68. ஸூரத்துல் கலம்(எழுதுகோல்)
மக்கீ, வசனங்கள்: 52

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
68:1
68:1 نٓ‌ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُوْنَۙ‏
نٓ‌ நூன் وَالْقَلَمِ எழுது கோல் மீது(ம்) சத்தியமாக! وَمَا يَسْطُرُوْنَۙ‏ இன்னும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும்
68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
68:1. நூன். எழுதுகோலின் மீதும் (அதைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக!
68:1. நூன், எழுதுகோலின் மீது சத்தியமாக! எழுதுவோர் எதனை எழுதிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் மீதும் சத்தியமாக!
68:1. நூன், எழுதுகோலின்மீதும், (அதன்மூலம்) அவர்கள் எழுதுகிறவற்றின் மீதும் சத்தியமாக,
68:2
68:2 مَاۤ اَنْتَ بِـنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ‌ۚ‏
مَاۤ اَنْتَ நீர் இல்லை بِـنِعْمَةِ அருளால் رَبِّكَ உமது இறைவனின் بِمَجْنُوْنٍ‌ۚ‏ பைத்தியக்காரராக
68:2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
68:2. (நபியே!) உமது இறைவனருளால் நீர் பைத்தியக்காரரல்ல.
68:2. நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர்.
68:2. (நபியே)! உமதிரட்சகனின் அருளால் நீர் பைத்தியக்காரர் அல்லர்.
68:3
68:3 وَاِنَّ لَڪَ لَاَجْرًا غَيْرَ مَمْنُوْنٍ‌ۚ‏
وَاِنَّ நிச்சயமாக لَڪَ உமக்கு لَاَجْرًا நற்கூலி உண்டு غَيْرَ مَمْنُوْنٍ‌ۚ‏ முடிவற்ற
68:3. இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
68:3. நிச்சயமாக உமக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கிறது.
68:3. என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கிறது.
68:3. மேலும், நிச்சயமாக உமக்கு முடிவுறாத கூலி இருக்கின்றது.
68:4
68:4 وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏
وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَعَلٰى خُلُقٍ நற்குணத்தில் عَظِيْمٍ‏ மகத்தான
68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
68:4. நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்.
68:4. மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்.
68:4. (நபியே!) நிச்சயமாக மகத்தான நற்குணத்தின் மீதும் நீர் இருக்கின்றீர்.
68:5
68:5 فَسَتُبْصِرُ وَيُبْصِرُوْنَۙ‏
فَسَتُبْصِرُ விரைவில் நீரும் காண்பீர் وَيُبْصِرُوْنَۙ‏ அவர்களும் காண்பார்கள்
68:5. எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
68:5,6,5. ‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
68:5. விரைவில் நீரும் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
68:5. நீரும் பார்ப்பீர், அவர்களும் பார்ப்பார்கள்.
68:6
68:6 بِاَيِّٮكُمُ الْمَفْتُوْنُ‏
بِاَيِّٮكُمُ உங்களில் யார் الْمَفْتُوْنُ‏ சோதிக்கப்பட்டவர்
68:6. உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
68:5,6,6. ‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
68:6. உங்களில் யார் பைத்தியத்திற்குள்ளானவர் என்பதையும்
68:6. (இருசாராராகிய) உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை-
68:7
68:7 اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் هُوَ அவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنْ ضَلَّ வழிதவறியவனை عَنْ سَبِيْلِهٖ அவனது பாதையில் இருந்து وَهُوَ அவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالْمُهْتَدِيْنَ‏ நேர்வழி பெற்றவர்களை(யும்)
68:7. உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
68:7. நிச்சயமாக உமது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான்.
68:7. அவன் வழியிலிருந்து பிறழ்ந்தவர்கள் யாரென்பதையும் உமதிறைவன் நன்கு அறிகின்றான்; நேர்வழியில் இருப்பவர்களையும் நன்கு அறிகின்றான்.
68:7. நிச்சயமாக உமதிரட்சகன், அவன் வழியைவிட்டுத் தவறியவர் யார் என்பதை அவனே மிக அறிந்தவன், (அதுபோலவே) நேர் வழி அடைந்தோரையும் அவனே மிக அறிந்தவன்.
68:8
68:8 فَلَا تُطِعِ الْمُكَذِّبِيْنَ‏
فَلَا تُطِعِ ஆகவே, நீர் கீழ்ப்படியாதீர் الْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பிப்பவர்களுக்கு
68:8. எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
68:8. ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
68:8. எனவே சத்தியத்தைப் பொய்ப்படுத்துகின்ற இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு நீர் பணிந்து விடாதீர்.
68:8. ஆகவே, (நபியே! உம்மைப்) பொய்யாக்கக் கூடியவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.
68:9
68:9 وَدُّوْا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُوْنَ‏
وَدُّوْا ஆசைப்படுகின்றனர் لَوْ تُدْهِنُ நீர் அனுசரித்து போகவேண்டும் என்று فَيُدْهِنُوْنَ‏ அப்படியென்றால் அவர்களும் அனுசரிப்பார்கள்
68:9. (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
68:9. (கடமையை நிறைவேற்றுவதில்) நீர் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உம்மை விட்டு) விலகி விடவே விரும்புகின்றனர்.
68:9. நீர் சிறிது விட்டுக் கொடுத்து இணங்கி வந்தால், அவர்களும் சற்று விட்டுக்கொடுத்து இணங்கி வரலாம் என விரும்புகின்றார்கள்.
68:9. (அவர்களின் வணக்க வழிபாடுகளில் சலுகை அளித்து) நீர் தளர்த்தினால் (உமக்கு) அவர்களும் தளர்ந்து செல்வதை விரும்புகின்றனர்.
68:10
68:10 وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ‏
وَلَا تُطِعْ நீர் கீழ்ப்படியாதீர்! كُلَّ எவருக்கும் حَلَّافٍ அதிகம் சத்தியம் செய்கின்றவன் مَّهِيْنٍۙ‏ அற்பமானவன்
68:10. அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
68:10. (நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.
68:10. அதிகமாக சத்தியம் செய்கின்ற, அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர்.
68:10. இழிந்தவனாக, அதிகமாக சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.
68:11
68:11 هَمَّازٍ مَّشَّآءٍۢ بِنَمِيْمٍۙ‏
هَمَّازٍ அதிகம் புறம் பேசுபவன் مَّشَّآءٍۢ بِنَمِيْمٍۙ‏ அதிகம் கோள் சொல்பவன்
68:11. (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
68:11. (அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக்கொண்டு திரிபவன்.
68:11. அவன் திட்டுகின்றவனாகவும், புறம்பேசித் திரிபவனாகவும்,
68:11. (அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித் திரிபவன், கோள் சொல்லிக்கொண்டு நடப்பவன்.
68:12
68:12 مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏
مَّنَّاعٍ அதிகம் தடுப்பவன் لِّلْخَيْرِ நன்மையை مُعْتَدٍ வரம்பு மீறி اَثِيْمٍۙ‏ பெரும் பாவி
68:12. (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.
68:12. (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி;
68:12. நன்மை செய்யவிடாமல் தடுப்பவனாகவும்,
68:12. நன்மையானவற்றை அதிகமாகத் தடுத்துக்கொண்டிருப்பவன், வரம்பு மீறியவன், பாவம் செய்பவன்.
68:13
68:13 عُتُلٍّ ۢ بَعْدَ ذٰلِكَ زَنِيْمٍۙ‏
عُتُلٍّ ۢ அசிங்கமானவன் بَعْدَ பிறகு ذٰلِكَ இதற்கு زَنِيْمٍۙ‏ ஈனன்
68:13. கடின சித்தமுடையவன்; அப்பால் இழி பிறப்புமுடையவன்.
68:13. கடின சுபாவமுள்ளவன். இத்துடன் இழிவானவனும் கூட.
68:13. கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்;
68:13. முரட்டுச் சுபாவமுடையவன், அதற்குப் பிறகு (தந்தை பெயர் தெரியா) இழி பிறப்புடையவன்.
68:14
68:14 اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِيْنَؕ‏
اَنْ كَانَ இருந்த காரணத்தால் ذَا مَالٍ செல்வ(மு)ம் உடையவனாக وَّبَنِيْنَؕ‏ ஆண் பிள்ளைகளும்
68:14. பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் -
68:14. ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கிறது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு),
68:14. அவனுக்கு நிறைய செல்வமும் பிள்ளைகளும் இருக்கின்றன என்பதால்!
68:14. (இத்தன்மையுடையவன்) செல்வமும், ஆண்மக்களும் உடையவனாக அவனிருக்கிறான் என்பதால், (அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்)
68:15
68:15 اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
اِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِ அவன் மீது اٰيٰتُنَا நமது வசனங்கள் قَالَ கூறுகின்றான் اَسَاطِيْرُ கட்டுக் கதைகள் الْاَوَّلِيْنَ‏ முன்னோரின்
68:15. நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவன் கூறுகின்றான்.
68:15. நம் வசனங்கள் அவனுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக் கதைகள் என்று கூறுகிறான்.
68:15. நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காட்டப்படும்போது, இவை முற்காலத்துக் கட்டுக்கதைகள் என்று கூறுகின்றான்.
68:15. நம் வசனங்கள் அவன் மீது ஓதிக்காண்பிக்கப்பட்டால், “(இது) முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவன் கூறுகின்றான்.
68:16
68:16 سَنَسِمُهٗ عَلَى الْخُـرْطُوْمِ‏
سَنَسِمُهٗ விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம் عَلَى الْخُـرْطُوْمِ‏ மூக்கின் மீது
68:16. விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.
68:16. (என்றென்றும் இருக்கக்கூடியவாறும், அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஓர் அடையாளமிடுவோம்.
68:16. விரைவில் நாம் இவனுடைய மூக்கின் மீது சூடு இடுவோம்!
68:16. அவனுடைய மூக்கின் மீது நாம் ஓர் அடையாளமிடுவோம்.
68:17
68:17 اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَـنَّةِ‌ ۚ اِذْ اَقْسَمُوْا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِيْنَۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் بَلَوْنٰهُمْ அவர்களை சோதித்தோம் كَمَا بَلَوْنَاۤ நாம் சோதித்ததுபோல் اَصْحٰبَ الْجَـنَّةِ‌ ۚ தோட்ட முடையவர்களை اِذْ اَقْسَمُوْا அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்! لَيَصْرِمُنَّهَا அதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும் مُصْبِحِيْنَۙ‏ அவர்கள் அதிகாலையில் இருக்கும் போது
68:17. நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
68:17. (யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்.
68:17. நாம் (மக்காவாசிகளாகிய) இவர்களைச் சோதனைக் குள்ளாக்கியுள்ளோம், ஒரு தோட்டத்தின் உரிமையாளர்களைச் சோதனைக்குள்ளாக்கியது போன்று! ஒருபோது அவர்கள் தங்களுடைய தோட்டத்தின் கனிகளை நிச்சயம் அதிகாலையில் பறிப்பதாகச் சத்தியம் செய்தார்கள்.
68:17. நிச்சயமாக நாம் (யமன் நாட்டிலுள்ள “ஸன் ஆ”வை அடுத்துள்ள ஊர்வாசிகளில்) அத்தோட்டத்திற்குரியவர்களைச் சோதித்தவாறே (மக்கத்து காஃபிர்களான) அவர்களை நாம் சோதித்தோம், (அத்தோட்டத்திற்குரியவர்களான) அவர்கள் அதனை அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோமென்று சத்தியம் செய்த சமயத்தில்,
68:18
68:18 وَلَا يَسْتَثْنُوْنَ‏
وَلَا يَسْتَثْنُوْنَ‏ அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று கூறவில்லை
68:18. அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை;
68:18. எனினும், ‘இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை.
68:18. அதில் எவ்வித விதிவிலக்கையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
68:18. (“இன்ஷா அல்லாஹ்”) அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை.
68:19
68:19 فَطَافَ عَلَيْهَا طَآٮِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآٮِٕمُوْنَ‏
فَطَافَ இரவில் சுற்றியது عَلَيْهَا அதன் மீது طَآٮِٕفٌ ஒரு கட்டளை مِّنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து وَهُمْ نَآٮِٕمُوْنَ‏ அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது
68:19. எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.
68:19. ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உமது இறைவனிடமிருந்து ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது.
68:19. இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உம் இறைவனின் தரப்பிலிருந்து ஒரு பேரிடர் அந்தத் தோட்டத்தைப் பிடித்துக் கொண்டது.
68:19. ஆகவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருக்க, உம் இரட்சகனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பான)து அதன் மீது சுற்றி (அழித்து) விட்டது.
68:20
68:20 فَاَصْبَحَتْ كَالصَّرِيْمِۙ‏
فَاَصْبَحَتْ ஆகிவிட்டது كَالصَّرِيْمِۙ‏ அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று
68:20. (நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.
68:20. பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று.
68:20. அப்போது அது அறுவடை செய்யப்பட்ட வயலைப் போன்று ஆகிவிட்டது!
68:20. அ(த்தோட்டமான)து, கறுத்த சாம்பல் போலாகிவிட்டது.
68:21
68:21 فَتَـنَادَوْا مُصْبِحِيْنَۙ‏
فَتَـنَادَوْا ஒருவரை ஒருவர் அழைத்தனர் مُصْبِحِيْنَۙ‏ அவர்கள் அதிகாலையில் ஆனவுடன்
68:21. (இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
68:21. (அதை அறியாத தோட்டக்காரர்கள்) விடியற்காலையில் ஒருவருக்கொருவர் சப்தமிட்டு அழைத்து,
68:21. காலையில் அவர்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கூறினார்கள்,
68:21. எனவே, (அதனை அறியாது) காலைப்பொழுதை அவர்கள் அடைந்த சமயம் ஒருவரையொருவர் அழைத்தனர்.
68:22
68:22 اَنِ اغْدُوْا عَلٰى حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِيْنَ‏
اَنِ اغْدُوْا காலையில் செல்லுங்கள் عَلٰى حَرْثِكُمْ உங்கள் விவசாய நிலத்திற்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰرِمِيْنَ‏ அறுவடை செய்பவர்களாக
68:22. “நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்” (என்று கூறிக் கொண்டனர்).
68:22. ‘‘நீங்கள் விளைச்சலை அறுப்பதாயிருந்தால், அதை அறுவடை செய்ய உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்'' (என்றும் கூறிக் கொண்டார்கள்).
68:22. “நீங்கள் கனிகளைப் பறிப்பதாக இருந்தால், அதிகாலையிலேயே உங்கள் வயலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுங்கள்” என்று!
68:22. “(உங்கள் விளைச்சலை) நீங்கள் அறுப்பவர்களாக இருந்தால், (அதனை அறுவடை செய்ய) உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்” (என்றும் கூறிக்கொண்டார்கள்)
68:23
68:23 فَانْطَلَقُوْا وَهُمْ يَتَخَافَتُوْنَۙ‏
فَانْطَلَقُوْا சென்றனர் وَهُمْ அவர்கள் يَتَخَافَتُوْنَۙ‏ தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக
68:23. எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;
68:23. (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டே சென்றார்கள்.
68:23. அவ்வாறே அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்: தங்களிடையே இரகசியம் பேசிக்கொண்டு.
68:23. ஆகவே, அவர்கள் ஒருவரோடொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்.
68:24
68:24 اَنْ لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِّسْكِيْنٌۙ‏
اَنْ لَّا يَدْخُلَنَّهَا அதில் நுழைந்து விடக்கூடாது الْيَوْمَ இன்றைய தினம் عَلَيْكُمْ உங்களிடம் مِّسْكِيْنٌۙ‏ ஏழை ஒருவரும்
68:24. “எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று).
68:24. (யாசகம் கேட்கக்கூடிய) ஏழை ஒருவர் (கூட) உங்களிடம் இன்றைய தினம் அதில் நுழையாதிருக்கவும் (என்று மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்).
68:24. “இன்று எந்த ஏழை எளியவனும் உங்களிடம் தோட்டத்திற்குள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!”
68:24. இன்றையத்தினம் (யாசகம் கேட்டு வரக்கூடிய) எந்த ஒரு ஏழையும் அ(த்தோட்டத்)தில் நிச்சயமாக நுழையக்கூடாது என (மெதுவாக பேசிக்கொண்டனர்)
68:25
68:25 وَّغَدَوْا عَلٰى حَرْدٍ قٰدِرِيْنَ‏
وَّغَدَوْا இன்னும் காலையில் புறப்பட்டனர் عَلٰى حَرْدٍ ஒரு கெட்ட எண்ணத்துடன் قٰدِرِيْنَ‏ சக்தி உள்ளவர்களாக
68:25. உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.
68:25. தங்கள் எண்ணத்தில் (தங்களுடன் ஓர் ஏழையும் வராது) தடுத்து விட்டதாக எண்ணிக்கொண்டு, அதிகாலையில் சென்றார்கள்.
68:25. அப்படி எதையும் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்து அதிகாலையில் (கனிகளைப் பறிக்க) ஆற்றலுள்ளவர்கள் போன்று அவசர அவசரமாக அவர்கள் அங்கு சென்றார்கள்:
68:25. அதிகாலையில் (ஏழைகள் எதையும் பெறாதவாறு) தடுத்துவிடுவதன் மீது ஆற்றலுடையவர்களாக (தங்களை எண்ணிக்கொண்டு) சென்றார்கள்.
68:26
68:26 فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَـضَآلُّوْنَۙ‏
فَلَمَّا رَاَوْهَا அவர்கள் அதைப் பார்த்த போது قَالُوْۤا கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் لَـضَآلُّوْنَۙ‏ வழிதவறி விட்டோம்
68:26. ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்” என்று கூறினார்கள்.
68:26. (சென்று) அதைப் பார்க்கவே, (விளைச்சலெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு ‘‘இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்'' என்றார்கள்.
68:26. ஆனால் தோட்டத்தை அவர்கள் பார்த்தபோது கூறினார்கள். “நாம் வழிதவறி விட்டிருக்கிறோம்;
68:26. (அங்கு சென்று, அழிந்துவிட்ட நிலையில்) அதனை அவர்கள் பார்த்தபோது (இது நம்முடையதல்ல,) நிச்சயமாக நாம் வழி தவறிவிட்டவர்கள்” என்று கூறினார்கள்.
68:27
68:27 بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ‏
بَلْ இல்லை, மாறாக نَحْنُ நாங்கள் مَحْرُوْمُوْنَ‏ இழப்பிற்குள்ளாகி விட்டோம்
68:27. (பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) “இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)
68:27. (பின்னர், அதைத் தங்கள் தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தான் நம் பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்).
68:27. இல்லை, உண்மையில் நாம் இழப்புக்குள்ளாகிவிட்டோம்!”
68:27. (பின்னர், அதனைத் தங்களுடையதுதான் என அறிந்து,) இல்லை! நாம் தடுக்கப்பட்டு (பாக்கியமற்றவர்களாகி) விட்டவர்கள் (என்று கூறினார்கள்.)
68:28
68:28 قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ‏
قَالَ கூறினார் اَوْسَطُهُمْ அவர்களில் நீதவான் اَلَمْ اَقُلْ لَّكُمْ நான் உங்களுக்கு கூறவில்லையா? لَوْلَا تُسَبِّحُوْنَ‏ நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா
68:28. அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
68:28. அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி ‘‘(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?'' என்று கூறினார்.
68:28. அவர்களிடையே மிகவும் சிறந்த மனிதர் கூறினார்: “நீங்கள் இறைவனைத் துதிக்க வேண்டாமா? இதை நான் உங்களிடம் கூறவில்லையா?”
68:28. அவர்களிலுள்ள மிகுந்த நடுநிலையாளர் ஒருவர் அவர்களிடம், “நீங்கள் (அல்லாஹ்வைத்) துதி செய்திருக்க வேண்டாமா, என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார்.
68:29
68:29 قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ‏
قَالُوْا கூறினார்கள் سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் رَبِّنَاۤ எங்கள் இறைவன் اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا நாங்கள்ஆகிவிட்டோம் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
68:29. “எங்கள் இறைவன் தூயவன்; நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்” என்றும் கூறினர்.
68:29. அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! நீ மிக்க பரிசுத்தமானவன்; நிச்சயமாக நாங்கள்தான் (எங்களுக்கு) தீங்கிழைத்துக் கொண்டோம்'' என்று கூறி,
68:29. அப்போது அவர்கள் கூறினார்கள்: “மிகத் தூய்மையானவன், எங்கள் அதிபதி! உண்மையில் நாம் தாம் பாவிகளாயிருந்தோம்!”
68:29. அ(தற்க)வர்கள் “எங்கள் இரட்சகன் மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நாங்கள் தாம் அநியாயக்காரர்களாகிவிட்டோம்” என்று கூறினர்.
68:30
68:30 فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَلَاوَمُوْنَ‏
فَاَقْبَلَ முன்னோக்கினர் بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَلَاوَمُوْنَ‏ அவர்களுக்குள் பழித்தவர்களாக
68:30. பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.
68:30. பின்னர், அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி, ஒருவர் மற்றவரை நிந்தனை செய்து கொண்டனர்.
68:30. பின்னர் அவர்கள் பரஸ்பரம் பழித்துரைக்கலாயினர்.
68:30. பின்னர், அவர்களில் சிலர் சிலரின் மீது நிந்தனை கூறியவர்களாக முன்னோக்கினர்.
68:31
68:31 قَالُوْا يٰوَيْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِيْنَ‏
قَالُوْا கூறினார்கள் يٰوَيْلَنَاۤ எங்களின் நாசமே! اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் طٰغِيْنَ‏ வரம்பு மீறியவர்களாக
68:31. அவர்கள் கூறினார்கள்: “எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.
68:31. ‘‘நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்; எங்களுக்குக் கேடுதான்'' என்று அவர்கள் கூறினர்.
68:31. இறுதியில் அவர்கள் கூறினார்கள்: “எங்களுடைய கேடே! ஐயமின்றி நாங்கள் வரம்பு மீறியவர்களாகி விட்டோம்.
68:31. “எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் வரம்பை மீறியவர்களாகிவிட்டோம்” என்று கூறினர்.
68:32
68:32 عَسٰى رَبُّنَاۤ اَنْ يُّبْدِلَـنَا خَيْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰى رَبِّنَا رٰغِبُوْنَ‏
عَسٰى கூடும் رَبُّنَاۤ எங்கள் இறைவன் اَنْ يُّبْدِلَـنَا எங்களுக்கு பகரமாக தர(க்கூடும்) خَيْرًا சிறந்ததை مِّنْهَاۤ அதை விட اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلٰى பக்கம் رَبِّنَا எங்கள் இறைவன் رٰغِبُوْنَ‏ ஆசை உள்ளவர்கள்
68:32. “எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்).
68:32. ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்குகிறோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்'' (என்றும் கூறினர்).
68:32. எங்கள் அதிபதி இதற்குப் பகரமாக இதனைவிடச் சிறந்த தோட்டத்தை எங்களுக்கு வழங்கக்கூடும். நாங்கள் எங்கள் அதிபதியின் பக்கம் திரும்புகின்றோம்!”
68:32. எங்கள் இரட்சகன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நிச்சயமாக நாங்கள் இரட்சகனின் பக்கமே (அவனது அருளை) ஆசிக்கிறவர்களாக இருக்கிறோம் (என்றும் கூறினார்கள்)
68:33
68:33 كَذٰلِكَ الْعَذَابُ‌ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ‌ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் الْعَذَابُ‌ؕ தண்டனை وَلَعَذَابُ தண்டனை الْاٰخِرَةِ மறுமையின் اَكْبَرُ ۘ மிகப் பெரியது لَوْ كَانُوْا அவர்கள் இருக்க வேண்டுமே! يَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக
68:33. இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).  
68:33. (நபியே! உம்மை நிராகரிக்கின்ற இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதைவிட) மிகப் பெரிது. இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
68:33. இப்படித்தான் இருக்கும் வேதனை! மறுமையின் வேதனை இதனைவிடக் கொடியதாகும். அந்தோ! இவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமே!
68:33. (நபியே!) இவ்வாறே வேதனை (அல்லாஹ் நாடியவர்களை வந்தடையும்) மேலும், அவர்கள் அறிந்தவர்களாக இருப்பார்களானால் திட்டமாக மறுமையின் வேதனை மிகப் பெரியதாகும்.
68:34
68:34 اِنَّ لِلْمُتَّقِيْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِيْمِ‏
اِنَّ لِلْمُتَّقِيْنَ நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு عِنْدَ رَبِّهِمْ தங்கள் இறைவனிடம் جَنّٰتِ சொர்க்கங்கள் النَّعِيْمِ‏ இன்பம் நிறைந்த
68:34. நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
68:34. நிச்சயமாக, இறையச்சமுடையவர்களுக்கு, தங்கள் இறைவனிடத்தில் மிக்க இன்பம் தரும் சொர்க்கங்கள் உண்டு.
68:34. திண்ணமாக இறையச்சமுடைய மனிதர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் அருள்நிறைந்த சுவனங்கள் இருக்கின்றன.
68:34. நிச்சயமாக, பயபக்தியுடையோருக்குத் தங்கள் இரட்சகனிடத்தில் அருட்கொடைகளுடைய சுவனங்களுண்டு.
68:35
68:35 اَفَنَجْعَلُ الْمُسْلِمِيْنَ كَالْمُجْرِمِيْنَؕ‏
اَفَنَجْعَلُ ஆக்குவோமா? الْمُسْلِمِيْنَ முற்றிலும் பணிந்தவர்களை كَالْمُجْرِمِيْنَؕ‏ குற்றவாளிகளைப் போல்
68:35. நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
68:35. (நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா?
68:35. கீழ்ப்படிபவர்களின் நிலையை குற்றவாளிகளின் நிலைபோன்று நாம் செய்துவிடுவோமா, என்ன?
68:35. முஸ்லிம்களை, குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
68:36
68:36 مَا لَـكُمْ كَيْفَ تَحْكُمُوْنَ‌ۚ‏
مَا لَـكُمْ உங்களுக்கு என்ன ஆனது كَيْفَ எப்படி تَحْكُمُوْنَ‌ۚ‏ நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
68:36. (சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?
68:36. உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கிறீர்கள்?
68:36. உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்கின்றீர்கள்?
68:36. உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு நீங்கள் தீர்ப்பளிக்கின்றீர்கள்?
68:37
68:37 اَمْ لَـكُمْ كِتٰبٌ فِيْهِ تَدْرُسُوْنَۙ‏
اَمْ لَـكُمْ உங்களுக்கு ? كِتٰبٌ வேதம் فِيْهِ அதில் تَدْرُسُوْنَۙ‏ படிக்கின்றீர்களா
68:37. அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
68:37. அல்லது உங்களிடம் (ஏதும்) வேத நூல் இருக்கிறதா? அதில் நீங்கள் (இரு வகுப்பாரும் சமமெனப்) படித்திருக்கிறீர்களா?
68:37. உங்களிடம் ஏதாவது வேதம் இருக்கின்றதா?
68:37. அல்லது, உங்களிடம் (ஏதும் வேத) நூல் இருந்து அதில் (முஸ்லிம்கள் பாவிகளைப் போன்று ஆக்கப்படுவார்களென) நீங்கள் படிக்கின்றீர்களா?
68:38
68:38 اِنَّ لَـكُمْ فِيْهِ لَمَا تَخَيَّرُوْنَ‌ۚ‏
اِنَّ நிச்சயமாக لَـكُمْ உங்களுக்கு فِيْهِ அதில் لَمَا تَخَيَّرُوْنَ‌ۚ‏ நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?
68:38. நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,
68:38. நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கிறதா?
68:38. நீங்கள் உங்களுக்கு எதை விரும்புகின்றீர்களோ அது உங்களுக்கு அங்கே அவசியம் கிடைக்கும் என்று அந்த வேதத்தில் நீங்கள் படிக்கின்றீர்களா?
68:38. நீங்கள் தேர்ந்தெடுப்பவை நிச்சயமாக உங்களுக்கு அதில் உள்ளன (என அவ்வேதத்தில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?)
68:39
68:39 اَمْ لَـكُمْ اَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ۙ اِنَّ لَـكُمْ لَمَا تَحْكُمُوْنَ‌ۚ‏
اَمْ ? لَـكُمْ உங்களுக்கு اَيْمَانٌ ஒப்பந்தங்கள் عَلَيْنَا நம்மிடம் بَالِغَةٌ உறுதியான اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ۙ மறுமை நாள் வரை اِنَّ لَـكُمْ நிச்சயமாக உங்களுக்கு لَمَا تَحْكُمُوْنَ‌ۚ‏ நீங்கள் தீர்ப்பளிப்பதெல்லாம்
68:39. அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
68:39. அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரை, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றோமா?
68:39. அல்லது நீங்கள் எதைத் தீர்மானித்திருக்கின்றீர்களோ அதுவே உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று இறுதித் தீர்ப்புநாள் வரை நம்மைக் கட்டுப்படுத்தும் உடன்படிக்கை ஏதேனும் நீங்கள் நம்முடன் ஏற்படுத்திவைத்திருக்கிறீர்களா, என்ன?
68:39. அல்லது நீங்கள் தீர்ப்புச் செய்பவை நிச்சயமாக உங்களுக்கு உண்டு என நம் மீது மறுமை நாள்வரை உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சத்திய(ப்பிரமாண)ங்கள் உண்டா? (அவ்வாறு எதுவும் நம்முடன் உங்களுக்கில்லை)
68:40
68:40 سَلْهُمْ اَيُّهُمْ بِذٰلِكَ زَعِيْمٌ ۛۚ‏
سَلْهُمْ அவர்களிடம் கேட்பீராக اَيُّهُمْ அவர்களில் யார் بِذٰلِكَ இதற்கு زَعِيْمٌ ۛۚ‏ பொறுப்பாளர்
68:40. (அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.
68:40. (நபியே!) அவர்களிடம் கேட்பீராக: ‘‘(அவ்வாறாயின்) அவர்களில் இதற்கு யார் பொறுப்பாளி?
68:40. உங்களில் எவர் இதற்குப் பொறுப்பாளி என்று இவர்களிடம் நீர் கேளும்!
68:40. (நபியே!) “(அவ்வாறெல்லாம் கூறுகின்ற) அவர்களில் அதற்குப் பொறுப்பேற்பவர் யார்?” என்று அவர்களிடம் கேட்பீராக
68:41
68:41 اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ فَلْيَاْتُوْا بِشُرَكَآٮِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِيْنَ‏
اَمْ لَهُمْ இவர்களுக்கு உண்டா? شُرَكَآءُ ۛۚ கூட்டாளிகள் فَلْيَاْتُوْا அவர்கள் கொண்டு வரட்டும் بِشُرَكَآٮِٕهِمْ அவர்களின் அந்த கூட்டாளிகளை اِنْ كَانُوْا அவர்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
68:41. அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
68:41. அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவற்றை (இன்றைய தினம் தங்கள் சாட்சிகளாக) அழைத்து வரவும்.
68:41. அல்லது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக் கடவுள்கள் (இதற்குப் பொறுப்பேற்கும் வகையில்) உள்ளனரா? அப்படியென்றால், தங்களுடைய அந்த இணைக் கடவுள்களை இவர்கள் கொண்டுவரட்டும், இவர்கள் உண்மையாளர்களாய் இருந்தால்!
68:41. அல்லது (இவ்வாறு அவர்கள் கூறிக் கொண்டிருப்பவற்றில்) அவர்களுக்கு இணையாளர்கள் இருக்கிறார்களா? (அக்கூற்றில்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் (அவர்களுக்குப் பொறுப்பாளர்களாக) அவர்களின் இணையாளர்களைக் கொண்டு வரட்டும்.
68:42
68:42 يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَّيُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ فَلَا يَسْتَطِيْعُوْنَۙ‏
يَوْمَ நாளில் يُكْشَفُ அகற்றப்படுகின்ற عَنْ سَاقٍ கெண்டைக்காலை விட்டும் وَّيُدْعَوْنَ இன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள் اِلَى السُّجُوْدِ சிரம்பணிய فَلَا يَسْتَطِيْعُوْنَۙ‏ ஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
68:42. கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
68:42. கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.
68:42. எந்த நாளில் கடினமான நேரம் வருமோ மேலும், மக்கள் ஸஜ்தா* செய்வதற்காக அழைக்கப்படுவார்களோ அந்த நாளில் இந்த மக்களால் ஸஜ்தா செய்திட முடியாது.
68:42. கெண்டைக்காலைவிட்டு (திரை) அகற்றப்பட்டுவிடும் நாளில், அவர்களோ (அந்நாளின்போது) சிரம்பணிவதின் பால் அழைக்கப்படுவர், ஆனால் அவர்கள் (சிரம்பணிய) சக்தி பெறமாட்டார்கள்.
68:43
68:43 خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ وَقَدْ كَانُوْا يُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ‏
خَاشِعَةً தாழ்ந்து இருக்கும் اَبْصَارُهُمْ அவர்களின் பார்வைகள் تَرْهَقُهُمْ அவர்களை சூழும் ذِلَّةٌ ؕ இழிவு وَقَدْ كَانُوْا يُدْعَوْنَ அவர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் اِلَى السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ‏ தொழுகைக்கு/அவர்கள் சுகமானவர்களாக இருந்தபோது
68:43. அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
68:43. அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்.)
68:43. இவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு இவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும். இவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, ஸஜ்தா செய்யுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. (அப்போது இவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள்).
68:43. அவர்களுடைய பார்வைகளெல்லாம் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும், (இம்மையில்) சுகமானவர்களாக இருந்த சமயத்தில் சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அவர்கள் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
68:44
68:44 فَذَرْنِىْ وَمَنْ يُّكَذِّبُ بِهٰذَا الْحَـدِيْثِ‌ؕ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ‏
فَذَرْنِىْ என்னை(யும்) விட்டு விடுவீராக! وَمَنْ يُّكَذِّبُ பொய்ப் பிப்பவர்களையும் بِهٰذَا الْحَـدِيْثِ‌ؕ இந்த வேதத்தை سَنَسْتَدْرِجُهُمْ அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம் مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ‏ அவர்கள் அறியாத விதத்தில்
68:44. எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
68:44. ஆகவே, (நீர் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டு விடுவீராக. அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களை சிரமத்தில் சிக்க வைப்போம்.
68:44. ஆகவே (நபியே!) நீர் இந்த வேதவாக்கைப் பொய்யெனத் தூற்றுபவர்களின் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடும். படிப்படியாக இவர்கள் அறியாத விதத்தில் அழிவின் பக்கம் இவர்களை நாம் கொண்டு செல்வோம்.
68:44. ஆகவே, என்னையும் இச்செய்தியைப் பொய்யாக்குபவரையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் படிப்படியாக அவர்களை நாம் பிடிப்போம்.
68:45
68:45 وَاُمْلِىْ لَهُمْ‌ؕ اِنَّ كَيْدِىْ مَتِيْنٌ‏
وَاُمْلِىْ நாம் தவணை அளிப்போம் لَهُمْ‌ؕ அவர்களுக்கு اِنَّ நிச்சயமாக كَيْدِىْ எனது சூழ்ச்சி مَتِيْنٌ‏ மிக பலமானது
68:45. அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்; நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.
68:45. (அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம் சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.)
68:45. நான் இவர்களுடைய கடிவாளத்தைத் தளர்த்தி விட்டிருக்கின்றேன். எனது சூழ்ச்சி மிக உறுதியானதாகும்.
68:45. இன்னும், அவர்களுக்குச் சிறிது தாமதம் கொடுப்பேன், நிச்சயமாக என்னுடைய சூழ்ச்சி மிக்க பலமானது.
68:46
68:46 اَمْ تَسْــٴَــلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ‌ۚ‏
اَمْ تَسْــٴَــلُهُمْ இவர்களிடம் நீர் கேட்கின்றீரா? اَجْرًا கூலி ஏதும் فَهُمْ அவர்கள் مِّنْ مَّغْرَمٍ கடனால் مُّثْقَلُوْنَ‌ۚ‏ சிரமப்படுகிறார்களா?
68:46. நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
68:46. (நபியே!) அவர்களிடம் (வரியாக) கூலி ஏதும் கேட்கிறீரா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அந்த வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கிவிட்டனரா?
68:46. என்ன, நீர் இவர்களிடம் கூலி எதுவும் கேட்கிறீரா? அவ்வாறு இவர்கள் கடன் சுமையால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களா?
68:46. அல்லது (நபியே!) அவர்களிடம் ஏதாவது கூலியை நீர் கேட்கின்றீரா? அதனால், அவர்கள் கடனால் பளுவாக்கப்பட்டவர்களா?
68:47
68:47 اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَ‏
اَمْ عِنْدَهُمُ அவர்களிடம் இருக்கின்றதா? الْغَيْبُ மறைவானவை فَهُمْ அவர்கள் يَكْتُبُوْنَ‏ எழுதுகின்றனரா?
68:47. அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
68:47. அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா?
68:47. அல்லது மறைவானவற்றைப் பற்றிய ஞானம் இவர்களுக்கு இருந்து அதனை இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா?
68:47. அல்லது மறைவானது அவர்களிடம் இருந்து (அதிலிருந்து தங்களுக்கு வேண்டிய ஆதாரங்களை) அவர்கள் எழுதுகின்றார்களா?
68:48
68:48 فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ‌ۘ اِذْ نَادٰى وَهُوَ مَكْظُوْمٌؕ‏
فَاصْبِرْ பொறுமை காப்பீராக! لِحُكْمِ தீர்ப்புக்காக رَبِّكَ உமது இறைவனின் وَلَا تَكُنْ நீர் ஆகிவிடாதீர் كَصَاحِبِ الْحُوْتِ‌ۘ மீனுடையவரைப்போல் اِذْ نَادٰى அவர் அழைத்த நேரத்தில் وَهُوَ அவர் مَكْظُوْمٌؕ‏ கடும் கோபமுடையவராக
68:48. ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
68:48. (நபியே!) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக. (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (-யூனுஸை)ப் போல் நீரும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!
68:48. சரி! உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இரும். மேலும் மீன் மனிதர் (யூனுஸ்) போன்று ஆகி விடாதீர். அவர் துயரத்திற்குள்ளாகி இருந்த நிலையில் அழைத்த போது,
68:48. ஆகவே, (நபியே!) நீர் உமதிரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! மேலும், மீனுடையவரைப் போன்று நீர் ஆகிவிட வேண்டாம், அவர் துக்கம் நிரம்பப்பெற்றவராக (பிரார்த்தனை செய்து) அழைத்தபொழுது,
68:49
68:49 لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ‏
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ அவரை அடைந்திருக்காவிட்டால்/அருள் مِّنْ رَّبِّهٖ அவருடைய இறைவனிடமிருந்து لَنُبِذَ எறியப்பட்டிருப்பார் بِالْعَرَآءِ ஒரு பெருவெளியில் وَهُوَ அவர் இருந்தார் مَذْمُوْمٌ‏ பழிப்பிற்குரிய வராகத்தான்
68:49. அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
68:49. அவருடைய இறைவனின் அருள் அவரை அடையாதிருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார்.
68:49. அவருடைய அதிபதியின் கருணை அவருக்குக் கிடைத் திராவிட்டால், அவர் இழிவுக்கு ஆளாகி பொட்டல்வெளியில் எறியப்பட்டிருப்பார்!
68:49. அவருடைய இரட்சகனிடமிருந்து அருட்கொடை அவரை அடையாதிருந்தால், வெட்டவெளியில் பழிக்கப்பட்டவராக அவர் எறியப்பட்டு இரு(ந்திரு)ப்பார்.
68:50
68:50 فَاجْتَبٰهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِيْنَ‏
فَاجْتَبٰهُ பிறகு, அவரை தேர்ந்தெடுத்தான் رَبُّهٗ அவரது இறைவன் فَجَعَلَهٗ அவரை ஆக்கினான் مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில்
68:50. ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
68:50. (இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கிவைத்தான்.
68:50. இறுதியில் அவருடைய அதிபதி அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், அவரை நல்லடியார்களில் ஒருவராயும் சேர்த்துக் கொண்டான்.
68:50. பின்னர், அவருடைய இரட்சகன் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான், பின்னர் அவரை நல்லோர்களில் உள்ளவராக ஆக்கி வைத்தான்.
68:51
68:51 وَاِنْ يَّكَادُ الَّذِيْنَ كَفَرُوْا لَيُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ‌ۘ‏
وَاِنْ يَّكَادُ நிச்சயமாக நெருங்கினார்(கள்) الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لَيُزْلِقُوْنَكَ உம்மை நீக்கிவிட بِاَبْصَارِهِمْ தங்கள் பார்வைகளால் لَمَّا سَمِعُوا அவர்கள் செவியுற்றபோது الذِّكْرَ அறிவுரையை وَيَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறினார்கள் اِنَّهٗ நிச்சயமாக அவர் لَمَجْنُوْنٌ‌ۘ‏ ஒரு பைத்தியக்காரர்தான்
68:51. மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.
68:51. (நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்தி விடுபவர்களைப்போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். மேலும், அவர்கள் (உம்மைப் பற்றி) நிச்சயமாக, இவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.
68:51. இந்த நிராகரிப்பாளர்கள் நல்லுரையை (குர்ஆனை)ச் செவியுறும்போது உம்முடைய பாதங்களைப் பிறழச் செய்துவிடு வதைப் போன்று உம்மை முறைத்துப் பார்க்கின்றார்கள். மேலும், “நிச்சயமாக இவர் ஒரு பைத்தியக்காரர்!” என்றும் கூறுகின்றார்கள்.
68:51. மேலும், (நபியே!) நிராகரிப்போர் (குர் ஆனுடைய) உபதேசத்தைக் கேட்கும்பொழுது அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்திவிட நெருங்குகின்றனர், (உம்மைப்பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்(தாம்) என்றும் கூறுகின்றனர்.
68:52
68:52 وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ‏
وَمَا هُوَ அது இல்லை اِلَّا ذِكْرٌ ஓர் அறிவுரையே தவிர لِّلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
68:52. ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை.
68:52. (நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
68:52. ஆனால் உண்மை நிலை யாதெனில், இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே இருக்கிறது.
68:52. (நாம் உம்மீது இறக்கிவைத்திருக்கும் திக்ரு எனும்) இது, அகிலத்தார்க்கு உபதேசமே தவிர (வேறு) இல்லை.