7. ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்)
மக்கீ, வசனங்கள்: 206
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
7:1 الۤمّۤصۤ
الۤمّۤصۤ அலிஃப், லாம், மீம், ஸாத்
7:1. அலிஃப், லாம், மீம், ஸாத்.
7:1. அலிஃப் லாம் மீம் ஸாத்.
7:1. அலிஃப், லாம், மீம், ஸாத்.
7:1. அலிஃப் லாம் மீம் ஸாத்.
7:2 كِتٰبٌ اُنْزِلَ اِلَيْكَ فَلَا يَكُنْ فِىْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ
كِتٰبٌ ஒரு வேதம் اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உம் மீது فَلَا يَكُنْ இருக்க வேண்டாம் فِىْ صَدْرِكَ உம் இதயத்தில் حَرَجٌ நெருக்கடி مِّنْهُ இதில் لِتُنْذِرَ நீர் எச்சரிப்பதற்காக بِهٖ இதைக் கொண்டு وَذِكْرٰى இன்னும் ஒரு நல்லுபதேசம் لِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு
7:2. (நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.
7:2. (நபியே!) இவ்வேதம் உம் மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உமது உள்ளத்தில் ஒரு தயக்கமும் வேண்டாம். இதைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நல்லுபதேசமாகும்.
7:2. (நபியே!) இது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம். (சத்தியத்தை மறுப்போர்க்கு) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே இது இறக்கி வைக்கப்பட்டது.
7:2. (நபியே! இது) உம் மீது இறக்கப்பட்டுள்ள வேதமாகும், இவ்வேதத்தை மக்களுக்கு எத்திவைப்பதனால் உம்முடைய நெஞ்சத்தில் யாதொரு கலக்கமும் இருக்க வேண்டாம், இதனைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், விசுவாசங்கொண்டோருக்கு ஒரு நல்லுபதேசமாகவும் இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
7:3 اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ
اِتَّبِعُوْا பின்பற்றுங்கள் مَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكُمْ உங்களுக்கு مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَلَا تَتَّبِعُوْا பின்பற்றாதீர்கள் مِنْ دُوْنِهٖۤ அதைத் தவிர اَوْلِيَآءَ ؕ பொறுப்பாளர்களை قَلِيْلًا مَّا மிகக் குறைவாக تَذَكَّرُوْنَ நீங்கள் நல்லுணர்வு பெறுவது
7:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
7:3. (மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குப்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவுதான்.
7:3. (மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள்! மேலும், அவனை விடுத்து வேறு பாதுகாவலர்களைப் பின்பற்றாதீர்கள்! ஆனால் நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுரைகளை ஏற்கின்றீர்கள்.
7:3. (மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இரட்சகனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்ட இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள், அவனையன்றி மற்றெவரையும் உங்களுக்குப் பாதுகாவலர்(களாக ஆக்கி அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள், எனினும், இதனைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.
7:4 وَكَمْ مِّنْ قَرْيَةٍ اَهْلَـكْنٰهَا فَجَآءَهَا بَاْسُنَا بَيَاتًا اَوْ هُمْ قَآٮِٕلُوْنَ
وَكَمْ مِّنْ قَرْيَةٍ எத்தனையோ நகரங்கள் اَهْلَـكْنٰهَا அழித்தோம்/அவற்றை فَجَآءَ வந்தது هَا அவற்றுக்கு بَاْسُنَا நம் வேதனை بَيَاتًا இரவில் اَوْ அல்லது هُمْ அவர்கள் قَآٮِٕلُوْنَ பகலில் தூங்குபவர்கள்
7:4. (பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.
7:4. (பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கிறோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும் பொழுது நம் வேதனை அவர்களை வந்தடைந்தது.
7:4. எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். இரவு நேரத்தில் அல்லது நண்பகலில் அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தபோது திடீரென்று நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியது.
7:4. இன்னும், (அல்லாஹ்வின் தூதர்களைப் பொய்யாக்கியும் அவர்களுக்கு மாற்றமாகவும் நடந்து வந்தவர்கள் வசித்திருந்த) எத்தனையோ ஊர்களை–அவற்றை நாம் அழித்திருக்கின்றோம், இரவோடு இரவாக, அல்லது அவர்கள் (களைப்பாறுவதற்காக) பகலில் தூங்கிக் கொண்டிருக்க நம்முடைய வேதனை அவற்றை வந்தடைந்தது.
7:5 فَمَا كَانَ دَعْوٰٮهُمْ اِذْ جَآءَهُمْ بَاْسُنَاۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ
فَمَا كَانَ இருக்கவில்லை دَعْوٰٮهُمْ அவர்களுடைய வாதம் اِذْ جَآءَ வந்த போது هُمْ அவர்களிடம் بَاْسُنَاۤ நம் வேதனை اِلَّاۤ தவிர اَنْ قَالُوْۤا அவர்கள் கூறியது اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருந்தோம் ظٰلِمِيْنَ அநியாயக்காரர்களாக
7:5. நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்: “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.
7:5. அவர்களிடம் நம் வேதனை வந்த சமயத்தில் ‘‘நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்'' என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்களால் கூறமுடியவில்லை.
7:5. அவ்வாறு நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியபோது அவர்களால் எதையும் கூற இயலவில்லை; “உண்மையிலேயே நாங்கள் அக்கிரமக்காரர்களாகத்தான் இருந்தோம்” என்று கூக்குரலிட்டதைத் தவிர!
7:5. நம்முடைய வேதனை அவர்களுக்கு வந்தடைந்தபோது “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாகி விட்டோம்” என்று அவர்கள் கூறியதைத் தவிர வேறு எதுவும் அவர்களுடைய கூப்பாடாக இருக்கவில்லை.
7:6 فَلَنَسْـــٴَـــلَنَّ الَّذِيْنَ اُرْسِلَ اِلَيْهِمْ وَلَـنَسْــٴَــــلَنَّ الْمُرْسَلِيْنَ ۙ
فَلَنَسْـــٴَـــلَنَّ நிச்சயம் விசாரிப்போம் الَّذِيْنَ எவர்களை اُرْسِلَ அனுப்பப்பட்டார்(கள்) اِلَيْهِمْ அவர்களிடம் وَلَـنَسْــٴَــــلَنَّ இன்னும் நிச்சயம் விசாரிப்போம் الْمُرْسَلِيْنَ ۙ தூதர்களை
7:6. யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.
7:6. ஆகவே, (இதைப் பற்றி நம்) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம்.
7:6. எனவே, எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ, அந்த மக்களிடம் திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம். மேலும், தூதர்களிடமும் (தூதுத்துவக் கடமையை அவர்கள் எதுவரை நிறைவேற்றினார்கள்; மக்களிடமிருந்து என்ன பதில் கிடைத்தது என்பது பற்றி) நிச்சயம் விசாரிப்போம்.
7:6. ஆகவே, எவர்கள்பால் தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்களோ அவர்களையும் நிச்சயமாக நாம் கேட்டு விசாரிப்போம், மேலும், (நம்முடைய) தூதர்களையும் நிச்சயமாக நாம் கேட்டு விசாரிப்போம்.
7:7 فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَّمَا كُنَّا غَآٮِٕبِيْنَ
فَلَنَقُصَّنَّ நிச்சயம் விவரிப்போம் عَلَيْهِمْ அவர்களுக்கு بِعِلْمٍ உறுதியான ஞானத்துடன் وَّمَا كُنَّا நாம் இருக்கவில்லை غَآٮِٕبِيْنَ மறைந்தவர்களாக
7:7. ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.
7:7. (அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை.
7:7. பிறகு (நடந்த நிகழ்ச்சிகள்) அனைத்தையும் நாம் முழு அறிவுடன் அம்மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். நாம் எங்கும் மறைந்து போய்விடவில்லை.
7:7. (அவர்களின் செயலைப்பற்றி நாம் நன்கறிந்துள்ளவாறு (விசாரணைக் காலத்தில்) நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கூறிக்காண்பிப்போம், இன்னும் (அவர்களின் சகல நிலைகளை விட்டும்) மறைந்திருப்பவர்களாக நாம் இருக்கவில்லை.
7:8 وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ ۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
وَالْوَزْنُ நிறுக்கப்படுதல் يَوْمَٮِٕذِ அன்றைய தினம் اۨلْحَـقُّ ۚ உண்மைதான் فَمَنْ ஆகவே எவர் ثَقُلَتْ கனமானது مَوَازِيْنُهٗ அவருடைய நிறுவைகள் فَاُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ வெற்றியாளர்கள்
7:8. அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
7:8. (ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
7:8. மேலும் அந்நாளில் சத்தியம் மட்டுமே கனமுடையதாயிருக்கும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
7:8. மேலும், (ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அந்நாளில் (கூடுதல் குறைவின்றி) எடைபோடுவது உண்மையாகும், அப்போது எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனத்தனவோ அவர்கள்தாம் நிச்சயமாக வெற்றியாளர்கள்.
7:9 وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ
وَمَنْ எவர் خَفَّتْ இலேசானது مَوَازِيْنُهٗ அவருடைய நிறுவைகள் فَاُولٰۤٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ خَسِرُوْۤا நஷ்டமிழைத்தவர்கள் اَنْفُسَهُمْ தங்களுக்கே بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களுக்கு يَظْلِمُوْنَ அநீதியிழைக்கின்றனர்
7:9. யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
7:9. எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கிறதோ அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர்.
7:9. மேலும், எவர்களுடைய நன்மைகளின் எடை இலேசாக இருக்குமோ அவர்கள்தாம் தங்களைத் தாங்களே இழப்பிற்குள்ளாக்கிக் கொண்டவர்கள். காரணம், அவர்கள் நம்முடைய வசனங்களுடன் அக்கிரமமாக நடந்து கொண்டிருந்தார்கள்!
7:9. இன்னும், எவர்களுடைய நன்மையின் எடைகள் (கனம் குறைந்து) இலோசாக இருக்கின்றனவோ அத்தகையோர், நம்முடைய வசனங்களை பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டவர்கள் ஆவர்.
7:10 وَلَقَدْ مَكَّـنّٰكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக مَكَّـنّٰكُمْ இடமளித்தோம்/உங்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் لَـكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் مَعَايِشَ ؕ வாழ்வாதாரங்களை قَلِيْلًا مَّا மிகக் குறைவாக تَشْكُرُوْنَ நன்றி செலுத்துகிறீர்கள்
7:10. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.
7:10. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து, அதில் (நீங்கள்) வாழ்வதற்குத் தேவையான காரணங்களை உங்களுக்கு ஏற்படுத்தினோம். (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு.
7:10. நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
7:10. (மனிதர்களே!) மேலும், நிச்சயமாக நாம் உங்களை பூமியில் அனைத்து அதிகாரங்களுடன்) வசிக்கச் செய்தோம், அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிக்குரிய (அனைத்து) சாதனங்களையும் நாம் ஆக்கித் தந்தோம், (இவ்வாறிருந்தும்) நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
7:11 وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ ۖ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ لَمْ يَكُنْ مِّنَ السّٰجِدِيْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنٰكُمْ உங்களைப் படைத்தோம் ثُمَّ பிறகு صَوَّرْنٰكُمْ வடிவமைத்தோம்/உங்களை ثُمَّ பிறகு قُلْنَا கூறினோம் لِلْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِاٰدَمَ ۖ ஆதமுக்கு فَسَجَدُوْۤا சிரம் பணிந்தனர் اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர لَمْ يَكُنْ அவன் ஆகவில்லை مِّنَ السّٰجِدِيْنَ சிரம் பணிந்தவர்களில்
7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
7:11. நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருவமைத்தோம். பின்னர் நாம் வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்'' எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை.
7:11. நாம் உங்களைப் படைத்து, பிறகு உங்களுக்கு உருவம் கொடுத்தோம். பின்னர் ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். (இக்கட்டளைக்கேற்ப) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால் இப்லீஸைத் தவிர! அவன் சிரம் பணிவோரில் ஒருவனாய் இருக்கவில்லை.
7:11. இன்னும், திட்டமாக நாம் உங்களைப் படைத்தோம், பின்பு உங்களுக்கு உருவமமைத்தோம், அதன் பின்னர் “ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்” என மலக்குகளுக்கு நாம் கூறினோம், அப்பொழுது இப்ஸீஸைத் தவிர (மற்ற யாவரும் அவருக்கு) சிரம் பணிந்தார்கள், சிரம் பணிந்தவர்களில் அவன் இருக்கவில்லை.
7:12 قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ؕ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ ۚ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ
قَالَ கூறினான் مَا எது? مَنَعَكَ உம்மை தடுத்தது اَلَّا تَسْجُدَ நீ சிரம் பணியாதிருக்க اِذْ போது اَمَرْتُكَ ؕ உனக்கு கட்டளையிட்டேன் قَالَ கூறினான் اَنَا நான் خَيْرٌ மேலானவன் مِّنْهُ ۚ அவரைவிட خَلَقْتَنِىْ என்னை படைத்தாய் مِنْ نَّارٍ நெருப்பால் وَّخَلَقْتَهٗ இன்னும் படைத்தாய்/அவரை مِنْ طِيْنٍ களிமண்ணால்
7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
7:12. (ஆகவே, இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?'' என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) ‘‘நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக்கிறாய். (களிமண்ணைவிட நெருப்பு உயர்ந்தது)'' என்று (இறுமாப்புடன்) கூறினான்.
7:12. “சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான்.
7:12. (ஆகவே, அல்லாஹ் இப்லீஸிடம்) “நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில் நீ சிரம் பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது?” என்று கேட்டான், அதற்கு “நான் அவரைவிட மேலானவன், (ஏனென்றால்) நீ என்னை நெருப்பால் படைத்தாய், அவரையோ களிமண்ணால் படைத்தாய்” என்று (இறுமாப்புடன் இப்லீஸாகிய) அவன் கூறினான்.
7:13 قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُوْنُ لَـكَ اَنْ تَتَكَبَّرَ فِيْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِيْنَ
قَالَ கூறினான் فَاهْبِطْ ஆகவே இறங்கிவிடு مِنْهَا இதிலிருந்து فَمَا يَكُوْنُ அனுமதியில்லை لَـكَ உமக்கு اَنْ تَتَكَبَّرَ நீ பெருமை கொள்வதற்கு فِيْهَا இதில் فَاخْرُجْ வெளியேறி விடு! اِنَّكَ நிச்சயமாக நீ مِنَ الصّٰغِرِيْنَ இழிவானவர்களில்
7:13. “இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.
7:13. (அதற்கு இறைவன்) ‘‘இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால், இதிலிருந்து) நீ வெளியேறி விடு'' என்று கூறினான்.
7:13. அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.”
7:13. “இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ இதில் பெருமை கொள்வதற்கு உனக்குத் தகுதியில்லை, ஆதலால், நீ வெளியேறிவிடு, (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப் பட்டோரில் இருக்கின்றாய்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
7:14 قَالَ اَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ
قَالَ கூறினான் اَنْظِرْنِىْۤ அவகாசமளி/எனக்கு اِلٰى வரை يَوْمِ நாள் يُبْعَثُوْنَ எழுப்பப்படுவார்கள்
7:14. “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
7:14. (அதற்கு இப்லீஸாகிய) அவன் (‘‘இறந்தவர்களை) எழுப்பும் நாள்வரை எனக்கு அவகாசம் அளி'' என்று கேட்டான்.
7:14. (இப்லீஸ் இவ்வாறு) வேண்டினான்: “இவர்கள் அனைவரும் திரும்ப எழுப்பப்படும் நாள் வரையிலும் எனக்கு அவகாசம் அளிப்பாயாக!”
7:14. (அதற்கு இப்லீஸாகிய) அவன்,) “இறந்தோர் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படும் நாள் வரையில் நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக” என்று கேட்டான்.
7:15 قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَ
قَالَ கூறினான் اِنَّكَ நிச்சயமாக நீ مِنَ الْمُنْظَرِيْنَ அவகாசமளிக்கப்பட்டவர்களில்
7:15. (அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.
7:15. (அதற்கு இறைவன்) ‘‘நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறாய்'' என்று கூறினான்.
7:15. அதற்கு “நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்!” என்று அல்லாஹ் கூறினான்.
7:15. “நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசமளிக்கப்பட்டோரில் (ஒருவனாக) இருக்கின்றாய்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
7:16 قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ
قَالَ கூறினான் فَبِمَاۤ காரணமாக اَغْوَيْتَنِىْ நீ வழிகெடுத்தாய்/என்னை لَاَقْعُدَنَّ நிச்சயமாக உட்காருவேன் لَهُمْ அவர்களுக்காக صِرَاطَكَ உன் பாதையில் الْمُسْتَقِيْمَۙ நேரானது
7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
7:16. (அதற்கு இப்லீஸ், இறைவனை நோக்கி) ‘‘நீ என்னை பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன் நேரான வழியில் செல்லாது (தடைசெய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்'' (என்றும்)
7:16. அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன்.
7:16. “நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததிகள்) உன்னுடைய நேரான வழியில் (செல்லாது தடை செய்ய வழி மறித்து அதில்) அவர்களுக்காக திட்டமாக உட்கார்ந்து கொள்வேன்” என்றும் (இப்லீஸாகிய) அவன் கூறினான்.)
7:17 ثُمَّ لَاَتِيَنَّهُمْ مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَانِهِمْ وَعَنْ شَمَآٮِٕلِهِمْؕ وَلَاٰ تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ
ثُمَّ لَاَتِيَنَّهُمْ பிறகு/நிச்சயம் வருவேன்/அவர்களிடம் مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன் புறத்திலிருந்து وَمِنْ خَلْفِهِمْ இன்னும் அவர்களுக்கு பின் புறத்திலிருந்து وَعَنْ اَيْمَانِهِمْ இன்னும் அவர்களின் வலது புறத்திலிருந்து وَعَنْ شَمَآٮِٕلِهِمْؕ இன்னும் அவர்களின் இடது புறத்திலிருந்து وَلَاٰ تَجِدُ நீ காணமாட்டாய் اَكْثَرَ அதிகமானவர்களை هُمْ அவர்களில் شٰكِرِيْنَ நன்றி செலுத்துபவர்களாக
7:17. “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
7:17. ‘‘பிறகு, நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்'' என்றும் கூறினான்.
7:17. பிறகு அவர்களின் முன்னாலும் பின்னாலும், வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அவர்களிடம் வந்து சுற்றி வளைத்துக் கொள்வேன். மேலும், அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத்துவோராக நீ காணமாட்டாய்.”
7:17. “பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், அவர்களுக்குப் பின்னும், அவர்களின் வலப்புறங்களிலும், அவர்களின் இடப்புறங்களிலும் அவர்களிடம் நான் வந்து (அவர்களை வழி கெடுத்துக் கொண்டேயிருப்பேன், மேலும், அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாக நீ காணமாட்டாய்”
7:18 قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ؕ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَــٴَــنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِيْنَ
قَالَ கூறினான் اخْرُجْ வெளியேறு مِنْهَا இதிலிருந்து مَذْءُوْمًا நீ இகழப்பட்டவனாக مَّدْحُوْرًا ؕ விரட்டப்பட்டவனாக لَمَنْ تَبِعَكَ எவர்/பின்பற்றினார்/உன்னை مِنْهُمْ அவர்களில் لَاَمْلَــٴَــنَّ நிச்சயம் நிரப்புவேன் جَهَنَّمَ நரகத்தை مِنْكُمْ உங்களைக் கொண்டு اَجْمَعِيْنَ அனைவரை
7:18. அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.
7:18. (அதற்கு இறைவன்) ‘‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்'' என்று கூறினான்.
7:18. அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இழிந்தவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறிவிடு! (உன்னையும்) அவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றுகின்றவர்கள் அனைவரையும் நரகில் போட்டு நிரப்புவேன்.
7:18. இகழப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் நீ இதிலிருந்து வெளியேறி விடு, நிச்சயமாக (உன்னையும்) அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்களையும் சேர்த்து உங்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நரகத்தை நான் நிரப்புவேன்” என்று அல்லாஹ்வாகிய அவன் கூறினான்.
7:19 وَيٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ فَـكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ
وَيٰۤاٰدَمُ ஆதமே اسْكُنْ வசித்திரு اَنْتَ நீ وَزَوْجُكَ இன்னும் உம் மனைவி الْجَـنَّةَ சொர்க்கத்தில் فَـكُلَا (இருவரும்)புசியுங்கள் مِنْ حَيْثُ இடத்தில் شِئْتُمَا (இருவரும்)நாடினீர்கள் وَلَا تَقْرَبَا (இருவரும்) நெருங்காதீர்கள் هٰذِهِ الشَّجَرَةَ இந்த மரத்தை فَتَكُوْنَا (இருவரும்) ஆகிவிடுவீர்கள் مِنَ الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களில்
7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
7:19. (பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நீர் உமது மனைவியுடன் இச்சோலையில் வசித்திரும். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில்கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்'' (என்று கூறினான்.)
7:19. மேலும், ஆதமே! நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவனத்தில் தங்கியிருங்கள்! நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பியதைப் புசியுங்கள்! ஆனால் இம்மரத்தின் அருகில் நெருங்காதீர்கள்! அவ்வாறு நெருங்கினால், நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் சேர்ந்து விடுவீர்கள்.”
7:19. மேலும், “ஆதமே! நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவர்க்கத்தில் வசித்திருங்கள், பின்னர், நீங்கள் இருவரும் நீங்கள் நாடிய இடத்திலெல்லாம் சென்று நாடியவாறு புசியுங்கள் , இன்னும், இம்மரத்திற்கு அருகில் நீங்களிருவரும் நெருங்காதீர்கள், (அவ்வாறு சென்றால்) நீங்களிருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” என்றும் அல்லாஹ் கூறினான்.
7:20 فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطٰنُ لِيُبْدِىَ لَهُمَا مَا وٗرِىَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰٮكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ اِلَّاۤ اَنْ تَكُوْنَا مَلَـكَيْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِيْنَ
فَوَسْوَسَ ஊசலாட்டத்தை உண்டாக்கினான் لَهُمَا அவ்விருவருக்கும் الشَّيْطٰنُ ஷைத்தான் لِيُبْدِىَ (அவன்) வெளிப்படுத்துவதற்காக لَهُمَا அவ்விருவருக்கு مَا எது وٗرِىَ மறைக்கப்பட்டது عَنْهُمَا அவ்விருவரை விட்டு مِنْ سَوْاٰتِهِمَا அவ்விருவரின் வெட்கத் தலங்களை وَقَالَ கூறினான் مَا இல்லை نَهٰٮكُمَا அவன் உங்களிருவரை தடுக்க رَبُّكُمَا உங்களிருவரின் இறைவன் عَنْ هٰذِهِ விட்டு الشَّجَرَةِ இம்மரம் اِلَّاۤ தவிர اَنْ تَكُوْنَا நீங்கள் ஆகிவிடுவீர்கள் مَلَـكَيْنِ இரு வானவர்களாக اَوْ அல்லது تَكُوْنَا நீங்கள் ஆகிவிடுவீர்கள் مِنَ الْخٰلِدِيْنَ நிரந்தரமானவர்களில்
7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
7:20. (எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி, ‘‘(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் வானவர்களாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை'' என்று கூறியதுடன்,
7:20. ஆனால் அவ்விருவரை விட்டும் பரஸ்பரம் மறைந்திருந்த அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்; மேலும், இவ்வாறு கூறினான்: “உங்கள் இறைவன் இம்மரத்தின் அருகே செல்லக் கூடாது என்று உங்கள் இருவரையும் தடுத்ததற்கான காரணம், நீங்கள் இருவரும் வானவர்கள் ஆகிவிடக்கூடாது; அல்லது உங்களுக்கு நிரந்தர வாழ்வு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்!”
7:20. பின்னர் அவ்விருவருக்கும், மறைக்கப்பட்டிருந்த அவ்விருவருடைய வெட்கத்தலங்களை அவ்விவருக்கும் வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் (அவர்களிடம் இரசியமாகப் பேசி தவறான எண்ணத்தை) ஊசாட்டத்தை அவ்விருவருக்கும் உண்டாக்கினான், மேலும், “(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகி விடுவீர்கள், அல்லது நிரந்தரமாக இருப்பவர்களில் நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள், என்பதற்காகவே தவிர வேறெதற்காகவும் உங்கள் இரட்சகன் அம்மரத்தைவிட்டும் உங்களிருவரையும் தடுக்கவில்லை” என்று கூறினான்.
7:21 وَقَاسَمَهُمَاۤ اِنِّىْ لَـكُمَا لَمِنَ النّٰصِحِيْنَۙ
وَقَاسَمَهُمَاۤ சத்தியமிட்டான்/அவ்விருவரிடமும் اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمَا உங்கள் இருவருக்கும் لَمِنَ النّٰصِحِيْنَۙ நிச்சயமாக நன்மையை நாடுவோரில்
7:21. “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.
7:21. ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்'' என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து,
7:21. மேலும், அவன் அவர்களிடம் சத்தியம் செய்து கூறினான்: “நான் உங்கள் இருவருக்கும் உண்மையான நலம் நாடுபவனாவேன்.”
7:21. “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவர்களில் (ஒருவனாக) இருக்கின்றேன்” என்று அவ்விருவரிடம் (இப்லீஸாகிய அவன்) சத்தியமும் செய்தான்.
7:22 فَدَلّٰٮهُمَا بِغُرُوْرٍ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ ؕ وَنَادٰٮهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّـكُمَاۤ اِنَّ الشَّيْطٰنَ لَـكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ
فَدَلّٰٮهُمَا ஆக, தரம் தாழ்த்தினான்/அவ்விருவரை بِغُرُوْرٍ ۚ ஏமாற்றி فَلَمَّا ذَاقَا இருவரும் சுவைத்தபோது الشَّجَرَةَ மரத்தை بَدَتْ தெரிந்தன لَهُمَا அவ்விருவருக்கு سَوْاٰتُهُمَا அவ்விருவரின் வெட்கத்தலங்கள் وَطَفِقَا அவ்விருவரும் முயன்றனர் يَخْصِفٰنِ அவ்விவரும் மூடிக்கொள்கின்றனர் عَلَيْهِمَا தம் இருவர் மீதும் مِنْ وَّرَقِ இலைகளினால் الْجَـنَّةِ ؕ சொர்க்கத்தின் وَنَادٰٮهُمَا அழைத்தான்/அவ்விருவரை رَبُّهُمَاۤ அவ்விருவரின் இறைவன் اَلَمْ اَنْهَكُمَا நான் தடுக்கவில்லையா? / உங்களிருவரை عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ அம்மரத்தை விட்டு وَاَقُلْ இன்னும் நான்கூறவில்லையா? لَّـكُمَاۤ உங்களிருவருக்கு اِنَّ நிச்சயமாக الشَّيْطٰنَ ஷைத்தான் لَـكُمَا உங்களிருவருக்கு عَدُوٌّ எதிரி مُّبِيْنٌ வெளிப்படையான
7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
7:22. அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் ‘‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.
7:22. இவ்வாறு அவ்விருவரையும் ஏமாற்றி படிப்படியாக தன்வசப்படுத்தினான். கடைசியில் அவர்கள் அம்மரத்தி(ன் கனியி)னைச் சுவைத்ததும் அவர்களின் வெட்கத்தலங்கள் பரஸ்பரம் அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டன. பிறகு, அவர்கள் தங்கள் உடல்களை சுவனத்தின் இலைகளால் மூடிக்கொள்ளலாயினர். (அப்போது) அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கூறினான்: “இம் மரத்(தின் அருகில் செல்வ)தைவிட்டு உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா? மேலும், ஷைத்தான் உங்களின் வெளிப்படையான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?”
7:22. (பின்னர்) அவ்விருவரை ஏமாற்றி (படிப்படியாக தங்கள் நிலையிலிருந்து கீழே இறங்கச் செய்தான், எனவே, அவ்விருவரும் அம்மரத்தை அதன் கனியை)ச் சுவைக்கவே அவ்விருவரின் வெட்கத்தலங்களும் அவ்விருவருக்கும் வெளியாகித் தெரியலாயிற்று, அச்சுவனத்தில் இலைகளைக் கொண்டு அவ்விருவரும் தங்களை மூடிக் கொள்ளவும் ஆரம்பித்தனர், மேலும், (அது சமயம்) அவ்விருவரின் இரட்சகன் அவ்விருவரையும் அழைத்து “இம்மரத்தை விட்டும் உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா?” நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா? என்று அவ்விருவரையும் கேட்டான்.
7:23 قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
قَالَا அவ்விருவரும் கூறினர் رَبَّنَا எங்கள் இறைவா ظَلَمْنَاۤ நாங்கள் தீங்கிழைத்தோம் اَنْفُسَنَا ٚ எங்கள் ஆன்மாக்களுக்கு وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا நீ மன்னிக்கவில்லையெனில்/எங்களை وَتَرْحَمْنَا இன்னும் நீ கருணை புரியவில்லையெனில்/எங்களுக்கு لَـنَكُوْنَنَّ நிச்சயமாக ஆகிவிடுவோம் مِنَ الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளில்
7:23. அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
7:23. (அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.
7:23. அதற்கு அவர்களிருவரும் கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்துகொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.”
7:23. (அதற்கு) “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அநீதமிழைத்துக் கொண்டோம்) நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிடில் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்” என்று அவ்விருவரும் (பிரார்த்தித்துக்) கூறினர்.
7:24 قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَـعْضٍ عَدُوٌّ ۚ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ
قَالَ கூறினான் اهْبِطُوْا இறங்கிவிடுங்கள் بَعْضُكُمْ உங்களில் சிலர் لِبَـعْضٍ சிலருக்கு عَدُوٌّ ۚ எதிரி وَلَـكُمْ உங்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் مُسْتَقَرٌّ தங்குமிடம் وَّمَتَاعٌ இன்னும் சுகம் اِلٰى வரை حِيْنٍ ஒரு காலம்
7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
7:24. (அதற்கு இறைவன் ‘‘இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவிக்கலாம்'' என்று கூறினான்.
7:24. அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் இறங்கிவிடுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். மேலும், ஒரு குறிப் பிட்ட காலம் வரை பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கைச் சாதனங்களும் உள்ளன.”
7:24. (அதற்கு அல்லாஹ்) “இதிலிருந்து நீங்கள் இறங்கி விடுங்கள், உங்களில் சிலர் (மற்ற) சிலருக்கு பகைவர்களாவீர்கள், பூமியில் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு, (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
7:25 قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ
قَالَ கூறினான் فِيْهَا அதில்தான் تَحْيَوْنَ வாழ்வீர்கள் وَفِيْهَا இன்னும் அதில்தான் تَمُوْتُوْنَ இறப்பீர்கள் وَمِنْهَا இன்னும் அதிலிருந்துதான் تُخْرَجُوْنَ எழுப்பப்படுவீர்கள்
7:25. “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
7:25. ‘‘அதிலேயே நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் இறப்பீர்கள்; (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே எழுப்பவும் படுவீர்கள்'' என்றும் கூறினான்.
7:25. (மேலும்) கூறினான்: “நீங்கள் அங்கேயே வாழ்ந்து அங்கேயே மரணமடைவீர்கள்; பின்னர், அங்கிருந்தே நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள்.”
7:25. “அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள், அதிலேயே நீங்கள் இறப்பீர்கள், (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே நீங்கள் (மீண்டும் உயிர் கொடுத்து) வெளியாக்கப் படுவீர்கள்” என்று கூறினான்.
7:26 يٰبَنِىْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِىْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا ؕ وَلِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ ؕ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ
يٰبَنِىْۤ சந்ததிகளே اٰدَمَ ஆதமின் قَدْ திட்டமாக اَنْزَلْنَا இறக்கினோம் (படைத்தோம்) عَلَيْكُمْ உங்கள் மீது (உங்களுக்கு) لِبَاسًا ஆடையை يُّوَارِىْ மறைக்கின்ற(து) سَوْاٰتِكُمْ உங்கள் வெட்கத்தலங்களை وَرِيْشًا ؕ இன்னும் அலங்காரத்தை وَلِبَاسُ ஆடை التَّقْوٰى ۙ இறையச்சத்தின் ذٰ لِكَ அதுதான் خَيْرٌ ؕ மிகச் சிறந்தது ذٰ لِكَ இவை مِنْ اٰيٰتِ அத்தாட்சிகளில் اللّٰهِ அல்லாஹ்வின் لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
7:26. ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
7:26. ஆதமுடைய மக்களே! உங்கள் மானத்தை மறைக்கக்கூடிய, (உங்களை) அலங்கரிக்கக்கூடிய ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம். எனினும், (பாவங்களை மறைத்து விடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக!
7:26. ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம். ஆயினும் இறையச்சம் (தக்வா) எனும் ஆடையே மிகச் சிறந்த ஆடையாகும். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். இதன் மூலம் மக்கள் நல்லுணர்வு பெறக் கூடும்.
7:26. ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடிய ஆடையையும் அலங்காரத்தையும் திட்டமாக நாம் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கின்றோம், இன்னும் (பாவங்களை மறைத்துவிடக் கூடிய பரிசுத்தத் தன்மையான) பயபக்தி எனும் ஆடை-அதுதான் மிக்க மேலானது, அது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும், இதனைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறலாம்.
7:27 يٰبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا ؕ اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ؕ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ
يٰبَنِىْۤ சந்ததிகளே اٰدَمَ ஆதமின் لَا வேண்டாம் يَفْتِنَـنَّكُمُ உங்களை ஏமாற்றிவிட الشَّيْطٰنُ ஷைத்தான் كَمَاۤ போன்று اَخْرَجَ வெளியேற்றினான் اَبَوَيْكُمْ உங்கள் தாய் தந்தையை مِّنَ الْجَـنَّةِ சொர்க்கத்திலிருந்து يَنْزِعُ கழட்டுகிறான் عَنْهُمَا அவ்விருவரை விட்டு لِبَاسَهُمَا அவ்விருவரின் ஆடையை لِيُرِيَهُمَا அவன் காண்பிப்பதற்காக/அவ்விருவருக்கு سَوْءاٰتِهِمَا ؕ அவ்விருவருடைய வெட்கத்தலங்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் يَرٰٮكُمْ பார்க்கிறான்/உங்களை هُوَ அவன் وَقَبِيْلُهٗ இன்னும் அவனுடைய இனத்தார் مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ؕ நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا ஆக்கினோம் الشَّيٰطِيْنَ ஷைத்தான்களை اَوْلِيَآءَ நண்பர்களாக لِلَّذِيْنَ எவர்களுக்கு لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
7:27. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
7:27. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கிவிட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
7:27. ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம்.
7:27. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவ்விருவரின் மானத்தை அவ்விவருக்கும் காண்பிப்பதற்காக வேண்டி அவ்விருவரின் ஆடையை அவ்விருவரை விட்டும் அவன் களைந்து அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த சுவனத்திலிருந்து வெளியேற்றி (சோதனைக்குள்ளாக்கியது போன்று) உங்களையும் அவன் சோதனைக்குள்ளாக்கி விட வேண்டாம், நிச்சயமாக அவனும், அவனுடைய இனத்தாரும், நீங்கள் அவர்களைக் காண முடியாதவாறு மறைவாக இருந்து கொண்டு உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நிச்சயமாக, விசுவாசங்கொள்ளாதவர்களுக்கு அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கியிருக்கின்றோம்.
7:28 وَاِذَا فَعَلُوْا فَاحِشَةً قَالُوْا وَجَدْنَا عَلَيْهَاۤ اٰبَآءَنَا وَاللّٰهُ اَمَرَنَا بِهَا ؕ قُلْ اِنَّ اللّٰهَ لَا يَاْمُرُ بِالْفَحْشَآءِ ؕ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
وَاِذَا فَعَلُوْا அவர்கள் செய்தால் فَاحِشَةً ஒரு மானக்கேடானதை قَالُوْا கூறுகின்றனர் وَجَدْنَا கண்டோம் عَلَيْهَاۤ இதன் மீது اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை وَاللّٰهُ அல்லாஹ்வும் اَمَرَنَا ஏவினான்/எங்களுக்கு بِهَا ؕ قُلْ இதை/கூறுவீராக اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَاْمُرُ ஏவ மாட்டான் بِالْفَحْشَآءِ ؕ மானக்கேடானதை اَتَقُوْلُوْنَ கூறுகிறீர்களா? عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது مَا எவற்றை لَا تَعْلَمُوْنَ அறியமாட்டீர்கள்
7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
7:28. (நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும் போது, அதைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் ‘‘எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். மேலும், இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்'' என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க்கூறலாமா?'' என்று கூறுவீராக.
7:28. அவர்கள், ஏதேனும் மானக்கேடான செயலைச் செய்தால், “இப்படித்தான் எங்கள் மூதாதையர் வாழக் கண்டோம்” என்றும் “இவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்தான் எங்களுக்குக் கட்டளையிட்டான்” என்றும் கூறுகிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளையிடுவதில்லை. எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதானா என்பதை) நீங்கள் அறியமாட்டீர்களோ அந்த விஷயங்களையா அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்கள்?”
7:28. மேலும், (விசுவாசங்கொள்ளாத) அவர்கள், யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால் அவர்கள், எங்கள் மூதாதையர்களை இதன் மீதே நாங்கள் கண்டோம், அல்லாஹ்வும் இதைக்கொண்டே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கின்றான்” என்று கூறுகின்றனர், (அதற்கு நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைக் கொண்டு (அவற்றைச் செய்யுமாறு) அவன் கட்டளையிடமாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைப் பொய்யாகக் கூறுகிறீர்கள்” என்று நீர் கூறுவீராக.
7:29 قُلْ اَمَرَ رَبِّىْ بِالْقِسْطِ وَاَقِيْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ ؕ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَؕ
قُلْ கூறுவீராக اَمَرَ ஏவினான் رَبِّىْ என் இறைவன் بِالْقِسْطِ நீதத்தை وَاَقِيْمُوْا இன்னும் நிலைநிறுத்துங்கள் وُجُوْهَكُمْ உங்கள் முகங்களை عِنْدَ இடம் كُلِّ எல்லாம் مَسْجِدٍ மஸ்ஜிது وَّادْعُوْهُ அழையுங்கள்/அவனை مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்களாக لَـهُ அவனுக்கு الدِّيْنَ ؕ வழிபடுவதை كَمَا بَدَاَكُمْ போன்று/ஆரம்பமாக படைத்தான்/உங்களை تَعُوْدُوْنَؕ திரும்புவீர்கள்
7:29. “என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.
7:29. ‘‘என் இறைவன் நீதத்தையே கட்டளையிட்டிருக்கிறான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து உலகத்தில்) ஆரம்பமாக படைத்ததுபோல் (நீங்கள் இறந்த பின்னர் மறுமை நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) மீள்வீர்கள்'' என்றும் (நபியே நீர்) கூறுவீராக.
7:29. (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “என் அதிபதி நீதியைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டுள்ளான்; மேலும் (இதுவும் அவனது கட்டளைதான்:) ஒவ்வொரு வழிபாட்டிலும் நீங்கள் முன்னோக்கும் திசைகளைச் சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்! மேலும், தீனை (நெறியை) அவனுக்கே உரித்தாக்கியவண்ணம் அவனை அழையுங்கள்! அவன் உங்களை இப்பொழுது எவ்வாறு படைத்திருக்கின்றானோ அவ்வாறே நீங்கள் மீண்டும் படைக்கப் படுவீர்கள்.
7:29. “என் இரட்சகன் நீதத்தையே கட்டளையிட்டிருக்கின்றான், ஒவ்வொரு தொழும் இடத்திலும் (தொழுகையின் போது) நீங்கள் உங்கள் முகங்களை (அவனளவிலேயே) நிலைப் படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் அவனுக்கே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக அவனையே அழையுங்கள், அவன் (இல்லாமையிலிருந்து உங்களைப் படைக்க)த் துவக்கிய பிரகாரமே (நீங்கள் இறந்த பின்னரும், அவனால்) உயிர்ப்பிக்கப்பெற்று அவனிடமே நீங்கள் மீள்வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
7:30 فَرِيْقًا هَدٰى وَ فَرِيْقًا حَقَّ عَلَيْهِمُ الضَّلٰلَةُ ؕ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ
فَرِيْقًا ஒரு பிரிவை هَدٰى நேர்வழிப்படுத்தினான் وَ فَرِيْقًا இன்னும் ஒரு பிரிவு حَقَّ உறுதியாகி விட்டது عَلَيْهِمُ அதன் மீது الضَّلٰلَةُ ؕ வழிகேடு اِنَّهُمُ நிச்சயமாக அவர்கள் اتَّخَذُوا எடுத்துக் கொண்டனர் الشَّيٰطِيْنَ ஷைத்தான்களை اَوْلِيَآءَ தோழர்களாக مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَيَحْسَبُوْنَ இன்னும் எண்ணுகின்றனர் اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் مُّهْتَدُوْنَ நேர்வழி பெற்றவர்கள்
7:30. ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது; ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
7:30. (உங்களில்) சிலரை அவன் நேரான வழியில் செலுத்தினான். மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டது. அதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டனர்.
7:30. ஒரு கூட்டத்தாரை அவன் நேர்வழிப்படுத்தி விட்டான்; மேலும், மற்றொரு கூட்டத்தார் மீது வழிகேடு விதிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தான்களை உதவியாளர்களாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், திண்ணமாக தாம் நேர்வழியில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.”
7:30. (உங்களில்) ஒரு கூட்டத்தாரை அவன் நேரான வழியில் செலுத்தினான், மற்றொரு கூட்டத்தாருக்கோ வழிகேடு அவர்கள் மீது உறுதியாகி விட்டது, (காரணம்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்கள், மேலும், தாங்கள் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்கள் என எண்ணுகிறார்கள்.
7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ
يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் சந்ததிகளே خُذُوْا زِيْنَتَكُمْ அலங்கரித்துக் கொள்ளுங்கள் / உங்களை عِنْدَ இடம் كُلِّ எல்லாம் مَسْجِدٍ மஸ்ஜிது وَّكُلُوْا இன்னும் புசியுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் وَلَا تُسْرِفُوْا ۚ விரயம் செய்யாதீர்கள் اِنَّهٗ நிச்சயம் அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُسْرِفِيْنَ விரயம் செய்பவர்களை
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
7:31. ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண் செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! மேலும், உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால்) உங்களுடைய அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள், மேலும், பருகுங்கள், (ஆனால்) வீண் விரயமும் செய்யாதீர்கள்; ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
7:32 قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِىْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِؕ قُلْ هِىَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
قُلْ கூறுவீராக مَنْ எவன்? حَرَّمَ தடை செய்தான் زِيْنَةَ அலங்காரத்தை اللّٰهِ அல்லாஹ் الَّتِىْۤ எது اَخْرَجَ வெளிப்படுத்தினான் لِعِبَادِهٖ தன் அடியார்களுக்காக وَالطَّيِّبٰتِ இன்னும் நல்லவற்றை مِنَ الرِّزْقِؕ உணவில் قُلْ கூறுவீராக هِىَ அது لِلَّذِيْنَ எவர்களுக்கு اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا இவ்வுலகம் خَالِصَةً பிரத்தியோகமாக يَّوْمَ الْقِيٰمَةِؕ மறுமை நாளில் كَذٰلِكَ இவ்வாறு نُفَصِّلُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّعْلَمُوْنَ அறிகின்றார்கள்
7:32. (நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
7:32. (நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவை என்று) தடுப்பவர் யார்?'' எனக் கேட்டு, ‘‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது'' என்று கூறுவீராக. அறியக்கூடிய மக்களுக்கு (நமது) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
7:32. (நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள அலங்காரத்தையும் மேலும், அவன் வழங்கியுள்ள தூய்மையான உண்பொருள்களையும் தடைசெய்தது யார்?” நீர் கூறும்: “இறைநம்பிக்கையாளர்களுக்கு இப்பொருள்கள் அனைத்தும் உலக வாழ்க்கையில் கிடைக்கும். மறுமைநாளில் அவர்களுக்கே அவை உரியனவாயிருக்கும்.” இவ்வாறு நாம் நம்முடைய வசனங்களை அறிவுடைய சமூகத்தாருக்குத் தெளிவாக விவரிக்கின்றோம்.
7:32. (நபியே!) “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியிருக்கும் (சகலவித) அலங்காரத்தையும், உணவு வகைகளில் நல்லவற்றையும் (ஆகாதவையென்று) தடுத்தவர் யார்? என்று கேட்பீராக! அது இவ்வுலக வாழ்வில் விசுவாசம் கொண்டவர்களுக்கு (உரியதாகும். எனினும்,) மறுமை நாளில் (மற்றவர்களுக்கன்றி அவர்களுக்கு மட்டுமே) பிரத்தியேகமானதாகும், என்று கூறுவீராக! அறியக்கூடிய சமூகத்தார்க்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
7:33 قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّىَ الْـفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَ الْاِثْمَ وَالْبَـغْىَ بِغَيْرِ الْحَـقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
قُلْ கூறுவீராக اِنَّمَا எல்லாம் حَرَّمَ தடைசெய்தான் رَبِّىَ என் இறைவன் الْـفَوَاحِشَ மானக்கேடான காரியங்கள் مَا எது ظَهَرَ வெளிப்படையாக இருக்கிறது مِنْهَا அவற்றில் وَمَا இன்னும் எது بَطَنَ மறைவாகஇருக்கிறது وَ الْاِثْمَ இன்னும் பாவத்தை وَالْبَـغْىَ இன்னும் கொடுமைப்படுத்துவது بِغَيْرِ الْحَـقِّ நியாயமின்றி وَاَنْ تُشْرِكُوْا இன்னும் நீங்கள் இணையாக்குவதை بِاللّٰهِ அல்லாஹ்வுக்கு مَا لَمْ يُنَزِّلْ بِهٖ எதை/அவன் இறக்கவில்லை/அதற்கு سُلْطٰنًا ஓர் ஆதாரத்தை وَّاَنْ تَقُوْلُوْا இன்னும் நீங்கள் கூறுவதை عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது مَا எவற்றை لَا تَعْلَمُوْنَ அறியமாட்டீர்கள்
7:33. “என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.
7:33. (நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன் (ஹராம் என்று) தடை செய்திருப்பதெல்லாம்: பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், அல்லாஹ் எதற்கு ஆதாரம் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான் (அல்லாஹ் தடுத்திருக்கிறான்).
7:33. (நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “என்னுடைய இறைவன் தடை செய்திருப்பவை இவற்றையெல்லாம்தாம்: மானக்கேடானவற்றைச் செய்தல் அவை வெளிப்படையாக இருந்தாலும் சரி; மறைவாக இருந்தாலும் சரி! பாவம் புரிதல், நேர்மைக்கு மாறாக வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுதல், மேலும் எவற்றைக் குறித்து எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அல்லாஹ்வுடன் இணை வைத்தல், மேலும், எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதான் என்பதை) நீங்கள் அறியவில்லையோ அவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லல்!”
7:33. என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை-அவற்றில் வெளிப்படையானதையும் மறைமுகமானதையும், (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணை வைப்பதையும் - அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது பொய்யாகக்) கூறுவதையும்-தான்” ,என்று (நபியே!) நீர் கூறுவீராக!
7:34 وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ
وَلِكُلِّ எல்லோருக்கும் اُمَّةٍ இனத்தவர் اَجَلٌۚ ஒரு தவணை فَاِذَا جَآءَ வந்தால் اَجَلُهُمْ அவர்களுடைய தவணை لَا يَسْتَاْخِرُوْنَ பிந்த மாட்டார்கள் سَاعَةً ஒரு வினாடி وَّلَا يَسْتَقْدِمُوْنَ இன்னும் முந்த மாட்டார்கள்
7:34. ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
7:34. ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய தவனைக் காலம் வரும் போது ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
7:34. ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தவணை இருக்கிறது. அவரவரின் தவணை பூர்த்தியாகிவிட்டால் ஒரு வினாடிகூட அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
7:34. ஓவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒரு தவணையுண்டு, ஆகவே, அவர்களுடைய தவணை வந்துவிட்டால் ஒரு கணப்பொழுது பிந்தவுமாட்டார்கள், முந்தவுமாட்டார்கள்.
7:35 يٰبَنِىْۤ اٰدَمَ اِمَّا يَاْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِىْۙ فَمَنِ اتَّقٰى وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் சந்ததிகளே اِمَّا يَاْتِيَنَّكُمْ நிச்சயமாக வந்தால் / உங்களிடம் رُسُلٌ தூதர்கள் مِّنْكُمْ உங்களில் இருந்தே يَقُصُّوْنَ விவரித்தவர்களாக عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِىْۙ என் வசனங்களை فَمَنِ எவர்(கள்) اتَّقٰى அஞ்சினார்(கள்) وَاَصْلَحَ இன்னும் சீர்திருத்தினார்(கள்) فَلَا خَوْفٌ பயமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
7:35. ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
7:35. ஆதமுடைய மக்களே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் வந்து என் வசனங்களை மெய்யாகவே உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போது, (அவற்றை செவியுற்ற உங்களில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள்.
7:35. (மேலும் முதல் மனிதரைப் படைத்தபோதே அல்லாஹ் இதைத் தெளிவாக்கி விட்டான்; அதாவது) ஆதத்தின் மக்களே...! (நினைவில் வையுங்கள்:) உங்களிலிருந்தே என்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கின்ற தூதர்கள் உங்களிடம் வந்தால், அப்போது எவர்கள் மாறு செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றார்களோ, மேலும் தங்களுடைய நடத்தையைச் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
7:35. ஆதமுடைய மக்களே! உங்களிலிருந்தே நிச்சயமாக உங்களிடம் (என்னுடைய) தூதர்கள் வந்து என்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் காண்பிக்கும்போது, எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (தங்களைச்) சீர்திருத்திக்கொண்டார்களோ, அவர்களுக்கு எத்தகைகைய பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.
7:36 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَاۤ اُولٰۤٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
وَالَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَاسْتَكْبَرُوْا பெருமையடித்து புறக்கணித்தனர் عَنْهَاۤ அவற்றை விட்டு اُولٰۤٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ النَّارِۚ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ நிரந்தரமானவர்கள்
7:36. ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.
7:36. (எனினும்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.
7:36. ஆனால் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிட்டு அவற்றை ஏற்காமல் ஆணவம் கொண்டார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அவர்கள் என்றென்றும் அதில் வீழ்ந்து கிடப்பார்கள்.
7:36. இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றை (ஏற்பதை) விட்டும் கர்வமும் கொண்டார்களே, அத்தகையோர்-அவர்கள் நரகவாசிகளாவர், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.
7:37 فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اُولٰۤٮِٕكَ يَنَالُهُمْ نَصِيْبُهُمْ مِّنَ الْـكِتٰبِؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمْ رُسُلُـنَا يَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَيْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ
فَمَنْ யார்? اَظْلَمُ மிகப்பெரிய அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اَوْ அல்லது كَذَّبَ பொய்ப்பித்தான் بِاٰيٰتِهٖ ؕ அவனுடைய வசனங்களை اُولٰۤٮِٕكَ இவர்கள் يَنَالُهُمْ அடையும்/இவர்களை نَصِيْبُهُمْ பாகம்/இவர்களுடைய مِّنَ الْـكِتٰبِؕ விதியில் حَتّٰٓى இறுதியாக اِذَا போது جَآءَتْهُمْ இவர்களிடம் வந்த رُسُلُـنَا நம் தூதர்கள் يَتَوَفَّوْنَهُمْ ۙ உயிர்வாங்குபவர்களாக / இவர்களை قَالُوْۤا கூறுவார்கள் اَيْنَ எங்கே? مَا எவை كُنْتُمْ இருந்தீர்கள் تَدْعُوْنَ பிரார்த்திப்பீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ ؕ அல்லாஹ்வையன்றி قَالُوْا கூறினார்கள் ضَلُّوْا மறைந்தனர் عَنَّا எங்களை விட்டு وَشَهِدُوْا இன்னும் சாட்சியளிப்பார்கள் عَلٰٓى எதிராக اَنْفُسِهِمْ தங்களுக்கு اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் كَانُوْا இருந்தனர் كٰفِرِيْنَ நிராகரிப்பவர்களாக
7:37. எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” எனக் கேட்பார்கள்; (அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
7:37. எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரை) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம் வானவர்கள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் ‘‘கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன'' என்று கூறி, மெய்யாகவே அவர்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்று தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள்.
7:37. எவன் அல்லாஹ்வின் பெயரில் பொய்களைப் புனைந்துரைக்கின்றானோ அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார்? எனினும், அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட பங்கு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறுதியில் நாம் அனுப்பிய வானவர்கள் அவர்களுடைய ஆன்மாக்களைக் கைப்பற்றுவதற்காக அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்களிடம் கேட்பார்கள்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்த தெய்வங்களை அழைத்து வந்தீர்களோ அந்த தெய்வங்கள் (இப்போது) எங்கே?” அதற்கு அவர்கள் “அவை அனைத்தும் எங்களை விட்டுக் காணாமல் போய்விட்டன” என்று கூறுவார்கள். பிறகு “நாங்கள் உண்மையிலேயே சத்தியத்தை நிராகரிப்பவர்களாய் இருந்தோம்” என்று தங்களுக்கு எதிராகத் தாங்களே சாட்சி கூறுவார்கள்.
7:37. அல்லாஹ்வின், மீது பொய்யைக் கற்பனை செய்து கூறுகின்றவரைவிட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றவரைவிட மிக அநியாயக்காரர் யார்? அத்தகையோர்-அவர்களுக்கு எழுதப்பட்ட (உணவு, செல்வம் முதலிய)வைகளிலிருந்து அவர்களின் பாத்தியதை அவர்களுக்குக் கிடைக்கும், முடிவாக நம் தூதர்(களான மலக்கு)கள் அவர்களிடம் வந்து அவர்க(ளுடைய உயிர்க)ளை கைப்பற்றும் சமயத்தில் “அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைத்துக் கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே” என்று கேட்பார்கள், அ(தற்க)வர்கள், (அவர்கள் யாவும்) “எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டனர்” என்று கூறி, நிச்சயமாகவே தாங்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தனர் என தங்களுக்கு விரோதமாகவே அவர்கள் சாட்சியம் கூறுவார்கள்.
7:38 قَالَ ادْخُلُوْا فِىْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِى النَّارِ ؕ كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا ؕ حَتّٰۤى اِذَا ادَّارَكُوْا فِيْهَا جَمِيْعًا ۙ قَالَتْ اُخْرٰٮهُمْ لِاُوْلٰٮهُمْ رَبَّنَا هٰٓؤُلَۤاءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ ؕ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰـكِنْ لَّا تَعْلَمُوْنَ
قَالَ கூறுவான் ادْخُلُوْا நுழையுங்கள் فِىْۤ اُمَمٍ கூட்டங்களில் قَدْ خَلَتْ சென்றுவிட்டன مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் مِّنَ الْجِنِّ ஜின்களில் وَالْاِنْسِ இன்னும் மனிதர்களில் فِى النَّارِ ؕ நரகத்தில் كُلَّمَا எல்லாம் دَخَلَتْ நுழைந்தது اُمَّةٌ ஒரு கூட்டம் لَّعَنَتْ சபிக்கும் اُخْتَهَا ؕ தன் சக கூட்டத்தை حَتّٰۤى இறுதியாக اِذَا ادَّارَكُوْا அவர்கள் ஒன்றுசேர்ந்தால் فِيْهَا அதில் جَمِيْعًا ۙ அனைவரும் قَالَتْ கூறும் اُخْرٰٮهُمْ அவர்களில் பின் வந்த கூட்டம் لِاُوْلٰٮهُمْ தங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்து رَبَّنَا எங்கள் இறைவா هٰٓؤُلَۤاءِ இவர்கள்தான் اَضَلُّوْنَا வழி கெடுத்தனர்/எங்களை فَاٰتِهِمْ எனவே கொடு/அவர்களுக்கு عَذَابًا வேதனையை ضِعْفًا இரு மடங்கு مِّنَ النَّارِ ؕ நரகில் قَالَ கூறுவான் لِكُلٍّ எல்லோருக்கும் ضِعْفٌ இரு மடங்கு وَّلٰـكِنْ எனினும் لَّا تَعْلَمُوْنَ அறியமாட்டீர்கள்
7:38. (அல்லாஹ்) கூறுவான்: “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்.” ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு” என்று சொல்வார்கள். அவன் கூறுவான்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்.”
7:38. (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) கூட்டத்தினருடன் நீங்களும் சேர்ந்து நரகத்திற்குச் சென்று விடுங்கள்'' என்று கூறுவான். அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் (நரகத்திற்குச்) சென்றபொழுது (முன்னர் அங்கு வந்துள்ள) தங்கள் இனத்தாரை கோபித்து சபிப்பார்கள். (இவ்வாறு) இவர்கள் அனைவரும் நரகத்தையடைந்த பின்னர், (அவர்களில்) பின் சென்றவர்கள் (தங்களுக்கு) முன் சென்றவர்களைச் சுட்டிக்காட்டி, ‘‘எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக!'' என்று கூறுவார்கள். அதற்கு அவன், ‘‘உங்களில் அனைவருக்குமே இரு மடங்கு வேதனை உண்டு. எனினும் (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறுவான்.
7:38. அல்லாஹ் கூறுவான்: “உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களுடன் நீங்களும் நரகத்திற்குச் செல்லுங்கள்!” ஒவ்வொரு கூட்டத்தாரும், (நரகத்தினுள்) நுழையும்போது தமக்கு முன்சென்ற கூட்டத்தாரைச் சபித்தவாறே செல்வார்கள். இறுதியில் எல்லோரும் அங்கு ஒன்று கூடும்போது அவர்களில் பிந்தைய கூட்டத்தார் முந்தைய கூட்டத்தாரைப் பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தார்கள்! எனவே, இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக!” என்று கூறுவார்கள். (அதற்கு மறுமொழியாக) அல்லாஹ் கூறுவான்: “ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனைதான் உண்டு. ஆயினும், நீங்கள் அறிவதில்லை.”
7:38. (அதற்கு அல்லாஹ் அவர்களிடம்) “ஜின்களிலும் மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட கூட்டத்தினர்களுடன் நீங்களும் சேர்ந்து நரக நெருப்பில் நுழையுங்கள்” என்று கூறுவான், அவர்களில் ஒவ்வொரு சமுதாயத்தினரும் (நரகத்திற்குள்) நுழையும் பொழுதெல்லாம் தனக்கு முன் அங்கு வந்துள்ள தங்கள் (இனத்தாரின் முன் சென்ற)சகக்கூட்டத்தினரை சபிப்பார்கள், முடிவாக அவர்கள் யாவரும் நரகத்தையடைந்த பொழுது (அவர்களில்) பிந்தியவர்கள் (பின்பற்றியவர்கள், பின்பற்றப்பட்ட தலைவர்களான) முந்தியவர்களைப் பற்றி “எங்கள் இரட்சகனே இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தவர்கள், ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) நரகத்தில் இரட்டிப்பான வேதனையைக் கொடுப்பாயாக” என்று கூறுவார்கள், அதற்கு அவன் “உங்களில் ஒவ்வொருவருக்குமே இரட்டிப்பு (வேதனை) உண்டு, எனினும், (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறுவான்.
7:39 وَقَالَتْ اُوْلٰٮهُمْ لِاُخْرٰٮهُمْ فَمَا كَانَ لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ
وَقَالَتْ இன்னும் கூறும் اُوْلٰٮهُمْ அவர்களில் முன்சென்ற கூட்டம் لِاُخْرٰٮهُمْ அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு فَمَا كَانَ لَـكُمْ உங்களுக்கு இல்லை عَلَيْنَا எங்களை விட مِنْ فَضْلٍ ஒரு மேன்மை فَذُوْقُوا ஆகவே சுவையுங்கள் الْعَذَابَ வேதனையை بِمَا எதன் காரணமாக كُنْتُمْ இருந்தீர்கள் تَكْسِبُوْنَ செய்வீர்கள்
7:39. அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, “எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்கள்.
7:39. அவர்களில் முன் சென்றவர்கள், பின் சென்றவர்களை நோக்கி ‘‘எங்களைவிட உங்களுக்கு ஒரு மேன்மையும் கிடையாது. ஆதலால், நீங்களாகவே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக (நீங்களும் இரு மடங்கு) வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள்.
7:39. மேலும், அவர்களில் முந்தைய கூட்டத்தார் பிந்தைய கூட்டத்தாரைப் பார்த்து “(நாங்கள் குற்றவாளிகள் என்றால்) எங்களைவிட நீங்கள் சிறந்தவர்களா என்ன? எனவே (இப்பொழுது) நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள்.
7:39. அவர்களில் முந்தியவர்கள் அவர்களில் பிந்தியவர்களிடம், “எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்கள் சம்பாதித்துக் கொண்ட (தீ)வினையின் காரணமாக (நீங்களும் இரட்டிப்பு) வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள்.
7:40 اِنَّ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا يَدْخُلُوْنَ الْجَـنَّةَ حَتّٰى يَلِجَ الْجَمَلُ فِىْ سَمِّ الْخِيَاطِ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُجْرِمِيْنَ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ كَذَّبُوْا பொய்ப்பித்தவர்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَاسْتَكْبَرُوْا இன்னும் பெருமையடித்து புறக்கணித்தனர் عَنْهَا அவற்றை விட்டு لَا تُفَتَّحُ திறக்கப்படாது لَهُمْ அவர்களுக்கு اَبْوَابُ வாசல்கள் السَّمَآءِ வானத்தின் وَلَا يَدْخُلُوْنَ இன்னும் நுழைய மாட்டார்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் حَتّٰى يَلِجَ நுழையும் வரை الْجَمَلُ ஒட்டகம் فِىْ سَمِّ காதில் الْخِيَاطِ ؕ ஊசியின் وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலி கொடுப்போம் الْمُجْرِمِيْنَ குற்றவாளிகளுக்கு
7:40. எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
7:40. நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்.
7:40. (உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்:) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக்கூறி அவற்றைப் புறக்கணித்து ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப்படமாட்டா! அவர்கள் சொர்க்கத்தில் நுழைவது என்பது, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போன்று இயலாத ஒன்றாகும். மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலிதான் கிடைக்கும்.
7:40. நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டாது, மேலும், ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும், குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
7:41 لَهُمْ مِّنْ جَهَـنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ
لَهُمْ அவர்களுக்கு مِّنْ جَهَـنَّمَ நரகத்தில் مِهَادٌ ஒரு விரிப்பு وَّمِنْ فَوْقِهِمْ இன்னும் அவர்களுக்கு மேல் غَوَاشٍ ؕ போர்வைகள் وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலி கொடுப்போம் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு
7:41. அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
7:41. நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக் கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்.
7:41. அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், அவர்கள் போர்த்திக்கொள்ள நெருப்புப் போர்வைகளுமே கிடைக்கும். இவ்வாறே அக்கிரமக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்!
7:41. அவர்களுக்கு நரகத்திலிருந்து (நெருப்பு) விரிப்புகளும், அவர்களுக்கு மேலிருந்து (போர்த்திக் கொள்ள நெருப்புப்) போர்வைகளும் உண்டு, இன்னும் இவ்வாறே அநியாயக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
7:42 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۤ اُولٰۤٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நன்மைகளை لَا نُـكَلِّفُ சிரமப்படுத்த மாட்டோம் نَفْسًا ஓர் ஆன்மாவை اِلَّا தவிர وُسْعَهَاۤ அதன் சக்திக்குத் தக்கவாறே اُولٰۤٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَـنَّةِۚ சொர்க்கவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ நிரந்தரமானவர்கள்
7:42. ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ - எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் - அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
7:42. எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்களால் இயன்றவரை) நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்களில் ஒருவரையும் அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. இவர்கள் தான் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.
7:42. (இதற்கு மாறாக) எவர்கள் (நம்முடைய திருவசனங்கள் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ இது விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சக்திக்கு ஏற்பவே நாம் பொறுப்பினைச் சுமத்துகின்றோம் அவர்கள் சுவனவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.
7:42. இன்னும், விசுவாசங்கொண்டு நற்காரியங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குத் தக்கவாரல்லாது நாம் சிரமப்படுத்தமாட்டோம்-அவர்கள்தான் சுவனவாசிகள், அதில் அவர்கள் நிந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.
7:43 وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ هَدٰٮنَا لِهٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا اللّٰهُ ۚ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّ ؕ وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَـنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
وَنَزَعْنَا நீக்கி விடுவோம் مَا فِىْ صُدُوْرِهِمْ எதை/அவர்களுடைய நெஞ்சங்களில் مِّنْ غِلٍّ குரோதத்தை تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهِمُ அவர்களுக்குக் கீழ் الْاَنْهٰرُۚ நதிகள் وَقَالُوا இன்னும் கூறுவார்கள் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே الَّذِىْ هَدٰٮنَا لِهٰذَا எவன்/ நேர்வழிபடுத்தினான்/எங்களை/இதற்கு وَمَا كُنَّا لِنَهْتَدِىَ நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம் لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا நேர்வழி செலுத்தி இருக்கவில்லையென்றால் /எங்களை اللّٰهُ ۚ அல்லாஹ் لَقَدْ திட்டமாக جَآءَتْ வந்தா(ர்க)ள் رُسُلُ தூதர்கள் رَبِّنَا எங்கள் இறைவனின் بِالْحَـقِّ ؕ உண்மையைக் கொண்டு وَنُوْدُوْۤا இன்னும் அழைக்கப்படுவார்கள் اَنْ تِلْكُمُ الْجَـنَّةُ இந்த சொர்க்கம் اُوْرِثْتُمُوْهَا இதற்கு வாரிசாக்கப்பட்டீர்கள் بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ நீங்கள் செய்து கொண்டிருந்ததனால்
7:43. தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.
7:43. (இவ்வுலகில் ஒருவரைப்பற்றி மற்றவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(களுடைய பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் ‘‘இந்த (சொர்க்கத்தை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்'' என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) ‘‘பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சொர்க்கத்திற்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்'' என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.
7:43. மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிராவிடில், நாங்கள் நேர்வழியை அடைந்திருக்கவே மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இதுதான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!”
7:43. மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்த குரோதத்தை நாம் நீக்கி விடுவோம், அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், இன்னும் அவர்கள், “இ(ந்தக் சுவனபதியை அடைவ)தற்குரிய நேரான வழியில் எங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும். அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிருக்காவிடில், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை அடைந்தவர்களாக ஆகி இருக்கவே மாட்டோம், எங்கள் இரட்சகனின் தூதர்கள் (சந்தேகமின்றி) சத்திய (மார்க்க)த்தையே நிச்சயமாக (எங்களுக்கு)க் கொண்டு வந்தார்கள்” என்று கூறுவார்கள், அந்த சொர்க்கம், நீங்கள் (பூமியில்) செய்து கொண்டிருந்த (நன்மையான)வற்றின் (மூலம் அல்லாஹ்வின் அருளைப்பெற்று அதன்) காரணமாகவே அதனை நீங்கள் வாரிசாக்கப்பட்டுள்ளீர்கள் என்று (சப்தமிட்டு) அழைக்கப்படுவார்கள்.
7:44 وَنَادٰٓى اَصْحٰبُ الْجَـنَّةِ اَصْحٰبَ النَّارِ اَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ؕ قَالُوْا نَـعَمْ ۚ فَاَذَّنَ مُؤَذِّنٌۢ بَيْنَهُمْ اَنْ لَّـعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَۙ
وَنَادٰٓى அழைப்பார்(கள்) اَصْحٰبُ الْجَـنَّةِ சொர்க்கவாசிகள் اَصْحٰبَ النَّارِ நரகவாசிகளை اَنْ قَدْ وَجَدْنَا என்று/பெற்றுக் கொண்டோம் مَا وَعَدَنَا எதை/வாக்களித்தான்/எங்களுக்கு رَبُّنَا எங்கள் இறைவன் حَقًّا உண்மையில் فَهَلْ وَجَدْتُّمْ பெற்றீர்களா? مَّا எதை وَعَدَ வாக்களித்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் حَقًّا ؕ உண்மையில் قَالُوْا கூறுவார்கள் نَـعَمْ ۚ ஆம்! فَاَذَّنَ ஆகவே அறிவிப்பார் مُؤَذِّنٌۢ ஓர் அறிவிப்பாளர் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் اَنْ لَّـعْنَةُ நிச்சயமாக சாபம் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَى الظّٰلِمِيْنَۙ அநியாயக்காரர்கள் மீது
7:44. சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, “எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.
7:44. (அந்நாளில்) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை நோக்கி, ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொண்டோம்; நீங்களும் உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?'' என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் ‘‘ஆம்! (பெற்றுக் கொண்டோம்)'' என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக!''
7:44. பிறகு சுவனவாசிகள் நரகவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவையே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவைதாம் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அதற்கவர்கள், “ஆம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கு மத்தியில் ஒருவர் அறிவிப்பார்: அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக!
7:44. இன்னும், (அந்நாளில்) சுவர்க்கவாசிகள் நரகவாசிகளை அழைத்து “எங்கள் இரட்சகன் எங்களுக்கு வாக்களித்திருந்ததை நாங்கள் உண்மையாக பெற்றுக் கொண்டோம், நீங்களும் உங்கள் இரட்சகன் உங்களுக்கு வாக்களித்திருந்ததை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?” என்று (சப்தமிட்டுக்), கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “ஆம் (பெற்றுக்கொண்டோம்)” என்று கூறுவார்கள், அது சமயம், அவர்களுக்கு மத்தியில் அறிவிப்பாளர் ஒருவர் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக” என அறிவிப்பார்.
7:45 الَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَـبْـغُوْنَهَا عِوَجًا ۚ وَهُمْ بِالْاٰخِرَةِ كٰفِرُوْنَۘ
الَّذِيْنَ எவர்கள் يَصُدُّوْنَ தடுத்தனர் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் وَيَـبْـغُوْنَهَا இன்னும் அதில்தேடுகிறார்கள் عِوَجًا ۚ கோணலை وَهُمْ அவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை كٰفِرُوْنَۘ நிராகரிப்பவர்கள்
7:45. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர்.
7:45. (ஏனென்றால்,) அவர்கள் அல்லாஹ்வின் பாதையைத் தடுத்து அதைக் கோணலாக்க விரும்பினார்கள். அவர்கள் மறுமையையும் நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.’
7:45. அவர்கள் (எத்தகையவர்களெனில்) அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தார்கள்; மேலும் அதனைக் கோணலாக்க விரும்பினார்கள்; மேலும் மறுமையை மறுத்தார்கள்.
7:45. அத்தகையோர்-அவர்கள் அல்லாஹ்வின் பாதையைவிட்டு (மனிதர்களைத்) தடுத்துக்கொண்டும், இன்னும் (அவ்வழிக்கு யாரும் செல்லாதிருக்க) அதனைக் கோணலாக்கவும் தேடினார்கள், அன்றியும் அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள்.
7:46 وَبَيْنَهُمَا حِجَابٌۚ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّاۢ بِسِيْمٰٮهُمْ ۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ
وَبَيْنَهُمَا அவ்விருவருக்குமிடையில் حِجَابٌۚ ஒரு மதில் وَعَلَى மீது الْاَعْرَافِ சிகரங்கள் رِجَالٌ (சில) மனிதர்கள் يَّعْرِفُوْنَ அறிவார்கள் كُلًّاۢ ஒவ்வொருவரையும் بِسِيْمٰٮهُمْ ۚ அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு وَنَادَوْا இன்னும் அழைப்பார்கள் اَصْحٰبَ الْجَـنَّةِ சொர்க்கவாசிகளை اَنْ என்று سَلٰمٌ ஈடேற்றம் عَلَيْكُمْ உங்கள் மீது لَمْ இல்லை يَدْخُلُوْهَا அதில் அவர்கள் நுழைய وَهُمْ يَطْمَعُوْنَ அவர்கள் ஆசைப்படுவார்கள்
7:46. (நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.
7:46. (நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சொர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக!'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சொர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
7:46. மேலும், அவ்விரு பிரிவினருக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பு இருக்கும். அதன் உச்சிகளில் மனிதர்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் (இப்பிரிவினர்) ஒவ்வொருவரையும் அவரவரின் முகக்கூறுகள் மூலம் அறிந்து கொள்வார்கள். மேலும், அவர்கள் சுவனவாசிகளை அழைத்துக் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்!” இவர்கள் இன்னும் சுவனம் புகவில்லை; ஆயினும் (அதனை அடைவதற்கு) ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.
7:46. (நரக வாசிகளும் சுவன வாசிகளும் ஆகிய) அவ்விருவருக்குமிடையில் ஒரு திரை (தடுப்புச் சுவர்) இருக்கும், (அதன்) சிகரங்களில் சில மனிதர்கள் இருப்பார்கள், (நரகவாசி, சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் அடையாளத்தைக் கொண்டே அவர்கள் அறிந்து கொள்வார்கள், மேலும், அவர்கள் சுவர்க்கவாசிகளை அழைத்து “அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக” என்று சப்தமிட்டுக் கூறுவார்கள், (சிகரங்களில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) அதில் (சுவனத்தில்) நுழையவில்லை, அவர்களோ (அதில் நுழைவதை மிக்க ஆசித்து) ஆவல் கொண்டிருப்பார்கள்.
7:47 وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَآءَ اَصْحٰبِ النَّارِۙ قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
وَاِذَا صُرِفَتْ திருப்பப்பட்டால் اَبْصَارُ பார்வைகள் هُمْ இவர்களின் تِلْقَآءَ பக்கம் اَصْحٰبِ வாசிகளின் النَّارِۙ நரக(ம்) قَالُوْا கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா لَا تَجْعَلْنَا எங்களை ஆக்கிவிடாதே مَعَ الْقَوْمِ மக்களுடன் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள்
7:47. அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.
7:47. இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) ‘‘எங்கள் இறைவனே! (இந்த) அநியாயக்கார மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே!'' என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
7:47. மேலும், இவர்களின் பார்வைகள் நரக வாசிகளின் பக்கம் திரும்பும்போது கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இவ்வக்கிரமக்காரர்களோடு எங்களைச் சேர்த்துவிடாதே!”
7:47. இன்னும், இவர்களின், பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) எங்கள் இரட்சகனே! அந்த அநியாயக்கார சமூகத்தாருடன் (நரகத்தில்) எங்களையும் நீ ஆக்கிவிடாதிருப்பாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
7:48 وَنَادٰٓى اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا يَّعْرِفُوْنَهُمْ بِسِيْمٰٮهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰى عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ
وَنَادٰٓى அழைப்பார்(கள்) اَصْحٰبُ الْاَعْرَافِ சிகரவாசிகள் رِجَالًا சில மனிதர்களை يَّعْرِفُوْنَهُمْ அறிவார்கள் அவர்களை بِسِيْمٰٮهُمْ முகஅடையாளத்தைக் கொண்டு/அவர்களின் قَالُوْا கூறுவார்கள் مَاۤ اَغْنٰى பலனளிக்கவில்லை عَنْكُمْ உங்களுக்கு جَمْعُكُمْ உங்கள் சேமிப்பு وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும்
7:48. சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”
7:48. அந்த சிகரங்களில் உள்ளவர்கள், முக அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக் குள்ளானவர்கள் என) தாங்கள் அறிந்த சில மனிதர்களை கூவி அழைத்து, ‘‘நீங்கள் (உலகத்தில்) சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவையும், நீங்கள் எவற்றைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவையும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!'' என்று கூறுவார்கள்.
7:48. பிறகு, உச்சிகளில் இருக்கும் இவர்கள் (நரகில் வீழ்ந்து கிடக்கும்) பெரும் பெரும் மனிதர்கள் சிலரை அவர்களுடைய முகக்கூறுகள் மூலம் அறிந்து அவர்களை அழைத்துக் கூறுவார்கள்: “(பார்த்தீர்களா!) உங்களுடைய கூட்டத்தினரும் நீங்கள் பெரிதாகக் கருதி வந்த சாதனங்களும் (இன்று) உங்களுக்கு எப்பலனையும் அளிக்கவில்லை.”
7:48. சிகரங்களில் இருப்பவர்கள், சில மனிதர்களை-அவர்களின் அடையாளத்தைக்கொண்டு அவர்களை அறிந்துகொண்டு அழைத்து “உங்களின் கூட்டமும், இன்னும் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களே, அதுவும், உங்களை விட்டும் எதையும் தேவையற்று வைக்க (பலனளிக்க)வில்லையே” எனக் கூறுவார்கள்.
7:49 اَهٰٓؤُلَۤاءِ الَّذِيْنَ اَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ اللّٰهُ بِرَحْمَةٍ ؕ اُدْخُلُوا الْجَـنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ
اَهٰٓؤُلَۤاءِ இவர்கள்தானா? الَّذِيْنَ எவர்கள் اَقْسَمْتُمْ சத்தியம் செய்தீர்கள் لَا மாட்டான் يَنَالُهُمُ அவர்களை அடைய اللّٰهُ அல்லாஹ் بِرَحْمَةٍ ؕ கருணையைக் கொண்டு اُدْخُلُوا நுழையுங்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் لَا خَوْفٌ பயமில்லை عَلَيْكُمْ உங்கள் மீது وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்
7:49. “அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.
7:49. (அல்லாஹ் நிராகரித்தவர்களை அழைத்து சிகரவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘அல்லாஹ் அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சிகரத்தில் இருக்கும்) இவர்கள் அல்லவா?'' (என்று கூறுவான்). (பிறகு, சிகரவாசிகளை நோக்கி) ‘‘நீங்கள் சொர்க்கம் சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்'' (என்று அல்லாஹ் கூறுவான்).
7:49. மேலும், அல்லாஹ் இவர்களுக்கு எந்த அருளையும் வழங்கிடமாட்டான் என்று யாரைப் பற்றி நீங்கள் சத்தியம் செய்து கூறினீர்களோ, அவர்கள்தானே இந்த சொர்க்கவாசிகள்! (இன்று அவர்களை நோக்கியே கூறப்படும்:) “நுழைந்து விடுங்கள் சொர்க்கத்தில்! உங்களுக்கு யாதொரு அச்சமுமில்லை; நீங்கள் துயரப்படவும் மாட்டீர்கள்.”
7:49. (முஸ்லிம்களான) அவர்களுக்கு அல்லாஹ் அருளைக் கிடைக்கச் செய்யமாட்டான் என்று (காஃபிர்களாகிய) நீங்கள் சத்தியம் செய்தீர்களே அவர்கள், இவர்கள் அல்லவா? (என்றும் கூறுவார்கள், பிறகு சிகர வாசிகளை நோக்கி) “நீங்கள் சுவனபதி சென்று விடுங்கள், உங்களுக்கு எவ்வித பயமுமில்லை, நீங்கள் கவலையும் அடையமாட்டீர்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.
7:50 وَنَادٰٓى اَصْحٰبُ النَّارِ اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ اَفِيْضُوْا عَلَيْنَا مِنَ الْمَآءِ اَوْ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ؕ قَالُـوْۤا اِنَّ اللّٰهَ حَرَّمَهُمَا عَلَى الْـكٰفِرِيْنَ ۙ
وَنَادٰٓى அழைப்பார் اَصْحٰبُ النَّارِ நரகவாசிகள் اَصْحٰبَ الْجَـنَّةِ சொர்க்கவாசிகளை اَنْ اَفِيْضُوْا ஊற்றுங்கள் என்று عَلَيْنَا எங்கள் மீது مِنَ الْمَآءِ நீரிலிருந்து اَوْ அல்லது مِمَّا எதிலிருந்து رَزَقَكُمُ உணவளித்தான்/உங்களுக்கு اللّٰهُ ؕ அல்லாஹ் قَالُـوْۤا கூறுவார்கள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் حَرَّمَهُمَا தடைசெய்தான்/அவ்விரண்டையும் عَلَى الْـكٰفِرِيْنَ நிராகரிப்பவர்கள் மீது
7:50. நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள்.
7:50. நரகவாசிகள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) அளித்திருப்பவற்றில் (ஒரு சிறிதேனும்) எங்களுக்குத் தாருங்கள்'' என்று (கெஞ்சிக்) கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இவ்விரண்டையும் (விலக்கி) தடைசெய்து விட்டான்'' என்று பதிலளிப்பார்கள்.
7:50. மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.”
7:50. பின்னர், நரகவாசிகள் சுவன வாசிகளை அழைத்து “தண்ணீரில் (சிறிதளவு) எங்கள்மீது கொட்டுங்கள், அல்லது அல்லாஹ் உங்களுக்கு உணவாக அளித்ததிலிருந்து (சிறிதளவேனும் எங்களுக்குத் தாருங்கள்”) என்று (வருந்திக்) கேட்பார்கள், அ(தற்க)வர்கள், நிச்சயமாக அல்லாஹ் (உங்களைப் போன்ற) நிராகரிப்போரின் மீது இவ்விரண்டையும் தடுத்து விட்டான்” என்று (பதில்) கூறுவார்கள்.
7:51 الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا ۚ فَالْيَوْمَ نَنْسٰٮهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ يَوْمِهِمْ هٰذَا ۙ وَمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ
الَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا எடுத்துக் கொண்டனர் دِيْنَهُمْ தங்கள் மார்க்கத்தை لَهْوًا கேளிக்கையாக وَّلَعِبًا இன்னும் விளையாட்டாக وَّغَرَّتْهُمُ இன்னும் மயக்கியது/அவர்களை الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَا ۚ உலகம் فَالْيَوْمَ இன்று نَنْسٰٮهُمْ மறப்போம்/அவர்களை كَمَا نَسُوْا அவர்கள் மறந்ததினால் لِقَآءَ சந்திப்பை يَوْمِهِمْ هٰذَا ۙ அவர்களுடைய இந்நாளின் وَمَا كَانُوْا இன்னும் அவர்கள் இருந்த காரணத்தால் بِاٰيٰتِنَا நம் வசனங்களை يَجْحَدُوْنَ மறுப்பார்கள்
7:51. (ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
7:51. இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்கள் மார்க்கத்தை வேடிக்கை யாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்.
7:51. அவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை (நெறியை) வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது! (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம்!”
7:51. அவர்கள் எத்தகையோரென்றால் அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள், இவ்வுலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றியும் விட்டது, எனவே, அவர்களுடைய இந்நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நம்முடைய வசனங்களையும் அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததைப் போன்று, நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்து விடுவோம் (என்று அல்லாஹ் கூறிவிடுவான்.)
7:52 وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰى عِلْمٍ هُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ
وَلَقَدْ جِئْنٰهُمْ திட்டவட்டமாக/வந்தோம்/அவர்களிடம் بِكِتٰبٍ ஒரு வேதத்தைக் கொண்டு فَصَّلْنٰهُ விவரித்தோம்/அதை عَلٰى عِلْمٍ அறிந்து هُدًى நேர்வழியாக وَّرَحْمَةً இன்னும் கருணையாக لِّـقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள்
7:52. நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
7:52. நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் அறிவோடு விவரித்திருக்கிறோம். (அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது.
7:52. திண்ணமாக, நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். அது எத்தகையதென்றால், அறிவின் அடிப்படையில் நாம் அதில் (அனைத்தையும்) விவரித்திருக்கின்றோம். (மேலும் அது) இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும் ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.
7:52. திட்டமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொண்டு வந்தோம், அதில், ஒவ்வொன்றையும் நம் அறிவின்படி (அதன் அடிப்படையில்) விவரித்திருக்கின்றோம், (அன்றி, அது விசுவாசங் கொண்ட சமூகத்தார்க்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது.
7:53 هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَاْوِيْلَهٗؕ يَوْمَ يَاْتِىْ تَاْوِيْلُهٗ يَقُوْلُ الَّذِيْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّۚ فَهَلْ لَّـنَا مِنْ شُفَعَآءَ فَيَشْفَعُوْا لَـنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِىْ كُنَّا نَـعْمَلُؕ قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ
هَلْ يَنْظُرُوْنَ எதிர்பார்க்கின்றனரா? اِلَّا தவிர تَاْوِيْلَهٗؕ அதன் முடிவை يَوْمَ நாள் يَاْتِىْ வரும் تَاْوِيْلُهٗ அதன் முடிவு يَقُوْلُ கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் نَسُوْهُ மறந்தனர்/அதை مِنْ قَبْلُ முன்னர் قَدْ جَآءَتْ வந்தா(ர்க)ள் رُسُلُ தூதர்கள் رَبِّنَا எங்கள் இறைவனின் بِالْحَـقِّۚ உண்மையைக் கொண்டு فَهَلْ لَّـنَا எங்களுக்கு உண்டா? مِنْ شُفَعَآءَ சிபாரிசு செய்பவர்களில் فَيَشْفَعُوْا சிபாரிசு செய்வார்கள் لَـنَاۤ எங்களுக்கு اَوْ அல்லது نُرَدُّ நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால் فَنَعْمَلَ செய்வோமே غَيْرَ الَّذِىْ அல்லாததை كُنَّا இருந்தோம் نَـعْمَلُؕ செய்வோம் قَدْ خَسِرُوْۤا நஷ்டமிழைத்துக் கொண்டனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே وَضَلَّ இன்னும் மறைந்துவிட்டன عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எவை كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ இட்டுக்கட்டுவார்கள்
7:53. இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.
7:53. (மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதைத் தவிர (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள், ‘‘நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். மேலும், இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும்.
7:53. இப்பொழுது சிலர் இவ்வேதம் எச்சரிக்கின்ற இறுதி முடிவைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கின்றார்களா? அந்த இறுதி முடிவு வந்துவிடும் நாளில், முன்பு அதனை அலட்சியம் செய்தவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: “உண்மையில் எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்! (இப்பொழுது) எங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு பரிந்துரையாளர் எவரும் எங்களுக்குக் கிடைப்பார்களா? அல்லது நாங்கள் முன்பு செய்து கொண்டிருந்ததைப் போல் அல்லாமல் வேறு செயல்களைச் செய்திட நாங்கள் திரும்ப அனுப்பப்படுவோமா?” அவர்கள் தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். மேலும், அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்தவை எல்லாம் இன்று அவர்களை விட்டுக் காணாமல் போய்விட்டன.
7:53. (மக்கா வாசிகள், தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) அதன் முடிவு (வெளிப்படுவதைத்) தவிர (வேறெதனையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அதன் முடிவு (வெளிப்பட்டு)வரும் நாளில் இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்தோம், “நிச்சயமாக எங்கள் இரட்சகனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர், (இன்று) எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்துரைக்கட்டும், அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பப்படுவோமா? (அவ்வாறாயின் முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றல்லாததைச் செய்வோம்” என்று கூறுவார்கள், திட்டமாக இவர்கள் தமக்குத் தாமே இழப்பை உண்டாக்கிக் கொண்டனர், அன்றியும் இவர்கள் (பொய்யாகக்) கற்பனை செய்து கொண்டிருந்ததையும் (அது சமயம்) இவர்களைவிட்டு மறைந்தும் விடும்.
7:54 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ
اِنَّ நிச்சயமாக رَبَّكُمُ உங்கள் இறைவன் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْ خَلَقَ எவன் படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَ الْاَرْضَ இன்னும் பூமியை فِىْ سِتَّةِ اَيَّامٍ ஆறு நாட்களில் ثُمَّ பிறகு اسْتَوٰى உயர்ந்து விட்டான் عَلَى الْعَرْشِ அர்ஷின் மீது يُغْشِى மூடுகிறான் الَّيْلَ இரவால் النَّهَارَ பகலை يَطْلُبُهٗ தேடுகிறது/அதை حَثِيْثًا ۙ தீவிரமாக وَّالشَّمْسَ இன்னும் சூரியனை وَالْقَمَرَ இன்னும் சந்திரனை وَالنُّجُوْمَ இன்னும் நட்சத்திரங்களை مُسَخَّرٰتٍۢ வசப்படுத்தப்பட்டவையாக بِاَمْرِهٖ ؕ தனது கட்டளைக் கொண்டு اَلَا அறிந்துகொள்ளுங்கள்! لَـهُ அவனுக்கே الْخَـلْقُ படைத்தல் وَالْاَمْرُ ؕ இன்னும் அதிகாரம் تَبٰرَكَ அருள் வளமிக்கவன் اللّٰهُ அல்லாஹ் رَبُّ இறைவன் الْعٰلَمِيْنَ அகிலங்களின்
7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு கட்டுப்பட்டவையாக படைத்தான். (படைத்தலும்) படைப்பினங்களும் (அவற்றின்) ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்.
7:54. திண்ணமாக, அல்லாஹ்தான் உங்களுடைய அதிபதி; அவன் எத்தகையவனெனில், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், தன்னுடைய ஆட்சிபீடத்தில் அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும், இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன! அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே! அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான்.
7:54. நிச்சயமாக உங்கள் இரட்சகன் அல்லாஹ்தான், அவன் எத்தகையவனென்றால், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீது இருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், அவனே இரவால் பகலை மூடுகிறான், அது தீவிரமாக அதனைப் பின்தொடர்கிறது, இன்னும் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு வயப்படுத்தப்பட்டதாகப் (படைத்திருக்கிறான்) படைத்தலும் கட்டளையும் அவனுக்கே உரியதெனத் தெரிந்து கொள்ளுங்கள், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் மகத்துவமுடையவனாகி விட்டான்.
7:55 اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ ۚ
اُدْعُوْا அழையுங்கள் رَبَّكُمْ உங்கள் இறைவனை تَضَرُّعًا தாழ்மையாக وَّخُفْيَةً ؕ இன்னும் மறைவாக اِنَّهٗ நிச்சயமாக அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُعْتَدِيْنَ ۚ வரம்பு மீறுபவர்களை
7:55. (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
7:55. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவற்றைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
7:55. உங்கள் அதிபதியிடம் பணிந்தும், மெதுவாகவும் நீங்கள் இறைஞ்சுங்கள்! திண்ணமாக, அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.
7:55. (ஆகவே, விசுவாசிகளே!) உங்கள் இரட்சகனை மிக்க பணிவாகவும், (தாழ்ந்த குரலில்) மெதுவாகவும் (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரிப் பிரார்த்தனை செய்து) நீங்கள் அழையுங்கள், நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.
7:56 وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًا ؕ اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ
وَلَا تُفْسِدُوْا கலகம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் بَعْدَ பின்னர் اِصْلَاحِهَا அது சீர்திருத்தப்பட்ட وَادْعُوْهُ அழையுங்கள்/அவனை خَوْفًا பயத்துடன் وَّطَمَعًا ؕ இன்னும் ஆசையுடன் اِنَّ رَحْمَتَ நிச்சயமாக கருணை اللّٰهِ அல்லாஹ்வின் قَرِيْبٌ சமீபமானது مِّنَ الْمُحْسِنِيْنَ நல்லறம் புரிவோருக்கு
7:56. (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
7:56. (மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) நாடு சீர்திருந்திய பின்னர் அதில் விஷமம் செய்யாதீர்கள். (இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும், அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது.
7:56. மேலும், பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது.
7:56. மேலும், பூமியில்-(மனிதர்களே! சமாதானமும் அமைதியும் உண்டாகி) அது சீர்திருத்தமான பின்னர், அதில் குழப்பம் செய்யாதீர்கள், (இரட்சகனுடைய தண்டனைக்குப்) பயந்தும், (அவனுடைய அருளை) ஆசித்தும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக்க சமீபத்திலிருக்கிறது.
7:57 وَهُوَ الَّذِىْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ ؕ حَتّٰۤى اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِؕ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
وَهُوَ அவன் الَّذِىْ எவன் يُرْسِلُ அனுப்புகிறான் الرِّيٰحَ காற்றுகளை بُشْرًۢا நற்செய்தியாக بَيْنَ يَدَىْ முன்னர் رَحْمَتِهٖ ؕ தனது கருணைக்கு حَتّٰۤى இறுதியாக اِذَاۤ اَقَلَّتْ அது சுமந்தால் سَحَابًا மேகத்தை ثِقَالًا கன(மான) سُقْنٰهُ ஓட்டுகிறோம்/அதை لِبَلَدٍ பூமியின் பக்கம் مَّيِّتٍ இறந்தது فَاَنْزَلْنَا இன்னும் இறக்குகிறோம் بِهِ அதிலிருந்து الْمَآءَ மழையை فَاَخْرَجْنَا இன்னும் வெளியாக்குகிறோம் بِهٖ அதன் மூலம் مِنْ இருந்து كُلِّ எல்லாம் الثَّمَرٰتِؕ கனிகள் كَذٰلِكَ இவ்வாறே نُخْرِجُ வெளியாக்குவோம் الْمَوْتٰى மரணித்தவர்களை لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
7:57. அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.
7:57. அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு (முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பிவைக்கிறான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர், அதை (வரண்டு) இறந்து விட்ட பூமியின் பக்கம் நாம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கிறோம். பின்னர், அதைக் கொண்டு எல்லா வகைக் கனிகளையும் வெளியாக்குகிறோம். இவ்வாறே, மரணித்தவர்களையும் (அவர்களின் சமாதிகளிலிருந்து) வெளியாக்குவோம். (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!
7:57. மேலும், அவனே தன்னுடைய அருள்மாரிக்கு முன்னர் நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான். பிறகு அவை (மழை நிறைந்த) கனமான மேகத்தைச் சுமந்து கொள்கின்றன. பின்னர் அவற்றை இறந்து போன பூமியின் பக்கமாக நாம் ஓட்டிச் செல்கின்றோம். பிறகு அங்கு மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் (இறந்து போயிருந்த அந்த பூமியிலிருந்தே) விதவிதமான கனிவகைகளை வெளிக் கொணர்கின்றோம். (பாருங்கள்!) இவ்வாறே இறந்தவர்களை (மீண்டும் உயிர்பெறச் செய்து) நாம் வெளிப்படுத்துகின்றோம். இவற்றின் மூலம் நீங்கள் படிப்பினை பெற்றிடக்கூடும்.
7:57. இன்னும், அவன் எத்தகையவனென்றால், அவனுடைய அருள் மாரிக்கு முன்னர், நன்மாராயமாக, (குளிர்ந்த) காற்றுகளை அவன் அனுப்பி வைக்கின்றான், முடிவாக அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்து வருமானால் அதனை நாம், (வரண்டு) இறந்த ஊரின் பக்கம் ஓட்டிச் செல்கிறோம், பின்னர் அதைக் கொண்டு நாம் தண்ணீரை இறக்கி வைக்கிறோம், பின்னர் அதைக் கொண்டு சகலவகைக் கனிகளையும் வெளிப்படுத்துகின்றோம், இவ்வாறே மரணித்தோரை (அவர்களின் சமாதிகளிலிருந்து) உயிர் கொடுத்து நாம் வெளிப்படுத்துவோம், (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறலாம்.
7:58 وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ۚ وَالَّذِىْ خَبُثَ لَا يَخْرُجُ اِلَّا نَكِدًا ؕ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّشْكُرُوْنَ
وَالْبَلَدُ பூமி الطَّيِّبُ நல்லது يَخْرُجُ வெளியாகிறது نَبَاتُهٗ அதன் தாவரம் بِاِذْنِ அனுமதி கொண்டு رَبِّهٖ ۚ தன் இறைவனின் وَالَّذِىْ எது خَبُثَ கெட்டுவிட்டது لَا يَخْرُجُ வெளியாகாது اِلَّا தவிர نَكِدًا ؕ வெகு சொற்பமாக كَذٰلِكَ இவ்வாறு نُصَرِّفُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّشْكُرُوْنَ நன்றி செலுத்துகிறார்கள்
7:58. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.
7:58. (ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்) வசனங்களை விவரிக்கிறோம்.
7:58. நல்லபூமி தன்னுடைய இறைவனின் கட்டளைப் படி (நல்ல) விளைச்சலைத் தருகின்றது. ஆனால் கெட்ட பூமியோ மோசமான விளைச்சலைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்துவதில்லை. இவ்வாறே நாம், நன்றி செலுத்துகின்ற மக்களுக்கு நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் விவரித்துக் கூறுகின்றோம்.
7:58. வளமான நல்லபூமி-தன் இரட்சகனின் கட்டளையைக் கொண்டு அதன் தாவரத்தை வெளியாக்குகிறது, இன்னும், கெட்டது (வளமற்ற பூமி) வெகு சொற்பமேயன்றி வெளியாக்குவதில்லை, நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு திரும்பத் திரும்ப (பல வகைகளிலும் நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம்.
7:59 لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ
لَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا அனுப்பினோம் نُوْحًا நூஹை اِلٰى قَوْمِهٖ அவருடைய சமுதாயத்திற்கு فَقَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا இல்லை لَـكُمْ உங்களுக்கு مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுளும் غَيْرُهٗ ؕ அவனையன்றி اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ வேதனையை يَوْمٍ عَظِيْمٍ மகத்தான நாளின்
7:59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
7:59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
7:59. திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தவரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. மகத்தானதொரு நாளின் வேதனை உங்கள் மீது வந்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”
7:59. திட்டமாக நாம், “நூஹை” அவருடைய சமூகத்தாரின்பால் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம், அப்பொழுது அவர் (அவர்களிடம்) என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் உங்களுக்கில்லை, (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) நிச்சயமாக, உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
7:60 قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَـنَرٰٮكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
قَالَ கூறினர் الْمَلَاُ தலைவர்கள் (முக்கியஸ்தர்கள்) مِنْ قَوْمِهٖۤ இருந்து/சமுதாயம்/அவருடைய اِنَّا நிச்சயமாக நாம் لَـنَرٰٮكَ உம்மை காண்கிறோம் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ தெளிவானது
7:60. அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.
7:60. அதற்கு அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நீங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கிறோம்'' என்று கூறினார்கள்.
7:60. அதற்கு அவருடைய சமுதாயத் தலைவர்கள் பதில் கூறினார்கள்: “நீர் வெளிப்படையான வழிகேட்டில் மூழ்கியிருப்பதையே நாங்கள் காண்கின்றோம்.”
7:60. அதற்கு அவருடைய சமூகத்தாரிலிருந்த பிரதானிகள் “நிச்சயமாக நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டிலிருப்பதையே காண்கின்றோம்” என்று கூறினார்கள்.
7:61 قَالَ يٰقَوْمِ لَـيْسَ بِىْ ضَلٰلَةٌ وَّلٰـكِنِّىْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ
قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَـيْسَ இல்லை بِىْ என்னிடம் ضَلٰلَةٌ வழிகேடு وَّلٰـكِنِّىْ எனினும் நிச்சயமாக நான் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْ رَّبِّ இறைவனிடமிருந்து الْعٰلَمِيْنَ அகிலங்களின்
7:61. அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.
7:61. அதற்கவர் (அவர்களை நோக்கி), ‘‘என் மக்களே! நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனுடைய ஒரு தூதன்'' என்று கூறினார்.
7:61. அதற்கு நூஹ் சொன்னார்: “என்னுடைய சமுதாயத்தவரே! நான் எந்த வழிகேட்டிலும் மூழ்கியிருக்கவில்லை. நான் அகிலத்தாருடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன்.
7:61. அ(தற்க)வர் “என்னுடைய சமூகத்தினரே!” என்னிடத்தில் எத்தகைய வழிகேடும் இல்லை, எனினும், நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதன்” என்று கூறினார்.
7:62 اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّىْ وَاَنْصَحُ لَـكُمْ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
اُبَلِّغُكُمْ எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு رِسٰلٰتِ தூது(செய்தி)களை رَبِّىْ என் இறைவனின் وَاَنْصَحُ இன்னும் உபதேசிக்கிறேன் لَـكُمْ உங்களுக்கு وَاَعْلَمُ இன்னும் அறிகிறேன் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَا لَا تَعْلَمُوْنَ எவற்றை/அறியமாட்டீர்கள்
7:62. “நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் - மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்” (என்றும் கூறினார்).
7:62. ‘‘நான் என் இறைவனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்.
7:62. நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். உங்களுக்கு நலம் நாடுபவனாகவும் இருக்கின்றேன். மேலும், நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நான் அறிகின்றேன்.
7:62. “நான் என் இரட்சகனின் தூதுகளையே உங்களுக்கு எத்திவைக்கிறேன், உங்களுக்கு நல்லுபதேசமும் செய்கிறேன், மேலும், அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிகிறேன்” (என்றும்)
7:63 اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْ وَلِتَـتَّقُوْا وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
اَوَعَجِبْتُمْ வியக்கிறீர்களா? اَنْ جَآءَ வந்ததைப் பற்றி كُمْ உங்களுக்கு ذِكْرٌ நல்லுபதேசம் مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து عَلٰى رَجُلٍ ஒரு மனிதர் மீது مِّنْكُمْ உங்களிலுள்ள لِيُنْذِرَكُمْ அவர் எச்சரிப்பதற்காக/உங்களை وَلِتَـتَّقُوْا இன்னும் நீங்கள் அஞ்சுவதற்காக وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ இன்னும் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
7:63. உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
7:63. உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காகவும் (அது வந்திருக்கிறது.) அதனால் நீங்கள் (இறைவனின்) அருளை அடையலாம்'' (என்றும் கூறினார்.)
7:63. உங்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், தவறான நடத்தையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், உங்கள் மீது இரக்கம் காட்டப்படுவதற்காகவும் உங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனுடைய அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா?”
7:63. “உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நீங்கள் பயந்து நடப்பதற்காகவும், (அல்லாஹ்வால்) நீங்கள் அருள் செய்யப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?” (என்றும் கூறினார்.)
7:64 فَكَذَّبُوْهُ فَاَنْجَيْنٰهُ وَالَّذِيْنَ مَعَهٗ فِى الْفُلْكِ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا عَمِيْنَ
فَكَذَّبُوْهُ பொய்ப்பித்தனர்/அவரை فَاَنْجَيْنٰهُ ஆகவே, பாதுகாத்தோம்/அவரை وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مَعَهٗ அவருடன் فِى الْفُلْكِ கப்பலில் وَاَغْرَقْنَا இன்னும் மூழ்கடித்தோம் الَّذِيْنَ எவர்களை كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا ؕ நம் வசனங்களை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் قَوْمًا சமுதாயமாக عَمِيْنَ குருடானவர்கள்
7:64. அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.
7:64. பின்னும், அவரை அவர்கள் பொய்யரெனவே கூறிவிட்டனர். ஆதலால், அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு, நம் வசனங்கள் பொய்யென்று கூறியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காணமுடியாத) குருடர்களாகவே இருந்தனர்.
7:64. ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யரென்று கூறிவிட்டார்கள். இறுதியில், நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் ஒரு கப்பலில் (ஏற்றி) காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களை நாம் மூழ்கடித்தோம். திண்ணமாக, அவர்கள் கண்மூடித்தனமாக வாழும் மக்களாக இருந்தார்கள்.
7:64. பின்னும், அவரை அவர்கள் பொய்யாக்கினர், ஆதலால், அவரையும், அவருடனிருந்தோரையும் கப்பலில் (ஏற்றிக்)காப்பாற்றினோம், மேலும், நம்முடைய வசனங்களைப் பொய்படுத்தியவர்களை(ப் பெரு வெள்ளத்தில்) மூழ்கடித்து விட்டோம், நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காண முடியாத) குருட்டு சமூகத்தாராகவே இருந்தனர்.
7:65 وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ
وَاِلٰى عَادٍ اَخَا ‘ஆது’க்கு/சகோதரர் هُمْ அவர்களுடைய هُوْدًا ؕ ஹூதை قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே! اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுளும் غَيْرُهٗ ؕ அவனையன்றி اَفَلَا تَتَّقُوْنَ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
7:65. இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார்.
7:65. ‘ஆத்' (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. (ஆகவே,) நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்.
7:65. மேலும், ‘ஆத்’ கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை எனவே, நீங்கள் தவறான நடத்தையிலிருந்து விலகிக்கொள்ள மாட்டீர்களா?”
7:65. மேலும், “ஆது” (கூட்டத்தின்)பால் அவர்களுடைய சகோதரர் ஹூதையும் (நம்முடைய நபியாக அனுப்பினோம்.) அவர் (அவர்களிடம்), “என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனைத் தவிர உங்களுக்கு (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை, (ஆகவே) நீங்கள் (அவனுக்குப்) பயப்பட வேண்டாமா?” என்று கூறினார்.
7:66 قَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَــنَرٰٮكَ فِىْ سَفَاهَةٍ وَّاِنَّا لَــنَظُنُّكَ مِنَ الْـكٰذِبِيْنَ
قَالَ கூறினர் الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ இருந்து قَوْمِهٖۤ அவரின் சமுதாயம் اِنَّا நிச்சயமாக நாம் لَــنَرٰٮكَ உம்மை காண்கிறோம் فِىْ سَفَاهَةٍ மடமையில் وَّاِنَّا நிச்சயமாக நாம் لَــنَظُنُّكَ உம்மை எண்ணுகிறோம் مِنَ الْـكٰذِبِيْنَ பொய்யர்களில்
7:66. அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்” என்று கூறினார்கள்.
7:66. அதற்கு அந்த மக்களிலிருந்த நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து) கிடப்பவராகவே காண்கிறோம். நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் ஒருவரெனவே கருதுகிறோம்'' என்று கூறினார்கள்.
7:66. (அவருடைய இக்கூற்றை) ஏற்க மறுத்த அவரது சமுதாயத் தலைவர்கள், “திண்ணமாக, நீர் அறியாமையில் உழல்வதை நாங்கள் காண்கின்றோம். மேலும், நீர் பொய்யராக இருப்பீரோ என்றும் நாங்கள் ஐயங்கொள்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.
7:66. (அதற்கு) அவருடைய சமூகத்தாரிலிருந்து நிராகரித்து விட்டார்களே அத்தகைய பிரதானிகள், “நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து கிடப்பவராகவே) காண்கிறோம், அன்றியும் நிச்சயமாக உம்மைப் பொய்யர்களில் (உள்ளவரென) நாம் எண்ணுகின்றோம்? என்று கூறினார்கள்.
7:67 قَالَ يٰقَوْمِ لَـيْسَ بِىْ سَفَاهَةٌ وَّلٰـكِنِّىْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ
قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَـيْسَ இல்லை بِىْ என்னிடம் سَفَاهَةٌ மடமை وَّلٰـكِنِّىْ எனினும் நிச்சயமாக நான் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْ رَّبِّ இறைவனிடமிருந்து الْعٰلَمِيْنَ அகிலங்களின்
7:67. அதற்கு அவர்? “என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்” என்று கூறினார்.
7:67. அதற்கு அவர் ‘‘என் மக்களே! மடமை என்னிடம் இல்லை. ஆனால், நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதரே!'' என்று கூறினார்.
7:67. அதற்கு அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! நான் அறியாமையில் உழன்று கொண்டிருக்கவில்லை. மாறாக, நான் அகிலங்களுடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன்.
7:67. அ(தற்க)வர், “என்னுடைய சமூகத்தாரே! என்னிடம் மடமையில்லை, எனினும் நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதன் ஆவேன்” என்று கூறினார்.
7:68 اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّىْ وَاَنَا لَـكُمْ نَاصِحٌ اَمِيْنٌ
اُبَلِّغُكُمْ எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு رِسٰلٰتِ தூதுகளை رَبِّىْ என் இறைவனின் وَاَنَا நான் لَـكُمْ உங்களுக்கு نَاصِحٌ உபதேசி(ப்பவன்) اَمِيْنٌ நம்பிக்கைக்குரிய
7:68. “நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்” (என்று கூறினார்).
7:68. ‘‘என் இறைவனின் தூதுகளையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசியாகவும் இருக்கிறேன்.
7:68. நான் என் அதிபதியின் தூதுச்செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். மேலும், நான் உங்களின் நம்பிக்கைக்குரிய நலம்விரும்பியாக இருக்கின்றேன்.
7:68. “என் இரட்சகனின் தூது(ச்செய்தி)களையே நான் உங்களுக்கு எத்திவைக்கிறேன், மேலும், நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்.”.
7:69 اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْ ؕ وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ ۚ خُلَفَآءَ مِنْۢ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِى الْخَـلْقِ بَصْۜطَةً فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
اَوَعَجِبْتُمْ நீங்கள் வியக்கிறீர்களா? اَنْ جَآءَ வந்ததைப் பற்றி كُمْ உங்களுக்கு ذِكْرٌ நல்லுபதேசம் مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து عَلٰى رَجُلٍ ஒரு மனிதர் மீது مِّنْكُمْ உங்களில் لِيُنْذِرَكُمْ ؕ உங்களை எச்சரிப்பதற்காக وَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اِذْ சமயம் جَعَلَـكُمْ ஆக்கினான் ۚ خُلَفَآءَ பிரதிநிதிகளாக مِنْۢ بَعْدِ பின்னர் قَوْمِ சமுதாயத்திற்கு نُوْحٍ நூஹூடைய وَّزَادَ இன்னும் அதிகப்படுத்தினான் كُمْ உங்களுக்கு فِى الْخَـلْقِ படைப்பில் بَصْۜطَةً விரிவை فَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اٰ لَۤاءَ அருட்கொடைகளை اللّٰهِ அல்லாஹ்வின் لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
7:69. “உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்)
7:69. உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களில் ஒருவர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வருவதைப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்? நூஹுடைய மக்களுக்குப் பின்னர் அவன் உங்களை (பூமியில்) அதிபதிகளாக்கி வைத்து, தேகத்திலும் (வலுவிலும் மற்றவர்களை விட) உங்களுக்கு அதிகமாகவே கொடுத்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறலாம்'' (என்றும் கூறினார்).
7:69. உங்களை எச்சரிக்கை செய்வதற்காக உங்களுடைய சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனின் அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா? உங்களுடைய இறைவன் நூஹுடைய கூட்டத்தாருக்குப் பின் உங்களை (பூமியில்) வாரிசுகளாக்கினான். உங்களுக்கு நல்ல உடல் வலிமையையும், கம்பீரத்தையும் வழங்கியிருந்தான். இவற்றை நீங்கள் மறந்து விடாதீர்கள்! எனவே அல்லாஹ்வின் வியக்கத்தக்க ஆற்றல்களை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்!”
7:69. “உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஆடவர் மீது உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வந்திருப்பதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? மேலும், நூஹ் உடைய சமூகத்தாருக்குப் பின்னர், அவன் உங்களை (முன்னவர்களுக்குப்)பின் தோன்றல்களாக்கி வைத்து, படைப்பில் (உடலமைப்பில் உயரமானவர்களாகவும்) விரிந்த தேகத்தையும் (மற்றவர்களைவிட) உங்களுக்கு அதிகமாக்கியிருப்பதையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள், ஆகவே, நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் எண்ணிலடங்காத ஏனைய அருட்கொடைகளை நீங்கள் நினைத்துப் பாருங்கள் (என்றும் கூறினார்).
7:70 قَالُـوْۤا اَجِئْتَنَا لِنَعْبُدَ اللّٰهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ اٰبَآؤُنَا ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
قَالُـوْۤا கூறினர் اَجِئْتَنَا எங்களிடம் வந்தீரா? لِنَعْبُدَ நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக اللّٰهَ அல்லாஹ்வை وَحْدَهٗ அவன் ஒருவனை மட்டும் وَنَذَرَ இன்னும் நாங்கள் விட்டுவிட்டு مَا எவற்றை كَانَ இருந்தார்(கள்) يَعْبُدُ வணங்குவார்(கள்) اٰبَآؤُنَا ۚ எங்கள் மூதாதைகள் فَاْتِنَا வருவீராக/எங்களிடம் بِمَا எதைக் கொண்டு تَعِدُنَاۤ எச்சரிக்கிறீர்/எங்களை اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ உண்மையாளர்களில்
7:70. அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.
7:70. அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? (நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.) மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீங்கள் நமக்கு அச்சமூட்டுவதை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்.
7:70. அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; எங்கள் முன்னோர்கள் வழிபட்டு வந்தவற்றையெல்லாம் நாங்கள் விட்டுவிட வேண்டும் என்ப(தைச் சொல்வ)தற்காகவா நீர் எங்களிடம் வந்துள்ளீர்? நீர் உண்மையானவராயின் எந்த வேதனையைக் குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!”
7:70. அதற்கவர்கள் “எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவைகளை நாங்கள் விட்டு விட்டு, அல்லாஹ்வை (வணக்கத்தில்) அவன் தனித்தவனாக இருக்க நாங்கள் வணங்கவேண்டும் என்பதற்காகவா எங்களிடம் நீர் வந்தீர்? (நாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம்.) ஆகவே, நீர் உண்மையாளர்களில், உள்ளவராக இருந்தால், நீர் வாக்களித்ததை எங்களுக்குக் கொண்டு வாரும்” என்று கூறினர்.
7:71 قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ رِجْسٌ وَّغَضَبٌؕ اَتُجَادِلُوْنَنِىْ فِىْۤ اَسْمَآءٍ سَمَّيْتُمُوْهَاۤ اَنْـتُمْ وَاٰبَآؤُكُمْ مَّا نَزَّلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍؕ فَانْتَظِرُوْۤا اِنِّىْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ
قَالَ கூறினார் قَدْ وَقَعَ நிகழ்ந்து விட்டது عَلَيْكُمْ உங்கள் மீது مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து رِجْسٌ வேதனை وَّغَضَبٌؕ இன்னும் கோபம் اَتُجَادِلُوْنَنِىْ தர்க்கிக்கிறீர்களா?/என்னுடன் فِىْۤ اَسْمَآءٍ பெயர்களில் سَمَّيْتُمُوْهَاۤ பெயர் வைத்தீர்கள்/அவற்றை اَنْـتُمْ நீங்களும் وَاٰبَآؤ இன்னும் மூதாதைகள் كُمْ உங்கள் مَّا نَزَّلَ இறக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் بِهَا அதற்கு مِنْ سُلْطٰنٍؕ ஓர் ஆதாரத்தை فَانْتَظِرُوْۤا ஆகவே, எதிர்பாருங்கள் اِنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் مِّنَ الْمُنْتَظِرِيْنَ எதிர்பார்ப்பவர்களில்
7:71. அதற்கு அவர், “உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன; அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
7:71. அதற்கவர் ‘‘உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு (விதிக்கப்பட்டு விட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் உங்கள் முன்னோர்களும் (கடவுள்களென) வைத்துக் கொண்டவற்றின் (வெறும்) பெயர்களைப் பற்றியா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் (உங்களுக்கு) இறக்கி வைக்க வில்லை. ஆகவே, (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறினார்.
7:71. அதற்கு அவர் கூறினார்: “உங்கள் இறைவனின் வேதனையும் சினமும் உங்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஏற்படுத்திக்கொண்ட பெயர்களைக் குறித்தா என்னிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள்? அல்லாஹ் அவற்றிற்கு எந்த ஆதாரமும் இறக்கி வைக்கவில்லை! எனவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.”
7:71. அ(தற்க)வர், “உங்கள் மீது உங்களுடைய இரட்சகனிடமிருந்து வேதனையும் (அவனுடைய) கோபமும் திட்டமாக விதியாகிவிட்டது, (நீங்கள் தெய்வங்களெனப் பெயர் வைத்திருக்கும்) சில பெயர்களில் என்னிடம் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? அவற்றை நீங்களும் உங்கள் மூதாதையர்களும் பெயர்களாக வைத்துக் கொண்டீர்கள், அல்லாஹ் அதற்கு எவ்விதச் சான்றையும் இறக்கி வைக்கவில்லை, ஆகவே (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கின்றேன்” என்று கூறினார்
7:72 فَاَنْجَيْنٰهُ وَالَّذِيْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَ قَطَعْنَا دَابِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَمَا كَانُوْا مُؤْمِنِيْنَ
فَاَنْجَيْنٰهُ ஆகவே, பாதுகாத்தோம்/அவரை وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مَعَهٗ அவருடன் بِرَحْمَةٍ கருணையினால் مِّنَّا நமது وَ قَطَعْنَا இன்னும் அறுத்தோம் دَابِرَ வேரை الَّذِيْنَ எவர்களின் كَذَّبُوْا பொய்ப்பித்த بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَمَا كَانُوْا இன்னும் அவர்கள் இருக்கவில்லை مُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
7:72. ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பாற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.
7:72. ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் பொய்யாக்கி, நம்பிக்கை கொள்ளாதிருந்தவர்களை வேரறுத்து விட்டோம்.
7:72. இறுதியில் நமது அருளைக்கொண்டு ஹூதையும் அவருடைய தோழர்களையும் நாம் காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, மேலும், நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் நாம் வேருடன் களைந்தோம்.
7:72. ஆகவே, அவரையும் அவருடன் இருந்தோரையும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் காப்பாற்றினோம், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியோரையும், விசுவாசங்கொள்ளாதவர்களாக இருந்தோரையும் வேரறுத்து விட்டோம்.
7:73 وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوْا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَـكُمْ اٰيَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِىْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابٌ اَ لِيْمٌ
وَاِلٰى ثَمُوْدَ ‘ஸமூது’க்கு اَخَاهُمْ அவர்களுடைய சகோதரர் صٰلِحًا ۘ ஸாலிஹை قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اعْبُدُوْا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுள் غَيْرُهٗ ؕ அவனையன்றி قَدْ நிச்சயமாக جَآءَتْكُمْ உங்களிடம் வந்துவிட்டது بَيِّنَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّكُمْ ؕ உங்கள் இறைவன் هٰذِهٖ இது نَاقَةُ ஒட்டகம் اللّٰهِ அல்லாஹ்வுடைய لَـكُمْ உங்களுக்கு اٰيَةً ஓர் அத்தாட்சியாக فَذَرُوْهَا ஆகவே, விட்டு விடுங்கள்/அதை تَاْكُلْ அது மேயும் فِىْۤ اَرْضِ பூமியில் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَلَا تَمَسُّوْهَا அதை தொடாதீர்கள் بِسُوْٓءٍ தீமையைக் கொண்டு فَيَاْخُذَكُمْ பிடிக்கும்/உங்களை عَذَابٌ வேதனை اَ لِيْمٌ துன்புறுத்தும்
7:73. “ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது; எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
7:73. ‘ஸமூத்' (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. (இதற்காக) உங்கள் இறைவனிடம் இருந்து தெளிவான ஓர் அத்தாட்சியும் உங்களிடம் வந்திருக்கிறது. இது அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். (இது) உங்களுக்கோர் அத்தாட்சியாகவும் இருக்கிறது. ஆகவே, அதை அல்லாஹ்வுடைய பூமியில் (எங்கும் தடையின்றி தாராளமாக) மேய விடுங்கள். அதற்கு எத்தகைய தீங்கும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்.
7:73. மேலும், ஸமூத் கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. இது அல்லாஹ்வின் ஒட்டகம் இது உங்களுக்கு ஒரு சான்றாக உள்ளது. எனவே, அல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரிய இதனை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்வீர்களாயின் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.
7:73. “ஸமூது” கூட்டத்தாருக்கு அவர்களுடைய சகோதரர் ஸாலிஹையும் (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்). அவர் (அவர்களிடம்) “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், உங்களுக்கு அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை, (இதற்காக) உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான ஒரு அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்திருக்கின்றது, உங்களுக்கோர் அத்தாட்சியாக இது அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகமாகும், ஆகவே, அதனை நீங்கள் விட்டு விடுங்கள், அது (தன் இஷ்டப்படி) அல்லாஹ்வுடைய பூமியில் (எங்கும்) தடையின்றி தாராளமாக மேய்ந்து கொள்ளும், மேலும், அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
7:74 وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ خُلَفَآءَ مِنْۢ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِى الْاَرْضِ تَـتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَـنْحِتُوْنَ الْجِبَالَ بُيُوْتًا ۚ فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ
وَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اِذْ جَعَلَـكُمْ சமயம்/ஆக்கினான்/உங்களை خُلَفَآءَ பிரதிநிதிகளாக مِنْۢ بَعْدِ பின்னர் عَادٍ ‘ஆது’க்கு وَّبَوَّاَكُمْ இன்னும் தங்கவைத்தான்/உங்களை فِى الْاَرْضِ பூமியில் تَـتَّخِذُوْنَ ஆக்கிகொள்கிறீர்கள் مِنْ سُهُوْلِهَا அதன் சமவெளிகளில் قُصُوْرًا மாளிகைகளை وَّتَـنْحِتُوْنَ இன்னும் குடைந்து கொள்கிறீர்கள் الْجِبَالَ மலைகளில் بُيُوْتًا ۚ வீடுகளை فَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اٰ لَۤاءَ அருட்கொடைகளை اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا تَعْثَوْا அளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ விஷமிகளாக
7:74. இன்னும் நினைவு கூறுங்கள்: “ஆது” கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்” (என்றும் கூறினார்).
7:74. ‘ஆத்' (என்னும்) மக்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் உங்களைக் குடியேறச்செய்து (அதற்கு) உங்களை அதிபதிகளாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளையும், மலைகளைக் குடைந்து வீடுகளையும் அமைத்துக் கொள்கிறீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட் கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். மேலும், பூமியில் கடுமையாக விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' (என்றும் கூறினார்.)
7:74. மேலும், நினைத்துப் பாருங்கள்; ஆத் சமுதாயத்திற்குப் பின் அல்லாஹ் உங்களை வாரிசுகளாக்கினான். மேலும், இப்பூமியில் சிறப்பான வசதிகளையும் உங்களுக்கு வழங்கினான். இப்போது அதன் சமவெளிகளில் நீங்கள் பிரம்மாண்டமான மாளிகைகளை எழுப்புகின்றீர்கள்; மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். எனவே, அல்லாஹ்வின் (வல்ல மைக்குச் சான்றான) அருட்கொடைகளை நினைவு கூருங்கள்! மேலும், பூமியில் குழப்பம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள்!”
7:74. “ஆது (கூட்டத்தாரு)க்குப் பின்னர் உங்களை அவன் பின்தோன்றல்களாக்கி வைத்ததையும், பூமியில் உங்களை வசிக்கச் செய்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள், நீங்கள் அதன் இலகுவான பூமியில் மாளிகைகளைக் கட்டிக் கொள்கின்றீர்கள், மலைகளை வீடுகளாகக் குடைந்து அமைத்துக் கொள்கின்றீர்கள், ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளையெல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள், அன்றியும் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள் என்று கூறினார்.
7:75 قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖؕ قَالُـوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ
قَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் اسْتَكْبَرُوْا பெருமையடித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் لِلَّذِيْنَ எவர்களுக்கு اسْتُضْعِفُوْا பலவீனர்களாக கருதப்பட்டனர் لِمَنْ எவருக்கு اٰمَنَ நம்பிக்கை கொண்டார் مِنْهُمْ அவர்களில் اَتَعْلَمُوْنَ அறிவீர்களா? اَنَّ صٰلِحًا நிச்சயமாக ஸாலிஹ் مُّرْسَلٌ அனுப்பப்பட்டவர் مِّنْ رَّبِّهٖؕ தன் இறைவனிடமிருந்து قَالُـوْۤا கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் بِمَاۤ எதைக் கொண்டு اُرْسِلَ அனுப்பப்பட்டார் بِهٖ அதைக் கொண்டு مُؤْمِنُوْنَ நம்பிக்கை கொண்டவர்கள்
7:75. அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.
7:75. அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறினார்கள்.
7:75. அவருடைய சமுதாயத்தவரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள், இறைநம்பிக்கை கொண்டிருந்த பலவீனமான மக்களை நோக்கி வினவினார்கள்: “உண்மையில் ஸாலிஹ் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எச்செய்தியுடன் அவர் அனுப்பப்பட்டுள்ளாரோ அதனை நாங்கள் திண்ணமாக ஏற்றுக் கொள்கின்றோம்.”
7:75. (அதற்கு,) அவருடைய சமூகத்தாரில் கர்வங்கொண்டிருந்த பிரதானிகள், தங்களைவிட பலவீனமானவர்களென எண்ணப்பட்டிருந்த அவர்களில் விசுவாசங்கொண்டோரிடம் “நிச்சயமாக (இந்த) ஸாலிஹ் அவர் இரட்சகனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களா? என்று கேட்டார்கள், அ(தற்கவர்)கள், “நிச்சயமாக நாங்கள் எதைக்கொண்டு அவர் அனுப்பப்பட்டாரோ அ(த்தூ)தை விசுவாசம் கொள்ளக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்.
7:76 قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا بِالَّذِىْۤ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ
قَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் اسْتَكْبَرُوْۤا பெருமையடித்தனர் اِنَّا நிச்சயமாக நாங்கள் بِالَّذِىْۤ எதைக்கொண்டு اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டீர்கள் بِهٖ அதைக் கொண்டு كٰفِرُوْنَ நிராகரிப்பவர்கள்
7:76. அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்: “நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்று கூறினார்கள்.
7:76. அதற்கு கர்வம்கொண்ட அவர்கள் (அந்த நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் நம்பியவற்றை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம்'' என்று கூறினர்.
7:76. அதற்கு அந்த ஆணவக்காரர்கள், “எதனை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்களோ, அதனை நாங்கள் மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.
7:76. (அதற்கு) கர்வங்கொண்டிருந்தார்களே அவர்கள் (அவ்விசுவாசிகளிடம்) “நீங்கள் எதை விசுவாசங் கொண்டிருக்கிறீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்
7:77 فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَ قَالُوْا يٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِيْنَ
فَعَقَرُوا ஆகவே அறுத்தனர் النَّاقَةَ பெண் ஒட்டகத்தை وَعَتَوْا இன்னும் மீறினர் عَنْ اَمْرِ கட்டளையை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَ قَالُوْا இன்னும் கூறினர் يٰصٰلِحُ ஸாலிஹே ائْتِنَا வருவீராக/எங்களிடம் بِمَا எதைக் கொண்டு تَعِدُنَاۤ அச்சுறுத்துகிறீர்/எங்களை اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الْمُرْسَلِيْنَ தூதர்களில்
7:77. பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); “ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
7:77. ஆகவே, தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ் நபியை நோக்கி), ‘‘ஸாலிஹே! மெய்யாகவே நீர் இறைவனுடைய தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் அச்சமூட்டும் அ(ந்)த (வேத)னை(யை) எங்களிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்.
7:77. பிறகு அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள்; தம்முடைய இறைவனின் ஆணையை ஆணவத்துடன் மீறினார்கள். மேலும், (ஸாலிஹிடம்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையில் இறைத்தூதர்களில் நீரும் ஒருவர்தாம் என்றால், எந்த வேதனை குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!”
7:77. பின்னர், அந்த ஒட்டகத்தை அறுத்துவிட்டார்கள், தங்கள் இரட்சகனின் கட்டளையை மீறியும் விட்டனர், இன்னும் (அவர்கள் ஸாலிஹிடம்) “ஸாலிஹே! நீர் (அல்லாஹ்வுடைய) தூதர்களில் (உள்ளவராக) இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களித்த (வேதனையான)தை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
7:78 فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِىْ دَارِهِمْ جٰثِمِيْنَ
فَاَخَذَتْهُمُ ஆகவே, அவர்களைப் பிடித்தது الرَّجْفَةُ பயங்கர சப்தம் فَاَصْبَحُوْا காலையை அடைந்தனர் فِىْ دَارِهِمْ தங்கள் பூமியில் جٰثِمِيْنَ இறந்தவர்களாக
7:78. எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.
7:78. ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவான்ற இறந்து அழிந்துவிட்டனர்.
7:78. இறுதியில் திடுக்குறச் செய்யும் ஒரு நிலநடுக்கம் அவர்களைத் தாக்கியது. உடனே, அவர்கள் தம்முடைய இல்லங்களில் முகங்குப்புற விழுந்து இறந்து கிடந்தார்கள்!
7:78. ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது, அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் (இறந்து) குப்புற வீழ்ந்து கிடக்க காலைப்பொழுதை அடைந்தனர்.
7:79 فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّىْ وَنَصَحْتُ لَـكُمْ وَلٰـكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِيْنَ
فَتَوَلّٰى திரும்பினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَقَدْ اَبْلَغْتُكُمْ திட்டவட்டமாக/ எடுத்துரைத்தேன்/உங்களுக்கு رِسَالَةَ தூதை رَبِّىْ என் இறைவனின் وَنَصَحْتُ உபதேசித்தேன் لَـكُمْ உங்களுக்கு وَلٰـكِنْ எனினும் لَّا تُحِبُّوْنَ நீங்கள் நேசிப்பதில்லை النّٰصِحِيْنَ உபதேசிப்பவர்களை
7:79. அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் “என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, “உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.
7:79. (அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக்கொண்டு (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை'' என்று கூறினார்.
7:79. பிறகு, ஸாலிஹ் “என் சமூகத்தாரே! நான் என்னுடைய இறைவனின் தூதுச் செய்தியை உங்களிடம் எடுத்துரைத்து விட்டேன். மேலும், நான் உங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தேன். ஆயினும் (நான் என்ன செய்ய முடியும்?) உங்களுக்கு நலன் நாடியவர்களை நீங்கள் நேசிக்கவில்லையே!” என்று கூறியவாறு அவர்களின் ஊரை விட்டு வெளியேறினார்.
7:79. (அந்நேரத்தில் ஸாலீஹ் நபி) அவர்களை விட்டும் திரும்பிக் கொண்டார், மேலும், (அவர்களிடம்,) “என்னுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இரட்சகனின் தூதையே எத்தி வைத்தேன், உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன், எனினும், நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.
7:80 وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِيْنَ
وَلُوْطًا இன்னும் லூத்தை اِذْ சமயம் قَالَ கூறினார் لِقَوْمِهٖۤ தம் சமுதாயத்திற்கு اَتَاْتُوْنَ வருகிறீர்களா? الْفَاحِشَةَ மானக்கேடானதிற்கு مَا இல்லை سَبَقَكُمْ உங்களை முந்த بِهَا இதற்கு مِنْ اَحَدٍ ஒருவருமே مِّنَ الْعٰلَمِيْنَ உலகத்தாரில்
7:80. மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
7:80. லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்?
7:80. பிறகு, லூத்தை நாம் தூதராக அனுப்பினோம். அவர் தம்முடைய சமுதாயத்தாரை நோக்கி இவ்வாறு கூறியதை நினைத்துப் பாருங்கள்: “இந்த மானக்கேடான செயலைச் செய்கின்ற (அளவுக்கு நீங்கள் வெட்கமற்ற) வர்களாகி விட்டீர்களா? உங்களுக்கு முன்னர் அகிலத்தாரில் எவருமே இதனைச் செய்ததில்லை.
7:80. “லூத்”தையும் (நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தார்க்கு நாம் அனுப்பி வைத்தோம்) அவர் தம் சமூகத்தாரிடம், “மானக்கேடானதொரு காரியத்தை நீங்கள் செய்கின்றீர்களா? அகிலத்தாரில் எவரும் அதை (செய்வது) கொண்டு உங்களை முந்திவிடவில்லை” என்று கூறியதை (நினைவு கூருங்கள்.)
7:81 اِنَّكُمْ لَـتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ
اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَـتَاْتُوْنَ வருகிறீர்கள் الرِّجَالَ ஆண்களிடம் شَهْوَةً காமத்திற்கு مِّنْ دُوْنِ அன்றி النِّسَآءِ ؕ பெண்கள் بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் قَوْمٌ மக்கள் مُّسْرِفُوْنَ வரம்பு மீறியவர்கள்
7:81. “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”
7:81. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
7:81. பெண்களை விடுத்து ஆண்களிடம் உங்களுடைய இச்சையை நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்றீர்கள். உண்மை யாதெனில், நீங்கள் முற்றிலும் வரம்பு மீறிய கூட்டத்தார் ஆவீர்கள்.”
7:81. “நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சைக்காக (அதைத் தணித்துக் கொள்ள) வருகின்றீர்கள், மாறாக நீங்கள் மிக்க வரம்பு மீறிய சமூகத்தவராகவே இருக்கின்றீர்கள்” (என்று கூறினார்).
7:82 وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْيَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ
وَمَا كَانَ இருக்கவில்லை جَوَابَ பதிலாக قَوْمِهٖۤ அவருடைய சமுதாயத்தினரின் اِلَّاۤ தவிர اَنْ قَالُـوْۤا என்று அவர்கள் கூறியது اَخْرِجُوْهُمْ வெளியேற்றுங்கள் مِّنْ இவர்களை قَرْيَتِكُمْ ۚ உங்கள் ஊரிலிருந்து اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் اُنَاسٌ மனிதர்கள் يَّتَطَهَّرُوْنَ சுத்தமானவர்கள்
7:82. நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
7:82. அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) ‘‘இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகிவிடலாமெனப் பார்க்கின்றனர்'' என்றுதான் பதில் கூறினார்கள்.
7:82. அதற்கு அக் கூட்டத்தார் இதைத்தான் பதிலாய்க் கூறினார்கள்: “இவர்களை உங்களுடைய ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள் போல் நடக்கின்றார்கள்.”
7:82. (அதற்கு) அவரது சமுதாயத்தினரின் பதில் “அவர்களை உங்கள் ஊரைவிட்டு வெளியேற்றி விடுங்கள், (காரணம்) நிச்சயமாக அவர்கள் மிக்க பரிசுத்தமான மனிதர்களாக இருக்(க விரும்பு)கிறார்கள்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவாகவும்) இருக்கவில்லை.
7:83 فَاَنْجَيْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ۖ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ
فَاَنْجَيْنٰهُ ஆகவே, பாதுகாத்தோம்/அவரை وَاَهْلَهٗۤ இன்னும் அவருடைய குடும்பத்தை اِلَّا தவிர امْرَاَتَهٗ ۖ அவருடைய மனைவியை كَانَتْ அவள் ஆகினாள் مِنَ الْغٰبِرِيْنَ தங்கியவர்களில்
7:83. எனவே, அவருடைய மனைவியைத்தவிர, நாம் அவரையும்,அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்.
7:83. ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள்.
7:83. இறுதியில் லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் (வேதனையை அனுபவிக்க) பின்தங்கி விட்டவர்களில் ஒருத்தி யாக இருந்தாள்.
7:83. எனவே, அவருடைய மனைவியைத் தவிர அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் காப்பாற்றினோம், (அவருடைய மனைவியாகிய) அவள் (அவரைப் பின்பற்றாது அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின்தங்கியவர்களுடன் இருந்துவிட்டாள்.
7:84 وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا ؕ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِيْنَ
وَاَمْطَرْنَا பொழிவித்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது مَّطَرًا ؕ மழையை فَانْظُرْ ஆகவே கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு كَانَ ஆகிவிட்டது عَاقِبَةُ முடிவு الْمُجْرِمِيْنَ குற்றவாளிகளின்
7:84. இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.
7:84. அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே, (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக.
7:84. பிறகு அக்கூட்டத்தார்கள் மீது நாம் பொழிந்தோம் (கல்) மழையை! பிறகு பாருங்கள், அக்குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று?
7:84. மேலும், அவர்கள் மீது நாம் (கல்) மாரியைப் பொழிவித்து (அவர்களை அழித்து) விட்டோம், ஆகவே, (இக்)குற்றவாளிகளின் இறுதி முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக!
7:85 وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ۚ
وَاِلٰى مَدْيَنَ ‘மத்யன்’க்கு اَخَاهُمْ சகோதரர்/அவர்களுடைய شُعَيْبًا ؕ ‘ஷுஐப்’ஐ قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுள் غَيْرُهٗ ؕ அவனையன்றி قَدْ நிச்சயமாக جَآءَتْكُمْ உங்களுக்கு வந்துவிட்டது بَيِّنَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் فَاَوْفُوا ஆகவே முழுமையாக்குங்கள் الْكَيْلَ அளவை وَالْمِيْزَانَ இன்னும் நிறுவையை وَلَا تَبْخَسُوا குறைக்காதீர்கள் النَّاسَ மக்களுக்கு اَشْيَآءَ பொருள்களில் هُمْ அவர்களுடைய وَلَا تُفْسِدُوْا கலகம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் بَعْدَ பின்னர் اِصْلَاحِهَا ؕ அது சீர்திருத்தப்பட்ட ذٰ لِكُمْ இவை خَيْرٌ சிறந்தது لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ ۚ நம்பிக்கை கொள்பவர்களாக
7:85. மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
7:85. ‘மத்யன்' (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐபை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கிறது. ஆகவே, அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் எதையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் (சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பமும் கலகமும் செய்யாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்'' என்று கூறினார்.
7:85. மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரரான ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துள்ளது. எனவே, அளவையை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள்; மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள்; பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள்! உண்மையிலேயே நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது.
7:85. இன்னும் “மத்யன்” (என்னும் நகர)வாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ”ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பிவைத்தோம்) அவர், “என்னுடைய சமூகத்தாரே! அலலாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு (நாயனில்லை) உங்கள் இரட்சகனிடமிருந்து திட்டமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது, ஆகவே, அளவைப் பூர்த்தியாக அளந்து எடையையும் சரியாக நிறுங்கள்; (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருட்களில் யாதொன்றை அவர்களுக்குக் குறைத்தும் விடாதீர்கள், மேலும், பூமியில் (சமாதானம், அமைதி ஏற்பட்டு) அது சீர்திருத்தம் அடைந்த பின்னர், குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள், நீங்கள் விசுவாசிகளாயின், இவை தாம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் என்று கூறினார்.
7:86 وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًا ۚ وَاذْكُرُوْۤا اِذْ كُنْتُمْ قَلِيْلًا فَكَثَّرَكُمْوَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ
وَلَا تَقْعُدُوْا அமராதீர்கள் بِكُلِّ صِرَاطٍ எல்லாப் பாதையிலும் تُوْعِدُوْنَ அச்சுறுத்தியவர்களாக وَتَصُدُّوْنَ இன்னும் தடுப்பவர்களாக عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் مَنْ எவரை اٰمَنَ நம்பிக்கைகொண்டார் بِهٖ அவனை وَتَبْغُوْنَهَا இன்னும் அதில் தேடியவர்களாக عِوَجًا ۚ கோணலை وَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اِذْ சமயம் كُنْتُمْ இருந்தீர்கள் قَلِيْلًا குறைவாக فَكَثَّرَ அதிகமாக்கினான் كُمْ உங்களை وَانْظُرُوْا இன்னும் கவனியுங்கள் كَيْفَ எவ்வாறு كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُفْسِدِيْنَ கலகம் செய்பவர்களின்
7:86. “மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக” (என்றும் கூறினார்).
7:86. ‘‘நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக!'' (என்றும் கூறினார்).
7:86. மேலும் (வாழ்வின்) ஒவ்வொரு பாதையிலும் (கொள்ளைக்காரர்கள் போல) மக்களைப் பயமுறுத்துபவர்களாகவும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பவர்களாகவும் இருக்காதீர்கள்; மேலும், நேரான வழியைக் கோணலாக்க முயலாதீர்கள்! நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பிறகு அல்லாஹ் உங்களைப் பல்கிப்பெருகச் செய்தான். இன்னும் (கண்திறந்து) பாருங்கள்; (உலகில்) குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை!
7:86. மேலும், “ஒவ்வொரு வழியிலும் பயமுறுத்துபவர்களாகவும், அல்லாஹ்வின் வழியைவிட்டும் அவனை விசுவாசங்கொண்டோரை தடுப்பவர்களாவும் அதில் கோணலைத் தேடக் கூடியவர்களாகவும அமராதீர்கள்; குறைவானவர்களாக நீங்கள் இருந்தபோது உங்களை அவன் அதிகமாக ஆக்கிவைத்ததையும் (அல்லாஹ்வுக்கு நன்றி செய்வதற்காக) நீங்கள் நினைவு கூருங்கள், பூமியில் குழப்பம் செய்து கொண்டலைந்தவர்களின் (இறுதி) முடிவு எப்படி இருந்தது என்பதையும் நீங்கள் (கவனித்துப்)பார்ப்பீர்களாக!
7:87 وَاِنْ كَانَ طَآٮِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِىْۤ اُرْسِلْتُ بِهٖ وَطَآٮِٕفَةٌ لَّمْ يُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰى يَحْكُمَ اللّٰهُ بَيْنَنَا ۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ
وَاِنْ كَانَ இருந்தால் طَآٮِٕفَةٌ ஒரு பிரிவினர் مِّنْكُمْ உங்களில் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களாக بِالَّذِىْۤ எதைக்கொண்டு اُرْسِلْتُ அனுப்பப்பட்டேன் بِهٖ அதைக் கொண்டு وَطَآٮِٕفَةٌ இன்னும் ஒரு பிரிவினர் لَّمْ يُؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களாக فَاصْبِرُوْا பொறுங்கள் حَتّٰى வரை يَحْكُمَ தீர்ப்பளிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بَيْنَنَا ۚ நமக்கு மத்தியில் وَهُوَ அவன் خَيْرُ மிகச் சிறந்தவன் الْحٰكِمِيْنَ தீர்ப்பளிப்பவர்களில்
7:87. “உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறார்கள்; இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பவில்லை - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் - அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” (என்றும் கூறினார்).
7:87. (நம்பிக்கையாளர்களே!) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன்.
7:87. நான் என்னென்ன அறிவுரைகளுடன் அனுப்பப்பட்டுள்ளேனோ அவற்றின் மீது உங்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டும், மற்றொரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாமலும் இருந்தீர்களானால், அல்லாஹ் நமக்கிடையே தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையுடன் (காத்துக் கொண்டு) இருங்கள்! அவனே தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவன்.”
7:87. “இன்னும் நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களில் ஒருசாரார் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தும், ஒருசாரார் விசுவாசங்கொள்ளாதவர்களாகவும் இருந்தால் (அப்போது) நமக்கு மத்தியில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையாக இருங்கள், அவனே தீர்ப்பு வழங்குவோரில் மிக்க மேலானவன்” (என்று கூறினார்.)
7:88 قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَـنُخْرِجَنَّكَ يٰشُعَيْبُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْيَتِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كَارِهِيْنَ ۚ
قَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் اسْتَكْبَرُوْا பெருமையடித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் لَـنُخْرِجَنَّكَ நிச்சயம் வெளியேற்றுவோம்/உம்மை يٰشُعَيْبُ ஷுஐபே وَالَّذِيْنَ اٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை مَعَكَ உம்முடன் مِنْ இருந்து قَرْيَتِنَاۤ எங்கள் ஊர் اَوْ அல்லது لَـتَعُوْدُنَّ நிச்சயமாக நீங்கள் திரும்பிவிட வேண்டும் فِىْ مِلَّتِنَا ؕ எங்கள் கொள்கைக்கு قَالَ கூறினார் اَوَلَوْ كُنَّا நாங்கள் இருந்தாலுமா? كَارِهِيْنَ ۚ வெறுப்பவர்களாக
7:88. அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று கேட்டார்.
7:88. (ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?'' என்று கேட்டார்.
7:88. அவருடைய சமுதாயத்தாரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள் கூறினார்கள்: “ஷுஐபே! உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நாங்கள் நிச்சயமாக எங்களுடைய ஊரை விட்டு வெளியேற்ற வேண்டிவரும். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்ப வேண்டியிருக்கும்.” அதற்கு ஷுஐப் பதில் தந்தார்: “நாங்கள் விரும்பாதவர்களாய் இருந்தாலுமா (எங்களைவற்புறுத்தி உங்கள் மார்க்கத்திற்குத் திருப்பி விடுவீர்கள்)?
7:88. அவருடைய சமூகத்தினரில் கர்வங் கொண்டிருந்தார்களே அந்தப்பிரதானிகள், “ஷுஐபே! நிச்சயமாக நாம் உம்மையும் உம்முடன் விசுவாசித்தோரையும் நம்முடைய ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம், அல்லது நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அ(தற்க)வர் (அவர்களிடம்) உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுப்பவர்களாக இருந்தபோதிலுமா? என்று கேட்டார்.
7:89 قَدِ افْتَرَيْنَا عَلَى اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِىْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰٮنَا اللّٰهُ مِنْهَا ؕ وَمَا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّعُوْدَ فِيْهَاۤ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّنَا ؕ وَسِعَ رَبُّنَا كُلَّ شَىْءٍ عِلْمًاؕ عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا ؕ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَـقِّ وَاَنْتَ خَيْرُ الْفٰتِحِيْنَ
قَدِ افْتَرَيْنَا நாங்கள் இட்டுக்கட்டிவிடுவோம் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اِنْ عُدْنَا நாங்கள் திரும்பினால் فِىْ مِلَّتِكُمْ உங்கள் கொள்கைக்கு بَعْدَ பின்னர் اِذْ போது نَجّٰٮنَا பாதுகாத்தான்/ எங்களை اللّٰهُ அல்லாஹ் مِنْهَا ؕ அதிலிருந்து وَمَا يَكُوْنُ لَـنَاۤ ஆகாது/எங்களுக்கு اَنْ نَّعُوْدَ நாங்கள் திரும்புவது فِيْهَاۤ அதில் اِلَّاۤ தவிர اَنْ يَّشَآءَ நாடியே اللّٰهُ அல்லாஹ் رَبُّنَا ؕ எங்கள் இறைவனாகிய وَسِعَ விசாலமானவன் رَبُّنَا எங்கள் இறைவன் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும்விட عِلْمًاؕ ஞானத்தால் عَلَى மீதே اللّٰهِ அல்லாஹ்வின் تَوَكَّلْنَا ؕ நம்பிக்கைவைத்தோம் رَبَّنَا எங்கள் இறைவா افْتَحْ தீர்ப்பளி(முடிவுசெய்) بَيْنَنَا எங்களுக்கிடையில் وَبَيْنَ இன்னும் இடையில் قَوْمِنَا எங்கள் சமுதாயத்திற்கு بِالْحَـقِّ நியாயமாக وَاَنْتَ நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الْفٰتِحِيْنَ தீர்ப்பளிப்பவர்களில்
7:89. “உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்“ (என்று கூறி), “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்).
7:89. ‘‘உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்'' (என்றும் கூறி, இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்'' (என்றும் பிரார்த்தித்தார்).
7:89. உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் அதன் பக்கமே நாங்கள் திரும்பினால், நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்களாய் ஆவோம்! மேலும், நாங்கள் அம்மார்க்கத்திற்குத் திரும்பி வருவது எங்களைப் பொறுத்து (எவ்விதத்திலும்) சாத்தியமானதன்று; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி! எங்கள் இறைவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் முழுமையாகச் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவனே! எங்களுக்கும், எங்களின் சமுதாயத்தாருக்குமிடையில் சரியாகத் தீர்ப்பளிப்பாயாக! நீயே சிறப்பாகத் தீர்ப்பு வழங்குபவனாய் இருக்கிறாய்.”
7:89. (அன்றி) “உங்கள் மார்க்கத்திற்கு – அதிலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்டதன் பின்னர்-நாங்கள் திரும்பினால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நாங்கள் பொய்யைப் புனைந்து கூறியவர்களாகி விடுவோம், எங்கள் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதன்பால் மீளுவதற்கு எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை, எங்கள் இரட்சகன் தன் அறிவால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான், அல்லாஹ்வின் மீதே நாங்கள் (எங்களுடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துள்ளோம்” (என்று கூறி) “எங்கள் இரட்சகனே! எங்களுக்கும் எங்கள் சமூகத்தாருக்குமிடையில் நீ நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே தீர்ப்பளிப்போரில் மிக்க மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்.)
7:90 وَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَٮِٕنِ اتَّبَعْتُمْ شُعَيْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ
وَقَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் لَٮِٕنِ اتَّبَعْتُمْ நீங்கள் பின்பற்றினால் شُعَيْبًا ஷுஐபை اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِذًا அப்போது لَّخٰسِرُوْنَ நஷ்டவாளிகள்தான்
7:90. அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் ஷுஐபை பின் பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்” என்று கூறினார்.
7:90. (ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்'' என்று கூறினார்கள்.
7:90. (அவர் கூறியதை) ஏற்க மறுத்துவிட்ட அவருடைய சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (தமக்கிடையே) கூறிக் கொண்டார்கள்: “நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக அழிந்து போவீர்கள்.”
7:90. அவருடைய சமூகத்தாரில் நிராகரித்து விட்டார்களே! அத்தகைய பிரதானிகள் (மற்றவர்களிடம்) “நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால், அப்போது நிச்சயமாக நீங்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள்” என்று கூறினார்கள்.
7:91 فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِىْ دَارِهِمْ جٰثِمِيْنَ ۛۙ ۚ ۖ
فَاَخَذَتْهُمُ ஆகவே, அவர்களைப் பிடித்தது الرَّجْفَةُ நிலநடுக்கம் فَاَصْبَحُوْا காலையை அடைந்தனர் فِىْ دَارِهِمْ தங்கள் பூமியில் جٰثِمِيْنَ ۛۙ ۚ ۖ இறந்தவர்களாக
7:91. ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர்.
7:91. ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர்.
7:91. ஆனால் (நடந்தது என்னவெனில்) திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தார்கள்.
7:91. ஆகவே, அவர்களை (மிக்க கொடூரமான பூகம்பம் பிடித்துக் கொண்டது, அவர்கள் தஙகள் வீடுகளில் குப்புற வீழ்ந்து (இறந்து) கிடந்தவர்களாக காலைப்பொழுதை அடைந்தனர்.
7:92 الَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ۛۚ اَ لَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِيْنَ
الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் شُعَيْبًا ஷுஐபை كَاَنْ لَّمْ يَغْنَوْا வசிக்காதவர்கள் போல் فِيْهَا ۛۚ அதில் اَ لَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் شُعَيْبًا ஷுஐபை كَانُوْا ஆகிவிட்டார்கள் هُمُ அவர்கள்தான் الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளாக
7:92. ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
7:92. ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் (அழிந்து) எக்காலத்திலுமே வசித்திராதவர்களைப்போல் ஆகிவிட்டனர். எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தார்கள்.
7:92. (ஆம்!) ஷுஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள் அவ்வில்லங்களில் வசிக்காதவர்கள் போன்று அடியோடு அழிந்து போய் விட்டார்கள். ஷுஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள்தாம் இறுதியில் இழப்புக்குரியவர்களானார்கள்.
7:92. ஷுஐபைப் பொய்யாக்கினார்களே அத்தகையவர்கள் அவற்றில் (தங்கள் வீடுகளில்) ஒருகாலத்திலுமே வசித்திராதவர்களைப் போலாகி (யாதோர் அடையாளமுமின்றி அழிந்து) விட்டனர், ஷுஐபைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர் - அவர்களே (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.
7:93 فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّىْ وَنَصَحْتُ لَـكُمْۚ فَكَيْفَ اٰسٰی عَلٰى قَوْمٍ كٰفِرِيْنَ
فَتَوَلّٰى ஆகவே விலகினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَقَدْ திட்டமாக اَبْلَغْتُكُمْ உங்களுக்கு எடுத்துரைத்தேன் رِسٰلٰتِ தூதுகளை رَبِّىْ என் இறைவனின் وَنَصَحْتُ இன்னும் உபதேசித்தேன் لَـكُمْۚ உங்களுக்கு فَكَيْفَ ஆகவே எவ்வாறு اٰسٰی துயர்கொள்வேன் عَلٰى மீது قَوْمٍ சமுதாயத்தின் كٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களான
7:93. இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று அவர் கூறினார்.
7:93. (அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூது செய்திகளைத்தான் உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, (அதை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்'' என்று கூறினார்.
7:93. மேலும், ஷுஐப், “என்னுடைய சமுதாயத்தாரே! நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். மேலும், உங்களுக்கு நலன் நாடும் பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். ஆனால் சத்தியத்தை மறுக்கின்ற சமுதாயத்தவர்மீது நான் எவ்வாறு அனுதாபம் கொள்வேன்?” என்று கூறியபடி (அவ்வூரைவிட்டு) வெளியேறிவிட்டார்.
7:93. (அது சமயம் ஷுஐபாகிய (அவர் அவர்களைவிட்டும் திரும்பி, “என்னுடைய சமூகத்தாரே! “நிச்சயமாக நான் என் இரட்சகனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து) எத்தி வைத்து விட்டேன், இன்னும் உங்களுக்கு நல்லுபதேசமும் செய்துவிட்டேன், ஆகவே, (அதனை) நிராகரித்துவிட்ட சமூகத்தாரின்மீது நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று கூறினார்.
7:94 وَمَاۤ اَرْسَلْنَا فِىْ قَرْيَةٍ مِّنْ نَّبِىٍّ اِلَّاۤ اَخَذْنَاۤ اَهْلَهَا بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُوْنَ
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை فِىْ قَرْيَةٍ ஓர் ஊரில் مِّنْ نَّبِىٍّ எந்த ஒரு நபியையும் اِلَّاۤ தவிர اَخَذْنَاۤ பிடித்தோம் اَهْلَهَا அதில் வசிப்பவர்களை بِالْبَاْسَآءِ வறுமையைக் கொண்டு وَالضَّرَّآءِ இன்னும் நோயைக் கொண்டு لَعَلَّهُمْ يَضَّرَّعُوْنَ அவர்கள் பணிவதற்காக
7:94. நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.
7:94. நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வோர் ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் (நம்பக்கம்) பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை.
7:94. நாம் நபியை அனுப்பி வைத்த எந்த ஊர் மக்களையும் அவர்கள் பணிந்து நடந்திட வேண்டும் என்பதற்காக, (முதலில்) கடுமையான துன்ப துயரங்களைக் கொண்டு சோதிக்காமல் இருக்கவில்லை.
7:94. மேலும், எந்த ஊரிலும் அவ்வூர்வாசிகளை அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையாலும், பிணியாலும் நாம் அவர்களை பிடித்தே தவிர எந்த நபியையம் நாம் அனுப்பவில்லை.
7:95 ثُمَّ بَدَّلْـنَا مَكَانَ السَّيِّئَةِ الْحَسَنَةَ حَتّٰى عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ
ثُمَّ பிறகு بَدَّلْـنَا மாற்றினோம் مَكَانَ இடத்தில் السَّيِّئَةِ துன்பத்தின் الْحَسَنَةَ இன்பத்தை حَتّٰى இறுதியாக عَفَوْا அவர்கள் அதிகரிக்கவே وَّقَالُوْا இன்னும் கூறினர் قَدْ مَسَّ அடைந்திருக்கிறது اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை(யும்) الضَّرَّآءُ நோய் وَالسَّرَّآءُ இன்னும் சுகம் فَاَخَذْنٰهُمْ ஆகவே பிடித்தோம்/அவர்களை بَغْتَةً திடீரென وَّهُمْ لَا يَشْعُرُوْنَ அவர்கள் உணராமல் இருக்கும் நிலையில்
7:95. பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டடிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.
7:95. பின்னர், நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) ‘‘நம் மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கிறது'' என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக்கொண்டோம்.
7:95. பிறகு அவர்களின் துன்பத்தை இன்பமாய் மாற்றினோம். எந்த அளவுக்கு எனில் அவர்கள் இன்ப நலத்தில் நன்கு திளைத்து, “எங்களின் முன்னோர்களுக்குங்கூட துன்பமும் இன்பமும் ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தன” என்று கூறினார்கள். இறுதியில், அவர்கள் எதிர்பாராத நிலையில், திடீரென்று அவர்களைப் பிடித்தோம்.
7:95. பின்னர் நாம் (வறுமை பிணி போன்ற) தீயதின் இடத்தில் நல்லதை மாற்றிக்கொடுத்தோம், முடிவாக (பல்கிப்பெருகி) அதிகமானவர்களாகிவிட்ட அவர்கள், நம்முடைய மூதாதையர்களுக்குமே இத்தகைய சுக துக்கம் ஏற்பட்டிருக்கின்றது” என்று (தாங்கள் அனுபவித்து வரும்) இவை யாவும் காலத்தின் ஏற்றத்தாழ்வினால் ஏற்பட்டதே என அலட்சியமாகக் கூறினார்கள், ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில் (வேதனையைக் கொண்டு) திடீரென அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
7:96 وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَـفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰـكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى இருந்தால்/நிச்சயமாக/ஊர்வாசிகள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَاتَّقَوْا இன்னும் அஞ்சினர் لَـفَتَحْنَا திறந்திருப்போம் عَلَيْهِمْ அவர்கள் மீது بَرَكٰتٍ அருள்வளங்களை مِّنَ இருந்து السَّمَآءِ வானம் وَالْاَرْضِ இன்னும் பூமி وَلٰـكِنْ எனினும் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் فَاَخَذْنٰهُمْ ஆகவே பிடித்தோம்/அவர்களை بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ அல்லது செய்து கொண்டிருந்ததன் காரணமாக
7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
7:96. அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கைகொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
7:96. ஆனால், அவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுள்ள நடத்தையை மேற் கொண்டிருப்பார்களேயானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்க(ளின் வாயில்)கள் அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம். ஆனால், அவர்கள் சத்தியத்தைப் பொய்யென்று உரைத்தார்கள். எனவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீய செயல்களின் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம்.
7:96. மேலும், அவ்வூர்களை உடையவர்கள் விசுவாசங்கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் நடந்திருந்தால், அவர்களுக்கு வானத்திலும், பூமியிலும் உள்ள பாக்கியங்(களின் வாசல்)களை நாம் திறந்து விட்டிருப்போம், எனினும், அவர்கள் (நபிமார்களை விசுவாசிக்காது) பொய்யாக்கினார்கள், ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட (பாவத்)தின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
7:97 اَفَاَمِنَ اَهْلُ الْـقُرٰٓى اَنْ يَّاْتِيَهُمْ بَاْسُنَا بَيَاتًا وَّهُمْ نَآٮِٕمُوْنَؕ
اَفَاَمِنَ ?/அச்சமற்றார்(கள்) اَهْلُ الْـقُرٰٓى ஊர்வாசிகள் اَنْ يَّاْتِيَهُمْ அவர்களுக்கு வருவதை بَاْسُنَا நம் வேதனை بَيَاتًا இரவில் وَّهُمْ نَآٮِٕمُوْنَؕ அவர்கள் தூங்கியவர்களாக இருக்கும்போது
7:97. அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
7:97. (நபியே!) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
7:97. இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய வேதனை அவர்களைத் திடீரென தாக்காது என்று இவ்வூர்களில் வாழும் மக்கள் அச்சமற்று இருக்கிறார்களா?
7:97. (நபியே! நிராகரித்த) அவ்வூர்களை உடையவர்கள் (தங்கள் வீடுகளில்) இரவில் அவர்கள் நித்திரை செய்து கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றி அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
7:98 اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰٓى اَنْ يَّاْتِيَهُمْ بَاْسُنَا ضُحًى وَّهُمْ يَلْعَبُوْنَ
اَوَاَمِنَ ?/அச்சமற்றார்(கள்) اَهْلُ الْقُرٰٓى ஊர்வாசிகள் اَنْ يَّاْتِيَهُ அவர்களுக்கு வருவதை بَاْسُنَا நம் வேதனை ضُحًى முற்பகலில் وَّهُمْ يَلْعَبُوْنَ அவர்கள் விளையாடும்போது
7:98. அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
7:98. அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?
7:98. அல்லது பகலில் அவர்கள் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே நம்முடைய வேதனை அவர்களைத் தாக்காது என்று இவர்கள் நிம்மதியுடன் இருக்கின்றார்களா?
7:98. அல்லது (நிராகரித்த) அவ்வூர்களை உடையவர்கள் (கவலையற்று) முற்பகலில் விளையாடிக் கொண்டு பாராமுகமாக அவர்கள் காரியங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நம்முடைய வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றி அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
7:99 اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ ۚ فَلَا يَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ
اَفَاَمِنُوْا அச்சமற்றார்களா? مَكْرَ சூழ்ச்சியை اللّٰهِ ۚ அல்லாஹ்வின் فَلَا يَاْمَنُ அச்சமற்றிருக்க மாட்டார்(கள்) مَكْرَ சூழ்ச்சியை اللّٰهِ அல்லாஹ்வின் اِلَّا الْقَوْمُ மக்களைத் தவிர الْخٰسِرُوْنَ நஷ்டவாளிகளான
7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.
7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்க மாட்டார்கள்.
7:99. என்ன, இம்மக்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருக்கின்றார்களா? உண்மையில் அழிந்து போகக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருப்பார்கள்.
7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியை குறித்து அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? முற்றிலும் நஷ்டமடையக் கூடிய சமூகத்தாரைத் தவிர (எவரும்) அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்றிருக்க மாட்டார்கள்.
7:100 اَوَلَمْ يَهْدِ لِلَّذِيْنَ يَرِثُوْنَ الْاَرْضَ مِنْۢ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ
اَوَلَمْ يَهْدِ தெளிவாகவில்லையா? لِلَّذِيْنَ எவர்களுக்கு يَرِثُوْنَ வாரிசாகிறார்கள் الْاَرْضَ பூமிக்கு مِنْۢ بَعْدِ பின்னர் اَهْلِهَاۤ அதில் வசித்தவர்களுக்கு اَنْ لَّوْ نَشَآءُ என்பது/நாம் நாடினால் اَصَبْنٰهُمْ சோதித்திருப்போம்/அவர்களை بِذُنُوْبِهِمْ ۚ அவர்களுடைய பாவங்களின் காரணமாக وَنَطْبَعُ இன்னும் முத்திரையிடுவோம் عَلٰى மீது قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்கள் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَسْمَعُوْنَ செவியுறமாட்டார்கள்
7:100. பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
7:100. பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள்.
7:100. முன்பு வாழ்ந்து சென்ற புவிவாழ் மக்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசாக வந்துள்ள இவர்களுக்கு இந்த உண்மை படிப்பினை தரவில்லையா? (அது யாதெனில்), நாம் நாடினால், இவர்களின் பாவங்கள் காரணமாக இவர்களைத் தண்டித்திட முடியும் என்பது! (ஆனால் இவர்கள் இத்தகைய படிப்பினை மிக்க பேருண்மைகளில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.) மேலும், இவர்களுடைய உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம். எனவே, இவர்கள் (எதனையும்) செவியேற்பதில்லை.
7:100. பூமியை – அதை உடையவர்களுக்குப் பின்னர்-வாரிசாக அடைந்தோருக்கு-நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணமாக இவர்களையும், (அவ்வாறே) பிடித்திருப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு விளங்கவில்லையா? மேலும் நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விடுகிறோம், ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியேற்க மாட்டார்கள்.
7:101 تِلْكَ الْقُرٰى نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآٮِٕهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ ۚ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الْكٰفِرِيْنَ
تِلْكَ الْقُرٰى அந்த ஊர்கள் نَقُصُّ விவரிக்கிறோம் عَلَيْكَ உமக்கு مِنْ இருந்து اَنْۢبَآٮِٕهَا ۚ அவற்றின் செய்திகள் وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَتْهُمْ வந்தனர்/அவர்களிடம் رُسُلُهُمْ அவர்களுடைய தூதர்கள் بِالْبَيِّنٰتِ ۚ அத்தாட்சிகளைக் கொண்டு فَمَا كَانُوْا அவர்கள் இல்லை لِيُؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக بِمَا எதை كَذَّبُوْا பொய்ப்பித்தனர் مِنْ قَبْلُ ؕ முன்னர் كَذٰلِكَ இவ்வாறே يَطْبَعُ முத்திரையிடுகிறான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى قُلُوْبِ உள்ளங்கள் மீது الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களின்
7:101. (நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
7:101. (நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகிறோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கிவிட்டால் (பின்னர் அதை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.
7:101. அவ்வூர்களின் வரலாறுகளை உமக்கு நாம் கூறுகின்றோம். (அவை உமக்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றன.) அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அம்மக்கள் முன்னர் எதனைப் பொய்யெனக் கூறிவிட்டிருந்தார்களோ அதனைப் பிறகு அவர்கள் ஏற்பவர்களாயில்லை. (பாருங்கள்) இவ்வாறே சத்தியத்தை மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகின்றான்!
7:101. (நபியே!) அந்த ஊர்கள் - அவற்றின் (வரலாற்றுச்) செய்திகளை நாம் உமக்கு (விவரித்துக்) கூறுகின்றோம், (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு (அல்லாஹ்வினால்) அனுப்பப்பட்ட தூதர்கள், அவர்களிடம் திட்டமாகத் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்தனர், (ஆயினும்,) அவர்களோ முன்னர் பொய்யாக்கிய காரணத்தினால் விசுவாசங் கொள்பவர்களாக இருக்கவில்லை, இவ்வாறே நிராகரிப்போரின் இதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.
7:102 وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍۚ وَاِنْ وَّجَدْنَاۤ اَكْثَرَهُمْ لَفٰسِقِيْنَ
وَمَا وَجَدْنَا நாம் காணவில்லை لِاَكْثَرِهِمْ அவர்களில் அதிகமானவர்களுக்கு مِّنْ عَهْدٍۚ எந்த வாக்குறுதியையும் وَاِنْ وَّجَدْنَاۤ நிச்சயமாக கண்டோம் اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானவர்களை لَفٰسِقِيْنَ பாவிகளாகவே
7:102. அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
7:102. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குறுதி(யை நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை. இன்னும், நாம் அவர்களில் பெரும்பாலானவர்களை பாவிகளாகவே கண்டோம்.
7:102. அவர்களில் பெரும்பாலோரிடம் வாக்குறுதி பேணும் பண்பினை நாம் காணவில்லை. மாறாக அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே நாம் காண்கிறோம்.
7:102. அவர்களில் பெரும்பாலோருக்கு எந்த வாக்குறுதியையும் (நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை, அன்றியும், நிச்சயமாக நாம் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
7:103 ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهِمْ مُّوْسٰى بِاٰيٰتِنَاۤ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ئِهٖ فَظَلَمُوْا بِهَا ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ
ثُمَّ பிறகு بَعَثْنَا அனுப்பினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு مُّوْسٰى மூஸாவை بِاٰيٰتِنَاۤ நம் அத்தாட்சிகளைக் கொண்டு اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் وَمَلَا۟ئِهٖ இன்னும் அவனுடைய தலைவர்களிடம் فَظَلَمُوْا அநீதியிழைத்தனர் بِهَا ۚ அவற்றுக்கு فَانْظُرْ கவனிப்பீராக كَيْفَ كَانَ எவ்வாறு இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُفْسِدِيْنَ விஷமிகளின்
7:103. அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
7:103. இதற்குப் பின்னரும் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பிவைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
7:103. பின்னர், (மேற்கூறப்பட்ட) அந்தச் சமூகங்கள் சென்ற பிறகு மூஸாவை, நம்முடைய சான்றுகளோடு ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமுதாயத்தின் தலைவர்களிடமும் நாம் அனுப்பினோம். ஆயினும், அவர்களும் நம்முடைய சான்றுகளுக்கு அநீதி இழைத்தார்கள். எனவே, பாருங்கள் (இவ்வாறு) குழப்பம் செய்து திரிந்த அவர்களின் கதி என்னவாயிற்று என்பதை!
7:103. (நபிமார்களாகிய நூஹ், ஹூத், ஸாலீஹ், ஷுஐப்) அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர் அவ்னிடமும், அவனுடைய பிராதானிகளிடமும் நாம் அனுப்பி வைத்தோம், (ஆயினும்,) அவர்கள் அவற்றை நிராகரித்து அநியாயம் செய்து) விட்டனர், ஆகவே, (இத்தகைய) குழப்பக்காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக!
7:104 وَ قَالَ مُوْسٰى يٰفِرْعَوْنُ اِنِّىْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَۙ
وَ قَالَ கூறினார் مُوْسٰى மூஸா يٰفِرْعَوْنُ ஃபிர்அவ்னே اِنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْ رَّبِّ இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட الْعٰلَمِيْنَۙ அகிலங்களின்
7:104. “ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்.
7:104. மூஸா (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரின் இறைவனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்'' என்று கூறினார்.
7:104. மூஸா கூறினார்: “ஃபிர்அவ்னே! நான் அகிலமனைத்தின் அதிபதியிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன்.
7:104. மேலும், மூஸா (ஃபிர் அவ்னிடம்) “ஃபிர் அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதன்” என்று கூறினார்.
7:105 حَقِيْقٌ عَلٰٓى اَنْ لَّاۤ اَقُوْلَ عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ ؕ قَدْ جِئْـتُكُمْ بِبَيِّنَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاَرْسِلْ مَعِىَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ
حَقِيْقٌ பேராசை உள்ளவன், கடமைப் பட்டவன், தகுதி உள்ளவன் عَلٰٓى اَنْ لَّاۤ اَقُوْلَ நான் கூறாமலிருப்பதற்கு عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது اِلَّا الْحَـقَّ ؕ உண்மையைத் தவிர قَدْ நிச்சயமாக جِئْـتُكُمْ உங்களிடம் வந்துவிட்டேன் بِبَيِّنَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து فَاَرْسِلْ ஆகவே அனுப்பிவை مَعِىَ என்னுடன் بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ இஸ்ரவேலர்களை
7:105. “அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்).
7:105. ‘‘நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆதலால், (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை'' (என்றும் கூறினார்.)
7:105. அல்லாஹ்வின் பெயரால் சத்தியத்தைத் தவிர வேறெதனையும் சொல்லமாட்டேன். இதுவே என்னுடைய பொறுப்பாகும். நான் உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். எனவே, நீ இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை என்னுடன் அனுப்பி வைத்துவிடு!”
7:105. (அன்றி “நான் அல்லாஹ்வின்மீது உண்மையையன்றி (வேறு எதையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும், உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை திட்டமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன், ஆதலால், நீ (அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் மக்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்.)
7:106 قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰيَةٍ فَاْتِ بِهَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
قَالَ கூறினான் اِنْ كُنْتَ جِئْتَ நீர் இருந்தால்/வந்தீர் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு فَاْتِ வாரீர் بِهَاۤ அதைக் கொண்டு اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ உண்மையாளர்களில்
7:106. அதற்கு அவன், “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.
7:106. அதற்கவன் ‘‘நீர் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாகக் கூறும் உமது கூற்றில் நீர் உண்மை சொல்பவராக இருந்தால் அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்.
7:106. அதற்கு ஃபிர்அவ்ன், “நீர் தெளிவான சான்று ஏதேனும் கொண்டு வந்திருப்பீராயின் நீர் (உம்முடைய வாதத்தில்) உண்மையானவரானால் அதனைக் காட்டும் பார்க்கலாம்!” என்று கூறினான்.
7:106. அ(தற்க)வன், “நீர் ஏதேனும் அத்தாட்சியைக் கொண்டு வந்திருந்தால், (அதுபற்றி) நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதனை நீர் கொண்டுவாரும்” என்று கூறினான்.
7:107 فَاَلْقٰى عَصَاهُ فَاِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِيْنٌ ۖ ۚ
فَاَلْقٰى ஆகவே, எறிந்தார் عَصَاهُ தன் தடியை فَاِذَا அப்போது هِىَ அது ثُعْبَانٌ பெரிய பாம்பாக مُّبِيْنٌ ۖ ۚ தெளிவானது
7:107. அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
7:107. ஆகவே, (மூஸா) தன் (கைத்)தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு மலைப் பாம்பாகி விட்டது.
7:107. அப்போது மூஸா தம்முடைய கைத்தடியை எறிந்தார். உடனே அது உயிருள்ள பெரியதொரு பாம்பாக மாறியது.
7:107. அப்போது அவர் தன் கைத்தடியை போட்டார், அதே சமயம் அது தெளிவான பெரிய(தொரு) பாம்பாகிவிட்டது.
7:108 وَّنَزَعَ يَدَهٗ فَاِذَا هِىَ بَيْضَآءُ لِلنّٰظِرِيْنَ
وَّنَزَعَ இன்னும் வெளியில் எடுத்தார் يَدَهٗ தன் கையை فَاِذَا அப்போது هِىَ அது بَيْضَآءُ மிக வெண்மையானதாக لِلنّٰظِرِيْنَ பார்ப்பவர்களுக்கு
7:108. மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
7:108. மேலும், அவர் தன் கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மையானதாக(வும், மிக பிரகாசமானதாகவும்) இருந்தது.
7:108. பிறகு அவர் தமது (கட்கத்திலிருந்து) கையை வெளியே எடுத்தார். பார்ப்பவர் முன்னிலையில் அது வெண்மையாய்ப் பளிச்சிட்டது.
7:108. அன்றியும் அவர் தன்னுடைய கையை(ச் சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார், அதே சமயம் அது பார்ப்போருக்கு வெண்மையானதாக(வும் பிரகாசமானதாகவும்) இருந்தது.
7:109 قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌ ۙ
قَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் مِنْ قَوْمِ சமுதாயத்தின் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய اِنَّ هٰذَا நிச்சயமாக இவர் لَسٰحِرٌ சூனியக்காரர் عَلِيْمٌ ۙ கற்றறிந்தவர்
7:109. ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.
7:109. (இதைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கிறார்'' என்று கூறினார்கள்.
7:109. (இதனைக் கண்ணுற்ற) ஃபிர்அவ்னுடைய சமுதாயத் தலைவர்கள், “உண்மையிலேயே இவர் ஒரு திறமை மிக்க மந்திரவாதிதான்.
7:109. (இதனைக்கண்ட) ஃபிர் அவ்னுடைய சமூகத்தாரைச்சேர்ந்த பிரதானிகள் “நிச்சயமாக இவர் மிக அறிந்த சூனியக்காரர்” என்று கூறினார்கள்.,
7:110 يُّرِيْدُ اَنْ يُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ ۚ فَمَاذَا تَاْمُرُوْنَ
يُّرِيْدُ நாடுகிறார் اَنْ يُّخْرِجَكُمْ உங்களை வெளியேற்ற مِّنْ இருந்து اَرْضِكُمْ ۚ உங்கள் பூமியிலிருந்து فَمَاذَا ஆகவே என்ன? تَاْمُرُوْنَ கட்டளையிடுகிறீர்கள்
7:110. (அதற்கு, ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)
7:110. (அதற்கு ஃபிர்அவ்ன்) ‘‘இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?'' (என்று கேட்டான்.)
7:110. உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்றிவிட இவர் நினைக்கிறார். இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்” என்று தமக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
7:110. “அவர் உங்களை உங்களுடைய பூமியிலிருந்து (நாட்டிலிருந்து) வெளியேற்றிவிட நாடுகிறார், ஆகவே, இதைப்பற்றி நீங்கள் எதைக் கட்டளையிடுகிறீர்கள்” (என்று ஃபிர் அவன் கேட்டான்.)
7:111 قَالُوْآ اَرْجِهْ وَاَخَاہُ وَاَرْسِلْ فِی الْمَدَآٮِٕنِ حٰشِرِیْنَ ۙ
قَالُوْآ கூறினார்கள் اَرْجِهْ தவணை கொடு/அவருக்கு وَاَخَاہُ இன்னும் அவருடைய சகோதரருக்கு وَاَرْسِلْ இன்னும் அனுப்பு فِی الْمَدَآٮِٕنِ நகரங்களில் حٰشِرِیْنَ ۙ ஒன்றுதிரட்டுபவர்களை
7:111. அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!
7:111. அதற்கவர்கள் ‘‘அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டிணங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பிவை.
7:111. பிறகு அவர்கள் எல்லாரும் (ஃபிர்அவ்னுக்கு) ஆலோசனை கூறினார்கள்: “இவரையும் இவருடைய சகோதரரையும் சற்று நிறுத்தி வையுங்கள்! எல்லா ஊர்களுக்கும் ஆட்களை அனுப்புங்கள்
7:111. அ(தற்கவர்கள், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு, பல பட்டணங்களுக்கு (சூனியக்காரர்களைத்) திரட்டிக் கொண்டு வருபவர்களை அனுப்பி வை” என்று கூறினார்கள்.
7:112 يَاْتُوْكَ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ
يَاْتُوْكَ உம்மிடம் வருவார்கள் بِكُلِّ எல்லோரையும் கொண்டு سٰحِرٍ சூனியக்காரர் عَلِيْمٍ கற்றறிந்தவர்
7:112. “அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
7:112. அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்.
7:112. தேர்ச்சி பெற்ற மந்திரவாதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி உங்களிடம் அழைத்து வருவதற்காக (ஆட்களை எல்லா ஊர்களுக்கும் அனுப்புங்கள்).
7:112. “அவர்கள், நன்கறிந்த ஒவ்வொரு சூனியக்காரரையும் உம்மிடம் (அழைத்துக்) கொண்டு வருவார்கள்”(என்றும் கூறினார்கள்).
7:113 وَجَآءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْۤا اِنَّ لَـنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ
وَجَآءَ வந்தார்(கள்) السَّحَرَةُ சூனியக்காரர்கள் فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் قَالُوْۤا கூறினர் اِنَّ நிச்சயமாக لَـنَا எங்களுக்கு لَاَجْرًا திட்டமாக கூலி اِنْ كُنَّا நாங்கள் ஆகிவிட்டால் نَحْنُ நாங்கள் الْغٰلِبِيْنَ மிகைத்தவர்களாக
7:113. அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.
7:113. (அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் ‘‘(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா?)'' என்று கேட்டனர்.
7:113. அவ்வாறே மந்திரவாதிகள் அனைவரும் ஃபிர்அவ்னிடம் வந்தார்கள். “நாங்கள் வெற்றி பெற்றால் அதற்கான வெகுமதி எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் அல்லவா?” என்று கேட்டார்கள்.
7:113. (அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர் அவ்னிடம் வந்து” நாங்கள் (மூஸாவை) வென்றவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டா?” என்று கேட்டனர்.
7:114 قَالَ نَـعَمْ وَاِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِيْنَ
قَالَ கூறினான் نَـعَمْ ஆம்! وَاِنَّكُمْ இன்னும் நிச்சயமாக நீங்கள் لَمِنَ الْمُقَرَّبِيْنَ நெருக்கமானவர்களில்
7:114. அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”
7:114. அதற்கவன் ‘‘ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு.) மேலும், நிச்சயமாக நீங்கள் (நம் அரசவையிலும் எனக்கு) மிக்க நெருங்கியவர்களாக இருப்பீர்கள்'' என்றும் கூறினான்.
7:114. அதற்கு ஃபிர்அவ்ன், “ஆம்! மேலும், திண்ணமாக நீங்கள் அரசவையில் நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்று பதிலுரைத்தான்.
7:114. அதற்கவன், “ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு) மேலும், நிச்சயமாக நீங்கள் (எம் சபையில் எமக்கு மிக்க) நெருக்கமாக்கப்பட்டவர்களிலுமிருப்பீர்கள் என்று கூறினான்.
7:115 قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِيْنَ
قَالُوْا கூறினார்கள் يٰمُوْسٰٓى மூஸாவே! اِمَّاۤ اَنْ تُلْقِىَ நீர் எறிகிறீரா? وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ அவர்கள் நாங்கள் இருக்கவா? نَحْنُ நாங்களே الْمُلْقِيْنَ எறிபவர்களாக
7:115. “மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
7:115. (பின்னர், அச்சூனியக்காரர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (முதலில் உமது தடியை) நீங்கள் எறிகிறீரா? அல்லது நாம் எறிவதா?'' என்று கேட்டனர்.
7:115. பிறகு அவர்கள் மூஸாவிடம் கேட்டார்கள்: “நீர் எறிகிறீரா அல்லது நாங்கள் எறியட்டுமா?”
7:115. (பின்னர் அச்சூனியக்காரர்கள்) “மூஸாவே (முதலில்) நீர் போடுகிறீரா? அல்லது (முதலில்) போடுபவர்களாக நாங்கள் இருக்கட்டுமா?” என்று கேட்டனர்.
7:116 قَالَ اَلْقُوْا ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِيْمٍ
قَالَ கூறினார் اَلْقُوْا ۚ எறியுங்கள் فَلَمَّاۤ اَلْقَوْا அவர்கள் எறிந்தபோது سَحَرُوْۤا மயக்கினார்கள் اَعْيُنَ கண்களை النَّاسِ மக்களுடைய وَاسْتَرْهَبُوْ இன்னும் திடுக்கிடச் செய்தனர் هُمْ அவர்களை وَجَآءُوْ இன்னும் வந்தனர் بِسِحْرٍ ஒரு சூனியத்தைக்கொண்டு عَظِيْمٍ பெரியது
7:116. அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.
7:116. அதற்கு மூஸா ‘‘நீங்களே (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்.
7:116. அதற்கு மூஸா, “நீங்களே எறியுங்கள்!” என்று கூறினார். அவர்கள் (தம்முடைய மந்திர சாதனங்களை) எறிந்தபோது (அவற்றின் மூலம்) மக்களின் கண்களை மயக்கி அவர்களைப் பீதிகொள்ளச் செய்தார்கள்; இவ்வாறு மாபெரும் சூனியத்தைச் செய்து காட்டினார்கள்.
7:116. (அதற்கு) மூஸா “நீங்கள் (முதலில்) போடுங்கள்” என்று கூறினார்; அவ்வாறு அவர்கள் (தங்களது கைத்தடிகளை) போட்டபோது அதனால் மனிதர்களுடைய கண்களை(க் கட்டி) சூனியம் செய்தனர், அவர்களைத் திடுக்கிடும்படியும் செய்துவிட்டனர், இன்னும் மகத்தான சூனியத்தை அவர்கள் கொண்டு வந்து விட்டனர்.
7:117 وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَلْقِ عَصَاكَ ۚ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ ۚ
وَاَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى மூஸாவிற்கு اَنْ اَلْقِ எறிவீராக என்று عَصَاكَ ۚ உம் தடியை فَاِذَا هِىَ تَلْقَفُ அப்போது அது விழுங்கிவிட்டது مَا எவற்றை يَاْفِكُوْنَ போலியாக செய்வார்கள்
7:117. அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
7:117. அதுசமயம் நாம் ‘‘மூஸாவே! நீர் உமது தடியை எறிவீராக'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது.
7:117. “நீர் உமது கைத்தடியைப் போடும்!” என்று நாம் மூஸாவுக்கு அறிவித்தோம். அவர் அதனைக் கீழே போட்டதும் அது அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் (நொடிப் பொழுதில்) விழுங்கி விட்டது!
7:117. (அது சமயம்) நாம், “மூஸாவுக்கு நீர் உம்முடைய கைத்தடியை போடும்)” என்றும் வஹீ அறிவித்தோம், (அவ்வாறு அவர் போடவே,) உடனே அது (பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்தவற்றை விழுங்கிவிட்டது.
7:118 فَوَقَعَ الْحَـقُّ وَبَطَلَ مَا كَانُوْا يَعْمَلُوْنَۚ
فَوَقَعَ நிகழ்ந்தது الْحَـقُّ உண்மை وَبَطَلَ பொய்ப்பித்தது مَا كَانُوْا يَعْمَلُوْنَۚ அவர்கள் செய்து கொண்டிருந்தது
7:118. இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.
7:118. இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று.
7:118. இவ்வாறு சத்தியம், சத்தியம்தான் என்று உறுதியாயிற்று. அவர்கள் செய்தவை யாவும் வீணாகி விட்டன.
7:118. ஆகவே, உண்மை வெளிப்பட்டு விட்டது, அவர்கள் செய்து கொண்டிருந்தவை (யாவும்) வீணாகியும் விட்டது.
7:119 فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِيْنَۚ
فَغُلِبُوْا ஆகவே தோற்கடிக்கப்பட்டனர் هُنَالِكَ அங்கே وَانْقَلَبُوْا இன்னும் திரும்பினர் صٰغِرِيْنَۚ இழிவானவர்களாக
7:119. அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.
7:119. ஆகவே, (கர்வம் கொண்டிருந்த) அவர்கள், அங்கு தோல்வியுற்று சிறுமைப்பட்ட வர்களாக மாறினார்கள்.
7:119. (ஃபிர்அவ்னும்) அவனுடைய நண்பர்களும் (வெற்றிவாகை சூடுவதற்குப் பதிலாக) இழிவை அடைந்தார்கள். அங்கே (போட்டி அரங்கில்) முறியடிக்கப்பட்டார்கள்.
7:119. ஆகவே, (கர்வங்கொண்டிருந்த) அவர்கள் அங்கேயே வெற்றி கொள்ளப்பட்டனர், அவர்கள் சிறுமையடைந்தவர்களாகவும் திரும்பினார்கள்.,
7:120 وَ اُلْقِىَ السَّحَرَةُ سٰجِدِيْنَ ۙ
وَ اُلْقِىَ தள்ளப்பட்டனர் السَّحَرَةُ சூனியக்காரர்கள் سٰجِدِيْنَ ۙ சிரம் பணிந்தவர்களாக
7:120. அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து:
7:120. அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து விழுந்தனர்,
7:120. மேலும், அந்த மந்திரவாதிகளின் நிலை என்னவாயிற்று எனில், ஏதோ ஓர் உள்ளுணர்வு அவர்களை ஸஜ்தாவில் வீழ்த்தியது;
7:120. அன்றியும், அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (க்கீழே) வீழ்த்தப்பட்டனர்.
7:121 قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَ ۙ
قَالُوْۤا கூறினார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِرَبِّ இறைவனை الْعٰلَمِيْنَ ۙ அகிலத்தார்களின்
7:121. “அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;
7:121. ‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்'' என்று கூறினார்கள்.
7:121. அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அகிலங்களின் அதிபதியை!
7:121. “அகிலத்தாரின் இரட்சகனை நாங்கள் ஈமான்(விசுவாசம்) கொண்டுவிட்டோம்” என்று கூறினார்கள்.
7:122 رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ
رَبِّ இறைவனான مُوْسٰى மூஸா وَهٰرُوْنَ இன்னும் ஹாரூனுடைய
7:122. “அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
7:122. மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் (நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்.)
7:122. மூஸா மற்றும் ஹாரூனின் அதிபதியை!”
7:122. (அவனே) மூஸாவிற்கும், ஹாரூனுக்கும் இரட்சகன்” (என்று கூறினார்கள்.)
7:123 قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْۚ اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِى الْمَدِيْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَاۤ اَهْلَهَا ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ
قَالَ கூறினான். فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டீர்கள் بِهٖ அவரை قَبْلَ முன்னர் اَنْ اٰذَنَ நான் அனுமதியளிப்பதற்கு لَـكُمْۚ உங்களுக்கு اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَمَكْرٌ சூழ்ச்சிதான் مَّكَرْتُمُوْهُ சூழ்ச்சிசெய்தீர்கள்/அதை فِى الْمَدِيْنَةِ நகரத்தில் لِتُخْرِجُوْا நீங்கள் வெளியேற்றுவதற்காக مِنْهَاۤ அதிலிருந்து اَهْلَهَا ۚ அதில் வசிப்போரை فَسَوْفَ تَعْلَمُوْنَ அறிவீர்கள்
7:123. அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) “உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!
7:123. அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
7:123. ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பே நீங்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? திண்ணமாக, இந்தத் தலைநகரில் நீங்கள் மேற் கொண்ட சூழ்ச்சியாகும் இது; இங்குள்ள ஆட்சியாளர்களை இங்கிருந்து நீங்கள் வெளியேற்ற வேண்டுமென்பதற்காக! விரைவில் (இதன் விளைவை) நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
7:123. (அதற்கு) ஃபிர் அவ்ன், “உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் (மூஸா, ஹாரூனுடைய இரட்சகனாகிய) அவனை விசுவாசங்கொண்டு விட்டீர்கள்? நிச்சயமாக இது ஒரு சதியாகும், இந்நகரத்தில் அதற்குரியவர்களை அதிலிருந்து நீங்கள் வெளியேற்றுவதற்காக இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள், ஆகவே, (இச்சதியின் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறினான்.
7:124 لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَ
لَاُقَطِّعَنَّ நிச்சயமாக வெட்டுவேன் اَيْدِيَكُمْ உங்கள் கைகளை وَاَرْجُلَكُمْ இன்னும் உங்கள் கால்களை مِّنْ خِلَافٍ மாறாக ثُمَّ பிறகு لَاُصَلِّبَنَّكُمْ நிச்சயமாக கழுமரத்தில் அறைவேன்/உங்களை اَجْمَعِيْنَ அனைவரையும்
7:124. “நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்” என்று கூறினான்.
7:124. நிச்சயமாக நான் உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.
7:124. திண்ணமாக, நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் ஏற்றிவிடுவேன்.”
7:124. “நிச்சயமாக நான் உங்களுடைய கைகளையும் உங்களுடைய கால்களையும் மாறாக (ஒருபக்கத்துக் காலையும் மறுபக்கத்துக் கையையும்) துண்டித்து விடுவேன், அதன்பின் உங்கள் யாவரையும் கழுவேற்றுவேன்” என்று கூறினான்.
7:125 قَالُـوْۤا اِنَّاۤ اِلٰى رَبِّنَا مُنْقَلِبُوْنَۚ
قَالُـوْۤا கூறினர் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلٰى رَبِّنَا எங்கள் இறைவனிடம் مُنْقَلِبُوْنَۚ திரும்பக்கூடியவர்கள்
7:125. அதற்கு அவர்கள்: “(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம் (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.
7:125. அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)'' என்று கூறினார்கள்.
7:125. அவர்கள் பதில் கூறினார்கள்: “(எவ்வாறாயினும்) நாங்கள் எங்கள் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்.
7:125. அ(தற்க)வர்கள் (அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனின்பால் திரும்பிச் செல்லக் கூடியவர்கள், (அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.
7:126 وَمَا تَـنْقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاٰيٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ
وَمَا تَـنْقِمُ நீ பழிக்கவில்லை مِنَّاۤ எங்களை اِلَّاۤ தவிர اَنْ اٰمَنَّا என்பதற்காக / நம்பிக்கை கொண்டோம் بِاٰيٰتِ அத்தாட்சிகளை رَبِّنَا எங்கள் இறைவனின் لَمَّا போது جَآءَتْنَا ؕ வந்தன/எங்களிடம் رَبَّنَاۤ எங்கள் இறைவா اَفْرِغْ இறக்கு عَلَيْنَا எங்கள் மீது صَبْرًا பொறுமையை وَّتَوَفَّنَا கைப்பற்று/எங்களை مُسْلِمِيْنَ முஸ்லிம்களாக
7:126. “எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்.)
7:126. ‘‘இன்னும், எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!'' (என்று பிரார்த்தித்தார்கள்.)
7:126. எங்கள் இறைவனுடைய சான்றுகள் எங்களிடம் வந்துவிட்டன; அவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம் எனும் காரணத்திற்காகத்தான் நீ எங்களை பழிவாங்க நாடுகிறாய்! எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறு மையை அருள்வாயாக! மேலும், உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையிலேயே எங்களை மரணிக்கச் செய்வாயாக!”
7:126. எங்கள் இரட்சகனின் அத்தாட்சிகளை-அவை எங்களிடம் வந்தபோது நாங்கள் ஈமான் கொண்டுவிட்டோம் என்பதற்கல்லாது நீ எங்களைத் தண்டிக்கவில்லை (என்று கூறிவிட்டு,) எங்கள் இரட்சகனே! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! இன்னும் (உனக்கு) முற்றிலும் கீழ்ப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) நீ எங்க(ள் உயிர்)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
7:127 وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰى وَقَوْمَهٗ لِيُفْسِدُوْا فِى الْاَرْضِ وَيَذَرَكَ وَاٰلِهَتَكَ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْىٖ نِسَآءَهُمْ ۚ وَاِنَّا فَوْقَهُمْ قَاهِرُوْنَ
وَقَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் مِنْ قَوْمِ சமுதாயத்திலிருந்து فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய اَتَذَرُ நீ விட்டுவிடப்போகிறாயா? مُوْسٰى மூஸாவை وَقَوْمَهٗ இன்னும் அவருடைய சமுதாயத்தை لِيُفْسِدُوْا அவர்கள் விஷமம் செய்வதற்கு فِى الْاَرْضِ பூமியில் وَيَذَرَكَ இன்னும் விட்டுவிடுவதற்கு/உன்னை وَاٰلِهَتَكَ ؕ இன்னும் உன் தெய்வங்களை قَالَ கூறினான் سَنُقَتِّلُ கொன்று குவிப்போம் اَبْنَآءَ ஆண் பிள்ளைகளை هُمْ அவர்களுடைய وَنَسْتَحْىٖ இன்னும் வாழவிடுவோம் نِسَآءَهُمْ ۚ அவர்களுடைய பெண் (பிள்ளை)களை وَاِنَّا நிச்சயமாக நாம் فَوْقَهُمْ அவர்களுக்கு மேல் قَاهِرُوْنَ ஆதிக்கம் வகிப்பவர்கள்
7:127. அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.
7:127. அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?'' என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கிறோம். (ஆகவே, நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)'' என்று கூறினான்.
7:127. ஃபிர்அவ்னின் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (ஃபிர்அவ்னிடம்) கேட்டார்கள்: “பூமியில் குழப்பம் விளைவிப்பதற்காகவும் உமக்கும் உம்முடைய கடவுள்களுக்கும் பணிந்து வாழ்வதைக் கைவிட்டு விடுவதற்குமா மூஸாவையும் அவருடைய சமூகத்தாரையும் நீர் விட்டு வைக்கின்றீர்?” அதற்கு ஃபிர்அவ்ன் பதிலளித்தான்: “நாம் அவர்களுடைய ஆண்மக்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பெண்மக்களை (மட்டும்) உயிர் வாழ விடுவோம். திண்ணமாக, அவர்கள் மீது நம்முடைய ஆதிக்கம் வலுவாக இருக்கிறது.”
7:127. இன்னும், ஃபிர் அவ்னுடைய சமூகப்பிரதானிகள் (ஃபிர் அவ்னிடம்), “மூஸாவையும் அவருடைய சமூகத்தாரையும் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும், உம் தெய்வங்களையும் (புறக்கணித்து) விட்டுவிடுவதற்காகவும் நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள், அ(தற்க)வன், “(அன்று) அவர்களுடைய ஆண்மக்களை வெட்டிக் கொன்று விடுவோம், அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவும் விடுவோம், இன்னும் நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள்” என்று கூறினான்.
7:128 قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا ۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ يُوْرِثُهَا مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ
قَالَ கூறினார் مُوْسٰى மூஸா لِقَوْمِهِ தன் சமுதாயத்திற்கு اسْتَعِيْنُوْا உதவி தேடுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்விடம் وَاصْبِرُوْا ۚ இன்னும் பொறுத்திருங்கள் اِنَّ நிச்சயமாக الْاَرْضَ பூமி لِلّٰهِ ۙ அல்லாஹ்வுக்குரியதே يُوْرِثُهَا வாரிசாக்குவான்/அதற்கு مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் مِنْ عِبَادِهٖ ؕ தன் அடியார்களில் وَالْعَاقِبَةُ முடிவு لِلْمُتَّقِيْنَ அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே
7:128. மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.
7:128. (அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்'' என்று கூறினார்.
7:128. மூஸா, தம் மக்களை நோக்கிக் கூறினார்: “அல்லாஹ்விடம் உதவி கோருங்கள்; மேலும், பொறுமையை மேற்கொள்ளுங்கள்! திண்ணமாக, இந்த பூமி அல்லாஹ்வுக்கு உரியது. தன் அடிமைகளில் தான் நாடுவோரை அதற்கு அவன் உரிமையாக்குகிறான். இன்னும் அவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்பவர்களுக்கே இறுதி வெற்றி இருக்கிறது.”
7:128. (அதற்கு) மூஸா தன் சமூகத்தாரிடம், “நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், இன்னும், பொறுமையாகவுமிருங்கள், சகித்திருங்கள், நிச்சயமாக இந்தப் பூமி அல்லாஹ்வுக்கே உரியது, இதனை அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு (உரிமைப்படுத்தி) அனந்தரமாக்கி விடுவான், (நல்ல) முடிவு (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்களுக்கே” என்று கூறினார்.
7:129 قَالُـوْۤا اُوْذِيْنَا مِنْ قَبْلِ اَنْ تَاْتِيَنَا وَمِنْۢ بَعْدِ مَا جِئْتَنَا ؕ قَالَ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى الْاَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُوْنَ
قَالُـوْۤا கூறினர் اُوْذِيْنَا துன்புறுத்தப்பட்டோம் مِنْ قَبْلِ முன்னர் اَنْ تَاْتِيَنَا நீர் வருவதற்கு / எங்களிடம் وَمِنْۢ بَعْدِ இன்னும் பின்னர் مَا جِئْتَنَا ؕ நீர்வந்தது/எங்களிடம் قَالَ கூறினார் عَسٰى கூடும் رَبُّكُمْ உங்கள் இறைவன் اَنْ يُّهْلِكَ அவன் அழித்து عَدُوَّكُمْ எதிரிகளை/உங்கள் وَيَسْتَخْلِفَكُمْ இன்னும் அதிபதிகளாக்க/உங்களை فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرَ கவனிப்பான் كَيْفَ எவ்வாறு تَعْمَلُوْنَ செய்கிறீர்கள்
7:129. “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் (துன்பப்பட்டோம்;) நீர் வந்த பின்னரும் துன்பப்படுகிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவர் கூறினார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவர்களை அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான்.”
7:129. (அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகிறோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) ‘‘உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்கள் நடத்தை எவ்வாறு இருக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கிறான்'' என்று கூறினார்.
7:129. அதற்கு மூஸாவின் சமுதாயத்தார் கூறினார்கள்: “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டோம். இப்போது, எங்களிடம் நீர் வந்த பின்பும் (துன்புறுத்தப்பட்டு வருகின்றோம்).” அதற்கு மூஸா பதிலுரைத்தார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவனை அழித்துவிட்டு, இப்பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக்கி நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதைப் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது.”
7:129. (அதற்கு மூஸாவுடைய சமூகத்தார் அவரிடம்,) “நீர் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம், நீர் வந்ததன் பின்னரும் துன்புறுத்தப்பட்டே வருகின்றோம்.,) என்று அவர்கள் கூறினார்கள், (அதற்கு மூஸா,) உங்களுடைய இரட்சகன் உங்களுடைய விரோதிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும், அப்பால் நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதைக் கவனிப்பான் என்று கூறினார்.
7:130 وَلَقَدْ اَخَذْنَاۤ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِيْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக اَخَذْنَاۤ பிடித்தோம், சோதித்தோம், தண்டித்தோம், اٰلَ குடும்பத்தாரை فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய بِالسِّنِيْنَ பஞ்சங்களாலும் وَنَقْصٍ இன்னும் குறைத்து مِّنَ الثَّمَرٰتِ கனிகளை لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
7:130. பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.
7:130. பின்னர், ஃபிர்அவ்னுடைய மக்களைப் பஞ்சத்தைக் கொண்டும் (அவர்களுடைய விவசாய) விளைச்சல்களில் நஷ்டத்தைக் கொண்டும் தண்டித்தோம். (இதனால்) அவர்கள் நல்லுணர்ச்சிப் பெற்றிருக்கலாம்.
7:130. ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பல ஆண்டுகளாய் நீடித்த பஞ்சத்தினாலும், விளைபொருள் குறைவினாலும் சோதித்தோம்; அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும் என்பதற்காக!
7:130. மேலும், ஃபிர் அவ்னைச் சார்ந்தவர்களை-அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக பஞ்சங்களைக் கொண்டும், காய்கனிப் பொருள்களில் குறைவைக் கொண்டும் திட்டமாக நாம் பிடித்தோம்.
7:131 فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَـنَا هٰذِهٖ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّطَّيَّرُوْا بِمُوْسٰى وَمَنْ مَّعَهٗ ؕ اَلَاۤ اِنَّمَا طٰٓٮِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ
فَاِذَا جَآءَتْهُمُ அவர்களுக்குவந்தால் الْحَسَنَةُ இன்பம் قَالُوْا கூறுவார்கள் لَـنَا எங்களுக்கு هٰذِهٖ ۚ இது وَاِنْ تُصِبْهُمْ அவர்களை அடைந்தால் سَيِّئَةٌ ஒரு துன்பம் يَّطَّيَّرُوْا துர்ச்சகுணமாக எண்ணுவார்கள் بِمُوْسٰى மூஸாவையும் وَمَنْ இன்னும் எவர்கள் مَّعَهٗ ؕ அவருடன் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّمَا எல்லாம் طٰٓٮِٕرُهُمْ துர்ச்சகுணம்/அவர்களுடைய عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம்தான் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
7:131. அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், “அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்” என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்: அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
7:131. எனினும் அவர்களோ, அவர்களுக்கு (ஒரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது)தான் வந்தது என்றும், ஒரு தீங்கேற்படும் சமயத்தில் ‘‘(இது எங்களுக்கு வரவேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது'' என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.
7:131. ஆனால் (அவர்களின் நிலை எவ்வாறிருந்ததெனில்) அவர்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டால், “நாங்கள் இதற்கு உரியவர்கள்தாம்!” என்று கூறுவார்கள்; அவர்களுக்கு கெட்டகாலம் ஏற்பட்டு விட்டாலோ மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாய்க் கருதுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்: உண்மையில் அவர்களுடைய அபசகுனம் அல்லாஹ்விடமே இருக்கிறது. ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாயிருந்தார்கள்.
7:131. பின்னர், அவர்களுக்கு (யாதொரு) நன்மை வருமானால், இது எங்களுக்கே உரியது எனக் கூறுகிறார்கள், மேலும், அவர்களுக்கு தீமை ஏற்படுமானால், மூஸாவையும், அவருடனிருப்பவர்களையும் (கொண்டு ஏற்பட்ட)துர்ச்சகுனம் என்பார்கள், அவர்களுடைய துர்ச்சகுனமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (வந்து) உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள், எனினும், அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துகொள்வதில்லை.
7:132 وَقَالُوْا مَهْمَا تَاْتِنَا بِهٖ مِنْ اٰيَةٍ لِّـتَسْحَرَنَا بِهَا ۙ فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِيْنَ
وَقَالُوْا இன்னும் கூறினார்கள் مَهْمَا எவ்வளவோ تَاْتِنَا எங்களிடம் வந்தாலும் بِهٖ அதைக் கொண்டு مِنْ اٰيَةٍ அத்தாட்சியை لِّـتَسْحَرَنَا நீர் எங்களை ஏமாற்றுவதற்காக, திசை திருப்புவதற்காக بِهَا ۙ அதன் மூலம் فَمَا نَحْنُ நாங்கள் இல்லை لَكَ உம்மை بِمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொள்பவர்களாக
7:132. அவர்கள் மூஸாவிடம், “நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.
7:132. இன்னும், அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை எங்கள் முன் செய்த போதிலும் நாங்கள் உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள்.
7:132. அவர்கள் (மூஸாவிடம்) கூறினார்கள்: “நீர் எங்களைக் கவர்ந்திழுப்பதற்காக எந்தச் சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தாலும், நாங்கள் நீர் கூறுவதை ஏற்றுக்கொள்பவர்களாய் இல்லை.”
7:132. அன்றியும், அவர்கள் (மூஸாவிடம்)” அவற்றின் மூலம் நீர் எங்களை வசியப்படுத்துவதற்காக எவ்வளவு (அற்புதமான) அத்தாட்சியை நீர் (எங்களுக்குக்) கொண்டுவந்த போதிலும், நாங்கள் உம்மை விசுவாசிக்கக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.
7:133 فَاَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوْفَانَ وَالْجَـرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰيٰتٍ مُّفَصَّلٰتٍ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ
فَاَرْسَلْنَا ஆகவே அனுப்பினோம் عَلَيْهِمُ அவர்கள் மீது الطُّوْفَانَ புயல் காற்றை وَالْجَـرَادَ இன்னும் வெட்டுக்கிளிகளை وَالْقُمَّلَ இன்னும் பேன்களை وَالضَّفَادِعَ இன்னும் தவளைகளை وَالدَّمَ இன்னும் இரத்தத்தை اٰيٰتٍ அத்தாட்சிகளாக مُّفَصَّلٰتٍ தெளிவானவை فَاسْتَكْبَرُوْا அவர்கள் பெருமையடித்தனர் وَكَانُوْا இன்னும் இருந்தனர் قَوْمًا மக்களாக مُّجْرِمِيْنَ குற்றம் புரிகின்றவர்கள்
7:133. ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
7:133. ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பிவைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள்.
7:133. இறுதியில் நாம் அவர்கள் மீது புயல் மழையை அனுப்பினோம்; மேலும், வெட்டுக்கிளியை ஏவினோம்; பேன்களைப் பரப்பினோம்; தவளைகளைப் பெருகச் செய்தோம்; இரத்தத்தைப் பொழியச் செய்தோம். இந்தச் சான்றுகள் அனைத்தையும் தனித்தனியே காண்பித்தோம். ஆயினும், அவர்கள் ஆணவம் கொண்டு நடந்தனர்; கொடூர குற்றவாளிகளாகவும் இருந்தனர்.
7:133. ஆகவே. அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகியவற்றை தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பி வைத்தோம், (இதன் பின்னரும்) அவர்கள் கர்வங்கொண்டார்கள், குற்றம் செய்யும் சமூகத்தாராகவும் அவர்கள் இருந்தார்கள்.
7:134 وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوْا يٰمُوْسَى ادْعُ لَـنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَۚ لَٮِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَـنُؤْمِنَنَّ لَكَ وَلَـنُرْسِلَنَّ مَعَكَ بَنِىْۤ اِسْرَآءِيْلَۚ
وَلَمَّا போது وَقَعَ நிகழ்ந்தது عَلَيْهِمُ அவர்கள் மீது الرِّجْزُ வேதனை قَالُوْا கூறினர் يٰمُوْسَى மூஸாவே! ادْعُ பிரார்த்திப்பீராக لَـنَا எங்களுக்காக رَبَّكَ உம் இறைவனிடம் بِمَا عَهِدَ அவன் வாக்குறுதி கொடுத்ததைக் கொண்டு عِنْدَكَۚ உம்மிடம் لَٮِٕنْ كَشَفْتَ நீர் நீக்கினால் عَنَّا எங்களை விட்டு الرِّجْزَ வேதனையை لَـنُؤْمِنَنَّ நிச்சயமாக நம்பிக்கைகொள்வோம் لَكَ உம்மை وَلَـنُرْسِلَنَّ நிச்சயமாக அனுப்புவோம் مَعَكَ உம்முடன் بَنِىْۤ اِسْرَآءِيْلَۚ இஸ்ரவேலர்களை
7:134. தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் “மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்” என்று கூறினார்கள்.
7:134. அவர்கள் மீது (இவற்றில் ஒரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! உம் இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இந்த சிரமத்தை நீக்கும்படி) நமக்காக நீர் பிரார்த்தனை செய்யுங்கள். நமது சிரமத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உம்முடன் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறுவார்கள்.
7:134. (எப்பொழுதேனும்) அவர்களுக்குத் துன்பம் நேர்ந்தால், அவர்கள் கூறுவார்கள்: “மூஸாவே! உம்முடைய இறைவனிடம் உமக்கு அவன் அளித்துள்ள அந்தஸ்தைக் கொண்டு எங்களுக்காக நீர் பிரார்த்தனை புரியும்; எங்களை விட்டு இத்துன்பத்தை நீர் நீக்கச் செய்தால், திண்ணமாக, நாங்கள் உம் கூற்றை ஏற்றுக்கொள்வோம்; இஸ்ராயீலின் வழித்தோன்றல்களையும் உம்முடன் அனுப்பி வைப்போம்.”
7:134. அவர்களின் மீது (வானத்திலிருந்து) வேதனை வரும் போதெல்லாம் அவர்கள் (மூஸாவிடம்) “மூஸாவே! உமதிரட்சகனிடம் அவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின் பிரகாரம், (இக்கஷ்டத்தை நீக்கும்படி) எங்களுக்காக நீர் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ்வேதனையை நீர் நீக்கிவிட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மை விசுவாசித்து,இஸ்ராயீலின் மக்களையும் நாம் உம்முடன் அனுப்பி விடுவோம்” என்றும் கூறினார்கள்.
7:135 فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ اِلٰٓى اَجَلٍ هُمْ بٰلِغُوْهُ اِذَا هُمْ يَنْكُثُوْنَ
فَلَمَّا போது كَشَفْنَا நீக்கினோம் عَنْهُمُ அவர்களை விட்டு الرِّجْزَ வேதனையை اِلٰٓى வரை اَجَلٍ ஒரு தவணை هُمْ அவர்கள் بٰلِغُوْهُ அடைபவர்கள்/அதை اِذَا அப்போது هُمْ அவர்கள் يَنْكُثُوْنَ முறித்து விடுகின்றனர்
7:135. அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.
7:135. நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறுசெய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும்வரை (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர்.
7:135. ஆயினும், எந்த நிலையிலும் அவர்கள் அடையவிருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களை விட்டு வேதனையை நாம் நீக்கிவிட்டாலோ உடனே அவர்கள் (தம் வாக்குறுதியை) முறித்துவிடுகின்றார்கள்.
7:135. ஆகவே, அதை அவர்கள் சென்றடையும் ஒரு தவணை வரை அவர்களைவிட்டும் வேதனையை நாம் நீக்கியபொழுது, அச்சமயம் அவர்கள் (தாம் அளித்த வாக்குறுதியை) முறித்து விடுகின்றனர்.
7:136 فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِى الْيَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ
فَانْتَقَمْنَا ஆகவே பழி தீர்த்தோம் مِنْهُمْ அவர்களிடம் فَاَغْرَقْنٰهُمْ ஆகவே மூழ்கடித்தோம்/அவர்களை فِى الْيَمِّ கடலில் بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் அத்தாட்சிகளை وَكَانُوْا இன்னும் இருந்தனர் عَنْهَا அவற்றை விட்டு غٰفِلِيْنَ கவனமற்றவர்களாக
7:136. ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.
7:136. ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவற்றைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம்.
7:136. ஆகையால் அவர்களை நாம் பழிவாங்கினோம்; மேலும், கடலிலே அவர்களை மூழ்கடித்தோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள்; மேலும், அவற்றைக் குறித்து அலட்சியமாகவும் இருந்தார்கள்.
7:136. ஆகவே, நிச்சயமாக அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யாக்கி (அவற்றைப் பொருட்படுத்தாது) மறதியாளர்களாகவும், அவர்கள் இருந்ததன் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம், (அப்போது) அவர்களைக் கடலில் மூழ்கடித்தும் விட்டோம்.
7:137 وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِيْنَ كَانُوْا يُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا ؕ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰى عَلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙ بِمَا صَبَرُوْا ؕ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا يَعْرِشُوْنَ
وَاَوْرَثْنَا வாரிசாக்கினோம் الْقَوْمَ சமுதாயத்தை الَّذِيْنَ எவர்கள் كَانُوْا இருந்தனா் يُسْتَضْعَفُوْنَ பலவீனமாகக் கருதப்படுவர் مَشَارِقَ கிழக்குப்பகுதிகளுக்கு الْاَرْضِ பூமியின் وَمَغَارِبَهَا இன்னும் மேற்குப் பகுதிகளுக்கு الَّتِىْ எது بٰرَكْنَا அருள் வளம் புரிந்தோம் فِيْهَا ؕ அதில் وَتَمَّتْ இன்னும் முழுமையடைந்தது كَلِمَتُ வாக்கு رَبِّكَ உம் இறைவனின் الْحُسْنٰى மிக அழகியது عَلٰى மீது بَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙ இஸ்ரவேலர்கள் بِمَا صَبَرُوْا ؕ அவர்கள் பொறுத்ததால் وَدَمَّرْنَا இன்னும் நாசப்படுத்தினோம் مَا எவற்றை كَانَ இருந்தான் يَصْنَعُ செய்வான் فِرْعَوْنُ ஃபிர்அவ்னும் وَقَوْمُهٗ இன்னும் அவனுடைய சமுதாயமும் وَمَا இன்னும் எவற்றை كَانُوْا இருந்தனர் يَعْرِشُوْنَ உயர்த்திக் கட்டுவார்கள்
7:137. எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
7:137. இன்னும், எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகங்களையும், மேற்குப் பாகங்களையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்ல விதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
7:137. பிறகு (இவர்களுக்குப் பதிலாக) பலவீனமாக்கப்பட்டிருந்த மக்களை, நம்மால் அருள்வளமாக்கப்பட்ட பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும் மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசுகளாக்கினோம். (இவ்வாறாக) உம் இறைவனின் சிறப்பான வாக்குறுதி இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஏனென்றால், அவர்கள் பொறுமையை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், ஃபிர்அவ்னும், அவனுடைய கூட்டத்தாரும் உருவாக்கியிருந்தவற்றையும், உயர்த்திக் கட்டியிருந்தவற்றையும் நாம் பாழாக்கி விட்டோம்.
7:137. இன்னும், பலமற்றவர்கள் எனக் கருதப்பட்டிருந்தார்களே, அத்தகைய சமூகத்தவரை, எதில் நாம் பெரும்பாக்கியங்களை நல்கியிருந்தோமோ அத்தகைய பூமியில் கிழக்குப்பகுதிகளுக்கும், அதன் மேற்குப்பகுதிகளுக்கும் நாம் வாரிசுகளாக்கினோம், மேலும், இஸ்ராயீலின் மக்கள் மீது (ஃபிர் அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களைப்) பொறுமையுடன் அவர்கள் (சகித்துக்கொண்டு) இருந்ததன் காரணமாக உம் இரட்சகனின் அழகிய வாக்கு பரிபூரணமாகி (நிறைவேறி) விட்டது, மேலும், ஃபிர் அவ்னும், அவனுடைய சமூகத்தாரும் (மாட மாளிகைகளாக) உற்பத்தி செய்திருந்தவைகளையும், (மிக உயர்வாகக்கட்டி) அவர்கள் உயர்த்தியிருந்தவைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
7:138 وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَ تَوْا عَلٰى قَوْمٍ يَّعْكُفُوْنَ عَلٰٓى اَصْنَامٍ لَّهُمْ ۚ قَالُوْا يٰمُوْسَى اجْعَلْ لَّـنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ
وَجَاوَزْنَا கடக்க வைத்தோம் بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ இஸ்ரவேலர்களை الْبَحْرَ கடலை فَاَ تَوْا வந்தனர் عَلٰى அருகில் قَوْمٍ ஒரு சமுதாயத்தின் يَّعْكُفُوْنَ வழிபாட்டுக்காக தங்கியிருக்கின்றனர் عَلٰٓى اَصْنَامٍ சிலைகளுக்கருகில் لَّهُمْ ۚ தங்கள் قَالُوْا கூறினர் يٰمُوْسَى மூஸாவே! اجْعَلْ ஏற்படுத்து لَّـنَاۤ எங்களுக்கு اِلٰهًا வணங்கப்படும் ஒரு கடவுளை كَمَا போல் لَهُمْ அவர்களுக்கு اٰلِهَةٌ ؕ வணங்கப்படும் கடவுள்கள் قَالَ கூறினார் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் قَوْمٌ சமுதாயம் تَجْهَلُوْنَ அறியமாட்டீர்கள்
7:138. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.
7:138. நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
7:138. நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்க வைத்தோம். பின்னர் (அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தபோது) தம் சிலைகள் மீது பக்தி கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை அவர்கள் கடந்து செல்ல நேர்ந்தது. (உடனே) அவர்கள் “மூஸாவே! இம்மக்களுக்கு கடவுள்கள் இருப் பதுபோல் எங்களுக்கும் ஒரு கடவுளை உருவாக்கித் தாரும்!” என்று கூறலானார்கள். அதற்கு மூஸா கூறினார்: “திண்ணமாக, நீங்கள் அறிவில்லாமல் பேசும் கூட்டத்தினராய் இருக்கின்றீர்கள்.
7:138. மேலும், நாம் இஸ்ராயீலின் மக்களைக் கடலைக் கடந்து செல்ல வைத்தோம், (அப்போது) தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் வந்தடைந்தனர், (அப்போது, மூஸாவிடம்,) மூஸாவே! அவர்களுக்கு தெய்வங்கள் இருப்பதைப்போல் எங்களுக்கும் ஒரு தெய்வத்தை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வைப்பீராக!” என்று கூறினார்கள், அதற்கு (மூஸாவாகிய) அவர், நிச்சயமாக நீங்கள் அறியாதவர்களான ஓர் கூட்டத்தினராவீர்கள் என்று கூறினார்.
7:139 اِنَّ هٰٓؤُلَۤاءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِيْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ
اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَۤاءِ இவர்கள் مُتَبَّرٌ அழிக்கப்படக் கூடியது مَّا எது هُمْ அவர்கள் فِيْهِ அதில் وَبٰطِلٌ இன்னும் பொய் مَّا எவை كَانُوْا இருக்கின்றனர் يَعْمَلُوْنَ செய்கிறார்கள்
7:139. “நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது; இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே” (என்றும் கூறினார்).
7:139. (அந்த சிலைவணங்கிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘நிச்சயமாக இந்த மக்கள் இருக்கின்ற மார்க்கம் அழிந்துவிடக்கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு ஒரு பலனையும் அளிக்காது'' என்றும் கூறினார்.)
7:139. இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழிமுறை நிச்சயம் அழிந்து போகக்கூடியதாகும். இவர்கள் செய்து கொண்டிருப்பவை (முற்றிலும்) வீணானவையாகும்.”
7:139. “நிச்சயமாக (விக்கிரக ஆராதனை செய்யும்) இவர்கள் எதில் இருந்து கொண்டிருக்கிறார்களோ அது அழிந்துவிடக் கூடியதும், அவர்கள் எதை செய்து கொண்டிருக்கிறார்களோ அது முற்றிலும் வீணானதேயாகும்” என்று கூறினார்.
7:140 قَالَ اَغَيْرَ اللّٰهِ اَبْغِيْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَـكُمْ عَلَى الْعٰلَمِيْنَ
قَالَ கூறினார் اَغَيْرَ அல்லாததையா? اللّٰهِ அல்லாஹ் اَبْغِيْكُمْ தேடுவேன்/ உங்களுக்கு اِلٰهًا வணங்கப்படும் ஒரு கடவுளாக وَّهُوَ அவனோ فَضَّلَـكُمْ மேன்மைப்படுத்தினான்/உங்களை عَلَى الْعٰلَمِيْنَ உலகத்தார்களைப் பார்க்கிலும்
7:140. “அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்” என்றும் அவர் கூறினார்.
7:140. (தவிர) ‘‘அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கிவைப்பேன்? அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்'' என்றும் அவர் கூறினார்.
7:140. மேலும், மூஸா கூறினார்: “அல்லாஹ்வைத் தவிர வேறொரு கடவுளையா நான் உங்களுக்காகத் தேடுவேன்? உண்மையில் அவனே உங்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மை ஆக்கியுள்ளான்.”
7:140. (தவிர,)” அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இரட்சகனாகத் தேடுவேன்? அவனோ உங்களை அகிலத்தாரை விட மேன்மையாக்கி வைத்துள்ளான்” என்றும் அவர் கூறினார்.
7:141 وَاِذْ اَنْجَيْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَـكُمْ سُوْٓءَ الْعَذَابِ ۚ يُقَتِّلُوْنَ اَبْنَآءَكُمْ وَ يَسْتَحْيُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِىْ ذٰ لِكُمْ بَلَاۤ ءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ
وَاِذْ اَنْجَيْنٰكُمْ சமயம்/காப்பாற்றினோம்/உங்களை مِّنْ இருந்து اٰلِ குடும்பத்தார் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய يَسُوْمُوْنَـكُمْ துன்புறுத்துகின்றனர்/உங்களை سُوْٓءَ الْعَذَابِ ۚ கொடியவேதனையால் يُقَتِّلُوْنَ கொன்றுகுவிப்பார்கள் اَبْنَآءَكُمْ உங்கள் மகன்களை وَ يَسْتَحْيُوْنَ இன்னும் வாழவிடுவார்கள் نِسَآءَكُمْ ؕ உங்கள்பெண்களை وَفِىْ ذٰ لِكُمْ இதில் بَلَاۤ ءٌ சோதனை مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து عَظِيْمٌ பெரியது
7:141. இன்னும் நினைவு கூறுங்கள்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.
7:141. (இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது.
7:141. மேலும் (அல்லாஹ் கூறுகின்றான்:) “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார்களிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனை அளித்துக் கொண்டிருந்தார்கள்; உங்களுடைய ஆண்மக்களைக் கொலை செய்து, உங்களுடைய பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்திருந்தார்கள். மேலும், இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.”
7:141. மேலும், (இஸ்ராயீலின் மக்களே!) பிர் அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றியதை (நீங்கள் நினைத்துப் பாருங்கள்.) அவர்கள் உங்களை கொடிய வேதனையால் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள், அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, உங்கள் பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விட்டும் வந்தார்கள், இதில் உங்களுக்கு உங்கள் இரட்சகனால் மகத்தானதொரு சோதனையும் (ஏற்பட்டு) இருந்தது.
7:142 وَوٰعَدْنَا مُوْسٰى ثَلٰثِيْنَ لَيْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِيْنَ لَيْلَةً ۚ وَقَالَ مُوْسٰى لِاَخِيْهِ هٰرُوْنَ اخْلُفْنِىْ فِىْ قَوْمِىْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيْلَ الْمُفْسِدِيْنَ
وَوٰعَدْنَا வாக்களித்தோம் مُوْسٰى மூஸாவுக்கு ثَلٰثِيْنَ முப்பது لَيْلَةً இரவு(களை) وَّاَتْمَمْنٰهَا இன்னும் முழுமைப்படுத்தினோம்/அதை بِعَشْرٍ பத்து இரவுகளைக் கொண்டு فَتَمَّ ஆகவே முழுமையடைந்தது مِيْقَاتُ குறிப்பிட்ட காலம் رَبِّهٖۤ அவருடைய இறைவனின் اَرْبَعِيْنَ நாற்பது لَيْلَةً ۚ இரவு(களாக) وَقَالَ கூறினார் مُوْسٰى மூஸா لِاَخِيْهِ தன் சகோதரருக்கு هٰرُوْنَ ஹாரூன் اخْلُفْنِىْ நீர் எனக்கு பிரதிநிதியாக இரு فِىْ قَوْمِىْ என் சமுதாயத்தில் وَاَصْلِحْ இன்னும் சீர்திருத்து وَلَا تَتَّبِعْ பின்பற்றாதே سَبِيْلَ பாதையை الْمُفْسِدِيْنَ விஷமிகளுடைய
7:142. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.
7:142. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி ‘‘நீர் எனது மக்களிடையே என் இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துவீராக. மேலும், விஷமிகளுடைய வழியை நீர் பின்பற்றாதீர்'' என்று கூறினார்.
7:142. நாம் மூஸாவுக்கு முப்பது இரவுகளை (நாட்களை) வாக்களித்(து சினாய் மலைக்கு அழைத்)தோம். பிறகு அவற்றோடு பத்து இரவுகளை அதிகப்படுத்தினோம். இவ்வாறு, நாற்பது இரவுகள் என்று அவருடைய இறைவன் நிர்ணயித்த தவணை முழுமை அடைந்தது. மூஸா (சினாய் மலைக்குச் சென்றபோது) தம் சகோதரர் ஹாரூனிடம், “நான் சென்ற பிறகு நீர் என்னுடைய கூட்டத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, சீராகச் செயல் புரிந்து வருவீராக! மேலும், குழப்பம் விளைவிப்போரின் நடைமுறையினை மேற்கொள்ளாதீர்!” என்று கூறினார்.
7:142. இன்னும், மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம், மேலும், அதை பத்து இரவுகளைக் கொண்டு நாம் பூர்த்தியாக்கியும் வைத்தோம், ஆகவே, அவருடைய இரட்சகனின் தவணை நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று, அது சமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனிடம் “நீர் என்னுடைய சமூகத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, அவர்களைச் சீர் திருத்தமும் செய்வீராக! அன்றியும் குழப்பக்காரர்களுடைய வழியை நீர் பின்பற்றாதிருப்பீராக! என்று கூறினார்.
7:143 وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ ؕ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ
وَلَمَّا போது جَآءَ வந்தார் مُوْسٰى மூஸா لِمِيْقَاتِنَا நமது குறித்தநேரத்திற்கு وَكَلَّمَهٗ இன்னும் பேசினாu/அவருடன் رَبُّهٗ ۙ அவருடைய இறைவன் قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اَرِنِىْۤ நீ காண்பி/எனக்கு اَنْظُرْ பார்ப்பேன் اِلَيْكَ ؕ உன்னை قَالَ கூறினான் لَنْ تَرٰٮنِىْ என்னை நீர் அறவே பார்க்க மாட்டீர் وَلٰـكِنِ எனினும் انْظُرْ பார்ப்பீராக! اِلَى الْجَـبَلِ மலையை فَاِنِ اسْتَقَرَّ அது நிலைத்தால் مَكَانَهٗ தன் இடத்தில் فَسَوْفَ تَرٰٮنِىْ ۚ நீர் என்னைப் பார்ப்பீர் فَلَمَّا போது تَجَلّٰى வெளிப்பட்டான் رَبُّهٗ அவருடைய இறைவன் لِلْجَبَلِ அம்மலை மீது جَعَلَهٗ ஆக்கினான்/அதை دَكًّا துகளாக وَّخَرَّ இன்னும் விழுந்தார் مُوْسٰى மூஸா صَعِقًا ۚ மூர்ச்சையானவராக فَلَمَّاۤ போது اَفَاقَ தெளிவுபெற்றார் قَالَ கூறினார் سُبْحٰنَكَ நீ மிகப் பரிசுத்தமானவன் تُبْتُ நான் திருந்தி திரும்புகிறேன் اِلَيْكَ உன் பக்கம் وَاَنَا நான் اَوَّلُ முதலாமவன் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொள்பவர்களில்
7:143. நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
7:143. நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்த பொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகிறேன்.) நீ உன்னை எனக்கு காண்பி'' என்று கூறினார். (அதற்கு இறைவன் ‘‘நேர்முகமாக) என்னைக் காண உம்மால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீர் நோக்குவீராக. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீர் என்னைக் காண்பீர்'' என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவு பெறவே (இறைவனை நோக்கி) ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்'' என்று கூறினார்.
7:143. நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மூஸா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடியபோது அவர் வேண்டினார்: “என் இறைவா! எனக்கு உன்னைப் பார்க்கும் வலிமையை வழங்குவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்.” அதற்கு இறைவன் கூறினான்: “என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால், என்னை நீர் காண முடியும்.” அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது பொடிப் பொடியாகிவிட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது கூறினார்: “நீ மிகவும் தூய்மையானவன். நான் உன்னிடம் மன்னிப்புக் கோரி மீளுகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொள்வோரில் முதன்மையானவனாக இருக்கின்றேன்.”
7:143. மேலும், நாம் குறிப்பிட்ட நேரத்தில் (குறிப்பிட்ட இடத்திற்கு) மூஸா வந்து அவருடைய இரட்சகனும் அவருடன் பேசியபொழுது, “என் இரட்சகனே! நீ (உன்னை) எனக்குக் காண்பிப்பாயாக! உன்பால் நான் பார்ப்பேன்” என்று கூறினார்; (அதற்கு, அல்லாஹ், மூஸாவே!) நீர் என்னை ஒருபோதும் பார்க்க முடியாது, எனினும், இம்மலையை நீர் பார்ப்பீராக! அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னை காண்பீர், என்று கூறினான்; ஆகவே, அவருடைய இரட்சகன் அம்மலைமீது வெளிப்பட்டபோது அவ்வாறு வெளிப்பட்ட நிலையான)து, அ(ம்மலையான)தை தூளாக்கிவிட்டது, இன்னும் மூஸா (திடுக்கிட்டு) மூர்ச்சையாகி விழுந்து விட்டார்; பின்னர் அவர் தெளிவு பெற்றபோது (அல்லாஹ்விடம்) “நீ மிகப் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் பாவமீட்சி கோருகின்றேன்; இன்னும், (உன்னை) விசுவாசிப்போரில் நான் முதன்மையானவன்” என்று கூறினார்,
7:144 قَالَ يٰمُوْسٰٓى اِنِّى اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسٰلٰتِىْ وَ بِكَلَامِىْ ۖ فَخُذْ مَاۤ اٰتَيْتُكَ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ
قَالَ கூறினான் يٰمُوْسٰٓى மூஸாவே! اِنِّى நிச்சயமாக நான் اصْطَفَيْتُكَ தேர்ந்தெடுத்தேன்/ உம்மை عَلَى النَّاسِ மக்களை விட بِرِسٰلٰتِىْ என் தூதுகளுக்கும் وَ بِكَلَامِىْ ۖ இன்னும் என் பேச்சுக்கும் فَخُذْ ஆகவே பற்றிப்பிடிப்பீராக مَاۤ اٰتَيْتُكَ எதை/கொடுத்தேன்/உமக்கு وَكُنْ ஆகிவிடுவீராக مِّنَ الشّٰكِرِيْنَ நன்றிசெலுத்துவோரில்
7:144. அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான்.
7:144. (அதற்கு இறைவன்) ‘‘மூஸாவே! என் தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்கள் காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். ஆகவே, நான் உமக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீரும் இருப்பீராக'' என்று கூறினான்.
7:144. அதற்கு அல்லாஹ், “மூஸாவே! என்னுடைய தூதுப் பணிகளுக்காகவும், என்னுடன் உரையாடுவதற்காகவும் மனிதர்கள் யாவரையும் விட (முன்னுரிமை வழங்கி) உம்மை நான் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். எனவே, நான் உமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொள்வீராக! மேலும், நன்றி செலுத்து வோராய்த் திகழ்வீராக!” என்று கூறினான்.
7:144. (அதற்கு) “மூஸாவே! என்னுடைய தூதுகளைக் கொண்டும், என்னுடைய பேச்சைக் கொண்டும் (எல்லா) மனிதர்களைவிட, நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன், ஆகவே, நான் உமக்கு கொடுப்பதைப் (பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்வீராக!) நன்றி செலுத்துபவர்களிலும் நீர் ஆகிவிடுவீராக” என்று கூறினார்.
7:145 وَكَتَبْنَا لَهٗ فِى الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَىْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِيْلًا لِّـكُلِّ شَىْءٍ ۚ فَخُذْهَا بِقُوَّةٍ وَّاْمُرْ قَوْمَكَ يَاْخُذُوْا بِاَحْسَنِهَا ؕ سَاُورِيْكُمْ دَارَ الْفٰسِقِيْنَ
وَكَتَبْنَا இன்னும் எழுதினோம் لَهٗ அவருக்கு فِى الْاَلْوَاحِ பலகைகளில் مِنْ كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் مَّوْعِظَةً (ஓர்) அறிவுரையை وَّتَفْصِيْلًا இன்னும் விளக்கத்தை لِّـكُلِّ شَىْءٍ ۚ எல்லாவற்றுக்குரிய فَخُذْهَا ஆகவே இவற்றைப் பற்றிப் பிடிப்பீராக بِقُوَّةٍ பலமாக وَّاْمُرْ இன்னும் ஏவுவீராக قَوْمَكَ உம் சமுதாயத்தை يَاْخُذُوْا அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும் بِاَحْسَنِهَا ؕ அவற்றில் மிக அழகியவற்றை سَاُورِيْكُمْ காண்பிப்பேன்/உங்களுக்கு دَارَ இல்லத்தை الْفٰسِقِيْنَ பாவிகளின்
7:145. மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி: “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்).
7:145. (நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி ‘‘நீர் இதைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவற்றை எடுத்து நடக்கும் படி உம் மக்களுக்கு நீர் கட்டளையிடுங்கள். (உமக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்'' (என்றும் நாம் மூஸாவுக்குக் கூறினோம்).
7:145. இதன் பின்னர், நாம் மூஸாவுக்கு (வாழ்க்கைத் துறை) ஒவ்வொன்றுக்கும் வேண்டிய அறிவுரையையும், ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தையும் பலகைகளில் எழுதிக் கொடுத்தோம். மேலும், (நாம் அவருக்குக் கூறினோம்:) “இந்த அறிவுரைகளை நீர் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், இவற்றிலுள்ள சிறந்த கருத்துகளைப் பின்பற்றும்படி உம்முடைய சமுதாயத்தாருக்கு நீர் கட்டளையிடுவீராக! அதிவிரைவில் பாவம் புரிவோர்க்குரிய இருப்பிடத்தை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.
7:145. மேலும், (நாம் அவருக்குக் கொடுத்த) பலகைகளில் ஒவ்வொரு விஷயத்திலிருந்து நல்லுபதேசத்தையும், ஒவ்வொரு விஷயத்திற்குரிய விளக்கத்தையும் அவருக்காக நாம் எழுதி இருந்தோம், (ஆகவே), ”நீர் இதனைப் பலமாகப் (பற்றிப்) பிடித்துக் கொண்டு அதிலிருக்கும் நல்லவைகளை எடுத்து செயல்பட்டு)க் கொள்ளுமாறு உம்முடைய சமூகத்தாரை நீர் கட்டளையும் இடுவீராக! (உமக்கு மாறு செய்யும்) பாவிகளின் வீட்டை (தங்குமிடத்தை) நான் உங்களுக்குக் காண்பிப்பேன்” என்றும் (கூறினான்.)
7:146 سَاَصْرِفُ عَنْ اٰيٰتِىَ الَّذِيْنَ يَتَكَبَّرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا ۚ وَاِنْ يَّرَوْا سَبِيْلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوْهُ سَبِيْلًا ۚ وَّاِنْ يَّرَوْا سَبِيْلَ الْغَىِّ يَتَّخِذُوْهُ سَبِيْلًا ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ
سَاَصْرِفُ திருப்புவேன் عَنْ விட்டு اٰيٰتِىَ என் அத்தாட்சிகள், என் வசனங்கள் الَّذِيْنَ எவர்கள் يَتَكَبَّرُوْنَ பெருமையடிப்பார்கள் فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَـقِّ ؕ நியாயமின்றி وَاِنْ يَّرَوْا அவர்கள் பார்த்தால் كُلَّ எல்லாம் اٰيَةٍ அத்தாட்சி لَّا يُؤْمِنُوْا நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِهَا ۚ அவற்றை وَاِنْ يَّرَوْا இன்னும் அவர்கள் பார்த்தால் سَبِيْلَ பாதையை الرُّشْدِ நேரிய لَا மாட்டார்கள் يَتَّخِذُوْهُ அதை எடுத்துக் கொள்ள سَبِيْلًا ۚ பாதையாக وَّاِنْ يَّرَوْا அவர்கள் பார்த்தால் سَبِيْلَ பாதையை الْغَىِّ வழிகேட்டின் يَتَّخِذُوْهُ எடுத்துக் கொள்வார்கள்/அதை سَبِيْلًا ؕ பாதையாக ذٰ لِكَ அது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَكَانُوْا இருந்தார்கள் عَنْهَا அவற்றை விட்டு غٰفِلِيْنَ கவனமற்றவர்களாக
7:146. எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.
7:146. நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவற்றை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும்.
7:146. பூமியில் நியாயமின்றிப் பெருமை கொள்பவர்(களின் பார்வை)களை என்னுடைய சான்றுகளை விட்டு நான் திருப்பி விடுவேன். அவர்கள் எந்தச் சான்றுகளைக் கண்டாலும் (ஒருபோதும்) அவற்றின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும், நேர்வழியினை(த் தம் கண்ணெதிரே) அவர்கள் கண்டாலும்கூட அதனை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், வழிகேடான பாதையைக் காண்பார்களானால், அதனை மேற்கொள்ள முனைந்து விடுகின்றார்கள். அதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள். மேலும், அவற்றை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
7:146. நியாயமின்றி, பூமியில் கர்வங்கொண்டிருப்போரை, என்னுடைய அத்தாட்சிகளை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பி வைத்து விடுவேன், அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் கண்டபோதிலும் அவைகளை நம்பிக்கை கொள்ளவுமாட்டார்கள், (அவ்வாறே) நேர் வழியை அவர்கள் கண்டாலும் அதனை அவர்கள் (நேரான) வழியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள், ஆனால், தவறான வழியை அவர்கள் கண்டாலோ, அதனையே (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக் கொள்வார்கள், அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினர் என்பதாலும், அவைகளை விட்டும் அவர்கள் மறந்தவர்களாகவும் இருந்தார்கள் என்ற காரணத்தினாலுமாகும்.
7:147 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَآءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْؕ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ
وَالَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَلِقَآءِ இன்னும் சந்திப்பை الْاٰخِرَةِ மறுமையின் حَبِطَتْ பாழாகின اَعْمَالُهُمْؕ (நற்)செயல்கள்/அவர்களுடைய هَلْ يُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவார்களா? اِلَّا தவிர مَا எவற்றை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ செய்வார்கள்
7:147. எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?
7:147. ஆகவே, எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்து விடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா?
7:147. எனவே எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய் எனக் கூறினார்களோ, மேலும் மறுமைநாளைச் சந்திக்க இருப்பதையும் மறுத்தார்களோ அவர்களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. தாங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்குரிய கூலியைத் தவிர வேறு எதனை இவர்கள் பெறமுடியும்?”
7:147. நம்முடைய வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்யாக்குகின்றார்களே அத்தகையோர்-அவர்களுடைய (நற்) காரியங்கள் யாவும் அழிந்து விட்டன, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா?
7:148 وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰى مِنْۢ بَعْدِهٖ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ ؕ اَلَمْ يَرَوْا اَنَّهٗ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيْهِمْ سَبِيْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِيْنَ
وَاتَّخَذَ எடுத்துக் கொண்டனர் قَوْمُ சமுதாயம் مُوْسٰى மூஸாவுடைய مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் مِنْ حُلِيِّهِمْ தங்கள் நகையிலிருந்து عِجْلًا ஒரு காளைக் கன்றை جَسَدًا ஓர் உடலை لَّهٗ அதற்கு خُوَارٌ ؕ மாட்டின் சப்தம் اَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اَنَّهٗ நிச்சயமாக அது لَا இல்லை يُكَلِّمُهُمْ அவர்களுடன் பேசுவது وَلَا இன்னும் இல்லை يَهْدِيْهِمْ அவர்களுக்கு (நேர்)வழி காட்டுவது سَبِيْلًا ۘ பாதையை اِتَّخَذُوْهُ எடுத்துக் கொண்டார்கள்/அதை وَكَانُوْا இன்னும் ஆகிவிட்டனர் ظٰلِمِيْنَ அநியாயக்காரர்களாக
7:148. மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
7:148. (தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு ஒரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள்.
7:148. மூஸா (சினாய் மலைக்குச்) சென்ற பிறகு அவருடைய சமூகத்தார் தங்களுடைய ஆபரணங்களை உருக்கி, கன்றுக்குட்டியின் வடிவத்தை உருவாக்கி(வணங்கி)னார்கள். அதற்கு மாட்டின் சப்தம் இருந்தது. அது அவர்களிடம் பேசுவதுமில்லை; (எந்த விவகாரங்களிலும்) அவர்களுக்கு வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? ஆயினும், அதனை அவர்கள் தெய்வமாக்கிக் கொண்டார்கள். மேலும், அவர்கள் பெரும் அக்கிரமக்காரர்களாகிவிட்டார்கள்.
7:148. மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின்னர், தங்கள் ஆபரணங்களிலிருந்து ஒரு காளைக் கன்றை (அதன்)-உடலை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள், அதற்கு, (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது, நிச்சயமாக அது அவர்களுடன் பேசவுமாட்டாது, அவர்களுக்கு யாதொரு வழியைக் காட்டவுமாட்டாது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (எனினும்) அவர்கள் அதனையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள், அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயக்காரர்களாகவும் ஆகிவிட்டனர்.
7:149 وَلَمَّا سُقِطَ فِىْۤ اَيْدِيْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْا ۙ قَالُوْا لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَـنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
وَلَمَّا போது سُقِطَ فِىْۤ اَيْدِيْهِمْ அவர்கள் கைசேதப் பட்டனர் وَرَاَوْا இன்னும் அறிந்தனர் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் قَدْ ضَلُّوْا ۙ வழிதவறிவிட்டனர் قَالُوْا கூறினார்கள் لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَا கருணைபுரியவில்லையென்றால்/எங்களுக்கு رَبُّنَا எங்கள் இறைவன் وَيَغْفِرْ இன்னும் மன்னிக்க வில்லையென்றால் لَـنَا எங்களை لَنَكُوْنَنَّ நிச்சயம் நாங்கள் ஆகிவிடுவோம் مِنَ الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளில்
7:149. அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
7:149. அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள்.
7:149. பிறகு அவர்கள் உருவாக்கியவை அனைத்தும் தகர்ந்துவிட்டன; மேலும், உண்மையிலேயே வழிதவறிவிட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்போது அவர்கள் கூறலானார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கருணை புரிந்து, எங்களுக்கு மன்னிப்பு வழங்கியிராவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குள்ளாகியிருப்போம்!”
7:149. மேலும், அவர்கள் (செய்து விட்டது பற்றி) மிகவும் கைசேதப்பட்டு திட்டமாகத் தாங்களே வழிதவறி விட்டார்கள் என்பதையும் அவர்கள் கண்டபொழுது, “எங்கள் இரட்சகன் எங்களுக்கு அருள் புரிந்து எங்களை மன்னிக்காவிடில் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
7:150 وَلَمَّا رَجَعَ مُوْسٰٓى اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِىْ مِنْۢ بَعْدِىْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ وَاَلْقَى الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِيْهِ يَجُرُّهٗۤ اِلَيْهِؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْـقَوْمَ اسْتَضْعَفُوْنِىْ وَكَادُوْا يَقْتُلُوْنَنِىْ ۖ فَلَا تُشْمِتْ بِىَ الْاَعْدَآءَ وَ لَا تَجْعَلْنِىْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
وَلَمَّا போது رَجَعَ திரும்பினார் مُوْسٰٓى மூஸா اِلٰى قَوْمِهٖ தன் சமுதாயத்திடம் غَضْبَانَ கோபித்தவராக اَسِفًا ۙ ஆவேசப்பட்டவராக, துக்கித்தவராக قَالَ கூறினார் بِئْسَمَا கெட்டுவிட்டது/எது خَلَفْتُمُوْنِىْ நான் சென்றதற்குப்பிறகு செய்தீர்கள்/எனக்கு مِنْۢ بَعْدِىْ ۚ எனக்குப் பின்னர் اَعَجِلْتُمْ அவசரப்பட்டீர்களா اَمْرَ கட்டளையை رَبِّكُمْ ۚ உங்கள் இறைவனின் وَاَلْقَى எறிந்தார் الْاَلْوَاحَ பலகைகளை وَاَخَذَ இன்னும் பிடித்தார் بِرَاْسِ தலையை اَخِيْهِ தன் சகோதரனின் يَجُرُّهٗۤ இழுத்தார்/அவரை اِلَيْهِؕ தன் பக்கம் قَالَ கூறினார் ابْنَ اُمَّ என் தாயின் மகனே اِنَّ நிச்சயமாக الْـقَوْمَ சமுதாயம் اسْتَضْعَفُوْنِىْ பலவீனப்படுத்தினர்/என்னை وَكَادُوْا இன்னும் முற்பட்டனர் يَقْتُلُوْنَنِىْ ۖ கொல்வார்கள்/என்னை فَلَا تُشْمِتْ நகைக்கச் செய்யாதீர் بِىَ என்னைக் கொண்டு الْاَعْدَآءَ எதிரிகளை وَ لَا تَجْعَلْنِىْ ஆக்கிவிடாதீர்/ என்னை مَعَ الْقَوْمِ மக்களுடன் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள்
7:150. (இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.
7:150. (இதைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) ‘‘நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(யாகிய வேதனை)யை நீங்கள் அவசரப்படுத்துகிறீர்களா?'' என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்து விட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் ‘‘என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்துவிடவும் முற்பட்டனர். (ஆதலால், நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) எதிரிகள் சந்தோஷப்படுமாறு நீர் செய்து விடாதீர். (இந்த) அநியாயக்கார மக்களுடனும் என்னை சேர்த்து விடாதீர்'' என்று கூறினார்.
7:150. மூஸா தம் சமுதாயத்தாரிடம் கோபமும் வேதனையும் கொண்டவராகத் திரும்பினார். வந்தவுடனேயே அவர் கூறினார்: “நான் சென்ற பிறகு என்னுடைய பிரதிநிதிகளாய் இருந்து நீங்கள் செய்த செயல் எத்துணைக் கெட்டது! உங்கள் இறைவனின் கட்டளையை எதிர்பார்த்துப் பொறுமையாய் இருந்திடக் கூடாதா?” மேலும் பலகைகளைப் போட்டுவிட்டார்; மேலும் தம் சகோதரரின் (ஹாரூனின்) தலை(முடி)யைப் பிடித்து இழுத்தார். ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே! இம்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர்! மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்!”
7:150. மேலும், (இதனை அறிந்த மூஸா கோபங்கொண்டவராக – பெரும் வருத்தம் நிறைந்தவராக தன் சமூகத்தாரிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களிடம்) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த (இச்செயலான)து மிகக் கெட்டது, உங்கள் இரட்சகனின் கட்டளை (வேதனை) வருவதை நீங்கள் அவசரப்படுகின்றீர்களா?” என்று கூறி (அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதப்பட்ட) பலகைகளைப் போட்டுவிட்டு, தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார், அ(தற்க)வர், “என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி விட்டனர், என்னைக் கொலை செய்து விடவும் முற்பட்டனர், என்னுடைய விரோதிகள் என்னைப் பார்த்து சிரிக்குமாறு நீர் செய்துவிடாதீர், இந்த அக்கிரமக்கார சமூகத்தாருடன் என்னை ஆக்கியும் விடாதீர்” என்று கூறினார்.
7:151 قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ ۖ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اغْفِرْ மன்னிப்பு வழங்கு لِىْ எனக்கு وَلِاَخِىْ இன்னும் என் சகோதரருக்கு وَ اَدْخِلْنَا இன்னும் சேர்த்துக்கொள் / எங்களை فِىْ رَحْمَتِكَ ۖ உன் கருணையில் وَاَنْتَ اَرْحَمُ நீ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ கருணையாளர்களில்
7:151. “என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
7:151. (பிறகு மூஸா இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன் அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களில் எல்லாம் மிக்க கிருபையாளன்'' என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.
7:151. (அப்போது) மூஸா, “என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! மேலும், உன்னுடைய கருணையில் எங்களைச் சேர்த்துக்கொள்வாயாக! நீ அனைவரையும்விட அதிகம் கருணை புரிபவனாவாய்” என்று இறைஞ்சினார்.
7:151. “என் இரட்சகனே! என்னையும், என் சகோதரரையும் நீ மன்னித்தருள்வாயாக! உன்னுடைய கிருபையில் எங்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக! நீ கிருபை செய்வோரிலெல்லாம் மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.
7:152 اِنَّ الَّذِيْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّـةٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَكَذٰلِكَ نَجْزِىْ الْمُفْتَرِيْنَ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوا எடுத்துக் கொண்டனர் الْعِجْلَ காளைக் கன்றை سَيَنَالُهُمْ அடையும்/அவர்களை غَضَبٌ கோபம் مِّنْ இருந்து رَّبِّهِمْ அவர்களின் இறைவன் وَذِلَّـةٌ இன்னும் இழிவு فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا ؕ உலகம் وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِىْ கூலி கொடுப்போம் الْمُفْتَرِيْنَ இட்டுக்கட்டுபவர்களுக்கு
7:152. நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
7:152. (பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) ‘‘எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
7:152. (அதற்கு இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது:) “எவர்கள் கன்றுக்குட்டியைத் தெய்வமாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் நிச்சயம் தம் இறைவனின் சினத்திற்கு ஆளாகியே தீருவார்கள். மேலும், உலக வாழ்விலும் இழிவுக்குரியவர்களாகி விடுவார்கள். பொய் புனைந்துரைப்பவர்களுக்கு நாம் இவ்வாறே தண்டனை அளிக்கின்றோம்.
7:152. “நிச்சயமாக காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக்கொண்டார்களே அத்தகையோர்-அவர்களுடைய இரட்சகனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் அவர்களை வந்தடையும், பொய்க் கற்பனை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்” (என்று அல்லாஹ் கூறினான்.)
7:153 وَالَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْۢ بَعْدِهَا وَاٰمَنُوْۤا اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ
وَالَّذِيْنَ எவர்கள் عَمِلُوا செய்தனர் السَّيِّاٰتِ தீமைகளை ثُمَّ பிறகு تَابُوْا திருந்தி திரும்பினர் مِنْۢ بَعْدِهَا அவற்றுக்குப் பின்னர் وَاٰمَنُوْۤا இன்னும் நம்பிக்கை கொண்டார்கள் اِنَّ رَبَّكَ நிச்சயமாக உம் இறைவன் مِنْۢ بَعْدِهَا அதற்குப் பின்னர் لَغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ பெரும் கருணையாளன்
7:153. ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து; (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.
7:153. (எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர்களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை), அதற்குப் பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மன்னித்துக் கருணை செய்பவன் ஆவான்.
7:153. மேலும், எவர்கள் தீவினைகள் புரிகின்றார்களோ, பின்னர் அவற்றிலிருந்து விலகி மன்னிப்புக்கோரி இறைநம்பிக்கையும் கொண்டார்களேயானால், அதன் பிறகு திண்ணமாக உம் இறைவன் அவர்களை அதிகம் மன்னித்து கிருபை செய்பவனாக இருக்கின்றான்.”
7:153. மேலும், தீய செயல்கள் செய்துவிட்டு, (மனம் வருந்தி) அதன் பின் பச்சாதாபப்பட்டு, (அதிலிருந்து விலகி, உண்மையாகவே) விசுவாசமும் கொண்டு விட்டார்களே, அத்தகையோர் - (அவர்களுடைய பாவத்தை நிச்சயமாக உமதிரட்சகன் அதற்குப்பின் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபை செய்பவன்.
7:154 وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَى الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖ وَفِىْ نُسْخَتِهَا هُدًى وَّرَحْمَةٌ لِّـلَّذِيْنَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُوْنَ
وَلَمَّا போது سَكَتَ தனிந்தது, அடங்கியது, அமைதியானது عَنْ مُّوْسَى மூஸாவிற்கு الْغَضَبُ கோபம் اَخَذَ الْاَلْوَاحَ ۖ எடுத்தார்/பலகைகளை وَفِىْ نُسْخَتِهَا அவற்றில் எழுதப்பட்டதில் هُدًى நேர்வழி وَّرَحْمَةٌ இன்னும் கருணை لِّـلَّذِيْنَ எவர்களுக்கு هُمْ அவர்கள் لِرَبِّهِمْ தங்கள் இறைவனை يَرْهَبُوْنَ பயப்படுகிறார்கள்
7:154. மூஸாவை விட்டும் கோபம் தணிந்த போது, (அவர் எறிந்த விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.
7:154. மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர்(அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதன் ஏடுகளில் தங்கள் இறைவனை அஞ்சுபவர்களுக்கு நேரான வழியும் அருளும் இருந்தன.
7:154. மேலும், மூஸாவுக்குக் கோபம் தணிந்தபோது அப்பலகைகளை அவர் எடுத்துக் கொண்டார். மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ அவர்களுக்கு அவற்றில் எழுதப்பட்டிருந்த அறிவுரைகளில் வழிகாட்டலும் அருளும் இருந்தன.
7:154. மேலும், மூஸாவுடைய கோபம் தணிந்தபோது, அவர் (அந்தப்)பலகைகளை எடுத்துக் கொண்டார், அவற்றில் வரையப்பட்டிருந்ததில் தங்களுடைய இரட்சகனை பயப்படுகின்றார்களே அத்தகையோருக்கு நேர் வழியும் (அவனின் பேரருளும் இருந்தன.)
7:155 وَاخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَـكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّاىَ ؕ اَ تُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِىَ اِلَّا فِتْنَـتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِىْ مَنْ تَشَآءُ ؕ اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ
وَاخْتَارَ தேர்ந்தெடுத்தார் مُوْسٰى மூஸா قَوْمَهٗ தன் சமுதாயத்தில் سَبْعِيْنَ எழுபது رَجُلًا ஆண்களை لِّمِيْقَاتِنَا ۚ நம் குறிப்பிட்ட நேரத்திற்கு فَلَمَّاۤ போது اَخَذَتْهُمُ பிடித்தது/அவர்களை الرَّجْفَةُ இடிமுழக்கம் قَالَ கூறினார் رَبِّ என் இறைவா لَوْ شِئْتَ நீ நாடியிருந்தால் اَهْلَـكْتَهُمْ அழித்திருப்பாய்/அவர்களை مِّنْ قَبْلُ (இதற்கு) முன்னரே وَاِيَّاىَ ؕ இன்னும் என்னை اَ تُهْلِكُنَا அழிப்பாயா / எங்களை بِمَا فَعَلَ செய்ததற்காக السُّفَهَآءُ அறிவீனர்கள் مِنَّا ۚ எங்களில் اِنْ இல்லை هِىَ இது اِلَّا தவிர فِتْنَـتُكَ ؕ உன் சோதனையே تُضِلُّ வழிகெடுக்கிறாய் بِهَا இதைக் கொண்டு مَنْ எவரை تَشَآءُ நாடுகிறாய் وَتَهْدِىْ இன்னும் நேர்வழி செலுத்துகிறாய் مَنْ எவரை تَشَآءُ ؕ நாடுகிறாய் اَنْتَ நீ وَلِيُّنَا எங்கள் பாதுகாவலன் فَاغْفِرْ ஆகவே மன்னிப்பு வழங்கு لَـنَا எங்களுக்கு وَارْحَمْنَا கருணைபுரி/எங்களுக்கு وَاَنْتَ خَيْرُ நீ மிகச் சிறந்தவன் الْغَافِرِيْنَ மன்னிப்பவர்களில்
7:155. இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.
7:155. மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் ‘‘தூர்' என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை பூகம்பம் பிடித்(து மூர்ச்சையாகி விழுந்)ததும் அவர் (தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாம். எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா? இது உன் சோதனையே தவிர வேறில்லை. இதைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்கள் இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக! மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்'' என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார்.
7:155. மேலும், மூஸா தம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களில் எழுபது பேரை நாம் குறிப்பிட்ட நேரத்தி(ல் தம்முடன் வருவத)ற்காகத் தேர்ந்தெடுத்தார். கடும் பூகம்பம் அவர்களைத் தாக்கியபோது மூஸா இறைஞ்சினார்: “என் இறைவனே! நீ நாடியிருந்தால் அவர்களையும் என்னையும் முன்பே அழித்துவிட்டிருக்க முடியும்! எங்களில் சில அறிவிலிகள் செய்த தவறுகளுக்காக எங்கள் அனைவரையும் அழிக்கப்போகின்றாயா? இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை; இதன் மூலம் நீ நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறாய்; இன்னும் நீ நாடுகின்றவர்களுக்கு நேர்வழியைக் காண்பிக்கின்றாய். எங்கள் பாதுகாவலன் நீயே! எனவே எங்களை மன்னித்து, மேலும் எங்கள் மீது கருணை புரிவாயாக! நீ எல்லோரையும் விட அதிகம் மன்னிப்பவனாய் இருக்கின்றாய்.”
7:155. மேலும், மூஸா நாம் குறித்த நேரத்திற்காக தம் சமூகத்தாரில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார், அவர்களைப் பூகம்பம் பிடித்தபொழுது (என் இரட்சகனே! நீ நாடியிருந்தால், இதற்கு முன்னதாகவே இவர்களையும், என்னையும் நீ அழித்திருக்கலாமே) எங்களிலுள்ள அறிவீனர்கள் சிலர் செய்ததற்காக, எங்களை நீ அழித்து விடுகிறாயா?” இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை, இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவறச் செய்கிறாய், நீ நாடியவர்களை நேர் வழியிலும் செலுத்துகிறாய், நீயே எங்களுடைய பாதுகாவலன், ஆகவே நீ எங்களை மன்னித்தருள்வாயாக! மேலும், எங்களுக்கு நீ அருள் புரிவாயாக, நீயே மன்னிப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று அவர் (பிரார்த்தித்துக்) கூறினார்.
7:156 وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَيْكَ ؕ قَالَ عَذَابِىْۤ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَآءُ ۚ وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ ؕ فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَ ۚ
وَاكْتُبْ எழுதுவாயாக, விதிப்பாயாக لَـنَا எங்களுக்கு فِىْ هٰذِهِ الدُّنْيَا இம்மையில் حَسَنَةً அழகியதை, நல்ல வாழ்வை وَّفِى الْاٰخِرَةِ இன்னும் மறுமையில் اِنَّا நிச்சயமாக நாங்கள் هُدْنَاۤ திரும்பினோம் اِلَيْكَ ؕ உன் பக்கம் قَالَ கூறினான் عَذَابِىْۤ என் வேதனை اُصِيْبُ அடைவேன் بِهٖ அதைக் கொண்டு مَنْ اَشَآءُ ۚ எவரை/நாடுவேன் وَرَحْمَتِىْ என் கருணை وَسِعَتْ விசாலமாக்கி விட்டது كُلَّ شَىْءٍ ؕ எல்லாவற்றையும் فَسَاَكْتُبُهَا விதிப்பேன்/அதை لِلَّذِيْنَ எவர்களுக்கு يَتَّقُوْنَ அஞ்சுவார்கள் وَيُؤْتُوْنَ இன்னும் கொடுப்பார்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள்
7:156. “இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.
7:156. மேலும், ‘‘(இறைவனே!) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக)! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்'' (என்றும் பிரார்த்தித்தார்). அ(தற்கு இறை)வன் ‘‘நான் நாடியவர்களை என் வேதனை வந்தடையும். எனினும், என் அருட்கொடை அனைத்தையும்விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என் அருளை) நான் முடிவு செய்வேன்'' என்று கூறினான்.
7:156. இன்னும், “எங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நன்மையை எழுதிவைப்பாயாக! திண்ணமாக, நாங்கள் உன் பக்கம் திரும்பி விட்டோம்.” அதற்கு இறைவன், “நான் நாடுகின்றவர்களுக்கு தண்டனை அளிப்பேன். ஆயினும், என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்திருக்கின்றது. எனவே, எவர்கள் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ மேலும், ஜகாத்தையும் அளிக்கின்றார்களோ மேலும், என்னுடைய வசனங்களையும் நம்புகின்றார்களோ அவர்களுக்கு நான் அந்த அருளை உரித்தாக்குவேன்” என்று பதிலுரைத்தான்.
7:156. இன்னும், ”இவ்வுலகத்தில் எங்களுக்கு நன்மையை எழுதிவிடுவாயாக! மறுமையிலும் (நன்மையை எழுதுவாயாக!) நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்பிவிட்டோம்” (என்றும் பிரார்த்தித்தார்.) அதற்கு அல்லாஹ்வாகிய அவன் “என்னுடைய வேதனையாகிறது – அதனைக்கொண்டு நான் நாடியவர்களை பிடிப்பேன், என்னுடைய அருளோ எல்லா வஸ்துக்களிலும் சூழ்ந்து விசாலமாகியுள்ளது, ஆகவே, “(என்னுடைய அருளாகிய) அதனை, (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களே அத்தகையோருக்கும், நம்முடைய வசனங்களை விசுவாசிக்கிறார்களே அத்தகையோருக்கும் நான் (விதித்து) எழுதிவிடுவேன்” என்று கூறினான்.
7:157 اَ لَّذِيْنَ يَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِىَّ الْاُمِّىَّ الَّذِىْ يَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِى التَّوْرٰٮةِ وَالْاِنْجِيْلِ يَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَيَنْهٰٮهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ وَيَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِىْ كَانَتْ عَلَيْهِمْ ؕ فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَ اتَّبَـعُوا النُّوْرَ الَّذِىْۤ اُنْزِلَ مَعَهٗ ۤ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
اَ لَّذِيْنَ எவர்கள் يَتَّبِعُوْنَ பின்பற்றுவார்கள் الرَّسُوْلَ இத்தூதரை النَّبِىَّ நபியான الْاُمِّىَّ எழுதப் படிக்கத் தெரியாதவர் الَّذِىْ எவர் يَجِدُوْنَهٗ காண்கின்றனர்/அவரை مَكْتُوْبًا குறிப்பிடப்பட்டவராக عِنْدَهُمْ அவர்களிடம் فِى التَّوْرٰٮةِ தவ்றாத்தில் وَالْاِنْجِيْلِ இன்னும் இன்ஜீலில் يَاْمُرُ ஏவுவார் هُمْ அவர்களுக்கு بِالْمَعْرُوْفِ நன்மையை وَيَنْهٰٮهُمْ இன்னும் தடுப்பார்/அவர்களை عَنِ الْمُنْكَرِ தீமையைவிட்டு وَيُحِلُّ இன்னும் ஆகுமாக்குவார் لَهُمُ அவர்களுக்கு الطَّيِّبٰتِ நல்ல,சுத்தமானவற்றை وَيُحَرِّمُ இன்னும் தடை செய்வார் عَلَيْهِمُ அவர்களுக்கு الْخَبٰۤٮِٕثَ கெட்டவற்றை, கெடுதி செய்பவற்றை وَيَضَعُ இன்னும் அகற்றுவார் عَنْهُمْ அவர்களை விட்டு اِصْرَهُمْ கடின சுமையை/அவர்களுடைய وَالْاَغْلٰلَ இன்னும் விலங்குகளை الَّتِىْ எவை كَانَتْ இருந்தன عَلَيْهِمْ ؕ அவர்கள் மீது فَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் بِهٖ அவரை وَعَزَّرُوْهُ இன்னும் பாதுகாத்தனர்/அவரை وَنَصَرُوْهُ இன்னும் உதவினர்/அவருக்கு وَ اتَّبَـعُوا இன்னும் பின்பற்றினர் النُّوْرَ ஒளியை الَّذِىْۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது مَعَهٗ ۤ ۙ அவருடன் اُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ வெற்றியாளர்கள்
7:157. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
7:157. (ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். மேலும், அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.
7:157. (எனவே இன்று) அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் ‘உம்மீ’ நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்.
7:157. அவர்கள் எத்தகையோரென்றால், தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும், அவரைப் பற்றி எழுதப்பட்டவராகக் காண்கிறார்களே, அத்தகைய (எழுத்தாற்றல் அற்ற) உம்மி நபியான இத்தூதரை பின்பற்றுகிறார்கள், (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களை(ச் செய்யுமாறு) ஏவி பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார், நல்லவைகளையே அவர்களுக்கு (உண்ண) அவர் ஆகுமாக்கியும் வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்தும் விடுவார், அவர்களுடைய பளுவையும், அவர்கள் மீதிருந்தே அத்தகைய கடினமானவைகளையும் (இரட்சகனின் அனுமதி கொண்டு) அவர்களை விட்டும் நீக்கிவிடுவார், ஆகவே. அவரை (உண்மையாகவே) விசுவாசித்து, இன்னும் அவரை கண்ணியம் செய்து, அவருக்கு உதவியும் புரிந்து அவருடன் இறக்கி வைக்கப்பட்ட ஒளி மிக்க (இவ்வேதத்)தையும் பின்பற்றுகிறார்களே அத்தகையோர்-அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர்.
7:158 قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعَاْ ۨالَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِىِّ الْاُمِّىِّ الَّذِىْ يُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
قُلْ கூறுவீராக يٰۤاَيُّهَا النَّاسُ மனிதர்களே اِنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَيْكُمْ جَمِيْعَاْ உங்கள் அனைவருக்கும் ۨالَّذِىْ எவன் لَهٗ அவனுக்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِۚ இன்னும் பூமியின் لَاۤ اِلٰهَ அறவே இல்லை اِلَّا வணங்கப்படும் இறைவன் هُوَ அவனைத்தவிர يُحْىٖ உயிர்ப்பிக்கிறான் وَيُمِيْتُ இன்னும் மரணிக்கச் செய்கிறான் فَاٰمِنُوْا ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَرَسُوْلِهِ இன்னும் அவனுடைய தூதரை النَّبِىِّ நபி الْاُمِّىِّ எழுதப்படிக்கத் தெரியாதவர் الَّذِىْ எவர் يُؤْمِنُ நம்பிக்கைகொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَكَلِمٰتِهٖ இன்னும் அவனுடைய வாக்குகளை وَاتَّبِعُوْهُ பின்பற்றுங்கள்/அவரை لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ நீங்கள் நேர்வழிபெறுவதற்காக
7:158. (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”
7:158. (நபியே!) கூறுவீராக: ‘‘மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் ஆவேன். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.
7:158. (முஹம்மதே!) நீர் கூறும்: “மனிதர்களே! திண்ணமாக, வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகிய அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவர்பாலும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட ‘உம்மீ’ நபி மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவரோ அல்லாஹ்வையும் அவனுடைய வேதவாக்குகளையும் நம்புகின்றார். மேலும், அவரைப் பின்பற்றுங்கள்! அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும்.”
7:158. (நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களே! நிச்சயமாகவே நான் உங்கள் யாவருக்கும், அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன், அவன் எத்தகையோனென்றால், வானங்கள், (பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர (வேறு எவரும்) இல்லை., அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான், ஆகவே, அந்த அல்லாஹ்வையும் (எழுத்தாற்றல் அற்ற) உம்மி நபியாகிய அவனுடைய (இத்)தூதரையும் நீங்கள் விசுவாசிப்பீர்களாக! அவர் எத்தகையவரென்றால்-அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் விசுவாசிக்கின்றார், (ஆகவே) நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.
7:159 وَ مِنْ قَوْمِ مُوْسٰٓى اُمَّةٌ يَّهْدُوْنَ بِالْحَـقِّ وَبِهٖ يَعْدِلُوْنَ
وَ مِنْ قَوْمِ சமுதாயத்தில் مُوْسٰٓى மூஸாவுடைய اُمَّةٌ ஒரு கூட்டம் يَّهْدُوْنَ வழி காட்டுகிறார்கள் بِالْحَـقِّ சத்தியத்தின்படி وَبِهٖ இன்னும் அதைக்கொண்டு يَعْدِلُوْنَ நீதியாக நடக்கின்றனர்
7:159. உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.
7:159. மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர்.
7:159. சத்தியத்தின் அடிப்படையில் வழிகாட்டி, அதற்கு ஏற்பவே நீதி செலுத்தக்கூடிய ஒரு பிரிவினர் மூஸாவுடைய சமுதாயத்தாரில் இருந்தனர்.
7:159. இன்னும், மூஸாவுடைய சமூகத்தாரில் ஒரு கூட்டத்தினர் இருக்கினறனர், அவர்கள் சத்தியத்தைக் கொண்டு (மற்ற மனிதர்களுக்கு) வழி காண்பிக்கின்றனர், அதன்படி நீதியும் செய்கின்றனர்.
7:160 وَقَطَّعْنٰهُمُ اثْنَتَىْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا ؕ وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اِذِ اسْتَسْقٰٮهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ۚ فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْؕ وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰىؕ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْؕ وَ مَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
وَقَطَّعْنٰهُمُ பிரித்தோம்/அவர்களை اثْنَتَىْ عَشْرَةَ பன்னிரெண்டு اَسْبَاطًا சந்ததிகளாக اُمَمًا ؕ கூட்டங்களாக وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى மூஸாவிற்கு اِذِ اسْتَسْقٰٮهُ போது/தண்ணீர் கேட்டார்(கள்)/அவரிடம் قَوْمُهٗۤ அவருடைய சமுதாயம் اَنِ اضْرِبْ அடிப்பீராக! என்று بِّعَصَاكَ உமது தடியால் الْحَجَرَ ۚ கல்லை فَانْۢبَجَسَتْ பீறிட்டன مِنْهُ அதிலிருந்து اثْنَتَا عَشْرَةَ பன்னிரெண்டு عَيْنًا ؕ ஊற்று(கள்) قَدْ عَلِمَ அறிந்து கொண்டார்(கள்) كُلُّ எல்லாம் اُنَاسٍ மக்கள் مَّشْرَبَهُمْؕ தங்கள் அருந்துமிடத்தை وَظَلَّلْنَا இன்னும் நிழலிடச் செய்தோம் عَلَيْهِمُ அவர்கள் மீது الْغَمَامَ மேகத்தை وَاَنْزَلْنَا இன்னும் இறக்கினோம் عَلَيْهِمُ அவர்கள் மீது الْمَنَّ ‘மன்னு’ஐ وَالسَّلْوٰىؕ இன்னும் ஸல்வாவை كُلُوْا உண்ணுங்கள் مِنْ طَيِّبٰتِ நல்லவற்றை مَا رَزَقْنٰكُمْؕ எவை/(உணவு) அளித்தோம்/உங்களுக்கு وَ مَا ظَلَمُوْنَا அவர்கள் அநீதியிழைக்கவில்லை/நமக்கு وَلٰـكِنْ எனினும் كَانُوْۤا இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ அநீதியிழைப்பவர்களாக
7:160. மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து : “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
7:160. மூஸாவின் மக்களைப் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது (நாம் அவரை நோக்கி) ‘‘உங்கள் (கைத்) தடியைக் கொண்டு இக்கல்லை அடியுங்கள்!'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். (அவ்வாறு அவர் அடிக்கவே) அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுக்கள் பீறிட்டோடின. (பன்னிரெண்டு வகுப்பினரில்) ஒவ்வொரு வகுப்பினரும் (அவற்றில்) தாங்கள் அருந்தும் ஊற்றை (குறிப்பாக) அறிந்து கொண்டனர். அன்றி, அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம். அவர்களுக்காக ‘மன்னு ஸல்வா'வையும் இறக்கிவைத்து ‘‘உங்களுக்குக் கொடுக்கும் இந்த நல்ல உணவுகளை (அன்றாடம்) புசித்து வாருங்கள். (அதில் எதையும் நாளைக்கு என்று சேகரித்து வைக்காதீர்கள்'' எனக் கூறினோம். அவ்வாறிருந்தும் அவர்கள் நமக்கு மாறுசெய்தனர். இதனால்) அவர்கள் நமக்கு தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
7:160. மேலும், நாம் அச்சமூகத்தை பன்னிரண்டு குலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தனிப் பெரும் சமுதாயங்களாக அமைத்தோம். மேலும், மூஸாவிடம் அவருடைய சமுதாயத்தார்கள் தண்ணீர் வேண்டியபோது, ‘இன்ன பாறையை உமது கைத்தடியைக் கொண்டு அடியும்!’ என்று அவருக்கு அறிவித்தோம். அப்பாறையிலிருந்து உடனே பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கின. ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் தண்ணீர் பருகும் இடத்தை நன்கு அறிந்து கொண்டார்கள். மேலும், நாம் அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மேலும், அவர்களுக்கு மன்னுவும், ஸல்வாவும், இறக்கிவைத்தோம். “நாம் உங்களுக்கு அளித்த தூய்மையான பொருள்களைப் புசியுங்கள்!” (என்று கூறினோம்). ஆனால் அவர்கள் (இதன் பின்னரும் தீயசெயல்களை மேற்கொண்டதனால்) நமக்கு அநீதி இழைத்திடவில்லை; மாறாக தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்தனர்.
7:160. மேலும், (மூஸாவுடைய கூட்டத்தாராகிய) அவர்களை பன்னிரண்டு பிரிவினர்களாக-கூட்டத்தினர்களாக-நாம் பிரித்தோம், மூஸாவிடம் அவருடைய கூட்டத்தார் தண்ணீர் கேட்டபோது நாம் (அவரிடம்) “உம்முடைய கைத்தடியைக் கொண்டு இக்கல்லை அடிப்பீராக!” என்று அவருக்கு வஹீ அறிவித்தோம், அப்போது (அவர் அவ்வாறு அடிக்கவே,) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன, ஒவ்வொரு பிரிவினரும் (அவற்றில்) தங்கள் நீரருந்துமிடத்தைத் திட்டமாக அறிந்து கொண்டனர், மேலும், அவர்கள் மீது மேகங்களை நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்காக ‘மன்னு’, ‘ஸல்வா’ (எனும் மேலான உண)வையும் இறக்கி வைத்து, நாம் உங்களுக்கு அளித்துள்ள நல்லவற்றிலிருந்து புசியுங்கள், (என்னும் நம் கட்டளைக்கு மாறு செய்தனர். அதனால்) அவர்கள் நமக்கு அநியாயம் செய்துவிடவில்லை, எனினும், அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்கிறவர்களாக இருந்தனர்.
7:161 وَاِذْ قِيْلَ لَهُمُ اسْكُنُوْا هٰذِهِ الْقَرْيَةَ وَكُلُوْا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُوْلُوْا حِطَّةٌ وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّـغْفِرْ لَـكُمْ خَطِيْٓــٰٔــتِكُمْ ؕ سَنَزِيْدُ الْمُحْسِنِيْنَ
وَاِذْ சமயம் قِيْلَ கூறப்பட்டது لَهُمُ அவர்களுக்கு اسْكُنُوْا வசித்திருங்கள் هٰذِهِ الْقَرْيَةَ இவ்வூரில் وَكُلُوْا இன்னும் புசியுங்கள் مِنْهَا அதில் حَيْثُ இடத்தில் شِئْتُمْ நாடினீர்கள் وَقُوْلُوْا இன்னும் கூறுங்கள் حِطَّةٌ நீங்கட்டும் وَّادْخُلُوا இன்னும் நுழையுங்கள் الْبَابَ வாசலில் سُجَّدًا சிரம் தாழ்த்தியவர்களாக نَّـغْفِرْ மன்னிப்போம் لَـكُمْ உங்களுக்கு خَطِيْٓــٰٔــتِكُمْ ؕ பாவங்களை / உங்கள் سَنَزِيْدُ அதிகப்படுத்துவோம் الْمُحْسِنِيْنَ நல்லறம் புரிவோருக்கு
7:161. இன்னும் அவர்களை நோக்கி: “நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; “ஹித்ததுன்” (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்” என்று கூறப்பட்டபோது;
7:161. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக!) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவோம். நன்மை செய்பவர்களுக்கு மேலும், அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,
7:161. மேலும், இவ்வாறு அவர்களிடம் கூறப்பட்டதை நீர் நினைவுகூரும்: “நீங்கள் இவ்வூரில் வசியுங்கள்! மேலும் இங்கு (கிடைப்பவற்றை) விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள்; இன்னும் ‘ஹித்ததுன்’ என்று சொல்(லியவாறே செல்)லுங்கள்; மேலும், ஊரின் தலைவாயிலில் சிரம்பணிந்தவாறு நுழையுங்கள்! நாம் உங்களுடைய தவறுகளை மன்னிப்போம். சிறந்த முறையில் நற்செயல் புரிவோருக்கு விரைவில் அதிக நற்கூலி வழங்குவோம்.”
7:161. இன்னும், (அவர்களிடம்) நீங்கள் இவ்வூரில் குடியிருங்கள், இதில் நீங்கள் நாடிய இடத்திலெல்லாம் உண்ணுங்கள், ஹித்ததுன் (எங்கள் பாவச் சுமை நீங்குக!) என்று கூறுங்கள், (அதன்) வாயிலில் தலை தாழ்த்தியவர்களாகவும் நுழையுங்கள், நாம் உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு மன்னித்துவிடுவோம், நன்மை செய்வோருக்கு (அதன் கூலியை) நாம் அதிகப்படுத்துவோம்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது
7:162 فَبَدَّلَ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ قَوْلًا غَيْرَ الَّذِىْ قِيْلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا يَظْلِمُوْنَ
فَبَدَّلَ மாற்றினர் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا அநீதியிழைத்தனர் مِنْهُمْ அவர்களில் قَوْلًا ஒரு சொல்லாக غَيْرَ அல்லாத الَّذِىْ எது قِيْلَ கூறப்பட்டது لَهُمْ அவர்களுக்கு فَاَرْسَلْنَا ஆகவே அனுப்பினோம் இறக்கினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது رِجْزًا ஒரு வேதனையை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து بِمَا كَانُوْا அவர்கள் இருந்ததால் يَظْلِمُوْنَ அநீதியிழைப்பவர்களாக
7:162. அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வேறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
7:162. அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட (‘ஹித்ததுன்' என்ப)தை மாற்றி (‘ஹின்த்ததுன்' கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைத்தோம்.
7:162. ஆயினும், அவர்களில் அக்கிரமக்காரர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். ஆகவே இவ்வாறு அவர்கள் அக்கிரமம் செய்து கொண்டிருந்த காரணத்தால் வானத்திலிருந்து வேதனையை அவர்கள்மீது அனுப்பினோம்.
7:162. அவர்களில் அநியாயம் செய்தோர் அவர்களுக்குக் கூறப்பட்டதல்லாத (வேறு) வார்த்தையாக (அதை) மாற்றி விட்டார்கள், ஆகவே (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.
7:163 وَسْــٴَــلْهُمْ عَنِ الْـقَرْيَةِ الَّتِىْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَاْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَ ۙ لَا تَاْتِيْهِمْ ۛۚ كَذٰلِكَ ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ
وَسْــٴَــلْهُمْ விசாரிப்பீராக/அவர்களிடம் عَنِ الْـقَرْيَةِ ஊர் பற்றி الَّتِىْ எது كَانَتْ இருந்தது حَاضِرَةَ அருகில் الْبَحْرِۘ கடலுக்கு اِذْ போது يَعْدُوْنَ வரம்பு மீறினார்கள் فِى السَّبْتِ சனிக்கிழமையில் اِذْ போது تَاْتِيْهِمْ வந்தன/அவர்களிடம் حِيْتَانُهُمْ மீன்கள்/அவர்களுடைய يَوْمَ கிழமையில் سَبْتِهِمْ அவர்களின் சனி شُرَّعًا தலைகளை நீட்டியவையாக وَّيَوْمَ நாளில் لَا يَسْبِتُوْنَ ۙ அவர்கள் சனிக்கிழமையில் இல்லாதவர்கள் لَا تَاْتِيْهِمْ ۛۚ அவை வருவதில்லை/அவர்களிடம் كَذٰلِكَ ۛۚ இவ்வாறு نَبْلُوْهُمْ சோதித்தோம்/ அவர்களை بِمَا كَانُوْا அவர்கள் இருந்த காரணத்தால் يَفْسُقُوْنَ பாவம் செய்வார்கள்
7:163. (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
7:163. (நபியே) கடற்கரையிலிருந்த ஊர் (மக்களைப்) பற்றி நீர் அவர்களைக் கேட்பீராக. (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்.
7:163. கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப் பற்றியும் இவர்களிடம் நீர் கேளும்! அங்கு வாழ்ந்த மக்கள் ஸப்த் சனிக்கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை (இவர்களுக்கு) நினைவூட்டும்! அந்தச் சனிக்கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். மேலும், சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவ்வாறு அம்மீன்கள் அவர்களிடம் வரமாட்டா. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால், அவர்களை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கியிருந்தோம்.
7:163. மேலும், (நபியே) கடலோரத்திலிருந்த ஓர் ஊர் (மக்களைப்)பற்றி நீர் அவர்களைக் கேட்பீராக! (தடுக்கப்பட்ட நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் பிடிப்பது தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்புமீறி (மீன் பிடித்து)க் கொண்டிருந்தார்கள், ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலிலிருந்து) மீன்கள் நீர்மட்டத்திற்கு மேலாக தங்கள் தலைகளை நீட்டிக் கொண்டு அவர்கள் முன் வந்தன, சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் அவை வருவதில்லை, இவ்வாறு அவர்கள் பாவங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணத்தால் அவர்களை நாம் சோதனைக்குள்ளாக்கினோம்.
7:164 وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَاْ ۙ اۨللّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ
وَاِذْ போது قَالَتْ கூறியது اُمَّةٌ ஒரு கூட்டம் مِّنْهُمْ அவர்களில் لِمَ ஏன் تَعِظُوْنَ உபதேசிக்கிறீர்கள் قَوْمَاْ ۙ மக்களுக்கு اۨللّٰهُ அல்லாஹ் مُهْلِكُهُمْ அவர்களை அழிப்பவனாக اَوْ அல்லது مُعَذِّبُهُمْ வேதனை செய்பவனாக/அவர்களை عَذَابًا வேதனையால் شَدِيْدًا ؕ கடுமையானது قَالُوْا கூறினர் مَعْذِرَةً புகல் கூறுவதற்காக اِلٰى رَبِّكُمْ உங்கள் இறைவனிடம் وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ அவர்கள் அஞ்சுவதற்காக
7:164. (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.”
7:164. (இதை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எவர்களை அழித்துவிட வேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கிறானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள் ‘‘இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்'' என்றும் பதில் கூறினார்கள்.
7:164. மேலும், இவர்களுக்கு நினைவூட்டும்; அவர்களில் ஒரு குழுவினர் (மற்றொரு குழு வினரிடம்) “எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்கவிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடும்” என்று பதில் கூறினார்கள்.
7:164. இன்னும், அவர்களில் ஒரு சாரார் (நல்லுபதேசம் செய்தவர்களிடம்) “அல்லாஹ் எவர்களை அழித்துவிடுகிறவனாக அல்லது அவர்களை கடினமான வேதனையாக வேதனை செய்கிறவனாக இருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்” என்று கூறியபொழுது அவர்கள், இதனால் நாம் உங்கள் இரட்சகனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் (அதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால் தவறிலிருந்து விலகி அல்லாஹ்வை) அஞ்சி விடலாம்” என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) எனக் கூறினார்கள்.
7:165 فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَيْنَا الَّذِيْنَ يَنْهَوْنَ عَنِ السُّوْۤءِ وَاَخَذْنَا الَّذِيْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَــِٕيْسٍۭ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ
فَلَمَّا போது نَسُوْا மறந்தனர் مَا எதை ذُكِّرُوْا நினைவூட்டப்பட்டனர், உபதேசிக்கப்பட்டனர் بِهٖۤ அதைக் கொண்டு اَنْجَيْنَا பாதுகாத்தோம் الَّذِيْنَ يَنْهَوْنَ தடுத்தவர்களை عَنِ السُّوْۤءِ தீமையைவிட்டு وَاَخَذْنَا இன்னும் பிடித்தோம் الَّذِيْنَ எவர்களை ظَلَمُوْا அநீதியிழைத்தனர் بِعَذَابٍۭ வேதனையால் بَــِٕيْسٍۭ கடுமையான بِمَا كَانُوْا அவர்கள் இருந்த காரணத்தால் يَفْسُقُوْنَ பாவம் செய்வார்கள்
7:165. அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
7:165. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு)விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்.
7:165. இறுதியில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்டபோது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி புரிந்த அனைவரையும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்த காரணத்தால் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம்.
7:165. பின்னர் அவர்களுக்கு எதுபற்றி நினைவுபடுத்தப்பட்டதோ அதை அவர்கள் மறந்து (மீன்பிடிக்க முற்பட்டு)விட்டபோது தீமை செய்வதிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தோரை நாம் காப்பாற்றினோம், அநியாயம் செய்தவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டும் நாம் பிடித்துக் கொண்டோம்.
7:166 فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـٮِٕیْنَ
فَلَمَّا போது عَتَوْا மீறினர் عَنْ எதைவிட்டு مَّا نُهُوْا தடுக்கப்பட்டனர் عَنْهُ அதை விட்டு قُلْنَا கூறினோம் لَهُمْ அவர்களுக்கு كُوْنُوْا ஆகிவிடுங்கள் قِرَدَةً குரங்குகளாக خٰسِـٮِٕیْنَ அபாக்கியவான்களாக
7:166. தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
7:166. ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி ‘‘நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்'' என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.)
7:166. பிறகு அவர்கள் எந்தச் செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கப்பட்டார்களோ அவற்றையே அவர்கள் ஆணவத்துடன் செய்து கொண்டிருந்தபோது “நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள்!” என்று நாம் கூறினோம்.
7:166. ஆகவே, எதனைவிட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தனரோ அதனை விட்டும் அவர்கள் வரம்பு மீறியபோது “நீங்கள் இகழப்பட்டவர்களாக குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் (சபித்துக்) கூறினோம்.
7:167 وَاِذْ تَاَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ يَّسُوْمُهُمْ سُوْٓءَ الْعَذَابِ ؕ اِنَّ رَبَّكَ لَسَرِيْعُ الْعِقَابِ ۖۚ وَاِنَّهٗ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ
وَاِذْ சமயம் تَاَذَّنَ அறிவித்தான் رَبُّكَ உம் இறைவன் لَيَبْعَثَنَّ நிச்சயமாக அனுப்புவான் عَلَيْهِمْ அவர்கள் மீது اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாள் مَنْ எவர்(கள்) يَّسُوْمُهُمْ சிரமம் தருவார்(கள்)/அவர்களுக்கு سُوْٓءَ கொடிய الْعَذَابِ ؕ வேதனையால் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் لَسَرِيْعُ தீவிரமானவன் الْعِقَابِ ۖۚ தண்டிப்பதில் وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளனே رَّحِيْمٌ பெரும் கருணையாளனே
7:167. (நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
7:167. (நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக்கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரை நாம் செய்து வருவோம் என்று உமது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
7:167. மேலும், அவர்களுக்கு மோசமான வேதனையைக் கொடுக்கக்கூடியவர்களையே மறுமைநாள் வரை நாம் அவர்கள் மீது ஏவிக் கொண்டிருப்போம் என உம் இறைவன் அறிவித்ததை நீர் நினைவுகூருவீராக! திண்ணமாக, உம்முடைய இறைவன் தண்டனை வழங்குவதில் மிக விரைவானவன் ஆவான். மேலும், திண்ணமாக அவன் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.
7:167. மேலும், (நபியே!) உமதிரட்சகன்-அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்கக் கூடியவர்களையே அவர்கள்மீது (ஆதிக்கம் வகிக்கும்படி) இறுதிநாள் வரையில் அவன் நிச்சயமாக அனுப்பி வருவான் என்று (அவர்களுக்கு அறிவித்ததை நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) நிச்சயமாக உமதிரட்சகன் (அவனுக்கு மாறு செய்து வந்தோரை) தண்டிப்பதில் மிக்க தீவிரமானவன், மேலும் நிச்சயமாக (அவன்பால் மீளுகிறவர்களுக்கு) அவன் மிக்க மன்னிக்கிறவன் நிகரற்ற அன்புடையவன்.
7:168 وَقَطَّعْنٰهُمْ فِى الْاَرْضِ اُمَمًا ۚ مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَمِنْهُمْ دُوْنَ ذٰ لِكَ وَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّيِّاٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
وَقَطَّعْنٰهُمْ இன்னும் பிரித்தோம்/அவர்களை فِى الْاَرْضِ பூமியில் اُمَمًا ۚ (பல) பிரிவுகளாக مِنْهُمُ அவர்களில் الصّٰلِحُوْنَ நல்லவர்கள் وَمِنْهُمْ அவர்களில் دُوْنَ ذٰ لِكَ மற்றவர்கள் وَبَلَوْنٰهُمْ இன்னும் சோதித்தோம்/அவர்களை بِالْحَسَنٰتِ இன்பங்களைக் கொண்டு وَالسَّيِّاٰتِ இன்னும் துன்பங்கள் لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ அவர்கள் திரும்புவதற்காக
7:168. அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
7:168. அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக இன்பங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.
7:168. நாம் இப்பூமியில் அவர்களைப் பல சமூகங்களாகப் பிரித்து பிளவுபடச் செய்தோம். அவர்களில் சிலர் நல்லவர்களாய் இருந்தனர். வேறு சிலர் அப்படி இருக்கவில்லை. மேலும் இன்ப துன்ப நிலைகளுக்கு ஆளாக்கி, அவர்களைச் சோதித்துக் கொண்டிருந்தோம்; அவர்கள் (நல்வழியின் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக!
7:168. மேலும், அவர்களை இப்புவியில் பல கூட்டத்தினர்களாக நாம் பிரித்து விட்டோம், அவர்களிலிருந்து நல்லோர்களும் இருக்கின்றனர், இதுவல்லாத (பொல்லாதவர்களும்) அவர்களில் இருக்கின்றனர், அவர்கள் (பாவங்களிலிருந்து) மீளுவதற்காக நல்லவைகளைக் கொண்டும், தீயவைகளைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.
7:169 فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ يَاْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰى وَيَقُوْلُوْنَ سَيُغْفَرُ لَـنَا ۚ وَاِنْ يَّاْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ يَاْخُذُوْهُ ؕ اَلَمْ يُؤْخَذْ عَلَيْهِمْ مِّيْثَاقُ الْـكِتٰبِ اَنْ لَّا يَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ وَدَرَسُوْا مَا فِيْهِ ؕ وَالدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ
فَخَلَفَ பின்தோன்றினார்(கள்) مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின்னர் خَلْفٌ பின்னோர் وَّرِثُوا வாரிசுகளாக ஆகினர் الْكِتٰبَ வேதத்திற்கு يَاْخُذُوْنَ வாங்குகிறார்கள் عَرَضَ பொருள் هٰذَا இந்த الْاَدْنٰى அற்பமானது وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் سَيُغْفَرُ لَـنَا ۚ மன்னிக்கப்படும்/எங்களுக்கு وَاِنْ يَّاْتِهِمْ இன்னும் வந்தால் / அவர்களுக்கு عَرَضٌ பொருள் مِّثْلُهٗ இது போன்ற يَاْخُذُوْهُ ؕ வாங்குவார்கள்/அதை اَلَمْ يُؤْخَذْ எடுக்கப்படவில்லையா? عَلَيْهِمْ அவர்கள் மீது مِّيْثَاقُ உறுதிமொழி الْـكِتٰبِ வேதத்தின் اَنْ لَّا يَقُوْلُوْا அவர்கள் கூறக்கூடாது عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் اِلَّا தவிர الْحَـقَّ உண்மையை وَدَرَسُوْا இன்னும் அவர்கள் படித்தனர் مَا فِيْهِ ؕ எதை/அதில் وَالدَّارُ வீடு الْاٰخِرَةُ மறுமை خَيْرٌ சிறந்தது لِّـلَّذِيْنَ எவர்களுக்கு يَتَّقُوْنَ ؕ அஞ்சுகிறார்கள் اَفَلَا تَعْقِلُوْنَ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
7:169. அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்; இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). “எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்” என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், “அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதி மொழி வாங்கப் படவில்லையா?” (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா?
7:169. அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தான்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். மேலும், இக்குற்றத்தைப் பற்றி) ‘‘நாங்கள் மன்னிக்கப்படுவோம்'' என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதையும் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறையச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா?
7:169. ஆனால் அந்த முந்தைய சந்ததிகளுக்குப் பிறகு தீயோர் அவர்களின் பிரதிநிதிகளாய் வந்தார்கள். அவர்கள் இறைமறையின் வாரிசுகளாய் இருந்தபோதிலும் இந்த அற்ப உலகின் ஆதாயங்களைப் பெறுகின்றார்கள். “நாங்கள் நிச்சயம் மன்னிக்கப்படுவோம்” என்றும் கூறுகின்றார்கள். பிறகும் அதுபோன்ற ஆதாயங்கள் அவர்களிடம் வரும்போது அவற்றையும் பாய்ந்து பெறுகின்றார்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாது என்று வேதத்தில் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்பட வில்லையா? மேலும், வேதத்தில் என்ன (எழுதப்பட்டு) உள்ளது என்பதை அவர்கள் படித்திருக்கிறார்களே! இறையச்சமுடையோருக்கு மறுமை இல்லமே சிறந்ததாகும். இதனைக்கூட நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா?
7:169. அவர்களுக்குப் பின்னர், அவர்களுடைய இடத்தை தீய ஒரு சாரார் அடைந்தனர், அவர்கள், (தவ்றாத்) வேதத்திற்கு அனந்தரக்காரர்களாக ஆனார்கள், இவ்வற்ப (உலகின்)பொருளைப் பெற்றுக்கொண்டு வேதத்தை மாற்றி விட்டனர், (இதைப்பற்றி) “எங்களுக்கு மன்னிப்பளிக்கப்படும்” என்றும் கூறுகிறார்கள், (பின்னும் முன்போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப்பொருள் அவர்களிடம் வருமானால், அதனை எடுத்துக் கொள்வார்கள், அவர்கள் அல்லாஹ்வின்மீது உண்மையைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாதென்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் ஓதியும் வருகின்றனர், (எனினும்) அவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.) மேலும் பயபக்தியுடையவர்களுக்கு, மறுமையின் வீடே மிக்க மேலானதாகும், நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?”
7:170 وَالَّذِيْنَ يُمَسِّكُوْنَ بِالْـكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ اِنَّا لَا نُضِيْعُ اَجْرَ الْمُصْلِحِيْنَ
وَالَّذِيْنَ يُمَسِّكُوْنَ உறுதியாக பிடிப்பவர்கள் بِالْـكِتٰبِ வேதத்தை وَاَقَامُوا இன்னும் நிலைநிறுத்துவார்கள் الصَّلٰوةَ ؕ தொழுகையை اِنَّا நிச்சயமாக நாம் لَا نُضِيْعُ வீணாக்க மாட்டோம் اَجْرَ கூலியை الْمُصْلِحِيْنَ சீர்திருத்தவாதிகளின்
7:170. எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
7:170. எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகிறார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை.
7:170. யார் யார் வேதத்தை முறையாகக் கடைப்பிடித்து தொழுகையையும் நிலைநிறுத்துகின்றார்களோ, அத்தகைய நல்லொழுக்கமுடையோருக்கான கூலியைத் திண்ணமாக நாம் வீணாக்கமாட்டோம்.
7:170. இன்னும், (இவ்வேதத்தைப் பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிறைவேற்றி வருகின்றார்களே அத்தகையோர்-(அதுபோன்ற) நல்லோர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம்.
7:171 وَاِذْ نَـتَقْنَا الْجَـبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْۤا اَنَّهٗ وَاقِعٌ ۢ بِهِمْ ۚ خُذُوْا مَاۤ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ
وَاِذْ சமயம் نَـتَقْنَا பிடுங்கினோம் الْجَـبَلَ மலையை فَوْقَهُمْ அவர்களுக்கு மேல் كَاَنَّهٗ போன்று/அது ظُلَّةٌ நிழலிடும் மேகம் وَّظَنُّوْۤا இன்னும் எண்ணினர் اَنَّهٗ நிச்சயமாக அது وَاقِعٌ ۢ விழுந்துவிடும் بِهِمْ ۚ அவர்கள் மீது خُذُوْا பிடியுங்கள் مَاۤ اٰتَيْنٰكُمْ எதை/கொடுத்தோம்/உங்களுக்கு بِقُوَّةٍ பலமாக وَّاذْكُرُوْا இன்னும் நினைவு கூருங்கள் مَا எது فِيْهِ அதில் لَعَلَّكُمْ تَتَّقُوْنَ நீங்கள் அஞ்சுவதற்காக
7:171. நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்” (என்று கூறினோம்).
7:171. தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக்கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாகி விடலாம்'' (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.
7:171. மேலும், இதையும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக; நாம் மலையைப் பெயர்த்து அதனை அவர்களுக்கு மேல் குடையைப் போன்று நிழலிடச் செய்தோம். அது தங்கள் மீது விழுந்துவிடுமோ என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். (அப்போது நாம் அவர்களிடம் கூறினோம்:) “நாம் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! மேலும், அதில் உள்ளவற்றை நினைவில் வையுங்கள்! (அதனால்) நீங்கள் தவறான நடத்தையிலிருந்து தவிர்ந்து கொள்ளக்கூடும்.”
7:171. மேலும், (‘ஸீனாய்’) மலையை அவர்களுக்கு மேல் அது நிழலைப்போன்று (இருக்க) நாம் உயர்த்திய சமயத்தில் நிச்சயமாக அ(ம்மலையான)து அவர்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணி (பயந்த)னர், (அப்போது,) “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள், இன்னும், அதிலுள்ளவற்றை (எப்பொழுதும் கவனத்தில் வைத்து) நினைவு கூருங்கள், (இன்னும் அதிலுள்ளவாறு நீங்கள் செயல்பட்டால்) நீங்கள் பயபக்தியுடையோர்களாகி விடலாம்” (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூர்வீராக!)
7:172 وَ اِذْ اَخَذَ رَبُّكَ مِنْۢ بَنِىْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّيَّتَهُمْ وَ اَشْهَدَهُمْ عَلٰٓى اَنْفُسِهِمْ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰى ۛۚ شَهِدْنَا ۛۚ اَنْ تَقُوْلُوْا يَوْمَ الْقِيٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِيْنَ ۙ
وَ اِذْ சமயம் اَخَذَ எடுத்தான் رَبُّكَ உம் இறைவன் مِنْۢ بَنِىْۤ اٰدَمَ ஆதமின் சந்ததிகளில் مِنْ ظُهُوْرِهِمْ இருந்து/முதுகுகள்/அவர்களுடைய ذُرِّيَّتَهُمْ அவர்களின் சந்ததிகளை وَ اَشْهَدَهُمْ இன்னும் சாட்சியாக்கினான் / அவர்களை عَلٰٓى மீதே اَنْفُسِهِمْ ۚ அவர்கள் اَلَسْتُ நான் இல்லையா? بِرَبِّكُمْ ؕ உங்கள் இறைவனாக قَالُوْا கூறினர் بَلٰى ۛۚ ஏன் இல்லை شَهِدْنَا ۛۚ நாங்கள் சாட்சி கூறினோம் اَنْ تَقُوْلُوْا நீங்கள் கூறாமல் இருப்பதற்காக يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا இருந்தோம் عَنْ هٰذَا இதை விட்டு غٰفِلِيْنَ ۙ கவனமற்றவர்களாக
7:172. உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
7:172. (நபியே!) உமது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாகவும் வைத்து (அவர்களை நோக்கி) ‘‘நான் உங்கள் இறைவனாக இல்லையா?'' என்று கேட்டதற்கு, ‘‘ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறியதை (நீர்அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஏனென்றால் (இதை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்'' என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும்,
7:172. மேலும், (நபியே! இதனையும் இம்மக்களுக்கு) நினைவூட்டுவீராக! உம் இறைவன் ஆதம் உடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய வழித்தோன்றல்களை வெளிப்படுத்தி அவர்களையே அவர்களுக்குச் சாட்சியாக்கி, “நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று கேட்டான். “ஆம், நிச்சயமாக நீதான் எங்கள் இறைவன்; இதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கின்றோம்” என்று அவர்கள் கூறினார்கள். எதற்காக நாம் இவ்வாறு செய்தோமெனில், மறுமைநாளில், “நாங்கள் இதனைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாயிருந்தோம்” என்று நீங்கள் கூறிவிடக் கூடாது;
7:172. (நபியே!) உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி, (அவர்களிடம்) “நான் உங்கள் இரட்சகனல்லவா?” என்று (கேட்டு உடன்படிக்கையை) எடுத்த சமயத்தில் “ஆம் (நீதான் எங்கள் இரட்சகன், அதன் மீது) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்” என்று அவர்கள் கூறியதை, (நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! இது ஏனென்றால், “இதனை ஒருவரும் எங்களுக்கு நினைவூட்டாததனால்) நிச்சயமாக நாங்கள் இதனை மறந்தவர்களாக இருந்துவிட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் சொல்லாதிருப்பதற்காக-
7:173 اَوْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّنْۢ بَعْدِهِمْۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ
اَوْ அல்லது تَقُوْلُوْۤا நீங்கள் கூறாதிருப்பதற்காக اِنَّمَاۤ எல்லாம் اَشْرَكَ இணைவைத்தார்(கள்) اٰبَآؤُنَا எங்கள் மூதாதைகள் مِنْ قَبْلُ முன்னர் وَكُنَّا இருக்கிறோம் ذُرِّيَّةً சந்ததிகளாக مِّنْۢ வந்த بَعْدِهِمْۚ அவர்களுக்கு பின்னர் اَفَتُهْلِكُنَا அழிப்பாயா?/எங்களை بِمَا فَعَلَ செய்ததற்காக الْمُبْطِلُوْنَ பொய்யர்கள்
7:173. அல்லது, “இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
7:173. அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே, (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?'' என்று கூறாதிருப்பதற்காகவே (இதை நாம் ஞாபக மூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
7:173. அல்லது முன்னர் எங்கள் மூதாதையர்களே இறைவனுக்கு இணை கற்பிக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னர் வந்த வழித்தோன்றல்கள்தாம்! எனவே தவறான மக்கள் செய்த செயலுக்காக எங்களை நீ தண்டிக்கப் போகின்றாயா என்றும் நீங்கள் கூறக்கூடாது என்பதற்காகத்தான்!
7:173. அல்லது, “இணையாக்கியதெல்லாம் (எங்களுக்கு முன்னிருந்த எங்கள் மூதாதையர்கள்தாம், நாங்களோ அவர்களுக்குப் பின்னுள்ள (அவர்களுடைய சந்ததியினராக இருக்கிறோம் - ஆகவே அந்த வழி கெட்டோர்கள் செய்தவற்றுக்காக நீ எங்களை அழித்துவிடலாமா?” என்று நீங்கள் சொல்லாமலிருப்பதற்காக (இதனை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறோம். என்று நபியே! நீர் கூறுவீராக!)
7:174 وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
وَكَذٰلِكَ இவ்வாறே نُفَصِّلُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை وَلَعَلَّهُمْ يَرْجِعُوْنَ இன்னும் அவர்கள் திரும்புவதற்காக
7:174. அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.
7:174. அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காக (நம்) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரித்துக் கூறுகிறோம்.
7:174. மேலும், இவ்வாறு நாம் சான்றுகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றோம்; (நல்வழியின் பக்கம்) அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக!
7:174. மேலும், இவ்வாறே (நம்) வசனங்களை நாம் விவரிக்கிறோம், (இதன் மூலம்) அவர்கள் (பாவங்களிலிருந்து விடுபட்டு நம்மிடம்) திரும்புவதற்காகவும் (நாம் விவரித்துக் கூறுகிறோம்.)
7:175 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ الَّذِىْۤ اٰتَيْنٰهُ اٰيٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّيْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِيْنَ
وَاتْلُ ஓதிக் காட்டுவீராக عَلَيْهِمْ அவர்கள் மீது نَبَاَ செய்தியை الَّذِىْۤ எவன் اٰتَيْنٰهُ கொடுத்தோம்/அவனுக்கு اٰيٰتِنَا நம் அத்தாட்சிகளை فَانْسَلَخَ கழண்டான் مِنْهَا அதிலிருந்து فَاَتْبَعَهُ பின்தொடர்ந்தான்/அவனை الشَّيْطٰنُ ஷைத்தான் فَكَانَ ஆகிவிட்டான் مِنَ الْغٰوِيْنَ வழிகெட்டவர்களில்
7:175. (நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.
7:175. (நபியே!) நீர் அவர்களுக்கு (‘பல்ஆம் இப்னு பாஊர்' என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பிப்பீராக. அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் ‘‘(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்.
7:175. மேலும், (நபியே!) ஒரு மனிதனின் நிலையை நீர் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவன் எத்தகையவன் என்றால், நாம் அவனுக்கு நம்முடைய வசனங்களின் அறிவை வழங்கியிருந்தும் அவன், அவற்றைப் பின்பற்றாமல் நழுவி ஓடினான். இறுதியில், ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். இவ்வாறாக, அந்த மனிதன் வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.
7:175. நாம் எவனுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோமோ, அத்தகையவனின் செய்தியை (யூதர்களாகிய) அவர்களுக்கு (நபியே! நீர்) ஒதிக் காண்பிப்பீராக! பின்னர், அவன் அதிலிருந்து கழன்று கொண்டான், ஆகவே. ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான், எனவே, (அவனது சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழி தவறியவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.
7:176 وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰـكِنَّهٗۤ اَخْلَدَ اِلَى الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰٮهُ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْـكَلْبِ ۚ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ؕ ذٰ لِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
وَلَوْ شِئْنَا நாம் நாடியிருந்தால் لَرَفَعْنٰهُ உயர்த்தியிருப்போம்/அவனை بِهَا அவற்றைக் கொண்டு وَلٰـكِنَّهٗۤ என்றாலும்/நிச்சயமாக அவன் اَخْلَدَ நிரந்தரம் தேடினான் اِلَى الْاَرْضِ பூமியில் وَاتَّبَعَ இன்னும் பின்பற்றினான் هَوٰٮهُ ۚ தன் ஆசையை فَمَثَلُهٗ ஆகவே அவனுடைய உதாரணம் كَمَثَلِ உதாரணத்தைப் போன்று الْـكَلْبِ ۚ நாய் اِنْ تَحْمِلْ நீர் துரத்தினால் عَلَيْهِ அதை يَلْهَثْ அது நாக்கைத் தொங்கவிடும் اَوْ அல்லது تَتْرُكْهُ நீர் விட்டு விட்டால்/அதை يَلْهَثْ ؕ அது நாக்கைத் தொங்கவிடும் ذٰ لِكَ مَثَلُ இது/உதாரணம் الْقَوْمِ மக்கள் الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا ۚ நம் வசனங்களை فَاقْصُصِ விவரிப்பீராக الْقَصَصَ சரித்திரத்தை لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ அவர்கள் சிந்திப்பதற்காக
7:176. நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
7:176. நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் அதைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம் வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள்.
7:176. நாம் நாடியிருந்தால், அவ்வசனங்களின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் இவ்வுலக வாழ்விலேயே மோகம் கொண்டான்; மேலும், தன்னுடைய மன இச்சைகளையே பின்பற்றலானான். எனவே அவனுடைய நிலை நாயைப் போன்றதாகும்! அதனை நீர் துரத்தினாலும், நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்; துரத்தாமல் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்! நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்ற மக்களுக்கு இதுவே உதாரணமாகும். இச்சம்பவங்களை நீர் இவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பீராக! அதன் மூலம் இவர்கள் சிந்தித்து உணரக்கூடும்!
7:176. மேலும், நாம் நாடியிருந்தால், (நம் அத்தாட்சிகளான) அவற்றைக் கொண்டு அவனை நாம் உயர்த்தியிருப்போம், எனினும் அவன் பூமியின் (ஆடம்பர வாழ்க்கையின்)பால் சாய்ந்துவிட்டான், தன் (மன) இச்சையையும் பின்பற்றி விட்டான், ஆகவே அவனுடைய உதாரணம்: (ஒரு) நாயின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது, நீர் அதனைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது, அதனை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது, இதுவே., நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினார்களே அந்தக் கூட்டத்தினர்க்கு உதாரணமாகும், ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெருவதற்காக (இத்தகைய) வரலாற்றைக் கூறுவீராக!
7:177 سَآءَ مَثَلَاْ ۨالْقَوْمُ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا يَظْلِمُوْنَ
سَآءَ கெட்டு விட்டனர் مَثَلَاْ உதாரணமாக ۨالْقَوْمُ மக்கள் الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَاَنْفُسَهُمْ தங்களுக்கே كَانُوْا இருந்தனர் يَظْلِمُوْنَ அநீதியிழைக்கிறார்கள்
7:177. நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
7:177. நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது; அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
7:177. நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறி, தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தாரின் உவமை எத்துணைக் கெட்டது!
7:177. நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய கூட்டத்தாரின் உதாரணம் மிகக் கெட்டதாகும், அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்கிறவர்களாகவும் இருந்தனர்.
7:178 مَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِىْۚ وَمَنْ يُّضْلِلْ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
مَنْ எவரை يَّهْدِ நேர்வழி செலுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் فَهُوَ அவர்தான் الْمُهْتَدِىْۚ நேர்வழிபெற்றவர் وَمَنْ இன்னும் எவர்(களை) يُّضْلِلْ வழிகெடுக்கிறான் فَاُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ நஷ்டவாளிகள்
7:178. அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்; யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.
7:178. அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே!
7:178. அல்லாஹ் எவருக்கு நேர்வழியை அருளுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாருக்கு அல்லாஹ் தன் வழிகாட்டுதலை வழங்கவில்லையோ அத்தகையவர்களே பேரிழப்புக்கு ஆளானவர்கள்!
7:178. அல்லாஹ் யாரை நேர்வழி செலுத்துகின்றானோ அவரே நேர்வழி அடைந்தவர், மேலும், எவரை அவன் வழி தவறச் செய்கிறானோ அத்தகையோர்தாம் நஷ்டவாளிகள்.
7:179 وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۖ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ؕ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ
وَلَـقَدْ ذَرَاْنَا படைத்து விட்டோம் لِجَـهَنَّمَ நரகத்திற்காக كَثِيْرًا அதிகமானோரை مِّنَ الْجِنِّ ஜின்களில் وَالْاِنْسِ ۖ இன்னும் மனிதர்கள் لَهُمْ அவர்களுக்கு قُلُوْبٌ உள்ளங்கள் لَّا يَفْقَهُوْنَ சிந்தித்து விளங்க மாட்டார்கள் بِهَا அவற்றைக் கொண்டு وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு اَعْيُنٌ கண்கள் لَّا يُبْصِرُوْنَ பார்க்க மாட்டார்கள் بِهَا அவற்றைக் கொண்டு وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு اٰذَانٌ காதுகள் لَّا يَسْمَعُوْنَ செவிசாய்க்க மாட்டார்கள் بِهَا ؕ அவற்றைக் கொண்டு اُولٰۤٮِٕكَ அவர்கள் كَالْاَنْعَامِ கால்நடைகளைப் போன்று بَلْ மாறாக هُمْ அவர்கள் اَضَلُّ ؕ அதிகம் வழிகெட்டவர்(கள்) اُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْغٰفِلُوْنَ கவனமற்றவர்கள்
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
7:179. நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்கள் ஆவார்.
7:179. மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.
7:179. திட்டமாக ஜின்களிலும், மனிதர்களிலும் அநேகரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம், (அவர்கள் எத்தகையோரென்றால்,) அவர்களுக்கு இதயங்களிருக்கின்றன, அவற்றைக்கொண்டு (நல்லவற்றை) அவர்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள், அவர்களுக்கு கண்களுமுண்டு, (எனினும் அவற்றைக் கொண்டு (இவ்வுலகிலுள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள், அவர்களுக்குக் காதுகளுமுண்டு, அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லவற்றைச்) செவியேற்கமாட்டார்கள், அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள், ஏன் (அவற்றைவிட) அவர்கள் மிக அதிகமாக வழிகெட்டவர்கள்; அவர்களேதாம் (நம் வசனங்களை அலட்சியம் செய்து) பராமுகமானவர்களாவர்.
7:180 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
وَلِلّٰهِ அல்லாஹ்வுக்கே الْاَسْمَآءُ பெயர்கள் الْحُسْنٰى மிக அழகிய(வை) فَادْعُوْهُ ஆகவே அழையுங்கள்/அவனை بِهَا அவற்றைக் கொண்டு وَذَرُوا விட்டு விடுங்கள் الَّذِيْنَ எவர்களை يُلْحِدُوْنَ தவறிழைப்பார்கள் فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ அவனுடைய பெயர்களில் سَيُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவார்கள் مَا எதற்கு كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ செய்வார்கள்
7:180. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
7:180. அல்லாஹ்வுக்கு மிக அழகான திருப்பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டு விடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் கொடுக்கப்படுவார்கள்.
7:180. அல்லாஹ் அழகிய பெயர்களுக்கு உரித்தானவன்; எனவே, அந்த அழகிய பெயர்களைக் கொண்டே அவனை அழையுங்கள்! மேலும், அவனுக்குப் பெயர்கள் வைப்பதில் வழிபிறழ்ந்து செல்பவர்களை விட்டுவிடுங்கள்! அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றின் கூலியை அவர்கள் பெற்றே தீருவார்கள்.
7:180. இன்னும், அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன, ஆகவே அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள், அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக் கூறுவோரை விட்டுவிடுங்கள், அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்குரிய கூலியைக் கொடுக்கப்படுவார்கள்.
7:181 وَمِمَّنْ خَلَقْنَاۤ اُمَّةٌ يَّهْدُوْنَ بِالْحَـقِّ وَبِهٖ يَعْدِلُوْنَ
وَمِمَّنْ எவர்களிலிருந்து خَلَقْنَاۤ படைத்தோம் اُمَّةٌ ஒரு கூட்டம் يَّهْدُوْنَ நேர்வழி காட்டுகின்றனர் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு وَبِهٖ இன்னும் அதைக்கொண்டே يَعْدِلُوْنَ நீதமாக நடக்கின்றனர்
7:181. நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.
7:181. நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.
7:181. நாம் படைத்த மக்களில் ஒரு பிரிவினர் இப்படியும் இருக்கிறார்கள்; அவர்கள் முற்றிலும் சத்தியத்திற்கேற்பவே வழிகாட்டுகிறார்கள்.மேலும், சத்தியத்திற்கேற்பவே நீதிவழங்குகிறார்கள்.
7:181. மேலும் நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள், அவர்கள் உண்மைக்கு வழிகாட்டுகிறார்கள், (அதைப் பின்பற்றுவதுடன் மற்ற மனிதர்களுக்கும் அறிவித்து) அதனைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.
7:182 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَ ۖ ۚ
وَالَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை سَنَسْتَدْرِجُهُمْ விட்டுவிட்டுப் பிடிப்போம்/அவர்களை مِّنْ حَيْثُ விதத்தில் لَا يَعْلَمُوْنَ ۖ ۚ அறியமாட்டார்கள்
7:182. எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.
7:182. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை அவர்கள் உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் படிப்படியாக (கீழ் நிலைக்கு இறக்கி நரகத்திலும்) புகுத்தி விடுவோம்.
7:182. நம்முடைய வசனங்களைப் பொய்யென்றுரைத்தவர்களை, அவர்கள் அறியாத வகையில் படிப்படியாக அழிவின் பக்கம் நாம் கொண்டு செல்வோம்.
7:182. இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களே அத்தகையோர் - (அவர்களுக்கு சகலத்தையும் கொடுத்து) அவர்கள் உணர்ந்து கொள்ளாத விதத்தில் அவர்களை நாம் படிப்படியாக (கீழ்நிலைக்கு இறக்கி)ப்பிடித்துவிடுவோம்.
7:183 وَاُمْلِىْ لَهُمْ ؕ اِنَّ كَيْدِىْ مَتِيْنٌ
وَاُمْلِىْ அவகாசமளிப்பேன், பிற்படுத்துவேன் لَهُمْ ؕ அவர்களுக்கு اِنَّ كَيْدِىْ நிச்சயமாக என் சூழ்ச்சி مَتِيْنٌ மிக உறுதியானது
7:183. (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.
7:183. (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு (நீண்ட) அவகாசம் அளிக்கிறேன். நிச்சயமாக என் சூழ்ச்சி (திட்டம்) மிக்க உறுதியானது; (தப்பிக்க முடியாதது.)
7:183. மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது.
7:183. அன்றியும் (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என்னுடைய சதி(த் திட்டம்) மிக்க உறுதியானது.
7:184 اَوَلَمْ يَتَفَكَّرُوْا ٚ مَا بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍؕ اِنْ هُوَ اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ
اَوَلَمْ يَتَفَكَّرُوْا ٚ அவர்கள் சிந்திக்கவில்லையா? مَا இல்லை بِصَاحِبِهِمْ அவர்களுடைய தோழருக்கு مِّنْ جِنَّةٍؕ அறவே பைத்தியம் اِنْ இல்லை هُوَ அவர் اِلَّا தவிர نَذِيْرٌ எச்சரிப்பவர் مُّبِيْنٌ தெளிவானவர்
7:184. அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.
7:184. (நம் தூதராகிய) அவர்களுடைய (இத்)தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே அன்றி வேறில்லை.
7:184. இவர்கள் (எப்போதேனும்) சிந்தித்திருக்கின்றார்களா? இவர்களுடைய தோழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை. அவர் (தீய விளைவு ஏற்படும் முன்னர் அதைப் பற்றி) தெளிவான முறையில் எச்சரிக்கை செய்பவரேயாவார்.
7:184. (நம் நபியாகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே தவிர வேறில்லை.
7:185 اَوَلَمْ يَنْظُرُوْا فِىْ مَلَـكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَىْءٍ ۙ وَّاَنْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْ ۚ فَبِاَىِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ
اَوَلَمْ يَنْظُرُوْا அவர்கள் கவனிக்கவில்லையா? فِىْ مَلَـكُوْتِ பேராட்சியில் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا خَلَقَ இன்னும் எவற்றைப்படைத்தான் اللّٰهُ அல்லாஹ் مِنْ شَىْءٍ ۙ பொருளிலும் وَّاَنْ என்பதிலும் عَسٰٓى கூடும் اَنْ يَّكُوْنَ قَدِ اقْتَرَبَ நெருங்கி இருக்க اَجَلُهُمْ ۚ அவர்களுடைய தவணை فَبِاَىِّ حَدِيْثٍۢ எந்த செய்தியை? بَعْدَهٗ இதற்குப் பின்னர் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள்
7:185. வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?
7:185. வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா?) இவ்வேதத்திற்குப் பின்னர் எதைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.
7:185. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சியமைப்பைக் குறித்து இவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ் படைத்திருக்கும் எந்தப் பொருளையேனும் இவர்கள் கண் திறந்து பார்க்கவில்லையா? இன்னும் தங்கள் வாழ்க்கைத் தவணை முடியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதைக்கூட இவர்கள் சிந்திக்கவில்லையா? ஆக, (தூதரின்) இந்த எச்சரிக்கைக்குப் பின் வேறு எந்த அறிவுரையின் மீதுதான் இவர்கள் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்?
7:185. இன்னும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சியிலும், எப்பொருளிலிருந்தும் அல்லாஹ் படைத்திருக்கின்றவற்றிலும், இன்னும் அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியதாக ஆகி இருக்கக் கூடும் என்பதிலும் அவர்கள் (உணர்ந்து) பார்க்கவில்லையா? (குர் ஆனாகிய) இதற்குப் பின்னர் எந்தச் செய்தியைத்தான் அவர்கள் விசுவாசங்கொள்ளப் போகிறார்கள்?
7:186 مَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِىَ لَهٗ ؕ وَ يَذَرُهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ
مَنْ எவரை يُّضْلِلِ வழிகெடுப்பான் اللّٰهُ அல்லாஹ் فَلَا அறவே இல்லை هَادِىَ நேர்வழிசெலுத்துபவர் لَهٗ ؕ அவரை وَ يَذَرُ இன்னும் விட்டுவிடுகிறான் هُمْ அவர்களை فِىْ طُغْيَانِهِمْ அவர்களுடைய அட்டூழியத்தில் يَعْمَهُوْنَ கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
7:186. எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.
7:186. எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே தட்டழி(ந்து கெட்டலை)யும்படி விட்டுவிடுகிறான்.
7:186. அல்லாஹ் எவரை வழிதவறச் செய்கின்றானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் எவருமிலர். மேலும், அல்லாஹ் இவர்களை தங்களுடைய ஆணவப் போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு விட்டுவிடுகின்றான்.
7:186. எவரை அல்லாஹ் தவறான வழியில் செலுத்திவிடுகிறானோ அவரை நேரான வழியில் செலுத்துபவர் எவரும் இலர், தங்கள் வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிகிறவர்களாக அவன் விட்டும்விடுகின்றான்.
7:187 يَسْــٴَــلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰٮهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّىْ ۚ لَا يُجَلِّيْهَا لِوَقْتِهَاۤ اِلَّا هُوَۘ ؕؔ ثَقُلَتْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ لَا تَاْتِيْكُمْ اِلَّا بَغْتَةً ؕ يَسْــٴَــلُوْنَكَ كَاَنَّكَ حَفِىٌّ عَنْهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
يَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ السَّاعَةِ நேரத்தைப் பற்றி اَيَّانَ எப்போது مُرْسٰٮهَا ؕ அது நிகழ்வது قُلْ கூறுவீராக اِنَّمَا எல்லாம் عِلْمُهَا அதன் அறிவு عِنْدَ இடம்தான் رَبِّىْ ۚ என் இறைவன் لَا மாட்டான் يُجَلِّيْهَا அதை வெளிப்படுத்த لِوَقْتِهَاۤ அதன் நேரத்தில் اِلَّا தவிர هُوَۘ ؕؔ அவனை ثَقُلَتْ கனத்து விட்டது فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِؕ இன்னும் பூமியில் لَا வராது تَاْتِيْكُمْ அது உங்களிடம் اِلَّا தவிர بَغْتَةً ؕ திடீரென்றே يَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் كَاَنَّكَ நிச்சயமாக போன்று/நீர் حَفِىٌّ அறிந்தவர் عَنْهَا ؕ அதைப் பற்றி قُلْ கூறுவீராக اِنَّمَا எல்லாம் عِلْمُهَا அதன் அறிவு عِنْدَ இடம் اللّٰهِ அல்லாஹ் وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானோர் النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
7:187. அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.
7:187. (நபியே!) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது; மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்.''
7:187. இறுதித் தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றி அது எப்போது வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமேயுள்ளது. அவனே அதற்குரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவான். வானங்களிலும், பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக் கடுமையான நேரமாயிருக்கும். அது திடீரென்றுதான் உங்களை வந்தடையும்.” அதைப் பற்றி நீர் ஆராய்ந்து கொண்டிருப்பவரைப் போல உம்மைக் கருதி உம்மிடம் வினவுகின்றார்கள். நீர் கூறும்: “அதைப்பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.” ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இவ்வுண்மையை அறியாதிருக்கிறார்கள்.
7:187. (நபியே!) மறுமை நாள் பற்றி-அதனுடைய வருகை எப்பொழுது என- அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், (அதற்கு) நீர் கூறுவீராக! அதன் அறிவெல்லாம் என் இரட்சகனிடத்தில்தான், அதை (வரவேண்டிய) அதற்குரிய நேரத்தில் அவனையன்றி வேறு எவரும் வெளிப்படுத்த மாட்டார், (அதுபற்றி முற்றிலும் அறிந்தவன் அவனே! அது சமயம்) வானங்களிலும், பூமியிலும் பளு(வான சம்பவங்கள்) ஏற்பட்டுவிடும், திடீரெனவே தவிர அது உங்களிடம் வராது, நிச்சயமாக நீர் அதனை முற்றிலும் அறிந்து கொண்டவர் போல (அதனைப்பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள், (அதற்கு) அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது, எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டர்கள் என்று நபியே!) நீர் கூறுவீராக.
7:188 قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَـفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ ۖ ۛۚ وَمَا مَسَّنِىَ السُّۤوْءُ ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ
قُلْ கூறுவீராக لَّاۤ اَمْلِكُ நான் உரிமை பெறமாட்டேன் لِنَفْسِىْ எனக்கு نَـفْعًا எந்த ஒரு பலனையும் وَّلَا ضَرًّا எந்த ஒரு கெடுதியையும் اِلَّا தவிர مَا எதை شَآءَ நாடினான் اللّٰهُ ؕ அல்லாஹ் وَلَوْ كُنْتُ நான் இருந்திருந்தால் اَعْلَمُ அறிபவனாக الْغَيْبَ மறைவானவற்றை لَاسْتَكْثَرْتُ அதிகம்பெற்றிருப்பேன் مِنَ الْخَيْرِ ۖ ۛۚ நன்மையில் وَمَا مَسَّنِىَ என்னை தீண்டி இருக்காது السُّۤوْءُ ۛۚ தீங்கு اِنْ اَنَا நான் இல்லை اِلَّا தவிர نَذِيْرٌ எச்சரிப்பவராக وَّبَشِيْرٌ இன்னும் நற்செய்தி கூறுபவராக لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள்
7:188. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”
7:188. (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு ஒரு நன்மையையோ தீமையையோ செய்து கொள்ள சக்தி பெறமாட்டேன். நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; ஒரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை.''
7:188. (நபியே, அவர்களிடம்) நீர் கூறும்: “நான் எனக்கு எவ்வித நன்மையையும், இழப்பையும் ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றிலேன். அல்லாஹ் எதை நாடுகின்றானோ அதுவே நிகழ்கிறது. மறைவானவற்றை நான் அறிபவனாக இருந்திருந்தால் எனக்கு நானே நிறைய ஆதாயங்களைப் பெற்றிருப்பேன். மேலும், எந்தத் தீங்கும் என்னை அணுகியிருக்காது. என்னை நம்புகின்ற மக்களுக்கு நான் எச்சரிக்கை செய்பவனும், நற்செய்தி அறிவிப்பவனுமாகவே இருக்கின்றேன்.”
7:188. (நபியே!) நீர் கூறுவீராக “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எவ்வித நன்மையைச் செய்வதற்)கும், தீமை(யைத் தடுத்துக் கொள்வதற்)கும் நான் சக்தி பெறமாட்டேன், மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால், நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன், தீமை என்னைத் தொட்டிருக்காது, நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், விசுவாசங் கொண்ட சமுதாயத்தினருக்கு நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை”
7:189 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّـفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ اِلَيْهَا ۚ فَلَمَّا تَغَشّٰٮهَا حَمَلَتْ حَمْلًا خَفِيْفًا فَمَرَّتْ بِهٖ ۚ فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَٮِٕنْ اٰتَيْتَـنَا صَالِحًا لَّـنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ
هُوَ அவன் الَّذِىْ எவன் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் مِّنْ இருந்து نَّـفْسٍ ஒரு மனிதர் وَّاحِدَةٍ ஒரே وَّجَعَلَ இன்னும் உருவாக்கினான் مِنْهَا இன்னும் அவரிலிருந்தே زَوْجَهَا அவருடைய மனைவியை لِيَسْكُنَ அவர் வசிப்பதற்காக, நிம்மதி பெறுவதற்காக اِلَيْهَا ۚ அவளுடன் فَلَمَّا எப்போது تَغَشّٰٮهَا மூடினார்/அவளை حَمَلَتْ கர்ப்பமானாள் حَمْلًا கர்ப்பம் خَفِيْفًا லேசான فَمَرَّتْ நடந்தாள் بِهٖ ۚ அதைக் கொண்டு فَلَمَّاۤ போது اَثْقَلَتْ கனமானாள் دَّعَوَا இருவரும் பிரார்த்தித்தனர் اللّٰهَ அல்லாஹ்விடம் رَبَّهُمَا அவ்விருவரின் இறைவனை لَٮِٕنْ اٰتَيْتَـنَا நீ கொடுத்தால் / எங்களுக்கு صَالِحًا நல்ல குழந்தையை لَّـنَكُوْنَنَّ நிச்சயமாக ஆகிவிடுவோம் مِنَ الشّٰكِرِيْنَ நன்றிசெலுத்துவோரில்
7:189. அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
7:189. ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான். அவளை அவர் (தன் தேகத்தைக் கொண்டு) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமானாள். பின்னர் அதை(ச் சுமந்து) கொண்டு திரிந்தாள். அவள் சுமை பளுவாகவே ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நல்லதொரு சந்ததியை அளித்தால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம்'' என்று அவ்விருவரும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
7:189. அல்லாஹ்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும், அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக! பிறகு ஆண், பெண்ணோடு கூடியபோது அவள் இலேசான கர்ப்பம் தரித்தாள். அதனை அவள் சுமந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள். பின்னர், அது கனமானபோது இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனாகிய அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்: “நீ எங்களுக்கு நல்லதொரு குழந்தையைத் தந்தால், திண்ணமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துவோராயிருப்போம்.”
7:189. அவன் எத்தகையவனென்றால், ஒரே ஆத்மாவிலிருந்து உங்களைப் படைத்து அதிலிருந்து அதற்குரிய ஜோடி(யான மனைவி)யை அவளுடன் கூடி வசிப்பதற்காகவும் உண்டாக்கினான், அவளை அவர் மூடிக் கொண்டபோது அவள் இலேசான சுமை சுமந்தாள், பின்னர் அதனை(ச்சுமந்து)க் கொண்டு திரிந்தாள், அது கனமானபோது, “நீ எங்களுக்கு (சந்ததியில்) நல்லதை அளித்தால், நிச்சயமாக நாங்கள் (உனக்கு) நன்றி செலுத்துவோரில் இருப்போம்” என்று அவ்விருவருடைய இரட்சகனாகிய அல்லாஹ்விடம் அவ்விருவரும் பிரார்த்தித்தார்கள்.
7:190 فَلَمَّاۤ اٰتٰٮهُمَا صَالِحًـا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِيْمَاۤ اٰتٰٮهُمَا ۚ فَتَعٰلَى اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَ
فَلَمَّاۤ போது اٰتٰٮهُمَا கொடுத்தான்/அவ்விருவருக்கும் صَالِحًـا நல்ல குழந்தையை جَعَلَا அவ்விருவரும் ஆக்கினர் لَهٗ அவனுக்கு شُرَكَآءَ இணைகளை فِيْمَاۤ எதில் اٰتٰٮهُمَا ۚ கொடுத்தான் / அவ்விருவருக்கு فَتَعٰلَى உயர்ந்தவன் اللّٰهُ அல்லாஹ் عَمَّا எவற்றைவிட்டு يُشْرِكُوْنَ இணைவைக்கிறார்கள்
7:190. அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.”
7:190. (அவர்கள் பிரார்த்தனையின்படி) அவர்களுக்கு (இறைவன்) நல்லதோர் சந்ததியை அளித்தாலோ அதை அவர்களுக்கு அளித்ததில் (அவர்களுடைய தெய்வங்களும் துணையாய் இருந்தன என அவற்றை இறைவனுக்குக்) கூட்டாக்குகின்றனர். (அவர்கள் கூறும்) இணை துணைகளிலிருந்து அல்லாஹ் மிக உயர்ந்தவன்.
7:190. ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு நல்லதொரு குழந்தையை வழங்கியபோது அவன் அவர்களுக்கு வழங்கிய கொடையில், அவனோடு மற்றவர்களையும் இணையாக்கினார்கள். அவர்களுடைய இணைவைப்புச் செயல்களிலிருந்து அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன் ஆவான்.
7:190. அவ்விருவருக்கும் நல்ல (சந்ததியான)தை அவன் கொடுத்தபோது அவர்களுக்கு அவன் கொடுத்தவற்றில் அவ்விருவரும் இணையாளர்களை ஆக்கினார்கள், அவர்கள் இணைவைப்பதைவிட்டும் அல்லாஹ் உயர்வானவன்.
7:191 اَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْـٴًـــــا وَّهُمْ يُخْلَقُوْنَ ۖ
اَيُشْرِكُوْنَ இணையாக்குகிறார்களா? مَا எவர்களை لَا يَخْلُقُ படைக்கமாட்டார்(கள்) شَيْـٴًـــــا எந்த ஒரு பொருளையும் وَّهُمْ அவர்கள் يُخْلَقُوْنَ ۖ படைக்கப்படுகிறார்கள்
7:191. எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!
7:191. ஒரு பொருளையும் படைக்க சக்தியற்றவற்றை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவையோ (அவனால்) படைக்கப்பட்டவைதான்.
7:191. (எத்தகைய அறிவிலிகளாக இருக்கின்றார்கள், இவர்கள்!) எப்பொருளையும் படைக்க முடியாதவற்றையா அவனோடு இணை வைக்கின்றார்கள்? அவையே இறைவனால் படைக்கப்பட்டவைதாமே!
7:191. எப்பொருளையும் படைக்காதவற்றை அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகின்றனரா? அவர்களும் (அவனால்) படைக்கப்பட்டவர்களே!
7:192 وَلَا يَسْتَطِيْعُوْنَ لَهُمْ نَـصْرًا وَّلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ
وَلَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் لَهُمْ இவர்களுக்கு نَـصْرًا உதவி செய்ய وَّلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ இன்னும் தங்களுக்கும் உதவிக் கொள்ள மாட்டார்கள்
7:192. அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்;(அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.
7:192. அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.
7:192. இவர்களுக்கு எவ்வித உதவியும் செய்திட அவற்றால் முடியாது. ஏன் தமக்குத்தாமே உதவி செய்யும் நிலையில்கூட அவை இல்லை.
7:192. மேலும், அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவி செய்யச் சக்தி பெற மாட்டார்கள், தங்களுக்குத் தாங்களே (ஏதும்) உதவி செய்து கொள்ளவும் (சக்தி பெற) மாட்டார்கள்.
7:193 وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَتَّبِعُوْكُمْ ؕ سَوَآءٌ عَلَيْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْـتُمْ صٰمِتُوْنَ
وَاِنْ تَدْعُوْ நீங்கள் அழைத்தால் هُمْ அவர்களை اِلَى الْهُدٰى நேர்வழிக்கு لَا يَتَّبِعُوْ பின்பற்ற மாட்டார்கள் كُمْ ؕ உங்களை سَوَآءٌ சமம்தான் عَلَيْكُمْ உங்களுக்கு اَدَعَوْتُمُوْ நீங்கள் அழைத்தாலும் هُمْ அவர்களை اَمْ அல்லது اَنْـتُمْ நீங்கள் صٰمِتُوْنَ வாய்மூடியவர்களாக
7:193. (இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
7:193. நீங்கள் அவற்றை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவை பின்பற்றாது. நீங்கள் அவற்றை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே.
7:193. நேரான வழியில் வருமாறு அவற்றுக்கு நீங்கள் அழைப்பு விடுத்தால், அவை உங்களைப் பின்பற்றி வரமாட்டா! நீங்கள் அவற்றிடம் பிரார்த்திப்பதும் அல்லது நீங்கள் மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்தவரை சமமே!
7:193. நீங்கள் அவர்களை நேர் வழியின்பால் அழைத்தபோதிலும் உங்களை அவர்கள் பின்பற்றமாட்டார்கள், நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டவர்களாக இருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
7:194 اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُـكُمْ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَـكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் تَدْعُوْنَ பிரார்த்திக்கிறீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி عِبَادٌ அடிமைகள் اَمْثَالُـكُمْ உங்களைப் போன்ற فَادْعُوْ பிரார்த்தியுங்கள் هُمْ அவர்களிடம் فَلْيَسْتَجِيْبُوْا அவர்கள் பதிலளிக்கட்டும் لَـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ உண்மையாளர்களாக
7:194. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
7:194. நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர எவர்களை நீங்கள் (இறைவனென) அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழையுங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்!
7:194. அல்லாஹ்வை விடுத்து எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களைப் போன்ற படைப்பினங்களே! அவற்றிடம் பிரார்த்தனை செய்து பாருங்கள்! அவற்றைப் பற்றி உங்கள் எண்ணங்கள் சரியாக இருந்தால் அவை உங்கள் அழைப்பை ஏற்று பதில் தரட்டுமே!
7:194. நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர, நீங்கள் (தெய்வங்களென அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே, (உங்களுக்குப் பயனளிப்பார்கள் என்ற கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.
7:195 اَلَهُمْ اَرْجُلٌ يَّمْشُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اَيْدٍ يَّبْطِشُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اَعْيُنٌ يُّبْصِرُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا ؕ قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِيْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ
اَلَهُمْ ?/அவர்களுக்கு اَرْجُلٌ கால்கள் يَّمْشُوْنَ நடப்பார்கள் بِهَآ அவற்றைக் கொண்டு اَمْ அல்லது لَهُمْ அவர்களுக்கு اَيْدٍ கைகள் يَّبْطِشُوْنَ பிடிப்பார்கள் بِهَآ அவற்றைக் கொண்டு اَمْ அல்லது لَهُمْ அவர்களுக்கு اَعْيُنٌ கண்கள் يُّبْصِرُوْنَ பார்ப்பார்கள் بِهَآ அவற்றைக் கொண்டு اَمْ அல்லது لَهُمْ அவர்களுக்கு اٰذَانٌ காதுகள் يَّسْمَعُوْنَ கேட்பார்கள் بِهَا ؕ அவற்றைக் கொண்டு قُلِ கூறுவீராக ادْعُوْا பிரார்த்தியுங்கள் شُرَكَآءَ தெய்வங்களிடம் كُمْ உங்கள் ثُمَّ பிறகு كِيْدُوْنِ எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள் فَلَا அளிக்காதீர்கள் تُنْظِرُوْنِ எனக்கு அவகாசம்
7:195. அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று.
7:195. (சிலை வணங்கிகளே! நீங்கள் வணங்கும்) அவற்றுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு நடக்கின்றனவா? அவற்றுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவற்றுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பார்க்கின்றனவா? அவற்றுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) ‘‘நீங்கள் இணைவைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு ஒரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
7:195. அவற்றிற்கு கால்கள் இருக்கின்றனவா, நடப்பதற்கு? கைகள் இருக்கின்றனவா, பிடிப்பதற்கு? கண்கள் இருக்கின்றனவா, பார்ப்பதற்கு? காதுகள் உள்ளனவா, கேட்பதற்கு? (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக்கடவுள்களை அழையுங்கள்! பிறகு நீங்கள் (அனைவரும் ஒன்றுகூடி) எனக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யுங்கள்! எனக்கு அறவே அவகாசம் அளிக்காதீர்கள்!
7:195. (இணை வைப்போரே! நீங்கள் வணங்கும்) அவர்களுக்கு எவற்றைக்கொண்டு அவர்கள் நடப்பார்களோ அத்தகைய கால்கள் உண்டா? அல்லது எவற்றைக்கொண்டு அவர்கள் பிடிப்பார்களோ அத்தகைய கைகள் அவர்களுக்கு உண்டா? அல்லது எவற்றைக்கொண்டு அவர்கள் பார்ப்பார்களோ அத்தகைய கண்கள் அவர்களுக்கு உண்டா? அல்லது எவற்றைக் கொண்டு அவர்கள் செவியுறுவார்களோ அத்தகைய செவிகள் அவர்களுக்கு உண்டா? (அவ்வாறாயின்) “நீங்கள் உங்களுடைய இணையாளர்களை அழையுங்கள், பிறகு (எனக்கு இடையூறு செய்ய) சூழ்ச்சி செய்யுங்கள், (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டாம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
7:196 اِنَّ وَلِىَِّۧ اللّٰهُ الَّذِىْ نَزَّلَ الْـكِتٰبَ ۖ وَهُوَ يَتَوَلَّى الصّٰلِحِيْنَ
اِنَّ وَلِىَِّۧ நிச்சயமாக என் பாதுகாவலன், என் பொறுப்பாளன் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எவன் نَزَّلَ இறக்கினான் الْـكِتٰبَ ۖ வேதத்தை وَهُوَ அவன் يَتَوَلَّى பொறுப்பேற்கிறான் الصّٰلِحِيْنَ நல்லவர்களுக்கு
7:196. “நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.
7:196. ‘‘நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை இறக்கினான். அவனே நல்லடியார்களை பாதுகாக்கிறான்.
7:196. இந்த வேதத்தை இறக்கியருளிய இறைவனே திண்ணமாக, எனக்குப் பாதுகாப்பு அளிப்பவனாவான். மேலும், அவனே நல்லவர்களுக்கு பாதுகாப்பு நல்குகின்றான்.
7:196. நிச்சயமாக இவ்வேதத்தை இறக்கிவைத்தவனாகிய அல்லாஹ் தான் என் பாதுகாவலன், மேலும் அவனே நல்லடியார்களைப் பாதுகாக்கின்றான்.
7:197 وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَطِيْعُوْنَ نَـصْرَكُمْ وَلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ
وَالَّذِيْنَ எவர்களிடம் تَدْعُوْنَ பிரார்த்திக்கிறீர்கள் مِنْ دُوْنِهٖ அவனையன்றி لَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் نَـصْرَكُمْ உங்களுக்கு உதவி செய்ய وَلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ இன்னும் தங்களுக்கு உதவிக்கொள்ள மாட்டார்கள்
7:197. அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.
7:197. ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே!) அல்லாஹ்வைத் தவிர எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கிறீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தமக்குத்தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.
7:197. ஆனால் அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவற்றால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. ஏன், அவற்றால் தமக்குத்தாமேகூட உதவி செய்து கொள்ள முடியாது!
7:197. (இணைவைத்து வணங்குவோரே!) அவனையன்றி நீங்கள் அழைக்கின்றீர்களே அத்தகையோர், உங்களுக்கு உதவி செய்ய சக்தி பெற மாட்டார்கள், தமக்குத்தாமே உதவி செய்து கொள்ளவும் மாட்டார்கள்.
7:198 وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَسْمَعُوْا ؕ وَتَرٰٮهُمْ يَنْظُرُوْنَ اِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُوْنَ
وَاِنْ تَدْعُوْ நீர் அழைத்தால் هُمْ அவர்களை اِلَى الْهُدٰى நேர்வழிக்கு لَا يَسْمَعُوْا ؕ செவியுறமாட்டார்கள் وَتَرٰٮهُمْ நீர் காண்கிறீர்/அவர்களை يَنْظُرُوْنَ அவர்கள் பார்ப்பவர்களாக اِلَيْكَ உம்மை وَهُمْ அவர்களோ لَا يُبْصِرُوْنَ பார்க்க மாட்டார்கள்
7:198. நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.
7:198. நீங்கள் அவற்றை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உம்மைப் பார்ப்பதைப்போல உமக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை (உம்மைப்) பார்ப்பதே இல்லை.
7:198. மேலும், நீங்கள் அவற்றை நேரிய வழியில் வருமாறு அழைத்தால் உங்கள் பேச்சை அவற்றால் கேட்கவும் இயலாது. வெளித்தோற்றத்தில் அவை உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் அவை (எதையும்) பார்ப்பதில்லை”.
7:198. நீங்கள் அவர்களை நேர்வழியின்பக்கம் அழைப்பீர்களானாலும், அதை அவர்கள் கேட்கமாட்டார்கள், (நபியே!) மேலும், அவர்களை உம்பால் அவர்கள் பார்ப்பதாக நீர் காண்பீர் (ஆனால்) அவர்களோ (உண்மையில் உம்மைப்) பார்ப்பதில்லை.
7:199 خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِيْنَ
خُذِ பற்றிப் பிடிப்பீராக الْعَفْوَ மன்னிப்பை وَاْمُرْ இன்னும் ஏவுவீராக بِالْعُرْفِ நன்மையைக்கொண்டு وَاَعْرِضْ இன்னும் புறக்கணிப்பீராக عَنِ الْجٰهِلِيْنَ அறியாதவர்களை
7:199. எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.
7:199. (நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைக்கொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வருவீராக.
7:199. (நபியே!) மென்மையையும், மன்னிக்கும் நடத்தையையும் மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும், அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!
7:199. (நபியே!) நீர் மன்னிப்பை எடுத்துக் கொள்வீராக! நன்மையை ஏவியும் வருவீராக! அறிவீனர்களைப் புறக்கணித்தும் விடுவீராக!
7:200 وَاِمَّا يَنْزَغَـنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِؕ اِنَّهٗ سَمِيْعٌ عَلِيْمٌ
وَاِمَّا يَنْزَغَـنَّكَ குழப்பினால் / உம்மை مِنَ الشَّيْطٰنِ ஷைத்தானிடமிருந்து نَزْغٌ ஒரு குழப்பம் فَاسْتَعِذْ பாதுகாப்புக் கோருவீராக بِاللّٰهِؕ அல்லாஹ்விடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ நன்கறிந்தவன்
7:200. ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
7:200. ஷைத்தான் ஒரு (தவறான) எண்ணத்தை உமது மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உம்மைத் தூண்டினால் உடனே நீர் உம்மை காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்.
7:200. எப்பொழுதேனும் ஷைத்தானிடமிருந்து ஊசலாட்டம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
7:200. ஷைத்தானிலிருந்து ஓர் (சிறிய) ஊசலாட்டம் உமக்கு நிச்சயமாக ஊசாடுமானால் அல்லாஹ்வைக் கொண்டு நீர் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் செவியுறுகிறவன், (யாவையும்) நன்கறிகிறவன்.
7:201 اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَۚ
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் اتَّقَوْا அஞ்சினார்கள் اِذَا போது مَسَّهُمْ அவர்களுக்கு ஏற்பட்ட طٰۤٮِٕفٌ ஓர் எண்ணம் مِّنَ இருந்து الشَّيْطٰنِ ஷைத்தான் تَذَكَّرُوْا நினைவுகூருகிறார்கள் فَاِذَا هُمْ அப்போது அவர்கள் مُّبْصِرُوْنَۚ பார்த்துக் கொள்கிறார்கள்
7:201. நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
7:201. நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்.
7:201. உண்மையில், எவர்கள் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு ஷைத்தானுடைய தாக்கத்தினால் ஏதேனும் தீய எண்ணம் ஏற்பட்டால் உடனே விழிப்படைந்து விடுவார்கள். அப்போது அவர்களுக்கு(ச் சரியான செயல்முறை எதுவென்பது) தெளிவாய்ப் புலப்பட்டு விடுகின்றது.
7:201. நிச்சயமாக (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களே அத்தகையோர்-அவர்களை ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் தொட்டால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைவு கூறிவிடுவார்கள், அது சமயம் அவர்கள் (கண் திறந்து) விழிப்படைந்தவர்கள் (ஆவர்).
7:202 وَاِخْوَانُهُمْ يَمُدُّوْنَهُمْ فِى الْغَىِّ ثُمَّ لَا يُقْصِرُوْنَ
وَاِخْوَانُهُمْ அவர்களுடைய சகோதரர்கள் يَمُدُّوْنَهُمْ அதிகப்படுத்துகிறார்கள்/அவர்களை فِى الْغَىِّ வழிகேட்டில் ثُمَّ பிறகு لَا يُقْصِرُوْنَ அவர்கள் குறைவு செய்வதில்லை
7:202. ஆனால் ஷைத்தான்களின் சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்.
7:202. எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) ஒரு குறைவும் செய்வதில்லை.
7:202. ஆனால், அவர்களின் (ஷைத்தான்களின்) சகோதரர்களையோ அவர்களின் வழிதவறிய போக்கிலேயே ஷைத்தான்கள் இழுத்துக்கொண்டு செல்கின்றார்கள். மேலும் அவர்களை வழிகெடுப்பதில் எந்தக் குறையும் வைப்பதில்லை.
7:202. இன்னும், (ஷைத்தான்களாகிய) அவர்களின் சகோதரர்களோ, அவர்களை வழிகேட்டில் இழுத்துச் செல்வார்கள்; பின்னர் யாதொரு குறைவும் செய்யமாட்டார்கள்.
7:203 وَاِذَا لَمْ تَاْتِهِمْ بِاٰيَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَيْتَهَا ؕ قُلْ اِنَّمَاۤ اَتَّبِعُ مَا يُوْحٰٓى اِلَىَّ مِنْ رَّبِّىْ ۚ هٰذَا بَصَآٮِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًى وَّ رَحْمَةٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ
وَاِذَا لَمْ تَاْتِهِمْ நீர் வரவில்லையென்றால்/அவர்களிடம் بِاٰيَةٍ ஒரு வசனத்தைக் கொண்டு قَالُوْا கூறுகின்றனர் لَوْلَا اجْتَبَيْتَهَا ؕ நீர் அதை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா? قُلْ கூறுவீராக اِنَّمَاۤ اَتَّبِعُ நான் பின்பற்றுவதெல்லாம் مَا எதை يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَىَّ எனக்கு مِنْ رَّبِّىْ ۚ என் இறைவனிடமிருந்து هٰذَا இவை بَصَآٮِٕرُ தெளிவான ஆதாரங்கள், விளக்கங்கள் مِنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَهُدًى இன்னும் நேர்வழி وَّ رَحْمَةٌ இன்னும் கருணை لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள்
7:203. நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், “நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?” என்று கேட்பார்கள்; (நீர் கூறும்:) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.
7:203. (அவர்கள் விருப்பப்படி) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) ‘‘இதை நீர் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவனால் எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது.
7:203. மேலும் (நபியே!) ஏதேனும் சான்றினை (முஃஜிஸா அற்புதத்தை) நீர் இவர்களுக்குச் சமர்ப்பிக்கவில்லையாயின் அவர்கள் கேட்கிறார்கள்: “நீர் உமக்காக ஒரு சான்றினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?” (அதற்கு) நீர் கூறும்: “என் இறைவனிடமிருந்து எனக்கு அனுப்பப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனால் வழங்கப்பட்ட தெளிவான சான்றாகும். மேலும், (இதனை) நம்புகின்ற சமுதாயத்தாருக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது.
7:203. மேலும், யாதொரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டுவராவிடில் அதனை நீர் (உம்புறத்திலிருந்தே) தேர்ந்தெடுத்திருக்கக் கூடாதா, என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர், அதற்கு (நபியே) நீர் கூறும் “நான் பின்பற்றுவதெல்லாம் என் இரட்சகனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவைகளைத்தான், இது உங்கள் இரட்சகனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட அறிவொளிகளாகவும், விசுவாசங்கொண்ட சமூகத்தார்க்கு நேர் வழியாகவும் (அல்லாஹ்வின்) அருளாகவும் இருக்கின்றது.
7:204 وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
وَاِذَا قُرِئَ ஓதப்பட்டால் الْقُرْاٰنُ குர்ஆன் فَاسْتَمِعُوْا செவி தாழ்த்துங்கள் لَهٗ அதற்கு وَاَنْصِتُوْا இன்னும் வாய்மூடுங்கள் لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
7:204. குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
7:204. (மனிதர்களே!) திரு குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவிதாழ்த்தி அதைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்.
7:204. மேலும், குர்ஆன் (உங்கள் முன்) ஓதப்படும்போது அதனைக் கவனமாய்க் கேளுங்கள்; மௌனமாகவும் இருங்கள்! உங்கள் மீதும் அருள் பொழியப்படலாம்.”
7:204. இன்னும் (மனிதர்களே!) குர் ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள், வாய் பொத்தியும் இருங்கள், (அதனால்) நீங்கள் அருள் செய்யப்படலாம்.
7:205 وَاذْكُرْ رَّبَّكَ فِىْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَـهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ
وَاذْكُرْ நினைவு கூருவீராக رَّبَّكَ உம் இறைவனை فِىْ نَفْسِكَ உம் மனதில் تَضَرُّعًا பணிந்து وَّخِيْفَةً இன்னும் பயந்து وَّدُوْنَ இன்றி الْجَـهْرِ சப்தம் مِنَ الْقَوْلِ சொல்லில் بِالْغُدُوِّ காலையில் وَالْاٰصَالِ இன்னும் மாலையில் وَلَا تَكُنْ ஆகிவிடாதீர் مِّنَ الْغٰفِلِيْنَ கவனமற்றவர்களில்
7:205. (நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
7:205. (நபியே!) உமது மனதிற்குள் மிகப் பணிவோடு, உரத்த சப்தமின்றி பயத்தோடு, மெதுவாக காலையிலும், மாலையிலும் உமது இறைவனை நினைவு செய்து கொண்டிருப்பீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிடாதீர்!
7:205. மேலும் (நபியே!) காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக! உம் மனத்திற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மேலும் மெதுவான குரலிலும்! மேலும் அலட்சியமாய் இருப்போர்களுள் நீரும் ஒருவராகி விடாதீர்!
7:205. (நபியே!) உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், பயத்தோடும் (மெதுவாக) சொல்லில் உரத்த சப்தமின்றியும், காலையிலும் மாலையிலும் உமதிரட்சகனை நினைவு கூர்வீராக! (அவனை) மறந்திருப்போரில் நீர் ஆகியும் விடாதீர்.
7:206 اِنَّ الَّذِيْنَ عِنْدَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَيُسَبِّحُوْنَهٗ وَلَهٗ يَسْجُدُوْنَ۩
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் عِنْدَ இடம் رَبِّكَ உம் இறைவன் لَا يَسْتَكْبِرُوْنَ பெருமையடிக்க மாட்டார்கள் عَنْ عِبَادَتِهٖ அவனை வணங்குவதைவிட்டு وَيُسَبِّحُوْنَهٗ இன்னும் துதிப்பார்கள்/அவனை وَلَهٗ அவனுக்கே يَسْجُدُوْنَ۩ சிரம் பணிவார்கள்
7:206. எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
7:206. எவர்கள் நிச்சயமாக உமது இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் (வானவர்கள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் ‘‘(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்'' என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்து கொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர்.
7:206. உம் இறைவனிடத்தில் நெருக்கமாய் இருக்கும் வானவர்கள் அவனை வணங்காமல் புறக்கணித்துத் தற்பெருமை கொள்வதில்லை. மாறாக அவனை அவர்கள் துதிக்கிறார்கள். அவனின் திருமுன்னர் மட்டுமே பணிகின்றார்கள்.
7:206. நிச்சயமாக உமதிரட்சகனிடத்தில் இருக்கின்றார்களே அத்தகையவர்கள், அவனை வணங்குவதில் இறுமாப்புக் கொள்ள மாட்டார்கள், இன்னும், அவனை (எப்பொழுதும்) துதி செய்து கொண்டும், அவனுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருப்பர்.