75. ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)
மக்கீ, வசனங்கள்: 40

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
75:1
75:1 لَاۤ اُقْسِمُ بِيَوْمِ الْقِيٰمَةِۙ‏
لَاۤ اُقْسِمُ சத்தியம் செய்கிறேன்! بِيَوْمِ நாளின் மீது الْقِيٰمَةِۙ‏ மறுமை
75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
75:1. மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
75:1. இல்லை! நான் மறுமைநாளின் மீது சத்தியம் செய்கின்றேன்.
75:1. மறுமைநாளைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன்.
75:2
75:2 وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِؕ‏
وَلَاۤ اُقْسِمُ இன்னும் சத்தியம் செய்கிறேன் ! بِالنَّفْسِ ஆன்மாவின் மீது اللَّوَّامَةِؕ‏ பழிக்கின்ற
75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
75:2. (குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன்.
75:2. இல்லவே இல்லை; இடித்துரைக்கும் மனத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
75:2. (வழிபாட்டில் மனிதன் குறைவு செய்துவிட்டதைப்பற்றி) மிக நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவைக் கொண்டும் நான் சத்தியம் செய்கிறேன்.
75:3
75:3 اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗؕ‏
اَيَحْسَبُ எண்ணுகின்றானா الْاِنْسَانُ மனிதன் اَلَّنْ نَّجْمَعَ அறவே ஒன்று சேர்க்க மாட்டோம் என்று عِظَامَهٗؕ‏ அவனுடைய எலும்புகளை
75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
75:3. (இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறானா?
75:3. அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்றுதிரட்ட முடியாது என்று மனிதன் கருதிக் கொண்டிருக்கின்றானா?
75:3. மனிதன் (இறப்பெய்தி, மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பின்னர்) அவனுடைய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று எண்ணுகின்றானா?
75:4
75:4 بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏
بَلٰى ஏன் முடியாது! قٰدِرِيْنَ ஆற்றலுடையவர்கள் عَلٰٓى اَنْ نُّسَوِّىَ நாம் சரியாக அமைப்பதற்கு بَنَانَهٗ‏ அவனுடைய விரல் நுனிகளை
75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
75:4. அவ்வாறல்ல! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம்.
75:4. ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக்கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம்.
75:4. ஆம்! அவனுடைய விரல்களின் நுனிகளை (-முன்பிருந்தது போல் இணைத்துச் சரிப்படுத்திச் செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோராக இருக்கிறோம்.
75:5
75:5 بَلْ يُرِيْدُ الْاِنْسَانُ لِيَفْجُرَ اَمَامَهٗ‌ۚ‏
بَلْ மாறாக يُرِيْدُ நாடுகின்றான் الْاِنْسَانُ மனிதன் لِيَفْجُرَ பாவம் செய்வதற்கே اَمَامَهٗ‌ۚ‏ தனது வருங்காலத்திலும்
75:5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
75:5. எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதுகிறான்.
75:5. ஆனால், மனிதன் எதிர்காலத்திலும் தீமைகளைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகின்றான்.
75:5. மாறாக மனிதன் தன் எதிர்காலத்திலும் (பாவத்திலிருந்து விலகிவிடாது) பாவம் செய்யவே நாடுகிறான்.
75:6
75:6 يَسْأَلُ اَيَّانَ يَوْمُ الْقِيٰمَةِؕ‏
يَسْأَلُ கேட்கிறான் اَيَّانَ எப்போது வரும் يَوْمُ الْقِيٰمَةِؕ‏ மறுமை நாள்
75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
75:6. (பரிகாசமாக) ‘‘மறுமை நாள் எப்பொழுது வரும்'' என்று கேட்கிறான்.
75:6. “அந்த மறுமைநாள் எப்போது வரும்?” என்று அவன் கேட்கின்றான்.
75:6. “மறுமைநாள் எப்பொழுது (வரும்)?” என (அதிசயமாக) அவன் கேட்கிறான்.
75:7
75:7 فَاِذَا بَرِقَ الْبَصَرُۙ‏
فَاِذَا بَرِقَ திகைத்துவிட்டால் الْبَصَرُۙ‏ பார்வை
75:7. ஆகவே, பார்வையும் மழுங்கி-
75:7. அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து விடும்,
75:7. பிறகு, பார்வை நிலைகுத்தி விடும்போது,
75:7. (அந்நாளின் அமளிகளைக்கண்டு திடுக்கிட்டு பார்வை நிலைகுத்திவிட்டால்,
75:8
75:8 وَخَسَفَ الْقَمَرُۙ‏
وَخَسَفَ இன்னும் ஒளி இழந்து விட்டால் الْقَمَرُۙ‏ சந்திரன்
75:8. சந்திரனும் ஒளியும் மங்கி-
75:8. சந்திரனின் பிரகாசம் மங்கி விடும்,
75:8. மேலும், சந்திரன் ஒளி குன்றிப் போகும்போது,
75:8. சந்திரனும் ஒளி இழந்து (விடுமானால்),
75:9
75:9 وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُۙ‏
وَجُمِعَ இன்னும் ஒன்று சேர்க்கப்பட்டால் الشَّمْسُ சூரியனும் وَالْقَمَرُۙ‏ சந்திரனும்
75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
75:9. (அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும்(போது),
75:9. மேலும் சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைக்கப்படும்போது;
75:9. சூரியனும், சந்திரனும் ஒன்றாக்கப்பட்டு விடும். (ஆனால்),
75:10
75:10 يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ اَيْنَ الْمَفَرُّ‌ ۚ‏
يَقُوْلُ கூறுவான் الْاِنْسَانُ மனிதன் يَوْمَٮِٕذٍ அந்நாளில் اَيْنَ எங்கே? الْمَفَرُّ‌ ۚ‏ தப்பிக்குமிடம்
75:10. அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
75:10. அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) “எங்கு ஓடுவது'' என்று மனிதன் கேட்பான்.
75:10. அந்நாளில் இதே மனிதன் “நான் எங்கே சென்று ஓடி ஒளிவது?” என்று கேட்பான்.
75:10. அந்நாளில் “எங்கு விரண்டோடுவது?” என மனிதன் கூறுவான்.
75:11
75:11 كَلَّا لَا وَزَرَؕ‏
كَلَّا அவ்வாறல்ல لَا وَزَرَؕ‏ தப்பித்து ஓட அறவே முடியாது
75:11. “இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
75:11. ‘‘முடியவே முடியாது. தப்ப இடமில்லை'' (என்று கூறப்படும்).
75:11. ஒருபோதுமில்லை! அங்கு எந்தப் புகலிடமும் இருக்காது.
75:11. இல்லை! தப்ப இடமில்லை.
75:12
75:12 اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمُسْتَقَرُّ ؕ‏
اِلٰى رَبِّكَ உமது இறைவன் பக்கம்தான் يَوْمَٮِٕذِ அந்நாளில் اۨلْمُسْتَقَرُّ ؕ‏ இறுதியாக நிலையான தங்குமிடம்
75:12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
75:12. (நபியே!) அந்நாளில் உமது இறைவனிடமே (அனைவரும்) நிற்க வேண்டியதிருக்கிறது.
75:12. அந்த நாளில் உன் அதிபதியின் முன்பே சென்றடைய வேண்டியிருக்கும்.
75:12. அந்நாளில் (அனைவரின்) தங்குமிடம் உம் இரட்சகனிடத்திலாகும்.
75:13
75:13 يُنَبَّؤُا الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍۢ بِمَا قَدَّمَ وَاَخَّرَؕ‏
يُنَبَّؤُا அறிவிக்கப்படுவான் الْاِنْسَانُ மனிதன் يَوْمَٮِٕذٍۢ அந்நாளில் بِمَا قَدَّمَ தான் முந்தி செய்ததையும் وَاَخَّرَؕ‏ பிந்தி செய்ததையும்
75:13. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
75:13. மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும்.
75:13. அந்த நாளில் மனிதனுக்கு, அவனுடைய முந்தைய, பிந்தைய செயல்கள் அனைத்தும் எடுத்துக் காண்பிக்கப்படும்.
75:13. மனிதன்-அவன் முற்படுத்தி வைத்ததையும் அவன் பிற்படுத்தி வைத்ததையும் (பற்றி) அந்நாளில் அறிவிக்கப்படுவான்.
75:14
75:14 بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌ ۙ‏
بَلِ மாறாக الْاِنْسَانُ மனிதன் عَلٰى نَفْسِهٖ அவனுக்கே بَصِيْرَةٌ ۙ‏ சாட்சியாக இருப்பான்
75:14. எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
75:14. தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்துகொள்வான்.
75:14. ஏன், மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான்;
75:14. ஏன், மனிதன் தன் மீது பார்வையுடையவனாக (தன் செயல்களுக்குச் சாட்சியாக) இருப்பான்.
75:15
75:15 وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗؕ‏
وَّلَوْ اَلْقٰى அவன் கூறினாலும் مَعَاذِيْرَهٗؕ‏ தனது காரணங்களை
75:15. அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
75:15. ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது).
75:15. அவன் எவ்வளவுதான் சாக்கு போக்குகளைக் கூறினாலும் சரியே!
75:15. (ஆகவே, தன் குற்றங்களை மறைக்க) அவன் தன் புகல்களைப்போட்ட போதிலும் சரியே (அவை அங்கீகரிக்கப்பட மாட்டா).
75:16
75:16 لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖؕ‏
لَا تُحَرِّكْ بِهٖ அசைக்காதீர்/இதற்கு لِسَانَكَ உமது நாவை لِتَعْجَلَ நீர் அவசரமாக செய்வதற்காக بِهٖؕ‏ இதை
75:16. (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
75:16. (நபியே! வஹ்யி மூலம் ஜிப்ரயீல் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறி விடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீர் அவசரப்பட்டு அதை ஓத உமது நாவை அசைக்காதீர்.
75:16. (நபியே!) இந்த வஹியை* அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்!
75:16. (நபியே!) வஹீ மூலம் அறிவிக்கப்படுபவை தவறிவிடுமோ என பயந்து அதற்காக நீர் அவசரப்பட்டு உம் நாவை அசைக்காதீர்.
75:17
75:17 اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗۚ  ۖ‏
اِنَّ நிச்சயமாக عَلَيْنَا நம்மீது கடமையாகும் جَمْعَهٗ அதை ஒன்று சேர்ப்பதும் وَقُرْاٰنَهٗۚ ۖ‏ அதை ஓதவைப்பதும்
75:17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
75:17. ஏனென்றால், அதை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.
75:17. அதை நினைவில் நிறுத்தச் செய்வதும், ஓதும்படிச் செய்வதும் நமது பொறுப்பாகும்;
75:17. (உம் உள்ளத்தில்) அதனை ஒன்று சேர்ப்பதும், (உமது நாவால்) அதனை ஓதச்செய்வதும் நிச்சயமாக நம் மீதா(ன கடமையா)கும்.
75:18
75:18 فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ‌ۚ‏
فَاِذَا قَرَاْنٰهُ இதை நாம் ஓதினால் فَاتَّبِعْ நீர் பின்தொடர்வீராக! قُرْاٰنَهٗ‌ۚ‏ அது ஓதப்படுவதை
75:18. எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
75:18. ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதை நாம் (உமக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக.
75:18. ஆகையால் நாம் இதனை ஓதிக் காட்டும்போது அவ்வாறு ஓதிக்காட்டுவதை நீர் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கவும்.
75:18. ஆகவே, (ஜிப்ரீல் மூலம்) அதனை நாம் (உமக்கு) ஓதுவோமாயின் (ஓதப்படும்) அதன் ஓதுதலை நீர் பின் தொட(ர்ந்து ஓது)வீராக!
75:19
75:19 ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗؕ‏
ثُمَّ பிறகு اِنَّ நிச்சயமாக عَلَيْنَا நம்மீது கடமையாகும் بَيَانَهٗؕ‏ அதை விவரிப்பது
75:19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
75:19. பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.
75:19. பின்னர், இதன் கருத்தை விளக்குவதும் நமது பொறுப்பே ஆகும்.
75:19. பின்னர், நிச்சயமாக அதனைத் தெளிவு செய்வதும், நம் மீதா(ன கடமையா)கும்.
75:20
75:20 كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۙ‏
كَلَّا அவ்வாறல்ல بَلْ மாறாக تُحِبُّوْنَ நீங்கள் நேசிக்கிறீர்கள் الْعَاجِلَةَ ۙ‏ உலக வாழ்க்கையை
75:20. எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
75:20. எனினும் (மனிதர்களே!) நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையைத்தான் விரும்புகிறீர்கள்.
75:20. ஒருபோதுமில்லை. உண்மை யாதெனில், நீங்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடியதை (அதாவது இம்மையை) நேசிக்கின்றீர்கள்;
75:20. ஏன் இல்லை! பின்னர் (மனிதர்களே!) நீங்கள் அவசரமானதை (இம்மையை) விரும்புகின்றீர்கள்.
75:21
75:21 وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ؕ‏
وَتَذَرُوْنَ விட்டு விடுகிறீர்கள் الْاٰخِرَةَ ؕ‏ மறுமையை
75:21. ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
75:21. (ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகிறீர்கள்.
75:21. மறுமையை விட்டுவிடுகின்றீர்கள்.
75:21. அன்றியும் மறுமையை நீங்கள் விட்டுவிடுகின்றீர்கள்.
75:22
75:22 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاضِرَةٌ ۙ‏
وُجُوْهٌ சில முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் نَّاضِرَةٌ ۙ‏ செழிப்பாக இருக்கும்
75:22. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
75:22. அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க ஒளிவுடன் மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்.
75:22. அந் நாளில் சில முகங்கள் பொலிவுடன் விளங்கும்;
75:22. அந்நாளில் சில(ருடைய) முகங்கள் (சந்தோஷத்தால்) மலர்ச்சியானவையாக இருக்கும்.
75:23
75:23 اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ‌ ۚ‏
اِلٰى رَبِّهَا தமது இறைவனை نَاظِرَةٌ‌ ۚ‏ பார்த்துக் கொண்டிருக்கும்
75:23. தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
75:23. (அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்.
75:23. தம்முடைய அதிபதியைப் பார்த்த வண்ணமிருக்கும்.
75:23. (அவை) தங்கள் இரட்சகனை நோக்கிக் கொண்டிருக்கும்.
75:24
75:24 وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍۢ بَاسِرَةٌ ۙ‏
وَوُجُوْهٌ இன்னும் சில முகங்கள் يَّوْمَٮِٕذٍۢ அந்நாளில் بَاسِرَةٌ ۙ‏ கருத்து காய்ந்துபோய் இருக்கும்
75:24. ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
75:24. வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.
75:24. வேறுசில முகங்கள் துயரமடைந்திருக்கும்.
75:24. இன்னும், அந்நாளில் சிலருடைய) முகங்கள் (துக்கத்தால் கறுத்து) சோகமானவையாக இருக்கும்.
75:25
75:25 تَظُنُّ اَنْ يُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ؕ‏
تَظُنُّ அறிந்துகொள்ளும் اَنْ يُّفْعَلَ நிகழப்போகிறதுஎன்று بِهَا அதற்கு فَاقِرَةٌ ؕ‏ கடுமையான ஒரு பிரச்சனை
75:25. இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
75:25. (பாவச் சுமையின் காரணமாகத்) தங்கள் இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள்.
75:25. மேலும், இடுப்பை முறிக்கும் அனுபவங்கள் அவற்றிற்கு ஏற்படப்போகின்றன என்று புரிந்து கொண்டிருக்கும்.
75:25. முதுகுகளை முறித்துவிடும் பேராபத்து தங்களுக்கு உண்டாக்கப்படும் என்று அவை உறுதிகொண்டிருக்கும்.
75:26
75:26 كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِىَۙ‏
كَلَّاۤ அவ்வாறல்ல! اِذَا بَلَغَتِ உயிர் அடைந்தால் التَّرَاقِىَۙ‏ தொண்டைக் குழியை
75:26. அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
75:26. எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்,
75:26. ஒருபோதுமில்லை! உயிர் தொண்டை வரை எட்டும்போது,
75:26. (மறுமைநாள் வெகுதூரமென நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே!) அவ்வாறல்ல! (இதோ அதன் தொடக்கமாக மரணவேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்துவிட்டால்,
75:27
75:27 وَقِيْلَ مَنْ ٚ رَاقٍۙ‏
وَقِيْلَ கேட்கப்பட்டால் مَنْ ٚ رَاقٍۙ‏ யாரும்/ஒதிப்பார்ப்பவர்
75:27. “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.
75:27. (அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர்.
75:27. மேலும், “மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா?” என்று கேட்கப்படும்போது,
75:27. “மந்திரிப்பவன் எவன்?” என்றும் கேட்கப்படுகிறது.
75:28
75:28 وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُۙ‏
وَّظَنَّ இன்னும் அறிந்து கொண்டால் اَنَّهُ நிச்சயமாக இது الْفِرَاقُۙ‏ பிரிவுதான்
75:28. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
75:28. எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்.
75:28. மேலும் இது உலகைவிட்டுப் பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்துகொள்ளும் போது,
75:28. (ஆனால்) அவனோ நிச்சயமாக இதுதான் தன்னுடைய (பிரிவுக்குரிய காலம்) என்பதை (உறுதியாக) அறிந்து கொள்கிறான்.
75:29
75:29 وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ‏
وَالْتَفَّتِ பின்னிக்கொண்டால் السَّاقُ கெண்டைக் கால் بِالسَّاقِۙ‏ கெண்டைக் காலுடன்
75:29. இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
75:29. (அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக் கொள்ளும்.
75:29. கெண்டைக்கால், கெண்டைக்காலுடன் பின்னிப் பிணையும் போது,
75:29. இன்னும், (அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக்கொள்ளும்.
75:30
75:30 اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمَسَاقُؕ‏
اِلٰى رَبِّكَ உமது இறைவனிடமே يَوْمَٮِٕذِ அந்நாளில் اۨلْمَسَاقُؕ‏ ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம்
75:30. உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  
75:30. அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உமது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகிறான்.
75:30. அந்நாளில்தான் உன் அதிபதியின் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.
75:30. அந்நாளில் இழுத்துச் செல்லப்படுதல் உமதிரட்சகன்பால் இருக்கிறது.
75:31
75:31 فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ‏
فَلَا صَدَّقَ உண்மைப்படுத்தவில்லை وَلَا صَلّٰىۙ‏ தொழவும் இல்லை
75:31. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.
75:31. (அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை; தொழவுமில்லை.
75:31. ஆனால், அவன் உண்மையென ஏற்கவுமில்லை; தொழவுமில்லை.
75:31. (அல்லாஹ்வுடைய வேதத்தையும், அவனின் தூதரையும்) அவன் உண்மையாக்கவில்லை, அவன் இரட்சகனைத் தொழவுமில்லை.
75:32
75:32 وَلٰڪِنْ كَذَّبَ وَتَوَلّٰىۙ‏
وَلٰڪِنْ எனினும் كَذَّبَ பொய்ப்பித்தான் وَتَوَلّٰىۙ‏ இன்னும் விலகிச் சென்றான்
75:32. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
75:32. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்.
75:32. மாறாகப் பொய்யென வாதிட்டான்; திரும்பிச் சென்றான்.
75:32. எனினும் அவன் பொய்யாக்கி புறக்கணித்தும் விட்டான்.
75:33
75:33 ثُمَّ ذَهَبَ اِلٰٓى اَهْلِهٖ يَتَمَطّٰىؕ‏
ثُمَّ பிறகு ذَهَبَ சென்றான் اِلٰٓى اَهْلِهٖ தனது குடும்பத்தாரிடம் يَتَمَطّٰىؕ‏ கர்வம் கொண்டவனாக
75:33. பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
75:33. பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்று விட்டான்.
75:33. பின்னர், ஆணவம் கொண்டு தன் குடும்பத்தாரிடம் சென்றுவிட்டான்.
75:33. பின்னர், தன் குடும்பத்தாரிடம் அகம்பாவம் கொண்டவனாகச் சென்று விட்டான்.
75:34
75:34 اَوْلٰى لَكَ فَاَوْلٰىۙ‏
اَوْلٰى கேடுதான் لَكَ உனக்கு فَاَوْلٰىۙ‏ இன்னும் கேடுதான்
75:34. கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
75:34. (மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்!
75:34. இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது!
75:34. (மனிதனே!) உன்னை அழிக்கக்கூடியது நெருங்கிவிட்டது.! பின்னரும் உன்னை அழிக்கக்கூடியது நெருங்கிவிட்டது.
75:35
75:35 ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰىؕ‏
ثُمَّ பிறகு(ம்) اَوْلٰى கேடுதான் لَكَ உனக்கு فَاَوْلٰىؕ‏ இன்னும் கேடுதான்
75:35. பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
75:35. பின்னர், உனக்குக் கேடுதான்! மேலும் கேடுதான் (உனக்கு)!
75:35. ஆம்! இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது!
75:35. பின்னும் உன்னை அழிக்கக்கூடியது நெருங்கிவிட்டது! அப்பாலும் உன்னை அழிக்கக்கூடியது நெருங்கிவிட்டது.
75:36
75:36 اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًىؕ‏
اَيَحْسَبُ எண்ணுகின்றானா الْاِنْسَانُ மனிதன் اَنْ يُّتْرَكَ விட்டு விடப்படுவான் என்று سُدًىؕ‏ சும்மா
75:36. வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
75:36. (ஒரு கேள்வியும் தம்மிடம் கேட்காது) சும்மா விட்டு விடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?
75:36. மனிதன் வெறுமனே விட்டுவிடப்படுவான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றானா என்ன?
75:36. (எத்தகைய கேள்விக்கணக்கும் கேட்கப்படாமல்) வீணாக விடப்பட்டு விடுவான் என்று மனிதன் எண்ணிக்கொண்டானா?
75:37
75:37 اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِىٍّ يُّمْنٰىۙ‏
اَلَمْ يَكُ அவன் இருக்கவில்லையா? نُطْفَةً ஒரு துளி விந்தாக مِّنْ مَّنِىٍّ இந்திரியத்தின் يُّمْنٰىۙ‏ இந்திரியம் செலுத்தப்படுகின்றது
75:37. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
75:37. அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்க வில்லையா?
75:37. (கருவறையில்) செலுத்தப்படும் அற்பமான இந்திரியத் துளியாய் அவன் இருக்கவில்லையா?
75:37. (கர்ப்பத்தில்) செலுத்தப்படும் ஓர் இந்திரியத் துளியாக அவன் இருக்கவில்லையா?
75:38
75:38 ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ‏
ثُمَّ பிறகு كَانَ இருந்தான் عَلَقَةً கருவாக فَخَلَقَ ஆக, அவன் படைத்தான் فَسَوّٰىۙ‏ இன்னும் செம்மையாக ஆக்கினான்
75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
75:38. (இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்.
75:38. பின்னர் அவன் ஓர் இரத்தக்கட்டியாக ஆனான். பின்னர், அல்லாஹ் அவனுடைய உடலைப் படைத்தான். அவனுடைய உறுப்புகளைப் பொருத்தமாக அமைத்தான்.
75:38. பின்னர் அவன் (அட்டைப்பூச்சி போன்று ஒட்டிக்கொண்டிருக்கும்) இரத்தக் கட்டியாக இருந்தான், பின்னர் (அவனை) அவன் படைத்து(ப் பின்னர்) செவ்வையாக்கி வைத்தான்.
75:39
75:39 فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىؕ‏
فَجَعَلَ இன்னும் ஆக்கினான் مِنْهُ அதிலிருந்து الزَّوْجَيْنِ ஜோடிகளை الذَّكَرَ ஆண் وَالْاُنْثٰىؕ‏ இன்னும் பெண்
75:39. பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
75:39. ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கிறான்.
75:39. பிறகு, அவனிலிருந்து ஆண் பெண் என இரு இனங்களை உருவாக்கினான்.
75:39. பின்னர் (மனிதனாகிய) அவனிலிருந்து ஆண், பெண் என்ற இரு வகையை அவன் ஆக்கினான்.
75:40
75:40 اَلَيْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يُّحْـىَِۧ الْمَوْتٰى
اَلَيْسَ இல்லையா? ذٰلِكَ இவன் بِقٰدِرٍ ஆற்றல் உள்ளவனாக عَلٰٓى اَنْ يُّحْـىَِۧ உயிர்ப்பிப்பதற்கு الْمَوْتٰى இறந்தவர்களை
75:40. (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?
75:40. (இவற்றையெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவனாக இல்லையா?
75:40. இத்தகைய இறைவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் இல்லையா, என்ன?
75:40. (இவ்வாறு செய்த) அவன் மரணித்தோரை உயிர்ப்பிக்க ஆற்றல் உடையவனா இல்லையா?