39. ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)
மக்கீ, வசனங்கள்: 75
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
39:1 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ
تَنْزِيْلُ இறக்கப்பட்டது الْكِتٰبِ வேதமாகும் مِنَ اللّٰهِ அல்லாஹ்வின் புறத்தில் இருந்து الْعَزِيْزِ மிகைத்தவனும் الْحَكِيْمِ மகா ஞானவானுமான
39:1. (யாவரையும்) மிகைத்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.
39:1. அல்லாஹ்வினால்தான் இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது. அவன் (அனைவரையும்) மிகைத்தவன் (அனைவரையும் அறிந்த) ஞானமுடையவன்.
39:1. வல்லமை மிக்கவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கிறது.
39:1. (யாவரையும்) மிகைத்தவனான, தீர்க்கமான அறிவுடையவனான அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கிவைக்கபட்டுள்ளதாகும்.
39:2 اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ فَاعْبُدِ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَ ؕ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنَاۤ இறக்கினோம் اِلَيْكَ உமக்கு الْكِتٰبَ இந்த வேதத்தை بِالْحَقِّ உண்மையுடன் فَاعْبُدِ ஆகவே, வணங்குவீராக اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصًا தூய்மைப்படுத்தியவராக لَّهُ அவனுக்கு الدِّيْنَ ؕ வழிபாட்டை
39:2. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக.
39:2. (நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கிறோம். ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வருவீராக.
39:2. (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்மீது சத்தியத்துடன் இறக்கியிருக்கின்றோம். எனவே, நீர் அல்லாஹ்வையே வழிபடும். தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்!
39:2. (நபியே!) நிச்சயமாக நாமே உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை உமக்கு இறக்கிவைத்திருக்கின்றோம், ஆகவே, நீர் முற்றிலும் மார்க்கத்தை (வணக்கத்தை) அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவராக அல்லாஹ்வை வணங்குவீராக!
39:3 اَلَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ ؕ وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ ۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِيُقَرِّبُوْنَاۤ اِلَى اللّٰهِ زُلْفٰى ؕ اِنَّ اللّٰهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِىْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ
اَلَا அறிந்துகொள்ளுங்கள்! لِلّٰهِ அல்லாஹ்விற்கே الدِّيْنُ வழிபாடுகள் الْخَالِصُ ؕ பரிசுத்தமான(து) وَالَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا எடுத்துக் கொண்டார்கள் مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اَوْلِيَآءَ ۘ தெய்வங்களை مَا نَعْبُدُ நாங்கள்வணங்குவதில்லை هُمْ அவர்களை اِلَّا தவிர لِيُقَرِّبُوْنَاۤ அவர்கள் எங்களை நெருக்கமாக்குவதற்காக اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் زُلْفٰى ؕ அந்தஸ்தால் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَحْكُمُ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் فِىْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ؕ அவர்கள் தர்க்கிப்பவற்றில் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِىْ நேர்வழி செலுத்த மாட்டான் مَنْ எவர் هُوَ அவர் كٰذِبٌ பொய்யர்களை كَفَّارٌ நிராகரிப்பாளர்களை
39:3. அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
39:3. பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை, தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ‘‘அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர நாம் இவற்றை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை.
39:3. அறிந்துகொள்ளுங்கள். தூய்மையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். எவர்கள் அவனை விட்டுவிட்டு வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ, அவர்கள் (தம்முடைய இச்செயலுக்கு இப்படிக் காரணம் கூறுகிறார்கள்:) “எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் அவர்களை வணங்குகின்றோம்.” எவற்றில் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றார்களோ, அவை அனைத்திலும் திண்ணமாக அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாகவும், சத்தியத்தை நிராகரிப்பவனாகவும் இருக்கும் எவனுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
39:3. தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே உரித்தானது என்பதை அறிந்துகொள்வீராக! இன்னும், அவனையன்றி (மற்றவர்களைப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களே அத்தகையவர்கள், “எங்களை அவர்கள் நெருக்கத்தால் அல்லாஹ்வுக்கு சமீபமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவேயன்றி அவர்களை நாங்கள் வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்), எதில் அவர்கள் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அது பற்றி, நிச்சயமாக அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எவன் (உண்மையை) மிக்க மறுக்கிறவனாக, பொய்யனாக இருக்கிறானோ அவனை நேர் வழியில் செலுத்தமாட்டான்.
39:4 لَوْ اَرَادَ اللّٰهُ اَنْ يَّـتَّخِذَ وَلَدًا لَّاصْطَفٰى مِمَّا يَخْلُقُ مَا يَشَآءُ ۙ سُبْحٰنَهٗ ؕ هُوَ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ
لَوْ اَرَادَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் اَنْ يَّـتَّخِذَ எடுத்துக்கொள்ள وَلَدًا ஒரு குழந்தையை لَّاصْطَفٰى தேர்ந்தெடுத்து இருப்பான் مِمَّا يَخْلُقُ தான் படைத்தவற்றில் مَا يَشَآءُ ۙ தான் நாடுவதை سُبْحٰنَهٗ ؕ அவன் மகா பரிசுத்தமானவன் هُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் الْوَاحِدُ ஒருவன் الْقَهَّارُ அடக்கி ஆளுபவன்
39:4. அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
39:4. அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், அவன் படைத்தவற்றில் அவன் விரும்பிய (மேலான)வற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும், இத்தகைய விஷயங்களிலிருந்து) அவன் மிக பரிசுத்தமானவன். அல்லாஹ் ஒரே ஒருவன்தான். (அவனுக்குச் சந்ததி இல்லை. அனைவரையும்) அவன் அடக்கி ஆளுகிறான்.
39:4. அல்லாஹ் எவரையேனும் மகனாக எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், தன்னுடைய படைப்புகளிலிருந்து தான் நாடுபவரைத் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் இதனை (எவரையேனும் தனக்கு மகனாக ஆக்கிக்கொள்வதை) விட்டுத் தூய்மையானவன்! அவன்தான் அல்லாஹ்! தனித்தவனும், யாவற்றையும் அடக்கி ஆளுபவனும் ஆவான்.
39:4. அல்லாஹ் (தனக்கொரு) பிள்ளையை எடுத்துகொள்ள வேண்டுமென்று நாடியிருந்தால், அவன் படைத்தவற்றிலிருந்து அவன் நாடியதைத் தேர்ந்தெடுத்துகொண்டிருப்பான், அவன் மிகப் பரிசுத்தமானவன், அவனே (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற (வல்லமை மிக்க)வனாகிய, தனித்தவனாகிய அல்லாஹ்.
39:5 خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ۚ يُكَوِّرُ الَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى الَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَؕ كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّىؕ اَلَا هُوَ الْعَزِيْزُ الْغَفَّارُ
خَلَقَ அவன் படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ பூமியை بِالْحَقِّ ۚ உண்மையான காரணத்திற்காக يُكَوِّرُ சுருட்டுகின்றான் الَّيْلَ இரவை عَلَى النَّهَارِ பகல் மீது وَيُكَوِّرُ இன்னும் சுருட்டுகின்றான் النَّهَارَ பகலை عَلَى الَّيْلِ இரவின் மீது وَسَخَّرَ அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான் الشَّمْسَ சூரியனை وَالْقَمَرَؕ சந்திரனை كُلٌّ எல்லாம் يَّجْرِىْ ஓடுகின்றன لِاَجَلٍ ஒரு தவணையை நோக்கி مُّسَمًّىؕ குறிப்பிட்ட اَلَا அறிந்து கொள்ளுங்கள் هُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْغَفَّارُ மகா மன்னிப்பாளன்
39:5. அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
39:5. அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கிறான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை விரிக்கிறான். அவனே பகலைச் சுருட்டி இரவை விரிக்கிறான். சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கிறான். இவை ஒவ்வொன்றும், அவற்றுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே!) அறிந்துகொள்வீராக: நிச்சயமாக அவன் தான் அனைவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.
39:5. அவன் வானங்களையும், பூமியையும் சத்தியத்தோடு படைத்திருக்கின்றான். அவனே இரவைச் சுருட்டி பகலை விரிக்கின்றான்; பகலைச் சுருட்டி இரவை விரிக்கின்றான்; சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அறிந்து கொள்ளுங்கள். அவன் வலிமை மிக்கவனும், மன்னித்து அருள்பவனுமாவான்!
39:5. அவன் வானங்களை மற்றும் பூமியை உண்மையைக் கொண்டு படைத்திருக்கின்றான், அவன் இரவைப் பகலின் மீது மூடிக்கொள்ளச் செய்கின்றான், இன்னும், பகலை இரவின் மீது மூடிக்கொள்ள செய்கின்றான், சூரியனையும், சந்திரனையும் (தன் ஆதிக்கத்தில்) அவன் வசப்படுத்தியும் வைத்திருக்கின்றான், (இவை) ஒவ்வொன்றும், (குறிப்பிடப்பட்ட எல்லைக்குள்) குறிப்பிடப்பட்ட தவணை வரை நடக்கின்றது, அறிந்து கொள்ளுங்கள், அவனே (யாவரையும்) மிகைத்தவன், மிகுதியாக மன்னிக்கிறவன்.
39:6 خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِيَةَ اَزْوَاجٍ ؕ يَخْلُقُكُمْ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْۢ بَعْدِ خَلْقٍ فِىْ ظُلُمٰتٍ ثَلٰثٍ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ فَاَ نّٰى تُصْرَفُوْنَ
خَلَقَكُمْ அவன் உங்களைப் படைத்தான் مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து ثُمَّ பிறகு جَعَلَ படைத்தான் مِنْهَا அதில் இருந்து زَوْجَهَا அதன் ஜோடியை وَاَنْزَلَ இன்னும் உருவாக்கினான் لَـكُمْ உங்களுக்காக مِّنَ الْاَنْعَامِ கால்நடைகளில் ثَمٰنِيَةَ எட்டு اَزْوَاجٍ ؕ ஜோடிகளை يَخْلُقُكُمْ அவன் உங்களை படைக்கின்றான் فِىْ بُطُوْنِ வயிற்றில் اُمَّهٰتِكُمْ உங்கள் தாய்மார்களின் خَلْقًا ஒரு படைப்பாக مِّنْۢ بَعْدِ பின்னர் خَلْقٍ ஒரு படைப்புக்கு فِىْ ظُلُمٰتٍ இருள்களில் ثَلٰثٍ ؕ மூன்று ذٰ لِكُمُ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் رَبُّكُمْ உங்கள் இறைவனாகிய لَهُ அவனுக்கே الْمُلْكُ ؕ ஆட்சி அனைத்தும் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ ۚ அவனைத் தவிர فَاَ نّٰى ஆகவே எவ்வாறு تُصْرَفُوْنَ நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
39:6. அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,
39:6. அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதரிலிருந்து தான் படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கிறான்.) மேலும், (உங்கள் நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கிறான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். இந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கே உரியன. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
39:6. அவனே உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். பின்னர் அவனே அந்த உயிரிலிருந்து அதன் துணையை உண்டாக்கினான். அவனே உங்களுக்காக எட்டு கால்நடைகளை இணைகளாகப் படைத்தான். அவன் உங்கள் அன்னையரின் வயிற்றில், மூன்று இருட்திரைகளினுள் ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். (இந்தக் காரியங்கள் செய்கின்ற) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவனாவான். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. பிறகு, நீங்கள் எங்கிருந்து திசை திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்?
39:6. (ஆரம்பத்தில்) ஒரே ஆத்மாவிலிருந்து அவன் உங்களைப் படைத்தான், பின்னர், அதிலிருந்து அதனுடைய மனைவியை ஆக்கினான், இன்னும், கால்நடைகளில் எட்டு(வகை)ஜோடிகளை இறக்கி (அருளி)யிருக்கின்றான், உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒரு படைப்புக்குப்பின், மற்றொரு படைப்பாக மூன்று இருள்களில் (அவைகளுக்கிடையில்) உங்களைப் படைக்கின்றான், அவன்தான் உங்களுடைய இரட்சகனாகிய அல்லாஹ், ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. ஆகவே, (அவனுக்கு வணக்கம் செலுத்துவதைவிட்டும்) நீங்கள் எவ்வாறு (மற்றவற்றை வணங்கத்) திருப்பப்படுகிறீர்கள்?
39:7 اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنْكُمْ وَلَا يَرْضٰى لِعِبَادِهِ الْـكُفْرَ ۚ وَاِنْ تَشْكُرُوْا يَرْضَهُ لَـكُمْ ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى ؕ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
اِنْ تَكْفُرُوْا நீங்கள் நிராகரித்தால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَنِىٌّ தேவையற்ற முழு நிறைவானவன் عَنْكُمْ உங்களை விட்டு وَلَا يَرْضٰى அவன் விரும்ப மாட்டான் لِعِبَادِهِ தனது அடியார்களுக்கு الْـكُفْرَ ۚ நிராகரிப்பை وَاِنْ تَشْكُرُوْا நீங்கள் நன்றி செலுத்தினால் يَرْضَهُ அதை அவன் விரும்புவான் لَـكُمْ ؕ உங்களுக்கு وَلَا تَزِرُ சுமக்காது وَازِرَةٌ பாவியான ஓர் ஆன்மா وِّزْرَ பாவத்தை اُخْرٰى ؕ இன்னொரு ஆன்மாவின் ثُمَّ اِلٰى رَبِّكُمْ பிறகு உங்கள் இறைவன் பக்கமே مَّرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் இருக்கின்றது فَيُنَبِّئُكُمْ அவன் உங்களுக்கு அறிவிப்பான் بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ؕ நீங்கள் செய்து கொண்டிருந்ததை اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ நெஞ்சங்களில் உள்ளதை
39:7. (அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன், மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.
39:7. அவனை நீங்கள் நிராகரித்துவிட்ட போதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தேவையற்றவனாக இருக்கிறான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்.
39:7. நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக விரும்புகின்றான். சுமை சுமப்பவர் எவரும் பிறரின் சுமையைச் சுமக்கமாட்டார். இறுதியில், உங்கள் இறைவனின் பக்கமே நீங்கள் எல்லோரும் திரும்ப வேண்டியுள்ளது. அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அவன் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அவன் உள்ளங்களின் நிலைமைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
39:7. (அவனை) நீங்கள் நிராகரித்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ், உங்களைவிட்டும் தேவையற்றவன், இன்னும், தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை அவன் பொருந்திக்கொள்வதில்லை, மேலும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்தினால், உங்களுக்காக அதனை அவன் திருப்தியடைவான், (பாவத்தைச் சுமக்கின்ற) எந்த ஆத்மாவும் மற்ற ஆத்மாவின் (பாவச்) சுமையை சுமக்காது, பின்னர், உங்கள் மீளுமிடம் உங்கள் இரட்சகனின் பக்கமேயாகும், அப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான், நெஞ்சங்களிலுள்ளவற்றை நிச்சயமாக அவன் நன்கறிகிறவன்.
39:8 وَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهٗ مُنِيْبًا اِلَيْهِ ثُمَّ اِذَا خَوَّلَهٗ نِعْمَةً مِّنْهُ نَسِىَ مَا كَانَ يَدْعُوْۤا اِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلّٰهِ اَنْدَادًا لِّيُـضِلَّ عَنْ سَبِيْلِهٖ ؕ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيْلًا ۖ اِنَّكَ مِنْ اَصْحٰبِ النَّارِ
وَاِذَا مَسَّ ஏற்பட்டால் الْاِنْسَانَ மனிதனுக்கு ضُرٌّ ஒரு தீங்கு دَعَا பிரார்திக்கின்றான் رَبَّهٗ தான் இறைவனை مُنِيْبًا முற்றிலும் திரும்பியவனாக اِلَيْهِ அவன் பக்கம் ثُمَّ اِذَا خَوَّلَهٗ பிறகு/அவனுக்கு அவன் வழங்கினான் نِعْمَةً ஓர் அருளை مِّنْهُ தான் புறத்திலிருந்து نَسِىَ அவன் விட்டு விடுகிறான் مَا كَانَ يَدْعُوْۤا நான் பிரார்த்தித்து வந்ததை اِلَيْهِ அவனிடம் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் وَجَعَلَ இன்னும் ஏற்படுத்துகிறான் لِلّٰهِ அல்லாஹ்விற்கு اَنْدَادًا இணைகளை لِّيُـضِلَّ வழிகெடுப்பதற்காக عَنْ سَبِيْلِهٖ ؕ அவனுடைய பாதையை விட்டு قُلْ கூறுவிராக تَمَتَّعْ நீ சுகமடைந்து கொள் بِكُفْرِكَ உனது நிராகரிப்பை கொண்டு قَلِيْلًا கொஞ்ச காலம் ۖ اِنَّكَ நிச்சயமாக நீ مِنْ اَصْحٰبِ النَّارِ நரகவாசிகளில்
39:8. இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக: “உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே.”
39:8. மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படும் சமயத்தில், முற்றிலும் தன் இறைவனையே நோக்கிப் பிரார்த்தனை செய்த வண்ணமாயிருக்கிறான். இறைவன் தன்னிடமிருந்து ஓர் அருளை அவனுக்குப் புரியும் சமயத்தில், இதற்கு முன்னர், தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அவனையே மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு (பொய்யான தெய்வங்களை) இணைகளாக்கி மற்றவர்களையும் அவனுடைய பாதையிலிருந்து வழி கெடுக்கிறான். (நபியே! அவனை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘நீ (இவ்வாறு இறைவனை) நிராகரித்த வண்ணமே சிறிது காலம் சுகமனுபவி. (முடிவில்) நிச்சயமாக நீ நரகவாசிதான்.''
39:8. மனிதனுக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்துவிட்டால், அவன் தன் இறைவனின் பக்கம் திரும்பி அவனை அழைக்கின்றான். பிறகு அவனுடைய இறைவன் அவன் மீது தன் அருட்கொடையை வழங்கினால், முன்பு எந்தத் துன்பத்தை நீக்கும்படி இறைஞ்சிக் கொண்டிருந்தானோ அந்தத் துன்பத்தை அவன் மறந்து விடுகின்றான்; மேலும், அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குகின்றான்; அவனுடைய வழியைவிட்டுத் தவறச் செய்வதற்காக! (நபியே!) அந்த மனிதனிடம் கூறும்: “நீ உனது நிராகரிப்பின் மூலம் சிறிது நாட்கள் இன்பம் அனுபவித்துக்கொள். திண்ணமாக நீ நரகத்திற்குச் செல்பவன் ஆவாய்.”
39:8. மேலும், மனிதனை ஏதேனும் ஒரு சங்கடம் தீண்டுமானால் அவன் தன் இரட்சகனை _ அவன்பால் (தவ்பாச்செய்து) மீண்டவனாக_ அழை(த்துப் பிரார்த்தி)க்கிறான், பின்னர் அவன் தன்னிடமிருந்து (மகத்தான) ஓர் அருட்கொடையை அவனுக்குக் கொடுத்தானாகில், இதற்கு முன்னர் அவன் எதற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தானோ அதனையே அவன் மறந்துவிடுகிறான், இன்னும், அல்லாஹ்வுக்கு இணைகளை அவன் ஆக்குகிறான், (மற்றவர்களை) அவனுடைய பாதையிலிருந்து வழி கெடுப்பதற்காக, (நபியே! அவனுக்கு,) “உன் நிராகரிப்பைக் கொண்டு சிறிது காலம் சுகம் அனுபவித்துக்கொள், (முடிவில்) நிச்சயமாக நீ, நரகவாசிகளில் உள்ளவனாவாய்” என்று நீர் கூறுவீராக!
39:9 اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖؕ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ
اَمَّنْ هُوَ قَانِتٌ ?/எவர்/அவர்/வணங்கக்கூடியவர் اٰنَآءَ الَّيْلِ இரவு நேரங்களில் سَاجِدًا சிரம் பணிந்தவராக(வும்) وَّقَآٮِٕمًا நின்றவராகவும் يَّحْذَرُ பயப்படுகிறார் الْاٰخِرَةَ மறுமையை وَيَرْجُوْا இன்னும் ஆதரவு வைக்கிறார் رَحْمَةَ அருளை رَبِّهٖؕ தன் இறைவனின் قُلْ கூறுவீராக! هَلْ يَسْتَوِى சமமாவார்களா? الَّذِيْنَ يَعْلَمُوْنَ அறிந்தவர்களும் وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَؕ அறியாதவர்களும் اِنَّمَا يَتَذَكَّرُ நல்லுபதேசம் பெறுவதெல்லாம் اُولُوا الْاَلْبَابِ அறிவுள்ளவர்கள்தான்
39:9. எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”
39:9. எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்பவனா (நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவான்)? (நபியே!) நீர் கேட்பீராக: கல்வி அறிவுடையவரும், கல்வி அறிவில்லாதவரும் சமமாவார்களா? (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தான்.
39:9. (இத்தகைய மனிதனின் நடத்தை சிறந்ததா அல்லது அந்த மனிதனின் நடத்தையா?) அவனோ கீழ்ப்படிந்தவனாயிருக்கின்றான்; இரவு நேரங்களில் நின்று வணங்குகின்றான், மேலும், சிரம் பணிகின்றான்; மறுமையையும் அஞ்சுகின்றான்; மேலும், தன் இறைவனின் அருளுக்கு ஆசைப்படுகின்றான். இவர்களிடம் கேளும்: “அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்.”
39:9. (அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் சிறந்தவனா?) அல்லது, எவர், மறுமையைப் பயந்து தன் இரட்சகனின் அருளை ஆதரவுவைத்து, இரவு காலங்களில் சிரம் பணிந்தவராகவும், நின்றவராகவும் (அல்லாஹ்வை) வணங்கிகொண்டிருக்கின்றாரோ அவரா?” அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? (இதனைக்கொண்டு) நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே “என்று (நபியே!) நீர் கூறுவீராக!
39:10 قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ ؕ لِلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ؕ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
قُلْ கூறுவீராக! يٰعِبَادِ என் அடியார்களே! الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கை கொண்டவர்கள் اتَّقُوْا அஞ்சுங்கள்! رَبَّكُمْ ؕ உங்கள் இறைவனை لِلَّذِيْنَ اَحْسَنُوْا நன்மை செய்தவர்களுக்கு فِىْ هٰذِهِ الدُّنْيَا இவ்வுலகில் حَسَنَةٌ ؕ நன்மை وَاَرْضُ இன்னும் பூமி اللّٰهِ அல்லாஹ்வின் وَاسِعَةٌ ؕ விசாலமானது اِنَّمَا يُوَفَّى வழங்கப்படுவதெல்லாம் الصّٰبِرُوْنَ பொறுமையாளர்களுக்கு اَجْرَ கூலி هُمْ அவர்களது بِغَيْرِ حِسَابٍ கணக்கின்றிதான்
39:10. (நபியே!) நீர் கூறும்: “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.”
39:10. (நபியே!) கூறுவீராக: ‘‘நம்பிக்கைகொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே கொடுக்கப்படும்.
39:10. (நபியே!) கூறுவீராக: “நம்பிக்கைக்கொண்டிருக்கின்ற என் அடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு அஞ்சுங்கள். எவர்கள் இவ்வுலகில் நன்னடத்தையைக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுக்கு நன்மை இருக்கிறது. மேலும், அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி அளவின்றி வழங்கப்படும்.”
39:10. “விசுவாசங்கொண்டோரான என்னுடைய (நல்) அடியார்களே! உங்கள் இரட்சகனை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், இவ்வுலகத்தில் நன்மை செய்தோருக்கு நன்மையுண்டு, இன்னும், அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது, பொறுமையாளர்கள், தங்களுடைய கூலியை நிறைவு செய்யப்படுதெல்லாம் கணக்கின்றியேதான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
39:11 قُلْ اِنِّىْۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَۙ
قُلْ கூறுவீராக! اِنِّىْۤ اُمِرْتُ நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் اَنْ اَعْبُدَ நான் வணங்க வேண்டும் என்று اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصًا தூய்மையாக செய்யவேண்டும் لَّهُ அவனுக்கு الدِّيْنَۙ வழிபாடுகளை
39:11. (நபியே! இன்னும்) “மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்” என்றும் கூறுவீராக.
39:11. (நபியே!) கூறுவீராக: ‘‘முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன்.
39:11. (நபியே! இவர்களிடம்) கூறும்: “தீனைகீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி அவனை வணங்கும்படி திண்ணமாக எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
39:11. “மார்க்கத்தை(_வணக்கத்தை) அவனுக்கே கலப்பற்றதாக, ஆக்கியவனாக அல்லாஹ்வையே நான் வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப் பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
39:12 وَاُمِرْتُ لِاَنْ اَكُوْنَ اَوَّلَ الْمُسْلِمِيْنَ
وَاُمِرْتُ நான் கட்டளையிடப் பட்டுள்ளேன் لِاَنْ اَكُوْنَ நான் இருக்க வேண்டும் اَوَّلَ முதலாமவனாக الْمُسْلِمِيْنَ முஸ்லிம்களில்
39:12. “அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நீர் கூறுவீராக).
39:12. மேலும், அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக இருக்குமாறும் ஏவப்பட்டுள்ளேன்''
39:12. மேலும், நானே எல்லோருக்கும் முதலில் முஸ்லிமாக (இறைவனுக்கு அடிபணிந்தவனாக) இருக்க வேண்டும் என எனக்குப் பணிக்கப்பட்டுள்ளது.”
39:12. இன்னும், (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து நடப்போரில் முதன்மையானவனாக நான் இருக்கவேண்டுமென்றும் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நபியே! நீர் கூறுவீராக!)
39:13 قُلْ اِنِّىْۤ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّىْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ
قُلْ கூறுவீராக! اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اِنْ عَصَيْتُ மாறுசெய்தால் رَبِّىْ என் இறைவனுக்கு عَذَابَ வேதனையை يَوْمٍ நாளின் عَظِيْمٍ மகத்தான
39:13. “என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்வேனாயின், மகத்தான ஒரு நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாக அஞ்சுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
39:13. (மேலும்,) கூறுவீராக: ‘‘என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான ஒருநாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.''
39:13. கூறுவீராக: “நான் என் இறைவனுக்கு மாறு செய்தால் ஒரு மகத்தான நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகின்றேன்.”
39:13. “என் இரட்சகனுக்கு நான் மாறு செய்தால், மிக மகத்தான நாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று(ம்) நீர் கூறுவீராக!
39:14 قُلِ اللّٰهَ اَعْبُدُ مُخْلِصًا لَّهٗ دِيْنِىۙ
قُلِ கூறுவிராக اللّٰهَ அல்லாஹ்வைத்தான் اَعْبُدُ நான் வணங்குவேன் مُخْلِصًا பரிசுத்தப்படுத்தியவனாக لَّهٗ அவனுக்கு دِيْنِىۙ என் வழிபாட்டை
39:14. இன்னும் கூறுவீராக: “என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன்.
39:14. (மேலும்,) கூறுவீராக: ‘‘அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன், அவனுக்கே என் வணக்கம் அனைத்தும் உரித்தானது''
39:14. கூறிவிடுவீராக: “நான் என்னுடைய தீனைகீழ்ப்படிதலை, அல்லாஹ்வுக்கு முற்றிலும் உரித்தாக்கிய வண்ணம் அவனையே வணங்குவேன்.
39:14. “முற்றிலும் என் மார்க்கத்தை (வணக்கத்தை) அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவனாக நான் அல்லாஹ்வையே வணங்குகிறேன்” என்று(ம்) நீர் கூறுவீராக!
39:15 فَاعْبُدُوْا مَا شِئْتُمْ مِّنْ دُوْنِهٖ ؕ قُلْ اِنَّ الْخٰسِرِيْنَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْـفُسَهُمْ وَ اَهْلِيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ ؕ اَلَا ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ
فَاعْبُدُوْا வணங்குங்கள் مَا شِئْتُمْ நீங்கள் நாடியவர்களை مِّنْ دُوْنِهٖ ؕ அவனையன்றி قُلْ கூறுவீராக! اِنَّ நிச்சயமாக الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகள் الَّذِيْنَ خَسِرُوْۤا நஷ்டமிழைத்தவர்கள்தான் اَنْـفُسَهُمْ தங்களுக்கு(ம்) وَ اَهْلِيْهِمْ தங்கள் குடும்பத்தாருக்கும் يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமையில் اَلَا அறிந்துகொள்ளுங்கள்! ذٰ لِكَ هُوَ இதுதான் الْخُسْرَانُ நஷ்டமாகும் الْمُبِيْنُ மிகத்தெளிவான
39:15. “ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.” கூறுவீராக: “தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க.”
39:15. ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள். (ஆகவே, அதற்குரிய தண்டனையை அடைவீர்கள்.)'' “மெய்யாகவே நஷ்டமடைந்தவர்கள் யாரென்றால், (இறைவனுக்கு மாறுசெய்து) தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமையில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள்தான். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் தெளிவான நஷ்டம் என்று (நபியே) கூறுவீராக.
39:15. நீங்கள் அவனை விடுத்து யார் யாரையெல்லாம் விரும்புகின்றீர்களோ அவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.” கூறுவீராக: “மறுமை நாளில் யார் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் இழப்பிற்குள்ளாக்கினார்களோ, அவர்கள்தாம் உண்மையில் திவால் ஆனவர்கள்.” நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்! இதுதான் அப்பட்டமான திவால் ஆகும்.
39:15. எனவே, அவனையன்றி நீங்கள் நாடியவற்றை நீங்கள் வணங்கிக் கொள்ளுங்கள், (அதற்குரிய வேதனைப் பெறுவீர்கள்,) “நிச்சயமாக நஷ்டவாளிகள், கியாமத்து நாளில் தமக்கும், தம் குடும்பத்தினருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டார்களே அத்தகையவர்கள் தாம், அதுவே தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!
39:16 لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ؕ ذٰ لِكَ يُخَوِّفُ اللّٰهُ بِهٖ عِبَادَهٗ ؕ يٰعِبَادِ فَاتَّقُوْنِ
لَهُمْ அவர்களுக்கு مِّنْ فَوْقِهِمْ அவர்களின் மேலிருந்து(ம்) ظُلَلٌ நிழல்களும் مِّنَ النَّارِ நரகத்தின் وَمِنْ تَحْتِهِمْ அவர்களுக்கு கீழிருந்தும் ظُلَلٌ ؕ நிழல்களும் ذٰ لِكَ இது يُخَوِّفُ பயமுறுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் بِهٖ இதன் மூலம் عِبَادَهٗ ؕ தனது அடியார்களை يٰعِبَادِ என் அடியார்களே! فَاتَّقُوْنِ என்னை பயந்துகொள்ளுங்கள்!
39:16. (மறுமை நாளில்) இவர்களுக்கு மேலே நெருப்பிலான தட்டுகளும், இவர்களின் கீழும் (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும்; இவ்வாறு அதைக்கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான்; “என் அடியார்களே! என்னிடம் நீங்கள் பயபக்தியுடன் இருங்கள்.”
39:16. (மறுமை நாளில்) ‘‘இவர்களின் (தலைக்கு) மேல் இருந்தும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின்) கீழ் இருந்தும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்'' இதைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை பயமுறுத்துகிறான். ‘‘என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்''
39:16. அவர்கள் மீது நெருப்புக்குடைகள் மேலிருந்தும், கீழிருந்தும் மூடியிருக்கும். இத்தகைய முடிவைக் குறித்துதான் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்துகின்றான். எனவே, என் அடியார்களே! என் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
39:16. (மறுமை நாளில்) அவர்களுக்கு, அவர்களின் மேலிருந்து நெருப்பிலான தட்டுகளும், அவர்களுக்குக் கீழிலிருந்து (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும், (நரகத்தின் நிலை பற்றிக்கூறப்பட்ட) அது, அதனைக் கொண்டு, அல்லாஹ் தன் அடியார்களை பயமுறுத்துகிறான், என் அடியார்களே! (பாவங்களைத் தவிர்ப்பதன்மூலம்) என்னை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.
39:17 وَالَّذِيْنَ اجْتَنَـبُـوا الطَّاغُوْتَ اَنْ يَّعْبُدُوْهَا وَاَنَابُوْۤا اِلَى اللّٰهِ لَهُمُ الْبُشْرٰى ۚ فَبَشِّرْ عِبَادِ ۙ
وَالَّذِيْنَ எவர்கள் اجْتَنَـبُـوا விலகினார்கள் الطَّاغُوْتَ தாகூத்துகளை اَنْ يَّعْبُدُوْهَا இவர்களை வணங்குவதை விட்டு وَاَنَابُوْۤا இன்னும் திரும்பினார்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் لَهُمُ அவர்களுக்கு الْبُشْرٰى ۚ நற்செய்தி فَبَشِّرْ ஆகவே, நற்செய்தி சொல்லுங்கள் عِبَادِ ۙ என் அடியார்களுக்கு
39:17. எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!
39:17. (ஆகவே,) ‘‘எவர்கள் ஷைத்தான்களை வணங்காது, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வையே முன்னோக்குகிறார்களோ, அவர்களுக்குத்தான் நற்செய்தி. (ஆகவே,) (நபியே!) நீர் எனது (நல்ல) அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக.''
39:17. ஆனால் (இதற்கு மாறாக) எவர்கள் தாஃகூத்துக்கு* அடிபணிவதைத் தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிட்டார்களோ அவர்களுக்கு நற்செய்தி இருக்கிறது. எனவே அந்த அடியார்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி அறிவித்து விடுவீராக!
39:17. மேலும், ஷைத்தான்களை_அவர்களை வணங்குவதைத் தவிர்த்து_(விலகி முற்றிலும்) அல்லாஹ்வின் (வணக்கத்தின்)பால் திரும்பிவிட்டார்களே அத்தகையோர்_அவர்களுக்குத் தான் நன்மாராயம் உண்டு, ஆகவே, (நபியே!) என் அடியார்களுக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!
39:18 الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدٰٮهُمُ اللّٰهُ وَاُولٰٓٮِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ
الَّذِيْنَ எவர்கள் يَسْتَمِعُوْنَ செவியுறுவார்கள் الْقَوْلَ பேச்சுகளை فَيَتَّبِعُوْنَ பின்பற்றுவார்கள் اَحْسَنَهٗ ؕ அதில் மிக அழகானதை اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் الَّذِيْنَ هَدٰٮهُمُ எவர்கள்/நேர்வழிகாட்டினான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் وَاُولٰٓٮِٕكَ هُمْ இன்னும் அவர்கள்தான் اُولُوا الْاَلْبَابِ அறிவாளிகள்
39:18. அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.
39:18. அவர்கள் எத்தகையவர்கள் என்றால், (குர்ஆனாகிய இப்)பேச்சை செவியுற்று, அதில் மிக அழகியதை பின்பற்றி நடக்கின்றனர். இவர்களையே, அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகிறான். இவர்கள்தான் (உண்மையில்) அறிவுடையவர்கள் ஆவார்கள்.
39:18. அவர்கள் எத்தகையவர்கள் எனில், சொல்வதை ஆழ்ந்து கவனமாகக் கேட்டு அவற்றின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுகின்றவர்கள். இத்தகையவர்களுக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கிறான். அவர்களே விவேகம் உடையவர்களாவர்.
39:18. அவர்கள் எத்தகையோரென்றால், சொல்லை செவியுறுவார்கள், பின்னர் அதில் மிக அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் அவர்களை நேர் வழியில் செலுத்திவிட்டான், இன்னும் அவர்கள் தாம் அறிவுடையோர்.
39:19 اَفَمَنْ حَقَّ عَلَيْهِ كَلِمَةُ الْعَذَابِ ؕ اَفَاَنْتَ تُنْقِذُ مَنْ فِى النَّارِ ۚ
اَفَمَنْ எவர்? حَقَّ உறுதியாகிவிட்டது عَلَيْهِ அவர் மீது كَلِمَةُ வாக்கு الْعَذَابِ ؕ வேதனையின் اَفَاَنْتَ تُنْقِذُ நீர் பாதுகாப்பீரா? مَنْ فِى النَّارِ ۚ நரகத்தில் இருப்பவரை
39:19. (நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டதோ, நெருப்பிலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடமுடியுமா?
39:19. (நபியே!) ‘‘எவன் (பாவம் செய்து அவன்) மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டதோ அவனா (நேர்வழி பெற்றவர்களுக்கு சமமாவான்)? (அவன் நரகம் சென்றே தீருவான்.) நரகத்திலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடுவீரா?''
39:19. (நபியே!) எவன் மீது தண்டனைக்கான தீர்ப்பு உறுதியாகிவிட்டதோ அவனை யாரால் காப்பாற்ற முடியும்? நெருப்பில் வீழ்ந்துவிட்டிருப்பவனை உம்மால் காப்பாற்ற முடியுமா என்ன?
39:19. (நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகிவிட்டதோ அவனா? (இரட்சகனை பயந்தவனைப் போன்றவன்?) (நரக) நெருப்பில் (செல்ல) இருக்கும் அவனை நீர் காப்பாற்றிவிடுவீரா?
39:20 لٰـكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ ۙ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕوَعْدَ اللّٰهِ ؕ لَا يُخْلِفُ اللّٰهُ الْمِيْعَادَ
لٰـكِنِ எனினும் الَّذِيْنَ எவர்கள் اتَّقَوْا அஞ்சினார்களோ رَبَّهُمْ தங்கள் இறைவனை لَهُمْ அவர்களுக்கு غُرَفٌ மாடி அறைகள் مِّنْ فَوْقِهَا அவற்றுக்கு மேல் غُرَفٌ அறைகள் مَّبْنِيَّةٌ ۙ கட்டப்பட்ட(து) تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றைச் சுற்றி الْاَنْهٰرُ நதிகள் ؕوَعْدَ اللّٰهِ ؕ அல்லாஹ்வின்வாக்கு لَا يُخْلِفُ اللّٰهُ அல்லாஹ் மாற்றமாட்டான் الْمِيْعَادَ வாக்கை
39:20. ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்.
39:20. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடக்கிறார்களோ அவர்களுக்கு, (சொர்க்கத்தில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாறமாட்டான்.
39:20. ஆயினும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்காக கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை.
39:20. எனினும், தங்கள் இரட்சகனுக்கு அஞ்சி நடக்கின்றார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு (சுவனபதியில் அடுக்கடுக்காக) மாளிகைகள் உண்டு, அவைகளுக்கு மேலும் கட்டப்பட்ட மாளிகைகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதியாகும், அல்லாஹ் (தன்னுடைய) வாக்குறுதியில் மாறமாட்டான்.
39:21 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَـكَهٗ يَنَابِيْعَ فِى الْاَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهٖ زَرْعًا مُّخْتَلِفًا اَ لْوَانُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَـرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَجْعَلُهٗ حُطَامًا ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اَنْزَلَ இறக்கினான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً மழையை فَسَلَـكَهٗ அதை ஓடவைத்தான் يَنَابِيْعَ பல ஊற்றுகளாக فِى الْاَرْضِ பூமியில் ثُمَّ பிறகு يُخْرِجُ அவன் உற்பத்தி செய்கின்றான் بِهٖ அதன் மூலம் زَرْعًا விளைச்சல்களை مُّخْتَلِفًا மாறுபட்ட(து) اَ لْوَانُهٗ அதன் நிறங்கள் ثُمَّ பிறகு يَهِيْجُ அது காய்ந்து விடுகிறது فَتَـرٰٮهُ அதை நீர் பார்க்கிறீர் مُصْفَرًّا மஞ்சளாக ثُمَّ பிறகு يَجْعَلُهٗ அதை அவன் ஆக்கிவிடுகிறான் حُطَامًا ؕ காய்ந்த சருகுகளாக اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَذِكْرٰى ஓர் உபதேசம் لِاُولِى الْاَلْبَابِ அறிவுள்ளவர்களுக்கு
39:21. நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.
39:21. (நபியே!) ‘‘நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான். பின்னர், அதைக் கொண்டு பல நிறங்களையுடைய (பலவகைப்) பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர், அவை (கருக்கொண்டு) மஞ்சள் நிறமாக இருக்கக் காண்கிறீர்கள். பின்னர், அதைக் காய்ந்த சருகுகளாக ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நல்ல படிப்பினை இருக்கிறது.''
39:21. நீங்கள் காணவில்லையா என்ன? அல்லாஹ் வானத்திலிருந்து நீரைப் பொழிந்து அதனை அருவிகளாகவும், ஊற்றுகளாகவும், நதிகளாகவும் பூமியில் ஓடச் செய்தான். பின்னர் அந்த நீரின் வாயிலாக பல்வேறுபட்ட பயிர் வகைகளை விதவிதமான நிறங்களில் அவன் வெளிப்படுத்துகின்றான். பிறகு, அந்தப் பயிர்கள் முதிர்ந்து காய்ந்து விடுகின்றன. அப்போது அவை மஞ்சளித்துப் போவதை நீர் காண்கிறீர். இறுதியில் அல்லாஹ் அவற்றைப் பதராக்கிவிடுகின்றான். உண்மையில் விவேகம் உடையவருக்கு இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.
39:21. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ், வானத்திலிருந்து (மழை) நீரை இறக்கி அதனைப் பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான், பின்னர், அதனைக் கொண்டு பல வேளாண்மை(ப்பயிர்)களை_ அதன் நிறங்கள் மாறுபட்டவையாக இருக்க அவன் வெளிப்படுத்துகின்றான், பின்னர் உளர்ந்து, அவை மஞ்சள் நிறமடைவதை நீர் காண்கின்றீர், பின்னர், அதனை(க்காய்ந்த) சருகுகளாக்கிவிடுகின்றான், நிச்சயமாக இதில், அறிவுடையோர்களுக்கு படிப்பினை இருக்கிறது.
39:22 اَفَمَنْ شَرَحَ اللّٰهُ صَدْرَهٗ لِلْاِسْلَامِ فَهُوَ عَلٰى نُوْرٍ مِّنْ رَّبِّهٖؕ فَوَيْلٌ لِّلْقٰسِيَةِ قُلُوْبُهُمْ مِّنْ ذِكْرِ اللّٰهِؕ اُولٰٓٮِٕكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
اَفَمَنْ எவர்? شَرَحَ விரிவாக்கினான் اللّٰهُ அல்லாஹ் صَدْرَهٗ அவருடைய நெஞ்சை لِلْاِسْلَامِ இஸ்லாமிற்கு فَهُوَ عَلٰى نُوْرٍ அவர்/வெளிச்சத்தில் مِّنْ رَّبِّهٖؕ தன் இறைவனின் فَوَيْلٌ நாசம் உண்டாகட்டும் لِّلْقٰسِيَةِ இருகியவர்களுக்கு قُلُوْبُهُمْ அவர்களுடைய உள்ளங்கள் مِّنْ ذِكْرِ நினைவை விட்டு اللّٰهِؕ அல்லாஹ்வின் اُولٰٓٮِٕكَ அவர்கள் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ தெளிவான
39:22. அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்; (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
39:22. எவருடைய உள்ளத்தை இஸ்லாமை ஏற்க அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கிறார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் (இறுகி) கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
39:22. எவருடைய நெஞ்சத்தை அல்லாஹ் இஸ்லாத்திற்காகத் திறந்துவிட்டிருக்கின்றானோ, மேலும் எவர் தன்னுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ஒளியில் நடந்து கொண்டிருக்கின்றாரோ (அவர் இவற்றிலிருந்து எந்தப் படிப்பினையும் பெறாத மனிதனைப் போன்று ஆக முடியுமா?) அல்லாஹ்வின் நல்லுரைகளுக்கு எதிராக எவர்களுடைய உள்ளம் இன்னும் அதிகமாக இறுகிவிட்டதோ, அவர்களுக்குக் கேடுதான்! அத்தகையவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.
39:22. “அல்லாஹ் எவருடைய இதயத்தை இஸ்லாத்திற்காக (அதை ஏற்பதற்கு) விசாலமாக்கி வைத்திருக்கின்றானோ அவரா? (எவருடைய இதயம் அதை ஏற்பதிலிருந்து சுருங்கி இறுகிவிட்டதோ அவரைப் போன்று ஆவார்?) அவர் (அதன் காரணமாக) தன் இரட்சகனிடமிருந்துள்ள பிரகாசத்தின் மீது இருக்கிறார், ஆகவே, அல்லாஹ்வை நினைவு கூருவதைவிட்டும் (விலகி) எவர்களின் இதயங்கள் (இறுகி) கடினமாகிவிட்டனவோ அவர்களுக்குக் கேடுதான், அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்(தான்) இருக்கின்றனர்.
39:23 اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِيْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِىَ ۖ تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْۚ ثُمَّ تَلِيْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰى ذِكْرِ اللّٰهِ ؕ ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ
اَللّٰهُ அல்லாஹ் نَزَّلَ இறக்கினான் اَحْسَنَ மிக அழகிய الْحَدِيْثِ பேச்சை كِتٰبًا ஒரு வேதமாக مُّتَشَابِهًا ஒன்றுக்கொன்று ஒப்பான مَّثَانِىَ பலமுறை ஓதப்படுகின்ற ۖ تَقْشَعِرُّ சிலிர்க்கின்றன مِنْهُ அதனால் جُلُوْدُ தோல்கள் الَّذِيْنَ எவர்கள் يَخْشَوْنَ பயப்படுவார்கள் رَبَّهُمْۚ தங்கள் இறைவனை ثُمَّ பிறகு تَلِيْنُ மென்மையாகின்றன جُلُوْدُهُمْ அவர்களின் தோல்கள் وَقُلُوْبُهُمْ இன்னும் அவர்களின் உள்ளங்களும் اِلٰى ذِكْرِ நினைவின் பக்கம் اللّٰهِ ؕ அல்லாஹ்வின் ذٰ لِكَ இதுதான் هُدَى நேர்வழியாகும் اللّٰهِ அல்லாஹ்வின் يَهْدِىْ நேர்வழி செலுத்துகின்றான் بِهٖ இதன்மூலம் مَنْ يَّشَآءُ ؕ தான் நாடியவர்களை وَمَنْ எவரை يُّضْلِلِ வழிகெடுக்கின்றானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا لَهٗ அவருக்கு இல்லை مِنْ هَادٍ நேர்வழி காட்டுபவர் யாரும்
39:23. அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
39:23. அல்லாஹ் மிக அழகான விஷயங்களையே (இந்த வேதத்தில்) இறக்கி இருக்கிறான். (இதிலுள்ள வசனங்களுக்கிடையில் முரண்பாடில்லாமல்)ஒன்றை மற்றொன்று ஒத்ததாகவும் (மனதில் பதிவதற்காக ஒரே விஷயத்தை) திரும்பத் திரும்பவும் கூறப்பட்டுள்ளது. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ, (அவர்கள் அதைக் கேட்ட உடன்) அவர்களுடைய தோல்கள் சிலிர்த்து விடுகின்றன. பின்னர், அவர்களுடைய தோல்களும் உள்ளங்களும் அல்லாஹ்வுடைய வேதத்தின் பக்கம் இளகி அதன்படி செயல்படுகின்றன. இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தான் விரும்பியவர்களை இதன் மூலம் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விட்டானோ அவனை நேர்வழி செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
39:23. அல்லாஹ் மிக அழகிய உரைகளை இறக்கியிருக்கின்றான்; ஒரு வேதத்தை! அதன் எல்லாப் பகுதிகளும் ஒரே சீராக உள்ளன. மேலும், அதில் கருத்துகள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. அதனைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கிறது. பின்னர், அவர்களின் உடலும், உள்ளமும் மிருதுவாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன. இது அல்லாஹ்வின் வழிகாட்டுதலாகும். அவன், தான் நாடுவோரை இதனைக் கொண்டு நேரிய வழியில் செலுத்துகின்றான். இனி எவருக்கு அல்லாஹ்வே நேர்வழி காட்டவில்லையோ, அவருக்கு நேர்வழி காட்டுவோர் வேறு எவரும் இலர்.
39:23. அல்லாஹ் மிக்க அழகான செய்தியை வேதமாக (குர் ஆனாக) இறக்கி இருக்கின்றான், (இதிலுள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல்) ஒன்றை மற்றொன்று ஒத்ததாக திரும்பத் திரும்பக் கூறப்படுவதாக உள்ளன, தங்கள் இரட்சகனுக்குப் பயப்படுகிறார்களே அத்தகையோரின் தோல்(களின் உரோமங்)கள் (அதனை கேட்ட மாத்திரத்தில்) சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களுடைய தோல்களும், இதயங்களும் அல்லாஹ்வை நினைவு கூர்வதின்பால் இளகுகின்றன. அதுவே அல்லாஹ்வுடைய நேர் வழியாகும், தான் நாடியவர்களை அவன் இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான், எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அவரை நேர் வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனும் இல்லை.
39:24 اَ فَمَنْ يَّتَّقِىْ بِوَجْهِهٖ سُوْٓءَ الْعَذَابِ يَوْمَ الْقِيٰمَةِ ؕ وَقِيْلَ لِلظّٰلِمِيْنَ ذُوْقُوْا مَا كُنْـتُمْ تَكْسِبُوْنَ
اَ فَمَنْ எவர் ? يَّتَّقِىْ தவிர்த்துக் கொள்கிறான் بِوَجْهِهٖ தனது முகத்தால் سُوْٓءَ கெட்ட الْعَذَابِ வேதனையை يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் وَقِيْلَ கூறப்படும் لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு ذُوْقُوْا சுவையுங்கள்! مَا كُنْـتُمْ تَكْسِبُوْنَ நீங்கள் செய்து வந்ததை
39:24. எவன் கியாம நாளின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக்கொண்டேனும் தடுத்துக் கொள்ள முற்படுகிறானோ அவன் (சுவர்க்க வாசியாக முடியுமா?) மேலும், அநியாயக் காரர்களுக்கு “நீங்கள் சம்பாதித்துக் கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்” என்று கூறப்படும்.
39:24. எவன், மறுமையின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக் கொண்டேனும் தடுத்துக் கொள்ளப் பிரயாசைப்படுபவனா (சொர்க்கவாசிக்கு சமமாவான்)? அநியாயக்காரர்களை நோக்கி நீங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலைச் சுவைத்துப் பாருங்கள் என்றுதான் கூறப்படும்.
39:24. இனி மறுமைநாளில் வேதனையின் கடும் தாக்குதலைத் தன் முகத்தில் தாங்கிக்கொள்ள வேண்டிய மனிதனுடைய மோசமான நிலையைக் குறித்து நீங்கள் என்ன கணிக்கிறீர்கள்? அப்படிப்பட்ட கொடுமைக்காரர்களிடம் அப்பொழுது கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றை!”
39:24. எவர், மறுமை நாளில் தீய வேதனையைத் தம் முகத்தைக் கொண்டேனும் (தன்னைவிட்டு) தடுத்துக்கொள்ள முற்படுகிறாரோ அவரா? (சுவன வாசிக்குச் சமமாவார்?) இன்னும் அநியாயக்காரர்களிடம், “நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றை (அதன் தீய பலனை)ச் சுவைத்துப் பாருங்கள்” என்று கூறப்படும்.
39:25 كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتٰٮهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ
كَذَّبَ பொய்ப்பித்தனர் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும் فَاَتٰٮهُمُ ஆகவே, அவர்களுக்கு வந்தது الْعَذَابُ வேதனை مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ அவர்கள் உணராத விதத்தில்
39:25. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர்; ஆகவே அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது.
39:25. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம் வசனங்களைப்) பொய்யாக்கினார்கள். ஆதலால், (வேதனை வருமென்பதை) அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில், வேதனை அவர்களை வந்தடைந்தது.
39:25. இவர்களுக்கு முன்பும் பலர் இதே போன்று பொய்யென வாதிட்டிருக்கிறார்கள். இறுதியில், அவர்கள் நினைத்தும் பார்த்திராத திசையிலிருந்து அவர்கள் மீது வேதனை வந்தது.
39:25. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தோர் (நம் தூதர்களைப்) பொய்யாக்கினார்கள், ஆகவே, அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் வேதனை அவர்களை வந்தடைந்தது.
39:26 فَاَذَاقَهُمُ اللّٰهُ الْخِزْىَ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
فَاَذَاقَهُمُ அவர்களுக்கு சுவைக்க வைப்பான் اللّٰهُ அல்லாஹ் الْخِزْىَ கேவலத்தை فِى الْحَيٰوةِ வாழ்விலும் الدُّنْيَا ۚ இவ்வுலக وَلَعَذَابُ வேதனை الْاٰخِرَةِ மறுமையின் اَكْبَرُ ۘ மிகப் பெரியது لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ அவர்கள் அறிய வேண்டுமே!
39:26. இவ்வாறு, இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்
39:26. இவ்வுலக வாழ்க்கையிலும் இழிவையே அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்தான். மறுமையிலுள்ள வேதனையோ மிகப் பெரிது. (இதை) அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!
39:26. பின்னர், அல்லாஹ் உலக வாழ்விலேயே இழிவினை அவர்கள் சுவைக்கச் செய்தான். மறுமையின் வேதனையோ, இதனைவிடக் கடுமையானதாகும்; அந்தோ! இந்த மக்கள் அறிந்திருந்தால்!
39:26. பின்னர், இவ்வுலக வாழ்க்கயில் இழிவைச் சுவைக்குமாறு அவர்களை அல்லாஹ் செய்தான் அவர்கள், அறிந்துகொண்டிருப்பார்களாயின் மறுமையிலுள்ள வேதனை(யோ) மிகப் பெரிது (என்பதை அறிந்து கொள்வார்கள்).
39:27 وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِىْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَۚ
وَلَقَدْ திட்டவட்டமாக ضَرَبْنَا நாம் விவரித்தோம் لِلنَّاسِ மக்களுக்கு فِىْ هٰذَا الْقُرْاٰنِ இந்த குர்ஆனில் مِنْ كُلِّ எல்லா مَثَلٍ உதாரணங்களையும் لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَۚ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
39:27. இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
39:27. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக, இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் தெளிவாக கூறியிருக்கிறோம்.
39:27. நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு விதவிதமான எடுத்துக்காட்டுகளை கொடுத்திருக்கின்றோம், அவர்கள் விழிப்படையவேண்டும் என்பதற்காக!
39:27. நிச்சயமாக, மனிதர்களுக்கு இந்தக் குர் ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் (அதைக்கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக நாம் (எடுத்துக்) கூறியிருக்கிறோம்.
39:28 قُرْاٰنًا عَرَبِيًّا غَيْرَ ذِىْ عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ
قُرْاٰنًا குர்ஆனாக عَرَبِيًّا அரபி மொழி غَيْرَ இல்லாத ذِىْ عِوَجٍ குழப்பம், கோணல் لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ அவர்கள் அஞ்சுவதற்காக
39:28. (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்).
39:28. (அல்லாஹ்வுக்கு) அவர்கள் பயந்து கொள்வதற்காக கோணலற்ற இக்குர்ஆனை(த் தெளிவான) அரபி மொழியில் இறக்கிவைத்தோம்.
39:28. இது அரபி மொழியிலுள்ள குர்ஆன்; இதில் எவ்விதக் கோணலுமில்லை; தீயகதியிலிருந்து இவர்கள் தப்பித்துக் கொள்வதற்காக!
39:28. (அல்லாஹ்வுக்கு) அவர்கள் பயந்துகொள்வதற்காக, எத்தகைய கோணலும் அற்ற அரபி மொழியிலான குர் ஆனாக இருக்கும் நிலையில் (அதனை இறக்கி வைத்தோம்).
39:29 ضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلًا فِيْهِ شُرَكَآءُ مُتَشٰكِسُوْنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ ؕ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا ؕ اَلْحَمْدُ لِلّٰهِ ۚ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ
ضَرَبَ விவரிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا ஓர் உதாரணத்தை رَّجُلًا ஒரு மனிதன் فِيْهِ அவன் விஷயத்தில் شُرَكَآءُ பங்குதாரர்கள் مُتَشٰكِسُوْنَ பிணங்கிக் கொள்கின்றவர்கள் وَرَجُلًا இன்னும் ஒரு மனிதர் سَلَمًا சரியான(வர்) لِّرَجُلٍ ؕ ஒரு மனிதருக்கு هَلْ يَسْتَوِيٰنِ இந்த இரண்டு நபர்களும் சமமாவார்களா? مَثَلًا ؕ தன்மையால் اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ ۚ அல்லாஹ்விற்கே بَلْ மாறாக اَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
39:29. அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்: ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
39:29. அல்லாஹ் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான்: ஒரு மனிதன் பல எஜமான்களுக்கு (அடிமையாக) இருந்து (அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கே அவன் வேலை செய்யவேண்டுமென்று) இழுபறி செய்து கொள்கின்றனர். மற்றொரு மனிதன் (அடிமைதான்; ஆனால், அவன்) ஒருவனுக்கு மட்டும் சொந்தமானவன். இவ்விருவரும் தன்மையால் சமமாவார்களா? (ஆகமாட்டார்கள் என்பதை அறிவீர்கள். ஆகவே, இதற்காக) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே (என்று துதி செய்வோமாக! இவ்வாறே பல தெய்வங்களை வணங்கும் ஒருவன், ஒரே அல்லாஹ்வை வணங்குபவனுக்கு சமமாக மாட்டான். எனினும்,) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை கூட) அறிந்து கொள்ளவில்லை.
39:29. அல்லாஹ் ஓர் உதாரணம் சொல்கின்றான்; ஒரு மனிதன் இருக்கின்றான். அவன் மீது உரிமை கொண்டாடுவதில் துர்குணமுடைய மனிதர்கள் பங்காளிகளாய் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவனைத் தத்தம் பக்கமாக இழுக்கின்றனர். மற்றொரு மனிதன் முழுக்க முழுக்க ஒரே உரிமையாளனுக்கே அடிமையாக இருக்கின்றான். என்ன, இவ்விருவரின் நிலையும் சமமாக முடியுமா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறியாமையில் கிடக்கின்றார்கள்.
39:29. கருத்து வேற்றுமையுள்ள (தீய குணங்களைக் கொண்ட) பல கூட்டுக்காரர்களை கொண்ட ஒரு மனிதனையும், (எந்த கூட்டுக்காரர்களும் இல்லாது கலப்பற்றவாறு) ஒரே மனிதனுக்குச் சொந்தமான வேறு ஒரு மனிதனையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான், உதாரணத்தால் அவ்விருவரும் சமமாவார்களா? (சமமானவர்கள் அல்லர்!) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும், எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.
39:30 اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ
اِنَّكَ நிச்சயமாக நீரும் مَيِّتٌ மரணிப்பவரே! وَّاِنَّهُمْ இன்னும் நிச்சயமாக அவர்களும் مَّيِّتُوْنَ மரணிப்பவர்கள்தான்
39:30. நிச்சயமாக நீரும் மரிப்பவர்; நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.
39:30. (நபியே!) நிச்சயமாக நீரும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தான்.
39:30. (நபியே!) நீரும் மரணமாகத்தான் போகிறீர். இவர்களும் மரணமாகக் கூடியவர்கள்தாம்!
39:30. (நபியே!) நிச்சயமாக நீர் இறந்துவிடுகிறவரே, நிச்சயமாக அவர்களும் இறந்துவிடுகிறவர்கள்தாம்.
39:31 ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُوْنَ
ثُمَّ பிறகு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் عِنْدَ رَبِّكُمْ உங்கள் இறைவனிடம் تَخْتَصِمُوْنَ தர்க்கித்துக் கொள்வீர்கள்
39:31. பின்னர், மறுமைநாளில் உங்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக நீங்கள் கொண்டுவரப்பட்டு) தர்க்கம் செய்வீர்கள்.
39:31. பின்னர், மறுமையில் நிச்சயமாக நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடத்தில் (கொண்டுவரப்பட்டு) நீங்கள் (நீதத்தைக் கோரி உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள்.
39:31. பிறகு, மறுமை நாளில் திண்ணமாக நீங்கள் எல்லோரும் உங்கள் இறைவன் முன்னிலையில் தத்தம் வாதங்களை எடுத்துவைக்கப் போகிறீர்கள்.
39:31. பின்னர், நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உங்கள் இரட்சகனிடத்தில் தர்க்கித்துக் கொள்வீர்கள்.
39:32 فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَى اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَآءَهٗ ؕ اَ لَيْسَ فِىْ جَهَنَّمَ مَثْـوًى لِّـلْـكٰفِرِيْنَ
فَمَنْ யார்? اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنْ كَذَبَ பொய் சொல்பவனை விட عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது وَكَذَّبَ இன்னும் பொய்ப்பித்தான் بِالصِّدْقِ உண்மையை اِذْ جَآءَهٗ ؕ அது தன்னிடம் வந்தபோது اَ لَيْسَ இல்லையா? فِىْ جَهَنَّمَ நரகத்தில் مَثْـوًى தங்குமிடம் لِّـلْـكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கு
39:32. எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?
39:32. அல்லாஹ்வின் மீது பொய் கூறி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
39:32. எவன் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தானோ மேலும், உண்மை தன் எதிரில் வந்தபோது அதனையும் பொய்ப்படுத்தினானோ, அவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? என்ன, இத்தகைய நன்றி கொன்றவர்களுக்கு நரகில் தங்குமிடம் எதுவும் இல்லையா?
39:32. ஆகவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து, இன்னும் உண்மையை(யாகிய வேதத்தை)_அது தன்னிடம் வந்தபோது பொய்யாக்கியவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
39:33 وَالَّذِىْ جَآءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖۤ اُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ
وَالَّذِىْ جَآءَ வந்தவரும் بِالصِّدْقِ உண்மையைக் கொண்டு وَصَدَّقَ இன்னும் உண்மை என்று ஏற்றார் بِهٖۤ அதை اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُتَّقُوْنَ இறையச்சம் உள்ளவர்கள்
39:33. அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.
39:33. உண்மையைக் கொண்டுவந்தவ(ராகிய நம் தூத)ரும், அதை உண்மை என்றே நம்பியவரும் ஆகிய இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்.
39:33. ஆனால், எந்த மனிதர் உண்மையைக் கொண்டு வந்தாரோ, மேலும், எவர்கள் அவரை உண்மையாளர் என்று ஏற்றுக்கொண்டார்களோ அப்படிப்பட்டவர்கள்தாம், வேதனையிலிருந்து தப்பிக்கக் கூடியவர்கள்.
39:33. மேலும், உண்மையைக் கொண்டு வந்தவ(ராகிய நமது தூத)ரும், அதனை உண்மையென்றே (ஒப்புக்கொண்டு) ஏற்பவர்களும் (ஆகிய அத்தகையவர்கள் தாம் பயபக்தியாளர்கள்.
39:34 لَهُمْ مَّا يَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ ذٰ لِكَ جَزٰٓؤُ الْمُحْسِنِيْنَ ۖۚ
لَهُمْ அவர்களுக்கு مَّا يَشَآءُوْنَ அவர்கள் நாடுகின்றதெல்லாம் عِنْدَ رَبِّهِمْ ؕ அவர்களின் இறைவனிடம் ذٰ لِكَ இதுதான் جَزٰٓؤُ கூலியாகும் الْمُحْسِنِيْنَ ۖۚ நல்லவர்களின்
39:34. அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது; இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.
39:34. அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களின் இறைவனிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். (ஏனென்றால், இத்தகைய) நன்மை செய்தவர்களுக்கு இதுவே (தகுதியான) கூலியாகும்.
39:34. அவர்களுக்கு, அவர்கள் விரும்புகின்றவை அனைத்தும் அவர்களின் இறைவனிடம் கிடைக்கும். நன்மை செய்வோரின் கூலி இதுதான்;
39:34. அவர்களுக்கு தங்களின் இரட்சகனிடத்தில் அவர்கள் நாடியவை உண்டு. அது நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய (தகுதியான) கூலியாகும்.
39:35 لِيُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِىْ عَمِلُوْا وَيَجْزِيَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ
لِيُكَفِّرَ அகற்றி விடுவதற்காக اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ அவர்களை விட்டும் اَسْوَاَ கெட்டசெயல்களை الَّذِىْ عَمِلُوْا அவர்கள் செய்தவற்றில் وَيَجْزِيَهُمْ இன்னும் அவர்களுக்கு அவன் கொடுப்பதற்காக اَجْرَهُمْ அவர்களின் கூலியை بِاَحْسَنِ மிக அழகிய முறையில் الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ அவர்கள் செய்து வந்ததை விட
39:35. அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.
39:35. அவர்கள் செய்த குற்றங்களையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்ததைவிட மிக அழகான விதத்தில் கொடுப்பான்.
39:35. அவர்கள் செய்து கொண்டிருந்த மிகத் தீமையான செயல்களை அல்லாஹ் அவர்களின் கணக்கிலிருந்து நீக்கிவிட வேண்டும்; மேலும், அவர்கள் ஆற்றிவந்த மிகச் சிறந்த செயல்களைக் கவனித்து அவர்களுக்குக் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக!
39:35. ஏனெனில், அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயதை அல்லாஹ் அவர்களை விட்டும் நீக்கி (மன்னித்து) விட்டு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு மிக அழகானவற்றையும் (நற்) கூலியாக அவர்களுக்குக் கொடுப்பான்.
39:36 اَلَيْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗ ؕ وَيُخَوِّفُوْنَكَ بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۚ
اَلَيْسَ இல்லையா? اللّٰهُ அல்லாஹ் بِكَافٍ போதுமானவனாக عَبْدَهٗ ؕ தனது அடியானுக்கு وَيُخَوِّفُوْنَكَ இன்னும் அவர்கள் உம்மை பயமுறுத்துகின்றனர் بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖ ؕ அவன் அல்லாதவர்களைக் கொண்டு وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ அல்லாஹ் யாரை வழிகெடுத்து விடுகின்றானோ فَمَا لَهٗ அவருக்கு இல்லை مِنْ هَادٍ ۚ நேர்வழி காட்டுபவர் யாரும்
39:36. அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர்; மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.
39:36. தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனாக இல்லையா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவற்றைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீர் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
39:36. (நபியே!) அல்லாஹ் தன் அடியானுக்குப் போதுமானவனில்லையா, என்ன? இவர்கள் அவனல்லாதவர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகிறார்கள். உண்மை யாதெனில், அல்லாஹ் எவனை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றானோ, அவனுக்கு வழிகாட்டக்கூடியவர் எவருமிலர்.
39:36. தன் அடியாருக்கு அல்லாஹ் (ஒருவனே சகலவற்றிற்கும்) போதுமானவனாக இல்லையா? இன்னும், (நபியே!) அவர்கள் அவனல்லாத (அவர்களின் தெய்வங்களான)வற்றைக் கொண்டு உம்மை பயமுறுத்துகின்றனர், இன்னும், எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ அவரை, நேர் வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
39:37 وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّضِلٍّ ؕ اَ لَيْسَ اللّٰهُ بِعَزِيْزٍ ذِى انْتِقَامٍ
وَمَنْ யாரை يَّهْدِ நேர்வழி செலுத்தினானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا இல்லை لَهٗ அவரை مِنْ مُّضِلٍّ ؕ வழிகெடுப்பவர் யாரும் اَ لَيْسَ இல்லையா? اللّٰهُ அல்லாஹ் بِعَزِيْزٍ மிகைத்தவனாக ذِى انْتِقَامٍ பழி தீர்ப்பவனாக
39:37. அன்றியும், எவரை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ, அவரை வழி கெடுப்பவர் எவருமில்லை; அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிதீர்ப்பவனாகவும் இல்லையா?
39:37. எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவனை, வழிகெடுப்பவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக பழிவாங்க ஆற்றல் உடையவனாக இல்லையா?
39:37. மேலும், எவருக்கு அவன் நேர்வழி காட்டுகின்றானோ அவரை வழிகெடுப்பவனும் எவருமில்லை. அல்லாஹ் வல்லமைமிக்கவனாகவும், பழிவாங்குபவனாகவும் இல்லையா, என்ன?
39:37. எவரை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துகின்றானோ அவரை, வழிகெடுத்துவிடக் கூடியவன் எவனுமில்லை, அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தண்டித்தலை உடையவனாக இல்லையா?
39:38 وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ ؕ قُلْ اَفَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِىَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِىْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖ ؕ قُلْ حَسْبِىَ اللّٰهُ ؕ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ
وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْ நீர் அவர்களிடம் கேட்டால் مَّنْ யார் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் لَيَـقُوْلُنَّ நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள் اللّٰهُ ؕ அல்லாஹ் قُلْ கூறுவீராக! اَفَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள்! مَّا تَدْعُوْنَ நீங்கள் அழைப்பவைப் பற்றி مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اِنْ اَرَادَنِىَ எனக்கு நாடினால் اللّٰهُ அல்லாஹ் بِضُرٍّ ஒரு தீங்கை هَلْ هُنَّ كٰشِفٰتُ அவை நீக்கக்கூடியவையா? ضُرِّهٖۤ அவனது தீங்கை اَوْ அல்லது اَرَادَنِىْ அவன் எனக்கு நாடினால் بِرَحْمَةٍ ஓர் அருளை هَلْ هُنَّ مُمْسِكٰتُ அவை தடுத்துவிடக் கூடியவையா? رَحْمَتِهٖ ؕ அவனது அருளை قُلْ கூறுவீராக! حَسْبِىَ اللّٰهُ ؕ அல்லாஹ் எனக்குப் போதுமானவன் عَلَيْهِ அவன் மீதே يَتَوَكَّلُ நம்பிக்கை வைக்கட்டும் الْمُتَوَكِّلُوْنَ நம்பிக்கை வைப்பவர்கள்
39:38. வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”
39:38. (நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். மேலும், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா)? (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக்கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்.''
39:38. வானங்களையும், பூமியையும் படைத்தது யார் என்று இவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று இவர்கள் பதிலுரைப்பார்கள். (இவர்களிடம்) கேளும். (உண்மை இதுவாயின்) அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கும் தெய்வங்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? அல்லாஹ் எனக்கு ஏதேனும் தீங்கு இழைக்க நாடினால் அந்தத் தீங்கிலிருந்து என்னை அவை காப்பாற்றி விடுமா? அல்லது அல்லாஹ் என்மீது கருணைபொழிய நாடினால் அந்தத் தெய்வங்களால் அவனுடைய கருணையைத் தடுத்து நிறுத்த முடியுமா? (சரி, இவர்களிடம்) கூறிவிடும்: “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; சார்ந்திருப்பவர்கள் அனைவரும் அவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றார்கள்.”
39:38. மேலும், “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று (நபியே!)) நீர் அவர்களைக் கேட்பீராயின், “அல்லாஹ்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள், (பின்னும் நபியே! அவர்களிடம்) “அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால், அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக்கூடியவையா? அல்லது எனக்கு ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால், அவனுடைய அருளை அவை தடுத்துவிடக்கூடியவையா?” என்று நீர் கேட்பீராக!” அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன்மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்” என்று கூறுவீராக!
39:39 قُلْ يٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّىْ عَامِلٌۚ فَسَوْفَ تَعْلَمُوْنَۙ
قُلْ கூறுவீராக! يٰقَوْمِ என் மக்களே! اعْمَلُوْا அமல் செய்யுங்கள்! عَلٰى مَكَانَتِكُمْ நீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறு اِنِّىْ நிச்சயமாக நானும் عَامِلٌۚ அமல் செய்கிறேன் فَسَوْفَ تَعْلَمُوْنَۙ நீங்கள் விரைவில் அறிவீர்கள்
39:39. “என்னுடைய சமூகத்தாரே! உங்கள் நிலைமைக்குத் தக்கவாறு நீங்கள் (செய்ய வேண்டியதைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் (என் நிலைமைக்குத் தக்கவாறு செயல்) செய்து வருபவன் - ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
39:39. (மேலும், நபியே!) கூறுவீராக: ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் நிலைமையில் இருந்து கொண்டு நீங்கள் (செய்யக்கூடியதைச்) செய்து கொண்டிருங்கள். நானும் (என் நிலையிலிருந்து கொண்டு, நான் செய்யக் கூடியதை) செய்து வருவேன். (எவருடைய செயல் தவறு என்பதைப்) பின்னர், நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.''
39:39. (இவர்களிடம் தெளிவாகக்) கூறும்: “என் சமூகத்தாரே! நீங்கள் உங்கள் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருங்கள். நான் (என்னுடைய) பணியைச் செய்து கொண்டிருப்பேன்.
39:39. “என்னுடைய சமூகத்தாரே! உங்களுடைய வழி முறையின் மீதே நீங்கள் (செய்யக்கூடியதை) நீங்கள் செய்துகொண்டிருங்கள். (என்னுடைய வழியின் மீது) நிச்சயமாக நான்) செய்து வருபவன், ஆகவே, (எவருடைய செயல் சரியானது என்பதை அடுத்து) நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
39:40 مَنْ يَّاْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ
مَنْ யார் ஒருவர் يَّاْتِيْهِ அவருக்கு வரும் عَذَابٌ வேதனை يُّخْزِيْهِ அவரை இழிவுபடுத்துகின்ற وَيَحِلُّ இன்னும் இறங்கும் عَلَيْهِ அவர் மீது عَذَابٌ வேதனை مُّقِيْمٌ நிரந்தரமான
39:40. “இழிவு படுத்தும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனையும் யார் மீது இறங்குகிறது?” (என்பதை அறிவீர்கள்).
39:40. இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது? நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது? (என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.)
39:40. இழிவு தரும் வேதனை யாருக்கு வரும், நீங்காத தண்டனை யார்மீது இறங்கும் என்பது உங்களுக்கு விரைவில் தெரிந்துவிடும்.”
39:40. “தன்னை இழிவுபடுத்தும் வேதனை யாருக்கு வரும்? என்பதையும், இன்னும் நிலையான வேதனை யார் மீது இறங்கும் என்பதையும் (நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.)”
39:41 اِنَّاۤ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ لِلنَّاسِ بِالْحَقِّ ۚ فَمَنِ اهْتَدٰى فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنَا இறக்கினோம் عَلَيْكَ உம்மீது الْكِتٰبَ இந்த வேதத்தை لِلنَّاسِ மக்களுக்காக بِالْحَقِّ ۚ சத்தியத்துடன் فَمَنِ யார் اهْتَدٰى நேர்வழி செல்கிறாரோ فَلِنَفْسِهٖ ۚ தனது நன்மைக்காகத்தான் وَمَنْ யார் ضَلَّ வழிகெடுகிறாரோ فَاِنَّمَا يَضِلُّ வழிகெடுவதெல்லாம் عَلَيْهَا ۚ அதற்கு பாதகமாகத்தான் وَمَاۤ اَنْتَ நீர் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது بِوَكِيْلٍ கண்காணிப்பவராக
39:41. நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.
39:41. (நபியே!) நிச்சயமாக நாம் மனிதர்களின் நன்மைக்காகவே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம் மீது இறக்கி வைத்தோம். ஆகவே, எவன் இதைப் பின்பற்றி நடக்கிறானோ, அது அவனுக்கே நன்று; எவன் (இதிலிருந்து) வழிதவறி விடுகிறானோ அவன், வழி தவறியது அவனுக்கே தீங்காக முடியும். (நபியே!) நீர் அவர்கள் மீது பொறுப்பாளர் அல்ல.
39:41. (நபியே!) நாம் மனிதர்கள் அனைவருக்காகவும் சத்தியத்துடனான இந்த வேதத்தை உம்மீது இறக்கியிருக்கின்றோம். இனி, யாரேனும் நேரிய வழியில் நடந்தால் அது அவருக்கே நன்மை தரும். யாரேனும் வழி தவறினாலும், வழி தவறியதன் தீயவிளைவு அவரையே சாரும். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.
39:41. (நபியே!) நிச்சயமாக நாம், மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டுள்ள (இவ்)வேதத்தை உம் மீது இறக்கினோம், ஆகவே, எவர் நேர்வழி பெற்று விடுகின்றாரோ அது அவருக்கே (நன்மை) ஆகும், எவர் (அதிலிருந்து) வழிகெட்டுவிடுகின்றரோ அவர் வழிகெடுவதெல்லாம் அவரின் மீதே (கேடாக) ஆகும், (நபியே!) நீர் அவர்களுக்காகப் பொறுப்பேற்றுக்கொள்பவரும் அல்லர்.
39:42 اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِىْ لَمْ تَمُتْ فِىْ مَنَامِهَا ۚ فَيُمْسِكُ الَّتِىْ قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَ يُرْسِلُ الْاُخْرٰٓى اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
اَللّٰهُ அல்லாஹ்தான் يَتَوَفَّى கைப்பற்றுகின்றான் الْاَنْفُسَ உயிர்களை حِيْنَ நேரத்தில் مَوْتِهَا அவை மரணிக்கும் وَالَّتِىْ لَمْ تَمُتْ இன்னும் இறந்து போகாத உயிர்களையும் فِىْ مَنَامِهَا ۚ அவற்றின் தூக்கத்தில் فَيُمْسِكُ அவன் தடுத்துக் கொள்கிறான் الَّتِىْ எதை قَضٰى விதித்து விட்டான் عَلَيْهَا அதன் மீது الْمَوْتَ மரணத்தை وَ يُرْسِلُ இன்னும் விட்டு வைக்கிறான் الْاُخْرٰٓى மற்றொன்றை اِلٰٓى اَجَلٍ தவணை வரை مُّسَمًّى ؕ குறிப்பிட்ட اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰیٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يَّتَفَكَّرُوْنَ சிந்திக்கின்றார்கள்
39:42. அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
39:42. மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும் பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம்வரை வாழ அவன் அவர்களிடமே அனுப்பிவிடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
39:42. அல்லாஹ்தான் மரணத்தின்போது உயிர்களைக் கைப்பற்றுகின்றான். (அவ்வாறே) இதுவரை மரணிக்காதவர்களின் உயிர்களைத் தூக்கத்தின்போது கைப்பற்றுகின்றான். பிறகு, எவர்கள் மீது மரணத்தை விதிக்கின்றானோ, அவர்களின் உயிரைத் தடுத்து வைத்துக்கொள்கின்றான். மற்றவர்களின் உயிர்களை, ஒரு குறிப்பிட்ட தவணைவரை திருப்பி அனுப்புகின்றான்; சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் மாபெரும் சான்றுகள் உள்ளன.
39:42. உயிர்களை_ அவை இறக்கும் பொழுதும், தம் நித்திரையிலும் இறப்பெய்யாதவற்றையும்_ அல்லாஹ்வே கைப்பற்றுகிறான், பின்னர், எதன் மீது மரணத்தை அவன் விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடமே) அவன் நிறுத்திக்கொள்கின்றான், மேலும், மற்றவற்றை குறிப்பிட்ட காலம் வரை (வாழ்வதற்காக) அவன் அனுப்பிவிடுகின்றான், சிந்தித்துப் பார்க்கக்கூடிய சமூத்தார்க்கு, நிச்சயமாக இதில் படிப்பினைகள் இருக்கின்றன.
39:43 اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَآءَ ؕ قُلْ اَوَلَوْ كَانُوْا لَا يَمْلِكُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَعْقِلُوْنَ
اَمِ اتَّخَذُوْا எடுத்துக் கொண்டார்களா? مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி شُفَعَآءَ ؕ பரிந்துரை செய்பவர்களாக قُلْ கூறுவீராக! اَوَلَوْ كَانُوْا அவர்கள் இருந்தாலுமா? لَا يَمْلِكُوْنَ சக்தியற்றவர்களாக(வும்) شَيْـٴًـــا எதற்கும் وَّلَا يَعْقِلُوْنَ சிந்தித்து புரியாதவர்களாகவும்
39:43. அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?” (என்று.)
39:43. இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குச்) சிபாரிசு செய்பவர்கள் என்று (எண்ணி) எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? ‘‘அவை எதற்கும் சக்தி அற்றதாக, எதையும் அறியக்கூடிய உணர்ச்சி அற்றதாக இருந்தாலுமா (அவற்றை நீங்கள் உங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எடுத்துக் கொள்வீர்கள்)?'' என்று (நபியே!) அவர்களைக் கேட்பீராக.
39:43. என்ன, இவர்கள் இத்தகைய இறைவனை விட்டுவிட்டு மற்றவர்களைப் பரிந்துரையாளர்களாக எடுத்துக் கொண்டார்களா? அவர்களிடம் கேளும்: “அவர்களிடம் எந்த அதிகாரமும் இல்லை என்றாலும், அவர்கள் எதையும் புரியாமலிருந்தாலுமா பரிந்துரை செய்யப்போகிறார்கள்?”
39:43. இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்கு)ப் பரிந்துரையாளர்களாக எடுத்துக் கொண்டார்களா? “அவர்கள் (காரியத்தில்) எதையும் சொந்தமாக்கிக் கொள்ளாதவர்களாகவும், (எதையும்) விளங்காதவர்களாகவும் இருந்தாலுமா?” என்று (நபியே! அவர்களை) நீர் கேட்பீராக!
39:44 قُلْ لِّلّٰهِ الشَّفَاعَةُ جَمِيْعًا ؕ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
قُلْ கூறுவீராக! لِّلّٰهِ அல்லாஹ்விற்கே الشَّفَاعَةُ சிபாரிசுகள் جَمِيْعًا ؕ அனைத்தும் لَهٗ அவனுக்கே உரியன مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ ؕ இன்னும் பூமியின் ثُمَّ பிறகு اِلَيْهِ அவன் பக்கமே تُرْجَعُوْنَ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
39:44. “பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
39:44. (மேலும் நபியே!) கூறுவீராக: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் சிபாரிசு செய்ய முடியாது.) வானங்கள் பூமியின் ஆட்சி முழுவதும் அல்லாஹ்வுக்குரியதே. பின்னர், (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
39:44. கூறுவீராக: ஷஃபாஅத் பரிந்துரை முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன். பிறகு, நீங்கள் அவனிடமே திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
39:44. (பின்னும் நபியே!) நீர் கூறுவீராக; ”பரிந்துரைகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.” (ஆகவே, அவனுடைய அனுமதியும், அவன் பொருத்தமுமின்றி அவனிடத்தில் ஒருவரும் பரிந்துரை செய்ய முடியாது) வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி (முழுவதும்) அவனுக்கே உரியது, பின்னர் (மறுமையில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
39:45 وَاِذَا ذُكِرَ اللّٰهُ وَحْدَهُ اشْمَاَزَّتْ قُلُوْبُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ ۚ وَاِذَا ذُكِرَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖۤ اِذَا هُمْ يَسْتَبْشِرُوْنَ
وَاِذَا ذُكِرَ நினைவு கூரப்பட்டால் اللّٰهُ அல்லாஹ் وَحْدَهُ ஒருவனை மட்டும் اشْمَاَزَّتْ சுருங்கி விடுகின்றன قُلُوْبُ உள்ளங்கள் الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளாதவர்களின் بِالْاٰخِرَةِ ۚ மறுமையை وَاِذَا ذُكِرَ பிரஸ்தாபிக்கப்பட்டால் الَّذِيْنَ مِنْ دُوْنِهٖۤ எவர்கள்/ அவனை அன்றி اِذَا هُمْ அப்போது அவர்கள் يَسْتَبْشِرُوْنَ மகிழ்ச்சி அடைகின்றனர்
39:45. மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன; மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
39:45. அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. அவன் அல்லாதவை(களின் பெயர்கள்) கூறப்பட்டாலோ, அவர்கள் சந்தோஷப்படுகின்றனர்.
39:45. ஏக அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்படுமாயின் மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் குமைய ஆரம்பிக்கின்றன. ஆனால், அவனை விடுத்து மற்றவர்களைப் பற்றிக் கூறப்படுமாயின் உடனே அவர்கள் மகிழ்ச்சியினால் பூரிப்படைகின்றார்கள்.
39:45. மேலும், (இவர்களின் கூட்டுக்காரர்களன்றி) அல்லாஹ்(வைமட்டும்)_ அவன் தனித்தவனாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையே அத்தகையோரின் இதயங்கள் (கோபத்தால்) சுருங்கிவிடுகின்றன, இன்னும், அவனையன்றி மற்றோர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால் அது சமயம் அவர்கள் மகிழ்வடைகின்றனர்.
39:46 قُلِ اللّٰهُمَّ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ عٰلِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ اَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِىْ مَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ
قُلِ கூறுவீராக! اللّٰهُمَّ அல்லாஹ்வே! فَاطِرَ படைத்தவனே! السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضِ பூமியையும் عٰلِمَ அறிந்தவனே! الْغَيْبِ மறைவானதை(யும்) وَالشَّهَادَةِ வெளிப்படை யானதையும் اَنْتَ நீதான் تَحْكُمُ தீர்ப்பளிப்பாய் بَيْنَ மத்தியில் عِبَادِكَ உனது அடியார்களுக்கு فِىْ مَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ அவர்கள் தர்க்கித்து வந்த விஷயங்களில்
39:46. “அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
39:46. (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: ‘‘எங்கள் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கிடையில் நீ தீர்ப்பளிப்பாயாக!''
39:46. நீர் கூறும்: “இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிபவனே! நீயே உன்னுடைய அடிமைகளுக்கிடையே அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவாய்.”
39:46. “அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! உன் அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் எதில் வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ, அதில் நீயே தீர்ப்பு வழங்குவாய்” (என்று நபியே!) நீர் கூறிவீராக!
39:47 وَلَوْ اَنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا مَا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ مِنْ سُوْٓءِ الْعَذَابِ يَوْمَ الْقِيٰمَةِؕ وَبَدَا لَهُمْ مِّنَ اللّٰهِ مَا لَمْ يَكُوْنُوْا يَحْتَسِبُوْنَ
وَلَوْ இருந்தால் اَنَّ நிச்சயமாக لِلَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களுக்கு مَا فِى الْاَرْضِ பூமியில் உள்ளவை جَمِيْعًا அனைத்தும் وَّمِثْلَهٗ அது போல் இன்னமும் مَعَهٗ அதனுடன் لَافْتَدَوْا அவர்கள் பிணையாகக் கொடுத்து இருப்பார்கள் بِهٖ அதை مِنْ இருந்து سُوْٓءِ கெட்ட الْعَذَابِ வேதனையில் يَوْمَ الْقِيٰمَةِؕ மறுமை நாளில் وَبَدَا இன்னும் வெளிப்படும் لَهُمْ அவர்களுக்கு முன் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَا لَمْ يَكُوْنُوْا يَحْتَسِبُوْنَ அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத விஷயங்கள் எல்லாம்
39:47. மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்.
39:47. (நபியே!) அநியாயம் செய்தவர்களுக்குப் பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் இருந்த போதிலும் மறுமையின் கொடிய வேதனையில் இருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்து விடவே நிச்சயமாக விரும்புவார்கள். (எனினும், அது ஆகக்கூடியதல்ல) மேலும், அவர்கள் எதிர்பார்க்காததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும்.
39:47. இந்தக் கொடுமைக்காரர்களிடம் பூமியிலுள்ள அனைத்துச் செல்வங்களும் இருந்த போதிலும், அவற்றுடன் இன்னும் அதே அளவு செல்வம் இருந்தாலும், மறுமைநாளில் கொடிய தண்டனையிலிருந்து தப்புவதற்காக அவை அனைத்தையும் ஈடாகக் கொடுத்திட அவர்கள் தயாராகிவிடுவார்கள். அவர்கள் என்றுமே நினைத்து கூடப் பார்க்காதவை அங்கு அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு முன்னால் வெளிப்படும்.
39:47. மேலும், அநியாயம் செய்துவிட்டார்களே அத்தகையோருக்கு பூமியிலுள்ள அனைத்துமிருந்து, அத்துடன் அது போன்றதும் (சொந்தமாக) இருந்திருந்தால், கொடிய வேதனையிலிருந்து (விடிவுதேடி தப்பித்துக் கொள்வதற்கு) மறுமை நாளில் அதை ஈடாகக் கொடுத்துவிடுவார்கள், அன்றியும், (அப்பொழுது) அவர்கள் எண்ணிப்பார்த்திராததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும்.
39:48 وَبَدَا لَهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
وَبَدَا வெளிப்படும் لَهُمْ அவர்களுக்கு முன் سَيِّاٰتُ தீமைகள் مَا كَسَبُوْا அவர்கள் செய்தவற்றின் وَحَاقَ இன்னும் சூழ்ந்து கொள்ளும் بِهِمْ அவர்களை مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ அவர்கள் பரிகாசம் செய்து வந்தவை
39:48. அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
39:48. மேலும், அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயல்களின் தீமைகள் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனையும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
39:48. அவர்களுடைய சம்பாதனையின் தீயவிளைவுகள் அனைத்தும் (அங்கு) அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதனைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கின்றார்களோ அது அவர்களை முழுமையாகச் சூழ்ந்துகொள்ளும்.
39:48. மேலும், அவர்கள் சம்பாதித்தவற்றின் தீயவைகளும் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும், அன்றியும் அவர்கள் எதனைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
39:49 فَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ نِعْمَةً مِّنَّا ۙ قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍؕ بَلْ هِىَ فِتْنَةٌ وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ
فَاِذَا مَسَّ ஏற்பட்டால் الْاِنْسَانَ மனிதனுக்கு ضُرٌّ ஒரு தீங்கு دَعَانَا நம்மிடம் பிரார்த்திக்கின்றான் ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ பிறகு நாம் அவனுக்கு வழங்கினால் نِعْمَةً ஓர்அருட்கொடையை مِّنَّا ۙ நம்மிடமிருந்து قَالَ அவன் கூறுகிறான் اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் عَلٰى عِلْمٍؕ அறிந்ததினால்தான் بَلْ هِىَ மாறாக, அது فِتْنَةٌ ஒரு சோதனையாகும் وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ என்றாலும்/அவர்களில் அதிகமானவர்கள்/அறியமாட்டார்கள்
39:49. மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
39:49. மனிதனை ஏதும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கிறான். (அதை நீக்கி) அவனுக்கு நாம் ஒரு அருள் புரிந்தாலோ, ‘‘தான் அதை அடைந்ததெல்லாம் தன் அறிவின் சாமர்த்தியத்தால்தான்'' என்று கூறுகிறான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அதிகமானோர் இதை அறிந்து கொள்வதில்லை.
39:49. இதே மனிதனைக் கொஞ்சம் துன்பம் தொட்டுவிட்டால் அவன் நம்மை அழைக்கின்றான். பிறகு, நாம் அவனுக்கு நம் சார்பிலிருந்து அருட்கொடையை அளி(த்து மகிழ்வி)க்கும்போது, இது எனக்கு என்னுடைய அறிவின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றான். உண்மையில் இது ஒரு சோதனையாகும். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
39:49. ஆகவே, மனிதனை ஏதேனும் துன்பம் தொட்டுவிடுமானால் (அதனை நீக்கிவிடுமாறு பிரார்த்தித்து) அவன் நம்மை அழைக்கின்றான், (அதனை நீக்கிய பின் நம்மிடமிருந்து) அவனுக்கு யாதோர் அருட்கொடையை நாம் கொடுத்தால், “இதை நான் கொடுக்கப்பட்டதெல்லாம் (என்) அறிவினால் தான்” என்று அவன் கூறுகிறான், அவ்வாறல்ல! அது (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும், எனினும், அவர்களில் பெரும்பாலனோர் (இதனை) அறியமாட்டார்கள்.
39:50 قَدْ قَالَهَا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ
قَدْ قَالَهَا திட்டமாக இதைச் சொல்லி இருக்கின்றார்கள் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் فَمَاۤ اَغْنٰى தடுக்கவில்லை عَنْهُمْ அவர்களை விட்டும் مَّا كَانُوْا يَكْسِبُوْنَ அவர்கள் செய்து வந்தவை
39:50. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறுதான் கூறிக்கொண்டிருந்தார்கள்; ஆயினும் அவர்கள் சம்பாதித்தது எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
39:50. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், இவ்வாறுதான் கூறிக்கொண்டு இருந்தார்கள். எனினும், அவர்கள் சம்பாதித்து வந்ததில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்காமல் போய்விட்டது.
39:50. இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்களும் இதையே கூறினார்கள். ஆயினும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை.
39:50. இவர்களுக்கு முன்னிருந்தார்களே அத்தகையோரும் இதனைத் திட்டமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள், பின்னர், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தார்களே, அது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
39:51 فَاَصَابَهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا ؕ وَالَّذِيْنَ ظَلَمُوْا مِنْ هٰٓؤُلَاۤءِ سَيُصِيْبُهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا ۙ وَمَا هُمْ بِمُعْجِزِيْنَ
فَاَصَابَهُمْ அவர்களை அடைந்தன سَيِّاٰتُ தீங்குகள் مَا كَسَبُوْا ؕ அவர்கள் செய்ததின் وَالَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களையும் مِنْ هٰٓؤُلَاۤءِ இவர்களில் سَيُصِيْبُهُمْ விரைவில் அடையும் سَيِّاٰتُ தீங்குகள் مَا كَسَبُوْا ۙ அவர்கள் செய்தவற்றின் وَمَا هُمْ بِمُعْجِزِيْنَ அவர்கள் தப்பிக்க மாட்டார்கள்
39:51. ஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது; இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் - அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது.
39:51. அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீமைகள்தான் அவர்களை வந்தடைந்தன. (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கிறார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீமைகள் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது.
39:51. பின்னர், தங்களுடைய சம்பாத்தியத்தின் தீயவிளைவுகள் அவர்களைப் பீடித்துக்கொள்ளும். மேலும், அவர்களில் யார் கொடுமை புரிந்தார்களோ அவர்களையும் அவர்களுடைய சம்பாத்தியத்தின் தீயவிளைவுகள் பிடித்துக் கொள்ளும்! அவர்கள் நம்மைத் தோல்வியுறச் செய்யக்கூடியவர்களல்லர்.
39:51. ஆகவே, அவர்கள் சம்பாதித்த தீயவைகள் அவர்களைப்பீடித்தன, மேலும், இவர்களில் அநியாயம் செய்தார்களே அத்தகையோர்_அவர்கள் சம்பாதித்ததன் தீயவைகள் அவர்களை வந்தடையும், அவர்கள் (அல்லாஹ்வை எதிலும்) இயலாமல் ஆக்ககூடியவர்களும் அல்லர்.
39:52 اَوَلَمْ يَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ
اَوَلَمْ يَعْلَمُوْۤا அவர்கள் அறியவில்லையா? اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَبْسُطُ விசாலமாகக் கொடுக்கின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு وَيَقْدِرُؕ சுருக்கமாகக் கொடுக்கின்றான் اِنَّ فِىْ ذٰلِكَ நிச்சயமாக இதில் உள்ளன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கின்றனர்
39:52. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவு (சம்பத்து)களை விசாலமாக்குகிறான்; சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? ஈமான் கொள்ளும் மக்கள் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் திடமான அத்தாட்சிகள் இருக்கின்றன.
39:52. அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அல்லாஹ்தான், தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (தான் நாடியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
39:52. அல்லாஹ் தான் நாடுகின்றவர்க்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்க்குக் குறைவாகக் கொடுக்கின்றான் என்பதை இவர்கள் அறியவில்லையா? இதில் சான்றுகள் உள்ளன; நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு!
39:52. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு உணவை (சம்பத்துகளை) விரிவாக்குகின்றான், (தான் நாடியவர்களுக்கு) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? விசுவாசங்கொண்ட சமூத்தார்க்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
39:53 قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
قُلْ கூறுவீராக! يٰعِبَادِىَ என் அடியார்களே الَّذِيْنَ اَسْرَفُوْا வரம்புமீறிய(வர்கள்) عَلٰٓى اَنْفُسِهِمْ தங்கள் மீது لَا تَقْنَطُوْا நிராசை ஆகாதீர்கள் مِنْ இருந்து رَّحْمَةِ கருணையில் اللّٰهِ ؕ அல்லாஹ்வின் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَغْفِرُ மன்னிப்பான் الذُّنُوْبَ பாவங்களையும் جَمِيْعًا ؕ எல்லா اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ பெரும் கருணையாளன்
39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
39:53. (நபியே!) கூறுவீராக: ‘‘எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்புக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை உடையவன் ஆவான்.
39:53. (நபியே!) கூறுவீராக: “தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான்.
39:53. “தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையற்றோராக நீங்கள் ஆகிவிடவேண்டாம், நிச்சயமாக அல்லாஹ்_(உங்களுடைய) பாவங்கள் யாவையும்_(நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்,) அவன் மன்னித்துவிடுவான், (ஏனென்றால்) நிச்சயமாக அவன் தான் மிக்க மன்னிகிறவன், மிகக்கிருபையுடையவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
39:54 وَاَنِيْبُوْۤا اِلٰى رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ
وَاَنِيْبُوْۤا இன்னும் திரும்புங்கள்! اِلٰى رَبِّكُمْ உங்கள் இறைவன் பக்கம் وَاَسْلِمُوْا இன்னும் முற்றிலும் பணிந்து விடுங்கள் لَهٗ அவனுக்கு مِنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِيَكُمُ உங்களுக்கு வருவதற்கு الْعَذَابُ வேதனை ثُمَّ பிறகு لَا تُنْصَرُوْنَ நீங்கள் உதவப்பட மாட்டீர்கள்
39:54. ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
39:54. ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
39:54. திரும்பி விடுங்கள், உங்கள் இறைவனின் பக்கம்! மேலும், அடிபணிந்து விடுங்கள் அவனுக்கு உங்கள்மீது வேதனை வருவதற்கு முன்பாகவே! பிறகு, எங்கிருந்தும் உங்களுக்கு உதவி கிடைக்காது.
39:54. இன்னும் (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக உங்கள் இரட்சகன்பால் (தவ்பாச்செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள், அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்ப்படிந்தும் விடுங்கள், (வேதனை வந்துவிட்டால்,) பின்னர் (எவராலும்) நீங்கள் உதவி செய்யப்படமாட்டீர்கள்.
39:55 وَاتَّبِعُوْۤا اَحْسَنَ مَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَۙ
وَاتَّبِعُوْۤا இன்னும் பின்பற்றுங்கள் اَحْسَنَ மிக அழகியவற்றை مَاۤ اُنْزِلَ இறக்கப்பட்ட(து) اِلَيْكُمْ உங்களுக்கு مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து مِّنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِيَكُمُ உங்களுக்கு வருவதற்கு الْعَذَابُ வேதனை بَغْتَةً திடீரென وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَۙ நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
39:55. நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.
39:55. (மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான (இ)தைப் பின்பற்றுங்கள்.
39:55. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்பட்ட வேதத்தின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுங்கள்; நீங்கள் உணராதிருக்கும் நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக!
39:55. (மனிதர்களே!) நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்களிரட்சகனிடமிருந்து உங்களின் பக்கம் இறக்கிவைக்கப்பட்ட மிக்க அழகானவற்றையும் பின்பற்றுங்கள்:
39:56 اَنْ تَقُوْلَ نَفْسٌ يّٰحَسْرَتٰى عَلٰى مَا فَرَّطْتُّ فِىْ جَنْۢبِ اللّٰهِ وَاِنْ كُنْتُ لَمِنَ السّٰخِرِيْنَۙ
اَنْ تَقُوْلَ சொல்லாமல் இருப்பதற்காக نَفْسٌ ஓர் ஆன்மா يّٰحَسْرَتٰى எனக்கு நேர்ந்த துக்கமே! عَلٰى مَا فَرَّطْتُّ நான் குறைசெய்து விட்டதனால் فِىْ جَنْۢبِ விஷயங்களில் اللّٰهِ அல்லாஹ்வின் وَاِنْ كُنْتُ நிச்சயமாக நான் இருந்தேன் لَمِنَ السّٰخِرِيْنَۙ பரிகாசம் செய்வோரில்தான்
39:56. “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;
39:56. (உங்களில்) எவரும், ‘‘அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவற்றைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என் கேடே! நான் (இவற்றைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
39:56. இனி, “ஐயகோ! அல்லாஹ்வின் விஷயத்தில் நான் குறைபாடு செய்துவிட்டேனே! அது மட்டுமின்றி நான் பரிகாசம் செய்தவர்களுடனும் சேர்ந்துவிட்டேனே!” என்று புலம்பக்கூடிய அல்லது,
39:56. “அல்லாஹ்விற்கு நான் செலுத்தவேண்டியவற்றில் குறை செய்துவிட்டதன் மீது என்னுடைய கைசேதமே! இன்னும் நான் (உலகில்) பரிகாசம் செய்கிறவர்களில் இருந்தேனே” என்று எந்த ஒரு ஆத்மாவும் கூறாமலிருப்பதற்காகவும்.
39:57 اَوْ تَقُوْلَ لَوْ اَنَّ اللّٰهَ هَدٰٮنِىْ لَكُنْتُ مِنَ الْمُتَّقِيْنَۙ
اَوْ تَقُوْلَ அல்லது சொல்லாமல் இருப்பதற்காக لَوْ اَنَّ اللّٰهَ هَدٰٮنِىْ நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேர்வழிகாட்டி இருந்தால் لَكُنْتُ நானும் ஆகி இருப்பேனே مِنَ الْمُتَّقِيْنَۙ இறையச்சமுள்ளவர்களில்
39:57. அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களில் - ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
39:57. அல்லது (உங்களில் எவரும்) ‘‘அல்லாஹ் எனக்கு நேரான வழியை அறிவித்திருந்தால், நானும் இறையச்சமுடையவர்களில் ஒருவனாகி இருப்பேன்!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
39:57. “அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் நானும் இறையச்சமுள்ளவர்களில் ஒருவனாக இருந்திருப்பேனே!” என்று புலம்பக்கூடிய,
39:57. அல்லது “அல்லாஹ் எனக்கு நேர் வழிகாட்டியிருந்தால் நான் பயபக்தியுடையவர்களில் (ஒருவனாக) ஆகி இருப்பேன்!” என்று கூறாமலிப்பதற்காகவும்_
39:58 اَوْ تَقُوْلَ حِيْنَ تَرَى الْعَذَابَ لَوْ اَنَّ لِىْ كَرَّةً فَاَكُوْنَ مِنَ الْمُحْسِنِيْنَ
اَوْ அல்லது تَقُوْلَ அது சொல்லாமல் இருப்பதற்காக حِيْنَ تَرَى அது கண்ணால் பார்க்கும் நேரத்தில் الْعَذَابَ வேதனையை لَوْ اَنَّ لِىْ كَرَّةً நிச்சயமாக எனக்கு திரும்பி வரமுடிந்தால் فَاَكُوْنَ நானும் ஆகிவிடுவேன் مِنَ الْمُحْسِنِيْنَ நல்லவர்களில்
39:58. அல்லது: வேதனையைக் கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
39:58. அல்லது, (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் ‘‘(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நல்லவர்களில் ஆகிவிடுவேன்'' என்று கூறாமல் இருப்பதற்காகவும் (உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவன் இறக்கிய வேதத்தை பின்பற்றுங்கள்).
39:58. அல்லது, வேதனையைப் பார்க்கும் நேரத்தில் “அந்தோ! மற்றொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தால் நானும் நற்செயல் புரிவோர்களில் ஒருவனாய் ஆகிவிடுவேனே!” என்று புலம்பக்கூடிய நிலை எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.
39:58. அல்லது வேதனையை அது காணும் சமயத்தில், “நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பிச் செல்லுதல் இருக்குமானால், நான் நன்மை செய்வோரில் உள்ளவனாகி விடுவேன்” என்று கூறாமலிருப்பதற்காகவும்_
39:59 بَلٰى قَدْ جَآءَتْكَ اٰيٰتِىْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِيْنَ
بَلٰى இல்லை قَدْ திட்டமாக جَآءَتْكَ உன்னிடம் வந்தன اٰيٰتِىْ எனது வசனங்கள் فَكَذَّبْتَ ஆனால், நீ பொய்ப்பித்தாய் بِهَا அவற்றை وَاسْتَكْبَرْتَ இன்னும் பெருமை அடித்தாய் وَكُنْتَ இன்னும் நீ ஆகி இருந்தாய் مِنَ الْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களில்
39:59. (பதில் கூறப்படும்:) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.”
39:59. (அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) ‘‘ஆம்! மெய்யாகவே என் வசனங்கள் உன்னிடம் வந்தன, நீ அவற்றைப் பொய்யாக்கினாய், கர்வம் கொண்டாய், அதை நிராகரிப்பவர்களில் இருந்தாய்.'' (என்று கூறுவான்.)
39:59. (அப்பொழுது அவனுக்கு இந்தப் பதில் கிடைக்கும்:) “அவ்வாறல்ல...! என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்திருந்தன அல்லவா? அவற்றை நீ பொய் என்று கூறினாய். மேலும், தற்பெருமை கொண்டாய்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்!”
39:59. ஏன் இல்லை, “திட்டமாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன, பின்னர் நீ அவற்றைப் பொய்யாக்கினாய்; கர்வமும் கொண்டாய், (அதனை) நிராகரிப்பவர்களில் உள்ளவனாகவும் இருந்தாய்” (என்று அல்லாஹ் கூறுவான்).
39:60 وَيَوْمَ الْقِيٰمَةِ تَرَى الَّذِيْنَ كَذَبُوْا عَلَى اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ؕ اَلَيْسَ فِىْ جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِيْنَ
وَيَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் تَرَى நீர் பார்ப்பீர் الَّذِيْنَ كَذَبُوْا பொய்யுரைத்தவர்களை عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது وُجُوْهُهُمْ அவர்களின் முகங்கள் مُّسْوَدَّةٌ ؕ கருப்பாக اَلَيْسَ இல்லையா? فِىْ جَهَنَّمَ நரகத்தில் مَثْوًى தங்குமிடம் لِّلْمُتَكَبِّرِيْنَ பெருமை அடிப்பவர்களுக்கு
39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
39:60. (நபியே!) மறுமை நாளன்று அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் கருத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். கர்வம் கொண்ட இவர்கள் செல்லுமிடம் நரகத்தில் இல்லையா?
39:60. (இன்று) எவர்கள் இறைவன் மீது பொய் புனைந்துரைக்கின்றார்களோ, அவர்களின் முகங்கள் மறுமைநாளில் கறுத்துப்போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்தவர்களுக்கு நரகம் போதிய தங்குமிடமாக இல்லையா, என்ன?
39:60. இன்னும், (நபியே!) அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே அத்தகையோரை_அவர்களுடைய முகங்கள் மறுமை நாளில் கறுப்பாக்கப்பட்டவையாக (இருப்பதை) நீர் காண்பீர், கர்வங்கொண்டிருந்தவர்களுக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
39:61 وَيُنَجِّىْ اللّٰهُ الَّذِيْنَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ السُّوْٓءُ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
وَيُنَجِّىْ இன்னும் பாதுகாப்பான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اتَّقَوْا அல்லாஹ்வை அஞ்சியவர்களை بِمَفَازَتِهِمْ அவர்களின் நல்லமல்களினால் لَا يَمَسُّهُمُ அவர்களுக்கு ஏற்படாது السُّوْٓءُ எந்தத் தீங்கும் وَلَا هُمْ يَحْزَنُوْنَ இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்
39:61. எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது; அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.
39:61. எவர்கள் (பாவங்களிலிருந்து) முற்றிலும் (முழுமையாக) விலகிக் கொண்டார்களோ அவர்களை ஒரு தீங்கும் அணுகாது அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான்; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
39:61. (இதற்கு மாறாக) எவர்கள் இங்கு இறையச்சம் கொண்டு வாழ்கின்றார்களோ, அதன் விளைவாய் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி வாய்ப்புகள் நிமித்தம் அவர்களுக்கு அல்லாஹ் ஈடேற்றம் அளிப்பான். அவர்களை எந்தத் தீங்கும் அணுகாது. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
39:61. இன்னும், (அல்லாஹ்வை) பயந்து (பாவம் செய்வதிலிருந்து விலகிக்) கொண்டார்களே அத்தகையோரை_ அவர்களின் வெற்றியைக் கொண்டு அல்லாஹ் ஈடேற்றுவான், தீமை அவர்களைத் தொடாது, அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள்.
39:62 اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ
اَللّٰهُ அல்லாஹ்தான் خَالِقُ படைத்தவன் كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் وَّ هُوَ அவன்தான் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் وَّكِيْلٌ பாதுகாப்பவன்
39:62. அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.
39:62. அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறுப்பாளன்.
39:62. அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் படைத்தவனாவான். அவனே ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளனாக இருக்கின்றான்.
39:62. அல்லாஹ்(வே) ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன், அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் பொறுப்பாளனுமாவான்.
39:63 لَّهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ وَ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
لَّهٗ அவனுக்கே உரியன مَقَالِيْدُ பொக்கிஷங்களின் சாவிகள் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِؕ இன்னும் பூமி(யிலுள்ள) وَ الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் بِاٰيٰتِ அத்தாட்சிகளை اللّٰهِ அல்லாஹ்வின் اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ (உண்மையான) நஷ்டவாளிகள்
39:63. வானங்களினுடையவும், பூமியினுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை, நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்.
39:63. வானங்கள், பூமியிலுள்ள (பொக்கிஷம் முதலிய)வற்றின் சாவிகள் அவனிடமே இருக்கிறது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களை எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்கள்!
39:63. வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இழப்புக்குரியவர்கள்.
39:63. வானங்கள் மற்றும் பூமியின் (களஞ்சியங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன, இன்னும் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_அவர்கள் தாம் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாவர்.
39:64 قُلْ اَفَغَيْرَ اللّٰهِ تَاْمُرُوْٓنِّىْۤ اَعْبُدُ اَيُّهَا الْجٰـهِلُوْنَ
قُلْ கூறுவீராக! اَفَغَيْرَ அல்லாதவர்களையா? اللّٰهِ அல்லாஹ் تَاْمُرُوْٓنِّىْۤ என்னை ஏவுகிறீர்கள் اَعْبُدُ நான் வணங்க வேண்டும் என்று اَيُّهَا الْجٰـهِلُوْنَ முட்டாள்களே!
39:64. “அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
39:64. (நபியே!) கூறுவீராக: ‘‘மூடர்களே! அல்லாஹ் அல்லாதவற்றையா நான் வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகிறீர்கள்?''
39:64. (நபியே!) இவர்களிடம் கூறுவீராக: “அறிவிலிகளே! அல்லாஹ்வை விட்டுவிட்டு மற்றவர்களை நான் வணங்க வேண்டுமென்று என்னிடம் நீங்கள் கூறுகின்றீர்களா?
39:64. (நபியே!) நீர் கூறுவீராக:” அறிவீனர்களே! அல்லாஹ் அல்லாததை நான் வணங்கவேண்டுமென்று நிச்சயமாக என்னை நீங்கள் ஏவுகின்றீர்களா?”
39:65 وَلَـقَدْ اُوْحِىَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۚ لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
وَلَـقَدْ திட்டவட்டமாக اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு(ம்) وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۚ உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் لَٮِٕنْ اَشْرَكْتَ நீர் இணைவைத்தால் لَيَحْبَطَنَّ நாசமாகிவிடும் عَمَلُكَ உமது அமல்கள் وَلَتَكُوْنَنَّ இன்னும் நீர் ஆகிவிடுவீர் مِنَ الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளில்
39:65. அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்).
39:65. (நபியே!) உமக்கும், (நபிமார்களின்) உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது: (அது என்ன வென்றால், அல்லாஹ்வுக்கு) நீர் இணைவைத்தால், உமது நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்.
39:65. (நீர் இவ்விஷயத்தை இவர்களுக்குத் தெளிவுபடக்கூறிவிட வேண்டும்:) உமக்கும், உமக்கு முன் வாழ்ந்து சென்ற அனைத்து நபிமார்களுக்கும் இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டுள்ளது; நீர் இறைவனுக்கு இணைவைத்தால், உம்முடைய செயல் வீணாகிப் போய்விடும்; நீர் நிச்சயமாக நஷ்டமடைந்தவராகி விடுவீர்;
39:65. (நபியே!) “நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்துவிடும், நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர்” என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது.
39:66 بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ
بَلِ மாறாக اللّٰهَ அல்லாஹ்வை فَاعْبُدْ நீர் வணங்குவீராக! وَكُنْ இன்னும் நீர்ஆகிவிடுவீராக! مِّنَ الشّٰكِرِيْنَ நன்றிசெலுத்துவோரில்
39:66. ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!
39:66. மாறாக, நீர் அல்லாஹ் ஒருவனையே வணங்குவீராக; அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் ஆகிவிடுவீராக.
39:66. எனவே (நபியே!) நீர் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிபணிவீராக! மேலும், நன்றி செலுத்தும் அடியார்களுடன் ஆகிவிடுவீராக!”
39:66. ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துவோரில் நீர் ஆகிவிடுவீராக!
39:67 وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ۖ وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌۢ بِيَمِيْنِهٖ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
وَمَا قَدَرُوْا அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை اللّٰهَ அல்லாஹ்வை حَقَّ முறையில் قَدْرِهٖ அவனை கண்ணியப்படுத்தவேண்டிய ۖ وَالْاَرْضُ பூமி جَمِيْعًا அனைத்தும் قَبْضَتُهٗ அவனது கைப்பிடியில் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وَالسَّمٰوٰتُ இன்னும் வானங்கள் مَطْوِيّٰتٌۢ சுருட்டப்பட்டதாக இருக்கும் بِيَمِيْنِهٖ ؕ அவனதுவலக்கையில் سُبْحٰنَهٗ அவன் மிகப் பரிசுத்தமானவன் وَتَعٰلٰى இன்னும் அவன் மிக உயர்ந்தவன் عَمَّا يُشْرِكُوْنَ அவர்கள் இணைவைப்பதை விட்டு
39:67. அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.
39:67. (நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் அது) முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன்; அவன் மிக பரிசுத்தமானவன்.
39:67. இந்த மக்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவேயில்லை. (அவனுடைய நிறைவான வல்லமையின் நிலை என்னவெனில்) மறுமைநாளில் பூமி முழுவதும் அவனின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனுடைய வலக்கையில் சுருட்டப்பட்டு இருக்கும். அவன் தூய்மையானவன்; உயர்ந்தவன்; இம்மனிதர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களை விட்டு!
39:67. மேலும், (நபியே!) அல்லாஹ்வை_அவனுடைய கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் மதிப்பளிக்கவில்லை, இன்னும், பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனுடைய (ஒரு கைப்) பிடியிலும், வானங்கள் (அனைத்தும்) அவனுடைய வலக்கையிலும் சுருட்டபட்டவையாயிருக்கும், அவன் தூயவன், இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
39:68 وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ ثُمَّ نُفِخَ فِيْهِ اُخْرٰى فَاِذَا هُمْ قِيَامٌ يَّنْظُرُوْنَ
وَنُفِخَ ஊதப்படும் فِى الصُّوْرِ சூரில் فَصَعِقَ இறந்து விடுவார்(கள்) مَنْ فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்களும் وَمَنْ فِى الْاَرْضِ இன்னும் பூமியில் உள்ளவர்களும் اِلَّا مَنْ شَآءَ நாடியவர்களைத்தவிர اللّٰهُ ؕ அல்லாஹ் ثُمَّ نُفِخَ பிறகு ஊதப்படும் فِيْهِ அதில் اُخْرٰى மற்றொரு முறை فَاِذَا هُمْ அப்போது அவர்கள் قِيَامٌ எழுந்து நின்று يَّنْظُرُوْنَ பார்ப்பார்கள்
39:68. ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
39:68. ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள்.
39:68. மேலும், அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மடிந்து வீழ்வார்கள். ஆனால், அல்லாஹ் யாரை உயிருடன் விட்டு வைக்க நாடியிருந்தானோ அவர்களைத் தவிர! பின்னர் மற்றொரு எக்காளம் ஊதப்படும். உடனே அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
39:68. மேலும், ஸுர்(குழல்) ஊதப்படும், பின்னர் வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும்_ அல்லாஹ் நாடியவர்களைத் தவிர_ மூர்ச்சித்துச் சித்தமிழந்து விழுந்து) விடுவார்கள், பிறகு அதில் மறுமுறை ஊதப்படும், அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்) பார்ப்பவர்களாக (யாவரும் உயிர் பெற்று) எழுந்து நிற்பார்கள்.
39:69 وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِآىْ َٔ بِالنَّبِيّٖنَ وَالشُّهَدَآءِ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ
وَاَشْرَقَتِ பிரகாசிக்கும் الْاَرْضُ பூமி بِنُوْرِ ஒளியால் رَبِّهَا தனது இறைவனின் وَوُضِعَ வைக்கப்படும் الْكِتٰبُ புத்தகம் وَجِآىْ َٔ கொண்டு வரப்படுவார்(கள்) بِالنَّبِيّٖنَ நபிமார்கள் وَالشُّهَدَآءِ இன்னும் ஷஹீதுகள் وَقُضِىَ தீர்ப்பளிக்கப்படும் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِالْحَقِّ நீதமாக وَهُمْ அவர்கள் لَا يُظْلَمُوْنَ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
39:69. மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
39:69. இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப்பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங்களையும் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
39:69. பூமி தன் இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும்; வினைச் சுவடிகள் கொண்டு வந்து வைக்கப்படும்; இறைத்தூதரும் அனைத்துச் சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள். மக்கள் மத்தியில் முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது.
39:69. பூமி, தன் இரட்சகனின் “ஒளி”யைக் கொண்டு பிரகாசித்தும்விடும், குறிப்பேடு வைக்கப்பட்டும்விடும், நபிமார்களும், (அவர்களுடைய மற்ற) சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள், அவர்களுக்கிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
39:70 وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا يَفْعَلُوْنَ
وَوُفِّيَتْ முழுமையாக கூலி வழங்கப்படும் كُلُّ ஒவ்வோர் نَفْسٍ ஆன்மாவும் مَّا عَمِلَتْ தாம் செய்தவற்றுக்கு وَهُوَ அவன் اَعْلَمُ மிகஅறிந்தவன் بِمَا يَفْعَلُوْنَ அவர்கள் செய்கின்ற அனைத்தையும்
39:70. ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்குரிய கூலியை முழுமையாகப் பெறுவான்; மேலும், அவன், அவர்கள் செய்தவற்றை நன்கறிந்தவன்.
39:70. ஒவ்வொரு மனிதனும், அவன் செய்ததற்குரிய கூலியை முழுமையாகவே அடைவான். அல்லாஹ்வோ, அவர்கள் செய்தவை அனைத்தையும் நன்கறிவான்.
39:70. மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் புரிந்திருந்த செயல்களுக்கேற்ப முழுமையான கூலி வழங்கப்படும். மக்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
39:70. ஒவ்வோர் ஆத்மாவும் _ அது செய்த(தற்குரிய கூலியான)தை (பூரணமாக அதற்கு) நிறைவு செய்யப்படும், (அல்லாஹ்வாகிய) அவனோ, அவர்கள் செய்தவற்றை மிக்க அறிந்தவன்.
39:71 وَسِيْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَنَّمَ زُمَرًا ؕ حَتّٰٓى اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَـتُهَاۤ اَلَمْ يَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُوْنَ عَلَيْكُمْ اٰيٰتِ رَبِّكُمْ وَيُنْذِرُوْنَـكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا ؕ قَالُوْا بَلٰى وَلٰـكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكٰفِرِيْنَ
وَسِيْقَ ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள் الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரித்தவர்கள் اِلٰى جَهَنَّمَ நரகத்தின் பக்கம் زُمَرًا ؕ கூட்டம் கூட்டமாக حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءُوْهَا அதற்கு அவர்கள் வந்தவுடன் فُتِحَتْ திறக்கப்படும் اَبْوَابُهَا அதன் வாசல்கள் وَقَالَ இன்னும் கூறுவார்கள் لَهُمْ அவர்களுக்கு خَزَنَـتُهَاۤ அதன் காவலாளிகள் اَلَمْ يَاْتِكُمْ உங்களுக்கு வரவில்லையா? رُسُلٌ தூதர்கள் مِّنْكُمْ உங்களில் இருந்தே يَتْلُوْنَ ஓதிக் காட்டினார்களே عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِ வசனங்களை رَبِّكُمْ உங்கள் இறைவனின் وَيُنْذِرُوْنَـكُمْ இன்னும் உங்களை எச்சரித்தார்களே لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا ؕ நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلٰى ஏன் வரவில்லை وَلٰـكِنْ எனினும் حَقَّتْ உறுதியாகி விட்டது كَلِمَةُ வாக்கு الْعَذَابِ வேதனையின் عَلَى الْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்கள் மீது
39:71. (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) “ஆம் (வந்தார்கள்)” என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது.
39:71. (அந்நாளில்) நிராகரித்தவர்கள் அனைவரும், கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டி வரப்படுவார்கள். (அதன் சமீபமாக) அவர்கள் வந்தவுடன், அதன் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்களில் இருந்து அல்லாஹ்வுடைய தூதர்கள் உங்களிடம் வரவில்லையா? உங்கள் இறைவனுடைய வசனங்களை அவர்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கவில்லையா? இந்நாளை நீங்கள் சந்திக்க வேண்டியதைப் பற்றி, அவர்கள் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கவர்கள் ‘‘ஆம்! (வந்தார்கள்)'' என்றே சொல்வார்கள். (ஆயினும், அது பயன் அளிக்காது. ஏனென்றால்,) நிராகரிப்பவர்களுக்கு வேதனையைப் பற்றிய தீர்ப்பு உறுதியாகி விட்டது.
39:71. (இந்தத் தீர்ப்புக்குப் பிறகு) நிராகரித்தவர்களாய் இருந்தவர்கள் நரகத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய் ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவ்வாறாக, அவர்கள் அந்நரகத்தை நெருங்கியதும், அதன் வாயில்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்: “உங்களுடைய இறைவனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டக்கூடியவர்களும், நீங்கள் இந்த நாளைச் சந்திக்க வேண்டிய ஒரு நேரம் வரும் என்று உங்களை எச்சரிக்கை செய்யக்கூடியவர்களுமான இறைத்தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கவர்கள், “ஆம்! வந்திருந்தார்கள். ஆயினும், வேதனையின் தீர்ப்பு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டது” என்று பதிலளிப்பார்கள்.
39:71. மேலும், (அந்நாளில்) நிராகரித்துக்கொண்டிருந்தார்களே அத்தகையோர் கூட்டங்கூட்டமாக நரகத்தின் பால் இழுத்துக்கொண்டு வரப்படுவார்கள், இறுதியாக அங்கு அவர்கள் வந்தடைந்தால் அதன் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும், அதன் காவலாளர்கள் அவர்களிடம், “உங்களிலிருந்து (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) தூதர்கள், உங்கள் இரட்சகனுடைய வசனங்களை அவர்கள் உங்களுக்கு ஓதிக்காண்பிப்பவர்களாகவும், இந்த உங்களுடைய நாளின் சந்திப்பைப்பற்றி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்றும் கேட்பார்கள். அ(தற்க)வர்கள், “ஆம் (வந்தார்கள்). எனினும், நிராகரிப்போரின் மீது வேதனை பற்றிய வாக்கு உறுதியாகி விட்டது” என்றே கூறுவார்கள்.
39:72 قِيْلَ ادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاۚ فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ
قِيْلَ கூறப்படும் ادْخُلُوْۤا நீங்கள் நுழையுங்கள்! اَبْوَابَ வாசல்களில் جَهَنَّمَ நரகத்தின் خٰلِدِيْنَ நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள் فِيْهَاۚ அதில் فَبِئْسَ மிகக் கெட்டது مَثْوَى தங்குமிடம் الْمُتَكَبِّرِيْنَ பெருமையடிப்பவர்களின்
39:72. “நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.
39:72. ஆகவே, ‘‘நரகத்தின் வாயில்களில் நீங்கள் நுழைந்து விடுங்கள். என்றென்றுமே நீங்கள் அதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறப்படும். ஆகவே, கர்வம்கொண்ட (இ)வர்கள் தங்குமிடம் மகா கெட்டது.
39:72. அப்போது கூறப்படும்: “நுழையுங்கள் நரகத்தின் வாயில்களில்! நீங்கள் என்றென்றும் இங்குதான் கிடக்க வேண்டியுள்ளது! பெருமையடிப்பவர்களுக்கு இது எத்துணைக் கெட்ட தங்குமிடமாகும்!”
39:72. (ஆகவே) “நரகவாயில்களில்_அவற்றில் நிரந்தரமானவர்களாகத் தங்கியிருக்கும் நிலையில் நீங்கள் நுழைந்து விடுங்கள்” என்று கூறப்படும், ஆகவே, பெருமையடித்துக்கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
39:73 وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَى الْجَـنَّةِ زُمَرًاؕ حَتّٰٓى اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِيْنَ
وَسِيْقَ கொண்டு வரப்படுவார்(கள்) الَّذِيْنَ اتَّقَوْا அஞ்சியவர்களை رَبَّهُمْ தங்கள் இறைவனை اِلَى الْجَـنَّةِ சொர்க்கத்திற்கு زُمَرًاؕ கூட்டம் கூட்டமாக حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءُوْهَا அதற்கருகில் அவர்கள் வரும்போது وَفُتِحَتْ இன்னும் திறக்கப்படும் اَبْوَابُهَا அதன் வாசல்கள் وَقَالَ கூறுவார்கள் لَهُمْ அவர்களுக்கு خَزَنَتُهَا அதன் காவலாளிகள் سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகட்டும் عَلَيْكُمْ உங்களுக்கு طِبْتُمْ நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள் فَادْخُلُوْهَا ஆகவே, இதில் நுழைந்து விடுங்கள்! خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக
39:73. எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
39:73. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் (அந்நாளில்) கூட்டம் கூட்டமாகச் சொர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்கள் மீது ஸலாம் உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறுவார்கள்.
39:73. மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழ்ந்தார்களோ அவர்கள் சுவனத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய்க் கொண்டு செல்லப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: உங்கள் மீது ஸலாம் சாந்தி உண்டாகட்டும்! நீங்கள் நல்ல விதமாக இருங்கள். என்றென்றும் தங்கியிருப்பதற்காக இதில் நுழைந்து விடுங்கள்!
39:73. தங்கள் இரட்சகனுக்குப் பயந்து (நடந்து) கொண்டிருந்தார்களே அத்தகையோர், (அந் நாளில்) கூட்டங் கூட்டமாகச் சுவர்க்கத்தின் பால் அழைத்துக்கொண்டு)ம் வரப்படுவார்கள். இறுதியாக அதன் வாயில்கள் (அவர்கள் வரும் முன்பே) திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு அவர்கள் வந்தடைந்து விட்டால் (மகிழ்ச்சியடைவார்கள்), மேலும், அதன் காவலாளர்கள் அவர்களிடம் “உங்களுக்கு சாந்தி உண்டாவதாக! நீங்கள் நல்லவர்களாகி விட்டீர்கள் ஆகவே, நீங்கள் இதில் நிரந்தரமானவர்களாகத் தங்கியிருக்கும் நிலையில் நுழைந்து விடுங்கள்” என்று கூறுவார்கள்.
39:74 وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَـنَّةِ حَيْثُ نَشَآءُ ۚ فَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَ
وَقَالُوا அவர்கள் கூறுவார்கள் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே! الَّذِىْ எவன் صَدَقَنَا எங்களுக்கு உண்மையாக்கினான் وَعْدَهٗ தனது வாக்கை وَاَوْرَثَنَا இன்னும் எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான் الْاَرْضَ இந்த பூமியை نَتَبَوَّاُ நாங்கள் தங்குவோம் مِنَ الْجَـنَّةِ இந்த சொர்க்கத்தில் حَيْثُ نَشَآءُ ۚ நாங்கள் நாடிய இடத்தில் فَنِعْمَ மிகச் சிறந்ததாகும் اَجْرُ கூலி الْعٰمِلِيْنَ நல்லமல் செய்வோரின்
39:74. அதற்கு (சுவர்க்கவாசிகள்): “அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்” என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது.
39:74. அதற்கவர்கள், ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். சொர்க்கத்தில் நாங்கள் விரும்பிய இடமெல்லாம் சென்றிருக்க அதன் பூமியை எங்களுக்குச் சொந்தமாக்கி வைத்தான்'' என்று கூறுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலி இவ்வாறு நன்மையாகவே முடியும்.
39:74. அப்போது அவர்கள் கூறுவார்கள்: “இறைவனுக்கே புகழ் அனைத்தும்! அவன் எங்களிடம் தன் வாக்குறுதியை உண்மைப்படுத்திக் காட்டினான். மேலும் எங்களை பூமிக்கு வாரிசுகளாக்கினான். இனி நாங்கள் சுவனத்தில் விரும்புகின்ற இடத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆகா! எத்தனை சிறந்த கூலி இருக்கிறது, செயல்படக்கூடியவர்களுக்கு!”
39:74. அ(தற்க)வர்கள், “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான், சுவனபதியில் நாங்கள் நாடிய இடத்தில் நாங்கள் குடியிருக்க (அதன்) பூமியை எங்களுக்கு அனந்தரமாக்கியும் கொடுத்தான்” என்றும் கூறுவார்கள், எனவே நன்மைசெய்தோர்களின் கூலி, (இவ்வாறு) மிக நல்லதாகவே இருக்கிறது.
39:75 وَتَرَى الْمَلٰٓٮِٕكَةَ حَآفِّيْنَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْۚ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْحَـقِّ وَقِيْلَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ
وَتَرَى பார்ப்பீர்கள் الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை حَآفِّيْنَ சூழ்ந்தவர்களாக مِنْ حَوْلِ சுற்றி الْعَرْشِ அர்ஷை يُسَبِّحُوْنَ அவர்கள் துதிப்பார்கள் بِحَمْدِ புகழை رَبِّهِمْۚ தங்கள் இறைவனின் وَقُضِىَ தீர்ப்பளிக்கப்படும் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِالْحَـقِّ சத்தியமான முறையில் وَقِيْلَ கூறப்படும் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே رَبِّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ அகிலங்களின்
39:75. இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.
39:75. (நபியே! அந்நாளில்) வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து, துதி செய்தவண்ணம் ‘அர்ஷை' சூழ்ந்து நிற்பதை நீர் காண்பீர். அச்சமயம் அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்பட்டு, ‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சொந்தமானது'' என்று (அனைவராலும் துதி செய்து புகழ்ந்து) கூறப்படும்.
39:75. மேலும், நீர் காண்பீர்; அர்ஷைச்* சூழ்ந்த வண்ணம் வானவர்கள் தம் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள். மேலும், மக்களிடையே முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். புகழ் அனைத்தும் அகிலத்தார் அனைவரையும் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே!
39:75. மேலும், “அர்ஷை” சுற்றிச் சூழ்ந்தவர்களாக மலக்குகளை (நபியே! அந்நாளில்) நீர் காண்பீர், அவர்கள் தங்கள் இரட்சகனின் புகழைக் கொண்டு துதித்துக் கொண்டிருப்பார்கள், (சிலரை சுவனத்திற்கும், பலரை நரகத்திற்கும் செல்லுமாறு கட்டளையிட்டு) அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். “அகிலத்தார்க்கெல்லாம் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரியவை” என்று கூறப்படும்.