5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
மதனீ, வசனங்கள்: 120
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
5:1 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ ؕ اُحِلَّتْ لَـكُمْ بَهِيْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى الصَّيْدِ وَاَنْـتُمْ حُرُمٌ ؕ اِنَّ اللّٰهَ يَحْكُمُ مَا يُرِيْدُ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اَوْفُوْا நிறைவேற்றுங்கள் بِالْعُقُوْدِ ؕ உடன்படிக்கைகளை اُحِلَّتْ ஆகுமாக்கப்பட்டன لَـكُمْ உங்களுக்கு بَهِيْمَةُ الْاَنْعَامِ கால்நடைகள் اِلَّا தவிர مَا எவை يُتْلٰى ஓதிக்காட்டப்படுகிறது عَلَيْكُمْ உங்கள் மீது غَيْرَ مُحِلِّى ஆகுமாக்காதீர்கள் الصَّيْدِ வேட்டையாடுவதை وَاَنْـتُمْ நீங்கள் حُرُمٌ ؕ இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَحْكُمُ சட்டமாக்குகிறான் مَا எதை يُرِيْدُ நாடுகிறான்
5:1. முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
5:1. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். மேலும், உங்களுக்கு (பின்வரும் 3ஆம் வசனத்தில்) ஓதி காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டிருக்கின்றன. (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம்; வேட்டையாடலாம். எனினும்) நீங்கள் இஹ்ராம் (ஹஜ், உம்ராவில்) உடையவர்களாக இருக்கும் சமயத்தில் (இவற்றை) வேட்டையாடுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதை (உங்களுக்குக்) கட்டளையிடுகிறான்.
5:1. இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். பின்னால் உங்களுக்குக் கூறப்படுபவை தவிர கால்நடை வகையைச் சேர்ந்த அனைத்து பிராணிகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டையாடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதென்று கருதிவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவதைக் கட்டளையிடுகின்றான்.
5:1. விசுவாசிகளே! நீங்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளை(ப் பூரணமாக) நிறைவேற்றுங்கள், (அன்றி) உங்களுக்கு (இனி) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர, (மற்ற ஆடு, மாடு, ஒட்டகை முதலிய) கால் நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருக்கின்றன, (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம், வேட்டையாடலாம், எனினும் உம்ரா, ஹஜ்ஜு யாத்திரையின் நிமித்தம்) நீங்கள் இஹ்ராமுடைய நிலையிலிருக்கும் சமயத்தில் (இவைகளை) வேட்டையாடுவதை, உங்களுக்கு ஆகுமாக்கிக் கொள்ளாதவர்களாக (இருப்பது கடமையாகும்). நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதை (உங்களுக்கு)க் கட்டளையிடுகிறான்.
5:2 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآٮِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَـرَامَ وَلَا الْهَدْىَ وَلَا الْقَلَٓاٮِٕدَ وَلَاۤ آٰمِّيْنَ الْبَيْتَ الْحَـرَامَ يَبْـتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا ؕ وَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا ؕ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَـرَامِ اَنْ تَعْتَدُوْا ۘ وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تُحِلُّوْا ஆகுமாக்காதீர்கள் شَعَآٮِٕرَ அடையாளங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا الشَّهْرَ இன்னும் மாதத்தை الْحَـرَامَ புனிதமானது وَلَا الْهَدْىَ இன்னும் குர்பானியை وَلَا الْقَلَٓاٮِٕدَ இன்னும் மாலையிடப்பட்ட குர்பானிகளை وَلَاۤ آٰمِّيْنَ இன்னும் நாடுபவர்களை الْبَيْتَ (கஅபா)ஆலயத்தை الْحَـرَامَ புனிதமானது يَبْـتَغُوْنَ தேடியவர்களாக فَضْلًا அருளை مِّنْ رَّبِّهِمْ தங்கள் இறைவனிடமிருந்து وَرِضْوَانًا ؕ இன்னும் பொருத்தத்தை وَاِذَا حَلَلْتُمْ நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் فَاصْطَادُوْا ؕ வேட்டையாடுங்கள் وَلَا يَجْرِمَنَّكُمْ உங்களை தூண்ட வேண்டாம் شَنَاٰنُ துவேஷம் قَوْمٍ சமுதாயத்தின் اَنْ صَدُّو அவர்களை தடுத்த காரணத்தால் كُمْ உங்களை عَنِ الْمَسْجِدِ மஸ்ஜிதை விட்டு الْحَـرَامِ புனிதமானது اَنْ تَعْتَدُوْا ۘ நீங்கள் வரம்புமீறுவது وَتَعَاوَنُوْا ஒருவருக்கொருவர் உதவுங்கள் عَلَى الْبِرِّ நன்மைக்கு وَالتَّقْوٰى இன்னும் இறையச்சம் وَلَا تَعَاوَنُوْا ஒருவருக்கொருவர் உதவாதீர்கள் عَلَى الْاِثْمِ பாவத்திற்கு وَالْعُدْوَانِ இன்னும் அநியாயம் وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ தண்டனை
5:2. முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
5:2. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களையும் (ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற புனித மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (குர்பானிகளுக்காக) மாலை கட்டப்பட்டவற்றையும், தங்கள் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் அடையக்கருதி கண்ணியமான அவனுடைய ஆலயத்தை நாடிச் செல்பவர்களையும் (அவமதிப்பதை) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் இஹ்ராமை நீக்கிவிட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம். கண்ணியமான மஸ்ஜிதை விட்டு உங்களைத் தடுத்த வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் (அவர்கள்மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டாதிருக்கவும். மேலும், நன்மைக்கும் அல்லாஹ்வுடைய இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
5:2. இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவழிபாட்டுக்குரிய சின்னங்களை அவமதிக்காதீர்கள். சங்கைக்குரிய எந்த மாதத்தையும் போர் புரிவதற்கு அனுமதிக்கப்பட்டதாய் கொள்ளாதீர்கள்! இன்னும் குர்பானிக்குரிய பிராணிகளையும், இறைவனுக்காக நேர்ந்துவிடப்பட்டவை என்பதற்கு அறிகுறியாக கழுத்தில் பட்டை கட்டப்பட்ட பிராணிகளையும் துன்புறுத்தாதீர்கள்! இன்னும் தன்னுடைய இறைவனின் திருவருளையும், திருப்பொருத்தத்தையும் பெற எண்ணி புண்ணியத்தலம் (கஅபா) நோக்கிச் செல்வோரை சிரமத்திற்குள்ளாக்காதீர்கள்! ஆனால், இஹ்ராமின் நிலையிலிருந்து விலகி விட்டால் நீங்கள் வேட்டையாடலாம். மேலும் பாருங்கள்: மஸ்ஜிதுல் ஹராமுக்குள் செல்ல முடியாதவாறு உங்கள் வழியினை அடைத்துவிட்ட கூட்டத்தார் மீதுள்ள வெறுப்பு, அவர்களுக்கு எதிராக நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் அளவுக்கு உங்களைக் கொதித்தெழும்படிச் செய்துவிடக்கூடாது. எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்கு உரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்! ஆனால் எது பாவமானதாகவும், வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். மேலும், இறைவனை அஞ்சுங்கள்! நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது.
5:2. விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வின் (மார்க்க) அடையாளங்களையும், (ரஜப்,துல்கஅதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிப் பிராணியையும், (குர்பானிகளுக்காக கழுத்தில்) அடையாளம் கட்டப்பட்டவைகளையும் தங்கள் இரட்சகனின் அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக கண்ணியமான (அவன்) இல்லத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். இன்னும், நீங்கள் (உங்கள்) இஹ்ராமை களைந்து விட்டால், அப்பொழுது (முன்னர் தடுக்கப்பட்டவைகளை) நீங்கள் வேட்டையாடிக் கொள்ளுங்கள், கண்ணியமான மஸ்ஜிதுக்குச் செல்லவிடாது, உங்களைத் தடுத்துக் கொண்ட சமூகத்தார் மீது (உங்களுக்கு)ள்ள பகைமை (அவர்கள் மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டிவிடவும் வேண்டாம். இன்னும், நன்மைக்கும், (அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள், பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம், இன்னும் அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடினமானன்.
5:3 حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ؕ ذٰ لِكُمْ فِسْقٌ ؕ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ؕ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
حُرِّمَتْ விலக்கப்பட்டன عَلَيْكُمُ உங்களுக்கு الْمَيْتَةُ செத்தது وَالدَّمُ இன்னும் இரத்தம் وَلَحْمُ இன்னும் இறைச்சி الْخِنْزِيْرِ பன்றி وَمَاۤ இன்னும் எது اُهِلَّ பெயர் கூறப்பட்டது لِغَيْرِ அல்லாதவற்றிற்காக اللّٰهِ அல்லாஹ் بِهٖ அதை وَالْمُنْخَنِقَةُ இன்னும் கழுத்து நெருக்கிச் செத்தது وَالْمَوْقُوْذَةُ இன்னும் அடிப்பட்டுச் செத்தது وَالْمُتَرَدِّيَةُ இன்னும் விழுந்து செத்தது وَالنَّطِيْحَةُ இன்னும் கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது وَمَاۤ இன்னும் எதை اَكَلَ தின்றது السَّبُعُ மிருகங்கள் اِلَّا தவிர مَا எதை ذَكَّيْتُمْ அறுத்தீர்கள் وَمَا ذُ بِحَ இன்னும் எது/அறுக்கப்பட்டது عَلَى மீது النُّصُبِ நடப்பட்டவை, சிலைகள் وَاَنْ تَسْتَقْسِمُوْا இன்னும் பாகம் பிரித்துக் கொள்வது بِالْاَزْلَامِ ؕ அம்புகளைக்கொண்டு ذٰ لِكُمْ இவை فِسْقٌ ؕ اَلْيَوْمَ பாவம்/இன்று يَٮِٕسَ நம்பிக்கை இழந்தனர் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْ விட்டு دِيْـنِكُمْ உங்கள் மார்க்கம் فَلَا تَخْشَو ஆகவே பயப்படாதீர்கள் هُمْ அவர்களை وَاخْشَوْنِ ؕ என்னை பயப்படுங்கள் اَ لْيَوْمَ இன்று اَكْمَلْتُ முழுமையாக்கினேன் لَـكُمْ உங்களுக்கு دِيْنَكُمْ உங்கள் மார்க்கத்தை وَاَ تْمَمْتُ இன்னும் முழுமையாக்கினேன் عَلَيْكُمْ உங்கள் மீது نِعْمَتِىْ என் அருளை وَرَضِيْتُ இன்னும் திருப்தியடைந்தேன் لَـكُمُ உங்களுக்கு الْاِسْلَامَ இஸ்லாமை دِيْنًا ؕ மார்க்கமாக فَمَنِ ஆகவே எவர் اضْطُرَّ நிர்ப்பந்திக்கப்பட்டார் فِىْ مَخْمَصَةٍ கடுமையான பசியில் غَيْرَ مُتَجَانِفٍ சாயாதவராக لِّاِثْمٍۙ பாவத்தின் பக்கம் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ மகா கருணையாளன்
5:3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
5:3. (நம்பிக்கையாளர்களே! தானாக) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவை ஆகியவையும், அடிப்பட்டுச் செத்ததும், (மேலிருந்து) விழுந்து செத்ததும், கழுத்து நெருக்கிச் செத்ததும், கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததும், (சிங்கப் பல்லும், வீர நகமுமுள்ள மாமிசம் தின்னும் மிருகங்களாகிய சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன. (எனினும், இம்மிருகங்கள் வேட்டையாடிய) அவற்றில் (உயிரோடிருப்பவற்றில்) முறைப்படி (பிஸ்மில்லாஹ் சொல்லி) அறுக்கப்பட்டவற்றைத் தவிர. (அவ்வாறு அறுக்கப்பட்டவற்றைப் புசிக்கலாம். பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (ஸ்தம்பம், கொடி, பாவட்டா, சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவையும், அம்பு எய்து (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன). இவை அனைத்தும் பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இன்றைய தினம் இழந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் (ஒரு சிறிதும்) பயப்பட வேண்டாம். எனக்கே பயப்படுங்கள். இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக திருப்தியடைந்தேன் (அங்கீகரித்துக் கொண்டேன்). எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது. ஏனென்றால்), நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னிப்பவன், (அவர் மீது) பெரும் கருணை காட்டுபவன் ஆவான்.
5:3. செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், இறைவனல்லாத மற்றவர் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியும், கழுத்து நெரிக்கப்பட்டும், அடிபட்டும், உயரத்திலிருந்து வீழ்ந்தும், மோதப்பட்டும் இறந்த பிராணிகளும் உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். மேலும், கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்ட பிராணிகளும் (தடுக்கப்பட்டவையாகும்.) எவற்றை உயிருடன் நீங்கள் அறுத்துவிட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலி பீடங்கள் மீது அறுக்கப்பட்ட பிராணியும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் பாவமான செயல்களாகும். இன்று உங்களுடைய தீன்வாழ்க்கை நெறி குறித்து நிராகரிப்போர் முற்றிலும் நிராசை அடைந்துவிட்டிருக்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். மாறாக எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விட்டேன். (எனவே, உங்கள் மீது விதிக்கப்பட்ட ஹலால், ஹராமெனும் வரம்புகளைப் பேணி நடந்து வாருங்கள்.) ஆயினும் கடும் பசியினால் நிர்பந்திக்கப்பட்டு பாவம் செய்யும் நாட்டமின்றி ஒருவர் அவற்றில் ஏதாவதொன்றைப் புசித்து விட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெருங்கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
5:3. (விசுவாசிகளே! தானாகச்) செத்ததும், இரத்தமும், பன்றியின் இறைச்சியும் அல்லாஹ்வை அல்லாதவருக்காக (அறுப்புப்பிராணிகளில்) எதற்கு பெயர் கூற(ப்பட்டு விட)ப் பட்டதோ, அதுவும் கழுத்து நெறிபட்டுச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், (மேலிருந்து) கீழே விழுந்து செத்ததும், கொம்பால் குத்திக் கொண்டு செத்ததும், (சிங்கம், புலி, சிறுத்தை போன்ற)வன விலங்குகள் தின்றவையும் உங்களுக்கு விலக்கப் பட்டிருக்கின்றன, (உண்ண அனுமதிக்கப்பட்டவற்றில் அவை உயிரோடிருந்து “பிஸ்மில்லாஹ்” சொல்லி) நீங்கள் அறுத்தவைகளைத் தவிர, (அவற்றை உண்ணலாம், இதர வணக்கங்கள் செய்வதற்காக) நடப்பட்டவைகளுக்காக அறுக்கப் பட்டவைகளும், அம்புகள் மூலம் (அவற்றை எய்துகுறி கேட்டு) நீங்கள் பாகம் பிரித்துக் கொள்வதும்- பாவமாகும், இன்றையத்தினம் நிராகரிப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டனர், ஆகவே, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம், எனக்கே பயப்படுங்கள், இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன், ஆகவே, எவர் பாவத்தின்பால் சாயாதவராக, பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப் பட்டவைகளைப் புசித்து) விட்டால்- (அது குற்றமாகாது). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
5:4 يَسْأَلُوْنَكَ مَاذَاۤ اُحِلَّ لَهُمْؕ قُلْ اُحِلَّ لَـكُمُ الطَّيِّبٰتُ ۙ وَمَا عَلَّمْتُمْ مِّنَ الْجَـوَارِحِ مُكَلِّبِيْنَ تُعَلِّمُوْنَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللّٰهُ فَكُلُوْا مِمَّاۤ اَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهِ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ
يَسْأَلُوْنَكَ கேட்கின்றனர்/உம்மிடம் مَاذَاۤ எவை اُحِلَّ ஆகுமாக்கப்பட்டன لَهُمْؕ அவர்களுக்கு قُلْ கூறுவீராக اُحِلَّ ஆகுமாக்கப்பட்டன لَـكُمُ உங்களுக்கு الطَّيِّبٰتُ ۙ நல்லவை وَمَا இன்னும் எவை عَلَّمْتُمْ கற்றுக் கொடுத்தீர்கள் مِّنَ الْجَـوَارِحِ மிருகங்களில் مُكَلِّبِيْنَ வேட்டையாட பயிற்சி அளியுங்கள் تُعَلِّمُوْنَهُنَّ கற்று கொடுங்கள்/அவற்றுக்கு مِمَّا எவற்றிலிருந்து عَلَّمَكُمُ கற்பித்தான்/உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் فَكُلُوْا ஆகவே புசியுங்கள் مِمَّاۤ எவற்றிலிருந்து اَمْسَكْنَ அவை தடுத்தன عَلَيْكُمْ உங்களுக்காக وَاذْكُرُوا இன்னும் கூறுங்கள் اسْمَ பெயரை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْهِ அவற்றின் மீது وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَرِيْعُ தீவிரமானவன் الْحِسَابِ கணக்கிடுவதில்
5:4. (நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
5:4. (நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘(சுத்தமான) நல்லவை அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பறவைகளுக்கும்) நீங்கள் வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி,) உங்களுக்காகத் தடுத்(து வைத்)திருப்பவற்றை, (அவை இறந்துவிட்டபோதிலும்) நீங்கள் புசிக்கலாம். (அவையும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன.) (எனினும், அவற்றை வேட்டைக்கு விடும் பொழுது ‘பிஸ்மில்லாஹ்' என்று) அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்.
5:4. மக்கள் எவை தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: “தூய்மையான அனைத்துப் பொருட்களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.” மேலும் எந்த வேட்டைப் பிராணிகளுக்கு நீங்கள் வேட்டையாடக் கற்றுத் தந்திருக்கின்றீர்களோ அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அறிவைக் கொண்டு அவற்றுக்கு வேட்டையாடக் கற்றுத் தந்திருக்கிறீர்கள் பிறகு அந்த வேட்டைப் பிராணிகள் உங்களுக்காகப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம். ஆயினும் அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரியுங்கள்! இன்னும் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு மாறு செய்ய அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன்.
5:4. (நபியே! உண்ணுவதற்கு) தங்களுக்கு ஆகுமாக்கப்பட்டவை எவை, என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், (அதற்கு) நீர் கூறுவீராக! (சுத்தமான) நல்ல பொருட்கள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன, இன்னும், வேட்டையாட நீங்கள் பயிற்சி அளித்தவர்களாக இருக்க – அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்தவற்றிலிருந்து அவைகளுக்கு நீங்கள் (வேட்டையாட) கற்றுக் கொடுப்பவர்களாக இருக்க (நாய், சிறுத்தை, ராஜாளி போன்ற) வேட்டைப் பிராணிகளில் நீங்கள் கற்றுக்கொடுத்த(வைகள் வேட்டையாடிய)தும் (உங்களுக்கு உண்ணுவது ஆகுமாக்கப்பட்டுள்ளது). எனவே, அவை வே(ட்டையாடி, தாம் புசிக்காமல்) உங்களுக்காகப் பிடித்து வைத்திருப்பவற்றிலிருந்து (அவை இறந்து விட்டபோதிலும்) நீங்கள் புசியுங்கள்; (எனினும், வேட்டைக்கு அனுப்பும்பொழுது, ‘பிஸ்மில்லாஹ்’ என்று) அவற்றின்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்; இன்னும், அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ், கேள்வி கணக்குக் கேட்பதில் மிக துரிதமானவன்.
5:5 اَلْيَوْمَ اُحِلَّ لَـكُمُ الطَّيِّبٰتُ ؕ وَطَعَامُ الَّذِيْنَ اُوْتُوْا الْكِتٰبَ حِلٌّ لَّـکُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ وَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْـكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَاۤ اٰتَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ وَلَا مُتَّخِذِىْۤ اَخْدَانٍؕ وَمَنْ يَّكْفُرْ بِالْاِيْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
اَلْيَوْمَ இன்று اُحِلَّ ஆகுமாக்கப்பட்டன لَـكُمُ உங்களுக்கு الطَّيِّبٰتُ ؕ நல்லவை وَطَعَامُ இன்னும் உணவும் الَّذِيْنَ எவர்களின் اُوْتُوْا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் حِلٌّ ஆகுமானது لَّـکُمْ உங்களுக்கு وَطَعَامُكُمْ இன்னும் உங்கள் உணவு حِلٌّ ஆகுமானது لَّهُمْ அவர்களுக்கு وَالْمُحْصَنٰتُ கற்புள்ள பெண்கள் مِنَ இருந்து الْمُؤْمِنٰتِ ஈமான் கொண்ட பெண்கள் وَالْمُحْصَنٰتُ இன்னும் கற்புள்ள பெண்கள் مِنَ الَّذِيْنَ எவர்களில் اُوْتُوا கொடுக்கப்பட்டவர்கள் الْـكِتٰبَ வேதம் مِنْ قَبْلِكُمْ உங்களுக்குமுன்னர் اِذَاۤ اٰتَيْتُمُو நீங்கள்கொடுத்தால் هُنَّ அவர்களுக்கு اُجُوْر மணக்கொடைகளை هُنَّ அவர்களுடைய مُحْصِنِيْنَ கற்புள்ளவர்களாக غَيْرَ அன்றி مُسَافِحِيْنَ விபச்சாரர்களாக وَلَا مُتَّخِذِىْۤ இன்னும் ஆக்காதவர்களாக اَخْدَانٍؕ இரகசிய தோழிகளை وَمَنْ எவர் يَّكْفُرْ மறுக்கிறார் بِالْاِيْمَانِ நம்பிக்கை கொள்ள فَقَدْ திட்டமாக حَبِطَ அழிந்து விடும் عَمَلُهٗ அவருடைய செயல் وَهُوَ அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنَ الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளில்
5:5. இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.
5:5. (நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவை அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டு விட்டன. வேதத்தை உடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்). எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இந்த சட்டங்களை) நிராகரிக்கிறானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில்தான் இருப்பான்.
5:5. இன்று உங்களுக்குத் தூய்மையான பொருட்கள் அனைத்தும் அனுமதிக்க (ஹலாலாக்க)ப்பட்டிருக்கின்றன. வேதம் அருளப்பட்டவர்களின் உணவு உங்களுக்கும், உங்களது உணவு அவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், நல்லொழுக்கமுள்ள பெண்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களே; அவர்கள் ஈமான் இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி; உங்களுக்கு முன்னர் வேதம் அருளப்பட்டவர்களின் சமுதாயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஆனால், அவர்களுக்குரிய மஹ்ரைக் கொடுத்து, அவர்களைத் திருமணம் செய்துகொண்டு அவர்களின் பாதுகாவலர்களாய் நீங்கள் திகழவேண்டுமே தவிர, அவர்களுடன் விபச்சாரத்திலோ கள்ளக் காதலிலோ ஈடுபடக்கூடாது. மேலும், எவன் ஈமானின் வழியில் செல்ல மறுக்கின்றானோ அவனது வாழ்வின் அனைத்துச் செயல்களும் வீணாகிவிடும். மேலும், அவன் மறுமையில் பேரிழப்புக்கு ஆளாவான்.
5:5. (விசுவாசங் கொண்டோரே!) இன்று (முதல், உணவுவகைகளில்) நல்லவைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டார்களே அத்தகையோரின் உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்; உங்களுடைய உணவும் அவர்களுக்கு ஆகுமானதாகும்; விசுவாசங்கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப் பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களையும், நீங்கள் விபச்சாரம் செய்யாதவர்களாகவும், வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்கும் நிலையில், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் அவர்களுக்கு, நீங்கள் கொடுத்துவிட்டால் (திருமணம் செய்துகொள்வதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது), மேலும், எவர் விசுவாசம் கொண்டதன் பின்னர், (இவற்றை) நிராகரிக்கின்றாரோ அவருடைய நற்செயல் திட்டமாக அழிந்துவிடும், மேலும் அவர் மறுமையில் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் (உள்ளவராக) இருப்பார்.
5:6 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ ؕ مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا قُمْتُمْ நீங்கள் நின்றால் اِلَى الصَّلٰوةِ தொழுகைக்கு فَاغْسِلُوْا கழுகுங்கள் وُجُوْهَكُمْ உங்கள் முகங்களை وَاَيْدِيَكُمْ இன்னும் கைகளை/உங்கள் اِلَى வரை الْمَرَافِقِ முழங்கைகள் وَامْسَحُوْا இன்னும் தடவுங்கள் بِرُءُوْسِكُمْ உங்கள் தலைகளில் وَاَرْجُلَكُمْ இன்னும் உங்கள் கால்களை اِلَى வரை الْـكَعْبَيْنِ ؕ இரு கணுக்கால்கள் وَاِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் جُنُبًا முழுக்காளிகளாக فَاطَّهَّرُوْا ؕ நன்கு சுத்தமாகுங்கள் وَاِنْ كُنْتُمْ இன்னும் நீங்கள் இருந்தால் مَّرْضَىٰۤ நோயாளிகளாக اَوْ அல்லது عَلٰى سَفَرٍ பயணத்தில் اَوْ அல்லது جَآءَ வந்தார் اَحَدٌ ஒருவர் مِّنْكُمْ உங்களில் مِّنَ இருந்து الْغَآٮِٕطِ மலஜல பாதை اَوْ அல்லது لٰمَسْتُمُ உறவு கொண்டீர்கள் النِّسَآءَ பெண்களுடன் فَلَمْ تَجِدُوْا பெறவில்லை مَآءً தண்ணீரை فَتَيَمَّمُوْا நாடுங்கள் صَعِيْدًا மண்ணை طَيِّبًا சுத்தமானது فَامْسَحُوْا இன்னும் தடவுங்கள் بِوُجُوْهِكُمْ முகங்களை/உங்கள் وَاَيْدِيْكُمْ இன்னும் கைகளை/உங்கள் مِّنْهُ ؕ அதில் مَا يُرِيْدُ நாடமாட்டான் اللّٰهُ அல்லாஹ் لِيَجْعَلَ ஆக்குவதற்கு عَلَيْكُمْ உங்கள் மீது مِّنْ حَرَجٍ சிரமத்தை وَّلٰـكِنْ எனினும் يُّرِيْدُ நாடுகிறான் لِيُطَهِّرَكُمْ உங்களைபரிசுத்தமாக்க وَ لِيُتِمَّ இன்னும் முழுமையாக்க نِعْمَتَهٗ தன் அருளை عَلَيْكُمْ உங்கள் மீது لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
5:6. நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) ‘மஸஹு' செய்துகொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதை)க்கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகிறான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!
5:6. இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்! மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் ஜுனுபாளியாக* இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்! அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை. ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும்.
5:6. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால், (அதற்கு முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள், (நீரைத் தொட்டு) உங்கள் தலைகளையும் தடவி (‘மஸ்ஹு’ செய்து) கொள்ளுங்கள், கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்.) அன்றியும், நீங்கள் குளிக்கக் கடமைப்பட்டோராக இருந்தால் குளித்துப் பரிசுத்தமாகிக் கொள்ளுங்கள், இன்னும், நீங்கள் நோயாளிகளாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலஜலம் கழிக்கச் சென்று வந்திருந்தாலும் அல்லது நீங்கள் பெண்களை (உடலுறவின் மூலம்) தீண்டியிருந்தாலும், அப்பொழுது (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை நீங்கள் பெறாவிடில், பரிசுத்தமான மண்ணை நாடுங்கள், பின்னர், அதிலிருந்து உங்களுடைய முகங்களையும், உங்களது கைகளையும் தடவி (தயம்மும் செயது)க் கொள்ளுங்கள், அல்லாஹ் உங்களுக்கு நெருக்கடியைத் தர நாடவில்லை, எனினும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள்மீது பூரணமாக்கி வைக்கவுமே நாடுகின்றான்.
5:7 وَاذْکُرُوْ انِعْمَةَ اللهِ عَلَیْکُمْ وَمِیْثَاقَهُ الَّذِیْ وَاثَقَکُمْ بِهۤ ۙ اِذْقُلْتُمْ سَمِعْنَا وَاَطَعْنَا وَاتَّقُوا اللهَ ؕ اِنَّ اللهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
وَاذْکُرُوْ நினைவு கூறுங்கள் انِعْمَةَ அருளை اللهِ அல்லாஹ்வின் عَلَیْکُمْ உங்கள் மீது وَمِیْثَاقَهُ இன்னும் அவனுடைய உறுதிமொழியை الَّذِیْ وَاثَقَکُمْ எது/உங்களிடம் உறுதி மொழி வாங்கினான் بِهۤ ۙ அதை اِذْ போது قُلْتُمْ கூறினீர்கள் سَمِعْنَا செவிமடுத்தோம் وَاَطَعْنَا இன்னும் கீழ்ப்படிந்தோம் وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللهَ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللهَ அல்லாஹ் عَلِیْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ உள்ளவற்றை الصُّدُوْرِ நெஞ்சங்களில்
5:7. மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, “நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்” என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
5:7. (யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் (உங்களிடம்) வாக்குறுதி வாங்கிய பொழுது அதை நீங்கள் உறுதிப்படுத்தி ‘‘நாங்கள் செவிசாய்த்தோம். (உனக்கு) கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
5:7. இன்னும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேற்றினை நினைத்துப் பாருங்கள். மேலும் உங்களிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட உறுதிமொழியை மறந்து விடாதீர்கள். அப்பொழுது நீங்கள் “செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறியிருந்தீர்கள். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ், இதயங்களில் மறைந்திருப்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
5:7. (யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் கொடைகளையும், இன்னும் “நாங்கள் செவிசாய்த்தோம், நாங்கள் (உனக்குக் கீழப்படிந்தோம்” என்று நீங்கள் கூறிய சமயத்தில், எதைக் கொண்டு அவன் உங்களிடம் உறுதிமொழி எடுத்துள்ளானோ அத்தகைய அவனுடைய உறுதிமொழியையும் நினைவுகூருங்கள், இன்னும் அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள், நிச்சயமாக அல்லாஹ் (அனைவரின்) நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிகிறவன்.
5:8 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا ؕ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே كُوْنُوْا இருங்கள் قَوَّا امِيْنَ நிலைநின்றவர்களாக لِلّٰهِ அல்லாஹ்வுக்காக شُهَدَآءَ சாட்சி கூறுபவர்களாக بِالْقِسْطِ நீதிக்கு وَلَا يَجْرِمَنَّكُمْ உங்களை தூண்ட வேண்டாம் شَنَاٰنُ துவேஷம் قَوْمٍ ஒரு சமுதாயத்தின் عَلٰٓى மீது اَ لَّا تَعْدِلُوْا ؕ நீங்கள் நீதமாக நடக்காதிருக்க اِعْدِلُوْا நீதமாக இருங்கள் هُوَ அது اَقْرَبُ மிக நெருக்கமானது لِلتَّقْوٰى இறையச்சத்திற்கு وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிந்தவன் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள்
5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
5:8. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதிவான்களாக நீதத்திற்கு சாட்சி சொல்பவர்களாக இருங்கள். ஒரு வகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (பகைமை இருந்தாலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருங்கியது. (எப்போதும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
5:8. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள்! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சிச் செயலாற்றுங்கள். நீங்கள் செய்வனவற்றை முழுமையாக அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான்.
5:8. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காக நீதியைக் கொண்டு சாட்சி கூறுகிறவர்களாக (உண்மையின் மீது) நிலைத்தவர்களாக ஆகிவிடுங்கள், எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் திண்ணமாக தூண்டிவிட வேண்டாம், (எவ்வளவு விரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள், அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும், இன்னும், (எல்லா நிலைகளிலும்) நீங்கள் அல்லாஹ்வை பயப்படுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்கின்றான்.
5:9 وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ
وَعَدَ வாக்களித்தான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ எவர்களுக்கு اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ ۙ நற்செயல்களை لَهُمْ அவர்களுக்கு مَّغْفِرَةٌ மன்னிப்பு وَّاَجْرٌ இன்னும் கூலி عَظِيْمٌ மகத்தானது
5:9. ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
5:9. எவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பும், மகத்தான (நற்) கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.
5:9. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமென்றும் மகத்தான நற்கூலி அவர்களுக்கு உண்டு என்றும் அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றான்.
5:9. (உண்மையாகவே) விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே, அத்தகையோர் -அவர்களுக்கு பாவமன்னிப்பும் மகத்தான (நற்)கூலியும் உண்டு, என அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
5:10 وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَكَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَاۤ நம் வசனங்களை اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ வாசிகள் الْجَحِيْمِ நரக
5:10. எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
5:10. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்.
5:10. மேலும், எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே!
5:10. மேலும், நிராகரித்து இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர்-அவர்களே நரகவாசிகளாவர்.
5:11 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ يَّبْسُطُوْۤا اِلَيْكُمْ اَيْدِيَهُمْ فَكَفَّ اَيْدِيَهُمْ عَنْكُمْۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَتَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது اِذْ போது هَمَّ நாடினர் قَوْمٌ ஒரு சமுதாயம் اَنْ يَّبْسُطُوْۤا அவர்கள் நீட்டுவதற்கு اِلَيْكُمْ உங்கள் பக்கம் اَيْدِيَهُمْ தங்கள் கரங்களை فَكَفَّ தடுத்தான் اَيْدِيَهُمْ அவர்களுடைய கரங்களை عَنْكُمْۚ உங்களை விட்டு وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்வை وَعَلَى اللّٰهِ அல்லாஹ் மீது فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கட்டும் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள்
5:11. முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.
5:11. நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது கைகளை உங்களை விட்டுத் தடுத்து உங்களுக்குப் புரிந்த அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். மேலும், நம்பிக்கைகொண்டவர்கள் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.
5:11. இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு (அண்மையில்) செய்த பேருதவியை நினைத்துப் பாருங்கள்! ஒரு கூட்டத்தார் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்டிட நாடியிருந்தபோது, அல்லாஹ் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும் தடுத்து நிறுத்தினான். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் வாழுங்கள்! நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்து நிற்க வேண்டும்.
5:11. விசுவாசங்கொண்டோரே! ஒரு கூட்டத்தினர் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்துத் தங்கள் கைகளை உங்கள் அளவில் நீட்டியபொழுது அவர்கள் கைகளை உங்களைவிட்டுத் தடுத்து அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள், இன்னும், அல்லாஹ்வையே பயப்படுங்கள், அன்றியும் விசுவாசிகள் (யாவரும்) அல்லாஹ் (ஒருவன்) மீதே (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும்.
5:12 وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ بَنِىْۤ اِسْرآءِيْلَۚ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَىْ عَشَرَ نَقِيْبًا ؕ وَقَالَ اللّٰهُ اِنِّىْ مَعَكُمْؕ لَٮِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَيْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِىْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَلَاُدْخِلَـنَّكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۚ فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ
وَلَقَدْ திட்டமாக اَخَذَ வாங்கினான் اللّٰهُ அல்லாஹ் مِيْثَاقَ உறுதிமொழி بَنِىْۤ اِسْرآءِيْلَۚ இஸ்ரவேலர்களின் وَبَعَثْنَا இன்னும் அனுப்பினோம் مِنْهُمُ அவர்களிலிருந்து اثْنَىْ عَشَرَ பன்னிரெண்டு نَقِيْبًا ؕ தலைவரை وَقَالَ இன்னும் கூறினான் اللّٰهُ அல்லாஹ் اِنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْؕ உங்களுடன் لَٮِٕنْ اَقَمْتُمُ நீங்கள் நிலைநிறுத்தினால் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتَيْتُمُ இன்னும் நீங்கள் கொடுத்தீர்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَاٰمَنْتُمْ இன்னும் நம்பிக்கை கொண்டீர்கள் بِرُسُلِىْ என் தூதர்களை وَعَزَّرْتُمُوْهُمْ இன்னும் அவர்களுக்கு உதவிபுரிந்தீர்கள் وَاَقْرَضْتُمُ இன்னும் நீங்கள் கடன் கொடுத்தால் اللّٰهَ அல்லாஹ்விற்கு قَرْضًا கடன் حَسَنًا அழகியது لَّاُكَفِّرَنَّ நிச்சயமாக அகற்றிடுவேன் عَنْكُمْ உங்களைவிட்டு سَيِّاٰتِكُمْ உங்கள் பாவங்களை وَلَاُدْخِلَـنَّكُمْ இன்னும் நிச்சயமாக நுழைப்பேன்/உங்களை جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ இருந்து تَحْتِهَا அதன் கீழே الْاَنْهٰرُۚ நதிகள் فَمَنْ எவர் كَفَرَ நிராகரிப்பார் بَعْدَ பின்னர் ذٰ لِكَ இதற்கு مِنْكُمْ உங்களில் فَقَدْ திட்டமாக ضَلَّ வழி தவறிவிட்டார் سَوَآءَ நடு (நேரான) السَّبِيْلِ வழி
5:12. நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.”
5:12. நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கிறான். இன்னும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் அனுப்பி இருக்கிறோம். (அவ்வாறு உறுதிமொழி வாங்கிய சமயத்தில் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கைகொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்(காக சிரமத்தில் இருப்பவர்களுக்)கு அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவற்றை) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் உங்களை நுழைய வைப்பேன்'' என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார்.
5:12. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் அல்லாஹ் வலுவான உறுதிமொழி வாங்கியிருந்தான். மேலும் அவர்களில் பன்னிரண்டு பேரைக் கண்காணிப்பாளராய் நியமித்திருந்தான். இன்னும் அல்லாஹ் அவர்களிடம் கூறினான்: “திண்ணமாக, நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நிறுத்தியும் ஜகாத்தை அளித்தும், என்னுடைய தூதர்களை ஏற்று அவர்களுக்கு உதவி புரிந்தும், உங்களுடைய இறைவனுக்கு அழகிய கடன் அளித்தும் வந்தீர்களாயின் திண்ணமாக நான் உங்களுடைய தீமைகளைப் போக்கிவிடுவேன். மேலும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் உங்களை நுழைவிப்பேன். ஆனால் இதன் பின்னரும் உங்களில் எவரேனும் நிராகரிப்புப் போக்கை மேற்கொண்டால் நிச்சயமாக அவர் “ஸவாவுஸ் ஸபீலை” இராஜபாட்டையை விட்டுப் பிறழ்ந்தவராவார்”.
5:12. இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் திட்டமாக உறுதிமொழி வாங்கியிருக்கின்றான், மேலும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு (நம்பிக்கைக்குரிய) பொருப்பாளர்களை நாம் அனுப்பியிருக்கின்றோம், (அவ்வாறு உறுதிமொழி வாங்கியபோது அவர்களிடம்) “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்” என அல்லாஹ் கூறினான், “நீங்கள் தொழுகையைத் தவறாது நிறைவேற்றி ஜகாத்தும் கொடுத்து என் தூதர்களையும் விசுவாசித்து அவர்களுக்கு உதவியும் புரிந்து (சிரமத்திலிருப்பவர்களுக்கு) அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக கடனும் கொடுத்தீர்களானால், நிச்சயமாக நான் (இவைகளை) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கிக் வைத்து சுவனபதிகளிலும் உங்களைப் பிரவேசிக்கச் செய்வேன், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், ஆகவே, உங்களில் இதற்குப் பின்னர் எவர் நிராகரித்து விட்டாரோ, அப்பொழுது நிச்சயமாக அவர் நேர் வழியிலிருந்து தவறிவிட்டார் (என்று அல்லாஹ் கூறினான்).
5:13 فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِيَةً ۚ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰى خَآٮِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
فَبِمَا نَقْضِهِمْ ஆகவே அவர்கள் முறித்த காரணத்தால் مِّيْثَاقَهُمْ உறுதி மொழியை/தங்கள் لَعَنّٰهُمْ சபித்தோம்/அவர்களை وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் قُلُوْبَهُمْ உள்ளங்களை/அவர்களுடைய قٰسِيَةً ۚ இறுக்கமானதாக يُحَرِّفُوْنَ புரட்டுகிறார்கள் الْـكَلِمَ வசனங்களை عَنْ இருந்து مَّوَاضِعِهٖۙ அதன் இடங்கள் وَنَسُوْا இன்னும் மறந்தார்கள் حَظًّا ஒரு பாகத்தை مِّمَّا எதிலிருந்து ذُكِّرُوْا உபதேசிக்கப்பட்டார்கள் بِهٖۚ அதை وَلَا تَزَالُ تَطَّلِعُ கண்டுகொண்டே இருப்பீர் عَلٰى خَآٮِٕنَةٍ மோசடியை مِّنْهُمْ அவர்களிடமிருந்து اِلَّا தவிர قَلِيْلًا சிலரை مِّنْهُمْ அவர்களில் فَاعْفُ ஆகவே மன்னிப்பீராக عَنْهُمْ அவர்களை وَاصْفَحْ ؕ இன்னும் புறக்கணிப்பீராக اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُحْسِنِيْنَ நற்பண்பாளர்களை
5:13. அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
5:13. அவர்கள் தங்கள் உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டுகிறார்கள். (நமது இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீர் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர். ஆகவே, இவர்களை நீர் மன்னித்துப் புறக்கணித்து வருவீராக. நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கிறான்.
5:13. பிறகு அவர்கள் தாம் செய்த வாக்குறுதியை முறித்ததற்காக நாமும் அவர்களை நமது அருளிலிருந்து தூர எறிந்துவிட்டோம். மேலும், அவர்களுடைய நெஞ்சங்களை இறுகச் செய்துவிட்டோம். இப்பொழுது அவர்களுடைய நிலை என்னவெனில் வேத வாக்குகளை அவற்றின் இடங்களிலிருந்து புரட்டியும் திரித்தும் விதவிதமாகப் பொருள் கொள்கின்றனர். இன்னும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட உயர் அறிவுரைகளில் பெரும்பாலானவற்றை மறந்தே போயினர். நாள்தோறும் அவர்களுடைய மோசடிச் செயல்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தென்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்களில் மிகச் சிலரே இத்தகைய இழி செயலிலிருந்து விலகி இருக்கிறார்கள். (அவர்கள் இவ்வளவு மோசமான நிலைக்கு இறங்கி வந்தபின் அவர்கள் எத்தகைய குறும்புத்தனங்கள் புரிந்தாலும் அவை எதிர்பார்க்கப்பட்டவைதாம்) எனவே, அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்களின் தவறான செயல்களைப் பொருட்படுத்தாதீர்கள். நன்னடத்தையை மேற்கொள்பவர்களையே திண்ணமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.
5:13. அவர்கள் தங்களுடைய உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களை சபித்துவிட்டோம், அவர்களுடைய இதயங்களை கல் நெஞ்சங்களாகவும் ஆக்கிவிட்டோம், (அவர்கள் தங்கள் வேத) வசனங்களை அவற்றின் சரியான இடங்களிலிருந்து மாற்றி விடுகிறார்கள், அன்றியும் அவர்கள் எதனைக் கொண்டு உபதேசிக்கப்பட்டனரோ அதிலிருந்து ஒரு பாகத்தை (இந்நபியைப் பற்றி அதில் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டிருந்ததை) மறந்தும் விட்டார்கள், இன்னும், நபியே! அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோர் ஏதேனுமொரு மோசடியின் மீது இருப்பதை நீர் சதா கண்டு கொண்டிருப்பீர், ஆகவே, இவர்களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக, நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.
5:14 وَمِنَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰٓى اَخَذْنَا مِيْثَاقَهُمْ فَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ فَاَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ؕ وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللّٰهُ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ
وَمِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினர் اِنَّا நிச்சயமாக நாங்கள் نَصٰرٰٓى கிறிஸ்த்தவர்கள் اَخَذْنَا வாங்கினோம் مِيْثَاقَهُمْ அவர்களுடைய உறுதிமொழியை فَنَسُوْا மறந்தார்கள் حَظًّا ஒரு பகுதியை مِّمَّا எதிலிருந்து ذُكِّرُوْا உபதேசிக்கப்பட்டார்கள் بِهٖ அதைக் கொண்டு فَاَغْرَيْنَا ஆகவே மூட்டினோம் بَيْنَهُمُ அவர்களுக்கு மத்தியில் الْعَدَاوَةَ பகைமையை وَالْبَغْضَآءَ இன்னும் வெறுப்பை اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ؕ வரை/மறுமை நாள் وَسَوْفَ يُنَبِّئُهُمُ அவர்களுக்கு அறிவிப்பான் اللّٰهُ அல்லாஹ் بِمَا எதை كَانُوْا இருந்தார்கள் يَصْنَعُوْنَ செய்கிறார்கள்
5:14. அன்றியும் எவர்கள் தங்களை, “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.
5:14. எவர்கள் தங்களை ‘‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்'' எனக் கூறுகிறார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கிறோம். எனினும், அவர்களும் (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில்) தங்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தை மறந்து விட்டார்கள். ஆதலால், அவர்களுக்குள் பகைமையையும் கோபத்தையும் மறுமை நாள் வரை (நீங்காதிருக்கும்படி) மூட்டிவிட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான்.
5:14. “நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக் கொண்டிருந்தவர்களிடமும் இவ்வாறே நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். அவர்களும்கூட தங்களுக்கு நினைவூட்டப்பட்ட நல்லுரைகளில் பெரும்பகுதியை மறந்தே போயினர். இறுதியில் நாம் அவர்களுக்கிடையே மறுமைநாள் வரை பகைமையையும், காழ்ப்புணர்ச்சியையும் விதைத்து விட்டோம். மேலும், அவர்கள் உலகில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதனை அல்லாஹ் காண்பித்துத் தருகின்ற ஒரு நேரமும் நிச்சயமாக வரத்தான் போகின்றது.
5:14. அன்றியும் தங்களை “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” எனக் கூறுகின்றார்களே, அத்தகையோர்களிடமிருந்து அவர்களின் உறுதிமொழியை நாம் வாங்கியிருக்கின்றோம், (ஆனாலும்) அவர்கள் எதைக் கொண்டு உபதேசிக்கப்பட்டனரோ அதிலிருந்து ஒரு பாகத்தை (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில் தங்களுக்கு நினைவுபடுத்தப்பட்டதை) மறந்து விட்டார்கள், ஆதலால் அவர்களிடையே விரோதத்தையும் குரோதத்தையும் மறுமை நாள் வரையில் (நீங்காதிருக்கும்படி) நாம் மூட்டி விட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களென்பதையும் (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குத் தெரிவிப்பான்.
5:15 يٰۤـاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُـنَا يُبَيِّنُ لَـكُمْ كَثِيْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ ؕ قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ ۙ
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே قَدْ جَآءَ திட்டமாக வந்து விட்டார் كُمْ உங்களிடம் رَسُوْلُـنَا நம் தூதர் يُبَيِّنُ தெளிவுபடுத்துவார் لَـكُمْ உங்களுக்கு كَثِيْرًا பலவற்றை مِّمَّا எதிலிருந்து كُنْتُمْ இருந்தீர்கள் تُخْفُوْنَ மறைக்கிறீர்கள் مِنَ الْكِتٰبِ வேதத்தில் وَيَعْفُوْا இன்னும் விட்டுவிடுவார் عَنْ كَثِيْرٍ ؕ பலவற்றை قَدْ திட்டமாக வந்து விட்டது جَآءَكُمْ உங்களிடம் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து نُوْرٌ ஓர் ஒளி وَّكِتٰبٌ இன்னும் ஒரு வேதம் مُّبِيْنٌ ۙ தெளிவானது
5:15. வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
5:15. வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம் தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவற்றைக் கூறாது) விட்டுவிடுகிறார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் மிகத்தெளிவான ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது.
5:15. வேதம் அருளப்பட்டவர்களே! நம்முடைய தூதர் உங்களிடம் வருகை தந்துள்ளார். இறைவேதத்தில் நீங்கள் மூடிமறைத்துக் கொண்டிருந்த பல விஷயங்களைத் தெள்ளத் தெளிவாய் அவர் விளக்குகின்றார். இன்னும் பல விஷயங்களை மன்னித்தும் விடுகின்றார். அல்லாஹ்விடமிருந்து பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது.
5:15. வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கின்றார், வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்த பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக விளக்கிக் கூறுகிறார், (வேதத்தைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள்) பலவற்றை மறைத்து வெளியிடாது விட்டும் விடுகின்றார், திட்டமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளிவுமுள்ள ஒரு வேதமும் இப்போது (உங்களிடம்) வந்திருக்கின்றது.
5:16 يَّهْدِىْ بِهِ اللّٰهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلٰمِ وَيُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ بِاِذْنِهٖ وَيَهْدِيْهِمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
يَّهْدِىْ நேர்வழி காட்டுகிறான் بِهِ அதன் மூலமாக اللّٰهُ அல்லாஹ் مَنِ எவர்கள் اتَّبَعَ பின்பற்றினார்(கள்) رِضْوَانَهٗ அவனின் பொருத்தத்தை سُبُلَ பாதைகளை السَّلٰمِ ஈடேற்றத்தின் وَيُخْرِجُهُمْ இன்னும் வெளியேற்றுகிறான்/அவர்களை مِّنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى பக்கம் النُّوْرِ ஒளி بِاِذْنِهٖ தன் கட்டளைப்படி وَيَهْدِيْهِمْ இன்னும் அவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான் اِلٰى பக்கம் صِرَاطٍ வழி مُّسْتَقِيْمٍ நேர்
5:16. அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
5:16. (உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான். இன்னும், இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும், அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கிறான்.
5:16. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்.
5:16. அல்லாஹ்-அதன் மூலம் தன்னுடைய பொருத்தத்தைப் பின்பற்றுகின்றவர்களை சமாதானத்திற்குரிய வழிகளில் அவன் செலுத்துகின்றான், அன்றியும் தன் அனுமதி கொண்டு இருள்களிலிருந்து அவர்களைப் பிரகாசத்தின் பால் வெளிப்படுத்துகிறான்; இன்னும் அவர்களை நேரான வழியின்பால் அவன் செலுத்துகிறான்.
5:17 لَـقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَؕ قُلْ فَمَنْ يَّمْلِكُ مِنَ اللّٰهِ شَيْـٴًـــــا اِنْ اَرَادَ اَنْ يُّهْلِكَ الْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗ وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ؕ يَخْلُقُ مَا يَشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
لَـقَدْ திட்டவட்டமாக كَفَرَ நிராகரித்தனர் الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினர் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் هُوَ அவன் الْمَسِيْحُ மஸீஹ்தான் ابْنُ மகன் مَرْيَمَؕ மர்யமுடைய قُلْ கூறுவீராக فَمَنْ யார் يَّمْلِكُ சக்தி பெறுவான் مِنَ இடம் اللّٰهِ அல்லாஹ் شَيْـٴًـــــا ஒரு சிறிதும் اِنْ اَرَادَ நாடினால் اَنْ يُّهْلِكَ அவன் அழிப்பதை الْمَسِيْحَ மஸீஹை ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய وَاُمَّهٗ இன்னும் அவருடைய தாயை وَمَنْ யார் فِى الْاَرْضِ பூமியில் جَمِيْعًا ؕ அனைவரையும் وَلِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا ؕ இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் يَخْلُقُ படைக்கிறான் مَا يَشَآءُ ؕ எதை/நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى மீதும் كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
5:17. எவர்கள், மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், உலகத்திலுள்ள (மற்ற) அனைவரையும் அல்லாஹ் அழித்துவிடக் கருதினால் (அவனைத் தடுக்க) எவன்தான் சிறிதேனும் சக்தி பெறுவான்? (ஏனென்றால்,) வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியதை (விரும்பியபடி) படைக்கிறான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்.
5:17. திண்ணமாக “மர்யத்தின் குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்” என்று கூறியவர்கள், நிச்சயமாக நிராகரித்தவர்களாவார்கள். (நபியே!) அவர்களிடம் நீர் கூறும்: “மர்யத்தினுடைய மகன் மஸீஹையும் அவருடைய அன்னையையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்திட நாடினால் அவனைத் தடுத்திட யாருக்குத் துணிவு உண்டு? வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே இருக்கும் அனைத்தின் மீதும் உள்ள அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியவற்றைப் படைக்கின்றான். மேலும், அவனது வலிமை அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது.”
5:17. நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் மர்யமுடைய குமாரர் மஸீஹ் என்று கூறினார்களே அத்தகையோர் திட்டமாக நிராகரிப்பவர்களாகிவிட்டனர், (ஆகவே, நபியே) மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், (பூமியிலுள்ள மற்ற) யாவரையும், அவன் அழித்து விட நாடிவிட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து (அதனைத் தடுக்க) சிறிதேனும் எவர் சக்தி பெறுவார்? என நீர் கேட்பீராக! ஏனென்றால்) வானங்களுடைய மற்றும் பூமியுடைய இன்னும் இவை இரண்டிற்கு மத்தியிலிருப்பவைகளுடைய ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, அவன் நாடியதைப் படைக்கின்றான், இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
5:18 وَقَالَتِ الْيَهُوْدُ وَالنَّصٰرٰى نَحْنُ اَبْنٰٓؤُا اللّٰهِ وَاَحِبَّآؤُهٗ ؕ قُلْ فَلِمَ يُعَذِّبُكُمْ بِذُنُوْبِكُمْؕ بَلْ اَنْـتُمْ بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ؕ يَغْفِرُ لِمَنْ يَّشَآءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَآءُ ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَاِلَيْهِ الْمَصِيْرُ
وَقَالَتِ கூறினர் الْيَهُوْدُ யூதர்கள் وَالنَّصٰرٰى இன்னும் கிறித்தவர்கள் نَحْنُ நாங்கள் اَبْنٰٓؤُا பிள்ளைகள் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَاَحِبَّآؤُهٗ ؕ இன்னும் அவனுடைய நேசர்கள் قُلْ கூறுவீராக فَلِمَ يُعَذِّبُكُمْ அவ்வாறாயின் ஏன்/வேதனை செய்கிறான்/உங்களை بِذُنُوْبِكُمْؕ உங்கள் குற்றங்களுக்காக بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் بَشَرٌ மனிதர்கள் مِّمَّنْ எவர்களில் خَلَقَ ؕ படைத்தான் يَغْفِرُ மன்னிக்கிறான் لِمَنْ எவர்களை يَّشَآءُ நாடுகிறான் وَيُعَذِّبُ இன்னும் வேதனை செய்கிறான் مَنْ يَّشَآءُ ؕ எவர்களை/நாடுகிறான் وَلِلّٰهِ அல்லாஹ்விற்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் وَاِلَيْهِ அவனளவில்தான் الْمَصِيْرُ மீளுமிடம்
5:18. யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்; அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
5:18. யூதர்களும், கிறிஸ்தவர்களும் ‘‘நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுடைய அன்பிற்குரியவர்கள்'' என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அவ்வாறாயின், உங்கள் குற்றங்களுக்காக (இறைவன்) உங்களை ஏன் (அடிக்கடி துன்புறுத்தித்) தண்டிக்கிறான்? (உண்மை) அவ்வாறன்று. நீங்களும் அவனால் படைக்கப்பட்ட (மற்ற) மனிதர்கள் (போன்று)தான். (நீங்கள் அவனுடைய பிள்ளைகளல்ல. ஆகவே, உங்களிலும்) அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். வானங்கள், பூமி இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக் குரியதே! அவனளவில்தான் (அனைவரும்) செல்ல வேண்டியதாக இருக்கிறது.
5:18. “நாங்கள் அல்லாஹ்வின் புதல்வர்கள்; மேலும், அவனது அன்பிற்குரியவர்கள்” என்றெல்லாம் யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூறுகின்றார்கள். அவர்களிடம் நீர் கேளும்: “அவ்வாறாயின் உங்களின் பாவச் செயல்களுக்காக அவன் ஏன் உங்களுக்குத் தண்டனை அளிக்கின்றான்?” உண்மையில், அவன் படைத்த மற்ற மனிதர்களைப்போல் நீங்களும் மனிதர்கள்தானே! தான் நாடுபவர்களை அவன் மன்னிக்கின்றான். மேலும் தான் நாடுபவர்களைத் தண்டிக்கின்றான். பூமி, வானங்கள் மற்றும் அவற்றில் உள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கே உரியன. மேலும், அவனிடமே எல்லாரும் செல்ல வேண்டியிருக்கிறது.
5:18. இன்னும், யூதர்களும், கிறிஸ்தவர்களும், “நாங்கள் அல்லாஹ்வுடைய குமாரர்கள், அவனது நேசர்கள்” என்று கூறுகின்றனர், “அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் வேதனை செய்கிறான், (உண்மை) அவ்வாறன்று! நீங்களும் அவன் படைத்த (மற்ற) மனிதர்கள் (போன்று)தாம் (என்று நபியே!) நீர் கூறுவீராக! (ஆகவே, உங்களிலும்) அவன் நாடியவர்களை, மன்னிக்கிறான், இன்னும், அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான்” வானங்களுடைய மற்றும் பூமியுடைய இன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் இருப்பவைகளுடைய ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, அவனளவில்தான் (யாவரும்) மீண்டும் செல்ல வேண்டியதிருக்கிறது.
5:19 يٰۤـاَهْلَ الْـكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُـنَا يُبَيِّنُ لَـكُمْ عَلٰى فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْۢ بَشِيْرٍ وَّلَا نَذِيْرٍ فَقَدْ جَآءَكُمْ بَشِيْرٌ وَّنَذِيْرٌؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
يٰۤـاَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்களே قَدْ جَآءَ வந்துவிட்டார் كُمْ உங்களிடம் رَسُوْلُـنَا நம் தூதர் يُبَيِّنُ தெளிவுபடுத்துகிறார் لَـكُمْ உங்களிடம் عَلٰى فَتْرَةٍ இடைவெளியில் مِّنَ الرُّسُلِ தூதர்களின் اَنْ تَقُوْلُوْا நீங்கள் கூறாதிருக்க مَا جَآءَ வரவில்லை نَا எங்களுக்கு مِنْۢ எவரும் بَشِيْرٍ நற்செய்தி கூறுபவர் وَّلَا இன்னும் இல்லை نَذِيْرٍ எச்சரிப்பவர் فَقَدْ உறுதியாக جَآءَ வந்துவிட்டார் كُمْ உங்களிடம் بَشِيْرٌ நற்செய்தி கூறுபவர் وَّنَذِيْرٌؕ இன்னும் எச்சரிப்பவர் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى மீதும் كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
5:19. வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
5:19. வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர் இதுவரை) தூதர்கள் வராது தடைப்பட்டிருந்த காலத்தில் ‘‘நற்செய்தி கூறுபவர், அச்சமூட்டி எச்சரிப்பவர் எங்களிடம் வரவேயில்லை'' என்று நீங்கள் (குறை) கூறாதிருக்க, (மார்க்கக் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக அறிவிக்கக்கூடிய நமது (இத்)தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். ஆகவே, அச்சமூட்டி எச்சரிப்பவர், நற்செய்தி கூறுபவர் உங்களிடம் வந்திருக்கிறார். அல்லாஹ், அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
5:19. வேதம் அருளப்பட்டவர்களே! தூதர்களின் வருகைத் தொடர் சிறிது காலம் வரை நின்று போயிருந்த சமயத்தில் எம்முடைய இந்தத் தூதர் உங்களிடம் வந்துள்ளார். மேலும், இறைநெறியின் தெளிவான அறிவுரைகளை உங்களுக்குக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார். எதற்காகவெனில், நற்செய்தி கூறக்கூடிய, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய எவரும் எங்களிடம் வரவில்லையே என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக! (இதோ பாருங்கள்:) இப்போது நற்செய்தி கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். மேலும், அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.
5:19. வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர்,) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரோ, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரோ எங்களிடம் வரவேயில்லை,” என்று நீங்கள் (குறை) கூறாதிருப்பதற்காக (அல்லாஹ்வின் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்ற நம்முடைய (இத்)தூதர் திட்டமாக உங்களிடம் வந்து விட்டார் – நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரும் திட்டமாக உங்களிடம் வந்து விட்டார் - இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
5:20 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْۢـبِيَآءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا ۖ وَّاٰتٰٮكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை... مُوْسٰى மூஸா لِقَوْمِهٖ தன் சமுதாயத்திற்கு يٰقَوْمِ என் சமுதாயமே اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَةَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது اِذْ அந்நேரத்தில் جَعَلَ ஆக்கினான் فِيْكُمْ உங்களில் اَنْۢـبِيَآءَ நபிமார்களை وَجَعَلَـكُمْ ஆக்கினான்/உங்களை مُّلُوْكًا அரசர்களாக ۖ وَّاٰتٰٮكُمْ இன்னும் கொடுத்தான்/உங்களுக்கு مَّا எவற்றை لَمْ يُؤْتِ கொடுக்கவில்லை اَحَدًا ஒருவருக்கும் مِّنَ الْعٰلَمِيْنَ உலகத்தாரில்
5:20. அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.
5:20. மூஸா தன் சமூகத்தாரை நோக்கி ‘‘என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், ‘மன்னு ஸல்வா' என்ற உணவு போன்ற)வற்றையும் உங்களுக்கு அளித்திருக்கிறான்'' என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.
5:20. மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூருங்கள்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான். உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான். மேலும், உலக மக்களில் எவர்க்கும் வழங்கப்படாதவற்றையெல்லாம் உங்களுக்கு வழங்கினான்.
5:20. அன்றியும் மூஸா தன் சமூகத்தாரிடம், “என் சமூகத்தினரே, அவன் உங்களில் நபிமார்களை ஆக்கிய நேரத்தில் உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள், மேலும், (ஃபிர் அவ்னிடம் அடிமைகளாயிருந்த) உங்களை அரசர்களாகவும் அவன் ஆக்கினான். இன்னும், அகிலத்தாரில் மற்றெவருக்குமே கொடுக்காதவற்றையும், உங்களுக்கு அவன் கொடுத்திருக்கிறான், என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக).
5:21 يٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِىْ كَتَبَ اللّٰهُ لَـكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ
يٰقَوْمِ என் சமுதாயமே ادْخُلُوا நுழையுங்கள் الْاَرْضَ பூமியில் الْمُقَدَّسَةَ பரிசுத்தமானது الَّتِىْ எது كَتَبَ விதித்தான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு وَلَا تَرْتَدُّوْا இன்னும் திரும்பிவிடாதீர்கள் عَلٰٓى اَدْبَارِ பின் புறங்களில் كُمْ உங்கள் فَتَـنْقَلِبُوْا திரும்புவீர்கள் خٰسِرِيْنَ நஷ்டவாளிகளாக
5:21. (தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.
5:21. (தவிர, அவர்) ‘‘என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் போர் புரிந்து அதில்) நுழையுங்கள். (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறம் காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்'' (என்றும் கூறினார்.)
5:21. என் சமூகத்தாரே! உங்களுக்காகவே அல்லாஹ் விதித்துவிட்ட தூய பூமியில் நுழைந்து விடுங்கள்! இன்னும் புறங்காட்டி ஓடாதீர்கள்! நீங்கள் அவ்வாறு செய்தால் பேரிழப்புக்கு ஆளாவீர்கள்.”
5:21. (மேலும்,) “என் சமூகத்தினரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (எதிரியுடன் யுத்தம் செய்து அதில்) பிரவேசியுங்கள், இன்னும், (அவர்களுக்கு) நீங்கள் புறமுதுகிட்டுத் திரும்பாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” (என்றும் அவர் கூறினார்.)
5:22 قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّ فِيْهَا قَوْمًا جَبَّارِيْنَ ۖ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰى يَخْرُجُوْا مِنْهَا ۚ فَاِنْ يَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دَاخِلُوْنَ
قَالُوْا கூறினர் يٰمُوْسٰٓى மூஸாவே! اِنَّ நிச்சயமாக فِيْهَا அதில் قَوْمًا ஒரு சமுதாயம் جَبَّارِيْنَ ۖ பலசாலிகளான وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَنْ மாட்டோம் نَّدْخُلَهَا அதில் நுழைய حَتّٰى வரை يَخْرُجُوْا வெளியேறுவார்கள் مِنْهَا ۚ அதிலிருந்து فَاِنْ يَّخْرُجُوْا அவர்கள் வெளியேறினால் مِنْهَا அதிலிரு ந்து فَاِنَّا நிச்சயமாக நாங்கள் دَاخِلُوْنَ நுழைவோம்
5:22. அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்” எனக் கூறினார்கள்.
5:22. (அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், அதைவிட்டு வெளியேறும் வரை நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறி விட்டால் நாங்கள் தவறாமல் நுழைந்துவிடுவோம்'' என்றனர்.
5:22. அதற்கவர்கள், “மூஸாவே...! அப்பூமியில் மிக்க வலிமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள்; அதிலிருந்து அவர்கள் வெளியேறாத வரை நாங்கள் அங்குச் செல்லவே மாட்டோம். ஆயினும் அவர்கள் அதிலிருந்து வெளியேறிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நுழையத் தயாராய் உள்ளோம்” என்று பதில் தந்தார்கள்.
5:22. அ(தற்க)வர்கள் “மூஸாவே! நிச்சயமாக அதில் மிக்க பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றனர், அவர்கள் அதைவிட்டு வெளியேறும் வரையில் நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம், அவர்கள் அதைவிட்டு வெளியேறி விட்டால், நிச்சயமாக நாங்கள் நுழைந்துவிடக் கூடியவர்கள்” என்றனர்.
5:23 قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمَا ادْخُلُوْا عَلَيْهِمُ الْبَابَۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ۚ وَعَلَى اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
قَالَ கூறினார்(கள்) رَجُلٰنِ இருவர் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் يَخَافُوْنَ பயப்படுகிறார்கள் اَنْعَمَ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمَا அவ்விருவர் மீதும் ادْخُلُوْا நுழையுங்கள் عَلَيْهِمُ அவர்களைஎதிர்த்து الْبَابَۚ வாசலில் فَاِذَا دَخَلْتُمُوْهُ அதில் நீங்கள் நுழைந்தால் فَاِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் غٰلِبُوْنَ ۚ வெற்றி பெறுவீர்கள் وَعَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீதே فَتَوَكَّلُوْۤا நம்பிக்கை வையுங்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
5:23. (அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) “அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினர்.
5:23. (இவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர்மீது அல்லாஹ் அருள்புரிந்திருந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அவர்கள் பலத்தைப்பற்றி பயப்படவேண்டாம்.) அவர்களை எதிர்த்து (அந் நகரத்தின்) வாயில் வரை சென்றுவிடுங்கள். அதில் நீங்கள் நுழைந்து விட்டால் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நீங்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை சாட்டுங்கள்'' என்று கூறினார்கள்.
5:23. அவ்வாறு (நுழைய) அஞ்சிக் கொண்டிருந்த மக்களின் மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் இருந்தனர். அவர்கள் கூறினார்கள்: “வலிமை வாய்ந்தவர்களைப் பொருட்படுத்தாமல் வாயிலினுள் நுழைந்து விடுங்கள்! அவ்வாறு உள்ளே நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வீர்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்!”
5:23. (அல்லாஹ்வை) பயந்தோர்களிலிருந்த இரு மனிதர்கள் அவ்விருவரின் மீது அல்லாஹ் அருள் புரிந்திருந்தான், அவர்கள் (மற்றவர்களிடம்) “நீங்கள் (அவர்கள் பலத்தைப் பற்றிப் பயப்பட வேண்டாம்) அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாயில் வரையில் சென்று விடுங்கள், பின்னர், நீங்கள் அதில் நுழைந்து விட்டால் அப்போது நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்றவர்கள், நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினார்கள்.
5:24 قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قَاعِدُوْنَ
قَالُوْا கூறினர் يٰمُوْسٰٓى மூஸாவே! اِنَّا நிச்சயமாக நாங்கள் لَنْ மாட்டோம் نَّدْخُلَهَاۤ அதில் நுழைய اَبَدًا அறவே مَّا دَامُوْا அவர்கள் இருக்கும் காலமெல்லாம் فِيْهَا அதில் فَاذْهَبْ ஆகவே செல் اَنْتَ நீ وَرَبُّكَ இன்னும் உன் இறைவன் فَقَاتِلَاۤ இருவரும் போரிடுங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் هٰهُنَا இங்கேதான் قَاعِدُوْنَ உட்கார்ந்திருப்போம்
5:24. அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
5:24. (இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீரும், உமது இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்'' என்று கூறினார்கள்.
5:24. ஆனால் அவர்கள் மீண்டும் இவ்வாறே கூறினார்கள்: “மூஸாவே! அவர்கள் அங்கு இருக்கும் வரை நாங்கள் ஒருபோதும் அங்குப் போகமாட்டோம். வேண்டுமாயின், நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்.”
5:24. (இதன் பிறகும், அவர்கள்) மூஸாவே அவர்கள் அதில் இருந்துகொண்டிருக்கும் காலமெல்லாம் ஒருக்காலும் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம், ஆகவே, நீரும் உம்முடைய இரட்சகனும் சென்று (அவர்களுடன்) நீங்கள் இருவரும் யுத்தம் புரியுங்கள், நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள்” என்று கூறினார்கள்.
5:25 قَالَ رَبِّ اِنِّىْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِىْ وَاَخِىْ فَافْرُقْ بَيْنَـنَا وَبَيْنَ الْقَوْمِ الْفٰسِقِيْنَ
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اِنِّىْ நிச்சயமாக நான் لَاۤ اَمْلِكُ அதிகாரம் பெற மாட்டேன் اِلَّا தவிர نَفْسِىْ எனக்கு وَاَخِىْ இன்னும் என் சகோதரர் فَافْرُقْ ஆகவே பிரித்திடு بَيْنَـنَا எங்களுக்கு மத்தியில் وَبَيْنَ இன்னும் மத்தியில் الْقَوْمِ சமுதாயம் الْفٰسِقِيْنَ பாவிகளான
5:25. “என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா கூறினார்.
5:25. (அதற்கு மூஸா) ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, பாவிகளான (இந்த) மக்களிலிருந்து நீ எங்களைப் பிரித்து விடுவாயாக!'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
5:25. அதற்கு மூஸா, “என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் தவிர நிச்சயமாக வேறு யாரும் என்னுடைய அதிகாரத்தில் இல்லை; எனவே, கீழ்ப்படியாத இம்மக்களிடமிருந்து எங்களைப் பிரித்துவிடுவாயாக!” எனக் கூறினார்.
5:25. (அதற்கு மூஸா) “என் இரட்சகனே” நிச்சயமாக நான் என்னையும், என் சகோதரரையும் தவிர மற்றெவரையும் நான் உதவிக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை, ஆகவே, எங்களுக்கிடையிலும் தீயவர்களான இக்கூட்டத்தினருக்கிடையிலும் பிரித்து விடுவாயாக” என்று பிரார்த்தித்துக் கூறினர்.
5:26 قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ اَرْبَعِيْنَ سَنَةً ۚ يَتِيْهُوْنَ فِى الْاَرْضِ ؕ فَلَا تَاْسَ عَلَى الْقَوْمِ الْفٰسِقِيْنَ
قَالَ கூறினான் فَاِنَّهَا ஆகவே நிச்சயமாக அது مُحَرَّمَةٌ தடுக்கப்பட்டதாகும் عَلَيْهِمْ அவர்கள் மீது اَرْبَعِيْنَ நாற்பது سَنَةً ۚ ஆண்டு(கள்) يَتِيْهُوْنَ திக்கற்றலைவார்கள் فِى الْاَرْضِ ؕ பூமியில் فَلَا تَاْسَ ஆகவே கவலைப்படாதீர் عَلَى الْقَوْمِ சமுதாயத்தின் மீது الْفٰسِقِيْنَ பாவிகளான
5:26. (அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.
5:26. (அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) ‘‘அந்த இடம் நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, (இந்தப்) பாவிகளான மக்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்!'' என்று (மூஸாவுக்குக்) கூறினான்.
5:26. அதற்கு அல்லாஹ் மறுமொழி பகர்ந்தான்: “அப்படியென்றால் நாற்பதாண்டு காலம் வரைஅந்நாடு அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டதாகும். அவர்கள் பூமியில் அலைக்கழிந்து திரிவார்கள். கீழ்ப்படியாத அந்த மக்களுக்காக நீர் அனுதாபப்படாதீர்!”
5:26. அவ்வாறாயின் நிச்சயமாக (அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பலஸ்தீன் என்ற) அந்த இடமானது நாற்பது ஆண்டுகள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது, (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழிவார்கள், ஆகவே, இத்தீய கூட்டத்தாரைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்” என்று (மூஸாவுக்கு அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
5:27 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِؕ قَالَ لَاَقْتُلَـنَّكَؕ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ
وَاتْلُ ஓதுவீராக عَلَيْهِمْ அவர்கள் முன் نَبَاَ செய்தியை ابْنَىْ இரு மகன்களின் اٰدَمَ ஆதமுடைய بِالْحَـقِّۘ உண்மையில் اِذْ போது قَرَّبَا குர்பானி கொடுத்தனர் قُرْبَانًا ஒரு குர்பானியை فَتُقُبِّلَ ஏற்றுக் கொள்ளப்பட்டது مِنْ இருந்து اَحَدِهِمَا அவ்விருவரில் ஒருவர் وَلَمْ يُتَقَبَّلْ ஏற்கப்படவில்லை مِنَ இருந்து الْاٰخَرِؕ மற்றவர் قَالَ என்றார் لَاَقْتُلَـنَّكَؕ நிச்சயமாக உன்னைக்கொல்வேன் قَالَ கூறினார் اِنَّمَا يَتَقَبَّلُ ஏற்பதெல்லாம் اللّٰهُ அல்லாஹ் مِنَ الْمُتَّقِيْنَ அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்
5:27. (நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
5:27. (நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக. இருவரும் ‘‘குர்பானி' (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி யான)து ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால், ‘‘நிச்சயம் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்'' என்றார். உடனே (குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லவர்) ‘‘அல்லாஹ் (குர்பானியை) ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சமுள்ளவர்களிடமிருந்துதான்'' என்று பதில் கூறினார்.
5:27. (நபியே!) இனி, அவர்களுக்கு ஆதமுடைய இரு மகன்களின் வரலாற்றைக் கூடுதல் குறைவின்றி எடுத்துரைப்பீராக! அவர்கள் இருவரும் குர்பானி கொடுத்தபோது அவர்களில் ஒருவருடைய குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மற்றொருவருடையது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இரண்டா மவர், “திண்ணமாக நான் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று கூறினார். அதற்கு முதலாமவர் கூறினார்: “இறையச்சமுடையோரின் வழிபாடுகளை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்;
5:27. மேலும், (நபியே!) ஆதமுடைய (ஹாபில், காபில் என்னும்) இரு குமாரர்களின் செய்தியை உண்மையைக் கொண்டு நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக! அவ்விருவரும் குர்பானி (பலி)யை (அல்லாஹ்வின் பால் சமர்ப்பித்து) நெருக்கமாக்கி வைத்த சமயத்தில் அவ்விருவரில் ஒருவரிலிருந்து அது அங்கீகரிக்கப்பட்டது, மேலும், மற்றவரிலிருந்து அது அங்கீகரிக்கப்படவில்லை, ஆகவே, “நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று (அங்கீகரிக்கப்படாதவர்) கூறினார், (அதற்கு அங்கீகரிக்கப் பெற்ற) அவர் “அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் பயபக்தியுடையவர்களில் இருந்துதான்” என்று கூறினார்.
5:28 لَٮِٕنْۢ بَسَطْتَّ اِلَىَّ يَدَكَ لِتَقْتُلَنِىْ مَاۤ اَنَا بِبَاسِطٍ يَّدِىَ اِلَيْكَ لِاَقْتُلَكَ ۚ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ
لَٮِٕنْۢ بَسَطْتَّ நீங்கள் நீட்டினால் اِلَىَّ என்னளவில் يَدَكَ உன் கரத்தை لِتَقْتُلَنِىْ நீ என்னைக் கொல்வ தற்காக مَاۤ اَنَا நான் இல்லை بِبَاسِطٍ நீட்டுபவனாக يَّدِىَ என் கரத்தை اِلَيْكَ உன்னளவில் لِاَقْتُلَكَ ۚ நான் கொல்வதற்காக / உன்னை اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اللّٰهَ அல்லாஹ்வை رَبَّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ அகிலத்தாரின்
5:28. அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).
5:28. ‘‘நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால், நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றன்.
5:28. நீ என்னைக் கொல்வதற்குக் கை நீட்டினாலும் நான் உன்னைக் கொல்வதற்குக் கை நீட்ட மாட்டேன். நான் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே அஞ்சுகிறேன்.
5:28. (மேலும்) “நீ என்னைக் கொலை செய்வதற்காக உன் கையை என்னளவில் நீட்டினாலும் நான் உன்னை கொலை செய்வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டுபவன் அல்ல, (ஏனென்றால்) நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்)
5:29 اِنِّىْۤ اُرِيْدُ اَنْ تَبُوْٓءَا۟بِاِثْمِىْ وَ اِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِۚ وَذٰ لِكَ جَزٰٓؤُا الظّٰلِمِيْنَۚ
اِنِّىْۤ நிச்சயமாக நான் اُرِيْدُ நாடுகிறேன் اَنْ تَبُوْٓءَا நீ திரும்புவதை بِاِثْمِىْ என் பாவத்துடன் وَ اِثْمِكَ உன் பாவம் فَتَكُوْنَ ஆகிவிடுவாய் مِنْ இருந்து اَصْحٰبِ வாசிகள் النَّارِۚ நரகம் وَذٰ لِكَ இது جَزٰٓؤُا கூலி الظّٰلِمِيْنَۚ அநியாயக்காரர்களின்
5:29. என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),
5:29. என் பாவச் சுமையையும், உன் பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகின்றன். அவ்வாறு நீ வந்தால் நரகவாசியாகி விடுவாய் இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்'' (என்று கூறினார்.)
5:29. என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்தையும் நீயே சேகரித்துக் கொண்டு நீ நரகவாசியாகி விடுவதை நான் விரும்புகின்றேன். இதுதான் அக்கிரமக்காரர்கள் புரிந்த கொடுமைக்குச் சரியான கூலியாகும்.”
5:29. “என்னுடைய பாவத்தையும், உன்னுடைய பாவத்தையும் நீ சுமந்து கொண்டு (அல்லாஹ்விடம்) வருவதையே நிச்சயமாக நான் நாடுகிறேன், அவ்வாறாயின் நீ நரகவாசிகளில் உள்ளவனாகிவிடுவாய், இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்”, எனவும் கூறினார்.
5:30 فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَـتْلَ اَخِيْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِيْنَ
فَطَوَّعَتْ தூண்டியது لَهٗ அவரை نَفْسُهٗ அவருடைய மனம் قَـتْلَ கொல்வதற்கு اَخِيْهِ தன் சகோதரரை فَقَتَلَهٗ ஆகவே அவரைக் கொன்றார் فَاَصْبَحَ ஆகவே ஆகினார் مِنَ الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளில்
5:30. (இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.
5:30. (இதன் பின்னரும்) அவர் தன் சகோதரரை வெட்டிவிடும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே, அவர் அவரை வெட்டிவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்.
5:30. இறுதியில் தன்னுடைய சகோதரரைக் கொலை செய்யும்படி அவனுடைய மனம் அவனைத் தூண்டியது. அதனால் அவன் அவரைக் கொலை செய்து பேரிழப்பிற்கு ஆளாகிவிட்டான்.
5:30. (இதன் பின்னரும்) அவர், தன் சகோதரரைக் கொலை செய்துவிடுவதையே அவருடைய மனம் அவருக்கு எளிதாகக்காட்டியது, ஆகவே, அவர் அவரைக் கொலை செய்து விட்டார், அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் (உள்ளவராக) ஆகிவிட்டார்.
5:31 فَبَـعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِىْ الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِىْ سَوْءَةَ اَخِيْهِؕ قَالَ يَاوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِىَ سَوْءَةَ اَخِىْۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَۛ ۚ ۙ
فَبَـعَثَ ஆகவே அனுப்பினான் اللّٰهُ அல்லாஹ் غُرَابًا ஒரு காகத்தை يَّبْحَثُ தோண்டுகிறது فِىْ الْاَرْضِ பூமியில் لِيُرِيَهٗ காட்டுவதற்காக/ அவனுக்கு كَيْفَ எவ்வாறு يُوَارِىْ மறைப்பான் سَوْءَةَ சடலத்தை اَخِيْهِؕ தன் சகோதரனின் قَالَ கூறினான் يَاوَيْلَتٰٓى என் நாசமே اَعَجَزْتُ இயலாமலாகி விட்டேனா? اَنْ اَكُوْنَ நான் ஆக مِثْلَ போன்று هٰذَا இந்த الْغُرَابِ காகம் فَاُوَارِىَ மறைத்திருப்பேனே سَوْءَةَ சடலத்தை اَخِىْۚ என் சகோதரனின் فَاَصْبَحَ ஆகிவிட்டான் مِنَ النّٰدِمِيْنَۛ ۚ ۙ துக்கப்படுபவர்களில்
5:31. பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
5:31. பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பிவைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காண்பிப்பதற்காகப்) பூமியைத் தோண்டிற்று. (இதைக் கண்ட) அவர் ‘‘அந்தோ! இந்தக் காகத்தைப்போல் (சொற்ப அறிவுடையவனாக) நான் இருந்தாலும் என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேனே! (அதுவும்) என்னால் முடியாமல் போய் விட்டதே!'' என்று (அழுது) கூறித் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
5:31. பிறகு அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டிற்று; அவனுடைய சகோதரனின் சடலத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதனை அவனுக்குக் காண்பிப்பதற்காக! இதனைக் கண்ணுற்ற அவன், “அந்தோ, என் துயரமே! இந்த காகத்தைப் போன்றுகூட நான் இல்லையே! (அவ்வாறு இருந்திருந்தால்) என்னுடைய சகோதரருடைய சடலத்தை அடக்கம் செய்வதற்கான முறை எனக்குப் புலப்பட்டிருக்குமே! எனப் புலம்பினான். பின்னர், தான் செய்தது குறித்து அவன் பெரிதும் வருந்தினான்.
5:31. பின்னர், பூமியைத் தோண்டக்கூடிய ஒரு காக்கையை தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு அவர் மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அது காண்பிப்பதற்காக அல்லாஹ் அனுப்பி வைத்தான், (அது பூமியைத் தோன்றிற்று, இதனைக் கண்ட) அவர் “என்னுடைய கேடே இந்தக் காகத்தைப் போல் ஆவதற்குகூட இயலாதவனாக நான் ஆகிவிட்டேனா? அவ்வாறு (நான் இருந்திருந்தாலும்) என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேன்” என்று (அழுது) கூறி கைசேதப்படக்கூடியவர்களில் ஒருவராக அவர் ஆகிவிட்டார்.
5:32 مِنْ اَجْلِ ذٰ لِكَ ۛ ؔ ۚ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ؕ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ
مِنْ اَجْلِ காரணமாக ذٰ لِكَ ۛ ؔ ۚ அதன் كَتَبْنَا விதித்தோம் عَلٰى மீது بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்கள் اَنَّهٗ நிச்சயமாக مَنْ எவன் قَتَلَ கொன்றார் نَفْسًۢا ஓர் உயிரை بِغَيْرِ نَفْسٍ ஓர் உயிரைக் கொலை செய்ததற்கு அல்லாமல் اَوْ அல்லது فَسَادٍ விஷமம் செய்தல் فِى الْاَرْضِ பூமியில் فَكَاَنَّمَا போலாவான் قَتَلَ கொன்றான் النَّاسَ மக்கள் جَمِيْعًا ؕ அனைவரையும் وَمَنْ எவர் اَحْيَاهَا வாழவைத்தார்/அதை فَكَاَنَّمَاۤ போலாவார் اَحْيَا வாழவைத்தார் النَّاسَ மக்கள் جَمِيْعًا ؕ அனைவரையும் وَلَـقَدْ திட்டமாக جَآءَتْهُمْ வந்தார்கள்/அவர்களிடம் رُسُلُنَا நம் தூதர்கள் بِالْبَيِّنٰتِ அத்தாட்சிகளுடன் ثُمَّ பிறகு اِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானவர்கள் مِّنْهُمْ அவர்களில் بَعْدَ ذٰ لِكَ அதன் பின்னர் فِى الْاَرْضِ பூமியில் لَمُسْرِفُوْنَ வரம்புமீறுகிறார்கள்
5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
5:32. இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். மேலும், அவர்களிடம் நமது பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே வந்தனர்.
5:32. இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம்: “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” ஆனால் அவர்களின் நிலை என்னவெனில், நம்முடைய தூதர்கள் (தொடர்ச்சியாக) அவர்களிடம் தெள்ளத் தெளிவான கட்டளைகள் கொண்டு வந்த பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறிய செயல்கள் புரிபவர்களாகவே இருக்கின்றனர்.
5:32. இதன் காரணமாகவே “எவரொருவர் மற்றோர் ஆத்மாவின் கொலைக்குப் பிரதியாகவோ, அல்லது பூமியில் (உண்டாகும்) குழப்பத்தி(னைத் தடை செய்த)ற்காகவோ தவிர, (அநியாயமாக மற்றொருவரை) கொலை செய்கின்றாரோ அவர், மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவர் போலாவார் என்றும் எவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழவைக்கின்றாரோ அவர், மனிதர்கள் யாவரையுமே வாழவைத்தவர் போலாவார்” என்றும் இஸ்ராயீலின் மக்களின் மீது நாம் விதியாக்கப்பட்டு விட்டோம், மேலும், நம்முடைய தூதர்கள் பலர் அவர்களிடம் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள், அப்பால் நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர், இதற்குப்பின்னரும் பூமியில் வரம்பு கடந்தவர்களகவே இருந்தனர்.
5:33 اِنَّمَا جَزٰٓؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْۤا اَوْ يُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِؕ ذٰ لِكَ لَهُمْ خِزْىٌ فِى الدُّنْيَا وَ لَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ۙ
اِنَّمَا جَزٰٓؤُا தண்டனையெல்லாம் الَّذِيْنَ எவர்கள் يُحَارِبُوْنَ போரிடுவார்கள் اللّٰهَ அல்லாஹ்விடம் وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதர் وَيَسْعَوْنَ இன்னும் முயற்சிக்கின்றனர் فِى الْاَرْضِ பூமியில் فَسَادًا குழப்பம் செய்ய اَنْ يُّقَتَّلُوْۤا அவர்கள் கொல்லப்படுவது اَوْ அல்லது يُصَلَّبُوْۤا அவர்கள் சிலுவையில் அறையப்படுவது اَوْ அல்லது تُقَطَّعَ வெட்டப்படுவது اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் وَاَرْجُلُهُمْ இன்னும் அவர்களின் கால்கள் مِّنْ خِلَافٍ மாற்றமாக اَوْ அல்லது يُنْفَوْا அவர்கள் கடத்தப்படுவது مِنَ இருந்து الْاَرْضِؕ நாடு ذٰ لِكَ இது لَهُمْ அவர்களுக்கு خِزْىٌ இழிவு فِى الدُّنْيَا இவ்வுலகத்தில் وَ لَهُمْ இன்னும் அவர்களுக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் عَذَابٌ வேதனை عَظِيْمٌ ۙ பெரியது
5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
5:33. எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்து கொண்டும் திரிகிறார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்றுவிடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். மேலும், மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு.
5:33. எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும் பூமியில் கலகம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இதுதான்: அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது அவர்களுடைய மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவாகும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கிறது.
5:33. அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் தொடுத்து பூமியில் குழப்பம் செய்து கொண்டும் திரிகின்றவர்களுக்குரிய தண்டனையெல்லாம் (அவர்கள்) கொல்லப்பட வேண்டும் அல்லது சிலுவையில் அறையப்பட வேண்டும், அல்லது அவர்களின் கைகளும், அவர்களின் கால்களும் மாறாக (ஒரு பக்கத்துக்கையும், மறு பக்கத்துக்காலுமாக)த் துண்டிக்கப்பட வேண்டும், அல்லது நாடுகடத்தப்படுதல் வேண்டும், இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும், இன்னும், மறுமையில் மகத்தான வேதனை அவர்களுக்குண்டு.
5:34 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَيْهِمْۚ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் تَابُوْا (மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பினார்கள் مِنْ قَبْلِ முன்னர் اَنْ تَقْدِرُوْا நீங்கள் ஆற்றல்பெறுவது عَلَيْهِمْۚ அவர்கள் மீது فَاعْلَمُوْۤا ஆகவே அறிந்துகொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ பெரும் கருணையாளன்
5:34. நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
5:34. எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக்கொண்)டவர்களைத் தவிர நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னிப்பவன் பெரும் கருணை புரிபவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
5:34. எனினும் உங்கள் பிடியில் நீங்கள் அவர்களைக் கொண்டு வருவதற்கு முன் எவர்கள் பாவமன்னிப்புக் கோரினார்களோ நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனும், மிகுந்த கருணை உள்ளவனுமாவான்.
5:34. (எனினும்,) பிடித்து தண்டிக்க அவர்கள் மீது நீங்கள் சக்தி பெறுவதற்கு முன்னதாக (அவர்களில்) பச்சாதாபப்பட்டவர்களைத்தவிர, அப்போது நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
5:35 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே! اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَابْتَغُوْۤا இன்னும் தேடுங்கள் اِلَيْهِ அவனளவில் الْوَسِيْلَةَ நன்மையை وَجَاهِدُوْا இன்னும் போரிடுங்கள் فِىْ سَبِيْلِهٖ அவனுடைய பாதையில் لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ நீங்கள் வெற்றியடைவதற்காக
5:35. முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.
5:35. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனிடம் செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். அவனுடைய பாதையில் (போர் செய்ய) பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்.
5:35. இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவன் பக்கம் நெருங்கிச் செல்வதற்கான வழி வகையினைத் தேடுங்கள்; மேலும், அவனுடைய வழியில் கடுமையாகப் பாடுபடுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும்.
5:35. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், மேலும் அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை (வணக்க வழிபாடுகளின் மூலம்) தேடிக்கொள்ளுங்கள், மேலும், அவனுடைய பாதையில் யுத்தம் செய்யுங்கள், (அதனால்) நீங்கள் வெற்றியடையலாம்.
5:36 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ اَنَّ لَهُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لِيَـفْتَدُوْا بِهٖ مِنْ عَذَابِ يَوْمِ الْقِيٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் لَوْ اَنَّ لَهُمْ நிச்சயமாக அவர்களுக்கு இருந்தால் مَّا எவை فِى الْاَرْضِ இப்பூமியில் جَمِيْعًا அனைத்தும் وَّمِثْلَهٗ இன்னும் அவை போன்றது مَعَهٗ அத்துடன் لِيَـفْتَدُوْا அவர்கள் பினை கொடுப்பதற்காக بِهٖ அதைக் கொண்டு مِنْ இருந்து عَذَابِ வேதனை يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளின் مَا تُقُبِّلَ அங்கீகரிக்கப்படாது مِنْهُمْۚ அவர்களிடமிருந்து وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ துன்புறுத்தக் கூடியது
5:36. நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா; மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
5:36. நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் இவை அனைத்தையும் தாங்கள் மறுமை நாளின் வேதனையிலிருந்து தப்பிக்க பிரதியாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே கிடைக்கும்.
5:36. நன்கு தெரிந்து கொள்ளுங்கள்: எவர்கள் நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கின்றார்களோ அவர்களிடம் பூமி முழுவதிலும் உள்ள செல்வம் அனைத்தும், அத்துடன் அதேபோல் இன்னொரு பங்கும் இருந்து அவற்றை மறுமைநாளின் வேதனையிலிருந்து (தாங்கள்) விடுபட ஈடாகக் கொடுக்க விரும்பினாலும் அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை கிடைத்தே தீரும்!
5:36. நிச்சயமாக, நிராகரித்துவிட்டவர்கள் - அவர்களுக்கு மறுமை நாளில் (அவர்கள்) படும் வேதனையிலிருந்து (தங்களை விடுவித்துக் கொள்ள) இழப்பீடாகக் கொடுப்பதற்காக இப்பூமியில் உள்ள யாவும் இன்னும், அத்துடன் அதுபோன்றதும் நிச்சயமாக(ச் சொந்தமாக) இருந்தாலும் அவர்களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
5:37 يُرِيْدُوْنَ اَنْ يَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنْهَا وَلَهُمْ عَذَابٌ مُّقِيْمٌ
يُرِيْدُوْنَ நாடுவார்கள் اَنْ يَّخْرُجُوْا அவர்கள் வெளியேற مِنَ இருந்து النَّارِ நரகம் وَمَا இல்லை هُمْ அவர்கள் بِخَارِجِيْنَ வெளியேறுபவர்களாக مِنْهَا அதிலிருந்து وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை مُّقِيْمٌ நிலையானது
5:37. அவர்கள் (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைவிட்டு வெளியேறுகிறவர்களாக இல்லை; அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.
5:37. அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறவே விரும்புவார்கள். எனினும், அதிலிருந்து வெளியேற அவர்களால் (முடியவே) முடியாது. அவர்களுக்கு வேதனை (என்றென்றுமே) நிலைத்திருக்கும்.
5:37. அவர்கள் நரகத்தை விட்டு ஓட நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அதை விட்டு வெளியேற முடியாது. மேலும், அவர்களுக்கு நிலையான வேதனை தரப்படும்.
5:37. அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறிவிட நாடுவார்கள், (ஆனால்) அதைவிட்டு அவர்கள் வெளியேறுகிறவர்களாகவுமில்லை, மேலும் அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.
5:38 وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَـكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
وَالسَّارِقُ திருடன் وَالسَّارِقَةُ இன்னும் திருடி فَاقْطَعُوْۤا வெட்டுங்கள் اَيْدِيَهُمَا அவ்விருவரின் கரங்களை جَزَآءًۢ கூலியாக بِمَا كَسَبَا அவ்விருவர் செய்ததன் காரணமாக نَـكَالًا தண்டனையாக مِّنَ اللّٰهِ ؕ அல்லாஹ்விடமிருந்து وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ மகா ஞானவான்
5:38. திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
5:38. ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
5:38. திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினைமிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனும் ஆவான்.
5:38. திருடனும், திருடியும் அவ்விருவரும் சம்பாதித்ததற்குக் கூலியாக, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவ்விருவரின் கைகளைத் துண்டித்து விடுங்கள், மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
5:39 فَمَنْ تَابَ مِنْۢ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ يَتُوْبُ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
فَمَنْ எவர் تَابَ திருந்தி திரும்பினார் مِنْۢ بَعْدِ பின்னர் ظُلْمِهٖ தன் தீமை وَاَصْلَحَ இன்னும் திருத்திக் கொண்டார் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَتُوْبُ பிழை பொறுப்பான் عَلَيْهِؕ அவர் மீது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ பெரும் கருணையாளன்
5:39. எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
5:39. எவரேனும் தன் (இத்) தீயச் செயலுக்குப் பின்னர் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.
5:39. எனவே, யாரேனும் அநீதி இழைத்தபின் பாவ மன்னிப்புக்கோரி, தன்னைச் சீர்திருத்திக் கொண்டால் அல்லாஹ்வின் கருணைப் பார்வை அவன் பக்கம் மீண்டும் திரும்புகிறது. நிச்சயமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும் அளப்பரிய கருணையுள்ளவனுமாவான்.
5:39. ஆகவே, எவர், தம்முடைய அநீதத்திற்குப் பின்னர் பச்சாதாபப்பட்டு, (தன்னைச்) சீர் திருத்தியும் கொண்டாரோ, அப்போது நிச்சயமாக அல்லாஹ் அவருடைய தவ்பாவை அங்கீகரிக்கின்றான், (காரணம்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிக்க கிருபையுடையவன்.
5:40 اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ يُعَذِّبُ مَنْ يَّشَآءُ وَيَغْفِرُ لِمَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
اَلَمْ تَعْلَمْ நீர் அறியவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَهٗ அவனுக்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِؕ இன்னும் பூமியின் يُعَذِّبُ வேதனை செய்வான் مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் وَيَغْفِرُ இன்னும் மன்னிப்பான் لِمَنْ எவரை يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
5:40. நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
5:40. (நபியே!) நிச்சயமாக வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? ஆகவே, அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பளிப்பான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன் ஆவான்.
5:40. அல்லாஹ் வானங்கள், பூமி இவற்றின் ஆட்சிக்கு உரியவன் என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடுபவர்களை அவன் தண்டிப்பான்; மேலும் நாடுபவர்களை மன்னிப்பான்; அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.
5:40. (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் - அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? (ஆகவே) அவன் நாடியவர்களை வேதனை செய்வான், அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பும் அளிப்பான், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
5:41 يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ لَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ مِنَ الَّذِيْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَ فْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ وَمِنَ الَّذِيْنَ هَادُوْا ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِيْنَۙ لَمْ يَاْتُوْكَؕ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ مِنْۢ بَعْدِ مَوَاضِعِهٖۚ يَقُوْلُوْنَ اِنْ اُوْتِيْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ وَمَنْ يُّرِدِ اللّٰهُ فِتْنَـتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَيْــٴًـــاؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَمْ يُرِدِ اللّٰهُ اَنْ يُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ لَهُمْ فِىْ الدُّنْيَا خِزْىٌ ۚۖ وَّلَهُمْ فِىْ الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ தூதரே لَا يَحْزُنْكَ உமக்குக் கவலையூட்ட வேண்டாம் الَّذِيْنَ எவர்கள் يُسَارِعُوْنَ தீவிரம்காட்டுகிறார்கள் فِى الْكُفْرِ நிராகரிப்பில் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاَ فْوَاهِهِمْ தங்கள் வாய்களால் وَلَمْ تُؤْمِنْ இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை قُلُوْبُهُمْ ۛۚ அவர்களுடைய உள்ளங்கள் وَمِنَ இன்னும் இருந்து الَّذِيْنَ எவர்கள் هَادُوْا ۛۚ யூதராகி விட்டார்கள் سَمّٰعُوْنَ அதிகம் செவிமடுக்கிறார்கள் لِلْكَذِبِ பொய்யை سَمّٰعُوْنَ அதிகம் செவிமடுக்கிறார்கள் لِقَوْمٍ கூட்டத்திற்காக اٰخَرِيْنَۙ மற்றொரு لَمْ يَاْتُوْكَؕ அவர்கள் வரவில்லை / உம்மிடம் يُحَرِّفُوْنَ மாற்றுகின்றனர் الْـكَلِمَ வசனங்களை مِنْۢ بَعْدِ இருந்து مَوَاضِعِهٖۚ அவற்றின் இடங்கள் يَقُوْلُوْنَ கூறுகின்றனர் اِنْ اُوْتِيْتُمْ நீங்கள் கொடுக்கப்பட்டால் هٰذَا இதை فَخُذُوْهُ அதை எடுங்கள் وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ நீங்கள் கொடுக்கப்படவில்லையெனில்/அதை فَاحْذَرُوْا ؕ எச்சரிக்கையாக இருங்கள் وَمَنْ எவர் يُّرِدِ நாடினான் اللّٰهُ அல்லாஹ் فِتْنَـتَهٗ சோதிக்க/அவரை فَلَنْ تَمْلِكَ உரிமை பெறமாட்டீர் لَهٗ அவருக்காக مِنَ விடம் اللّٰهِ அல்லாஹ் شَيْــٴًـــاؕ எதையும் اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் لَمْ يُرِدِ நாடவில்லை اللّٰهُ அல்லாஹ் اَنْ يُّطَهِّرَ அவன்பரிசுத்தமாக்க قُلُوْبَهُمْ ؕ உள்ளங்களை / அவர்களுடைய لَهُمْ அவர்களுக்கு فِىْ الدُّنْيَا இம்மையில் خِزْىٌ ۚۖ இழிவு وَّ இன்னும் لَهُمْ அவர்களுக்கு فِىْ الْاٰخِرَةِ மறுமையில் عَذَابٌ வேதனை عَظِيْمٌ பெரிய
5:41. தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர்; மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி “இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; அதை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள்; மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர்; இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
5:41. (நம்) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உமக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் மட்டும் ‘‘நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்களே தவிர, அவர்களுடைய உள்ளங்கள் (அதை) ஒப்புக் கொள்ளவில்லை. (அவ்வாறே) யூதர்(களிலும் சிலருண்டு. அவர்)கள் பொய்(யான விஷயங்)களையே (ஆவலோடு) அதிகமாகக் கேட்கின்றனர். மேலும், (இதுவரை) உங்களிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு இவற்றை அறிவிப்பதற்)காகவும், (விஷமத்தனமான வார்த்தைகளையே) அதிகமாகக் கேட்கின்றனர். அவர்கள் (வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தத்திலிருந்து புரட்டி (இவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன கட்டளைக் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கா விட்டால் (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரையும் கஷ்டத்திற்குள்ளாக்க விரும்பினால் அவருக்காக அல்லாஹ்விடம் எதையும் செய்ய நீர் ஆற்றல் பெறமாட்டீர். இவர்களின் உள்ளங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் விரும்பவேயில்லை. இவர்களுக்கு, இம்மையில் இழிவும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு.
5:41. தூதரே! நிராகரிப்பில் முனைப்புடன் இருக்கின்றவர்கள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள், “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று வாயளவில் கூறிவிட்டு, உள்ளத்தில் நம்பிக்கை கொள்ளாதவர்களாயினும் சரி, அல்லது யூதர்களைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும் சரி! அவர்களின் நிலை எவ்வாறு உள்ளதென்றால் பொய்யுரைகளை அதிகமாகச் செவிமடுக்கின்றார்கள்; உங்களிடம் என்றுமே வந்திராத மற்றவர்களுக்காக இரகசியங்களைத் துப்பறிந்து கொண்டு திரிகின்றார்கள். இறைவேதத்தின் சொற்களை அவற்றிற்குரிய சரியான இடங்கள் வரையறுக்கப்பட்டிருக்க, அவற்றின் உண்மையான பொருளிலிருந்து மாற்றுகின்றார்கள். மேலும், அவர்கள் மக்களிடம் “உங்களுக்கு இன்ன கட்டளை கொடுக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லாவிடில் ஏற்க மறுத்து விடுங்கள்” என்று கூறுகின்றார்கள். ஒருவனைக் குழப்பத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டானாகில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்ற உம்மால் முடியாது. இவர்களுடைய உள்ளங்களைத் தூய்மை செய்ய அல்லாஹ் நாடவில்லை. இவர்களுக்கு இவ்வுலகிலும் இழிவுதான்; மறுமையிலும் கடும் தண்டனைதான் இருக்கின்றது.
5:41. (நம்முடைய தூதரே) அவர்களது இதயங்கள் விசுவாசங் கொள்ளாதிருக்க தங்களது வாய்களால் விசுவாசங்கொண்டோம் என்று கூறியோர்களிலிருந்தும், இன்னும் யூதர்களாகி விட்டவர்களிலிருந்தும் நிராகரிப்பில் விரைந்து சென்று கொண்டிருப்போர்கள் உமக்குக் கவலையைத்தர வேண்டாம், (அத்தகையோர்) பொய்யானவற்றையே (ஆவலோடு அதிகமாகக் கேட்கின்றார்கள், (இதுவரையில்) உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்கு இவைகளை அறிவிப்பதற்காகவும் அதிகமாக (செவிகொடுத்து)க் கேட்கின்றவர்கள், அவர்கள் (வேத) வசனங்களை, அவற்றின் உரிய இடங்களிலிருந்து மாற்றி (விட்டு இவர்களிடம்) “உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன)துகொடுக்கப்பட்டால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், அது உங்களுக்குக் கொடுக்கப்படாவிடில், (அதிலிருந்து விலகி) எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்” என்று கூறுகின்றனர், மேலும், அல்லாஹ் எவருடைய வழிகேட்டை நாடுகிறானோ அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் சக்திபெறமாட்டீர், இத்தகையோர்தான் - அவர்களின் இதயங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் நாடவில்லை, இவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு, மறுமையில் இவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு.
5:42 سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَ كّٰلُوْنَ لِلسُّحْتِؕ فَاِنْ جَآءُوْكَ فَاحْكُمْ بَيْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ ۚ وَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَّضُرُّوْكَ شَيْــٴًـــا ؕ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
سَمّٰعُوْنَ அதிகம் செவிமடுக்கிறார்கள் لِلْكَذِبِ பொய்யை اَ كّٰلُوْنَ அதிகம் விழுங்குகிறார்கள் لِلسُّحْتِؕ ஆகாத செல்வத்தை فَاِنْ جَآءُوْكَ இவர்கள் உம்மிடம் வந்தால் فَاحْكُمْ தீர்ப்பளிப்பீராக بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் اَوْ அல்லது اَعْرِضْ புறக்கணிப்பீராக عَنْهُمْ ۚ அவர்களை وَاِنْ تُعْرِضْ நீர் புறக்கணித்தால் عَنْهُمْ அவர்களை فَلَنْ ஒருபோதும் முடியாது يَّضُرُّوْكَ அவர்கள் உமக்கு கெடுதி செய்ய شَيْــٴًـــا ؕ கொஞ்சமும் وَاِنْ حَكَمْتَ நீர் தீர்ப்பளித்தால் فَاحْكُمْ தீர்ப்பளிப்பீராக بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِالْقِسْطِ ؕ நீதமாக اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُقْسِطِيْنَ நீதவான்களை
5:42. அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
5:42. இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்கின்றனர் (பொய்யான விஷயங்களையே அதிகம் பின்பற்றுகின்றனர்). ஆகாத பொருள்களையே அதிகமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் (ஒரு நியாயத்திற்காக) உம்மிடம் வரும் சமயத்தில் அவர்களுக்கிடையில் நீங்கள் (நீதமாக) தீர்ப்பளிப்பீராக அல்லது (தீர்ப்பளிக்காது) அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டாலும், அவர்கள் உமக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அவர்களுக்கு இடையில் நீர் தீர்ப்பளித்தால், நீதமாகவே தீர்ப்பளிப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கிறான்.
5:42. அவர்கள், பொய்யுரைகளைச் செவியேற்பவர்களும் தடுக்கப்பட்ட பொருள்களை அதிகம் உண்பவர்களுமாவார்கள். எனவே, அவர்கள் உம்மிடம் (தமது வழக்குகளைச் சமர்ப்பிக்க) வந்தால் விரும்பினால் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவதற்கும், அல்லது மறுத்து விடுவதற்கும் உமக்கு உரிமை உண்டு; நீர் மறுத்து விட்டால் அவர்களால் எந்தத் தீங்கும் ஒருபோதும் உமக்குச் செய்து விட முடியாது. மேலும், தீர்ப்பு வழங்குவீராயின் அவர்களிடையே நீதியைக் கொண்டே தீர்ப்பு வழங்குவீராக! திண்ணமாக, அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.
5:42. (அன்றி இவர்கள்) பொய்யையே அதிகமாக செவிமடுக்கின்றார்கள் – பாவமான (தடுக்கப்பட்ட)தையே அதிகமாக உண்பவர்கள், ஆகவே, அவர்கள் (தீர்ப்புத்தேடி) உம்மிடம் வந்தார்களானால், அவர்களுக்கிடையில், தீர்ப்பளிப்பீராக! அல்லது அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! நீர், அவர்களைப் புறக்கணித்துவிட்டாலும் அவர்கள் யாதொரு தீங்கும் ஒருபோதும் உமக்குச் செய்ய முடியாது, இன்னும், நீர் தீர்ப்பளித்தால் நீதியைக்கொண்டு அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக! (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களை நேசிக்கின்றான்.
5:43 وَكَيْفَ يُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰٮةُ فِيْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ ؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ
وَكَيْفَ எவ்வாறு يُحَكِّمُوْنَكَ தீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்/உம்மை وَعِنْدَ இருக்க / இடம் هُمُ அவர்கள் التَّوْرٰٮةُ தவ்றாத் فِيْهَا அதில் حُكْمُ சட்டம் اللّٰهِ அல்லாஹ்வின் ثُمَّ பிறகு يَتَوَلَّوْنَ திரும்புகின்றனர் مِنْۢ بَعْدِ பின்னர் ذٰ لِكَ ؕ அதற்கு وَمَاۤ இல்லை اُولٰٓٮِٕكَ இவர்கள் بِالْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
5:43. எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது; அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது; எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுவார்கள்; இவர்கள் முஃமின்களே அல்லர்.
5:43. (எனினும் நபியே!) இவர்கள் உம்மை (தங்களுக்குத்) தீர்ப்பு கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? (ஏனென்றால்,) இவர்களிடத்திலோ தவ்றாத் என்னும் வேதம் இருக்கிறது. அதில் அல்லாஹ்வுடைய கட்டளையும் இருக்கிறது. அவ்வாறிருந்தும் அதை இவர்கள் புறக்கணித்துவிட்டனர். ஆகவே, (அதையும்) இவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.
5:43. மேலும், உம்மை நீதிபதியாக அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவர்களிடமோ அல்லாஹ்வின் சட்டங்கள் அடங்கிய தவ்ராத் இருந்த போதிலும் அவர்கள் அதனைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்களுக்கு நம்பிக்கை என்பதே இல்லை.
5:43. மேலும் (நபியே!) அவர்கள் உம்மைத் தங்களுக்கு)த் தீர்ப்புக் கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? அவர்களிடத்திலோ, ‘தவ்றாத்’ என்னும் வேதம் இருக்கின்றது. அதில் அல்லாஹ்வுடைய சட்டமும் இருக்கின்றது; (அவ்வாறிருந்தும்) பின்னர் அதனை அதற்குப்பிறகு அவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள், மேலும், (அதனை) அவர்கள் விசுவாசிக்கின்றவர்களல்லர்.
5:44 اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰٮةَ فِيْهَا هُدًى وَّنُوْرٌ ۚ يَحْكُمُ بِهَا النَّبِيُّوْنَ الَّذِيْنَ اَسْلَمُوْا لِلَّذِيْنَ هَادُوْا وَ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَيْهِ شُهَدَآءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِىْ ثَمَنًا قَلِيْلًا ؕ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنَا இறக்கினோம் التَّوْرٰٮةَ தவ்றாத்தை فِيْهَا அதிலே هُدًى நேர்வழி وَّنُوْرٌ ۚ இன்னும் ஒளி يَحْكُمُ தீர்ப்பளிப்பார்(கள்) بِهَا அதைக் கொண்டே النَّبِيُّوْنَ நபிமார்கள் الَّذِيْنَ எவர்கள் اَسْلَمُوْا முற்றிலும் பணிந்தனர் لِلَّذِيْنَ எவர்களுக்கு هَادُوْا யூதராகி விட்டனர் وَ الرَّبَّانِيُّوْنَ இன்னும் குருமார்கள் وَالْاَحْبَارُ இன்னும் பண்டிதர்கள் بِمَا எதன் காரணமாக اسْتُحْفِظُوْا காக்கும்படி கோரப்பட்டார்கள் مِنْ كِتٰبِ வேதத்தை اللّٰهِ அல்லாஹ்வின் وَكَانُوْا இன்னும் இருந்தார்கள் عَلَيْهِ அதன் மீது شُهَدَآءَ ۚ சாட்சியாளர்களாக فَلَا تَخْشَوُا ஆகவே அஞ்சாதீர்கள் النَّاسَ மக்களுக்கு وَاخْشَوْنِ எனக்கு அஞ்சுங்கள் وَلَا تَشْتَرُوْا வாங்காதீர்கள் بِاٰيٰتِىْ என் வசனங்களுக்குப் பகரமாக ثَمَنًا கிரயத்தை قَلِيْلًا ؕ சொற்பமானது وَمَنْ எவர் لَّمْ يَحْكُمْ தீர்ப்பளிக்கவில்லை بِمَاۤ اَنْزَلَ இறக்கியதைக்கொண்டு اللّٰهُ அல்லாஹ் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْكٰفِرُوْنَ நிராகரிப்பவர்கள்
5:44. நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
5:44. ‘தவ்றாத்' (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கிவைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது; ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ்வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். மேலும், அவர்கள்)அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே!
5:44. திண்ணமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழி காட்டுதலும் ஒளியும் இருந்தது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் அடிபணிந்த நபிமார்கள் அனைவரும் அதைக் கொண்டே இந்த யூதர்(களின் விவகாரங்)களுக்குத் தீர்ப்பளித்து வந்தனர். அவ்வாறே ரப்பானிகளும், அஹ்பாரும்* (அதனைக் கொண்டே தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்)! ஏனெனில், அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். மேலும், அதற்கு அவர்கள் சாட்சிகளாகவுமிருந்தார்கள். எனவே (யூதக் கூட்டத்தாரே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்! மேலும், என்னுடைய திருவசனங்களை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள்! எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்பத் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்.
5:44. நிச்சயமாக நாம் தவ்றாத்தை இறக்கி வைத்தோம், அதில் நேர்வழியும் பிரகாசமுமிருக்கின்றது, (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க நபிமார்களும், (யூதர்களுடைய பண்டிதர்களாகிய) ‘ரிப்பிய்யூன்’களும், (குருமார்களாகிய) ‘அஹ்பார்’ களும், அல்லாஹ்வுடைய வேதத்தைப் பாதுகாக்க பொறுப்புக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதாலும், அதற்கு சாட்சிகளாக அவர்கள் இருந்தார்கள் என்பதாலும் அதனைக் கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பளித்து வந்தார்கள், எனவே, (விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் மனிதர்களுக்கு பயப்பட வேண்டாம், எனக்கே பயப்படுங்கள், என் வசனங்களுக்குப் பகரமாக சொற்பக் கிரயத்தையும் வாங்காதீர்கள், மேலும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் தாம் நிராகரிப்பவர்களாவர்.
5:45 وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِۙ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌؕ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ؕ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
وَكَتَبْنَا இன்னும் விதித்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது فِيْهَاۤ அதில் اَنَّ நிச்சயமாக النَّفْسَ உயிர் بِالنَّفْسِۙ உயிருக்குப் பதிலாக وَالْعَيْنَ இன்னும் கண் بِالْعَيْنِ கண்ணுக்குப் பதிலாக وَالْاَنْفَ இன்னும் மூக்கு بِالْاَنْفِ மூக்குக்குப் பதிலாக وَالْاُذُنَ இன்னும் காது بِالْاُذُنِ காதுக்குப் பதிலாக وَالسِّنَّ இன்னும் பல் بِالسِّنِّۙ பல்லுக்குப் பதிலாக وَالْجُرُوْحَ இன்னும் காயங்கள் قِصَاصٌؕ பழிவாங்கப்படும் فَمَنْ எவர் تَصَدَّقَ மன்னிப்பார் بِهٖ அதை فَهُوَ அது كَفَّارَةٌ பரிகாரமாகும் لَّهٗ ؕ அவருக்கு وَمَنْ எவர்கள் لَّمْ يَحْكُمْ தீர்ப்பளிக்கவில்லை بِمَاۤ اَنْزَلَ இறக்கியதைக்கொண்டு اللّٰهُ அல்லாஹ் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள்
5:45. அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!.
5:45. அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: ‘‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்கும் (காயமாக) நிச்சயமாக பழி வாங்கப்படும்'' என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) நன்மைக்காக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீய செயலு)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக்கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்!
5:45. அ(த் தவ்ராத்)தில் யூதர்கள் மீது “உயிருக்குப் பதில் உயிரும், கண்ணுக்குப் பதில் கண்ணும், மூக்குக்குப் பதில் மூக்கும், காதுக்குப் பதில் காதும், பல்லுக்குப் பதில் பல்லும் (இதே போன்று) காயங்களுக்கும் சமமான முறையில் பழிவாங்கப்படும்” என்று நாம் விதியாக்கியிருந்தோம். ஆயினும், யாரேனும் பழிவாங்காமல் மன்னித்து விட்டுவிடுவாராகில், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள்.
5:45. மேலும், உயிருக்குப் பதிலாக உயிரும், கண்ணுக்குப் பதிலாக கண்ணும், மூக்குக்குப் பதிலாக மூக்கும், காதுக்குப் பதிலாக காதும், பல்லுக்குப் பதிலாகப் பல்லும் எனவும், காயங்களுக்கும் (அதற்கு நிகரான) பழி வாங்குதல் உண்டு என்பதாகவும், அவர்கள்மீது அவர்களுடைய வேதமாகிய ‘தவ்றாத்’தில் நாம் விதித்திருந்தோம், பின்னர், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) தானமாக விட்டுவிட்டால் அது அவருடைய தீவினைக்குப் பரிகாரமாகிவிடும், இன்னும், எவர் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர்தாம் அநியாயக்காரர்கள் ஆவர்.
5:46 وَقَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِعِيْسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰٮةِ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ فِيْهِ هُدًى وَّنُوْرٌ ۙ وَّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰٮةِ وَهُدًى وَّمَوْعِظَةً لِّـلْمُتَّقِيْنَ ؕ
وَقَفَّيْنَا தொடரச்செய்தோம் عَلٰٓى اٰثَارِهِمْ அவர்களுடைய அடிச்சுவடுகளில் بِعِيْسَى ஈஸாவை ابْنِ மகன் مَرْيَمَ மர்யமுடைய مُصَدِّقًا உண்மைப்படுத்துபவராக لِّمَا எதை بَيْنَ يَدَيْهِ தனக்கு முன் مِنَ இருந்து التَّوْرٰٮةِ தவ்றாத் وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்குக் கொடுத்தோம் الْاِنْجِيْلَ இன்ஜீலை فِيْهِ அதில் هُدًى நேர்வழி وَّنُوْرٌ ۙ இன்னும் ஒளி وَّ مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியது لِّمَا بَيْنَ يَدَيْهِ எதை/தனக்கு முன் مِنَ التَّوْرٰٮةِ தவ்றாத்திலிருந்து وَهُدًى நேர்வழியாக وَّمَوْعِظَةً இன்னும் ஓர் உபதேசமாக لِّـلْمُتَّقِيْنَ ؕ அஞ்சுபவர்களுக்கு
5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
5:46. (முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பிவைத்தோம். அவர் தன்முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அவருக்கு ‘இன்ஜீல்' என்னும் வேதத்தையும் நாம் அருளினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைக்கிறது. இறையச்சமுடையவர்களுக்கு அது ஒரு நல்லுபதேசமாகவும், நேரான வழியாகவும் இருக்கிறது.
5:46. பிறகு அந்த நபிமார்களின் அடிச்சுவடுகளில் மர்யம் உடைய குமாரர் ஈஸாவை நாம் பின்தொடரச் செய்தோம். தவ்ராத்தி(ன் அறிவுரைகளி)ல் எவை அவர்முன் (எஞ்சி) இருந்தனவோ அவற்றை அவர் மெய்ப்படுத்துபவராய் இருந்தார். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. இன்னும் தவ்ராத்தி(ன் அறிவுரைகளி)ல் எவை அப்போது எஞ்சியிருந்தனவோ அவற்றை மெய்யென உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அது திகழ்ந்தது. மேலும், இறையச்சமுடையவர்களுக்கு முற்றிலும் நேர்வழி காட்டக் கூடியதாகவும், நல்லுரை யாகவும் அது இருந்தது.
5:46. இன்னும், (முன்சென்ற நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளின் மீதே மர்யமுடைய மகன் ஈஸாவையும், அவருக்கு முன்பிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக நாம் தொடரச் செய்தோம், அன்றியும், அவருக்கு இன்ஜீலை நாம் கொடுத்தோம், அதிலும் நேர்வழியும், பிரகாசமும் இருந்தன, அது அவருக்கு முன்பிருந்த தவ்றாத்தை உண்மையாக்குவதாகவும், பயபக்தியுடையோருக்கு அது ஒரு நேர் வழி(காட்டி)யாகவும், நல்லுபதேசமாகவும் இருந்தது.
5:47 وَلْيَحْكُمْ اَهْلُ الْاِنْجِيْلِ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فِيْهِؕ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ
وَلْيَحْكُمْ தீர்ப்பளிக்கவும் اَهْلُ الْاِنْجِيْلِ இன்ஜீலுடையவர்கள் بِمَاۤ இறக்கியதைக்கொண்டு اَنْزَلَ اللّٰهُ அல்லாஹ் فِيْهِؕ அதில் وَمَنْ எவர்கள் لَّمْ يَحْكُمْ தீர்ப்பளிக்கவில்லை بِمَاۤ எதைக் கொண்டு اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْفٰسِقُوْنَ பாவிகள்
5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.
5:47. ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான்.
5:47. மேலும், இன்ஜீல் அருளப்பட்டவர்கள், அதில் எந்தச் சட்டத்தை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அந்தச் சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கட்டும் (என்பதே நம் கட்டளையாக இருந்தது)! மேலும், எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள்தாம் ஃபாஸிக்கள் பாவிகளாவர்.
5:47. இன்னும், (உண்மையான) இன்ஜீலையுடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு, தீர்ப்பளிக்கவும், இன்னும் எவர், அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு, தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் - அவர்கள் பாவிகளாவர்.
5:48 وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَـقِّؕ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَـعَلَـكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ فَاسْتَبِقُوا الْخَـيْـرٰتِؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَۙ
وَاَنْزَلْنَاۤ இன்னும் இறக்கினோம் اِلَيْكَ உமக்கு الْكِتٰبَ இவ்வேதத்தை بِالْحَـقِّ உண்மையுடன் கூடிய مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியதாக لِّمَا بَيْنَ يَدَيْهِ தனக்கு முன்னுள்ளதை مِنَ இருந்து الْكِتٰبِ வேதம் وَمُهَيْمِنًا இன்னும் பாதுகாக்கக் கூடியதாக عَلَيْهِ அதை فَاحْكُمْ ஆகவே தீர்ப்பளிப்பீராக! بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِمَاۤ اَنْزَلَ இறக்கியதைக் கொண்டே اللّٰهُ அல்லாஹ் وَلَا تَتَّبِعْ பின்பற்றாதீர் اَهْوَآء விருப்பங்களை هُمْ அவர்களுடைய عَمَّا எதைவிட்டு جَآءَكَ வந்தது/உமக்கு مِنَ الْحَـقِّؕ உண்மையிலிருந்து لِكُلٍّ ஒவ்வொருவருக்கும் جَعَلْنَا ஏற்படுத்தினோம் مِنْكُمْ உங்களில் شِرْعَةً ஒரு மார்க்கத்தை وَّمِنْهَاجًا ؕ இன்னும் ஒரு வழியை وَلَوْ شَآءَ நாடி இருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَجَـعَلَـكُمْ உங்களை ஆக்கியிருப்பான் اُمَّةً ஒரு சமுதாயமாக وَّاحِدَةً ஒரே وَّلٰـكِنْ எனினும் لِّيَبْلُوَكُمْ அவன் உங்களை சோதிப்பதற்காக فِىْ مَاۤ اٰتٰٮكُمْ உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் فَاسْتَبِقُوا ஆகவே முந்துங்கள் الْخَـيْـرٰتِؕ நன்மைகளில் اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் جَمِيْعًا அனைவரும் فَيُنَبِّئُكُمْ அறிவிப்பான்/உங்களுக்கு بِمَا எதை كُنْتُمْ இருந்தீர்கள் فِيْهِ அதில் تَخْتَلِفُوْنَۙ முரண்படுகிறீர்கள்
5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
5:48. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உம் மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கிறது. அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ் (உமக்கு) இறக்கிய இதைக்கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய மண விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் (எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, (இவற்றில் உயர்வான இஸ்லாம் கூறுகின்ற) நன்மைகளுக்கு விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம்தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கிறது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களோ அதை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான்.
5:48. பிறகு (நபியே!) சத்தியத்தைத் தாங்கி வந்திருக்கும் இவ்வேதத்தை உம்மளவில் நாம் அனுப்பினோம். இது, அல்கிதாபின் அறிவுரைகளில் தன் முன்னே எவை எஞ்சி நிற்கின்றனவோ அவற்றை உறுதிப்படுத்தக்கூடியதாயும், அவற்றைப் பாதுகாக்கக் கூடியதாயுமிருக்கின்றது; எனவே, நீர் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப மக்களின் விவகாரங்களில் தீர்ப்பளிப்பீராக! மேலும், உம்மிடம் வந்திருக்கும் சத்தியத்தைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர் நாம் (மனிதர்களாகிய) உங்களில் ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஷரீஅத்தையும் ஒரு செயல்வழியையும் அமைத்துத் தந்தோம். அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாகவும் ஆக்கியிருக்க முடியும்! ஆனால் அவன் உங்களுக்கு அளித்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காகத்தான் (இவ்வாறு செய்தான்). எனவே நன்மைகளில் ஒருவரையொருவர் முந்துவதற்கு முயற்சி செய்யுங்கள்! இறுதியில் நீங்கள் எல்லாரும் அல்லாஹ்வின் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கின்றது. பிறகு நீங்கள் எவற்றைக் குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அவற்றின் உண்மை நிலையை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.
5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கிவைத்துள்ளோம், இது வேதத்திலிருந்து தனக்கு முன்னுள்ளவற்றை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்பதாகவுமிருக்கின்றது, ஆகவே, அல்லாஹ் (உமக்கு) இறக்கிவைத்ததைக் கொண்டு அவர்களுக்கிடையில் (நபியே!) நீர் தீர்ப்பளிப்பீராக!) இன்னும் உண்மையிலிருந்து உம்மிடம் வந்ததை புறக்கணித்துவிட்டு, அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றாதீர், உங்களில் ஒவ்வொருவ(குப்பா)ருக்கும், மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஆக்கினோம், அல்லாஹ் நாடினால், உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான், எனினும் உங்களுக்கு அவன் கொடுத்ததில், எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு அவன் செய்திருக்கின்றான்). ஆகவே நன்மைகளின் பக்கம் முந்திக்கொள்ளுங்கள், அல்லாஹ்வின் பக்கமே உங்களனைவரின் திரும்பிச் செல்லுதலுமிருக்கின்றது, அப்பொழுது நீங்கள் எதில் மாறுபட்டுக் கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான்.
5:49 وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَ عَنْۢ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَؕ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّصِيْبَهُمْ بِبَـعْضِ ذُنُوْبِهِمْؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ
وَاَنِ احْكُمْ தீர்ப்பளிப்பீராக بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِمَاۤ اَنْزَلَ இறக்கியதைக்கொண்டு اللّٰهُ அல்லாஹ் وَلَا تَتَّبِعْ பின்பற்றாதீர் اَهْوَآءَهُمْ அவர்களின் விருப்பங்களை وَاحْذَرْهُمْ அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக اَنْ يَّفْتِنُوْكَ உம்மை அவர்கள் திருப்பிவிடுவது عَنْۢ بَعْضِ சிலவற்றிலிருந்து مَاۤ எது اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் اِلَيْكَؕ உமக்கு فَاِنْ تَوَلَّوْا அவர்கள் திரும்பினால் فَاعْلَمْ அறிந்து கொள்வீராக اَنَّمَا எல்லாம் يُرِيْدُ நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் اَنْ يُّصِيْبَهُمْ அவர்களை சோதிப்பதைத்தான் بِبَـعْضِ சிலவற்றின் ذُنُوْبِهِمْؕ அவர்களுடைய பாவங்கள் وَاِنَّ كَثِيْرًا நிச்சயமாக அதிகமானோர் مِّنَ النَّاسِ மனிதர்களில் لَفٰسِقُوْنَ பாவிகள்தான்
5:49. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
5:49. (நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்தவற்றைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றாதீர். உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்தவற்றில் எதிலிருந்தும் உம்மை அவர்கள் திருப்பிவிடாதபடியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருப்பீராக. (உமது தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீர் அறிந்துகொள்வீராக, அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகிறான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகள்தான்.
5:49. எனவே (நபியே!) அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள்; அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள்! அவர்கள் உம்மைக் குழப்பத்திலாழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை) இம்மியளவும் நழுவச் செய்திடா வண்ணம் நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! பிறகும் அவர்கள் இதனைப் புறக்கணித்தார்களாயின், அல்லாஹ் அவர்களுடைய சில பாவங்களின் காரணமாக அவர்களைத் துன்பத்திலாழ்த்திடவே நாடிவிட்டான் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக அந்த மக்களில் பெரும்பாலோர் வரம்பு மீறியவர்களாவர்.
5:49. மேலும், (நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு, நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக! நீர் அவர்களுடைய மனஇச்சைகளைப் பின்பற்றியும் விடாதீர், அன்றியும், உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்ததில் சிலவற்றைவிட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடியும் நீர் அவர்களைப்பற்றி எச்சரிக்கையாக இருப்பீராக! (உம்முடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் அப்போது அல்லாஹ் நாடுவதெல்லாம் அவர்களின் சில பாவங்களின் காரணமாக, அவர்களை அவன் (தண்டிக்க) பிடிப்பதைத்தான் என்பதை நீர் அறிந்து கொள்வீராக, மேலும், நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.
5:50 اَفَحُكْمَ الْجَـاهِلِيَّةِ يَـبْغُوْنَؕ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّـقَوْمٍ يُّوْقِنُوْنَ
اَفَحُكْمَ சட்டத்தையா? الْجَـاهِلِيَّةِ அறியாமைக்காலத்தின் يَـبْغُوْنَؕ தேடுகின்றனர் وَمَنْ யார் اَحْسَنُ மிக அழகானவன் مِنَ விட اللّٰهِ அல்லாஹ்வை حُكْمًا சட்டத்தால் لِّـقَوْمٍ சமுதாயத்திற்கு يُّوْقِنُوْنَ உறுதி கொள்கின்றனர்
5:50. அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
5:50. அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, (மறுமையை) உறுதி கொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?
5:50. (அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்களென்றால்) பிறகு ஜாஹிலியத்தின்* தீர்ப்பினையா அவர்கள் விரும்புகிறார்கள்! ஆயினும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, அல்லாஹ்வைவிட நல்ல தீர்ப்பு வழங்கக்கூடியவன் யார்?
5:50. அறியாமை காலத்துத் தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர்? உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்தார்க்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வைவிடவும் மிக்க அழகானவன் யார்?
5:51 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ؔۘ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَتَّخِذُوا ஆக்காதீர்கள் الْيَهُوْدَ யூதர்களை وَالنَّصٰرٰۤى இன்னும் கிறித்தவர்களை اَوْلِيَآءَ நண்பர்களாக بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلِيَآءُ நண்பர்கள் بَعْضٍؕ சிலரின் وَمَنْ எவர் يَّتَوَلَّهُمْ நட்புகொள்வார்/அவர்களுடன் مِّنْكُمْ உங்களில் فَاِنَّهٗ நிச்சயமாக அவர் مِنْهُمْؕ அவர்களைச் சார்ந்தவர் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள்
5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
5:51. நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்த மாட்டான்.
5:51. இறைநம்பிக்கை கொண்டவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உங்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் சிலர் சிலருக்கு நெருங்கிய நண்பர்களாய் இருக்கின்றனர். மேலும், உங்களில் எவரேனும் அவர்களைத் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கிக் கொண்டால், அவரும் அவர்களைச் சார்ந்தவராகவே கணிக்கப்படுவார். திண்ணமாக, அல்லாஹ் அக்கிரமக்காரர்களுக்கு நேர்வழி காட்டுவதில்லை.
5:51. விசுவாசங்கொண்டோரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்களில் சிலர், சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர், உங்களில் எவரேனும் அவர்களைத் (தனக்கு)ப் பாதுகாவலராக்கிக் கொண்டால், அப்போது நிச்சயமாக அவரும், அவர்களில் உள்ளவர்தாம், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார சமூகத்தார்க்கு நேர்வழிகாட்ட மாட்டான்.
5:52 فَتَـرَى الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يُّسَارِعُوْنَ فِيْهِمْ يَقُوْلُوْنَ نَخْشٰٓى اَنْ تُصِيْبَـنَا دَآٮِٕرَةٌ ؕ فَعَسَى اللّٰهُ اَنْ يَّاْتِىَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَيُصْبِحُوْا عَلٰى مَاۤ اَسَرُّوْا فِىْۤ اَنْفُسِهِمْ نٰدِمِيْنَ ؕ
فَتَـرَى காண்பீர் الَّذِيْنَ எவர்களை فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் يُّسَارِعُوْنَ விரைபவர்களாக فِيْهِمْ அவர்களில் يَقُوْلُوْنَ கூறுகின்றனர் نَخْشٰٓى பயப்படுகிறோம் اَنْ تُصِيْبَـنَا எங்களைஅடைவதை دَآٮِٕرَةٌ ؕ ஆபத்து فَعَسَى ஆகலாம் اللّٰهُ அல்லாஹ் اَنْ يَّاْتِىَ வருவது بِالْفَتْحِ வெற்றியைக் கொண்டு اَوْ அல்லது اَمْرٍ ஒரு காரியம் مِّنْ இருந்து عِنْدِهٖ தன்னிடம் فَيُصْبِحُوْا ஆகிவிடுவார்கள் عَلٰى மீது مَاۤ எது اَسَرُّوْا மறைத்தார்கள் فِىْۤ اَنْفُسِهِمْ தங்கள் உள்ளங்களில் نٰدِمِيْنَ ؕ துக்கப்பட்டவர்களாக
5:52. எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
5:52. (நபியே!) உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் உள்ளவர்கள் அவர்களிடம் (தோழமை கொள்ளவே) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! மேலும், ‘‘(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு ஓர் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசமான என்னத்)தைப் பற்றி கவலை அடைவார்கள்.
5:52. எவருடைய உள்ளங்களில் நயவஞ்சகப் பிணி உள்ளதோ அத்தகையோர் அவர்களிடையிலேயே முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீர் காண்கின்றீர். “ஏதேனுமொரு துன்பம் எங்களைப் பிடித்து விடுமோ என்று நாங்கள் அஞ்சுகின்றோம்” என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், அல்லாஹ் தன்னிடமிருந்து (தீர்க்கமான) வெற்றியையோ ஏதேனுமோர் உதவியையோ அளித்துவிடக்கூடும்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்த (நயவஞ்சகத்)தைக் குறித்து வருந்துவார்கள்.
5:52. ஆகவே (நபியே!) எவர்களுடைய இதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கின்றதோ அத்தகையவர்களை-அவர்களிடம் (நட்புகொள்ள) அவர்கள் விரைந்து செல்வதை நீர் காண்பீர், (அன்றி “நாங்கள் அவர்களை விரோதித்துக் கொண்டால் எங்களுக்கு யாதோர் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகின்றோம்” என்று அவர்கள் கூறுகின்றனர், ஆகவே, அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதி சீச்கிரத்தில் உங்களுக்கு) கொண்டு வந்துவிடலாம், அது சமயம் அவர்கள் தங்கள் மனங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதப்படுகிறவர்களாக ஆகிவிடுவார்கள்.
5:53 وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَهٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْۙ اِنَّهُمْ لَمَعَكُمْ ؕ حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِيْنَ
وَيَقُوْلُ இன்னும் கூறுவார்(கள்) الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்கள் اَهٰٓؤُلَاۤءِ இவர்கள்தானா الَّذِيْنَ எவர்கள் اَقْسَمُوْا சத்தியம்செய்தார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது جَهْدَ உறுதியாக اَيْمَانِهِمْۙ தங்கள் சத்தியங்கள் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَمَعَكُمْ ؕ உங்களுடன்தான் حَبِطَتْ அழிந்து விட்டன اَعْمَالُهُمْ அவர்களுடைய (நல்ல)செயல்கள் فَاَصْبَحُوْا ஆகவே ஆகிவிட்டனர் خٰسِرِيْنَ நஷ்டவாளிகளாக
5:53. (மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?” என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன; இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
5:53. நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?'' என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து விட்டன. ஆகவே, (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர்.
5:53. அவ்வேளை இறைநம்பிக்கை கொண்டவர்கள் வினவுவார்கள்: “நாங்களும் உங்களோடுதான் இருக்கின்றோம் என்று பேரார்வத்துடன் கூறி, அல்லாஹ்வைக் கொண்டு மிக உறுதியான முறையில் சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தாமா?” (இறுதியில்) அந்நயவஞ்சகர்களுடைய எல்லாச் செயல்களும் வீணாகி விட்டன. மேலும், அவர்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
5:53. மேலும், “நிச்சயமாக தாங்களும் உங்களுடன் இருப்பதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியமாக சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?” என விசுவாசிகள் (மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்துக்) கூறுவார்கள், இவர்களுடைய செயல்கள் அழிந்துவிட்டன, ஆகவே, (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிட்டனர்.
5:54 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ ؕ ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே مَنْ எவரும் يَّرْتَدَّ மாறுவார் مِنْكُمْ உங்களிலிருந்து عَنْ விட்டு دِيْـنِهٖ தன் மார்க்கம் فَسَوْفَ يَاْتِى கொண்டு வருவான் اللّٰهُ அல்லாஹ் بِقَوْمٍ ஒரு சமுதாயத்தை يُّحِبُّهُمْ நேசிப்பான்/அவர்களை وَيُحِبُّوْنَهٗۤ ۙ இன்னும் நேசிப்பார்கள் / அவனை اَذِلَّةٍ பணிவானவர்கள் عَلَى இடம் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் اَعِزَّةٍ கண்டிப்பானவர்கள் عَلَى الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களிடம் يُجَاهِدُوْنَ போரிடுவார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا يَخَافُوْنَ பயப்பட மாட்டார்கள் لَوْمَةَ பழிப்பை لَاۤٮِٕمٍ ؕ பழிப்பவனின் ذٰ لِكَ இது فَضْلُ அருள் اللّٰهِ அல்லாஹ்வின் يُؤْتِيْهِ அதை கொடுக்கின்றான் مَنْ يَّشَآءُ ؕ எவருக்கு/நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌ நன்கறிந்தவன்
5:54. முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
5:54. நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப் போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதை அளிக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
5:54. இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவரேனும் தனது தீனை நெறியை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்.) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்) அல்லாஹ் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்; நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
5:54. விசுவாசங்கொண்டோரே! உங்களிலிருந்து எவர் தன் மார்க்கத்தைவிட்டும் மாறிவிடுவாரானால் (அப்பொழுது அவர்களுக்குப் பகரமாக) வேறு சமூகத்தாரை அல்லாஹ் கொண்டு வருவான் .. அவன் அவர்களை நேசிப்பான், அவர்களும் அவனை நேசிப்பார்கள், அவர்கள், விசுவாசங் கொண்டவர்களிடம் இரக்கம் காட்டுபவர்கள், நிராகரிப்பவர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறவர்கள், அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவார்கள், இன்னும் பழிப்பவரின் பழிப்புக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள், இது அல்லாஹ்வின் பேரருளாகும், அவன் நாடியவர்களுக்கு இதனை அவன் கொடுக்கின்றான், மேலும், அல்லாஹ் மிக விசாலமானவன், (யாவரையும்) நன்கறிகிறவன்.
5:55 اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ
اِنَّمَا எல்லாம் وَلِيُّكُمُ உங்கள் நண்பன் اللّٰهُ அல்லாஹ் وَرَسُوْلُهٗ இன்னும் அவனுடைய தூதர் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوا நம்பிக்கை கொண்டார்கள் الَّذِيْنَ எவர்கள் يُقِيْمُوْنَ நிலை நிறுத்துகின்றனர் الصَّلٰوةَ தொழுகையை وَيُؤْتُوْنَ இன்னும் கொடுக்கின்றனர் الزَّكٰوةَ ஸகாத்தை وَهُمْ رَاكِعُوْنَ அவர்கள் தலைகுனிவார்கள்
5:55. நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.
5:55. அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலை சாய்த்தும் வருகின்றனரோ இவர்கள்தான் நிச்சயமாக உங்கள் (உண்மையான) தோழர்கள் ஆவர்.
5:55. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறை நம்பிக்கையாளர்களும்தாம் உண்மையிலேயே உங்களுக்கு உற்ற நண்பர்கள். (அந்த இறைநம்பிக்கையாளர்கள் எத்தகையோர் எனில்,) தொழுகையை நிலைநாட்டுவார்கள்; மேலும், ஜகாத்தை அளிப்பார்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப்) பணிந்து வாழ்வார்கள்.
5:55. உங்களுடைய நண்பனெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் விசுவாசங்கொண்டார்களே அவர்களும்தான், அவர்கள் எத்தகையவரெனில் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிந்தவர்களாக தொழுகையை நிறைவேற்றுவார்கள், ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.
5:56 وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَهٗ وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ
وَمَنْ எவர் يَّتَوَلَّ நேசிக்கிறார் اللّٰهَ அல்லாஹ்வை وَ رَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதரை وَالَّذِيْنَ اٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை فَاِنَّ நிச்சயமாக حِزْبَ படையினர் اللّٰهِ அல்லாஹ்வின் هُمُ அவர்கள்தான் الْغٰلِبُوْنَ வெற்றியாளர்கள்
5:56. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.
5:56. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கிறார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக ‘ஹிஸ்புல்லாக்கள்' என்னும்) அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஆவார்கள்). அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
5:56. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கிக் கொள்கின்றாரோ அவர் தெரிந்து கொள்ளட்டும்: ‘அல்லாஹ்வின் குழுவினர்தாம் வெற்றியாளர்கள்.’
5:56. அன்றியும், எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டவர்களையும், (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ – அப்பொழுது (அவர்கள்தாம், - அல்லாஹ்வின் கூட்டத்தினர் ஆவார்கள்). நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர், அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
5:57 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَـتَّخِذُوا الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْـكُفَّارَ اَوْلِيَآءَ ۚ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَـتَّخِذُوا எடுத்துக் கொள்ளாதீர்கள் الَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا எடுத்துக்கொண்டார்கள் دِيْنَكُمْ உங்கள் மார்க்கத்தை هُزُوًا பரிகாசமாக وَّلَعِبًا இன்னும் விளையாட்டாக مِّنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டவர்கள் الْكِتٰبَ வேதம் مِنْ قَبْلِكُمْ உங்களுக்குமுன்னர் وَالْـكُفَّارَ இன்னும் நிராகரிப்பவர்களை اَوْلِيَآءَ ۚ நண்பர்களாக وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
5:57. நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்களுக்குத்) தோழர்களாக(வும், பாதுகாவலர் களாகவும்) எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து)கொள்ளுங்கள். (இவர்களில் எவருக்கும் அஞ்சாதீர்கள்.)
5:57. இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் உங்களுடைய தீனை (நெறியை) கேலிக்கும் விளையாட்டுக்கும் உரித்தாக்கிக் கொண்டார்களோ அவர்களையும், மற்ற நிராகரிப்பாளர்களையும் உங்களின் உற்ற நண்பர்களாய் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாய் இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.
5:57. விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும் (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அத்தகையவர்களையும், நிராகரிப்போர்களையும் (உங்களுக்கு)த் தோழர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம், நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து) கொள்ளுங்கள்.
5:58 وَ اِذَا نَادَيْتُمْ اِلَى الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ
وَ اِذَا نَادَيْتُمْ நீங்கள் அழைத்தால் اِلَى الصَّلٰوةِ தொழுகைக்கு اتَّخَذُوْهَا அதை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர் هُزُوًا பரிகாசமாக وَّلَعِبًا ؕ இன்னும் விளையாட்டாக ذٰ لِكَ அது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَوْمٌ மக்கள் لَّا يَعْقِلُوْنَ புரிய மாட்டார்கள்
5:58. இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
5:58. நீங்கள் (மக்களைத்) தொழுகைக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்கு)அழைத்தால் அதை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே அவர்கள் (முற்றிலும்) அறிவில்லாத மக்களாக இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்!
5:58. மேலும், நீங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுத்தால், அதனை இவர்கள் கேலிக்கும் விளையாட்டுக்கும் உரியதாக எடுத்துக் கொள்கின்றார்கள். இதற்குக் காரணம்: அவர்கள் அறியாத மக்களாய் இருப்பதேயாகும்.
5:58. அன்றியும், நீங்கள் (அவர்களைத்) தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர், அது (ஏனெனில்) நிச்சயமாகவே அவர்கள் முற்றிலும் அறிவில்லாத சமூகத்தினர் என்பதினால் தான்.
5:59 قُلْ يٰۤـاَهْلَ الْـكِتٰبِ هَلْ تَـنْقِمُوْنَ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَـيْنَا وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلُ ۙ وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்களே هَلْ تَـنْقِمُوْنَ நீங்கள் வெறுக்கிறீர்களா? (பழிக்கிறீர்களா?) مِنَّاۤ எங்களை اِلَّاۤ தவிர اَنْ اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை اِلَـيْنَا எங்களுக்கு وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை مِنْ قَبْلُ ۙ முன்னர் وَاَنَّ اَكْثَرَ நிச்சயமாக அதிகமானவர்கள் كُمْ உங்களில் فٰسِقُوْنَ பாவிகள்
5:59. “வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
5:59. ‘‘வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா நீங்கள் எங்களை தண்டிக்கிறீர்கள்? (என்று நபியே! நீர் அவர்களைக் கேட்டு) நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள் (உங்களுக்குத் தகுதியான கூலி நரகம்தான்)'' என்று கூறுவீராக.
5:59. நீர் அவர்களிடம் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்களுக்கு இறக்கியருளப்பட்ட அறிவுரைகள் மீதும், இன்னும் எங்களுக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகத்தான் எங்கள் மீது நீங்கள் வெறுப்புக் காட்டுகின்றீர்கள். மேலும், உங்களில் பெரும்பாலோர் தீயவர்களாகவே இருக்கின்றீர்கள்.”
5:59. வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கி வைக்கப்பட்டவைகளையும் நாங்கள் விசுவாசங் கொண்டுள்ளோம் என்பதைத் தவிர வேறு எதற்காகவும், எங்களை (இழித்துப் பழித்து) தண்டிக்கிறீர்களா? (என்று நபியே! நீர் அவர்களைக் கேட்டு,) “நிச்சயமாக உங்களில் பெரும்பாலோர் பாவிகள்” என்று கூறுவீராக.!
5:60 قُلْ هَلْ اُنَـبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰ لِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ؕ مَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَـنَازِيْرَ وَعَبَدَ الطَّاغُوْتَ ؕ اُولٰٓٮِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَآءِ السَّبِيْلِ
قُلْ கூறுவீராக هَلْ اُنَـبِّئُكُمْ நான் உங்களுக்கு அறிவிக்கவா? بِشَرٍّ மிகக் கெட்டவனை مِّنْ விட ذٰ لِكَ இதை مَثُوْبَةً தண்டனையால் عِنْدَ اللّٰهِ ؕ அல்லாஹ்விடம் مَنْ எவர் لَّعَنَهُ சபித்தான்/அவரை اللّٰهُ அல்லாஹ் وَغَضِبَ இன்னும் கோபித்தான் عَلَيْهِ அவர்(கள்) மீது وَجَعَلَ ஆக்கினான் مِنْهُمُ அவர்களில் الْقِرَدَةَ குரங்குகளாக وَالْخَـنَازِيْرَ இன்னும் பன்றிகளாக وَعَبَدَ இன்னும் வணங்கினார்(கள்) الطَّاغُوْتَ ؕ ஷைத்தானை اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் شَرٌّ மிகக் கெட்டவர்கள் مَّكَانًا தகுதியால் وَّاَضَلُّ இன்னும் மிகவும் வழிதவறியவர்கள் عَنْ இருந்து سَوَآءِ நேரான (நடு) السَّبِيْلِ பாதை
5:60. “அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
5:60. “அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' (என்று நபியே! நீர் அவர்களிடம் கேட்டு) அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும்; எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர். நேரான வழியிலிருந்து முற்றிலும் வழி தவறியவர்கள்'' என்று நீர் கூறுவீராக.
5:60. மேலும், கூறுங்கள்: “அல்லாஹ்விடத்தில் இ(த்தீய)வர்களின் கதியைவிட இன்னும் மோசமான கதியுடையோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” எவர்களை அல்லாஹ் சபித்தானோ, எவர்கள் மீது கோபம் கொண்டானோ, மேலும் எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றினானோ மேலும் எவர்கள் தாஃகூத்துக்கு அடிபணிந்தார்களோ அத்தகையவர்கள்தாம் அவர்களைவிட மிகவும் தரங்கெட்டவர்கள்; மேலும், அவர்கள் செம்மையான பாதையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றவர்கள் ஆவர்.
5:60. “அல்லாஹ்விடம் இருக்கும் தண்டனையால் இதைவிடக் கெட்டவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் எவரை சபித்து அவர் மீது கோபமும் கொண்டு அவர்களில் (சிலரைக்) குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவரும் (அவர்களில்) ஷைத்தானை வணங்கியவரும் ஆவர், அத்தகையோர் தகுதியால் கெட்டவர்கள், அன்றியும் நேரான வழியிலிருந்தும் மிகத் தவறியவர்கள்” என்று நீர் கூறுவீராக!
5:61 وَاِذَا جَآءُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا وَقَدْ دَّخَلُوْا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوْا بِهٖؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا كَانُوْا يَكْتُمُوْنَ
وَاِذَا جَآءُوْ அவர்கள் வந்தால் كُمْ உங்களிடம் قَالُوْۤا கூறினர் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் وَقَدْ திட்டமாக دَّخَلُوْا நுழைந்தார்கள் بِالْكُفْرِ நிராகரிப்பைக் கொண்டே وَهُمْ இன்னும் அவர்கள் قَدْ திட்டமாக خَرَجُوْا வெளியேறினார்கள் بِهٖؕ அதனுடன் وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا எதை كَانُوْا இருந்தார்கள் يَكْتُمُوْنَ மறைக்கிறார்கள்
5:61. (முஃமின்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் “நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்!” என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் குஃப்ருடன் (நிராகரிப்புடன்)தான் வந்தார்கள்; இன்னும் அதனுடனேயே வெளியேறினார்கள், (நிச்சயமாக) அவர்கள் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் மிகவும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
5:61. (நம்பிக்கையாளர்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் ‘‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறுகின்றனர். எனினும் நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பை (மனதில் வைத்து)க் கொண்டே (உங்களிடம்) வந்தார்கள். நிச்சயமாக அத்துடனேயே (உங்களிடமிருந்து) அவர்கள் வெளியேறினார்கள். அவர்கள் (தங்கள் உள்ளங்களுக்குள்) மறைத்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ்தான் நன்கறிவான்.
5:61. அவர்கள் உங்களிடம் வரும்போது “நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆயினும் அவர்களோ இறைநிராகரிப்புடன்தான் வந்தார்கள்; இறைநிராகரிப்புடன்தான் திரும்பியும் சென்றார்கள். மேலும், (தம் உள்ளங்களில்) அவர்கள் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.
5:61. மேலும், விசுவாசங்கொண்டோரே! இத்தகையோராகிய (அவர்கள் உங்களிடம் வந்தால் “நாங்கள் விசுவாசங்கொண்டோம்” என்று கூறுகின்றனர், இன்னும், நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பை (மனதில் வைத்துக்) கொண்டே (உங்களிடம்) வந்தார்கள், நிச்சயமாக அதனுடனேயே (உங்கள் முன்னிருந்து) அவர்கள் வெளியேறியும் விட்டார்கள், அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பவைகளை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
5:62 وَتَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يُسَارِعُوْنَ فِى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ لَبِئْسَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
وَتَرٰى காண்பீர் كَثِيْرًا அதிகமானவர்களை مِّنْهُمْ அவர்களில் يُسَارِعُوْنَ விரைபவர்களாக فِى الْاِثْمِ பாவத்தில் وَالْعُدْوَانِ இன்னும் அநியாயம் وَاَكْلِهِمُ இன்னும் விழுங்குவது السُّحْتَ ؕ ஆகாத செல்வத்தை لَبِئْسَ கெட்டுவிட்டது مَا எது كَانُوْا இருந்தார்கள் يَعْمَلُوْنَ செய்கிறார்கள்
5:62. அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
5:62. (நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்பவை மிகத் தீயவையே!
5:62. மேலும், அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், வரம்பு மீறிய செயல்களிலும், விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீர் காணுகிறீர். அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்கள் எத்துணைத் தீமையானவை!
5:62. மேலும், (நபியே!) அவர்களில் அதிகமானோரை பாவத்திலும், பகைமையிலும் விலக்கப்பட்டதை அவர்கள் உண்ணுவதிலும், விரைந்து செல்வோராக நீர் காண்பீர்! அவர்கள் செய்துகொண்டிருப்பவை மிகக் கெட்டவையாகிவிட்டது.
5:63 لَوْلَا يَنْهٰٮهُمُ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَؕ لَبِئْسَ مَا كَانُوْا يَصْنَعُوْنَ
لَوْلَا يَنْهٰٮهُمُ அவர்களை தடை செய்ய வேண்டாமா? الرَّبَّانِيُّوْنَ குருமார்கள் وَالْاَحْبَارُ இன்னும் பண்டிதர்கள் عَنْ قَوْلِهِمُ அவர்களுடைய பேச்சிலிருந்து الْاِثْمَ பாவமான وَاَكْلِهِمُ இன்னும் அவர்கள் விழுங்குவது السُّحْتَؕ விலக்கப்பட்டதை لَبِئْسَ கெட்டுவிட்டது مَا எது كَانُوْا இருந்தார்கள் يَصْنَعُوْنَ செய்கிறார்கள்
5:63. அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
5:63. அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகள் கூறுவதையும், விலக்கப்பட்டவற்றை விழுங்குவதையும், அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பியூன்களேனும் அவர்களுடைய (பாதிரிகளாகிய) அஹ்பார்களேனும் தடை செய்ய வேண்டாமா? இவர்களுடைய செயலும் மிகக் கெட்டதுவே.
5:63. தீய வார்த்தைகளைப் பேசுவதிலிருந்தும், விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலிருந்தும் அவர்களின் குருமார்களும் அறிஞர்களும் அவர்களை ஏன் தடுப்பதில்லை? வாழ்நாள் முழுவதும் இவர்கள் புரிந்து வரும் சாதனை எத்துணை மோசமானது!
5:63. பாவமான அவர்களின் கூற்றிலிருந்தும், விலக்கப்பட்டவைகளை அவர்கள் உண்பதிலிருந்தும் (அவர்களுடைய பண்டிதர்களாகிய வணக்கசாலிகளான) மேதைகளும் (அஹ்பார்களான) அறிஞர்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பவை மிகக் கெட்டவையாகிவிட்டது
5:64 وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ؕ غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ يُنْفِقُ كَيْفَ يَشَآءُ ؕ وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًا ؕ وَاَ لْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ؕ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ ۙ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
وَقَالَتِ கூறினர் الْيَهُوْدُ யூதர்கள் يَدُ கை اللّٰهِ அல்லாஹ்வின் مَغْلُوْلَةٌ ؕ கட்டப்பட்டிருக்கிறது غُلَّتْ கட்டப்பட்டன اَيْدِيْهِمْ அவர்களுடைய கைகள் وَلُعِنُوْا சபிக்கப்பட்டனர் بِمَا எதன் காரணமாக قَالُوْا ۘ கூறினர் بَلْ மாறாக يَدٰهُ அவனுடைய இரு கைகள் مَبْسُوْطَتٰنِ ۙ விரிக்கப்பட்டுள்ளன يُنْفِقُ தர்மம் புரிகிறான் كَيْفَ எவ்வாறு يَشَآءُ ؕ அவன் நாடுகிறான் وَلَيَزِيْدَنَّ நிச்சயமாக அதிகப்படுத்தும் كَثِيْرًا அதிகமானோர் مِّنْهُمْ அவர்களில் مَّاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் طُغْيَانًا வரம்பு மீறுவதை وَّكُفْرًا ؕ இன்னும் நிராகரிப்பை وَاَ لْقَيْنَا ஏற்படுத்தினோம் بَيْنَهُمُ அவர்களுக்கு மத்தியில் الْعَدَاوَةَ பகைமையை وَالْبَغْضَآءَ இன்னும் வெறுப்பை اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ ؕ மறுமை நாள் كُلَّمَاۤ எல்லாம் اَوْقَدُوْا மூட்டினார்கள் نَارًا நெருப்பை لِّلْحَرْبِ போருக்கு اَطْفَاَهَا அணைத்து விட்டான்/அதை اللّٰهُ ۙ அல்லாஹ் وَيَسْعَوْنَ இன்னும் விரைகிறார்கள் فِى الْاَرْضِ பூமியில் فَسَادًا ؕ கலகம் செய்வதற்காக وَاللّٰهُ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُفْسِدِيْنَ கலகம் செய்பவர்களை
5:64. “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
5:64. ‘‘அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். மாறாக, அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கிறான். உமது இறைவனால் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகிறது. ஆகவே, நாம் அவர்களுக்கிடையில் பகைமையை, வெறுப்பை இறுதிநாள் வரை (இருக்கும்படி) விதைத்து விட்டோம். அவர்கள் (நம்பிக்கையாளர்களுக்கிடையில்) போர் நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விடுகிறான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டே அலைகிறார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை.
5:64. யூதர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது.” கட்டப்பட்டிருப்பவை அவர்களுடைய கைகள்தாம். அவர்கள் பேசிக் கொண்டிருந்த இந்தப் பேச்சின் காரணமாக சாபத்திற்குள்ளானார்கள். அல்லாஹ்வின் கைகளோ விரிந்திருக்கின்றன. தான் நாடும் விதத்தில் அவன் அள்ளி வழங்குகின்றான். (உண்மை யாதெனில்) உம்முடைய இறைவனிடமிருந்து உம்மளவில் இறக்கிவைக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பாலோரிடம் வரம்பு மீறலையும், அசத்தியப்போக்கையும் இன்னும் அதிகப்படுத்திவிட்டது. மேலும் (இதற்குத் தண்டனையாக) மறுமைநாள் வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பு உணர்ச்சியையும் நாம் விதைத்து விட்டோம். போர் நெருப்பை அவர்கள் மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான். அவர்கள் பூமியில் குழப்பத்தைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள். (ஆனால்) இத்தகைய குழப்பவாதிகளை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.
5:64. மேலும், “அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகின்றனர், அவர்களுடைய கைகள் தாம் கட்டப்பட்டிருக்கின்றன, அன்றியும் இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர், எனினும் அல்லாஹ்வுடைய இரு கைகளும் விரிக்கப்பட்டே இருக்கின்றன, அவன் நாடியவாறெல்லாம், செலவு செய்கிறான், இன்னும், உம் இரட்சகனால் உமக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதமான)து அவர்களில் பெரும்பான்மையினருக்கு அட்டூழியத்தையும், நிராகரித்தலையுமே நிச்சயமாக அதிகப்படுத்துகிறது, இன்னும், அவர்களுக்கிடையில் விரோதத்தையும், வெறுப்பையும் மறுமை நாள் வரையில் (இருக்கும்படி) நாம் போட்டுவிட்டோம், அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகிறான், இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே அலைகின்றார்கள், மேலும், அல்லாஹ் குழப்பம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
5:65 وَلَوْ اَنَّ اَهْلَ الْـكِتٰبِ اٰمَنُوْا وَاتَّقَوْا لَـكَفَّرْنَا عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاَدْخَلْنٰهُمْ جَنّٰتِ النَّعِيْمِ
وَلَوْ اَنَّ இருந்தால் اَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَاتَّقَوْا இன்னும் அஞ்சினார்கள் لَـكَفَّرْنَا நிச்சயமாக அகற்றிடுவோம் عَنْهُمْ அவர்களை விட்டு سَيِّاٰتِهِمْ பாவங்களை அவர்களுடைய وَلَاَدْخَلْنٰهُمْ இன்னும் நுழைத்திடுவோம்/அவர்களை جَنّٰتِ சொர்க்கங்களில் النَّعِيْمِ இன்பம் நிறைந்த
5:65. வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்.
5:65. வேதத்தையுடைய இவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் (அதை) அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, எல்லா இன்பங்களுமுள்ள சொர்க்கங்களில் நிச்சயமாக நாம் அவர்களை நுழைவிப்போம்.
5:65. வேதம் அருளப்பட்டவர்கள் (இவ்வரம்பு மீறிய போக்கினைக் கைவிட்டு) இறைநம்பிக்கை கொண்டு, மேலும் இறையச்சத்துடன் செயல்பட்டிருந்தால், அவர்களின் தீமைகளை அவர்களை விட்டு நாம் அகற்றியிருப்போம். மேலும் அருட்கொடை நிரம்பிய சுவனங்களில் அவர்களை நுழையச் செய்திருப்போம்.
5:65. மேலும், வேதத்தையுடைய இவர்கள் (உண்மையாகவே) விசுவாசங்கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து)ம் இருந்தால் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் நாம் போக்கிவிட்டிருப்போம், மேலும், சகல இன்பங்களும் உள்ள சுவனபதிகளில் அவர்களை நிச்சயமாக நாம் பிரவேசிக்கச் செய்வோம்.
5:66 وَلَوْ اَنَّهُمْ اَقَامُوا التَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَيْهِمْ مِّنْ رَّبِّهِمْ لَاَ كَلُوْا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْؕ مِنْهُمْ اُمَّةٌ مُّقْتَصِدَةٌ ؕ وَكَثِيْرٌ مِّنْهُمْ سَآءَ مَا يَعْمَلُوْنَ
وَلَوْ اَنَّهُمْ அவர்கள் இருந்தால் اَقَامُوا நிலைநிறுத்தினார்கள் التَّوْرٰٮةَ தவ்றாத்தை وَالْاِنْجِيْلَ இன்னும் இன்ஜீலை وَمَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْهِمْ அவர்களுக்கு مِّنْ இருந்து رَّبِّهِمْ அவர்களுடைய இறைவன் لَاَ كَلُوْا இன்னும் புசித்திருப்பார்கள் مِنْ இருந்து فَوْقِهِمْ அவர்களுக்கு மேல் وَمِنْ تَحْتِ இன்னும் கீழிருந்து اَرْجُلِهِمْؕ அவர்களுடைய கால்கள் مِنْهُمْ அவர்களில் اُمَّةٌ ஒரு கூட்டம் مُّقْتَصِدَةٌ ؕ நேர்மையானது وَكَثِيْرٌ இன்னும் அதிகமானோர் مِّنْهُمْ அவர்களில் سَآءَ கெட்டு விட்டன مَا எது يَعْمَلُوْنَ செய்கிறார்கள்
5:66. இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும்.
5:66. தவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) அவர்கள் பின்பற்றி நிலைநிறுத்தி வந்தால் (எவ்விதக் கஷ்டமுமின்றி,) அவர்களுக்கு மே(ல் வானத்தி)லிருந்தும், அவர்களுடைய பாதங்களின் கீழ் (பூமியில்) இருந்தும் புசிப்பார்கள். ஆனால், அவர்களில் சிலர்தான் நேர்மையான கூட்டத்தினராக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் செய்யும் காரியங்கள் (மிகக்) கெட்டவையாக இருக்கின்றன.
5:66. மேலும், தவ்ராத்தையும் இன்ஜீலையும் மற்றும் தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கியருளப்பட்ட இதர வேதங்களையும் அவர்கள் முழுமையாக நிலைநாட்டியிருந்தால் அவர்களுக்காக ஆகாரம் மேலிருந்தும் பொழிந்திருக்கும்; கீழிருந்தும் பொங்கிப் பெருகியிருக்கும். ஆயினும் அவர்களில் சிலர் நேர்மையாளர்களாய் இருக்கின்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தீய செயல்கள் புரிபவர்கள் ஆவார்கள்.
5:66. இன்னும் நிச்சயமாக தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவர்களுடைய இரட்சகனிடமிருந்து அவர்களுக்கு இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் நிலைநாட்டியிருந்தால் அவர்களுக்கு மே(ல் வானத்தி)லிருந்தும், அவர்களுடைய பாதங்களின் கீழ் (பூமியில்) இருந்தும் புசித்திருப்பார்கள், (ஆனால்) அவர்களில் சிலர் நேர்மையான சமுதாயத்தினராக இருக்கின்றனர், இன்னும் அவர்களில் பெரும்பான்மையினர்-அவர்கள் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாக இருக்கின்றன.
5:67 يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَـتَهٗ ؕ وَاللّٰهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ தூதரே بَلِّغْ எடுத்துரைப்பீராக مَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ இருந்து رَّبِّكَ ؕ உம் இறைவன் وَاِنْ لَّمْ تَفْعَلْ நீர் செய்யவில்லையென்றால் فَمَا بَلَّغْتَ நீர் எடுத்துரைக்கவில்லை رِسٰلَـتَهٗ ؕ தூதை/அவனுடைய وَاللّٰهُ அல்லாஹ் يَعْصِمُكَ காப்பாற்றுவான்/உம்மை مِنَ النَّاسِ ؕ மக்களிடமிருந்து اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ சமுதாயத்தை الْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்கள்
5:67. தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
5:67. (நம்) தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.
5:67. தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உம்மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! நீர் அவ்வாறு செய்யாவிடில் அவன் வழங்கிய தூதுத்துவப் பொறுப்பை நிறைவேற்றியவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களின் தீங்கிலிருந்து காப்பாற்றுபவனாக இருக்கின்றான். (உங்களுக்கு எதிராக) நிராகரிப்போருக்கு வெற்றிக்கான பாதையை அல்லாஹ் ஒருபோதும் காண்பிக்க மாட்டான்.
5:67. (நம்முடைய) தூதரே! உம் இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை (மனிதர்களுக்கு) எத்திவைத்துவிடுவீராக! நீர் (அவ்வாறு) செய்யாவிடில், அவனுடைய தூதை (முற்றிலும்) நீர் எத்திவைக்கவில்லை, மனிதர்(களின் தீங்கு)களிலிருந்து அல்லாஹ்வோ உம்மைக்காப்பாற்றிக் கொள்வான், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
5:68 قُلْ يٰۤـاَهْلَ الْـكِتٰبِ لَسْتُمْ عَلٰى شَىْءٍ حَتّٰى تُقِيْمُوا التَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ ؕ وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًاۚ فَلَا تَاْسَ عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்களே لَسْتُمْ நீங்கள் இல்லை عَلٰى شَىْءٍ ஒரு விஷயத்திலும் حَتّٰى வரை تُقِيْمُوا நிலைநிறுத்துவீர்கள் التَّوْرٰٮةَ தவ்றாத்தை وَالْاِنْجِيْلَ இன்ஜீலை وَمَاۤ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْهِمْ உங்களுக்கு مِّنْ இருந்து رَّبِّكُمْ ؕ உங்கள் இறைவன் وَلَيَزِيْدَنَّ நிச்சயமாக அதிகப்படுத்துகிறது كَثِيْرًا அதிகமானவர்களுக்கு مِّنْهُ அவர்களில் مَّاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் طُغْيَانًا வரம்பு மீறுவதை وَّكُفْرًاۚ இன்னும் நிராகரிப்பை فَلَا تَاْسَ ஆகவே கவலைப்படாதீர் عَلَى மீது الْقَوْمِ சமுதாயம் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்கள்
5:68. “வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம்.
5:68. (நபியே! அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடிக்காதவரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்ல'' என்று நீர் கூறுவீராக. உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வரும். ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்.
5:68. “வேதம் அருளப்பட்டவர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட இதர வேதங்களையும் முழுமையாகச் செயல்படுத்தாதவரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை” என்று (நபியே!) தெளிவாய்க் கூறிவிடுங்கள். உம்மீது இறக்கி வைக்கப்பட்ட இந்த வேதக் கட்டளை அவர்களில் பெரும்பாலோரிடம் வரம்பு மீறலையும், நிராகரிப்பையுமே இன்னும் அதிகப்படுத்தி விட்டது. ஆயினும் நிராகரிப்போரின் நிலை குறித்துச் சிறிதும் நீர் வருந்தாதீர்!
5:68. (அவர்களிடம்) “வேதத்தையுடையோர்களே! நீங்கள் தவ்றாத்தையும் இன்ஜீலையும் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டதையும் (உண்மையாகவே) நீங்கள் (கடைப்பிடித்தொழுகி) நிலைநிறுத்தும்வரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! உமதிரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு அட்டூழியத்தையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது, ஆகவே, இந்நிராகரிக்கும் மக்களுக்காக நீர் கவலை கொள்ள வேண்டாம்!
5:69 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالصَّابِــٴُــوْنَ وَالنَّصٰرٰى مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هَادُوْا யூதர்கள் وَالصَّابِــٴُــوْنَ இன்னும் சாபியீன்கள் وَالنَّصٰرٰى இன்னும் கிறித்தவர்கள் مَنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ இன்னும் இறுதி நாளை وَعَمِلَ இன்னும் செய்தார் صَالِحًـا நன்மையை فَلَا خَوْفٌ ஒரு பயமுமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ இன்னும் அவர்கள் இல்லை يَحْزَنُوْنَ கவலைப்படுவார்கள்
5:69. முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
5:69. நம்பிக்கை கொண்டவர்களிலும், யூதர்களிலும், சாபியீன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் (இந்த தூதர் கூறுகிறபடி) அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு (அவர் கற்பித்த வழியில்) நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
5:69. (இங்கு யாருக்கும் எதிலும் ஏகபோக உரிமை கிடையாது என்பதனை நன்கறிந்து கொள்ளுங்கள்.) முஸ்லிம்கள், யூதர்கள், ஸாபிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரில், யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
5:69. நிச்சயமாக விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாகி விட்டார்களே அவர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும் (அவர்களில்) எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து நற்கருமத்தையும் செய்தாரோ-அவர்களுக்கு (மறுமையைப்பற்றி) எவ்வித பயமுமில்லை, இன்னும், (உலகில் எதை விட்டுச் செல்கிறார்களோ அதைப்பற்றி) கவலையும் அடையமாட்டார்கள்
5:70 لَقَدْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَاَرْسَلْنَاۤ اِلَيْهِمْ رُسُلًا ؕ كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌ ۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُهُمْۙ فَرِيْقًا كَذَّبُوْا وَفَرِيْقًا يَّقْتُلُوْنَ
لَقَدْ திட்டமாக اَخَذْنَا வாங்கினோம் مِيْثَاقَ உறுதிமொழியை بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களின் وَاَرْسَلْنَاۤ இன்னும் அனுப்பினோம் اِلَيْهِمْ அவர்களிடம் رُسُلًا ؕ தூதர்களை كُلَّمَا جَآءَهُمْ அவர்களிடம் வந்தபோதெல்லாம் رَسُوْلٌ ۢ ஒரு தூதர் بِمَا எதை கொண்டு لَا تَهْوٰٓى விரும்பாது اَنْفُسُهُمْۙ அவர்களுடைய மனங்கள் فَرِيْقًا ஒரு வகுப்பாரை كَذَّبُوْا பொய்ப்பித்தனர் وَفَرِيْقًا இன்னும் ஒரு வகுப்பாரை يَّقْتُلُوْنَ கொல்கின்றனர்
5:70. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்.
5:70. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (நம் தூதர்களைப் பின்பற்றும்படி) உறுதிமொழி வாங்கி, அவர்களிடம் நம் பல தூதர்களை அனுப்பிவைத்தோம். (எனினும்) அவர்களுடைய மனம் விரும்பாத ஒன்றை (கட்டளையை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறியும், சிலரைக் கொலை செய்து கொண்டுமே இருந்தார்கள்.
5:70. உண்மையில் நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் (வலுவான) வாக்குறுதி வாங்கினோம். மேலும், அவர்களிடம் இறைத்தூதர்கள் பலரையும் அனுப்பினோம். (ஆயினும்) யாரேனும் ஒரு தூதர் அவர்களின் மனம் விரும்பாதவற்றை அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (தூதர்களில்) சிலரை அவர்கள் பொய்யர் எனத் தூற்றினர்; சிலரைக் கொலை செய்தனர்.
5:70. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் மக்களிடம் உறுதிமொழி வாங்கினோம், இன்னும், அவர்களிடம் தூதர்களை நாம் அனுப்பி வைத்தோம், அவர்களுடைய மனங்கள் விரும்பாததை (நம்முடைய) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) ஒரு சாராரைப் பொய்யாக்கினார்கள், ஒரு சாராரை கொலையும் செய்தார்கள்.
5:71 وَحَسِبُوْۤا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِيْرٌ مِّنْهُمْؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ
وَحَسِبُوْۤا இன்னும் எண்ணினர் اَلَّا تَكُوْنَ ஏற்படாது فِتْنَةٌ தண்டனை فَعَمُوْا ஆகவே குருடாகினர் وَصَمُّوْا இன்னும் செவிடாகினர் ثُمَّ பிறகு تَابَ பிழைபொறுத்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்கள் மீது ثُمَّ பிறகும் عَمُوْا குருடாகினர் وَصَمُّوْا இன்னும் செவிடாகினர் كَثِيْرٌ அதிகமானோர் مِّنْهُمْؕ அவர்களில் وَاللّٰهُ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குபவன் بِمَا எதை يَعْمَلُوْنَ செய்கிறார்கள்
5:71. (இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே அவர்கள் (உண்மையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்; இதற்குப் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்; எனினும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும் செவிடர்களாகவுமே இருந்தனர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
5:71. (இதனால் தங்களுக்கு) ஓர் ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆதலால், அவர்கள் (உண்மையைக் காண முடியாத) குருடர்களாகவும், (அதைக் கேட்க முடியாத) செவிடர்களாகவும் ஆகிவிட்டனர். இதன் பின்னரும், அல்லாஹ் அவர்களை மன்னித்தான். எனினும், அவர்களில் பெரும்பான்மையினர் பிறகும் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
5:71. இதனால் எந்த ஃபித்னாவும் (குழப்பமும்) ஏற்படாது என்றும் தாங்களாகவே எண்ணிக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் குருடர்களாயும், செவிடர்களாயும் ஆகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களை மன்னித்தபோது அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அதிகமாக குருடர்களாயும் செவிடர்களாயும் ஆகிவிட்டனர். அவர்கள் செய்கின்ற எல்லாச் செயல்களையும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான்.
5:71. (இவ்வாறு செய்தால்) எந்தவிதமான கடும் வேதனையும் தங்களுக்கு ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர், ஆதலால், அவர்கள் (உண்மையை உணராத) குருடர்களாகவும், (அதனைக் கேட்காத) செவிடர்களாகவும் ஆகிவிட்டனர், பின்னரும் அல்லாஹ் அவர்களின் தவ்பாவை ஏற்றுக் கொண்டான், (இதன்) பின்னரும் அவர்களில் பெரும்பான்மையினர் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே ஆகிவிட்டனர், மேலும், அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை பார்க்கின்றவன்.
5:72 لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ
لَقَدْ திட்டவட்டமாக كَفَرَ நிராகரித்தார் الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் هُوَ அவன்தான் الْمَسِيْحُ மஸீஹ்தான் ابْنُ மகன் مَرْيَمَ ؕ மர்யமுடைய وَقَالَ கூறினார் الْمَسِيْحُ மஸீஹ் يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களே! اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை رَبِّىْ என் இறைவன் وَرَبَّكُمْ ؕ இன்னும் உங்கள் இறைவன் اِنَّهٗ நிச்சயமாக செய்தி مَنْ எவர் يُّشْرِكْ இணைவைக்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வுக்கு فَقَدْ திட்டமாக حَرَّمَ தடுத்து விடுகிறான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِ அவர் மீது الْجَـنَّةَ சொர்க்கத்தை وَمَاْوٰٮهُ இன்னும் அவருடைய தங்குமிடம் النَّارُ ؕ நரகம்தான் وَمَا இல்லை لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு مِنْ اَنْصَارٍ உதவியாளர்களில் எவரும்
5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
5:72. ‘‘நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்'' என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்'' என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.
5:72. திண்ணமாக, “மர்யம் உடைய குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்” என்று கூறியவர்கள் சந்தேகமின்றி நிராகரித்தவர்களாகிவிட்டார்கள். உண்மையில் மஸீஹ் இப்படித்தான் கூறியிருந்தார்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!” எவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றானோ, அவனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தைத் தடை செய்திருக்கின்றான். மேலும், அவனுடைய இருப்பிடம் நரகமாகும். மேலும், இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.
5:72. ”நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் மர்யமுடைய மகன் மஸீஹ்” என்று கூறியவர்கள் திட்டமாக நிராகரிப்போராகி விட்டார்கள், (எனினும்) அந்த மஸீஹோ, “இஸ்ராயீலின் மக்களே! என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்றே கூறினார், நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்துவிடுகின்றான், மேலும், அவர் தங்குமிடம் நரகம்தான், இன்னும், (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையிலும்) உதவி செய்வோர் இல்லை.
5:73 لَـقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰـهٌ وَّاحِدٌ ؕ وَاِنْ لَّمْ يَنْتَهُوْا عَمَّا يَقُوْلُوْنَ لَيَمَسَّنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
لَـقَدْ திட்டவட்டமாக كَفَرَ நிராகரித்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் ثَالِثُ ثَلٰثَةٍ ۘ மூவரில் ஒருவன் وَمَا இல்லை مِنْ இருந்து اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் اِلَّاۤ தவிர اِلٰـهٌ ஒரு வணக்கத்திற்குரியவன் وَّاحِدٌ ؕ ஒரே وَاِنْ لَّمْ يَنْتَهُوْا அவர்கள் விலகவில்லையெனில் عَمَّا எதிலிருந்து يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் لَيَمَسَّنَّ நிச்சயமாக அடையும் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْهُمْ அவர்களில் عَذَابٌ வேதனை اَ لِيْمٌ துன்புறுத்தக்கூடியது
5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
5:73. ‘‘நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்'' என்று கூறியவர்களும் மெய்யாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். ஏனென்றால், ஒரே ஓர் இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. (ஆகவே, இவ்வாறு) அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும்.
5:73. நிச்சயமாக, அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்களும் திண்ணமாக நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். உண்மையில் ஒரே இறைவனைத் தவிர வேறு எந்த இறைவனு மில்லை. தாம் இவ்வாறு கூறுவதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளவில்லையாயின், இத்தகைய நிராகரிப்பாளர்கள் அனைவர்க்கும் துன்புறுத்தும் தண்டனை கொடுக்கப்பட்டே தீரும்.
5:73. “நிச்சயமாக அல்லாஹ் (பரிசுத்த ஆவி, பிதா, சுதன் ஆகிய இம்) மூவரில் மூன்றாவதான (ஒரு)வன்தான்” என்று கூறியவர்கள், திட்டமாகவே நிராகரிப்போராகிவிட்டார்கள், ஏனென்றால் (வணக்கத்திற்குரிய) ஒரே நாயனைத்தவிர வேறு நாயன் (இல்லவே) இல்லை, ஆகவே, (மூவரில் மூன்றாமவன் என்று) அவர்கள் கூறுவதைவிட்டும் விலகிக் கொள்ளாவிடில், அவர்களிலுள்ள நிராகரிப்போர்களைத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக பிடித்துக்கொள்ளும்.
5:74 اَفَلَا يَتُوْبُوْنَ اِلَى اللّٰهِ وَيَسْتَغْفِرُوْنَهٗؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
اَفَلَا يَتُوْبُوْنَ திருந்தி திரும்ப மாட்டார்களா? اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் وَيَسْتَغْفِرُوْنَهٗؕ இன்னும் மன்னிப்புக் கோரமாட்டார்களா/அவனிடம் وَ இன்னும் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ பெரும் கருணையாளன்
5:74. இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.
5:74. இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? அல்லாஹ்வோ, மிக மன்னிப்பவன் மிகக் கருணையுடையவன் ஆவான்.
5:74. (அவ்வாறிருக்க) அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு அவனிடத்தில் பாவமன்னிப்புக் கோரிட வேண்டாமா? மேலும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும், மாபெரும் கருணையாளனும் ஆவான்.
5:74. எனவே, இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு (தவ்பா செய்து) இன்னும் அவனிடம் (தங்கள் குற்றத்திற்காகப்) பாவமன்னிப்புத்தேட மாட்டார்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
5:75 مَا الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُؕ وَاُمُّهٗ صِدِّيْقَةٌ ؕ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَؕ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ اَ نّٰى يُؤْفَكُوْنَ
مَا الْمَسِيْحُ மஸீஹ் இல்லை ابْنُ மகன் مَرْيَمَ மர்யமுடைய اِلَّا தவிர رَسُوْلٌ ۚ ஒரு தூதரே قَدْ خَلَتْ சென்றுவிட்டனர் مِنْ قَبْلِهِ இவருக்கு முன்னர் الرُّسُلُؕ தூதர்கள் وَاُمُّهٗ இன்னும் அவருடைய தாய் صِدِّيْقَةٌ ؕ ஒரு மகாஉண்மையாளர் كَانَا இருந்தனர் يَاْكُلٰنِ சாப்பிடுவார்கள் الطَّعَامَؕ உணவு اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு نُبَيِّنُ தெளிபடுத்துகிறோம் لَهُمُ அவர்களுக்கு الْاٰيٰتِ அத்தாட்சிகளை ثُمَّ பிறகு انْظُرْ கவனிப்பீராக اَ نّٰى எவ்வாறு يُؤْفَكُوْنَ திருப்பப்படுகின்றனர்
5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
5:75. மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே! தவிர (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்ல. இவருக்கு முன்னரும் (இவரைப் போல்) பல தூதர்கள் (வந்து) சென்றுவிட்டனர். அவருடைய தாயும் (கடவுள் அல்ல. அவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். இவ்விருவரும் (இவ்வுலகிலிருந்த காலமெல்லாம் மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டு (வாழ்ந்து) வந்தனர். (ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு இறைவனாக ஆவார்கள்? இதை) நாம் பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (உண்மையில் இருந்து) அவர்கள் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டனர் என்பதையும் நீர் கவனிப்பீராக.
5:75. மர்யத்தின் குமாரர் மஸீஹ் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் இறைத்தூதர்கள் பலர் சென்றிருக்கிறார்கள். மேலும், அவருடைய அன்னை வாய்மையுள்ள ஒரு பெண்மணியாவார். அவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தார்கள். பாருங்கள்! நாம் (சத்தியத்திற்கான) சான்றுகளை எவ்வாறெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக்குகின்றோம். மீண்டும் பாருங்கள்; அவர்கள் எவ்வாறெல்லாம் உண்மையை விட்டுப் பிறழ்ந்து செல்கிறார்கள்.
5:75. மர்யமுடைய மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி (அல்லாஹ்வோ, அல்லாஹ்வுடைய குமாரரோ) இல்லை, இவருக்கு முன்னரும் (இவரைப்போல்) தூதர்கள் பலர் (வந்து) சென்று விட்டனர், அவருடைய தாயும் அல்லாஹ் அல்ல, அவர் மிக்க உண்மையானவர், இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டே (வாழ்ந்து) வந்தனர், ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு வணக்கத்திற்குரியவர்களாக ஆவார்கள்? இதனை பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு நாம் எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! பின்னர், (உண்மையிலிருந்து) இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் நீர் கவனிப்பீராக.
5:76 قُلْ اَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ؕ وَاللّٰهُ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
قُلْ கூறுவீராக اَ تَعْبُدُوْنَ வணங்குகிறீர்களா? مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ் مَا எவை لَا يَمْلِكُ உரிமைபெறாது لَـكُمْ உங்களுக்கு ضَرًّا தீங்களிப்பதற்கு وَّلَا نَفْعًا ؕ இன்னும் பலனளிப்பதற்கு وَاللّٰهُ அல்லாஹ் هُوَ السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ மிக அறிந்தவன்
5:76. “அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
5:76. (அன்றி அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு ஒரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள் ?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஆவான்.
5:76. நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு இழப்பையோ லாபத்தையோ அளிப்பதற்கு சக்தியில்லாதவற்றையா நீங்கள் வணங்குகின்றீர்கள்? ஆனால் அல்லாஹ்தான் யாவற்றையும் செவியேற்பவனும் நன்கு அறிபவனும் ஆவான்.”
5:76. (அன்றி அவர்களிடம்) “அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு இடரையோ, நன்மையையோ செய்யச் சக்தியற்றவற்றை நீங்கள் வணங்குகின்றீர்களா? என்று (நபியே!) நீர் கேட்பீராக! இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் செவியுறுவோன், யாவற்றையும்) நன்கறிந்தோன்.
5:77 قُلْ يٰۤـاَهْلَ الْـكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ غَيْرَ الْحَـقِّ وَلَا تَتَّبِعُوْۤا اَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِيْرًا وَّضَلُّوْا عَنْ سَوَآءِ السَّبِيْلِ
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்களே لَا تَغْلُوْا வரம்பு மீறாதீர்கள் فِىْ دِيْـنِكُمْ உங்கள் மார்க்கத்தில் غَيْرَ முரணாக الْحَـقِّ உண்மைக்கு وَلَا تَتَّبِعُوْۤا இன்னும் பின்பற்றாதீர்கள் اَهْوَآءَ விருப்பங்களை قَوْمٍ சமுதாயத்தின் قَدْ ضَلُّوْا வழிதவறி விட்டனர் مِنْ قَبْلُ முன்பு وَاَضَلُّوْا இன்னும் வழி கெடுத்தனர் كَثِيْرًا பலரை وَّضَلُّوْا இன்னும் வழி தவறினர் عَنْ இருந்து سَوَآءِ நேரான السَّبِيْلِ பாதை
5:77. “வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!
5:77. ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். மேலும், இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழி கெடுத்தும் இருக்கின்றனர்'' என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
5:77. நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர் களே! உங்கள் தீனில் (நெறியில்) அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்! மேலும், உங்களுக்கு முன்னர் தாமும் வழிகெட்டு, பலரையும் வழிகெடுத்து மேலும், நேரிய வழியிலிருந்து தடம்புரண்டு போன மக்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்!”
5:77. “வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையல்லாததைக் (கூறுவது) கொண்டு வரம்பு மீறாதீர்கள், அன்றியும் (இதற்கு)முன்னர், (இவ்வாறு) திட்டமாக வழிதவறிவிட்ட கூட்டத்தாரின் மனோ இச்சைகளையும் நீங்கள் பின்பற்றாதீர்கள், (ஏனென்றால், முன்பே அவர்களும் வழிகெட்டு) இன்னும் அனேகரை வழி தவறவும் செய்துவிட்டனர், மேலும், அவர்கள் நேரான வழியைவிட்டும் முற்றிலும் தவறிவிட்டனர்.
5:78 لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ ؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ
لُعِنَ சபிக்கப்பட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களில் عَلٰى لِسَانِ நாவினால் دَاوٗدَ தாவூதுடைய وَعِيْسَى இன்னும் ஈஸாவின் ابْنِ மகன் مَرْيَمَ ؕ மர்யமின் ذٰ لِكَ அது بِمَا எதன் காரணமாக عَصَوْا மாறுசெய்தனர் وَّكَانُوْا இன்னும் இருந்தனர் يَعْتَدُوْنَ மீறுபவர்களாக
5:78. இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
5:78. இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர்.
5:78. இஸ்ராயீலின் வழித்தோன்றலில் எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்கள் தாவூது மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் (இறைக்கட்டளைக்கு) மாறு செய்தார்கள். மேலும், இறைவரம்புகளை மீறியவாறு இருந்தார்கள்.
5:78. இஸ்ராயீலின் மக்களில் நிராகரித்தார்களே அத்தகையவர்கள், தாவூத், மர்யமுடைய மகன் ஈஸா, ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டு விட்டனர், அது ஏனென்றால், அவர்கள் மாறுசெய்து கொண்டும், இன்னும் வரம்பு மீறுபவர்களாக இருந்தார்கள் என்பதினாலாகும்.
5:79 كَانُوْا لَا يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ؕ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ
كَانُوْا இருந்தனர் لَا يَتَـنَاهَوْنَ ஒருவர் மற்றவரைத் தடுக்காதவர்களாக عَنْ விட்டு مُّنْكَرٍ தீமை فَعَلُوْهُ ؕ செய்தனர் / அதை لَبِئْسَ கெட்டுவிட்டது مَا எது كَانُوْا இருந்தனர் يَفْعَلُوْنَ செய்வார்கள்
5:79. இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.
5:79. அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே!
5:79. தாம் செய்து கொண்டிருந்த தீய செயலிலிருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் யாவும் மிகவும் தரங்கெட்டவையாய் இருந்தன.
5:79. எதனை அவர்கள் செய்து கொண்டிருந்தார்களோ அந்த வெறுக்கப்பட்ட (செயலானதை) விட்டும் ஒருவரையொருவர் தடுக்காதவர்களாக இருந்தனர், அவர்கள் செய்து கொண்டிருந்தது நிச்சயமாக மிகக்கெட்டதாகும்.
5:80 تَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذِيْنَ كَفَرُوْاؕ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَيْهِمْ وَفِى الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ
تَرٰى காண்பீர் كَثِيْرًا அதிகாமானோரை مِّنْهُمْ அவர்களில் يَتَوَلَّوْنَ நட்பு வைக்கிறார்கள் الَّذِيْنَ எவர்களிடம் كَفَرُوْاؕ நிராகரித்தார்கள் لَبِئْسَ கெட்டுவிட்டது مَا எது قَدَّمَتْ முற்படுத்தியன لَهُمْ அவர்களுக்கு اَنْفُسُهُمْ அவர்களுடைய ஆன்மாக்கள் اَنْ سَخِطَ கோபிக்கும்படியாக اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்கள் மீது وَفِى الْعَذَابِ இன்னும் வேதனையில்தான் هُمْ அவர்கள் خٰلِدُوْنَ நிரந்தரமாக இருப்பார்கள்
5:80. (நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும்; ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது; மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
5:80. அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி அவர்கள் தாமாகவே தேடிக் கொண்டது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்.
5:80. இன்று அவர்களில் பெரும்பாலோர் (இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிராக) நிராகரிப்பாளர்களுக்கு ஆதரவாளர்களாயும், உற்ற நண்பர்களாயுமிருப்பதை நீர் காண்கிறீர். சந்தேகமின்றி அவர்கள் தமக்காக சம்பாதித்தவை எத்துணைத் தரங்கெட்டவை! இதனாலேயே அல்லாஹ் அவர்கள் மீது கோபங் கொண்டான். மேலும் நிரந்தரமான வேதனைக்கு அவர்கள் பலியாவார்கள்.
5:80. நிராகரித்துவிட்டார்களே, அத்தகையோரை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்வோராக அவர்களில் அநேகரை (நபியே!) நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொள்ளுமாறு தங்களுக்காக அவர்கள் முற்படுத்தி வைத்திட்ட (செயலான)து மிகக் கெட்டதாகிவிட்டது; இன்னும் நரக வேதனையில் அவர்கள் நிரந்தரமாக (தங்கி) இருப்பவர்கள்.
5:81 وَلَوْ كَانُوْا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِىِّ وَمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِيَآءَ وَلٰـكِنَّ كَثِيْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ
وَلَوْ كَانُوْا அவர்கள் இருந்திருந்தால் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்பவர்களாக بِاللّٰهِ அல்லாஹ்வை وَالنَّبِىِّ இன்னும் நபியை وَمَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْهِ அவருக்கு مَا اتَّخَذُوْ எடுத்திருக்க மாட்டார்கள் هُمْ அவர்களை اَوْلِيَآءَ நண்பர்களாக وَلٰـكِنَّ என்றாலும் كَثِيْرًا அதிகமானோர் مِّنْهُمْ அவர்களில் فٰسِقُوْنَ பாவிகள்
5:81. அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
5:81. அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகள் ஆவர்.
5:81. உண்மையிலேயே அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதரின் மீதும் அவருக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின் (நம்பிக்கையாளர்களுக்கு எதிராக) நிராகரிப்போரை தம் உற்ற நண்பர்களாய் ஒருபோதும் ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர்.
5:81. மேலும், அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு இறக்கிவைக்கப்பட்ட (வேதத்)தையும் (உண்மையாகவே) விசுவாசங்கொள்பவர்களாக இருந்திருப்பார்களானால் (நிராகரித்த) அவர்களை(த் தங்களுக்கு) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள், எனினும் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.
5:82 لَـتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الْيَهُوْدَ وَالَّذِيْنَ اَشْرَكُوْا ۚ وَلَـتَجِدَنَّ اَ قْرَبَهُمْ مَّوَدَّةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰى ؕ ذٰ لِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّيْسِيْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ
لَـتَجِدَنَّ (நீர்) காண்பீர் اَشَدَّ கடுமையானவர்களாக النَّاسِ மக்களில் عَدَاوَةً பகைமையினால் لِّـلَّذِيْنَ எவர்களுக்கு اٰمَنُوا நம்பிக்கை கொண்டார்கள் الْيَهُوْدَ யூதர்களை وَالَّذِيْنَ இன்னும் எவர்களை اَشْرَكُوْا ۚ இணைவைத்தனர் وَلَـتَجِدَنَّ இன்னும் நிச்சயமாக காண்பீர் اَ قْرَبَهُمْ அவர்களில் மிக நெருங்கியவர்களாக مَّوَدَّةً நேசத்தில் لِّـلَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களுக்கு الَّذِيْنَ எவர்களை قَالُوْۤا கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் نَصٰرٰى ؕ கிறித்தவர்கள் ذٰ لِكَ அது بِاَنَّ காரணம்/நிச்சயமாக مِنْهُمْ அவர்களில் قِسِّيْسِيْنَ குருக்கள் وَرُهْبَانًا இன்னும் துறவிகள் وَّاَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يَسْتَكْبِرُوْنَ பெருமை கொள்ள மாட்டார்கள்
5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
5:82. (நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், நிச்சயமாக அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை.
5:82. திண்ணமாக யூதர்களும், இணைவைப்பவர்களும் மற்ற அனைத்து மக்களையும் விட இறைநம்பிக்கையாளர்களுக்குக் கடும் பகைவர்களாக இருப்பதை (நபியே!) நீர் காண்பீர். நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களே என்று சொல்பவர்கள்தாம் மற்ற அனைவரையும்விட இறைநம்பிக்கையாளர்களுடன் நேசம் கொண்டிருப்பதை நீர் காண்பீர். இதற்குக் காரணம் அவர்களுள் வணக்கத்தில் திளைத்த அறிஞர்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், அவர்கள் அகந்தை கொண்டவர்களாகவும் இல்லை.
5:82. (நபியே!) விசுவாசங்கொண்டோருக்கு விரோதத்தால், மனிதர்களில் மிகக் கொடியவர்களாக யூதர்களையும் இணை வைப்பவர்களையும் நிச்சயமாக நீர் காண்பீர், மேலும், அவர்களில் (அம்மனிதர்களில்) “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறுகின்றனரே, அத்தகையோரை விசுவாசங்கொண்டிருந்தோருக்கு, அன்பால் மிக்க நெருக்கமானவர்களாக நீர் காண்பீர், அது (ஏனென்றால்) அவர்களில் (கற்றறிந்த) குருக்களும் துறவிகளும் இருக்கின்றனர், மேலும், நிச்சயமாக அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள் என்பதினாலாகும்.
5:83 وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّۚ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ
وَاِذَا سَمِعُوْا அவர்கள் செவியுற்றால் مَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَى பக்கம் الرَّسُوْلِ தூதர் تَرٰٓى காண்பீர் اَعْيُنَهُمْ அவர்களின் கண்களை تَفِيْضُ நிரம்பி வழியக்கூடியதாக مِنَ الدَّمْعِ கண்ணீரால் مِمَّا எதன் காரணமாக عَرَفُوْا அறிந்தனர் مِنَ الْحَـقِّۚ உண்மையை يَقُوْلُوْنَ கூறுகின்றனர் رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் فَاكْتُبْنَا ஆகவே பதிவு செய்/எங்களை مَعَ உடன் الشّٰهِدِيْنَ சாட்சியாளர்கள்
5:83. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.
5:83. தவிர, (இவர்களில் பலர் நம்) தூதர் மீது அருளப்பட்டவற்றை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர் “எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர்.
5:83. இறைத்தூதர் மீது இறக்கியருளப்பட்ட இவ் வேதத்தை அவர்கள் செவியுறும்போது சத்தியத்தை அவர்கள் அறிந்து கொண்டதன் விளைவாக அவர்களின் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்கிறீர். மேலும், அவர்கள் இறைஞ்சுகின்றார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம். எனவே சாட்சி வழங்குபவர்களில் எங்கள் பெயர்களையும் எழுதி வைப்பாயாக!”
5:83. இன்னும், அவர்கள் (நபி) தூதர்மீது இறக்கப்பட்டதைச் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்து கொண்டதன் காரணமாக அவர்களின் கண்களை – அவை கண்ணீரால் நிரம்பி வடிப்பதை நீர் காண்பீர்! “எங்கள் இரட்சகனே! இவ்வேத்தை) நாங்கள் விசுவாசித்தோம், ஆகவே, (இவ்வேதம் உண்மையான தெனச்) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக” என்று பிரார்த்தித்துக் கூறுகின்றனர்.
5:84 وَمَا لَـنَا لَا نُؤْمِنُ بِاللّٰهِ وَمَا جَآءَنَا مِنَ الْحَـقِّۙ وَنَطْمَعُ اَنْ يُّدْخِلَـنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصّٰلِحِيْنَ
وَمَا என்ன لَـنَا எங்களுக்கு لَا نُؤْمِنُ நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَا இன்னும் எது جَآءَ வந்தது نَا நமக்கு مِنَ الْحَـقِّۙ சத்தியம் وَنَطْمَعُ நாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும் اَنْ يُّدْخِلَـنَا எங்களை / அவன் சேர்ப்பதை رَبُّنَا எங்கள் இறைவன் مَعَ உடன் الْقَوْمِ மக்கள் الصّٰلِحِيْنَ நல்லவர்கள்
5:84. மேலும், “அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்” (என்றும் அவர்கள் கூறுவர்).
5:84. அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் செய்த) நல்லவர்களுடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசைப்படுகிறோம்'' என்றும் (கூறுகின்றனர்.)
5:84. மேலும், அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களுடைய இறைவன் எங்களை ஒழுக்க நலமுடையவர்களோடு இணைத்தருள வேண்டுமென்று நாங்கள் பேராவல் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்த சத்தியத்தின் மீதும் எவ்வாறு நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்போம்?”
5:84. மேலும், (அல்லாஹ்வையும்) அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் விசுவாசங் கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (தடை) இருக்கிறது? மேலும், எங்கள் இரட்சகன் (நற்கருமங்கள் செய்த) நல்லோருடன் எங்களையும் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை கொள்கின்றோம்” என்றும் (கூறுகின்றனர்)
5:85 فَاَثَابَهُمُ اللّٰهُ بِمَا قَالُوْا جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ؕ وَذٰ لِكَ جَزَآءُ الْمُحْسِنِيْنَ
فَاَثَابَهُمُ ஆகவே பிரதிபலனாகஅளித்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் بِمَا எதன் காரணமாக قَالُوْا கூறினார்கள் جَنّٰتٍ சொர்க்கங்களை تَجْرِىْ ஓடுகிறது مِنْ இருந்து تَحْتِهَا அதன் கீழே الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا ؕ அதில் وَذٰ لِكَ இது جَزَآءُ கூலி الْمُحْسِنِيْنَ நல்லறம்புரிபவர்களுடைய
5:85. அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.
5:85. அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுவே நன்மை செய்பவர்களுக்குரிய கூலியாகும்.
5:85. அவர்கள் இவ்வாறு கூறியதால் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோட்டங்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே நன்மை புரிவோருக்கான கூலியாகும்.
5:85. எனவே, அவர்கள் இவ்வாறு கூறியதன் காரணமாக, அல்லாஹ் அவர்களுக்குச் சுவனபதிகளைப் பிரதிபலனாகக் கொடுப்பான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள்; இன்னும் இதுவே நன்மை செய்வோருக்கு(ரிய நற்)கூலியுமாகும்
5:86 وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் وَكَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَاۤ நம் வசனங்களை اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَحِيْمِ நரகவாசிகள்தான்
5:86. ஆனால், எவர் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவர்கள்.
5:86. எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நரகவாசிகளே!
5:86. மேலும் எவர்கள் நம் திருவசனங்களை நிராகரித்து, அவற்றைப் பொய்யானவை என வாதிட்டார்களோ அத்தகையோர் நரகவாசிகளே ஆவர்!
5:86. இன்னும், நிராகரித்து நம் வசனங்களையும் பொய்யாக்கினார்களே அத்தகையோர் - அவர்கள் நரகவாசிகள்.
5:87 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تُحَرِّمُوْا ஆகாதவையாக ஆக்காதீர்கள் طَيِّبٰتِ நல்லவற்றை مَاۤ எவை اَحَلَّ ஆகுமாக்கினான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு وَلَا تَعْتَدُوْا ؕ இன்னும் வரம்புமீறாதீர்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُعْتَدِيْنَ வரம்புமீறிகளை
5:87. முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
5:87. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவற்றை நீங்கள் ஆகாதவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை.
5:87. இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூய பொருள்களை ஹராமானவை விலக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், வரம்பு மீறாதீர்கள்! திண்ணமாக வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
5:87. விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு, ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவற்றை நீங்கள் விலக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள், இன்னும் நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.
5:88 وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًا وَّ اتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اَنْـتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ
وَكُلُوْا இன்னும் புசியுங்கள் مِمَّا எதிலிருந்து رَزَقَكُمُ வழங்கினான்/ உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் حَلٰلًا அனுமதிக்கப்பட்டதை طَيِّبًا நல்லது وَّ اتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْۤ எவன் اَنْـتُمْ நீங்கள் بِهٖ அவனை مُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறீர்கள்
5:88. அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்; நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
5:88. அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்.
5:88. அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள பொருள்களில் அனுமதிக்கப்பட்டதும், தூய்மையானதுமான பொருள்களை உண்ணுங்கள் (பருகுங்கள்)! மேலும், எந்த இறைவன்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு இருக்கின்றீர்களோ அவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி வாழுங்கள்!
5:88. மேலும், அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (நீங்கள் புசிக்க) ஆகுமான நல்லவற்றைப் புசியுங்கள், நீங்கள் யாரை விசுவாசித்திருக்கிறீர்களோ, அத்தகைய அல்லாஹ்வைப் பயந்தும் கொள்ளுங்கள்.
5:89 لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ ؕ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ ؕ ذٰ لِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ؕ وَاحْفَظُوْۤا اَيْمَانَكُمْ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
لَا மாட்டான் يُؤَاخِذُكُمُ உங்களை தண்டிக்க اللّٰهُ அல்லாஹ் بِاللَّغْوِ வீணானதற்காக فِىْۤ இல் اَيْمَانِكُمْ உங்கள் சத்தியங்கள் وَلٰـكِنْ எனினும் يُّؤَاخِذُكُمْ உங்களைத் தண்டிப்பான் بِمَا எதற்காக عَقَّدْتُّمُ உறுதிப்படுத்தினீர்கள் الْاَيْمَانَ ۚ சத்தியங்களை فَكَفَّارَتُهٗۤ அதற்குப் பரிகாரம் اِطْعَامُ உணவளிப்பது عَشَرَةِ பத்து مَسٰكِيْنَ ஏழைகளுக்கு مِنْ இருந்து اَوْسَطِ நடுத்தரமானது مَا எது تُطْعِمُوْنَ உணவளிக்கிறீர்கள் اَهْلِيْكُمْ உங்கள் குடும்பத்திற்கு اَوْ அல்லது كِسْوَتُهُمْ அவர்களுக்கு ஆடையளிப்பது اَوْ அல்லது تَحْرِيْرُ விடுதலையிடுவது رَقَبَةٍ ؕ ஓர் அடிமை فَمَنْ எவர் لَّمْ يَجِدْ பெறவில்லையெனில் فَصِيَامُ நோன்பிருத்தல் ثَلٰثَةِ மூன்று اَيَّامٍ ؕ நாட்களுக்கு ذٰ لِكَ இது كَفَّارَةُ பரிகாரம் اَيْمَانِكُمْ உங்கள் சத்தியங்களின் اِذَا حَلَفْتُمْ ؕ நீங்கள் சத்தியம் செய்தால் وَاحْفَظُوْۤا காப்பாற்றுங்கள் اَيْمَانَكُمْ ؕ உங்கள் சத்தியங்களை كَذٰلِكَ இவ்வாறு يُبَيِّنُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு اٰيٰتِهٖ தன் வசனங்களை لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.
5:89. உங்கள் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (எதையும்) உறுதிப்படுத்த நீங்கள் செய்கின்ற சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவற்றில் எதையும்) எவர் பெறவில்லையோ அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான்.
5:89. நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிப்பதில்லை. ஆயினும் நீங்கள் உறுதிப்படுத்திச் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற்கான குற்றப்பரிகாரம் (இதுதான்): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கின்ற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து வறியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இவற்றில்) எதற்கும் சக்தி பெறாதவர்கள் மூன்று நாட்களுக்கு நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்து விட்டால், இதுதான் அவற்றுக்குரிய குற்றப்பரிகாரமாகும். எனவே உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள்! இவ்வாறு தன்னுடைய சட்ட திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்; நீங்கள் நன்றி செலுத்துபவராய்த் திகழக் கூடும் என்பதற்காக!
5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்கமாட்டான், எனினும், (ஏதெனுமொன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியத்தைப்பற்றி (அதில் தவறினால்) உங்களைப் பிடிப்பான், எனவே, (அதில் தவறி அந்த சத்தியத்தை முறித்துவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு உண்ணக் கொடுக்கும் ஆகாரத்தில் மத்தியதரமான (ஆகாரத்)திலிருந்து பத்து ஏழைகளுக்கு உண்ணக் கொடுப்பதாயிருக்கும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவித்தலாயிருக்கும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்தலாயிருக்கும், ஆகவே, எவர் (பரிகாரத்திற்குரிய எதையும்) பெறவில்லையோ அப்போது மூன்று நாட்களுடைய நோன்பு (நோற்பது அதற்குப் பரிகாரம்) ஆகும், இதுதான் உங்களுடைய சத்தியங்களுக்கு, நீங்கள் சத்தியம் செய்து (முறித்து) விட்டால்-பரிகாரமாகும், இன்னும் நீங்கள் உங்கள் சத்தியங்களை (பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக, அவன் தன்னுடைய வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விளக்குகின்றான்.
5:90 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِنَّمَا الْخَمْرُ நிச்சயமாக மது وَالْمَيْسِرُ இன்னும் சூது وَالْاَنْصَابُ இன்னும் சிலைகள் وَالْاَزْلَامُ இன்னும் அம்புகள் رِجْسٌ அருவருக்கத்தக்கவை مِّنْ عَمَلِ செயல்களில் الشَّيْطٰنِ ஷைத்தானின் فَاجْتَنِبُوْهُ ஆகவே, விட்டு விலகுங்கள்/இவற்றை لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:90. நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:90. இறை நம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.
5:90. விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும் (சூதாட்ட) அம்புகளும் (ஆகிய இவையாவும்) ஷைத்தானுடைய செயலிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும் - ஆகவே, இவைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
5:91 اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ ۚ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ
اِنَّمَا எல்லாம் يُرِيْدُ நாடுகிறான் الشَّيْطٰنُ ஷைத்தான் اَنْ يُّوْقِعَ அவன் உண்டுபண்ணுவது بَيْنَكُمُ உங்களுக்குமத்தியில் الْعَدَاوَةَ பகைமை وَالْبَغْضَآءَ இன்னும் வெறுப்பை فِى الْخَمْرِ மதுவினால் وَالْمَيْسِرِ இன்னும் சூதாட்டத்தினால் وَيَصُدَّكُمْ இன்னும் அவன் தடுப்பது/உங்களை عَنْ ذِكْرِ ஞாபகத்திலிருந்து اللّٰهِ அல்லாஹ்வின் وَعَنِ الصَّلٰوةِ ۚ இன்னும் தொழுகையிலிருந்து فَهَلْ ஆகவே ? اَنْـتُمْ நீங்கள் مُّنْتَهُوْنَ விலகுபவர்கள்
5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
5:91. மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவற்றிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?)
5:91. மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?
5:91. நிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவிலும், சூதாட்டத்திலும் (அதன் மூலம்) உங்களுக்கிடையில் விரோதத்தையும், வெறுப்பையும் உண்டு பண்ணவும், அல்லாஹ்வை நினைவு கூருவதை விட்டும், தொழுகையை (நிறைவேற்றுவதை) விட்டும் உங்களை அவன் தடுப்பதையுமேயாகும். (ஆகவே, அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்கிறீர்களா?
5:92 وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚ فَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ
وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் الرَّسُوْلَ தூதருக்கு وَاحْذَرُوْا ۚ இன்னும் எச்சரிக்கையாக இருங்கள் فَاِنْ تَوَلَّيْتُمْ நீங்கள்திரும்பினால் فَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَا நிச்சயமாக عَلٰى رَسُوْلِنَا நம் தூதர் மீது الْبَلٰغُ எடுத்துரைப்பது الْمُبِيْنُ தெளிவாக
5:92. இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
5:92. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
5:92. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் (மாறு செய்வதிலிருந்து) விலகியிருங்கள். இதனை (ஆணையை) நீங்கள் புறக் கணித்து விட்டால் (நமது தூதைத்) தெள்ளத் தெளிவாய் எடுத்துரைப்பது மட்டுமே நமது தூதர் மீது கடமையாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
5:92. அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், (மாறு செய்யாது) எச்சரிக்கையாகவுமிருங்கள், எனவே, (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், அப்போது நிச்சயமாக நம் தூதர் மீது கடமையெல்லாம் (நம் கட்டளைகளை உங்களுக்குத்) தெளிவாக எத்தி வைப்பது தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்,
5:93 لَـيْسَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِيْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوا وَّاَحْسَنُوْا ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
لَـيْسَ இல்லை عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை جُنَاحٌ குற்றம் فِيْمَا எதில் طَعِمُوْۤا புசித்தார்கள் اِذَا مَا اتَّقَوا தவிர்ந்து கொண்டால் وَّاٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை ثُمَّ பிறகு اتَّقَوا அஞ்சினார்கள் وَّاٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டார்கள் ثُمَّ பிறகு اتَّقَوا அஞ்சினார்கள் وَّاَحْسَنُوْا ؕ இன்னும் நல்லறம் செய்தார்கள் وَاللّٰهُ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُحْسِنِيْنَ நல்லறம்புரிவோரை
5:93. ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
5:93. நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது, (தடுக்கப்பட்டபின் அவற்றிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே, தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்.
5:93. இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள், (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை. (ஆனால் இனி) தடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பவர்களாகவும், நற்செயல் புரிபவர்களாகவும், இன்னும் எந்த எந்தப் பொருள்களைவிட்டு தடுக்கப்படுகின்றனரோ அவற்றிலிருந்து விலகியிருப்பவர்களாகவும், மேலும் இறைக் கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும் இன்னும் இறையச்சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்பவர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் நன்னடத்தையுடையோரை நேசிக்கின்றான்.
5:93. விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தவர்கள் மீது அவர்கள் பயந்து விசுவாசங்கொண்டு (அதன்மீது நிலைத்திருந்து) நற்செயல்கள் புரிந்து பின்னர், அவர்கள் (அல்லாஹ்வை) பயந்து விசுவாசங்கொண்டு பிறகும் (அல்லாஹ்வை) பயந்து (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (தடுக்கப்பட்டவற்றிலிருந்து முன்னர்) அவர்கள் சாப்பிட்டதில் எவ்வித குற்றமுமில்லை, அல்லாஹ்வோ (இத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கிறான்.!
5:94 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَيَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَىْءٍ مِّنَ الصَّيْدِ تَنَالُـهٗۤ اَيْدِيْكُمْ وَ رِمَاحُكُمْ لِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّخَافُهٗ بِالْـغَيْبِ ۚ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰ لِكَ فَلَهٗ عَذَابٌ اَ لِيْمٌ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَيَبْلُوَنَّكُمُ நிச்சயமாக சோதிப்பான் / உங்களை اللّٰهُ அல்லாஹ் بِشَىْءٍ சிலதைக் கொண்டு مِّنَ الصَّيْدِ வேட்டைகளில் تَنَالُـهٗۤ அடைந்து விடுகின்றன/அதை اَيْدِيْكُمْ உங்கள் கரங்கள் وَ رِمَاحُكُمْ இன்னும் ஈட்டிகள் / உங்கள் لِيَـعْلَمَ அறிவதற்காக اللّٰهُ அல்லாஹ் مَنْ எவர் يَّخَافُهٗ பயப்படுகிறார்/தன்னை بِالْـغَيْبِ ۚ மறைவில் فَمَنِ எவர் اعْتَدٰى மீறினார் بَعْدَ ذٰ لِكَ இதற்குப் பின்பு فَلَهٗ அவருக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ துன்புறுத்தக்கூடியது
5:94. ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
5:94. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறி(வித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்கள் கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய ஒரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
5:94. இறைநம்பிக்கை கொண்டவர்களே! (இஹ்ராமுடைய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப் பிராணிகள் ஏதாவதொன்றின் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். மறைவான நிலையிலும் தன்னை அஞ்சக்கூடியவர்கள் யார் என்று அல்லாஹ் அறிந்து கொள்வதற்காக! இவ்வாறு எச்சரித்த பிறகு யார் (அல்லாஹ் நிர்ணயித்த) வரம்பை மீறுகின்றாரோ அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.
5:94. விசுவாசங்கொண்டோரே! (நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில்) உங்களுடைய கரங்களும், உங்களுடைய ஈட்டிகளும், எதனை எளிதில் அடையுமோ, அத்தகைய வேட்டைப்பிராணிகளில் ஏதாவதொன்றைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான், மறைவில் அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறிவித்து விடுவதற்காகவே (இவ்வாறு செய்கிறான்), ஆகவே, இதற்குப் பின்னர் எவர் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுகிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
5:95 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْـتُمْ حُرُمٌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْـكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰ لِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ؕ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَقْتُلُوا கொல்லாதீர்கள் الصَّيْدَ வேட்டையை وَاَنْـتُمْ நீங்கள் حُرُمٌ ؕ இஹ்ராமுடையவர்கள் وَمَنْ எவர் قَتَلَهٗ கொன்றார்/அதை مِنْكُمْ உங்களில் مُّتَعَمِّدًا வேண்டுமென்றே (நாடியவராக) فَجَزَآءٌ தண்டனை مِّثْلُ ஒப்பானது مَا எது قَتَلَ கொன்றார் مِنَ இருந்து النَّعَمِ கால்நடைகள் يَحْكُمُ தீர்ப்பளிப்பர் بِهٖ அதற்கு ذَوَا عَدْلٍ நேர்மையான இருவர் مِّنْكُمْ உங்களில் هَدْيًاۢ பலியாக بٰلِغَ அடையக் கூடியது الْـكَعْبَةِ கஅபா اَوْ அல்லது كَفَّارَةٌ பரிகாரம் طَعَامُ உணவளிப்பது مَسٰكِيْنَ ஏழைகள் اَوْ அல்லது عَدْلُ சமமானது ذٰ لِكَ அது صِيَامًا நோன்பால் لِّيَذُوْقَ அவன் அனுபவிப்பதற்காக وَبَالَ கெட்ட முடிவை اَمْرِهٖ ؕ செயல் / தனது عَفَا மன்னித்தான் اللّٰهُ அல்லாஹ் عَمَّا سَلَفَ ؕ முன் நடந்தவற்றை وَمَنْ எவன் عَادَ மீண்டான் فَيَنْتَقِمُ தண்டிப்பான் اللّٰهُ அல்லாஹ் مِنْهُ ؕ அவனை وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் ذُو انْتِقَامٍ தண்டிப்பவன்
5:95. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான்.
5:95. நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதை வேண்டுமென்ன்ற கொன்றுவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் அதற்குச் சமமானதை (பரிகாரமாக) ஈடு கொடுக்க வேண்டும். உங்களில் நேர்மையான இருவர் நீங்கள் (ஈடாகக்) கொடுக்கும் பொருள் அதற்குச் சமமெனத் தீர்ப்பளிக்க வேண்டும். இதைக் காணிக்கையாக கஅபாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது (அதன் மதிப்புக்கு) ஏழைகளுக்கு உணவு அளிப்பது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். (பரிகாரமளிக்கப் பொருள் இல்லாதவன்) தான் செய்த குற்றத்தின் பலனை அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும். (இதற்கு) முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவரேனும் (இத்தகைய குற்றம் செய்ய) மீண்டும் திரும்பி விட்டால் அல்லாஹ் அவனை தண்டிப்பான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (குற்றவாளிகளை) தண்டிப்பவன் ஆவான்.
5:95. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! மேலும், உங்களில் யாரேனும் வேண்டுமென்றே வேட்டை(யாடி)ப் பிராணியைக் கொன்றுவிட்டால், அதற்குப் பரிகாரமாக அவர், தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியைக் கால்நடைகளிலிருந்து பலி கொடுக்க வேண்டும். உங்களில் இரு நீதியாளர்கள் அதனைத் தீர்மானிக்க வேண்டும். அந்தப் பலிப் பிராணி கஅபாவில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அல்லது (அச்செயலுக்கு) குற்றப்பரிகாரமாக ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்குச் சமமாக அவர் நோன்பு நோற்க வேண்டும். தான் செய்த தீய செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவே (இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது). முன்பு செய்தவற்றையெல்லாம் அல்லாஹ் மன்னித்து விட்டான். எனவே யாரேனும் மீண்டும் அச்செயலைப் புரிந்தால், அல்லாஹ் அவரைப் பழிவாங்குவான். மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிவாங்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.
5:95. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; மேலும், உங்களில் எவரேனும், வேண்டுமென்றே அதனைக் கொன்றுவிட்டால், (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) பிராணிகளிலிருந்து அவர் கொன்றுவிட்டதற்குச் சமமானது (அதற்கு) தண்டனையாகும்; உங்களில் நீதியுடைய இருவர் அதற்குத் தீர்ப்பளி(க்கும் பொருளை நீங்கள் ஈடாகக் கொடு)க்க வேண்டும், (அது) ‘கஅபா’வை அடையவேண்டிய குர்பானியாகும்; அல்லது (அதன் கிரயத்தில்,) ஏழைகளுக்கு ஆகாரமளிப்பது அதற்கு பரிகாரமாகும், அல்லது தான் செய்த காரியத்தின் தண்டனையை அவன் அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும், முன் நடந்தவைகளை அல்லாஹ் மன்னித்து விட்டான், (இத்தகைய குற்றம் செய்ய) எவரும் (பின்னும்) மீண்டால் அப்போது, அல்லாஹ் அவரை தண்டனை செய்வான்; இன்னும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன், தண்டித்தலையுடையவன்.
5:96 اُحِلَّ لَـكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّـكُمْ وَلِلسَّيَّارَةِ ۚ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَـرِّ مَا دُمْتُمْ حُرُمًا ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ
اُحِلَّ அனுமதிக்கப்பட்டுள்ளது لَـكُمْ உங்களுக்கு صَيْدُ வேட்டையாடுவது الْبَحْرِ கடலில் وَطَعَامُهٗ இன்னும் அதை புசிப்பது مَتَاعًا பயனளிப்பதற்காக لَّـكُمْ உங்களுக்கு وَلِلسَّيَّارَةِ ۚ இன்னும் பயணிகளுக்கு وَحُرِّمَ விலக்கப்பட்டுள்ளது عَلَيْكُمْ உங்களுக்கு صَيْدُ வேட்டையாடுவது الْبَـرِّ தரையில் مَا دُمْتُمْ இருக்கும்போதெல்லாம் حُرُمًا ؕ இஹ்ராமுடைய வர்களாக وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْۤ எவன் اِلَيْهِ அவன் பக்கம் تُحْشَرُوْنَ நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
5:96. உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
5:96. (நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
5:96. (இஹ்ராமுடைய நிலையில்) நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கும் பயணக்கூட்டத்தாருக்கும் பயன் தருவதற்காக கடல் வேட்டையும் அதனை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆயினும், நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் இருக்கும் வரை தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. யார் முன்னிலையில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட இருக்கின்றீர்களோ அந்த இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழுங்கள்!
5:96. (நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில்) உங்களுக்கும் (இதரப்) பிரயாணிகளுக்கும் பயன் பெறுவதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளது, இன்னும், நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் இருக்கும் போதெல்லாம் கரையில் வேட்டையாடுவது, உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது, இன்னும், எவனின்பால் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்களோ அத்தகைய அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
5:97 جَعَلَ اللّٰهُ الْـكَعْبَةَ الْبَيْتَ الْحَـرَامَ قِيٰمًا لِّـلنَّاسِ وَالشَّهْرَ الْحَـرَامَ وَالْهَدْىَ وَالْقَلَاۤٮِٕدَ ؕ ذٰ لِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
جَعَلَ ஆக்கினான் اللّٰهُ அல்லாஹ் الْـكَعْبَةَ கஅபாவை الْبَيْتَ வீடு الْحَـرَامَ புனிதமானது قِيٰمًا அபயமளிக்கக்கூடியது, لِّـلنَّاسِ மக்களுக்கு وَالشَّهْرَ இன்னும் மாதத்தை الْحَـرَامَ புனிதமானது وَالْهَدْىَ இன்னும் பலியை وَالْقَلَاۤٮِٕدَ ؕ இன்னும் மாலைகளை ذٰ لِكَ அது لِتَعْلَمُوْۤا நீங்கள் அறிந்து கொள்வதற்காக اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَعْلَمُ அறிகிறான் مَا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَمَا இன்னும் எது فِى الْاَرْضِ பூமியில் وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ நன்கறிந்தவன்
5:97. அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.
5:97. சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட கால்நடைகளையும் (பாதுகாப்பு பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்). வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிபவன் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்).
5:97. அல்லாஹ், கண்ணியமிக்க ஆலயமாகிய கஅபாவை மக்களுக்கு (அவர்களின் கூட்டு வாழ்க்கைக்கான) கேந்திரமாய் அமைத்தான். மேலும், சங்கைக்குரிய மாதத்தையும், பலி பிராணிகளையும் (அவற்றின் கழுத்தில் இடப்பட்ட) அடையாள மாலைகளையும் இதற்குத் துணை புரியக் கூடியனவாய் ஆக்கினான். எதற்கு எனில் நீங்கள் இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக! வானங்களில் உள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் அல்லாஹ் திண்ணமாக நன்கு அறிகின்றான்; மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
5:97. சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு (இம்மை, மறுமையின்) ஜீவிய ஆதாரமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், (அவ்வாறே) சிறப்புற்ற மாதங்களையும் (ஹஜ்ஜில் அறுக்கப்படும்) அறுப்புப் பிராணிகளையும் (அறுத்துப்பலியிடுவதற்காக) அடையாளம் காட்டப்பட்ட கால்நடைகளையும், (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கின்றான்.) அ(வ்வாறு செய்த)து வானங்களிலுள்ளவற்றை மற்றும் பூமியிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான் என்பதையும் நீங்கள் அறிவதற்காகவேதான், இன்னும் நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன்.
5:98 اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ؕ
اِعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ தண்டனை وَاَنَّ اللّٰهَ இன்னும் நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ ؕ பெரும் கருணையாளன்
5:98. அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன்; மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்,
5:98. நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்; (அத்துடன்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்து பெரும் கருணை காட்டுபவன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
5:98. இன்னும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் தண்டனையளிப்பதில் கடுமையானவன்; மேலும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனாகவும் மாபெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
5:98. நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன், இன்னும் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக்கிருபையுடையவன், என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
5:99 مَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ
مَا கடமை இல்லை عَلَى மீது الرَّسُوْلِ தூதர் اِلَّا தவிர الْبَلٰغُ ؕ எடுத்துரைப்பது وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا எதை تُبْدُوْنَ வெளிப்படுத்துகிறீர்கள் وَمَا இன்னும் எதை تَكْتُمُوْنَ மறைக்கிறீர்கள்
5:99. (இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
5:99. நம் தூதருடைய கடமை (நம்) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
5:99. தூதுச் செய்தியை எடுத்துரைப்பதே தூதரின் பொறுப்பாகும்; நீங்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும், மூடி மறைக்கின்றவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
5:99. (நம் தூதை) எத்திவைப்பதைத் தவிர இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை, இன்னும் நீஙகள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் அல்லாஹ் அறிவான்.
5:100 قُلْ لَّا يَسْتَوِى الْخَبِيْثُ وَالطَّيِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيْثِ ۚ فَاتَّقُوا اللّٰهَ يٰۤاُولِى الْاَ لْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
قُلْ கூறுவீராக لَّا يَسْتَوِى சமமாகாது الْخَبِيْثُ தீயது وَالطَّيِّبُ இன்னும் நல்லது وَلَوْ اَعْجَبَكَ உம்மை ஆச்சரியப்படுத்தினாலும் كَثْرَةُ அதிகமாக இருப்பது الْخَبِيْثِ ۚ فَاتَّقُوا தீயது/ஆகவேஅஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை يٰۤاُولِى الْاَ لْبَابِ அறிவாளிகளே لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
5:100. (நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “தீயதும், நல்லதும் சமமாகாது; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக.
5:100. (நபியே! நீர் அவர்களை நோக்கி ‘‘எங்கும்) தீயவை அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்திய போதிலும், நல்லதும் தீயதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்'' என்று கூறுவீராக.
5:100. (நபியே!) நீர் அவர்களிடம் கூறிவிடும்: “தூய்மையானவையும், தூய்மையற்றவையும் ஒரு போதும் சமமாகமாட்டா. தூய்மையில்லாதவை பெருகிக்கிடப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே! எனவே அறிவுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டு விலகியே வாழுங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்.”
5:100. கெட்டது அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “கெட்டதும், நல்லதும் சமமாகாது” என (நபியே!) நீர் கூறுவீராக! ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகி)க் கொள்ளுங்கள், (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:101 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَسْـٴَــلُوْاعَنْ اَشْيَآءَ اِنْ تُبْدَ لَـكُمْ تَسُؤْكُمْۚ وَاِنْ تَسْـٴَــلُوْاعَنْهَا حِيْنَ يُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَـكُمْ ؕ عَفَا اللّٰهُ عَنْهَا ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَسْـٴَــلُوْا கேள்வி கேட்காதீர்கள் عَنْ اَشْيَآءَ பல விஷயங்கள் பற்றி اِنْ تُبْدَ لَـكُمْ அவை வெளியாக்கப்பட்டால்/உங்களுக்கு تَسُؤْكُمْۚ வருத்தமளிக்கும்/உங்களுக்கு وَاِنْ تَسْـٴَــلُوْا நீங்கள் கேள்வி கேட்டால் عَنْهَا அவற்றைப் பற்றி حِيْ நேரத்தில் يُنَزَّلُ இறக்கப்படும் الْقُرْاٰنُ குர்ஆன் تُبْدَ لَـكُمْ ؕ வெளியாக்கப்படும்/உங்களுக்கு عَفَا மன்னித்தான் اللّٰهُ عَنْهَا ؕ அல்லாஹ்/அவற்றை وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் حَلِيْمٌ பெரும் சகிப்பாளன்
5:101. ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும்; மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான்; அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்.
5:101. நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். (பல விஷயங்கள்) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும். அதிலும் இந்தக் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில், அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டு (கடமையாகி)விடும். (அதனால் நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விடலாம். எனினும், இதுசமயம்) அதைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், அதிகம் சகித்துக்கொள்பவன் ஆவான்.
5:101. இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்கள் உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி நீங்கள் வினவாதீர்கள். ஆயினும் குர்ஆன் இறக்கியருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டு விடும். நீங்கள் (இதுவரை) கேட்டவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
5:101. விசுவாசங்கொண்டோரே! (நபியிடம்) பல விஷயங்களைப் பற்றிக் கேட்காதீர்கள், (அவைகள்) உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால், (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும் மேலும், இந்தக் குர் ஆன் இறக்கப்படுகின்ற சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டுவிடும், (வீணாகக் கேட்டுக்கொண்டிருந்த) அதனைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான், மேலும், அல்லாஹ்வோ மிக்க மன்னிக்கிறவன், மிகுந்த சகிப்புத்தன்மையுடையவன்.
5:102 قَدْ سَاَ لَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِيْنَ
قَدْ திட்டமாக سَاَ لَهَا கேட்டார்(கள்) / அவற்றைப் பற்றி قَوْمٌ சில மக்கள் مِّنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்பு ثُمَّ பிறகு اَصْبَحُوْا மாறிவிட்டனர் بِهَا அவற்றை كٰفِرِيْنَ நிராகரிப்பவர்களாக
5:102. உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.
5:102. உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறிவிட்டார்கள்.
5:102. உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு கூட்டத்தார் இத்தகைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பிறகு அவற்றின் காரணமாகவே அவர்கள் நிராகரிப்பில் ஆழ்ந்து விட்டார்கள்.
5:102. உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு கூட்டத்தார் அவற்றை (அவர்களுடைய நபியிடம் இவ்வாறே) திட்டமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர், (அவை பற்றி அவர்களுக்கு தெளிவு செய்யப்பட்ட) பின்னர், அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டனர்.
5:103 مَا جَعَلَ اللّٰهُ مِنْۢ بَحِيْرَةٍ وَّلَا سَآٮِٕبَةٍ وَّلَا وَصِيْلَةٍ وَّلَا حَامٍ ۙ وَّلٰـكِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ ؕ وَاَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ
مَا جَعَلَ ஏற்படுத்தவில்லை اللّٰهُ அல்லாஹ் مِنْۢ எதையும் بَحِيْرَةٍ பஹீரா وَّلَا سَآٮِٕبَةٍ ஸாயிபா وَّلَا وَصِيْلَةٍ வஸீலா وَّلَا حَامٍ ۙ ஹறாம் وَّلٰـكِنَّ எனினும் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் يَفْتَرُوْنَ கற்பனை செய்கின்றனர் عَلَى اللّٰهِ அல்லாஹ் மீது الْـكَذِبَ ؕ பொய்யை وَاَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْقِلُوْنَ புரிய மாட்டார்கள்
5:103. பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுயேச்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ஹாமி (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேச்சையாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை - ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர் மேலும் அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.
5:103. பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத் தியவையல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவை அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர்.
5:103. ‘பஹீரா’, ஸாயிபா, வஸீலா, ஹாம்,* என்பனவற்றை யெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆயினும் நிராகரிப்போர்தான் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். மேலும், அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர்.
5:103. பஹீரா (காது கிழிக்கபபட்ட பெண் ஒட்டகம்) ஸாயிபா (சுதந்திரமாக மேயவிடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதால் விக்ரகங்களுக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆடுகள்), ஹாம் (வேலைக்கு பயன்படுத்தப்படாது வீணடிக்கப்பட்ட ஆண் ஒட்டகம் முதலிய) இவைகளெல்லாம், அல்லாஹ் ஏற்படுத்தியவைகளல்ல, எனினும், நிராகரிப்போர் தாம் (இவைகள் அல்லாஹ் ஏற்படுத்தியவைகளென) அல்லாஹ்வின் மீது, பொய்யைக் கற்பனை செய்(து கூறு)கின்றனர், மேலும், அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
5:104 وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْــٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு تَعَالَوْا வாருங்கள் اِلٰى பக்கம் مَاۤ எது اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் وَاِلَى இன்னும் பக்கம் الرَّسُوْلِ தூதர் قَالُوْا கூறினர் حَسْبُنَا எங்களுக்குப் போதும் مَا எது وَجَدْنَا கண்டோம் عَلَيْهِ அதன் மீது اٰبَآءَنَا ؕ எங்கள் மூதாதைகளை اَوَلَوْ كَانَ இருந்தாலுமா? اٰبَآؤُ மூதாதைகள் هُمْ அவர்களுடைய لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள் شَيْــٴًـــا எதையும் وَّلَا يَهْتَدُوْنَ இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்
5:104. “அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)
5:104. “அல்லாஹ் இறக்கிவைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)!
5:104. “மேலும், அல்லாஹ் இறக்கி வைத்த சட்டத்தின் பக்கமும், இறைத்தூதரின் பக்கமும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படுமாயின் “எங்கள் மூதாதையர் எவ்வழியில் வாழக்கண்டோமோ அவ்வழியே எங்களுக்குப் போதுமானது” என்று பதில் கூறுகிறார்கள். இவர்களின் மூதாதையர் எதையும் புரியாதவர்களாகவும், நேர்வழியைக் குறித்து எதையும் அறியாதவர்களாகவும் இருந்தாலுமா அவர்களை இவர்கள் பின்பற்றிச் செல்வார்கள்?
5:104. “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தின்பாலும் (அவனுடைய) இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், எங்களுடைய மூதாதையர்களை எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்குப் போதும்” எனக் கூறுகின்றனர், அவர்களுடைய மூதாதையர்கள் யாதொன்றையும் அறியாதவர்களாவும், நேரான வழியில் இல்லாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்கள் தங்கள் மூதாதையர்களைப் பின்பற்றுவார்கள்?,)
5:105 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَيْتُمْ ؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُـنَـبِّـئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே عَلَيْكُمْ காத்துக்கொள்ளுங்கள் اَنْفُسَكُمْۚ உங்களை لَا மாட்டார் يَضُرُّكُمْ உங்களுக்கு தீங்கிழைக்க مَّنْ எவர் ضَلَّ வழிகெட்டார் اِذَا اهْتَدَيْتُمْ ؕ நீங்கள் நேர்வழி சென்றால் اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் جَمِيْعًا அனைவரும் فَيُـنَـبِّـئُكُمْ ஆகவே அறிவிப்பான்/உங்களுக்கு بِمَا எதை كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ செய்கிறீர்கள்
5:105. ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.
5:105. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்.
5:105. இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது. அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. பின்னர் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.
5:105. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறியவர் உங்களுக்கு எவ்வித தீங்கும் செய்ய மாட்டார், அல்லாஹ்வின் பக்கமே உங்கள் யாவரின் மீட்சி இருக்கிறது, நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்.
5:106 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَيْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِيْنَ الْوَصِيَّةِ اثْـنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرَانِ مِنْ غَيْـرِكُمْ اِنْ اَنْـتُمْ ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِيْبَةُ الْمَوْتِ ؕ تَحْبِسُوْنَهُمَا مِنْۢ بَعْدِ الصَّلٰوةِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِىْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى ۙ وَلَا نَـكْتُمُ شَهَادَةَ ۙ اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِيْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே شَهَادَةُ சாட்சியாக இருக்க வேண்டும் بَيْنِكُمْ உங்கள் மத்தியில் اِذَا حَضَرَ சமீபித்தால் اَحَدَكُمُ உங்களில் ஒருவருக்கு الْمَوْتُ மரணம் حِيْنَ நேரத்தில் الْوَصِيَّةِ மரண சாஸனம் اثْـنٰنِ இருவர் ذَوَا عَدْلٍ நீதமான இருவர் مِّنْكُمْ உங்களில் اَوْ அல்லது اٰخَرَانِ வேறிருவர் مِنْ சேர்ந்த غَيْـرِكُمْ நீங்கள் அல்லாத اِنْ اَنْـتُمْ ضَرَبْتُمْ நீங்கள் பயணித்தால் فِى الْاَرْضِ பூமியில் فَاَصَابَتْكُمْ அடைந்தால்/உங்களை مُّصِيْبَةُ சோதனை الْمَوْتِ ؕ மரணம் تَحْبِسُوْنَهُمَا தடுத்து வையுங்கள்/அவ்விருவரை مِنْۢ بَعْدِ பின்னர் الصَّلٰوةِ தொழுகை فَيُقْسِمٰنِ அவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது اِنِ ارْتَبْتُمْ நீங்கள் சந்தேகித்தால் لَا نَشْتَرِىْ வாங்கமாட்டோம் بِهٖ அதற்குப் பகரமாக ثَمَنًا ஓர் ஆதாயத்தை وَّلَوْ كَانَ அவர் இருந்தாலும் ذَا قُرْبٰى ۙ உறவினராக وَلَا نَـكْتُمُ இன்னும் மறைக்க மாட்டோம் شَهَادَةَ ۙ சாட்சி கூறியதில் اللّٰهِ அல்லாஹ்விற்காக اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِذًا அப்போது لَّمِنَ الْاٰثِمِيْنَ பாவிகளில்
5:106. ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் “நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்“ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
5:106. நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அவர் மரண சாசனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்துகொண்டு இருக்கும்பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாசனத்தின் சாட்சிக்காக முஸ்லிம்களாகிய இருவர் கிடைக்காவிடில்) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில்) உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப்பின் தடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்விருவரும் ‘‘நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு ஒரு பொருளையும் அதற்காக நாங்கள் அடையவிரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
5:106. இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவருக்கேனும் மரண வேளை நெருங்கி விட்டால், அவர் வஸிய்யத் மரண சாசனம் தரும் நேரத்தில் அதைப் பற்றிச் சாட்சியம் அளிப்பதற்கான விதிமுறை இதுவே; உங்களிடையே நீதமுள்ள இருவர் சாட்சிகளாக்கப்பட வேண்டும். அல்லது நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது மரண வேதனை உங்களுக்கு வந்துவிட்டால் உங்களைத் தவிர வேறு இருவரைச் சாட்சிகளாய் ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொள்வீர்களாயின் தொழுகைக்குப் பிறகு (பள்ளியில்) அவர்களை நீங்கள் தடுத்து வையுங்கள்! அவ்விருவரும் இறைவன் மீது ஆணையிட்டு (இவ்வாறு) கூறவேண்டும்: “நாங்கள் சொந்த லாபத்திற்காக சாட்சியத்தை விற்கமாட்டோம். மேலும், யாருக்காக சாட்சி சொல்கிறோமோ அவர் எங்கள் உறவினராக இருந்தாலும் சரியே! (அதற்காக அவருக்கு எந்தச் சலுகையும் காட்ட மாட்டோம்.) மேலும், அல்லாஹ்வுக்காக கூறும் சாட்சியத்தில் நாங்கள் எதையுமே மறைக்க மாட்டோம். அவ்வாறு செய்வோமாயின் திண்ணமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்.”
5:106. விசுவாசங்கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் (சம்பவிக்க) (அதன் அடையாளங்கள் காணப்பட்டு) ஆஜராகிவிட்டால் அவர் (மரண) சாசனம் செய்யும் சமயத்தில் உங்களுக்கிடையில் சாட்சி உங்களின் சுற்றத்தாரிலிருந்து நீதியுடைய இருவர் இருத்தல் வேண்டும், அல்லது நீங்கள் பூமியில் பிரயாணம் செய்து அப்பொழுது மரணத்துன்பம் உங்களைப்பீடித்துவிட்டால், உங்களையல்லாத வேறு இருவர் சாட்சிகளாக இருத்தல் வேண்டும், (அந்த சாட்சிகளைப்பற்றி வாரிசுதாரர்களாகிய) நீங்கள் சந்தேகப்பட்டால் தொழுகைக்குப்பின் அவ்விருவரையும் நீங்கள் தடுத்து வைப்பீர்கள், அப்போது, அவ்விருவரும் அல்லாஹ்வைக் கொண்டு அதனை (நீதியாக சாட்சி கூறுவதன்மூலம் எங்களுக்கு அல்லாஹ்விடம் கிடைக்க இருக்கும் பாக்கியத்தை பொய்சாட்சி கூறுவதைக் கொண்டு இவ்வுலகில் எங்களுக்குக் கிடைக்கும்) சொற்ப கிரயத்திற்கு விற்று விடமாட்டோம், (எவருக்கு சாட்சியம் கூறுகிறோமோ) அவர் சுற்றத்தாராக இருந்தாலும் சரியே, இன்னும், அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவுமாட்டோம், (அவ்வாறு மறைத்தால்) நிச்சயமாக நாங்கள் அப்பொழுது குற்றவாளிகளில் ஆகிவிடுவோம் என்று (கூறி அவ்விருவரும்) அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வர்.
5:107 فَاِنْ عُثِرَ عَلٰٓى اَنَّهُمَا اسْتَحَقَّاۤ اِثْمًا فَاٰخَرٰنِ يَقُوْمٰنِ مَقَامَهُمَا مِنَ الَّذِيْنَ اسْتَحَقَّ عَلَيْهِمُ الْاَوْلَيٰنِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ لَشَهَادَتُنَاۤ اَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَ مَا اعْتَدَيْنَاۤ ۖ اِنَّاۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ
فَاِنْ عُثِرَ கண்டுபிடிக்கப்பட்டால் عَلٰٓى மீது اَنَّهُمَا நிச்சயமாக அவ்விருவரும் اسْتَحَقَّاۤ உரியவர்களாகி விட்டனர் اِثْمًا பாவத்திற்கு فَاٰخَرٰنِ வேறு இருவர் يَقُوْمٰنِ நிற்பார்கள் مَقَامَهُمَا அவ்விருவருடைய இடத்தில் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اسْتَحَقَّ உரிமை ஏற்பட்டது عَلَيْهِمُ அவர்களுக்கு الْاَوْلَيٰنِ நெருங்கிய இரு வாரிசுகள் فَيُقْسِمٰنِ அவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது لَشَهَادَتُنَاۤ நிச்சயமாக எங்கள்சாட்சியம் اَحَقُّ மிக உண்மையானது مِنْ شَهَادَتِهِمَا அவ்விருவரின் சாட்சியத்தைவிட وَ مَا اعْتَدَيْنَاۤ ۖ நாங்கள்வரம்புமீறவில்லை اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِذًا அப்போது لَّمِنَ الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களில்தான்
5:107. நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று: “அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்பு மீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக் காரர்களாகி விடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.
5:107. (இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் பொய் சாட்சியத்தினால்) எவருக்கு நஷ்டமேற்பட்டதோ அவர் சார்பில் வேறு இருவர், (முன்பு சத்தியம் செய்த) அவர்களுடைய இடத்தில் நின்று, ‘‘அவர்களுடைய சாட்சியத்தை விட எங்கள் சாட்சியம்தான் உண்மையானது (என உறுதி கூறுகிறோம்), நாங்கள் தவறாக ஏதும் கூறவில்லை. அவ்வாறு கூறினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
5:107. ஆனால் அவ்விருவரும் (பொய் சாட்சியம் கூறி) பாவத்திற்கு ஆளாகி விட்டார்கள் என்று திண்ணமாக அறியப்பட்டால் உரிமை பாதிக்கப்பட்டவர்களிலிருந்து அதிகத் தகுதி வாய்ந்த வேறு இருவர் அவ்விருவருடைய இடத்தில் (சாட்சிகூற) நிற்க வேண்டும். மேலும், “எங்களுடைய சாட்சியம் திண்ணமாக அவ்விருவருடைய சாட்சியத்தை விட வாய்மையானது. நாங்கள் (சாட்சியங் கூறுவதில்) வரம்பு மீறவில்லை. அவ்வாறு வரம்பு மீறியிருந்தால் திண்ணமாக நாங்கள் கொடுமைக்காரர்களாகி விடுவோம்” என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூற வேண்டும்.
5:107. நிச்சயமாக அவ்விருவரும், (இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியபின் சாட்சியத்தில் அல்லது சத்தியத்தில் பொய் கூறி மோசடி செய்திருப்ப(தன் மூலம்) பாவத்திற்குரியவர்களாகி விட்டார்களென்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், எவர்களுக்கு சாசனம் செய்யப்பட்ட பொரு)ள் மீது உரிமை இருக்கிறதோ, அத்தகையோரிலிருந்து (மரண சாசனம் செய்வித்தவர்க்கு) மிக உரியவர்களான வேறு இருவர், அவ்விருவரின் இடத்தில் நின்று கொண்டு திட்டமாக எங்களின் சாட்சியம் அவ்விருவரின் சாட்சியத்தைவிட மிக்க உண்மையானதாகும், நாங்கள் (இவ்வாறு சத்தியம் செய்வதில்) வரம்பு மீறவுமில்லை, (அவ்வாறு மீறி இருப்பின்) அப்போது நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களில் உள்ளோராகிவிடுவோம் என்று அல்லாஹ்வைக் கொண்டு அவ்விருவரும் சத்தியம் செய்வர்.
5:108 ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يَّاْتُوْا بِالشَّهَادَةِ عَلٰى وَجْهِهَاۤ اَوْ يَخَافُوْۤا اَنْ تُرَدَّ اَيْمَانٌۢ بَعْدَ اَيْمَانِهِمْؕ وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
ذٰ لِكَ اَدْنٰٓى அது/மிக்கசுலபமானது اَنْ يَّاْتُوْا அவர்கள் வருவதற்கு بِالشَّهَادَةِ சாட்சியத்தைக் கொண்டு عَلٰى وَجْهِهَاۤ அதற்குரிய முறையில் اَوْ அல்லது يَخَافُوْۤا அவர்கள் பயப்படுவது اَنْ تُرَدَّ மறுக்கப்படும் اَيْمَانٌۢ சத்தியங்கள் بَعْدَ பின்னர் اَيْمَانِهِمْؕ அவர்களுடைய சத்தியங்கள் وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاسْمَعُوْا ؕ செவிசாயுங்கள் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ கூட்டத்தை الْفٰسِقِيْنَ பாவிகளான
5:108. இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
5:108. உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழியாகும், அவர்கள் (பொய்) சத்தியம் செய்தாலும், மற்றவரின் சத்தியம் அதைத் தடுத்துவிடும் என்று அவர்கள் பயப்படுவதற்கும் இது மிக்க சுலபமான வழி. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அவன் கட்டளைக்கே) நீங்கள் செவிசாயுங்கள். (இதற்கு மாறு செய்யும்) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்.
5:108. மக்கள் சரியான முறையில் சாட்சியம் அளிப்பதற்கு அல்லது (குறைந்தபட்சம்) தம் சாட்சியங்களுக்குப் பிறகு (பிறர் சாட்சியம் அளித்து) தம் சாட்சியங்கள் மறுக்கப்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சி, (உண்மையாக) சாட்சி அளிப்பதற்கு இந்த வழிமுறைதான் அதிகப் பொருத்தமானதாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள்! அவனுக்கே செவிசாயுங்கள்! அல்லாஹ் (தனது கட்டளைக்கு) கீழ்ப்படியாதவர்களை நேர்வழிப்படுத்துவதில்லை.
5:108. (மேற்கூறப்பட்ட) அ(ம்முறையான)து சாட்சியத்தை அதன் சரியான முறைப்படி (மாற்றாது, மோசடி செய்யாது) அவர்கள் கொண்டு வருவதற்கும், அல்லது (உண்மை கூறும்) அவர்களின் சத்தியங்களுக்குப் பின் (பொய் கூறிய இவர்களின்) சத்தியங்கள் மறுக்கப் பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் மிக நெருக்கமானதாகும், மேலும், (பொய்சத்தியம் கூறும் விஷயத்தில்) அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், (அவனின் கட்டளைகளுக்கு) செவியும் சாயுங்கள், இன்னும் அல்லாஹ் பாவிகளான சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
5:109 يَوْمَ يَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَيَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ ؕ قَالُوْا لَا عِلْمَ لَـنَا ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ
يَوْمَ நாளில் يَجْمَعُ ஒன்று சேர்ப்பான் اللّٰهُ அல்லாஹ் الرُّسُلَ தூதர்களை فَيَقُوْلُ கூறுவான் مَاذَاۤ என்ன? اُجِبْتُمْ ؕ பதில் கூறப்பட்டீர்கள் قَالُوْا கூறுவார்கள் لَا عِلْمَ அறவே ஞானமில்லை لَـنَا ؕ எங்களுக்கு اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் عَلَّامُ மிக மிக அறிந்தவன் الْغُيُوْبِ மறைவானவற்றை
5:109. (நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள்.
5:109. (நபியே!) ஒரு நாளில் அல்லாஹ், (தன்) தூதர்களை ஒன்று சேர்த்து ‘‘நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?'' என்று கேட்பான். அதற்கவர்கள், (‘‘நாங்கள் உயிருடன் இருந்த வரை அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான அனைத்தையும் நன்கறிந்தவன்'' என்று கூறுவார்கள்.
5:109. அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களையும் ஒன்று சேர்த்து, “உங்களு(டைய அழைப்பு)க்கு அளிக்கப்பட்ட மறுமொழி என்ன?” என்று கேட்கும் நாளில், “எங்களுக்கு எதுவும் தெரியாது. மறைவான உண்மைகள் அனைத்தையும் நன்கு அறிந்தவன் நீயே!” என்று அவர்கள் (பணிந்து) கூறுவார்கள்.
5:109. “அல்லாஹ் (தன்)தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில் (நீங்கள் எனது தூதை மக்களுக்கு எடுத்துரைத்த சமயத்தில்) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்” என்று கேட்பான், (அதற்கவர்கள் அதுபற்றி) “எங்களுக்கு எவ்வித அறிவுமில்லை, நிச்சயமாக நீ தான் மறைவானவற்றை நன்கறிந்தவன்” என்று கூறுவார்கள்.
5:110 اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ
اِذْ சமயம் قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் يٰعِيْسَى ஈஸாவே ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய اذْكُرْ நினைவு கூர்வீராக نِعْمَتِىْ என் அருளை عَلَيْكَ உம்மீது وَعَلٰى وَالِدَتِكَ ۘ இன்னும் மீது/உம் தாய் اِذْ சமயம் اَيَّدْتُّكَ பலப்படுத்தினேன்/உம்மை بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ பரிசுத்தமான تُكَلِّمُ பேசுவீர் النَّاسَ மக்களிடம் فِىْ الْمَهْدِ தொட்டிலில் وَكَهْلًا இன்னும் வாலிபராக ۚوَاِذْ இன்னும் சமயம் عَلَّمْتُكَ கற்பித்தேன்/உமக்கு الْـكِتٰبَ எழுதுவதை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَالتَّوْرٰٮةَ இன்னும் தவ்றாத்தை وَالْاِنْجِيْلَ ۚ இன்னும் இன்ஜீலை وَاِذْ இன்னும் சமயம் تَخْلُقُ படைப்பீர் مِنَ இருந்து الطِّيْنِ களிமண் كَهَيْـــٴَــةِ உருவத்தைப் போல் الطَّيْرِ பறவையின் بِاِذْنِىْ என் அனுமதியினால் فَتَـنْفُخُ ஊதுவீர் فِيْهَا அதில் فَتَكُوْنُ அது/ஆகிவிடும் طَيْرًۢا பறவையாக بِاِذْنِىْ என் அனுமதியினால் وَ تُبْرِئُ இன்னும் சுகமளிப்பீர் الْاَكْمَهَ பிறவிக் குருடரை وَالْاَبْرَصَ இன்னும் வெண்குஷ்டரை بِاِذْنِىْ ۚ என் அனுமதியினால் وَاِذْ இன்னும் சமயம் تُخْرِجُ வெளியாக்குவீர் الْمَوْتٰى மரணித்தவர்களை بِاِذْنِىْ ۚ என் அனுமதியினால் وَاِذْ இன்னும் சமயம் كَفَفْتُ தடுத்தேன் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களை عَنْكَ உம்மைவிட்டு اِذْ போது جِئْتَهُمْ வந்தீர்/அவர்களிடம் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு فَقَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْهُمْ அவர்களில் اِنْ இல்லை هٰذَاۤ இது اِلَّا தவிர سِحْرٌ சூனியம் مُّبِيْنٌ தெளிவானது
5:110. அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
5:110. பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீது(ம் நான் புரிந்து)ள்ள என் அருளை நினைத்துப் பார்ப்பீராக. பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உமக்கு உதவி புரிந்து (உமது தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீர் தொட்டில் குழந்தையாக இருந்த சமயத்திலும் (உமது தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உம்மைப் பேசச் செய்ததையும், (நினைத்துப் பார்ப்பீராக.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). மேலும், நீர் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையாக மாறியதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உதவியினால் நீர் சுகமாக்கியதையும் (நினைத்துப் பார்ப்பீராக). நீர் என் அருளைக்கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உமக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பார்ப்பீராக.
5:110. அல்லாஹ், இவ்வாறு கூறும் சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! நான் உமக்கும் உம்முடைய அன்னைக்கும் வழங்கியிருந்த அருட்கொடைகளை நினைவுகூரும். பரிசுத்த ஆன்மாவின் மூலம் உமக்கு நான் உதவி செய்திருந்தேன். (அதனால்) நீர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் உரையாடினீர்; மேலும், நான் உமக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுத் தந்திருந்தேன். மேலும், நீர் எனது கட்டளைப்படி களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதினீர். அது எனது கட்டளைப்படி (உயிருள்ள) பறவையாகிவிட்டது. நீர் பிறவிக் குருடனையும், வெண்குஷ்டக்காரனையும் எனது கட்டளைப்படி குணப்படுத்தினீர். நீர் மரணித்தவர்களை எனது கட்டளைப்படி வெளிக்கொணர்ந்தீர். மேலும், நீர் இஸ்ராயீலின் வழித்தோன்றலிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுசென்ற போது, அவர்களில் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள் “இச்சான்றுகள் தெளிவான சூனியமே அன்றி வேறில்லை” என்று கூறிய வேளையில், அவர்களை விட்டும் நான் உம்மைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தையும் நினைத்துப் பாரும்!”
5:110. “மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்மீதும், உம் தாய்மீதும் (நான் புரிந்து) உள்ள என்னுடைய அருளை நீர் நினைவுகூர்வீராக!” பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு, உம்மை நான் பலப்படுத்திய பொழுது நீர் தொட்டிலிலும், பக்குவ வயதிலும் (மனிதர்களிடத்தில்) பேசினீரென்பதையும் (நினைவு கூர்வீராக!) மேலும், வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்ததையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்றுக்கொடுத்ததையும், நினைவுகூர்வீராக!) இன்னும், நீர் என் உத்தரவைக் கொண்டு, களிமண்ணால் பறவையின் உருவத்தைப்போல் செய்து, அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் உத்தரவு கொண்டு பறவையானதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உத்தரவைக்கொண்டு நீர் சுகப்படுத்தியதையும் (நினைவு கூர்வீராக!) நீர் என் உத்தரவைக் கொண்டு இறந்தோரை(க் கல்லரையிலிருந்து உயிர்ப்பித்து) நீர் வெளியேற்றியதையும் (நினைவு கூர்வீராக!) இன்னும், இஸ்ராயீலின் மக்களிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள், “நிச்சயமாக இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று கூறிய சமயத்தில், அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மைத் தடுத்துக் கொண்டதையும் நினைவுகூர்வீராக! என்று (ஈஸாவை அழைத்து) அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக!)
5:111 وَ اِذْ اَوْحَيْتُ اِلَى الْحَـوَارِيّٖنَ اَنْ اٰمِنُوْا بِىْ وَبِرَسُوْلِىْۚ قَالُوْۤا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّـنَا مُسْلِمُوْنَ
وَ اِذْ சமயத்தை நினைவு கூர்வீராக اَوْحَيْتُ வஹீ அறிவித்தேன் اِلَى பக்கம் الْحَـوَارِيّٖنَ சிஷ்யர்கள் اَنْ اٰمِنُوْا بِىْ நம்பிக்கை கொள்ளுங்கள் என்று/என்னை وَبِرَسُوْلِىْۚ இன்னும் என் தூதரை قَالُوْۤا கூறினார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் وَاشْهَدْ இன்னும் சாட்சியளிப்பீராக بِاَنَّـنَا நிச்சயமாக நாங்கள் مُسْلِمُوْنَ முஸ்லிம்கள்
5:111. “என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்: நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.
5:111. என்னையும், என் தூதரையும் (அதாவது உம்மையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சியாக இருக்கவும்! என்று கூறியதையும் நினைத்துப் பார்ப்பீராக (என்றும் அந்நாளில் கூறுவான்).
5:111. மேலும், “என்மீதும், என்னுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்!” என்று திருத்தொண்டர்களாகிய ஹவாரிகளுக்கு நான் உணர்த்தியபோது அவர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், நாங்கள் முஸ்லிம்கள் (முற்றிலும் அடிபணிந்தவர்கள்) என்பதற்கு நீ சாட்சியாக இருப்பாயாக!” என்று கூறினார்கள்.
5:111. “அன்றியும் என்னையும் என்னுடைய தூதரையும் விசுவாசியுங்கள் என (உமது) சீடர்களுக்கு, நான் அறிவித்த சமயத்தில், (அவ்வாறே) “நாங்கள் விசுவாசித்தோம், நிச்சயமாக நாங்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லீம்கள் என்பதற்கு நீரே சாட்சியாகவும் இருப்பீராக!” என்று அவர்கள் கூறினார்கள் (என்பதையும் நினைவுகூர்வீராக! என்றும் அந்நாளில் கூறுவான்).
5:112 اِذْ قَالَ الْحَـوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ ؕ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
اِذْ قَالَ கூறிய சமயம் الْحَـوَارِيُّوْنَ சிஷ்யர்கள் يٰعِيْسَى ஈஸாவே ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய هَلْ يَسْتَطِيْعُ இயலுவானா? رَبُّكَ உம் இறைவன் اَنْ يُّنَزِّلَ அவன் இறக்குவதற்கு عَلَيْنَا எங்கள் மீது مَآٮِٕدَةً ஓர் உணவுத் தட்டை مِّنَ السَّمَآءِ ؕ வானத்திலிருந்து قَالَ கூறினார் اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
5:112. “மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
5:112. தவிர, (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உமது இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?'' என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
5:112. ஹவாரிகள் (இவ்வாறு) கேட்டதையும் நினைவு கூரும்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! உம்முடைய இறைவனால் வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு இறக்கி வைக்க முடியுமா?” அதற்கு ஈஸா “நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பின், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று பதில் தந்தார்.
5:112. (தவிர, நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூர்வீராக!) அச்சீடர்கள் (ஈஸாவிடம்,) மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்முடைய இரட்சகன் வானத்திலிருந்து எங்களுக்காக (உணவுப் பொருள்கள் நிறைந்த) ஒரு மரவையை இறக்கி வைக்க ஆற்றல் பெறுவானா?” என்று கேட்டபோது (ஈஸா, அவர்களிடம்) “நீங்கள் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், என்று அவர் கூறினார்.
5:113 قَالُوْا نُرِيْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَٮِٕنَّ قُلُوْبُنَا وَنَـعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَـنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ
قَالُوْا கூறினார்கள் نُرِيْدُ நாடுகிறோம் اَنْ نَّاْكُلَ நாங்கள் புசிப்பதற்கு مِنْهَا அதிலிருந்து وَتَطْمَٮِٕنَّ இன்னும் திருப்தியடைவதற்கு قُلُوْبُنَا எங்கள் உள்ளங்கள் وَنَـعْلَمَ இன்னும் நாங்கள் அறிவதற்கு اَنْ என்று قَدْ உறுதியாக صَدَقْتَـنَا உண்மைகூறினீர்/எங்களிடம் وَنَكُوْنَ நாங்கள் ஆகிவிடுவதற்கு عَلَيْهَا அதன் மீது مِنَ الشّٰهِدِيْنَ சாட்சியாளர்களில்
5:113. அதற்கவர்கள், “நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்” என்று கூறினார்கள்.
5:113. அதற்கவர்கள், ‘‘அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், நீர் (உமது தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகிறோம்'' என்று கூறினார்கள்.
5:113. அதற்கு அவர்கள் “நாங்கள் விரும்புவது இவற்றை மட்டுமே: நாங்கள் அத்தட்டிலிருந்து புசிக்க வேண்டும். அதன் மூலம் எங்கள் உள்ளங்கள் நிம்மதி அடைய வேண்டும்; மேலும் நீர் எங்களிடம் கூறியவை அனைத்தும் உண்மையானவை என்று நாங்கள் அறிந்து அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறினார்கள்.
5:113. அ(தற்க)வர்கள் அதிலிருந்து நாங்கள் உண்பதையும், எங்கள் இதயங்கள் திருப்தியடைவதையும், இன்னும், நீர் (உம்முடைய தூதைப்பற்றி) திட்டமாக எங்களிடம் உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொள்வதையும், அதற்கு நாங்கள் சாட்சியாளர்களாக ஆகிவிடுவதையுமே நாடுகின்றோம்” என்று கூறினார்கள்.
5:114 قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ
قَالَ கூறினார் عِيْسَى ஈஸா ابْنُ மகன் مَرْيَمَ மர்யமுடைய اللّٰهُمَّ அல்லாஹ்வே رَبَّنَاۤ எங்கள் இறைவா اَنْزِلْ இறக்கு عَلَيْنَا எங்கள் மீது مَآٮِٕدَةً ஓர் உணவுத் தட்டை مِّنَ இருந்து السَّمَآءِ வானம் تَكُوْنُ அது இருக்கும் لَـنَا எங்களுக்கு عِيْدًا ஒரு பெருநாளாக لِّاَوَّلِنَا எங்கள் முன் இருப்பவர்களுக்கு وَاٰخِرِنَا இன்னும் எங்களுக்குப் பின் வருபவர்களுக்கு وَاٰيَةً இன்னும் ஓர் அத்தாட்சியாக مِّنْكَۚ உன்னிடமிருந்து وَارْزُقْنَا இன்னும் எங்களுக்கு உணவளி وَاَنْتَ خَيْرُ நீ மிகச் சிறந்தவன் الرّٰزِقِيْنَ உணவளிப்பவர்களில்
5:114. மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
5:114. அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா ‘‘எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கிவைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன் (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
5:114. மர்யத்தின் குமாரர் ஈஸா “அல்லாஹ்வே! எங்கள் அதிபதியே! வானத்திலிருந்து எங்களுக்கு ஓர் உணவுத்தட்டை இறக்கி வைப்பாயாக! அது, எங்களுக்கும் எங்கள் காலத்தில் வாழ்பவர்களுக்கும் இனி வரக்கூடியவர்களுக்கும் மகிழ்ச்சிக்குரிய வாய்ப்பாகவும் மேலும், உன்னிடமிருந்து ஒரு சான்றாகவும் திகழட்டும்! மேலும், எங்களுக்கு ஆகாரம் வழங்குவாயாக! வழங்குவோரில் மிகச் சிறந்தவன் நீயே!” என்று இறைஞ்சினார்.
5:114. அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா, “யா அல்லாஹ்! எங்கள் இரட்சகனே! வானத்திலிருந்து ஒரு (உணவு நிறைந்த) மரவையை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன்னவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் அது ஆகிவிடும், மேலும், (அவ்வாறே) எங்களுக்கும் உணவளிப்பாயாக! நீயோ, உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்” என்று பிரார்த்தித்துக் கூறினார்.
5:115 قَالَ اللّٰهُ اِنِّىْ مُنَزِّلُهَا عَلَيْكُمْۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّىْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் اِنِّىْ நிச்சயமாக நான் مُنَزِّلُهَا அதை இறக்குவேன் عَلَيْكُمْۚ உங்கள் மீது فَمَنْ ஆகவே எவர் يَّكْفُرْ நிராகரிப்பாரோ بَعْدُ பின்னர் مِنْكُمْ உங்களில் فَاِنِّىْۤ நிச்சயமாக நான் اُعَذِّبُهٗ வேதனை செய்வேன்/ அவருக்கு عَذَابًا வேதனையால் لَّاۤ மாட்டேன் اُعَذِّبُهٗۤ அதைக்கொண்டு தண்டிக்க اَحَدًا ஒருவரையும் مِّنَ الْعٰلَمِيْنَ உலகத்தாரில்
5:115. அதற்கு அல்லாஹ், “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்” என்று கூறினான்.
5:115. அதற்கு அல்லாஹ் ‘‘நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதை உங்களுக்கு இறக்கிவைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்'' என்று கூறினான்.
5:115. அதற்கு அல்லாஹ், “நான் உங்களுக்கு அதனை இறக்கித் தருகிறேன். ஆனால், அதன் பின்னர் உங்களில் யாரேனும் நிராகரித்தால், அகிலத்தாரில் இதுவரை யாரையும் தண்டிக்காத அளவுக்கு அவரை நான் மிகவும் கடுமையாகத் தண்டிப்பேன்” என பதில் அளித்தான்.
5:115. (அதற்கு) அல்லாஹ் “நிச்சயமாக நான் அதனை உங்களுக்கு இறக்கி வைக்கிறவனாக உள்ளேன்; ஆனால் இதற்குப் பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பாரோ, அப்பொழுது நிச்சயமாக நான், அவரை அகிலத்தாரில் எவரையுமே நான் வேதனை செய்திராதக் கொடியதொரு வேதனையைக் கொண்டு நான் வேதனை செய்வேன்” என்று கூறினான்.
5:116 وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِؕ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗؕ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ
وَاِذْ சமயம் قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் يٰعِيْسَى ஈஸாவே ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய ءَاَنْتَ நீர் قُلْتَ கூறினீர் لِلنَّاسِ மக்களுக்கு اتَّخِذُوْنِىْ எடுத்துக் கொள்ளுங்கள்/என்னை وَاُمِّىَ இன்னும் என் தாயை اِلٰهَيْنِ வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக مِنْ دُوْنِ اللّٰهِؕ அல்லாஹ்வையன்றி قَالَ கூறுவார் سُبْحٰنَكَ நீ மிகப்பரிசுத்தமானவன் مَا يَكُوْنُ ஆகாது لِىْۤ எனக்கு اَنْ اَقُوْلَ நான் கூறுவது مَا எதை لَـيْسَ இல்லை لِىْ எனக்கு بِحَقٍّؕؔ தகுதி اِنْ كُنْتُ நான் இருந்தால் قُلْتُهٗ அதைக் கூறினேன் فَقَدْ عَلِمْتَهٗؕ திட்டமாக நீ அதை அறிந்திருப்பாய் تَعْلَمُ நன்கறிவாய் مَا فِىْ نَفْسِىْ எதை/என் உள்ளத்தில் وَلَاۤ اَعْلَمُ مَا இன்னும் அறிய மாட்டேன்/எதை فِىْ نَفْسِكَؕ உன் உள்ளத்தில் اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் عَلَّامُ மிக மிக அறிந்தவன் الْغُيُوْبِ மறைவானவற்றை
5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
5:116. அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன்.
5:116. (ஆக இப்பேருதவிகளையெல்லாம் நினைவுபடுத்தி) அல்லாஹ் இவ்வாறு வினவுவான்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! ‘அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் அன்னையையும் கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” (அப்போது) அவர் பணிந்து கூறுவார்: “தூய்மை அனைத்தும் உனக்கே! எனக்கு உரிமையில்லாதவற்றைக் கூறுவது என்னுடைய பணியல்ல. அவ்வாறு நான் கூறி இருந்தால் அதனை நிச்சயம் நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பவற்றை நீ அறிவாய்; ஆனால் உன் உள்ளத்திலிருப்பவற்றை நான் அறியமாட்டேன். திண்ணமாக மறைவான உண்மைகள் அனைத்தையும் நீ நன்கறிந்தவனாகவே இருக்கின்றாய்.
5:116. அன்றியும், அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவிடம்) “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வைத் தவிர என்னையும், என்னுடைய தாயையும் இரண்டு வணக்கத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா?” என்று கேட்பான். (அதற்கு) “நீ மிகப்பரிசுத்தமானவன், எனக்கு ஒரு சிறிதும் உரிமை இல்லாததை நான் (ஒருபோதும்) கூறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை, அவ்வாறு நான் கூறியிருந்தால், நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய், என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய், உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன், நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக்க அறிந்தவன்” என்று கூறுவார்.
5:117 مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْۚ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْؕ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ
مَا قُلْتُ நான் கூறவில்லை لَهُمْ அவர்களுக்கு اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ தவிர/எதை/நீ ஏவினாய்/எனக்கு بِهٖۤ அதை اَنِ என்பதை اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை رَبِّىْ என் இறைவன் وَرَبَّكُمْۚ இன்னும் உங்கள் இறைவன் وَكُنْتُ இருந்தேன் عَلَيْهِمْ அவர்கள் மீது شَهِيْدًا சாட்சியாளனாக مَّا دُمْتُ நான் இருந்தவரை فِيْهِمْۚ அவர்களுடன் فَلَمَّا போது تَوَفَّيْتَنِىْ நீ என்னை கைப்பற்றிய كُنْتَ இருந்தாய் اَنْتَ நீ الرَّقِيْبَ கண்கானிப்பவனாக عَلَيْهِمْؕ அவர்கள் மீது وَاَنْتَ நீ عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் شَهِيْدٌ சாட்சியாளன்
5:117. “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);
5:117. நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்றுதான் கூறினேன். தவிர, வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி.
5:117. “என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே அடிபணியுங்கள்!” என்று நீ எனக்குக் கட்டளையிட்டதைத் தவிர வேறெதனையும் நான் அவர்களுக்குக் கூறவில்லை. நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய்! மேலும் நீ அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய்.
5:117. “என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமான அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று மக்களுக்கு நான் கூறவேண்டும்) என்று நீ எதை எனக்குக் கட்டளையிட்டாயோ அதைத் தவிர (வேறு) எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை, நான் அவர்களுடன் (உலகில்) இருந்தவரையில், அவர்களின் செயலைத் தெரிந்து கொண்டிருந்தேன், பின்னர், நீ என்னைக் கைப்பற்றியபொழுது, நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்”(,என்றும்)
5:118 اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
اِنْ تُعَذِّبْهُمْ நீ வேதனை செய்தால் / அவர்களை فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عِبَادُكَۚ உன் அடியார்கள் وَاِنْ تَغْفِرْ நீ மன்னித்தால் لَهُمْ அவர்களை فَاِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ ஞானவான்
5:118. (இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).
5:118. அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்களே! (உன் அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்,) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன்'' (என்று கூறுவார்.)
5:118. (இப்போது) நீ அவர்களுக்குத் தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடிமைகளே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்.”
5:118. (இரட்சகா) “அவர்களை நீ வேதனை செய்தால், நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! அன்றியும், அவர்களை நீ மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.” என்றும் கூறுவார்.
5:119 قَالَ اللّٰهُ هٰذَا يَوْمُ يَـنْفَعُ الصّٰدِقِيْنَ صِدْقُهُمْؕ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ
قَالَ கூறுவான் اللّٰهُ அல்லாஹ் هٰذَا இது يَوْمُ நாள் يَـنْفَعُ பலனளிக்கும் الصّٰدِقِيْنَ உண்மையாளர்களுக்கு صِدْقُهُمْؕ அவர்களுடைய உண்மை لَهُمْ அவர்களுக்கு جَنّٰتٌ சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ இருந்து تَحْتِهَا அதன் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَاۤ اَبَدًا ؕ அதில்/என்றென்றும் رَضِىَ மகிழ்ச்சியடைவான் اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ அவர்களைப் பற்றி وَرَضُوْا இன்னும் மகிழ்ச்சியடைவார்கள் عَنْهُ ؕ அவனைப் பற்றி ذٰ لِكَ இதுதான் الْـفَوْزُ வெற்றி الْعَظِيْمُ மகத்தான
5:119. அப்போது அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.
5:119. அதற்கு அல்லாஹ் “உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்'' என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம் ஆகும்.
5:119. அப்போது அல்லாஹ் கூறுவான்: “உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மை பயனளிக்கக்கூடிய நாளாகும் இது. இத்தகையோருக்கு, கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் உண்டு. அங்கு அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி கொண்டார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும்.”
5:119. (அதற்கு) அல்லாஹ் “இது உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாளாகும், அவர்களுக்கு சுவனபதிகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள் என்று கூறுவான், (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் திருப்தியடைவான், அவர்களும் அவனைப் பற்றித் திருப்தியடைவார்கள், அது மகத்தான வெற்றியாகும்.
5:120 لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا فِيْهِنَّ ؕ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
لِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا فِيْهِنَّ ؕ இன்னும் அவற்றிலுள்ளவை وَهُوَ அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது قَدِيْرٌ பேராற்றலுடையவன்
5:120. வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.
5:120. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன்.
5:120. வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்துப் படைப்புகளின் பேராட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான்!
5:120. வானங்களுடைய, மற்றும் பூமியுடைய இன்னும் இவைகளிலுள்ள யாவற்றினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, அவனோ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.