70. ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)
மக்கீ, வசனங்கள்: 44

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
70:1
70:1 سَاَلَ سَآٮِٕلٌ ۢ بِعَذَابٍ وَّاقِعٍۙ‏
سَاَلَ கேட்டார் سَآٮِٕلٌ ۢ கேட்பவர் بِعَذَابٍ வேதனையைப் பற்றி وَّاقِعٍۙ‏ நிகழக்கூடிய
70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
70:1. (நபியே! நிராகரிப்பவர்களுக்குச்) சம்பவிக்கக்கூடிய வேதனையைப் பற்றி கேட்பவன் ஒருவன் (உம்மிடம் அது) எப்பொழுது வருமென(ப் பரிகாசமாக)க் கேட்கிறான்.
70:1. கேட்கக்கூடியவர் வேதனையைக் கேட்டிருக்கிறார். (அந்த வேதனை) நிச்சயம் நிகழக்கூடியதாகும்,
70:1. (நபியே!) நிகழக் கூடிய வேதனைபற்றிக் கேட்கக் கூடியவன் (எப்பொழுது வருமென பரிகசிக்கும் நோக்குடன்) கேட்கின்றான்.
70:2
70:2 لِّلْكٰفِرِيْنَ لَيْسَ لَهٗ دَافِعٌ ۙ‏
لِّلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு لَيْسَ இல்லை لَهٗ அதை دَافِعٌ ۙ‏ தடுப்பவர் ஒருவரும்
70:2. காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
70:2. நிராகரிப்பவர்களுக்கு (அது சம்பவிக்கும் சமயத்தில்) அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை.
70:2. நிராகரிப்பாளர்களுக்கு! அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை.
70:2. நிராகரிப்போருக்கு–(அது நிகழும் சமயத்தில்) அதனைத் தடுத்துவிடக்கூடியவர் எவருமில்லை.
70:3
70:3 مِّنَ اللّٰهِ ذِى الْمَعَارِجِؕ‏
مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து ذِى الْمَعَارِجِؕ‏ உயர்வுகளும் மேன்மைகளும் உடைய
70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
70:3. உயர்ப் பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்).
70:3. ஏறிச்செல்லும் படிகளின் உரிமையாளனாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உள்ளதாகும்.
70:3. உயர் வழிகளுடைய அல்லாஹ்விடமிருந்து (அது சம்பவிக்கும்)
70:4
70:4 تَعْرُجُ الْمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوْحُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍ‌ۚ‏
تَعْرُجُ ஏறுகின்றனர் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்களும் وَ الرُّوْحُ ஜிப்ரீலும் اِلَيْهِ அவன் பக்கம் فِىْ يَوْمٍ كَانَ ஒருநாளில்/இருக்கிறது مِقْدَارُهٗ அதன் அளவு خَمْسِيْنَ اَلْفَ ஐம்பதினாயிரம் سَنَةٍ‌ۚ‏ ஆண்டுகளாக
70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
70:4. அந்நாளில் வானவர்களும், ஜிப்ரயீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள். (அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும்.
70:4. வானவர்களும் ரூஹும்* அவனிடம் அந்நாளில் ஏறிச் செல்கின்றனர். அந்நாளின் அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகளாகும்.
70:4. மலக்குகளும் ஜிப்ரீலும் (அல்லாஹ்வாகிய) அவன் பக்கம் ஒரு நாளில் உயர்ந்து செல்வார்கள், அதன் அளவு ஐம்பதினாயிரம் வருடங்களாகும்.
70:5
70:5 فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا‏
فَاصْبِرْ ஆகவே நீர் பொறுப்பீராக! صَبْرًا பொறுமையாக جَمِيْلًا‏ அழகிய
70:5. எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
70:5. (நபியே!) நீர் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருப்பீராக!
70:5. (நபியே!) பொறுமையை மேற்கொள்ளும்; அழகிய பொறுமையை!
70:5. (நபியே!) நீர் அழகான பொறுமையாகப் பொறுத்திருப்பீராக!
70:6
70:6 اِنَّهُمْ يَرَوْنَهٗ بَعِيْدًا ۙ‏
اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் يَرَوْنَهٗ அதை பார்க்கின்றனர் بَعِيْدًا ۙ‏ தூரமாக
70:6. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
70:6. (எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாக எண்ணுகின்றனர்.
70:6. இவர்கள் அதனை வெகு தொலைவில் இருப்பதாகக் கருதுகின்றார்கள்.
70:6. (நிச்சயமாக அவர்கள் (நிகழக்கூடிய) அதனை வெகுதூரமாகக் காண்கின்றனர்.
70:7
70:7 وَّنَرٰٮهُ قَرِيْبًا ؕ‏
وَّنَرٰٮهُ நாம் அதை பார்க்கிறோம் قَرِيْبًا ؕ‏ சமீபமாக
70:7. ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
70:7. நாமோ அதை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
70:7. நாம் அது அருகில் இருப்பதைப் பார்க்கின்றோம்.
70:7. நாமோ, அதனை மிகச் சமீபமானதாகக் காண்கின்றோம்.
70:8
70:8 يَوْمَ تَكُوْنُ السَّمَآءُ كَالْمُهْلِۙ‏
يَوْمَ நாளில் تَكُوْنُ ஆகிவிடும் السَّمَآءُ வானம் كَالْمُهْلِۙ‏ எண்ணையின் அடி மண்டியைப் போல்
70:8. வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
70:8. அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும்.
70:8. (அந்த வேதனை ஏற்படும்) அந்நாளில் வானம், உருகிய வெள்ளியைப் போன்றும்
70:8. வானம், பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகும் நாளில்-
70:9
70:9 وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِۙ‏
وَتَكُوْنُ இன்னும் ஆகிவிடும் الْجِبَالُ மலைகள் كَالْعِهْنِۙ‏ முடிகளைப் போல்
70:9. இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
70:9. மலைகள் பஞ்சைப் போல் ஆகி (பறந்து) விடும்.
70:9. மலைகள், கடையப்பட்ட வண்ணக் கம்பளியைப் போன்றும் ஆகிவிடும்.
70:9. இன்னும், மலைகள் சாயம் ஏற்றப்பட்ட பஞ்சைப் போன்று ஆகும் (நாளில் அது நிகழும்).
70:10
70:10 وَلَا يَسْأَلُ حَمِيْمٌ حَمِيْمًا ۖۚ‏
وَلَا يَسْأَلُ விசாரிக்க மாட்டான் حَمِيْمٌ ஒரு நண்பன் حَمِيْمًا ۖۚ‏ நண்பனைப் பற்றி
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
70:10. ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப் பார்த்த போதிலும் அவனுடைய சுகத்தை) விசாரிக்க மாட்டான்.
70:10. மேலும், அன்று எந்த உற்ற நண்பனும் தன்னுடைய நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.
70:10. அன்றியும் ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப்பற்றி விசாரித்து)க்கேட்கமாட்டான்.
70:11
70:11 يُّبَصَّرُوْنَهُمْ‌ؕ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِىْ مِنْ عَذَابِ يَوْمِٮِٕذٍۢ بِبَنِيْهِۙ‏
يُّبَصَّرُوْنَهُمْ‌ؕ அவர்கள் அவர்களை காண்பிக்கப்படுவார்கள் يَوَدُّ ஆசைப்படுவான் الْمُجْرِمُ குற்றவாளி لَوْ يَفْتَدِىْ ஈடாக கொடுக்க வேண்டுமே مِنْ عَذَابِ தண்டனையிலிருந்து يَوْمِٮِٕذٍۢ அந்நாளின் بِبَنِيْهِۙ‏ தன் பிள்ளைகளை
70:11. அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-
70:11. அவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்வார்கள். குற்றவாளி, அந்நாளில் தன் வேதனைக்குப் பரிகாரமாகத் தன் பிள்ளைகளையும்,
70:11. ஆனால், அவர்கள் ஒருவர் மற்றவருக்குக் காண்பிக்கப்படுவார்கள். குற்றவாளி அந்நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காகத் தன் பிள்ளைகளையும்,
70:11. அவர்கள் (தங்களின் நண்பர்களுக்குக்) காண்பிக்கப்படுவர், (எனினும் ஒருவர் மற்றவரைப்பற்றி கேட்டுக் கொள்ளமாட்டார்; ஒருவரை ஒருவர் அறியாதவர் போன்று வெருண்டோடுவா்.) அந்நாளுடைய வேதனையிலிருந்து (தன்னைக் காப்பாற்றிக்கொள்ள) குற்றவாளி தன்னுடைய மக்களை ஈடாகக்கொடுக்க விரும்புவான்.
70:12
70:12 وَ صَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ‏
وَ صَاحِبَتِهٖ இன்னும் தன் மனைவியையும் وَاَخِيْهِۙ‏ இன்னும் தன் சகோதரனையும்
70:12. தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
70:12. தன் மனைவிகளையும், தன் சகோதரனையும்,
70:12. தன் மனைவியையும், சகோதரனையும்,
70:12. தன் மனைவியையும், தன் சகோதரனையும்,
70:13
70:13 وَفَصِيْلَتِهِ الَّتِىْ تُــْٔوِيْهِۙ‏
وَفَصِيْلَتِهِ தன் குடும்பத்தையும் الَّتِىْ எது تُــْٔوِيْهِۙ‏ தன்னை அரவணைக்கின்றது
70:13. அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
70:13. தன்னை ஆதரித்து வந்த தன் சொந்தக்காரர்களையும்,
70:13. தனக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த மிக நெருங்கிய குடும்பத்தையும்,
70:13. தன்னை அரவணைத்து வந்த தன் உறவினர்களையும்-
70:14
70:14 وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ ثُمَّ يُنْجِيْهِۙ‏
وَمَنْ فِى الْاَرْضِ பூமியில் உள்ளவர்களையும் جَمِيْعًا ۙ அனைவரையும் ثُمَّ பிறகு يُنْجِيْهِۙ‏ அது அவனை பாதுகாக்க வேண்டும்
70:14. இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
70:14. இன்னும், பூமியிலுள்ள அனைத்தையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரியப்படுவான்.
70:14. ஏன் பூமியிலுள்ள அனைவரையுமே ஈடாகக் கொடுத்துவிட வேண்டும் என்றும், இது அவனுக்கு ஈடேற்றம் அளித்திட வேண்டும் என்றும் விரும்புவான்.
70:14. இன்னும், பூமியிலுள்ள அனைவரையும் (ஈடாகக் கொடுத்துப்) பின்னர் அது அவனைக் காப்பாற்றிக் கொள்ளும் (என்று விரும்புவான்).
70:15
70:15 كَلَّا ؕ اِنَّهَا لَظٰىۙ‏
كَلَّا ؕ அவ்வாறல்ல اِنَّهَا لَظٰىۙ‏ நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்
70:15. அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
70:15. (எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்து கொள்ளும்.)
70:15. ஒருபோதுமில்லை; அது சீறியெழுந்து எரியும் தீப்பிழம்பாகும்.
70:15. (ஆனால் அது நடைபெறுவது) அல்ல, (ஏனெனில்) நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நரகத்தின்) நெருப்பாகும்.
70:16
70:16 نَزَّاعَةً لِّلشَّوٰى‌ ۖ‌ۚ‏
نَزَّاعَةً கழட்டிவிடக்கூடியது لِّلشَّوٰى‌ ۖ‌ۚ‏ தோலை
70:16. அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.
70:16. அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும்.
70:16. அது தோலையும் சதையையும் பொசுக்கிவிடும்.
70:16. அது தலையின் தோலை (எரித்து) கழற்றி விடக்கூடியதாகும்.
70:17
70:17 تَدْعُوْا مَنْ اَدْبَرَ وَتَوَلّٰىۙ‏
تَدْعُوْا அது அழைக்கும் مَنْ எவர்கள் اَدْبَرَ புறக்கணித்தார்(கள்) وَتَوَلّٰىۙ‏ இன்னும் விலகி சென்றார்(கள்)
70:17. (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
70:17. புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அது அழைக்கும்.
70:17. எந்த மனிதன் சத்தியத்தைப் புறக்கணித்து, புறங்காட்டிச் சென்றானோ ;
70:17. புறமுதுகிட்டுச் சென்று புறக்கணித்தோரையும் அது அழைக்கும்.
70:18
70:18 وَجَمَعَ فَاَوْعٰى‏
وَجَمَعَ இன்னும் சேகரித்தார்(கள்) فَاَوْعٰى‏ இன்னும் பாதுகாத்தார்(கள் )
70:18. அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
70:18. (பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்).
70:18. மேலும் செல்வத்தைச் சேர்த்தானோ இன்னும் கஞ்சத்தனமாக தன்னிடம் தடுத்து வைத்தானோ அத்தகைய ஒவ்வொருவனையும் அது ‘வா வா’ என்று அழைக்கும்.
70:18. (பொருளைச்) சேமித்து (அதனைச் செலவு செய்யாது) பாதுகாத்து வந்தோரையும் (தன்னிடம் அழைக்கும்)
70:19
70:19 اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ‏
اِنَّ நிச்சயமாக الْاِنْسَانَ மனிதன் خُلِقَ படைக்கப்பட்டான் هَلُوْعًا ۙ‏ பேராசைக்காரனாக
70:19. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
70:19. மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
70:19. மனிதன் பதற்றக்காரனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான்.
70:19. நிச்சயமாக மனிதன் (பேராசை கொண்ட) மிக்க பதட்டக்காரனாக படைக்கப்பட்டுள்ளான்.
70:20
70:20 اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ‏
اِذَا مَسَّهُ அவனுக்கு ஏற்பட்டால் الشَّرُّ தீங்கு جَزُوْعًا ۙ‏ மிக பதட்டக்காரனாக
70:20. அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்;
70:20. ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகிறான்.
70:20. ஒரு துன்பம் அவனுக்கு வந்தால், பொறுமையிழந்து போகின்றான்.
70:20. (ஏனென்றால்) அவனை ஒரு தீமை தொட்டுவிட்டால் (திடுக்கிட்டுப்) பதறுகிறவனாக-
70:21
70:21 وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ۙ‏
وَاِذَا مَسَّهُ இன்னும் அவனுக்கு ஏற்பட்டால் الْخَيْرُ வசதி مَنُوْعًا ۙ‏ முற்றிலும் தடுப்பவனாக
70:21. ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
70:21. அவனை ஒரு நன்மை அடைந்தாலோ, அதை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கிறான்.
70:21. ஆனால் அவனுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்படும்போது கஞ்சத்தனம் செய்யத் தலைப்படுகின்றான்.
70:21. இன்னும், அவனை யாதொரு நன்மை தொட்டுவிட்டால் அதனை (பிறருக்கு வழங்காது) தடுத்துக் கொள்கிறவனாக (இருக்கிறான்).
70:22
70:22 اِلَّا الْمُصَلِّيْنَۙ‏
اِلَّا தவிர الْمُصَلِّيْنَۙ‏ தொழுகையாளிகளை
70:22. தொழுகையாளிகளைத் தவிர-
70:22. ஆயினும், தொழுகையாளிகளைத் தவிர.
70:22. ஆயினும் தொழுகையாளிகள் (இத்தகைய தவறுகளில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள்).
70:22. தொழுகையாளிகளைத் தவிர,
70:23
70:23 الَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ دَآٮِٕمُوْنَۙ‏
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் عَلٰى صَلَاتِهِمْ தங்கள் தொழுகையில் دَآٮِٕمُوْنَۙ‏ நிரந்தரமாக இருக்கின்றார்களோ
70:23. (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
70:23. அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள்.
70:23. அவர்களோ தொழுகையை நிரந்தரமாக நிறைவேற்றுகிறார்கள்.
70:23. அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தங்கள் (ஐவேளைத்) தொழுகையின மீது நிரந்தரமானவர்கள். (தவறாது தொழுபவர்கள்)
70:24
70:24 وَالَّذِيْنَ فِىْۤ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌۙ‏
وَالَّذِيْنَ فِىْۤ اَمْوَالِهِمْ இன்னும் எவர்கள்/அவர்களுடைய செல்வங்களில் حَقٌّ உரிமை مَّعْلُوْمٌۙ‏ குறிப்பிட்ட
70:24. அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.
70:24. அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு.
70:24. அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது.
70:24. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட பங்குண்டு-
70:25
70:25 لِّلسَّآٮِٕلِ وَالْمَحْرُوْمِۙ‏
لِّلسَّآٮِٕلِ யாசிப்பவருக்கு(ம்) وَالْمَحْرُوْمِۙ‏ இல்லாதவருக்கும்
70:25. யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).
70:25. அதைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால் கேட்காத) வரியவர்களுக்கும் (கொடுப்பார்கள்).
70:25. யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்;
70:25. (யாசித்துக்) கேட்பவருக்கும், (வெட்கித்துக்) கேட்காதவருக்கும் (உண்டு).
70:26
70:26 وَالَّذِيْنَ يُصَدِّقُوْنَ بِيَوْمِ الدِّيْنِۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் يُصَدِّقُوْنَ உண்மைப்படுத்துவார்களோ بِيَوْمِ الدِّيْنِۙ‏ கூலி நாளை
70:26. அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.
70:26. கூலி கொடுக்கும் நாளையும் அவர்கள் உண்மை என்றே நம்புகின்றனர்.
70:26. அவர்கள் கூலி வழங்கும் நாளினை உண்மையென ஏற்றுக்கொள்கிறார்கள்.
70:26. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், கூலி கொடுக்கும் (மறுமை) நாளை உண்மைப்படுத்துகின்றனர்.
70:27
70:27 وَالَّذِيْنَ هُمْ مِّنْ عَذَابِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ‌ۚ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் مِّنْ عَذَابِ தண்டனையை رَبِّهِمْ தங்கள் இறைவனின் مُّشْفِقُوْنَ‌ۚ‏ பயப்படுகின்றார்களோ
70:27. இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.
70:27. (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்கள் இறைவனின் வேதனைக்குப் பயந்து கொண்டே இருப்பார்கள்.
70:27. மேலும், தங்களுடைய இறைவனின் வேதனைக்கு அஞ்சுகிறார்கள்.
70:27. இன்னும், அவர்கள் எத்தகையேரென்றால், தங்கள் இரட்சகனின் வேதனையை அவர்கள் பயந்தோராவர்.
70:28
70:28 اِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَاْمُوْنٍ‏
اِنَّ عَذَابَ நிச்சயமாக தண்டனை رَبِّهِمْ அவர்களுடைய இறைவனின் غَيْرُ مَاْمُوْنٍ‏ பயமற்று இருக்கக்கூடியது அல்ல
70:28. நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.
70:28. (ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதல்ல.
70:28. ஏனெனில், அவர்களுடைய இறைவனின் வேதனை எவரும் அஞ்சாமல் இருக்கக்கூடியதல்ல.
70:28. (ஏனென்றால்,) நிச்சயமாக தங்களிரட்சகனின் வேதனை அச்சப்படாது இருக்கக்கூடியதன்று (என்பதை அவர்கள் நன்கறிவார்கள்)
70:29
70:29 وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் لِفُرُوْجِهِمْ தங்கள் மர்மஸ்தானங்களை حٰفِظُوْنَۙ‏ பாதுகாப்பார்களோ
70:29. அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-
70:29. அவர்கள், தங்கள் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள்.
70:29. அவர்கள் தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கிறார்கள்;
70:29. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தங்கள் வெட்கத்தலங்கைளப் பாதுகாக்கக் கூடியவர்கள்.
70:30
70:30 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏
اِلَّا தவிர عَلٰٓى اَزْوَاجِهِمْ தங்கள் மனைவிகள் اَوْ مَا مَلَـكَتْ அல்லது/சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் اَيْمَانُهُمْ தங்கள் வலக்கரங்கள் فَاِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ பழிக்கப்பட மாட்டார்கள்
70:30. தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
70:30. ஆயினும், தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் அடிமைப் பெண்களிடத்திலும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
70:30. அவர்களுடைய மனைவியரிடமோ அடிமைப் பெண்களிடமோ தவிர! அவ்வாறு அவர்களிடம் அவற்றைப் பாதுகாக்காமல் இருப்பதால் அவர்கள் பழிப்புக்குரியவர்கள் அல்லர்.
70:30. தங்கள் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் தவிர அப்போது நிச்சயமாக அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களல்லர்.
70:31
70:31 فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ‌ۚ‏
فَمَنِ ابْتَغٰى யார் தேடுவார்களோ وَرَآءَ ذٰلِكَ இதற்குப் பின் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْعٰدُوْنَ‌ۚ‏ வரம்பு மீறிகள்
70:31. எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.
70:31. இதைத்தவிர (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள்.
70:31. ஆயினும் அதற்கு மேலும் எவர்கள் விரும்புகின்றார்களோ அவர்கள்தாம் வரம்புமீறுகிறவர்கள் ஆவர்.
70:31. ஆகவே, எவராவது இதற்கப்பால் (தவறான வழியில் அனுபவிக்கத்) தேடினால் அத்தகையோர்-அவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவர்.
70:32
70:32 وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் لِاَمٰنٰتِهِمْ தங்கள் அமானிதங்களை(யும்) وَعَهْدِهِمْ தங்கள் ஒப்பந்தங்களையும் رٰعُوْنَ ۙ‏ பேணுகின்றார்களோ
70:32. இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
70:32. இன்னும், எவர்கள், தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணி, (யோக்கியமாக நடந்து) கொள்கிறார்களோ அவர்களும்,
70:32. அவர்கள் தங்களிடம் உள்ள அமானிதப் பொருள்களைப் பாதுகாக்கிறார்கள். தாங்கள் செய்த ஒப்பந்தங்களைப் பேணி நடக்கவும் செய்கிறார்கள்.
70:32. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்களின் அமானிதங்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதியையும் பேணிக் கொள்கின்றவர்கள்.
70:33
70:33 وَالَّذِيْنَ هُمْ بِشَهٰدٰتِهِمْ قَآٮِٕمُوْنَ ۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் بِشَهٰدٰتِهِمْ தங்கள் சாட்சிகளை قَآٮِٕمُوْنَ ۙ‏ நிறைவேற்றுவார்களோ
70:33. இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.
70:33. இன்னும், எவர்கள், தங்கள் சாட்சியத்தில் (தவறிழைக்காது) உறுதியாக இருக்கிறார்களோ அவர்களும்,
70:33. மேலும் தங்களுடைய சாட்சியங்களில் நேர்மையாக நிலைத்திருக்கிறார்கள்.
70:33. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள்.
70:34
70:34 وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحَافِظُوْنَؕ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் عَلٰى صَلَاتِهِمْ தங்கள் தொழுகையை يُحَافِظُوْنَؕ‏ பேணுவார்களோ
70:34. எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
70:34. இன்னும், எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகிறார்களோ அவர்களும்,
70:34. மேலும் தங்களுடைய தொழுகைகளைப் பேணிக் காக்கிறார்கள்.
70:34. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையின்மீது (அதை முழுமையாக நிறைவேற்றுவதற்குரிய முறைகளைப் பேணிப்) பாதுகாத்துக் கொள்வார்கள்.
70:35
70:35 اُولٰٓٮِٕكَ فِىْ جَنّٰتٍ مُّكْرَمُوْنَؕ‏
اُولٰٓٮِٕكَ அ(த்தகைய)வர்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் مُّكْرَمُوْنَؕ‏ கண்ணியப்படுத்தப்படுவார்கள்
70:35. (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
70:35. ஆகிய இவர்கள்தான் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
70:35. இத்தகையவர்கள்தாம் சுவனத் தோட்டங்களில் கண்ணியத்துடன் தங்கி வாழ்பவர்கள்.
70:35. (மேற்கூறப்பட்ட தகுதிகளுடைய) அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப் படுவார்கள்.
70:36
70:36 فَمَالِ الَّذِيْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِيْنَۙ‏
فَمَالِ الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது? قِبَلَكَ உம் பக்கம் مُهْطِعِيْنَۙ‏ விரைந்து வருகின்றனர்
70:36. நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.
70:36. (நபியே!) இந்நிராகரிப்பவர்களுக்கு என்ன சுதந்திரம்? (அவர்கள்) உமக்கு முன் ஓடி வருகின்றனர்!
70:36. (நபியே) என்ன விஷயம்? இந்நிராகரிப்பாளர்கள் உம்மை நோக்கி ஓடிவருகின்றார்களே,
70:36. (நபியே!) நிராகரிப்போருக்கு என்ன நேர்ந்தது? (அவர்கள்) உம்மைச் சுற்றி ஓடி வருகின்றனர்!.
70:37
70:37 عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ عِزِيْنَ‏
عَنِ الْيَمِيْنِ வலது புறத்தில் இருந்து(ம்) وَعَنِ الشِّمَالِ இடது புறத்தில் இருந்தும் عِزِيْنَ‏ பல கூட்டங்களாக
70:37. வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.
70:37. வலது புறமிருந்தும், இடது புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக (ஓடி வருகின்றனர்).
70:37. வலப்பக்கத்திலிருந்தும் இடப்பக்கத்திலிருந்தும் கூட்டம் கூட்டமாக.
70:37. வலப்புறமிருந்தும், இடப்புறமிருந்தும் கூட்டங்கூட்டமாக (ஓடி வருகின்றனர்.)
70:38
70:38 اَيَطْمَعُ كُلُّ امْرِىءٍ مِّنْهُمْ اَنْ يُّدْخَلَ جَنَّةَ نَعِيْمٍۙ‏
اَيَطْمَعُ ஆசைப்படுகின்றானா? كُلُّ ஒவ்வொரு امْرِىءٍ மனிதனும் مِّنْهُمْ அவர்களில் اَنْ يُّدْخَلَ நுழைக்கப்பட வேண்டும் என்று جَنَّةَ சொர்க்கத்தில் نَعِيْمٍۙ‏ இன்பம் நிறைந்த
70:38. அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?
70:38. அவர்களில் ஒவ்வொருவரும் இன்பம் தரும் சொர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று ஆசைப்படுகின்றனரா?
70:38. இவர்கள் ஒவ்வொருவரும் அருள்நிறைந்த சுவனத்தில் தாம் நுழைவிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனரா?
70:38. அவர்களில் ஒவ்வொரு மனிதனும் அருட்கொடையுடைய சுவனத்தில் பிரவேசிக்கப்படுவதை ஆசிக்கின்றானா?
70:39
70:39 كَلَّا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّمَّا يَعْلَمُوْنَ‏
كَلَّا ؕ அவ்வாறல்ல اِنَّا நிச்சயமாக நாம் خَلَقْنٰهُمْ அவர்களை படைத்தோம் مِّمَّا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்திருக்கின்ற ஒன்றிலிருந்துதான்
70:39. அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.
70:39. அது ஆகப்போவதில்லை. அவர்கள் அறிந்த ஓர் (அற்ப) வஸ்துவிலிருந்தே நாம் அவர்களைப் படைத்திருக்கிறோம்.
70:39. ஒருபோதும் நடக்காது! நாம் எப்பொருளிலிருந்து அவர்களைப் படைத்தோமோ அதை அவர்களே அறிந்திருக்கிறார்கள்.
70:39. அது ஒருபோதுமில்லை! நிச்சயமாக நாம், அவர்கள் அறிந்திருப்பதிலிருந்தே அவர்களைப் படைத்திருக்கின்றோம்.
70:40
70:40 فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَۙ‏
فَلَاۤ اُقْسِمُ சத்தியம் செய்கிறேன்! بِرَبِّ இறைவன் மீது الْمَشٰرِقِ கிழக்குகள் وَالْمَغٰرِبِ இன்னும் மேற்குகளின் اِنَّا நிச்சயமாக நாம் لَقٰدِرُوْنَۙ‏ ஆற்றல் உள்ளவர்கள்
70:40. எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
70:40. கிழக்கு மற்றும் மேற்குத் திசையின் இறைவன்மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் (நம் விருப்பப்படி செய்ய) ஆற்றலுடையோம்!
70:40. அவ்வாறில்லை. நான் சத்தியம் செய்கின்றேன். கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் அதிபதியின் மீது!
70:40. கிழக்குத் திசைகள், இன்னும், மேற்குத் திசைகளின் இரட்சகன் மீது நான் சத்தியம் செய்கிறேன்; நிச்சயமாக நாம் (நம் இஷ்டப்படிச் செய்ய) ஆற்றலுடையோர், (அதாவது:)
70:41
70:41 عَلٰٓى اَنْ نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَ‏
عَلٰٓى اَنْ نُّبَدِّلَ நாம் மாற்றிக் கொண்டுவருவதற்கு خَيْرًا சிறந்தவர்களை مِّنْهُمْۙ இவர்களை விட وَمَا نَحْنُ நாம் அல்ல بِمَسْبُوْقِيْنَ‏ பலவீனமானவர்கள்
70:41. (அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்); ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.
70:41. (இவர்களை நீக்கி) இவர்களைவிட மேலானவர்களை மாற்றிவிடவும் (ஆற்றலுடையோம்!) இதில் நாம் இயலாதவர்களல்ல.
70:41. இவர்களுக்குப் பகரமாக இவர்களைவிட சிறந்தவர்களைக் கொண்டு வருவதற்கு நாம் ஆற்றல் பெற்றுள்ளோம். மேலும் நம்மை வெற்றி கொள்ளக்கூடியவர் எவரும் இல்லை!
70:41. அவர்களைவிட, மிகச் சிறந்தவர்களை (அவர்களுக்குப் பகரமாக) மாற்றி விடுவதின் மீது (ஆற்றலுடையோராவோம்! இதில்) நாம் தோற்கடிக்கப்படுவோர் அல்லர்.
70:42
70:42 فَذَرْهُمْ يَخُوْضُوْا وَيَلْعَبُوْا حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِىْ يُوْعَدُوْنَۙ‏
فَذَرْهُمْ ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக! يَخُوْضُوْا அவர்கள் ஈடுபடட்டும்! وَيَلْعَبُوْا இன்னும் விளையாடட்டும்! حَتّٰى இறுதியாக يُلٰقُوْا அவர்கள் சந்திப்பார்கள் ! يَوْمَهُمُ அவர்களது நாளை الَّذِىْ எது يُوْعَدُوْنَۙ‏ எச்சரிக்கப்பட்டார்கள்
70:42. ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
70:42. ஆகவே, (நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்கள் விளையாடிக்கொண்டும், (வீண் காரியங்களில்) ஆழ்ந்து கிடக்குமாறும் அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
70:42. எனவே இவர்களை இவர்களுடைய அபத்தமான பேச்சுக்களிலும் விளையாட்டிலும் வீழ்ந்து கிடக்குமாறு நீர் விட்டுவிடும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளினை இவர்கள் அடையும் வரை!
70:42. (ஆகவே, நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை வீண் காரியங்களில் மூழ்கியும் விளையாடிக் கொண்டுமிருக்கவும் அவர்களை நீர் விட்டு விடுவீராக!
70:43
70:43 يَوْمَ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ سِرَاعًا كَاَنَّهُمْ اِلٰى نُصُبٍ يُّوْفِضُوْنَۙ‏
يَوْمَ நாளில் يَخْرُجُوْنَ அவர்கள் வெளியேறுகின்ற مِنَ الْاَجْدَاثِ புதைக் குழிகளில் இருந்து سِرَاعًا விரைவாக كَاَنَّهُمْ போல்/அவர்களோ اِلٰى نُصُبٍ கம்பத்தின் பக்கம் يُّوْفِضُوْنَۙ‏ விரைந்து ஓடுகின்றவர்கள்
70:43. நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) மண்ணறைகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.
70:43. (நபியே!) அவர்களுக்கு ஒரு நாளை நீர் ஞாபகமூட்டுவீராக. (சிலை வணங்குபவர்கள் தங்கள் திருநாள்களில் பூஜைக்காக நட்டுவைக்கப்பட்ட) கொடிகளின் பக்கம் விரைந்தோடுவதைப் போலவே, சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு (ஹஷ்ருடைய மைதானத்திற்கு) வெகு தீவிரமாகச் செல்வார்கள்.
70:43. இவர்கள் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளி யேறி ஓடிக்கொண்டிருக்கும் நாளில் தங்கள் தெய்வச் சிலைகளின் ஆலயங்களை நோக்கி விரைவாக ஓடுவதைப்போல;
70:43. (இணைவைப்போர்) நடப்பட்டவைக(ளான சிலைக)ளின் பால் விரைந்து செல்பவர்களைப்போன்று மண்ணறைகளிலிருந்து விரைந்தவர்களாக அவர்கள் வெளியேறி வரும்நாள்,
70:44
70:44 خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ ذٰلِكَ الْيَوْمُ الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ‏
خَاشِعَةً கீழ்நோக்கி இருக்கும் اَبْصَارُهُمْ அவர்களின் பார்வைகள் تَرْهَقُهُمْ அவர்களை சூழ்ந்து கொள்ளும் ذِلَّةٌ ؕ இழிவு ذٰلِكَ இதுதான் الْيَوْمُ நாளாகும் الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ‏ எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
70:44. அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும்; இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்; அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.
70:44. (அந்நாளில்) பயந்த பார்வையுடன் ஓடுவார்கள். இழிவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். (நபியே!) இந்நாள்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
70:44. இவர்களின் பார்வைகள் தாழ்ந்துவிட்டிருக்கும்; இழிவு இவர்களைக் கவ்வியிருக்கும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது அந்நாளே ஆகும்.
70:44. அவர்களுடைய பார்வை கீழ்நோக்கியவையாக (இருக்கும் நிலையில்) இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும், (நபியே!) அது அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அத்தகைய நாளாகும்.