி செய்பவர்களாய் இருக்கின்றோம்.
37:166. நிச்சயமாக நாங்கள் (அவனைப் புகழ்ந்து) துதிசெய்பவர்களாகவும் இருக்கிறோம் (என்றும் மலக்குகள் கூறுகிறார்கள்).
37:167
37:167 وَاِنْ كَانُوْا لَيَقُوْلُوْنَۙ‏
وَاِنْ كَانُوْا நிச்சயமாக இருந்தனர் لَيَقُوْلُوْنَۙ‏ கூறுகின்றவர்களாக
37:167. (நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்:
37:167. (நபியே! இதற்குமுன் மக்காவாசிகளாகிய) அவர்கள் கூறிக் கொண்டிருந்ததாவது:
37:167. திண்ணமாக, இவர்கள் முன்பு கூறிக்கொண்டிருந்தார்கள்,
37:167. மேலும், (நபியே!) இதற்கு முன் மக்காவாசிகளாகிய) அவர்கள் உறுதியாக கூறக்கூடியவர்களாக இருந்தனர் (அதாவது)
37:168
37:168 لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِيْنَۙ‏
لَوْ اَنَّ عِنْدَنَا நிச்சயமாக எங்களிடம் இருந்திருந்தால் ذِكْرًا வேதம் مِّنَ الْاَوَّلِيْنَۙ‏ முன்னோரிடம்இருந்த
37:168. “முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -
37:168. ‘‘முன்சென்றவர்களிடம் இருந்த வேதத்தைப் போன்று ஒரு வேதம் எங்களிடம் இருந்தால்,
37:168. “முந்தைய சமுதாயங்களுக்குக் கிடைத்திருந்த அறிவுரை எங்களுக்கும் கிடைத்திருந்தால்,
37:168. “முன்னுள்ளோர்களிடமிருந்து, (அல்லாஹ்வை) நினைவூட்டும் (வேதம்) ஏதேனுமொன்று நிச்சயமாக எங்களிடமிருந்திருந்தால்_
37:169
37:169 لَـكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏
لَـكُنَّا நாங்கள் ஆகியிருப்போம் عِبَادَ அடியார்களாக اللّٰهِ அல்லாஹ்வின் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான
37:169. “அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.
37:169. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களாகி விடுவோம்'' என்றார்கள்.
37:169. நாங்களும் அல்லாஹ்வின் வாய்மை மிக்க அடியார்களாக விளங்கி இருப்போம்” என்று!
37:169. நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வையே வணங்குவதற்கென) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களான அல்லாஹ்வுடைய அடியார்களாக இருந்திருப்போம்.
37:170
37:170 فَكَفَرُوْا بِهٖ‌ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏
فَكَفَرُوْا بِهٖ‌ அதை அவர்கள் நிராகரித்து விட்டனர் فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்
37:170. ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
37:170. எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் முடிவை) இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
37:170. ஆயினும் (அது வந்துவிட்டபோது) இவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள்! இனி (தமது நடத்தைக்கான விளைவை) அதிவிரைவில் இவர்கள் புரிந்து கொள்வார்கள்.
37:170. அப்போது (இவ்வேதம் வரவே,) இதை அவர்கள் நிராகரித்துவிட்டனர், அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
37:171
37:171 وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِيْنَ ‌ۖ‌ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக سَبَقَتْ முந்தி விட்டது كَلِمَتُنَا நமது வாக்கு لِعِبَادِنَا நமதுஅடியார்களுக்கு الْمُرْسَلِيْنَ ۖ‌ۚ‏ தூதர்களான
37:171. தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.
37:171. தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம் வாக்கு நிச்சயமாக ஏற்பட்டு விட்டது.
37:171. நம்மால் தூதர்களாக அனுப்பப்பட்ட நம்முடைய அடியார்களுக்கு நாம் முன்னரே இவ்வாறு வாக்குறுதி அளித்துள்ளோம்.
37:171. மேலும், நம்முடைய தூதர்களாகிய அடியார்களுக்கு நம்முடைய வாக்கு முந்திவிட்டது.
37:172
37:172 اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَ ‏
اِنَّهُمْ لَهُمُ நிச்சயமாக அவர்கள்தான் الْمَنْصُوْرُوْنَ ‏ உதவப்படுவார்கள்
37:172. (அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -
37:172. ஆதலால், நிச்சயமாக அவர்கள்தான் உதவி செய்யப்படுவார்கள்.
37:172. நிச்சயமாய், அவர்கள் உதவி செய்யப்படுவார்கள்.
37:172. நிச்சயமாக அவர்கள்_அவர்களே தான் உதவி செய்யப்படுபவர்கள்.
37:173
37:173 وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ‏
وَاِنَّ நிச்சயமாக جُنْدَنَا நமது இராணுவம்தான் لَهُمُ அவர்கள்தான் الْغٰلِبُوْنَ‏ வெற்றி பெறுபவர்கள்
37:173. மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.
37:173. நிச்சயமாக நம் படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்)தான் வெற்றி பெறுவார்கள்.
37:173. மேலும், திண்ணமாக நமது படையினர்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வார்கள்.
37:173. மேலும் நிச்சயமாக, நம்முடைய படையினர்கள் தான், அவர்களே திட்டமாக மிகைத்தவர்களாக இருப்பர்.
37:174
37:174 فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ‏
فَتَوَلَّ ஆகவே, விலகி இருப்பீராக! عَنْهُمْ அவர்களை விட்டு حَتّٰى حِيْنٍۙ‏ சிறிது காலம் வரை
37:174. (ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
37:174. ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரை (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீர் விலகியிரும்.
37:174. ஆகவே, (நபியே!) இவர்களை இவர்களுடைய நிலையிலேயே சிறிது காலம் விட்டுவிடும்!
37:174. (ஒரு குறிப்பிட்ட) நேரம் வரை அவர்களைவிட்டும் (சிறிதுகாலம்) புறக்கணித்துவிடுவீராக!
37:175
37:175 وَاَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُوْنَ‏
وَاَبْصِرْ (நீரும்) பார்ப்பீராக! هُمْ அவர்களை فَسَوْفَ يُبْصِرُوْنَ‏ விரைவில் பார்ப்பார்கள்
37:175. (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
37:175. (இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீராக. அதிசீக்கிரத்தில் அவர்களும் அதைக் கண்டு கொள்வார்கள்.
37:175. மேலும், பார்த்துக் கொண்டிரும்! மிக விரைவில் இவர்களும் தாங்களாகவே கண்டு கொள்வார்கள்.
37:175. இன்னும் அவர்களைப் பார்த்திரும், (அவர்களுக்கு நேர இருப்பதை) அடுத்து அவர்களும் பார்ப்பார்கள்.
37:176
37:176 اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ‏
اَفَبِعَذَابِنَا ?/நமது வேதனையை يَسْتَعْجِلُوْنَ‏ அவசரமாக வேண்டுகின்றனர்
37:176. நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
37:176. (என்னே!) நம் வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?
37:176. என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா?
37:176. நம்முடைய வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
37:177
37:177 فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ الْمُنْذَرِيْنَ‏
فَاِذَا نَزَلَ அது இறங்கிவிட்டால் بِسَاحَتِهِمْ அவர்களின் முற்றத்தில் فَسَآءَ மிக கெட்டதாக இருக்கும் صَبَاحُ காலை الْمُنْذَرِيْنَ‏ எச்சரிக்கப்பட்டவர்களின்
37:177. (அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.
37:177. (நம் வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும் சமயத்தில், அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும்.
37:177. அது அவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின், எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாள் மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்.
37:177. பின்னர் (நம்முடைய வேதனை) அவர்களது முற்றத்தில் இறங்கிவிடுமானால், அப்போது எச்சரிக்கப்பட்டவர்களின் காலை(ப்பொழுது) மிகக் கெட்டதாக இருக்கும்.
37:178
37:178 وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ‏
وَتَوَلَّ عَنْهُمْ அவர்களை விட்டு விலகி இருப்பீராக! حَتّٰى حِيْنٍۙ‏ சிறிது காலம் வரை
37:178. ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.
37:178. (நபியே!) அவர்களை நீர் சிறிது காலம் புறக்கணித்து விடுவீராக.
37:178. எனவே, சிறிது காலத்திற்கு இவர்களை விட்டுவிடும்!
37:178. மேலும், ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை அவர்களை விட்டும் புறக்கணித்து விடுவீராக!
37:179
37:179 وَّاَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُوْنَ‏
وَّاَبْصِرْ (நீரும்) அவர்களைப் பார்ப்பீராக! فَسَوْفَ يُبْصِرُوْنَ‏ (விரைவில்) பார்ப்பார்கள்
37:179. (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
37:179. (அவர்களுக்கு வேதனை வருவதை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. அவர்களும் (அதை) நிச்சயமாகக் காண்பார்கள்.
37:179. மேலும், பார்த்துக் கொண்டிரும்; மிக விரைவில் இவர்களும் தாமாகவே கண்டு கொள்வார்கள்!
37:179. இன்னும் (அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேதனை வருவதை எதிர்) பார்ப்பீராக! (தங்களுக்கு ஏற்படப்போவதை) அவர்கள் அடுத்துப்பார்ப்பார்கள்.
37:180
37:180 سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ‌ۚ‏
سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் رَبِّكَ உமது இறைவன் رَبِّ அதிபதியான الْعِزَّةِ கண்ணியத்தின் عَمَّا يَصِفُوْنَ‌ۚ‏ அவர்கள் வர்ணிப்பதை விட்டும்
37:180. அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
37:180. அவர்களுடைய (தப்பான) வர்ணிப்புகளை விட்டும் மிக்க கண்ணியத்திற்குரிய உமது இறைவன் மிகப் பரிசுத்தமானவன்.
37:180. தூய்மையானவன் உம் இறைவன்; கண்ணியத்திற்கு உரித்தானவன்; இவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருக்கும் அனைத்தையும் விட்டு (அவன் தூய்மையானவன்!)
37:180. அவர்கள் வர்ணிப்பதைவிட்டும் கண்ணியத்திற்குரியவனாகிய உமது இரட்சகன் (மிகத்) தூயவன்.
37:181
37:181 وَسَلٰمٌ عَلَى الْمُرْسَلِيْنَ‌ۚ‏
وَسَلٰمٌ ஈடேற்றம் உண்டாகுக! عَلَى الْمُرْسَلِيْنَ‌ۚ‏ இறைத் தூதர்களுக்கு
37:181. மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
37:181. (அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் (அனைவர்) மீதும் (அவனுடைய) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!
37:181. மேலும், சாந்தி உண்டாகட்டும்; இறைத்தூதர்கள் அனைவர் மீதும்!
37:181. மேலும், அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட (அவனின் தூது)வர்கள் மீது சாந்தி உண்டாவதாக.
37:182
37:182 وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‌‏
وَالْحَمْدُ புகழும் உண்டாகுக! لِلّٰهِ அல்லாஹ்விற்கு رَبِّ அதிபதியான الْعٰلَمِيْنَ‌‏ அகிலங்களின்
37:182. வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).
37:182. புகழ் அனைத்தும் உலகத்தாரின் இறைவனான அல்லாஹ்வுக்கு உரித்தானது.
37:182. இன்னும் புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரித்தானது!
37:182. இன்னும் புகழ் அனைத்தும் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்விற்கே (உரியதாகும்).